ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
கோகன்னனன் | 1. சத்ரு குமரன், நாகன். 2 சிவகணத்தலைவரில் ஒருவன், |
கோகன்னனம் | ஒரு தீர்த்தம். ஒரு பட்டணம். A town in the Province of North Kanara, 30 miles from Goa. |
கோகன்விகோகன் | பிரமனிடத்தில் வரம் பெற்ற இரண்டரசர்கள், கலியின் முடிவில் கல்கியினுடன் புத்தஞ்செய்யக், கல்கியால் தனித்தனியாய்க் கொல்லப்படாத வர்களாய்க் கலியின் குதிரை சேனை முதலியவைகளை அதப்படுத்தப் பிரமனால் இவ்விருவரையும் ஒன்றாகக் கொல்லவேண்டும் என்று கூறக்கேட்டுக் கல்கியினால் ஒன்றாகக் கொல்லப்பட்டவர்கள், (கல்கி பு) |
கோகம்பளன் | நரிவயிற்றில் பிறந்த ஒரு முனிவன், அசிதகேசகம்பளர் என ஒரு பெயர் பௌத்த நூல்களிற் காணப்படுகிறது. |
கோகருணர் | இவர்கள் இரண்டு வேதியர்கள். இவர்களில் ஒருவனை யமன் பற்றி வரச் செல்ல யமபடர் யமன் கொண்டு வரச் சொன்னவனை விட்டு வேறொருவனைக் கொண்டு சென்றனர். இதனால் யமன் இவனை மீட்டும் செல்லுக என வேதியன் நான்படுந் துயரம் அதிகம், யான் மீண்டும் செல்லேனென யமன் இவனுக்கு வேண்டிய செல்வமளித்து அவன் வேண்டியபடி நாகங்களையெல்லாம் காட்டியனுப்பி மற்றவனைக் கொண்டுவரக் கட்டளையிட அவன் செல்லுகையில் அவனையும் நான் கூறிய காலம் தவறிய தாகையால் இவனையும் விட்டுவிடுங்கோளென் றனன், இவ்விருவரும் புண்ணிய தீர்த்த ஸ்நானஞ்செய்து புனிதமடைந்தனர். (திருவாரூர்ப்புராண) |
கோகர்ணம் | 1. கோகர்ணதேசத்திலிருக்கும் சிவக்ஷேதரம், இதில் திருக்கைலையிவலிருந்து சிவலிங்கம் பெற்று இவங்கை நோக்கிச் செல்லும் இராவணன், தேவர் வஞ்சனையால் சிவலிங்கத்தைப் பிரமசரிய வருக்கொண்டு வந்த விநாயகரிடங் கொடுத்து நீரின் பொருட்டு நீங்க விநாயகர் சிவலிங்கத்தைப் பூமியில் எழுந்தருளச் செய்தனர். இராவணன் தன் காரிய முடித்து வந்து சிவலிங்கத்தைப் பேர்க்க அது பசுவின் காது போல் குழைந்தது; ஆதலால் இப் பெயர் பெற்றது. இது கேரளதேசத்தி லிருப்பது. 2. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் நாற்றிசையிலும் முப்பது கோலளவு அளக்கப்பட்ட பூமி. காளையுடனும் கன்றுகளுடனும் கூடின நூறு கோக்கள் சுகமாகத் தங்குமிடம். இவ்வளவு பூமி தானம் செய்தவன் புண்யலோக மடைவான். (பார அச்.) |
கோகலன் | ஜனமேஜயன் சர்ப்பயாகத்தில் இருந்த ஒரு ரிஷி. |
கோகல்லியர் | சாகல்வியர் மாணாக்கர். |
கோகழி | உமை ஒரு கற்பத்தில் திருமாலை சான்றாக வைத்துக் கவறாடுகையில் பிராட்டியின் பெருமிதங்கண்ட சிவபிரான், நீ கோ உருவாக என சபித்தனர். இவளை நோக்கிச் சிவபிரான் உனக்குஎத்தலத்தில் இடக்கண் துடித்தல் முதலிய உண்டாகின்றனவோ அத்தலத்தில் இந்த கோவுரு நீங்கும் என அவ்வாறே கோவுருக் கொண்டு பல தலங்களையும் பூசித்து வருகையில் இத்தலத்தில் அவ்வுரு கழிந்ததால் தலம் இப்பெயர் பெற்றது. (வீர சிங் பு.) |
கோகாதேவி | ஜீவ இம்சை பாபமென விஷ்ணுவால் உபதேசிக்கப்பட்டவள். (வராக புராணம்.) |
கோகினி | சத்தியவதி, கோகினியாற்றில் மீன்வயிற் றுதித்ததால் வந்தபெயர். |
கோகுலம் | யமுனை நதி தீரத்திலுள்ள இடைச்சேரி, கிருஷ்ணன் பிறந்த இடம். |
கோகோ | இது ஒரு மரம், இது 10 அடி முதல் 30 அடி வரை வளரும். இலைகள் பசுமையாய்ப் பளபளப்பாயிருக்கும், பூக்கள் சிறியவை, இது அடிமரத்திலும் கிளைகளிலும் கொத்துக் கொத்தாய்ப் பூத்து நீண்டு அகன்ற காய்கள் விடும். காய் முதிரப் பழமாகும், மேல்தோல் தடித்திருக் கும், காய்க்குள் பல அறைகள் உண்டு, அவ்வறைகளில் விதைகள் 30, 40 உண்டு, இவ்விதைகளை யெடுத்து 2, 3 நாள் ஈரமான இடத்தில் புதைத்துப் பிறகு வெயிலில் காயவைத்து வறுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி யுபயோகிப்பார்கள். |
கோக்கீரீடனப் பிரதமை | சோமராஜன் பசுக்களை இம்சித்தலால் சந்திரனைக் காணுகிற பிரதமையில் பசுக்களை யலங்கரித்துத் தூப தீபங்கள் கொடுத்து வாத்ய கோஷங்களுடன் அவற்றின் சாலைகளில் சேர்ப்பிப்பின் துன்ப நீங்கி வேண்டிய சித்தியடைவர். |
கோக்குளமுற்றனார் | இஃது ஊர்பற்றி வந்த பெயர். குளமுற்றம் என்பது ஒரூர். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் புறப்பாட்டின் கண் வருதலானும் இவ்வூருண்மை தெளிக. இவர், கோவென்னும் உரிமைபெற்ற உழுவித் துண்ணும் வேளாண் மரபினர்; நெய்தலையும், முல்லையையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலை மகன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த இடமும் அவனுடன் தலைவி கடலாடிய துறையும் முதலியவற்றை நினைந்து தலைமகள் புலம்புவதாக இவர் சுவைபடப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 96ம் பாடலொன்றும், குறுந்தொகையில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
கோங்கணம் | கேரளத்திற்கு வடக்கிலுள்ள தேசம். |
கோங்கன் | சேரனைக் காண்க |
கோங்குவேளாளர் | இவர்கள் கோங்கு நாட்லிருந்து வந்து தென்னாட்டில் பரவியவர்கள். இவர்கள் வேளாளர் எனப்பட்டாரேயன்றி வேளாண்டன்மை சிறிதுமிலாத சிறு தொழிலாளர். இவர்கள் ஆசாரங்கள் நடையுடை பாவனை வேறு. விதவாவிவாகம், இளையான் மூத்தாரே மணத்தல், கணவனுக்கு வயது வருந்துளையும் மனப்பெண் மாமனுடனிருத்தல் முதலிய ஆசார விரோதங்கொண்ட வகுப்பு. (தர்ஸ்டன்.) |
கோசத்ரயாகம் | இது வருஷபர்யந்தம் செய்யத்தகுந்த யாகம். இதனைப் பசுக்கள் தங்களுக்குக் கொம்பு முளையாதிருக்க இந்த யாகத்தைச் செய்ய 10 மாதம் கழிந்த பின் கொம்புகளைப் பெற்றன. (பாரதம்.) |
கோசம் | (5) அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம், இவற்றுள் உடல் அன்னமயகோசம். கருமேந்திரியமும், பிராணனும், பிராணமய கோசம். கருமேந்திரியமும், மனமும் மனோமய கோசம். ஞானேந்திரியமும், புத்தியும் விஞ்ஞானமயகோசம், அவித்தை ஆனந்தமய கோசம். |
கோசம்பி | (கௌசாம்பிநகரம்) இஃது ஆதியிற் குசாம்பனென்னும் அரசனா லுண்டாக்கப்பட்ட தென்பர், இது வத்த நாட்டின் தலைநகர். யமுனை யாற்றைத் தன்பாலுடையது. உதயணனுடைய இராசதானி. அகழியாலும், கொடிகள் கட்டிய பல பல உறுப்புக்களையுடைய அழியாத மதிலாலும், பலதேசத்தார் வந்து குழுமிய பெரு முழக்கத்தையுடைய கடைவீதிகளாலும், பல குடிகள் நெருங்கிய தெருக்களாலும், பலவகைச் செல்வத்தாலும் விளங்குவது. உதயணனுடைய அநேக நகரங்களுள் முதன்மையானது. இதன்புறத்தே மது காம்பீரவனமென்ற ஒரு வனமும், புற காட்டிலிருந்து வந்த புதிய மன்னர்கள் தங்கி இன்ப நுகர்தற்கு ஒரு பூங்காவும் இருந்தன. இதிலிருந்து அரசாட்சி செய்து கொண்டிருந்த உதயணன் சிறைப்பட்டு உஞ்சைநகர்க்குச் சென்றபொழுது பகை வனாகிய பாஞ்சால தேசத்தனாற் கைக் கொள்ளப்பட்டது. அப்பால் அவனைக் கொன்ற உதயணனால் ஆளப்பட்டது. வாசவதத்தையை உதயணன் மணஞ்செய்துகொண்ட பின்பு உஞ்சை நகரத்தாரும் இந் நகரத்தாரும் மனக்கலப்புடையாராய்த் தானியங்களையும், நாணயங்களையும் வேறுபாடின்றி வழங்குவாராயினர். (பெ கதை.) |
