ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
கௌஃ | பித்ருக்களைக் காண்க. |
கௌசலன் | அம்சத்துவசன் குமரன், இவன் கன்னிகாரவனத்தில் வேட்டைக்குச்சென்று அவ்விடம் ஒரு பொன்மானைக் கண்டு பின்றொடர்ந்து அது மறைய அவ்விடம் அற்புதமுள்ள இடமென்று எண்ணிச் சிவபூசை செய்தவன். (பழனித் தல~பு.) |
கௌசலை | 1. ஸ்ரீராமன் தாய், தசரதன் தேவி, தீயில்விழ வலம் வந்த பரதனுக்கு நீதிகூறித் தடுத்தவள். 2. பூருவின் தேவி, கேகயராசன் புத்ரி. 3. வீமராசன் புதல்வி, கணவன் சந்திர வம்சத்தவனான சுகோதரன். குமரன் அஸ்திரன். 4. அரசர் மீளியின் பாரி. |
கௌசல்யன் | தக்ஷணகோசலத்தின் அரசன். |
கௌசவி | துரவபதராஜன் மனைவி. இவளுக்குச் சவுத்தராமணியென்றும் பெயர். |
கௌசாம்பி | குசாம்பன் கட்டின பட்டினம். |
கௌசிகன் | 1. காதிராசன் புத்ரன், இவன் தாய், உடன் பிறந்தாள் கணவனாகிய பிருகு முனிவர் கட்டளை கடந்து முருக்கமரத்தைத் தழுவப் பிறந்தவன். பிறப்பாலரசனும் செயலால் இருடியும் ஆயினான். இவன் வேட்டைக்கு வந்து வசிட்ட காம தேனுவைக் கவர்ந்து வசிட்டருடன் மாறு கொண்டு தவமேற்கொண்டு இராசருஷியாய் விச்வாமித்ரன் ஆனவன். திருடர், வர்த்தகன் வீட்டிற் பொருள் திருடிச் சேவகர் துரத்த இவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். அத்திருடரைக் காவலர்க்குச் காட்டினதால் நரகமடைந்தனர். ஷாம காலத்தில் பசியால் புலையன் வீட்டில் மாமிசம் புசித்தவர். வசிட்டர் குமாரராகிய சத்திமுதல் நூற்றுவரை உதிரனென்னு மரக்கனால் கொலைசெய்வித்தவர். அரிச்சந்திரன், வசிட்டரைக் காண்க. 2. நாராயணகவசத்தால் சித்திபெற்று யோகத்தாலுடல்விட்ட ஒரு வேதியன். ஒருகாலத்துச் சித்திரரதன் எனுங் காந்தருவன், இரதாரூடனாய் இவனுடல் திடந்த வழியாய்ச் செல்லக் காந்தருவன் தலை கீழாய் விழுந்தனன், இதைக்கண்ட வாலகில்லியர் காந்தருவனை நோக்கிக் கௌசிகன் உடலெலும்புகளைக் கங்கையில் விடின் செம்மையடைவாய் என்றனர். அவ்வாறே காந்தருவன் செய்து மீண்டனன் (பாகவத்,) 3. சராசந்தன் மந்திரி, 4. பௌண்டரகன் மித்திரன். 5. ஒரு வேதியன், வசிட்டர் மாணாக்கன், இவன் மீது ஒரு கொக்கு எச்சமிட அதனைக் கோபித்து எரித்து நாம் தவத்திலுயர்ந்தோமென்று இறுமாப்படைந்து ஒரு பதிவிரதையால் பங்கமடைந்தவன். தருமவியாதனிடம் தருமங் கேட்டவன். 6. ஒரு பிராமணன், காயத்திரி சாபத்தால் மேன்மையடைந்து தன் சமபலனை விஷவாகுவிற்குத் தானஞ்செய்து பிரமபத மடைந்தவன். 7. சிவகணத்தவன், 8. ஒரு எழை வேதியன், விஷ்ணுமூர்த்தியிடத் தன்புள்ளானாய்த் திருமாலைப் பாடி வீதியிலிரந்துண்டு தன் மாணாக்க ரெழுவருக்கு அதைப் பயிற்றிப் பதுமாக்ஷனிடமிருந்தான். இவனைக் கலிங்கராசன் தன் புகழைப்பாடக் கட்டளையிடக் கௌசிகன் திருமாலையன்றிப் பாடோமென, அரசன், தன் கொலுவிலிருந்தாரைப் பாடக் கட்டளையிடப் பாடினதைக் கேட்டுக் கௌசிகனும் அவன் மாணாக்கரும் இனி அரசன் நம்மையும் பாடப் பணிப்பன் என்று நாவை யரிந்துகொண்டு மாய்ந்து மாணாக்கருடன் பரமபத மடைந்தவன். 9, வசுதேவன் குமரன், 10. ஒரு வேதியன், சண்டாள சாங்கத்யத்தால் பாவியாய் விஷ்ணுபூசையால் முத்திபெற்றவன். 