அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ககந்தன்

காந்தனென்னும் அரசனுடைய காவற்கணிகை புதல்வன், பரசுராமருக்குத் தோன்றாது ஒளித்து அவர் கட்டளைப்படி காவிரிப்பூம்பட்டினத்தை அரசாண்டவன். தன்புதல்வரிருவருள் இளையோன் பார்ப்பினி மருதியையும், மூத் தோன் வணிகமாதாகிய விசாகையையும் விரும்பித் தீங்குசெய்ய முயன்றாரென்ப தைக் கேள்வியுற்று அவர்களை வாளாற் நடிந்தவன், இவனாற் காக்கப்பட்டமை யின் காவிரிப்பூம்பட்டினம் காகந்தியெனப் பெயர்பெற்றது. (மணிமேகலை).

ககனமூர்த்தி

பாரதவீரனாகப் பிறந்தவன்.

ககபதி

கருடனுக்கு ஒரு பெயர்.

ககமுகன்

சகத்திரபாதனுடன் வாசித்தவன். இவன் சகத்திரபாதனைச் சபித்தவன்.

ககுத்தன்

இருபத்தைந்தாவது புத்தன்

ககுத்து

இக்ஷ்வாகு போனாகும், விகுக்ஷியின் புத்ரன். இவனைக் குஷிபுத்ரன் என்றுங் கூறுவர். இவன் தேவர் வேண்டுகோளால் அசுரருடன் யுத்தஞ் செய்து வருகையில் இந்திரன் இடபமாய்த் தன் ககுத்தில் தாங்கினன் அக்காரணத்தான் ககுத்தனென்று பெயர் பெற்றவன். இவனுக்குப் புரஞ்சயன் என்றும் பெயர், (அயோத் யாமான்மியம்).

ககுத்மி

அணுவம்சத்து ரைவதன புதல்வன். இவன் தன் குமரியாகிய ரேவதிக்கு மணமகனைத் தேடும்படி பிரமன் சபைக்குச் சென்று ஆங்கு நடந்த அதி சயங்களைக் கண்டு சற்று நிதானித்துப் பிரமனைச் சேவித்துத் தான் வந்த வரலாற்றினைக் கூறினன். பிரமன் இவனை நோக்கி நீ பூமியினின்று இவ்விடம் வந்த காலமுதல் இதுவரையில் இருபத்தேழு யுகங்கள் மாறின. ஆகையால் நீ சென்று ஆதிசேடனது அவதாரமாய்ப் பலராமரென்று பிறந்திருக்கும் கிருஷ்ணன் தமயனுக்கு ரேவதியைத் திருமணஞ் செய்க என்று விடை தந்தனுப்பினன்.

ககுபு

தக்ஷன் பெண். குமரன் சங்கடன்.

ககுபை

ஒட்டிரதேச பர்வதம்.

ககுப்தேவி

தக்ஷன் பெண்.

ககுவன்

(யது.) கம்சன் தம்பி.

ககேந்திரன்

கருடன்.

ககைபல்லவம்

ஒரு வித்தியாதர நகரம், (சூளா.)

ககோனர்

ஒரு இருஷி.

ககோலன்

உத்தாலகருடைய மாணாக்கன். தேவி சுஜாதை.

ககோளவிவாணம்

சூரியமண்டல விஷ்கம்பம் (9000) யோசனை. அதன் வலயம் (2700) யோசனை சந்திரமண்டலம் சூரிய மண்டலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாம். பூமி (50) கோடி யோசனை விஸ்தீரணமுடையது. இந்தப் பூமி மத்தியில் இருக்கும் ஜம்புத்வீபத்தில் உள்ள இளாவிருத வருஷத்தில் மேருமலை இருகின்றது, இந்த மேருவுக்குக் கிழக்கில் மானசபர்வதத்தில் இந்திரபட்டணமும், தக்ஷண மானச பர்வதத்தில் யமபட்டனமும், மேற்கில் வருணபட்டணமும் இருக் கின்றன. இப்பட்டணங்களில் உலகாக்ஷணத்தின் பொருட்டு இந்திராதிகள் வசிப்பர். இப்பட்டணங்களுக்கு ஊர்த்துவத்தில் சூரியன் சஞ்சரிப்பன். சூரியனுக்குத் தகணாயனத்தில் சீக்கிரகதி உண்டு. சூரியன் மத்தியானத்தில் இந்திர பட்டணத்தில் இருக்குங்கால், யமபட்டணத்தில் உதயம், வருண பட்டணத்தில் அர்த்த ராத்திரி, சோமபட்டணத்தில் அஸ்தமனம். மத்தியானத்தில் யமபட்டணத்தில் இருக்குங்கால் வருணபட்டணத்தில் உதயம், சோமபட்டணத்தில் அர்த்த ராத்திரி, இந்திரபட்டணத்தில் அஸ்தமனம். மத்தியானம் வருண பட்டணத்தி லிருக்கையில் சோமபட்டணத்தில் உதயம், இந்திரபட்டணத்தில் அர்த்தராத்திரி, பமபட்டணத்தில் அஸ்தமனம், மத்யானம் சோமபட்டணத்தில் இருக்கையில் இந்திர பட்டணத்தில் உதயம், யமபட்டணத்தில் அர்த்தராத்திரி, வருணபட்டணத்தில் அஸ்தமனம். தக்ஷணாயனத்தில் சூரியனுடன் நக்ஷத்திரங்களும் சஞ்சரிக்கும். மத்தியானத்தில் அவன் கிரணத்தால் தபிக்கப்பட் டுச் சாயங்காலத்தில் அவனுடைய கிரணத்தால் சாந்தமாக அஸ்தமிக்கும், பின்னும் சூரியன் ஆகாயமத்தியில் இருக்கும் போது பூமியில் 30 முகூர்த்தகாலம் சஞ்சரிப்பன். ஊர்த்த பாகத்தில் சஞ்சரிக்கும்போது வெவ்வேறு கதிகளுண்டு, தக்ஷண திசையில் இருக்கும் சூரியன் நாடோறும் (90145000) ஆயிரம் யோசனைகள் சஞ்சரித்துக்கொண்டு அத்திசையில் இருந்து மீண்டு (30121000) ஆயிரம் யோசனைகள் உள்ள தூரத்தில் இருக்கும் வடதிசைக்குப் பிரவேசிப்பன். இந்தத்தக்ஷண உத்தரதி சைகளுக்கு மத்திய பிரதேசம் விஷ்வ மண்டலம் எனப்படும். அந்தச் சமயத்தில் கோமேதக தீபத்திற்கு வடபாகத்தில் சஞ்சரிக்கும் தக்ஷண உத்தர திசைகளுக்கு இடையிலிருக்கும் மண்டலங்களுக்கு ஜரத்துருவ ஐராவத வைஷ்வாநர ஸ்தாநங்கள் அடையாளங்கள் என்று எண்ணவேண்டும். அஜவீதிக்குத் தக்ஷணத்தில் நாகவீதி உண்டு, இந்த இரண்டும் ஆஷாடவீதிக்குக் காரணமாய் இருக்கின்றன. ‘அசுவனி, பரணி, கிருத்திகை, மிருகசீரி ஷார்த்தம் இந்த (4) நக்ஷத்திரங்களும் நாகவீதி என்பர். புனர்பூசம், பூசம் ஆயிலியம் இந்த மூன்று நக்ஷத்திரங்களும் ஜராவதவீதி என்பர். இந்த வீதி உத்தரமார்க்கம் என்று சொல்லப்படும். பூர்வோத்திர பங்குனிகள் இரண்டும் ஆர்ஷவீதி. பூர்வபாத்திரம், உத்தரா பாத்திரமென்னும் இரண்டும் கோவீதி, சிரவண, தனிஷ்ட, சதபிக்ஷம் இம்மூன்றும் ஜாத்துருவவீதி. இம்மூன்று வீதிகளும் மத்தியமார்க்கம் எனப்படும், அஸ்தம், சித்திரை, சுவாதி இம்மூன்றும் நாகவீதி. விசாகம், ஜேஷ்டம், அனுஷம் இம்மூன்றும் மிருகவீதி, மூலம், பூராடம், உத்ராடம் இம்மூன்றும் வைஸ்வாநரவீதி. இந்த வீதிகள் மூன்றும் தக்ஷணமார்க்கம் எனப்படும். தக்ஷண உத்தர மார்கங்களுக்கு இடை (100321) யோசனைகள் விசாலம் உண்டு. உத்தராயனத்தில் சூரியன் மண்டலமத்தியனாய்ச் சஞ்சரிக்கும்போது தக்ஷ ணாயனத்தில் முன்சொன்ன வீதிகளுக்கு வெளியில் திரிவன். தக்ஷண திசையில் சஞ்சரிக்கும்போது சூரிய மண்டலம் (10058) யோசனைகள் உள்ள விசாலம் உள்ளதாய் இருக்கும். சூரியசந்திரர்கள் குலாலசக்கிரம்போல் திரிவர், தக்ஷனா யனத்தில் சீக்கிரகதி யாகையால் பகல் (12) முகூர்த்தம் இருக்கும். உத்தராய் னத்தில் பகல் (18) முகூர்த்தகாலம் சஞ்சரிப்பன். இரவு பகல் (3) முகூர்த்த காலத்திற்குள் மண்டலமாய்த் திரிகின்ற லோகாலோக பருவதத்திற்கு வடக்கு அக்கினி மார்க்கத்திற்கு வெளியில் இருக்கிற புஷ்கரதேசங்களுக்குத் தக்ஷண வீதியில் இருக்கும் சூரியகாந்தி வியாபிக்கும். அந்தத் தேசங்களுக்கு ஒருபாகத்தில் (10,000) யோசனையுள்ள உயரங்கொண்ட லோகா லோகபர்வதம் இருக்கின்றது. அதற்குக் சீழ்பாகத்தில் சூரியசந்திர நக்ஷத்திர தாராகணங்கள் திரிவர். இது காணப்பட்டது. கோசராகோசரமானதே லோகா லோக பர்வதம். இதனைச் சூரியன் சேருவதே சந்தியாகாலம் எனப்படும். துருவன், மிருத்பிண்டம் போல உத்தரமத்திய தக்ஷண பிரதேசங்களில் இருந்து, ஆகாசத்தில் (14) நக்ஷத்திரங்களில் சிஞ்சுமார சக்கிரத்தில் சூரியசந்திரர்களை வாதக்கயிற்றால் திருப்பி, தானும் திரிந்து கொண்டிருப்பன், மேகமண்டலம் மேகங்கள் வாயுவை ஆசரித்து ஜலத்தைத் தரும். அவை பூமிக்குமேல் காததுரத்திலிருந்து சதா வருஷித்துக் கொண்டிருக்கும். பூர்வம் இந்திரன் மலைகளின் சிறகறுத்ததும் அவற்றிலிருந்து வெளிப்பட்ட புட்கலாவர்த்தம் என்னும் மேகம் வாயு ஆதாரமாய்க் கற்ப அந்தத்தில் வருஷிக்கும். பிரமன் அவதரித்த காலத்தில் பிரம்மாண்டம் பிளந்து அதில் உற்பத்தியான சகலங்கள் மேகம் ஆயின. இந்த மேகங்கள் தூமங்களால் விருத்தியாம். இது மழை காலத்தில் மழையும் பனிக் காலத்தில் பனியும் பெய்யும், ஆகாச கங்கையைத் திக்கஜங்கள் துதிக்கையால் மொண்டு பூமியில் விடுதலால் அது பனிப்போல் பெய்யும், இமயமலைக்குத் தென் பாகத்தில் இருக்கிற ஏமகூட பர்வதத்தில் பூர்த்து என்னும் பட்டணம் உண்டு. அதில் பெய்யும் பனியும் இமயத்தில் பெய்யும் பனியுமே இவ்விடத்திற்கும் வரும் மழை, பனி, வெயில், பகல், இரவு, சந்தி, சுபாசுபபலன் இவை எல்லாம் துருவனால் உண்டாம். சூரியன் துருவன் கட்டளையால் சகல ஜீவப்பிராணா தாரமான நீரைத்தருவன். சந்திரமண்டலம் சூரியவீதிக்கு மேற்பாகத்தில் இருக்கும், சந்திரனுக்கு மேல் நக்ஷத்திரங்கள் சஞ்சரிக்கும். சந்திரன் ரதத்திற்கு (10) குதிரைகள். அக்குதிரைகளின் பெயர் அஜ, சத, மக, விருக்ஷ, வாஜி, நர, அஸ்ம, சப்ததாது, ஹம்ச, வாம, மிருகமென்பன. சந்திரன் தேவர்களாலும் பிதுர்க்களாலும் சுற்றப்பட்டிருப்பன். சூரியனுடைய சுஷம்னா கிரணத்தால் சுக்கிலபக்ஷத்தில் வளர்ந்து பூர்ணிமையில் சம்பூர்ணமாய்ப் பிரகாசிப்பான். கிருஷ்ணபகூ துவிதியை முதல் சதுர்த்தசி வரையில் தேவர்களும், அமாவாசையில் பிதுர்க்களும் சந்திரகிரணத்தைப் பானம் செய்வர். அங்காரகன் ரதத்திற்கு அக்கினியிற் பிறந்த செந்நிறமுள்ள (8) குதிரைகள் உண்டு. புதன் ரதம் வாயுரதத்திற்கு எதிராக நடக்கும். அந்த ரதத்திற்கு வாயுவேகமும் பசுநிறமுள்ள (8) குதிரைகளும் உண்டு, பிரகஸ்பதி ரதத்திற்கு வெண்ணிறமுள்ள (8) குதிரைகள் உண்டு. வருஷத்திற்கு ஒரு தடவை ஒரு ராசியில் மெதுவாகச் செல்வன். சுக்கிரனுக்குச் செந்நிறமுள்ள (8) குதிரைகள் உண்டு. சநி கறுப்பு நிறமுள்ள (8) குதிரைகள் கட்டின இரும்பு ரதத்தில் மெதுவாகச் செல்வன். இராகு கறுப்புக் குதிரைகள் கட்டினரதத்திலேறிப் பருவகாலங்களில் சூரிய சந்திரர்களுக்கு மேல் நடப்பன், கேது புகைவர்ணமுள்ள (8) குதிரைகள் கட்டிய ரதத்தில் ஏறிச் சஞ்சரிப்பன், (தத்வநி.)

கக்கீவன்

தீர்க்க தமன் மகன். இவன் உதங்கர் சொற்படி அகத்திய தீர்த்தத்தில் முழுகி அதிலெழுந்த யானைமீதேறிச் சென்று சுவநயன் குமரியை மணந்தவன்.

கக்குவன்

உக்ரசேகன் குமரன்.

கக்குவன்

(கக்கிருமல்) பாவின் தோஷத்தாலும், ஜல தோஷத்தாலும் வாயு அதி கரித்து மார்பிலுள்ள சிலேஷ்மத்தை ஒவ்வொருவேளை இளக்குந்தருணத்தில், அடுக்கிருமல், திணறல், விழிபிதுங்குவது போலுதல், இளைப்பு, ஆயாசம், குடித்த பாலைக் கக்குதல் முதலிய உண்டாம். இது மூன்று மாதம் குழந்தைகளை வதைக்கும். (ஜீவ.)

கக்கையர்

ஒரு வீரசைவ தேசிகர். இவர் முன், ஒரு புராணிகன் விஷ்ணுவிற்குப் பரத்வங் கூறி வாயிற் புழுச்சொரிந்தனன், (பசவபுராணம்).

கக்ஷசேனன்

1. யமன் சபையிலுள்ள ஷத்திரியன். 2. யுதிஷ்டிர சபையிலிருந்த க்ஷத்ரியன். 3. ஒரு ராஜருஷி.

கக்ஷம்

ஒரு தேசம். (தச.)

கக்ஷிவதன்

சுவநயனிடம் தானம் வாங்கிய ருஷி.

கக்ஷிவரன்

ஒரு ருஷி உசிகன் குமரன். ஔசிஜன் (பார)

கக்ஷூ

சேதிபுத்ரன். இவன் ருக்வேதத்திற் புகழ்ந்து கூறப்பட்ட கொடையாளி.

கங்கணன்

(யது.) நிம்ரோசியின் தம்பி.

கங்கணி

பசமாகன் குமரன்.

கங்கன்

1. கங்கிசனைக் காண்க. 2. சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரன். வசுதேவன் தம்பி. 3. யமன். 4, ஓர் இருடி. இவன் பாரி பிரமலோசை, பெண் மரீஷை. 5. ஒரு பக்ஷியரசன். 6. அஞ்ஞாதவாசத்தில் தருமன் வைத்துக்கொண்ட பெயர். 7. பிரமலோனுபன் குமரன் தரும் பக்ஷிகளைக் காண்க.

கங்கபாடி

மைசூர் ஜில்லாவின் கீழ்பாகத்திலுள்ள நாடு.

கங்கம்மாள்

ஒரு தீர்த்ததேவதை. இவள் வடநாட்டவரால் பசுக்கள், மனிதர் முதலியவர்க்கு நோய்முதலிய வராவகை ஆராதிக்கப்பட்டவள். இவளை ஆராதிக்கும் ஆண்மக்கள் பெண்வேடம் பூண்டு கிராம பிச்சை ஏற்று அப்பிச்சையால் வந்த தானியாதிகளைத் தேவதைக்கு நிவேதிப்பர்.

கங்கா

1. கங்கையைக் காண்க. 2. உக்ரசேநன் குமரி.

கங்காதபன்

பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவருகையில் உதித்த ஆதப்னுக்குப் பெயர். (காசிகாண்டம்.)

கங்காதரமூர்த்தி

பார்வதிபிராட்டி சிவமூர்த்தியின் கண்களை விளையாட்டாக மூடிய காலத்தில் அவளது நகத்திற் பிறந்த கங்கையைத் தரித்த சிவன் திருவுரு.

கங்காத்வாரம்

1. அரித்வாரம் இமயமலையிலுள்ளது. இதன் வழியாகக் கங்கை பூமியில் வருகிறது. HARDWAR THIS IS ALSO DALLED MAYAPURI. 2, கொளதமியைக் காண்க.

கங்காமகாத்மீயம்

இது பூமிக்கு மத்தியில் செல்வதால் பூமியைச் சுத்தப்படுத்து வது. ஆயிரம் சாந்திராயண விரதஞ்செய்த பலன் இதனிடமுள்ள ஜலத்தைப் பானஞ் செய்வதற்கு உண்டாம். ஒரு மாதம் கங்கா தீரத்தில் ஒருவன் வசிப்பனேல் அவன் சர்வயஞ்ஞபலத்தையும் அடைவன். இதில் எவ்வளவு காலம் ஒருவனுடைய அஸ்திவிழுந்து கிடக்கிறதோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத்தில் இருப்பன். இதிலுள்ள மண் சோகம் முதலியவற்றை நீக்கும். இதைத் தரிசனஞ் செய்வதாலும், பரிசிப்பதாலும், பானஞ் செய்வதாலும் எல்லாப் பாபங்களும் நீங்கும்.

கங்காம்பை

ஸ்ரீ பலதேவர் பெண். இவளுடுத்திருந்த சேலையின் உயர்வைப் பரத்தையின் தோழியொருத்தி தன் தலைவியிடங் கூற அப்பரத்தை விடசங்கமரை யேவி அதை வாங்கித் தரும்படி யாசித்தனள், அவ்வகை கங்காம்பை கணவன் சொற்படி கொடுக்கையில் ஆடை வளரக்கண்டு துணித்துத் தந்தவள். (பிரபுலி.)

கங்காளகேது

மலயகந்தனியைக் காண்க.

கங்காள்மூர்த்தி

வாமனமூர்த்தி செருக்கடைந்த காலத்தில் அவர் முதுகின் முழு வெலும்பாகிய கங்காளத்தை வீணாதண்டமாகக் கொண்டுவந்த சிவன் திருவுரு.

கங்காவிசர்ச்சனமூர்த்தி

பகீரதன் வெகுநாள் பிதுர்க்கள் நற்கதியடையத் தவஞ் செய்தனன். அதனால் களிப்படைந்த சிவமூர்த்தி தரிசநந்தந்து தமது சடையிலிருந்த கங்கையில் ஒருதுளி பூமியில் விட்டனர். அக்காலத்து இப்பெயரால் தேவாதியர் துதித்த சிவமூர்த்தம்.

கங்கிசன்

உக்கிரசேகன்.

கங்குல் வெள்ளத்தார்

(பெண் பாலர்) இவர் கடைச்சங்க மருவிய புலவர்களி லொருவராக இருக்கலாம்: இவர் தம் செய்யுளில் ” கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே எனக்கூறி யிருத்தலி னிவர்க்கு இப்பெயர் வந்தது போலும். (குறு~387)

கங்கை

1, புண்ணிய நதியுருவானவள். இவள் வெண்ணிற முடையவள், வலது கையில் கருநெய்தல், இடது கையில் பூர்ண கும்பம், முதலைவாகனம். இமயவேந்தன் குமரி, 2. அக்கினியால் வகிக்கப்பட்ட சிவவீரியத்தைச் சரவணத்தில் வைத்தவள். 3. சுவர்க்கத்தில் மந்தாகினியெனவும், பூமியில் கங்கையெனவும், பாதாளத்தில் போகவதி யெனவும் பெயர்பெற்றவள். 4. இவள், உலகத்திலுள்ள மூன்றரைக் கோடி தீர்த்தபலனும் தரவல்லவள். 5. இதில் ஒரு வேதியனது எலும்பு விழுந்ததனால் அவன் முத்தி பெற்றனன் என்பர். 6. சூரியவம்சத்துப் பிறந்த பகீரதச்சக் கரவர்த்தி தன் பாட்டன் முதலியவரின் சரிதங்களைக் கேட்கையில் பிதுர்க்கள் அநேகர் கபிலர் கோபத்திற்பட்டுச் சாம்பராய் நாக வேதனைப்படுதல் அறிந்து அதை நீக்க அநேக ஆண்டுகள் பிரமன், கங்கை, சிவ மூர்த்தி முதலியயோரை எண்ணித் தவம் புரிந்து சிவமூர்த்தியால் கங்கையின் ஏழு துளிகளைப் பூமியில் வரப்பெற்றனன். அந்தக்கங்கை கலாதிரி, பவாநி, நளிலி என மூன்று பிரிவுகளாய்க் கிழக்கினும், சுசடி சீதை, சிந்து என மேற்கினும், அளகந்தை யெனப் பகீரதன் பின்னும் வந்தனள். இவள் பகீரதனுக்குப் பின் வருமிடத்துச் சந்து முனியின் ஆச்சிரமவழி வருதலை யறிந்த முனிவர் கோபித்து அதனை ஆசமனஞ் செய்தனர். அதனால் கங்கை மறைந்தது கண்டு பகீரதன் தன் குறைகூறக் கேட்டு அவர் காதின்வழி வெளிவிடச் சாநவியெனப் பெயரடைந்து சகரர் எலும்பில் விழுந்து அவர்களுக்கு நற்கதி தந்தவள். 7. பார்வதிதேவி விளையாட்டாகச் சிவமூர்த்தியின் கண்களை மூட அக்கரத்தின் வழிப் பெருகிய நீர் வெள்ளங்கொள்ள அதைச் சிவமூர்த்தி தரித்தனர் எனவும், விஷ்ணு திரிவிக்கிரம அவதாரங்கொண்டு மூவுல களந்தபோது திருவடி சுவர்க்கமடைய அண்டமுடைந்து ஆகாயகங்கை கால்வழியொழுகியதா லுண்டானது எனவும், அத்திருவடி சத்தியவுலகு சென்ற போது பிரமன் தன் தந்தையின் திருவடியெனத் தம் கமண்டலுநீரால் அபிஷேகிக்க அது நதியாயிற்றெனவுங் கூறுவர். 8. இவள் பிரமன் சபைக்கு வந்தபோது உண்டான சாபத்தால் சந்தனுவின் தேவியாய்ப் பீஷ்மரைப் பெற்றனள் என்பர். 9. இவள் சிவமூர்த்தியை மணக்க விரும்பியதைப் பார்வதிபிராட்டி குறிப்பாலுணர்ந்து இரேணு என்பவனுக்கு மகளாய்ப் பிறக்கச் சாபமும் அமங்கலமும் பெற்றுத் தவத்தால் மங்கலமடைந்தவள். 10, பீஷ்மனை ஈமத்திடை வைத்த காலத்தில் வந்து அழுது கண்ணனால் தைரிய மடைந்தவள், 11. சூரபன்மன் வேள்வியை அவிக்கப் பூமிக்குச் சிவமூர்த்தியால் வருவிக்கப்பட் டவள். 12, துன்முகன் வேண்டக் குமரியாகப் பிறந்தவள். 13. அநசூயை, இருடிகையைக் காண்க, 2, விஷ்ணுவிற்குப் பாரியாய்க் கோ லோகத்தில் இராதை கோபிக்க விஷ்ணுவின் கட்டை விரலில் தோன்றிப் பின் பிரமன் தன் கமண்டலத்தில் சிறிது கொண்டு தம் உலகமடைந்து நாரதர் வாக்கால் இவளைப் பிரமதேவர் மணந்தனர். (தேவி~பாக.) சரஸ்வதியைக் காண்க.

கசகசாச்செடி

இது, ஒரு செடிவகையில் சேர்ந்தது. இச்செடி, ஈஜிப்ட், துருக்கி, பொஷியா, பல்கேரியா, சைனா, இந்தியா முதலிய தேசங்களில் பயிரிடப் படுகிறது. இச்செடி 5, 6, அடிகள் வளர்வதற்குள் இலைகள் உதிரத் தொடங்கு கின்றன. இதன்மீது தாமரை அரும்பையொத்த மலர்கள் உண்டாகின்றன. அவற்றினிதழ்கள் உதிர்ந்தவுடன் அதனிடையில் உள்ள காய் மாதுளங்காய்போல் பருக்கத் தொடங்குகிறது. காய்முதிரத் தொடங்குகையில் காலமறிந்து ஒன்று, இரண்டிடங்களில் சிறு கத்தியால் கீறி விடுகின்றனர். அதினின்று மஞ்சள் நிறமுள்ள பால்வடிகிறது. அப்பாலில் காற்றுப்பட அது உலர்ந்து மஞ்சள் நிறங்கொண்ட பசைப்பொருளாகிறது. அதைச் சுரண்டி உலரவைத்தால் கருநிறமாக மாறுகிறது. இதுவே அபினி எனும் மயக்கப் பொருள். இதன் காயில் உண்டாகும் விதைகளே கசகசா விதைகள். இதன் காயைப் போஸ் தக்காயென வைத்தியர் உபயோகிக்கின்றனர்.

கசகர்ணர்

விநாயகருக்கு ஒரு பெயர்.

கசன்

1. தேவகுருவாகிய வியாழன் குமபன். தேவர் அசுரரைப் பலமுறை கொல்லவும் அவர்கள் உயிர்கொண்டு தம்மை வருத்துதல் சுக்ரனது மிருதசஞ்சீவிநி மந்திரபலமென்று ஆலோசித்து அம்மந்திரத்தைச் சுக்ரனிடமிருந்து கற்றுவர இவனை அனுப்பினர். இவன் வந்து சுக்ரனுக்குப் பணிவிடை செய்திருக்கையில் சுக்ரன் பெண்ணாகிய தேவயானி இவனிடத்து ஆசைகொண்டு ஆதரித்து வந்தனள் இவன் மந்திரத்தின் பொருட்டு வந்தது அறிந்து அசுரர் இவனைக் கொலைபுரிய யத்தனித்து ஒருநாள் ஓமதேனுவை மேய்த்திருக்கையில் கொன்றனர். கசன் மீளாமையால் தேவயானி தன் தந்தையிடங் கூறிப் பிழைப்பித்தனள். மற்றொருநாள் அகார் இவனை வனத்தில் கொன்று நீறாக்கி அச்சாம்பரைக் கள்ளிற்கலந்து சுக்ரனுக்கு உண்பித்தனர். அப்போதும் தேவயானி துன்பமுடையவளாய்த் தந்தையை வேண்டினள். சுக்ரன், கசன் தன் வயிற்றிலிருப் பதை யோகத்தாலுணர்ந்து கள்ளல்லவா இக்காரியஞ் செய்ததென்று, இனி வேதியர் கள்ளருந்தல் ஆகாதென விதித்து வயிற்றிலுள்ளானை நோக்கி மிருதசஞ்சீவிநியால் வெளிவரின் என்னை உயிர்ப்பிக்க என ஆணைகூறி அவனை வெளிவிட்டனன். அவ்வகை வெளிவந்த கசன் சுக்ரனை உயிர்ப்பித்துச் சிலநாளிருந்து தெய்வலோகஞ் செல்கையில் தெய்வயானி, தன்னை மணக்கவேண்டக் கசன் மறுத்தமையால் தெய்வயானி கோபித்து உனக்கு மந்திரம் பலியாதிருக்க எனச் சபித்தனள். கசன் எனக்குப் பலியாதிருப்பினும் என்னிடங் கொண்டாரிடத்துப் பலிக்க என்று தேவனியாயை நோக்கி நீ காரணமின்றிச் பித்ததால் உன்னை வேதியன் மணக்கா ஒருக்க என்று நீங்கினன். இவளை யயாதி எணந்தனன். 2. ஓர் அரக்கன். 3. ஒரு வானாவீரன்.

கசபதர்

ஒரு மகருஷி. இவர் குமார் மதுமான்.

கசபுத்திரன்

பாரதவீரரில் ஒருவன். குரோதவசை புத்ரனாகிய கணனம்சம்.

கசமுகாசுரன்

அசுரேந்திரன் எனும் அசரன் தேவரை வருத்த ஒரு வலியுள்ளவன் வேண்டும் எனச் சுக்கிரனைக் கேட்டனன், சுக்கிரன் அசுரேந்திரன் சொற்படி வசிட்ட முனிவர் மரபில் மரகதமுனிவர் என்பவர் தவம்புரிகின்றனர். அம்முனிவரை உம் மரபில் ஒரு பெண் புணரில் அவ்விருவருக்கும் உதிக்கும் புதல்வன் மிகுந்த வலியுள்ளவனாவான் என்றனர். அதைக் கேட்ட அசுரன் விபுதை யென்பவளை அனுப்ப அவள் சென்று அவர் தவத்திற்கு அஞ்சி அவர்க்கருகில் அம்முனிவர் தனக்கு நாயகராக வேண்டும் எனத் தவஞ்செய்தனள். இருவருக்கும் தவங்கூடுங் காலமாதலின் முனிவர் விழித்துத் தமக்குமுன் இரண்டு யானைகள் கலவிசெய்யக்கண்டு காமக்குறிப்புடன் நின்றனர், இதனை அருகில் தவஞ்செய்து கொண்டிருந்த விபுதை கண்டு எதிர்வர முனிவர் இவளைப் பெண்யானை யாக்கித் தாம் ஆண்யானையாகிப் புணர்ந்தனர். உடனே யானை முகத்துடன் இவன் தோன்றினன். பிறகு சிவமூர்த்தியை எண்ணித் தவம்புரிந்து பல வரங்கள் பெற்று அரசாண்டு தேவரை வருத்திக் கசமுகராகிய விநாயகரால் கொம்பை ஏவிச் சங்க ரிக்கப்பட்டு மாண்டு பெருச்சாளியாய் விநாயகருக்கு வாகனமாயினன். இவன் ஆண்ட பட்டணம் மதங்கபுரம். இவனுக்கு முன் தேவர் குட்டிக்கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொள்ளும் வழக்கை இவன் விநாயகருக்குச் செய்ய வரம் பெற்நனன், இவன் இறந்த இடம் செங்காடு எனப்படும்.

கசரன்

ஒருவசு, இருடிகள் எதனால் யாகஞ் செய்ய வேண்டுமென இந்திரன் முன்கேட்க இவன் பசு இம்சையாலும், கந்த மூலாதிகளாலும் செய்யலாம் என்றனன். இருடிகளுக்கு உயிர்க்கொலை விருப்ப மில்லாமையால் இவனைப் பாதாளத்தில் விழத்தள்ளினர்.

கசலசித்தி

(காஞ்சி.) சகல சித்தியையும் அளித்தலில் இப் பெயர் பெற்றது.

கசழகர்

ஒருகாலம் சிவமூர்த்தியும் பிராட்டியும் நந்தாவனத்துச் சித்ரமண்டபத்தில் எழுதியிருந்த ஆண்யானை பெண்யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினர். கசமுகாசுரன் செய்த துன்பத்தினைத் தேவர் இவரிடம் முறையிட அவன் அத்திரசத்திரங்களால் இறவாத்து கண்டு தமது வலப்பு றக்கொம்பை ஒடித்து அவன்மீது எறிய அது அசுரன் மார்பைப் பிளந்து கணபதியின் திருக்கரம் அமர்ந்தது. பின் கசமுகன் பெருச்சாளி யுருக்கொண்டு ஓட அவனை வாகனமாகக் கொண்டனர். கஜாச்யர் எனவும் பெயர்.

கசாநநர்

1. ஒரு விஷ்ணுபடர். இவரைச் சேனை முதலியார், விஷ்வக்சேநர் என்பர். 2. விநாயகருக் கொருபெயர்.

கசாந்திகமூர்த்தி

ஐராவதம் பானுகோபனுடன் யுத்தஞ்செய்யக் கொம்பொடிந்து சிவத்தியானஞ் செய்தகாலத்து அருள்செய்த சிவன் திருவுரு.

கசாரியல்லது கஜயுத்தமூர்த்தி

கசாசுரன் தேவர்களை வருத்திச் சிவமூர்த்திக்கெதிரில் செருக்குடன் வந்து சிவமூர்த்தியை எடுத்து விழுங்க அவன் உடலுள்ளிருந்து உக்கிரவடிவாய்ப் புறப்பட்டு மத்தகத்தில் திருவிரலூன்றித் தோலையுரித்துப் போர்த்த சிவன் திருவுரு. இதனால் இவர்க்குக் கிருத்திவாசன், யானை யுரித்தோன் எனப்பெயர்.

கசேந்திரன்

இந்திரத்துய்ம்மன் எனும் பாண்டியன் சபைக்கு அகத்தியர்வர அவன் யோகதிருஷ்டியால் அறிந்தும் கவனியா திருந்தனன் அதனா லகத்தியர் நீ மத்த யானையாக எனச் சபித்தனர். இவ்வரச யானை காட்டில் வசிக்கையில் ஒரு நாள் தானிருக்கும் திரிகூடாசலமென்னும் மலையிலிருந்து இறங்கி நீர் விருப்பால் அருகிருந்த தடாகத்திற்குச் சென்று நீரருந்து கையில் அதில் சாபத்தால் முதலையாகி வந்திருக்கும் ஊகு என்னும் காந்தருவனால் பிடிபட்டு அது இழுக்கவும் தான் இழுக்கவும் அதனுடன் போரிட்டுக் கடைசியில் தன்வசமற்று மூலமே என்று முறையிட்டது. அது கேட்ட விஷ்ணுமூர்த்தி சக்கரத்தை எவி முதலையைச் சேதித்து யானையைக் காத்தனர். (பாகவதம்).

கசேரு

நரகாசுரன் மனைவி. துவட்டாவின் குமரி.

கசேருமான்

கண்ணனால செயிக்கப்பட்ட யவன ராசன்.

கச்சன்

காசிராஜன். சடியாசன் இவன் மரபில் தோன்றியவன்.

கச்சபாலையர்

காஞ்சிபுரத்திலிருந்த தமிழ் வித்வான். (தனிப்பாடற்றிரட்டு).

கச்சயம்

துச்சயன் இராசதானி, அங்க நாட்டிலுள்ளது. (மணிமேகலை),

கச்சருமன்

ஒரு தானவன் விப்பிரசித்தி குமரன்.

கச்சி

காஞ்சிக்கு ஒரு பெயர். (சிலப்.)

கச்சிக்காவலன்

திருமலைராயன் சமத்தான வித்வான்களி லொருவன்.

கச்சிப்பேட்டு காஞ்சிக்கொற்றன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவரைக் கச்சிப்பேட்டாதெனலால் தொண்டைநாட்டவராக இருத்தல் கூடும். குறு. 213,216.

கச்சிப்பேட்டு நன்னாகையார்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவராக இருக்கலாம். நாகனாரென்னா துநாகை யெனலால் தமிழறி நங்கையரில் ஒருத்தி யென ஊகிக்க இடமுண்டு, தொண்டை நாட்டவர் போலும், குறு, 30, 172, 8, 192, 197, 287.

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனூர்

இவர் முற்கூறிய இளந்தச்சனாரின் முதியோ ரென்பது தோன்ற பெருந்தச்சனார் எனப் பட்டார். இவர் குறிஞ்சித் திணையைப் பாடும் வன்மையுடையார். இளந்தச்சனார் முல்லையைப் பாடியுள்ளார். மதியுடன் படுக்குந் தலைமகன் நீவிர் யாவிரென வினாயதாக இவர் கூறியது சிறப்புடைய தாகும். நற். 213, இவர் பாடிய பாட்டு இரண்டு நற். 144.

கச்சியப்ப முதலியார்

இவர் வல்லைமாநகர் காளத்தி முதலியார் குமாரர். ஒரு புலவன் இவர் கவி சொன்னபோது பராமுகமாக விருக்கப்புலவன் இவரைச்செருப்புக்காலா லுதைக்க இவர் புலவனை உபசரித்தனர். புலவன் பாடிய பாட்டு மண்படுமோ வெய்யலிலே வாடுமோ புல்லரிரு, கண்படுமோ வெப்போதுங் கற்றவர்க்குப் பண்புடனே, மெச்சியப்பாலுங்கொடுக்கும் வீறுவல்லை காளத்திக், கச்சியப்பனை யுதைத்தகால். ” இதனை “வில்லைச் செருப்பிட்ட எனும் தொண்டைமண்டல சதகத்தாலும் அறிக். (தமிழ்நாவலர் சரிதை.)

கச்சியப்பசிவாசாரியர்

இவர் காஞ்சீபுரத்திலுள்ள குமரகோட்டத்து அர்ச்சகருள் ஒருவர். ஆதிசைவர் குலத்தில் அவதரித்தவர். தந்தையின் பெயர் காளத்தியப்ப சிவாசாரியர். இவர் உரிய பருவத்தில் உபநயனம் செய்விக்கப்பெற்று, அந்த ணர்க்குரிய அருமறைகளை அத்தியயனம் செய்து, வடமொழி, தென்மொழி யென்ற இரு பாஷைகளையும் எழுத்தெண்ணிப் படித்துக் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிற் சிறப்படைந்து விளங்கினர். அப்புறம் சைவசமயத்துக்கு இன்றியமையாததாகிய சமய தீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாண தீக்ஷை யென்ற மூன்று தீக்ஷைகளையும் முறையே பெற்று ஆசாரியாபிஷேகம் அடைந்து ஆறுமுகக்கடவுளை ஆகமவிதிப்படி அன்புடன் பூஜைசெய்து வந்தார். ஒரு சமயத்தில் முருகக்கடவள் இவரது கனவிற்றோன்றி, “அன்பனே நமது சரித் திரத்தை “கந்தபுராணம்” எனப் பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாகப் பாடுக” என்று கட்டளையிட்டுத் “திகட சச்கரச் செம்ழகமைந்துளான்” என்று அடியெடுத்துத் தந்து மறைந்தருளின ரென்றும், ஆசாரியர் அன்று முதல் தினமும் முயன்று, சில மாதங்களில் இந்தப் புராணத்தைப் பாடி முடித்தனரென்றும் கூறுவர். இஃது அரங்கேற்றிய இடம் குமரக்கோட்டம், இன்னும் திகழ் + தசம் – திகடசம் எனப் புணர்தற்கு முருகக்கடவுள் புலவர் வேடம் பூண்டு வந்து வீரசோ ழியம் என்னும் புத்தகத்திலிருந்து விதியைக் காட்டி மறைந்தனரென்றும் விளம் புவர். இவர் காலம் சாலிவாகன சகவருஷம் (700க்கு மேல்).

கச்சியப்பமுனிவர்

இற்றைக்கு நூற்றெண்பது வருடங்களுக்குமுன் அபிஷே கத்தார் மரபில் திருத்தணிகை க்ஷேத்திரத்தி லவதரித்துத் திருக்கைலாய பரம் பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துப்பின் வேலப்ப தேசிகரிடஞ் சைவசந்நியாசம் பெற்று மேற்படி ஆதீனத்துச் சிவஞான யோகிகளிடம் கல்வி பயின்று, விநாயக புராணம், காஞ்சிபுராணம் இரண்டாங் காண்டம், தணிகைபுராணம், திருஆனைக் காபுராணம், பூவாளூர்புராணம், பேரூர் புராணம், ஆனந்த ருத்திரேசர் விவண்டு விடு தூது, தணிகையாற்றுப்படை, கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி, சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ், திருத்தணிகை பதிற்றுப்பத்தந்தாதி, பஞ்சாக்ஷர அந்தாதி முதலிய தலங்களின் புராணங்களை இயற்றிப் புகழ்பெற்றவர். இவர் சென்னை நகரிலிருந்தகாலத்து வடமொழியிலுள்ள விநாயகப் புராணத்தினைத் தென்மொழியிற் பாரகாவியமாக இயற்றி அந்நகரிலுள்ள பிரசன்னவிநாயகர் சன்னதியி லரங்கேற்றினார். இங்கனம் அநேக நூல்களை இயற்றியருளிய முனிவர்பெருமான். காஞ்சிபுரத்திலுள்ள திருவாவடு துறை மடத்தில் வெகு வருஷ காலம் எழுந்தருளியிருந்து அநேக நன்மாணாக்கர் களுக்குக் கல்விபயிற்றிச் சிவத்தியானத்தி லெழுந்தருளியிருந்து சாலிவாகன சகம் (972)க்குச் சரியான சாதாரண வருடம் சித்திரை மாதம் 11. புனர்பூச நக்ஷத்தி சத்திற் பரிபூரண தசையடைந்தனர்.

கச்சிராயன்

ஒரு புலவன், இவன் கண்டிய தேவனைப் பாடியது. குப்பாயமிட்டுக் குறுக்கே கவசமிட்டுக், கைப்பாசமிட்டு வருக் கண்டியதே வாவுனது, தொப்பாரத் தின் கீழ் மயிர். ” தொப்பாரம் போர் வீரர் முடி, (தமிழ்நாவலர் சரிதை.)

கச்சீப்பேட்டு இளந்தச்சனார்

தச்சனாரென்றதனால் இவர் கம்மாளரென்று தெரிகிறது. கச்சிப்பேடு ஒரூர். காஞ்சிபுரத்தைச் சார்ந்தது. இவர் முல்லைத்திணை யைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 266ம் பாட்டு.

கச்யபன்

பரிச்சித்து சாபநிவர்த்தி செய்யவந்த விடகாரியாகிய வேதியன், கார்க் கோடகனால் வேண்டிய பொருள் தரப் பெற்று மீண்டவன்.

கச்யபர்

காசிபரைக் காண்க.

கச்யபர்

அங்கனெனும் அரசன் பூமியைப் பிராம்மணருக்குத் தக்ஷிணையாகக் கொடுக்கப் பூமிதேவி வருந்திச் சத்யவுலகஞ் சென்றனள். உடனே கச்யபர் யோகபலத்தால் பூமியை முப்பதினாயிரம் வருஷம் தாங்கினர். பின் பூதேவி கச்யபரிடம் பெண்ணாகிக் காச்யபி எனும் பெயர் பெற்றாள். (பா. அநுசா.)

கஜச்சாயை

புரட்டாசி மாதத்தில் எந்த வாரத்திலேனும் மகநக்ஷத்ரமும், திரயோ தசியும் கூடிவருவது. இது ஒரு புண்ய காலம்.

கஞ்சக்கருவி

தாளம், திருச்சின்னம், பூரி, எக்காளை, கௌரிகாளை, நபுரி, பாங்கா, பேய்த்தாரை, துத்தாரி, கோணக்கொம்பு முதலிய.

கஞ்சனூர் ஆழ்வார்

இவர் ஒரு பாகவதர். இவர் இல்லறம் வழுவாது நடத்தினதால் தமக்கு இருபக்கத்திலும் இருந்த பதினான்கு வீடுகளுடன் பரமபதம்பெற்றவர்.

கஞ்சன்

1. பிரமன், ஒரு கற்பத்தில் விஷ்ணுமூர்த்தியின் நாபிகமலத்திற் பிறந்ததினால் உண்டான பெயர். 2. கம்சனைக் காண்க.

கஞ்சமணி

ஒரு விஷ்ணு பக்தன்.

கஞ்சமலையமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர்.

கஞ்சரீடபுரம்

பெருங்கரையென்னு மூர்; கரிக்குருவி பூர்வஜன்ம புண்ணியத்தால் ஒரு மரத்தின் மீதிருந்து தனக்குப் பறவைகளா லுண்டாகும் துன்பத்தையும் அதனை மாற்றுதற்குரிய வழியையும் நினைத்துக் கொண்டிருந்த இடமாம். (திருவிளை புரா.)

கஞ்சா

இது, ஒருவகை மயக்கந் தரும் பூண்டு, இது பலவகைப் பிளவுபட்ட இலைகளுள்ள தாய் 7, 8 அடிகள் உயர்ந்து வளருகிறது. இது பூத்து முற்றுகையில் இதனிலைகளைக் காம்புகளுடன் பறித்துப் பதப்படுத்துகின்றனர். இது மயக்கந் தரும் மூலிகை, இதனையுண்டவர் போதை மிகுந்து பிதற்றுவர், கஞ்சிகளுக்கு உபயோகமான பொருள்கள் 4. ஆரோரூட் கிழங்கு (ARROW ROOT) இது தென் அமெரிகா நாட்டுப் பொருள், இதன் மா இச்செடியினடி வேரினால் செய்யப்படுகிறது. இவ்வேரினை நன்றாகச் சுத்தம் செய்து தண்ணீர் விட்டரைக்கின் பால்போல் வெண்மையாகிறது. அது உலரின் மாவாகிறது. இதன் வேர் அம்பு போல் காணப்படுதலின் இப்பெயரிடப்பட்டது. 2. டாப்யோகா (TAPIOCA) இது அமெரிகாதேசத்து மாண்டியோக் அல்லது கஸாவா (MANDIOS OR CASSAVA PLANT) இது டர்னிப் கிழங்கு போல் உருவுள்ளது. இது ஒரு விதத்தில் ஆகாரமாயினும் இது விஷமுள்ள சத்தென இதன் வித்தை அம்பிற் தோய்த் தெய்வர். 3. சேகோ (SAGO). இது கிழக்கு இந்திய தீவிலுண்டாம் பனை போன்ற மரத்தின் சோற்றியிலிருந்து செயப்படுகிறது. இது சிங்கப்பூரில் செய்யப்படுகிறது. ஜர்மனியில் உருளைக்கிழங்கிலும் இவ்விதமாகச் செய்யப்படுகிறதென்பர். 4. வெரமிசில்லி, மாகரோணி என்பன கோதுமை மாவின் தடித்த கஞ்சியை அச்சில் ஊற்றியழுத்த உண்டாம் இருப்பை உலர்த்த உலர்ந்த பண்டம். இவை, இடலி தேசத்தவர் பிரியபோஜனம்.

கடகன்

ஓர் அசுரன். இந்திரனுடன் போர் செய்து தோற்றவன்.

கடகபுரி

கசபதி ராஜாக்களின் இராஜதானி.

கடகாரன்

ஆத்திரப் பெண் வணிகனைக்கூடிப் பெற்ற பிள்ளை.

கடந்தைவாணிப மகருஷி கோத்ரன்

சிவமூர்த்தி திரிபுர தகனஞ் செய்த காலத்தில் விநாயகபூசைக்கு வேண்டிய கொடுத்து அருள் பெற்றவன்.

கடன்

சூடாலையைக் காண்க.

கடன் கோடல்

கொடுக்கல் வாங்கலின் தருமர். இது, ஈடின்றிக் கொடுத்தலும், முதற் பொருளுக்கும் வட்டிக்கும் தகுதியான ஈட்டின் மேற் கொடுத்தலுமாம். அக்கடனானது பிணையையும், சாக்ஷியினையு முடைத்தாய்ப் பத்திரத்தில் எழுதப் பட்டதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வீடு துய்ப்பீடு, காப்பீடு, காலவரையீடு, காலவரையிலீடும் என நான்கு வகைப்படும். துய்ப்பீடு அனுபோகிக்கத் தக்கது. காப்பீடாவது பாசன முதலானவற்றில் வைத்துக் காக்கத்தக்கது. காலவரையீடாவது இன்ன காலத்தில் மீட்கப்படும் எனக் காலவரைகூறி வைப்பது. காலவரையீடாவது மீட்டுக்கொள்ளுமளவும் உன்னிடம் இருக்கத்தக்கது என வைத்த பொருளாம்.

கடன் பத்திரம்

வட்டி தருவதாகப் பொருள் பெற்றுக் கொண்டு சாக்ஷிகளுடன் எழுதிக்கொள்வது.

கடம்

ஒரு தேசம். அருச்சுனனால் இராஜ சூய காலத்தில் ஜெயிக்கப்பட்டது. KATWA IN THE DISTRIOT OF BURDWAN.

கடம்பனூர்ச்சாண்டிலியன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் கடம்பனூர். இவர் சாண்டிலிய குடியினராதலின் வேதியராக இருத்தல் கூடும். குறு. 307.

கடம்பர்

தமிழ் நாட்டுப் பழங்குடிகள். இப்பெயர் இப் பழங்குடியினர்க்கு இன்ன காரணத்தால் வந்ததென்று துணியக் கூடவில்லை. முருகவேட்குரிய கடம்பை வளர்த்து வந்தமையாற் ‘கடம்பர்” எனப் பெயர் பெற்றனர் போலும்.

கடற்கன்னியர்

கடலிலிருக்கும் தேவதைகள். இவர்கள் கடலோடிகளால் வணங் கப்படுவோர்.

கடற்குதிரை

இது, கடலில் வாழும் ஒரு வகைப் புழு. ஏறக்குறைய 7, 8 அங்குல நீளமுள்ளது, இப்புழுவின் தலை மாத்திரம் எல்லா விதத்திலும் குதிரையை ஒத்திருக்கிறது. உடல் கவசம் போன்ற செதிளால் மூடப்பட்டிருக்கிறது. வாய்குழல் போலிருக்கிறது. மீன்கள் போல் செவுள்களும் உண்டு. இது, தன் நீண்ட வாலால் கடற் பூண்டுகளைப் பற்றி நிமிர்ந்து நிற்கிறது. இது, தன் முட்டைகளைத் தன்னிடமிருக்கும் பைகளில் வைத்துக் காக்கின்றது. இதனை நாடாமீன் (TAPE FISH) என்பர். இது நாடாபோன்று இரண்டு விரல் அகலமுள்ளது.

கடற்சிலந்தி

இது, கடலிலுள்ள சிலந்தி இவற்றுள் பல பேதமுண்டு. இது எந்தக் கடற் பிராணிக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் தன் கைகளால் வலித்துக் கொள்ளும் வன்மையுள்ள சிலந்திகள் பல பஸிபிக் முதலிய மகா சமுத்திரங்களில் இருக்கின்றன என்பர்.

கடற்பசு

(DUGONG) இது, ஒரு சிறிய திமிங்கிலம்போல்வது. எட்டு முதல் பன்னி ரண்டடி நீளமுள்ளது. கடற்பூண்டுகளைத் தின்று ஜீவிப்பது. இது, தன் குட்டிக ளுக்குப் பாலூட்டி வளர்க்கும். இது, செங்கடல் ஆஸ்திரேலியா கடல்களில் இருக்கிறது.

கடற்பஞ்சு

இது ஒரு பூச்சியின் எலும்புக் கூடு, இதற்குக் கடற்பாசி, கடற்காளான் எனவும் பெயர். இந்தப் பூச்சி, மயிர்போன்ற தன் வாய்களால் ஜலத்திலிருந்து தான் சீரணித்துக்கொள்ளக் கூடிய கனப்பொருள்களைச் சேகரித்துத் தன்னுடலாகிய கடற்பஞ்சியைச் செய்கிறது. கடற்பஞ்சியிலுள்ள சிறு துவாரங்களெல்லாம் இப்பூச் சியின் வாய்களே, இப்பூச்சி கடலினடிப் பாகத்தில் பாறைகளில் ஒட்டிக்கொண் டிருக்கிறது. இதை எடுப்போர் கடலில் முழுகிக் கழுத்தில் கட்டிக்கொண்டுள்ள கூடையில் வாரி வருவர். இது உயிருடனிருக்கையில் மாமிசபாகம் வழுவழுப்பா யிருக்கும். இது தொளைப்பொருளாதலால் ஜலத்தை உறிஞ்சுகிறது. (SPONGE.)

கடற்பாம்புகள்

கடலில் பல வகையான பாம்புகள் பல நிறமாகக் கடலில் நீந்தத் தக்க தட்டையான உடல்களைப் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பல (100) அடி களுக்கு அதிகமான நீளமுள்ளனவாகவும், தக்க கனமுள்ளனவாகவும் இருக்கின்றன.

கடலளவறிதல்

லவண சமுத்திரம் இதன் குறுவட்டம் லக்ஷம் யோசனை. இது சம்புத்தீவினைச் சூழும், இதற்கு அப்பால் கருப்பஞ் சாற்றுக்கடல், இது இரண்டு லக்ஷம் யோசனை. இது சான்மலித் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கப்பால் மது சமுத்திரம். இது நான்கு லக்ஷம் யோசனை. இது பிலக்ஷத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் நெய்க்கடல். இது எட்டு லக்ஷம் யோசனை. இது கிரௌஞ்சத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் தயிர்க்கடல், இதுபதினாறு லக்ஷம் யோசனை. இது குசத் தீவினைச் சூழ்ந்திருக்கும். அதற்கு அப்பால் பாற்கடல். இது முப்பத்திரண்டு லக்ஷம் யோசனை. இது சாகத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் சுத்தஜலம். இது அறுபத்துநான்குலக்ஷம் யோசனை, இது புட்காத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் சக்கிரவாளகிரி. நெல்லனவறிதல் செவிடு (5) கொண்டது ஆழாக்கு. ஆழாக்கு (2) கொண்டது உழக்கு. உழக்கு (4) கொண்டது நாழி. நாழி (8) கொண்டது குறுணி. குறுணி (8) கொண்டது தூணி. தூணி (3) கொண்டது கலம். பாண்டி நாட்டிலும், மற்றைய நாடுகளிலும் இந்நெல்லளவை வேறுபடும். நாழிகை அறிதல் கண்ணிமை இரண்டு கொண்டது கைந்நொடி, கைக்கொடி இரண்டு கொண்டது மாத்திரை. மாத்திரை இரண்டு கொண்டது குரு. குரு இரண்டு கொண்டது உயிர், உயிர் ஆறு கொண்டது க்ஷணிகம், க்ஷணிகம் (12) கொண்டது விநாடி விநாடி (60) கொண்டது நாழிகை, நாழிகை (7 1/2) கொண்டது ஜாமம். ஜாமம் (4) கொண் டது பொழுது. பொழுது (1) கொண்டது நாள், நாள் (30) கொண்டது மாதம், மாதம் (12) கொண்டது வருடம். இனி வருட அளவை இத்துணை கொண்டது யுகம் என்பது முதலியவற்றை யுகபரிமாணத்தில் அறிக. இனி தொகை அறிதலாவாது ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், லஷம், பத்துலக்ஷம், கோடி இவை ஒன்றிற்கு ஒன்று பதின்மடங்கு மேற்பட்டவை. இக்கோடி கொண்டது மகாகோடி அது அவ்வளவு கொண்டது சங்கம். அவ்வகைக் கணக்கு ஒவ்வொன்றிற்கும் கொள்க. மகாசங்கம், விந்தம், மகாவிந்தம், சமுத்திரம், மகாசமுத்திரம், வெள்ளம், மகாவெள்ளம், பிரளயம், மகாப்பிரளயம், யோசனை, மகாயோசனை, கற்பம், மகாகற்பம், விகற்பம், மகாவிகற்பம், மாகம், மகாமாகம், தன்மனை, மகாதன்மனை, அற்புதம், மகாஅற்புதம், உற்பலம், மகாஉற்பலம், வேணு, மகாவேணு, சலஞ்சலம், மகாசலஞ்சலம், மந்தாரை, மகாமந்தாரை, மேரு, மகாமேரு, வலம்புரி மகாவலம்புரி எனத் தொகை கொள்வர். மணியளவறிதல் பச்சைரதி 1க்கு வராகன் எடை வீசம். கோடி 1க்கு கெம்பு 20. முத்து 1க்குப் பணவெடை முக்காலேயரைக் கால். பவழம் கழஞ்சு 1க்கு பணவெடை பத்து. ரவை மஞ்சாடி 1க்கு பணவெடை முக்காலேயரைக்கால். பாக்கு ஆயிரங்கொண்டது கலசம். பாக்கு (20000) கொண்டது அம்மணம், பாக்கு (100000) கொண்டது அலகு என்பர். இக் கணிதம், பீஜகணிதம், க்ஷேத்திரகணிதம், அங்ககணிதம் என மூவகைப் பட்டுப் பல பேதங்களாக ஆன்ரோற் கூறப்பட்டு இருக்கின்றது. பின்னும் இக்கணிதம் சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்க மூலம், கனம், கனமூலம் என எண்வகைப்பட்டு வழங்கும். சங்கலிதம், கூட்டல், விபகலிதம், கழித்தல்,குணனம், பெருக்கல், பாகாரம், பங்கிடல், வர்க்கம் சமமாகிய இரண்டு எண்ணின் பெருக்கம். கனம் சமமாகிய மூவெண்ணின் பெருக்கம். கனமூலம் அக்கனத் தொகுதியின் நின்றதன் மூலமாகிய ஒரு மூலை அறிதல்.

கடலுண்மாய்ந்த இளம் பெருவழதி

ஒரு பாண்டியன். (புற, நா).

கடலூர்ப்பல்கண்ணனார்

இவர்நீர் நாட்டின் கணுள்ள கூடலூரினராக வேண்டும். மருதத்திணையிற் பாணனை மறுத்துக்கூறுந் துறையையே சிறப்பித்துப் பாடியுள்ளார் இவர் பாடியபாட்டு இரண்டு, நற் 200, 380.

கடல்

(7) உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு கொண்ட நீர் நிலை.

கடல்

இது உலகைச் சூழ்ந்த நீர்ப்பரப்பு. இது பெரும்பாலும் உப்புநீர் கொண்டது. அவ்வாறிருப்பதற்குப் பல காரணங்கள் கூறுவர். உலகம் முதலில் அக்னிகோள்மாக இருந்தது. அது வரவரக் குளிர்ந்து பூமியாக அதிலுள்ள உப்புச் சேர்ந்த பொருள் கரைந்து கலப்புற்றதெனவும், மலை மரம் பூமிகளுடன் இயற்கையில் சேர்ந்துள்ள உப்புகள் நெடுங்காலமாக ஆற்றினால் கொண்டு சேர்க்கப் படுதலாலும் என்பர். இதில் அலைகள், பூமியின் உருட்சியாலும் சந்திர சூரியர்களின் இயக்கத்தாலும் உண்டாகின்றன என்பர். இதின் ஏற்றவற்றங்கள் 6 மணிக்கு ஒருமுறை யுண்டாம். இவ்வாறு உண்டாதற்குக் காரணம், சந்திர சூரியர்களின் ஆகர்ஷ்ண சக்தியாம். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சூரிய சந்திரரிருவருஞ் சேர்ந்து பூமியையும் ஜலத்தையும் இழுப்பதால் அதிகப் பெருக்கு உண்டாகிறது. பௌர்ணமியில் சந்திரன் பூமிக்குச் சமீபத்திலிருந்து சூரியனைக் காட்டிலும் 2 1/2 மடங்கு அதிகம் இழுப்பதால் கொந்தளிப்பு அதிகப்படுகிறது. அதாவது சூரியன் 2 மடங்கு இருந்தால் சந்திரன் 5 மடங்கிருக்கிறது. இது உப்பாயிருத்தற்குப் பூமியில் ஒரு வகை உப்பிருக்கிறது என்பர். இது, கப்பல் போக்கு வரவிற்கும் இரத்தினோற்பத்திக்கும், பலவித சலசரங்களின் பிறப்பிற்கும் இடமானது.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

ஒரு சேரன், இவன் தன்னைப் பாடிய பாணர்க்கு உம்பர்காட்டு வருவாயையும் தன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசிலாகத் தந்தவன்.

கடல்நுரை

(CUTTLE FISH). இது ஒரு பிராணி. இது, 1 1/2 அடி நீளம், இதற்கு மேற்பக்கமாக நீண்ட கம்பிபோல் பத்து உறுப்புக்கள் உள. வாய் குழல்போல் ஒவ்வொரு கைகளிலும் உண்டு, இது ஆகாரத்தைக் கம்பிபோன்ற உறுப்பால் பற்றி உறிஞ்சுகிறது. இதன் கண்கள் பெரியன. ஆசனம் மேல்பாகத்தில் இருக்கிறது. இது, தன்னை விரோதிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஆசனத்தி னருகில் இருண்டமை போன்ற திரவப்பொருளைப் பெற்றிருக்கிறது. விரோதி களைக் கண்டபோது அதனைப் பீச்சி வெருட்டுகிறது.

கடல்படும் வளம்

ஒர்க் கோலைசங்கம் ஒளி பவளம் வெண்முத்தம் நிர்ப்படு முத்தி னோடைந்து.

கடல்யானை

இது யானைபோல் நீண்ட துதிக்கையையுடையது. இந்து மகாசமுத் திரத்தில் உள்ளது. (ELEPHANT SEAL)

கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்து பக்கம்

மூன்று திருநயனத்தையுடை யானது புல்லுதலை விரும்பின மானிட மகளிர் கூறுபாட்டைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் நயந்த பக்கம்

இமையாத கண்ணினையும் ஒளிவிடும் ஆபரணத்தினையுமுடைய தெய்வ மகளிர் ஆராத அன்புடைய கடவுளரை விரும்பியது. (பு. வெ. பாடாண்.)

கடவுண்மாமுனிவர்

கச்சியப்ப முனிவர் காலத்திருந்தவர். இவர்தேகத்திற் பிணிகொண்டிருத்தலைக் கண்ட கச்சியப்ப முனிவர் இவரைத் திருவாதவூர்ப் புராணம் பாடச் செய்ய அதனைப் பாடி முடிக்கையில் ரோக நிவர்த்தி பெற்றவர். (திருவாதவூர்ப் புராணம்).

கடவுளான்மருஷிகோத்திரன்

மகாராஜன் கையில் காளம்பெற்று மிக்க கீர்த்திபெற்ற வணிகன்.

கடவுள் வாழ்த்து

பூமியைக் காத்தல் கருதிய வீரக்கழல் வேந்தன் கைகூப்பும் அரி அயன் அரனென்னும் மூவருளொருவனை உயர்த்துச் சொல்லியது. (பு. வெ. பாடா)

கடாசுரன்

ஒட்டக உருக்கொண்டு விநாயகரைக் கொலை செய்யவந்து அவரால் இறந்தவன்.

கடிகாசதகம் அம்மாள்

இவர் வேதாந்த தேசிகர் காலத்திலிருந்த பண்டிதர். ஸ்ரீ வைஷ்ணவர் பிரமதந்திர சுதந்திரஜீயர் திருவடிகளில் ஆச்ரயித்தவர். நடாதூர் பெரியம்மாளுக்குப் பௌத்திரர் சுதரி சனாசாரியருக்குப் புத்ரர். இவருக்குப் பல வித்துவான்கள் கொடுத்த நூறு சமுசைகளை ஒரு கடிகையில் முடித்துக்கொடுத்த தால் இப்பெயர் வந்தது.

கடிகாரம்

இது விநாடி, நாழிகை 24 மணி நேரம் முதலியவைகளைத் தெரிவிக்கும் நாழிகை அளவிடுங் கருவி. இது உருவில் பலவகைப்படும். இதில் ஒன்று முதல் பன்னிரண் டளவைகளுண்டு. இதில் சிறிதும் பெரிதுமாக இரண்டு முட்களுண்டு. சிறிது மணி காட்டும்; பெரிது விநாடி, நிமிடம் தெரிவிக்கும்.

கடிகை

செங்கல்பட்டு ஜில்லா தாலூகா பொய்யாமொழி மங்கலத்தில் இருந்த ஒரு தமிழ்ச்சங்கம். (திருகச்சூர் சா~ம்.)

கடிகைமுத்துப்புலவர்

திருநெல்வேலி ஜில்லா எட்டையபுரத்து வேங்கடேசுர எட்ட பூபதியின் சமத்தான வித்துவானாயிருந்து அந்தச் சிற்றரசன் மீது பல சாது ரியக் கவிகள் செய்தவர். கடிகையென்னும் தமிழ்ச் சங்கம் களத்தூர் கோட்டத்திருந்ததாகப் புலப்படுகிறது. இவர் அங்குக் கற்றவராயின் காலம் மாறுபடும். சமயம், சைவம், காலம். இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் என்பர். இவர் செய்தது காமரச மஞ்சரி, சமுத்திரவிலாசம். இது சிலேடையாய் இருபொருள்பட நிற்கும்.

கடியநன்னியார்

ஒரு தமிழ்ப் புலவர். கைக்கிளைச் சூத்திரம் செய்தவர். (யாப் பருங்கல விருத்தி) இவரைக் கடியநள்ளியாரெனவுங் கூறுவர்.

கடியநெடுவேட்டுவன்

பெருந்தலைச் சாத்தனாரால் பாடப்பட்டவன். கோடை யென்னும் மலையாளி வேடர் தலைவன். கொடையாளி, தன்னைச் சார்ந்தார்க்கு உதவிசெய்து பகைவரை அழிப்பவன். (புறநா~205.)

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலைப் பாடிப் பரிசு பெற்றவர். (அக~நா.) (குறு~தொ.)

கடுகம்

(3) சுக்கு, திப்பிலி, மிளகு, இவை திரிகடுகம்.

கடுகு

சம்பாரப் பொருள்களில் ஒன்று. காரமும் தைலசத்தும் உள்ள பொருள். இது, குளிர்காலத்துப் பயிராம் பூண்டு. இது இந்தியாவில் கிருஷ்ணாந்திக் கிடை யில் உள்ள தீவுகளில் பயிரிடப்படுகிறது. இதன் வித்து சிவந்த நிறமுடையது, இதில் வெள்ளைக் கடுகு, சிறுகடுகு, செங்கடுகு என வேறுபாடுண்டு.

கடுக்காய்

இந்திரன் அமிர்தபானஞ் செய்கையில் வாயினின்று துளித்த அமிர்த பிந்துக்களிலிருந்து உண்டான விருக்ஷம். இது விசயன், அசோகிணி, பிரிதிவி, அமிர்தம், சிவந்தி, திரிவிருத்தி, அபயன், கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் எனப் பலவகைப் பட்டுப் பல நற்குணங்களைத் தரும்.

கடுங்கோன்

தலைச்சங்க மிருத்திய பாண்டியர்களில் இறுதியானவன்.

கடுதபெருந்தேவன்

கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர்க்குப் பெருந் தேவன் என்பது பெயராகலாம். பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியவரின் வேற்றுமை தோன்ற கடுகு என அடை புணர்த்தனர் போலும், (குறு~255.)

கடுந்தொண்டைக்காவினார்

கடைச்சங்க மருவிய புலவர். இவர் பாடிய ”பல் விதழ்” எனும் பாலைச் செய்யுளில் இவர் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினாரென்பர் நச்சர். (அக~நா.)

கடுந்தோட்கரவீரன்

இவர் குறுந்தொகையில் ஆண் குரங்கு இறந்ததெனப் பெண் தானும் இறந்தது. அத்தகைய குறிஞ்சித் தலைவ, நீ களவொழுக்கம் கொண்டனை யெனப் பாடியவர். (குறு~69)

கடுவனிளமள்ளனார்

இவரே அகத்தில் மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவனிள மன்ளனார் எனவும், கடுவன் மள்ளனாரெனவும் கூறப்படுவர். இவர் இயற்பெயர் மள்ளன். கடுவன் இளவெயினனார் எனப் பரிபாடலில் ஒருவர் பெயர் காணப்படு தலால் கடுவன் என அடைபுணர்த்தினர். கடுவன் என்பது ஓரூரின் பெயர் போலும். அக்காலத்துத் தமிழியற்பாடிக் கூத்தாடும் தொழிலுடைமையாலே தமிழ்க்கூத்தனெனவும், மதுரையில் வந்து தங்கியதனால் மதுரை தமிழ்க் கூத்தன் கடுவனிள மள்ளனெனப்பட்டாரெனவும் கொள்க, பாண்டியன்மாறன் வழுதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் நற். 150. இராமபிரான் தென் கடற்கரையகத்துக் கடலடைக்க வேண்டிச் சூழ்ச்சி செய்த கதையொன்றனை யமைத்துக் காட்டுகிறார். அகம் 70. முல்லை, குறிஞ்சி, மருத முதலிய திணைகளைச் சிறப் பித்துப் பாடியவர். இவர் பாடியனவாக நற்றிணையில் 150 வது பாடலொன்றும் குறுந்தொகையிலொன்றும் அகத்தில் இரண்டுமாக நான்கு பாடல்கள் கிடைத் திருக்கின்றன.

கடுவனிளவெயினனார்

இவர் பரிபாடலில் மூன்று பாடல்களில் திருமாலையும் முருகக் கடவுளையும் புகழ்ந்திருக்கின்றனர். இவர் பெயரை நோக்குமிடத்து இவர் குறிஞ்சி நிலத்தவர் எனத் தோற்றுகிறது. (பரி பாடல்.)

கடுவெளிச்சித்தர்

ஒரு சித்தர். இவர் தம் ஆன்மாநுபவத்தைப் பிறருமறிந்து அவ்வழி நடந்து சீர்பெறப் பிரபஞ்சத்தைச் சுத்த வெளியென்று கண்டு இப்பெயர் அடைந்தவர்போற் றெரிகிறது. இவர் செய்த நூல் கடுவெளிச்சித்தர் பாடல்.

கடைச்சங்கம்

உத்தரமா மதுரையிலாண்ட முடத்திருமாறன் நாடு (12) வருடம் வற்கடமாயிற்று, பின்பு மழை பெய்தது. அதற்குப் பிறகு தம்மிடமிருந்து சென்ற புலவரை ஒன்று சேர்த்துச் சங்கமிருத்தினன். அக்காலத்துச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார், சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையானார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார், நக்கீரனார் முதலிய (49) பெயர். இவரை யுள்ளிட்டு (449) புலவர்கள் பாடினர். இவர்கள் பாடிய நூல்கள் நெடுந்தொகை 400, குறுந்தொகை 400, நற்றிணை 400, ஐங்குறு 100, பதிற்றுப்பத்து,, நூற்றைம்பது கவி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை முதலியன. சங்கமிருத்தியவர் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி யீறாக (49) பெயர். இச்சங்கம் (1850) வருஷமிருந்தது. இதில் மூவர் பாண்டியர்கள் பாடினார்கள்.

கடைப்படுதானம்

(7) ஆர்வம், புகழ், அச்சம், கைம்மாறு, காரணம், கண்ணோட் டம். கடைப்பாடுபற்றிச் செய்வது.

கடையம்

வாணாசுரன் வடக்கு வாயிலில் உள்ள வயலில் நின்று இந்திராணி ஆடிய கூத்து.

கடையர்

பரவர் குலத்தைச் சேர்ந்த ஒரு ஜாதி. இவர்கள் சுண்ணாம்புக் கிளிஞ்சல் சுடல்முத்துக் குளித்தல் முதலிய தொழில் செய்து வாழ்வர். இப்பெயர் தென்னாட்டில் இராமேச்சுர முதலிய இடங்களில் வழங்கி வருகிறது,

கடோர்க்கசன்

இடும்பிக்கு வீமனிடம் பிறந்தவன். ஆகாயவாணியால் பெயரிடப் பெற்றவன், விபீஷணரிடஞ் சென்று கப்பம் வாங்கினவன். மகாமாயாவி, கர்ண னால் பதினாலாம் போரில் கொல்லப்பட்டான். இவன் குமரன் அஞ்சனவர்மன், (பாரதம்.)

கடோற்காதித்தன்

இந்திரனது வெள்ளைக் குதிரைக்கு மறுவென்ற கத்துரு, குமரரை நோக்கிக் குதிரைக்குக் கறுப்பாக்குக என, அவர்கள் மறுத்ததனால் நீங்கள் கருடனுக்கு இரையாகுக என்று சபித்துத் தெய்வவுலகஞ் சென்றனள், செல்லுகையில் சூரியன் அதிவெப்பங் கொண்டதால் கடோற்கமெனச் சூரியனுக்கு இப்பெயர் வந்தது. (காசி.)

கட்கதரன்

பிரகத்பாநுவின் குமரன். இவன் குமரன் சுபாலன்.

கட்காஞ்சி

மதுமிகும் கமழு மாலையோன் தறுகணாளர்க்கு மதுவைக் கொடுத்தது. (பு. வெ.)

கட்குழி

இது, எலும்பாலான பள்ளம், இதில் கண் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்குழியின் பின்புறத்திலும் ஒரு துவாரம் இருக்கிறது. அத்துவாரத்தின் வழியாக மூளையிலிருந்து பார்வை நாம்புகள் கண்களுக்கு வருகின்றன, தலையின் அமைப்பை நோக்குகையில் தலையிலும் முகத்திலுமுள்ள எலும்புகளின் அடிகள், வாளின் பற்களைப்போல் இருக்கின்றன. இளைமைப் பருவத்தில் இவை யொன்று சேரா. பால்யத்தில் சிறுகச்சிறுகப் பெருகி ஒன்று சேர்ந்து உறுதிப் படுகின்றன. உடல்: அல்லது முண்டம், இது, இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மார்பு, மற்றொன்று வயிறு. இந்த முண்டத்தில் (53) எலும்புகள் உள்ளன. கழுத்தில், கழுத்தின் சம்பந்தமாய் ஏழு எலும்புகளும், மார்பு சம்பந்தமாய் மொத்தத்தில் (37) எலும்புகளும், வயிற்றின் சம்பந்தமாக (9) எலும்புகளும் இருக்கின்றன. முதுகெலும்பு சம்பந்தமான பன்னிரண் டெலும்புகளில் விலாவெலும்புகள் 24. இணைக்கப்பட்டுள்ளன. மார்பெலும்பு (1) இடுப்பின் பின்பாகத் தெலும்புகள் (5) திரிகாஸ்தி எலும்பு (1) இடுப்பு எலும்புகள் 2, முதுகெலும்பினடி எலும்பு (1) முதுஎலும்புகள், உறுதியாய் ஒன்றின் மேலொன்று பொருந்தி நடுவில் அவைகளைத் தாங்கச் சும்மாடு போல் ஒரு தாங்கியைப் பெற்றிருக்கின்றன. முதுகெலும்பின் முள், துவாரத்துடன் கூடிய திரிசூலவடிவினதாகக் காணப்படும். முதுகெலும்பின் தொளை, மண்டைவரையில் ஊடுருவிச் செல்லும். முதுகெலும்பினடிப் பாகம், சிறு எலும்புகளால் முடிகிறது.

கட்சிவதன்

இவன் தவத்தால் ஞானியானவன். (வீரசிங்.)

கட்சிவான்

சண்டகோசிகர் தந்தை.

கட்டளைக்கலித்துறை

முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது நிற்பக் கடை யொரு சீர்விளங்காயாகி வரும் ஐஞ்சீரடி நான்கு கொண்டுவருவது,

கட்டளைக்கலிப்பா

முதலில் மாச்சீர்பெற்று, நான்கு சீரான் வருவது அரையடியாகவும், அது இரட்டிகொண்ட தோரடியாகவும். அவ்வடி நான்கு கொண்டுவருவது.

கட்டாபர்சா

இது ரப்பர் மரத்தைப்போன்ற மரத்தின் பால். இந்த மரம் மலேயா நாட்டில் வளர்கிறது. கட்டாபிசின், பர்சா என்பது மரம். இதன் பாலை ரப்பர் சேகரிப்பது போல எடுப்பர், இது காற்று பட்டவுடன் கறுத்துப்போகிறது. இதனை வெந்நீரிலிட்டு அழுக்கு நீக்குவர்.