கோசம்பி | கௌசாம்பி நகரம். (மணிமே.) |
கோசர் | ஒருவகைச் சாதியர். இவர்கள் தங்கள் நாட்டில் கண்ணகிக்குத் திருவிழாச் செய்தவர்கள். (சிலப்பதிகாரம்.) |
கோசலக்தரசன் | இவனது இயற்பெயர் தெரியவில்லை. இவன் பிரச்சோதனனுடையு சகலன். ஒருபொழுது பாஞ்சால வேந்தன் படையெடுத்து வந்து இவனை வென்று அவன் மகள் வாசவதத்தையும், அவளுடைய ஆயத்தாரையம் கவர்ந்து சென்று தன்னுடைய தேவிமார்களுக்குப் பணிப்பெண்களாக நியமித்தனன். அவனை வென்ற உதயணன் அம்மகளிரைத் தன் தேவியர்க்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு வாசவதத்தை யென்பவளை இவன் மகனென்றறிந்தபின் மணஞ்செய்து கொண் டான் (பெ கதை.) |
கோசலம் | கங்கா தீரத்துலுள்ள தேசம், இதன் தலைநகரம் அயோத்தி, |
கோசலவளநாடு | இந்நாடு செல்வத்திலும், புகழிலும் சிறந்தது, இதலுள்ளவர்கள் நடுவு நிலைமையிலும், பாத்திரமறிந்து கொடுத்தலிலும் சிறந்தவர்கள், இந்நாட்டுச் சித்திர வேலைக்காரர் மிகப் புகழ் பெற்றவர். (பெ-கதை.) Ajodhya in Oudh. This was dividid into two provinces by the river Saraju, uthra, and Dakshina Kosala. |
கோசாயி | இவன் ஜாதியற்றவன். இவன் ஸ்தலந்தோறும் சென்று பிக்ஷையெடுத்துச் சீவிப்பவன், இவர்களிற் சிலர் உடம்பெல்லாம் சாம்பற்பூசிச் சடைவளர்த்துத் துளசிக்கட்டைமண தரித்துத் திரிவர். |
கோசாரவேதை | சந்திரலக்கினத்துக்குச் சூரியன் 5 லும், சந்திரன் 8 லும், செவ்வாய் 7 லும், புதன் 4 லும், குரு 3 லும், சுக்கிரன் 6 லும், சனி 1 லும், ராகு 9 லும் இருந்தால், கோசாரத்தில் நல்ல பலனைக் கொடுக்க மாட்டார்கள். இதுவும் சந்திரலக்கினத்துக்கு 11, 3, 10, 6ல் சூரியனிருக்க முறையே 5, 9, 4, 12ல் கிரகமில்லாதிருந்தால் தானிருந்த ராசிப் பலனைக் கொடுப்பான, 1, 3, 6, 7, 10, 11ல் சந்திரனிருக்க முறையே 5, 9, 12, 2, 3 8ல் கிரமில்லாமலிருந்தால் தானிருந்த ராசிப் பலனைக்கொடுப்பான். 3, 6, 11ல், செவ்வாய், சனி, ராகு இருக்க முறையே 5, 9, 12ல் கிரக மிலலாதிருந்தால் தானிருந்த ராசிப் பலனைக் கொடுப்பான். 2, 4, 6, 8, 10, 11 புகனிருக்க முறையே 5, 3, 9, 1,8, 12ல் கரகமில்லாதிருந்தால் தானிருந்தராசிப் பலனைக் கொடுப்பான். 11,9,7,5,2,ல் குருவிருக்க முறையே 8,10,3,4,12ல் கிரகமில்லாமலிருந்தால் தானிருந்தராசிப் பலனைக் கொடுப்பான். 11,12,2,8,1,4,3,5,9,ல் சுக்கிரனிருக்க முறையே 3,6,7,5,8,10,1,9,11ல் கிரகமில்லாமலிருந்தால் தானிருந்தார்சிப் பலனைக் கொடுப்பான். |
கோசிகன் | 1. ஒருவேதியன் வேதவொழுக்கந்தவறிப் புலைச்சியை மணந்து களவொழுக்கத்தால் பிடிபட்டிறந்து யமபடரால் பிடிபட்டுத் தாய் தந்தையர் இவனுக்கிட்ட சம்புப்பெயரால் முத்தியடைந்தவன், 2, இவன் கோசம்பி நகரத்திருந்த ஒரு நிமித்திகன். வருங்காலச் செய்திகளை அறிந்து சொல்லுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவன். இதுபற்றியே நன்மதிப்பும்றுச் சேனைக் கணிமகனென்றும் பட்டமும் பெற்றவன். யமுனையில் வீழ்த்துவதற்குக் கொண்டுபோகப்பட்ட சாங்கியத் தாயைக் காப்பாற்ற நினைந்த உதயணன் வினவிய பொழுது அவளுடைய வருங்காலச் செய் தியை நன்குகூறியவன். (பெ கதை) |
கோசிலாதேவி | பாஞ்சாலன் மனைவி. |
கோசுருங்கம் | நிஷாதபூமிக்கு அருகிலுள்ள பர்வதம். |
கோச்சடை | கோச்சடில வருமரால் அந்தணர்களுக்குத் தானம் செய்யப்பெற்ற ஊர். (பயகாமாலையுரை) |
கோச்சிங்கப்பல்லவன் | சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்து அரசாண்ட பல்லவன். |
கோச்செங்கட்சோழன் | சிலம்பி ஒன்று திருஆனைக்காவில் சிவமூர்த்திக்கு நூலால் பந்தலிழைத்துப் பூசித்து வருகையில், யானையொன்று தானும் பூசிக்க எண்ணி அப்பந்தலை சிதைக்கச் சிலம்பிக் கோபித்து யானையின் துதிக்கையிற் புக யானை துதிக்கையை நிலத்தில் அறையச் சிலப்பியுடன் யானையுமிறந்தது, சிவாஞ்ஞையால் சிலம்பி சுபதேவன் என்னும் சோழன் மனைவியாகிய கமலவதி வயிற்றில் கோச்செங்கண்ணனென உதித்துப் பூர்வசன்மமுணர்ந்து திருஆனைக்காவில் திருமதிலின் திருப்பணி செய்கையில் ஒரு மதில் ஒழிய மற்றவை செய்க என ஆகாயவாணி கூறக் கேட்டு அரசனிருக்கச் சிவமூர்த்தி ஒரு நாள் சித்தர் உருக்கொண்டு தோன்றி விபூதி கூலியாகக் கொடுத்துத் திருமதிலை முடிப்பித்து அம்மதிலின் மீதேறி மதிலைப்பூமியிலழுத்தித் திருநீற்று மதிவெனப் பெயரிட்டுச் சென்றனர். அரசன் சிவப்பணி செய்வித்துச் சிவபதம் அடைந்தனன். (பெரியபுராணம்) |
கோச்செங்குட்டுவன் | ஒரு சேரன், இவனைப் பரணர் பாடி உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசில் பெற்றனர். |
கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை | கொல்லிமலைக்குத் தலைவன், விளங்கிலென்னு மூர்க்குப் பகைவரால் வந்த துன்பந் தீர்த்தவன், கடற்கரையிலுள்ள தொண்டியென்னு நகராளி, கபிலருக்கு நண்பன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டுண்டு விடுபட்டவன். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடன் போர்செய்தவன். கூடலூர் கிழாரால் பாடல் பெற்றவன். இவனைச் சேரன் மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும், யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும் பொறை யெனவுங் கூறுவர். ஐங்குறு நூறு தொகுப்பித்தோனிவனே, (புற நா.) |
கோடகமுகாசுரன் | தேவரை வருத்திக் கொண்டிருந்த அசுரன் இவனைச் சிவமூர்த்தி சூலத்தாற் கொன்றனர். |
கோடகாசுரன் | இவன் குதிரை முகங்கொண்ட அசுரன், இவன் தேவர்களைத் துன்புறுத்திய காரணத்தால் தேவர்கள் சிவபிரானைப் பிரார்த்திக்க விநாயகமூர்த்தி சிவபிரான் எவலாலிவனைக் கொன்ற, (திருவோத்தூர் புராணம்) |
கோடபதி | இஃது உதயணனுடைய யாழ். யாழ்வகையில் பேரியாழின் பாற்படும். பிரமசுந்தரரென்னும் முனிவரால் உதயானனுக்கு யாழ்வித்தையுடன் கொடுக்கப்பட்டது, தெய்வத்தன்மை வாய்ந்தது, மிக்க அழகையுடையது, அவன் இதைக் கற்பிக்கும்பொழுது தான் வாசவதத்தையின் அன்பைப் பெற்றான். அவ்விருவருக்கும் இதன்பாலுள்ள அன்பு மிக அதிகம். (பெ கதை) |
கோடர் | இவர்கள் இருளர் எனுஞ் சாதிப் பகுப்பு. தோடரும் இவர்கள் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் நீலகிரி மலைவாசிகள், முதலில் மைசூருக்கடுத்த கொல்லி மலையில் வசித்தனர். பசுக்கொலை செய்பவ ராதலால் இப்பெயர் இவர்களுக்கு வந்ததென்பர். கோடகிரி, தொடநாடு முதலிய இடங்களிலுள்ள குடிசைகளில் வசிக்கின்றனர். பாஷை தமிழ் கன்னடங்கலந்தது, 1. அழுகிய மாமிசமாயினும் புசிப்பர். (தர்ஸ்,) |