11, விண்டுமித்ரனைக் காண்க. 12. சண்பைநகரத்து வேதியன் மாதவிக்கு நண்பனாய்க் கோவலனுக்கு அவள் ஓலையைக் கொடுத்தவன், சுமதியின் தந்தை, (சிலப்பதிகாரம்.) (மணிமேகலை.) 13. பிரதிஷ்டானபுரத்து வேதியன், இவன் குட்டநோய்கொண்டு தன் மனைவியின் கற்பைச் சோதிக்க நான் ஒரு தாசியிடம் ஆசைப்பட்டேன் அவளிடம் கொண்டுபோய்விடுக என் றனன். கணவன் சொற்படி கற்புடையாள் கணவனை யிருளில் தூக்கிச் செல்லுகையில் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாண்டவ்யர் மீது பட்டு வருத்தமுண்டாக்கினள். வருந்திய மாண்டவ்யர் இவள் பொழுது விடிய மங்கலமிழக்க என்று சபித்தனர். இதைக் கேட்ட கற்பினி பொழுது விடியாதிருக்க என்றனள். அந்தப்படி பொழுது விடியாததுகண்டு தேவர் முதலியோர் அறிந்து அநசூயையிடம் சென்று இத்துன்பத்தைத் தீர்க்கவேண்ட அநசூயைக் கௌசிகர் தேவியிடஞ்சென்று வேண்டிப் பொழுது விடியச்செய்து தன் கற்பின் பலத்தால் கௌசிகனை நோய் தீர்ந்து எழச்செய்து தேவரிடம் திரிமூர்த்திகளும் புத்திரராகப் பிறக்க வரம் பெற்றனள். 14. ஒரு வேதியன், இவனுக்குக் கச்ருபன், குரோதன், மிதுநன், கவி, வாக்துஷ்டு, பித்ருவர்த்தி எனப் புத்திரரிருந்தனர். இந்தக் குமரர் தம் தந்தை யிறந்த பிறகு கற்கரிடம் கல்விகற்று க்ஷாமத்தால் வருந்தித் தமது ஆசாரியர் ஓமதேனுவை மேய்க்கையில் பசியினால் அதை யறுத்துத் தின்ன நிச்சயித்தனர். அவர்களுள் பித்ருவர்த்தி, சகோதரரைப் பார்த்து நீங்கள் பசுவைக்கொல்லத் துணிந்தது தகாத காரியமாயினும் அதனைச் சிரார்த்த காரியத்திற்கு உபயோகிக்கின் நன்றென அவ்வாறே அவர்கள் சம்மதிக்கக் கடைசியவனான பித்ருவர்த்தி யாககர்த்தாவாய் முதலிருதமயரை விச்வதேவத்தானத்தினும், மற்ற மூவரை பித்ருஸ்தானத்திலும், மற்றவனை அதிதியாகவும் இருத்திப் பிதுர் திருப்திக்காகச் சிரார்த்தஞ் செய்தனன். பின் சிறுவர், ஆசாரியரிடம் சென்று பசுவினைப் புலியடித்ததென்று கூறி, மறு பிறப்பில் கோ அத்திசெய்த பாபத்தால் தாழ்ந்தசாதியிற் கோமாம்சத்தைச் சிராத்தத்திற்கு உபயோகித்ததால் ஞானத்துடன் பிறந்தனர். மற்றொரு சன்மத்தில் இவர்கள், காளாஞ்சனமென்னு மிடத்தில் மான்களாய்ப் பிறந்து சிவமூர்த்திக்கு எதிரில் சஞ்சரித்ததால் சக்கிரவாகப் புட்களாய் மானசமடுவை யடைந்தனர். ஒரு நாள் பாஞ்சால தேசாதிபதியாகிய விப்ராசனைக் கடைசிபக்ஷி பார்த்துத் தான் அரசனாயிருக்க நினைக்க மற்ற இரண்டு பக்ஷிகள் மந்திரிகளாயிருக்க எண்ணினர். மற்றவர் நிஷ்காமிகளாயிருந்தனர். பிறகு கடைசிகுமரன் பிரமதத்தன் எனும் பெயருடன் விப்ராசனுக்குக் குமரனாய்ப் பிறந்து சமஸ்த பிராணிகளின் பாஷைகளை யறியும் சக்திமானா யிருந்தனன். மற்ற இருவரும் விப்ராசன் மந்திரிகளுக்குக் கண்டரீகன், சுவாலன் எனுங் குமரராய்ப் பிறந்தனர். மற்றவர் நிஷ்காமிகளா யிருந்ததால் வேதியர்களாயினர். அந்தப் பிரமதத்தன், வயதடைந்து அரசேற்றுத் தாங்கள் முன் கொன்ற யாகப்பசு தேவலன் குமரி சந்நிதியாகப் பிறந்திருந்ததை மணந்தனன், ஒருநாள் உத்தியானநஞ்சென்று ஆண் பெண்ணாகிய இரண்டு