கட்டியங்காரன்

சச்சந்தனுக்கு மந்திரி.

கட்டில்

நித்திரை செய்தற்கு நான்கு கால்களமைத்துப் பலகையால் யாக்கப்பட்ட பீடம். இதன் மீது அணைகள் கொட்டைகள் பரப்பி யுறங்குவர்.

கட்டுநல்லூர்

பாண்டியன் மேகங்களைப் பிடித்துக் கட்டிய இடம். இஃது இருஞ்சிறைக்குச் சமீபமானது. (திருவிளையாடல்.)

கட்டுப்பிடித்தல்

அறிவில்லாப் பெண்களைக் கிழவிகளில் சிலர் மயக்கி மெழுகிக் கோலமிட்டுச் சாணியில் நீர் நிறைந்த சொம்பையழுத்தித் தூபதீப ஆராதனாதிகள் செய்வித்துக் குறைகேட்கும் தொழில்,

கட்வாங்கன்

(சூ.) விச்வகன் குமரன். தீர்க்கபாகுவின் தந்தை. இவன் ஒரு காலத்துத் தேவாசுரயுத்தத்தில் தேவர்களுக்கு உதவி புரிந்தனன். தேவர் களித்து உனக்கு என்ன வேண்டுமென அரசன் எனக்கு ஆயுள் தருக என்று கேட்டனன். தேவர் உனக்கு இன்னம் ஒருமுகூர்த்தமே யென்ன இவன் உண்மைப்பொருளை நாடி முத்தியடைந்தனன். (பாகவதம்.)

கணக்கதிகாரம்

சில அரிய கணித சூத்திரங்களை விளக்கும் நூல் காரியால் செய்பயப்பட்டது.

கணக்கர்

பிராமணனுக்கும் அரச கன்னிகைக்கும் பிறந்தவர்கள். இவர்கள் தொழில் இராசசபையில் கணக்கெழுதி வாசிப்பது. இவர்கள் தென் ஆற்காடு வட ஆற்காடு செங்கல்பட்டு ஜில்லாக்களில் கிராமக் கணக்கெழுதும் தொழில் மேற்கொண்டவர்கள். இவர்கள் சீர்கணக்கர், சரட்டுக்கணக்கர், கைகாட்டி, சோழியர் என நால்வகையர். இவர்கள் தங்களை க்ஷத்ரியர் என்பர். பூணூல் தரிப்பர். சிலர் மாம்சபக்ஷணஞ் செய்யார். பெரும்பாலார் சைவர். சிலர் வைணவரா யிருக்கலாம். சில குசவரும் கணக்கு வகையில் சேர்ந்தவர் என்பர். குசக்கணக்கு. (தர்ஸ்டன்) (அருண்கிரி புராணம்.)

கணக்காயனார்

தமிழரிச்சுவடிக்குத் தமிழ் கணக்கென்றும் நெடுங் கணக்கென்றும் பெயருண்டு. ஆயம்கூட்டம்; கூட்டமாகப் பிள்ளைகளைச் சேர்த்துவைத்துத் தமிழ்க் கணக்கைப் பயிற்றுவித்தலால் உபாத்தியர் கணக்காயரெனப்பட்டார். அங்ஙனமே இவரும் பிள்ளைகளுக்கு உபாத்தியாயரா யிருந்தமையிற் கணக்காயனார் எனப்பட்டார். குறுந்தொகை, 304ம் பாட்டிற் கீழ்க்கணக்காயன் தத்தன் என்றெழுதியிருத்தலால் இவரது இயற்பெயர் தத்தனென்பதே. கூரை கணக்காயனென்று அகத்தில் காணப்படுகிறது. மதுரை யென்பதில் மகரம் செல்லரித்துவிட எஞ்சியது உரையென்பது பொருள் பயவாமையால் துரையைக் கூறை என்று திருத்தியெழுதி யிருக்கலாம். இங்கனம் ஏடெழுதுவோரால் மதுரை என்பது கூரை யென்றாயிற்று. இவர் நக்கீரனார்க்குத் தந்தையாரென்னும் பதவிவாய்ந்தவர். குறிஞ்சி, நெய்தல் வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார், வேங்கட மலையையும், பாண்டியரது கொற்கையின் முத்துக்களையும் புகழ்ந்து கூறியுள்ளார். அகம் 27, பாண்டியரது பொதியில் மலையும் சேரமானது கொல்லி மலையும் சோழரது காவிரியும் இவராற் பாராட்டப்பட்டுள்ளன. அகம் 338 எறியீட்டி வீசித் திமிங்கிலத்தைப் பிடிப்பது இவர் பாடலில் கூறப்பட்டுள்ளது. குறு 304. இவர் பாடியனவாக நற்றிணையில் 23ம் பாட லொன்றும், குறுந்தொகையி லொன்றும் அகத்தில் மூன்றும் புறத்தி லொன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கணங்கள் (18)

அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், யக்ஷர், விஞ்சையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர்.

கணதரசுவாமிகள்

சைந்தீர்த்தங்காரருள் ஒருவர்.

கணதரர்

அருகசமயத்து வித்வான்களில் ஒருவர், நிகண்டாசிரியர்.

கணநாதநாயனார்

சீர்காழியில் பிராமண குலத்துதித்துச் சிவதேச முன்னவராய்ச் சிவத்தொண்டு புரிவோருக்கு உதவிசெய்து திருஞான சம்பந்த மூர்த்திகளை ஆராதித்துத் திருக்கைலை யடைந்தவர். (பெ~புரா.)

கணன்

அபிசித் என்பவனும் அவன் பாரி குணவதியும் தவஞ்செய்து புத்திரப்பேறு பெற வரம்பெற்று மீளுகையில் அவ்விடந் தவஞ் செய்து கொண்டிருந்த பிரமதேவருக்குக் காமநினைவு உண்டாகிச் சரசவதியுடன் கூடவருகையில் அவள் அஞ்சி நீங்கினள், அவ்வீரியம் ஜலத்தில் வீழ்ந்தது. இதனைத் தாகத்தால் வருந்திச் செல்லும் முற்கூறிய தம்பதிகள் குடிக்க அதனால் கணன் பிறந்தனன். இக்கணன், ஒரு நாள் வேட்டைக்குச் சென்று இளைப்படைந்து கபிலமுனிவ ராச்சிரமம் வந்தனன், முனிவர் தாம் பெற்றிருந்த சிந்தாமணியின் வலிமையால் இவனுக்கும் இவன் சேனைகளுக்கும் உணவளித்தனர். இச்சிந்தாமணியின் பெருமையை அறிந்த அரசன் வலிதில் அதைக் கவர்ந்து செல்ல முனிவர் விநாயகரிடம் முறையிட்டனர். விநாயகர் முனிவருக்கு அபயந்தந்தனர். தனக்கு விநாயகரால் கேடுவருதல் உணர்ந்து அரசன் முனிவரைக் கொலை செய்ய வர விநாயகர் கணனைக் கொன்று முனிவர் வேண்ட அந்த மணியைத் தாமே அணிந்து சிந்தாமணி விநாயகரெனப் பெயர் அமைந்தவர். இவர்க்குக் கபிலர் எனவும், சுமுகர் எனவும் பெயர். 2. காசிபருக்கு முனி என்பவளிடத்துப் பிறந்த குமரன்.

கணபங்கம் நால்வகை

1. கெட்டுவர்த்தித்தல், 2. கெட்டுஷயித்தல், கெட்டொத்து நிற்றல், கெட்டுக்கெட்டே போதல், (பௌத்தம்).

கணபதி

செந்தாமரைக் கமலத்தில் பதுமாசனராய், நான்கு திருக்கரங்களிலும் யானைக் கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் உடையவர், பிரதமமகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித்தவர். தேவர் முதலியவர்க்குத் தலைவராக முடிசூட்டப் பட்டவர். அகத்தியாது கமண்டலத்திலிருந்த காவிரியை இந்திரன் வேண்டுகோளால் காகவுருக்கொண்டு சாய்த்து அகத்தியர் காணப் பிரமசாரியாய் நீங்க முனிவர் கோபித்துப் பற்றவென்ணுகையில் அகப்படாது நீங்கித் தமது உருவை வெளிப்படுத்தி அவருக்கு முன்னையபோல் அவரது கமண்டலத்தில் நீர் அளித்துக் கடாக்ஷித்தவர். குமாரக்கடவுள் பொருட்டு வள்ளிநாயகியை அச்சுறுத்த யானை வடிவுகொண்டு சென்றவர். இவரது உற்பத்தி கஜமுகரைக் காண்க. இவர் சிந்தாமணி விநாயகர், கபில விநாயகர், சுமுகர், விக்கினராசர், மல்லாலர், மயூரேசர் என்னும் பல பெயருற்றவர். இவரை இந்திரன், விஷ்ணு, பிரமன், தக்கன், வீமன், உமை, கர்த்தமன், நனன், சந்திராங்கதன், மன்மதன், ஆதிசேடன், புரு சுண்டி அங்காரகன், சந்திரன், இப்பிரப் பிரசாதன், கிருத வீரியன், சூரசேனன், பரசுராமன், இராவணன், அகத்தியன், காசிபன் முதலியவர் பூசித்து இட்டசித்தி பெற்றனர். இவரால் கொல்லப்பட்ட அசுரர் சரித்திரங்களைத் தனித்தனி காண்க, சிவமூர்த்தி திரிபுரம் எரிக்கத்தொடங்கிய காலத்தில் இவரைத் துதிக்காததால் அச்சு முரிந்ததெனவும் இவரைத் தேவர் பூசித்த பிறகு இரதம் செம்மையுற்று நின்றதெனவும் புராணங்கள் கூறும். இவரே பிரபஞ்ச கர்த்தா எனவும் இவரது இச்சாகிரியா சத்திகள் சித்திபுத்திகள் எனவும் காண பத்தியமதம் கூறும்,

கணபதிதாசன்

நெஞ்சறி விளக்கம் செய்தவன் ஐக்கவாதி.

கணபதிதானம்

நூறு கழஞ்சுபொன்னில் கணபதியின் திருவுருவிதிப்படி செய்வித்து வித்தியேசுரர், திக்குப்பாலகர் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்துப் பூசித்து எட்டுக் குண்டமியற்றி அக்கினி காரியஞ் செய்து எழுவர் பிராமணஸ்திரீகளை யவர்கள் புருடருடன் பூசித்து ஆடையணி முதலியன கொடுத்துப் பிராமணர்க்குத் தானஞ் செய்வதாம்.

கணப் பொருத்தம்

கூவிளங்கனி, புளிமாங்கனி, கருவிளங்காய், தேமாங்காய், புளி மாங்காய், கூவிளங்காய், தேமாங்கனி, கருவிளங் கனி இவை யெட்டு முறையே நீர், தீ, வானம், துறக்கம், மதி, பரிதி, காற்று, நிலம் எனும் பெயரின. இவற்றுள் நீரும், திங்களும் துறக்கமும், நிலமும், முதன் மொழிக்காம். ஒழிந்தனவாகா.

கணம்

(8) நிலம், தீ, நீர், மதி, இயமானன், சூரியன், வாயு, ஆகாயம். இவற்றுள் முன்னைய நான்கு நன்று. பின்னைய நான்கும் கலகம், நிரை நிரைநிரை நிலக்கணம், நேர்நிரைநிரை நீர்க்கணம், நிரைநேர்நேர் மதிக்கணம், நேர்நேர்நேர் உயிர்க்கணம், நேர்நிரைநேர் ரவிக்கணம், நிரை நேர்நிரை தீக்கணம், நேர்நேர்நிரை வளிக்கணம், நிரைநிரைநேர் வெளிக்கணம்

கணம்புல்லநாயனார்

இருக்குவேளூரில் திருவவதரித்துச் சிவாலயத்துள் தீபத்திருப்பணி செய்துவரு நாட்களில் செல்வங் குறைந்தமையினால் சிதம்பரஞ் சென்று புலீச்சரத்தில் எஞ்சிய பொருண் முதலியவைகளை விற்றுத் தீபத்திருப்பணிசெய்து வருகையில் பொருள் முட்டுப் பட்டது. அதனால் கணம்புல்லரிந்து விற்றுத் திருப்பணி செய்து வந்தனர். ஒருநாள் அந்தப் புல்லும் விலையாகாமை கண்டு அந்தப் புல்லையே தீபமாக எரித்து அது போதாமையினால் தமது சிகையை எரிக்கச் சிவமூர் தத்தி கருணைகூர்ந்து முத்தி தரப் பெற்றவர். (பெரிய புராணம்.)

கணரோகம்

இது பிள்ளைகளுக்கு உண்டாம் ரோகங்களிலொன்று. தாயால் கெடுதியடைந்த முலைப்பாலால் உண்டாம் ரோகம் இது, மார்பில் வீக்கம், உட்சுரம், சுடுகை, வறண்டமலம் உண்டாக்கும். இந்தக் கணம், சூலிகணம், முக்குகணம், ஆமகணம், தேரைக்கணம், மகாகணம், சுழி கணம், வறள்கணம் என (8) வகை.

கணவாய்

இரண்டு மலைகள் இணைந்திருக்கும் பாகத்தில் மனிதர் போக்குவரவு செய்யப் பாதைகள் ஏற்பட்டு இருப்பதும் உண்டு, அந்தப் பாதைக்குக் கணவாய் என்று பெயர். (பூகோளம்).

கணாதர்

தர்க்கசாஸ்திரம் இயற்றிய ஓர் இருடி, இவர்க்குக் கணாதரர் எனவும் பெயர். இவர் வைசேடிக மதாசாரியர். நொய்யைப் புசித்ததா லிவர்க்கு இப்பெயர் வந்தது.

கணாதிபர்

ஒரு காலத்திற் பார்வதியார் தனித்திருக்கையில் சிவமூர்த்தி துவாரபாலகர் தடுக்கவும் அந்தப்புரஞ் சென்றதால் பார்வதியார் தம்முடையவனாயொரு காவல் நிருமிக்க எண்ணித் தமதுடம்பின் அழுக்கைத் திரட்டிச் சிவமூர்த்தியைத் தியானித்து யானை முகத்துடன் பிரணவாகாரமாய் ஒரு புத்ரனைச் சிருட்டித்துக் கையில் ஓர் தண்டங்கொடுத்துத் துவாரத்தி லிருத்தினர். இவர் தேவராதியரை வெற்றிபெற்றுப் பின் சிவபெருமானால் கணாதிபத்யமும் எல்லாத் தேவர்களுக்கு முதலில் பூசிக்கும் பெருமையும் பெற்றனர். சிவபெருமான், கணபதிக்கும் குமாரக்கடவுளுக்கும் திருமணமுடிக்க வேண்டி உங்களிருவரில் எவன் பூப்பிரதக்ஷணம் முதலில் வருவானோ அவனுக்கு முதலில் மணவினையெனக், கந்தமூர்த்தி பூப்பிரதக்ஷணத்தின் பொருட்டு முன் சென்றனர். கணபதியோ ஸ்நானமுடித்துத் தாய்தம் தைய ரிருவரையும் ஏழுமுறை வலம் வந்து முன்னின்று உங்களையன்றி வேறு உலகங் கண்டிலேனென்றனர். இதனால் களிப்படைந்த தாய் தந்தையர் கணபதிக்குச் சித்தி, புத்திகளை மணஞ்செய்விக்க அவர்களிடம் லாபன், லக்ஷன் எனும் இரண்டு குமரர்களைக் கணபதி பெற்றனர். (சிவ மகாபுராணம்).

கணிகண்ணன்

இவரது தந்தையார் திருமழிசை ஆழ்வாருக்குப் பால் கொடுத்து மிகுந்த சேஷத்தைத் தமது மனைவியாருக்குக் கொடுத்ததால் பிறந்தவர். இவர்க்குக் கணிகிருஷ்ணர் எனவும் பெயர். இவரை அரசன் நாட்டைவிட்டு அகலச் சொன்னதால் இவர் ஆழ்வாருக்குத் தெரிவிக்க ஆழ்வார் பெருமாளுக்கு “கணிகண்ணன் போயகன்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீயிங்கிராதே துணிவுடனே, செந்நாப் புலவனிதோ செல்லுகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்” எனக் கூறினர். அதனால் பெருமாள் காஞ்சி விட்டகன்றனர். இவரது மற்றச் சரித்திரங்களைத் திருமழிசையாழ்வாரைக் காண்க.

கணிகன்

திருதராட்டிரனுக்குத் தூர்ப்புத்தி போதித்த மந்திரிபிராம்மணன், இவனுக்கு வேறு பெயர் குலிங்கன்.

கணிகிருஷ்ணன்

கணிகண்ணனுக்கு ஒரு பெயர்.

கணிச்சி

அதிகாயன் யுத்தத்தில் இலக்ஷ்மணரால் கொல்லப்பட்ட அரக்கன்.

கணிதனூர் சீறியாழ்வான்

எழுபத்தினான்கு சிங்காசனாதிபதிகளில் ஒருவராகிய வைணவாசிரியர். (குருபரம்பரை).

கணிதவகை

இது ஆரிய சூத்திரத்தில் அஞ்சனம், புவனதீபம்; கணிதரத்தம் முதலிய கணக்கு அடைவுகளைக் கொண்டு விளங்கும். தமிழில் ஏரம்பம், கிளராலயம், அதிசாகரம், கலம்பகம், திரிபுவன திலகம், கணிதரத்நம் முதலிய நூல்களிலுங் கூறப்படும். அக்கணிதம் எண், பொன், மண், நெல் முதலியவற்றை அளக்கு முறையும், நுட்பமும், பலவகைக் கணித்முங் கூறும். அதில் எண்ணறிதலாவது இம்மி (10000) கொண்டது கீழ்முந்திரை. கீழ்முந்திரை (320) கொண்டது மேல் முந்திரை. மேல் முந்திரை (320) கொண்டது ஒன்று, பின்னும் முந்திரை (2) கொண்டது அரைக்காணி. அரைக்காணி (2) கொண்டது காணி. காணி (4) கொண்டது (1 / 20), (1 /20) 5 கொண்டது (1/4), (1/4) (4) கொண்டது (1) நுட்பமறிதல், சின்னம் பத்துக்கொண்டது நுண்மை முந்திரை, நுண்மை முந்திரை மூன்று கொண்டது இம்மி முந்திரை. இம்மி முந்திரை பத்தரைகொண்டது. கீழ் முந்திரை, கீழ் முந்திரை 320 மேல் முந்திரை, மேல் முத்திரை 320 கொண்டது (1), கழஞ்சு வருமாரு தனி, நெல் எடை, வீசம் எனக் கொண்டு, வீசம் (2) கொண்டது பிறவு. பிறவு (2) கொண்டது குன்றி. குன்றி (2) கொண்டது மஞ்சாடி, மஞ்சாடி (5) கொண்டது கால் கழஞ்சு, கால்கழஞ்சு நான்கு கொண்டது ஒரு கழஞ்சு. எடை அறிதல், கழஞ்சு (2) கொண்டது கைசா. கைசா (4) கொண் டது பலம், பலம் (100) கொண்டது நிறை, நிறை (2) கொண்டது துலாம், துலாம் (32) கொண்டது பாரம். வைக்கோல் நிறை அறிதல் கல்லேயிருதூணி நெற்பாரம் ஒரு வைக்கோற்கட்டு, கல்லே தூணி உப்பின் பாரம் ஒரு புற்சுட்டு என்றும் கூறுப. நாழிகை வட்டில் அறிதல் வன்செம்பு பத்துப் பலமாகிய செம்பு வட்டிற்கொட்டும் இடத்து, மட்டு (6) விரல், விட்டம் (12) விரல், இப்படி கொட்டின வட்டிலுக்குத் துவாரம் விடுகிறதற்கு (36) மாப்பொன்னாலே நான்கு விரலளவு ஊசி செய்து அந்த ஊசியால் துவாரம் இட்டு, அந்தத் துவார வழியால் நீர் புகுந்து வட்டிலை முழுகச்செயின் ஒரு நாழிகையாம். பூப்பிரமாணம் அறிதல் அணு (8) கொண்டது கதிரெழுதுகள். கதிரெழுதுகள் (8) கொண்டது பஞ்சிற்றுகள், பஞ்சிற்றுகள் (8) கொண்டது மயிர்முனை. மயிர்முனை (8) கொண்டது நுண்மணல். நுண்மணல் (8) கொண்டது சிறுகடுகு. சிறுகடுகு (8) கொண்டது எள்ளு. எள்ளு (8) கொண்டது நெல், நெல் (8) கொண்டது விரல், விரல் (12) கொண்டது சாண், சாண் (2) கொண்டது முழம் முழம் (12) கொண்டது சிறுகோல், சிறுகோல் (4) கொண்டது கோல், கோல் (56) கொண்டது கூப்பிடு, கூப்பிடு (4) கொண்டது காதம். காதம் (4) கொண் டது யோசனை. யோசனை (10551000) கொண்டது ஆதித்தன் இயக்க மண்டலம். அதை இரட்டிக்கச் சந்திரமண்டலம். அதை இரட்டிக்க நக்ஷத்திர மண்டலம் என உணர்க.

கணிபுன்குன்றனார்

நற்றிணை ஏடுகள் பலவற்றிலும் கணிபுன்குன்றனா ரென்றே இருத்தலின் அவ்வாறே எழுதப்பட்டது. புறநாற்றிற் கணியன் பூங்குன்றன் என்றிருக்கின்றது. அது சிறப்பாகக் காணப்படுகிறது. பூங்குன்றம் என்னும் ஊரிலுள்ள கணியன் என பொருள்படும். கணியன் சோதிடம் சொல்வோன். இவர் வாக்குயாங்கும் பொது நோக்காயுள்ளது, பாலையைப் பாடியுள்ளார் மாந்தரதியல்பும். அரசரதியல்பும், உலகத் தியல்பும் இத்தன்மையவென்று தலைவிகற்பகக் கூறியது ஆராயதக்கது நற் 226. இவர்பாடியனவாக நற்றிணைப் பாடலொன்றும் புறத்திலொன்று மாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கணிமேதாவியார்

இவர் இன்ன மரபினரென்பதும், இன்ன நாட்டின ரென்பதும், இன்ன சமயத்தாரென்பதும் துணியப் படாவாயினும் ஏலாதி கடைச்சங்க மருவிய நூலென விளங்குகின்றமையால் இவர் காலம் கடைச்சங்கத்தார் காலம் என ஒருவாறு துணியலாம். ‘கடைச்சங்கத்துள் ஒருவராகிய கணிமேதாவியார்’ என்னலாகதோ எனின் கடைச்சங்கத்துள் ஒருவர் சிறுமேதாவியாரென்னும் பெயருடையாரே அன்றிக் கணிமேதாவியா ரென்னும் பெயருடையா ரல்லராகலான் கொள்ளலாகா தென்க. இவர் கணிதம் சோதிடங்களில் வல்லவராயிருத்தல் கூடும்.

கணிவன்முல்லை

நிச்சயித்துப் பலவுமறியும் பழைய கேள்வி ஞானத்தினையுடைய சோதிடநூல் வல்லவனது கீர்த்தியைச் சொல்லியது. (பு~வெ).

கணேசகுண்டம்

சிந்துரனைக் காண்க.

கணேசநாதர்

இவர் சாரசே உச்சயனி என்னும் கிராமவாசியாகிய சூத்திரர். இவர் விரக்தராய்க் காட்டிற் சஞ்சரித்து வருகையில் சிவாஜியெனும் அரசன் ஒருவனிவரை வீட்டிற்கு அழைத்துவந்து மஞ்சத் தின் மீது படுக்கச் செய்யத் தாசர் மஞ்சத்தில் கற்களைப் பரப்பி அதின்மீது துயில் கொண்டு தம்மை யடுத்தவரை நல்வழிப் படுத்தினர். இவ்வாறிருக்கையில் இவரை யடுத்தோர் பலர் பித்தர்போல் குணமாறு தலைக் கண்டு இவரை நோக்கி இம்மர முதலியவைகளுக்கு உபதேசிக்க என அவ்வாறு செய்து பிரசாதந்தர அவை அப்பிரசாதத்தை உட்கொண்டன. பின்நால் வருணத்தவரும் இவரைக் காணச்செல்ல ஆங்குத் தாசர் அரிகீர்த்தனஞ் செய்து அனைவரையும் தாளம் போடக் கூறுகையில் பிராமணர் சிலர் மறுக்க நோக்கி அனைவரையும் தாளம் போட வேண்டாமென மறுத்து ஆண்டிருந்த கற்களை நோக்கி தாளமிடக் கட்டளையிட்டனர். அவை அவ்வாறு செய்யக்கண்டு வேதியர் வியந்து அரிபஜனை செய்து இருந்தனர்.

கணேசன்

கணபதியைக் காண்க.

கண்கள்

இவை, சிரசிற்கு இன்றியமையாதன. இவற்றிற்குத் தீங்கு நேராதபடி இவை, ஒரு எலும்பின் குழியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை அக்குழியில் உள்ள கொழுப்புப்போன்ற பொருளில் நான்கு பக்கங்களிலும் சுழன்றுவர எளிதாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு அதிக வெளிச்சம், அபாயம் நேரிடாதபடி இவை இமைகளென்னும் மூடிகளால் காக்கப்பட்டு இருக்கின்றன. விழியில் (3) புரைகள் உள்ளன. முதல்புரைக்கு வெள்விழியென்று பெயர். இது, உறுதியான வெள்ளைச் சவ்வினால் ஆனது. இது கண்மணியை ஒழித்து மற்றைப்பாகங்களை மூடிக்கொண்டிருப்பது, முற்பாகம் வளைந்து முதல்புரையோடு சேர்ந்துள்ள ஜவ்விற்குக் கருவிழியின் மேல்தோல் அல்லது சுக்லமண்டலம் என்று பெயர். இது கறுப்பாயிருப்பதன் காரணம் பின்னால் கறுத்தஜவ்வைப் பெற்றிருப்பதனால் என்பர். இது பக்கத்திலுள்ள ஜவ்வில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. கருவிழியின் மேல்தோலையடுத்து ஒருவகை நீர் இருக்கிறது. இரண்டாம்புரை இரத்த நரம்புகளால் ஏற்பட்டது. இதனிறம் கறுப்பு, இது மெல்லியபுரை, இது விழிக்குள் செல்லும் அதிகமான ஒளியைக் கிரகிப்பது. இது இல்லாவிடிற் பார்வை சிதறும். மூன்றுவது புரைக்கு ரூப உற்பத்தி ஜவ்வு எனப்பெயர். இது வெண்ணிறமானது. பார்வை நரம்புகள் மலர்ந்து இந்தச்சவ்வு உண்டாகிறது. இந்தச் சவ்வின் மேல் வஸ்துக்களின் உருவம் விழுகிறது. இவ்வீழ்ச்சி, பார்வை நரம்புகளின் வழியாய் மூளைக்குச் செல்ல மூளை மனதிற்குத் தெரிவிக்கிறது. விழியிலுள்ள கறத்த ஜவ்விற்குக் கண்வரி என்று பெயர். இதனிடையிலுள்ள துவாரத்திற்குப் பாவை, கண்தாரை, கருமணி எனப்பெயர். கண்வரி சுருங்கின் கண்தாரை விரியும்; அப்போது வெளிச்சம் கண்ணிற் செல்லும். கண்வரி பலநிறமாயிருக்கும். கண்வரிக்குப்பின் வெள்ளையாய் உருண்டு காணப்படும் உறுப்பு, ஒளிவட்டம் எனப்படும். விழிக்குப்பின்னால் குழகுழப்பாய் முட்டையின் வெள்ளைக்கருவைப் போல் ஒருவகை நீர் ஒரு ஜவ்விற்குள்ளடங்கி விழியின் முக்கால்பாகம் நிறைந்திருக்கும். இதனால் எல்லாச் சவ்வுகளும் மலர்ந்திருக்கும். இந்த நீர் போய்விட்டால் கண் நொள்ளையாகும். நாம் காணும் வஸ்துக்களின் உருவம், (1) சுக்லமண்டலம், (2) நீர்ப்பாகம், (3) கண்வரி, (4) கண்மணி, (5) ஒளிவட்டம், (ச6) ஒருவகைநீர், (7) ரூப உற்பத்தி ஜவ்வு, இவற்றின் வழியாகவர, அவ்வுருவத்தைப் பார்வை நரம்பு, மூளைக்கு அறிவிக்கிறது. கண்ணிற்கு வெளிப்புறத்தில் மூக்கிற்குச் சற்றுத் தூரத்தில் கண்ணீர்க் கோளங்களிருக்கின்றன. அவற்றிலிருந்து கண்ணீர் கசிந்து கண்ணின் மேற்புறத்தை நனைத்துத் தூசு, தும்புகள் கண்ணில் வராமல் காக்கின்றது. இக்கண்ணீர்க் கோளங்கள் குழல்களாக மூக்குடன் சேர்ந்திருப்பதால் நாம் அழுகையில் மூக்கில் நீர் வடிகிறது. (V. T. MURCHE & V. K. N) இயற்கைப் பொருட்பாடம்.

கண்குத்திப்பாம்பு

பசிய உருவத்துட னீண்டுமிருப்பது மரங்களில் வசிக்கும்,

கண்குழிப்பாம்பு

பசுமை நிறமாய் மரங்களில் வசிப்பது. கொம்பேறி மூர்க்கன் மரங்களில் வசிப்பது. மண்ணுளிப் பாம்பு பூமிக்குள் இருப்பது.

கண்டகசேதநன்

ஓர் உலுத்தவணிகன். திருவிழாவிற் கடைவைத்து விற்றுப் புண்ணியமடைந்து சிவபதம் பெற்றவன்.

கண்டகட்டு

இது ஒரு சொல்லணி. இது பசுக்கொண்டு போது என்று சொல்லப் போயினான். சென்று கண்டு மீண்டுவந்து அவையுள்ளாயின வென்னிற் போதாவாயின வென்ற விழ்ப்பது, (யாப்பு~வி).

கண்டகத்தூணம்

ஆதித்தனின்ற நாள் முதல், மூல மிறுதியாக எண்ணிவந்த தொகையை மூல முதலாகக் கழித்தால் உற்ற நாள் கண்டக மெனப்படும். செவ்வாய் நின்ற நாள் முதல் மூல மிறுதியாக எண்ணிக் கொண்ட தொகையை மூல முதலாகக் கழித்தால் உற்றநாள் தூணம் எனப் படும். இவ்விரண்டு தொகைகளையும் கூட்டி மூல முதலாகக் கழித்தால் உற்ற நாள் கண்டகத்தூணம் எனப்படும். இந்நாட்களில் மங்கல காரியங்கள் செய்யலாகா. (விதான மாலை.)

கண்டகன்

குரோதகீர்த்தியின் குமரன்.

கண்டகபிராந்தருது

கண்டாந்த மென்னு முகூர்த்தத்தில் இருப்பவன்.

கண்டகம்

1. செவ்வாய் நின்ற நாளுக்கு; எழாம் நாள், பதினான்காம் நாள், பதினாறாம் நாள் இருபத்தைந்தாம் நாள் இவை அநல் நக்ஷத்திரமாம். புதனின்ற நாளுக்கு (18) ஆம் நாள் (24) ஆம் நாள் உக்கிர நக்ஷத்திரமாம். குருநின்ற நாளுக்கு (7) ஆம் நாள், (9) ஆம் நாள் வெப்பு நக்ஷத்திரமாம். சுக்ரன் நின்ற நாளுக்கு (10) ஆம நாள் நாச நக்ஷத்திரமாம். இராகு நின்ற நாளுக்கு (5) ஆம் நாள் (11) ஆம் நாள், (13) ஆம் நாள் விஷ நக்ஷத்திரமாம். சனி நின்ற நாளுக்கு (6) ஆம் நாள், (10) ஆம் நாள், (20) ஆம் நாள் மோக நக்ஷத்திரமாம். மேற்கூறிய அநலம், உக்ரம், வெப்பம், நாசம், விஷம், மோகம், என்ற யோகநாட்களைக் கண்டகம் என்பர். இவற்றில் சுப காரியங்கள் தவிரப்படும். மேற்கூறிய நாட்களில் வியாதி காணின் அசாத் யம். ஆயினும் மேற்கூறிய நாட்கள் ஆட்சியில் உச்சத்தில் நிற்றல், ஒரு சுபக் கோள் பார்த்தல், வர்க்கோத்தமத்தில் நிற்றல், குரு உதயமாதல், பூரண சந்திரோதயமாதல், தத்தம் வாரமாதலுண்டாகில் இந்தத் தோஷங்க ளில்லையாம். (விதான மாலை). 2. புத்தன் குதிரை.

கண்டகர்ணன்

கைலாயவாயிற் காப்போன்.

கண்டகலை

ஒரு அப்ஸரஸ்திரி முதலையாகச் சபிக்கப்பெற்று அநுமானால் சாபம் நீங்கினவள்.

கண்டகி

1. மகததேசத்திலுள்ள ஒருநதி, மோகினி யுருக்கொண்ட திருமாலுடன் சிவமூர்த்தி புணர்ந்த போதுண்டாகிய நதி, இதில் பாணலிங்கங்களும், சாளக்கிராமங்களும் உண்டாம். இதற்குக் கண்டிகை யெனவும் பெயர். 2. ஒரு தாசி. இவள் திருச்சாளக் கிராமத்தில் பெருமாள் அருள் பெற்றவள்.

கண்டகோபாலன்

இவன் ஒரு சோழ அரசன். இவனுக்குக் கண்டன் எனவும் பெயர். இவன் சற்றேறக்குறைய அறு நூறு வருஷங்களுக்கு முன் அரசாண்டவன். வரந்தருவார் எனும் புலவர் இவன் காலத்திருந்தவர் என்பர்.

கண்டங்கன்

அதாவது நான்கா மிராசியும், நான்காமிராசிக்கு நான்காமிராசியும், நான்காமிராசி நான்காமிராசிக்கு நான்காமிராசியும், நான்காமிராசி நான்காம் ராசி நான்காம் ராசிக்கு நான்காமிராசியுமாம். இவை முறையே, நான்காமிராசி, ஏழாம் ராசி, பத்தாம் இராசி, உதயராசி என்பனவாம். இவற்றில் உதயராசியை உதயகண்டம் எ~ம், நான்காமிராசியைக் கீழ்நீர்க்கண்டம், எ~ம், ஏழாமிராசியைந் பாட்டுக்கண் டம், எ~ம், பத்தாம் இராசியை உச்சிக்கண்டம் என்ப, இவற்றை லக்ன கேந்தரம், சதுர்த்தகேந்தரம், சப்தமகேந்திரம், தசமகோதிரம் என்ப.

கண்டங்கள்

பூமியின் பெரிய பிரிவுகள். இவை ஆசியாகண்டம், ஐரோபா கண்டம், உத்தர தக்ஷிண அமெரிகா கண்டம், ஆபிரிகா கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் என (5) பிரிவுகள்.

கண்டன்

சூரபத்மனுக்குப் படைத்தலைவன்.

கண்டபேரண்டபக்ஷி

இது ஒரு பேருருக் கொண்ட பக்ஷியெனக் கதைகளில் கூறியிருக்கின்றனர். நம்ப இடமில்லை.

கண்டமாலை ரோகம்

வாதபித்த சிலேஷ்மங்கள் மேதா தாதுவை அநுசரிப்பதால் மாமிச தாது விர்த்தியினாலும் கழுத்தின் நரம்புகளிலும், கண்களிலும் அரைகளிலும் தேகநிறத்தைப் பெற்றுக் கெட்டியாக மினு மினுத்து நெல்லிக்காய், சிறு கத்திரிக்காய்ப் பிரமாணமாகக் கட்டிகளுண்டாம். இதில் சில உடைந்தாலும் சில ஆரா. இது கண்டத்தைச் சுற்றி வருதலால் கண்டமாலை யென்பர். அரையில்வரின் அரையாப்பு என்பர்,

கண்டம்

(9) கீழ்விதேகம், மேல்விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடரேபதம், தென்ரேபதம், வடபாதம், தென்பாதம், மத்தியகாண்டம்,

கண்டராதித்திய சோழர்

இராசராச தேவருக்கு ஐந்தாம்பாட்டர் என்பர். இவரே கண்டராதித்தர். சிவமூர்த்தியைப் பாடி முத்தியடைந்தவர். இவர் பாசுரங்கள் ஒன்பதாம் திருமுறையிற் சேர்க்கப்பட்டன. இவர் பராந்தகச் சோழனது இரண்டாங் குமாரர். இவர் காவிரியின் வடகரையில் தம் பெயரால் ஓர் ஊர் அமைத்தவர். இவர் மனைவி உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என்பவர். இவர், தம் திருப்பதிகத்துள் ”கோழிவேந்தன் றஞ்சையர் கோன்கலந்த” எனவும், தென்னாடுமீழமுங் கொண்டதிறற் செங்கோற் சோழன்” எனவுங் கூறுதலில் தம் முன்னோர் பெருமை கூறியிருத்தலில்’ சோழவரசர் என்பது பெறப்பட்டது. கி. பி. 905. EPIGRAPHIA INDIA. VOL. VII.

கண்டரீகன்

கௌசிகனைக் காண்க.

கண்டாகர்ணன்

1, சிவகணத் தலைவன். 2. குபேரன் ஏவலாளிகளி லொருவன். பைசாசவுருக் கொண்டவன். இவன் தன்னிடமிருந்த சூலத்தால் மனிதரை வதைத்துச் சிவனுக்கு நிவேதனஞ்செய்து உண்டு சிவமூர்த்தியை முத்தி வேண்ட அவர் விஷ்ணுவைக் கேளென அப்படியே விஷ்ணுவைத் துதித்து அவரால் உபதேசிக்கப் பெற்றுத் தானேயன்றித் தன் தம்பியும் முத்திபெற வரம் பெற்றவன்.

கண்டாந்தம்

நக்ஷத்திரம் காண்க.

கண்டிகை

சிவகேசவர்கள் ஆண் பெண் உருக்கொண்டு விளையாடிய காலத்தில் உடம்பிலுண்டான வியர்வையால் உண்டான நதி. இதில் சாளக்கிராம முண்டாம்.

கண்டியதேவன்

இவன் கச்சிராயரைப் பாட அதைக்கேட்டு கச்சிராயர் சரக்கரைத் தியாகங் கொடுக்கப் பலி தூக்கவந்த நீலகங்கனைப் பாடியது. அலைவளைத்த திருப்பாற் கடலிலை, யாடராவினணையிலை பச்சையால், இலைவளைத்தமணி மண்டபமில்லை, யிங்கு நீ வந்தவாறே தியம்புவாய், கொலைவளைத்த விலங்கே சன்மாமலர்க், கொத்துமா முடி பத்துக்கு மற்றொரு, சிலைவளைத்த கர நீலகங்கனே, திங்கள் வெண்குடை சிற்றம் பலவனே. ‘ இதைக் கேட்டு அவன் குதிரை கொடுவந்தேனென்று குதிரை கொடுத்தான். தமி நா சரி.

கண்டியூர் வண்ணாத்தி

இவள் பொய்யா மொழிப் புலவர்க்கு ஆடைவெளுத்துக் கொடுத்து “தூசு தூசாக்குவார் பாவை சுடர்த் தொடிக்கை, ஆசிலாக் கண்டியூரா ரணங்கு வாசமலர்க், கண்ணங்கை கொங்கை முகங்காலுங் கடிக்கமலம், கண்ணங்கை கொங்கை முகம்கால். ” எனும் கவி பெற்றவள்.

கண்டீரக்கோபெருநற்கிள்ளி

வன்பரணராற் பாடப்பெற்றவன். இவனே பெரு நள்ளி யெனப்படுவான். வன்பரணர்க் காண்க.

கண்டீரக்கோப் பெருநள்ளி

இளங்கண்டீரக்கோவின் தமயன். இவன் கடையெழுவள்ளல்களி லொருவன். தோட்டி யென்னும் மலை நாட்டவன். “கரவாது நட்டோருவப்ப நடைப்பரிகார, முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கைத், துளி மழை பொழியும் வளிதுஞ்சு நெடுங் கோட்டு, நளிமலை நாடனள்ளியும்” எனச் சிறுபாணாற்றிலும் இவனைப் புகழ்ந்து கூறினர். இவனைக் கண்டீரக்கோ எனவும், நற்கிள்ளி யெனவுங் கூறுவர். (புற~நா).

கண்டு

அக்ரோதனன் தேவி.

கண்டு கண்சிவத்தல்

பெரிய மலைபோன்ற அகலத்தினை யுடையவனது ஒள்ளிய தொத்தினையுடைய கமழுமாலையை முனிவுடனே கலங்கித் தலைவி கோபித்தது. (பு வெ பொது).

கண்டு கைசோர்தல்

மலர் நிறைந்த குழலினையும் பொற்றொடியினையு முடைய தலைவி தன் அன்பு கைகடப்பத் தோழி கண்டு தன்னுடைய ஒழுக்கம் தளர்ந்தது. (பு வெ பெருந்திணை).

கண்டுணராமை

இது போலிகளுள் ஒன்று. இது, சிலவற்றைக் கண்டு அதன் பெயரறியாதிருத்தல், பாண்டி உரை.

கண்டுமகருஷி

ஒரு இருஷி. ஒருமுறை யிவர் கடுந்தவஞ் செய்துவந்தனர். இவர் தவத்தைக் கெடுக்க இந்திரன் பிரமலோசை யெனுங் காந்தருவப் பெண்ணை அனுப்பினன். அவள் சென்று அந்த இருடியை வசப்படுத்தி அவற்கு ஒருகருவுந் தாங்கினள், சில நாளைக்குப் பிறகு இது இந்திரனது மாயையென்று முனிவர் கடுங்கோபங் கொள்ளப் பிரமலோசை, அவருக்குத் தாங்கிய கருவை யுதறினள். அதை வாயு ஒன்றாகத் திரட்டினன். அது பெண்ணுருக் கொண்டு மாரினஷ யென்னும் பெயருடன் விளங்கிற்று, (பிரமபுராணம்.)

கண்டுவன்

காவலருஷியின் மாணாக்கன். இவன் காவலருஷியின் பெண்ணை மணந்து அட்டகோண மகருவியைப் பெற்றனன்.

கண்ணகனார்

இவர் இயற்பெயர் நாகன் கண்ணனுடைய மகனாதலிற் கண்ணாகனார் என்றும் சொல்லப்படுவர். சில ஏடுகளில் கண்ணகனார் என்று பிழைபட எழுதியிருந்தமையால் இருந்தபடியே பதிப்பிக்கப்பட்டது, இவர் கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலானோர் காலத்தவர். புறம் (218) பரிபாடல் 21ஞ் செய்யுளுக்கு இசை வகுத்தவரிவரே. பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். காதலன் பிரிதலைத் தவிர்க்குமாறு தலைவி ஆராய்வதாக இவர் கூறியது ஆராயத்தக்கது. நற். 79. இவர் பாடியனவாக மேற்காட்டிய பாடலொன்றும் புறத்திலொன்று மாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவர், தம் நண்பர் இறந்ததறியாது உயிர் துறந்தவர்.

கண்ணகாரன் கொற்றனர்

இவரது இயற் பெயர் கொற்றனார், கண்ணகாரன் என்பது விளங்கவில்லை. இவர் பாலையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடிய மனைமருட்சி யாவரையும் மருட்டா நிற்கும். இவர் பாடியது நற். 143ம் பாட்டு.

கண்ணகி

1. பத்தினிக்கடவுள், மங்கல மடந்தை, திருமாபத்தினி, வீரபத்தினி யென்பன இவளுடைய பரியாய நாமங்கள். கோவலன் மனைவி. கோவலனைக் காண்க, (சிலப்பதிகாரம்.) 2, வையாவிக் கோப்பெரும் பேகனுக் குரியவள். இவள் ஒருகாலத்து இவனாற்று றக்கப்பட்டுக் கபிலர், பரணர், அரிசில்கிழார் முதலியவரை நோக்கி அரசனைப் பாடி அவனுடன் சேர்த்துவிக்க வேண்டியவள். (புற~நா.)

கண்ணங்கூத்தனார்

கடைச் சங்கத்தவர் காலத்திருந்த புலவர், கார்நாற்பது இயற்றியவர்.

கண்ணங்கொற்றனார்

இவர் இயற்பெயர் கொற்றனார். இது கண்ணனென்னுந் தந்தை பெயரோடு சேர்ந்து கண்ணங்கொற்றனா ரென்றாயிற்று, இவர் குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார். தலைவன் இரவுக்குறி வருகின்ற தன் அருமையும் தலைவி அவன்பால் வைத்துள்ள அன்பும் தோழிகூற்றாக விளங்கக் கூறுகின்றார். இவர் பாடியது நற். 156ம் பாட்டு.

கண்ணசன்மன்

ஒரு பாகவதன் விஷ்ணு மூர்த்தி தன்னில் ஆவேசமா யிருக்க வேண்டியவன்.

கண்ணன்

கிருஷ்ணனைக் காண்க.

கண்ணன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களிலொருவர். (குறு 244)

கண்ணன் சேந்தனார்

சாத்தந்தையார் குமரர். திணைமொழி யைம்பது இயற்றியவர்.

கண்ணப்பநாயனர்

பொத்தப்பிநாட்டில் உடுப்பூரில் வேடர்களுக்கு அரசனாயிருந்த நாகனுக்கும் அவன் மனைவி தத்தை யென்பவளுக்கும் பிறந்து திண்ணன் என்னும் பெயருடன் வளர்ந்தனர். இவர் ஒருநாள் தமது நண்பர் காடன் நாணன் இருவருடன்கூடி வேட்டைக்குச் சென்று ஒரு பன்றியைத் தொடர்ந்து கொன்று இளைப்படைந்து காகத்திற்கு நீர் கேட்டனர். அந்த நண்பர் அருகில் பொன்முகரி இருக்கின்றது எனத், திண்ணர் அவ்விடஞ் செல்வோமென்று பன்றியுடன் ஆற்றங்கரையை யணைந்து அருகு இருந்த சீகாளத்தித் திருமலையைக்கண்டு காடனை நோக்கி நீ பன்றியைப் பதப்படுத்து எனக் கட்டளையிட்டுத் தாமும் நாணனும் அம்மலைமீது சென்றனர். திண்ணனார் அம்மலை மீது எழுந்தருளியிருக்கிற சீகாளத்தியப்பரைத் தரிசித்து நெருப்பைக் கண்ட மெழுகு பாவைபோல் மனமுருகி விட்டுப் பிரியாது தன் சொற்கேட்கும் குழந்தைக் குருகும் தாய்போல் சுவாமியுடன் கொஞ்சிக் குலாவி அருகிருந்த நாணனை நோக்கி இந்தத் தேவர்க்கு ஏதோ புட்பம் சாத்தி யிருக்கிறதே என்ன என்றனர். நாணன் சில நாட்களுக்கு முன் நானும் உன் தந்தையும் இம்மலைக்கு வந்தோம்; அந்தக் காலத்தில் ஒரு வேதியர் இவரை நீராட்டிப் புட்பஞ் சூட்டித் தாம் வைத்திருந்த உணவை ஊட்டக் கண்டேன் என்றனன், திண்ணர் இதனைக் கேட்டு இந்தக் குடுமித்தேவர்க்கு அது பிரியம் போலும், ஆயின் நான் அந்தப்படி செய்வே னென்று கடைப்பிடித்து மலையினின்று இழிந்து காடனிருக்குமிடத்தில் அவன் பதப்படுத்தியிருந்த பன்றியிறைச்சியைத் தாம் சுவைத்து உருசி யுள்ளவைகளைத் தேக்குத் தொன்னையிற் கொண்டு பொன் முகரியின் ஜலத்தை வாயிற்பெற்றுப் பூக்களைப் பறித்துத் தமது சிரத்தில் வைத்துக் கொண்டு தமது குடுமித் தேவர் மலைக்குத் திரும்பினர். இவரது செய்கை யறிந்த நண்பர்கள் திண்ணரை வலிந்தழைத்தும் திரும்பாதது கண்டு தந்தை தாயர்க்கு அறிவிக்கச் சென்றனர். திண்ணர் சிவமூர்த்திமீது முன் னிருந்தவைகளை நீக்கி வாயிற்கொண்ட நீரை அபிடேகஞ் செய்து தலையிலிருந்த பூக்களைச் சூட்டி யிறைச்சி முதலிய வுணவுகளை புண்பித்து வந்தனர். முன் சென்ற நண்பரா லறிவிக்கப்பட்ட தந்தை தாயார் இவரிடம் வந்து அழைக்க இவர் மறுத்தது கண்டு சென்றனர். இது நிற்க அக்காளத்தி நாதருக்கு நாடோறும் பூசை புரிந்து வரும் சிவகோசரியார் சன்னிதானத்தை வந்து கண்டு வருந்திச்சுத்திசெய்து அவ்விட மிருக்கும் மாம் சாதிகளைப் போக்கிச் சம்புரோக்ஷணாதிகள் செய்து தமது தவச்சாலை செல்ல மறுநாளு இவ்வகையிருந்தது கண்டு சுவாமிகள் சந்நிதானத்து முறையிட்டனர். சிவமூர்த்தி, இவர் கனவிற்றோன்றி இவாது தன்மை முழுதுங் கூறி இவரது செயல்களை உமக்கு அறிவிக்கிறேன். நீர் பூசைமுதலிய முடிந்த பின் நமக்குப்பின் ஒன்றியிருக்க என்று மறைந்தனர். வேதியர் விழித்து அபசாரப் பட்டோமென்று மனம் வருந்தி மறுநாள் தமது பூசைமுதலிய முடித்துச் சிவாஞ்ஞைப்படி மறைவில் பார்த்திருந்தனர். திண்ணர் சிவமூர்த்திக்கு வேண்டிய உணவுகளைச் சேகரித்துப் பூசைக்குத் திரும்பினர். சிவமூர்த்தி இவரது அன்பினைச் சிவகோசரியார்க்கு அறிவிக்க எண்ணித் தமது வலக்கண்ணில் உதிரஞ்சிந்த விட்டனர். திண்ணர் சிவமூர்த்தியின் கண்ணைக் கண்டு யாவரோ பகைஞர் இத்தீங்கு செய்தனர் என்று மனங்கலங்கி அவர்களைத் தண்டிக்க அங்குமிங்குந் தேடி யாரையுங்காணாது பல மூலிகை முதலியவற்றையும் கண்ணிற் பிழியவும் அது நிற்காதிருக்கக் கண்டு ஊனுக்கூனிடல் வேண்டுமென எண்ணித் தமது கண்ணை அம்பினாற்றோண்டி அப்பினர். உடனே உதிரப்போக்கு நின்ற துகண்டு ஆனந்தக் கூத்தாடினர். சிவமூர்த்தி, மீண்டு மிடது கண்ணில் இரத்தஞ் சோரவிட, திண்ணர் சலியாதவராய் நான் மருந்து கண்டு கொண்டேன் எனக் களிப்புடன் இரத்தம் வரும் கண் தமக்குத் தெரியும்படி தமது செருப்புக் காலைக் கண்ணினருகு ஊன்றிக்கொண்டு தமது கண்ணைத் தோண்டுகையில் சிவமூர்த்தி அன்பிற்குக் களித்து நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப, என்னன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப. ” என்று திருவாய் மலர்ந்து தமது திருக்கரத்தாற் பற்றிக் கொண்டு தமக்கு வலப்பு றமிருக்கும் பிறவாப்பே றளித்தனர். இவர் ஆறு நாட்களில் முத்தியடைந்தவர். சிவமூர்த்தி வழங்கிய கண்ணப்பன் என்ற திருநாமமே இவருக்கு வழங்கியது. இதற்கு முன் சன்மத்தில் இவரை அர்ச்சுனன் என்பர். (பெரிய புராணம்.)

கண்ணப்பமுதலியார்

திருவெண்ணெய் நல்லூர்ச் சடைப்யப முதலியாரின் சகோதரர்.

கண்ணம்புல்லனார்

கருவூர் கண்ணம்புல்லனார் என்பவர் இவரே. இவரது ஊர் கருவூர், கண்ணன் தந்தை பெயர். புல்லன் இயற்பெயர். நெய்தற்றிணையும், பாலைத் திணையும் பாடியுள்ளார். புணர்ந்துடன் போகக்கண்ட செவிலி சுரத்திடை மறவர் நிறை கொணர்ந்துய்ப்பதும் அங்கு அவர் முழங்கும் முழக்கமும் கேட்டு என் பேதை யாங்ஙனம் வைகுமோவென்று புலம்புவதாக விரித்துக் கூறியுள்ளார். அகம் 63 இவர் பாடியனவாக நற்றிணையில் 159 ஆம் பாடலொன்றும் அகத்தி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கண்ணவாணிபமகருஷிகோத்ரன்

வேளாளன் பிள்ளைக்காகத் தன் குமரனைப் பாண்டியன் சபையில் வாளால் எறிந்து கீர்த்தி பெற்றவன்.

கண்ணாடி

சிகிமுகிக்கல்லின் பொடியை ஒருவிதச் செடியின் சாம்பலுடன் சேர்த்து உருக்கினால் கண்ணாடி ஆகிறது. சாதாரணமான வெள்ளைக்கண்ணாடி வெள்ளை மணலும் உவர்மண்ணும் சுண்ணாம்பும் சேர்த்துப் பெருந்தீயிட்டு உருக்கினால் உண்டாகிறது. கறுப்பு புட்டிகள், ஆற்றுப்பருமணலும் சவர்க்காரமும் சேர்த்துச் செய்யப்படுகின்றன. கண்ணாடிகளுக்குப் பளபளப்பு உண்டாதற்கு வங்கபஸ்பம் சேர்ப்பார்கள். வெவ்வேறு வர்ணக்கண்ணாடிகள் செய்தற்கு அவற்றிற்கு வேண்டிய உலோக பஸ்பங்களைச் சேர்ப்பார்கள். இதைப் பல உருவமாகப் பல கருவிகளைக் கொண்டு செய்வர்.

கண்ணுடையவள்ளலார்

திருஞான சம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்றவர். இவர் செய்த நூல் ஒழிவிலொடுக்கம், மாயாப் பிரலாபம். (ஒழிவிலொடுக்கம்.)

கண்ணுவர்

1 அப்பிரதிரதன் குமரர். இவர் குமரர் மேதாதி. விசுவாமித்திரர் மேனகையிடம் பதித்த குமரியாகிய சகுந்தலையை வளர்த்தவர். இவர் தவத்திலிருக்கையில் இவரைப் புற்று மூடி இவர்மீது ஒரு மூங்கில் முளைத்தது. இதைப் பிரமன் மூன்று விற்களாக்கி முறையே காண்டீபம் என்பதைத் தான் வைத்துக் கொண்டு, மற்றொன்றுக்குப் பினாகமெனப் பெயரிட்டுச் சிவமூர்த்திக்கும், சார்ங்கமெனப் பெயரிட்டு மூன்றாவதனை விஷ்ணு மூர்த்திக்குக் கொடுத்தனர். இவர் பனங் காட்டூரில் சிவமூர்த்திக்குப் பனம்பழம் நிவேதித்தனர். இவர் மகாவிஷ்ணுவை மானிடரா யவதரிக்கவும் மகாலக்மியை மானாக அவதரிக்கவும் சாபம் தர இவர்களுள் விஷ்ணு சிவமுனிவராகவும் இலக் குமி மானாகவும் பிறந்தனர். (தணிகைப் புராணம்). ஒருமுறை துச்சயனுக்குப் பரத்தையைப் புணர்ந்த தோஷம் நீங்க வேள்வி செய்வித்தவர். இவர் குமரர் போதாயனர். 2. மகத தேசாதிபதியாகிய தேவபூதியின் மந்திரி. இவன் தன் அரசனைக் கொன்று இராச்சிய மடைந்தனன். இவனுக்கு வாசுதேவன் எனவும் பெயர். இவன் குமரன் பூமித்திரன்.

கண்படை நிலை

உயரிய தேரான் மிக்க பகைவர் சேனைபொடி படச்செல்லும் கடுந்தேரினையுடைய வேந்தனது துயிலைமிகுத்தது. வென்று பூமியைக் கைக்கொண்ட சின மன்னன் உறக்கத்தை மிகுத்தது. (பு வெ பாடாண்).

கண்வராச்ரமம்

லக்ஷ்மணபுரிக் கருகிலுள்ள காடு, BIGNOUR IN LUCKNOW, WEST OF AYODHYA.

கதகரும் பரத்வாசரும்

இவர்கள் ஒருவருக்கொருவர் தம் மனைவியரை மாற்றிக்கொண்டவர்கள். (வைத்தியநாத தீக்ஷிதீயம்.)

கதன்

(யது) வசுதேவனுக்குப் புத்திரன், அருச்சுனனுக்குச் “சுபத்திரையின் அழகு முதலியவற்றை வருணித்தவன்.

கதப்பிள்ளைச்சாத்தனார்

இவர் கருவூர்கதப்பிள்ளைச் சாத்தனாரெனவும் கதப்பிள்ளை யெனவும், கருவூர் கதப்பிள்ளை யெனவும் பலவாறாகக் கூறப்படுவார். இவர் இயற்பெயர் சாத்தனாரென்பதே. சேரமான் சேனாதிபதி பிட்டங்கொற்றனைப் பரிசில் வேண்டி இயன்மொழி பாடியவர். புறம் 380, பெரும்பாலும் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் மாலைக்காலத்தை அழகாகப்புனைந்து கூறியிருக்கி சார். நற் 343 தலைவனைப் பிரிந்ததனால் இவ்வூர்த்தோற்றம் இனிதாகக் காணப்படவில்லை யென்ற தலைவி கூற்று வியப்புடையது. இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்காட்டிய இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் ஒன்றும், புறத்தில் இரண்டுமாக எட்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கதம்பன்

கனகமாலையின் சகோதரருள் ஒருவன்.

கதம்பமகருஷி

சோணாட்டுத் திருக்கரம்பனூரில் விஷ்ணுவை எண்ணித் தவம்புரிந்து அருள்பெற்றவர். இவர் நாகப்பட்டணத்தில் சிவபூசைசெய்து பேறடைந்தவர் எனவும் புராணம் கூறும்.

கதயன்

ஓர் இருடி.

கதளீ விரதம்

புரட்டாசிமீ அல்லது கார்த்திகை, மாசி, வைகாசி இம்மாதங்களில் சுக்லபக்ஷ சதுர்த்தசியில் வாழை மரத்தடியில் உமாமகேச்வர பூசை செய்து விரதமிருக்கின் சித்தி பெறுவர்.

கதவு

வீட்டிற்குக்காப்பாக அமைக்கப்பட்ட ஓடும் பலகை, இது வாசற்கால் முளையில் சேர்க்கப்பட்டுத் திறக்கவும் மூடவுமமைந்தது, இதில் சிறியது புதவு. இது தாழெனும் உறுப்பைக்கொண்டது.

கதாசுரன்

ஒரு அசுரன் தேவர்களை வருத்தத் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு இவனைச் சங்கரித்தனர். இவனுடலி னெலும்பினால் விச்வகர்மன் விஷ்ணுவிற்குக் கதாயுதஞ் செய்து கொடுத்தனன். இவன் ஆதிகதாசுரன்.

கதி

1. கர்த்தமப் பிரசாபதியின் குமரி. புலகருஷியின் தேவி. குமரர் கர்மசேடன், வரியான், சிகிஷ்ணு. 2. (4) தேவகதி, மக்கட்கதி, நரககதி, விலங்கின்கதி.

கதிரவன்

1. சூரியனுக் கொருபெயர். 2. சண்முக சேநாவீரரில் ஒருவன், துன்முகனுடன் சண்டைசெய்தவன்.

கதை

விஷ்ணுவின் பஞ்சாயுதங்களில் ஒன்று, கயாசுரன், கதாசுரனைக் காண்க.

கதையங்கண்ணனார்

ஒரு தமிழ்ப்புலவர். ”பனிபழுநிய பல்யாமத்து” எனுஞ் செய்யுளில் தனக்குப் பரிசிலீந்தவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். (புறநானூறு)

கத்தி

1, இது ஆயுதங்களில் முதலில் உண்டானது. பிரமன் அசுரரைக் காக்க வேண்டி உலகசிருட்டி தொடக்கத்தில் யாகஞ்செய்தனர். அதில் கோரவுருவத்துடன் ஒரு பூதம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் அஞ்சினர். பிரமதேவர் அதற்குக் கத்தியென்று பெயரிட்டினர். அது ஒரு கூரான கழியாயிற்று. அதை ருத்திரரிடம் கொடுக்க அவர் பகைவரை அடக்கி விஷ்ணுவிடம் கொடுக்க விஷ்ணுவிடமிருந்த அது பலதேவரிடம் வந்து கடையில் திக்குப்பாலகர் வழியாக மனுவிற்கும் அவன் வம்சத்தவருக்கும் வந்து பலவகை யாயிற்று. கத்தியின் பேதமே பலவகை ஆயுதங்கள். (பார~சாந்.) 2. தக்ஷன் பெண். தருமன் மனைவி.

கத்திரிகிரகண தோஷம்

பாப கிரகங்கள் வக்ரித்த ராசிக்கு (2)ம் ராசியும், (12)ம், ராசியும் உற்றநாள், கத்திரியென்று பெயராம். இந்தநாளிற் சுபகன் மங்கள் தவிரப்படும். சருவகிரகணம் பற்றின நாள் (6) மாதத்திற் காகாது. முக்கூறு நான்கு மாதம், அரைக்கூறு (3) மாதம், காற்கூறு (2) மாதம், இப்படி தவிரப்படும். இவ்வகைக் கூறப்பட்ட நாட்களில் வேறோரி ராசியில் கிரகண முண்டாகிலும், இராகு, கேதுக்கள் வேறு ராசியில் போகினும் அவ்வளவும் தோஷ்மாம். இராகு கேதுக்களினு தயமும் இப் படியே தவிரப்படும். (விதானமாலை:)

கத்திரிப்ரவேசம்

சூரியன் மேஷராசியில் அக்னிநக்ஷத்திரத்தில் பிரவேசிக்கும் நாள்.

கத்திரிமூக்குக் காக்கை

இது, நீர்க் காக்கையினத்தைச் சேர்ந்தது. இது அமெரிக்கா கடற்கரையில் வசித்துக் கடல் மீனை வேட்டையாடுவது. இதனை (சிசர் ஸ்பில்பர்ட்) என்பர். இதன் அடிமூக்கு பருத்து அகன்று நீண்டதாயும், மேல் மூக்குக் கத்திரிக்கோல்போ லிருப்பதால் இப்பெயரிட்டனர். இதன் மூக்கு செந்நிறம், மூக்கின் முனை சிறிது கருமை, பாதம் நீரில் நீந்தத்தக்க தோலடியுடையது. இதன் குரல் கேட்க விருப்பமற்ற ஒலி தரும்.

கத்துரு

1. காசிபர் மனைவி. 104 பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றவள். நாகங்களுக்குத் தாய், உச்சைச்ரவம் என்னும் வெள்ளைக் குதிரைக்கு மறுவுண்டெனச் சாதித்து நாகரு ளொருவனைத் தன் னெண்ணப்படி வாலில் மறுவாகத் தோன்றச்செய்து தமக்கையாகிய சுபருடணை அல்லது விநதையை அடிமை கொண்டவள். சநமேசயன் யாகத்திற் பிள்ளைகளைச் சாகச் சபித்தவள். 2. உன்முகன் குமரன். தாய் நட்வலை.

கந்த சுக்ரவாரவிரதம்

ஐப்பசி முதற்சுக்கிரவாரம் தொடங்கி பிரதி சுக்கிர வாரந்தோறும் கந்தமூர்த்தியை யெண்ணி அநுட்டிக்கும் விரதமாம்.

கந்தகம்

பாஷாணவகையில் சேர்ந்த அசல் சரக்கு, இது, சிவப்பு கந்தகம், கோழித் தலை கந்தகம், சுரைக்காய் கந்தகம், நெல்லிக்காய் கந்தகம், நீலகந்தகம், வாணகந்தகம், துல்லியகந்தகம் எனப் பல பேதப்படும்.

கந்தக்கண்ணன்

இவர் கடைச்சங்கத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கண்ணன் என்பது கண்ணனென மற்றொருவ ரிருத்தலினிவரைக் கந்தக் கண்ணனென்றார் போலும். (குறு. 94)

கந்தசஷ்டி விரதம்

இது ஐப்பசி மாசம் சுக்லபக்ஷ பிரதமை முதல் சஷ்டிவரையில் கலசத்தில் கந்தமூர்த்தியை யாவாகனஞ் செய்து பூசித்துச் சலபாகஞ்செய்து ஆறாம் நாள் கந்தமூர்த்திக்குப் பூசை முதலிய முடித்து அதிதிகளுடன் பாரணைசெய்வது. இதைத் தேவர் சூரபன்மன் முதலியவர் இறக்க அநுட்டித்தனர். இது கந்தமூர்த்தி யுற்பத்தியின் பொருட்டுச் சிவமூர்த்தியிடம் பிரதமையிற் பிறந்த பொறிகள் துவிதியையில் கௌரிகற்பத்திருந்து திருதியையில் அக்நியிடங் கொடுக்க அவன் வகித்துச் சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கிருத்திகை முதலியவர் பாலூட்ட ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள்.

கந்தசஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் சுக்லபக்ஷப்பிரதமை முதல் சஷ்டியீராகிய ஆறு நாளும் பலாதிகள் மிளகு முதலியன உண்டு விரதமிருப்பது உத்தமம். கூடாதவர் ஒருபோதுணவுகொண்டு சஷ்டியில் உபவாசமிருப்பது நலம்.

கந்தசாமிப்புலவர்

இவர் பாண்டி நாட்டுத் திருப்பூவணத்துச் சைவர். இவர் செய்த நூல்கள் திருப்பூவண புராணம், திருப்பூவணவுலா, திரு ஆப்பனூர் புராண முதலிய. இவர் காலம் சற்றேறக்குறைய நூறு வருஷங்களுக்கு மேலிருக்கலாம்.

கந்தன்

1. குமாரக் கடவுள். 2. கூபனைக் காண்க.

கந்தபுராணச் சுருக்கம்

குமாரக்கடவுள் கதை. இதில் தெய்வயானை, வள்ளிநாய்ச்சியார் திருமணம், சூராதிகளுற்பத்தி, ஒடுக்க முதலிய கூறப்பட்டு இருக்கிறது. இதனையியற்றியவர் சம்பந்தசரணாலயர்.

கந்தபுராணம்

காந்தபுராணத்தைக் காண்க.

கந்தப்பையர்

இவர் தொண்டைமண்டலத்தில் திருத்தணிகையிலிருந்த வீரசைவர், திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர்க்கு மாணவர். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் சரவணப் பெருமாளையர் இருவருக்கும் தந்தையார். தமிழ் வல்லவர். தணிகைக் கலம்பகம், தணிகையுலா, தணிகையந்தாதி, தணிகைப்பிள்ளைத் தமிழ் முதலிய இயற்றியவர். காலம் இற்றைக்கு நூறு வருஷங்களுக்குமுன் இருக்கலாம்.

கந்தமாதனன்

1, ஒரு வானரன். குபேரனாற் பிறந்தவன், சுக்ரீவன் சேனையிற் சேர்ந்தவன். 2. (யது.) அக்குரூரன் தம்பி, 3. சுவபலருக்குக் காந்தினியிடத்துதித்த குமரன். 4. இராமராவண யுத்தத்திலிறந்தவன். இராமர் அயோத்திக்குப் புறப்படுகையில் இவனில்லா திருந்தமையால் அநுமனை ஏவிச் சத்தியவுலகினின்று கொண்டுவரப் பட்டவன்.

கந்தமாதனம்

1. அஷ்டகுலாசலங்களில் ஒன்று. இருஷிகளிருக்கை, வீரவாகு தேவர் வீரமாயேந்திரபுரியைத் தாவநின்ற மலை, காண்டவான தேசத்திலுள்ள ஒரு மலை. A PART OF THE BUDRA HINALYA. THE RANGE OF GANDHAMADANA COMMENCES AT A SHORT DISTANCE TO THE NORTH EAST OF BADRIKASHRAMA. 2. பதரிகாச்சிரம சமீபத்திலுள்ள ஒரு பர்வதம். 3. ஒரு வித்தியாதர நகரம். (சூளா.)

கந்தமூர்த்தி

ஒருமுகம், நான்குபுஜம், சத்தி, கோழிக்கொடி, வாதம், அபயம் உடையவராய்ப் பொன்னிறமுள்ளவராய் இருக்கும் குமாரக் கடவுளுக்கு ஒரு பெயர். இவரது மற்ற சரித்திரங்களைக் குமாரக்கடவுளைக் காண்க,

கந்தம்

மூக்காலறியப்படுவது. விசேஷ குணம், பிருதிவியில் மாத்திரமிருப்பது, இது அநித்யம். இது நறுநாற்றம், தீநாற்றம் என இருவகைத்து.

கந்தரத்தனார்

இவர் உசோடோகத்துக் சுந்தரத்தனாரின் வேறல்லர் என்று எண்ணப் படுகின்றது.

கந்தரன்

1. சம்பாதி வம்சத்தவனகும் கங்கன் தம்பி. 2. பிரமலோலுபன் குமரன். தருமபக்ஷிகளைக் காண்க.

கந்தருவ நகரம்

யமபுரியின் வழியிலுள்ள பட்டணம். ஆன்மா, நான்காம் மாசி பிண்டம் புசிக்கும் இடம்.

கந்தருவம்

ஒரு வித்தியாதர நகரம்.

கந்தர்ப்பன்

மன்மதன்.

கந்தழகி

நார்த்தவீரியன் தேவியருளொருத்தி.

கந்தழி

1 வண்டினையடைய மாவையாற் சிறந்த நீலமணி போன்ற மேனியையுடையான். வீரசோவென்னும் அரணத்தை அழித்த வீரத்தைச் சொல்லியது. இவ்வரணைத் திருமால் அழித்தனர் எனச் சிலப்பதிகாரம் கூறும். (பு. வெ.) 2. வளைந்த திகிரியை யுடைபவன். சோவென்னும் சூரணத்தினை அழித்த கெடாத தன்மையினையுடைய வெற்றிபைச் சிறப்பித்தது. (பு. வெ. பாடாண்.)

கந்தவதி

1. பரிமளகந்திக்கு ஒரு பெயர் 2. வாயுதேவன் பட்டணம்,

கந்தவெற்பு

தேவர் குமாரக்கடவுளைப் பூசித்த மலை.

கந்தாசுரன்

கந்தமூர்த்தியிடம் மாயை செய்திறந்தவன்.

கந்தாடை ஆழ்வான்

உடையவர் திருவடி சம்பந்தி பட்டவர்க்கம்,

கந்தாடைதோழப்பர்

கந்தாடையாண்டான் குமாரர்.

கந்தாடையண்ணன்

நயினாராசாரியர் திருவடி சம்பந்தி. கந்தாடையப்பன். நயினாராசாரியர் திருவடி சம்பந்தி.

கந்தாடையாண்டான்

எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். பிரமதந்தர சுதந்தர ஜீயர் திருவடி சம்பந்தி, முதலியாண்டான் குமாரர். (குருபரம்பரை.)

கந்தாடையார்

வாதூலகோத்திர முற்பட்டதாதலால் அதை முன்னிட்ட அரீதகோத்திர முதலிய அறுவகைக் கோத்திரத்தார்க்கும் கந்தாடையார் என்கிற பேர். இந்த அறுவகைக் கோத்திரத்தில் சேர்ந்தார் முதலியாண்டான், முடும்பைநம்பி, முடும்பையம்மாள், நடாதூரார், ஆசூரிப் பெருமாள், கிடாம்ப்பெருமாள், குமாண்டூர் இளயவல்லி ஆச்சான், வங்கிபுரத்து நம்பி முதலியவரும் இவர்கள் சந்ததியாரும். இவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தஞ் செய்ய வேண்டுமென்று மண வாளமாமுளிகள் கட்டுப்பாடு.

கந்தாடையெம்பார்

வேதாந்ததேசிகர் திருவடியில் ஆச்ரயித்த ஆசாரியர்.

கந்தாடைலஷ்மணாசாரியார்

இவர் ஒரு ஆசாரிய புருஷரில் சேர்ந்தவர். இவர் தேசிகர் காலக்ஷேபம் செய்கையில் அவ்வழி சென்றனர். இவரது சிஷ்யர் தமது ஆசாரியருக்குத் தேசிகர் மரியாதை செய்யவில்லை யென்று தேசிகரது காலைப் பிடித்திழுத் தவபதித்தனர். இதனைத் தேசிகர் பொறுத்திருந்தனர். மாணாக்கர் செய்தது ஆசாரியரை அடையுமென்றபடி சில நாளில் லக்ஷ்மணாசாரியருக்கு உடம்பில் சோபாரோக முண்டாயிற்று. இதன் காரணமறிந்து தேசிகரைச் சரணமடைந்து அவரது திருவடி தீர்த்தம் பெற்றுண்டு ரோக நிவர்த்திபெற்று அத்தீர்த்த விசேஷத்தால் ஒரு புத்திரனையும் பெற்று அக்குமரனுக்குத் தீர்த்தப்பிள்ளையெனப் பெயரிட்டுக் களித்தவர்.

கந்தியார்

ஓர் தமிழ் நூலாசிரியர். இவர் முன்னோர் செய்யுட்களில் தம் பாடல்களை நுழைத்தவர்.

கந்திரி

அக்குரூரன் தாய். நாயகன் சுவல்பன்.

கந்திருவர்

கச்யபருக்குப் பிராதையிடமுதித்த ஒரு தேவ வகுப்பினர்.

கந்திருவை

காசியபர் பவுத்திரி சுரதையின் பெண், குதிரைகளைப் பெற்றவள்.

கந்திற்பாவை

சக்கரவாளக் கோட்டத்தில் சம்பாதி கோயிலின் கிழக்கில் உள்ள தூணில் மயனால் நிருமிக்கப்பட்ட ஒரு பிரதிமை; துவதிகனென்னுந் தேவவடிவடிமாகவுள்ளது. இது எல்லாராலும் பூசித்து வழிபாடு செய்யப்படுமாதலின் இதை அதிட்டித்து நின்ற துவதிகன் கேட்போர்க்கு அதன் வாயிலாக முக்காலச் செய்தியையுங் கூறுவான். (மணிமேகலை.)

கந்துகேச்சுரம்

காசியில் இரண்டியக்கர் சண்டையிடக் கண்ட சிவமூர்த்தி பந்தாலெறிய அது அவர்களைச் செயித்துச் சிவலிங்கமா யமர்ந்தது.

கந்துக்கடன்

சீவகனை வளர்த்த வணிகன், சீவகன் புதல்வருள் ஒருவன்.

கந்துக்கண்ண மகருஷிகோத்திரன்

வணிகன் மூவரசர் முன்னிலையில் பஞ்சகாவிமத்துள் ஒன்றாகிய சிந்தாமணி கொண்ட வன், வைசியபுராணம்.

கனககாமன்

அசுவகண்டன் படைவீரரில் ஒருவன்.

கனகசபாபதி சிவாசாரியர்

சுவாமிநாத தேசிகர், சுப்பிரமணிய தீக்ஷிதர் முதலிய தமிழாசிரியர்க்கு வடநூல் கற்பித்தவர்.

கனகசபாபதி பிள்ளை

தாயுமான சுவாமிகள் குமாரர்.

கனகசபை

சிதம்பரம்.

கனகசித்திரன்

அச்சுவபுரத்தரசன் குமாரன். (சூளா.)

கனகசித்திரை

அச்சுவகண்டன் தேவி, (சூளா.)

கனகசேனன்

தசரதர் புத்திரராகிய இராமர் சந்ததியில் வந்த ஐம்பத்தாறாவது அரசன். இவன் கி. பி. (145) வருஷத்தில் தெற்கே சுராஷ்டர தீபகற்பத்தை நோக்கி வந்து அங்கே அரசாண்டு கொண் டிருந்த பிரமா வம்சத்தாசனாகிய இராஜபுத்திரனைத் தோற்கடித்து அவனுக்குரிய வீரநகரம் எனும் பட்டணத்தைத் தனக் குரிமையாக்கிக் கொண்டு அரசாண்டான். கடைசியில் இவனுக்கு இராஜதானி வல்லவிபுரம்.