கோடாகன் | நாகன். |
கோடிகாசியன் | பாண்டவர் அரண்யவாசத்தில் ஆச்சிரமத்தில் தனித்திருந்த திரௌபதியைக் கண்டு மோகித்த சைந்தவனால் அனுப்பப்பட்ட ஒரு இராசகுமரன். |
கோடிசிலை | சுரமைநாட்டிலுள்ள ஒரு மலை. |
கோடிதீர்த்தம் | 1,பண்டில்கண்டில் உள்ள ஒரு தீர்த்தம், 2. கோகரணத்தில் உள்ள ஒரு தீர்த்தம். A tunk situated in Kalingar in the District of Bundelkand. 2. A Sacred tank in Gokarna. 3. In Muttra. |
கோடிமங்கலத்து வாதுளிநற்சேந்தனார் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவரியற்பெயர் நற்சேந்தனார். வாதுலகோத்திரமாக இருக்கலாம், வேதியர்போலும், ஊர் கோடிமங்கலம். (அக. 81,179,232) |
கோடை | திரண்ட பசுநிரை யொன்றும் தப்பாமே தம்மை வேண்டினவர்களுக்குப் பிரியப்பட்டுக் கொடுத்தது. (பு. வெ.) |
கோடை | இது கடிய நெடுவேட்டுவன் மலை (புற நா.) |
கோடைபாடிய பெரும்பூதனார் | ஒரு தமிழ்ப் புலவர். (புறநா.) |
கோட்கூச்சவ்வை | சிவதேவசரணர் குமரி, இவள் தந்தையார் சிவதிருப்பணி பொருட்டு வேற்றூர்க்குப் போக எண்ணித் தமது குமாரியை அவர் நாடோறுஞ் செய்யும் பால் நிவேதனத்தைச் சிவமூர்த்திக்கு நிவேதிக்கப் பணித்தனர். ஒளவை பாலை நாடோறும் கறந்து குழந்தையை யுண் பிக்குமாறு உண்பிக்கச் சிவமூர்த்தி யுண்ணாதிருத்தல் கண்டு அழுதனள். சிவமூர்த்தி இரங்கி அமுதுண்டனர். இவ்வகை நாடோறும் உண்பித்து வருகையில் வேற்றூர்க்குச் சென்ற தந்தையார்வர ஒளவை வெறும் பாத்திரத்துடன் வருதல் கண்டு பால் எங்கென, ஒளவையார் சிவமூர்த்தி யமுது செய்தனர் என, வியப்புற்று மறு நாள் பாலைக் கறந்து அனுப்பி யொளித்து நோக்கினர். ஒளவை வேண்டச் சிவ மூர்த்தி சற்றுத்தாமதித்திருத்தல் கண்டு குமரி வஞ்சம் செய்தனள் எனத் தந்தை யடிக்க வருதல்கண்டு சிவமூர்த்த அந்தப் பாலை அமுது செய்து ஒளவையை மார்பிலணைத்தனர். இந்த விங்கத்திற்குக் கொப்பிலங்கமெனப் பெயர். |
கோட்சக்கர் காக்கை | இது இந்து தேசத்துக் காக்கை உருவம் போன்றது. இது இராப் பறவையினத்தைச் சேர்ந்தது. இது காலை மாலைகளில் சத்தமிடும். இதன் அலகு பறவைகளின் அலகு போலாது தசை உதடுபோல் இருக்கிறது. இதன் மூக்கு முகத்தின் முன்புறத்தில் ஆந்தையின் மூக்குப்போல் வளைந்து கூர்மையா யிருக்கிறது, இதன் மீசைமயிர் கீழ்வாய் பக்கம் மடிந்து பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது. |
கோட்டம்பலத்துத் துஞ்சிய சோமான் | கடைச்சங்கமருவிய புலவன். (அசு~று.) |
கோட்டழகிய மணவாளதாசர் | கொல்லிக்காவல் நாசருக்கு ஒரு பெயர். |
கோட்டான் | 1. இது ஆந்தை இனத்திற் பெரிது. இது மரக்கொம்புகளில் தங்கி வாழ்தலால் இப்பெயர் பெற்றது. இதன் காலடி வரையில் இறகுகள் மூடிக்கொண்டிருக்கின்றன. இதன் கண்கள் பெரியவை. இராக்காலங்களில் இதன் கண் ணொளிகண்ட பிராணிகள் திகைத்து நிற்க அவற்றை இரைய கொள்ளும். இவ் வினத்திற்குக் கண்ணொளி மயங்கும் காலத்தில் அவை விரும்பியபோது ஒருவகை ஒளி மார்பிலுண்டாகிறதாம். அவ்வொளியாலவை யிரைதேடுகிற தென்பர். இவை பூச்சி புழுக்களைத் தின்று சீவிக்கும், 2. ஆலமாத்தைக் காண்க. |
கோட்டியூர் நல்லந்தையார் | இது நல்லன் தந்தை நல்லந்தையாரென முடியும், (தொல். எழுத்து 348ல்) ‘துவர’ என்றதனால் முடிக்க பாண்டி நாட்டகத்ததாகிய திருக்கோட்டியூர் என்பது இதுவே. இவர் நெய்தற்றினையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்றிணை 211ம் பாட்டு. |
கோட்டுப்பூ | குங்குமப்பூ, கொன்றைப்பூ, மைக்கொன்றைப்பூ, சண்பகப்பூ, பாதிரிப் பூ, மந்தாரப்பூ, புன்னைப்பூ, மகிழம்பூ, பன் னீர்ப்பூ குருக்கத்திப்பூ செந்தாழம்பூ, முருங்கைப்பூ, அத்திப்பூ, செவ்வகத்திப்பூ, வேப்பம்பூ, மாதுளம்பூ, புளியம்பூ, இலுப்பைப்பூ, வாகைப்பூ, தென்னப்பூ, பனம்பூ, வாழைப்பூ, ஆவரம்பூ, கருஞ்செம்பைப்பூ, செம்பரத்தம்பூ, அலரிப்பூ, செம்பருத்திப்பூ, நந்தியாவட்டப்பூ, துத்திப்பூ, செவ்வந்திப்பூ, தும்பைப்பூ, வேளப்பூ, சிற்றா மரைப்பூ, களாப்பூ முதல்ய (பதா.) |
கோட்டை | 1. (அரண்) இது மலையுங்காடும் நீருமல்லாத அகநாட்டு செய்த அருமதில். இது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முள் முதலியன பதித்த காவற்காடு புறம் சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறிகளும், ஏனைய பொறிகளும், பதணமும், மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவுஞ்சீப்பும் முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற்கோபுரமும், பிற எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட் டது. (தொல்கா) மலையரணும் நில அரணும் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில் போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும், மீதிருந்து கணை சொரியுமிடமும், பிற யந்திரங்களும் அமைந்தனவும், அன்றிக் காட்டாரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம். 2. தன்னையும், தன்பொருள் முதலிய வற்றையும் காத்துக்கொள்ளும் அரசன், பன்னிரண்டு முழமுள்ள கற்கோட்டையையாவது, மிகுந்த ஆழமுள்ள ஜலக்கோட்டையையாவது, ஒரு யோசனை விசாலம் உள்ளதாய்ப் பிராணிகளால் சஞ்சரிக்கப்படும் வனக்கோட்டையையாவது சதுரங்கபலக் கோட்டையையாவது, மலைக் கோட்டையையாவது, சுற்றிலும் நீரற்ற பூமிக் கோட்டையையாவது ஏற் படுத்தி அதனுள் வாள் முதலிய ஆயுதங்கள், மிக்க பொருள், தானியங்கள், குதிரை, யானை, பிராமணர், யந்திரம் அறிந்தவன், புல், வைக்கோல், தண்ணீர் முதலியவைகளை அமைத்தல் வேண்டும். இவ்வகை அரணுள்ள கோட்டைமீது நிற்கின்ற ஒரு வில்லாளி தன்னை எதிர்க்க வந்த நூறு சத் துருக்களோடும், போரிடவல்லவன் ஆவனாதலால் அரசன் அரணைக் கட்டல் வேண்டும். |
கோட்டைவேளாளர் | இவர்கள் திருநெல்வேலி ஜில்லா ஸ்ரீவைகுண்டத்திலுள்ள மண்கோட்டை வாசிககள். இவர்கள் தங்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தஞ்செய்வர். பெண்கயை பிறர்காணவிடார். மற்ற வேளாளருடன் இவர்களுக்குக் கலப்பில்லை. இவர்கள் வைகை நதிக்கரைலிருந்து வந்தவர்கள், இவர்கள் இருக்கும் இடத்திற்கு அந்நியன் போகக்கூடாது. 7 வயதிற்கு மேற்பட்ட பெண் கோட்டையைவிட்டுப் போகக்கூடாது கல்யாணமானபின் மணமகனும் சுற்றத்தவரும் தவிர மற்றவர்கள் பெண்களைக் கண்ணிலும் காணமுடியாது. இவர்கள் தலைவன் கோட்டைப் பிள்ளை (தர்ஸ்டன்.) |