எறும்புகள் தங்களில் வாதாடியதை நோக்கப் பெண்ணெறும்பு ஆணிடத்தில் கோபிக்க ஆண் என்ன கோபம் என்று வேண்ட நேற்றுப் பக்ஷணம் வேறொருத்திக்குக் கொடுத்தனை யென்றது, ஆண், காலில் விழுந்து என்னை மன்னிக்கவேண்டுமெனப் பெண் ஆகா புருஷரை நம்பலாகாது சமயத்திற்குத் தக்கபடி நடப்பர் எனக் கூறக்கேட்டு அரசன் நகைத்தனன். அரசனைநோக்கி அவன் தேவி, நகைத்ததற்குக் காரணம் வினவ ஒன்றுங் கூறாது விரதமிருந்தனன். இப்படி இருக்க மற்ற சகோதரர் பிரமதத்தன் பட்டணத்தில் ஒரு எழை வேதியனுக்குக் குமரராய்ப் பிறந்து கிழவனாகிய தந்தையைத் தனித்துவிட்டுத் தவத்திற்குச் செல்லுகையில் தந்தை கிழத் தன்மையில் என்னை விட்டு நீங்குகிறீர்களே என்று கூறக் கேட்டு ஒரு சீட்டில் தங்கள் பூர்வநிலை எழுதி இதை அரசனுக்குக் காட்டுக என்று சென்றனர். வேதியன், சீட்டினை அரசனுக்குக் காட்ட அரசன், அதிலுள்ள பொருளறிந்து மூர்ச்சித்துத் தெளிந்து வேதியனது மற்றொரு குமரனாகிய விஷ்வக்சேநனுக்குப் பட்டமளித்துத் தவத்திற்குத் தனது மந்திரியருடன் சென்று தனது பழைய சகோதரருடன் கூடி ஐந்தாவது சன்மத்தில் சகோதாருடன் முத்திபெற்றனன். (மச்சபுராணம்.) 15. ஒரு வேதியன், இவன் கங்காயாத்திரை செல்லுகையில் பேய்கள் சந்தித்து எமது பிறப்பொழிக்க என வேண்ட அவற்றின் பொருட்டுக் கங்கையிலும் மணிகன்னிகையிலும் தீர்த்தமாடிப் பிறப்பொழித்தவன். (வேதாரண்யபுராணம்.) |
கௌசிகம் | உபபுராணத் தொன்று. |
கௌசிகர்வரலாறு | தமக்கையும் தங்கையுமாகிய இருவரும் ஒருத்தி இருடிக்கும் மற்றொருத்தி அரசனுக்கும் வாழ்க்கைப் பட்டனர். இவ்விருவரும் புத்திரப்பேறு வேண்டி ருஷியைக் கேட்க ருஷி அவ் விருவர்க்கும் இரண்டு மரங்களைக் காட்டி ருதுஸ்நான மாயினபின் நீங்கள் நான் காட்டிய மரங்களை உங்களுக்குக் காட்டிய வகைக் கட்டி யணைவீராயின் புத்திரப்பேறுண்டா மென்றனர், அவ்வகையே யிருவரும் ஸ்நானஞ்செய்து ருஷி கூறியவகை செய்யப்போகையில் மறதியால் ருஷி பத்தினி அரசன் தேவிக்குக் கூறிய மரத்தினையும், அரசன்தேவி ருஷிபத்தினிக்குக் கூறிய மரத்தினையும் தழுவினர். இதனால் முறை பிறழ்ந்து புத்திரர் பிறந்து அரசன் வேதியனாகவும், வேதியன் அரசனாகவும் ஆயினர். |
கௌசிகி | ஓர் நதி, சத்தியவதியைக் காண்க. இதில் பாண்டுபுத்திரர், தீர்த்தயாத்திரை செய்கையில் உரோமசமுனிவர் ஏவுதலால் ஸ்நானஞ்செய்து பவித்ரமடைந்தனர். இராமமூர்த்தி மிதிலைக்குச் செல் லுகையில் தாண்டப் பெற்றது. மகாபரிசுத்தமுள்ளது, The river Kusi is a large tributary of the ganges from the north. |
கௌசிகிதேவி | கௌரியின் உடலித் பிறந்து சம்பநிசும்பரையும், சண்டமுண்டரையும் கொன்றவள். |
கௌசிகிபீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
கௌசிகை | காதி குமரி, விச்வாமித்ரருக்குத் தமக்கை, கௌமதி நதியானவள். இருசிகரைக் காண்க. |
கௌச்சிகர் | குச்சகமுனிவர் புத்திரர், விஷ்ணுவையெண்ணித் தவம் புரிந்தவர். இவர் விருத்தை யென்பவளை மணந்து மிருகண்டு என்பவனைப் பெற்றார். |
கௌடநெறி | வைதருப்பநெறிக்கு மாறாக வருவதாகிய செய்யுணெறி. |