கனகசோழன்

இவன் ஜெயசோழன் குமாரன். இவன் தேவி செண்பகாங்கி, இவன் காலத்தில் காவிரி திருவலஞ்சுழியிலிருந்த விநாயகரை வலஞ்செய்து பாதாளத்தில் மறைந்தது. இதனால் ஜனங்கள் முறையிட்டது கண்டு அரசன் விசனமுற அசரீரி அரசனே நீயும் உன் மனைவியுமாயினும் அல்லது ஒரு இருடியாயினும் அந்தப் பிலத்துள் புகுந்தால் காவிரி திரும்புவள் என்றது. அரசன் அவ்வகையே தன் மனைவியுடன் பிலத்துள்ளே போகத் துணிந்தபோது அரசனைப் பிரியாத மந்திரிகள் திருக் கோடீச்சுரத்தில் ஏரண்டகருஷி தவஞ்செய்கிறார் அவருடைய கட்டளைபெற்றுப் போகலாம் என, அரசன் அவ்வாறிசைந்து அவரை மனைவியுடன் பணிந்தனன். இருடி அரசனைத் தீர்க்காயுள் உள்ளவனாகவும் பணிந்த மனைவியைத் தீர்க்கசுமங்கிலியாகவுமிருக்க வாழ்த்தினர். பிறகு மந்திரிகள் நடந்தவைகூற இருடி கேட்டு அரசனுக்குத் ததீசியின் சரித்திரங்கூறிப் புகழடைய வேண்டுமெனப் பிலத்துள் புகுந்தனர். உடனே காவிரி வெள்ளங்கொண்டு ஊரில் பிரவேசித்தது. பிறகு அரசன் இருடி சொற்படி அவர் புகுந்த பிலத்தில் முளைத்த ஏரண்ட லிங்கத்திற்கும் அவர் தபஞ்செய்த இடத்தில் பிரதிட்டித்த சிவலிங்கத்திற்கும் ஆலயத் திருப்பணிகள் செய்வித்து எழுபது வருஷம் ஆண்டு தன்மகன் சுந்தரசோழனுக்குப் பட்டாபிஷேகம் செய்து சிவபதம் பெற்றனன்.

கனகத்துவசன்

திருதராட்டிரன் குமரன்.

கனகன்

1, துரியோதனன் ஏவலால் அரக்குமாளிகையியற்றிய சிற்பி. 2. ஷண்முக சேநாவீரன். 3. கனகமாலையின் சகோதான்.

கனகபதாகை

சுரமஞ்சரியின் தோழி.

கனகமாலினி

சூர்யவம்சத்துக் குசன்குமரி, இவள் பிறக்கையில் கழுத்திற் கனகமாலையுடன் றோன்றிய தாலிவளுக்கு இப்பெயர் வந்தது. இவள் யது சேகரன் என்பவனை மணந்தாள்.

கனகமாலை

சீவகன் மனைவியரில் ஒருத்தி. இவளுக்குச் சகோதார் விசயன், கதம்பன், கனகன், அசலகீர்த்தி, சேனன்.

கனகம்

ஒரு தீர்த்தம்.

கனகலம்

A SMALL VILLAGE TWO MILES TO THE EAST OF HARDWAR. அரித்வாரத்திற்குச் சமீபத்திலுள்ள ஒரு தீர்த்தமும், நகரமும்.

கனகவிசயர்

ஆரியமன்னர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டவர். பாலகுமாரன் எனும் அரசன் புதல்வர். கண்ணகியின் உருச்செயச் சிலைகொண்டு வருதற்கு இமயஞ்சென்ற சேரன் செங்குட்டுவனால் வெல்லப்பட்டு அவன் கட்டளைப்படி இமயச் சிலையைத் தலையிற் சுமந்தவர். (மணி மேகலை.) (சிலப்பதிகாரம்.)

கனகாயு

திருதராட்டிரன் குமாரர்களில் ஒருவன்.

கனடாமதம்

நியுபௌண்ட்லண்ட், கனடாதேசத்தவர் ஆதியில் சூரியனை ஆராதித்துக் கொண்டிருந்தனர். பிறகு இவர்களிற் சிலர் நான்கு தேவர்களை ஆராதித்திருந்தனர். அதாவது (1) மாதா (2) பிதா (3) புத்திரன் (4) சூரியன். இவர்கள் நால்வரும் ஒரே தேவனென்று நினைத்திருந்தனர். ஒல்கான்ஸ் ஒகி என்னும் தேவன் சிருஷ்டிக் கடவுள். இவன் ஆதியில் பூமியைப் பாணத்தால் பிளந்து ஸ்திரீ புருஷர்களை உற்பத்தி செய்கையில் அவர்களாவ் ஜனங்கள் பலரும் உற்பத்தியாயினர் என்பன். பின்னும் நன்மை தீமை செய்யும் தேவதைகள் பலருளர். இவர்களில் ஸ்திரீகள் சூரியனை மாத்திரம் தியானிப்பர். யுத்தவீரர்கள் சாயங்காலத்தில் நடனமாடித்தேவப்பிரீதி செய்வார்கள். இவர்களில் ஒரு புருஷன் பல ஸ்திரீகளை விவாகஞ் செய்து கொள்ளலாம். இவர்கள் இறந்தவர்களின் எலும்பை எடுத்துப் பலநாள் பூஜித்துக்கொண்டு வருவர். நதி கடக்கச் சமயம் நேர்ந்தகாலத்து அதற்குப் பூஜை முதலியன செய்து கடந்து செல்வர்.

கனன்முகன்

சிவபூதகணத்தவரில் ஒருவன்.

கனலாசுரன்

விநாயகரைப் பாலப்பருவத்தில் கொல்லவந்து அவரா லிறந்தவன்.

கனாசி

ஒரு இருடி.

கனாநிலை

கனவுகளின் பலாபலன்களைப் பற்றித் தேவகுருவாகிய வியாழனால் கூறப்பட்டது. இக்கனவு சிலர்க்கு அதிபித்த ரோகத்தாலும் தேக அஜீர்ண பலஹீன முதலியவற்றாலும் நேருதல் உண்டு, அவை பலியா, ஆயினும் சில பலிக்கும். பலித்தமை பிரத்தியக்ஷத்தானும், பெரியோர் அனுபவத்தினானும் கண்டிருக்கிறோமாதலால் அதனைப் பொய்யெனல் தகாது. இக்கனா “படைத்த முதற்சாமத்தொராண்டிற் பலிக்கும் பகரிரண்டாய்க், கிடைத்த பிற்சாமத்திற் றிங்க ளெட்டாவதிற் கிட்டு மென்ப், ரிடைப்பட்ட சாமத்து மூன்றினிற் றிங்களுண் மூன்றென்பராற், கடைப்பட்ட ஜாமத்து நாட்பத்திலே பலன்கைப் பெற்றதே. “இது கனநூல். இக்கனா முதற் சாமத்தாயின் வருஷம் ஒன்றிலும், இரண்டாஞ் சாமமாயின் எட்டு மாதத்திலும், மூன்றாஞ்சாமத்து 3,4 மாதங்க ளிலும், நான்காஞ் சாமத்து ஒருமாதம் அல்லது பத்து நாட்களிலும் பலிக்கும். சூர்யோதயத்தில் ஆயின் அன்றைக்கே பலிக்கினும் பலிக்கும், பூமிசம்பந்தமான கனா தனக்குப் பிறர் பூதானஞ் செய்த தாகக் கண்டால் மணம் நடக்கும். கல்யாணம் நடந்தவன் அவ்வாறு காணின் பெண் வழியாய்ச் செல்வம் உண்டாம். தன்னிலத்திற்கு எல்லையிலாதிருக்க கண்டால் சந்தோஷமும் தனலாபமும் ஆம். கரும் பூமி (க~ல்.) கஷ்டம் உண்டாம். பூமி நடுங்க (க~ல்.) கார்யபங்கம். பூமி கம்பிக்க (க~ல்.) ஜாதிக்குக் கெடுதி. தன்காற் கீழ் பூமி அசையக் (க~ல்.) வியாஜ்யாபஜயம், திரவிய நஷ்டம். மலையசைய (க~ல்.) ஒரு பெரியவன் இறப்பன். தானறிந்த தேசம் பூமியதிர்ச்சியால் கெட (க~ல்.) அந்தத் தேசம் க்ஷாமத்தால் கெடும். தன் நிலம் செம்மையாய் விளைய (க~ல்.) நிறைசெல்வ முண்டு, தன் தோட்டத்தில் காய்கறிகள் நிறைந்த பாத்திகள் (க~ல்,) ஆபத்து. தன் தோட்டத்தில் கிணறு, பூஞ்செடிகள், பழங்கள் காணின் நன்னடையுள்ள பெண்டிரும் புத்திரரும் உளராவர். பயிர்முளையாது அழுந்த (க~ல்.) துக்கம், நஷ்டம், பசும்பயிர் நிறைந்த பயிர்,நடுவில் நடக்க (க~ல்.) விருத்தி. பசும்பயிர் சுமை (க~ல்.) நன்று, உலர்ந்த சுமை (க~ல்.) தீமை. வயலில் கொங்கிருக்க (க~ல்.) கஷ்டத்தால் சுகம். தான் ஏருழ (க~ல்.) கௌரவம், விரிந்த வீதியில் நடக்க (க~ல்.) சுகஜீவனம். இடுக்குவழியில் நடக்க (க~ல்.) கஷ்டம். குகையில் தனித்து நடக்க (க~ல்.) தீது. குகையில் நண்பனை (க~ல்.) விரோதம். கிடையில் (க~ல்.) பே வனத்தில் இன்று குகையில் கொடிய பிராணிகளை (க~ல்.) புத்ரருடன் விரோதம். குகையிலிருந்து வெயிலில் வர (க~ல்.) ஆபத்து நீங்கும். தான் குழியில் விழ (க~ல்.) ஆபத்து. தேசப்படம் (க~ல்) பிரயாணம் உண்டாம். சுடுகாட்டைக் காணின் அபிவிருத்தி, வீடு மெழுகிட்டிருக்க (க~ல்,) திருடர்பயம், வீடுகட்ட (க~ல்.) கார்யசித்தி, வீடு தனதென்று எண்ணின் தனலாபம். வனத்தில் வேட் டையாட (க~ல்) போகம். வீடுகளுக்கிடையில் உலாவ (க~ல்.) தூரதேசப்ரயாணம், காட்டில் திரிய (க~ல்.) கஷ்டம். சத்திரத்திடையி லிருக்க (க~ல்.) தரித்திரம், கார்யக்கெடுதி, சிறைச்சாலையிலிருக்க நேரும். ரோகிகள் இவ்வாறு (க~ல்.) நீங்காரோகிகளாவர். சுவர், மேடை, உயர்ந்த இடம், வீடு இவற்றின் மேல் ஏற (க~ல்.) உத்யோக விருத்தி, பிறர் ஏறக்காணின் சந்தோஷ செய்திவரும். தாண்டக் (க~ல்.) ஆபத்து நீங்கும். அவைகளின் மீதிருந்து விழக்காணின் உத்யோகம் குறையும். விழுந்தவரை எடுக்க (க~ல்) பரோபகாரசித்தி. மாத்திலேறக் (க~ல்.) விருதுண்டாம். படியிலா மலைமீதேற (க~ல்.) ஆபத்துண்டாம். கஷ்டமாய் மலை மீது சேர (க~ல்.) ஆபத்துவந்து கெட்டு லாபம் உண்டாம். சருக்கிவீழின் க்ஷண தசை. மேலே சேரு முன் விழிக்கின் விசனம், ‘உதகசம்பந்தம் கடற்கரையில் நிற்கையில் தன்னை அலைகள் வந்து சுற்றக்காணின் துன்ப முண்டாம். கடலைக் கடந்துபோக (க~ல்.) உத்யோகலாபம். கப்பல் ஏறினதுபோல் காணின் பிரயாணம். தடாகம், நதி, ஏற, (க~ல்.) எண்ணிய காரியமுடியும், தண்ணீர் அழுக்காயிருக்கக் காணீன் எண்ணின முடியா, நோயுண்டாம். கால்களை யலம்பின தாக (க~ல்.) துன்பம். குடித்ததாக (க~ல்.) எண்ணிய கார்யம் முடியாது. நீரைக் கொப்புளித் துமிந்ததாக (க~ல்.) ஆபத்துகள் நீங்கும், தடாகத் தருகிலிருந்து கொண்டு தாமரையிலையில் போஜனஞ்செய்ய (க~ல்.) ராஜ்யபாலனம். வெள்ளத்தை நிதானித் துக்காண (க~ல்.) எண்ணாமலே தனங்கி கிடைக்கும், நீர்மேல் மிதந்து கொண்டு போவதுபோல் (க~ல்,) சுகஜீவனம், தெப்பல், படகு முதலியவற்றின் மீது போக (க~ல்.) எண்ணிய கார்யமுடியும். நீர் சேறுங் கலங்கலுமாக இருக்கக் (க~ல்.) நோயுண்டாம். நீரிலுலாவுகையில் காலில் பாசி கள் சுற்ற (க~ல்,) தனங்கிடைக்கும். ஒரு நதி தன்வீட்டிற்கு முன்பிரவகிக்கக் காணில் உத்யோகம், உலக பூஜ்யதையுண்டாம். மழை பெய்யக்காணின் தேசத்திற்கு ஆபத்து. வெள்ளம் வந்துலர்ந்து போகக் (க~ல்.) துன்பம் நீங்கும். நீர் பயிர்களுக்குப் பாய (க~ல்.) தனலாபம். நன்னீருள்ள கிணற்றை (க~ல்) தனலாபம், அக்கிணற்று நீர் வெளியேறிப் போகக் கண்டால் தனநஷ்டம், மரணம், வைதவ்யம், தான் கிணறு தோண்ட (க~ல்,) தனலாபம், அன்னிய ருக்குத் தான் தோண்டக் (க~ல்) அடிமையாவன். ஸ்நானஞ்செய்ய (க~ல்.) நோய். ஸ்நானஞ் செய்யும் நீர் வெப்பமுளதாகக் (க~ல்.) பந்துக்களில் வெம்மைக்குத் தக்க அவ்வளவு வலிவுநோய் பலக்கும். முழுக்காட உடையவிழ்த்து மீண்டும் உடுக்க (க~ல்.) தம்மவர்க்குக் கோபம் உண்டாய் அடங்கும். வெந்நீர் உண்டதாக (க~ல்.) பகைவரால் கஷ்டம் உண்டாம். குளிர்ந்த நீருண்ணக் (க~ல்.) நலம், ஒருவர் நீர்பருகப் பாத்திரத்துடன் தரக் (க~ல்.) சந்தான விருத்தி. உண்ணும் பாத்திரம் விழுந்து போக (க~ல்) நண்பர்க்குக் கெடுதி. நீரைப்பை முதலியவற்றில் எடுத்துக்கொண்டு போக (க~ல்.) ஆபத்து, நம்பினவர் கேடு செய்வர். தண்ணீரில் வீடு, சுவர் முதலிய வைக்க (க~ல்.) துன்பம் நெருங்கியதாம். நீரையுண்டது போல் (க~ல்.) கஷ்டம். வீடு முழுதும் நீர் தெளித்திருக்க (க~ல்.) நஷ்டப்பிராப்தி. அக்னிசம்பந்தம் நெருப்பைக் (க~வ்.) நலம். பெரும்பான்மை நெருப்பினைக் கனவில் காண்போர் கோபிகள், சோகிகள், புகையிலா நெருப்பைக் (க~ல்.) நோய் நீங்கும் அரோகிகள் (க~ல்) தனலாபம். பந்து தரிசனம். புகையுடனும் புகையின்றியுமிருக்கும் பெருநெருப்பை (க~ல்.) விரோதம், துக்கசமாச்சாரம், கரிகளையும், உமி, சாம்பர் முதலிய (க~ல்.) வறுமை. இவ்வாறு போகி (க~ல்.) ரோக நிவாரணம், தான் கப்பலிலிருக்க நெடுந்தூரத்தில் தீபமிருப்பதாக (க~ல்.) கஷ்ட மில்லாமல் தன்காலம் ஒழியும். தீபம் முதலிய நன்றாய் எரிய (க~ல்.) நலம், எல்லா பலன்களும் உண்டாம். தீபம் முதலிய மயங்கி யெரியக் (க~ல்.) ரோகம் வந்து நீங்கும். தான் தீபத்தையாயினும் தீவட்டியையாயினும் பிடித்திருக்க (க~ல்.) ஆபத்துநீங்கிப் பந்து சிநேக பூஜ்யதையுண்டாம். மற்றொருவன் பிடித்திருக்க (க~ல்.) தனக்குத் தீமை செய்பவன் கெடுவன். அது மங்கி யெரியக் (க~ல்) தனக்குத் தீமைபலக்கும். தீபத்தையாயினும் வேறு ஒளியையாயினும் மிகப் பிரகாசிப்பிக்க (க~ல்) வம்சபிரதிஷ்டை, புகழுள்ள புத்ரஜநநம், ஒரு தீபத்தைத் தூண்ட அது பலமுறை குளிரக் (க~ல்.) மிக்க துன்பம், புத்திரசோபம். ஒரு சபையில் தான் தீபத்துடன் செல்ல (க~ல்.) பிரதிஷ்டை. வீடு புகைமுதலிய இன்றி யெரிய (க~ல்.) பெருலாபம், புகை முதலியவற்றுடன் எரிய (க~ல்.) தீமை. மடைப்பள்ளி யெரிய (க~ல்) சமைக்கிறவர்க்கு நோய். மேற்கூரை எரிய (க~ல்) கள்ளர் பயம், சிநேகர் மரணம். தெரு வாசற்படி, கதவு முதலிய எரிய (க~ல்,) தனக்கேனும், தன் தலைவனுக் கேனும் கெடுதி. வீட்டில் தலைவாயிற் தாழ்ப்பாள் எரியக் (க~ல்) பந்துக்களில் புருஷர் மாள்வர். உள்வாயில் எரியக் (க~ல்,) பெண்கள் மாள்வர். உத்யோகசாலை, பந்தல் முதலிய வற்றின் தம்பங்கள் தீப்பற்றக் (க~ல்.) தன் புத்திரர் பிரபலமடைவர். அவை யெரிந்துவிடக் (க~ல்.) அவர்கள் தீயவராய்க் கெடுவர். தனக்கானவரின் வேட்டி எரியக்காணின் அவர்க்கு ரோகமுண்டாம். தன் மஞ்சத்தின் பரப்பு எரியக்காணின் ரோகம் உண்டாம். தன்னுடம்பு எரிய (க~ல்.) நோய். தன்விரல்கள் எரிய (க~ல்.) தான் செய்யுங்காரியங்கள் கெடுதி, தான்ய ராசியில் தீப்பற்றக் (க~ல்.) அதி விருஷ்டி அநாவிருஷ்டியால் நஷ்டம். அவை யெரிகையில் தான்யங்கள் தீப்பற்றாது தப்பக் (க~ல்) புஷ்கலமுண்டாம். நாடு முழுதும் எரியக்கண்டால் க்ஷாமம் அல்லது விஷூசி முதலிய பிராப்தி. வாயுசம்பந்தம் நன் மணம் ஆக்ராணிக்க (க~ல்.) எண்ணியவை முடியும். காற்றில்லாது மழை பெய்ய (க~ல்) செம்மையாகப் பயிர்விளையும். கனமழை, பெருமழை, காற்று மழை, புசல் முதலிய (க~ல்.) தேசக்ஷோபம், பந்து நாசம், ரோகம், காற்றின் சுழல், வாயுயந்திர முதலிய (க~ல்.) கஷ்டமடைந்து ஒழியும். தான் காற்றாடி விடக் (க~ல்.) அதிர்ஷ்டம் உண்டாம். ஆகாச சம்பந்தம் வானம் மேகமில்லாது நிர்மலமாயிருக்க (க~ல்,) கார்யலாபம். வானம் மேகத்துடனும், கருமையாகவும் (க~ல்,) ஆபத்து. ஆகாயம் கருமையாகத்தோற்றி ஆங்காங்குச் சிறியவெண்மேகங்கள் காணப்படின் தனக்கு ஆபத்து வந்து ஒழியும். ஆகாயம் ஆங்காங்குச் செவ்வானமிட்டிருக்க (க~ல்.) ரோகோற்பத்தி, நஷ்டம் கல்யாணம், விரும்பினோர் இவ்வாறு காணின் மணம் பெறுவர். மின்னலால் கண்கள் தெறித்துப் போனதுபோலவும், இடி இடித்தது போலவும், இடிவிழுந்ததால் தனக்கேனும் பிறர்க்கேனும் அபாயம் நேரிட்டது போலவுங் (க~ல்.) ஆபத்து உண்டாம். இருளில் வழி தெரியாது மின்னலால் வழியறியாது முள் முதலியவற்றால் துன்பமுண்டாய்த் தப்பினது போலவும், இடிதன்மீது விழ வந்து தப்பினதுபோலவுங் (க~ல்.) ஆபத்து ஒழியும். இடிதன் தலைக்குத் தப்பி அருகில்விழக் (க~ல்.) தூரதேசப்பிரயாணம். பாட்டைசாரி இவ்வகை (க~ல்.) வழியில் அவனுக்குக் கெடுதிநேரும். மழையில்லாமல் இடிமின்னல் (க~ல்.) வர்த்தகம் பலிக்கும், சுபம். சூர்யன் உதயமாய் மேல் எழக் (க~ல்.) கார்யசித்தி. ஆகாயநடுவில் சூரியனிருக்க (க~ல்.) கார்யசித்தி. சூர்யாஸ் தமனம் (க~ல்.) ஆபத்து நஷ்டம், பெண்களாயின் பெண்மகப்பெறுவர். சூரியனை மேகம் மறைக்க (க~ல்.) கெடுதிவரவு. தம் வீட்டின் மீது சூர்யன் வரவு (க~ல்.) வீடு தீப்பற்றும். சூர்யகிரணம் பட (க~ல்.) ரோகம். தன்வழி முழுதும் வெயில் எரிக்க (க~ல்,) திரவிய லாபம். சூர்யனைக் கிரகணம்பிடிக்க (க~ல்.) தீமை, பந்து மரணம், ஸ்திரீகள் காணின் நலமிலாப் புத்திரப் பேறுண்டாம். குற்றவாளி தன்னைச் சூரியகிரணம் மூடப்பட்டதாகக் (க~ல்.) விடுதலையடைவன், சந்திரன் பால் போல் பிரகாசிக்க (க~ல்.) அநுகூலம், தனசம்ருத்தியுண்டு. சந்திரனைக் கிரகணம், மப்பு மறைத்தது போல் (க~ல்) வீட்டுப்பெண்களில் ஒருவர்க்கு ரோகம் உண்டாம், திருடர்பயம். பாட்டைசாரி இவ்வாறு (க~ல்.) ஆபத்து உண்டாம். சந்திரன் மனிதமுகம்போல் பிரகாசித்திருக்க (க~ல்.) புத்ரோத்பத்தி, தனலாபம். பூர்ணசந்திரனைக் (க~ல்.) சந்தான பிராப்தி. ஒருவன் தலைமுழுதும் சந்திரன் பிரகாசிக்க (க~ல்.) கீர்த்தி. நக்ஷத்ரங்கள் செம்மையாய்ப் பிரகாசிக்க (க~ல்.) விருத்தி. மேகத்தால் மறைந்து ஒன்றன்பின் ஒன்றாகக் (க~ல்.) மிகுந்த கஷ்டமுண்டாம். வானத்தில் நக்ஷத்ரங்கள் உண்டோ இல்லையோ எனக் (க~ல்) தரித்திரம், சோகம் உண்டாம். குற்றவாளிகள் (க~ல்.) பயமொழியும், நக்ஷத்ரங்கள் வீட்டின் மீது விழ (க~ல்.) வீடு தீப்பற்றும், ரோகமுண் டாம், வீட்டைவிட்டாயினும் நீங்குவர். ஒரு வீட்டில் நக்ஷத்ரம் பிரகாசிக்க (க~ல்.) அவ்வீட்டாருக்குத் தீமை. தூமகேதுக்களைக் (க~ல்.) ஆபத்து, ஷாமம், நோய், இந்திரதனசு கிழக்கில் (க~ல்.) தரித்திரர்களுக்கு நலம், செல்வர்க்குத் தீங்கு. மேற்கில், (க~ல்.) செல்வாக்கு நலம், தரித்திரர்க்குத் தீங்கு. தம் தலைக்கு மீது போட்டி ருக்க (க~ல்.) தரித்திரர்க்குத் தனலாபம், செல்வர்க்குத் தரித்திரம் உண்டாம். மனுஷ்யசம்பந்தம் கனவில் பிராமணனைக் காணில் ரோகம். மடியுள்ள பிராமணனை அல்லது புரோகிதனைக் (க~ல்.) அக்னி பயம், க்ஷத்திரியனைக் (க~ல்.) க்ஷேமம், கோமுட்டியைக் (க~ல்,) இலாபம். சூத்திரனைக் (க~ல்.) சௌக்கியம். துருக்கனைக் (க~ல்.) பயம், பறையனைக் (க~ல்,) துக்கம், சங்கரசாதியரைக் (க~ல்.) கஷ்டம். தேசபாலகரை (வெள்ளைக்காரரைக்) (க~ல்.) க்ஷேமம், பிணத்தைக் (க~ல்.) விருந்து, போகம், பொருட்பேறு. மாந்திரிகனை (க~ல்.) மோசம். தாய் தந்தையர், குரு, பெரியோர்களைக் (க~ல்.) அபிவிர்த்தி. ஆண்மகன் குழந்தைகளைக் (க~ல்.) மேன்மை; பெண்மகள் அவ்வாறு காணின் ரோகம், தேவமாதர்களைக் (க~ல்.) தன நஷ்டம், கன்னிகை அவ்வாறு காணின் விவாகம். ஸ்திரீகள் அவ்வாறு காணின் சம்பத்து, பெண்போல் தலை வளர்த்தவனை ஆண்மகன் (க~ல்.) பெண்களால் மோசமடைவன். மொட்டைத் தலைச்சியைக் காணில், க்ஷாமம், ரோகம் உண்டாம். மொட்டைத் தலையனைக் (க~ல்.) செல்வமுண்டாம், தேசம் சுபிக்ஷமாயிருக்கும். அழுக்கடைந்த பிள்ளைகளைக் (க~ல்.) சிநேகரால் வஞ்சகம். பிள்ளைப்பேறு (க~ல்.) சுகஜீவனம். பிள்ளைகளின் மரணத்தைக் (க~ல்.) ஆபத்து. சுடுகாட்டைக் (க~ல்.) விரைவில் விவாகம், அன்றிப் பந்து மித்திரர்களின் இறப்பு, பந்துக்கள் சிறை அல்லது தாய் சம்பந்தமான பொருள் தன்னையடையும், சிநேகன் இறந்ததாகக் (க~ல்.) சந்தோஷவார்த்தை கல்யாணத்தைக் (க~ல்.) சாவார்த்தை தனக்கு நோயாயினும் வரும். கலியாணத்திற்குத் தான் உதவி செய்ததுபோல் (க~ல்.) ஜெயம். சுபவர்த்தமானம். சுவர்க்கத்தை யேனும், சுவர்க்கத்தி லிருப்பதாகவும் (க~ல்.) கௌரவமும் தனமும் உண்டாம். பகைவரைக்கண்டு பேசினதாகவும் சண்டையிட்ட தாகவுங் (க~ல்,) துன்பம், சத்துருக்களின் வேண்டுகோள் (க~ல்.) ஜெயம், இஷ்ட தேவதைகளையாயினும் இறந்த பெரியோரை யாயினும் (க~ல்.) காரியசித்தி தனலாபம். இறந்தவருடன் பேசின தாகக் (க~ல்.) கீர்த்தி. பிசாசத்தைக் (க~ல்.) காரிய பங்கம். கீழ்ஜாதியில் பிறந்ததாகக் (க~ல்.) லாபம். குருடாகக் (க~ல்.) மோசம், பெண்சாதி விபசாரியாவாள். தான் செவிடாகக் (க~ல்) தன்னைப் பிறர் மோசஞ்செய்வர். தன்னைப் பித்தனாகவும் பித்தனிடத்திலிருப்பதாகவுங் (க~ல்.) சம்பத்து. தன்னைப் பிசுனனாகவும் அப்படிப்பட்டவர்கள் கூட்டுறவு உள்ளவனாகவுங் (க~ல்) தீமை. தன்னைத் தூக்குவதாகக் (க~ல்.) காரிய சித்தி. கால் முரிந்ததாகக் கண்டால் எண்ணிய காரியமுடியாது. பொய்க்கால் கட்டிக்கொண்டு நடப்பதாகக் (க~ல்.) சோகம். தன்னைத் திகம்பரனாகக் கண்டால் தரித்திரம் அபகீர்த்தி. தன்கைகள் முன்னிலும் அதிக பருமனுள்ளவை களாகக் (க~ல்.) உத்தியோக லாபம். கைகள் ஒடிந்ததாகவும் எரிந்த தாகவுங் (க~ல்) எழையாவான். பெண்கள் இவ்வாறு காணில் புருஷனாயினும் பிள்ளையாயினு மிறப்பன். வலது கையால் வேலை செய்வதாக (க~ல்.) அதிர்ஷ்டம். கைநிறைய மயிர் நிறைந்திருப்ப தாகக் (க~ல்.) கஷ்டமாயினும் காவலாயினும் உண்டாகும், தனக்குக் கொம்புகள் முளைத்ததாகக் (க~ல்,) தனலாபம் உத்தியோக லாபம். பிறருக்கு அவ்வாறிருக்கக் (க~ல்.) அவர் நோயிலிருப்பர். தன் தலை பெரிதாயும் உயர்வாயும் இருக்கக் (க~ல்,) பிரசித்தி. ரோகிகள் (க~ல்) நோய். பிறர் தன் தலையை உடைத்ததாகக் (க~ல்.) பெண்சாதிக் காயினும் பிள்ளைக்காயினுங் கண்டம். மிருகபக்ஷிகளின் தலையைத் தான் உடைத்ததாகக் (க~ல்.) கீர்த்தி. சிங்கம் புலி முதலியவைகளின் தலை தனக்கிருப்பதாகக் (க~ல்.) ஜயம். குதிரை, கழுதை, நாய் முதலியவற்றின் தலை தனக்குள்ளதாகக் (க~ல்.) அடிமை, தலைமுழுகக் (க~ல்.) ஆபத்து நிவர்த்தி. தன் மூக்கில் இரத்தம் வடியக் (க~ல்) நஷ்டம். கர்ப்பங்கரைந்ததாகக் (க~ல்.) கஷ்டம் விலகும். முகம் வாடி யிருந்ததாகக் (க~ல்,) திரவியலாபம், பற்கள் ஆடுவதாகக் (க~ல்) பந்துமாணம், வாந்தி அல்லது பேதியானதாகக் (க~ல்.) தரித்திரர்களுக்குத் தனமும் தனவான்களுக்குத் தரித்திரமும் உண்டாம். சிங்காரவனத்தில் வேட்டையாடுவதாக (க~ல்) சௌக்கியம். சமுத்திர யாத்திரை (க~ல்.) தனலாபம். சிரித்ததாகக் (க~ல்) துக்கம். தவஞ்செய்ததாகக் (க~ல்) லோகோபகாரம், ஒருவன் மேல் கோபித்ததாகக் (க~ல்.) அவன் சிநேகிதனாவன். தன்னைப் பிறர் அடித்ததாகக் (க~ல்.) சிநேகம். கத்தியால் அடிக்கக் (க~ல்.) ஆபத்து. சிநேகனிடத்திருந்து விடை பெற்றுக்கொள்வதாகக் (க~ல்.) துர் அதிர்ஷ்டம் வியாதி. தன்காலைப் பிறர் மிதிப்பதாகக் (க~ல்.) இச்சகத்தால் பொருள் நாசம். கிழவியைக் கல்யாணஞ் செய்ததாகக் (க~ல்.) தனலாபம். எதையோகண்டு பயந்ததாகக் (க~ல்.) காரிய சித்தி. கூவுகிறதாகக் (க~ல்.) துக்கம். அழுகிறதாகக் (க~ல்,) அபிவிர்த்தி. சண்டையிடுவதாகக் (க~ல்.) காரியசித்தி. முத்தமிடுவதாகக் (க~ல்.) மோசம். எண்ணெய் தேய்த்துக்கொள்ளு வதாகக் (க~ல்.) ரோகம், திரவியநஷ்டம். அம்மைவார்த்த தாகக் (க~ல்.) தனப்பிராப்தி. கொரட்டையிட்டு உறங்குவதாகக் (க~ல்) சுகஜீவனம். தான் எகிறுவதாகக் (க~ல்.) காரியபங்கம், தன் வீதியில் ஒருவரிறப்பர். தானிறந்ததாகக் (க~ல்,) நலம். பந்துக்களிறந்ததாகக் (க~ல்.) பீடைநிவர்த்தி. அவர்களைத் தான் கொன்றதாகக் (க~ல்.) தன்னால் உபகாரத் தையடைவர். தன்னை அவர்கள் கொன்றதாகக் (க~ல்.) தனலாபம், தான் மீண்டும் கலியாணஞ் செய்து கொண்டதாய்க் (க~ல்) சோகம். மற்றவர்கள் (க~ல்.) சுபம். ஒரு பெண்ணைத் தான் அபகரித்துக் கொண்டு போவதாய்க் (க~ல்.) கேட்டின் வரவு. தான். சிறையிலிருப்பதாகக் (க~ல்.) அதிகாரவிர்த்தி. ஜந்து சம்பந்தம் எறும்புகள் சாரையிட்டு ஓடுவதாகக் (க~ல்.) பிரயாணம், சந்தான விர்த்தி, சுகஜீவனம், வியாபாரவிர்த்தி. எறும்புகள் அங்குமிங்கும் ஓடுவதாகக் (க~ல்.) முயற்சி கெடும். ரோகிகள் எறும்புகளைக் (க~ல்.) நோய் நீங்காது. கொசுகு, ஈ முதலியவும் இரக்கை யுற்ற புழுக்களையும் (க~ல்.) ரோகமில்லாத வர்களுக்கு ரோகமுண்டாம். ரோகிகள் (க~ல்.) நோய் நீங்கும். தன்னை ஈக்கள் மொய்க்கக் (க~ல்.) பகைவர் மிகுவர், பாரியை விபசாரியாவள். தேனீக்கடித்ததாகக் (க~ல்,) ஒழுக்கங் கெடும். தன் வீட்டில் தேன்கூண்டு கட்டியதாகக் (க~ல்.) நலம். மூட்டுப் பூச்சியைக் (க~ல்.) சத்துருவால் உத்தியோகக் கெடுதி, பாம்பு, தேள், சிலந்தி போவதாகக் (க~ல்.) ஜயம், தன் வீட்டில் பிரவேசிக்கக் (க~ல்.) விரோதம், அவைகளைக் கட்டியிருக்கக் (க~ல்.) நோய். மீன், தவளை முதலிய ஜலசரங்களைக் (க~ல்.) நலம். ஆமையைக் (க~ல்,) தனலாபம், கஷ்டம் உண்டாம். முயலைக் (க~ல்.) பந்து தரிசனம், சந்தானம் கெடும். பூனையைக் (க~ல்.) கெடுதி, அபரிந்தை யுண்டாம். அது தன் வீட்டில் உலாவக் (க~ல்.) தம்பொருளைத் திருடுவர். எலிகளைக் (க~ல்,) தீமை. வீட்டில் எலிவளை தோண்டக் (க~ல்) திரவிய நஷ்டம், நாய் தன்னிடம் வரக் (க~ல்.) நண்பர் வரவு. தன்னைக் கண்டு குலைப்பதாகக் கண்டாலும் கடிப்பதாகக் கண்டாலும் விரோதம். நரியைக் (க~ல்.) தீமை, குரங்கைக் (க~ல்.) கலகம். ஆடுகளைக் (க~ல்.) தனசமிருத்தி அல்பாயு ளுள்ள பிள்ளைகளுண்டாம். அவைகளை யேறக் (க~ல்.) மரணசமீபம். பசுக்கள் மேயக் (க~ல்.) நன்மை. மந்தையை ஓட்டிக்கொண்டு போகக் (கதீமை. பசு தன்னைத் துரத்தக்ல்.) தீமை. பசு தன்னைத் துரத்தக் (க~ல்.) ஸ்திரீயினால் அபகீர்த்தியுண்டாம். பால் கறக்கக் (க~ல்.) நோய் வரவு. வெள்ளைப் பசுவைக் (க~ல்.) நலம். தன்னை எருது துரத்தக் (க~ல்.) தீமை. எருது இடிக்க, மிதிக்கக் (க~ல்.) தன் அதிகாரங் கெடும். குதிரையைக் (க~ல்.) பந்து தரிசனம், யாத்திரை. அதன் மேலிருந்து வீழ்ந்ததாகக் (க~ல்.) ஆபத்து. சவாரி செய்வதாகக் (க~ல்.) சுக ஜீவனம், கழுதையைக் (க~ல்.) தன் தீமை யொழியும், தன்னைத் துரத்துவதாகக் (க~ல்.) பகைவரால் கெடுதிவந்து நீங்கும். அதன் மேல் ஏறுவதாகக் (க~ல்) மரண சூசகம். ஒட்டையைக் (க~ல்.) பிரயாசையால் ஆரோக்கியமும், நலமும் உண்டாம். யானையைக் (க~ல்.) காரியசித்தி, பிரதிஷ்டை. சிங்கம், புலி முதலிய கொடிய மிருகங்களைக்கண்டாலும், கடித்ததாகக்கண்டாலும் விரோதங்களுண்டாகும். பக்ஷிசம் பந்தம்; பக்ஷிகள் பறக்குங்கால் (க~ல்,) தனமுளான் தரித்திரத்தையும், தனமிலான் தனத்தையு மடைவன். அவை கூண்டினின்று பறப்பதாகக் கண்டாலும், பிடித்ததாகக்கண்டாலும் சம்பத்துண்டாம். பக்ஷிகளின் கூண்டும், அதில் குஞ்சுகளும், முட்டைகளும் தனக்கு அகப்படக் (க~ல்.) சுபம். பறவாக் குஞ்சுகளுள்ள கூண்டு அகப்பட்டதாகக் (க~ல்) வழக்கு நேர்ந்து அபஜெயமாம். அநேக முட்டைகளைக் (க~ல்) திரவியப்பிராப்தி. முட்டைகளைத் தான் தின்பதாகக் (க~ல்.) தரித்திரம். காக்கை பறக்கவும் கூவவும் (க~ல்.) தீமை, தலைமீது பறக்கக் (க~ல்.) ஆயுள்க்ஷணம். சிட்டுகள், கொக்குகள் முதலியவற்றைக் (க~ல்.) நலம். அவை ஒன்றினோடொன்று சண்டையிடக் (க~ல்.) கஷ்டம், பறக்கக் (க~ல்.) நலம். புறாக்களைக் (க~ல்.) நலம். புருஷன் பெண்சாதியாலும், பெண்சாதி புருஷனாலும் துக்கமடைவர். பந்துக்களைக் (க~ல்.) வியாபாரலாபம், மயில்களைக் (க~ல்.) நன்மையுண்டாம். கழுகைக் (க~ல்.) சோரபயம். கருடனைக் (க~ல்.) காரியசித்தி. ஆந்தை, கோட்டான் (க~ல்.) தனஹானி ரோகம், சிறையுண்டாம். ஆகாரசம்பத்தம் பசி தீர்ந்ததாகக் (க~ல்.) திருப்தி. தான் போஜனஞ் செய்வதாகக் (க~ல்.) குடும்ப கலகம். பந்துக்களுடன் உண்டதாகக் (க~ல்.) விவாகம். தான் தண்ணீர் உண்டதாகக் (க~ல்.) அபிவிர்த்தி. கள்ளு, சாராயம், இரத்த மிவை உண்டதாகக் (க~ல்.) திரவியலாபம். போஜனத்தைக் (க~ல்.) காரியசித்தி. தான் சமைப்பதாகக் (க~ல்.) அடிமையுண்டாம். கூழ்தின்னக் (க~ல்.) சந்தானவிர்த்தி, வெண்ணெயைக் (க~ல்.) உத்தியோகலாபம், பாயசங் (க~ல்.) லாபம். பால், பாற்பாண்டம், தயிர் (க~ல்.) நன்மை. காய்கறிகளைக் (க~ல்.) கீர்த்தி, தனலாபம், நலமுண்டாம். இலைக்கறி முதலிய தின்றால் நோய், பெல்லம் தேன் முதலிய தித்திப்புவகைகளைத் தின்றால் தரித்திரம். வேப்பங்காய் முதலிய கசப்புக்காய்களைத் தின்றால் தீமையுண்டாம். காரமுள்ள காய்கள் முதலிய தின்றால் இரகசியம் வெளிப்படும். புளியைக் (க~ல்.) பந்து தரிசனம். உப்பு தயிர் முதலியவைகளைக் (க~ல்.) தீமை. கோதுமை, நெல், சோள் முதலியவைகளைக் (க~ல்.) தனலாபம் அம்மையுண்டாம். மருந்துகளைக் (க~ல்.) சோகமில்லாதவர் ரோகமடைவர், ரோக முள்ளவர் ரோகம் நீங்குவர். தாம்பூலங் (க~ல்.) தனலாபம், தாம்பூலம் போட்டுக் கொண்டால் விரோதம். இதாசம்பந்தம் கடைவீதியைக் (க~ல்.) நலம். அக்கடைக்குக் குதிரையேறி போகக் (க~ல்.) தீமை, கோவிலைக் (க~ல்.) கலகம். கோவிலில் தேவனைப் பூஜிக்கக் (க~ல்.) வியாஜ்ஜியம், பஜனையாயினும், நாடகமாயினும் (க~ல்.) சுகஜீவனம், புட்பங்கள் அல்லது அவைகளைச் சூடிக்கொள்ளக் காணினும் திருவிழா சந்தோஷம், விவாகமுண்டாம். கையில் வைத்திருந்த பூவாடக் (க~ல்.) தீமை. பழத்தோடு கூடிய மரங் (க~ல்) திரவிய லாபம், சந்தானவிர்த்தி, காயுள்ளமரம் (க~ல்.) காரியஹானி. முத்து ரத்னங்களைக் (க~ல்) நலம். அவை கையினின்று நீங்கக் (க~ல்.) தீமை, பொன்னாணயத்தைக் (க~ல்.) சுபம். வெள்ளியைக் (க~ல்.) எண்ணின காரியங்கெடும். ஈயத்தைக் (க~ல்.) விவாதம். இரும்பைக் (க~ல்.) தரித்திரம். பையாயினும் மூட்டையாயினுங் (க~ல்.) சௌக்கியமும், சந்தானவிர்த்தியு முண்டாம். எழுதின காகிதத்தைக் (க~ல்.) கஷ்டம். சாயங்காலமானதாகக் (க~ல்.) தீமை, கண்ணாடியைக் (க~ல்.) தரித்திரர்க்குப் பாக்கியமும், செல்வர்க்குத் தரித்திரமும் உண்டாம். பாதரக்ஷைகள் புதிதாகக் தரிக்கக் (க~ல்.) சம்போகம். மலத்தை மிதித்ததாகவும், பூசிக்கொண்டதாகவுங் (க~ல்.) தனலாபம். கண்டதாகக் (க~ல்.) போனபொருள் மீளும். தான் குப்பை மீது நிற்கக் (க~ல்.) கார்ய, புத்ர, தனவிர்த்தி, சதுரங்கமாடக் கண்டாலும் யுத்தம் சூது முதலிய ஆடக்கண்டாலும் தீமை. சங்கீதம் தான் பாடக் (க~ல்.) துக்கம். பிறர்பாடக் (க~ல்.) காரியசித்தி. வீணை பிடீல் முதலிய வாசிக்கக் கேட்டால் சுபம் நடக்கும். மணியடிக்கக்கேட்டால் சுபவர்த்தமானம்.

கனாநூல்

கனாப்பயனை அறிவிக்கவந்த நூல். இது கணபுரத்தேவன் கட்டுரைப்படி பொன்னவனா லியற்றப்பட்டது.

கனி

கனித்திரனைக் காண்க.

கனித்திரன்

1, பிரசை அல்லது க்ஷபன் குமாரன், விவிம்சனுக்குப் பாட்டன், இவன் தம்பியரில் சவுரியென்பவ னிவனைக்கொல்ல ஒரு புரோகிதரால் அபிசார யாகஞ் செய்வித்து அதிற் பூதத்தை யுண்டாக்கி இவன்மீது ஏவ அப்பூதம் புண்ணிய சொரூபியாகிய இவனைக் கொல்ல அஞ்சி மீண்டு அனுப்பின புரோகிதரையும் தம்பியரையும் மாய்த்தது. தம்பியரிறந்த வகையறியாது வசிட்டரா லுணர்ந்து தன்னாலன்றோ இறக்க நேரிட்டதென்று இராச்சியத்தை வெறுத்துத் தன் குமரன் சுபனுக்காசளித்து வனத்துக் கேகினன். இவனுக்குக் கனியெனவும் பெயர். 2. கனித்ரன் வம்சத்தவனான விவிம்சன் குமரன். இவன் புத்திரப்பேற்றினை விரும்பிக் கௌமதிக்கரையில் இந்திரனை நோக்கித் தவஞ்செய்து பலாசுரன், கரந்தமன் எனுங் குமரரைப்பெற்றனன். இவன் புத்திரரில்லாமையால் யாகஞ்செய்ய வெண்ணிக்காட்டில் யாகப்பசுவின் பொருட்டு வேட்டைக்குச் சென்றனன், பசுக்கள் இவனைக்கண்டு ஓட, ஆடொன்று துணிவுட னெதிரில் வந்து அரசனே யென்னை யாகப்பசுவாகக்கொள் என, அரசன் ஆச்சரியமடைந்து மிருகத்தை நோக்கி மிருகங்கள் மனிதரைக் காணின் அஞ்சி ஓடும். நீ அஞ்சாது என்னிடம் வந்ததற்குக்குக் காரணம் என்னென்றனன். ஆடுநான் உனக்குப் புத்திரனில்லாததறிந்து யாகப் பசுவாய் உபயோகப்படின் உனக்கும் புத்திரன் உண்டாவான் எனக்கும் நற்கதியுண்டாம் என்கையில் மற்றொரு மிருகம் அரசனைநோக்கி அரசனே அதனை யாகப்பசுவாகக்கொள்ளற்க. என்னைக்கொள்க என்று வந்தது. அரசனிரண்டாவது மிருகத்தைநோக்கி அதனினும் உனக்கு என்ன உயர்வென்றான். இரண்டாவது ஆடு அரசனே முதலாட்டிற்குப் புத்திரரில்லை எனக்குப் பெண்சாதியும் புத்திரரும் பலருளர் அவர்கள் உதயத்தில் மேய்ச்சலுக்குப் போய்த் திரும்புமளவும் அவர்க்குப் பிறரால் துன்பம் நேருமோ என்னமோ என்கிற கவலையதிகம் ஆதலால் உமக்கு யாகப்பசுவாய் அத்துன்பத்திருந்து நீங்கிச் சுவர்க்கம் அடைவேன் என்றது. அதை அரசன் கேட்டு அவற்றைப் பசுவாகக் கொள்ளாமல் கோமதி நதியில் இந்திரனை யெண்ணித் தவஞ்செய்து பலாசுவனைப் பெற்றனன்.

கனிநேத்திரன்

இக்ஷ்வாகு வம்சத்தவனானவி விம்சன்புத்திரன். இவன் புத்திரன் சுவர்சஸ்,

கனிவகைகள்

பிரெட்புருட் (BREAD FRUIT): இது தென்கடற் தீவுகளில் உண்டாம் ஒருவித மரக்கனி. இம்மரம் அகன்ற இலைகளைப் பெற்று 20 அடிகளுக்குமேல் வளருகிறது. இதன் காய்கள் பலாக்காய்களின் மேற்புறத்தில் முள்கள் உள்ளனவாய் உட்புறத்தில் பலாச்சுளைகள் போல் கொட்டைகளுடன் இருக்கின்றன. அத்தீவிலுள்ளார் இதை ஆகாரமாக் கொள்கின்றனர். பனானா: (BANANA) இது, ஒருவகை யான வாழை இனத்தைச் சேர்ந்த மரம். உஷ்ணதேச விளைபொருள், வாழைக் குலைபோன்று பல காய்களைப் பெற்றுத் தொங்குவது. இதை ஆகாரமாக் கொள்கின்றனர். அன்னாசிப்பழம்: (PINEAPPLES) இது, பெர்மூடா தீவுகளிலிருந்து கொண்டுவரப் பட்டதாகக் கூறுகின்றனர். இது இந்தியாவில் பல இடங்களிலும் தற்காலம் உண்டு. இது, கற்றாழைபோல் மடல் கொண்ட புல்லின் வகையைச் சேர்ந்தது. பழம், செடிக்கு நடுவிலும் பக்கங்களிலும் உண்டாம். இதன் பழத்தின்மேல் பாகம் உறுதியான செதிள்கள் போலும் புறணியால் மூடப்பட்டுக் கலசம் போலுள்ளது. மதுரம் வாய்ந்தது. கிச்சிலி: இது, ஆசியாகண்டத்தில் விளையும் செடிவகைகளில் ஒன்று, உறுதியான செடி. பலவகைப் பிரிவு கொண்ட சுளைகளையும் வித்துக்களையும் உடையது. புளிப்பும், மதுரமும் உடையது. எலிமிச்சை: இது, ஆசியா கண்டத்து விளைபொருள்களி லொன்று. மிக்க புளிப்புள்ளது. இச் செடி, பத்தடிக் குட்பட்டேயிருக்கும். இலை ஒருவித காரமான நெடியுடன் கூடியது. இதிலிருந்து ஒருவித உப்பு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் ஊறுகாயாக உபயோகிக்கின்றனர். திராக்ஷை: ஒரு வித கொடிப் பயிர். இது, ஸ்பெயின், போர்க்ஷிகல், சிசலி, ஜெர்மனி, துர்க்கி, சிரியா, ஐயோனியன் தீவுகள், பிரான்ஸ், இந்தியா முதலிய இடங்களில் பயிரிடப் படுகிறது. இது கொத்துக் கொத்தாகக் காய்களைப் பெற்றுப் பழுக்கும். இது புளிப்பும், இனிப்புமுள்ள பழங்களைத் தரும். இதில் ஒயின் எனும் சாராயமும், பிராந்தியும் காய்ச்சுகின்றனர். இது, தேனில் பதஞ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. அத்தி: இது உஷ்ணதேசப் பொருள். இதன் பூத் தோற்று முன் பிஞ்சுடன் வரும், பழம் பல விதைகளுடையது. இது துர்கிகிரீஸ் முதலிய இடங்களிலிருந்து தேனில் பதஞ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. பேரீந்து: இது வட ஆபிரிகா, அரேபியாவிலுண்டாம் ஈச்சமரத்தின் பழம், இது பாகில் பதஞ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. அது அந்நாட்டு ஏழைகளுக்கும் குதிரைகளுக்கும் ஆகாரமாகிறது. பீச்: (PAACH) ஒருவித கோவைப்பழம் போன்ற மதுரமான பழவகை. இதில் பல ஜாதி உண்டு, இது பாரசீக தேசத்து விளைபொருள்களி லொன்று. இவையன்றி ஆபில், பேரிக்காய், ஸ்டராபெர்ரி, கூஸ்பெர்ரி முதலிய பழங்களும் உண்டு. மற்றவை ஆசியா கண்ட தேசங்களிலுண்டாம். அவை, மா, பலா, வாழை, பெருங்கிச்சிலி, நாரத்தை, பலவகை கிச்சிலி, கொய்யா, மாதுளை, தமரத்தை மெலாம்பழம், வெள்ளரிப்பழம், பிச்சைப் பழம், நாவல், சம்பு நாவல், வெண்ணாவல், சிற்றீசன், களா, காரை, கொடிமுந்திரி, கொட்டை முந்திரிப் பழம், பனம்பழம், பாலைப்பழம், சாதிநாரத்தை, கொளிஞ்சி நாரத்தம்பழம், கொம்மட்டி சீதா, நாரத்தம்பழம் முதலியவை.

கனேரிப்பறவை

இது, அமெரிக்கா கண்டத்துக் கனேரித்தீவிலுள்ள பொன்னிறப் பறவை, இது இந்து தேசத்துக் கிளி, நாகணப் புட்களினும் நன்றாகப் பாடி நடிக்கவல்லது.

கன்னடுதல்

வீரன் நாமத்தைக் கல்லிலே யெழுதி அழகுபெறக் கல்லை நட்டது. (பு. வெ. பொதுவியற்.)

கன்னபிரமையர்

ஒரு வீரசைவ அடியவர், இவர் சிவனடியார் அல்லாதார் வீட்டில் கன்னமிட்டு வந்த பொருளால் சிவனடியவர்க்கு நிவேதனஞ் செய்து முத்தி பெற்றவர்.

கன்னம்பாளனார்

இவர் பெயர் கண்ணம்பாளனா ரெனவும் பிரதி பேதமுண்டு, அகத்தில் கருவூர்க் கண்ணம்பாளனா ரென்றிருத்தலால் இவர் ஊர் கருவூர். ‘கனப்பான்’ என்று ஊர் இருத்தல் போலக் ‘கன்னம்பாள்’ என்பதும் ஊராக இருக்கலாம். அகத்தில் கருவூர்க் கண்ணம்புல்லனா ரென்றொருவர் பெயர் காணப்படுகின்றது. இவர்கள் இருவரும் பாடிய வெல்லாம் பாலைத்திணையா யிருத்தலானே இருவரும் ஒருவரேயெனவும் ஏடெழுதுவோர் மிகையால் பெயர் பேதப்பட்ட தெனவும் ஊகிக்கலாம். கருவூர் சேரனாட்டகத் துள்ளது. இவர் கூறிய குறை நயப்பு நுண்ணுணர் வினோரை இனிது மகிழ்விக்கும்; அகம் 180. இவர் சேரமான் கோக் கோதையையும் அவனது வஞ்சி மூதுரையும் பாராட்டிக் கூறியுள்ளார்; அகம் 263. இவர் பாடியனவாக நற்றிணையில் 148ம் பாடலொன்றும் அகத்தில் மூன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கன்னரதேவன்

இவன் ஒரு சோழ அரசன். இவன் உத்தேசம் 971கி. பி. இல் இறந்தான். இவனிறந்த பிறகு கொட்டி தேவனும், கக்கராஜனும் அரசாண்டனர். பின்னால், கண்டராதித்தன் சில நாள் அரசாண்டான். அரிஞ்சயன் சில நாள் அரசாண்டான், பராந்தகன் 11 இவன் அரிஞ்சயன் குமரன். இவனுக்குச் சுந்தரசோழன் என ஒரு பெயர். இவன் வீரபாண்டியனுடன் சேவூரில் யுத்தம் புரிந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவன் மனைவி வானவன்மாதேவி. இவள் கணவனுடன் சககமனம் செய்தாள். இவனுக்குப் பொன் மாளிகைத் துஞ்சிய தேவன் என ஒருபெயர் உண்டு. இவனுக்குப்பிறகு கண்டராதிக்தன் குமரன் மதுராந்தகன். பட்டமடைந்தான்.

கன்னர்

செங்குட்டுவனுக்கு நட்பினபாகிய ஆரியவரசர் (சிலப்.)

கன்னி

1. ஒரு தீர்த்தம். 2. சம்பாதி எனும் துர்க்கை காந்தனெனும் அரசனைப் பாசுராமனிடம் யுத்தத்திற்குப் போகாதிருக்கும்படிக் கட்டளையிட்டவள். (மணிமேகலை.)

கன்னிகா

ஒரு மாயாதேவி.

கன்னிகாபரமேச்வரி

கோமட்டிகள் குலத்தில் குசுமசேர்ஷ்டி யென்பவர் ஒருவரிருந்தனர். இவர் பாரியைக் குசுமாம்பிகை இவர்கள் புத்திரர்கள் வேண்டிப் புத்ரகா மேஷ்டி செய்தனர். இவர்களுக்கு ஒரு புத்ரனும் ஒரு புத்ரியும் பிறந்தனர். புத்ரனுக்கு விரூபாக்ஷன் என்றும், பெண்ணுக்கு வாசவாம்பிகை அல்லது வாசவகன்னிகை அல்லது கன்னிகாபரமேச்வரி யென்றும், பெயரிட்டு வளர்த்து வந்தனர். கன்னிகை அழகில் தன்னை யொப்பவரின்றி யிருந்தனள். இவ்வாறிருக்கையில் இராஜ மகேந்திரத் தரசனாகிய விஜயார்க்கன் குமரன் விஷ்ணு வர்த்தனன் தான் இராஜ்யங்களைச் சுற்றி வருகையில் குசும செட்டியால் நடத்தப் பட்ட இவ்விடம் வந்தனன். செட்டி அரசனை எதிர்கொண்டு மர்யாதை நடத்தினன், அரசன் பவனி வருகையில் பட்டணத்துப் பெண்கள் அரசனுக்கு ஆர்த்தி செய்தனர். அவர்களில் கன்னிகையும் ஒருத்தி. அரசகுமரன் இவளைக் கண்டு மணக்கவிரும்பித் தந்தையைக் கேட்டனன், தந்தை மறுக்கக்கண்டு பயமுறுத்தியதால் தந்திரமாய்ப் பின்னிரண்டுமாதம் பொறுத்து மணஞ் செய்வதாகக் கூறியனுப்பிவிட்டு (18) பட்டணவாசிகளாகிய செட்டிகளை வருவித்து யோசிக்கப் பலரும் பலவிதமாகக் கூறக்கேட்டுத் தங்களாசாரிராகிய பாஸ்கராசாரியரிடம் கூற அவர் உங்கள் குலத்தைக் காக்க வேண்டில் தீப்புகுதலே நலம் என, அவ்வாறே பெரும்பான்மையோர் தீப்புகுதல் சம்மதியாது ஓடினர். ஒழிந்த (102) கோத்திரவர் தீப்புகச் சம்மதித்து ஏழுவயதுள்ள குசுமாம்பியைக் கேட்க அச்சிறுமியும் சம்மதித்தனள், அவ்வாறே (103) தீக்குழிகள் நாகரேச்வர சுவாமி சந்நதியில் அமைக்கப் பட்டன. ஜாதித்தலைவன் வீரகங்கணம் புனைந்து மனைவியுடன் தீக்குழிக் கருகிற்சென்று கன்னிடையா தங்கள் சந்ததியார்க்கு நலங்கூறி வசவாம் பிகையைத் தீப்புகக்கூற அவள் தன்னுடன் தீப்புகத் துணிந்த கோத்திரங்களை வாழ்த்தித் தீப்புகுந்தனள். அவள் தீப்புகுதுகையில் விஷ்ணுவர்த்தனன் இவ் வெல்லையில் வருவனேல் அவன் தலை வெடிக்கக்கடவதெனச் சாபமும் இட்டனள். பிறகு (102) கோத்திரத்தவரும் தீக்குழி வீழ்ந்து சுவர்க்கம் புக்கனர். இச்செய்தி கேட்ட விஷ்ணுவர்த்தனன் யானை யினின்று வீழ்ந்து தலையுடைந்து இறந்தனன். இவனுடல் இவன் குமரன் இராஜ நரேந்திரனால் தகிக்கப்பட்டது. இராஜராஜ நரேந்திரன் கோமட்டிகளைச் சமாதானஞ் செய்து குசும சேர்ட்டியின் குமரன் விருபாக்ஷனையூருக்குத் தலைவனாக்கி வாசவாம்பிகை கன்னிகாபரமேச்வரிக்குக் கோயில் கட்டுவித்துச் சிலாப்பிரதிஷ்டை செய்வித்தான்.

கன்னிகாப்பு

காஞ்சிபுரத்திற்குப் பெயர். காளியால் காக்கப்பட்டதனால் இப்பெயர் பெற்றது.

கன்னிகைகளின் வயது

பன்னிரண்டு வயதுள்ள கன்னிகை கௌரி, ஒன்பது வயதுள்ள கன்னிகை ரோஹிணி, பத்து வயதுள்ளவள் கன்னிகை, பத்து வயதிற்கு மேற்பட்டவள் ரஜஸ்வலை, (பரா~மா).

கன்னிகையர்

(5). அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மந்தோதரி.

கன்னிக்குடிப்பூதம் புல்லனார்

இவரது இயற்பெயர் புல்லன். பூதன் தந்தை பெயர்போலும். ஊர் கன்னிக்குடி. இப் பெயர்கொண்ட ஊர் பல நாடுகளிற் பலவிருத்தலால் இவர் ஊர் இன்னதென்றறியக் கூடாதாயினும் இவர் பாலைத்திணையையே சிறப்பித்துப் பாடியிருத்தலால் இவர் நீர் நாட்டினர் அல்லரென்று மட்டும் தெரிகின்றது. இவர் பாடியனவாக நந்றிணையில் 333 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவரைக் கள்ளிக்குடிப்பூதம் புல்லனாரென ஊகிக்கலாம்.

கன்னிடையர்

இவர்கள் கன்னட தேசத்திருந்து வந்தவர்கள். இவர்கள் தற்காலம் பல தொழில்களை மேற்கொண்டிருக் கின்றனர். இவர்களிற் சிலர் ஆடு மாடுகள் வைத்து வளர்த்துத் தயிர்விற்றுச் சீவனஞ் செய்கின்றனர்.

கன்னியாகுப்ஜம்

தற்காலம் கனோஜ் என்று வழங்கப்படுவது, கங்கா தீரத்திலுள்ள பட்டணம், Kanonj is on the junction of the river Ganges and the Kali nadi or Ikshumati, in Robilkhand:

கன்னீர்ப்படுத்தல்

1. சுரும்பு சூழுமாலை பக்கத்திலே அசைந்துவரப் பார்த்துக் கைக்கொண்ட கல்லினைப் புனலிலே யிட்டது (பு வெ. பாடால்). 2. உயர்ந்த கல்லினைச் செலுத்தி நிரைத்தலை அவ்விடத்துக் கருதினும் முன்பு சொன்ன துறையேயாம் (பு. வெ. பொது வியல்).

கன்மசாதாக்யம்

வெர்த்தி எனும் பெயரையுடைய தொழிலாதலால் இந்தக் கிரியா சத்தியிலே தோற்றுதலால் நாதமயம் எனும் ஞானலிங்கமும், பேதமற்ற விந்து மயமான கிரியாபீடமும் எறாமற் குறையாமல் கூடிப் பஞ்சகிருத்ய மெனும் தொழிலைச் செய்வதாகிய சிவமூர்த்தம். இவர் சத்யோசாத முகத்தால் பிரமாவையும், வாமதேவ முகத்தால் விஷ்ணுவையும், அகோரமுகத்தால் உருத்திரரையும், தத்புருட முகத்தால் மகேசுரரையும், ஈசான முகத்தால் சதாசிவரையும் அதிட்டித்து விற்பர். (சதா.)

கன்மம்

இது, சத்தியமாகிய ஆன்மஞானமும், அசத்யமாகிய மாயாகாரியமும் கூடினவிடத்தில் உண்டான தாதலால் புண் ணியபாப ஸ்வரூபமாய்ப் பிரளயகாலத்தில் ஸமஸ்காரா வஸ்தையாய் மாயையிலேயிருந்து சிருஷ்டி காலத்தில் ஆன்மாக்களுக்குக் தனுவாதிகளை யுண்டாக்குதற்கு ஏதுவாய், புண்ய பாவங்கள் பொருந்துதற்கு ஏதுவாய் நல்வினை தீவினை செய்யுமிடத்து உடனாய் நிற்பதாய், அநாதியே மும்மலங்களின் ஒன்றாய், மனோவாக்குக் காய வியாபாரமாகிய காரிய கர்மத்திற்கு மூலகாரணமாய் காரணமலம் எனப்பட்டுச் செய்த கன்மம் நசிக்கத் தான் நசிக்காது சூக்ஷ்மித்திருத்தலால் அதிர்ஷ்டம் எனப்பட்டு அசுத்த மாயா போகங்களாகிய ஆதியாத்மிகம் ஆதி பௌதிகம், ஆதிதெய்விகமெனும் தாபத்ரய காரணமாய்ப் பிரவாகாநாதியாய், வருவதாம். இது, சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம், அதிசூக்ஷ்மம், சூக்ஷ்மம், தூலமெனப் பலதிறப்படும். இதன் விரிவைச் சிவாகமங்களுட் காண்க. (சித்தா.)

கன்முறைபழிச்சல்

நிழல்விடும் அழகிய மணிப்பூணினையும் வீரக்கழலையு முடைய போர் விருப்பத்தோனுடைய கல்லினை ஏத்தியது, (பு. வெ. பொதுவியற்.)

கன்யாகுப்சம்

வாயுவால் சபிக்கப்பெற்ற குசநாபன் புத்திரியைப் பிருகத்தன் அச்சாபத்தை நீக்கி, மணஞ் செய்து கொண்டிருந்த இடம்.

கன்யாகுமரி

பரசுராமர் மலையாளஷேத்திரம் உண்டு பண்ணும் பொழுது அவர் சிவ சத்தியைத் தாபித்துப் பூசித்தனர். அந்தச் சத்தி சிவமூர்த்தியைத் திருமணஞ் செய்து கொள்ளத் தவம் புரிந்தனள். அவர் சத்தியை மணந்து கொள்ளாதலால் என்றுங் கன்னியாகவே எழுந்தருளியிருக்குந் தவம். Cape, Comorin.

கன்யை

விதர்ப்பன் பாரி. இவளைச் சியா மகன் கவியாணஞ்செய்ய அழைத்து வந்து தன் பிள்ளைக்குக் கல்யாணஞ் செய்வித்தான்.

கன்றுப்பூர்

சுதாவல்லி யெனும் வித்யாதரப் பெண் கைலையில் சிவமூர்த்தியின் சந்நிதானத்தில் நடித்துச் சிவபிரானுக்குக் களிப்புண்டாக்கினள். இவள் உமையுருவங் கொண்டதால் உமை சினந்து மண்ணுலகில் பிறக்க எனச் சபித்தனள். அவ்வாறே இவள் கமலவல்லியெனப் பிறந்து சிவபூசை கடைப்பிடித்து வருகையில் இவள் கணவன் இவள் சிவபூசை செய்தலைப் பொறாது சிவலிங்கத்தைக் கிணற்றில் எறிந்தனன். அவன் அவ்வகை செய்தும் அவள் சிவபூசை கடைப்பிடித்து ஒரு கட்டுத்தறியைச் சிவலிங்க மெனப் பாவித்துப் பூசிக்க அதை அவன் மண்வெட்டியால் எறிந்தனன். அங்கு உதிரங்கண்டு அவன் இறக்க இவளுயிறந்தனள். அந்த ஆப்பு சிவலிங்கமாயிற்று. (வீரசிங் பு.)

கபந்தன்

1, இவன் தநு என்னும் காந்தருவன். தூலசிரசு இருடியிடஞ் சென்று கோரரூபமாய் அவரை ஆசியஞ்செய்தமையால் அவர் கோபித்து நீ இவ்வுருவுடன் அரக்கனாகியிருக்க எனச்சபித்தனர். பின் ஒருகாலத்து இந்திரன் இவனை வச்சிரத்தால் அடிக்க இவனது தலை வயிற்றி லமிழ்ந்தது. ஆதலால் வயிற்றில் தலையுடையானாயினன். இவன் ஒரு யோசனை நிகளமுள்ள கைகளை யுடையவனாய்த் தண்டகாரண்யத்தில் வசித்திருந்து அரண்யவாசிகளாகிய இராம லஷ்மணர்கள் சீதாபிராட்டியாரைத் தேடுமவசரத்தில் அவர்களைத் தன் கையகப்படுத்தி வாயிடங் கொண்டுபோகையில் அவர்களால் வெட்டுண்டு தன்னுரு வடைம் தவன். 2. பாணாசுரன் மந்திரியாகிய கும்பாண்டனுக்கு ஒரு பெயர். 3. சுமந்து மாணாக்கன் இருடி, 4. ஷண்முகசேநாவீரன்.

கபர்த்தி

ஒரு கணநாதர்.

கபர்த்தீசன்

காசியில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தி. இவரெழுந்தருளிய தலத்தில் புலியாலிறந்தமான் சாரூபமடைந்தது.

கபலை (கபலை)

பெருஞ்சாலில் யானைத் துதிக்கைபோல் கிணற்றினீரைக் கொண்டுவர அமைத்த நீர்ச்சால், இது இரண்டு தூண்களுக்கிடையில் கம்பியிடையமைத்த சக்கரத்தின் வழியாக இரண் டெருதுகளா லிழுக்கப்பட்டது.

கபாடபுரம்

பாண்டி நாட்டில் இடைச்சங்கமிருந்து கடல் கொள்ளப்பட்ட நகர்.

கபாலகேது

கங்காளகேதுவின் குமாரன், இவன் அரக்கன்.

கபாலகௌதமருஷி

இவர், ஜகந்நாதத்தில் இறந்த பிள்ளையைப் பெருமாள் முன் கொண்டுபோய்ப் பெருமாளைப் பிரார்த்திக்கப் பிள்ளை எழுந்தமைகண்டு சிவேதமாதவப் பெருமாள் பிரதிஷ்டை செய்தவர். (பிரம புராணம்.)

கபாலப்பள்ளி

இஃது உஞ்சைநகரத்தின் புறத்தே காளவனத்தி லுள்ளதோர் ஆச்சிரமம். இது தீர்த்தயாத்திரைக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு உரிய இடமாக இருந்தது. (பெரு~கதை.)

கபாலமூர்த்தி

பிரமன் சிவமூர்த்தியைப் போலத் தானும் ஐந்து சிரமுடையவனென்று செருக்கடைந்தகாலத்தில் அவன் நடுச்சிரத்தைக் கிள்ளிப் பவியேற்ற சிவவுருவம்.

கபாலமோசனம்

1. ஒரு தலம். மகோதரனது கபாலம் ஒரு இருடியின் காலிற்பட்டு விடாது துன்பஞ்செய்ய அவ்விருடி இவ்விடம் வந்தபோது விட்டதால் இப்பெயர் பெற்றதென்பர். 2. மகோதரரைக் காண்க.

கபாலம்

யாகத்தின் பொருட்டு விதிப்படி மண்ணால் ஓடு செய் தமைப்பது.

கபாலரோகம்

மண்டையில் உண்டாகும் ரோகம். இது முத்தோஷங் களினால் மண்டையில் சிறு கொப்புளங்களையும், புண்களையும் உண்டாக்குவது. இது 9 வகைப்படும்: 1. உபசீரிஷரோகம், 2. மூர்த்த பிடகரோகம், 3, சிரோற்புதரோகம், 4. சிரோவித்திரதிரோகம், 5. அரும்ஷிகைரோகம், 6. தாருணரோகம், 7. இந்திரலுத்தரோகம், 8. கலதிரோகம், 9. பலிதரோகலக்ஷணம், ஆகக் கபாலரோகம் 9.

கபாலாபரணன்

ஓர் அரக்கன். இவன் மந்திரி, சவபட்சன் இவ்விருவரும் இந்திரனுடன் யுத்தஞ்செய்து இறந்தனர். இதற்கு முன்பிறப்பில் திரிவக்ரன் என்னும் அரக்கன் தனக்குப் புத்திரப்பேறு இல்லாமையால் அவ்விடந் தவஞ் செய்துகொண்டிருந்த சுசிமுனிவரிடம் தன் தேவியைப் புணர அனுப்பினன். அப்படியே அவள் புணரத் துர்மேதன் பிறந்தனன். (திருச் செங்கோட்டு~புரா.)

கபாலி

1, சிவமூர்த்திக்கு ஒருபெயர். 2. ஒரு சிவகணத்தவன். 3. சண்முகசே நாவீரருள் ஒருவன்.

கபி

யக்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிட முதித்த குமரன்.

கபிஞ்சலன்

புண்டரிகனது தோழன்.

கபிஞ்சலாதர்

சண்டாளியிடம் பிறந்தவர்.

கபிலன்

1, ஒரு வேதியன். இவன் அயலான் பசுவைத் திருடினன். அவர்கள் அறிந்து தொடா ஒரு சிவவேதியன் வீட்டிற் கட்டிச் சொந்தக்காரன் கேட்க அப்பசுவிருக்கும் இடத்தைக் காட்டினன். அவர்கள் அன்றைய பாலைக் கறந்து சிவபுண்ணியஞ் செய்தமையால் அப்புண்ணிய மிவனை யடைய முத்திபெற்றவன். 2. சீலவிருத்தனைக் காண்க. 3. சுகர் புத்ரன்.

கபிலபுரம்

கலிங்க நாட்டிலுள்ள ஒரு நகரம். (சிலப்பதிகாரம்.)

கபிலபுரம்

கலிங்கராட்டிலுள்ள ஒரு நகரம். (சிலப்பதிகாரம்.)