கோட்புலி நாயனார் | சோழநாட்டு நாட்டியத்தான் குடிவேளாளர். சோழனிடத்தில் சேனாபதியாயிருந்து தமக்கு வரும் வருவாயெல்லாம் சிவாலயங்களுக்குச் சம்பா நெல் வாங்கிக் கூடு கட்டிவைத்து அரசனே வலால் பகைவர்மீது யுத்தத்திற்குச் செல்லுகையில் சுற்றத்தாரை யழைத்து நெற் கூட்டைக் காட்டித் தொடாதிருக்கச் சிவாஞ்ஞையிட்டு யுத்தஞ்செய்து வெற்றிகொண்டு திரும்பினர். இவ்வகை இவர்செல்லவும் பஞ்சம் வந்தது. சுற்றத்தார் நாயனார் திரும்புமுன் நாம் கூட்டில் நெல்லைச் சேர்த்து விடுவோமென்ற எண்ணத்தால் கட்டளை கடந்து நெல்லெடுத்துப் பஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர். இவற்றையறிந்த நாயனார் திரும்பி யெதிர்கொண்ட சுற்றத்தவர்க்குப் பரிசு தருகிறேனென்று வீட்டில் வருவித்துக் கோட்புலியெனுஞ் சேவகனை வாயிற்காவலாக்கி அனைவரையும் கொலை புரிந்தனர். கடைசியில் ஒரு சிசு நிற்க அதனையும் கொல்ல எடுக்கையில் காவலாளி இது குற்றமற்றது கொலைசெய்யலாகாதென இது அந்த அன்னமுண்டதனாலாகிய பாலுண்டது எனக் கொலை புரிந்தனர். சிவமூர்த்தி அன்பின் உறுதிக்குத் தரிசனந் தந்து முத்தி அளித்தனர். (பெ~புராணம்.) |
கோட்புலியார் | சிங்கடி வனப்பகை யென்னும் தம்மிரண்டு பெண்களைச் சுந்தராமூர்த்தி சுவாமிகளுக்கு அடிமையாகக் கொடுத்த சிவனடியவர். கோட்புலி நாயனாரிவரின் வேருதல் வேண்டுமென நினைக்கின்றேன். அவர் சரித்திரத்தில் சுந்தரமூர்த்திகளைக் குறித்துச் சொல்லாததினாலும் திருத்தொண்டத்தொகையில் துதித்திருத்தலானும் என்க. |
கோணங்கி | 1. தேவாங்கசாதியில் ஒரு வகை, 2. விஷ்ணு மூர்த்தி சிவனையெண்ணித் தவமியற்றிச் சக்கரம் பெற்று அச்சக்கரத்தைத் திருவடியில் வைத்து வணங்குகையில் தலைமாலையிலொன்று அச்சக்கரத்தைக் கவ்விக்கொண்டு இவர் இழுக்கவும் அது தரவில்லை. பின் விஷ்ணு சிவபெருமானிடம் கூறச் சிவபெருமான் அதற்கு நகைவரச் செய்தால் சக்கரம் கீழ்விழுமென அவ்வாறே கோணங்கிக் கூத்தாடிய உருவம். (காஞ்சிபுரா.) |
கோணமா நெடுங்கோட்டனார் | இவரைப் பற்றி யாதும் விளங்கவில்லை, இவர் மருதத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். பரத்தையிற் பிரிந்த தலைமகன் தனக்குப் புதல்வன் பிறந்தானென்பதறிந்து பகலில் வரவெள்கி இரவிற் கள்வன் போல வந்தானென்று வியக்குமாறு கூறாநிற்பர்; இவர் பாடியது, நற். 40ம் பாட்டு. |
கோணாதித்தியன் | ஒரு சூரியன். (பிரமபுராணம்.) |
கோதகி | ஒரு நதி |
கோதண்டக்கோன் | இவனொரு இடைச் சிறுவன். ஒரு நகரத்திருந்த மதிலில் ஏறி அவ்விடமிருந்த கல்லை அசைக்க அவ்விடம் புதையலிருக்கக் கண்டு அந்நிலத்தவரிடத்தில் புதையலைச் சேர்த்தவன். |
கோதமனார் | இவர் தலைச்சங்கத்திலிருந்து தழிழ் ஆராய்ந்த புலவருள் ஒருவர். இவர் பாரதகாலத்தவர். பாரதகாலத்துத் தருமபுத்திரனை “அறவோன் மகனே” எனத் தமிழ்ப்பாடலால் பாடிவிளித்தவர். இப்பாடல் புறநானூற்றில் 366 ஆம் செய்யுளாகச் சிதைந்துள்ளது, பதிற்றுப்பத்தில் மூன்றாம்பத்தாகிய பாலையைப் பாடினவராதல் வேண்டும். பாலையைப் பாடியதால் பாலைக் கோதமனார் எனப் பெயர் கூறப்பட்டது போலும். பதிற்றுப்பத்தில் இவராற் புகழப்பட்டவன் பல்யானைச் செங்கெழுகுட்டு வன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு இளையான். இவ்விருவரும் உதியஞ்சேரலின் குமரர்கள். உதியஞ்சேரல் பாண்டவர் சேனைக்குப் பாரதப்போரில் உணவளித்தவன் ஆதலாலவர்களும் கோத மனாரும் சமகாலத்தவராதலின் முதலிற் கூறிய கோதமனாரே பாலைக்கௌதமனாரெனக் கூறல் வழுவாகாது. பாலைக் கௌதமனார் பல்யானைச் செங்கெழுகுட்டுவனைப் பாடிச் சுவர்க்கம் பெற்றார். இதனை “நான்மறையாளன் செய்யுட்கொண்டு மேனிலையுலகம் விடுத்தோனாயினும்” எனச் சிலப்பதிகாரம் கூறும். |
கோதமன் | இவர் வாக்கு நேத்ரம் இருள் முதலியவற்றைத் தமது நேத்திரத்தால் அடக்கினதால் இப்பெயர் பெற்றனர். |
கோதமை | ஒரு பார்ப்பினி, சார்ங்கலன் என்பவனுடைய தாய் (மணிமேகலை) 2. நந்தகோபன் மனைவி. 3. இவள் ஒரு வேதியன் குமரி, இவள் உத்யானவனத்தில் உலாவித் திரிகையில் அச்வதேவ குமரன் இவளை வலுவிற் புணர இவளிடம் ஒரு புத்ரன் பிறந்த னன். இப்பிள்ளையை யெடுத்துக்கொண்டு இவள் வீடுசெல்ல இவளை வளர்த்தோரிவளைக் காட்டிற்ககற்றினர். இதனால் இவள் காடுசென்று தவம்புரிந்து கோதாவிரிந்தி யுருவடைந்தனள். இக்குமரன் வைத்தியன் ஆயினன். (பிரம்ம கைவர்த்தம்.) |
கோதிராத்ர விரதம் | இது புரட்டாசி சுக்லபக்ஷத்யோதசியில் அநுஷ்டிப்பது |
கோதுமை | இது எல்லாத் தானியங்களிலும் விலையுயர்ந்தது. இதன் மாவினால் அப்பங்கள் செய்யப்படுகின்றன. வட மேல்நாடுகளுக்கு இதுவே முக்ய ஆகாரம், இதன் தவிட்டினால் ரொட்டிகள் செய்யப் படுகின்றன. இது பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, தென் ரஷ்யா, பிரிடிஷ் தீவுகள், ஆஸ்திரேலியா, யுனைடெட்ஸ்டேட்ஸ், கனடா, ஈஜிப்ட், வடஆப்ரிகா முதலிய பிரதேசங்களில் விளைகிறது. இதன் தவிட்டினை ஆடுமாடுகளுக்கு ஆகாரமாகப் பயன்படுத்துகின்றனர். |
கோதை | ஆண்டாளைக்காண்க. |
கோதைமலை | கோதைமுனிவர் தவஞ்செய்த மலை. |
கோதைமுனிவர் | திருச்செங்கோட்டில் தவஞ் செய்து சித்திபெற்ற முனிவர். இவர் தவஞ்செய்த மலை கோதைமலை, |
கோத்திரவான் | கிருஷ்ண மூர்த்திக்கு இலக்குமணையிடமுதித்த குமரன். இவன் தம்பியர் ஒன்பதின்மர். |
கோத்ரம் | 1. இது இருடிகளைத் தம் சந்ததிக்கு முதல்வராகக்கொண்ட பிரிவு. அது ஒரு ரிஷிமுதல் இரண்டு மூன்று முதலியவரையும் முதலாகவுடையது. 2. உச்சயர்கோத்ரம், நீச்சயர்கோத்ரம். |
கோனாடு | சோழனாட்டின் உள்நாட்டுள் ஒன்று (புற. நா.) |
கோனார் | இடையரில் ஒருவகையர். |
கோனுட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் | ஒரு புலவர், இவராற் பாடப் பட்டோர் சேரமான் குட்டுவன் கோதை முதலியோர். (புற. நா.) |
கோனேரியப்ப முதலியார் | ஸ்காந்த மகாபுராணத்தில் உபதேசகாண்டத்தைத் தமிழாக்கிய புலவர். தொண்டமண்டலத்திலே காஞ்சிமாநகரின் கண்ணே ஏறக்குறைய ஆயிரத்தொருநூறு வருடங்களுக்கு முன்னே செங்குந்தர் மரபில் அவதரித்தவர். |
கோபஞ்சகம் | இந்திரத்துய்ம்மன் கோதானஞ் செய்த நீர், மடுவாய் நின்ற நிலை. |
கோபணராயர் | தேசிகர் காலத்துத் துருக்கர் திருவரங்கத்தில் தொந் தரைசெய்யப் பெருமாளைச் செஞ்சியில் எழுந்தருளச் செய்வித்துத் துருக்கருடன் சண்டைசெய்து வென்று பெருமாளைத் திருவரங்கத்தில் பிரதிட்டித்தவர். |
கோபதி | 1. வருணன் சேவகன், கிருஷ்ணனால் செயிக்கப்பட்டவன், 2. ஒரு அக்நி. |
கோபத்தாலான (8) துக்கங்கள் | கோள், துணிவு, துரோகம், பொறாமை, பிறர் குணத்தைச் சகியாமை, ஒருவன் பொருளை அபகரித்தல், காரண மின்றி அடித்தல், திட்டுதல் ஆக 8. (மது.) |