கௌடபாதர் | வேதாந்தியாகிய ஒரு ஆசிரியர். சுகருக்கு மாணாக்கர் என்பர். இவர் மாணாக்கர் கோவிந்தபகவத் பாதாசிரியர். இவர் உத்தரகீதைக்குப் பாஷ்யம் எழுதினவர். |
கௌடபாதாசார்யன் | சுகருஷிக்குச் சீடன். |
கௌடபுரி | வங்கதேசத்திலுள்ள ஒரு பட்டணம். இதில் சந்நுமகருஷி ஆச்சிரமம் இருந்தது. இது தற்காலம் வங்காள நாட்டைச் சேர்ந்தது. |
கௌடம் | (ரு) சுத்தகௌடம், காளகுப்சம், சராசுவதம், உற்கலம், மைதுலை. |
கௌடர்கோன் | வடநாட்டரசன். இவன் பௌத்தன், இவன் திருநெல்வேலியில் வந்து கோயிலுக்குட்சென்று மண்டபத்திருந்த கற்சிலையாகிய நந்தியுருவத்தைக் கண்டு இது புல் தின்னுமோ என்று கேட்டு அங்கிருந்தவரைப் புல்லும் நீரும் வைக்கக் கூறினன். அங்கிருந்தோர் அவ்வகை செய்ய அரசன் இப்புல்லைத் தின்று நீரை யுண்ணின் உங்கள் தெய்வம் மெய்த் தெய்வம் என்றனன். அந்தப்படி நந்தி புல் தின்று நீர் அருந்தியது. பின்னும் அங்கிருந்த மூங்கிலைக் கண்டு இது வேறு புஷ்பம் புஷ்பிக்குமோ என்ன அது தாமரை முதலிய பல புஷ்பங்களைத் தந்தது. பின் கொன்றை விருக்ஷத்தை நோக்கி இது வில்வமரமோ என அது அவ்வகையாகக் கண்டு சைவன் ஆனவன். |
கௌணம் | எப்பதம் எப்பொருளை லக்ஷணாவிருத்தியினா லுணர்த்துகின்றதோ அது. |
கௌணியன் விண்ணந்தாயன் | ஆவூர் மூலங்கிழாரால் பாடப்பெற்றவன். |
கௌணியர் | 1. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். 2. ஒரு கோத்திர வேதியர். இக்கோத்திரத்தில் திருஞானசம்பந்தமூர்த்திகள் அவதாரம். |
கௌண்டினியம் | ஒரு பட்டணம், விதர்ப்ப நாட்டிலுள்ளது. தற்கால மிந்தநாட்டை பீடார் என்பர். |
கௌண்டினியர் | ஒரு முனிவர், பாரி சீலை. இவ்விருவரும் அருந்தபத்பநாப விரதம் அனுட்டித்துச் சித்தியடைந்தனர். இவர் தேவி ஆசிரியை எனவும் கூறுவர். |
கௌண்டின்னியன் | திரவிய ஆசையால் தன் பாரியை நீக்கினவன். (பிரகன்னார தீய புரா.) |
கௌண்டிவ்யர் | ஐந்தாவது புத்தர். |
கௌண்டேசுரகவி | லோக சூடாமணி செய்த சைநகவி. |
கௌதம புத்தன் | ஒரு புத்தன். |
கௌதமன் | 1. இவரது ஆச்சிரமத்திற்கு விநாயகர் ஜயன் என்பவனைப் பசுவுருவாக ஏவி உயிர்விடச் செய்தனர். இதனை அறிந்த கௌதமர், கோக்கொலை நீங்க விநாயக ராஞ்ஞையால் கங்காயாத்திரை சென்ற னர். இவர் நீராடின காரணத்தால் கங்கை கௌதமியெனப் பட்டனள், (பிரமபுரா.) 2. ஒரு வேதியன் ஒழுக்கம் கெட்டு வேடச் சேரியிற் சென்று புலால் புசித்து அவ்விடம் நீங்கிச்சென்று பொருள் பெற ஒரு காட்டில் ராஜதர்மானனும் நாடி சங்கப்பெயர்பெற்ற கொக்கால் உபசரிக் கப்பெற்று அந்தக் கொக்கால் விரூபாக்ஷன் எனுந்தன் நண்பனிடம் ஏவப்பெற்றுப் பெரும்பொருள் பெற்று வழிக்கு உணவின் பொருட்டு உபகரித்த கொக்கைக் கொன்று போகையில் நாடி சங்கன் தன்னிடம் வராமையால் விரூபாக்ஷன் கொக்கைக் கொன்றானென அறிந்து அவனைப் பிடித்துவந்து கொக்குடன் தகனஞ் செய்கையில் இந்திரன் ஏவலால் காமதேனு பால்பொழிய நாடிசங்கன் உயிர்பெற்று எழுந்தது, கௌதமனும் பால் தெறித்ததால் உயிர் பெற்றெழுந்து வேடச்சேரி யடைந்தான், ராஜதர்மன் எனும் பக்ஷி விரூபாக்ஷனையடைந்தது. இந்த ராஜதர்மன் எனும் நாடிசங்கன் பிரமனால் கொக்குருவாகச் சாபம் பெற்றவன். (பார~சாந்தி.) 3. (1) ஒரு பிராமணன், (2) மித்திர துரோகம் செய்தவன்; (3) திருதரஷ்டானுடன் விவாதம் செய்தவன்; (4) கோதம கோத்திரத்தில் உதித்த சிரகாரியன் தந்தை. |