கபிலர்

A. கர்த்தமப் பிரசாபதிக்குத் தேவபூதியிடம் உதித்த விஷ்ணுவின் அம்சம். இவர் தாய்க்குத் தத்துவ முபதேசித்தவர். இவர் தாயின் அனுமதி பெற்று வடதிசையணுகிச் சமுத்திரராசனால் கொடுக்கப் பட்ட இடத்தில் யோகம் பூண்டிருந்தனர். இவர் பாதாளத்துத் தவஞ் செய்திருக்கையில் இந்திரன் சகரரை வஞ்சித்துக் குதிரையை இவருக்குப் பின் கட்டினன். அசுவமேதக் குதிரையைத் தேடிச்சென்ற சகரர், குதிரையிவர்க்குப் பின்னிருக்கக் கண்டு கபிலரிடம் சந்தேகித்து அவரை வருத்தினர். அதனால் கபிலர் கோபித்து விழித்தனர். அந்தக் கோபாக்கினியால் சகரர் நீறாயினர். கணனைக் காண்க, இந்திரன் இவரிடம் வர அவனுக் குணவளித்துச் சிந்தாமணி பெற்றவர். சாங்கியயோகம் இருடிகளுக் குபதேசித்தவர். இவருடனிராவணன் சண்டைக்கு வந்து இவரது திருமேனியின் சுவாலையால் ஒளிமழுங்கிச் சோகித்து இலங்கைக்குச் சென்றனன். B. தநு குமரர்களில் ஒருவர். C. வள்ளுவருடன் பிறந்தவர். இவர் பிறந்தபோது தாய் விட்டுப் பிரிய வருந்துகையில் ”கண்ணுழையாக் காட்டிற் கருங்கற் றவளைக்கும், உண்ணும்படி யறிந்தூட்டுமவர் நண்ணும், நமக்கும் படியளப்ப்பார் நாரியோர்பாகர், தமக்குத் தொழிலென்ன தான்” என்றுக் கவிகூறினர். இக்கவி கேட்டுத் தாய் பிரிந்தபின் ஒரு வேதியன் வீட்டில் வளர்ந்து உபநயன காலத்தில் மற்ற வேதியர் இவன் வேதியன் அன்றென்று மறுக்க அவருடன் கன்மத்தாற் சாதியன்றிச் சன்மத்தால் இல்லையென்று வாதிட்டு நீங்கித் தம்பெயறால் சபிலாகவல் பாடித் தவஞ்செய்தவர். (திருவள்ளுவமாலை.) D. இவர், பொய்யடிமையில்லாத புலவர் கூட்டத்துள் ஒருவர். இவர் அருளிய நூல்கள் மூத்தநாயனார் இரட்டைமணிமாலை, சிவபெருமான் இரட்டை மணிமாலை, சிவ பெருமான்றிருவந்தாதி. (பதினொராந் திருமுறை.) E. ஓர் இருடி, இவர் விநாயக பூசை செய்து விநாயகர் பிரசன்னமாகத் தன்னிடமிருந்து கவர்ந்த மணியை மீண்டும் பெறும் பொருட்டுக் கவர்ந்த அவனைச் சங்கரிக்க வரம் பெற்றவர். (பார்க்கவ புராணம்.) F. இவர் பாண்டி நாட்டிலே திருவாத வூரில் அந்தணர்மரபிலே பிறந்து வளர்ந்து உரிய பருவத்திலே கல்வி கற்பிக்கப்பெற்றுத் தமிழில் ஒப்பாரும், மிக்காருமில்லாத பயிற்சி யுடையராய்க் கடைச்சங்க புலவரி லொருவராகிப் பரணர், இடைக்காடர், ஒளவையார் முதலாயினோரிடத்துப் பெருகிய நட்பை யுடையாராய் விளங்குவாராயினார். இவர், முன்பொருகால் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப்பாடி அவனை மகிழ்விக்கச் செய்தனர். இவருடைய கையை அவன் பற்றி நம்முடைய கைகள் மிக மெல்லியவாயிருக் கின்றனவெனலும் அவனை நோக்கி நீ போரில் பகைவரை வெல்ல அமைந்ததனால் நின் கைகள் வலியவாகும், நின்னை பாடுவர் உண்டு வருந்தும் செயலல்லது வேறு தொழில் செய்தறியாராதலால் அவர்களின் கைகளெல்லாம் யெல்லியவே யென்று பாடி யுவப்பித்தார். புறம் 14. பின்பு கடையெழுவள்ளலி லொருவனாகிய வேள்பாரியை உயிர்த்தோழமை கொண்டு அவனது அவைக்களத்துப் புலவராக வீற்றிருந்தருளினார். அக்காலத்துப் பாரியைப் பாடிய பாடல்கள் கருதுவோருள்ளத்தை மகிழ்விக்கும் தன்மையன புறழ் 105. அங்கனம் இருக்கும் நாளில் இடையே திருக்கோவலூரை யடைந்து முள்ளூரின்கணுள்ள மலையமான் திருமுடிக்காரியைச் சிறப்பித்துப் பலபடியாகப் புகழ்ந்து பாடி அவன் பரிசில் கொடுக்கப் பெற்று மீண்ட னர். புறம் 121. பின்பு ஒருக்கால் வையாவிக் கோப்பெரும் பேகனிடம் சென்று அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைப்பாடி மீண்டு பாரியிடத்திருந்தார். புறம் 143. இருக்கும் பொழுது பெரும்பாலும் பாரியினது பறம்புமலையில் பழகினவராதலாற் குறிஞ்சி திணைப்பாடுதலிற் சிறந்தவராயினார். ஆரிய அரசன் யாழ்பிரமதத்தனுக்குத் தமிழின் சிறப்பு அறிவுறுத்தற்குப் பத்துப்பாட்டு ளொன்றாகிய குறிஞ்சிப்பாட்டுப் பாடியருளினர். அதனை யறிந்த அவன் தமிழ் பயின்று சங்கத்தாறோடு பாடும் திறமை யடைந்தனன். அவன் பாடியது குறு 184ம் செய்யுள். இவர் இன்னாநாற்பது என்னும் நீதிநூல் பாடிச் சங்கத்தில் வெளியிட்டருளினர். இது பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்று. இவாடுத்திருந்த வேள்பாரி கொடையா வெய்திய புகழ் இத் தமிழ்நாடெங்கும் பரவலானே அதனைக் கேள்வியுற்ற மூவேந்தரும் பொறாமை கொண்டு படையெடுத்துவந்து பாரியின் பறம்புமலையை முற்றுகை செய்தார்கள். அதுகண்ட கபிலர் அவர்களிடம் சென்று பாரியின் புகழனைத்தையும் கூறினர். அவ்வள்ளலுக்கு 300 கிராமங்களிருந்தன; அவற்றையெல்லாம் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். இப்பொழுது அவனது பறம்புமலை யொன்றே யுள்ளது; நீங்களும் பாடிச் சென்றால் அதனைப் பெறலாமென்று அஞ்சாது கூறினர். புறம் 110. கைப்பற்றியவுடன் பாரியின் புதல்வியர் இருவரையும் இவர் அழைத்துக்கொண்டு பறம்புமலையை நோக்கிப் பலவாறு புலம்பினர். புறம் 113 முதல் 120 வரை. அதனை விடுத்தகன்று விச்சிக் கோன் என்னும் சிற்றரசனிடம் சென்று இப்பெண்களை மணஞ் செய்துகொள் என்றனர் புறம் 200. அவன் உடன்படாமை கண்டு, புலிகடிமாலென்னும் இருங்கோவேளிடம் போய் இம்மகளிரை மணம் புரிந்துகொள்ளென்று கேட்ப, புறம் 201. அவனும் மறுத்தானாக, அதுகண்டு அவனை வெறுத்து புறம் 202, மீண்டும் அவர்களைப் பார்ப்பாரின் பாதுகாவலில் வைத்துப் பின்னர் சேரலன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பாரிபோன்ற நற்குணமுடையவனென்ப தறிந்து அவனிடஞ் சென்று பதிற்றுப்பத்தில், ஏழாம்பத்துப்பாடி அவனைப் புகழ்ந்து கூறி அவன் அளவிறந்த பரிசில் கொடுக்கப்பெற்று மீண்டனர். (பதிற்று ஏழாம்பதிகம்.) மீண்டும் பாரியைப் பிரிந்ததனாலாய துன்பம் மிகுந்து தாமும் உயிர்விடத் துணிந்து அவனோடென்னை விதி கூட்டுவதாக வென்று புறம் 236 கூறி வடக்குமுகமாக இருந்து இந்திரியங்களை ஒடுக்கி ஆகாராதி வேண்டாது உயிர் துறந்தருளினார். இவர் குறிஞ்சித்திணையில் வல்லவராதலின் அதற்குரிய கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, முள்ளூர்க்கானம் இவற்றையெல்லாம் பாராட்டிக் கூறியுள்ளார். “வாய்மொழிக் கபிலன்” (அகம் 75) என்று நக்கீரராலும், நல்லிசைக் கபிலன் (பதிற்று 85) என்று, பெருங்குன்றனார் கிழாராலும், ‘வெறுத்தகேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறம் 53) என்று பொருந்தில் இளங்கீரனாராலும், ”புலனழுக்கற்ற வந்தணாளன்” (புறம் 126) “பொய்யாநாவிற் கபிலன்” (புறம் 174) என்று மாறோக்கத்து நப்பசலையாராலும் சிறப்பித்துப் பாடப்பட்டவர். மூவேந்தரால் முற்றிய பாரி கபிலரது சூழ்ச்சியால் கிள்ளைகளை விடுத்துக் கதிர் கொணர்ந்து உண்டிருந்தமையை நக்கீரர் சிறப்பித்துக் கூறாநிற்பர் அகம் 78, ஒளவையாரும் அச்செயலைப் பெரிதும் பாராட்டா நிற்பர் அகம் 303. இவர் மலைக்கு மாயோனை உவமை கூறினதன்றி “நாடாது நட்டலின்” என்ற குறளின் கருத்தை அமைத்துள்ளார் நற் 32. வேட்டுவன் பெறும் உணவுப்பொருளை விளக்குகிறார் நற் 56. சகுன சிறப்புக் கூறா நிற்பர் நற். 65. புலவி யுணர்த்தலின்பத்தைப் பெரிதும் பாராட்டிக் கூறுகின்றார் நற் 217. முருகவேளைக் கூறியுள்ளார் நற் 225. பாரியின் பறம்பு மலையைப் பாராட்டிக் கூறியிருக்கிறார் நற் 253. முள்ளூர் மன்னன் காரி குதிரைமேற் சென்று இரவில் நிரை கவர்ந்து வருவதைச் சிறப்பிக்கிறார் நற் 291. கொல்லிமலையில் ஓரியைக் கொன்று அவனது நகரிற் காரி சென்ற மையும் ஆங்குள்ளார் பெரும் பூசலிட்டமையுங் கூறுகிறார் நற் 320, குறமகள் பலவின் சுளையை மந்திக்கு விருந்தாகக் கொடுக்கு மலை நாடனென வருணிக்கிறார் நற் 353. யாவரும் வியக்கத்தக்க உள்ளுறையே கூறியுள்ளார் நற் 373. இவர் பாடிய கிள்ளைவிடு தூது மிக்க இனிமை புடையது நற் 376, தலைவியைச் சிறு கொம்பாகவும், அவள் கொண்ட காமத்தை அதனிடத்துத் தூங்கும் பெரும் பழமாகவும் கூறுவர். குறு. 18, இயற்கைப் புணர்ச்சிக்கட் குருகிருந்தது சாக்ஷியாகவெனத் தலைமகன் கூற்றாகக் கூறுவர் நற் 25. இவர் குறு 38ம் செய்யுளிற் கூறிய உள்ளுறை யைத் திருக்கோவையாரி லெடுத்தாண்ட மையறிக. (திருக்கோவை 276) ஒரியின் கொல்லிமலையிலுள்ள பாவையைச் சிறப்பித்துக் கூறுவர் குறு 100, இவர் மலையமான் திருமுடிக்காரியையும் குறு 118, 312, நள்ளியையும் 81ம் 238. சிறப்பித்துக் கூறாநிற்பர், தலைமகன் மலையை நோக்கியவுடன் பசலை தீர்ந்ததெனத்தலைவி கூறியதாக இவர் பாடியது வியக்கத்தக்கது. குறு 247. இவர் பாடியனவாக நற்றிணையில் பத்தொன்பது (13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376) பாடல்களும், குறுந்தொகையில் இருபத்தொன்பதும், ஐங்குறு நூற்றில் குறிஞ்சி பாட்டு நூறும், பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்துச் செய்யுள் பத்தும், அகத்தில் பதினாறும், புறத்தில் இருபத்தெட்டும் (நெட்டிலையிருப்பை) என்ற தனிச்செய்யு ளொன்றும், திருவள்ளுவமாலையிலொன்றுமாக 204 செய்யுட்களும், இன்னாநாற்பதில் நாற்பது செய்யுட்களும், குறிஞ்சிப்பாட்டுப் பத்துப் பாட்டில் ஒன்றுமாக 246 பாடல்கள் கிடைத்திருக்கின்றன, கபிலர் செய்த வேறு பிரபந்தங்கள் சில பதினொராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன. “நீதியார் மதூகநீழல் நெட்டிலை யிருப்பை யென்றோர், காதல்கூர் கவிதை பாடும் கபிலனார் பிறந்த மூதூர். என ஒரு செய்யுள் காணப்படுகிறது. G. ஒரு தமிழ்ப் புலவர். இவர் பிறந்த போது பாடியது. ”நெட்டிலை யிருப்பை வட்டவான்பூ, வாடாதாயிற், பீடுடைப்பிடியின் கோடேய்க்கும்மே, வாடிலோ, பைந்தலைப்பரதர் மனைதொறு முணங்கும், செந்தலை யிறவின் சீரேய்க்கும்மே. ” (தமிழ் நாவலர் சரிதை).

கபிலவிநாயகர்

கபிலரால் சிந்தாமணி பொருட்டுப் பூசிக்கப்பட்டவர். கணனைக் காண்க, இவர்க்குச் சுமுகரெனவும் பெயர். (பார்க்கவ புராணம்.)

கபிலா ஷஷ்டி

இது புரட்டாசிச கிருஷ்ணபகஷஷ்டியில் சூரியன், குஜன் ரோஹிணி உத்திரத்துடன் கூடிய நாள், இதில் சூரியன பூசிக்ப் படுவன், பின்னும் கபிலைப் பசுவை ஆபரணதிகளால் அலங்கரித்துப் பூசிப்பது.

கபிலாகரம்

காசியிலுள்ள ஒரு தலம்.

கபிலாசுவன்

குவலையாசுவனுக்குக் குமரன். இவனது குமரன் திருடாசுவன். இவனுக்குத் துந்துமாரனெனவும் பெயர்.

கபிலாச்சிரமம்

இது கங்கை கடலுடன் கூடுமிடத்தில் கருகிலுள்ள சகாத் தீவி லிருப்பதென்பர். பாதாளத்திலு முள்ளதென்பர்.

கபிலை

1, தெய்வப்பசு, ஒருமுறை அக்நினிக்குத் தன்னுடலில் இடங்கொடுத்து தேவர்களால் புண்ணியப்பேறு பெற்றது. இது திருப்பாற்கடலிற் பிறந்து நந்திமாதேவரை விரும்பியிருக்கும். இது ஐவகைப்படும் அவை நங்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை யெனப்படும். அவற்றுள் நந்தை கபில நிறம்,: சுபத்திரை கருமைநிறம், சுரபி அழகிய வெண்மைநிறம், சுசீலை புகைநிறம், சுமனை தாமிரநிறம். இவை தேவபூசை முதலியவற்றிற் குதவியாய்ப் பால், தயிர், நெய், கோமயம், கோசவும், கோரோசனை முதலியவற்றைத் தரும். இப்பசுக்களின் தேகத்தில் தேவர் விரும்பி வாழ்வார். இவற்றின் கொம்புகளினடியில் பிரமவிஷ்ணுக்களும், கொம்புகளின் நுனியில் தீர்த்தங்களனைத்தும் தங்கும். சிரத்திற் சிவமூர்த்தியும், நடுநெற்றியிற் சத்தியும், மூக்கின் நுனியில் கந்த மூர்த்தியும், மூக்குக்குள் இந்திரனும், கன்னங்களினடுவில் அச்சுவினி தேவர்களும், இரண்டு கண்களில் சூரியசந்திரரும், தந்தத்தில் வாயுவும், நாவில் வருணனும், நெஞ்சிற் சரசுவதியும், மணிகளில் இயமனும் இயக்கரும், உதட்டில் சந்தியாதேவ தைகளும், முசுப்பில் அருக்கத்தேவரும், மார்பில் சாத்தியரும், நான்கு கால்களில் வாயுவும், முழங்காலிலும், குளம்பு நுனியிலும் மருத்துவரும், குளம்பின் மேல் அரம்பையரும், முதுகில் உருத்திரரும், சந்துகளில் அட்டவசுக்களும், யோனியிற் சத்தமாதர்களும், அபானத்திற் றிருமகளும், அடிவாலில் நாகாதியரும், வாலின் ரோமத்தில் ஆதித்தரும், கோசலத்தில் ஆகாயகங்கையும், கோமயத்தில் யமுனையும், உரோமங்களில் மாதவரும், வயிற்றிற் பூமிதேவியும், தனத்தில் எல்லாச் சமுத்திரங்களும்; வயிறு, இதயம், முகம் இம்மூன்றினும் காருகபத்திய முதலிய முத்தீக்களும் பொருந்தும், இவற்றைப் புல்லுற்ற இடத்தில் மேய்த்துப் பூசிப்போர் நற்கதி யடைவர். இவற்றை முருக்கின் கொம்பினால் ஒற்றி அதற்காக நியமித்த கோட்டத்தில் அடைத்தல் வேண்டும். அடிக்கின் நரகம் அடைவர். சுமித்திர இருடிக்குப் புண்ணிய உலகந்தந்தவை. ஓரிருடியின் முதுகில் முளைத்த மூங்கிலைப் பேர்த்தகாலத்தில் அந்த இருடி நோய் பொறாது சீ மூதேவியெனக் கூறினர். ஆதலால் அன்று முதல் பசுக்களின் முகத்தில் மூதேவி வாசம் என்பர். இப்பசு ஒருமுறை புலியிட மகப்பட்டுத் தன் கன்றுக்குப் பாலூட்டிவரவேண்டிப் புலியிடஞ் சென்றது. புலி இதனைப் புசியாமல் விடக் கண்ட தேவர் இரண்டு மிருகங்களுக்கும் நற்கதி தந்தனர். (கோகுலசதகம்.) பிரமதேவர் இதனைப் பூமியிலுள்ள புண்ய தீர்த்தங்களி லிருந்தும், புண்ய க்ஷேத்ரங்களிலிருந்தும், எல்லா உலகங்களிலுமுள்ள பரிசுத்தமானவைகளும் அழகுள்ளவைகளுமான பதார்த்தங்களில் இருந்தும் தேஜஸையெடுத்து ஏனங்களைத் தாண்டுவிப்பதாகவே படைத்தார். இவை 10 வகை, 1. சுவர்ணபிங்களை, 2. கௌரபிங்களை, 3. ரக்தபிங்காக்ஷி, 4. களபிங்களை, 5. பப்புருவர்ணாயை, 6.ச்வேதபிங்களை, 7. ரங்கபிங்காக்ஷி, 8. குரபிங்களை, 9. பாடலை, 10. புச்சபிங்களை. இவை முறையே 1. பொன்னிறமுள்ளது, 2. வெளுப்பும் மஞ்சளுங்கலந்த நிறமுள் ளது, 3. சிவப்பும் பொன்னிறமுள்ள கண்களுள்ளது, 4. பொன்னிறமுள்ள கழுத்துள்ளது, 5. கீரியினம்போன்ற நிறமுள்ளது, 6. வெண்மையும் பொன்னிறமும் கலந்தது, 7. காந்தியுள்ளது பொன்னிறமான கண்களுள்ளது, 8. பொன்னிறமான குளம்புள்ளது, 9. பாதிரிப்பூ நிறமுள்ளது, 10. பொன்னிறமான வால் உள்ளது. (பார~அச்) 2. ஒரு நதி நர்மதைக்குத் தெற்கிலுள்ளது. இது விழும் தலமுதலியவும் சவர்க்கமடையும். 3. புண்டரீகமென்னுந் திக்கானையின் பெண். 4. மகத நாட்டிலுள்ள ஓர் நகரம். கபில முனிவர் தவஞ்செய்த இடம். கபிலவாஸ்துவும் இதுவே. இது புத்தர் அவதாரஸ்தலம். (மணிமேகலை.) 5. கலிங்க நாட்டரசன் பட்டணம். குமரன் எனும் அரசனாண்டது. (மணிமேகலை)

கபிலைகண்ணிய புண்ணியநிலை

தலைமையாற் சிறந்த நான்கு வேதத்தினையுமுடைய அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய பசுவினது முறைமையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்)

கபீர்தாசர்

கங்கையில் கிளிஞ்சிலொன்று மிதந்துவர அதனை ஒரு துருக்கர் எடுத்துப் பிளந்தனர். அதில் குழந்தையிருக்கக் கண்டு அதனை மனைவியிடங் கொடுக்க அவளுக்குப் பால் சுரக்கக்கண்டு அவள் அப் பிள்ளையை வளர்த்துக் கபீர் எனப் பெயரிட்டு மணமுஞ் செய்வித்தனள். கபீர்தாசர் இராமநாமம் மறவாமல் உள்ளத் துறவுடையராய்த் தம் நெய்தற்றொழில் செய்யாதிருத்தலைத் தாயுணர்ந்து உறுத்த, தாசர் நெய்தற்றொழில் மேற்கொண்டு நெய்து நெய்ததைத் தாயிடங்கொடுக்க அவள் கடைவீதியில் விற்றுவருகவெனச், சென்றவர் பெருமாளைத் தியானித்துத் தம்மை மறந்திருக்க வாங்குவோர் இது அதிக விலைபெறு மென அகலப் பொழுது போயினதுணர்ந்து இதை வாங்குவார் காணாது அன்னை கோபிப்பாளென வருந்தி ஒரு பாழ்வீட்டையடையப் பெருமாள் ஒரு விருத்த வேதியரைப்போல் வந்து நான் குளிரால் வருந்துகிறேன் எனக்கு ஒரு போர்வை தருக என இரக்கத், தாம் விற்க வந்ததில் ஒருபகுதி கிழித்தளித்திருக்கையில் மீண்டும் பெருமாள் ஒரு பக்கிரி வேஷங் கொண்டடைந்து போர்வையைக் கேட்க அதனையும் அளித்தனர். பின் பெருமாள் கபீர் தாயினிடஞ் சென்று நீ விற்றுவரச் சொன்ன ஆடையை விற்க வில்லை அவன் தானஞ்செய்து விட்டனனென்னத் தாய் கோபித்து அவன் வரின் தண்டிப்பே னென்னப் பெருமாள் அவனுன்னிடம் அடையான். என்னைப் பின்பற்றின் அவனிருக்குமிடம் தெரிவிப்பே னெனத் தாய் அவ்வகைப் பின்வரத் தாசர் இருந்த வீட்டைக் காட்டிப் பெருமாள் வெளியில் இருந்தனர். தாய் தாசரையடைந்து ஏடா நான் விற்கக் கூறிய கூறையெங்கெனக் கபீர் சும்மாவிருக்கக் கண்டு அன்னை கோபிக்க வெளியிலிருந்த பெருமாள் அவ்வகைக் கேட்கின் கூரான் புடைக்கவேண்டு மெனத் தன் கையிலிருந்த கோலை நீட்ட அன்னை அதனைக் கொண்டடிக்கத் தாசர்மீதடித்த அடி பெருமாளுக்கு முதுகிடைபட்டது கண்டு பெருமாள் பட்ட அடிகளைக் காட்டி நிறுத்தக் கேட்க விடாதது கண்டு ஜானகியுட னெதிரில் நிற்கத் தாசர் திருவடியைப் பற்றி விடாதிருக்கத் தாயும் உன்னால் பெருமாளைக் கண்டேனென்று பிள்ளையை யணைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனள். கபீர் இவ்வகை இல்லறம் நடத்துகையில் மனைவியிடம் ஒரு புத்திரர் பிறக்க அவருக்குக் கமால்தாசர் எனப் பெயரிட்டு வளர்த்து வருகையில் அவர் வயதடைந்து துவாரகையைத் தரிசிக்க வேண்டுமெனத் தந்தையைக் கேட்கத் தந்தை அவ்வாறு விடை தரச் சென்று பெருமாளைத் தரிசித்து நான்கு மாதங்களிருந்து நீங்கிச் சித்திர கூடமடைய அவ்விடம் விட்டுனுதாசர் எதிரடைந்து தமது வீட்டிற்கழைத்துச் சென்று அமுது செய்விக்கக் கமால் தாசர் அன்றிரவு அவ்விடம் பஜனை செய்ய ஆனந்தங்கொண்டு ஒரு மாணிக்கந்தரக் கமால் தாசர் இது நாம் வேண்டோம் நமக்கு மணியுங் கல்லு மொன்றேயென மறுக்கக் கேட்டு அவரறியாவகை வஸ்திரத்திலதை முடித்தனர். பின் கமால் தம் பதியடையத் தந்தை முன்தானையில் மணியிருக்கக்கண்டு நீ ஸ்ரீஅரிநாமசங் கீர்த்தனையை விற்றுப் பிழைப்பவனென விசனமுற்றழக் கமால் கண்டு அஞ்சி விஷ்ணுதாசரிடம் விரைந்து சென்று மாணிக்கத்தைத் தந்து தமது தந்தைபாலடைந்து தாம் யாத்திரை செய்த செய்திகூறி மகிழ்ந்தனர். பின்னொருநாள் அஸ்தமிக்கும் வேளையில் மூவர், இவர்கள் வீட்டுக்கு அதிதிகளாக வரக் கபீர் இவர்க களுக்கு அன்னமிடவேண்டி மனைவிக்குக் கூற மனைவி யொன்று மிலாமையாலும் கொடுப்பாரிலாமையாலும் திருடிக்கொண்டுவரக் கூறக் கபீரும் கமாலும் ஒருகடைக்குள் கன்னம் வைக்கக் கமால் உள்புகுந்து வேண்டிய தானியத்தைக் களவாடித் தொளைவழி புகுந்து வருகையில் சொந்தக்காரன் காலைப் பிடித்துக்கொள்ளக் கமால் தானியத்தைத் தந்தையிடங் கொடுத்து என் காலை உடையவன் பிடித்துக்கொண் டமையால் என் தலையைக் கொண்டுபோக வெனக் கபீர் அவ்வகைத் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு வீடுபோய்ச் சேர்ந்து நடந்ததை மனைவிக்குக் கூறினர். மனைவி குமரற்கு விசனமடைந்து அதிதிகளுக்கு அன்னமருத்தினள். விடிந்தபின் அதிதிகள் மூவரும் ஸ்நானத்திற்குச் சென்றனர். செட்டி விடிந்தபின் அரசனுக்கறிவிக்க அரசன் சவத்தைக் கழுவேற்றக் கட்டளையிட்டனன். அரசன் கட்டளைப்படி சவத்தைக் சுழுவேற்றுகையில் கபீர் மனைவியுடனும், நீராடிச் சென்றுண்டு வந்த மூவருடனும் கழுவேற்றுதலைக் காணச் சென்றனர். சவமிம்மூன்று அதிதிகளைக் கண்டு அஞ்சலி செய்ய அதிதிகள் மூவரும் சவம் எங் களைக்கண்டு வணங்குவ தென்னெனக் கபீரைக்கேட்கக் கபீர் இறந்தவன் பாகவதனா யிருக்கக் கூடும் அத்தகையரைக் கண்டஞ் சலிக்கின்றானென இவனார் என்னக் கபீர் நடந்தவைகூற, அதிதிகள் தாயை நோக்கித் தலையைக் கொண்டுவரக் கட்டளையிட அவளவ்வகை கொண்டுவர அவர்களத் தலையை முண்டத்தில் பொருத்தித் தலை மேல் தண்டத்தை வைத்து உயிர் பெறுகவெனக் கமால் உயிர்பெற்று அதிதிகளை வணங்கித் தாயுடன் வீட்டையடைந்தனன். மற்றொருநாள் கடைத்தெருவின் வழியாகப் பஜனை செய்து கொண்டு வருகையில் மாவரைத்துக் கொண்டிருந்த ஒருத்தி அழுது கொண்டிருக்கப் பாகவதர் கண்டு ஏனழுகின் றனையென அவள் இந்த யந்திரத்தில் அரைபடும் அரிசியைப்போல் பிறவியெனுந் திகிரியாலுயிர் அரைபடுகின்றதென அழுகிறேனெனக் கேட்டு மகிழ்ந்து வீடடைந்து ஆசாரியரால் ஞானமடைய வேண்டுமென்னு மெண்ணமடைந்தவராய் இராமாநந்தர் என்பவரையடைந்து தமக்கு உபதேசிக்க வேண்டத் துருக்கர் சாதியராகிய உமக்கு நாம் உபதேசிக் கோமென மறுக்கத் தாசர் மீண்டு திரிகரண சுத்தமடைந்து உம்மிட மடைந்த எனக்கு உபதேசிக்க வேண்டுமென வேண்ட மீண்டும் மறுத்தமை யெண்ணி எவ்வகையினும் இவர் திருவடி முடிமேல் படப் பெறுவேனென்று இராமாநந்தர் கங்கையாடச் செல்லும் வழியில் குழியொன்று தோண்டி அக்குழியில் உடல் அனைத்தும் புதையத் தலையை மேல்வைத் துக் கொண்டிருந்தனர். இராமாநந்தர் கங்கையாட விடியற் காலையிற் செல்லும் போது இவரது அடி தாசரது முடியிற் பட்டது. உடனே ராமாநந்தர் எவர்தலையோ என்காலிற் பட்டதென வருந்தி இராமா என்றனர். உடனே தாசர் குருவே உமது திருவடிகள் என் தலையிற்படப் பெற்றேன். இராமநாமமும் பெற்றேனெனக் களிப்படைந்து துதித்தனர். பின் தாசர் இராமாநந்தர் சீடனெனக் கீர்த்தனைகள் பாடிவருகையில் இராமாநந்தர் இவன் குணத்தையறிவோமெனத் தமது பாதுகையா விரத்தங்காணத் தாசரது தலையிலடித்து நாமுனக் குபதேசிக்காம விருக் தும் ஏன் நம் சீடனெனப் பேசுகின்றாயெனத் தாசர் தேவர் தாள் என் முடியிற் பட்ட துண்டு, தேவர் இராமநாமம் கூறிய துண்டு, எல்லாருங்காண இப்போது மிதியடியா லென்றலையில் அறைந்ததுண் டென வணங்க இராமாநந்தர் இவரது அன்பிற்குக் களித்துச் சிரத்தில் கரம் வைத்து அவரது காதில் கிருஷ்ணநாமத்தை உபதேசித்து மனையடைந்தனர். தாசரும் தமதிருக்கை சேர்ந்தனர். இவ்வகை இருக்கையில் இவரிடம் பொறாமை கொண்ட சிலர் குமரனைக் கொன்றான் பாகவதவேடம் பூண்டு நடிக்கின்றான் இவனது வன்மையறிவோமெனப் பல பாகவதர்க்கும் சமாராதனையெனக் கடிதம் எழுதி நாள் குறிப்பிட்டுக் கபீர்தாசர் எழு தியதாகத் தெரிவித்தனர். பாகவதர் அனைவரும் ஒருங்கு ஒருநாளில் வரத் தாசர் பேராநந்தங் கொண்டவராய் வணங்கியிருக்கையில் பெருமாள், வந்தவர்க்கு விருந்தளிக்காவிடின் தீமையாமென எண்ணி ஒவ்வொரு பாகவதரிடமும் ஒவ்வொரு கபீராக இருந்து விருந்து முதலிய உபசாரங்க ளியற்றி வருகையில் தீயவர்கள் கண்டு அஞ்சி உமது செய்தி அறியாது செய்த குற்றத்தைப் பொறுக்கவென வேண்டிச் சென்றனர். பின் தாசர் சேது யாத்திரை செய்யவெண்ணி வந்து அவ்விடமடைந்த இரண்டு வேதியர்க்கு உபதேசிக்க அவ்வூர் வேதியர் பலரும் அவ்வேதியரைத் துருக்கனிடம் உபதேசம் பெற்றவனென்று அவன் பெண்ணுக்குப் புருட னும் மகனுக்கு மனைவியும் தரக்கூடாதெனக் கட்டுபாடுசெய்ய இருவரும் காசியடைந்து கபீரை வணங்கி நடந்தது கூறக் கபீர் பெண்ணைக் குமரனுக்கு மணக்கவென அவ்வகைசெய்ய உடன்பட்டுச் செல்லுகையில் ஊரார் ஒன்று சேர்ந்து இதேது அனியாயமென்று மகனுக்கு ஒரு பெண் ணையும் பெண்ணுக்கொரு மணமகனையுமளித்து உறவாடினர். சில நாள் தரித்துக் காசிக்குப் பதினாயிரம் வைணவர்கள் வந்து அன்ன மிடுவாருளரோ வென்று கேட்கச் சிலர் கபீர் தாசர் மனையகத்தைக் காட்டத் தாசரிப்பதினாயிரவரை வணங்க அவர்கள் அன்னமுண்டோ வெனத்தாசர் வேதியரை இருக்கச்செய்து துளசிதாசனென்னும் வணிகனிடஞ் சென்று பதினாயிரம்பாக இதருக்கு அன்னமளிக்கின் உனக்கு நலனுண்டாகுமென அவ்வணிகன் உன்மனைவியை இன்றிரவு என்னிடம் வரச்செய்யின் அவ்வகை புரிவேனெனத் தாசர் உடன்பட வணிகன் பதினாயிரம் பெயருக்குரிய சாமான்களை அளித்தனன், பாகவத ருண்டு சென்றனர். தாசர் நடந்தவைகளை மனைவிக்குக்கூறி வணிகனிடம் மனைவியாரை அனுப்ப வணிகன் மகிழ்ந்திருக்கையில் பெருமாள் ஊரதிகாரிபோல் உருக்கொண்டு வணிகனையடைந்து மருட்டி என் தங்கையாகிய கற்புடையாளை எண்ணினையென மருட்ட அவன் நடுங் கித் தாசர் மனைவியாரின் காலில் பணிய ஊரதிகாரியாகிய பெருமாள், துணையாக வந்து அம்மையாரை வீட்டில் விட்டு மறைந்தனர். தாசர் மனைவியாரைக் கண்டு என் சொற்கடந்து ஏன் வந்தனையெனப் பத்தினியார் நடந்தவை கூறத் தாசர் ஊரதிகாரியிடஞ் சென்று கேட்க அதிகாரி நான் ஒன்று மறியேனெனத் தாசரிது இராமகாரியமென வணிகனிடஞ் சென்று பெருமாளை ஊரதிகாரியெனக் கண்டு வருந்தினாய் என, உமதருளால் இராமனைத் தரிசித்தேனென அரிநாமங்கூறத் தாசரும் மனை சென்று மகிழ்ந்திருந்தனர்.

கபீர்மதம்

இவன் காசிபட்டணத்தில் கிறிஸ்து பிறந்த (14) வது சகத்தில் ஒரு பார்ப்பன விதவைக்குப் பிறந்தவன். தாய் ஊர் நிந்தனைக்குப் பயந்து இவனைக் காட்டில் விட்டுவிட்டனள், வழியிற் செல்லும் நூர்மகம்மது எனுந் துருக்கன் ஒருவன் இக்குழந்தையை எடுத்துக் கபீர் என்று பெயரிட்டு வளர்த்தனன். இவன் மதாபிலாஷை யுள்ளவனாய் ராமாநந்தரிடஞ் சென்று தனக்கு உபதேசிக்க வேண்ட அவர் நீ துருக்கன் என்று மறுக்கக் கண்டு விசனமுற்று ஒரு நாள் கங்கா தீரத்தில் உறங்குகையில் இராமாநந்தர் உஷக்காலத்தில் ஸ்தானத்திற்கு வருவோர் அறியாது மிதித்து ராம, ராம, மனுஷனை மிதித்தேன் என வருந்தக் கபீர் எழுந்து வணங்கக்கண்டு அவனுக்குத் தன் மதம் போதித்தனர். இவன் மதத்தில் ஆசாரமில்லை. ஆனந்தமதத்தில் ஆசாரமுண்டு, மதக்கொள்கை ஒவ்வொருவனும் மற்றவனைத் தன்னையொப்பப் பாவிக்கவேண்டும், பிராணிகளிடம் அன்புபாராட்ட வேண்டும், கடவுளைப் பக்தி விச்வாசத்துடன் தியானிக்கவேண்டும். இவன் மாகரு கிராமத்தில் பரமபதம் அடைய, துருக்கரும் இந்துக்களும் தேகத்தைத் தமதென்று வாதிட அசரீரியாய்க் கபீரை மறைத்த வஸ்திரத்தை நீக்கிக் காண்க என்று ஒரு ஒலி உண்டாகக் கேட்டு அவ்வாறு பார் தேகமில்லாது புஷ்பராசி கண்டு இருவரும் அப்புஷ்பங்களைப் பங்குசெய்து துருக்கர் கோரியும் இந்துக்கள் மடமும் கட்டுவித்தனர். (சகலார்த்த சங்கிரகம்.)

கபோதன்

கருடபுத்ரன். (பாரதம்.)

கபோதரோமன்

சிபியின் புத்ரன். (பார.)

கபோதலோமன்

விலோமதநயனுக்குக் குமரன்.

கபோதவன்

கத்துரு குமரன், நாகன்.

கப்பலக்ஷணம்

1. அழிகர்ப்பம் உருவமில்லாத இளங்கருவாய் இருக்கையில் விலா, ‘அடிவயிறு, மேல்வயிறு, பிட்டம், எனுமிடங்களில் வேதனை, மார்புவலி, முகவெளுப்பு, நாபியின் கீழ் உபத்திரவம் உன்டாயின், கருப்பம் கரைந்து விழும். 2. உபவிஷ்டகர்ப்பம் பெண்களுக்குக் கருத்தரித்து விருத்தி யடைகையில் மாதம் மாதம் சோணிதம் வெளிப்படும். ஆயினும் சிசுவுக்குக் கெடுதியிராது சிசு சஷ்கித்திருக்கும். வயிறு பருக்காது. இதனைத் தங்குபிண்டம், சுப்திபிண்டம் என்பர். 3. லீனாக்கியகர்ப்பம் இது உப விஷ்ட கர்ப்பம் போலிருந்தாலும் அசைவு இல்லாமல் 3 வருஷத்திற்குமேல் பிரயாசத்துடன் சிசுபிறக்கும். 4. கர்ப்பம்மரித்தல் ஸ்திரீகளுக்கு மலமூத்ர பந்தம், தேகக்கறுப்பு, அதிதுர்க் கந்தம், தலை முகம் வீக்கம் நெட்டுயிர்ப்புக் காணில் வயிற்றில் மரித்ததென அறிதல் வேண்டும்.

கப்பி

இது மரத்தாலும் இரும்பினாலும் இரண்டு பக்கங்களைத் தனக்கு ஆதாரமாகக் கொண்ட நடுவில், ஆணிபொருந்திய சக்கரம், பூமியிலுள்ள கனப்பொருளை உயரக் கொண்டுசெல்ல உதவுவது.

கப்பிஞ்சி நாடு

இது பாண்டி வளநாட்டிலுள்ள சிறு நாடுகளுள் ஒன்று. பண்டைக்காலத்தில் ஒரு பாண்டியன் சோழனொருவனைக் கொன்று களவேள்வி செய்தற்கு இடமாவிருந்ததுபற்றி இது இப்பெயர் பெற்றது, காட்டு நாடெனவும் கூறப்படும். இந்நாடு, மூவரையன் வண்ணத்திற் கூறப்பட்டுள்ளது; மதுரைக்கு கிழக்கேயுள்ள வீரசோழனென்னுமூர் இதன் கண்ணதென்று தெரிகின்றது. (திருவிளை.)

கமகன்

வல்ல நூலறிவினாலும் மதியினது பெருமையாலும், கல்லாத நூல்களையும், கற்றோர் வியப்பத்தந்துரைக்கும் புலவன். (வீரசோ.)

கமடாசுரன்

விநாயகரது பிள்ளைப்பருவத்தில் ஆமையுருக்கொண்டு கொல்லும்படி வந்து அவராலிறந்தவன்.

கமனப்புயங்கன்

சுவேதவதியின் கணவன்.

கமனியவன்

போகர் இரசமெடுக்கச் சென்றகாலத்துத் தடுத்த சிவகிங்கான். (போகர்.)

கமலக்கள்னி

இடும்பிக்கு ஒரு பெயர். வீமன் தேவிகளில் ஒருத்தி,

கமலசப்தமி விரதம்

சைத்திர சுத்த சப்தமி முதல் (13) மாதம் சூரியன் பூசிக்கப்படுவன்,

கமலநயநபட்டர்

தெய்வத்துக்கரசு நம்பிகளின் மருமகன். பெரியபிராட்டிக்குப் புருஷன், இவரிடம் கோவிந்தபட்டர் உதித்தார்.

கமலபாலிகை

இடிம்பை.

கமலமாலதை

கமலமாலினி. ஒரு வித்தியாதர அரம்பை.

கமலமுனி

இவர் போகர் மாணாக்கருள் ஒருவராம். இவர் பிறப்பாற் கம்மாளர் என்பர். இவர் சித்தருள் ஒருவர். இவர் செய்த நூல் (கமலமுனி 300) எனும் வைத்திய நூல், இரேகைசாத்திரம்.

கமலலோசனை

இவள் கீகடதேசத்துச் சித்திரரதன் குமரி, முற்பிறப்பில் ஸ்ரீசைல அர்ச்சகர் குமரியாய் அவர்க்குச் சிவார்ச்னை நிமித்தம் உதவி புரிந்ததால் மறுபிறப்பில் சிவத்யானத்துடன் பிறந்தவள். சித்திரரதனைக் காண்க. (சிவாஹ.)

கமலவதி

கோச்செங்கட் சோழனுக்குத் தாய், இவள் தான் பிரசவ வேதனைப் படுகையில் நிமித்திகர் இக்குமரன் இன்னும் ஒரு நாழிகை பொறுத்துப் பிறக்கின் உலக முழுதும் செங்கோல் செலுத்துவன் எனக் கூறக்கேட்டு அந்நாழிகை வருமளவும் தன் கால்களைத் தூக்கி மேலே கட்டி வைக்கச்செய்து அந்த நாழிகைவரப் பிள்ளையைப் பெற்று என் கோச்செங் கண்ணனோ என்று குழந்தையையழைத்து உயிர் நீங்கினவள்.

கமலாகார்

இவர் பண்டரிபுரத்திருந்த அரிதாசர். இவர் தம்பத்தினியுடன் பாகவதரைப் பணிந்து அரிபத மறவாதிருக்கும் நாட்களில் ஒருநாள் நாமதேவர், ஞானதேவர், கபீர்தாசர் முதலியோர் அரிபஜனை செய்யக்கேட்டுத் தம் புத்திரருடன் சென்று அவர்களை விருந்திற்கழைக்க அவர்கள் உடன்பட்டனர். தாசர் வீடடைந்து தம் மனைவியாரிடம் நாமதாசர் முதலியோர் விருந்தாகுஞ் செய்திகூற மனைவியார் பல பதார்த்தங்களுடன் அன்னஞ்சமைத்து வருகையில் தீப்பற்றாமையால் குமரனைப் புறக்கடையி லிருக்கும் எரிமுட்டைகளைக் கொண்டுவரக் கூறினர். குமரன் அங்ஙனம் எரிமுட்டைகளை சேர்க்கையில் ஒரு பாம்பு தீண்டி இறந்தனன். இதனை யறிந்த தாய் தந்தையரிருவரும் இதனைச் சாதுக்கள் அறியின் உணவு கொள்ளாரென்று தொட்டிலிற் கிடத்தி விருந்தாக வந்த சாதுக்களை எதிர்கொண்பெசரித்து அன்னம் பரிமாறி உண்ணக் கூறினர். நாமதேவர் உண்ணத் தொடங்கிப் பெருமாளைத் தியானிக்கப் பெருமாள் தரிசனங் கொடாதிருக்க நோக்கி ஈண்டு எதோ அதிசயம் உளதெனக்கண்டு உமது குமரன் எம்மோடுடனுண்டாலன்றி உணவு கொள்ளோ மென்றனர். தாய் தந்தையர் அவன் தொட்டிற்கணுறங்குவான் உதவான் எனவுங் கேளாது, எழுப்ப என்றனர். பின் தந்தையார் உறக்கம் தெளிந்திலன் என, நாமதேவர் கையிற்றாளங் கொண்டு கண்ணனைக் குழந்தையை எழுப்ப வேண்டக் கண்ணன் தரிசனந்தந்து பிள்ளையை எழுப்பினர். பிள்ளை எழுந்திருக்கத் தாய் தந்தையர் களித்து நடந்தவை கூறினர். பாகவதர்கள் களித்து அமுதுண்டு சென்றனர்.

கமலாக்ஷன்

தாரகாசுரனுக்குப் புதல்வன். திரிபுராதியர் மூவரில் ஒருவன்.

கமலாசுரன்

இவன் தேவரை வருத்த மல்லாலர் எனுந் திருநாமத்துடன் எழுந்தருளிய விநாயகமூர்த்தி யாகத்தில் மயிலுண்டாக்கி அதனை வாகனமாகக் கொண்டு இவனைச் சங்கரித்தனர்.

கமலினி

திருக்கைலையில் பார்வதியாருக்குப் பூத்தொடுத்துச் சாத்தும் தோழியருள் ஒருத்தி. சுந்தரமூர்த்தி சுவாமிகளிடத்து ஆசைகொண்டு திருவாரூரில் பரவைநாய்ச்சியாராக உருத்திரகணிகையர் குலத்திலவ தரித்தவள்.

கமலை

1. விமலையின் றாய். 2. குந்து தீர்த்தங்கரின் றாய். 3. இலக்ஷமி தேவிக்கு ஒரு பெயர்.

கமலைபீடம்

சத்தி பீடங்களிலொன்று.

கமுசை

உக்கிரசேநன் குமரி.

கமை

1, புலகன் தேவி, 2, தக்ஷன் பெண். கிருதுவின் தேவி, 3. யமன் தெவி. இவளில்லாவிடத்துச் சனங்கள் உன்மத்தராயிருப்பர்.

கம்சன்

யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உக்கிரசேனனுக்குக் குமரன். இவன் முற்பிறப்பில் காலநேமி யென்னும் அசுரன். கிருஷ்ணனுக்கு நல்லம்மான். இவன் தன் தங்கையாகிய தேவகியை வசுதேவர்க்குப் பாணிக்கிரகணஞ் செய்வித்து ஒரு நாள் விநோதமாய் அவர்களைத் தேரின் மேல் ஏற்றிக்கொண்டு தான் அந்த இரதத்தை ஓட்டிக்கொண்டு சென்றனன். தெய்வகதியாய் அசரீரி உன் தங்கை வயிற்றிற் பிறக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும் என்றது. உடனே தேரை நிறுத்தித் தன் தங்கையைக் கொலை செய்யப் போகையில் வசுதேவர் தடுக்க நின்று அத்தம்பதிகளிருவரையும் விலங்கிட்டுச் சென்றான். பின் அவர்க்குப் பிறந்த சிசுக்கள் அனைத்தையும் வதைத்து எட்டாவது கருவை எதிர்பார்க்கையில் கண்ணன் தான் நந்தகோபன் மனைவியிடம் மாறி அவ்விடமிருந்த மாயாதேவியைத் தேவகியிட மிடுவித்தனன், கம்சன் அம் மாயா தேவியை வதைக்க ஆகாயத்தில் எறிகையில் அவள் என்னைக் கொல்ல உன்னாலாமோ உன்னை வதைப்பவன் நந்தகோபன் வீட்டில் வளருகிறான் எனக் கேட்டுத் தன் நண்பராகிய பிரலம்பன், மகாசுரன், சாணூரன், திருணவர்த்தன், அகாசுரன், முஷ்டிகன், அரிஷ்டன், துவிதன், பூதனை, கேசி, தேனுகாசுரன், பாணாசுரன், நாகாசுரன் முதலியவரை யேவவும் முடியாது கடைசியில் கண்ணனால் மஞ்சத்தினின்று இழுத்துத் தள்ளப்பட்டுக் கொலையுண்டவன்.

கம்சவதி

உக்கிரசேனனுக் கிரண்டாம் பெண். தேவச்சிரவசுவின்றேவி.

கம்சை

உச்கிரசேனன் பெரிய பெண். தேவபாகன் பாரி.

கம்பனாசுவன்

ஒரு நாகன்.

கம்பராமாயணம்

இது கம்பநாடராலியற்றப்பட்ட இராமகதை, இவர் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம் முதலிய ஆறு காண்டங்களே யியற்றினர். இதற்கு இராமாவ தாரமென்றும் ஒரு பெயர்.

கம்பர்

இவர் சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழன் அரசாண்டிருக் கையில் திருவழுந்தூரில் இருந்த ஒரு ஒச்சன் குமரர் என்பர். இவர் இங்கு வளர்ந்து காளிவரப் பிரசாதியாய்க் கம்பநாடனென்று பலராலும் அழைக்கப்பட்டுத் தீவிர புத்திமானா யிருந்தனர். கம்பர் தெய்வ வரத்தினாற் கவிகூறியநாளிற் பாடிய வெண்பா மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று, வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே நாட்டிலடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சரராமனூர். இவரது புத்திவன்மையை அக்காலத்திலிருந்த திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப முதலியார் என்னும் பிரபு கேள்வியுற்று இவரையும் இவர் தாயையும் வருவித்து ஆதரித்துக் கல்வி கற்பித்து வருகையில் கம்பர் எவரும் மெச்சும் கவிச்சக்ரவர்த்தியாயினர். இவர் திருவழந்தூரினர் என்பதை “கம்பன் பிறந்தவூர் காவிரி தங்குமூர் கும்பமுனி சாபங் குலைந்தவூர் செம்பதுமத், தாதகத்து நான்முகனுந் தாதையுந் தேடிக் காணாவோ தகத்தார் வாழுமழுந்தூர்” (தமிழ்நாவலர் சரிதை.) “நாரணன் விளையாட்டெல்லா நாரத முனிவன் சொல்ல, வாரணக்கவிதை செய்தானறிந்து வான்மீகி யென்பான், சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன், காரணி கொடையான் கம்பன் றமிழினாற் கவிதை செய்தான்” என்ப. பின் இவரது கவிவன்மை யறிந்தசோழன் முதலியாரிடமிருந்து வருவித்து ஆதரித்து வருகையில் தாதன் எனும் வணிகனாகிய ஒரு கவிக்கு வரிசை முதலிய தரக் கம்பர் அவனுக்குச் செய்யும் வரிசை எங்களை அவமதித்ததாகுமென்று சோழனிடம் கூறத் தாதன் இவர் பாடிய மும்மணிக்கோவைக்குக் குற்றங் கூறினன் என்பர். தூதன் பாடிய வகை கைம்மணிச் சீரன்றிச் சீரறியாக் கம்பநாடன் சொன்ன, மும்மணிக்கோவை முதற்சீர் பிழை முனைவாளெயிற்றுப், பைம்மணித் துத்திக் கனமணிப் பாந்தட்படம் பிதுங்கச், செம்மணிக்கண் பிதுங்கப் பதம்பேர்த்த சயதுங்கனே. ” கம்பர், தாதன் வரிசை பெறப்பொறது அவனை விருதுகாளம் பிடிக்கப் பாடியது ”கூளம் பிடித்தெள்ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்கு, காளம் பிடித்திடிற் சின்னம் படுமன்னர் காதலிமார், வேளம்பிடித்த கண்வெள்ளம் பிடிக்க வெம்பேய்க் கிளம்பேய், தாளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே” (தமிழ் நாவலர் சரிதை), இவர் தொண்டை நாட்டுக் கூவத்து வழி வருகையில் அவ்விடமுள்ளார் தம்மைப் பாட விரும்புகையில் அவர் தமக்கு வசைமொழிந்ததாக அடிமைகளைப் பாடுவதில்லயென மறுக்க *அவர்கள் விடாது சென்று சீவிகை முதலிய தாங்கிச் சென்றபோது “ஒங்கிய செந்தமிழ்த் தாதற் கடிமை யவ்வூரதனா, னாங்கவி சொல்வது மில்லையென்றே கம்ப நாடன் சொல்ல, ஆங்கவனேறுஞ் சிவிகை சுமந்து மடப்பையிட்டுந், தாங்கவி கொண்டதுங் கூவந்தியாக சமுத்திரமே. ” என்ற னர். காவிரிப் பெருக்கடங்கப் பாடியது கன்னியழிந்தனள் கங்கை திறம்பினள், பொன்னிகரை யழிந்து போனாளென் றிந்நீ, ருரை கிடக்கலாமோ வுலகுடைய தாயே, கரை கடக்கலாகாது காண். ” இதனைச் சோழன் கேள்வியுற்றுக் கவிச்சக்கரவர்த்தி எனப் பெயரளித்துக், கம்பரைத் தன் சமஸ்தான வித்துவான்களில் ஒருவர் ஆக்கினன், சடையப்ப முதலியார் கம்பரால் இராமாயணம் பாடுவிக்கும் ஆவல்கொண்டு கம்பரிடங்கூறக் கம்பர் காலதாமதம் செய்வது கண்டு அரசனிடம் தம் கருத்தை அறிவித்தனர். அரசன் தம் சமஸ்தான வித்துவான்களில் ஒருவராகிய ஒட்டக்கூத்தரையும் இவரையும் இராமாயணம் பாடும்படிக் கட்டளையிட்டனன். ஒட்டக்கூத்தர் கடல்காண் படலம் வரையில் பாடவும் கம்பர் ஒரு கவியும் பாடாதிருந்ததைப் பிறராலறிந்த அரசன் இருவரையும் அழைத்து இராமாயணம் எவ்வளவு தூரம் ஆயிற்றெனக், கூத்தர் கடல் காண் படலம் வரை என்றார். கம்பரை வினவக் கம்பர், கூத்தரிலும் அதிகங் கூற வேண்டும் என்னும் எண்ணத்தால் திருவணைப் படலம் வரையும் ஆயிற்றென்றார். இதனைக் கேட்ட அரசன் ஆயின் அப்படலத்தில் ஒரு செய்யுளைப் பிரசங்கியும் என்றனன். கம்பர், இசைந்து அந்நிமிஷத்தில் “குமுதனிட்ட குலவரை கூத்தரின், திமிதமிட்டுத் திரையுந் திரைக்கடற், றுமி தமூர் புகவானவர் துள்ளினார், அமுத மின்னுமெழு மெனுமாசையால்” என்கிற செய்யுளைப் பாடிப் பிரசங்கிக்கையில் கூத்தர் துமி என்னுஞ் சொல் செய்யுட் பிரயோகங்களில் இன்று என்றாக்ஷேபிக்கக் கம்பர் அது உலகவழக்கெனச் சமர்த்தித்துச் சரசுவதியினருளால் இடைப் பெண்கள் பேசப் பிரத்தியக்ஷத்தில் காட்டிச் சமர்த்தித்து இராமாயணம் பாடத் தொடங்கித் தொண்டை நாட்டையடைந்தனர். இவர் வல்லியை விழைந்தது, ஒரு காற்றொண்டை நாட்டில் திருவொற்றியூரில் இருந்த சதுராநநபண்டிதன் மடத்திலிருந்த வல்லியெனப் பெயர் பெற்ற தாசியை விரும்பிப் பலநாள் அவளுடன் அங்கே மகிழ்ந்து அவளைக் கண்டு “இல்லென்பார் தாமவரை யாமவர் தம் பேரறியோம், பல்லென்று செவ்வாம்பல் முல்லையையும் பாரித்துக், கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ், நில்லென்று போனாரென் னெஞ்சைவிட்டுப் போகாரே” (எம்.) நடக்கிலன்னமா நிற்கினல் வஞ்சியாங், கிடக்கிலோவியப்பாவை கிடந்ததாந், தடக்கையான் சதுராநதபண்டி தன், மடத்துளா ளென்மனத் துறைவல்லியே” என்று கூறி அவளுடனிருந்து அவளுக்கு எருமைகள் வாங்கிவாப் புழற் கோட்டம்புக்குக் காளிம்பன் எனும் ஆநிரை மேய்ப்பான் ஒருவனைக்கண்டு ‘புக்கு விடை தழுவிக் கோடுழுத புண்ணெல்லாந், திக்கிலுயர் காளிம்பன் றென்புழன் மானக்கணமே, தோள்வேது கொண்டி லனேற் சுந்தரப் பெற்றோன்றலுக்கு, வாழ்வேது கண்டிலமே மற்று’ எனப்பாட அவன் ஆயிரம் ஈன்ற எருமைகள் தரப்பெற்று அவளுக்கு அணிபலவியற்றித் தருதற்கு மயிலையிலிருந்த திருவாலி என்பாளைக் கண்டு “அண்ணல் திருவாலி யணிமயிலை யத்தனையும், வெண்ணிலவின் சோதி விரித்ததே நண்ணும், தடந்துப் புவிற்பாணந்தன் முகத்தேகொண்டு, நடந்துப்புவிற்பாணகை” எனப்பாடி அவளுக்கு நகை முதலிய உதவி அவளைப் பிரியலாற்றாது சோணாட்டிற்கு அவளையும் உடன்கொண்டு சென்றனர். அக்காலத்து வல்லியிருந்த வீட்டை மழையான்னையாமல் சடையவள்ளல் நெற்கதிரான் மறைத்தனர். இதனை ”பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேநெற், கதிரானே வேய்ந் தருளுங் கங்கைப் பதிநேர், வரு வெண்ணை நாடன் வருநா வலர்க்குத், தரு வாவைன் சடையன்றான்” என்பதாலறிக. இவர் இவளுடன் பல நாள் தங்கி இவள் பிரிந்த காலத்துக் குடும்பை என்பவனைகி கூடியிருந்தபோது வல்லிபோல் களிப் பிக்கவல்வளன் றென்னுங் கருத்தால் “சொல்லியைச் சொல்லி னமுதான செல்லியைச் சொற்கரும்பு, வில்லியை மோகவிடாய் தவிர்ப்பாளை விழியம்பினால், கொல்லியைக் கொல்லியம்பாவை யொப்பாளைக் குளிரொற்றியூர், வல்லியைப் புல்லிய கைக்கோவிவள் வந்து வாய்த்ததுவே” என்று அவளுடனுமிருந்து பின்பு களந்தைப் பதியில் ஒருத்தியை விரும்பி அவளுடனுமிருந்தனராம். இதனை “வில்லிக ளந்தைமின்னை விண்ணவர் தங் கோமானை, வல்லிநெடுஞ் சேடனையும் வாணனையும் புல்வியுறப், பார்க்கும் போதும் மதரம்பற்றும் போதும் தனத்தைச் சேர்க்கும் போதும் நினைப்பஞ்சென்று. ” எனும் தமிழ் நாவலர் சரிதையாலறிக. காவிரி எச்சிற் படப் பாடியது ”மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர், கைகழுவ நீர்போதுங் காவிரியே பொய்கழுவும், போர்வேள் சடையன் புதுவையான்றன் புகழை, யார் போற்ற வல்லாரறிந்து” தாதனைப் பாடி யது. தாதா வென்றாலும் தருவென்று சொன்னாலும், தாதா வென்றாலும் தருவனோ தாராதான், தாதா வென்றாலுந் தருவென்று சொன்னாலும், தாதா வென்றலும், தருவனந்தாதனே. ” அதிகாரியை வெட்டுவிக்கக் கூறியது “சென்னிவிளை கழனி செஞ்சிவாழ் சோழாண்டே மன்னுபுக ழொற்றியூர் மட்பக்க நாய்ச்சியார், தம்மை வரவிட்ட பூழலோ பூழல். இவர் இராமாயணம் ஒற்றியூரி விருந்தபோதும், வெண்ணெநல்லூரிலுமிருந்து பாடினர் என்பதை ‘தொடை நிரம்பியதோ மறுமாக்கதை சடையன் வெண்ணெய் நல்லூர் வயிற்றந்ததே” என்பதாலும் பின்வருஞ் செய்யுளாலு மறிக. இவர் இரவில் தம் மாணாக்கர் எழுதப் பாடுகையில் திருவொற்றியூர்க் காளியைத் தீவட்டிப் பிடிக்கச் செய்தனர் என்பதை “ஒற்றியூர் காக்கவுறைகின்ற காளியே, வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை பற்றியே, நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர், பிங்தாமற்பந்தம் பிடி” என்பதாலறிக, கம்பர் சடைய வள்ளலது பெருநன்றி பாராட்டி அவரை இராமாயணத்துப் பலவிடங்களிற் புகழ்ந்துளார் அதனைப் பாயிரம் ”நடையினின்றுயர் ” எனுஞ் செய்யுளினும், பாலகாண்டம் வேள்விப்படலம் விண்ணவர் போயபின்றை” எனுஞ் செய்யுளினும், அகலிகைப் படலம். “அர மடந்தையர் கற்பக நவநிதி” என்பதாலும், மிதிலை காண்படலம் “வண்ண மாலைகை பரப்பி” என்பதினானும், சேது பாதனப் படலம் “மஞ்செனத்திகழ் தருமலையை என்பதினும், நாகபாசப் படலம் “வாசங்கலந்த மரைநான் என்பதனாலும், மருந்து மலைப் படலம் வெள்ளி நாட்டிய பொன் என்பதனாலும், திருவலி டேகப்படலம் “அரியணை யநுமன்றாங்க என்பதனாலும், விடைகொடுத்த படலம் ”மறையவர்வாழி” என்பதனாலும் கூறிய வற்றாலறிக. இவர், நாளொன்றுக்கு எழுநூறு செய்யுட்களாகப் பாடி முடித்தனர். இதையறிந்த ஒட்டக்கூத்தர், இவர்க்குச் சரசுவதியின் அருள் பூரணமாக இருக்கிறது, இவர் செய்யுளின் முன் நம் செய்யுள் ஏதாமெனத் தாம்பாடியதைக் கிழித் தெறிவதைக் காரியவசமாய் ஒட்டக்கூத்தர் வீட்டிற்குச் சென்ற கம்பர் கண்டு கிழிந்தவை போக உத்தர காண்டத்தை வாங்கித் தாம் பாடிய இராமாயணத்துடன் சேர்த்தனர். இதனை யரங்கேற்றப் பலரிடஞ் சென்று ஸ்ரீரங்கம் போய் அங்குள்ள வித்துவான்களைக் கையொப்பங் கேட்டு அவர்கள் தில்லையில் தீக்ஷிதர்கள் கையெழுத்து இருக்கின் எங்கட்குத் தடையில்லையெனச் சிதம்பரஞ்சென்று பலநாள் காத்திருந்தும் அவர்கள் கூடாமையாற் கடவுளைத் துதிக்கத் தெய்வகதியால் பாம்பு கடித்துக் குழந்தை பொன்றிறந்தது. அதன் பொருட்டு அனைவருங் கூடினர். அப்போது கம்பர் சென்று “ஆழியான் பள்ளியணையே அவன் கடைந்த ஆழிவரையின் மணித்தாம்பே யூழியான், பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற, நாணேயகல நட” என்றும் “மங்கை யொரு பங்கர்மணி மார்பிலாரமே, பொங்குங்கடல் கடைந்த பொற்கயிறே திங்க ளையும், சீறிய தன்மேலூருந் தெய்வத்திரு நாணே, ஏறியபாம்பே யிறங்கு” என்றும் “பாரைச் சுமந்த படவாவே பங்கயக் கண், வீரன் கிடந்துறங்கு மெல்லணையே ஈரமதிச், செஞ்சடையான் பூணுக் திருவாபரணமே, நஞ்சுடையாய் தூரநட” என்றும், தமது இராமாயணத்தில் நாகபாச படலத்தில் சில செய்யுட்களையு மெடுத்துக்கூறிக் குழந்தையை எழுப்பினார். இதைக் கண்ட தில்லை மூவாயிரவர் கம்பர் மனதின்படி கையொப்பமிட்டனர். அவ்விடம் நீங்கிக் கம்பர் தஞ்சை அஞ்சனாக்ஷி, மாவண்டூர்க்கருமான், அம்பிகாபதி முதலியவர் கையொப்பம் பெற்றுத் திருவரங்கஞ் சென்று பெருமாள் நஞ்சடகோபனைப் பாடினையோ என” கட்டளைப்படிச் சடகோபரந்தாதி பாடித் துதித்து ஸ்ரீஅரங்கத்தார் கேட்டுக் கொண்டபடி இரணியவதைப்படலம் பிரசங்கித்து மோட்டழகிய சிங்கரைச் சிரிக்கக்காட்டிக் குலோத்துங்க சோழன் சபையில் பரிசு பெற்று இருந்தனர். ஒருநாள் அரசன் தனக்கு எல்லாரும் அடிமையென்னக் கம்பர் அரசனைத் தமக்கு அடிமையென்றதால் அரசன் பொன்னி எனும் தாசியைக் கொண்டு கம்பரிடத்திலவளுக் கடிமை என்றெழுதிவாங்க ஏவினன். அவள் அந்தப்படி செய்து கம்பர் கையொப்பமிட்ட “தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை” யென்னும் சீட்டை அரசனுக்குத்தர அரசன் கம்பருக்குக் காட்ட அரசனை நோக்கி விரும்பியதைக் கொடுக்கும் சீதேவிக்குக் கம்பர் அடிமையெனச் சமர்த்திக்கக் கண்டு அரசன் “போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடின், தூற்றினும் தூற்று வர்சொன்ன சொற்களை, மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள், கூற்றினும் பாவலர் கொடியராவரே” என்று மனம் வேறுபட்டுப் பெருஞ்செல்வத்தினும் பெருங் கொடையினும் புலவரெல்லாம் ஒழுங்கு பாராட்டுத் திறமையினும் சோழனாற் பெரிதும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண்ணைச் சடையனையே மிகுதியும் மதித்துப் பாடுதலையு மனத்தில் கொண்டு கோபிக்க இவர் சோழனை நீங்கி ” மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ, உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்னை, விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோவுண்டோ, குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு எம். “காதம்மிருபத்து நான் கொழியக் காசினியை, ஓதக்கடல் கொண் டொளித் ததோ மேதினியில், கொல்லி மலைத் தேன் சொரியும் கொற்றவா நீமுனிந்தால், இல்லையோ வெங்கட்கிடம்” என்று அந் நாட்டை நீங்கித் தனித்து வேலி என்பவளிடஞ் சென்று அவள் கட்டுவிக்கும் சுவர் எவர் கட்டினுமிடிதல் கண்டு தான் அச்சுவரைக்கட்டுவதாக உடன்பட்டு மற்கொண்டதிண் புயத்தான் மாநகர்விட்டிங்குவந்து, சொற்கொண்டபாவின் சுவையறிவா ரீங்கிலையே, விற்கொண்ட வாணு தலாள் வேலிதருங் கூலி, நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே” எனப்பாடி அவள் தந்த நெல்லைப்பெற்று நீங்கிப் பசியால் வருந்திச் செட்டி, வாணியன், பார்ப்பான் முதலியவர், வீடுகளில் சென்று பசிக்கு ஏதேனும் கேட்க அவர்கள் மறுத்தது கண்டு செட்டிமக்கள் வாசல் வழிச் செல்லோமே செக்காரப், பொட்டி மக்கள் வாசல்வழிப் போகோமே முட்டிபுகும், பார்ப்பாரகத்தை யெட்டிப் பாரோமே யெந்நாளுங், காப்பாரே காராளர்காண் என்று கூறி வயலிலுழும் வேளாளனிட்ட கூழுண்டு (மேழிபிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை, ஆழிதரித்தே யருளுங்க சூழ்வினையை, நீக்குங்கை என்று நிலைக்குங்கை நீடூழி, காக்குங்கை காரா ளர்கை ‘ எனப் பாடினர். இவர் பாடினதால் வேளாளனுக்குப் புதையலகப்பட வேளாளன் கம்பரையுபசரித்துப் பொன் கொடுக்கப் போக மறுத்துத் துண்டங்கள் நாலுபெற்றுப் பாண்டி நாடுபோய் அந்தச் சமஸ் தான வித்துவான்கள் கம்பராமாயணம் பிரசங்கிக்க இவர் வியக்கத்தக்க இடங்களில் வியக்கா திருந்தனர். இதனைப் பாண்டியன் கண்டு நீர் வியக்கத்தக்க இடங்களில் வியக்காததற்குக் காரணம் என்னென் றனன். புலவர் கம்பரது அபிப்பிராயம் சரிவரவில்லை யென்று கூறினார். பாண்டியன் புலவரை நோக்கி நீர் யாரெனப் புலவர் நான் கம்பர் கற்றுச் சொல்லியென்றனர். ஆயின் உமக்குப் பிரசங்க வன்மை யுண்டோவென உண்டென விசைந்து பிரசங்கித்தனர். இவர் பிரசங்கிக்கக் கேட்டு அரசன் களித்தனன். அரசனிவரிடத்தில் அன்பு கொண்டிருத்தலையறிந்த அந்தச் சமஸ்தான வித்துவான்கள் அம்பட்டன் ஒருவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்துக் கம்பரைத் தம்மவரெனக்கூறச் செய்தனர். கம்பர் சற்றேனும் அஞ்சாது சரசுவதியின் திருவடிப் பொற்சிலம்பில் ஒன்று வாங்கிப் பாண்டியனுக்குக் காட்டி இப்படிப்பட்ட சிலம்பு ஒன்று என் தாயாதி யாகிய இவனுக்கும் எங்கள் முன்னோர் கொடுத்துப் போயினர். அதை அவன் தரின் இரண்டு சிலம்பும் அரசபத்தினிக்கு ஆகும் வருவிக்க எனப் பாண்டியன் அம்பட்டனைக்கேட்க அது அம்பட்டனில்லை யென்றனன். கம்பர் இவன் இளமைமுதல் மகாகபடன் நன்றாயடித்துக் கேளுங்களெனப் பாண்டியன் அம்முறை செய்விக்க அம்பட்டன் நடந்ததையொளியாது அரச னிடங் கூறினன். சமஸ்தானத்து வித்துவான்களைத் தண்டிக்க யத்தனிக்கையில் கம்பர் அப்புலவர்களின் உயிரைக்காத்துப் பாண்டியனுக்குச் சரசுவதி தரிசனங்காட்டிச் சிலம்பினைச் சிலம்பிலாத திருவடிக்கு நேராக நீட்டி அச்சிலம்பைத் திருவடியில் சேர்த்திச் சரசுவதியந்தாதி பாடித்துதித்தனர். பாண்டியன் கம்பரது மகிமையுணர்ந்து வரலாறு கேட்கத் தாம் கம்பன் என்றுந் தாம் வந்த வரலாறுங் கூறியிருந்தனர். இதனையறிந்த பாண்டியன் இவரை உபசரித்து எதிர்கொண்டு தேவியுந் தானுமாகப் பல்லக்குச் சுமந்து வரிசை தந்தனன். பாண்டியன் பல்லக்குச் சுமந்த போது கம்பர் பாடியது. ”உமையவளு நீயுமொருங் கொப்பே யொப்பி, லுமையவளுக் கங்குண்டோரூன முமையவடன், பாகந் தோய்ந் தாண்டான் பலிக்குழன் றான் பாண்டியனுன், னாகந்தோய்ந் தாண்டா னரசு” என்றனர். இவ்வாறிருக்கச் சோழன் தன் சமஸ்தானம் கம்பரில்லாததால் அழகற்றிருத்தல் கண்டு கம்பரைக் கூட்டி வரச் சோழன் அனுப்பிய இணையாரமார்பனைப் பாண்டியன் இவன் யார் எனக் கம்பர் கூறிய விடை ” என்னுடைய தம்பி சரராமனுக் கிளையான், கன்னன் மதயானைக் கம்பன் மகன் துன்னு, பணையார் நீர்வேலிப் பழனஞ்சூழ் சோணாட்டிணை யாரமார் பனிவன். ” என்று கூறிச்சென்று சமஸ்தானத் திருந்தனர். கம்பர் சில நாளிருந்து ஆங்கு வாணபூபதிக்குக் கல்வி கற்பித்து அவர்மீது பல சமயங்களில் வாணன் பெயரெழுதாமார் புண்டோமாகதர் கோன், வாணன் புகழுரையா வாயுண்டோ வாணன், கொடிதாங்கி நில்லா தகொம்புண்டோ உண்டோ, அடிதாங்கி நில்லா வரசு” என்றும் “சேற்றுக்கமலவயற்றேன்னாறை வாணனையான், சோற்றுக் கரிசி தரச்சொன்னக் கால் வேற்றுக், களிக்கு மாவைத் தந்தான் கற்றவர்க்குச் செம்பொன், அளிக்குமாறெவ் வாறவன்” என்றும் ”தேருளைப்புரவி” என்றும் “வாணன் புகழ்க்கெல்லை வாழ்த்து வோர்நாவெல்லை, வாணன் புகழ்க்கெல்லை மண்ணெல்லை வாணன் படைக்கெல்லை திக்கெல்லை பைந்தமிழ்தேர் வாணன், கொடைக் கெல்லை யேற்பவர் தங்கோள்” என்று பாடிச் சில நாளிருந்து சோழன் அம்பிகாபதியைக் கொலைசெய்ததால் “மட்டுப்படாக் கொங்கைமானார் கலவி மயக்கத்திலே, கட்டுப்பட்டாயென்ன காதல் பெற்றாய் மதன் கையம் பினால், பட்டுப்பட்டாயினுந் தேறுவையே என்று பார்த்திருந்தேன், வெட்டுப் பட்டாய்மகனே தலை நாளின் விதிப்படியே” என்று துக்கத்துட னிருந்தனர். இவருக்குக் காவிரியெனப் பெயருள்ள ஒரு குமரியிருந்தனள். அவளைச் சோழன் மகன் விரும்ப அவள் கற்புக்கெடுவதினும் உயிர் நீங்கல் நன்றெனக் கம்புக்கு திரில் மூழ்கித் தற்கொலை புரிந்து கொண்டனள். இதனாலிவர் சோழனை வெறுத்து அரசன் குமரனை யானை துரத்த அவன் பயந்து கம்பர் வீட்டில் நுழையக்கண்டு காட்டானைக்குப் பயந்தால் கவியானை விடுமோ எனக்கை யிலிருந்த எழுத்தாணியால் அரச குமார னைப் பழிக்குப் பழிவாங்கித் தம்மகனையும் மகளையும் இழந்த துயரம் ஆற்றாதவராய்ச் சோழனையும் சோணாட்டையும் வெறுத்து அக்காலத்துச் சோழனினும் அமைச்சுநாடு அரண்பொருள் படைநட்பு என்னும் அங் கங்களால் பெரிதும் மேம்பட்ட ஓரங்கல் நாட்டுப் பிரதாபருத்ரன் என்னும் வேந்தனிடஞ் செல்லற்கு நினைந்து நென்மலி (நெல்வேலி எனவுஞ் செல்லுவர்) என்னும் ஊர்க்குப்போய் அங்குள்ள தச்சனொருவனைப் பாட அவன் ஆயிரக்கல நெல்லுக் கொடுக்கப்பெற்றனர். இதற்கு மேற் கோள்: நெற்பயிர் விளைகழனி நென்மலி வாழ்தச்சன், கற்படு திண்டோளன் கங்கண கணகணவன், விற்புரை திருநுத லாண் மின்மினு மினுமினுவை, சொற்படி வேலை செய்வாடுந்துமி துருதுருவை. ” இதுக்குத் தியாகம் ஆயிரக்கல நெல்லு, (தமிழ் நாவலர் சரிதை). அதனைத் தம் குடும்ப சீவனத்திற்கு இட்டுவைத்துத் தாம் தொண்டைநாடு போயினர். இவர் சோழனைக் கோபித்தபோதே இவர் அவர் பாலெய்திய பேருரிமையெல்லாம் இழந்து வறியராய்ப் போயினராவர். இவர் தொண்டைநாடு போம்போது ஒரு வேளாளன் களத்திற் குறுணிநெல் வாங்கி அவனைப் பாடினர் என அறியப்படுதலானும் இவர் வறுமை யுணரப்படும். இவர் தொண்டை நாட்டிலுள்ள ஓர் ஏழைமனைக்குட் புக்க போது அவன் நல்லுணவில்லாமல் மாவையே நீரிற்கரைத்து அதனை இவர் திரு முன்புவைத்து இவரை நோக்கி யானும் என்னுரிமையும் நுமக்கேயடிமை யென்று கூறி அதனை யமுது செய்தருளுமாறு வேண்ட அச்சில்லுணவை அவன தன்புடைமைக்கு மகிழ்ந்து பருகிப்போய் அந்நாட்டுள்ள சான்றோர் பிறரைப் பாடி அவர்களாற் பசுநிரையும் எருமைக்கூட்டமும் ஆடையா பரணங்களும் பிறவரிசைகளும் அளிக்கப்பெற்று ஆங்குப் பல ஊரார்களைத் தமக்கடியராக்கி வாழ்ந்திருந்தனர். சின்னாட் கழித்தபின் அந்நாட்டினின்று மிக்க சிறப்புடன் புறப்பட்டு நெடுந்தூரங்கடந்து சென்று ஓரங்கல் புக்கு ஆண்டுள்ள அருங்கலை விநோதனான பிரதாபருத்திரனது அறிவுடைப் பேரவைக்கணெய்தித் தமது கல்வி மாட்சியால் அவ்வேந்தனையும் அவனது நல்லவையையும் தம் வயப்படுத்தி அவ்வாசனால் நன்று போற்றப்பட்டு இனி தொழுகுவாராயினர். இவர் அவ்வேந்தன் பால் நாளும் தம் இராமாயணத்துள்ள அலங்கார நயங்களை அமிழ்தெனப் பொழிந்து அவனைத் தமது பெரிய கல்விவலையிற் பிணித்துக்கொண்டு தமக்குச் சோழனாலி யற்றப்பட்ட கொடுந்துன்ப மெல்லாம் எடுத்தோதி அவ்வேந்தற்குச் சோழன்பாற் பெருஞ்சின மூளச்செய்து தமதளவிற் பேராற்றலைச் சோழனுணருமாறு அவ்வு ருத்திரனைத் தமதடைப்பை கட்டிக்கொண்டு தம்முடன் சோணாடுபோத வேண்டினர். இங்கனம் சோழனிற் பெரியனாகிய வேந்தனொருவனை இவர் தமக் கடைப்டை கட்டிவர வேண்டியதற்குக் காரணமாக வேறோர் கதை கூறுதலுமுண்டு. ஒரு நாள் சோழன் கம்பருடன் தன்னுயர் மனைபின் மேனிலையிற் சென்று தன் பெருநகரையும் அதனைச் சூழ்ந்த பெருநாட்டையுங் கண்டு மகிழ்ந்து கம்பரைநோக்கி இவையெல்லாம் எமக் கடங்கியனவே யென்று தருக்கினானுக்குக் கம்பர் இவையெல்லாம் நுமக் கடங்கினவேயாம்; இவ்வாறு சிறந்த நீவிர் எனக்கடங்கினீர் என்று சோழ னது அரசவலியினும் தமது கல்விவலியையே மேம்படுத் தேத்தி நின்றார். இது கேட்டுப் பொறாது சோழன் கம்பரை முனிந்தனனெனவும், அது கண்டு கம்பர் அரசவலியினும் கல்விவலி சிறந்ததா தலை நுமக்குணர்த்துவல் என்று சோழற்குரைத்து அவனினுஞ் சிறந்த வேந்தனிடம் போய் அவனைத் தம் வயப்படுத்தி அவனை அடைப்பைகட்டிவர வேண்டின ரெனவும் கூறுவர். பிரதாபருத்திரன் கம்பரது கல்வித் திறத்திற்கு அடிமைப்பட்டவனாகி அவர் வேண்டியவாறே புரிதற்குடன் பட்டு அவருக்கு முடியுடையரசருக்கொத்த பெரிய வரிசையெல்லாஞ் செய்து பலருங்காணத் தானும் அவருக்கடைப்பை கட்டிக் கொண்டு போந்து அவரைச் சோணாட்டே முன்னரினும் சிறக்க வீற்றிருக்க வைத்துத் தன்னூர்க்கு மீண்டனன். கம்பர் பிரதாபருத்திரனி டத்துப் போய் அவன் அடைப்பைகட்டி வரப் பாடிய வெண்பா அவனி முழுதுண்டு மயிரா வதத்துன், பவனி தொழுவார் படுத்தும் புவனி, புருத்திரா உன்னுடைய வோரங்க னாட்டிற், குருத்திரா வாழைக்குழாம்” (தமிழ் காவலர் சரிதை.) கம்பர் மிக்க சிறப்புடன் சோணாடெய்தி வாழ்கின்றபோது சோழன் அவருடைய பேராற்றலுக்கு அஞ்சி வஞ்சமாக இவர் பாற்பெரு நண்பினன் போல ஒழுகத் தலைப்பட்டான். கம்பரும் தம்முடைய பெருவலி சோழற்கு நன் குணர்த்தப்பட்டதாதலின் இனி அவனாற் நமக்கொரு தீங்கும் இழைத்தலாகாதென் று அவனது நண்பினை நம்பி ஒழுகுவாராயினர். இவ்வாறெழுகுகின்ற காலத்துச் சோழன் தன்னிலும் பெருவலியுடைய ஒரங்கலுருத்திரனைத் தமக்கு அடைப்பை கட்டிவரப் புரிந்த கம்பர், ஒருகால் தன் மேல் அவனைப் படையெடுத்து வரவும் புரிவரோ என்று ஐயமே மிகுத்து இவரைப் பிறரறியாமற் கொன்று விடுதலே நலமென்று கருதி ஒருநாள் தன்னரண்மனைக்கு அவர் வரும்போ தறிந்து அவர் வரும் வாயிலிற் கூட்டி லடைக்கப்பட்டதோர் புலியைத் திறந்து விட்டிருந்தனன். அப்போது கம்பர் அவ்வழியேவரப் புலி கண் சிவந்து வான் முறுக்கி வெகுண்டெழுந்து அவரைக் கொல்ல நெருங்கிற்று. அது கண்டு கம்பர் தம்மைக் கொல்லவந்த புவியினுயிருண்ணுமாறு கம்பர் மேலே சோழன் புலியைக் கொல்லவிட்ட போது பாடியது “வெங்கண் சிவந்து வெடிவான் முறுக்கி வெகுண்டெழுந்தென், னங்கம் பிளக்க வரும்புலி யேயன் றிரணியனைப், பங்கம் படப்பட வள்ளுகிராலும் பற்றி யுண்ட, சிங்கமிருப்பது காண்கெடு வா யென்றன் சிந்தையுள்ளே” (தமிழ் நாவ லர் சரிதை) என்னும் பாடலைப்பாடி நரசிங்கப் பெருமானைத் தியானித்து நின்றார்; அவ்வளவிற் புலி யுயிர்மாய்ந்து வீழ்ந்தது. இதனைக் கண்ணுற்று ஒளித்து நின்ற சோழன் இவரைக் கொல்லவந்த புலியும் உயிர்மாய்ந்ததற்கு நொந்து தன் கையிவிருந்த வில்லில் அம்பினைக் கோத்து இவர் திருமார்பு குறித்து விடுக்க அது கல்வியிற் பெரியாரது அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சிற்பட் டுருவிப் போயிற்று. அந்நிலையே அறிவொருவடிவாங் திருவுருத் தளர்வார் இவை யெல்லாம் சோழன் செய்த வஞ்சமென்று குறித்துணர்ந்து அம்புபோந்த வழியே நோக்கி அவனைக் கண்டு, சோழனெய்த போது கம்பர் பாடியது “வில்லம்பு சொல்லம்பு மேதகவே யானாலும், வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து வில்லம்பு, பட்டுருவிற் றென்னையென் பாட்டம்பு நின்குலத்தைச், சுட்டெரிக்கு மென்றே துணி” (தமிழ் நாவலர் சரிதை) என்னும் பாடலைக் கூறிச் சபித்துவிட்டுத் தம்மாருயிர்த் துணைவனான சடையவள்ளலது அரிய பெரிய நன்றியையே நினைந்து நினைந்து நெடிதுருகி, கம்பர் மாணகாலத்தில் பாடிய கவி “ஆன்பாலுந் தேனு மரம்பை முதன் முக்க னியுந், தேன் பாய வுண்டு தெவிட்டு மனந் தீம்பாய், மறக்குமோ வெண்ணை வருசடையா கம்ப, னிறக்கும்போ தேனுமினி’ (தமிழ் நாவலர் சரிதை) என்னுஞ் செய்யுளால் அன்புபாராட்டி இக்கொடிய வுலகத்தை நீத்து அந்தமிலின் பத்தழிவில் வீடெய்தினர். கம்பர் இறந்தது கேட்டுச் சோழனவைக்குரிய புலவர் பெருமக்களெல்லாம், கம்பர் பேரிலே பாடிய கையறம் “இன்றோநங் கம்பனிறந்தநா ளிப்புவியி, லின்சோநம் புன் கவிகட் கேற்றநா ளின்றோதான், பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப, நாமடந்தை நூல் வாங்கு நாள்” (தமிழ் நாவலர் சரிதை) எனப்பாடி யிரங்குவாராயினர். தமிழ் நாவலர் சரிதைக்கண் கம்பனைக் கொன்றனென்று பழிகூறிய பாண்டியனிடத்திற் சோழன் விட்டபுலவன் முடிசூட்டு மங்கலநாட் பாடிய வசை. ”பாண்டியரிற் பாண்டியரிற் பாழான பாண்டியரி, லீண்டிரென விட்ட வெழுத்தல்ல பூண்டதிருப், போகவென்றும் வேற்றூர் புகுத வென்று நீயிவண் விட், டேகவென்றும் விட்ட வெழுத்து,’ இதுகேட்டு நன்றாகவே பொருள் கூறிப் பரிசில் கொடுக்க மறுத்தான்; நீ வந்த காரியம் வேண்டிற் சோழன்பாற் போகென்றான் எனத் தலைக்குறிப்பும், கீழ்க்குறிப்பும் பெற்ற ஒரு செய் புள் காணப்படுகின்றது. இதனாற் சோழன் கம்பரைக் கொன்ற கொடும்பழி எங்கும் பரவியதென்றும் பாண்டியன் தன்னைப் பழித்துரைத்ததற்கு வெட்கி அவனைப் பழித்துப் பாடுதற்காக அவனது முடி சூட்டு மங்கல நாளிற் சோழன்றன் புலவனை விடுத்து வசைபாடச் செய்தனனெனவும், போந்த சோழநாட்டுப் புலவன் தான்பாடிய வசைப்பாட்டிற்கு நன்றாகவே பொருள் கூறினான் எனவும், அது கேட்டுப் பாண்டியன் அவனுக்குப் பரிசில் நல்கினான் எனவும், புலவன் பழிகூறவந்தானன்றிப் பரிசில் பெற வந்தானில்லை யாதலால் மறுத்தான் எனவும், பாண்டியன் அதுகேட்டு நீபழிகூற வந்தனையாயின் அதற்கென்பாற் காரியமில்லை கம்பரைக் கொன்ற கொடும்பழியையுடைய சோழன்பாலே அது கூறற்குச் செல்க என்று கூறி அப்புலவனைச் செலவிடுத்தனன் எனவும் அறியப்படும். கம்பர் இறந்தபின்னர் சோணாடு ஓரங்கற் கணபதி யரசர்களாற் படையெடுத்து வெல்லப்பட்டுச் சோழரது பெருமை யெல்லாம் போய் அவ்வரசர் வமிசமும் அருகித்தொலையத் தலைப்பட்ட தாகும். கம்பரை அம்பாலெய்து கொன் றவன் விக்கிரமனுக்குப் பின்னாண்ட. குலோத்துங்கனுக்குப் பின் னரசெய்திய இராசராசன் என்பவனாவன். இவர் செய்த வேறு நூல்கள்: சரசுவதியந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம், சடகோபரந்தாதி, மும்மணிக் கோவை. கம்பர் காலம் முதற் பிரதாபருத்சன் காலமாகிய கி. பி. 1162 இந்த பதினொராம் நூற்றாண்டில் இராஜ ராஜனரசாட்சி. சிலர். கி. பி. 1155 என்பர்.