கோபத்ம விரதம் | ஆடி மீ” சுக்ல பக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிக்கப் படுவது. பசுக்கள் சுட்டுமிடத்தில் கோமயத்தால் மெழுகிட்டுப் பச்சரிசி மாவில் (33) இதழ்க்கமலம் எழுதிப் பஞ்சவர்ணத்தால் சோபிக்கச் செய்து பூசித்து அதன் மத்தியில் சர்வதோபத்ர மண்டலத்தில் விஷ்ணு பிரதிமை பொன்னால் செய்வித்து விதிப்படி பூசித்து ஹோமஞ் செய்து கன்றுடன் கூடிய பசுவினை ஆசார்யருக்குத் தானஞ் செய்து வேதியர்க்கு அன்ன மளிப்பது. இதை அநுஷ்டிப்போர் சர்வகாபயங்களையும் அடைவர், |
கோபராஷ்டிரம் | கொங்கணத்திற்குத் தெற்கிலுள்ள தேசம். |
கோபருவதம் | நந்திதேவராலும், சத்தியாலும் பூசிக்கப்பட்ட தலம், விருத்தாசலத்தருகிலுள்ளது. |
கோபாநன் | தூர்வசு பேரன். |
கோபாலகன் | இவன் பிரச்சோதனன் பட்டத்துத் தேவிமாருள் ஒருத்தியின் புதல்வன், வாசவதத்தையினுடைய சகோதரனல்லன் உதயணனுடைய விரோதிகளாதிய இருபதின்மரை இவன் வென்றவன். (பெ~கதை) |
கோபாலகிருஷ்ணதாசன் | எம்பிரான் சதகம்பாடிய புலவன், இடையன். |
கோபாலன் | ஒரு பார்தவீரன். |
கோபிகைகள் | 1. இவர்கள் திருமாலை மணக்க எண்ணிய இயக்கியர் பதினாறாயிரத்தொரு நூற்றுவர். தாருகவனத்து ருஷிகள் மோகினி யுருக்கொண்ட விஷ்ணுவுடன் ரமிக்கத் திருமாலின் அனுக்கிரகத்தால் இவ்வுருக் கொண்டனர் என்பர். பூர்வம் கிருஷ்ணன் பதினாறாயிரம் கோபிகைகளுடன் ஜலக்கிரீடை செய்யும்போது அவ்விடம் அதி சௌந்தர்ய முள்ளவனும் கிருஷ்ணமூர்த்தியின் குமரனுமாகிய சாம்பன் வந்தனன், இந்தக் கோபிகைகள் அவனைக் கண்டு மனம் சலித்ததைக் கிருஷ்ணனறிந்து நீங்கள் என் முன் வேறொருவனை நினைத்தது பற்றிக் கள்ளரிடம் அகப்படுக என்று சாபந் தந்தனன், பிறகு அவர்கள் வேண்டக்கண்ணன் அருள் சுரந்து தாலப்பியமுனிவர் அநுக்கிரகத்தால் மீள்வீர் என்று சொல்லினன். அவ்வாறே யாதவவம்ச அழிவின் கடைசியில் அருச்சுநன் இவர்களை யழைத்துக் கொண்டு போகையில் கள்ளர் பலர் வந்து அருச்சுனனை வென்று அந்தப் பெண்களைத் தம் வசமாக்கினர். இவ்வகையிருக்கையில், ஒருநாள் தாலப்பிய முனிவர் கோபிகைகளிடஞ் சென்றனர். கோபிகைகள் தங்களுக்குக் கிருஷ்ணன் கூறிய சாபமும் தங்களுக்கு நேரிட்ட ஆபத்தினையும் அவர்க்குக் கூறித் தங்களைக் காக்க வேண்டினர். முனிவர் அந்தப் பெண்களை நோக்கி நீங்கள் பூர்வசன்மத்தில் அப்சரசுக்கள், ஒருநாள் நாரதமுனிவர் நீங்கள் விளையாடும் இடம் வந்தனர். அவர்க்கு நீங்கள் மரியாதை செய்யாமல் எங்களுக்கு நாராயணன் நாயகன் ஆவானோ என, நாரதன் நீங்கள் பூமியிற் பிறந்து கண்ணனாகிய நாராயணன் தேவியர் ஆவீர் ஆயினும் எனக்கு மரியாதை செய்யாததனால் கள்ளரிடம் அகப்படுவீர் என்று சபித்தனர். ஆதலால் இது உங்களுக்கு நீங்க அனந்த சயனவிரதம் நோற்க எனக்கூறிச் சென்றனர். கோபிகைகள் அவ்வாறு நோற்று வீடுபெற்றனர் 2. இவர்கள் சுருதி கோபிகைகள் எனவும், ருஷி கோபிகைகள் எனவும், மைதில்சோபிகைகள் எனவும், கௌசல கோபிகைகள் எனவும், அயோத்யா கோபிகைகள் எனவும் பலவகையராவர். இவர்களுள் சுருதி கோபிகைகள் பாத்ம கற்பத்தில் வேத இருக்குக்கள் பாற்கடவடைந்து விஷ்ணுவைத் துதிக்க அவர் பிரத்தியக்ஷமாய் என்ன வேண்டுமென்ன உமது உண்மை உருவைத் தரிசிக்க வேண்டுமென்றனர். அவர்களின் வேண்டு கோளின்படி விஷ்ணு மூர்த்தி பாதையுடனும் கோபிகைகளுடன் ஜகன் மோகனாஸ்வ ரூபமாய்த் தரிசனம் தந்தனர் இதைக்கண்ட சுருதிகள் நாங்களும் இவ்வின்பத்தை அநுபவிக்க விரும்புகிறோமென்ன அவ்வகை யுடன்பட்டு நீங்கள் சுவேதவராச கற்பத்தில் துவாரகையில் பிறப்பீர், அவ் விடம் நாம் உமக்கு இவ்வாநந்தம் தருகிறோமென்றபடி துவாரகையில் பிறந்து கண்ணனுடன் விளையாடினவர்கள். இச்சுருதி கோபிகைகளிடம் கண்ணன் ஒரு நாள் தாமதித்துவர ஏன் தாமதப்பட்டீர் என எமதாசிரியராகிய துருவாசரைக் காணச் சென்றதால் காலதாமதம் ஆயிற்று என, நாங்களும் அவரைத் தரிசிக்க விரும்புகிறோ மெனக் கண்ணன் சொற்படி அவரிடம் அடைகையில் யமுனை பெருகக்கண்டு தியங்கிநின்று கண் ணன் சொற்படி நித்ய பிரமசாரி வழி விடச்சொன்னான் என்று யமுனையிடங் கூறி யாற்றைக்கடந்து சென்று துருவாசரைத் தரிசித்தனர். இருடி கோபிகைகள் இராமன் வனமேகிய காலத்து அவ்விடமிருந்த இருடிகளுக்கு மானசராகிய விஷ்ணுமூர்த்தம் மனதில் மறைய அவர்கள் திடுக்கிட்டு எதிரில் இராமனைத் தரிசித்துத் துதிக்க இராமன் என்ன வேண்டும் என்னச் சீதையைப் போல உமக்குத் தேவியராக வேண்டுமென்ன அவ்வாறுகுக என வரந்தந்தனர். அவ்வாறே வங்க தேசத்து இருந்த மங்களன் என்னும் இடையனுக்கிருந்த (5,000) தேவியர்க் குப் பல குமரிகளாய்ப் பிறந்தனர். இவர்கள் பிறந்தவுடன் தந்தைக்குச் செல்வஞ் குறையச் சயன் என்னும் அரசன் இவனிடம் வருதல் கண்டு கூறி அச்சயனால் இவர்களை நந்தனிடம் அனுப்ப இவர்கள் கண்ணன் மேய்க்கும் மாடுகளின் சாணமெடுத்துக் காளிந்தியுபாசனையால் ஒரு நாள் கண்ணன் தங்களைக் கூடக்களித்தனர். மைதில கோபிகைகள் இராமன் சீதையை மணங்கொள்ளச் செல்லுகையில் அவ்விடமிருந்த பெண்கள் மோகித்து இராமனுக்குக் கூற இராமன் துவாபா முகத்தில் உம்மைக் கூடுவேன் என்றனர். அவ்வாறே இவர்கள் நவருந்தனர் ஒன்பதின்மர் வீட்டிலும் பிறந்து யமுனைக் கரையில் காத்தியாயினிவிரதம் அநுட்டித்து வந்தனர். அக்காலையில் கண்ணன் பிரசன்னராய் இவர்கள் சேலையை யெடுத்து மறைத்தனர். கௌசல கோபிகைகள் இராமன் கோசல தேசத்தின் வழிச்செல்லுகையில் தம்மை மனதில் நினைத்து மோகித்த பெண்களுக்குத் தாமும் மனத்தால் கிருஷ்ணாவதாரத்தில் கூடுகி றேனென்று வரந்தந்தனர்; அவ்வாறே இவர்கள் உபநந்தனர் வீட்டில் பிறந்து கிருஷ்ணனை மனதில் நினைத்திருந்தனர். இவர்களது தாய் தந்தையர்கள் இவர்களுக்கு இடையரை மணம் புணர்த்தினராயினும் இவர்கள் கண்ணனை மனதில் நினைந்தவராய் அவனைக் கலந்து விளை யாடி வந்தனர். கண்ணன் செய்த சர்வ லீலைகளும் இவர்களிடத்திலே யாம். அபோரயாகோபிகைகள் இராமன் சீதையை மணந்து வரக்கண்ட அயோத்திநாட்டுப் பெண்கள் இராமனைக் கண்டு மோகிக்க அவர்க்கிசைந்து கிருஷ்ணாவதாரத்தில் உம்மைக் கூடுகிறேன் என அசரீரியால் சொல்லித்தனர். அவ்வாறே இவர்கள் சிந்துதேசத்தில் சம்பகாநகரத்தில் விமலன் எனும் அரசனுக்குப் பெண்களாகப் பிறந்து கண்ணனுடன் கிரீடித்தனர், கோபாகோபிகை; கோலோகத்திலிருந்து சந்திரனுக்குச் சோபையைத் தரச்சென்றவள். பிரபாகோபிகை; கோலோகத்திலிருந்து சூரியனுக்குப் பிரபையைத் தரச் சூர்யனிடஞ் சென்றவள். சாந்தீகோபிகை; கிருஷ்ணன் சரீரத்தில் லீனமானவள், க்ஷமாகோபிகை; கோலோகம் விட்டுப் பூமியடைந்தவள். இந்நால்வகைக் கோபியரும் கிருஷ்ணன் சகதிகள். (பிரம்மகைவர்த்தம்). |