கௌதமர் | A, 1, தீர்க்கதம முனிவர்க்குக் குமரர், மனைவி அகலிகை, குமரர் சதாநந்தர், கிருபாசாரியனுக்குப் பாட்டன். மனைவி இந்திரனால் விபசாரதோஷ மடைந்தது பற்றிக் கல்லாகச் சபித்து அவள் வேண்ட இராமமூர்த்தியின் திருவடித்துகளால் முன்னுருப்பெற்றுத் தம்மையடைய அருள்புரிந்த தவச்சிரேட்டர். 2. கர்னனுக்கும் அருச்சுகனுக்கும் நேர்ந்த யுத்தத்தைத் தடுத்தவர். 3. இவர் தாயிலா யானைக்குட்டியை வளர்த்து அதனை இந்திரன் திருதராட்டிர வுருக்கொண்டு யாசிக்கக் கொடுத்துத் தானுஞ் சென்றவர் 4. ஒருகாலத்தில் பன்னிரண்டு வருடம் மழைவறப்ப முனிவர்கள் இவரிடத்து வந்தனர். முனிவர், அவர்களுக்குக் காம தேனுவைக் கொண்டு உணவளித்தனர். உலகம் மழைபெய்து தளிர்ப்பத் தங்கள் இருப்பிடமெண்ணிச்செல்லு முனிவர்கள், தாமே மாயையால் பசுவினைக் கொன்று கௌதமர்மேல் பழிசுமர்த்தி, கோஅத்தி செய்தவனிடம் இருத்தலாகாதென நீங்கக் கௌதமரறிந்து இப்பழி செய்தார் மண்ணிட்டு நரகத்திலழுந்துக எனச் சபித்தனர். 5, தம்மை வஞ்சகத்தால் நீங்கச்செய்து தம்முருக்கொண்டு தமது தேவியின் கற் பினைக் கெடுத்த இந்திரனைத் தேகமெங்கும் பெண்குறி யடையவும், பீஜமறவும் சபித்துத் தேவரும் அவனும் வேண்ட அவனுக்குத் தன் தேகமுழுதும் பெண்கள் குறிபோல் தோற்றவும் மற்றவர்க்குக் கண் களாகத் தோன்றவும் அருள்புரிந்தவர். 6. தேவர் பாற்கடல் கடைகையில் பிறந்த அகலிகை பொருட்டுத் தேவர் பலரும் ஆசைப்பட்டனர். விஷ்ணுமூர்த்தி தேவரையும் மற்றவர்களையும் நோக்கி இந்தப் பாற்கடலில் யாவர் மூழ்கி நெடுநாள் பொறுத்து வருகின்றனரோ அவர்க்கு இவள் உரியவள் என்றனர். அந்தப்படி தேவர் பலரும் கடலுள் மூழ்கிச் சிலநாட்களுள் வெளிவந்தனர்; கௌதமர் கடலுட் சென்று நெடுங்காலம் பொறுத்து வெளிவந்ததால் அகலிகையை இவர்க்கு அளித் தனர். 7. இவர் முயலிடம் பிறந்தவர் என்பர். இவர் ஆச்ரமம் மிதிலைக்குப்போம் வழியிலுள்ளது. 8. ஒருகாலத்துப் பன்னீராண்டு பஞ்சம்வர இருடிகள் இவரையடைய இருடிகள்பொருட்டு அவர் ஒரு பிடி நெல்லை விதைத்து அனுட்டானஞ்செய்து முடித்து வருவதன் முன் அது விளைந்து பலன்றர அதனால் இருடிகளை யாதரித்து வந்தனர். நாடு மழையால் வளம் பெற்றபின் இருடிகளைத் தம்மிருக்கையேகக் கட்டளையிட அவர்கள் கௌதமரையும் உடனழைத்தனர். இருடி மறுத்ததனால் இருடிகள் கௌதமர் பயிரைமேய ஒரு மாயப்பசுவை நியமித்து விட்டனர். அதனைக் கண்ட கௌதமர் ஒரு தருப்பையை யேவிப் பசுவைக் கொன்றனர். அதனால் இருடிகள் கோவத்தி செய்தானென்று சாந்திராயண விரத மனுட்டிக்கச் செய்தா இதைக் கௌதமபசு நியாயமெனவும் வழங்கும். 