கம்பலம்

இது ஒன்பது சாதிகளுக்குப் பெயர், தோட்டி, அண்ணப்பன், கப்பலியன், சக்கிலியன், முதலியோர் இவர்கள் சம்பளி விரித்து அதன் மீது தாங்களிருத்தலால் பெற்ற பெயர்.

கம்பளசெட்டி

கப்பல்யாத்திரை செய்யும் ஒருவணிகன். பீலிவளையென்பவள் தான்பெற்ற பிள்ளையை நெடுமுடிக்கிள்ளியிடம் சேர்ப்பிக்கும்படி இவனிடத்துத் தந்தனள். (மணிமேகலை).

கம்பளன்

1. பாதாள வாசியாகிய ஒரு நாகன் 2. குவலயாசுவனுக்கும் அசுவதரன் என்னும் நாகராசனுக்கும் நண்பன்.

கம்பளபர்க்கி (யது.)

அந்தகன் குமரன். இவனுக்குக் கம்பளபர்விஷன் எனவும் பெயர்.

கம்பளை

ஒரு நதி, இது இலங்கைத் தீவிற் சமனொளி மலையிலிருந்து உண்டாவது. (திருவிளை.)

கம்பாநதி

காஞ்சியிலுள்ள ஒரு தீர்த்தம். இது பார்வதியாரின் சிவபூஜை நிலையினை அறியும்படி சிவமூர்த்தியால் வருவிக்கப் பட்டது.

கம்பீரன்

இரபசன் குமரன்.

கம்பு

இது, ஒருவகைத் தானியம், இது பெரும்பாலும் ஜர்மனி ருஷியா தேசங்களில் விளைவிக்கப்படுகிறது. இது, குடியானவர்களுக்கு எளிய ஆகாரமானது. இது எங்கும் விளைவது, இங்கிலாந்தில் இது, ஆடு மாடுகளுக்குதவிய ஆகாரமாம், இதன் தட்டையால் வீடு மூடுகிறார்கள்.

கம்மர்

தெலுங்கு நாட்டு உழவர். இவர்கள், கம்மர், காபு, ரெட்டி, வெலமர், தெலகர் எனப்படுவர். இவர்கள் முதலில் அரசர்க்குப் போர்ச் சேவகராயிருந்து பின் உழவராயினர். இவர்களின் பெண்மக்கள் அரக்க ரால் துன்புற்று லக்ஷ்மியைப் பிரார்த்திக்க அவள் ஒரு கம்மல் கொடுக்க அவர்கள் 100 வருடம் அதை ஆராதிக்க அதிலிருந்து பலவீரர் தோன்றி அரக்கரை அழித்தனர் ஆதலால் இவர்களுக்கு இப்பெயர் வந்தது என்பர். அரசனது கம்மல் எதிரி கைப்பட்டுக் காணாதபோது போர் செய்து காத்தவர் கம்மர். போர்க்காற்றாது வெளிப்பட்டவர் வெலமர். இவர்கள் கோத்திரம் செட்டிபூலா, குருநொல்லு, குலகாலு, உப்பாலா, செருகு, ஒல்லோட்லா, எனமல்ல என்பர். (தர்ஸ்டன்.)

கம்மாறு வெற்றிலை

வெற்றிலையில் ஒரு பகுப்பு. இவ்வெற்றிலையால் சலதோஷம், சிரோபாரம், சந்நி, மாந்தாக்கினி, சுரக்கின்னரோகம், வயிற்றுவலி, உப்பிசம் இவை ஒழியும்.

கம்மாளர்

இவர்கள் கம்மத் தொழில்களை மேற்கொண்டிருத்தலால் இப்பெயர் கொண்டனர். அன்றிக் கண்ணை ஆளுகிறவர் எனும் பொருளில் கண்ணாளர் எனவும் பெயர் பெற்றிருத்தல் கூடும். இவர்கள் தட்டார், கன்னார், தச்சர், கல்தச்சர், கருமார், எனப் பட்டுப் பொன்; இரும்பு, பித்தளை, கருங்கல் முதலிய இந்த வேலைகளைச் செய்தலால் பஞ்சாளத்தார் எனப்படுவர். இவர்கள் தங்களை விஸ்வகுல, ஜநகர், அஹீமர், ஜநார்த்தனர், உபேந்திரர் முதலிய கோத்திரத்தர் என்ப. இவர்களிற் சிலர் தங்களை விச்வப்ராமணர் என்பர். இவர்கள் பிராமணர்போல் வேடம் பூண்டிருப்பர்.

கம்மாளர் கருவிகள்

வாள், கத்திரி, உளி, இழைப்புளி, சிறு இழைப்புளி, கொட்டாப்புளி, இடுக்கி, குறடு, சம்மட்டி, துருத்தி, சுத்தி, அறம், தொளைப்பணம், தொளைப்பணக்கோல், கடைச்சல் சக்கரம், பணை, குறடு, கம்பாஸ், உலைக்களம், அளவு கோல், வெட்ரம்பு: முதலிய.

கம்மியன்

இலைவாணியன் பரத்தியைக் கூடினதனாற் பிறந்தவன். (அருணகிரிபுராணம்).

கயத்தூர்கிழான்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர்கயத்தூர் என்பதுபோலும் பிறப்பால் வேளாண் குடியினராக இருக்கலாம். (குறு. 354)

கயன்

A. உந்முகனுக்கு நட்வலையிட முதித்த குமரன். B. அதூர்த்தரஜன் குமரன். இவன் பல யாகங்களியற்றி இராசவிருடியானவன். C. பிரியவிருத வம்சத்தரசன், அநேகம் அசுவமேதமியற்றி இந்திர உலகத்துச்சுகித்திருந்தவன். D. சுத்தியமன் குமரன். E. ஒரு அரசன். இவன் அக்கிநிப் பிரசாதத்தினால் போக விருப்பமில்லாது கங்கைக் கரையில் யாகசாலையுண்டாக்கி அவ்விடத்தில் தன் பெயரால் ஆலவிருக்ஷங்களை யுண்டாக்கித் தீர்த்தமும் எடுப்பித்தவன். F. பிரகஸ்பதியின் குமாரன்.

கயமனார்

ஒரு தமிழ்ப் புலவர் கடைச்சங்க மருவியவர். இவர் பாலைத்திணையில் உடன் போக்கையும் அதனையடுத்த செவிலிபுலம்பல் நற்றாய் புலம்பல், மனைமருட்சி கண்டோரிரக்கம் முதலாய புலம்பல்களை யும் பலவாறாகச் சிறப்பித்துப் பாடவல்லவர். அங்ஙனம் பாடிய பாடல்களனைத்தும் கேட்போரின் கன்மனத்தையும் கரைக்கும் தன்மையன. அகத்திலன்றிப் புறத்திலும், புலம்பற்றுறையாகிய முதுபாலையைப் பாடியுள்ளார் (புறம் 254) (முதுபாலைகா வலனிறப்ப வனையோர் புலம்பல்) ஆகவே இவர் இருதிணையிலும் புலம்பல் பாடவல் லவராய் விளங்குகிறார் அகம் 145ல் அன்னியும், திதியனும் பொருத்தனைக்கூறுதலால் அவ்விருவர் காலத்துக்கும் பிற்பட்டவராவார். கழங்குக்குறி பார்க்கும் நெறியை வெகுதெளிவாகக் கூறியவர் இவரே அகம் 135 அழிந்த பாலையை வளமுடை யதாக்கிக்கூறும் இவரது ஆற்றல் மிகநன்று, அகம் 259 உடன் போக்கின் கண் அறத்தோடு நின்று போக்கினை மறுத்து அஞ்சு வித்ததாகப் புதியநெறி காட்டி எழுதியவர் இவரே; நற் 12 இதனைப் பெரிதும் பாராட்டி இந்நெறியே நக்கீரனாரும் உரைகூறி போயினாரென்றால் அவர் பாடலின் சிறப்பு இவ்வளவின தென்றளவிடற் பாலதோ? இறையனாரகப்பொருள் 23ம் சூத்திரவுரை. புண் + தாள் – புட்டாள் எனப் புதுவிதி வகுத்தவரில் இவருமொருவர் நற் 276 தலைமகன் தலைமகளாகிய இருவருடைய தாயர்களும் ஒருவரை யொருவர் கடிந்து கூறும் வழக்கு இந்நாள் போலப் பண்டுமுள தென்பது இவர் பாடலாலறியலாம் நற் 293, முன்னாளில் காலாற் பந்துருட்டும் வழக்குளதென்பது நற் 324ம் பாடலால் விளங்கும். இன்னும் நன்றாக ஆராயுங்கால் இவர் உலக வழக்கமுற்றும் தெளிவாக அறிந்தவரென்று தோன்றுகின்றது. இவர் பாடியனவாக நற்றிணையில் ஆறு (12, 198, 276, 293, 305, 324,) பாடல்களும், குறுந்தொகையில் நாலும் அகத்தில் பன்னிரண்டும், புறத்தில் ஒன்றுமாக இருபத்து மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கயமுகாசுரன்

கசமுகாசுரனைக் காண்க.

கயவாகு

1, இலங்காபுரியரசன். இவன் தன் நகரத்தில் பத்தினியாகிய கண்ணகிக்குக் கோயில் கட்டி விழாச் செய்வித்தவன். (சிலப்பதிகாரம்). 2. இவன் ஸ்ரீசங்கபோதியெனும் பெயருடன் புத்தனாய் இலங்கையாளுகையில் பாசுபதர் சிவபூசைக்கு மலரெடுத்துச் சென்றனர். அம்மலரைப் புத்தர் எறிந்ததினால் புத்தரைப் பாசுபதர்கடலிற்றள்ளினர். இதனை உணர்ந்த புத்த அரசன் சிவனைப் புத்தனாக்குகிறேன் என்று புறப்பட இரண்டு கண்ணுங்கெட்டன. அரசன் மயங்கி வேண்டச் சிவமூர்த்தி வேதியர் போல் வந்து விபூதிபிரசாதிக்க அரசன் சிவசிவ என்று நெற்றியிலுங் கண்ணிலுந் தரித்துக்கொள்ள ஒருகண் தெரிந்தது. பின் அரசன் திரிகோணமலை சென்று தீர்த்தத்தில் ஸ்நாகஞ்செய்ய இரண்டு கண்களும் ஒளி பெற்றன. (தக்ஷிண கைலாச தலபுராணம்) 3, இவன் சிங்களத்தரசன். இவன் ஒரு நாள் இரவு நகர்சோதனைக்கு வருகையில் கிழவி ஒருத்தி பல நாட்களுக்கு முன் கரிகாற் சோழன் அந்நகரத்துக் குடிகளைச் சிறையாகக்கொண்டு சென்றதை யெண்ணிப் பெருங்குரற் பாய்ச்சி யழக்கேட்டு சோழநாட்டின்மீது படைகொண்டு சென்று ஆங்கிருந்த ஈழநாட்டுக் குடிகளை மீட்டுச் சென்றனன் (மகாவம்சம்.) இவன் இப்பெயர் கொண்டவர்களில் ஒருவன் இற்றைக்கு 1750 வருஷங்களுக்கு முன்னிருந்தவன். கி. பி. 113 முதல் 135. முதற்கயவாகின் காலம் கி. பி. 179, 201 என்பர். இப்பெயர் கொண்டவர் வேறு சிலரும் இலங்கையாண்டனர்.

கயா

ஒரு தீர்த்தம் காசியிலுள்ளது. இதில் பிதுர்க்களையெண்ணிச் சிரார்த்தாதிகள் செய்யின் வேறு சிரார்த்தம் செய்ய வேண்டியதில்லை. இதன் கரையிலுள்ள அக்ஷய வடமென்னும் ஆலமரத்தடியில் சிரார்த்தஞ் செய்வர். இதற்கருகில் புத்தகயையென்று ஒன்றுண்டு அங்குப் புத்தனிருந் தனன் என்பர்.

கயாகரர்

கயாகரமெனு நிகண்டு செய்த ஆசிரியர். இவர் இராமேச்வரத்தில் இருந்தவரென்றும் குலத்தால் வேதியர் என்பதுந் தெரிகிறது. இவர் இராமநாதர் மீது கோவையொன்று பாடினதாகத் தெரிகிறது.

கயாசுரன்

A, இவன் மகிடாசுரன் புதல்வன். இவன் பிரமனையெண்ணித் தவம்புரிந்தனன். பிரமதேவர் தரிசனந்தர அவரை நோக்கிச் சகலரையும் வெல்லப்பெருவரங்களைக் கேட்டனன். பிரமதேவர், தேவர் முதலிய திரிலோகத்தவரையும் வெற்றி பெறுக, ஆயின் சிவமூர்த்தியிடஞ் செல்லா தொழிக என வரந்தந்து மறைந்தனர். அசுரன் வரத்தின் வலியால் தேவர் முதலியோரை வருத்திவந்தனன். ஒருமுறை தேவரைவருத்தத் தேவர் சிவமூர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தனர். அத்தேவரைப் பின்றொடர்ந்து அசுரனும் சிவசந்நிதிமுன் சென்றனன். சிவமூர்த்தி உக்கிரத் திருவுருவுடன் றோன்றி அசுரனது மத்தகத்தில் திருவடியூன்றித் தோலையுரித்து உடுத்த னர். இவன் சிவமூர்த்தியை யெடுத்து விழுங்கச் சிவமூர்த்தி அவனுடலினின்று வெளிப்பட்டு அவன் தோலையுரித்து உடுத்தனர் எனவும் புராணம். இவனைக் காசியில் சிவமூர்த்தி சூலத்தாற்குத்தி உலர்த்தித் தோலை யுரித்தனர் எனவும் புராணம் கூறும். B. ஒரு அசுரன், இவன் பலநாள் பெருந்தவஞ் செய்தனன், இவன் தவாக்னியால் பொறுக்காத தேவர்விஷ்ணுவிடம் குறை கூறினர். விஷ்ணு இவனிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்ன இவன் எல்லாத் தீர்த்தங்களினும் உயர்வாம் தீர்த்தமாதல் வேண்டும் என்ன விஷ்ணு அங்ஙனம் ஆகுக என்று வரந்தந்து பிரமனை அவனிடம் ஏவி உடலின் மீது தவஞ்செய்ய உடம்பைக் கேட்கக் கூறினர். அவ்வகைப் பிரமன் அசுரனிடம் வந்து உடம்பைக் கேட்க அசுரன் அவ்வாறு தந்தனன். பிரமன் அவனுடலிற் றேவர்களை நிறுத்தி யாகத்தை நிறைவேற்று கையில் பூர்ணாகுதியில் அசுரன் உடல்நெறித்தனன். இதனால் விஷ்ணு தர்மதேவதையை அழைத்து அவனுடலில் தேவர்கள் எல்லாரும் வசித்தலால் நீ சிலையுருவாக அவனுடலில் இருக்க என்றனர். பின் தருமதேவதை தருமவிரதை யென்கிற பெண்ணுருக் கொண்டு தவஞ் செய்ய மரீசி அவளை மணந்தனர். ஒருநாள் மரீசி உறங்குகையில் தருமவிரதையைக் கால்பிடிக்கக் கட்டளையிட்டனர். அவ்வகை செய்து கொண்டிருக்கையில் பிரமதேவர் வர இவள் அப்பணி விட்டு அதிதியாக வந்த பிரமதேவரை உபசரித்தனள். இதனால் மரீசி கோபித்து நீ சிலையாக எனச் சபிக்கத் தருமவிரதை நீ வீணாக என்னைச் சபித்தனையாதலால் நீயும் சங்கரன் சாப மேற்கவென்று சிலையுருத் தாங்கித் தீயிற் குளித்துத் தவஞ் செய்திருக்கையில் திருமால் முதலிய தேவர்கள் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்ன இவள் எனக்கு இச்சாபம் நீங்க வேண்டும் என்றனள். விஷ்ணுவாதியர் உனக்கு அவராற் கொடுக்கப்பட்ட சாபம் நீக்கமுடியாது ஆதலால் நீ தர்மதேவ சிலையுருவாக இருக்கின் எல்லாத் தேவர்களும் உன்மீது வசிப்பர் என்று அச்சிலையைக் கயன் உடம்பிலிருந்த நடுவெலும்பை நீக்கிப் பதித்தனர். அதுவே கயாபிண்ட சிரார்த்தமிடுஞ்சிலை. இவன் உடம்பின் நடு எலும்பினால் விச்வகர்மன் விஷ்ணுவிற்குக் கதாயுதஞ்செய்து கொடுத்தனன். (ஆக்னேய புராணம்.)

கயை

கயாவைக் காண்க.

கரசரா

ஒரு இருடி பாஸ்கரர் குமரியிடம் இருக்கு வேதம் ஓதியவர்.

கரஞ்சன்

குதோவரியின் குமரன்.

கரடி

இது காட்டு மிருகங்களில் ஒன்று. இது சற்றேறக்குறைய நான்கு அடி உயரமும், எட்டு அடி நீளமும் உள்ளது. தேகம் கனத்து மயிரடர்ந்தது. கரடி, மாம்சம், சாகம் இவ்விரண்டாலும் ஜீவிக்கும். இது மரம் ஏறித் தேன் கூண்டுகளைத் தின்னும். செல்லுப் புற்றில் வாய் வைத்துறிஞ்சும். இதற்கு முகம் நீண்டு இருப்பதால் பன்றியினத்தைச் சேர்ந்ததாகக் கூறலாம். ஆனால், பன்றியைப் போல் பிளந்த குளம்புகள் இல்லை. இதன் கால்களில் நகங்கள் உண்டு. இதைப் பழக்கினால் மனிதர்க்கு வசப்படும். இது தன்னையெதிர்த்த பிராணிகளுடன் மனிதனைப்போல் பின்னங் கால்களால் நின்று யுத்தஞ் செய்து கொல்லும். இதில் கருங்கரடி, பழுப்புக்கரடி, வெண்கரடி, என மூவகையுண்டு, வெண்கரடி வடகடலை யடுத்த இடங்களில் வசிக்கும்.

கரணம்

1. சாதக தமம். ஒரு காரியத்திற்கு உதவியாக நிற்பதுமாம். (தரு) 2. ஒவ்வொரு திதியையும், இருசம பாகங்களாகப் பிரித்தலால் ஏற்படும் ஒவ்வொரு பாகத்திற்குப் பெயர்.

கரணம் (4)

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், (11). பவ, பாலவ, கவுலவ, தைதுலை, கரசை, வனசை, பத்திரவா, சகுனி, சதுர்ப்பாதை, நாகவா, கியிந்துக்கினம்,

கரத பத்திரம்

இவனுக்கு இவ்வளவு வரியென எழுதிக் கொடுத்தது.

கரதோயம்

1. வங்க நாட்டிற் பிரவகிக்கும் நதி. இது இமாசலகுமரியின் விவாகத்தில் சிவமூர்த்தியின் கரத்திலிருந்து உற்பத்தியானது. 2. வங்காளத் திற்கும் காமரூபத்திற்கும் இடையிலுள்ள ஒரு நதி. A SACRED RIVER WHICH FLOWS THROUGH THE DISTRICTS OF RUNGPUR AND DINAGPUR. IT FORMED THE BOUNDARY BETWEEN THE KINGDOMS OF BENGAL AND KAMARUPA.

கரந்தமன்

A. யயாதியின் நான்காம் பேரன். இவன் அரசாண்டகாலத்துச் சத்துருக்கள் இவன் இராச்சியத்தை முற்றுகை செய்தனர். அரசன்றன் மூக்கின் தொளைகள் இரண்டையும் மூடிக்கொண்டிருந்தனன். இவன் மூச்சிடம் அநேக சேனைகள் பிறந்து சத்துருக்களை நாசமாக்கினர். இவன் குமரன் அவீக்ஷித்து. B. (சூ.) பலினன் குமரன் பொருண் முழுதும் தானத்திற் செலவிட்டு வறுமைக் காலத்துப் பகைவராற் றுரப்புண்டு காட்டிற்சென்று முனிவர் அருளால் குபரனை நோக்கித் தவமியற்றிப் பெருஞ்செல்வ மடைந்து செங்கோல் செலுத்தி ஆங்கீரசரால் முத்தியடைந்தவன். இவன் குமரன் ஆவி தீஷன். C. துர்வசு பேரன். D, சகாதேவனுடன் யுத்தஞ் செய்த அரசன். E. திருசானு குமரன். இவன் குமாரன் மருத்தன், F. (சூ.) கனியின் புத்திரருள் ஒருவன்.

கரந்துரைப்பாட்டு

இது சித்திரக் கவியிலொன்று. ஒரு செய்யுட் பிறிதொரு செய்யுட் சொற்புகாது எழுத்துப் பொறுக்கிக் கொள்ளலாம்படி பாடுவது.

கரந்துவையை

குரோதன் பாரி.

கரந்தை

மாறுபட்டெழுந்தார் மாற்சரியங்கெடக் கைப்பற்றின நிரையை மீட்டது. (பு. வெ).

கரந்தையரவம்

பசுநிரையைக் கைப்பற்றினமை கேட்டுச் செய்யாநின்ற காரியம் தவிரக் கடுகினராகித் திரளுங் கூறுபாட்டைச் சொல்லியது. (பு. வெ)

கரன்

1, விசிரவசுமுனிவருக்கு இராகையல்லது புஷ்போத்கடையிடம் பிறந்தவன். இவன் சூர்ப்பநகையின் ஏவலால் அரணியத்தில் இராமலக்குமணரை எதிர்த்து இறந்தவன், இவன் சகோதரன் தூடணன், திரிசிரன் முதலியோர். 2. கழுதைமுகமுள்ள ஒரு அசுரன். பாலிநதியில் ஸ்நாகஞ்செய்து திருவிரிஞ்சையில் சிவபூசைசெய்து முத்தியடைந்தவன்.

கரம்

இது இடுமருந்து, பெண்கள் புருஷர்களையும், புருஷர்கள் ஸ்திரீகளையும், தொழிலாளிகள் யஜமான்களையும் வசமாக்கும் பொருட்டு அன்னபான தாம்பூலாதிகளில், பற்பல பிராணிகளின் கபால பஸ்மம், அற்பவீர்யவிஷம், மலமூத்ர ஔஷதம், ஓஷதிகளால் செய்யப்பட்டு இடுவதாகிய மருந்து. இவையுண்டோரைப் பல துன்பங்கள் செய்யும்,

கரம்பி

சகுனி குமரன்.

கரவீரன்

கத்துருதநயன் நாகன்.

கரவுவெளிப்படுப்பணி

ஒருவரது மறைத்த செய்கையைத் தான் அறிந்த கருத்தோடு கூடிய தன் செய்கையால் வெளிப்படுத்தல், இதனைப் பிகிதாலங்காரம் என்பர்.

கரான்னம்

ஒரு தீர்த்தம்,

கராளஜநகன்

ஜநகவம்சத்தரசன். வஸிஷ்டருடன் சம்வாதம் செய்தவன்.

கரிகாலன்

1. சோழர் மரபில் கரிகாலன் எனப் பெயர் அடைந்தவர்கள் வேறு சிலரும் இருந்தனர். அவர்களுள் முதல்வன், பொருநராற்றுப் படை, பட்டினப்பாலைகட்குத் தலைவனாகிய கரிகாலன் 1 இவனே முதற் கரிகாலன். இவனுக்குத் திருமாவளவன் எனவும் பெயர். தஞ்சையில் இராஜராஜேச்சுரம் எடுத்த இராஜராஜ சோழனுக்கு மூத்தவனும், இளமையிலேயே வீரபாண்டியனுடன் போரிட்ட ஆதித்தன் 2. இவன் இரண்டாங் கரிகாலன் 2. வீரசோழிய மென்னும் இலக்கணத்தைச் செய்வித்தவனாகிய இராஜகேசரி வர்மன் வீரராசேந்திரன் 1. மூன்றாங் கரிகாலன் 3. கலிங்கத்துப் பரணி கொண்டவனும், பெரியபுராணம் பாடுவித்தவனுமாகிய முதலாங் குலோத்துங்கனை நான்காம் கரிகாலன் 4, என்பர். இந்தக் கரிகாலச் சோழர்களில் திருமாவளவன் எனும் முதலாம் கரிகாலனைப் பற்றிய வரலாறாவது. சோழர்க்கு இராஜதானியா யிருந்தவைகளில் தொன்மையானது உறையூர். இவ்வுறை யூரையாண்ட சோழர்களில் இளஞ்சேட் சென்னி யென்பான் ஒரு சோழன், இவன் அழுந்தூர் வேள்மகளை மணந்திருக்கையில் இவள் கருப்பமுற்று ஒரு ஆண்குழந்தை பெற்றாள். சிலநாளில் இளஞ்சேட் சென்னியாகிய தந்தையிறக்கக் கரிகாற் பெருவளத்தான் அரசிற் குரியனாயினும் ஊரார் கலகத்தால் தன்னகரத்தைவிட்டு வேறு நாடுகளுக்கலைந்து திரிந்தனன். குழப்பம் தவிர்ந்தபின் அரசிலாக்குறையால் அமைச்சராதியர் அரசயானையை யலங்கரித்துவிட அது கருவூரில் ஒளிந்திருந்த கரிகாலனைத் தலமிசை கொண்டுவந்தது. இதைக்கண்ட ஞாதிகள் பொறாமையால் கரிகாலனைச் சிறையில டைத்து வைத்தனர். இவனிருந்த சிறைச்சாலையைச் சிலர் தீயிட்டனர். இதற்கு அஞ்சாத திருமாவளவன், சிறையிலிருந்து தீயிற்குதித்து வெளிவந்து தன்மாமன் இரும்பிடர்த் தலையன் உதவி பெற்றுப் பகைவரையடக்கிச் செங்கோல் செலுத்தினன். இவன் பகைவர் கொளுத்திய தீயைக் கடந்து வெளிவந்த காலத்து இவன் கால்கள் கரிந்தமைபற்றி இவன் கரிகாலன் எனப்பட்டனன். இவனரசுரிமை யெய்திச் சீர்காழி தாலூகா நாங்கூர் வேள்மகளை மணம்புணர்ந்தனன். இவனுக்குச் சேட்சென்னி நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான், என மூன்று ஆண்மக்களும், ஆதிமந்தியார் என ஒரு பெண்மகவும் பிறந்தனர். இவன் வெண்ணி எனும் இடத்தில் பகைவராகிய குறுநில மன்னரையும் இருபெரு வேந்தரையும் வென்றான். இவன் வெற்றியைப் பொறாத ஒன்பது வேந்தர் ஒருங்குகூடி வாகையெனு மிடத்தில் போரிட்டுப் பின்னிட்டனர். இவன் அருவாநாட்டின் மீது படைகொண்டு சென்று ஆண்டிருந்த குறும் பரசரையோட்டி அந்நாட்டை (24) கோட்டங்களாக வகுத்து வேளாளரைக் குடியேற்றினான். இவன் அருவா நாட்டிலிருந்த காமக்கோட்டத் திருப்பணி செய்து வழிபடக் களித்த சாத்தனார் இவற்குச் செண்டு எனும் ஆயுதத்தை உதவினர். இச்செண்டே இமயவரையைத் திரித்த காலையில் உதவிய செண்டாம். பின் வடநாடு சென்று வடுகரை வென்று, பின் அருவா நாட்டின் வடக்காகிய மலையமா நாட்டையடைந்து அதற்கு இரா ஜதானியாகிய திருக்கோவலூரை யாண்ட மலையமான் நண்பனாதலின் அவனை விட்டுப் பன்றி நாடு (நாகப்பட்டினம்) அடைந்து ஆங்கிருந்த எயினர், நாகர், ஒளியர் என்பவரை வென்று பாண்டி நாடு சென்று பாண்டியனையடக்கிச் சேரர் நாடாகிய, பூழி, குடம், குட்டம், வேணாடு, கற்கா எனும் நாடுகளுக்குத் தலைநகராகிய வஞ்சியை யாண்டிருந்த குடவரை அடக்கிப் பொதுவர் எனும் முல்லை நிலத்தலைவரையும், இருங்கோவேள் முதலிய ஐம்பெருவேளிரையும் வென்று, அடங்காது வடவரை செல்ல இமயம் இவன் செலவைத் தடுத்ததால் சினந்து சாத்தன்கொடுத்த செண்டால் அதனைத் திரித்துப் புலிக்கொடியை அதன்மீ தெழுதி மீண்டனன். மீளுகையில் வச்சிரநாட்டரசன் (பண்டில்கண்ட்) இவனுக்கு முத்துப்பந்தர் தர அதனைக் கைக்கொண்டு, ஆங்கு நீங்கி மகதநாடடைந்து அந்நாட்டரசன் போரிட்டு முடியாது பட்டி மண்டபந்தரப் பெற்று, அவந்தியரசன் வாயிற்றோரணந்தரப் பெற்று மீண்டு, இலங்கை மேற்சென்று முதற்கயவாகுக்கு முன்னரசனாகிய சிங்கள மன்னவனை வென்று ஆங்கிருந்த பன்னீராயிரம் குடிகளைச் சிறை கொண்டு தன்னாடடைந்தனன். இவ்வரசன் காலத்துச் சோணாட்டரசர் ஆட்சி இமயம் முதல் சிங்களம் வரையில் பரவியிருந்ததென அறியலாம். இவன் தன் கீழ்வாழ்வார் மகிழவும் வேற்று நாட்டார் தம் நாட்டில் வந்து வாணிகம் நடாத்தவும் செய்தவன், இவன் தன்னாடு வளம் பெருகக் காவிரிக்கு அணை கட்டுவித்தான். காவிரி அணை கட்டுவதற்குச் சற்றுத் தடை செய்திருந்த வடநாட்டுப் பிரதாபருத்திரன் கண்ணைக் குத்தினான் என்பர். இவன் காவிரியால் நாட்டை வளமுறச் செய்து தன்னாட்டை வாணிபத்தாலும் வளமுறச் செயவெண்ணித் தன் இராசதானியைக் காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றினான். இக்காவிரிப்பூம்பட்டினம் முன்னர் காகந்தன் எனும் வேந்தனால் ஆளப்பட்டமையின் இதற்குக் காகந்தியென்று ஒரு பெயர். வங்காளத்தின் தலைநகராகிய சம்பாபதியினின்று வந்து இங்குக் குடியேறிய தமிழர் தமது பழம்பதியின் பெயர் மறவாதிருக்க இதற்குச் சம்பாபதியெனப் பெயரிட்டனர். இதற்குப் புகார் எனவும் ஒரு பெயர். இது காவிரி கடலுடன் கலக்கு முகத்வாரத்திலுள்ளது. இதனுள் மரக்கலங்கள் தடையின்றி வந்து தங்குவதற்கு முற்காலத்து இடமிருந்தது. இதில் பிறநாட்டு வர்த்தகர் வந்து தங்கி வாணிகம் செய்தனர். ஆதலால் சோணாடு வாணிபத்தில் மிகுந்தது. இவன் காலத்துக் கல்வியும் மேம்பட்டிருந்தது. இவன் தன் மாமனார் இரும்பிடர்த்தலையாரெனும் புலவரைத் துணைகொண்டு இருந்தனன். இவன் புலவர்களை ஆதரித்துப் பரிசளித்து அவர் சொல்வழி ஒழுகினன், இவன் காலத்து மதுரையில் தமிழ்ச்சங்கமிருந்த தாகையால் அதிலிருந்த புலவர்களிற் பெரும்பாலாராகிய பாணர், நக்கீரர், மாமூலர், உருத்திரங் கண்ண னார், முடத்தாமக் கண்ணியார், கருங்குழலாதனார், கழாத்தலையார் முதலிய நல்லிசைப் புலவர்களுக்கு வேண்டிய கொடுத்து உபசரித்தமையின் அவர்கள் இவனைத் தாமியற்றிய நூல்களில் புகழ்ந்தனர். இவன், தன்னையும் புகாரையும் புகழ்ந்து பாடிய உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாயிரம் பொன் பரிசளித்துப் பட்டினப்பாலை கொண்டனன். இவன் காலத்து இவன் குமரி ஆதிமந்தியார் எனும் பெண்கவியுடன் வேறு பெண்கவிகளு மிருந்தனர். இவன் அரசில் பல சமயங்கள் பரவியிருக்கினும் இவன் சைவ சமயத்தைத் தழுவினவன் என்பது கச்சி நகரில் ஏகம்பர் திருப்பணியாலும் திருஞானசம்பந்த நாயனார் இவனைப் புகழ்க் திருத்தலாலும், பல வேள்விகளை முடித்தலானும், அறியலாம். இவன் காவிரியின் கரைகண்டு நாட்டிற்குப் பெருவளத்தை யுண்டாக்கின தால் இவனுக்குப் பெருவளத்தான் என ஒரு பெயர். பின்னும் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கண்டு வாணிகத்துறையை வளம்படுத்தமையின் திருமாவளவன் எனவும் கூறப்படுவன். இவன் காலம் சிலர் செங்குட்டுவன் காலமாகிய கி பி. 119ம் நூற்றாண் டென்பர். இவன் செங்குட்டுவனுக்கு முன் நான்காவதான சேரமான் பெருஞ்சேரலாதனுடன் பொருது புறங்கண்டதனாலும், இவன் சிங்களத்திவிருந்து சிறைகொண்டு வந்த ஈழநாட்டுக் குடிகளை ஒரு நூற்றாண்டிற்குப்பின் சோழருடன் பொருது சுயவாகு மீட்டமையானும், திருமாவளவன் புண்ணியதிசை முகம்போகிய வந்தாள். எனவும், “கரிகால்வளவன் நீங்கிய நாள்” “கரிகால்வளவன் தண்பதங் கொள்ளும் தலைநாட் போல” எனவும் கூறியவாற்றாலும் இவன் செங்குட்டுவன் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தவன். அதாவது முதனூற்றாண்டின் இடையில் இருந்தவனாக எண்ணப்படுகிறான். (கரிகாலன் சரிதை.) 2. இவன் பராந்தகச் சோழன் குமரன், பராந்தகச் சோழன் சாரமமுனிவர், செவ்வந்தீசர் பொருட்டு நாகலோகத்திலிருந்து கொண்டு வந்து வைத்த நந்தவன புஷ்பங்களை நாடோறும் இவன் ஏவலாளர் கொண்டு வந்து இவன் மனைவியிடத்துக் கொடுக்க அவள் அதனைச் சூடவும், அரசன் மனைவியிடம் வைத்த விருப்பத்தால் முனிவர் கூறியுங் கேட்காதிருந்தனன். முனிவர் அரசனது செருக்கறிந்து சிவமூர்த்தியிடம் முறையிடச் சிவமூர்த்தி இன்னும் சில நாட்களில் இவ்வுறையூர் மண்மாரி பெய்தழியும் அஞ்சவேண்டாம் என்றனர். அவ்வாறே சில நாள் பொறுத்து மண்மாரி தொடங்கிப் பெய்து கொண்டு வருகையில் அரசனும் கர்ப்பிணியாகிய தன் மனைவியும் உயிர் பிழைக்க ஒரு குதிரைமீதேறி ஊரெல்லையைக் கடக்கத் தொடங்குமளவில் மண் மாரி விடாது பற்றக்கண்டு விரைந்து குதிரையை விட்டனன். இடையிலிருந்த ஆற்றைக் கடக்குமுன் அரசனை மண்மாரி தொடர்ந்து முழுகச்செய்தது. மனைவி ஆற்றிலகப்பட்டு வெள்ளத்தின் வழி சென்று செருக்குவார் பாளயத்தி லொதுக்குண்டு அங்கிருந்த முனிவரால் ஆதரிக்கப்கப் பெற்றனள். பின்பு சிலநாள் பொறுத்து அரசி ஒரு ஆண்குழந்தை பெற்றனள். அரசிழந்த உறையூரார் சிவாக்கினைப்படி பட்டத்துயானையை அலங்கரித்துவிட அந்தயானை செருக்குவார் பாளயஞ் சென்று விளையாடிக் கொண்டிருந்த உறையூர்ச்சோழன் புத்திரனைத் தூக்க அப்பிள்ளை யானைக்கு அசையாதிருந்தனன். அங்கிருந்த முனிவர் அரசியை நோக்கி நீர் ஒரு கரிக்கோட்டால் அப்பிள்ளையின் காலில் ஒருகோடு கிழியும் என்றனர். அவ்வகை. தாய் புரிய யானை எளிதாகப் பிள்ளையைத் தூக்கிச் சிரத்தின்மேல் வைத்துச் சிங்காதனத்தி விருத்தியது. அதுமுதல் இவன் கரிகாற்சோழன் எனப்பட்டனன். இவன் காவிரிக்கரையில் பல சிவப்பிரதிட்டை செய்தனன். அவைக்கணிருந்த முதியோர் பலர் இவன் இளையன் ஆதலின், தம்முள் மாறாயினார் முறை சொல்லானென்று எண்ணிய எண்ணமறிந்து, தான் முதியரைப்போல் நரை முடி கொண்டு கொலு விருந்து முடிவு கூறினன் என்ப, இவன் மீது முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப் படைபாடிப் பரிசுபெற்றனர். இப்பெயர் கொண்ட வேறொரு சோழன் இருந்திருக்கலாம்; அவருள் ஒருவன் பட்டினப் பாலை கொண்டவன். மற்றவன் வீரபாண்டியருடன் போரிட்டவன். இவன் தஞ்சைக்கோயில் எடுப்பித்த இராசராச சோழனுடைய தமயன். இவன் பிறக்குங்காலையில் நல்லநாள் வருமளவுக் தாய் தலைகீழாக இருந்து அந்நாள் வந்தபின் குமரனைப் பெற்றாள் என்பர். இக்கதை கோச்செங்கட் சோழநாயனார் கதையிலும் கூறப் பட்டிருக்கிறது. இவன் இளஞ்சேட் சென்னியின் புதல்வனென்றும் கூறுவர். இவன் சேரன், பாண்டியன் இருவரையும் வெண்ணில் என்ற ஊரில் தாக்கி வென்றனன், கருங்குழலாதனாரால் பாடப்பெற்றவன். இவன் வடநாடு புக்கு வச்சிரம், மகதம், அவந்தி எனும் தேயத்தரசர்களை வென்று அவர்பால் முத்துப்பந்தர், வித்யா மண்டபம், வாயிற்றோரணமும் பெற்றான் என்பர். 3. இவன் பாரி கஞ்சனாங்கி இவனுக்கு ஆசாரியர் கஞ்சனூர் ஆழ்வார் என்கிற அரதத்தர், இவனுக்குக் கருங்குட்டம் வர நருமதை சென்று ஸ்நாநஞ் செய்து பாணலிங்கம் கொண்டுவந்து காஞ்சீபுரத்திலிருந்த சிற்பியின் பன்னிரண்டு வயசு குமரன் சொற்படி ஆலயம் முதலானவை கட்டி முடிப்பித்து இருந்தனன். ஒருநாள் அரசன் கனவில் சிவமூர்த்தி சென்று அரசனே உன் தருமத்தில் கிழவி கொடுத்த நிழலில் இருக்கின்றேன் என அரசன் திடுக்கென்று விழித்து விடிந்தபின் சிற்பிகளை அழைப்பித்து நடந்தவைகளை விசாரித்தனன். சிற்பிகள் அரசனை நோக்கி ஒரு கிழவி எங்கட்கு வேண்டிய காலத்தில் அன்னம், தாகஜலம், தாம்பூலம் கொடுத் துபசரித்தனள். அவளை நாங்கள் உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டோம். அவள் என் வீட்டில் ஒரு கருங்கல் இருக்கிறது. அதனை அரசன் றிருப்பணியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டிய தென்று வேண்டினள். நாங்கள் அதைப் பார்த்ததில் அது அந்தராளத்திற்கு வேறு துண்டுகள் வேண்டாது ஒரே பரப்பாக இருக்குமென எங்கட்குத் தீர்மானமாதலால் அதை யந்தராளத்தில் மூடினோம் எனக்கேட்டு அரசன் விசனமடைந்து சிவசன்னிதியில் ஆகாரமில்லா திருக்கச் சிவமூர்த்தி அரசன் கனவில் தோன்றி அதைக் கிழவியிடத்தில் தானமாக வாங்கிக்கொள்ளென்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தானமாயினர். அரசன் கிழவியைத் தானங் கேட்கக் கிழவி தன் பெயரால் ஒரு சிவாலயங் கட்டுவித்தால் அவ்வகையே செய்வேன் என் அரசன் உடன்பட்டு ஒரு சிவாலயம் அவள் பெயராற் கட்டுவித்து தான் கட்டிய ஆலயத்தில் மூடிய பாவுகல்லிற்காகக் கிழவியிடத்துத் தானம் வாங்கித் தொண்ணூறு வருஷம் ஆண்டு தன் குமரன் பீமசோழனுக்குப் பட்டங்கட்டி நற்கதி யடைந்தவன். இப்பெயர் கொண்டான் ஒருவன் சாத்தனிடஞ் செண்டு பெற்று அச்செண்டினால் மேருவைத் திரித்து மீண்டும தனை முன்னிருந்தபடி நிறுத்தி அதனிடைப் புலிக்கொடி பொறித்துத் தன் வெற்றி வடநாட்டிற் செல்ல ஆண்டானென்பர்.

கரிக்குருவி

இது கருநிறமுள்ள பக்ஷி. வயல்களில் வெட்டுக்கிளி முதலியவற்றைத் தின்று ஜீவிப்பது. இது எருது ஆடுகள் மேயுமிடத்து அவற்றின் மீதேறி அவை மேய்கையிலிடம் விட்டுப் பெயரும் பூச்சி முதலியவற்றைத் தின்பது. இதற்கு வலியவன் எனவும் பெயர் கூறுவர். இதன் வால் இருபிளவாகத் தோன்றும்.

கரிநாள்

வருந்தேதிகள், சித்திரை 6, 15, வைகாசி, 7, 16, 17, ஆனி,1, 6, ஆடி, 2, 10, 20, ஆவணி, 2, 6, 28, புரட்டாசி 16, 29, ஐப்பசி 6, 20, கார்த்திகை முதற் சோமவாரமும், 1, 10, 17, மார்கழி 6, 9, 11, தை 1, 2, 3, 11, 17, மாசி 15, 16, 17, பங்குனி 6, 15, 19. இவற்றில் சுபகாரியங்கள் விலக்கப்படும்.

கரிவாயு

நிலக்கரியிலுண்டாம் வாயு நிலத்தைவிட்டு மேல் தோன்றியவுடன் உஷ்ணத்தால் தீப்பெற்று எரிகிறது. இதனால் தீபம் எண்ணெயில்லாம லெரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

கரீசன்

சிவகணத் தலைவரில் ஒருவன்.

கருக்கன்

1. யதுகுலப் புரோகிதன். பல ராமகிருஷ்ணருக்குப் பெயரிட வசுதேவனால் அனுப்பப்பட்டவன். 2. சிரிக்குத் தந்தை (புமன்யன்) பூரு வம்சத்தவனாகிய உமன்யன் குமரன்.

கருக்குப்பட்டயர்

இவர் சாணாரில் ஒரு வகையார். இவர்கள் கருக்கு மட்டையர் எனவும் படுவர். (தர்ஸ்டன்,)

கருக்ருசாதாக்யம்

பிரதிட்டையெனும் பெயரையுடைய ஞானசத்தி கருத்தாவிற்குக் குணமாதலாலும் ஞானசத்தியில் தோன்றுதலால் கர்த்திருவெனும் பெயருடைத்தாய்ச் சுத்தமாதலால் படிகப்ரகாசமான திவ்யலிங்கமாய் உச்சியில் நான்கு திருமுகங்களும் (12) நேத்திரங்களும் பெற்று வலக்கரங்களில் சூலம், மழு, வாள், அபய மும், இடக்கரங்களில், சர்ப்பம், பாசம், மணி, வரதம், எனுமாயு தங்களைக் கொண்டிருக்கும். (சிவவுரு.)

கருங்கடல்

கருநிறமுள்ளது, அரேபியாவை யடுத்த செங்கடல், செந்நிறமுள்ளது, சீனாவை அடுத்தது மஞ்சட்கடல், ஐரோப்பாவின் வடக்கில் வெண்கடல் இவை நிற பேதமுள்ளவை.

கருங்கிரந்தி

குழந்தைகளுக் குண்டாகும் வியாதி. தேகக்கறுப்பு, சுரம், பாலுண்ணாமை, விழித்து விழித்துப் பார்த்தல், மேல்மூச்சு, மாறுகுணம், அலறல், இருமல், குரல்கம்மல், வயிற்றில் வேதனை முதலிய குணங்களைத் தருவது. (ஜீவ.)

கருங்குழலாதனார்

கரிகாற் பெருவளத்தானைப் பாடியவர். (புற, கா)

கருங்கை

இருவகைத்து, அது கொன்றுவாழ் தொழிலினும், வன்பணித் தொழிலினும், கன்றிய தொழிற்கையாம்.

கருசகன்

வைவச்சவத மனுவின் குமரன்.

கருசம்

கரூசம் காண்க.

கருசம்

1. கரூச னாண்டதேசம். 2. தந்தவக்ரனாண்ட தேசம். பேஹார் நாட்டிலுள்ள ஷஹாபாத் டிஸ்ரிக்டிலுள்ளது. 3. இந்திரன், விருத்திரனைக் கொன்ற பிரமஹத்தியால் பீடிக்கப்பட்டுப் பசிபொ றுக்க முடியாமல் இந்தத் தேசத்திலுள்ள புண்ய தீர்த்தமாடிப் பசியைப் போக்கினன் இந்திரனது பசியை நீக்கியதால் இத் தேசத்திற்குச் கரூசம் எனப் பெயர் வந்தது. (இரா~பால காண்டம்.) THE EASTERN PORTION OF THE DISTRICT OF SHAHBAD, IN THE PROVINCE OF BEHAR,

கருடத்துவசன்

1. திருமால். 2, துரியோதனன் நம்பி.

கருடன்

1. காசிபருக்கு விநதையிடம் பிறக்தவன், இந்திரன் செய்த வேள்விக்கு வாலகில்யர் வர அருகிருந்த பசுவின் குளம்படியி லிருந்த பன்ளநீர் அந்த வாலகில்யரை அமிழ்த்திற்று, இதைக் கண்ட இந்திரன் சிரித்தனன், வாலகில்லியர் இந்திரனது கருவம் பங்கமடையும்படி ஒருவன் உண்டாகவென்று வேள்வி செய்து அவி சொரிந்தனர். இதனால் கருடன் காசிபரிடம் பிறந்து பசியால் வருந்திய போது தாய் சொற்படி வடகிழக்குச் சமுத்திரத்திருந்த வேடர்களை விழுங்கி வேடனாயிருந்த பிராமணனையும் அவன் மனைவியையும் நீக்கிச் சுக்கிரன் அல்லது பிரபாவசு எனும் பெயர்கொண்ட ஆமையையும் சுப்பிர தீபகன் அல்லது நதிபன் எனும் பெயர்கொண்ட யானையையும் பூமியில் வையாது இமயமலையில் வைத்துண்டவன். வைகர்ணமெனும் திருமால் ஆலயத்தில் தன்னினும் மிக்கவலியுற்ற பல கருடர்களைக் கண்டு கர்வபங்க மடைந்தனன். (பார~சாந்) 2. இவன் தாயின் அடிமை நீக்கத் தெய்வவுலகஞ் சென்று அமுத கலசத்தைக் பிரகிக்கையில் இந்திரன் கோபித்து வச்சிர. மெறிந்தனன். அதைக் கண்ட கருடன் வச்சிரத்திற்கு மரியாதையாக ஓரிறகு கொடுத்தனன். இதனால் இந்திரன் களித்து நட்புக்கொள்ளக் கருடன் இந்திரனை நோக்கிச் சிறியதாயின் சொற்படி இதனைக் கொண்டுபோய் நாகருக்குக் கொடுக்கின்றேன், நீ கவர்ந்து கொள் என்றனன், இதனால் இந்திரன் இவனுக்குப் பாம்புகளைத் தின்னும் வரம் அளித்தனன், 3. இவன் அமுதுடன் கருப்பையைப் பூமியில் கொண்டுவந்து பதித்தனன். அதனால் தருப்பை சுத்தமாயிற்று. 4, இவன் வலாசுரன் என்னும் அசுரனுடலைத் தின்று நகைத்து உமிழக் கருடோற்காரமென்னும் மரகத ரத்ன முண்டாயிற்று. இந்த அசுரனது எலும்புகள் வைரமாயின், 5. இவனது வலிமைகண்டு திருமால் கேட்டுக்கொள்ள வாகனமும், கொடியும் ஆனவன். 6. ஒருமுறை காளியன் என்னும் காகன் ரமணகத் தீவுள்ளாரை வருத்த அவர்களுக்கு அபயந்தந்து அக்காளியனை யமுனை மடுவில் ஓடும்படி செய்வன். 7. சௌபரி இருடியால் யமுனையை யடுத்த தடாகத்திலுள்ள மீன்களைப் புசிக்கின் உயிர் இழக்கக் சாபம் பெற்றவன். 8 கண்ணன் புத்திரப் பேற்றின் பொருட்டு உபமன்னியுவிடம் சிவதீக்ஷை பெற்றுத் தவஞ் செய்கையில் துவாரகையை அவுணர் வளைத்து அவர்களைக் கொன்று கோட்டையைக் காத்தவன். 9. இராவண வதத்தில் இந்திரசித்துடன் போர்செய்த இலக்குமணர் நாக பாசத்தால் கட்டுண்ட காலத்து யுத்தகளத்தில் வந்து நாகபாசத்தைப் போக்கி இராமமூர்த்தியைத் துதித்துச் சென்றவன். 10. பாற்கடல் கடைந்த காலத்து விஷ்ணுமூர்த்தியின் ஏவலால் மந்தரமலையை யேந்தினவன். 11. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரீடாசலங் கொண்டுவந்து பதித்துத் திருமால எழுந்தருளுவித்தவன். இதுவே திரு வேங்கடமலை. 12. பாதாளத்திருந்த உபரிசரவசுவைப் பூமியில் இருத்தி அரசு தந்தவன். 13. தக்ஷயாகத்தில் சிவகணங்களுடன் போர்செய்ய வீரபத்திரரால் விடுக்கப்பட்ட அநேகள் சுருடராற் பங்கப்பட்டு விஷ்ணுவைத் தள்ளிவிட்டுப் புறமுதுகிட்டு சென்றவன். (கூர்மபுராணம்). 14. திருக்கைலையில் கருவத்துடன் சென்று அவ்விடத்திருந்த நந்திமாதேவரின் உச்வாச நிச்வாசங்களில் அகப்புட்டு மயங்கித் துதித்தவன். (திருக்கழுக்குன் நப்புராணம்). இவனுக்குப் புள்ளரசு, ககபதி, நாகாரி, பெரிய திருவடி, கருத்மந்தன் எனவும் பெயருண்டு, 15. வாலவிருத்தையென்பவள் யோகம் புரிகையில் அவளுக்கு இடையூறு விளைத்து இருசிறகுமற்று விழச் சாபமேற்றுப் பின் சிவபூசையால் வளரப்பெற்றவன். (திருவாரூர்ப் புராணம்) 16. ஒருகாலத்துத் திருப்பாற் கடலின் மத்தியிலுள்ள சுவேதத்தீவிலிருந்து பாற்கட்டிகளைக் கொணர்ந்து தன் பிடரிச்சட் டையினால் எங்குஞ் சிதற அவை சுவேத மிருத்திகை ஆயின. இம் மிருத்திகையே ஊர்த்வபுண்டாம் தரித்தற்குரியது.

கருடன்

செம்பருந்து ஆகாயத்தில் பறந்து இரைதேடும் மாம்சபக்ஷணி, செந்நிறமான ஒன்றரை அடி நீளமுள்ள இறக்கையை யும் வளைந்த அலகும் இரையைக் கவ்வும் நகங்களுமுள்ளது. இதற்குத் தலை முதல் பாதம்வரை வெண்ணிறம் மேற்புறம் செம்மை.

கருடபஞ்சமி

இது சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம். இது கருடனை நோக்கி ஆவணிமீ சுக்கிலபக்ஷப் பஞ்சமியில் அனு ஷ்டிப்பது, ஒரு அரசன்குமார் எழுவரும் பாம்பினாற் கடியுண்டிறக்க அப்பிள்ளைக்ளின் தங்கை இவ்விரதம் அனுஷ்டித்துப் பாம்பின் புற்றையும் பூசித்து அப்புற்றின் மண்ணைச் சலத்திற்கரைத்து இறந்த தமயன்மாரின் உடல்மேல் தெறித்து உயிர்ப்பித்தனள்.

கருடர்

ஒரு தேவ வகுப்பினர்.

கருடாங்கதன்

கிருதமாதனத்தரசன். (சூளா.)

கருடாந்திகமூர்த்தி

நந்திமா தேவரின் உச்வாச நிசவாசங்களில் அகப்பட்ட கருடனைக் காத்த சிவமூர்த்தியின் திருவுருவம்,

கருணகரக்கவிராயர்

இவர் திருவாவடுதுறை யாதினத்திலிருந்த கவிவல்லர். திருவோத்தூர்ப் புராணம், திருச்சுழியல் புராணம், மருதூர்ப் புராணம், முதலிய பாடியவர். சாலிவாகன சகாப்தம் 1755. இவர் ஊர் பல்லவபுரம். வேளாளர்.

கருணாகரத் தொண்டமான்

இவன் வண்டைநகாத் தரசன். இவனுக்கு நந்தித்தொண்டமான் என்றும் பெயர், இவன்மீது சயங்கொண்டான் என்னும் கவி கலிங்கத்துப் பரணிபாடினர். இவன் ஆயிரம் யானைகளை வென்றவன், சோழன் படைத் தலைவன் எனவும் கூறுவர்.

கருணாபரி பூரணர்

ஒரு சிவகணநாதர். துருவித்தன் எனும் வேதியன் செய்த மகா பாதகத்தைச் சிவமூர்த்தியால் போக்குவித் தவர்.

கருணிகராவனம்

மேருவிற்குச் சமீபத்திலுள்ள ஓர் வனம்.

கருணிகை

1. ஆனகன்றேவி, 2. ஓர் சந்தருவ மாது.

கருணைப்பிரகாசர்

காஞ்சிகுமார சுவாமி தேசிகர்தம் குமாரர் துறைமங்கலம் சிவப்பிரகாச தேசிகருக்குச் சகோதரர். இவர் தருமபுர ஆதினத்து வெள்ளியம்பலவாண சுவாமிகளிடத்து இலக்கண இலக்கியங் கற்று வீரசைவ தீக்ஷை முதலியன பெற்று இஷ்டலிங்கவகவல், சீகாளத்திப் புராணம் முதலிய இயற்றி 18 வது வயதில் சிவலிங்க ஐக்கியமாயினர்.

கருணையர்

சிவப்பிரகாச சுவாமிகளின் பரம்பரையிற் சேர்ந்தவர்.

கருணையாநந்த சுவாமிகள்

இவர் திருமூலர் மரபினர் குருநாதசதகம் பாடியவர்.

கருதன்

விதர்ப்பன் குமாரன்.

கருத்சதன்

(சூர்) வ. சசரதன் புத்ரன் இவாகுவின் பௌத்ரன். இவன் குமரன் அநேநன். (பார.)

கருத்தணி

தெய்வம், ஆசாரியன், மாணாக்கன், புத்ரன் முதலானோரிடம் உண்டாம் பற்றினைத் தெரிவிப்பது இதனை பரேயோலங்காரம் என்பர். (குவல்.)

கருத்தமப் பிரசாபதி

புலத்தியன் குமாரன் தவமேற்கொண்டான். இவன் குமரன் அங்கன்.

கருத்தமாசுரன்

காருட வித்தைக்காரன் போல் தோன்றி விநாயகரை விழுங்கி உமிழாதிருக்க விநாயகர் உமாதேவியின் முகத்தில் தோன்றி அவனைக் கொன்றனர்.

கருத்துடையடைகொளியணி

அபிப்பிராயத்தோடு கூடிய விசேஷியத்தைக் கூறுதல். இதனைப் பரிகராங்குசாலங்காரம் என்ப. (குவல.)

கருத்துடையடையணி

இது, அபிப்பிராயத்தோடு கூடிய விசேஷணத்தைக் கூறுதல். இதனைப் பரிகாராலங்கராம் என்பர். (குவல.)

கருத்மந்தன்

கருடனுக் கொருபெயர்.

கருநாகம்

இது கிருஷ்ண சர்ப்பமெனப் பெயருற்ற கரும்பாம்பு, சிறுநாகம் இதனைப் பூகாகம், புல்காகம் எனக் கூறுவர். இது மகா விஷமுன்ளது. தாழம், பூவினுள் வசிப்பது ஈர்க்குப்போல் உடலைப்பெற்று தருப்பை அகலம் படத்துடனிருப்பது. (ஜீவ.)

கருநாடகம்

சென்னை ராஜதானியிலுள்ள மைசூர் தென் கன்னடத்தைச் சேர்ந்த தேசம், தமிழ் தெலுங்கு நாடுகளுக்கு மேற்கிலுள்ள நாடு, THE PROVINCE OF MYSORE AND THE DISTRICT OF SOUTH KANARN IN THE MADRAS PRESIDENCY, AND THE DISTRICTS OF NORTH KANARN, BELGAUM AND DHARWAR IN THE BOMBAY PRESIDENCY.

கருநாடகர்

மராஷ்டிர தேசத்திருந்து தமிழ் நாட்டிற் குடிபுகுந்த பிராமணர்.

கருமசன்மன்

இவன் ஒருவேதியன். பாவத்தொழிலால் வதிந்து பழிமேற்கொண்டு சிலவேதியரை நிந்தித்து உலகாயதம்பேசிக் காமியாய் இறந்து வேடனாய்ப் பிறந்து அரசனது பசுக்களைக் கவர்ந்து செல்லுகையில் நடக்க இயலாத பசுவை ஓட்டிச் செல்லமுடியாது சேவகர் வராமுன் சிவாலயத்துள் அந்த நொண்டிப்பசுவைச் செலுத்தித் தான் மற்றவைகளை ஓட்டித் தன் னிருக்கை சென்றனன். இதுநிற்க முன் நடவாமையால் கோயிலில் செலுத்திய பசு பரிசாரகர் ஊட்டிய உணவின் பலத்தால் வலிகொண்டு கன்றீன அப்பாலைச் சிவமூர்த்திக்கு ஆட்டினர். அப்புண்ணியத்தால் வேடன் நல்லறிவுகூடிச் சிவபணி மேற்கொண்டு முத்திபெற்றனன்.

கருமபூமி இயல்

கருமபூமியாவது உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் முதலிய அறுவகைத் தொழிற் பாகுபாட்டினை உடையது.

கருமான்

இரும்பு வேலை செய்யும் கம்மாளன்.

கருமான் ஆயுதங்கள்

பட்டடை, சம்மட்டி, உலையாணிக் கோல், பெருங்குறடு, சிறு குறடு, சுட்டுக்கோல்.

கருமாபாயி

ஜகந்நாதத்திலிருந்த ஒரு பார்ப்பனி. இவள் கர்ப்பிணியா யிருக்கையில் கணவனிறந்தனன். இவளுக்கு ஒரு குமரன் பிறந்து மணஞ் செய்து கொண்டு பேரன்பிறக்க அக்குமரனும் இறந்தனன், சிலநாள் தரித்துப் பேரனு மிறந்தனன். இதனால் துக்கமுடையவளா யிருக்கையில் பாகவதர் சிலர் சாது சேவையின் மகிமைகளை அவளுக்குத் தெரிவித்து ஒரு கிருஷ்ண விக்கிரகத்தைக் கொடுத்து ஆராதிக்கவெனக் கூறிச் சென்றனர். அவ்வாறே இவள் கண்ணனிடத்துப் புத்திரப் பிரீதியை வைத்து ஆராதித்து வருகையில் ஆராதனைக்குக் கால தாமசமாதல் கண்டு பகவான் பிரசன்னனாய்ப் பக்தி பாவனைக்குக் கர்ம நிபந்தனங் கிடையாதென்று அதிக அன்புடன் இவள் அளித்த அன்னத்தை உண்டனன். இதைக் கண்ட பாகவதர் கர்மாபாயியை வியந்தனர்.

கருமேந்திரியம்

(5) வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம். கரும்பனூர்க்கிழான். நன்னாகனாரால் புகழ்ந்து பாடப்பட்ட வேளாண் பிரபு. வேங்கடத் தருகிலாண்டவன். (புற. நா.)

கரும்பன்

தொண்டை நாட்டு வேளாண் பிரபு. தான் பயிரிட்ட கரும்புகள் முற்றியதறிந்து அதனை யுண்ணும்படி பலரை வேண்டியழைத்து உண்ணச்செய்யச் சிலர் மறுத்ததால் அவர்க்குக் கூலி கொடுத்து உண்பித்தவன், இவனைப்பற்றியே “கரும்பு தின்னவுங் கூலியுண்டா ” என்னும் பழமொழி வழங்கி வருகிறது.

கரும்பிள்ளைப் பூதனார்

இவர் பரிபாடலில் பத்தாவது பாடலைப்பாடிய புலவர். இவரது வரலாறு ஒன்றுந் தெரியவில்லை. இவர்க்கு இப்பெயர் உருவத்தால் வந்த பெயராக இருக்கலாம் போலும். (பரிபாடல்).

கரும்பு

1, இது, புல்லினத்தைச் சேர்ந்த பயிர்; இனிப்புள்ளது. முற்றிய கரும்பைக் கணுவுள்ளனவாகத் தறித்துத் துண்டுகளைச் சாய்த்து நட்டு நீர்பாய்ச்ச வேண்டும், அதிலிருந்து பல முளைகள் தோன்றிப் பயிராகும். இவை, இந்தியா, சீனா முதலிய இடங்களிலும், அமெரிக்கா கண்டத்திலும், வெஸ்டிண்டீஸ் தீவுகளிலும் உண்டாம். இதனால் சர்க்கரை செய்யப்படுகிறது. இக் கரும்பு வகையில் செங்கரும்பு, வெண்கரும்பு, நாணற் கரும்பு, பேய்க் கரும்பு, உண்டு, பேய்க் கரும்பு சடைபோன்று உள்ளீட்டில் சாரமற்றது. மற்றவையில் சாரம் உண்டு, 2, இதில் சந்திரன் பிறந்தனன். (பார். அச்~வைஷ்ணவ தர்ம பர்வம்.)

கரும்புரட்டன்

பனைமரம் ஏறும் சாணானுக்குப் பெயர்.

கருவுளமைப்பு

(6) பேறு, இழவு. இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு,

கருவூரேறிய வொள்வாட் கோப்பெருஞ் சோலிரும்பொறை

நரிவெரூஉத்தலை யார்க்கு உடம்பு தந்து புகழடைந்தவன்

கருவூர்

இது. சேரருடைய இராசதானி. இதற்கு வஞ்சியென்றும் பெயருண்டு.

கருவூர்

சேரர்க்கு இராசதானி. பின்சோழரு மரசாண்ட இடம்,

கருவூர் ஓதஞானி

கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். கொங்கு நாட்டுக் கருவூரினர். தலைவியினுறுப்பை ‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’ எனப் புகழ்ந்தவர். (குறு 71,227)

கருவூர் நன்மார்பனிருங்க னொல்லையாயன் செங்கண்ணனார்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர்.

கருவூர் நன்மார்பன்

கடைச்சங்க மருவிய புலவரில் ஒருவர். இவரியற் பெயர் நன் மார்பன் உறுப்பால் வந்த பெயர். ஊர் கருவூர். (அக~277)

கருவூர் பவுத்திரன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர் கொங்கு நாட்டுக் கருவூரினர். இவர் முல்லையை நோக்கி நீக்குதல் தகுமோ எனப் பாடியது இனிமையுடையது. (குறு 162)

கருவூர்கிழார்

வேளாளர். கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் கொங்குநாட்டுக் கருவூராக இருக்கலாம். பிறப்பால் வேளாண் குடியினராகலாம். (குறு 170.)

கருவூர்க்கண்ணன்பாளனார்

கடைச் சங்க மருவிய புலவர். இரந்து பின்னின்ற தலைமகள் சூட்டிய மலரைத் தலைவி புகழ்ந்து கூறியது முதலிய பாடியவர். (அகம் 180, 263.)

கருவூர்க்கண்ணம்புல்லனார்

இவர், தலை மகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குக் கூறியதாகப் பாலையினது அச்சங் கூறியவர், (அகம் 63.)

கருவூர்க்கதப்பிள்ளை

நாஞ்சில்வள்ளுவனை இயன்மொழி வாழ்த்துப் பாடிய புலவன். (புற. நா.) (குறு, தொ.)

கருவூர்க்கந்தப்பிள்ளை சாத்தனார்

பிட்டங் கொற்றனை “வையகவரைப் பிற்றமிழகங் கேட்பப், பொய்யாச் செந்நா நெளிய வேத்தி, பாடும் வென்ப பரிசிலர் நாளும், ஈயாமன்னர் நாண, வீயாது பரந்தநின் வசையில் வான்புகழே. ” என இயன் மொழி வாழ்த்துப் பாடிய புலவர். (புற~று. அக~று.) (குறு~தொ.)

கருவூர்க்கலிங்கத்தார்

கடைச்சங்க மருவிய புலவர், பாலைத்திணை பாடினவர். 183 (அக~று.)

கருவூர்க்கோசனார்

இவர் பாலைத்திணையிற் பயின்றவர். தமது பாடலில் சோம்பலாய்ச் செயலற்றிருப்பவர்க்குக் கீர்த்தியும், இன்பமும் கொடைத் தன்மையுமாகிய இவையில்லை யாகுமென்று தெளிவாக கூறியுள்ளார். இவர் பாடியது நற் 214ம் பாட்டு.