கோபிசந்தராஜன் | உத்தரகண்டத்தில் கௌடபங்கால் என்னும் ராஜ்யத்தி லுள்ள காஞ்சனபுரிக்கு அரசனாகிய திரிலோசந்து என்பவன் ஒருவன் இருந்தான். அவன் பாரி மைனாவதி. அவன் தவத்தால் பிறந்த குமரன் கோபிசந்தன். இந்தக் கோபிசந்தன் தந்தைக்குப் பிறகு பட்டமேற்று அரசாளுங்காலத்தில் ஆயிரத்து இரு நூறு மனைவிகளை விவாகஞ்செய்தும் ஆயிரத்து அறுறூறு போக மாதர்களை வைத்துக்கொண்டும் விஷயானந்தத்தை அனுபவித்துவந்தான். இவன் தாயாகிய மைனாவதி ஒருநாள் புருஷன் நீங்கிய துக்கத்தினால் மேன்மாடத்திற் சென்று நான்குதிசையும் பார்க்கும்போது ஜாலந்திரா என்னும் மகாயோகி தீக்சாகக் காட்டில் சென்று விறகுகளைப்பொறுக்கிக் கட்டித் தலையின் மேல் வைத்து வழிநோக்கி வருகையில் இவரது தேகநிழல் பூமியில் படா திருத்தலாலும் விறகுச்சுமை தலைக்கு மேல் முழத்திலிருத்தலாலும் மைனாவதி கண்டு இவர் மானிடரல்லர் என்று மான முதலியவைகளை விட்டு அவரிருக்கும் மடத்திற்சென்று அவரை வணங்கி உபதேசம் பெற்று மீண்டும் மனையடைந்து சுவானுபவத்தி லிருந்தனள், கோபிசந்தராசன் ஒருநாள் தன் முதல் மனைவியிடம் வர அவள் இவனுக்கு உபசாரமுதலிய செய்து உன் தாயை ஒரு சந்நியாசி தன் வசமாக்கிக்கொண்டான். அவள் இடை விடாது அவனிடம் போவது நமக்குப் பழிப்பல்லவோ என்றதைக் கேட்டு அதை அறிவோமென்று மந்திரியை யழைத்து அந்த யோகியை இரவிற்குத் தன்னிடம் அழைத்துவரக் கட்டளையிட்டனன். அவ்வாறே மந்திரி சென்று யோகியை வணங்கி அரசன் கட்டளையைக் கூற யோகியர் அவ்வாறு வந்தனர். அரசன் எதிர்கொண்டழைத்து உபசரித்து யோகி துயில்கையில் கிணற்றிலிட்டு மூடச்செய்தனன். யோகியர் கிணற்று நீரின்மேல் தியானத்திலிருந்தனர். இவரது சீடர் பலருள் உயர்ந்தவராகிய கானேபா என்போர் தம்மோடொத்த எழுநூற்று வருடன் எங்குந் தேடாநின்றனர். மைனாவதி தனது ஆசிரியரைக் காணாதவளாய் மிக வருந்தியருக்கும் நாள்களில் ஓர்நாள் தனது புதல்வன் சந்தன முதலிய வாசனைத் திரவியங்களை அணிந்து உலாவிக் கொண்டிருத்தலைக் கண்டு இவ்வகைக் களிப்புடன் இருக்குமிவன் யமன்கையில் பட்டு மாள்வனே என்னும் வருத்தத்தால் மேல் மாளிகையினின்றும் அழும் கண்ணிரானது இவன்மேல் துளிப்ப இந்நீர் யார் தெளித்தாரென்று மேலே பார்க்க அது தனது தாயின் கண்ணீரென்றறிந்து இவளை யழுதற்குக் காரணமென்னவென்று கேட்க உன் தந்தை முதலிய முன்னோர் உன்னைப்போலவே போகங்களை அனுபவித்து யமன்கையிற்பட்டு மாண்டனர். அவ்வாறே நீயும் யமன் கைப்பட்டு மாள்வாயென்று வருந்தி அழுகின்றேன் என்றனள். அதைக்கேட்ட அரசன் அவ்வாறு வருந்தாவகை முத்திதர வல்லவர் யாவரென மைனாவதி சாலந்திரர் என, அரசன் கேட்டு ஒன்றுங்கூறாது வீட்டில் வந்துண்டு மனைவி சொற்கேட்டுக் கோபத்தால் யோகியரைக் கிணற்றிவிடச் செய்தேனே யென்று வருந்தியிருந்தனன். முன் ஆசாரியனைத் தேடச்சென்ற கானேபா பலதேசங்களிலும் தேடிப் பரதேச மடைந்து மச்சேந்திரரைத் தேடிவந்து கோரக்கர் இருப்பிடமடைந்து மகிழ்வுடனிருக்கையில் கோரக்கர் இவரைப் பார்த்துக் கோபிசந்தன் உன் குருநாதனைக் கிணற்றிடைத் தள்ளிப் பன்னிரண்டு வருடமாயிற்று; அதை நோக்காமல் உலக மெல்லாம் தேடுகின்றாய் அதனாற் பயனென்ன என்று கூறினர். இதனையறிந்த கானேபா மைனாவதிக்கு ஆசிரியனிருப்பிடங்கூறி அனுப்பித் தானும் பின் சென்றனர். கானேபா தம்மூர் அடைந்தசெய்தியை மைனாவதி மகனுக் கறிவித்து அவரைச் சரண்புகும்படி உடனழைத்துச் சென்றனள், அரசன் கானேபாவைச் சாணடையக் கானேபா நீ யாரென அரசன் கோபிசந்தன் என்றனன். இதைக்கேட்ட கானேபா மிக்க கோபமுடையவராய்க் கள்ளை அமுதென்பது போல இப்பெயர் உனக்காரிட்டார் ஆசானைக் கிணற்றில் தள்ளியப்பாவி சந்திரசூரிய ருள்ளளவும் நரகத்தைத் தருகின்றகாரியத்தைச் செய்தாய் எனக் கோபிசந்தன் நடுங்கிப் பிழைபொறுக்க வேண்டினன். அச்சமயத்தில் மைனாவதி தன் பிள்ளையைப் பிடித்துக் கானேபாவிடத்தில் கொடுத்து அபயங் கேட்டனள், பின் கோபிசந்தன் கானேபாவைப் பூசித்து உபசரிக்கக் கானேபா ஆசானை எந்தக் கிணற் றில் தள்ளினாயென அரசன் கிணற்றைக் காட்டிப் பயந்து நிற்கப் பயப்படாதை வெள்ளியினாலும் பொன்னினாலும் உன் வடிவத்தை யொத்த உருவைச் செய்விக்க என உரைக்க அரசன் அப்படியே செய் வித்துக் கிணற்றருகில் வந்து மேலிருந்தவைகளை எடுப்பித்தான். அங்குச் சாலர்திரர் சந்திரன் போல் விளங்கியிருந்தனர். சீடர்கள் கண்டுகளிக்கக் கானேபா கிணற்றருகில் சென்று அரசன் என்னால் அபயம் பெற்றனன். நீர் அவனுக்குச் சாபம் கொடுப்பீரேல் அச்சாபம் அவன் உருவைப்போல் செய்திருக்கும் பிரதிமைகளைச் சார்தல்வேண்டும் என வரம் வேண்டினன். பின் கானேபா கிணற்றருகில் பிரதிமைகளை நிறுத்தி ஜாலந்திரரை நல் வரவு கூறுகவென அவ்வாறே அரசன்கூற யோகியர் நீ யாரென அரசன் கோபிசந்தன் என்றனன். ஜாலந்திரர் நீ சாம்பராகவெனச் சபித்தனர். இச்சாபத்தால் அப்பிரதிமைகள் சாம்பாராய் அரசன் துன்பமிலா திருந்தனன். பின் அரசன் வேண்டக் கிணற்றிலிருந்தோர் நீ யாரென நான் மைனாவதி மைந்தனென ஜாலந்திரர் க்ஷேமமாயிருக்க வென்றனர். பின் யோகியரை வெளியே வரச்செய்ய மைனாவதி பாதபூசை செய்தனள், கோபிசந்தனும் யோகியரை வணங்கி உம்முடைய சாம்பிரதாயம் எனக்கு அருள்கவென யோகியர் அவ்வாறாகுக வென்றனர். பின் அரசன் ராஜ்யந் துறந்து தாய்பாலடைந்து அவளை வணங்கத் தாய் மகனை வாழ்த்தி உன் குலமீடேறும் கொள்கை கொண்டனை; இது முதல் பல தலங்களும் யாத்தி ரைசெய்து பனிரண்டு வருடத்திற் கொருமுறை என்னை யடைகவென் றனன். அரசன் பலதேசங்களும் யாத்திரை செய்து தன் தங்கை இருப்பிடமடைந்து தவக்கோலத்துடன் அவ்விடம் பிக்ஷை செய்து வரு கையில் தங்கையின் தோழி அரசனது வடிவத்தைக் கண்டு ஐயுற்றவளாய்த் தமது நாயகிக்குக் கூறினள். தங்கைகண்டு வரும் தினாளாய் நிற்க அவளைத் தேற்றிப் பனிரண்டாண்டு கழிந்தபின் தாயைச் சேவித்து அவளிட்ட பாற்சோறுண்டு நீங்கினன். |
கோபிதாரத்துவசன் | இவனிடம் அகத்தியர் முதலிய முனிவர்வர அரசன் இவர்களை மரியாதை செய்யாததினால் அக்கூட்டத்தவருள் ஒருவராகிய பிரமிட்டன் என்பவராம் குட்டநோய்கொள்ளச் சபிக்கப் பட்டவன். |
கோபிபாலைவனம் | இது மத்ய ஆசியாவில் உள்ள ஒரு பெரிய பாலைவனம், இதன் நடுவில் ஷாமு என்னும் மணல் வெளி உண்டு, அதனை மணற்கடல் என் பர். இதனீளம் 1200 மைல், அகலம் 250 மைல். இன்னும் இந்தியா அமெரிக்கா முதலிய இடங்களில் மலைச்சரிவுக ளையும் நதிகளையுஞ் சார்ந்து பல வெளிகளிருக்கின்றன. |
கோபிரதாரம் | ஒரு புண்ணிய க்ஷேத்திரம். A place of pilgrimage on the bank of the Saraju at Fyzabad. |
கோபிலகோப்பிரளய மகாமுனி | இவர் இராசமன்னார்கோயிலில் திருமால் அருள் பெற்றவர். |