9. ஒருகாலத்து ஷாமம்வா ஆற்றாத கௌதமர் வருணனை வேண்டித் தீர்த்தம் பெற்றுத் தம் பத்தினியுடன் வாழ்ந்து வந்தனர். இதனையறிந்த இருடிகளும் இருடி பத்தினியரும் அவ்விடம் வந்து வசிக்கையில் அகலிகைத் தீர்த்தத்தைக் கலக்கும் இருடிபத்தினிகளைக் கடிய இதனையறிந்த இருடிகள் கௌதமரையிடம் விட்டுப் பெயர்க்க எண்ணிக் கணபதியைப் பசுவாக வரச்செய்து கௌதமாது கோதுமைப்பயிரை மேயச் செய்தனர். இதனைக் கண்ட கௌதமர் ஒரு புல்கொண்டு அதனை யோட்டப் பசு வீழ்ந்திறந்தது. இதனால் அவ்விடமிருந்த இருடிகள் கௌதமரைக் கோஅத்தி செய்தவன் என்று நிந்தித்த துணர்ந்து கௌதமர் அவ்விடம் விட்டு நீங்கிச் சிவபூசை செய்து கங்காதரிசனஞ் செய்து அக்கங்கையைத் தமதிருக்கையிலிருக்க வேண்டிக் கொண்டனர். (சிவமகாபுராணம்). இது கௌதமி எனவும் படும். 10. தாம் தம் மனைவிக்குச் சாபங் கொடுத்துத் தவமழிந்து இருத்தலையெண்ணி விசனமடைந்து சிவனையெண்ணித் தவமியற்றிக் கோதாவிரியைப் பெற்றுத் திரியம்பகத்தில் அன்ன தாதாவாயிருக்கை யில் பல முனிவர்கள் இவரிடம் வந்து பசி தீர்ந்திருந்தனர். இவ்வகையிருக்கப் பெரும் மழை பெய்து பன்னிரண்டு வருஷ க்ஷாமமொழிந்து அந்தணர்கள் தங்கள் ஊர்க்குச் செல்ல விடைகேட்க இவர் அவர்களை யிங்கிருந்து சிவதரிசனஞ் செய்து கொண்டு என் அன்னத்தைக் கைக்கொண்டு என்னைப் புனிதனாக்கலாமென அவ்வாறிருந்து மீண்டுங் கேட்கையில் இத்தனுர்மாதத்தில் ஒருவேதியர்க்கு அன்னமிடின் அதிக பலனெனக் கூறியிருத்தலால் இம்மாதம் இவ்விடமிருந்து செல்க எனப் பிராமணர் தங்கள் நிலவளங்கள் முதலியவற்றை யெண்ணிக் சவலுகையில் சிலர் தங்கள் மந்திரவலியால் பசுவொன்று சிருட்டி செய்து கௌதமர் வயலில் மேயவிட அது பயிரில் நிற்கக்கண்ட கௌதமர் ஒரு புல் கொண்டெறிய அது நீங்காதது கண்டு ஓர் நார் எடுத்து அதட்ட அப்பசு அந்த நாரின் அடியால் பூமியில் வீழ்ந்து மாய்ந்தது. இதனைக்கண்ட வேதியர் கௌதமர் கோஅத்தி செய்தனர்; இனி அவர் அன்னத்தை உண்ணலாகாதென அவதூறு கூறு தலை ஞானநோக்கத்தால் வேதியர் தீச் செயலென்றறிந்து இனி நீங்கள் சிவப்பிரியர் அல்லாதவர்களாய் மண்பூசுவோர் ஆக எனச் சபித்தனர். (சிவரகஸ்யம்.) B. சாக்யனுக்கு ஒரு பெயர். C. கணாதனுக்கு ஒரு பெயர். D. இவர் தாசியினிடம் வத்சப்ரியர், ஸ்தூலாச்மி, அக்ஷணியெனும் புத்திரர்களைப் பெற்றனர். (பார~அது.) |
கௌதமி | 1. அசுவத்தாமன் தாய், துரோணர் மனைவிக்கு ஒரு பெயர், கிருபி எனவுங் கூறுவர். கௌதமனைக் காண்க. 2. கோதாவிரி நதிக்கு ஒரு பெயர். 3. இது கௌதமர் வேண்டுகோளால் வந்த கங்கை. இது பிரமகிரியிலிருக்கும் அத்திமரத்தின் வேரிலிருந்துண்டானது. இது தோன்றிய இடம் கங்காதவாரம் எனப்படும், (சிவமகாபுராணம்.) 4. ஒரு பிராம்மண கிழவி தன் மகன் பாம்பு கடித்திறக்க அருச்சுநன் எனும் வேடன் அப்பாம்பைப் பிடித்துவந்து அதனைக் கொல்லக்கூற அவனுக்குப் பாம்பினிடம் குற்றமிலாமை தெரிவிக்கவும் அவன் பிடித்த பிடியாகக் கொல்லக்கூறப் பாம்பு மனிதவார்த்தையால் தன் மீது குற்றமிலாமை தெரிவிக்கக் கேளாததால் யமனும் காலக்கடவுளும் கர்மம் காரணமென்று கூறக்கேட்டுப் பாம்பை விட்டனன், (பார~அநு.) 5. கௌசல்யையிடம் சூர்யவிரத மாகாத்மியங் கேட்டு நோற்று நன்மையடைந்தவள். (பவிஷ்~புரா.) |
கௌதமை | கலாவதியைக் காண்க. |
கௌதோசர்ப்பம் | இதன் பேதம் (62) வகை. |