கருவூர்ச்சேரமான் சாத்தன்

இவர் கொங்குநாட்டுக் கருவூரினர் போலும். பிறப்பால் சேரர் குடியினராக இருக்கலாம், இவர் பெயர் சாத்தன், (குறு~268)

கருவூர்த்தேவர்

இவர் கருவூரில் பிராமண குலத்திலுதித்து ஞான நூலாராய்ந்து சைவ சமயத்தைக் கடைப் பிடித்துச் சிவயோக சித்தியடைந்து சாதிகுலம் நீத்துச் சிவத்தல யாத்திரை செய்து திருவிசைப்பா பதிகம் பாடிவந்தனர். (அவற்றுள், கோயில், திருக் களந்தை ஆதித்தேச்சுரம், திருக்கீழ்க் கோட்டூர், மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோளேச்சுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை ராஜராஜேச்சுரம், திருவிடைமருதூர் இப்பதிகங்களே இப்போதுள் ளவை. இவரிடம் அருவருப்படைந்த வேதியர் சிலர், இவர் மது மாம்ச பக்ஷணி யென்று அருவருக்க அந்த வேதியர்க்கறிவூட்டத் தேவர் அகாலத்தில் மழை வருஷிக்கச் செய்வித்தும், ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்வித்தும் பூட்டியிருந்த கோயில் திருக்கதவம் திறக்கச் செய்வித்தும், தமக்குப் பூதங்கள் குடைபிடித்து வரச்செய்தும், பல அற்புதங்களைக் காட்டினர். இவர் பல தலங்களை வணங்கிக் கஜேந்திரமோக்ஷ மெனுந்தலமடைந்து அவ்விடமிருந்த முன்றீசரை அழைக்க அவர் தரிசனந்தந்து என்ன வேண்டு மென்றனர். தேவர், கள் வேண்டுமென்றனர். முன்றீசர், காளிக்குக் கட்டளையிடக் காளி மதுக்குடமளித்தனள், பின்னுந் தேவர், காளியை மீன் வேண்டு மென்னக் காளி கோட்டவாசிகளைக் கேட்க அவர்கள் தேடியும் மீன் அகப்படாமை கண்டு தேவர் அங்கிருந்த வன்னிமாத்தை நோக்கினர். அம்மரம் மீன்மாரி வருஷித்தது. அவ்விடம் விட்டு ஒரு விஷ்ணு வாலயத்தை யடைந்து பெருமாளையழைக்க அவர் வராமையால் கோயில் பூசையிலா திருக்கச் சபித்துத் திருக்குற்றால மடைந்து சிவதரிசனஞ் செய்து திருவிசைப்பா பாடிப் பொதிகையிலெழுந்தருளி யிருந்தனர். இவர் அவ்விடமிருக்கையில் நெல்வேலியப்பர் சந்நிதானத்து முன்னின்று நிவேதன காலமென்றறியாமல் “நெல்லையப்பா,” என்று மூன்று முறையழைக்க மறுமொழி பெறாத தனால் கடவுள் இங்கு இல்லையென்று நீங்க ஆலயத்தில் எருக்கு முதலிய முளைத்தன. நெல்லையப்பர், தேவரை மானூரில் சந்தித்துத் தரிசனந்தந்து. அடிக்கொரு பொன் கொடுத்து நெல்வேலிக் கழைத்துவந்து காட்சி தந்தனர். அதனால் முன் முளைத்த எருக்கு முதலிய தகாத பூண்டுகள் ஒழிந்தன. இவரை அநாசாரமுள்ளவர் என்ற மானூர் வேதியர்க்கு அவ்வூரில் வீடில்லா மற்போகச் சாபமளித்தனர். இவர் அவ்விடமிருந்த காலையில் தஞ்சாவூர் அரசன் செய்த சிவப்பிரதிட்டையில் அஷ்டபந்தனம் பலமுறை இளகிப்பந்தனம் ஆகாமற் போயிற்று. இதனால் அரசன் வருந்த அசரீரி கருவூர்த்தேவர் வரின் பந்தனமாம் என்றது. இதனை உருமறைந்தவ்விடம் வந்திருந்த போகநாதர் காக்கையின் கழுத்தில் ‘சீட்டெழுதி யனுப்பித் தேவரை வருவித்தனர். அங்கிருந்தார் தேவரை வேண்டத் தேவர் அங்கிருந்தார் சம்மத மேற்கொண்டு கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்தை அஷ்டபந்தனஞ் செய்தனர்; அங்கிருந்து திருவரங்கஞ் சென்றனர். அவ்விடமிருந்த தாசி, இவரது தேகப்பொலிவைக் கண்டு தன் கருத்தை அறிவிக்க அதற்கிசைந்து அவளிடமிரண்டு நாளிருந்து நீங்கிப் பெருமாளைத் தரிசித்து அவர் தந்த இரத்தினப் பதக்கத்தைத் தாசிக்குத் தந்து நீங்கத் தொடங்கினர். அந்தத் தாசி பிரிவாற்றாது வருந்தியது கண்டு நீ எப்பொழுது நினைக்கினும் வருவேன் என்று தலயாத்திரை செய்தனர். தாசி இவர் தந்த பதக்கத்தைப் பூண்டு வெளிவரக் கோயிற்றானிகர் இவளை இந்தப் பதக்கம் ஏதென்ன இஃது எனக்கு ஒரு வேதியராற் கொடுக்கப்பட்ட தென்றனள். கோவிலதிகாரிகள் இவள் வீட்டைக் காவலிடத் தாசி தேவரை நினைத்தனள். தேவர் வந்தனர். அதிகாரிகள் இப்பதக்கம் ஏதென்னத் தேவர் பெருமாளை அழைக்கப் பெருமாள் அனைவருங்காண ஆகாய வீதியில் தரிசனந் தந்து நாமே கொடுத்தோமென்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தானமாயினர். அவ் வற்புதங் கண்டார் அஞ்சி அபராதக்ஷமை வேண்ட அநுக்கிரகித்துக் கருவூரடைந்கதனர். அவ்விடமிருந்த வேதியரிற் சிலர் அரசனிடம் இவர் அநாசாரமுற்றவர் என்று குறைகூறி அரசனைத் தேவர் வீட்டைச் சோதிக்க எவினர். அந்தப்படி அரசன் உடன்பட்டுத் தேவரிருக்கை சென்றுசோதிக்க எவ்விடத்தும் வைதிகப்பொருள்களே நிறைந்திருக்கக் கண்டு அஞ்சிநிற்கத் தேவர் அரசனைநோக்கிக் குறைகூறிய வேதியர் வீடுகளைச் சோதிக்க ஏவினர். அந்தப்படி அரசன் அந்த வேதியர்களின் வீடுகளைச் சோதிக்கையில் மதுமாமிச முதலிய அநாசாரப் பொருள்களைக் கண்டு வெறுத்து, வேதியர்களை ஊரைவிட்டு ஒட்டினன். நீங்கிய வேதியர் ஒருங்குகூடிக் கருவூர்த் தேவருக்குத் துன்பஞ்செய்யத் தொடங்குகையில் தேவர் பயந்தவர் போல் திருஆனிலைக் கோயிலையடைந்து சிவமூர்த்தியைத் தழுவிக்கொள்ளச் சிவமூர்த்தி இவரைத் தம்மில் ஒடுக்கினர். இவர் போகரிஷியின் மாணாக்கருள் ஒருவர். இவரைக் கருவுரார் என்றுங் கூறுவர். இவர் செய்த நூல் திருவிசைப்பா, பலவைத்திய நூல்கள்.

கருவூர்ப் பூதஞ்சாத்தனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக 50). கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனூர். இவர் கோப்பெருஞ்சோழன் துறவு பூண்டு வடக்கிருக்கக் கண்டு மனமுருகி, “உள்ளாற்றுக்கவலை” எனப் பாடியவர். (புற. நானூறு 219)

கருஷன்

வைவசுவதமனுவின் புத்திரன். இவனிடமிருந்து காருஷர் என்னும் அரசர் பிறந்தனர்.

கரூசன்

வைவச்சு தமனுவின் குமாரர்களில் ஒருவன். இக்ஷ வாகுவின் தம்பி.

கரூர்

கொச்சி நாட்டிற் பெரியாற்றங்கரையிலுள்ள ஊர்.

கரேசன்

செவ்வாயின் புத்திரன்.

கரையார்

கடற்கரையிலிருந்து வாழ்வோர். கடவில் மீன்பிடிக்கும் தொழில் மேற்கொண்டவர்.

கரையேறவிட்டநல்லூர்

இது நடுநாட்டிலுள்ள ஒரு சிவத்தலம், மாணிக்கவாசக சுவாமிகள் இத்தலத்தருகே வருகையில் கெடிலம் பெருகி வழி தடுத்ததால் சிவமூர்த்தி சித்தரா யெழுந்தருளி வழிவிடக் கட்டளையிட்ட தலம்.

கர்க்கர்

1. ஆதிசேஷனிடந் தவஞ்செய்து நிமித்தசாஸ்திரத்தையும், சோதிடசாஸ்திரத்தையும் பெற்றவர். 2. சிவபூஜாபலத்தால் சகல கலைகளையும் அடைந்தவர். (சிவ~புரா.) 3. இவர் தருமருக்குத் தாம் சிவபூசையால் அறுபத்தினாலு கலைகளையும் ஆயிரம் புத்திரர்களையும் புத்திரர்களுக்கும் தமக்கும் பத்துலக்ஷ வருஷ ஆயுளையும் பெற்றதாகக் கூறியவர், பார அநும்.

கர்க்காசாரியர்

ஒரு கணித சித்தாந்த பண்டிதர். இவர் சற்றேறக்குறைய 2000 வருஷங்களுக்கு முன்னிருந்தவர்.

கர்க்கோடன்

கார்க்கோடனைக் காண்க.

கர்ணகை

1. ஒரு காந்தருவப் பெண், 2. ஆநகன் தேவி. 3. கோவலன் மனைவி.

கர்ணன்

1. (கன்னன) குந்திதேவி கன்னிகையாயிருக்கையில் இவள் தந்தை அவ்விடம் வந்திருந்த துருவாச முனிவர்க்கு உபசரிக்கக் கட்டளையிட்டனன். அந்தப்படி உபசரிக்க அந்த முனிவர் களிப்புற்று உபதேசித்த மந்திர உபதேசத்தைப் பெற்று இருந்தனள். ஒருநாள் தனது இருக்கையின் மேவிடத்தில் உலாவுகையில் இம் மந்திர பலத்தை அறிவோமென்று அதை உச்சரித்தனள். அந்த மந்திரதேவதையாகிய சூரியன் எதிர்தோன்றி மந்திரத்தின் செய்கை கூறினன். இதைக்கேட்ட குந்தி நான் கன்னிகையெனச் சூரியன் அவளுக்குத் தக்க பருவமளித்துக் கூடினன். அதனால் இப்புத்திரன் கவசகுண்டலதாரியாய்ப் பிறந்தனன். தாய் உடனே இக் குழந்தையை ஊரின் அபவாதத்திற்கஞ்சித் தன் முன்றானையில் சிறிது கிழித்துத் தன்னிடமிருந்த பெட்டியிலிட்டுக் குழந்தையை அதில் வளர்த்தி அருகிருந்த ஆற்றில் விட்டனள். அக்குழந்தை பொதிந்த பேழை ஆற்றுநீர் வழியே அத்தினபுரத்தினருகில் வந்தது. அந்த வேளையில் சூத குலத்தவனாகிய அதிரதனெனும் சாரதியும் அவன் பாரியும் நீராடவந்து ஆற்றோரமாய் வரும் பெட்டியைக் கண்டெடுத்துப் பார்க்கையில் உள்ளே அதிகப் பிரகாசமாய்க் குழந்தை யிருக்கக்கண்டு நமக்குக் கடவுள் அனுக்கிரகத்தால் இக்குழந்தை கிடைத்ததென்று வளர்த்துக்கொண்டனர். இவனுக்குப் பெயர் ஆகாயவாணி யாலிடப் பட்டது. இவன் வளர்ந்து வில்வித்தை கற்கும்படி துரோணரையடுத்து வேண்டுகையில் அவர் மறுத்தது கண்டு பரசுராமரிடஞ் சென்று தன்னைப் பிராமணனெனக் கூறி வில்வித்தை கற்றனன். இவன் வில் காளபிருட்டம் எனப்படும். இவனைக் கச்சைக்கொடியினன் என்பர். இவன் குமரனைச் சூரியகேது எனவும் விருஷசேனன் எனவுங் கூறுவர். இவன் தேவி காஞ்சனமாலை. இவன் சங்கம் பராபரம். இவன் இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஒருமுறை பரசுராமர் இவன் தொடையில் தலைவைத்துறங்க இந்திரன் வண்டாக இவன் தொடையைத் தொளைத்தனன். அவ்வாறு உதிரம் பெருகத் தொளைத்தும் கன்னன் ஆசாரியருக்கு நித்திராபங்கம் நேரிடுமென அசையாதிருந்தனன். ஆசாரியர் எழுந்து எங்கும் உதிர வெள்ளமிருத்தலைக் கண்டு. வரலாறு கேட்டு நீ க்ஷத்திரியன் என்னை வஞ்சித்ததால் சமயத்தில் இந்த வித்தை உதவாதிருக்கவெனச் சபித்தனர். இவன் ஒரு காலத்து ஒரு முனிவனுடைய பசுங்கன்றிவன் தேர்ச்சக்கரத்திற் பட்டிறந்ததால் முனிவனால் யுத்தத்தில் தேரழுந்தச் சாப மடைந்தவன். இவன் துரோணர் தனக்கு வில்வித்தை கற்பித்துக் கொடாததால் அவரது மாணாக்கரில் வல்லவனாகிய அருச்சனனிடம் பகை கொண்டிருத்தலைத் துரியோதனன் கண்டு இவனைச் சிநேக னாகக்கொண்டு அங்கதேசாதிபதியுமாக்கினன். இவன் அரசாண்டு அருச்சுனனிடம் உள்ளில் பகை பூண்டு துரியோதனன் பாண்டவருடன் யுத்தஞ் செய்த காலையில் பாண்டவர் சேனையுடன் மாறு கொண்டு அருச்சுனனைப் பகைத்து அவனைக் கொல்லவந்து சரணடைந்த நாகாத்திரத்தைப் பெற்றுக், குந்தி தன் புத்திரன் என்றறிவிக்க அறிந்து கொண்டும் அவள் வேண்டிய வரப்படி அந்த நாகாத்திரத்தை ஒருமுறைக்குமேல் அருச்சனன் மீது எய்யாதிருக்க வரந்தந்து குந்திதேவியிடம் தானிறந்தபின் தன்னை இன்னானென்று அறிவிக்கும்படி வரம் வேண்டிப் பாரதத்தில் பாண்டவர் சேனையுடன் பதினான்கா நாள் இரவிலும் பகலிலும் பதினாறு நாளிலும் யுத்தஞ் செய்து அருச்சுனன் பொருட்டு இந்திரன் பிராமண வுருக்கொண்டு வந்து கவசகுண்டலம் யாசிக்கத் தந்தவன். இவன் பதினேழாம் நாள் தளர்ந்திருக்க அருச்சுனன் பாணம் ஏவ இவனது தருமம் தருமனைப்போல் எதிர்தோன்றி அருச்சுனனைத் தடைசெய்தது. அதனை உணர்ந்த கண்ணன் வேதிய உருவமாய்வந்து தருமத்தை யாசிக்க அவர்க்கு அதனைத் தர நீரில்லாமையால் தன்னுடவில் பொத்திக் கொண்டிருந்த அம்பின் வழி ஒழுகிய உதிரத்தால் தாரை வார்த்து அருச்சுனன் கைப்பாணத்தா லிறந்து நற்பதமடைந்தவன். இவனிதற்கு முன் சன்மத்தில் ஆயிரக்கவசனென்னும் அரக்கன். ஆயிரக்கவசனைக் காண்க. இவன் குழந்தையாக விளையாடிக்கொண்டிருக்கையில் சத்த இருடிகளும் சூரிய புத்திரன் என்று காணவந்து குழந்தைகளை வழக்கமாய்க் கைதட்டி அழைத்தல் போல் அழைத்து வருக என்று கைநீட்டினர் எனவும், அதனைக் குழந்தையாயிருந்த கன்னன் ஏதோ நம்மை விரும்பிக் கேட்கின்றனர் என்று எண்ணித் தனது உச்சியில் தரித்திருந்த நெற்றிச் சுட்டியைப் பிடுங்கித் தர வந்தனன் எனவும் அக்காலத்துச் சத்த இருடிகளும் இவனது வள்ளன்மையைக் கண்டு மகாத்தியாகியாக என வாழ்த்தினர் எனவுங் கூறுவர். தீர்க்கதமனைக் காண்க. 2. சுக்கிர குமரன் அசுரபுரோகிதன்.

கர்ணரோகம்

இது பீனசம், நீர்விளையாடல், தினவினால் காதைக்குடைந்து சொரிதல் ஆகிய இவைகளாற் பிறந்து அதிகரிக் கின்ற திரிதோஷங்களினால் செவி நரம்புகளில் வியாபித்து அந்த மார்க்கத்தில் வேதனையைச் செய்வது. இதனால் காதிற்குள் ஐந்துவித சூல ரோகமும் சங்கிர சாதியாகிய (20, ரோகங்களும் உண்டாகும். அவை வாதகர்ணசூலை, பித்தகர்ணசூலை, சிலேஷ்மகர்ண சூலை, திரிதோஷகர்ண சூலை, ரத்தகர்ணசூலை என ஐந்து வகைப்படும். சங்கிர சாதியாக ரோகங்கள் (20) 1. கர்ணநாத ரோகம், 2, பாதிரிய ரோகம், 3. பிரதிநாக ரோகம், 4, கர்ணகண்டு ரோகம், 5. கர்ணசோபை ரோகம், 6. கர்ணபூதி ரோகம், 7. கர்ணவித்திரதி ரோகம், 3. கர்ணரசோற்புத ரோகம், 9. கர்ணற்புத ரோகம், 10. கர்ணகிருமி ரோகம், 11. காணகூசிகா ரோகம், 12 காணபிப்பலி ரோகம், 13. காணபிதாரிகா ரோகம், 14. கர்ணபால சோஷ ரோகம், 15. கர்ணதந்திரிகா ரோகம், 16. கர்ணபரிபோடக ரோகம், 17. கர்ணோற்பாத ரோகம், 18. காணோன்மந்த ரோகம், 19. துக்கவர்த்தன ரோகம், 20. கர்ணலகிய ரோகம்.

கர்த்தமன்

சௌபரி முனிவரால் நன்மையடைந்த அரசன்.

கர்த்திரியோகம்

லக்கினத்திற்கு முன்பின் பாபிகள் நிற்கில் கர்த்திரி யோகமாம்.

கர்நாடகம்

தமிழ், தெலுங்கு, தேசங்களுக்கிடையிலுள்ள நாடு, கர்பந்தரிக்கும் நாள் பேதம். கர்பந்தரிக்கும் நாள் பேதத்தாலே பிறக்கும் பிள்ளைகள் குணமும் தேகபலமும் பலவிதங்களாம். அமாவாசையில் கருத்தரிக்கின் கறுப்பாய் நான்கு, ஆறுவிரல் உள்ளதாய்ப் பிறக்கும். தூரப்பிரயாணம் போனவன் அன்றிரவு கூடின் பிறந்தவனால் சம்பத்து நாசமாம், பிள்ளை மிடியனாம், தூரத்திலிருந்து வந்த பெண்ணை அன்றிரவு கூடின் பிறந்தவன் அறிவிலாதவனாவன். புணர்ந்தவுடன் முழுகில் கற்புத்திரனாம், புணர்ந்து முழுகாத நாள் பிள்ளை ஆகாதாம், அமாவாசை பிரதமைநாளிற் கூடில் பொய்யனாவன். அமாவாசை கழிந்த மூன்றா நாள் கூடிப் பிறந்த பிள்ளை அற்பாயுளாம். பௌரணையிற் கூடிப் பிறந்த பிள்ளை ஆனைவடிவாம். பௌரணை கழிந்த பிரதமையிற் கூடிப்பிறந்த பிள்ளை குமரகண்ட வலியனாம். பிறை பிறந்த பிரதமை, நடுவில் பதினைந்தாநாள் கூடிப் பிறந்தால் பித்தன், கருங்குட்டன், வெண்குட்டன், முயலக வலியுளானாம். புணர்ச்சிகாலத்தில் பேசாததைப் பேசின் பேடாம். பெண் நிர்வாணமாய்ப் புணரின் மிடியனாம். மனைவி அல்லாத வேறொருத் தியை எண்ணிப் புணரின் ஆறுவிரல் நாலுவிரலாம். பிறைகண்ட 3, 5, 8,10 இந்த நாட்களில் எந்த மாதத்திலும் புணரக்கூடாது. வெள்ளி நாள் பகல் மூன்றாம் சாமத்திற் கூடிப் பிறந்த பிள்ளை மாறு கண்ணம். பெண் சூதகமான மூன்றாநாள் கூடிப் பிறந்த பிள்ளை கள்ளனாம். நாலா நாள் பாவியாய் மூடனாய்த் தன் வயிறு வளர்க்கிறது அருமையாம். ஐந்தாநாள் புலவனாம். ஆறா நாள் விரதகேடனாம். எழாநாள் தயாபரனாம். எட்டாநாள் தரித்திரனாம். ஒன்பதா நாள் குபேரனாம். பத்தா நாள் காமியாம். பதினோராநாள் பிணியனாம், பன்னிரண்டாநாள் பண்டிதனாம். பதின்மூன்றாநாள் விவேகியாம். பதினாலா நாள் போகியாம். பதினைந்தாநாள் அரச னாம். பதினாறா நாள் யோகியாம். பதினேழாநாள் முதலிய நாட்களில் கருத்தரியாதாம். ஒருநாளின் முதற் சாமத்திற் பிறக்கின் பாவியாம், பின் அந்தச் சாமத்திற்கு உள்ளாக ஜனிக்கின் கோபியாவன். இரண்டாம் சாமம் மத்தியானத்திற் பிறந்தவன் சமதமாதி குணங்கள் உடையவனாவன். மூன்றாஞ் சாமத்திற் பாதகனாம். நாலாஞ் சாமத்தில் அஸ்தமன சமயத்தில் பிறந்த பிள்ளை. ஹாதியாவன். இராத்திரி காலம் முதற் சாமத்திற் பிறந்த பிள்ளை அதமனாவன். இரண்டாஞ் சாமத்திற் பிறந்தவன், சமதமாதிகுணம் உள்ளவனாவன். மூன்றாஞ் சாமத்திற் பிறந்தவன் தீயோனாவன். நான்காம் சாமத்திற் பிறந்தவன் யோகியாவன்.

கர்ப்பமுகத்தினங்கம் (12)

இது நாடக விகற்பம். அபூதாரணம், மார்க்கம், உருவம், உதாயிருதி, கிரமம், சங்கிரகம், அநுமானம், தோடகம், அதிபலம், உதேகம், சம்பிரமம், ஆகேவம், என்பன.

கர்ப்பமுகமாவது

கலத்திற் கருவு திரண்டோங்கிக்குடை போகியவாறுபோல நலந் தரும் பொருளைத் திரளச் சொல்வது (வீரசோ.)

கர்ப்பூரத்தைலமரம்

இவ்வகையில் பல வித மரங்கள் கடற்கரை யடுத்த பிரதேசங்களில் வளருகின்றன. இவ்வித மரத்தில் நடுப்பாகத்தைச் சீவினால் அதிலிருந்து மஞ்சள் நிறமுள்ள பால் வடிகிறது. அந்தப் பாலை வாலையிலிட்டுக் காய்ச்சினால் மர எண்ணெய் ஆவியாகப் பரிணமித்து வேறு பாத்திரத்தில் தங்குகிறது, இதுவே தைலம், வாலையினடியில் தங்கிய பாலின் சேஷம் குங்கிலியம்.

கர்ப்பூரம்

1. இது ஜபான் தேசத்திலுண்டாம் தேவதாரு மரத்தின் பட்டை முதலியவற்றை ஆலையிலிட்டுக் காய்ச்சுவதா லுண்டாவதும் ஆவியினாலுண்டாகும் பரிணாமப் பொருள். இதனை ஜர்மானியர் சில சரக்குகளைச் சேர்த்துச் செய்கின்றனராம். 2. இது, மலைச்சரக்கு, கலை அடைவு சரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வானோசு, சூடன், சீனச்சூடன் முதலிய வகைய.

கர்மசேடன்

புலகருக்குக் கதியிட முதித்தவன்.

கர்மஜசையோகம்

எந்தச் சையோகத்தின் உற்பத்தியில் தொழில் அசமவாயி காரணமாக இருக்கிறதோ அது. (தரு)

கர்மந்தன்

ஒரு இருடி.

கர்மம்

1. சத்தியமாகிய ஆன்மஞானமும், அசத்தியமாகிய மாயாகாரியமும் கூடின விடத்துண்டான தாகையால் புண்யபாப ஸ்வரூபமாகிப் பிரளயகாலத்தில் சமஸ் காராவஸ்தையாய் மாயையிலேயிருந்து சிருஷ்டி காலத்தில் ஆன்மாக்களுக்குத் தனுவாதிகளுக்குக் காரணமாவதாம். மனோவாக்குக் காய வியாபாரமாகிய காரியகர்மத்திற்கு மூலகாரணமாகையால் இதற்குக் காராணமல மெனவும் பெயர். செய்த கிரியை நசிக்கச் சூக்ஷமித் திருப்பதாகையால் அதிர்ஷ்ட மெனவும் பெயர் பெறும் இது, ஆதியாத்மிகம், ஆதிதெய்வீகம், ஆதி பௌதிகம் எனும் தாபத்திரயத்திற்கும் ஏதுவாம். இது சாரீர, மானஸாதிகர்மங்களுக்கு ஏது. இது தொன்று தொட்டு வருதலால் பிரவாகாநாதி. இது, தூலம், சூக்ஷ்மம், அதிசூக்ஷ்மமாய் வருவது. (சிவ ஞான.) 2. (148) அவை காதிகர்மம், அகாதி கர்மம் என்பன. காதிகர்மம் 43 அவை ஞானவரணியம் 5, தர்சனாவரணியம் 9, மோகநீயம் 28, ஆயுஷ்யம் 3, அந்த ராயம் 5, நாமகர்மம் 13. இவற்றைத் தனித்தனி காண்க. மற்றவை அகாதிகர்மம் அவை 85 ஆக 148. (சி~பரபக்ஷம்.)

கர்மீயன்

காந்தாரன் புதல்வன்.

கர்லியு

பிர்டிஷ் தீவிலுள்ள மூக்கு நீண்ட பறவை. இது பூச்சுகளைத் தின்று ஜீவிப்பது. பூமியில் முட்டையிட்டும் நீர்க்கரை ஓரங்களில் வசிக்கும் என்பர்.

கர்வடம்

வங்க தேசத்தருகிலுள்ள தேசம். இதற்கரசன் தாம்ரலிப்தன். (பார).

கறிமா

இது சமயலுக்குதவும் கறிவகைகள் மணம்பெறச் செய்யும் சம்பாரத்தூள், இது வறுத்த பச்சரிசிமா, மிளகுத்தூள்,கறிவேப்பிலைப்பொடி, மஞ்சள் தூள், சீரகம், வெந்தயம், கடலைமா, முதலிய சேர்த்துச் செய்யும் தூள்.

கறிவகை

பொரிக்கறி குழைக்கறி, பொரியல், வரல் புளிக்கறி, தித்திப்புக்கறி, நெய்க்கறி, தயிர்க்கறி, எலிமிச்சம் பழ ரசக்கறி, தேங்காய்க்கறி, எண்ணெய்க் காய்க்கறி, பருப்புக்கறி, பஜ்ஜி, சட்னி, தொகையல், பச்சடி முதலிய.

கறுப்பண்ணன்

இவன் மலையாளத்திருந்து அழகர்மலையில் எழுந்தருளிய பெருமாளின் றிருவாபரணங்களைத் திருடவந்த பதினெட்டுக் கள்ளரிற் பெரியவன். இந்தக் கள்ளரைப் பெருமாள் தனித்தனி ஒவ்வொரு படிக்குப் பலியிட்டுக் கடைசியவனாகிய கறுப்பன் என்பவனைக் கொல்லாது சந்நிதியைக் காக்கக் கட்டளையிட்டார். அதனால் இவனைப் பதினெட்டாம் படிக் கறுப்பன் என்பர்.

கறுப்பன்

இவன் தொண்டைநாட்டு மாவை நகர் வேளாளப்பிரபு. இவன் தந்தை கஸ்தூரி. இவனே தொண்டைமண்டல சதகம் பாடுவித்தவன். இவனைச் சொக்கநாதப் புலவர், “சீர்கறுத்த முகிற்கரத்தான் கஸ்தூரிபூபனருள் சேயாவென்றும், ஓர்கறுப்பு மில்லாத தொண்டைவள நாட்டிருக்கு முசிதவேளே, யார்கறுப்ப னென்று சொல்லியழைத்தாலு நாமுன்னை யன்பினாலே, பேர் கறுப்ப னிறஞ்சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்பனெனப் பேசுவோமே. ” பிள்ளை வயதினிற் கல்விகற்றோம்பின்பு, பெரியநர வாகனமும் பெற்றோம் பூமி, உள்ளளவுங் கீர்த்திநிலை நிறுத்திக்கொண்டோம், ஒரு குறையு மில்லையினி யுரைப் பக்கேண்மோ, தெள்ளில குசிதம்பரத் தைத் தரிசித்தோம்பின், சேற்கருங்கட் டளவநகைத் தெய்வயானை, வள்ளிபுணர் சிவப்பனையுந் துதித்தோமெங்கள், மாவை வளர்கறுப்பவுனை வாழ்த்தினோமே. ” “எல்லப்ப னம்மையப்பன் றரு திருவேங் கடராம னெழிற்சீராமன், வல்லக்கொண்டமனுடனே மாதை வேங்கடேசனைப் போல் வரிசைதந்தான், செல்லத் தம்பியருடனே மாவையில் வாழ் கறுப்பண்ணன் றெருவீதிக்கே, பல்லக்குத்தான் சுமந் தானது நமக்கோராயிரம் பொன் பரிசு தானே” எனப் புகழ்ந்து பாடியிருக்கின் றனர்.

கறுப்பழகி

காத்தவராயன் தேவியரி லொருத்தி.

கறுஷம்

ஒருநாடு.

கறைக்கண்டன்

பாற்கடற் கடைகையில் எழுந்த விஷமுண்டு அந்த விஷம் கண்டத்திற் செல்கையிற் அதனை நோக்கிய பிராட்டியின் அருட்கணோக்கால் கண்டமட்டில் நிற்க அழகு பெற்றிருக்கும் சிவ மூர்த்திக்குப் பெயர்.

கறைமிடற்றண்ணல்

கறைக் கண்டனைக் காண்க, சிவன்,

கறையான்

இதைச் செல் என்பர். இது வெள்ளையெறும்பை யொத்தது. இதில் வளர்ந்த பெருஞ்சாதி செல் இரக்கையுண்டானால் ஈசல் என்பர். இது தான் பற்றிய பொருள்களை அரித்துவிடும்.

கற்கடி

1, ஒரு அரக்கி, இவள் பிரமனை யெண்ணித் தவமியற்றப் பிரமன் பிர்த்தி யக்ஷமாகி உனக்கு வேண்டிய வரம்கேள் என்னக் கற்கடி பிரமனை நோக்கி எனது உதராக்கினி தணியும்படி ஆன்மாக்களின் உயிரைப் புசிக்கும்படி வரம் அருள்க என்றனள், அந்தப்படியே பிரமன் நீ உலகத்தில் தெய்வசிந்தையிலாது அகிருத்தி யஞ் செய்வோரைப் புசிக்க விடூசியாக என்று வரம் அளித்தனன். வரமடைந்த கற்கடி அவ்விடம் அரசு செய்து கொண்டிருந்த வேடராஜனையணுகி அவனைச் சில வினாக்கள் வினாவி அந்த வினாக்களுக்கு அவன் நேர்விடை தந்ததனால் அவனை நட்புக்கொண்டு அவன் கட்டளைப்படி தீமைபுரிபவரை அங்குப் பலிகொண்டு இமகிரியிலிருப்பவள். இவளுக்கு வீடூசி யெனவும் பெயர். (ஞானவாசிட்டம்). 2. காமரூப தேசத்திருந்த கற்கடன் புதல்வி, தாய், புஷ்கவி. இவள் முதலில் விராதனுக்குத் தேவி. விராதன் இராமராலிறக்கப் பின் கும்பகர்ணனை மணந்து பீம னென்பவனைப் பெற்றவள். (சிவமக~பு.)

கற்கதம்

அயோத்தியின் மேற்றிசையிலுள்ள நதி.

கற்கன்

ஒரு முனிவன், இரைவ தமுனியைக் காண்க.

கற்கரன்

கத்ரு குமரன் நாகன்.

கற்களிகை

கோமுகனுக்குப் பாரி.

கற்கள்

கருங்கல், சுக்கான் பாறை, கரும் பாறை, சுண்ணாம்புப் பாறை, துறுகல், சந்தனப்பாறை, வெள்ளைக்கல், செங்கல், பச் சைநிறக்கல், பலவகை கொடியோடிய கல், கூழாங்கல் முதலியன.

கற்காசாரி

யாதவ புரோகிதன். இவன் கிருஷ்ணமூர்த்திக்கு நாமகரணாதி சடங்குகள் செய்தவன். இவனை இவன் மைத்துனனும் யாதவரும் நபுஞ்சகனென்று பரிகசித்ததினால் இவன் கோபித்து உங்கள் குலத்தை நாசஞ்செய்ய ஒரு புத்திரனைப் பெறுகிறேனென்று சிவமூர்த்தியை யெண்ணித் தவம்புரிந்து அவரது அனுக்கிர கம்பெற்று மீளுகையில் யவனதேசத்தரசன் அக்கருவைத் தன் பத்தினி வயிற்றுப் பதிக்கும்படி வேண்டினன். கற்காசாரியன் அந்தக் கருவை அந்தப்படி பதிக்கக் காலயவனன் பிறந்தனன்.

கற்காண்டல்

அமையாத வெற்றியையுடைய. பூசலிற் பட்டோற்குக் காட்டில் நீண்டவிடத்துக் கல்லைக்கண்டது. (பு. வெ. பொதுவி.)

கற்காநாடு

கொச்சிக்குக் கிழக்கிலுள்ள மலைநாடு பழனிமுதலிய நாடு.

கற்கி

கலிக்காவதாரியைக் காண்க.

கற்கோணிலை

பூமி மயங்கப் பறையொலிப்பச் சுவர்க்கத்திலே பொருந்தினவனுக்குக் கல்லினைக்கொண்டது. (பு. வெ. பொதுவியன்.)

கற்பகக் கொடி தானம்

குறைந்தது ஐந்து பலத்தில் இரண்டு கற்பகக்கொடிகள் செய்வித்துப் பத்துப்பலம் பொன்னாற் கின்னரமிதுனம் இருத்தி வேதிகையில் கொடியைவைத்துப் பிராமி அநந்தசத்தியைப் பூசித்துப் பிராமணர்க்கு அன்ன தானம் செய்வித்துக் கொடியைப் பிராமணர்க்குத் தானஞ் செய்வது,

கற்பகத்தருதானம்

பொன்னாற்செய்த எட்டுச் சாகைகளையுடைய கற்பகத்தருவினடியில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து அதைச்சுற்றிப் பிரமன் முதலிய தேவரையும் தாபித்துத் தருவைச் சிவாலயத்திற் கேனும் வேதியர்க்கேனும் தானஞ் செய்வது.

கற்பகவிருக்ஷம்

ஐந்தருக்களில் ஒன்று, தேவர்கள் பாற்கடல் கடைந்தகாலத்தில் தோன்றியது. இது விருக்ஷவுருப் போன்றது, எட்டுக் கிளைகளையுடையது. இதில் படருங்கொடி காமவல்லி, இது விரும்பினதைத் தரும் வலியுள்ளது.

கற்பக்னன்

கர்ப்பங்களை வயிற்றிலிருந்து விழச் செய்யுந்தேவன்.

கற்பங்கள்

(காலம் காண்க.) 1, பவ கற்பம். 2. புவகற்பம். 3. ஸ்தபகற்பம். 4. பவகற்பம். 5. ரம்பகற்பம். 6. ருதுகற்பம். 7. கிரதுகற்பம். 8. அக்னிகற்பம். 9 அவ்வாஹனகற்பம். 10. சாவி தரிகற்பம். 11. புவகற்பம். 12. உசிககற்பம், 13. குசிககற்பம். எழுதிய 13 கற்பத்திற்கும் கதை கூறப்பட வில்லை. 14, கந்தர்வகற்பம்; காந்தார மென்னும் ஸ்வாம் பிறந்த கற்பமாதலால் அப்பெயர் பெற்றது. 15. ருஷப கற்பம், லோக மனோஹரமாகிய ருஷபஸ்வரம் தோன்றிய கற்பம். 16. ஷட்ஜகல்பம்; இது, சிசிரன், வசந்தன், நிதாகன், வருஷன், சரதன், ஏமந்தன், என்போர் அறுவர், சத் யோஜாத மூர்த்தியினருளால் பிரமன் மானஸ புத்ரராகப் பிறந்த தாலிப்பெயர் பெற் து. 17. மார்ஜாலிகற்பம்; இதில் மார்ஜாலியம் எனும் கர்மம் செய்யப்பட்டதால் பெற்ற பெயர். 18. மத்யமகற்பம்க்யஸ்வரம் உற்பன்னமான கற்பம்,. 19 வைராஜக கற்பம்; இதில் பிரமன் புத்தனாகிய வைராஜன் தோன்றினனாதலால் இதற்கு அப்பெயர் வந்தது இவன் குமரன் ததீசி. 20. நிஷாத கற்பம்; இது, பிரமன் குமரன் நிஷாதன் பிறந்து தவமியற்ற இவன் பசியால் துன்புறுகையில் பிரமன் நிஷாத என்று அழைத்தனன் ஆதலால் இக்கற்பம் இப்பெயர் அடைந்தது, இவனாலுண்டான ஸ்வரம் நிஷாதம் எனப்பட்டது. 21. பஞ்சம கற்பம்; இதில், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், எனும் ஐவர் பிரமனுக்கு மானஸ புத்திரர்களாகப் பிறந்தனர். இவர்கள் மகேச்வாரால் ஸ்வராதிக ளடைந்து பஞ்சமஸ்வர தேவர்களாயினர். 22, மேகவாஹன கற்பம்; இதில் விஷ்ணு மேகவுருவாய்ச் சிவபிரானை ஆயிரம் வருஷம் தாங்கினர். அப்பாரத்தின் தாங்கலாலுண்டான பெருமூச்சால் காலன் உண்டானான். 23. சிந்த கற்பம்; இக் கற்பத்தில் பிரமனுக்குச் சிந்தன் எனும் குமரன் தோன்றினனாத போல் இது சிந்தகற்பம் எனப்பட்டது. 24. ஆகுதிகற்பம்; பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமன் ஆகுதி தேவியைச் சிருட்டித்த கற்பம், 25, விஞ்ஞாதிகற்பம்; பிரஜா சிருட்டியின் பொருட்டு விஞ்ஞாதி தேவியினிடம் இருவரைச் சிருட்டித்ததால் இது விஞ்ஞாதி கற்பமெனப் பட்டது. 26. மனகற்பம்; இதில் சங்கரீ தேவியைப் பிரமன் சிருட்டித்துப் பிரஜைகளைச் சிருட்டித்தான். 27. பாவகல்பம்; இக் கல்பத்தில் பிரமன் பிரஜைகளைச் சிருட்டிக்க எண்ணி ஈச்வரனைத்தியானிக்க அக்னிமண்டலம் சூழ்ந் தஜ்யோதி மண்டலம் சூர்யமண்டலம் யோகம் மந்தி எங்களுண்டாயின. எக்காலம் இவை தரிசனமாயினவோ அக்காலம் தரிசனம் எனப்பட்டது. எந்தக் காரணத்தால் மனம் பூரணமாயிற்றே ஆகையால் அது பூரணை ஆயிற்று. 28. புரஹத்கல்பம்; இக் கல்பத்தில் பிரமன் அதிக யோகத்தால் பிரஜைகளைச் சிருட்டிக்க எண்ணினதால் இப் பெயருண்டாயிற்று. 29. சிவேதலோகித கல்பம்; ஒரு கற்பத்தில் பிரமன் சத்யோஜாத மூர்த்தியைத் தியானித்துப் பிரஜைகளைச் சிருட்டிக்க எண்ணுகையில் அவர்க்கு முன் சிவமூர்த்தி சிவேதலோ ஹித மூர்த்தியாய்த் தரிசனம் தந்து சிவேத ருஷிகளாகிய சுநந்தர், நந்தகர், விஸ்வநந்தர், நந்தர் என்கிறவர்களைத் தந்து மறைந்தனர். ஆதலால் இப்பெயரடைந்தது. 30. ரக்தகல்பம்; இதில் பிரமதேவர் பிரஜா சிருட்டிநிமித்தம் சிவயோகத்திருக்க அவர்க்கு முன் ரக்தவர்ண அங்கவு பாங்களுடன் வாமதேவர் தோன்றி அட்டஹாஸ்ம் செய்ய விரஜர், விபாகு, விசோகர், விச்வபாவனர் தோன்றினர். இவர்கள் ரக்த உருவராயிருந்தனர். ஆதலால் அப்பெயர் அடைந்தது. 31. பீதகல்பம்; இதில் பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் சிவத்யானம் செய்ய அந்த யோகத்தில் பொன் வண்ணமான அங்க உபாங்கங்களுடன் சிவபிரான் தோன்றி நான்குமுகம், நாற்கரம், நான்குதோள்கள் கொண்ட ருத்ராணியைத் தம் முகத்தில் தோற்றுவித்தனர். அவ்வீச்வரி தன்னிடம், மதி, ஸ்மிருதி, புத்திகளைத் தோற்று வித்தனள். மீண்டு பிரமன் புத்ர காமத்தால் ரூத்ராணியை வேண்ட அவள் காயத்ரி, ரெளத்ரி யென்பவர்களைத் தோற்றுவித்தனள். 32, சிதகல்பம்; இக் கல்பத்தில் வருஷ சகத்திரங்களாக ஜலமக்ன மடைந்த உலக சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் புத்ரன் வேண்டி மகாதேவனைத்யானிக்க அவர் தியானத்தில் கிருஷ்ணவர்ணத்துடன் கூடிய அங்கவுபாங்கங்களுடன் சிவபிரான் தோன்றி அட்டஹாஸம் செய்ய அவரது பார்ச்வங்களி விருந்து கிருஷ்ணன், கிருஷ்ணம் பரோஷ்ணிஷன், கிருஷ்ணாஸ்யன், கிருஷ்ண வாஸஸன் நால்வர் தோன்றி யோகபார்களாய்ச் சிருட்டியாதிகளைச் செய்தனர். 33. விச்வரூபகல்பம்; இப் பிரளயத் திற்கப்பால் பிரமன் பிரஜா சிருட்டியின் பொருட்டுச் சிவத்யானம் செய்ய விச்வ மால்யாம் பரதரத்துடன் ஸரஸ்வதி தோன்றினள். பின்னும் ஈசானரை தயானிக்க அவர் தரிசனந்தர இவ்வகை நான்கு முகங்கள், சதுர்பா தங்கள், நான்கு சிருங்கங்கள், நான்கு தந்தங்கள், நான்கு ஸ்தனங்கள், நான்கு கரங்கள், நான்கு கண்களுடன் கூடியவள் யார் என்றனர். இவள் உன்னில் பிறந்த பிரகிருதிதேவி என்று அட்டஹாஸம் செய்ய அவரது பார்ச்வத்தில் ஜடி, முண்டி, சிகண்டி, அர்த்தமுண்டி என்போர் தோன்றி யோகபாராயினர். 34. சிவேத வோஹி தகற்பம்; இந்தக் கற்பத்தில் சிவமூர்த்தி சிவேத அங்க உபாங்கங்களுடன்ச்வேத லோகிதராய் பத்யோசாதர் தரிசனம் தந்தனர். ஆதலால் காயத்ரி சிவேத ரூபிணி ஆயினள். 35. வாமதேவ கற்பம்; சிவேத லோகிதருடைய வாமபாகத்தில் ஒரு காலத்தில் உருத்திரமூர்த்தி தோன்றின காரணத்தால் இப்பெயரடைந்தது. 36. கிருஷ்ண கல்பம்; இந்தக் கல்பத்தில் சிவமூர்த்தி கோரபராக்ரமத் திருவுருக் கொண்டதனால் அகோரமூர்த்தியெனப் பெயரடைந்தனர். இவர் சாந்தமூர்த்தி கோரமற்றவரென்பது பொருள். ஆக ஒருவாறு கற்பலக்ஷணம் வாயு புராணத்திலுள்ள விதம் சுருக்கிக் கூறப்பட்டது. பின்னும் பத்மாங்கித கல்பம், வராஹகல்பம் இந்த ஒவ்வொரு கற் பத்திலும் விஷ்ணு பல பெயர்களுடன் வியாஸ உருக்கொண்டு அவதரித்தனர்.

கற்பனாகௌரவம்

ஒரு வஸ்துவினாலேயே ஒருகாரியம் சித்திப்பதாயிருக்க அதற்குப் பல வஸ்துக்களை ஏதுவாகக்கூறல்,

கற்பன்

(சங்.) மந்யு குமரன்.

கற்பாசுரன்

விநாயகரது பிள்ளைப் பருவத்தில் குதிரையுருக் கொண்டு வஞ்சிக்க வந்தவன். இக்குதிரையை வாகனமாக விநா யகர் ஏறித் திரிலோகத்தினும் சஞ்சரித்துக் கொன்றனர்.

கற்பிற்கூற்றிற்குரியார்

நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தையர், அறிவர், தலைவன், தலைவி, பார்ப்பான், பாகன், பாங்கி, செவிலி, ஆகப் பதின் மூவருமாம். (அகம்.)

கற்பு

1. என்பது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்று எனவும், அவனை இன்னவாறே வழிபடுக எனவும், இருமுது குரவர் கற்பித்தலானும், அந்தணர் திறத்தும் சான்றோர் தேத்தும், ஐயர் பாங்கினும் அமரர்ச்சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலை மகன் கற்பித்தலானும் கற்பாயிற்று. தலைவனும் களவின்கண் ஒரையு நாளும் தீ தென்று அதனைத் துறந்தொழுகினாற் போல ஒழுகாது, ஒத்தினும் காணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு துறவறத்திற் செல்லுந்துணையும் இல்லறம் நிகழ்த்து தலிற் கற்பாயிற்று, (நச்சர்) 2. இது களவின் வழிவந்த கற்பு, களவின் வழிவராக் கற்பென இருவகைத்து முன்னது. தலைமகளது சுற்றத்தாரார் பெறப்படாதது. (அகம்.) 3. கற்பென்பது, கணவனினும் தெய்வம் வேறில்லையென வெண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது. இவ்வகை வழி பட்டார் அருந்ததி, உலோபாமுத்திரை, மேனை, சுநீதி, சாவித்ரி, அநசூயை முதலியோர். கற்புடைய மங்கையர் நாடோறுந் தமது இஷ்டதெய்வத்தையும் கணவரை யுந்தொழுது எழுந்து காலைக்கடன்கள் முடித்து இஷ்டதெய்வத்தைத் தொழுது அலகால் வீடு முதலியவைகளைப் பிராணிகளுக்கு இம்சையில்லாமல் பெருக்கிப் புதிய நீரில் பசுவின் சாணத்தைக் கரைத்து மெழுகிட்டு உலர்ந்தபின் கோலமுதலிய வற்றையிட்டு வீட்டுவேலைகளை முடித்துக் கணவனுக்கு ஆகாராதிகள் உண்பிக் கும் முயற்சியில் மடைப்பள்ளி சேர்ந்து அன்னஞ் சமைத்துக் கணவனுக்கிட்டு அவன் உண்டபின் உண்பர். பின் அவனுக்கு இதமான தொழில்களைச் செய்து முடித்து அவனுறங்கியபின் உறங்கி எழு முன் எழுவர். கணவன் முன் அழகிய அணி முதலிய அணிவரேயன்றி அவன் வேற்றூர்க்கு நீங்கிய காலத்து அணியார். கோபத்துடன் பேசுகையில் எதிர்பேசார். கோபித்து எதைச் சொல்லினும் குணமாகக் கொள்வர். தன் நாயகன் பெயர்கூறின் நாய கனுக்கு ஆயுள் குன்று மெனப்பெயர்கூறார், நாயகன் தன்னணிகளைச் சக்களத்தி முதலியவர்க்குக் கொடுக்கினும் மனக்கிலேச மடையார், தங்கள் வீட்டைவிட்டுச் செல்லார். அவ்வாறு செல்லுமாதர் முகங்காணினுங் கோபிப்பர். புருஷன் இதைச் செய்க எனின் செய்து முடித்தேன் என்பர். திருவிழாக்காணல், விரதங்களனுட்டித்தல், சுத்தந்தியாடல், தேவரைத் தொழல் ஆகிய இக்காரியங்களைக் கணவரேவ லின்றிச் செய்யார். வயது முதிர்ந்தவருடனன்றித் தனியே எங்குஞ்சேரார். புருஷன் இருந்தபின் அன்றித்தாம் உட்காரார். புருஷன் வைத்தசேடத்தை அமிர்தம்போ லுண்பர். தம் நாயகன் சொற்படி துறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றம், பசு முதலியவர்க்குப் பகுத்துண்பர். நாயகன் விரும்பியவற்றைக் குறிப்பறிந்து செய்வர். நாயகனை அலர் தூற்றும் பெண்கள் முகத்தையும் நோக்கார். இல்லறத்திற்கு வேண்டுவன செய்வர். தகாத காரியங்களைச் செய்து விருதாவாக அழியார். காதலர் ஆயுள் பெருகவேண்டி மஞ்சள் பூசுவர். கணவன் அழகிலானாயினும், நோய்கொண்டவனாயினும், கிழவனாயினும், பழுது கூறாது கூடியிருப்பர். நாயகன் இறப்பின் தாமிறப்பர். அவன் நோய் கொண்ட காலத்துத் துன்பமுறுவர். அவன் களிப்புடனிருக்கையில் களித் திருப்பர். நாயகன் காவலம்புநீரைக் கங்கையாக நினைப்பார். கற்புடையார் பூத்த மூன்று நாளும் கணவனைப் பாரார், பேசார். நீராடியபின் நாயகனை நோக்குவர். தாம் பூத்து நீராடுநாட்களில் நாயகன் தம்மூரில் இல்லாவிடில் நாயகனை. மனதில் நினைத்துச் சூரியனைக்கண்டு துதிப்பார். மாமன் மாமியார் அருகிருக்கில் பரிகாசமுதலிய சேட்டை புரியார். தாம் உண்ணுங்கா லத்துக் கணவனழைத்திடில் உண்பது அமுதமேனும் விடுத்துச் செல்வர். தந்தை, தாயர், தம்குமரர் முதலியோரினும் கணவரிடம் அதிக அன்புடன் நடப்பார். உரலினும், அம்மியினும், உலக்கையினும், வாசற்படியினும், முறத்தினும் இலக்குமி நீங்குவள் என உட்காரார். நாயகனைப் பணியாது தெய்வம்பணிவோர் நரகமடைவர். நாயகன் பழியைப் பிறரிடங் கூறுபவரும், அவனுடன் எதிர்த்துப் பேசுபவரும் நரியாகவும், பெட்டை நாயாகவும் பிறப்பர். நாயகன் கோபித்து வசைகூறுங் காலத்து எதிர்வசைகூறுவோர் புலியாகப் பிறப்பர். சக்களத்தியைக் கோபிப்பவர் கோட்டானாகப் பிறப்பர். தன்னாயக னல்லாதான் எழில் கண்டுகளிப்பவர் பைசாச மாவர். நாயகன் பசித்திருக்க உண்பவர் பன்றியாகப் பிறப்பர். நாயகனிறந்த காலத்து உடனிறப்பவர் அசுவமேதபலனடைவர். நாயகன் பாபியாயினும் அவனிறந்தகாலத்துத் தீக்குளிப்பவர் அந்நாயகனை நரகத்தினின்று மீட்பர். நாயகனுடன் மரணமடைந்த கற்புடையார் தங்கள் தேகத்தில் உரோமவரிசைகள் எவ்வளவு உண்டோ அவ்வளவு காலம் கணவனுடன் சுவர்க்கத் துறைவர். கற்புடைய மங்கையர் தாங்கள் பிறந்த குலத்தையும் புகுந்த குலத்தையும் சுவர்க்கத்திற் சேர்ப்பர். இவ்வகை ஒழுக்கமுள்ள கற்புடையார்கள் கால்வைத்த இடங்கள் பரிசுத்த தலங்களாம். இவர்கள் நீராடுதலால் நதிமுதலிய புண்ணியமடையும். பொன்மாளிகையாயினும் கற்புடையாள் வசிப்பதில்லையேல் அது பேய்வாழ்க்கையாம். வாயு, சூரியன், சந்திரன், அக்நி முதலிய கற்புடையாளைத் தொடுங்காலத்து மனம் நடுங்குவர். கணவ ரிறந்தபின் மங்கலமிழந்த பெண்கள் தங்கள் கூந்தலை முடிப்பின் காலதூதர் கணவனைப் பாசத்தாற் பிணித்து இழுப்பர். கணவனையிழந்த மங்கையர் பகலில் ஒருபோதுண்டு தாம்பூலம், படுக்கைவெறுத்துப் பூமியிற்படுத்து விரதங்களை யநுட்டித்துத் தேவதார்ச்சனை செய்து கந்த மூலாதிகளைப் புசித்து உடம்புவிட்ட பின் புருஷலோக மடைந்து கணவனைச் சேர்ந்து சுகித்திருப்பர்.

கற்புமுல்லை

பொன் போலிலங்கு சுணங்கினையும் பொலிந்த கண்ணினையுமுடைய மடந்தை நன்மையறியும் கொழுநனுடைய நன்மையைப் பெருகச்சொல்லியது. (பு. வெ. பொது.) 1. பொருந்து தலமைந்த கொழுநன் நீங்கத் தன்னிடத்துக் காவலைச்சொல்லினும் முற்பட்ட துறையேயாம். (பு. வெ. பொது.) 2. செல்வம் பெருகும் அழகிய மாளிகையிலே சேர்ந்த கணவன் றன் பெரிய செல்வத்தை வாழ்த்தினும் முற்பட்ட துறையேயாம். (பு. வெ. பொது.)

கற்பூர ஆக்கம்

இது, சீனா, ஜபான் தேசங்களிலுண்டாகும் லாரல் மரத்தின்பால், இம்மரம் முதிர்ந்தவுடனிதனை வெட்டித் துண்டுகளாக்கி அவற்றை வளைந்த கழுத்துள்ள இருப்புப் பாத்திரத்திலிட்டுச் சல்லடைக் கண்கள் போன்ற துவாரங்களையுடைய பலகையால் அதைமூடி அப்பலகைமீது பெரியவாணா உருவமைந்த மட்பாத்திபரத்தைக் கவிழ்த்து விடுகின்றனர். பின் வாணலுக்கும் பலகைக்கும் இடையிலுள்ள உள்ளிடத்தை மலார், புல் முதலியவற்றால் மூடி இருப்புப்பாத்திரத்தை உஷ்ணப்படுத்தின் உள்ளிருக்கும் லாரல் துண்டிலிருந்து கற்பூரமானது ஆவியாய்க் கிளம்பி உஷ்ணமற்ற மலார்பல் முதலியவற்றில் உறைந்துபோகிறது. இது முதமுதலில் அழுக்குடன் மஞ்சணிறமாக இருக்கிறது. இதனை மீண்டும் சுத்தப்படுத்த வெள்ளை நிறமான கற்பூரமகிறது.

கற்பூரசெட்டி

கற்பூரம் விற்கும் ஒருவகைச்செட்டி வகுப்பார்.

கற்பூரபாண்டியன்

குங்கும பாண்டியனுக்குக் குமரன்.

கற்பொடுபுணர்ந்த கௌவை

இது உடன் போக்கின் வகையுள் ஒன்று என்பது, தலைவி தலைவன துடைமையாய்க் கற்பொடு கூடியவதனை அயலார், விராய சேரியர் பலருமறிதல், அது, செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், கவர்மனை மருட்சி, கண்டோரிரக்கம், செவிலியின் தேடிச்சேறல் என ஐந்துவகை. இது, செவிலிபாங்கியை வினாதல், செவிலி தேற்றுவார்க் கெதிரழிந்து மொழிதல், செவிலி தன்னறி வின்மை, தன்னைநொந் துரைத்தல், செவிலி தெய்வம் வாழ்த்தல், செவிலி நற்றாய்க் கறத்தொடுநிற்றல், நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பல், அது கேட்ட பாங்கியழுங்கல் கண்டு நற்றாய் புலம்பல், நற்றாய் பாங்கியர் தம்மொடு புலம்பல், நற்றாயயலார் தம்மொடு புலம்பல், நற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடு புலம்பல், நிமித்தம் போற்றல், சுரந்தணிவித்தல், தன்மகள் மென்மைத் தன்மைக்கிரங்கல், இளமைத் தன்மைக்குளமெலிந்திரங்கல், அச்சத்தன்மைக் கச்சமுற்றிரங்கல், கண்டோரிரக்கம், செவிலியாற்றாத் தாயைத்தேற்றல், ஆற்றிடைமுக்கோற் பகவரைவினாதல், மிக்கோரேதுக்காட்டல், செவிலியெயிற்றி யொடு புலம்பல், செவிலிகுரவொடு புலம்பல், சுவடு கண்டிரங்கல், செவிலிகலந்துடன் வருவோர்க்கண்டு கேட்டல், அவர் புலம்பல் தேற்றல், செவிலி புதல்வியைக் கணாது கவலை கூர்தல் என்பனவிரி. (அகம்)

கற்போட்டம்

(கர்ப்போட்டம்) இது, ஓர் மழைக் குறி. ஆனி மாதத்திற்குக் கர்ப்போட்டம் நாள் 1 1/2, ஆடிமாதம் முதல் கார்த்திகை மாதம் வரை மாதம் ஒன்றுக்கு நாட்கள் 2 1/4, ஆக மாதம் 5க்கு, நாட்கள் 11 1/4, மார்கழி மாதத்திற்கு நாள் 1, தை மாதமுதல் வைகாசிவரை மாதம் 5க்கு மாதம் 1க்கு நாழிகை 12, ஆக நாள் 1, ஆக கர்ப்போட்ட நாட்கள் 13 3/4. இவை பூராட நக்ஷத்திரத்தில் சூரியன் வரும் நாட்களாம். “பானு தனுவிற் பதின் மூன்றேமுக்கான் மேல், ஆனிக்குக் கர்ப்போட்டமறு காலாம் மானேகேள், நண்டு முதற்றேளளவு நாலரை நான்மாகாணி, கொண்டதனுவுக் கொன்றே கூறு” கர்ப்போட்ட காலங்களில் வானத்தில் இந்திரவில், மேகம், பரிவேடம், என்பவற்றுள் ஒன்றாயினும் இருப்பின் அவ்வவ் மாதங்களில் மழையுண்டு, அதிகமழை பெய்தால் அற்பமழை. ஒன்றுமிலாதிருக்கின் மழையில்லை.

கற்றோர் நவிற்சியணி

மிகுதிக்குக் காரணமாகாததை அதற்குக் காரணமாகக்கூறுதல். இதனைப் பிரௌடோக்திய லங்காரம் என்பர்.

கலககண்டகி

காலகௌசிகனுக்குப் பாரி.

கலகன்

இவன் ஒரு அரக்கன். தருமகுத்தன் எனும் வேதியனைக் கண்டு நல்லறிவு பெற்று அவனிடம் தனது பூர்வஜன்ம வரலாறு கூறி நலமடைந்தவன். தருமதத்தனைக் காண்க.

கலகை

ஆன்மாக்களுக்குக் கலகத்தை விளைவிக்கும் ஓர் தேவதை.

கலங்கரைவிளக்கம்

கப்பல் யாத்திரை செய்த பண்டையோர்க்குக் கரைதெரியும் வகை கடற்கரையிற் கட்டப்பட்ட ஒளித்தம்பம்.

கலசயோனி

அகத்தியர், வசிட்டர்கள், கலசத்தி லுதித்ததனாற் பெற்ற பெயர்.

கலப்பை

இது, உழவர் நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி, இது நிலத்திலுள்ள உறுதியாகிய மண்ணினைக் கீழ் மேலாகக் கலப்பது. இது அடிப்படை, மேழி, ஏர்க்கால், நுகத்தடி, கார், முதலிய பெற்று இரண்டு எருதுகளால் உழப்படுவது. இது, நாட்டுக்கலப்பை, பிறநாட்டு இரும்புக்கலப்பையும் உண்டு, அது கனத்தது ஆதலால் இந்நாட்டார் அதைக் கொள்ளார். பூமியைப் பண்படுத்த பரம்பு, புல் முதலிய எடுக்கப்பலுமரம் விதை விதைக்ககொருகலப்பை, களையெடுக்கக் களைகொட்டு முதலிய உபயோகிப்பர்.

கலப்பைநாள்

உத்திர மூன்று முரோகணி மூலம், அத்தமி ரேவதியாமிருபூசம், ரித்தையு வாவிலரிஷ மீன்கற்கீ, நத்துச்சுறா மிதுனங் கலப்பைக்கே.

கலம்கொட்டி

குசவன்.

கலவிகரணர்

கலவிகரணி சத்திக்குப் பதி, ஆகாசரூபர். இவர்க்குப் பீமர் எனவும் பெயர்.

கலவிகரணி

ஆகாசரூபசத்தி. இவட்கு ஈசர் கலவிகரணர் அல்லது பீமர்.

கலவையணி

இது, பாலும் நீரும் சேர்ந்தாற்போல விளங்காத பேதத்தையுடைய பல வணிகளது கலப்பாம். இதனை வடநூலார், சங்கராலங்கார மென்பர். அது, உறுப்புறுப்பிக் கலவையணி, நிகர்தலைமைக் கலவையணி, ஐயக் கலவையணி, ஒரு தொடர்ப் பொருட்கவவையணி என நான்கு வகைப்படும். இவற்றினியல்பைக் குவலயானந்தம் காண்க.

கலாகோ

(GOLOGO) இது ஒருவகை எலி போன்ற பிராணி காதும், வாலும் நீண்டது. இதில் பெரிது ஒரு பூனையினளவிருக்கும். ஆபிரிகா தேசத்தது.

கலாசத்தி உரு

1: நிவர்த்திகலாசத்தி, பொன்னிறமாய் நான்கு முகம், நான்கு கைகளில் ஜபமாலை, வஜ்ரம், அபயம், கமலம் உடையவளாயிருப்பள், 2. பிரதிஷ்டாகலாசத்தி: படிகநிறமாய் இரண்டு முகம், நான்கு கைகளில் பாசம், அபயம், ஜபமாலை, கமலம் இவற்றை யுடையவளாயிருப்பள், 3. வித்யா கலாசத்தி: இவள் கறுத்த நிறம், பிரகாசத்தோடு கூடிய நான்கு முகம், நான்கு கைகள், சத்தி, அபயம், ஜபமாலை, கமலம் உடையவளாய் மகா பலிஷ்டையா யிருப்பள், 4. சாந்திகலா சத்தி: சுத்த ஸ்படிக் நிறம், ஐந்து முகம், நான்கு கைகளில் தவஜம், அபயம், ஜபமாலை, தாமரைகளையும், உபவீதத்தையும் உடையவளாயிருப்பள். 5. சாந்தியத்தகலாசத்தி: ஸ்படிக நிறம், ஐந்து முகம், நான்குகைகள், பாசம், அபயம், ஜபமாலை, கமலம் இவற்றையுடையளாயிருப்பள்.

கலாதரர்

விநாயக அம்சங்களில் ஒன்று.

கலாதினி

கங்கையின் பிரிவு.

கலாபம்

பரதகண்டத்திலுள்ள ஒரு கிராமம். இதில் மறைந்திருக்கும் சூரிய சந்திர வமிசத்தரசர்கள் கற்கியின் ஏவலால் கலியந்தத்தில் அரசாளப் போகின்றவர்.

கலாபுவனங்கள்

1. சாந்திய தீதகலையில்: அநாசிருதை, அநாதை, அகந்தை, வியோமரூபிணி, வியாபினி, ஊர்த்த வகை, மோசிகை, ரோசிகை, தீபிகை, இந்திகை, சாந்திய தீதைசாந்தி, வித்தை, பிரதிஷ்டை, நிவர்த்தி ஆக 15 புவனங்கள். 2. சாந்திகலையில்: சதாசிவன், சிகண்டி, சிரீகண்டன், திரிமூர்த்தி, கெருத்ரன், ஏகநேத்ரன், சிவோத்தமன், சூக்குமன், அருந்தன், மனோன்மனி, சர்வபூததமனி, பலப்பிரமதனீ, பலவிகரணி, கலவிகாணி, காளி, ரௌத்ரீ, ஜியேஷ்டை, வாமை ஆக 18 புவனங்கள். 3. வித்யா கலையில்: அங்குஷ்டமாத்ர, ஈசான, ஏகேக்ஷண, ஏகமிங்கள, உத்பவ, பவ, வாமதேவ, மகரத்தியுசி, சிகேத, ஏகவீர, பஞ்சாந்தக, சூர, பிங்க, ஜியோதி, ஸம்வர்த்த, குரோத, ஏகசிவ, அருந்த, அஜ, உமாபதி, பிரசண்ட, ஏகவீர, ஈசான, பவேச, உக்ர, பீம, வாம, ஆக 27 புவனங்கள். 4. பிரதிஷ்டாகலையில்: ஸ்ரீகண்ட, ஒளம, கௌமார, வைஷ்ணவ, பிராம்ம, பைரவ, கிருத, அகிருத, பிராஜேச, சௌமிய, ஐந்திர, காந்தருவ, யாக்ஷ, ராக்ஷஸ, பைசாச, ஸ்தலேச்வர, ஸ்தூலேச்வா, சங்குகர்ண, காலாஞ்சா, மண்டலேச்வா, மாகோட, துவிரண்ட, சகலண்ட, சதாணு, சுவர்ணாக்ஷ, பத்திரகர்ண, கோகர்ண, மஹாலய, அவிமுத்த, ருத்தரகோடி, வஸ்திரபாத, பீமேச்வர, மஹேந்திர, அட்டஹாஸ, விமலேச, நகல, நாகல, குருக்ஷேத்ர, கயா, பைரவ, கேதார, மஹாகாள, மத்யமேச, ஆம்ராதக, ஜலபேச, ஸ்ரீசைல, ஹரிச்சந்திர, லகுளீச, பாரபூதி, டிண்டி, முண்டி, ஆஷாட, புஷ்கர, நைமிச, பிரபாச, அம்ரேச, ஆக 56. 5. நிவர்த்திகலையில்: பத்திரகாளி, வீரபத்திர, திரிலோசன, விப்சு, நப, விவாஹ, சம்வாஹ, திரிதசேச, திரியக்ஷ, கணாத்யக்ஷ, விபு, சம்பு, தமஷ்ட்ரீ, வஜ்ர, பணீந்திர, உதும்பரேச, கிரசன, மாருதாசன, குரோதன, அநந்த, விருஷதர, விருஷ, பலிப்பிரிய, பூதபால, ஜியேஷ்ட, சர்வ, சுரேச, வேதபாரக, ஞானபுக்கு, சர்வஞ்ஞ, ஈச, வித்யாதிப, பிரகாமத, பிரசாதக, சிரீத்ருக்கு, ரத்னதிருக்கு, லக்ஷ்மீத்ருக், ஜடாதர, சௌமியதேஹ, தந்நிய, ரூபவான், நிதீச, மேகவாஹன, கபர்த்தி, பஞ்சசிக, பஞ்சாந்தக, க்ஷயாந்தக, தீக்ஷண, சூக்ஷ்ம, வாயுவேக, லகு, சீக்ர, சுநாத, மேகநாத, ஜலாந்தக, தீர்க்கபாகு, ஜயபத்திர,ச்வேத, மஹாபல, பாசஹஸ்த, அதீபல, பல, தம்ஷ்ட்ரீ, லோஹித, தூம்ரக, விரூபாக்ஷ, ஊர்த்வசேப, பயாநக, குரூரதிருஷ்டி, ஹந்த்ரு, மாரண, நிருதி, தர்மபதி, தர்ம, வியோக்தரு, சம்யோக்துரு, விதாத்ரு, ஹாமிருத்யு, யாமிய, க்ஷயாந்தக, பஸ்மாந் தக, பப்ரு, தஹன, ஜ்வலன, ஹாகாதக, பிங்கள, சுதாசன, அக்னிருத்ர, திரதசாதிப, பிநாகி, சாஸ்த்ரு, அவ்யய, விபூதி, பிரமரதன, வஜ்ரதேக, புத்த, அஜ, கபாலீச, ரௌத்ர, வைஷ்ணவ, பிராம்ம, ஹாடக, கூஷ்மாண்ட, காலாக்னி. ஆக புவனங்கள் 108. ஆக ஐந்துகலைகளிலும் கூடிய புவனங்கள் 224. (சித்~சாராவளி)

கலாவதி

1. இவளும் பிரபாவதியும் இரத்தினாவலியின் தோழியர். இவர்கள் ஒரு சன்மத்தில் குரங்குகளாய் ஒருவனது பலாப்பழத்தைத் திருடிக் குரங்காட்டியிடம் அகப்பட்டுக் காசிக்ஷேத்திரத்தி லிறந் ததால் மறு சன்மத்தில் சராயணனுக்குப் புதல்வியராய்க் கௌதமை பவாநியெனப் பிறந்து நாசயனனை மணந்தனர். அவன் காட்டிவி றந்ததால் இவர்கள் நோன்பிழைத் திறந்து மறு சன்மத்தில் இரத்தினா வலியின் தோழியராய் இரத்தினசூடனை மணந்தனர். (காசிகாண்டம்.) 2. பாரன் என்னும் முனிபுத்திரி தந்தை யிறக்கப் பார்வதியாரால் நவநிதி வசமாகும் மந்திரம் பெற்று அதனைச் சுவா சோதிசனுக்குக் கொடுத்து அவனை மணந்தனள். 3. சுவாமியையும் இரத்தினாவலியையும் காண்க. 4. எச்சனைக் காண்க. 5. காசிதேசத்தரசன் பெண்; பாண்டியனை மணந்து அவன் தன்னைத் தீண்ட வருகையில் நீ சிவ தீக்ஷை பெற்றவன் அல்லன் என விலக அரசன் அவளை வலுவிற் றொட அவளிடம் சகிக்கக்கூடாத வெம்மை யிருந்தது பற்றி அஞ்சிச் சிவ தீக்ஷை பெற்று மனைவியிடங் கூடிச் சுகித்திருந்தவன் (உபதேச காண்டம்.)

கலி

1. ஒரு தானவன் இந்திரனை யுத்தத்தில் பின்னிடச் செய்தவன். 2. கபாடபுாத்திருந்த இடைச் சங்கத்துப் புலவரியற்றிய நூல்.

கலிகணநாதர்

இவர் தம்நாடு வீரசைவர் நாடாக முயன்று, எல்லாரையும் வீரசைவராக்கி வந்தனர். அவ்வகை செய்து வருகையில் சிவமூர்த்தி சூத்திர வடிவுடன் இவரிடந் தோன்றி மந்திரி முதலியோர் செய்யும் தீமை புகன்றனர். அரசன் இவரை நோக்கி நீவிர் வீரசைவராயின் உம்மிடம் அவர் வைத்த தீர்வை முதலியவற்றையும் மாற்றுகிறேன் என்றனர். சிவமூர்த்தி இசையாதது கண்டு அரசன் வாளெடுக்கச் சிவமூர்த்தி தமது திருவுருக் காட்டினர். அவ்வகை காட்டியும் அரசன் சம்மதிக்காது சிவலிங்கஞ் சிவ மூர்த்திக்குந் தரித்தனன்.

கலிகாலன்

சோழநாடு விட்டுக் காஞ்சி நாடடைந்து காட்டை நாடாக்கினவன். இவன் பூர்வம் இந்திரன். இவன் காஞ்சிப் பதியிலிருந்த பூதத்தைக் கருப்பதானவதி யென்னும் காளியருளால் வாள்பெற்று எதிர்க்க அந்தப் பூதம் ஆயிரம் மனுஷரை வருஷத்திற்குப் பலிகேட்க உடன்பட்டு அரசாண்டவன்.

கலிக்கம்பநாயனார்

திருப்பெண்ணாடக க்ஷேத்திரத்தில் வைசிய குலத்திற்றி ருவவதரித்துச் சிவனடியார் திருவடிகளை மனைவியார் நீர்வார்க்கத் தாம் சுத்திசெய்து பூசித்து அமுது படைத்து வருங்காலையில், ஒருநாள் தம்மிடம் வேலைசெய்து கொண்டிருந்து நீங்கிய ஒருவன் சிவனடியார் வேடங்கொண்டுவர, நாயனார் அவனுக்கும் பூசைசெய்யக் கால்களைப் பற்றினர். பத்தினியார் இவன் நம்மிடம் வேலை செய்திருந்தவனென்று நீர் விடாமல் தாமதித்தது கண்டு, பத்தினியாரின் கையைத்தறித்து அடியாரைப் பூசித்து அமுது படைத்துச் சில நாட்களுக்குப் பிறகு முத்தி பெற்றவர்.

கலிக்காவதாரி கல்கி

விண்டுவின் தசாவதாரங்களில் ஒன்று, கலியுகமுடிவில் சம்பளமென்னும் கிராமத்தில் விஷ்ணு எச்சன் கிருகத்தில் குதிரை முகமாக அவதரித்து அதர்மங்களைப் போக்கித் தருமத்தை நிறுத்துவர். இவர் ஏறுங் குதிரை தேவதத்தம் சம்பளமென்னும் சிம்மளத்தீவில் விஷ்ணுயச்சன் பாரியையான சுமதி யின் கருப்பத்தில் நான்கு சகோதரருடன் பிறப்பர். இலக்குமியும் அத்தீவில் பிருகத்ரதன் பாரியான கௌதமியின் உதரத்தில் வைசாகசுக்கில துவாசசியில் பிறப்பள். இவர் சகோதரர் கலி, பிராக்கியவன், சுமந்திரர். கல்கி பரசுராமரிடத்தில் வேதங்களையும் தநுர்வித்தையையும் கற்றுணர்ந்தவர். சிவபெருமானை யெண்ணித் தவஞ்செய்து குதிரையையும், எல்லாமறிந்த கிளியையும், வாளையும் பெற்றவர். கல்கி பத்மாவதியைச் சிம்மளத்தில் மணம்புரிந்து ஜயன் விஜயன் எனும் இரண்டு புத்திரரைப் பெற்றார். இவர் திக்குவிசயம் செய்யத் தொடங்கி முதலில் கீடபுரத்தையடைந்து பௌத்த ராசாவாகிய ஸ்ரீதேவன் பட்டணத்தை முற்றுகைசெய்ய ஸ்ரீதேவன் எதிர்த்துப் பின்னடைகையில் ஜினதேவன் எதிர்த்துக் கல்கியை மூர்ச்சையாக்கக் கல்கி மூர்ச்சை தெளிந்தெழுந்து யாவரையுங் கொன்று மிகுந்துநின்ற ஜினதேவனை யழைத்து அவன் சௌரியத்தை நிந்தித்துக் கால்களைக் கிழித்தெறிந்தார் பிறகு சுத்தோதனன் முதலியவர்களை யெதிர்த்து அவர்களை வதைத்துப் பட்டணத்துக்குள் சென்று மிலேச்சர்களைக் கொல்லுகையில் மிலேச்சஸ்திரீகள் எதிர்க அவர்கள் மேல் பாணத்தைவிட அவர்கள் ஞானமடைந்து கல்கியை ஸ்தோத்திரஞ் செய்து பகவானைச் சரணடைந்தார்கள். பிறகு கல்கி அங்கு விசனத்தில் மூழ்கியிருக்கும் இருடிக்கூட்டங்களைக் கண்டு அவர்கள் குதோதரியைச் சம்மாரஞ் செய்யக் கேட்டுக்கொண்டபடி இமயமலைக்குத் திரும்புகையில் இடையிலிருக்கும் க்ஷீரநதியைக் கடக்க அஞ்சிய சேனைகளுக்கு இருடிகளால் அவற்றின் வரலாற்றைத் தெரிவித்துக் குதோதரியை யடைந்து அவள் மூச்சால் வயிற்றினுட்புகுந்து அவளைக் கொல்ல அவள் குமாரன் கரஞ்சன் யுத்தத்திற்குவந்து கொல்லப்பட்டான். கல்கி கலாபகிராமத்தில் தவம்புரிந்திருந்த சூரியவம்சத்தரசனாகிய மருவைக் கண்டார். அக்கிராமத்திலே சந்திரவம்சத் தரசனாகிய தேவாபியைக் கண்டார். கல்கி மேற்சொன்ன இருவரையும் வரலாறு வினவி, விசாகயூபன் கன்னிகையை மருவிற்கும், ருசிராசுவின் கன்னிசையைத்தேவாபிக்கும் மணஞ்செய்விக்கக் கட்டளையிட்டு அவ்விருவர்க்கும் அயோத்தி, அஸ்தினபுரியை ஆளும்படியாகக் கட்டளையிட்டுத் தாம் மதுரைப் பட்டணத்தை யடைய நிற்கையில் ஒரு சன்னியாசியைக்கண்டு நீர் யார் என்று வினாவினர். அவர் தாம் மஸ்கரி அல்லது கிருதயுகம் என்று கூறி மன்வந்தர லக்ஷணததைக் கல்கிக்குக்கூறக் கல்கி கிருதயுகம் ஆரம்பித்து விட்டதென்று திக்குவிசயத்திற்கு ஆரம்பித்தார்; கோகன், விகோகன் என்பவர்கள் கல்கியை எதிர்த்து ஒன்றாகக் கொல்லப்பட்டார்கள். பிறகு கல்கியானவர் சசித்துவசனுடன் நட்புக்கொண்டு அவன் தேவியாகிய சுசாந்தையால் ஸ்தோத்தரிக்கப்பட்டு அவன் குமரி ரமாவை மணந்து காஞ்சனபுரியை யடைந்து விஷகன்னிகையின் சாபத்தை நீக்கி சம்பளமடைந்து அதை அரசாட்சிபுரிந்து பரசுராமரைச் சேவித்துத் திக்குவிசய தரிசனங்களைக் கூறினார். பின் இவருக்கு மேகபல னென்றும் வலாகன் என்றும் இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். இவ்வாறிருக்கையில் பத்மாவதியைவிட்டு ஒரு குகையுள்புகப் பத்மாவதி தன் கணவனை அநேக நாள் காணமல் கல்கியைப்போல் ஒரு படம் எழுதிப் பூசித்துவருகையில் கல்கி பத்மாவதியைக் காணாமல் தேடிக்கண்டு தழுவினர். பிறகு தேவர்கள் வேண்டக் கல்கிபகவான் தன் குமார்களுக்குப் பட்டாபிஷேகஞ் செய்து வைகுண்ட மடைந்தனர் தேவிமாராகிய பத்மாவதி, சாமாவதி இருவரும் தீப்புகுந்தனர். (கல்கி புராணம்).