கோபிலமகாமுனி | ஒரு இருடி, இவாது பாரி, விசித்திரகன் என்னும் காந்தருவனை ஆயிரம் வருஷம் மீனாக இருக்கச் சபித்தனள். |
கோபிலர் | சத்தியவிரதனைக் காண்க. |
கோப்பியரேக்கம் | காசியில் பசுவினால் பூசிக்கப்பட்ட க்ஷேத்ரம். |
கோப்பிராமணன் | சுரபியினிடம் ஆதியில் பிறந்த பிராமணன். (பார~அநு) |
கோப்பிலிங்கம் | கோட் கூச்சவ்வையைக் காண்க. |
கோப்பெருஞ்சோழன் | ஒரு சோழன், இவன்காலத்துப் பிசிராந்தையார், கண்ணகனார் முதலிய புலவர்கள் இருந்தனர். இவன் தன்னாடுதுறந்து வடக்கிருந்தது கண்டு இரங்கிக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநா தனாரிவனைப் பாடினர். இவனது நண்பர் பொத்தியார், இவர் இச்சோழனது பிரிவு ஆற்றாது நடுக்கல் கண்டு இடங்கேட்டு உயிர் நீத்தனர். இவன் தன்னிரண்டு குமாருடன் பகை கொள்ளப் புல்லாற்றூர் எயிற்றியனார் இவனைச் சமாதானஞ்செய்து பகைநீக்கினர். (புற~நா.) (குறு~தொ.) |
கோப்பெருந்தேவி | நெடுஞ்செழியன் மனைவி. தன் கணவன், கண்ணகையிட்ட வழக்கிற்கு இழுக்கி யுயிர்விட்டதறிந்து வுயிர்விட்ட கற்புடையாள். (சிலப்பதிகாரம்.) |
கோமடத்தசினியாழ்வான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். உடையவர்க்குத் திருக்கைச்செம்பும் ஸ்ரீபாதாக்ஷையும் தாங்குபவர். (குருபரம்பரை) |
கோமடத்துத் திருவிண்ணகரப்பன் | உய்யக்கொண்டார் திருவடிசம்பந்தி, |
கோமட்டிகள் | இவர்கள் சென்னை ராஜதானியிலுள்ள பல பாகங்களில் பரவிய வர்த்தக சாதியர். இந்தக் கோமட்டியென்னுஞ் சொற்கரபணம் பலவிதமாக கூறுகின்றனர். கோமதி: நரிபோல் தந்திரம் வாய்ந்தவர் எனவும், பசுக்களைக் காத்தலினால் வந்த பெயர் எனவும், பசுப்போன்ற அறிவினர் எனவும், இவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவஞ்செய்ய அவர் இவர்களுக்குத் தம் உலகம் தந்தனர். இவர்களில்லாததால் பூமி துன்பமடைய விஷ்ணு பூலோகம் செல்லக் கூறினர். இவர்கள் அதை மறுத்தனர். விஷ்ணு சிவனிடமிவர்கள் செய்திகூறச் சிவன் ஒரு பசுக்கொணர்ந்து அதின் காதின் வழிச் செல்கவென அவ்வாறேயிவர்கள் சென்று அதின் வயிற்றில் பெரிய பட்டணாதிகளைக் கண்டு களித்து அவ்விடத்தில் வசிக்க வேண்டினர். அவ்வாறிருக்கையில் பெருந்தீ தோன்றி யிவர்களைப் பயப்படுத்தியது. இவர்கள் பழையிடமே போகச் சிவபெருமானை வேண்ட இவர்கள் பூமியிலேயிருப்பதாக வாக்களித்துப் பசுவின் வயிற்றிலிருந்து நீங்கினர். ஆதலால் இவர்களுக்குக் கோமட்டி கள் என்று பெயர் எனவும், இவர்கள் சுற்றத்தவரின் முன்னோர் பசுத்தொழுவக்திருக்கையில் கருப்பிணியாகிய தங்கள் வம்சத்தவர்களைப் பசு முட்டியதால் கோமட்டி எனவும், கோமட்டிகள் கோதாவரி நதியாகிய கோமதியாற்றை யடுத்த பூமியில் வசித்தவர்களானதால் கோமட்டிகள் எனவும் கூறுவர். இவர்கள் கவரவர் கலிங்கர் என்றும் இரண்டு பிரிவினராகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் குலத்திற் பிறந்த கன்னிகையின் கற்பின் கௌரவத்தைக் காத்ததால் கவரவர் எனப்பட்டனர். பின்னும் இவர்கள் கௌரியை வணங்குவோராதலால் கவரவர் என்பர். இவர்கள் பெனுகொண்டா, வேகிகாடு, திரைவர்ணிகர், லிங்கதாரிகள் எனப் பல பிரிவினர். இவர்களின் குல தேவதை கன்னிகாதேவி, அவள் தீப்பாய்ந்தபோது மானத்திற்கஞ்சித் தீப்புகுந்தவர் வேகிகள்; பெதிரி ஓடினவர்கள் பெதிரிகள் எனப்படுவர். கெவேரர் மாம்ச பக்ஷணிகள் அல்லர், மற்றவர் மாம்சபக்ஷணிகரும் ஆவர். இவர்கள் கோத்திரங்கள் பலவகைப்பட்டிருக்கும். இவர்கள் பதினெட்டுப் பட்டணங்களில் நிலைத்தவர்கள். அப்பட்டணங்களுக்கு முதன்மையானது கோதாவரி ஜில்லாவிலுள்ள பெனுகொண்டா, இதில் நாகரீசுவரர் எனும் சிவாலயமும், ஜகார்த்தன சுவாமியெனும் விஷ்ணுவாலயமும் இருக்கிறது. |
கோமணாண்டி | ஆண்டவேடம் பூண்டு கோமணத்துடன் திரிவோன். |
கோமதி | 1. இமயத்திற் பிறந்து கங்கையிற் கலக்கும் நதி. 2. சிவ சுவாமியின் குமரன், இவன் குமரன் புரிமான். |
கோமந்தபருவதம் | துவாரகைக்கு அருகிலுள்ள ஒரு மலை. கிருஷ்ண பலராம ரிதன்மீதிருக்கையில் சராசந்தனிதனுள் அவ்விருவரும் இருக்கின்றாரென்றெண்ணித் தீயிடப்பட்டது. An Isolated mountain on the northern side of the westernghats. |
கோமலுழான் மகருஷிகோத்ரன் | வணிக கோத்திர முதல்வன், குதிரை வியாபாரஞ் செய்பவன். குதிரைக்காகக் சன்னபுரம் பன்னிரண்டு வருஷத்திற்குமுன் பணங்கொடுத்துக் குத்தகைவாங்கிப் புல் பயி ரிட்டவன். |
கோமளை | குலோத்துங்கனைக் காண்க. |
கோமான் | சித்தூரையாண்ட சூரியவம்சத்து ராஜபுத்ர அரசன். மீவார்தேசத்து புராதன காவியமாகிய கோமான்ரஸா என்னும் காவியத்தால் புகழப்பட்டவன். சித்தூர் இரண்டாமுறை ஹாரூன் ஆல்ரஷீத்தின் குமாரனான மாமூன் என்பவனின் சேனைகளால் தாக்கப்பட்ட பொழுது அவர்களைப் பின்னிடையச்செய்து சேனாதி பதிகளைச் சிறையிட்டவன். இவனுக்குப் பின் பதினாறாவது சந்ததியில் அரசாண்ட சமாசிங்கு என்பவன் ஆட்சியில் சித்தூர் சீர்குலைந்து மகம்மதியருக் குட்பட்டது. |
கோமாயி | இவள் விருத்த வேதியமாது, இவள் பண்டரிபுரத்துப் பெருமாளைத் தரிசிக்க எண்ணிச் செல்லுகையில் வழியில் நதியினைக் கடக்கமாட்டாது கையில் காசு முதலிய இலாமையால் கவன்று இருக் கையில் பெருமாள் படவுவோட்டுபவனைப் போல் முன்னின்று நான் கூலியிலாது அக்கரை சேர்ப்பிக்கிறேனென்று இந்த அம்மையாரைத் தோளிலேற்றிக்கொண்டு அக்கரை சேர்த்தனர். தோள் விட்டிறங்கிய கோமாயி படகாளுக்குக் காலில் நீர்படாமைகண்டு கேட்க நாம் இங்குத் தோணி யோட்டுபவன் அல்லன், பிறப்பெனும் கடல்கடத்தும் தோணியோட்டுபவன் என்றனர். பின் அம்மை தம்மிடமிருந்த மாவைத்தர நாம் எவரிடத்தும் வாங்குதல் இல்லை. இதனைத் துவாதசியில் வேதியர்க்குத் தானஞ்செய்க என்று மறைந்தனர். அம்மை அவ்வாறே பண்டரிபுரஞ் சென்று துவாதசியில் வேதியரைநோக்கி மாவைப் பெறும் வகைகூற எவரும் ஏற்காததுகண்டு வருந்துகையில் பெருமான் மலர் மகளுடன் விருத்தராய் வந்தனர். இவர்களைக் கண்டு களித்த அம்மை மாவைத்தரஅவற்றை அடையாக்கித் தருகவெனக் கேட்டுண்டு களித்து மறைந்தனர். |
கோமுகன் | 1. கற்கனிகை கணவன், குமரர் ரிதுதாமன், சயன். 2. ஒரு தமிழ்க்கவி, 3. இவன் இடவகனுடைய மகன். |
கோமுகி | மணிப்பல்லவத்துள்ள பொய்கை, (மணிமேகலை.) |
கோமுனி | விஷ்ணுவி னவதாரமாய் மேலைச் சிதம்பரத்தில் சிவநடனந் தரிசித்தவர். |
கோமூத்திரி | இது சித்திரக்கவியிலொன்று. இது இரண்டுவரியாக வெழுதி மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசிக்கினும் அதுவேயாவது, (யாப்பு~வி.) |
கோயிற்புராணம் | சிதம்பரமான்மியம் கூறும் நூல். கொற்றவன்குடி உமாபதிசிவா சாரியரா லருளிச் செய்யப்பட்டது. |