கௌத்துவம் | திருப்பாற்கடலில் தோன்றிய மணி. இதனை விஷ்ணுமூர்த்தி மார்பணியாகக் கொண்டனர், |
கௌன்மிகன் | 1. யாமங்காப்போர் தம் செயவின் விழிப்புடையரா யிருத்தலை அறிபவன். 2. (30) காலாட்களுக்குத் தலைவன். (சுக்ர நீதி.) |
கௌமதி | கௌசிகை அல்லது இரிசிகரை காண்க. |
கௌமாரி | சத்தமாதாக்களுள் ஒருத்தி. மயில் வாகனத்தை ஏறினவளாய்ச் சிவப்பு வஸ்திரம் அணிந்தவளாய்ச் சூலம், வேல் முதலிய ஆயுதமேந்தி யிருப்பவள். |
கௌரன் | குசிகனுக்குப் பீவரியிடம் பிறந்தவன். |
கௌரழகன் | 1. சமீகன் சீடன். பரிச்சித்தின் பொருட்டு நாகம் வராமல் வெளியில் காத்திருந்தவன். 2. சாம்பனுக்குச் சந்திரபாக தீர்த்தமகி மைகூறிச் சூர்யபூஜை செய்வித்த புரோகிதன். (பவிஷ்~புரா.) 3. ஒரு அரசன் இவன் விஷ்ணுவை யெண்ணித் தவமியற்றிச் சர்வசித்தியடைந்தவன். இவன் தவமியற்றிய இடம் கௌமிஷாரண்யம். |
கௌரவதி | இந்திரப்பிரத்தித்திற் கருகிலுள்ள ஒரு நதி. |
கௌரவன் | சுகர் புத்திரன். |
கௌரவர் | 1. குருவம்சத்தவராகிய சந்திரகுலத்தரசர். 2. கௌரி சிவமூர்த்தியை யெண்ணித் தவமியற்றியகாலத்து அவள் திருக்கரத்தில் வளையிலிட்டதால் இப்பெயரடைந்த ஒருவகைச் சாதியர். இவர்கள் தற்காலம் கவரைகள் எனப்படுவர். இவரை வளையற்கார கவரைகள் என்பர். |
கௌரவாம்பாள் | விஷ்ணுவை ஆராதித்து இஷ்டசித்தி பெற்றவள். |
கௌரவி | உதிஷ்டிரன் தேவி, குமரன் தேவகன். |
கௌரவியன் | ஓர் நாகராஜன், ஐராவதன் என்னும் நாகன் வம்சத்தவன். இவன் பெண் உலூபி மருமகன் அருச்சுநன். |
கௌரி | 1. சிவமூர்த்தி லீலையாய்ப் பிராட்டியைக் காளியெனக், கோபித்து அந்த உருநீக்கி வெள்ளிய மேனிகொண்ட பார்வதியார் திருவுரு. பார்வதிபிராட்டி விட்டவுரு கௌசிகிதேவி ஆயிற்று. 2. விரூபாக்ஷன் எனும் வேதியனுக்குச் சுபவிரதை யெனுந் தேவியிடம் பிறந்தவள். தனது ஐந்தாம் வயதில் பிறவிப்பிணி நீங்கத் தந்தையைக் கேட்டு அவன் உபதேசித்த கௌரிமந்திரத்தைச் செபித்து வருகையில் பெண்ணுக்கு மணப்பருவம் வருதலறிந்து தகுந்த கணவன் விரைவில் காணாமல் பிக்ஷைக்குவந்த கொடிய வைஷ்ணவ வேதியனுக்குத் தாராதத்தம் செய்தனன். கௌரி அவனுடன் சென்று மாமி மாமன்மார் வைணவராதலால் அவர்கள் செய்த தீங்கைப் பொறுத்திருந்தனள். ஒருநாள் எல்லாரும் அயலூரில் நடக்கும் கலியாணத்திற்குச் சாமான் முதலியவைகளை வீட்டில்வைத்துப் பூட்டிட்டுக் கௌரியைத் தனியேவிட்டுச் சென்றனர். கௌரிதனியிருந்து நான் எனது தாய்வீடு விட்டு வந்தநாள் முத வி துவரையில் ஒரு சிவனடியவரைக் காணேன் என்று கவலை யடைந்திருந்தனள். சிவமூர்த்தி ஒரு திருவிளையாடல் கருதி விருத்தராய்த் தோன்றி அன்னம் வேண்டினர். கௌரி, மாமன் முதலியோர் கதவுகளைப்பூட்டிட்டு அயலூர்க்குப் போயிருத்தலை அறிவித்தனள். விருத்தர் அம்மே நீர், பூட்டில் கை வைக்குமுன் கதவுதிறக்கும், விரைவில் பசி தீர்க்க என்றனர் கௌரி அவ்வாறு செய்து விரைவில் அன்னம் படைத்தனள், சிவனடியவர் அதனையுண்டு விருத் தப்பருவம் நீங்கிக் குமாராயினர். கௌரி கண்டு நடுங்கி யொருபுடை யொதுங்கி நிற்கையில் மாமி மாமன்மார் வருதலறிந்து குமரர் குழந்தையாய் அழுதனர். மாமி மாமன்மார் ஏதுகுழந்தை யெனத் தேவ தத்தனும் மனைவியு மீண்டு வந்து சற்றுப் பார்த்திருக்கச்சொல்லிச் சென்றனர் என மாமன் முதலியோர் நீ சிவனுக் கன்புடையை யெங்களுக் காகாய் என்று குழந்தையுடன் வீட்டைவிட்டு நீக்கக் கௌரி வெளிவந்து கௌரிமந்திரத்தைத் தியானிக்கச் சிவமூர்த்தி இடபாரூடராய்த் தரிசனந்தந்து கௌரியை அருகிருத்தித் திருக்கைலைக்கு எழுந்தருளினர். 