கலிங்கசேனை

இவள் கோசம்பி நகரிலுள்ள தலைக்கோற் பட்டம்பெற்ற இரண்டாயிரத் தைந்நூறு கணிகைமார்களுள் ஒருத்தி; குற்றமற்ற கற்புடையவள். இவள் மதன மஞ்சிகையின் தாய். (பெ. கதை).

கலிங்கத்தரசன்

இவன் யூகியுடன் போர் செய்தபொழுது இவனது யானைக்கொம்பு குத்திய புண்ணாலாகிய தழும்பு அவன் மார்பில் அடையாளமாக இருந்ததென்றும் உச்சைனியில் மாறுவேடம் பூண்ட காலத்தில் தன்னைப் பிறர் அறிந்துகொள்ளாதபடி அவன் அதனை மறைத்துக் கொண்டிருந்தனனென்றுந் தெரிகிறது. (பெ~க)

கலிங்கத்துப்பரணி

கருணாகரத்தொண்டமான் மீது செயங்கொண்டாரால் பாடப்பட்டது, ஆனையாயிரம் அமரிடை வென்ற அரசனது வெற்றியைக் குறித்துப்பாடியது.

கலிங்கன்

1, கலிங்க நாட்டரசன். 2. உருக்குமிக்குக் தோழன். பலராமராற் பல்லுடைக்கப் பெற்றவன். பாரத முதனாள் யுத்தத்தில் யாக்சேனனுடன் போர்செய்தவன். 3. திரெளபதையின் சுயம்வரத்தை நாடி வந்த அரசன். 4. சந்திர வம்சத்தரசன், யயாதி புத்ரனாகிய அநுவம்சத்திற் பிறந்த பலிராஜனுடைய பார்யைக்குத் தீர்க்கத மருஷியினால் பிறந்தவன். இவனுடன் பிறந்தார், அங்கன், வங்கன், புண்டரன், சுமனன். (பார) ஆதிபர்வம். 5. அங்கதேசத்துச் சூத்திரன், செல்வச் செருக்கால் ஒரு விரதியைப் பழித்துத் துன்பம் அனுபவித்து உரோமச முனிவர் அருட்பார்வையால் நலம் அடைந்தவன்.

கலிங்கமலை

பூதநந்தன் அரசாண்ட தேசம்.

கலிங்கம்

1. ஒருதேயம், வசு குமரர் ஆண்டது. ஒட்டிரதேசத்திற்குத் தெற்கின்கணுள்ளது. இதில் சிங்கபுர மென்றும், கபிலையென்றும் இரண்டு நகரங்களிருந்தன. (மணிமேகலை) 2. இது பரதகண்டத்தின் ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று, 3. கலிங்கம் வேங்கை நாட்டுக்கு வடக்கே உள்ள நாடு. இது ஒரிஸ்ஸாவின் ஒரு பாகமும், ராஜம கேந்திரமும், விசாகப்பட்டணமும் சேர்ந்த நாடு. இந்நாட்டை ஆண்டோர், சுருதாயு, சக்கரதேவன், சத்தியன் கேதுமான். பீமனால் கொல்லப்பட்டார். THE COUNTRY LYING ON THE SOUTH OF THE VAITARINI RIVER IN ORISSA, AND NORTH OF THE KRISHNA RIVER IN THE DISTRICTS OF RAJAHMUNTRY, VIZAGA PATAM, AND GANJAM AND A PORTION OF ORISSA.

கலித்தாழிசை

இரண்டு முதலிய பல அடிகளா லீற்றடிமிக்கு எனையடி தம்முள்ள வொத்து நிற்பத்தனித்தேனும் ஒருபொருண் மேல் மூன்றடுக்கியேலும் வருவது. யாப்பு (இ).

கலித்துறை

ஐஞ்சீரடி நான்கினைக் கொண்டு வருவது.

கலித்தொகை

இது எட்டுத் தொகையுள் ஆறாவது, நூற்றைம்பது கலிப்பாக்களை யுடையது. இதற்கு நச்சினார்க்கினியர் உரைகூறி யிருக்கின்றனர்.

கலிநீதிநாயனார்

இவர் தொண்டைநாட்டில் திருவொற்றியூரில் செக்கார் மரபில் திருவவதரித்து ஆலயத்திலுள்ளும் புறம்பும் தீபத்திருப்பணி செய்து வருகையில் செல்வங் குறையக் கூலிக்கு எண்ணெய் விற்றும் கூலிச்செக்கோட்டியும் திருப்பணிவிடாது நடத்திவந்தனர். இவ்வகை நடத்துகையில் கூலியும் அகப்படாமல் மனம் வருந்தித் தமது திருப்பணியின் முட்டுப்பாட்டை யெண்ணி மனைவியாரை விற்க யாருங்கொள்வாரிலாது திரும்பி ஆலயத் துட்சென்று அகலில் திரி முதலிய இட்டுத் தமது கழுத்தரிந்தமை கண்டு சிவமூர்த்தி கையைப் பிடித்துத் தடுத்து முத்தியளிக்கப் பெற்றவர். (பெ. புராணம்).

கலிபுருஷன் அல்லது கலி

இவன் பாவத்தை யுடம்பாகப் பெற்று வலது கையால் கள்ளினையும் இடக்கையால் ஆண்குறியினையும் பிடித்துக்கொண்டு புறம்பே பார்க்கின்ற கண்களையும் பேய் முகத் தையும் பெற்றிருக்கும் தெய்வம். கலியுற்பதியாவது துவாபரயுகம் முடிந்தடன் பிரமன் தன் பின்பாகத்தில் கோரமாயும் கறுத்ததாயு மிருக்கிற பாபத்தைச் சிருட்டித்தார். அதற்கு அதர்மம் என்றும் பெயர். அந்த அதர்மத்திற்குப் பொய் மனைவியும், டம்பம் பிள்ளையும், மாயையுடன் பிறந்தாளுமாம். மாயையின் வயிற்றில் இம்சையென்கிற பெண்ணும், உலோபம் என்கிற பிள்ளையும் பிறந்தனர். உலோபமும் இம்சையும் கல்யாணஞ் செய்துகொண்டு குரோதம் என்கிற பிள்ளையைப் பெற்றனர். அந்தக் குரோதம் இம்சை யென்கிற பெண்ணின் வயிற்றில் கலியை யுண்டுபண்ணிற்று. கலியினிலக்கணமாவது, இடதுகையில் தன் ஆண்குறியும், அஞ்சனம்போன்ற சரீரமும், நீண்ட வயிறும், பயங்கரமான முகமும், எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கிற நாவும், துர்க்கந்தமான சரீரமும், சூதாடல், ஸ்திரீசம்போகம், கட்குடித்தல் முதலான தீயநடைக்கு இருக்கையாகிய ரூபத்தையுடையது. இக்கலிபுருடன் தன் உடன்பிறந்தாள் வயிற்றில் பயம் என்கிற பிள்ளையையும், மிருத்தியு என்கிற பிள்ளையையும் உண்டுபண்ணினான். மேற்சொன்ன பயமும் மிருத்தியும் மணந்து, நரகம் என்னும் பிள்ளையை உண்டு பண்ணினார்கள். நரகம், யாதனை யென்கிற பெண்ணை மணந்து அளவிறந்த புத்திரர்களைப் பெற்றது. இவ்வகை கலியின் குலத்தில் நன்னடை யொழிந்து தீமையே பரவின. கலியின் நடக்கையாவது, கலியின் முதற் பாதத்தில் அக்காலத்திற்குண்டான ஆசாரமொழிந்து சஞ்சலபுத்தி, ஸ்த்ரீகளிடத்தாசை, பெருமைக் காசாரம் பாராட்டல், துற்நடை தந்தை தாய்க்கொலை, வேதவொழு கங்களைக் கடத்தல், சூத்திரசகவாசம், குதர்க்கவாதம், தர்மவிக்கிரயம், வேதவிக்ரயம், எண்ணெய், மாமிசம் விற்றல், ஜாதி பேதமின்மை, இடம்ப மடாதிபத்யம், பதினாறு வயதிற்குள் பிள்ளைபெறல், மனைவியின் சொற்கேட்டல், பிதாவின் குலத்தவ ரைத் தூஷித்தல் உண்டாம். மேலும் குலஸ்த்ரீகள் வேசைகளைப் போலவும், வேசைகள் குலஸ்த்ரீகளைப் போலவும் இருப்பர். வானத்தில் உற்பாதங்களுண்டாம். பூமியிற் பலனைத்தரும் ஜனங்கள் இராசாக்களாற் பீடிக்கப்படுவர். பிராம்மணர்கள் மந்திர சூன்யர்களாயும், அன்னம் விற்பவர்களுமாவர். தம் குலபாஷையை யிழந்து ஈனபாஷையில் விருப்பமும் ஈன சகவாசமும் உள்ளவராவர். கலியின் இரண்டாம் பாதத்தில் சிவ விஷ்ணுவாதிகளின் கலை குறைந்து சிறு தேவதைகள் சக்தியுள்ளவையாய் விளங்கும். மூன்றாம் பாதத்தில் சிவ விஷ்ணுக்களின் பெயர் மறைந்து ஜாதிபேதமில்லை யென்கிறதைப் பற்றிப் போர் உண்டாகும். நான்காம் பாதத்தில் ஜனங்கள் எல்லாம் ஒரேவிதமாகவும் ஓரடியுள்ளவர்களாய மிருப்பார் கள். தர்மம் மறைந்து அதர்மம் விளங்கிக் குடியர்கள் நிறைந்து ஒருவருக்கொருவர் தம்மையே பக்ஷிப்பர். கலிகாமகலையை மணந்து பிருகத்கீர்த்தி, பிருகத்பாகு என்னும் இரண்டு புத்திரர்களைப் பெற்றனன்.

கலிப்பகையார்

திலகவதியாரை மணக்கவிருந்து அரசனேவலால் யுத்தத்திலிறந்த வேளாண்குடியினர்.

கலிப்பா

வெண்சீர் மிகப் பெற்று மாச்சீரும் விளங்கனிச் சீரும் பொது பிறசீர்களுஞ் சிறுபான்மை கலந்து கலித்தளையும் அயற்றளையுந் தழுவித் தரவு, தாழிசை அராகம், அம்போதரங்கம், தனிச்சொல் சுரிதகம் எனும் ஆறுறுப்பினுள் எற்பன கொண்டு நாற்சீரடியால் வருவது. இது ஒத்தாழிசைக் கலி, வெண்கலி, கொச்சகக்கலி என (3) வகை.

கலிய நாயனார்

இவர் பஞ்சாக்ஷ ரஜபம் செய்துகொண்டிருப்பவர். இவர் தம்மூர்விட் டுக் காட்டின்வழிச் செல்லுகையில் தனித்திருந்த சிவலிங்கத்தைக்கண்டு ஐய, தனித் திருக்கின்றீரே திரிபுராதிகள் முதலிய பல பகைவர் உமக்கிருக்கின்றன ராதவின் வேற்றிடம் தேவரீரைக் கொண்டு செல்வேனெனச் சிவலிங்கத்தைத் தூக்கி முடியாத காரியமென்று எண்ணித் தமது செல்வ முதலிவைகளை யெடுத்து வந்து சிவாலய முதலியன கட்டுவித்துத் தம் நண்பருடன் சகலாயுதமுந் தாங்கிக் காவல் புரிந்திருந்து நண்பர்கள் பொருட்குறை வால் வராதிருந்த காலத்துத் தாம் தீவட்டி யெரித்தும் எண்ணெய் வாங்கச் சக்தியற்ற காலத்து விறகெரித்தும் அதுவுங் கூடாக் காலத்துத் தலைமயிரை எரித்து ஒளியுண்டாக்கியுங் கலங்கா மனமுற்றவராய்த் துதிக்கும் கலியர் முன்பு சிவமூர்த்தி தரிசனந்தந்து என்ன வேண்டுமென நாயனார் இவ்விடம் தேவரீர் தனித்திராது கைலையடைய வேண்டுமென்றனர், சிவபெருமான் வேண்டுகோட்படி திருக்கோயிலுடன் புஷ்பகத்தில் நாயனாரோடு தாம் திருக்கைலைக்கு எழுந்தருளினர்.

கலியன்

திருமங்கையாழ்வாரைப் பெருமாள் அழைத்த பெயர்.

கலியாணசோழன்

இவன் காலகால சோழனுக்குக் குமரன், இவன் தேவி பாண்டியன் புத்திரி கல்யாணி. இவன அநேக திருப்பணிகள் செய்து மண்ணியாறு என ஒரு ஆறுண்டாக்கிச் சிதம்பரத்தில் கோபுர மும் ஆயிரக்கால் மண்டபமும் கட்டி அறுபத்தேழுவருஷம் அரசாண்டு தன் மகன் பத்திரசோழனைப் பெற்றுச் சிவபதமடைந்தனன்.

கலியாணிகை

ஒரு வித்தியாதர அரம்பை, கலியில் இராஜ்யபரி பாலனம் செய்யும் மிலேச்ச சாதியர் ஆதமர், சிவேதர், அநூஹர், கீனாசர், மஹல்லர், விரதர், ஹநூகர், மதாசசிலர், ஹோமகர், நூயூகர், ஸீமர், சாமர், பாவர். பாஷைகள்: ஸீமம், ஹாமம், யாகூதம், சும்ரமாசூஜம், மாதி, யூனானி, இலீசம், தாலீசம், மஹாராஷ்டரி, யாவனி, குருண்டம் முதலிய (பவிஷ்~புரா.)

கலியுகம்

துவாபர யுகத்திற்குப் பிற்பட் டது. இது கிருஷ்ணன், பாண்டவர்கள் இவர்கள் அரசாட்சியின் முதலும் இறுதியுமானது, இதற்கு வருஷம் நான்கு லக்ஷத்து முப்பத்தீராயிரம். இதில் ஜனங்கள் பொய், கொலை, களவு, காமங்கள் முதலிய மாபாதகஞ் செய்து தெய்வம், குரு, தாய், தந்தை முதலியவரை யிகழ்ந்து பசி முதலிய பீடைகளால் வருந்துவர். இதில் தருமம் இராது.

கலிவிருத்தம்

நாற்சீரடி நான்கினைக் கொண்டு வருவது.

கலிவெண்பா

வெண்டளை தழுவி மீற்றடி முச்சீரான் முடிவது.

கலிவைரி

நம்பிள்ளைக்கு ஒரு பெயர்.

கலுழவேகன்

காந்தருவதத்தைக்குப் பிதா வெள்ளி மலையிலுள்ள வித்தியாதர அரசன்.

கலுவம்

மருந்தரைக்கும் குழியம்மி. இவற்றில் கருமை, செம்மை கற்களாலானவை உத்தமம், வெள்ளைக் கல்லாலான கல்வம் சிறப்பில்லை.

கலை

1, கர்த்தமப் பிரசாபதியின் பெண். மரூசிமகருஷியின் தேவி. 2. சந்திர கலை. 3. கலை (16) கன்மேந்திரியமைந்து, ஞானேந்திரியமைந்து, மனம், அகங்காரம், புத்தி, வித்தை, வாக்கு, சத்தி. 4. ஐந்து. நிவர்த்திகலை, பிரதிட்டானகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியா தீதகலை, 5. கலை: தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை என மூன்று. தந்தாகலை கடவுளாலருளிச் செய்யப்பட்ட ஆகமங்கள். மந்திரகலை: எந்தத் தேவதையை உபாசிக்கிறானோ அத்தேவதைக்கு உரிய நியாசம், இருடி, சந்தசு, தேவதையை யுணர்ந்தாராதித்தல். உபதேசகலை: ஆசாரியனிடம், பதி, பசு, பாச லக்ஷணங்களை உள்ளபடி அறிவது. (சிவ~சித்.)

கலைக்கேத்தபிரமையர்

இவர் முன்குடுமியும் கையில் கலைக்கொம்பும் ஒற்றைக் காலில் சதங்கையும் நீல ஆடையும் பெற்றுப் பிச்சையேற்றுச் சிவனடியவர்க்குப் படைத்து வருநாளில் சிவனடியவர் ஒருவர் வறுமை நீங்கக் கின்னாப்பிரமையரிடஞ் செல்லவிருக்கையில் அவரை இவர் சிவமூர்த்தியிடம் பொன்பெற்று அவர் உணவளிக்கின்றனர், நாமுமக்கு வேண்டிய பொருள் அளிக்கின்றோமென்று தடுத்துத் தாம் வைத்திருந்த கலைக்கொம்பைத் தட்டினர். அக்கலைக்கொம்பு அவ்வடியவர் வேண்டியவளவு பொன்சொரிந்தது. அடியவர் அப்பொன்னைத் தூக்கமாட்டாது வசவரிடம் ஆள்பெற்றுத் தூக்கிச் செல்லக் கண்டவர்.

கலைக்கோட்டுமுனிவர்

இருசிக சிருங்கரைக் காண்க. இவர் தந்தையார் ஸ்நானத்திற்குச் சென்று அரம்பையைக் கண்டு மோகித்து வீரியத்தைக் கங்கையில்விட அச்சலத்தை மானொன்று குடிக்க அதன் வயிற்றில் இம்முனிவர் பிறந்தனர். இவர்க்குத் தலையில் ஒரு கொம்புண்டு.

கலைக்ஞானபாதன்

சந்திரன் குமரன்.

கலைஞானம் (64)

அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாஸ்திரம், சோதிட சாஸ்திரம், தருமசாஸ்திரம், யோகசாஸ்திரம், மந்திரசாஸ்திரம், சகுனசாஸ்திரம், சிற்பசாஸ்திரம், வைத்தியசாஸ்திரம், உருவசாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்தபிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரீக்ஷை, கனகபரீக்ஷை, இரதபரீக்ஷை, கஜபரீக்ஷை, அசுவபரீக்ஷை, இரத்தினபரீக்ஷை, பூபரீக்ஷை, சங்கிராம இலக்கணம், மல்லயுத்தம், ஆகருஷணம், உச்சாடனம், வித்துவேஷணம், மதனசாஸ்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தர்வவாதம், பைபீலவாதம், கௌத்துக வாதம், தாதுவாதம், காருடம், நட்டம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாயகமனம், பரகாயப்பிரவேசம், அதிரிச்யம், இந்திரஜாலம், மகேந்திரஜாலம், அக்கினித்தம்பம், ஜலஸ்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம் முதலியன.

கலைநியமம்

தென்மதுரையிலுள்ள சிந்தா தேவியின் கோயில் கலாரூபமாகிய சிந்தாதேவிக்கு இடமாதல்பற்றி இப்பெயர் பெற்றது. (மணிமேகலை).

கலைமான்

ரேண்டியர் என்பது இது மானினத்தைச் சேர்ந்த மிருகம். இது மட்டக்குதிரையளவு உயரமுள்ளது. இது உத்தரமகாசமுத்திரத்தை அடுத்த பிரதேசங்களில் வசிப்பது. தேகமெங்கும் நீண்டு தடித்துப் பழுப்பு நிறமான மயிர்களைப் பெற்றிருக்கும். இது தலை பருத்தும் கழுத்து நீண்டுமிருக்கும். இது கோடைகாலத்தில் புல்லையும், மாரியில் பாசி முதலியவற்றையும் தின்னும். இதை இலேசிற் பழக்கி ஸலெட்ஜ் எனும் வண்டியிற் கட்டிப் பழக்குவார்கள். இது மணிக்கு அநேகமைல் செல்லும். இதன் தோலும் கொம்பும் பலவிதத்தில் உதவுகின்றன.

கல்கட்டிகள்

இருளரில் ஒருவகையர். இவர்கள் கழுத்தில் லிங்கம் போல் கல்லைக் கட்டிக்கொண்டிருப்பர்.

கல்கி

இவர் கலியுக அந்தத்தில் யசஸ் எனும் பிராமணனுக்கு நாராயணாம்சமாகப் பிறந்து நீண்ட வாளினால் உயர்ந்த குதி ரைமீதேறி (3) இராத்திரிக்குள் மிலேச்சர் அனைவரையும் வெட்டிக் குவிக்கப் போகிறவர். (தே~பா).

கல்நார்

இது, கல்லின் வகைகளில் ஒன்று. இது, நார்போல் கிழிக்கவும், கயிறு திரிக்கவும் துணி நெய்யவும் உதவுகிறதாம். இக் கல்நார் வட அமெரிக்காவின் கனடா நாட்டிலகப்படும். ஸ்காத்லாந்து தீபத்தில் அகப்படும் கல்நார் காகிதம் செய்யவும், தோல்போலுரித்துப் பலவேலைகள் செய்விக்கவும் உதவுகிறதென்பர்.

கல்நெட்டி

(மலைநெட்டி) சில இடங்களில் ஒருவகைக் கல், நீரிலிட்டால் சடைபோல் மிதக்கின்றது, அதனை மலைநெட்டியென்பர். இவை மேனாடுகளில் உண்டு என்பர்.

கல்பன்

துருவன் குமரன்.

கல்பவருஷன்

வசுதேவருக்கு உபதேவியிட முதித்தவன்.

கல்பார்க்கம்

துருக்கர் அரசாண்ட பரத கண்டத்திலுள்ள தேசம்.

கல்பொருசிறுநுரையார்

இவர் கடைச்சங்க மருவியவபாக இருக்கலாம். “இவர் தம் செய்யுளில் எங்காதலர்” எனக் கூறி யிருத்தலால் பெண்பாலாராக இருத்தல் கூடும். இவர் பெயர் இன்னதென அறியக்கூடவில்லை இவர் தம் செய்யுளில் “கல்பொரு சிறு துரை” எனக் கூறியிருத்தலால் இவர்க்கு அப்பெயரே பெயரா யமைந்தது. குறு 260.

கல்மாஷன், கல்மாடன்

கத்துரு தநயன்.

கல்மாஷபாதன், (கன்மாட பாதன்)

இவன் மித்திரசகன் என்னும் சூரிய வம்சத்தரசன். மனைவி மதயந்தி. இவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்று புலியுருக்கொண்டு மிருகங்களைத் தின்று கொண்டிருந்த ஒரு அரக்கனைக் கொன்றனன். அவன் தம்பி தப்பியோடிச் சென்று இவ்வரசனிடம் வைரங்கொண்டு சமயல் செய்யும் மடையனுருக்கொண்டு அரசனது சமயற் சாலையிலமர்ந்து காலம் பார்த்திருந்தனன். ஒருநாள் வசிட்டமுனிவர் இவனிடம் விருக நராகவா அரக்கன் இது சருணமென்று ஒரு மனிதனைக் கொன்று உணவளித்தனன். இதனை முனிவர் அறிந்து கோபித்து அரசனை நோக்கி விருந்தாக வந்த எனக்கு நரமாமிச வுணவளித்தனை யாதலால் நீ அரக்கனாக எனச் சாபமிட்டனர். இவ்வகைச் சாபமேற்ற அரசன் நான் ஒரு குற்றமும் செய்யாதிருக்க என்னைச் சபித்தமையால் நானும் சாபமிடுவேனென்று கையில் நீரெடுக்க அருகிருந்த மனைவி, இந்தச் சூரிய வம்சத்தில் இதுவரையில் யாருங் குருவைச் சபித்தார் இல்லையெனத் தடுத்தனள். அந்நீரை அரசன் கால் மீது ஊற்றிக் கொள்ளக் கால்கறுத்து மூங்கில் போலாயிற்று. அதனாற் கல்மாடபாதனென்று பெயர்பெற்றனன். (‘கல்மாஷம் மூங்கில்’) இவன் அரக்கன் ஆனவுடன் வசிட்டன் புத்திரனாகிய சத்தி முனிவனை விழுங்கினன். இவனுக் கிச்சாபம் பன்னிரண்டு வருட மிருந்தது. இடையில் ஒரு வேதியன் தன் மனைவியுடன் காட்டின் வழிச் செல்லுகையி லந்தவேதியனை விழுங்கினன். வேதியன் மனைவி நீ என் நாயகனை விழுங்கியதால் நீ சாப நீங்கி உன்மனைவியைப் புணரச் செல்லுகையில் உயிரிழக்கவென்று சபித்து உடனே அநுமரண மடைந்தனள். அரசன் சாபநீங்கி மனைவியால் சாபமுணர்ந்து கோகன்ன யாத்திரை செய்து வசிட்டராற் புத்தி ரோற்பத்தி செய்துகொண்டனன். இவன் ஒரு ரிஷிக்கு அன்னமிட அதில் ஒரு மயிர் இருக்கக்கண்டு இருடியால் நாடோறும் ஒரு மனிதனைப் புசிக்கச் சாபமடைந்தவன். தன் மனைவி யணிந்திருந்த இரத்தின குண்டலத்தைக் குருகாணிக்கையாகக் கொடுத்து உதங்கரைத் தின்னவந்து அவர் சாந்த வார்த்தையால் பொறுத்து அவரால் சாபநீக்க மடைந்தனன். இவன் அரக்கனாக இருந்தபோது இவனுக்கு உதிரன் எனப் பெயர். இவன் தந்தை சுதரி சனன் என்பவன் குமரன். இவனுக்கு வீரசகன் எனவும் பெயர். (பாகவதம்.)

கல்யாண வீமத்துவாதசிவிரதம்

இது மரகசுத்த தசமியில் ஆரம்பித்து ஏகாதசியை உபவாச காலமாகச்செய்து விதிப்படி விஷ்ணுவைப் பூசித்துத் துவாதசியில் விஷ்ணு பூசையும் பிராமணர் கட்குப் போஜனதானதி செய்விப்பவர்கள் விஷ்ணுபதவி யடைவார்கள். இது பீமனுக்குக் கிருஷ்ணன் சொன்னது.

கல்யாணகுலம்

அம்பட்டர் குலம், இவர்கள் சுப காரியங்களுக்கு வாத்யம் முதலிய செய்தலால் பெற்ற பெயர்.

கல்யாணசப்தமி விரதம்

சுல்ல பக்ஷ சப்தமியில் ஆதிவாரம் வரின் அது கல்யாணசப்தசி எனப்படும். இதில் (13) மாதம் சூரியனைப் பூசிக்கவேண்டும். பிரமனுக்குச் சிவன் சொன்னது,

கல்யாணசுந்தரர்

பார்வதிபிராட்டியைத் திருமணஞ்செய்த சிவமூர்த்தி திருவுரு.

கல்யாணசுந்தரவிரதம்

இது பங்குனிமாதத்து உத்திரநக்ஷத்திரத்து அநுஷ்டிக்குஞ் சிவவிரதம்.

கல்யாணதீர்த்தம்

திருநாராயணபுர தீரத்தங்களில் ஒன்று.

கல்யாணன்

வல்லாளனைக் காண்க.

கல்யாணம் (5)

சொர்காவதானம், மந்த்ராபிஷேகம், மகாப்பிரஸ்தானம், கேவலோத்பத்தி, பரிநிர்வாணம்.

கல்லடி சித்தர்

இவர்கள் ஒருவகை குறச்சாதியார். இவர்கள் கையில் கல்முதலிய வைத்துக்கொண்டு தங்களைத் தாமே யெறிந்து கொண்டு கத்தியால் தம்மை அரிந்து கொண்டதுபோல் உதிரங்காட்டியும் வாதிட்டுப் பிச்சை வாங்குவோர்.

கல்லணை

ஒரு நதி. இது இலங்கைத் தீவிற் சமனொளி மலையிலிருந்து உண்டாவது.

கல்லன் மூப்பர்

இவர்கள் மலைநாட்டுக் கம்மாளரில் ஒரு வகையார். இவர்களுக்குப் புரோகிதர் அம்பட்டர்.

கல்லவல்

இது சொல்லணியிலொன்று. இது நாடறிசொற்பொருள் பயப்பப்பிழை யாமைவாசகஞ் செய்வது.

கல்லாசாரி

கருங்கல்லில் வேலை செய்யும் கம்மாளன். இவனே கல்தச்சன்.

கல்லாடம்

இது அகப்பொருளிலக்கண அமைதியாய்த் திருக்கோவையாரின் கிளவிகளின் அருமைகளை விளக்கி அகவற் பாக்களா லியற்றப்பட்ட நூல். கல்லாடர் செய்தது. செய்தோனாற் பேர் பெற்றது.

கல்லாடர்

இவர் பொய்யடிமையில்லாத புலவரில் ஒருவர், கடைச்சங்கத்தவர். இவர் செய்த நூல் கல்லாடம், திருக்கண்ணப்ப தேவர் திருமறம். தொல்காப்பிய உரை. இவர் அம்பர் கிழானருவந்தை பொறையாற்றுக்கிழான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் முதலிய மூவரைப் பாடியவர். இவர் செய்த கல்லாடத்தைச் சிறப்பித்து, இவ்வெண்பா (கல்லாடர் செய்பவனுவற் கல்லாட நூறு நூல், வல்லார் சங்கத்தில் வந்தருளிச் சொல்லாயும், மாமதுரையீசர் மனமுவந்து கேட்டு முடி, தாமசைத்தார் நூறு தரம்” கூறப்படுகிறது. இதன் அருமை நோக்கிக் கல்லாடம் கற்றவனுடன் மல்லாடாதே’ என்பர். (கல்லாடம்.)

கல்லானை

இதனைக் காண்டாமிருகமென்பர் இது ஆசியா, ஆப்பிரிகாகண்டவாசி. இது சற்று யானையைப்போல் வயிறு பருத்தும் கால்கள் குறுகியுமிருக்கிறது. உடல் துப்பாக்கிக் குண்டிற்கு மஞ்சாததும், கறுத்த நிறமுடையதும், தடித்த தோலையுடையதும், மூக்கிலிருந்து 3 அடிகள் நீண்ட ஒரு கொம்பையும் பெற்றது, இது கொம்பின் வலிமையால் புலியைக் குத்தியெறியும். இது 7, 8 அடி உயரமும், 10 அடி அகலமும் இருக்கும், ஆகாரம் இலை தழை. இதற்குச் சேற்றில் புரள இஷ்டம், ஒருவர்க்கும் தீங்கு செய்யாது. கோபம் வந்தால் அபாயம். ஆப்ரிகாகண்டத்துக் கல்யானைகளுக்கு இரண்டு கொம்புகள் உண்டு. இதை ரைனாஸரஸ் என்பர்.

கல்லீரல்

இது, கீழறையின் பிரிவிலுள்ளது இது, சருஞ்சிவப்பு நிறமுள்ளது. இது, பித்தநீரை உண்டாக்கிப் பித்தப்பையில் சேர்க்கிறது, இப்பித்தநீர், ஒரு சிறு குழல்வழியாகச் சிறுகுடலுக்குள் சென்று ஆகாரத்தைச் சீரணிக்கச் செய்கிறது. கல்லீரலின் இடப்புறத்தில் இரைப்பை யிருக்கிறது. நாம் உண்ணும் உணவு வாயின் வழியாகத் தொண்டைக்குள் சென்று அன்னக்குழல் வழியாய் இரைப்பையை யடைகிறது. இரைப்பைக்கு இடது பாகத்தில் மண்ணீரல் இருக்கிறது. இரைப்பைக்கு அடியில் (23) அடி நீளமுள்ள ஒரு குழற்சுருள் சுருள்சுருளாய்ச் சுருண்டிருக்கிறது. அதன் ஒரு முனை இரைப்பையிலும், மற்றொருமுனை பெருங்குடலிலும் இருக்கிறது. அதற்குச் சிறுகுடல் எனப்பெயர். சிறுகுடலை அடுத்து ஆறு அடி நீளமுள்ள பெருங்குடல் இருக்கிறது. இது, தலைகீழாய்த் திரும்பிய (ப) பகரவுருப்போலச் சிறுகுடலைச் சுற்றி இருக்கிறது. இப்பெருங்குடல் அபானத்தை வந்தடைகிறது. மூத்திரகோசங்கள் இவை, இரைப்பைக்குப்பின் முதுகெலும்பை ஒட்டினதுபோல இரண்டு பக்கங்களிலும் இருக்கும் மாங்காய்ப் போன்ற உறுப்புகள். இவற்றை மாங்காயீரல் என்பர். இவற்றிலிருந்து ஒவ்வொரு மெல்லிய குழல் மூத்திரப்பைக்குப் போகிறது. இதிலிருந்து மூத்திரம் வெளிப்படுகிறது.

கல்லுளிச்சித்தர்

இவர் ஒரு சித்தர். இவரைக் கல்லடிச் சித்தர் என்றுங் கூறுவர். இவரைப் பற்றிக் கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடு பொடி (கல்லுகளெல்லாம் தவிடுபொடி.) (என்றும் உண்டு.) இவருக்கு மலைமுதலியவும் இவர் வழியைத் தடுக்காது இவருக்கு இடங்கொடுத்து விலகி நிற்குமெனத் தெரிகிறது.

கல்லூற்று

இது தன்னிடம் நனைந்த பொருள்களைக் கல்லாக மாற்றும் நீரூற்று, இவ்வகை நீரூற்றுள் ஒன்று, இங்கிலாந்திலுள்ள யார்க்கஷயர் மாகாணத்திலுள்ள நாரெஸ்பரோ எனும் நகரத்திலுள்ள குன்றிலிருந்து அங்குள்ள கிணற்றில் விழுகிறது. அந்நீர் தன்னால் நனைக்கப்பட்ட பொருளைக் கல்லாக மாற்றி விடுகிறதாம். இன்னும் இந்தியாவிலுள்ள இமயமலைச் சாரலில் சிலாநதி என ஒன்று இருக்கிறதாம் அதன் ஜலம் அவ்வாறு செய்கின்ற தென்பர்,.

கல்லையர்

இவர் வீரசைவர், இவர் ஒரு ஊரிலிருந்த காலத்தில் அவ்வூர் ஆலயத்தில் இருந்த பாம்பு அனைவரையுங் கடிக்க இறந்தவர்களை எழுப்பினர். இவர் மடத்திலிருந்து சமையல் செய்பவள், தீர்த்தக்கரைக்குச் செல்ல அங்கு வந்திருந்த பிராமணன் அந்தச் சமயற்காரியின் குடத்தைத் தொட்டனன். அதனால் சமையல்செய்பவள், தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து சலம் கொண்டு சென்றனள். இதனைக் கண்ட வேதியர் கோபித்துக் கல்லையரிடங் கூறக் கல்லையர் வேதியர்கள் வேதமறிந்தார்கள் எனின் சிவனடியவரினும் சிறந்தவர்களோ வென்று தம்மிடமிருந்த நாயை அழைத்து வேதம் ஓதுவிக்க, அந்நாய் வேதமோதக் கேட்டு வேதியர்கள் அஞ்சி அடங்கினர். (பச~பு.)

கல்வகை

இது மண்ணின் வேறுபாடு ஆயினும், இவ்வகையில் பல மண் என்னுந் தலைப்பில் கூறினேன். இதில் சில கடவுளின் சிருட்டி விசேடத்தைத் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மேற்கரையிலுள்ள பால காட்டையடுத்த மான்ஹலூர் எனும் இடத்தில் ஒருவித கற்களுண்டாகின்றன. அவற்றை வஸ்திரத்திற் சுற்றி நெருப்பிலிடில் அவ்வஸ்திரம் தீப்பற்றுதல் இல்லையாம்.

கல்ஹணர்

ஒரு கணித சித்தாந்த பண்டிதர், சற்றேறக்குறைய 800 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவரியற்றிய நூல் இராஜதரங்கணி.

களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல்

இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிக்கோமானான, பதுமன் குமரியிடம் பிறந்த குமரன், இவன் முடி சூடுஞ் சமயத்தில் முடியையும் கண்ணி யையும் பகைவர் கவர்ந்ததால் அவற்றிற்குப் பதிலாகக் களங்காயால் கண்ணியும் நாரால் முடியுஞ் சமைத்துப் புனைந்தனர். ஆதலால் இவனுக்கு இப்பெயர் வந்தது. இவனுக்குப் பகைவன் கடம்பின் பெருவாயிற்குரிய நன்னன். இவனை மேற்றிசையிலுள்ள வாகைப் பெருந்துறையில் வென்று இவனது வாகையினை வெட்டித் தானிழந்த நாட்டை இவன் மீண்டு மடைந்தான் என்பர் கல்லாடனார். இவனைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடி அவனாட்டிற் பாகம் பெற்றார். இவன் (25) ஆண்டு அரசாண்டான்.

களத்தூர்க்கிழார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் வேளாளரா யிருக்கலாம் (திருவள்ளுவ மாலை.)

களப்பாளன்

1, இவர் ஆமூரில் ஆமூர் முதலி எனப் பெயர்பெற்று வாழ்ந்தவர். இவர் காலத்திலவரைக் காளமேகப்புலவர் “உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி, வெள்ளங் காலந்திரிந் துவிட்டோமே உள்ளபடி, ஆமூர் முதலியம் ரர்கோ னிங்கிருக்கப், போமூரறியாமற் போய்” என்னும் பாதிவெண்பாப் பாடி முடிப்பதன் முன் பரிசளித்தவர். 2. நெற்குன்றூர் வேளாண் குலத்துதித்தவர். இவர் செல்வத்தானும் கல்வியானும் மேம்பட்டவர் திருப்புகலூர் அந்தாதி பாடியவர். இவருக்கு நெற்குன்றைவாணர் எனவும் பெயர்.

களரியாவிரை

முதற்சங்க மருவிய நூல், இது இன்ன பொரு ளமைந்ததென்று தோன்றவில்லை, நூலிறந்தது.

களவழி நாற்பது

பொய்கையார் இயற்றியது, போர்செய்து தோல்வியடைந்த கணைக்காலிரும் பொறையைப் பற்றிப் போய்ச் சோழன் செங்கணான் சிறையிலிட்டபோது பொய்கையார் களம்பாடி வீடுகொண்டார். இந்நூலின் பொருள், மேற்படி போர்க்கள வர்ணனை அங்கங்கே காட்டியிருக்கும் உவமைகள் நிரம்ப அழகானவை.

களவழிவாழ்த்து

சிவந்த போர்க்களரியிடத்து வளவிய செல்வத்தை ஆடற் பாட்டினைவல்ல யாழ்ப்பாணர் சொல்லியது, (பு. வெ. பாடாண்.)

களவிற்பிரிவு

ஒருவழித்தணத்தல், வரை விடைவைத்துப் பொருள் வயிற் பிரிவென இருவகைத்து, ஒருவழித் தணத்தற்குப் பருவமின்று. பின்னதற் கிரண்டுமாதம். முன்னது ஒரூரினும் நாட்டினும் பிரிவு. பின்னது காட்டிடை யிட்டும் நாட்டிடை யிட்டும் பிரிதல், (அகம்.)

களவு

இது, பிறர்க்குரித் தென்று இரு முதுகுரவராற் கொடை யெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்தவுள்ள தோடெதிர்ப்பட்டுப் புணர்வது. இது, பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளும் களவன்று. இது, வேதத்தை மறையென்பது போல்வது.

களவு கைக்கோகைத்துக்கூற்றிற் குரியார்

தலைவன், தலைவி, பார்ப்பான், பாகன், பாங்கி, செவிலி, அறுவருமாம்.

களவெனுங்கைகோளின் புணர்ச்சிவகை

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என நான்கு.

களவேள்வி

1. கொல்லும் வலியினையுடைய பேய், வயிறார உண்ணப் பரந்த வலியினை யுடையான் களவேள்வி வேட்டது. (பு~வெ.) 2. உழவன் உழவு செய்தலில் செடிகளைக் கல்லுவதாலும், நிலத்தைப் பிளப்பதாலும், எறும்புகள், புழுக்களைக் கொல்லுதல் முதலிய கொலைகளாலும் வரும் பாபங்களைக் களத்தில் நெல்லைத் தூற்றிச் சுத்தஞ் செய்தபின் அவ்விடத்தில் வரும் எழைகளுக்கு நெல்லிற் சிறிது தானஞ்செய்து போக்குவது. (பரா~மி.)

களாசுரன்

பிரமனிடம் மிக்க வரம்பெற்றுத் தேவரை வருத்திச் சிவபெருமானாற் கொலையுண்ட வசுரன்.

களாவதி

1. பரு என்னும் இருடிக்குப் புஞ்சிகத்தலை என்னும் அப்சரப் பெண்ணிடத்துப் பிறந்தவள். பார்வதிதேவியாரிடம் பத்மினி மந்திரம் பெற்று ஸ்வரோசியை மணந்தவள். 2. திரமிளன் தேவி, இவளுக்குப் புத்ர சந்தான மில்லாமையால் கணவன் சொற்படி காசிபர் தவஞ்செய்யும் வனஞ்சென்று புத்திரன் வேண்ட அவர் மறுத்தது கண்டு இவள் மனஞ்சோர்ந்து நிற்கையில் அவ்வழிசென்ற மேனகையைக் கண்டு இருடிக்கு வீர்யகலிதம் உண்டாயிற்று. அதனைக் களாவதிகண்டு புசிக்கக் கருப்பமடைந்து புருஷனையடைந்து நடந்தவை கூறி யுபபர்க்கணனைப் பெற்றாள். (பிரம்மகை வர்த்தம்.)

களிங்கன்

அசுரன், பலியின் மனைவியிடம் தீர்க்க தபசு முனிவரா லுதித்த குமரன், இவன் பெயரால் கலிங்கதேச முண்டாயிற்று.

களிம்பு

தாமிரம், பித்தளை முதலிய பாத்திரங்களில் புளிப்புள்ள பொருள்களால் நீலங்கலந்த பசுமையாக உண்டாம் பொருள்; விஷமுள்ளது.

களிற்றுடனிலை

ஒளியையுடைய வேல் படுதலான் வீழ்ந்த யானையின் கீழ்ப்பட்டது. (பு~வெ.)

களை

கர்த்தமப் பிரசாபதியின் பெண், மரீசிருஷியின் தேவி, கச்யபமுனிவனுக்கு தாய்.

கள்

1. உலக சிருட்டியில் எல்லாரும் ஒரு வருக்கொருவர் உயர்வு தாழ்வில்லாமல் இருந்தனர். பிரமன் யாகாதி காரியங்கள் நடக்கும் பொருட்டுக் கள்ளைப் பானஞ் செய்யக் கூறினர். அதனையுண்டார் பலர் மயங்கிப் பாவத்திற்குள்ளாய்ப் பாவிகளாயினர். 2, ஆகுகன், பலராமர், கிருஷ்ணன் இவர்கள் தங்கள் குலமாகிய விருஷ்ணி குலத்தினரும், அந்தக் குலத்தினரும் இனி கள்ளைக் குடிக்கக் கூடாதெனக் கட்டளை யிட்டார்கள். (பார. அச்.) 3. இது தென்னை முதலிய மரத்தின் பாளைகளிலிருந்தும், வேர் கிளைகளிலிருந்தும் ஒழுகும் நீர். தென்னங்கள், பனங்கள், ஈச்சங்கள், அத்திக்கள், வேப்பங்கள் முதலிய.

கள்ளம்பாளனார்

இவரைக் கண்ணம் பாளனார் எனவுங் கூறுவர். அகத்தில் கருவூர் கண்ணம்பாளனா ரென்றிருத்தலால் இவர் ஊர் கருவூர் போலும், (அகம் 180) இவர் சேரமான் கோக்கோதையையும், அவனது வஞ்சியையும் புகழ்ந்திருக்கிறார். (அகம் 263) இவர் பாடியன நற்றிணையில் 148 வது பாடல் ஒன்றும் அகத்தில் 3ம் ஆக, 4 பாடல்களிருக்கின்றன.

கள்ளர்

1. ஒருவகைச் சாதியார். இவர்களுக்கு இப்பெயர் தொழிலால் வந்ததாம். இவர்கள் தலைவன் அம்பலக்காரன். இவன் சொற்படியே மற்றவர் நடக்கவேண்டியது. இவர்கள் மேலூர், வெள்ளாலூர், சேற்றுக்குடி, கீழ்நாடு முதலிய இடத்திலுள்ளவர்கள். (தர்ஸ்டன்.) 2. சாணார்களில் ஒருவகையார், (தர்ஸ்.)

கள்ளால் கெட்டவர்கள்

சுக்ரன், சுக்ரீவன், யாதவர்கள்.

கள்ளிகள்

இவை பாலுள்ள தாவர வகைகள். இவை பலவகை ஒளஷதங்களுக் குபயோகமானவை. இவற்றிற் சில காழ் கொள்வனவு முண்டு, இச்சாதியில் திருகு கள்ளி, சதுரக்கள்ளி, கொடிக்கள்ளி, இலைக்கள்ளி, மான்செவிக்கள்ளி, எருக்கு, கற்றாழை, சப்பாத்து, பிரண்டை முதலிய இவ்வினத்தைச் சேர்ந்தவை.

கள்ளிக்காக்கை

இது, உடல் சிவந்த கறுப்பு நிறம் ஆதலால். இதனைச் செம்போத்து என்பர். இதன் கண்கள் மிக்க சிவந்த நிறங்கொண்டவை. இது, பூச்சிகளையும் மற்றவற்றையும் தின்னும். இதன் மூக்கு. காக்கை போல் நீண்டதன்று.

கள்ளிக்குடிப்பூதம் புல்லனார்

இவரது இயற்பெயர் புல்லனார். பூதன் குடிப்பெயரா யிருக்கலாம். ஊர் கள்ளிக்குடி இவர் பாலைத்திணையையே பாடியுள்ளார். இவர் பாடினவை நற்றிணையில் 333 ஆம் பாடலும், குறுந்தொகையில் ஒன்றுமாம்.

கள்ளிலாத்திரையனார்

ஆதனுங்கனைப் பாடிய தமிழ்ப்புலவர். (புற~நா.) (குறு~தொ.)

கள்ளுக்குருவி

(கல்லுக்குருவி) இந்தக் குருவிக்குக் கால்கள் நீளம், சாம்பல் வர்ணம். இது தரையிலும். மணலிலும் முட்டையிடும்.

கள்ளூரங்கிணறு

இந்தியாவின் மத்யமாகாணத்தில் காண்ட்வா நகரத்திலுள்ள ஒரு பள்ளிவாசலிலுள்ள கிணற்றில் பால் போல் வெண்மையான ஒருவித நீர் சுரக்கின்றது. அதை உண்டால் கள்போல் மயக்கத்தைத் தருகிற தென்கின்றனர்.

கழனிலை

கொல்லு மாறுபாட்டைப் பெருகும் வீரர்படும் பூசலிற்கடிய முரணையுடைய வீரன் கழலைப்புனைந்தது. (பு. வெ. பொதுவியல்)

கழறிற்றறிவார் நாயனார்

இவரே சேரமான பெருமாணாயனார். இவர் சேரநாட்டில் மகோதை நகரத்தில் சேரராசாவின் புத்திரராயவதரித்துச் சிவபணிவிடையில் அன்புடையவராய்த் திருவஞ்சைக்களத்தில் திருத்தொண்டு செய்து கொண்டிருந்து தந்தை இறந்தபின் மந்திரிகள் வேண்ட என் சிவத்தொண்டு வழுவாதிருக்குமாயின் இந்த அரசாளுந்தொழிலை ஏற்பேனென்று சிவசந்நிதானத்திற் சென்று முறையிட்டனர். சிவபெருமான் எவரும் எப்பொருளும் வசனிப்பதறியும் உணர்ச்சி உதவப்பெற்று முடிசூடி யானை மீது பவனிவருகையில் வண்ணான் ஒருவன் றன் றலையிற் றாங்கிய உழமண், மழையால் கரையத் தேகமெங்கும் வெண்ணிறமாய் விபூதி பூசுண்டவன்போற் காணப்பட்டனன், பவனிவரும் நாயனார் எதிர்சென்று பணிய, வண்ணான் அடியேன் வண்ணான் என்றனன். நாயனார் எனக்குச் சிவவேடத்தை நினைப்பூட்டினீர் என்று வணங்கி மீண்டும் அரசு செலுத்தி வந்தனர். இவ்வகை யரசுசெலுத்திக்கொண்டு பூசாகாலத்தில் நடராஜ மூர்த்தியின் சிலம்போசை கேட்டுப் பரமானந்தமடைந்து வருங்கால் சிவ பெருமானால் விடுக்கப்பட்ட திருமுகப் பாசுரத்துடன் எழுந்தருளிய பாணபத்திரரை எதிர்கொண்டு பூசித்து அவர்க்கு வேண்டிய அளித்து அனுப்பினர். ஒருநாள் நாயனார் சிவபூசை செய்கையில் நாடோறுங் காதிற்படுஞ் சிலம்போசை தாழ்ந்தது, நாய னார் தமது வாளை நாட்டி அதன் மேல் பாய எண்ணுகையில் பரமசிவஞ் சிலம்போசை யருளி நாயனாரை நோக்கி வன்செண்டன் பதிகமோதியதைக் கேட்டு விருப்புற்றிருந்தனன் என்றனர். நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளைச் சிதம்பாஞ்சென்று தரிசித்துப் பொன்வண்ணத் தந்தாதி பாடித் துதித்துத் திருவாரூர் சென்று சிவமூர்த்தியைத் திருவாரூர் மும்மணிக் கோவை பாடித் துதித்துச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் ஒரு பரிகலத் துண்டு அவருடன் பல தலங்களுக்குஞ் சென்று சேவித்துச் சுவாமிகளை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக்கள மெழுந்தருளிச் சிவதரிசனத்திற்கு அழைத்துச் சென்று தரிசனஞ் செய்வித்துச் சுவாமிகளுக்கு விருந்து செய்வித்து வைத்திருந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் திருவாரூர்ப் புற்றிடங் கொண்டாரிடம் நினைவுண்டாகிப் பிரிய அவர்க்கு வேண்டிய பொன் முதலிய அளித்து வழிவிட்டுத் திரும்பினர். இவ்வகை நீங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரிற் சிவபெருமானைத் தரிசித்திருக்க ஒருநாள் திருவஞ்சைக்களம் சேவிக்க எண்ணமுதித்து அவ்விடம் எழுந்தருளிச் சுவாமிகளைத் தரிசித்துச் சிவபெருமான் கட்டளையால் திருக்கைலைக்குச் சிவகணங்கள் எதிர்கொள்ளச் சேரமானிடம் நினைவுடன் சென்றனர். சுவாமிகள் நீங்குதலைத் திருமஞ்சனங் கொண்டிருந்த சேரமான் பெருமாணாயனார் யோகத்தாலறிந்து உடனே குதிரை மீதேறிக்கொண்டு அதன் காதில் பஞ்சாக்ஷர முபதேசித்து ஆகாயவழியிற் சென்று ஸ்ரீநந்திதேவராற் றடைபட்டு நின்று திருஆதியுலா ஓதிச் சிவானுக்கிரகத்தால் கணநாதராய் வீற்றி ருந்தவர். இவர் அருளிச்செய்த திருவுலாச் சாத்தாவால் பூமியில் வெளிவந்தது. இவரைச் செங்கோற் பொறையன் புத்திரர் எனவும் சங்கரநாதசேரன் புத்திரன் எனவுங் கூறுவர்.

கழற்சிங்க நாயனார்

இவர், பல்லவகுலத்தில் திருவவதரித்துச் சிவனருளால் அரசாட்சி செய்துகொண்டு பல தலங்களையும் தரிசித் துக்கொண்டு வருகையில் திருவாரூரிற் புற்றிடங் கொண்டார் சந்நிதியில் தாமும் மனைவியாரும் தரிசித்துப் பிரதக்ஷிணஞ் செய்கையில் மனைவியார் பூமண்டபத்தின் கீழ் விழுந்த ஒரு மலரை யெடுத்து மோக்கக்கண்ட சத்திநாயனார் தமது சுரிகையால் அரசபத்தினியின் மூக்கை யரிந்தனர். இதனைக்கண்ட கழற்சிங்க நாயனார் இப்படிப்பட்ட தீமை செய்தாளுக்கு அது போதாது என்று பூஎடுத்த கையினையும் துணித்து நெடுங்காலத்திற்குப் பின் சிவ பதமடைந்தவர். (பெ புராணம்.)

கழாத்தலையார்

இவர் சேரமான் குடக்கோ நெடுஞ் சோலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும் பொருது வீழ்ந்தது கண்டு மனம் வருந்திப் பாடினர். இருங்கோ வேளின் முன்னோரில் ஒருவன் இவரை இகழ்ந்ததால் அவனது அரையம் என்னும் நகரம் பாழ்பட்டது. இவரால் பாடப்பட்டோன் சேரமான் பெருஞ்சோலா தன் ஒரு தமிழ்ப்புலவன். (புற~நா)

கழாரம்பர்

அகத்தியர்மாணாக்கருள் ஒருவர்.

கழார்க் கீரனெயிற்றியார்

இவர் எயிற்றி யென்னும் இயற்பெயருடையார். கீரன் என்பவரின் மனைவியார். பெண்பால் புலமையார். சோழனாட்டு மாயூரத்தின் கீழ்பாலுள்ள கழார் என்னு மூரினர். “வெல்போர்ச் சோழர்கழா அர்க்கொள்ளும்,” (நற் 281.) வேட்டுவமரபினர். இவர்கணவன் கீரனாரென்பவர் சோழற்குப் படைத்துணை யாகச்சென்று போர்முகத்து வெற்றி தரும் தன்மையார். ”காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோயறியா வறனிலாளர். (அகம் 294) ஆயினும் பிரிந்தால் காமநோயால் காதலி வருந்துவளென்பது பற்றி பெரும் பாலும் காதலியைவிட்டுப் பிரிபவரல்லர். ”கோடைத்திங்களும் பனிப்போள்” (நற் 312) இங்கனம் பூவும் மணமும்போல பிரியா துறையு நாளில் ஒருகால் போருக்குச் செல்லவேண்டினமையால் கீரனார் போர் பெரிதாயிற்றே வாடைக்காலத்தும் வருதற்கியலாவாறு அங்கு வைகவேண்டிய தாகுமேயென்று பலவாறு கவன்றார். அவர் வருந்துவது கண்ட எயிற்றியார் யான் பொறுத்திருக்கிறேன் நீவிர்குறித்த பருவத்து வருவீராகவென்று காதலனைத் தேற்றி விடுத்து அவர் வருந்தியதைத் தொகுத்து வினைவயிற் செலுந்தலைமகன் நெஞ்சைநோக்கி வருந்தியதாகப் பாடி வைத்தனர். (நற் 312) பின்னர் பெரும் போர் நடந்ததனால் குறித்த பருவத்து வாராமல் கீரனார் பாசறையில் நின்றுவிட லும் எயிற்றியார், மழை பெய்கின்ற நடுயாமத்தின் குளிரின் கடுமை தாங்க வியலாது கண்ணுறக்கங் கொள்ளாது நம்மைக் கருதாத காதலர் அன்பிலரெனத் தோழியை நோக்கி வருந்துவாராயினர். (நற் 281) வருந்தும்போது கண்ணீர் வடிய அதனை “காதலர்ப் பிரிந்தகையறு மகளிர் நீர்வார் கண்ணின் கருவிளைமலா” எனத் தாமே குறிப்பித்துள்ளார். (அகம் 294) அங்ஙனம் கண்ணீர் வடிதலும் எம்மை வாடைக்காலத்துப் பிரிந்தவரைக் கருதி அழுதலால் எமது கண்கள் வெட்க முடையன அல்லனவென்று வெறுத்துக் கூறியும் (குறு 35) என்னெஞ்சு அவ ரைக்கருதிப் புண்பட்டதனால் அது வருந்த வேண்டுவதாயிருப்ப யாதொரு தொடர்புமிலாத என் கணவன் உறங்கிலனென்றும் (குறு 261) மழை முதலாயின அவர் நாட்டிலில்லையோ இருந்தால் வந்திருப் பரேயென்றும் (குறு 330) வாடையை நோக்கி நீயெனக்கே வந்தனையோ. இவ்வண்ணமே என் காதலரிருக்கு மிடத்திற் சென்றால் அவர் என்னை நினைத்தாகிலு மிருப்பரென்றும் (அகம் 163) துணை யுடையோரை நோக்கி வாடைவந்து விட்டதனால் ”எப்பொருள் பெறினும் பிரியன்மினோவெனச் செப்புவாளியர். ” துணை யிலேனாதலின் கூறுவாருமில்லை. பல்லிலே தீப்பிறக்க அடியுண்டு வருந்து வேனோவென்றும் (அகம் 217) நெற்றியில் பசலைகொண்டு யான் வருந்த இவள் நம்மால் அளிக்கத்தக்காளென்று கருதாதவர் இனி நினைக்கவே மாட்டாரோ? நினைத்தும் பெரிய வினையிடைப் பட்டமையின் மறந்துளாரோ? (அகம் 235) தோழீ என் தனிமையில் இவ்வாடை வீசலானே இனிப்பொறேன் என்று பலவாறு புலம்பி வைகினார். (அகம் 294) இவ்வாறு வரும் திவைகிய நாளில் போர் முனையிற் சென்ற கீரனார் மீண்டுவந்தனர். அவர் வருகிறாரென்பதை முன்னமே ஏவலிளை யாராலறிந்த எயிற்றியார் பெருமகிழ் வெய்திக் காதலர் வரும்போது தேர்ப்பா கற்குக் கூறுவதாக அவருள்ளக் கிடையையும் தம்முடைய நிலையையும் சேரத் தொகுத்துப் பாடினார். (அகம் 234) பின் னர்வந்த காதலனோடு மகிழ்ந்துறைவராயினார். இவர் பாடல்களைப் பிற்காலத்துச் சான்றோர் துறைப்பாற்படுத்தித் தொகை நலிற் கோத்தாரென்றும் கொள்க. இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (281,312) பாடல்களும் குறுந்தொகையில் மூன்றும் அகத்தில் ஐந்துமாகப் பத்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றிணை.)

கழுகுகள்

1. இவை உலகமெங்குமுள்ள பறவைகள். இவ்வினத்தில் வெள்ளை நிறக் கழுகு, சாம்பல் நிறக் கழுகு என இரு வகையுண்டு, வெண்ணிறக் கழுகுகளின் மூக்கு மஞ்சள் நிறம். இவ்வினத்தில் வேறு சில தலையிலும் கழுத்திலும் மயிரில்லாதவை. அவற்றைக் கூளிகள் என்பர். அவை மலைகளில் வசிக்கின்றன. இவை எல்லாப் பிராணிகளையும் பிணங்களையும் தின்னும், இவை உறுதியான கண்களுள்ளவை. தூரத்திலுள்ள பொருள்களையும் பார்க்கத் தக்கவை, இவை ஆகாயத்தில் உயரப்பறந்து பூமியில் இரையிருக்கும் இடமறிந்து இறங்கும். இது பக்ஷிகளை யடக்கியாளும் வன்மையுள்ளது. இது நீண்ட சிறகையும் சிறிய தலையையும் வலிய கால்களையும் வளைந்த அலகினையுமுடையது. இதுவெகு கூர்மையாகப் பார்க்கும் கண்களை யுடையது. இது சூரியனை நன்றாய்ப் பார்க்கும். இது தனித்தும் பெடையுடனும் வாழும், இது சிறு கோழி, ஆட்டுக்குட்டி முதலியவற்றைத் தூக்கிச் செல்லும், மலைக்கழகு இது கழுகினத்தினும் பருந்தினத்தினும் சேர்ந்தது. இது, மலைகளில் வசிக்கிறது. இவ்வினம் 2 அடிமுதல் 3 1/2 அடிகள் உயரம் உண்டு. இதற்குக் கழுத்தில் மயிரில்லை. கழுத்தினடிப்பா கத்தில் மயிர்க் கொத்துக் கொத்தாயிருக்கிறது. இது, குளிரின் பொருட்டு மயிரில்லாத கழுத்தை இரக்கையில் சுருட்டிக் கொள்ளுகிறது. இதன் மூக்கும் நகமும் உறுதியான தோலுள்ள பிராணிகளின் சருமத்தையும் பிளக்கவல்லவை. இவ்வினத்தில் பெரிய உருவுள்ளவை ஐரோப்பா மலைகளிலுண்டு. அவை குழந்தைகளையும் தூக்கிச் செல்லும் என்பர். இவ்வினத்தில் தென் அமெரிகாவின் ஆண்டிஸ் மலைப் தேசத்திலுள்ளவை உலகத்திலுள்ள எல்லாக் கழுகுகளிலும் பெரியவை. இதற்குத் தலையில் கொண்டையும், கழுத்தில் தாடியுமுண்டு. இவை தனித்து வசிப்பவை. பாம்புண்ணிக்கழது இது, ஆபிரிகா கண்டத்தின் மேற்கரைவாசி, இதற்கு, உடல், தலை, கழுத்து கழுகை ஒத்திருக்கின்றன. கால்கள் நீண்டவை. இப்பறவை பூச்சி புழுக்களைத் தின்பதினும் பாம்புக ளைப் பிடித்துத் தின்பதில் அதிக விருப்பமுள்ளது. இது பாம்புகளைப் பிடிக்கையில் இதன் சிறகை விரித்துக்காட்டும். அச்சிறகை பாம்பு கவ்வுகையிலிது அதன் கழுத்தைப் பிடித்துக் கொன்று தின்னும். இதன் தலையில் நீண்டு சுருண்ட கொண்டை உண்டு. இக்கழுகு ஈஜிப்ட், ரோம், ஆஸ்திரியா, ஜர்மனி, ரஷ்யா, யுனைடட் ஸ்டேட்ஸ், மெக்ஸிகோ நாட்டுக் கொடிகளில் அடையாளமாக இருக்கிறது. இவ்வினத்தில் பதினான்கு வகைக்கு மேலுண்டு, இவற்றில் வெள்ளை வால்களையுடைய கடற்கழுகு, ஆசியக்கழுகு, பொன்னிறச் சிறகுள்ள கழுகு, இறகுகளில் புள்ளிகளைப் பெற்ற கழுகுகள் உண்டு. இவ்வுருவங்களை அாசர் தங்களுக்கு அடையாளங்களாகப் பெற்றிருக்கின்றனர்.

கழுகுநாட்டுக் கம்மாளர்

ஒருவகை நாட்டுக் கம்மாளர்.

கழுதை

இது குதிரையினத்தைச் சேர்ந்த சாகபக்ஷணி. இது நான்கு அடிகள் உயரமும் ஐந்தடி நீளமும் உள்ள செந்து. சாம்பல் நிறமும், நீண்ட காதும், குறுகிய பிடரிமயிருங் கொண்டது. பார்வைக்கு விகாரமா யிருப்பினும் சுத்தமான மிருகம், இதற்கு உதைக்குந் தன்மையுண்டு, பெருங்குரலுடன் கத்தும். இது குனிந்து கவனித்து நடப்பதால் சுமந்து செல்கையில் கால்களிடறும். இது, இந்தியாவில் வண்ணானுக்கும் குறவர் முதலியவர்க்கும் உபயோகமாகிறது. ஐரோப்பா கண்ட முதலிய சில இடங்களில் வண்டியில் பூட்டி உபயோகிக்கிறார்கள்.

கழுதைப் புலி

இது உருவத்திலும் நிறத்திலும் கழுதையைப் போலவும், புலியைப் போல் உடலில் கரிய கோடுகளையும் பெற் றிருப்பதால் இதற்கு இப்பெயரிடப்பட் டது. இதற்கு முன்காலினும் பின் கால்கள் குறுகியவை, இது கூனன் நடப்பது போல் நடக்கும். நேரே நடவாமல் சுழன்று சுழன்று நடந்து போம். இது நேரே யோடி இரைதேட முடியாதாதலால் இது சிங்க முதலிய பெரிய மிருகங்களுக்குப் பின்சென்று அவை தின்று மிகுந்தவற்றைத் தின்று திருப்தியடையும். இதற்குப் பற்கள் உறுதியாதலால் எலும்புகளையும் நொறுக்கித் தின்னும். இது கூச்சலிடுவது மனிதர் பெருஞ்சிரிப்புச் செய்வதுபோல் தோன்றும், இதனால் மயங்கி மனிதர் அவ்விடஞ் சென்றால் இதற்கிரையாவர்.

கழுமரம்

முள்போல் கூரிதாய் இரும்பினாலும், மரத்தினாலும் செய்யப்பட்டுப் பூமியில் பதித்த மரம். இதில் குற்றஞ் செய்தார் ஆசனவழியாய்க் குத்தப்படுவர்.

கழுமலம்

சீர்காழி.

கழுவர் படை வீடு

பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். இது சமணர்கள் ஏறிய (8000) சழுமரங்களின் வரிசை முடிந்த கீழைக் கோடியாகிய இடத்திலுள்ளது; திருப்பூவணத்தின் பக்கத்தது; இக்காலத்துக் கழுவேறு மடை, கழுவேறு கடையென வழங்கும், கழுக்களின் வரிசை முடிந்த மேலைக்கோடியில் மேலைக்காலென ஒரூருள்ளது. (திருவிளை.)

கழைக்கூத்தாடி

தொம்பரவனைக் காண்க.

கழைக்கூத்தி

கூத்தாடினவளைக் காண்க.

கழைதின் யானையார்

வல்வில் ஓரியைப் பாடிய தமிழ்ப் புலவர். (புற~நா.)

கவசமந்திரதேவதை

வண்டினிறமாய் பத்மாசனராய், முக்கண், வரதம், அப்யம், சத்தி, சூலம், சர்வாபரண பூஷிதராயிருப்பர்.

கவசர்

ஒரு இருடி. ஆசாரியர்க்குப் பதினான்குகோடி பொன் கொடுக்க வெண்ணி இரகுவிடம் பெற்று அளித்தவர்.

கவசி

திருதராட்டிரன் குமரன்.

கவதக்னி

சஞ்சயனுக்குத் தந்தை.

கவந்தன்

கபந்தனைக் காண்க.

கவந்தம்

யுத்தகாலத்துத் தலையற்றவிடத்தும் முண்டம் தானே ஆடல். இதனை அட்டை ஆடல் என்பர். (நச்சர்.)

கவயன்

ஒரு வாநரசேநாபதி.

கவயாக்ஷன்

ஒரு வாநரவீரன்.

கவரைகள்

இவர்கள் கௌரவ வம்சத்தவரென்றும், கௌரியின் வம்சத்தவ ரென்றும் கூறிநிற்கும் தெலுங்கர். இவர்களிற் பலர் கலப்பு ஜாதியராக இருக்கின்றனர். கௌரவரைக் காண்க.

கவலன்

காதியைக் காண்க.

கவலை

கபலை காண்க.

கவஷன்

துருவுக்குத் தந்தை.

கவாக்ஷன்

சுக்கிரீவசேனாபதி. வாநரன்,

கவி

1. சுக்கிரன். 2. சுக்கிரனுக்குத் தந்தை. 3. இக்ஷ்வாகுவின் தம்பி. வைவச்சுதனுக்குக் கடைசி குமரன். 4. ருக்ஷயன் குமரன். இவன் வம்சத்தவர் பிராமணராயினர். 5. பிரிய விரதனுக்குப் பிருஹஷ்மதியிட முதித்த குமான். இவன் ஊர்த்துவரேதஸ். 6. இடபனுக்குச் சயந்தியிட முதித்த குமரன். 7. ஒரு இருடி. இவன் தேவி முகுந்தை. 6. கௌசிகனைக் காண்க, 9. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். இவற்றில் பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்து மற்றொருவன் பாடும் என்றவுடன் பாடுவோன் ஆசுகவியாம், சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோ சைத்தாய் அமுதமுறப் பாடுவோன் மதுரகவியாம். மாலைமாற்று, சக்கரம், சுழி குளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினாவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நிரோட்டகம், சித்து, ஒரு பொருட்பாட்டு, பலபொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச் சுருக்கம் இவை முதவிய தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியாம். மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கடத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப் பாடுவோன் வித்தாரக்கவியாம். கவி அரங்கேற்றிய பாட்டுடைத் தலைவன் செய்யும் வழிபாடு. பலவகை அலங்காரங்களானும் எழுத்து, சொல், பொருள், யாப்பு முதலிய குற்றம் நீங்கப் பாடும் புலவனும், அவைக்களத் துள்ளாரும், அரசனும் வியக்கும்படி பாடும் புலவனும், இயலிசை நாடகம் எனும் முத்தமிழ் வல்லவனும், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் பாக்களைப் பாடுகின்றவனும், உயர் குடியிற் பிறந்து மேம்பட்டவனும், எல்லா வுறுப்புக்களும் குறைவின்றி நிறைந்து நல்லொழுக்கமுடையானும், முப்பது வயதிற்கு மேற்பட்டு எழுபது வயதுள்ளவனாகிய கவிஞனொருவன், தன்மேற் பாடுங் கவிதையை யாவருமறியக் கொள்ளுங்கால், அவைக்களத்தில் தோரணத்தைக் கட்டித் துவசத்தை நாட்டி மங்கலமுரசியம்ப அந்தணரொருபால் வாழ்த்தி இவ்வாறு மேன்மைமிக்க கோலத்தோடு விரித்த அழகிய ஆடையில் பல தானியங்களாலமைந்த முளைப்பாலிகையுடன் தீபமும், பூரண கலசமும் நிறைந்த மேற்கட்டியையுடைய பந்தலின் கீழ் உறவினர், நெருக்கானும், பெண்கள் பாடும், பல்லாண்டானும் நிறைந்த தன்செல்வமுள்ள கோயிலின் நடுவில் தான் வெள்ளாடையுடுத்து வெண் பூச்சூடி, தன்னைப் பாடிய புலவனைத் தனதாசனத்திருத்தித் தானருகிருந்து மங்கல மமைந்த செய்யுளை மகிழுறக் கேட்டு பொன்னும் பணியும் பொருந்த அளித்து அவன் செல்ல அவன் பின் ஏழடியின் சென்று அவன் நிற்க வெனக் கூறத்தானிற்றல் கவிபெறுவோன் கடமையாம்.

கவி ஆண்டான்

ஒரு கவிஞன், இவன் ஓர் சத்திரத்தில் உண்டபோது கூறியது. “வாயெரியக் கையெரிய வயிறெரியச் சட்டிவைத்து வறுத்துக் கொட்டிக், காயெரியக் கடின முடனரைவயிற்றிற் கன்னமிட்ட கடினக்காரி, தாயெரிய மகளெரியச் சேஷியெனு மொட்டை முண்டை தலைமேற்பற்றித், தீயெரியக் கண்டக்கா லெனதுடைய வயிற்றெரிச்சற்றீருந் தானே.”

கவிக்களஞ்சியம்

ஒரு தமிழ்க்கவி. இவர், புதுப்பாகை யூரினனாகிய கறுப்பன் புதல்வர். வேதாளக்கதையினை 864 விருத்தங்களில் பாடினவர்.

கவிசாகரப் பெருந்தேவனார்

கடைச்சங்சத்து வித்துவான்களில் ஒருவர். (திருவள்ளுவமாலை.)

கவிசாதன்

நகுஷனுக்கு நண்பனாகிய முனிவன். பரீக்ஷித்துக் கார்க்கோடகனா லிறக்கச் சாபமளித்தவன்.

கவிப் பெருமாள்

திருவள்ளுவர் திருக்குறளுக்கு உரையிட்ட ஆசிரியர்கள் பதின்மரில் ஒருவர்,

கவிப்பர்

செட்டிகளில் ஒருசாதிப்பகுப்பார்.

கவிப்பு

ஒரு காரியங் கேட்க வந்தவன் உற்ற திசையையறிந்து அந்தந்தத்திக்கிற் கடைத்த ஆரூட இராசி முதலாக ஆதித்தன் சரிக்கிற வீதியளவு மெண்ணின் தொகையை உதயராசி முதலாகக் கழித்துக் கொண்டு உற்றராசி, கவிப்பாம். இப்படி உதயத்தாற் சென்ற காலமும், ஆரூடத்தால் நிகழ்காலமும், கவிப்பால் வருங்காலமும் சொல்லப்படும். சொல்லுமிடத்து இம் மூன்று இராசியினும் கேந்திரதிரி கோணங்களினும் சுபக்கிரகங்கள் நிற்றல் நோக்கல் செய்யின் அந்த ராசி வகையால் காலங்கள் நன்றெனவும் தீக்கோணிற்கில் தீதெனவும் கூறுவர்.

கவிராஜ பண்டாரம்

இவர் செங்கோட்டையிலிருந்த புலவர். இவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

கவிராஜகேசரி திருமேனிரத்தின கவிராயர்

மாறனலங்காரத்திற்கு உரையாசிரியர். திருக்குறளுக்கு நுண்பொருண்மாலை யியற்கறியவர்.

கவிராஜபண்டிதர்

இவர் விரையூரிலிருந்த ஒரு தமிழ்ப்புலவர். சங்கராசாரியர் அருளிச்செய்த சௌந்தயலகரி, ஆனந்த லகரி என்னுங் கிரந்தங்களைத் தமிழில் விருத்தச் செய்யுளாக மொழி பெயர்த்தவர்.

கவுசீகம்

ஒரு தீர்த்தம்.

கவுண்டர்

பள்ளிகளுக்கும், சில இடங்களில் வேளாளர்க்கும் பட்டப் பெயராய் இருக்கிறது.

கவுதாரி

இது பெட்டைக் கோழியைப் போல் உயரமும் கபில நிறமும் உள்ள பறவை, வரிகளமைந்த கபில நிறமுள்ளது. இது காடுகளில் பூச்சு, புழுக்களைத் தின்னும். வயல்களில் உதிர்ந்த தான்யங்களைத் தின்று ஜீவிக்கும். இதனைக் கூண்டில் வளர்த்துச் சண்டைக்குப் பழக்குவார்கள்.

கவுந்தி

சைன தவமுதியோள் கண்ணகிக்கு வழித்துணை சென்றவள் (சிலப்பதிகாரம்)

கவுரவதீர்த்தம்

இந்திரப்பிரத்தத்து வழியிலிருக்கும் ஆறு.

கவுரவியன்

கத்ருவின் குமரன் நாகன்.

கவுளயாமளைமதம்

நவநாத சித்தர்களாலாகிய சாத்திரப்படி சத்தியைப் பூசித்து உச்சாடனம், மோகனம், தம்பனம், மாரணம், ஆகருஷணம், வித்வேஷணம் முதலிய ஆறனையும் பெற்றுச் சத்தியைத் தியானித்துச் சத்திபதமடைவது. (தத்துவ)

கவேரக்கன்னி

காவிரி. (மணிமேகலை)

கவேரன்

ஓர் இருடி புத்திரனில்லாது பிரமனை யெண்ணித் தவஞ்செய்கையில் பிரமன் தரிசனந் தந்து ஒரு புத்திரியைத் தந்தனர். அவளே காவிரிந்தி யுருவமானவள். (காவிரித்தலபுராணம்).

கவேரவனம்

கவேரன் தவஞ்செய் தவனம், இது காவிரிப் பூம்பட்டினத்திற் கருகிலுள்ளது. (மணிமேகலை).

கவைமகன்

இவர் கடைக்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் தாம் பாடிய நெய்தற் கவியில் “கவைமக னஞ்சுண்டாங்கு” எனப்பாடி யிருத்தலினிவர்க்கு இப் பெயர் வந்தது போலும், குறு 324.

கஷாயம்

இலைகள் வேர், மருந்து வகைகள் ஊறிய செந்நிறத்தகுடி நீர்.