3. வருணன் தேவி. 4. ஒரு நதி. A tributary of the Kabul river. 5. மகாசு வேதையின் தாய். |
கௌரி சிகரம் | இமயமலையில் பார்வதிபிராட்டியார் சிவமூர்த்தியையெண்ணித் தவஞ் செய்த சிகரம். |
கௌரி பஞ்சாங்கம் | நாள் 1க்கு முகூர்த்தம் (8) முகூர்த்தம் 1க்கு நாழிகை (33/4) நன்மையான வேளையில் யாதொரு காரியஞ் செய்ய நன்று, நாயிறு, பகல்; உத்யோகம், லாபம், விஷம், அமுதம், சுபம், தனம், அமிருதம், ரோகம். இரவு: தனம், சுகம், சோரம், விஷம், கலகம், அமுதம், லாபம், ரோகம். திங்கள் பகல்: அமுதம், விஷம், உத்யோகம், லாபம், கோரம், சுகம், ஆகாயம், தனம். இரவு: ரோகம், லாபம், உத்யோகம், தனம், சோகம், அமுதம், விஷம், சோரம். செவ்வாய் பகல்: ரோகம், உத்யோகம், சோரம், லாபம், அமுதம், உத்யோகம், விஷம், தனம் இரவு: சோரம், உத்யோகம், விஷம், லாபம், சோரம், தனம், சுகம், அமுதம். புதன், பகல்: விஷம், அமுதம், சுகம், உத்யோகம், சோரம், லாபம், தனம், அமிருதம் இரவு: லாபம், ரோகம், விஷம், உத்யோகம், சுகம், அமுதம், தனம், லாபம். வியாழம், பகல்: உத்யோகம், விஷம், சோரம், லாபம், அமுதம், ரோகம், கலகம், சோரம். இரவு: சுகம், ரோகம், கலகம், லாபம், உத்யோகம், சோரம், தனம், உத்யோகம். வெள்ளி. பகல்: ரோகம், சோரம், அமுதம், விஷம், லாபம், சுசம், தனம், அமுதம், இரவு: அமுதம், சோரம், விஷம், லாபம், சுகம், தனம், உத்யோகம், ரோகம். சனி, பகல்: விஷம், அமுதம், ரோகம், உத்யோகம், சுகம், லாபம், தனம், லாபம். இரவு: விஷம், உத்யோகம், சுகம், அமுதம், கலகம், ரோகம், அமுதம், லாபம். |
கௌரிகன் | இவன் ஒரு ராஜருஷி. சுபாகு எனும் அரசனுக்குப் பாகுதையெனும் நதியிடம் பிறந்தவன் (பார~அநுசா.) |
கௌரீலீலாசமன்விதம் | சிருட்டியாதிகளில் ஆத்மாக்கள் களிப்புறத் தாம் கௌரியுடன் கூடியிருந்த சிவமூர்த்தியின் திருவுரு. |
கௌரீவரப்பிரதம் | கௌரிக்கு வரமளிக்கத் தோன்றிய சிவமூர்த்தியின் திருவுரு. |
கௌர்ச்சன் | குர்ச்சகோத்திரத்து வேதியன். இவன் மகா பாபியாய்ப் பரஸ்திரீக மனத்தால் துராசாரனாயிருந்து உயிர்நீங்கி யமவாதனை யடைதலை நாரதர்கண்டு குமரனாகிய சுகுர்ச்சனுக்குக் கூறிச் சித்திரா நதியில் மாசிமாதத்தில் ஸ்நானஞ்செய்த பலனில் ஒரு சிறிது தந்தைபொருட்டு ஸ்நானஞ் செய்யக்கூற அவன் அவ்வகை செய்து தந்தையை நாகத்தினின்றும் நீக்கினன். |
கௌறிகாந்தசார்வ பௌமபட்டர் | ஆநந்தலகரிக்கு வியாக்கியானஞ் செய்த ஒரு வேதியர். |
கௌவ்யம் | (ரு) கோசலம், கோமயம், பால், தயிர், நெய் இவற்றுடன் கோரோசனம் சேர, ஷட் கௌவ்யம். |
கௌஷீகதி | இருக்கு வேதசாகையின் பெயர். |
கௌஷ்டபர்வதம் | இமயமலைக்கருகிலுள்ள மலை. |