கஸ்தூரி

இமயாதி மலைகளினிடத்துச் சஞ்சரிக்கும் மான் வயிற்றிலுண்டாம் மணப் பொருள். இதனைச் சந்நிபாதாதி ரோகங் களுக்கு மருத்துவர் உபயோகிப்பர்.

காகங்கரைதல்

பகல் 8 முகூர்த்தங்களில் 1 மு லாபம், 2 மு சேதம், 3 மு வரவு, 4 மூ தனம், 5 மு மழை, 6 மூ யுத்தம், 7 மு மாணம், 8 மு அச்சம். (கிழக்கு) ஆலஸ்யம், (தெ~கி) மரணம், (தெ) தன லாபம், (தெ~மே) சந்தோஷம், (மே) கலகம், (வ~மே) அபயம், (வட) விருந்து, (வ. கி) பொல்லாங்கு, தனக்கு முன்னும், படுக்கைவிட் டெழுகை யினும் கத்தினால் நினைத்துச் செல்லுங் காரியஞ் செயம்.

காகசங்கன்

பிராமணியின் குமரன், சந்தி யாகாலத்தில் போகிப்பவரைக் கூடிச் சந்தோஷத்தைப் போக்குபவன்.

காகதத்தன்

1. சோமதத்தன் குமரன். இவன் குமரன் சுமதி. 2. இராமபிரான்.

காகதுண்டகன்

இவன் இராசகிரிய நகரின் புறத்ததாகிய சோலை யொன்றிலுள்ள ஒரு பெரியவன். தோற்றப் பொலிவை யுடையவன், வாசவதத்தை இறந்து விட்டாளே யென்று கவலைக்கடலில் அழுந் திச் செயலற்றிருந்த உதயணனை எப்படி யேனுங் காப்பாற்ற வேண்டுமென்று தனியே வந்திருந்த மந்திரியருடைய வேண்டு கோளின்படி அவனை நோக்கி “இனி இரண்டு மாதம் நான் சொல்லு கிறபடி விரதத்தோடிருப் பாயாயின் வாசவதத்தையைப் பழைய வடிவத்தோடே பார்க்கலாம்” என்று சொல்லி, அவ்விரத வொழுக்கத் தையும் தெரிவித்து அவன் கவலையை மாற்றியவன். (பெ~கதை.)

காகந்தன்

காவிரிப்பூம் பட்டினத்தை முதலில் ஆண்டிருந்த அரசன்.

காகந்தி

காவிரிப்பூம்பட்டினம் காகந்தனா லாளப்பட்டதாலிப் பெயர் பெற்றது. (மணிமேகலை).

காகனார்

நான்மணிக்கடிகை இயற்றிய புலவர். இவர் கடைச்சங்கத்தார் காலத்தவர்.

காகபர்ணன்

சுகநாகன் குமரன். இவன் குமரன் க்ஷேமவர்ணன்.

காகபாதன்

ஒரு சிவகணத்தவன்.

காகமுனி

கண்ணனுக்கு உபநயனஞ் செய்தவர்.

காகமுனிவர்

திருமணநல்லூரில் சிவமூர்த்தியைத் தரிசிக்கத் தலையால் நடந்து தவமிருந்து திருஞானசம்பந்த சுவாமிகள் திரு மணத்து முத்திபெற்றவர். (ஆச்சாபு: புராணம்).

காகம்

இது கருநிறமான உருவமும் நீண்டு வலுத்த அலகும் உடைய பறவை. இதில் மணிக்காக்கை, அண்டங்காக்கை என இரு வகை யுண்டு. இது ஊரில் வசித்து அவ்வூரில் சிந்திய உணவாதிகளை அருந்தும். இது ஊரில் நாற்றமாய் அழுகிய மாம்ச ஜாதிகளையும் மற்றவைகளையுந் தின்பதால் இதனை ஊர்த்தோட்டியென்பர். இது பறவைகளில் தந்திரமுள்ளது. பிள்ளைகளை ஏமாற்றி உண்பதோடும் பிள்ளைகள் வைத்துள்ள தின்பண்டங்களையும் கவர்ந்து செல்லும். இதனிடத்தில் சில நற்குணங்களும் உண்டு. காலையெழுதல், காணாமல் புணர்தல், மாலை குளித்தல். மனைக்கேகல், உற்றாரோடுண்ணல், உறவோம்பல் முதலிய. இவ்வினத்தில் வெள்ளைக் காக்கை என்பதுமுண்டு. அவை இங்கு அருமை. இவ்வினத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த இடங்களில் ஒருவகை காக்கை உண்டு, அவை சாம்பல் நிறங்கொண்டவை. அவற்றின் இறகுகளிலும் வயிற்றிலும் வெண்மை கலந்திருக்கிறது. அதன் வால் நீளம், இதனை மக்பி, பைக்கா, கீத்தா எனப் பெயரிட்டு முறையே ஆங்கிலர், இத்தாலியர், கிரீஸ் ஜாதியார் அழைப்பர். இது இந்திய காக்கையின் தொழிலைச் செய்கிறது. இக்காக்கை பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டைகளைத் திருடிக் குடித்து விடுதலால் மற்றப் பறவைகள் இதனை விரோதிக்கும். இதுபோல் அமெரிக்கா நாட்டில் ஒருவகை காக்கையுண்டு. அதனைக் காரியன் என்பர். இவை ஐந்திராம், வாருணம், வாயவ்யம், யாம்யம் என நான்கு வகை. இவற்றிற்குப் பலியிட்டோர் யமதண்டனை யினின்று நீங்குவர். காணப்படாத பிதுரர் வாயசரூபமடைந்து திரகத்தனை ஆக்ரயித்தலின் பலியிட வேண்டும்.

காகாசுரன்

இவன் இந்திரகுமாரன். இராமமூர்த்தி சதாபிராட்டியுட னிருக்கையில் அபசாரப்பட்டு ஒரு கண்ணிழந்தவன்.

காகி

தாம்சையின் புத்திரி, உலூகன் தாய்.

காக்காய்க்குறவர்

இவர்கள் காக்காய்களுக்குச் சோற்றில் கள்ளிப்பால் கரந்து விசிறிக் காக்கைகளை மயங்கச்செய்து பிடித்துத் தின்போர். இவர்களிற் சிலர் காவிட் டியான், மணிப்பறையன், மேலூத்தான், சாத்தப்பறையன் எனப் பகுக்கப்படுவர்.

காக்கை

1. ஆலமரத்தைக் காண்க, 2. தருமன் பெண். இவளுக்குக் காக்கைள் பிறந்தன.

காக்கைபாடினியம்

காக்கைபாடினியரால் செய்யப்பட்ட இலக்கண நூல், இது பிற்காலத் திறந்துபோய் ஆங்காங்குச் சிற்சில அரிய சூத்திரங்களே வழங்கிவருகின்றன.

காக்கைபாடினியார்

அகத்தியர் மாணாக்கா பன்னிருவருள் ஒருவர். இவர் சிறு காக்கைபாடினியம் எனும் இலக்கண நூல் செய்தவர்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்

ஒரு தமிழ்ப் புலவர். இவர் பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்துப்பாடி நாடு கோட்பாடு சேரலாதனிடம் ஒன்பது காப்பொன்னும் தூறாயிரம் காணமும் பெற்றவர். இவர் கடைச்சங்கத்தார் காலத்தவராக இருக்கலாம். (பதிற்றுப்பத்து) (குறுந்).

காக்ஷிவந்தன்

கண்ட கௌசிகருஷிக்குத் தந்தை, ஜராசந்தனுக்குப் புத்திர சந்ததி கொடுத்தவன்.

காக்ஷிவன்

கௌதமருஷி யௌசீநரியெனும் சூத்ரப்பெண்ணிடம் பெற்ற குமரன். இவர் கிரிவிரஜத்திலிருந்தவர். (பார~சபா.)

காங்கேயன்

1. இவர் புதுவையிலிருந்த ஒரு பிரபு, ஒட்டக்கூத்தரை ஆதரித்து அவர்க்குக் கவுடப்புலவன், கவிராக்ஷதன் எனும் பட்டமளித்து அவரால் நாலாயிரக்கோவை யெனும் பாடல் பெற்றவர். 2. குமாரக் கடவுள், கங்கை வளர்த்த தனாற் பெற்ற பெயர். 3. வீஷ்மன் கங்காபுத்திரன், பீஷ்மனைக் காண்க. பிரபாசன் எனும் எட்டாம் வசுவின் அம்சமாயுதித்தவன். 4. ஒரு சித்திரன்.

காங்கேயர்

இவர் தொண்டைமண்டலத்துச் செங்குந்தர் மரபிற் பிறந்த தமிழ்ப் புலவர். உரிச்சொல் நிகண்டியற்றியவர்.

காங்கேரு

இது ஆஸ்திரேலியா நாட்டுமிருகம். இதன் முன்னங்காலிரண்டும் குட்டை, பெட்டைக் காங்கேருக்கு அடிவயிற் றில் பைபோன்ற ஒரு உறுப்புண்டு. அதில் அது தன் குட்டிகளை வைத்துக்கொண்டு காக்கிறது. குந்தி, குந்தி நடப்பது. காடுகளிலும், வயல்களிலும், மரங்களிலும் அணில் போல் சஞ்சரிக்கும். இது வருடத்திற் கொருமுறை குட்டி போடுகிறது. காங்கேருவின் குட்டி, ஈனும்போது மாம்ச பிண்டம் போல் உருவமின்றி யிருக்கிறது. இப் பிண்டத்தைத் தாய் தன்னிடமுள்ள பையிலடக்கிக்கொள்ளுகிறது. அக்குட்டி அப்பையிலிருந்தே பாலுண்டு அவயவங்களைப் பெற்றுத் தேகத்தில் மயிர்முளைத்த பின் வெளிப்படுகிறது.

காங்கோ அங்கோலாமதம்

காங்கோதேசத்தவர் தங்களரசனைத் தேவனென்று எண்ணித் துதிப்பர். அவ்வரசனைச் சாம்பர் எனவும் பிங்கோ என்றும் பெயரிட்டழைப்பர். ஆயினும் அவ்வரசனும் குடிகளும், மாகிஸ்ஸோ, சிகாதி, எனுமிரண்டு விக்ரகங்களைப் பூஜிப்பர். கங்காகம் பேரி எனுந்தேவதை சகல சுபங்களையுந் தருவதென்று அவளை ஆராதிப்பர். மாடாம்போ மாகாணத்தில் மிராம்ப எனும் பயங்கர விக்ரகமுண்டு, அதனைச் செயத்தை விரும்பியவர் ஆராதிப்பார். சிலர் புலி, பாம்பு, ஆடு, பசு முதலியவற்றை ஆராதிப்பர். படைப்புக்கடவுளர் அநேகம் உண்டு, அவர்க்குத் துயுஸ்கதா என்று பெயர். இவர்கனின் குருக்கண்மார் கங்கா எனப்படுவர், இக்குருமார் பிணியாளரைக் காணச் செல்லுகையில் வியாதி நீங்கும் நிமித்தம் இஷ்டதேவதைகளின் விக்ரக மொன்று பிணியாளருக்குக் கொடுப்பர். அங்கோலியருக்குப் படைப்புக் கடவுளர் பலர் உண்டு. அவர்களுக்கு ஜம்பன், பாரண்யோ என்று பெயர். இவர்கள் மாகிச்சோ எனும் பல தேவதைகளை ஆராதிப்பர். திருவிழாக் காலங்களில் கீம்பரா எனும் மதசம்பந்த நிருத்தம் செய்வர். பின்னும் சிதோம்பி எனும் மகாத்மாக்களையும், நிகாம்போ எனும் குருக்கண்மாரையும், நிகோனி எனும் வைத்திய தேவதைகளையும், இவ்வாறே குஷ்டு, செவிடு முதலியவைகளைப் போக்கும் தேவர்களையும் ஆராதிப்பர். இவ்விடத்திலிருக்கும் காகாசியர் ஸ்விஸாங்கோ எனும் தேவதையை விக்கிரகமாகச் செய்து பூஜிப்பர்.

காசன்

சுகோத்தின் குமாரன்.

காசரோகம்

இது முதவில் கண்டத்தில் நமைச்சல், அரோசகம், இருமல், அவயவங்கள் நறுக்கித் துவைத்தன போலுதல், கண்கள் மின்மினிப் பறப்பது போலுதல், முதுகு, மார்பு, விலாமுதலிய இடங்களில் நோய், வெண்கலத் தொனிபோல் தொண்டையில் சத்தம், வாயில் கோழையுண்டாதல் முதலியவற்றைப் பூர்வரூபமாகப் பெறும். இது வாதகாசம், பித்தகாசம், சிலேஷ்ம் காசம், ரத்தகாசம், க்ஷயகாசம் எனப் பேதப்படும். இவை ஒன்றினும் ஒன்று அதிபலம் உடையன. இவற்றிற்குடனே மருந்து செய்யாவிடின் மரணந் தரும். (ஜீவ)

காசி

1, இது சத்தமோக்ஷ ஸ்தானங்களில் ஒன்று. இது கங்கா தீரத்திலிருந்து தன்னிற் பிரகாசிக்கும் தன்மையுள்ளது. இதில் சிவமூர்த்தி அடியவர் தியானித்தபடி காட்சி தந்து சித்தியளிப்பர். இத்தலம் சர்வ சங்காரகாலத்தில் சிவமூர்த்தியின் சூலத் தலையி லிருந்து அழிவடையாதது. இத்தலத்தில் உயிர்நீங்கும் ஆத்மாக்களுக்குப் பார்வதி பிராட்டியார் சிரமபரிகாரஞ் செய்யச் சிவமூர்த்தி தாரகமந்திர முபதேசித்து முத்தியீவர். இத்தலத்தில் சயிகடவியன், இயக்கர், சம்வர்த்தனன் முதலியவர்பூசித்த சிவலிங்கங்களும் கோபூசித்த கோப்பிய ரேகம், கபிலாகாரமும், இன்னும் இருஷபத்து வசலிங்கம், பத்திரதோய தீர்த்தம், இரணியகற்பேசம், சுவலினேச்சுரம், பரலிங்கம், கந்துகேச்சுரம், சயிலேச்சுரம், சங்கமேச்சுரம், சுத்திமேசம், சுக்கிரேசம், சம்புகேசுரம், மல்லிகார்ச்சுனம், ஈசானம், கணேச்சுரம், அகிலேச்சுரம், இராமேச்சு ரம், கதம்பேச முதலிய தலங்களுமுண்டு. இந்த மகாத்தலத்தில் ஐந்து குரோசம் சிவலிங்கங்கள் இருத்தலால் ஆநந்தகானம் எனவும், இறந்த உயிரையளித்தலாலும், வேதியன் எடுத்த பிடி மணலில் தோன்றிய சிவலிங்கமிருத்தலாலும், அவிமுத்தம் எனவும், ஆன்மாக்கட்குச் சிவானந்த மளித்தலால் ஆனந்தகானம் எனவும், சர்வசங்கார காலத்தில் பூதங்கள் ஒடுங்குமிடம் ஆதலால் மாமயானம் எனவும், சிவமூர்த்தி சோதியுருவாய் எழுந்தருளியிருத்தலாலும் முத்தி மாதுக்கு இருப்பாதலாலும், காசி எனவும் உயிர்க்குத் தருமம் அளித்தலால் தரும் வனம் எனவும், பெயர் பெறும். இக்காசி பெண்ணுருவம் பெற்றுச் சிவமூர்த்தியை வணங்கித் தன்னை வணங்கினவர், முத்தி யடைய வரம் பெற்றனள். 2. காசிபன் குமரன். இவன் குமரன் விஷ்ட்ரன்.

காசிகாண்டம்

காசி மகாத்மியம் கூறிய நூல். இது அதிவீர ராமபாண்டியனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

காசிபன் கீரனார்

இவரது இயற்பெயர் கீரன் கடைச்சங்கத்திலே தலைமை பெற்றிருந்த நக்கீரரின் வெறென்பது தெரிய ஏனைக் கீரர்களெல்லாம் ஒவ்வோரசை மொழி கொடுக்கப் பட்டமையின் இவரும் அவ்வாறே காசிபன் கீரனாரெனப்பட்டார். காசிபனென்ற தனால் இவர் காசிபகோத்தி சத்தினராகிய அந்தண ரென்றறியப்படும் இவர் முல்லைத் திணையைப் பாடியுள்ளார். வம்பமாரி யென்று தலைவி கருதியாற்றுமாறு தோழி மருட்டி மழையை நோக்கிக் கூறுவதாக இவர் பாடியது மிக்க நயமுடையதாகும். இவர் பாடியது நற் 248ம் பாட்டு.

காசிபர்

A. மரீசி அல்லது அரிசி ருஷியின் குமரர். தாய், களை. இவர் தக்ஷப் பிரசாபதியின் குமரிகள் பதின்மூவரை மணந்தனர். அவர்களாவார்: அதிதி, திதி, தது, அநாயு அல்லது காலை, பிரதை அல்லது ஆயு, முனி, சுரசை அல்லது சிங்கிகை, இளை, குரோதவசை, தாமிரை, சுரபி, விநதை, கத்ரு. இவர்களுள் அதிதியிடம் ஆதித்தியரையும், திதியிடம் தைத்தியரையும், தநுவிடம் தானவரையும், அநாயுவிடம் சித்தரையும், பிரதையிடம் காந்தருவரையும், முனியிடம் அப்சரசுக்களையும், சுரசையிடத்து யக்ஷரையும் இராக்கதரையும், இளையிடத்து விருக்ஷம் கொடி பூண்டுகளையும், குரோதவசையிடம் புலி சிங்கமுதலிய மிருகங்களையும், தாமரையிடம் குதிரை கழுதை புக்ஷி முதலியவற் றையும், சுரழியிடம் பசுக்கூட்டங்களையும், விநதையிடம் அருணனையும் கருடனையும், கத்துருவிடம் நாகரையும் பெற்றனர். இவர்களன்றி வைசியாநார் குமரிகளிருவரில் காலையிடத்துக் காலகேயரையும், புலோமையிடத்துப் புலோமரையும் பெற்றனர். இவர், பின்னும் பர்வதன் எனத் தேவருஷியையும், விபாண்டகன் என்னும் பிரமருஷியையும் பெற்றனர். இவர் பரசுராமர் செய்த அச்சுவமேதயாகத்தில் பூமியைத் தானமாகப் பெற்றவர். இதனால் பூமிக்குக் காசினி என ஒரு பெயர் உண்டாயிற்று. இவர்க்கு அதிதியிடம் உபேந்திரரும் பிறந்தனர் என்பர். இவர் மாயையால் மயங்கிச் சூரபன்மன் முதலியவரையும், ஊர்வசியைப் புணர்ந்து வசிட்டரையும் பெற்றார் என்பர். B. வசுதேவனுக்குப் புரோகிதன். குந்தி பாண்டவர்களைப் பெற்ற காலத்துப் பொன்னணி கொண்டு செலுத்தினவன், பாரிசாதாபஹரணத்தில் இந்திரனுக்கும் கண்ணனுக்கும் சமாதானங் கூறியவன். C. ஒரு இருடி. உரோமகரு வணருக்கும் சுகருக்கும் மாணாக்கர். D. தாட்சபனைக் காண்க, E. பரீத்தைப் பாம்பு கடிக்கப் போகிறதென்று கேள்விப்பட்டு அதை நீக்கிப் பரிகாரஞ் செய்து பொருள் பெறவந்த வேதியன், இவனைத் தக்ஷகன் வழியில் சந்தித்து ஒரு மரத்தினைக் கவ்வித் தனது விஷமூட்டி அது எரியக்காட்டி இதனை மீண்டுந் தளிர்க்கச் செய்வையேல் நீ அரசனை எழுப்புவாய் எனச் சொல்லினன். வேதியன், தனது மந்திரசக்தியால் விஷத்தினை மரத்திலிருந்து இறக்கி மீண்டும் மரத்தினைத் தளிர்க்கச் செய்தனன். இதனால் தக்ஷகன் திடுக்கிட்டு வேதியனுக்கு வேண்டிய பொருளளித்து அரசனிடஞ் செல்லாமல் அனுப்ப வீடுசேர்ந்தவன்.

காசியன்

A. சுகோத்திரன் குமரன். இவன் குமரன் காசி. B. சனசித்தின் குமரன். C. ஆயுவின் பௌத்திரன்.

காசியரசன்

1. பதுமாபதியின் தந்தை; உதயையோடை யென்பவளுடைய கணவன் மிக்க சேனையை யுடையவன் (பெருங்கதை). 2. நீலகேசி என்பவளுடைய தந்தை.

காசிரகசியம்

காசியின் சிறப்புக் கூறிய நூல். இது தமிழில் மீனாகசுந்தரம் பிள்ளையவர்களா லியற்றப்பட்டது.

காசிலி

ஒரு இருடி மேற்குச் சமுத்திரக் கரையில் தவஞ்செய்து கொண்டிருந்தவர். பிரசேதசுகட்கு ஞான உபதேசஞ் செய்தவர்.

காசுக்காரர்

செட்டிவகைகளில் ஒன்று.

காச்மீரம்

பரதகண்டத்தின் வடக்கிலுள்ள ஓர் தேசம்.

காச்யபன்

காசம் எனும் நாணற்பூப் போல் வெளுத்திருப்பவன்.

காச்யபர்

காசிபரைக் காண்க.

காச்யபி

கச்யபரைக் காண்க.

காஞ்சனன்

1. காயசண்டிகையின் கணவன், காயசண்டிகையின் உருக்கொண்ட மணிமேகலைபால் வந்த உதயகுமாரனை வாளால் வீசிக்கொன்றவன். (மணிமேகலை.) 2, பூரூரவா புத்ரனாகிய அமவசு பவுத்திரன். 3. பீமன் குமரன்.

காஞ்சனபுரம்

காயசண்டிகையின் கணவனிருக்கை வித்யாதர நகரம். இது வின்ஞ்சைமா நகரெனவும் வழங்கப்படும். (மணி மேகலை.)

காஞ்சனமாலை

1. கர்ணன் தேவி, 2. சூரசேநன் பெண், மலையத்துவசன் தேவி. இவள் பூர்வத்தில் விச்சுவாவதி எனுங் காந்தருவ மாது. பார்வதி பிராட்டியைப் புத்திரியாகப் பெறத் தவஞ் செய்தவள். விச்சுவாவதியைக் காண்க. இவளிடம் புத்திரியாகப் பிறந்த பிராட்டியின் திருநாமம் தடாதகை, 3. பாண்டியன் புத்திரியில் ஒருத்தி, தெய்வீக அரசனைக் காண்க. 4. இவள் வாசவதத்தையின் உயிர்ப் பாங்கி. அவளுடைய கண்மணி போன்றவள் பேரழகினள் சுவை பயக்கும் இனிய மொழியினள் தலைவியின் குறிப்பறிந்து நடப்பவள். வாசவதத்தையின் கருத்தை இவள் போல் அறிந்து நடப்பவர்கள் இல்லை. அவளுக்கு மனக்கலக்கம் நேரும் போதெல்லாம் தக்க பரிகார மொழிகளைச் சுருக்கமாக மெல்ல கூறித் தெருட்டுபவள். அவள் பால் உண்மை அன்புடையவள். அவள் வீடு தீக்கிரையாயிற்றென்று கேட்டபொழுது அவள் இறந்து விட்டாளென் றெண்ணி, கனங்குழை மடவோய்! பொன்னே! திருவே! அன்னே! அறிவாய்! நங்காய்! நல்லாய்! என்று இவள் புலம்பியதால் விளங்கும். அவளுடைய இன்பகாலத்தும், துன்பகாலத்தும் பிரியா தவள். இவள் பந்து விளையாட்டில் மிகப் பயிற்சியுள்ளவள். இவள் பெயர் காஞ்சனை, கஞ்சனமாலை யெனவும் வழங்கும். (பெருங்கதை)

காஞ்சனமாலை கோயில்

இது எழுகடற்றீர்த்தத்தின் தென்மேற்கில் உள்ளது; மிகப் பழமையானது. இதில் ஜலகண்டேசுவாரென்று திருநாமமுள்ள சிவபெருமானும் அவரைத் தரிசித்த வண்ணமாக அமைந்த காஞ்சனமாலையின் வடிவமும் உண்டு. (திருவிளை~புரா.)

காஞ்சனை

ஒரு தெய்வகன்னிகை பார்வதியாருக்குத் தோழியாகத் தவஞ்செய்து மானாகி விந்தமலையிற் பிறந்து வள்ளிநாய்ச் சியாரைப் பெற்றவள். (திருச்செந்தூர்ப் புராணம்.)

காஞ்சி

1. சத்தமுத்தி புரியினொன்று. இதில் சுவர்ணகாஞ்சி விருக்ஷம் கிளைகள் பொன்மயமாகவும், இலைகள் மரகதங்களா கவும், கனிகள் நவமணிகளாகவும் ஓங்கி மகருஷிகளால் காணப்பட்ட தடாகத் தருகிலிருந்ததால் இப் பெயர் பெற்றது. இப்பட்டணத்தைப் பிரளயசித் எனவும், சிவபுரம் என்றும், விண்டு புரம் என்றும், சிரி மூர்த்தி வாசம் என்றும், பிரமபுரம் என்றும், காமபீடம் என்றும், தபோவனம் என்றும், ஜகச்சாரம், சகலசித்தி என்றும், கன்னிகாப்பு என்றும், தொண்டாபுரம் என்றும், தண்டகபுரம் என்றும், காமபீடம் என்றும், புராணங்கள் கூறும், இதில் சிவத்தலம், கச்சபாலயம், ஏகம்பம், கச்சிமயானம், காரோணம், மாகாளம், பச்சிமாலயம், அநேகதங்காபதம், பணாதரம், பணீச்சுரம், வராகம், சுரகரீச்சுரம், இராமம், வீராட்டம், வேதாபுராம், உருத்திரம், வச்சிரநகரம், பிரமம், திருமாற்பேறு, மறைசை, திருமேற்றளி, இந்திராலயம், மணீசம், நான் முகம், சங்கரம், பரசிராமம், ஓத்தூர், அநேகபேசம் முதலிய இருக்கின்றன. இதிலுள்ள விஷ்ணுத்தலங்கள் புண்ணியகோடி விமானம் அல்லது அத்திகிரி, அட்டபுயம், திருவெஃகா, ஊரகம், நீரகம், திருத்தண்கா, திருவேளுக்கை பாடகம், நிலாத்திங்கட் இண்டம், காரகம், கார்வனம், கள்வனூர், பரமேசவிண்ணகரம், பவளவண்ணம் முதவியன. இதிலுள்ள தீர்த்தங்கள் அருந்தம், அக்கி, பௌரந்தரம், குசம், வாமனம், மங்களம், சிவகங்கை, சர்வ தீர்த்தம், பாண்டவம், சுரகரம், கருடம், பஞ்சம், பம்பை, எமாம்போசம், குண்டம், சந்திரம், சித்தி, காயாரோகணம், கஜேந்திரம், சடாயு, சாச்வதி, இருத்தாபநாசனி, பிரமம், வசிட்டம் முதலியன. பின்னும் விளக்கம் ஒன்று, இடம் இரண்டு, தெற்றிகள் மூன்று, அரண்கள் நான்கு, தருக்கள் ஐந்து, புட்களாறு, நதிகள் ஏழு, பொதுக்கள் எட்டு, பொய்கைகள் ஒன்பது, சிலைகள் பத்து, மன்றம் பதினொன்று உண்டு. இதன் விரிவைப் புராணங்களுட் காண்க. இதில் ஜைனரா லயமும் உண்டு, இது, சிலநாள் சோழ ராஜாக்களுக்கும் பல்லவர்க்கும் இராசதானியா யிருந்தது. இது, சத்திபீடங்களுள் ஒன்று. இது, காமகோடி பீடம் எனப்படும். இது, சைவ சமயாசாரியர்கள் ஆழ்வாராதிகளால் பாடப்பெற்றது, 2. ஒரு நகரம், இதில் முக்காலத்தையு மறிவிக்கும் கந்திற்பாவைத் தெய்வமும், துணையிளங்கிள்ளி யென்பவனாற் கட்டப்பட்டுள்ள புத்தாலயம் ஒன்றும், தருமத வனம் என்று பெயருள்ள ஒரு வனமும் இருந்தன. மணிமேகலை அறவணவடிகள் பால் அறங்கேட்டுப் பலநாள் தங்கி மரித்த இடமும் இதுவே. (மணிமேகலை.) Conjeevaram, in Chengleput District in the Madras Presidenoy It was the Captial of Chola Kings. 3. வெவ்விய சினத்தையுடைய வேற்று மன்னன் வந்துவிட அரசன் காஞ்சி யென்னும் பூவை மலைந்து காவலிடத்தைக் காக்க நினைந்தது. (பு. வெ.)

காஞ்சிசோமயாசியார்

எழுபத்துநான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் (குருபரம்.)

காஞ்சிநதி

மேலைச் சிதம்பரம் அல்லது பேரூரிலுள்ள நதி.

காஞ்சிபுரம் சபாபதி முதலியார்

இவர் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் தமிழ்ப்புலமை நடத்திய மகா வித்வான். சென்னையில் வசித்தவர் சைவர் பெரிய புராணம் திருவிளையாடல் மற்றுஞ் சிலதல புராணங்களுக்கு உரையியற்றியுரை யாசிரிய ரெனப் பெயர் பெற்றவர். இற்றைக்குச் சற்றேறக்குறைய எழுபது வரு ஷங்களுக்கு முன்னிருந்தவர், தமிழில் அருணாசலசதகம் முதலிய இயற்றினவர்.

காஞ்சிபுராணம்

இது காஞ்சி மகாத்மியம் சொன்ன தழிழ்நூல். இது இரண்டு காண்டங்களுடையது. இதன் முதற்காண்டம் திருவாவடுதுறை சிவஞான முனிவராலும், இரண்டாங் காண்டம் சிவஞான முனிவர் மாணாக்கர் கச்சியப்ப முனிவராலும் இயற் றப்பட்டது. இது நாலாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தொரு செய்யுட்களுடையது.

காஞ்சிப் புலவனார்

மாங்குடி மருதனா ரென்பவர் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நிலையாமை அறிவுறுத்தவேண்டி மதுரைக் காஞ்சிபாடியதனால் மதுரைக் காஞ்சிபுலவரென்றும், காஞ்சிப் புலவரெனவுங் கூறப் பெறுவாராயினார், மாங்குடிகிழாரென்ப வருமிவரே இவர் வேளாண் மரபினர். மேற்கூறிய நெடுஞ்செழியனது அவைக்களத்துப் புலவராய் அவனைப்பாடி மகிழ்வித்து வைகுவாராயினர். புறம் 24, ஒரு காலத்துச் சோனுஞ் சோழனும் மதுரையை முற்றியபோது இளைஞனாகிய நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறுவான் ”ஓங்கிய சிறப்பினுயர்ந்த கேள்வி, மாங்குடி மரு தன்றலைவனாக (புறம் 72) என்று இவரைப் பாராட்டிக் கூறினானெனின் இவருடைய மேன்மையும், கல்வி கேள்வி களினுயர்வும் நம்மனோராலள விடப்படும் கொல்லோ ? இவர் பாடிய மதுரைக் காஞ்சியைப் படிப்பவர்க்கு இவரது ஆற்றல் விளங்கும், பின்பொரு பொழுது வாட்டாற் றெழினியாதனைப் பரிசில் வேண்டிப்பாடி அவனால் ஆதரிக்கப் பெற்று மீண்டு மதுரையை அடைந்து வைகுவாராயினர். புறம் 396. இவர் எல்லாத்திணைகளையும் புனைந்து பாட வல்லவர். நெடுஞ்செழியன் போரிலே உள்ளஞ் செலுத்தி அவ் வழியே யொழுகுவானை நன்னெறிப்படுத்தி மறுமைக் காய வேள்வி முதலியவை செய்யப்பண்ணினவர் இவரே. புறம் 26. கடற்கரையில் மகளிர் விளையாட்டயாவதனை விளங்கக்கூறியுள்ளார். நற் 123. இவர் பாடியனவாக மதுரைக் காஞ்சியகவ லொன்றும், நற்றிணையில் 123 பாட லொன்றும், குறுந்தொகையி லொன்றும் அகத்திலொன்றும், புறத்திலாறும், திருவள்ளுவமாலையி லொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா திருத்துறைப்பூண்டித் தாலுக்காவில் மாங்குடி மருதவனமென இரண்டு ஊர்கள் ஒன்றை ஒன்று அடுத்துள்ளன. அவற்றுள் முன்னது இவரூரும் பின்னது இவரால் நாட்டப்பட்டதும் போலும். (நற்றிணை.)

காஞ்சியெதிர்வு

எதிரூன்றுஞ் சேனைமே விடுதலைப்பொறாத வேற்றொழிலை வல்ல வீரனுடைய வெற்றியை மிகுத்துச் சொல் லியது. (பு. வெ).

காடர்

1. ஆனைமலைக்கண் வசிக்கும் ஒரு வகைகாட்டுச் சாதியர். இவர்களுக்கு வேட்டையாடுதல், தொழில் அவற்றுள் யானை வேட்டை முக்யம். 2, கொச்சி சமஸ்தானத் தருகிலுள்ள குன்றுகளில் வசிக்குஞ் சாதியார்.

காடவன்

இவன் சைந அரசத் தலைவன். திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்துச் சைவனாய்ப் பாடலிபுரத்திலிருந்த சைநராலயத்தை யிடித்துக் குணதரீச்சுரங் கட்டுவித்தவன்.

காடவர்கோன்

காஞ்சியாண்ட அரசர் வம்சத்தவரைச் சேர்ந்தவர். இவர் காஞ்சியில் சிவாலயஞ் செய்வித்து அதற்குக் கும்பாபிஷேகஞ் செய்விக்க எண்ணி நாள் வைத்தனர். சிவமூர்த்தி இவரிடந் தரிசனங் தந்து அரசனே நீ வைத்தநாளில் பூசலார் நாயனார் செய்யும் கும்பாபிடேகத்திற்குப் போகிறோம்; நீ வேறுநாள் வைத்துக் கொள்க என்று திருவாய்மலர அரசர் பூசலாரைத் தேடி அவரைத் தரிசித்து இன்பமடைந்தனர்.

காடுகாள்

இவளுக்குக் காடுகிழாள் எனவும் பேர் இவள் ஒருசத்தி. மோடிகாரி தாய், கொற்றி, பாரி, சூரி, வடுகி, மூதணங்கு எனவும் பேர்.

காடுகிழாள்

இவள் வருத்தில் சஞ்சரிக்கும் வநதேவதை. காடுபடுவான். அரக்கு, தினை, தேன், கருந்தினை, நாவி, மயிற்பீலி முதலியன.

காடுவாழ்த்து

பலர்க்கும் இசைக்கும் பெரிதாக ஒலிக்கும் சாப்பறை அனுகரண சத்தமுடைத்தாகக் கறங்கும் சுடுகாட்டை வாழ்த்தியது. (பு. வெ. பொதுவியல்.)

காடுவெட்டிய சோழன்

காஞ்சி நாடாண்ட சோழர்களில் ஒருவன். இவன் சிவபக்திமான். குலபூஷண பாண்டியன் காலத்தில் மதுரையைச் சேவிக்க எண்ணிப் பாண்டியனுக்காகப் பயந்து இருந்தனன். இவன் கனவில் சிவமூர்த்தி சித்தராய்த் தோன்றி யிப்போதே சென்று தரிசிக்க என அரசன் சேனை முதலிய இன்றிப் புறப்பட்டு மதுரையடைந்து வையை வெள்ளங்கொண்ட தறிந்து துக்கமடைந்தனன். அக்காவையில் சிவமூர்த்தி சித்தராய் எழுந்தருளி வெள்ளத்தை விலகச் செய்து காவல் கடக்கக் கொண்டு சென்று பொற்றாமரையில் முழு குவித்துத் தம்மையும் பிராட்டியாரையும் தரிசனஞ் செய்வித்து வழித்துணைசென்று வையைநதி கடந்து விட்டு நெற்றியில் திருநீறிட்டு அனுப்பினர். சோழன் பயமின்றி நாடு போய்ச் சேர்ந்தனன். வழித்துணை சென்ற சிவமூர்த்தி கோயிலடைந்து விடையி லச்சினையிட்டு மறைந்தனர். பொழுது விடிய, திருக்கோயிற் காவலாளர் மீனமுத்திரையிலாது இடபமுத்திரை யிருப்பதைப் பாண்டியனுக்கறிவித்தனர். பாண்டியன் எந்தவகை ஆராய்ந்தும் உண்மை அறியாது விசனத்துட னிருக்கையில் சிவமூர்த்தி கனவிற்றோன்றி நடந்ததை அறிவிக்கக் களித்துச் சோழனுடன் நட்புக் கொண்டனன். இவனது மற்ற சரித்திரங்களை இராசேந்திர பாண்டியனைக் காண்க. இவனுக்கு வாதராசபணிகொண்ட சோழன் எனவும் பெயர்.

காடை

இது கபில நிறமான வரிகளமைந்த பக்ஷி. இது கூட்டம் கூட்டமாகக் காடுகளில் வசிப்பது, இதற்குக் கழுத்தும் மூக்கும் குட்டை கால்கள் குறுகிக் கூர்மையற்றவை. பூமியைக் கிளறி தான்யமும் பூச்சுகளையும் தின்னும் இனத்திற் சேர்ந்தது. இதனை மனிதர்கள் வளர்த்து போருக்கு விடுவர். இது அதிக கோபத்துடன் சண்டையிடும். பூமியைத்தோண்டி முட்டையிடும். இவ்வினத்தில் வயல்களில் மேயும் அரிக்காடையும் உண்டு, இது உருவத்திற் கவுதாரியிற் சிறியது.

காட்சிவான்

சிபி பாரியையின் தோழிமார்களில் தீர்க்க தமசால் பிறந்த புத்திரன்.

காட்டக் கோட்டையர்

இவர் வீரசைவர், பிறப்பாலிடையர். ஆட்டின் சாணத்தால் வேதிகையும் சிவலிங்கமும் அமைத்துப் பசு, ஆடு முதலியவற்றின் பாலைக் கறந்து சிவமூர்த்திக்கு அபிஷேகித்துக் காட்டிலுள்ள மலர்களால் அருச்சித்து வந்தனர். இவர் இவ்வகை செய்துவருகையில் ஒரு நாள் இவர் தந்தை பசுக்கள் பால்குறையக் கண்டு உண்மையறியும் பொருட்டு ஒளித்திருந்து குமாரர் செய்யுஞ் செய்கையறிந்து கோபத்துடன் சென்று சிவலிங்கத்தைக் காலாவிடறினர். குமரர் கோடரியால் தந்தையென்றும் பாராமல் இடறிய கால்களை வெட்டச் சிவமூர்த்தி தர சனந்தந்து குமரரைத் திருக்கைலைக்கு அழைத்துச் சென்றனர். (பசவ~புரா.)

காட்டாசான்

இவர்கள் கூடைகட்டிகள், கிளிஞ்சல் சுடுவோர். இவர்கள் திருநெல்வேலி ஜில்லா முதலிய இடங்களிலுள்ளவர்கள்.

காட்டு நாடு

களவேள்விநாடு. (திருவிளை.)

காட்டுப்பூனை

இது சிறுத்தைப் புலிக்கும் பூனைக்கும் நடுத்தரமான உருவுடையது. கறுத்தநிறமும் கொடுமையான பார்வையுங் கொண்டது. பகலில் புதர்களில் பதுங்கியிருந்து இரவில் இரைதேடப் புறப்படுவது. இது பறவை, கோழி, முயல், வாத்து முதலிய பக்ஷிகளை வேட்டையாடித் தின்னும், கிராமத்திலும், கிராமத்தை யடுத்த காடுகளிலும் வசிக்கும். இதுவும் சிங்கம் புலியினங்களைச் சேர்ந்தது.

காட்டுமராட்டி

குருவிக்காரனுக்குப் பெயர்.

காட்டூர்க்கிழார்மகனார் கண்ணனூர்

கடைச்சங்க மருவிய புலவர். வேங்கடநெடுவரை வென்வேற்றிரையனை, “நன்னுதல் பசப்பவு” மெனப் பாடியவர், இவர் பெயர் கண்ணனார். இவர் தந்தை பெயர் காட்டூர்கிழார். இவரது ஊர் காட்டூர்போலும். (அகநானூறு.)

காட்டெரி

இது ஒரு க்ஷத்ரதேவதை. காட்டில் வசித்துக் கொண்டிருந்த இந்துக்கள் தம்மேல் அத் தீச்சார்ந்து தம்மை அழிக்காதவண்ணம் வனதேவதையை வழிபட்டனர். அதனைக் காட்டேரியென்பர்.

காட்டெருமை

(பைஸன்) இது பார்வைக்கு விகாரமான ஜந்து. இதன் முதுகிற் கொழுப்படர்ந்த திமிலொன்று உண்டு. தேக முழுதும் மயிரடர்ந்து தொங்கும். இது குனிந்த தலையும் குறுகிய கண்களும் உடையது. இது அமெரிக்கா கண்டத்துச் சம வெளிகளிலுள்ள புல் பூண்டுகளைத் தின்று ஜீவிக்கும். இவ்வினம் சீரில்லாவிடத்திலும் தண்ணீர் குடியாமல் வசிக்கும். இவை பல நாட்களுக்கு வேண்டிய நீரைத் தம் வயிற்றில் கொண்டிருக்குமாம். இவை யெங்கும் நீரினைக்கண்டாலும் அதில் வீழ்ந் து புரளும். இவற்றினுடலின்மாமிசம் ருசி யுள்ளனவாதலால் வேட்டைக்காரர் இவை கூட்டமாக இருக்குமிடஞ் சென்று சத்தமிடாமல் பலவற்றை மடக்கி வேட்டை யாடுகிறார்கள். இவை அற்ப சத்தம் கேட்கினும் அஞ்சி ஓட்டம் பிடிக்கும். இவை சாகபக்ஷணி. அமெரிக்கா கண்டவாசிகள்.

காணிஷ்கன்

இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தை யரசாண்ட ஒரு புத்த அரசன். இவன் அசோகனைப்போல் புத்த மதத்தை எங்கும் பரவச் செய்து கீர்த்தியடைந்தவன்.

காணுவர்

யாக்ஞவல்கியரின் மாணாக்கர்.

காண்டவபிரஸ்தம்

பாண்டவர்கள் அரசாண்ட அஸ்தினபுரத்துட் பிரதேசம். திரௌபதியின் மணத்திற்குப் பிறகு பாண்டவர் வசித்த இடம். (பார~சபா.)

காண்டவம்

யமுனை யாற்றங்கரையில் கிருஷ்ணார்ச்சுனர்களா லழிக்கப்பட்டு அக்கினிக்கு இரையாகத் தரப்பட்ட இந்திரவனம்,

காண்டிகையுரை

செய்யுளின் கருத்து, பதப்பொருள், உதாரணம், வினாவுதல், விடைகூறல், முதலியவற்றால் செய்யுளினுட் பொருளைத் தோற்றுவிப்பது. (நன்~பா.)

காண்டிக்யன்

(சூ.) மிதத்துவசன் புத்திரன். சனகன் பேரன், இவன் தன் ஞாதியாகிய கேசித்துவசனோடு விரோதித்துக் காட்டிற்சென்று தவமேற்கொண்டவன்.

காண்டிநேவியன் மதம்

இந்த மதத்தில் முக்கிய தேவதைகளுக்கு எட்டாஸ், சாகாஸ் என்று பெயர். எட்டாசென்றால் கிழவியென்று பொருள். இம்மதசிருட்டிக் கிரமம். அபிஸ் என்கிறபிண்டம் தெற்கு வடக்கு உலகங்களாக விருந்தது. அதன் மேல் வெனமென்னும் மழை பெய்யத் தென்றலால் அந்தப்பிண்டம் கரைந்தது. அவ்வாறு கரைந்தத்தினின்றும் இமிர் என்னும் அரக்கன் பிறக்க அந்த அரக்கனால் துஷ்டர்கள் உண்டாயினர். அந்தத் துஷ்டர்களால் மாண்டன் என்னும் பசுபிறந்து அந்தப் பசுவினால் போர், வேண்டின், விலா முதலிய தேவதைகள் உண்டாயினர். இமிர் என்னும் ராக்ஷசனைப் போர் முதலிய தேவதைகள் கொல்ல, அவன் தேகத்தி லிருந்து ஆகாசமும் பூமியும் உண்டாயின. வொடின் என்னும் தேவன் சிருட்டிகர்த் தாவாகிய உலகபிதா. ஆஸ்சா என்னும் மரத்தடியி லிருப்பன். இவனுக்கும் பூமியே பாரியை, தார் என்பவன் குமாரன். இவன் அபாரசக்தி யுள்ளவன். பால்டர் என்பவனிரண்டாவது குமாரன், மோக்ஷ விசாரணை செய்பவன், டைர் என்பவன் யுத்தத்தில் சமர்த்தன். இவனுக்கு ஒரே கையுளது. அந்தியகாலத்தில் அநேகருடன் யுத்தஞ் செய்கையில் பால்டர் இறக்க அவனுக்காக உலகம் துக்கிக்கும். பிறகு தார் என்பவன் ராக்ஷசர்களுடனும் முஷ் கார்ட் என்னும் பாம்புடனும் சண்டை செய்து இறக்க உலகங்களெல்லாம் எரிந்துபோம், பிறகு புதிய உலகம் உண்டாம். விடார், வாலி என்னும் இரண்டு தேவதைகள் தோற்றுவர். இந்த மதத்தில் ஒவ்வொரு வருஷத்தில் உற்சவத்தில் பலியிடுவர். தங்களைத் தாங்கள் குத்திக்கொண்டு சாதல் நலம் என்பர்.

காண்டீவம்

1. இது அருச்சுனன் வில், முதலில் பிரமனிடமிருந்து பிறகு இந்திரனிடம் அறுபத்து நான்கு வருடமிருந்து பின் வருணனிடம் 100 வருடமிருந்து வருணன் அக்கினிக்குக் கொடுக்க அக்கினியால் காண்டவ வனத்தை எரித்த அருச்சுனனுக்குக் கொடுக்கப்பட்டது. இது இவனிடம் 65 வருடம் இருந்ததாம், 2. பிரமன் வில், கண்ணுவரைக் காண்க.

காண்டோபகரணம்

காண்டருஷியைத் திருப்தி செய்தல். மந்திரத்தால் ஓமமுதலிய செய்து சுவர்ண முதலியவற்றால் செய்த பிக்ஷா பாத்திரத்தில் பவதி பிக்ஷாக்தேகி யெனக் கூறிப் பிக்ஷை யெடுத்தல்.

காண்வாயன்

கண்ணுவன் மரபினனாகிய மேதாநிதி ரிஷிக்குப் பெயர்.

காதம்பரி

ஒரு காந்தருவ கன்னிகை; இவளை உச்சயனிநகரத் தாசனாகிய சந்திரா பீடன் மணம் புரிந்தான். காதம்பரி இவள் கதைகூறிய நூலுமாம். இது பாணகவியால் வடமொழியில் செய்யப்பட்டது.

காதற்பரத்தையர்

யாவரையும் விரும்பாத வியல்பினான் மிக்க சேரிப்பரத்தையருடைய மகளிராய்த் தம் மன்பின் தலைமகனுடன் கூடுவோர். (அகம்.)

காதலர் (3)

புருஷன், தோழன், மகன்.

காதலிற்களித்தல்

மேகம் பொருந்தின மலைநாடனுடைய மார்பிடத்தே மேவி நீங்குதலறியாத அன்பினால் மகிழ்ந்தது. (பு. வெ. பெருந்திணை.)

காதாமுனி

விறகுகட்டிற் பிறந்தவர் என்பர்.

காதி

1. குசநாபன் குமரன், விச்வாமித்ரன் தந்தை. இவன் யாகத்திற் பிறந்தவன் இவனை யிராவணன் யாகத்திற் செயித்தான். 2. (ச) குசாம்பன் குமரன். 3. ஒரு வேதியன் இவன் விஷ்ணுவை யெண்ணித் தவஞ் செய்து மாயையைக் காண வரம் வேண்டி யொருகுளத்தில் மூழ்கித் தானிறந்து போனது போலவும் தன்னைக் கொளுத்திச் சாம்பலாய் மறுபிறவி புலையனாய் ஒருத்தியை மணந்து பல புத்திரரைப் பெற்றுப் புத்திரரும் மனைவியும் நரைவந்திறக்கத் தானிறவாது கீரநாட்டில் தனித்துச் செல்லும்போது அந்த நாட்டுப் பட்டத்துயானை அந்த நாட்டரசனிறக்க இவனை அரசனாக்கிற்று. இவன் கவலன் எனும் பெயருடன் அரசாண்டு ஒரு நாள் தன் வேடம் நீங்கித் தனித்து உலாவுகையில் நாய்க்கெரிப்போ னொருவன் கண்டு இவன் தம்மவன் என்று வார்த்தையாடினன். அரண்மனை வாசிகள் இவனிடம் அசூயையடைந்து இவனை விட்டு நீங்கி யூராருடன் தீக்குளித்திறந்தனர். காய்க் கெரிப்போனிது நம்மால் வந்ததென்று தீக்குளிக்கையில் உடல் சுருக்குண்ணக் காதியுடல் சலத்தில் பதைபதைக்க விழித்தனன். இவை நடந்த காலம் இரண்டு முகூர்த்தம். மீண்டும் காதி சலத்திலிருந்து எழுந்து வெளிவந்து தன்னூர் நோக்கி வருகையில் வழியில் ஒரு வேதியனைக் கண்டு நீ யார் என நெருப்பில் குளித்த வூரிலிருந்து கங்கை யாத்திரை வந்தே னெனக் காதி கேட்டு வியப்படைந்து நடந்தவைகளைக் கண்டு வியந்தனன். (ஞான வாசிட்டம்.)

காதியாயன்

கதயன் சந்ததியானாகிய இருடி, இவனுக்குத் தபந்தீ எனவும் பெயர்.

காதீனன்

விச்வாமிதான் தந்தை, இவன் தந்தை கூஷிகன்.

காது

இது, தலைக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உள்ள ஓசை அறியுமுறுப்பு. காது மூன்று பிரிவினைபுடையது. (4) வெளிக்காது, (2) நடுக்காது, (1) உட்காது, வெளிக்காது, காதின் மடலும், காதிற்குள் செல்லும் தொளையும் சேர்ந்தது. மடல் ஓசையைக் கொண்டுவரும் காற்றினலைகளைத் தடுத்துக் காதின் தொளைவழியாய் அதை உட்புகச்செய்கிறது. காதின் தொளை, ஓரங்குல அளவு நீண்டு சற்று வளைந்திருக்கும். இத்தொளை வழியிலிருக்கும் மயிரும் குறும்பியும் காதில் தூசு முதலிய உட்செல்லாது தடுக்கும். நடுக்காது: இது, காதின் தொளைக்குள்ளிருக்கும் ஜவ்வு இருக்கும் பாகம். காதினுட் செல்லும் ஓசை உட்சென்று இந்தச் சவ்வின் மேற்பட இந்த ஜவ்வதிரும்; அந்த அதிர்ச்சியை உட்காது பெறும். இது, ஒரு பள்ளமும், வளைவாய் குழல் போன்ற (3) எலும்புகளையும், நத்தைச் சிப்பி போன்ற ஓர் எலும்புக் கொண்டது. அதனை அடுத்த மூன்று அறைகளுள் ஒருவித ஜலம் நிறைந்திருக்கிறது. அச்சலத்தில் மூளையின் சம்பந்தமான கேள்வி நரம்புகள் மிதந்து கொண்டிருக்கின்றன. மேற்கூறிய ஜவ்விற்பட்ட அதிர்ச்சி, வளைந்த (3) எலும்பில் பட அவ்வளைந்த எலும்புகள் ஜலத்தில் மிதக்கும் நரம்புகளைத் தாக்க அவை மூளைக்குச் சத்தத்தை அறிவிக்கும்.

காதுகுத்திக்குறவர்

இவர்கள் காடுகளில் ஜனங்களுக்குக் காதுகுத்திப் பிழைப்போர்.

காதைக்கரப்பு

சித்திரக் கவியிலொன்று. இது ஒரு பாட்டினுள் மற்றொரு பாட்டிற்கு எழுத்துக்களுளவாய்ச் சொற்புகாமே பாடுவது.

காத்தமப்பிரசாபதி

பிரமன் நிழலில் பிறந்தவன். இவன் தேவி தேவவூதி, குமரன் கபிலன். இவனிடம் அநேகம் பெண்கள் பிறந்தனர். வேதத்தில் ஸ்புடமாய்ச் சாயாவாசகாமாயுள்ளது கர்த்தமம், அதனால் ஜனித்ததால் இப்பெயர்பெற்றனன்,

காத்தவராயன்

1. பார்வதிபிராட்டியார் சிவமூர்த்தி உலகமெங்கும் ரக்ஷிப்பவர் என்பதில் சங்கைகொண்டு ஒரு எறும்பைப் பிடித்துப் பரணியில் அடைத்து வைத்தனர். மறுநாள் அதனை நோக்க அது ஒரு சிறு அரிசியை வாயில் கொண்டிருக்கக் கண்டு தாம் செய்த காரியத்தைச் சிவமூர்த்தியிடம் அறிவித்தனர். சிவமூர்த்தி பிராட்டியை நோக்கி அந்த எறும்பைத் துன்பஞ் செய்ததற்கு நீ ஒரு நந்தவனம் வைத்து அந்தப் பாபத்தைப் போக்குக என்றனர். பிராட்டி அவ்வகை ஒரு நந்தவனம் வைத்து அதைக் காவல் செய்ய ஒருவனைச் சிவமூர்த்தியிடம் பெற்று அவனுக்குக் காத்தான் எனப் பெயரிட்டனர். இவன் மலையாளஞ் சென்று தொட்டியத்துச் சின்னான் என்று சொல்லப்படும் மந்திரவாதியைச் செயித்துத் தனக்கு மந்திரியாக்கி ஆரியமாலை முதலிய பல பெண்களை மணந்தான் என்பர். இவன் தேவிமார் வண்ணாரவல்லி, கந்தழகி, கறுப்பழகி முதலியவர். இது வளையாபதி என்னும் இலக்கிய கதையை யொத்திருக்கிறது என்பர். (காத்தவராயன் கதை.) 2. இவன் முத்தம்மையெனும் தேவதையின் மகன். இவனுக்கு நாரதர் மூன்று மாதர்களின் சௌந்தர்யங்களைக் கூறி மணம்புரியக் கூற இவன் அவ்வாறே வங்கணச் சின்னான் எனும் சேவகனுடன் சென்று ஆரியதேசத்துக் கன்னிமாடத்திருந்த ஆரியமாலையிடம் குனிவடிவு, குறத்தி வடிவுமுதலிய கொண்டு சென்றும், காவிரிப்பூம் பட்டினத்துக் கன்னிமாடத்திருந்த உகந்தாயியிடம் நூல் வியாபாரம் செய்யும் கிழச்செட்டியாய்ச் சென்றும், செம்பு குமாரன் வனத்திருந்த கறுப்பாயியிடம் பாம்பு பிடாரன் வடிவுகொண்டு சென்றும், பல ஆச்சர்யமான செய்கைகளைச் செய்து அவர்களை மணம்புரிந்தான் என்பர். (காத்தவராய நாடகம்,)

காத்தவராயர்

வண்ணார் இவர்கள் இத்தேவரைக் குல முதல்வராகக் கொண்டவர்கள். (தர்ஸ்டன்.)

காத்தியாயனர்

1. யக்ஞவல்கியருக்கு ஒரு பெயர். 2. பாணினி சூத்திரத்திற்கு வியாக்கியானஞ் செய்தவரருசி.

காத்தியாயனி

1, காத்யாயனர் தவத்தால் பிறந்த பார்வதி தேவிக்கு ஒரு பெயர். 2. யஞ்ஞவல்கியருக்குத் தேவி.

காந்தக்கல்

இது இரும்பையொத்த ஒருவித லோகம். இதனை யிரும்பிற்கு முன்னீட்டினால் அதனையிழுக்கும் சக்தியுள்ளது. இதில் திசையறி கருவிகள் செய்து கப்பலோட்டிகள் திசையறிந்து கப்பலைச் செலுத்துவர். இது எத்திசை திருப்பினும் வடதிசையையே காட்டும். இது, அரக்குக் காந்தம், உருளைக்காந்தம் ஊசிக்காந்தம், கற்காந்தம், எனப் பலவகைப்படும்.

காந்தன்

1, சிவகணத் தலைவரில் ஒருவன். 2. வாணாசுரன் படைத்தலைவரில் ஒரு அரசன், காஞ்சியில் சிவபூஜை செய்து முத்தியடைந்தவன். 3. ஒரு சோழன், இவன் பொருட்டு அகத்தியர் கமண்டலத்திருந்த காவிரியைப் பெருகச் செய்தனர். பரசிராமர் போருக்கஞ்சி வேறிடத்திருந்தவன். இவனுக்குக் காந்தமன் எனவும் பெயர். 4. சித்திர தன்வனைக் காண்க.

காந்தபுராணம்

இது மகாபுராணங்கள் பதினெட்டனுள் ஒன்று. இது லக்ஷம் கிரந்தமுடையது. இது தத்புருஷ கற்பத்தில் நடந்த சம்பவங்களையும் கந்தமூர்த்தி தோற்றம் சூராதிகள் ஒடுக்கம் முதலிய வற்றை விரித்துக்கூறும், இதிற் சங்கர சங்கிதையைக் கச்சியப்ப சிவாசாரியர் தமிழில் மொழிப் பெயர்த்தனர்.

காந்தமதீர்த்தம்

தென்கடற்கரையிலுள்ள தீர்த்தம்.

காந்தம்

இது வைதருப்பச் செய்யுணெறியிலொன்று, இது ஒன்றனை உயர்த்துப் புகழுமிடத்து உலகநடை யிறவாமல் உயர்த்துப் புகழல். (தண்டி.)

காந்தருப்பம்

கந்தமூர்த்தி எழுந்தருளியிருக்கும் மலைகளில் ஒன்று, இதில் ஒரு ஆண்டு பாண்டு புத்திரர் தவமியற்றினர்.

காந்தருவ நகரம்

யமபுரிக்குச் செல்லும். வழியிலுள்ள பட்டணம்.

காந்தருவதத்தை

ஜீவகன் மனைவியரி லொருத்தி.

காந்தருவம்

ஓர் மலை.

காந்தருவருலகு

இது குய்யகர் உலகத்தின் மேலுள்ளது. இதை விரதம் பூண்டோரும் யாழில் வல்லவராய்த் தேவரைப் பாடியவரும் அடைவர்.

காந்தருவர்

பிரமனது நீலவுருக்கொண்ட தேகத்திற் பிறந்தவர் தேவவகுப்பினர்.

காந்தள்

கரிய கடலிடத்துச் சூரபன்மாவைக் கொன்றவனுடைய காந்தட்பூவின் மிகுதியைச் சொல்லியது. (பு. வெ.)

காந்தாரகன்

இவன் பாஞ்சால அரசனுடைய பெரும்படைத் தலைவர்களில் ஒருவன்; இவன் பிங்கலகடகராற் போரிற் கொல்லப்பட்டனன். (பெரு. கதை).

காந்தாரநாடு

இதில் இரத்தினபுரமென்று ஒரு நகரமுண்டு சிறந்த குதிரைகள் பிறக்குந் தேயத்துள் இஃது ஒன்று, (பெரு. கதை). The Country of Gandhara lies along the Kabul river between the Kunar and the Indus. Its Capital was purushapura now Called Peshawar.

காந்தாரன்

1. ஆரத்தன் குமரன். இவன் புத்திரன் தருமன். 2. யயாதி குமரன்.

காந்தாரம்

சிந்துநதிக் கருகிலுள்ள ஒரு தேசம். (மணிமேகலை).

காந்தாரி

காந்தாரதேசத் தரசனாகிய சுபலன் அல்லது சுவேதமகராசன் குமரி. வசுமதி தேவதை அம்சத்தாற் பிறந்தவள். திருதராட்டிரன் தேவி, துரியோதனன் தாய். இவள் தன் கணவன் அந்தகன் என்று கேள்வியுற்றதும் பிறரைப் பாரேன் என்று கண்ணைப் பொற்றகட்டினால் மூடிக்கொண்ட கற்புடையாள். குந்தியிடம் பொறாமையடைந்து வயிற்றில் கல்லாலிடித்துக் கொண்டு வியாசரருளால் துரியோதனன் முதலிய நூற்றுவரைப் பெற்றவள். படுகளம் காணவந்த காலத்துக் கிருஷ்ணனை நோக்கி என் வமிசத்தை யழித்ததால் உன் வமிசமும் அழிக எனச் சபித்தவள்.

காந்தி

1. ஏமவன்மன் தேவி. குமார் சிங்கவன்மன், சுவன்மன், தேவவன்மன். 2. புலாரமர் தேவியரில் ஒருத்தி.

காந்தினி

1. சுவல்பகன் தேவி. அக்ரூரன்றாய். 2. சுவர்க்கன்றேவி.

காந்திமதி

1. சோமசேகர பாண்டியன் பெண், உக்கிரகுமார பாண்டியன் தேவி, 2. பவன வேகன் மனைவி. (சூளா) 3,துவட்டாவின் குமரி, 4 மஞ்சுளனைக் காண்க.

கானங்கோழி

இது சிறு கோழியைப் போலுள்ள தாயினும் அலகு நீண்டு கழுத்து வெளுத்துள்ள பறவை. காட்டில் வசித்தலால் இப்பெயரடைந்தது.

கானட்டனார்

காவட்டனாரைக் காண்க. காரிக்கிழார்க்கு ஒரு பெயர்.

கானன்

கிருதாந்தனைக் காண்க.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

இவன் சேரமான் மாவெண்கோ சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலியவர்க்கு நண்பன், கடைச்சங்கமிருத்திய பாண்டியர்களுள் ஒருவன், இவன் முன்பாகத் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது. அகநானூறு தொகுப்பித்தோன் இவனே, இவனைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி எனவும் கூறுவர் வேங்கைமார்பன் என்பவனை வென்றவன் இவன் என்பர். கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் இவனைக் கூறுவர். ஐயூர் மூலங்கிழாரால் பாடப்பட்டவன். (புறநானூறு.)

கானப்பேர்

1. இது சிறந்த போரண்; பல சிற்றரண்களை யுடையது; இதின் தலைவன் வேங்கைமார்பன். இஃது இக்காலத்துக் காளையார் கோயிலென்று வழங்கப் படுகின்றது; கானப் பெயர் என்றுங் கூறுவர். (புற. நா.) 2. பாண்டி நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று, இது ஈழநாட்டுப் பராக்கிரம பாகு என்பவனுடைய சேநாதிபதிகைப்பட் டிருந்ததாகக் கூறப் பட்டிருக்கிறது.

கானல்நீர்

இது உஷ்ணமான கோடைகாலத்தில் பெரு வெளிகளில் ஆவி, உஷ்ணத்தால் மாறுதலடைந்து வாயுவுடன் கலக்குமாயின் குளம் ஏரி முதலியவற்றில் நிறைந்த நீர் தளும்புவதுபோல் காணப்படுவது. நீர் நிறைந்த குளங்களின் கரையிலுள்ள மரங்கள் அந்நீரில் தலை கீழாகப் பிரதிபலித்துத் தோன்றுவதுபோல் இக்கானல் நீரிலும் அருகிலுள்ள மரங்கள் முதலிய பிரதிபலித்துத் தோன்றும். சில வேளைகளில் இந்தப் பிரதிபலனக் காட்சி ஆகாயத்திலும் காண்பதுண்டு. அது ஆகா யத்திலுள்ள வாயுவுடன் ஜலவாயு அதிகமாகச் சேர்ந்திருக்கையில் உஷ்ணத்தால் அந்த வாயுகானல் நீராக மாறிவிடுகிறது அதில் பூமியிலுள்ள பட்டணங்கள், மலைகள் மரங்கள் நீர் நிலைகள் பிரதிபலித்துத் தோன்றுகின்றன. இவை பெரிய பாலைவனங்களி லுண்டாகின்றன. இத் தோற்றங்கள் வெகுதூரத்திலுள்ள பொருள் களையும் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

கானவிந்து

மானசோதர பர்வதத்திலுள்ள கூகை. இது பூர்வத்தில் புவனேசன் என்னும் அரசன். இந்தப் புவனேசன், அரிமித்திரன் என்போன் தன் புகழைப் பாடவில்லையென்று கோபித்து அவன் செல்வத்தைக் கவர்ந்து யமபுரி சென்று யமனால் கூகையாகி உடம்பையே யொருமன் வந்தரம் தின்னும் கதியடைந்து, பரமபதமடைந்த அரிமித்திரனிடஞ் சென்று யாழ்கற்று அதைக் காந்தருவருக்கும், நாரதருக்கும் பயிற்றி மறு சன்மத்தில் கருடனாயினன்.

கானினன்

அக்நிவேசனுக்கு ஒரு பெயர். இவன் இருடியாயினன்.

கானோபாத்ரை

இவள் மங்களவேடு என்னும் கிராமத்திலிருந்த அழகுமிகுந்ததாசி. இவள் மிக்க அழகுள்ளவளாதலால் பூமியிலுள்ள மனிதர் ஒருவரும் தான் விரும்பத்தக்கவால்லர் என்று ஆசை யொழித்துப் பண்டரிபுரத்துப் பெருமாள் விஷயத்திலீடுபட்டு ஆண்டுச் சென்றனள். அவ்விடத்தில் பெருமாளைப் பஜனை செய்து வருகையில் ஒருவன் அரசனிடஞ் சென்று இவளது அழகு முதலியவைகளைக்கூற அரசன் இவளைத் தனது சமுகத்திற்கு வரும்படி கட்டளையிட்டனன். அவ்வகையே ஒற்றர் இவளை வந்து அழைக்கத் தாசி பயந்தவளாய்க் கண்ணனிடஞ் சென்று உன்னை நம்பியவென்னை யரசனிடங் காட்டிக் கொடுக்கலாமோ வென்னப் பெருமாள் அர்ச்சகர் முதலியோர் காணும் படி தரிசனந்தந்து அவளதுயிரைத் தம் தொடையிலடக்கினர். அர்ச்சகர் கண்டு வியந்து அவளுடலைக் கோபுர வாயிற் புறத்தி வடக்கஞ்செய்தனர். அவ்வுடல் உடனே ஒரு விருக்ஷமாயிற்று. கோயிலினுள் புகுந்தவள் வராமை கண்ட தூதர் அர்ச்சகரைக் கேட்க அர்ச்சகர் நடந்ததைக் கூறி னர். தூதர் அரசனிடங்கூற, அரசன் அர்ச்சகரை வருவித்தனன். அர்ச்சகர் அரசனிடஞ் சென்று அக்ஷதை முதலிய கந்தங்கள் அரசனுக்குத்தர அதிலொரு உரோமம் இருந்தது. இது என்ன எனப் பெருமாளுக்கிருந்தது ஒன்று தவறிவந்தது போலு மென்றனர். அரசன் அத்தாசி யெவ்வகையா யினள் என அர்ச்சகர் நடந்தது கூறினர். அரசன் உண்மையறிவான் வேண்டிப் பெருமாளைத் தரிசிக்கச்செல்ல அருச்சகர் பெருமாளை நோக்கி நாங்கள் அறியாது செய்த பிழைபொறுத்து அரசன் காணச் சிகை காட்டவேண்டுமென்று வேண்டினர். அரசன் பெருமாளைத் தரிசிக்கையில் சிகையையும், தாசியினது உருவத்தைப் தொடையினுங் கண்டு ஆனந்தமடைந்து தன்னூர் புகுதனன்.

கான்பியூகஸ்மதம்

சீனா தேசத்தில், லு எனும் நகரம் ஒன்று உண்டு. அவ்விடத்தில் கிறிஸ்துபிறக்க (551) வரு.க்கு முன் கான்பியூகஸ் எனும் மதஸ்தாபகன் பிறந்தான். கன்பியூஷியஸ் என்று இவனைக் கூறுவர். இவனது மூன்ரும் வயதில் தந்தை யிறந்தனன். இவன் (15) வது வயதில் கல்விகற்றான். (19) வது வருஷத்தில் பரிணயமடைந்தான். (50) வருஷம் அரசனிடம் மந்திரியாயிருந்தான், பிறகு ஜீவதசையில் உண்மை அறிந்து கடவுளின் மகிமைகளை யுபதேசிக்கத் தொடங்கினான். இவனுக்கு (300.) சீடர்கள் சேர்ந்தனர்; இவன் பல நூல்கள் செய்தான். இவன் (57) வது வயதில் மரணமடைந்தான். இவனுக்குப் பிறகு இவன் சீடரில் முதல்வரானார் லன் தியூ தாவித் யுல்கு கான்பியூகஸ் என்பவர்கள், கான்பியூகஸ் தர்மாசனத்தை யடைந்தனன். இம்மதத்தவர்க்கு (1660) கோயில்களுண்டு. ஒவ்வொரு வருஷத்திலும் இரண்டு முறை திருவிழா நடத்துவர். இவர்கள் தங்கள் தேவர்களுக்குப் பலிகொடுப்பது வழக்கம். இம்மதத்தில் கடவுள் ஒருவரே; இக் கடவுளை யடைதலே மனித ஜன்மத்திற்குச் சிரேட்டத் தன்மை. ஆகாசம், பூமி, மனு ஷஜன்மம் இவை மூன்றுங் கூடினது ஒரு தத்வம், இம்மூன்றில் மனுஷஜன்மம் விசேடம். சம்பன்னர்களையும், பெரிய மனுஷரையும் மற்றவர்கள் சேவிக்க வேண்டும். மனுஷப்பிறவிக்குத் தாய் தந்தையர் காரணமாதலின் அவர்களை வணங்க வேண்டும். தாய் தந்தையர் வார்த்தைகளைக் கடக்கக் கூடாது. தாய் தந்தையர் இறக்கின் மூன்று வருஷம் வரையில் துக்கம் கொண்டாடுவர். பிறகு, மாத்ரு பிதாமஹாலயம் என்று ஒரு இடங்கட்டி நாடோறும் அவர்களைத் துதித்து வருவர். சிறுமிகள் விருத்தஸ்திரீகளைப் பூஜிப்பர். ஜாதிபேதம் இல்லை. அனைவரையும் சகோதரர்போல் எண்ண வேண்டும். சந்ததியுள்ளோருக்கு ஜன்மம் இல்லை. எல்லாரும் நீதி, தயை முதலிய சுகுணங்களுடன் கூடியிருத்தல் வேண்டும்.

காபச்யன்

இவன் பாரியாதர கிரியில் வசித்த வேடன் திருட்டுத்தனத்தால் தாய் தந்தையரையும் பெரியோர்களையும் காத்து சித்தி பெற்றவன். (பார~சார்.)

காபாசனன்

சூரியவம்சத்தரசன். இவன் யோகியானான்.

காபாலன்

விஷ்ணுபடரில் ஒருவன்.

காபாலி

1. சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று. 2. ஏகாதசருத் திரருள் ஒருவர்.

காபாலிகமதம்

இந்தமதம், மாயாதத்துவ ருத்திரர்கள் மதம். இம்மதத்தவர் ஆன்மா நித்திய வியாபக சைதன்னியன் என்பர். கர்த்திருத்துவமான சமுசார பாவத்தை விட்டு ஞப்திமாத்ரமா யிருப்பதே மோக்ஷம் என்பர். (தத்துவநிஜாநுபோகசாரம்).

காபிரியமதம்

இவர்கள் சாதாரணமாய்க் காப்பிரியர் எனப்படுவர். இவர்களின் படைப்புக் கடவுளுக்குக் குவினியாடிக் வோசா என்று பெயர். இவர்கள் பல விக்ரகங்களைச் செய்து அநேக தேவாலயங் களில் வைத்துப் பூசிப்பர். சிலர் சூரியன், சந்திரன், சிலர் ஆகாசம், சிலர் நக்ஷத்ரங்கள் முதலியவற்றைப் பூசிப்பர். இவர்கள் மேபக் எனும் ஒருவிதமான புழு சுபங்களைத் தெரிவிப்பதென்று நினைத்து அதைக் காப்பாற்றுவர், ஆடு, மாடுகளைத் தேவர்களுக்குப் பலியிடுவர். இவர்களின் குருக்கண்மார் ஸ்பின் என்று பெயர் பெறுவர். குருக்கண்மார் வயதிலும் ஞானத்திலும் உயர்ந்தவராயிருப்பர். குருக்கண்மார் தங்களிஷ்டத்திற்கும் சாத்திக்கும் தக்க அநேக பெண்களை மணந்து கொள்வர். விபசாரிகளைச் சிரச்சேதஞ் செய்வர். விதவைகள் மறுமணங்கொள்கையில் தங்கள் விரலின் நுனிகளை வெட்டிக்கொள்வர்.

காபிலகாலயூபம்

சிற்ப நூலில் ஒன்று.

காபிலம்

கபிலரால் ஏற்படுத்தப்பட்டமதம். இது யோகத்தில் மோக்ஷம் என்னும்.

காபில்யன்

பாஞ்சாலதேசத் தரசனாகிய பரமாசுவன் குமரன்.

காபுரம்

ஒரு பட்டணம். (சூளா).

காப்பவ்யன்

ஒரு வேடராசன் குடிகளுக்கு நற்புத்தி போதித்து நல்வழியடைந்தவன்.

காப்பிச்செடி

இது வளர்ந்தால் 20 அடி வளரும். இதை 5, 6 அடிகளுக்கு மேல் வளரவிடுவதில்லை. இதன் புஷ்பம் பார்வைக்கு மல்லிகைபோல் காணப்படும். ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு காயுண்டாகும். செடிகள் 2, 3 வருஷம் வளர்ந்தபின் காய்க்கத் தொடங்கும். கொட்டை, ஒருபுறம் உருட்சியாயும், மறுபுறம் பிளப்புள்ளதாகவுமிருக்கும். செடிகளைக் குலுக்கின் பழம் உதிரும். உதிர்ந்த பழங்களை யுருளைகளால் உருட்டி மேல்தோல் போக்கிக் கொட்டை யெடுப்பார்கள். கொட்டையை வருத்துக் கஷாயஞ் செய்வார்கள். இவை, உஷ்ணதேசங்களில் பயிராகும். அரேபியாவில் முதலில் பயிரிடப்பட்டன. இப்போது இந்தியாவில், நீலகிரி, சேர்வராயன்மலை, பழனிமலைச்சாரல், மைசூர், ஸிலோன் முதலிய பல இடங்களில் பயிரிடப்படுகின்றன.

காப்பியக்குடி

1. இது ஒரு குடிப் பெயர். இக்குடிப் பெயர் முற்காலத்தேயிருந்த தென்பதற்குக் காப்பியத் தொல்குடிகவின் பெற வளர்ந்து என்பதால் இஃது ஓர் குடிப்பெயரென அறியலாம். இக் குடியிற் பிறந்தார், வெள்ளூர் காப்பியனார் பல்காப்பியனார், முதலியோர். இது ஓர் ஊரின் பெயர் என்பர். 2. சோழநாட்டிறுள்ள ஒரூர், சீர்காழிக்கருகிலுள்ளது. தேவந்தியின் கணவனாகிய சாத்த னிவ்வூரில் வளர்ந்தவன். (சிலப்பதிகாரம்.)

காப்பியஞ் சேந்தனார்

இவரது இயற்பெயர் சேந்தனென்பதே ஏதேனும் காப்பியஞ் செய்ததனால் இவ்வடைமொழி கொடுக்கப் பெற்றாரோ அன்றேல் காப்பியம் என்பது இவருடைய ஊர்தானோ தெரியவில்லை. காப்பியன் மகனாகிய சேந்தனா ரென்றும் கொள்ளலாம். இவர் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைமகன் வருவதற்குரிய பல்லி சொல்லுதல் முதலாய நிமித்தங்கள் பலவற்றைச் சேர விரித்துக் கூறியுள்ளார். இவர் பாடியது நற். 249ம் பாட்டு.

காப்பியம்

பெருங்காப்பியத்திற்குக் கூறிய அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கனுள் ஒன்றும் பலவுங் குறைந்து வருவது. இருவகைக் காப்பியங்களும் ஒரு வகைச் செய்யுளானும் பலவகைச் செய்யுளானும் உரைவிரவியும், பாஷைவிரவியும் வரும். (தண்டி)