கோயிலண்ணர் | பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி. |
கோயிலாழ்வான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.) |
கோரக்கர் | 1. இவர் ஒரு சித்தர், மச்சேந்திரர் மாணாக்கர், காயகற்பஞ் செய்துகொண்டு அல்லமதேவர்முன் தமது வல்லமையைக் காட்ட அல்லமர் அவர்கரத்து வாளொன்று கொடுத்துத் தமது தேகத்தை வெட்டும்படி கூறினர். தேவர் வெட்டிய போது தேகம் ஊறுபடாது வாள் மழுங்கியது. பின் அல்லமர் அந்த வாளை கோரக்கரிடம் கொடுத்துத் தம்மை வெட்டக் கூறினர். அவ்வாறு சித்தர்செய்ய வாள் தேகத்திற்குள் புகுந்து வெளிப்படவும் தேகஞ் சலனமில்லாமல் இருந்தது. இதனைக் கண்டு சித்தர் தேவருக்கு அடிமைப்பட்டனர். 2. இவர் கஞ்சாவை முதல்சரக்காகக் கொண்டமையின் அதற்குக் கோரக்கர் மூலி எனப் பெயர். இவர் செய்த வைத்திய நூல் கோரக்கர் வைப்பு. மச்சேந்திரரைக் காண்க. 3. உமை அன்னமிட அதை உண்ண எண்ணிய தத்தாத்திரியரொடு மாறுகொண்டு பலவுருவாய்ச் சண்டைசெய்யத் தத்தாத்திரியர் மீன் குத்தியாய்த் தொடர இவர் மீனாய்த் தீர்த்தத்திலொளித்தனர். அதற்கு மச்ச தீர்த்தமென்று பெயர், பழனிக் கருகிலுள்ளது. (பழனி~பு.) |
கோரன் | 1, வீரமாயேந்திரத்தின் காவலாளி. 2. ஒரு அசுரன், பகீரதனை வென்று காட்டிற்றூரத்தினவன். இவன் கந்தமூர்த்தியின் வேலால் கொல்லப்பட்டான். 3 சுநந்தன் குமரன், இவன் குமரன் வடகன். 4. ஆங்கீரச புத்திரன். |
கோரல் | ஆட்டிற்கும் மானிற்கும் ஒப்பான மிருகம். ஆட்டைப்போல் குறுகிய கொம்பினையுடையது. இரண்டடி உயரம் உள்ளது. இமயமலைகளில் உள்ளது. (Goral.) |
கோராகும்பார் | தோடோகியெனுமூரில் மனைவியுடன் இவர் வாழ்ந்து கொண்டு வருநாளில் எக்காலத்தும் பெருமாளை இடைவிடாது தியானித்து வருவர். ஒருநாள் மனைவியார் தன் குழந்தையை விட்டுத் தண்ணீர் கொண்டுவரச் செல்ல, நகர்ந்து கொண்டுவந்த குழந்தையை அறியாமல் மண்மிதித்திருந்த கோராகும்பார் மிதித்துக் கொன்றனர். நீர் கொண்டு வந்த மனைவி குழந்தையைக் காணாமல் தேடி மிதிக்கும் மண்ணுடன் குழந்தையிருக்கக் கண்டு கணவனை யிவ்விடம் விட்டு எங்கேயேனும் அகலுகவெனக் கடுஞ்சொல்கூறக் கோராகும்பார் தடியெடுத் தடிக்கப்போக மனைவி பெருமாளாணை யென்னைத் தீண் டேல் என அவ்வகைநின்றனர். மறுநாள் மனைவி ஜலங்கொண்டு கோராகும்பார் அடிகளை விளக்கச் செல்லக் கோராகும் பரர் நேற்றுக்கூறிய ஆணையால் என்னைத் தொடக்கூடாதென மனைவி புத்திரன் வேண்டிப் புருஷனுக்கு மற்றோர் மணஞ் செய்ய இசைந்து தனக்குப் பின்னவளை மணம்புணர்க்கக் கோராகும்பார் அவளையுந் தீண்டாதவராகியிருக்கத் தங்கை உனக்கு நேர்ந்தது எனக்கும் நேர்ந்த தென இருவருமாலோசித்துக் கோராகும் பரர் தூங்கும்போது இருவரும் இரண்டு பக்கத்திற் சென்று துயின்றனர். கோரா கும்பார் தூக்கத்தால் தம் கைகளிரண்டினையும் இரண்டு மனைவியர்பேரிலுமிட்டுத் தூங்கி விழித்துத் தம் கை மனைவியர் மீதிருக்கக்கண்டு தமது இரண்டு கரங்களையும் வெட்டிக் கொண்டனர். மனைவியரிருவரும் பெருமாளை நோக்கித் துதித்து அழுதல்கண்ட கோராகும்பார் அவர்களைத் தேற்றி ஆடிமாதம் ஏகாதசியில் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் பண்டரியை அடைந்தனர். அங்குப் பெருமாளை வணங்கிப் பஜனை செய்வதற்குக் கையிலாமல் வருந்தியிருத்தலைக் கண்ட பெருமாள் கைகள் வளர அனுக்கிரகித்தனர். அதனால் தேவியர்கள் களிப்புற்றுப் பிள்ளை வேண்ட முன்பு இறந்த பிள்ளையுந் தவழ்ந்துவரப் பெருமாள் தரிசனந்தந்து இன்று முதலுன்மனைவியருடன் களித்திருக்கவெனக் கட்டளையிட்டனர். பின் கோராகும்பார் பாகவதர்களுக்கு விருந்து செய்ய அனைவரையும் வருவித்துப் போஜனம் அருத்திய பின்னர், ஞானதேவர் இருக்கிற பாண்டங்களுட் சுட்டதும் சுடாததும் அறியவேண்டுமென்னக் கோராகும்பார் தம் கையிலிருந்த தண்டத்தால் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு அடி அடித்துக்கொண்டுவந்து நாமதேவர் சிரத்திலும் ஒரு அடி அடிக்க நாம தேவர் தாங்காதவராய்க் கையால் மறிக்கக் கண்டு இது பச்சைப்பாண்டமென அனைவரும் பரிகசித்தனர். இதனால் நாமதேவர் துன்பமடைந்து பெருமாளிடஞ் சென்று கூறப் பெருமாளும் நீ ஆசாரியனிடத்து உபதேசம் பெறாததால் இவ்வாறு நேர்ந்தது. இனி நீ பெறுக என்னத் தாங்களே ஆசாரியனிருக்குமிடம் தெரிவிக்க வேண்டுமெனப் பெருமாள் நாகைநாதர் வாழ் கோவிலில் விசோபாகேசர் என்பவரிடத்தில் உபதேசம் பெறுகவென்ன நாமதே வரும் அவரிடத்தில் செல்ல விசோபாகேசர் செருப்புக்காலினை இலிங்கத்தின்மீது வைத்து உறங்க நாமதேவர் கண்டு நடுங்கி அடாத காரியத்தைக்கண்ட எனக்கு உடல் நடுங்குகின்றதெனக் கூற விசோபா யான் அறியாது தவறிக் கால்விழுந்தது என்னுடல் அதிக சோர்வடைந்தது. மற்றோரிடத்தில் கால்வைக்க வரவில்லை பாகவதரே இந்தக்காலை மற்றோரிடத்தில் தூக்கி வைப்பீரேல் உபகாரமாகுமென்று சொல்ல நாமதேவரும் வேறு இடத்தில் தூக்கி வைக்க அவ்விடத்திலும் சிவலிங்கமிருக்கக் கண்டார். இன்னும் பலமுறை அவ்வாறு செய்ய அவ்விடங்களிலும் சிவலிங்க மிருக்கக்கண்டு அந்தப் பாதத்தைத் தன்னுடைய தேகத்தில் வைத்துக்கொள்ள அதுவுமிலிங்கமாக விளங்கியது. பின் விசோபா நெடுநேரம் என் பதத்தைத் தாங்கினாய் எனக்குத் துன்பமாயிருக்கின்றது. என்காலை வெற்றிடத்தில் விடுகவென்ன நாமதேவரும் எங்கும் சிவமயமாகத் தோன்றுகின்றதால் எவ்விடம் வைப்பேனென விசோபா எழுந்து தம்கரத்தை நாமதேவர் சிரத்தில்வைத்துக் காதில் ஞானோபதேசஞ் செய்தனர். பின் நாமதேவர் மனதில் அரவணைச் செல்வனைக் கண்டு களிப்படைந்து ஓர்நாள் பாகவதருக்கு நடுவிலிருக்கையில் ஞானதேவர் இந்த நாமதேவவரைச் சுடாதபாண்டம் என்று சொல்வீர்களோ வென்ன இனியடாது என்று அவர் திருவடியில் வீழ்ந்து பணிந்தனர். |
கோராசுரன் | 1. கொக்குருக் கொண்டு கணேசரை விழுங்கவந்து அவராலிறந்த அசுரன். 2. ஒரு அசுரன் தேவரை யிடுக்கண்படுத்திச் சிவமூர்த்தியால் கொல்லப்பட்டவன். |
கோராள் | ஒருவகைத் தேவசாதியார். |
கோரை | இது நீர்ப்பூண்டு வகைகளில் சேர்ந்தபுல்வினம். இது, ஆட்டாங்கோரை, ஈருள்ளிக்கோரை, ஓமற்கோரை, நச்சற்கோரை, கஞ்சாங்கோரை, கல்லங்கோரை, களாப்பூக்கோரை, கன்னிக்கோரை, சிற்றாட்டாங்கோரை, கிளைக்கோரை, குத்துக் கோரை, குளம்படிக்கோரை, கொட்டிக் கோரை, சம்பங்கோரை, சம்புக்கோரை, சீப்பங்கோரை, சீரகக்கோரை, ஈருள்ளிக் கோரை, சுனைக்கோரை, தண்டாமரைக் கோரை, தந்தக்கோரை, தாட்கோரை, திரட்கோரை, நெட்டிக்கோரை, நெறிக்கோரை, பசுக்கோரை, பனைக்கோரை, பாய்க்கோரை, பிரப்பங்கோரை, புற்கோரை, பூங்கோரை, பெட்டிக்கோரை, மட்டைக்கோரை, மயிற்கோரை, முடிக்கோரை, முதலைக்கோரை, மூக்கொற்றிக்கோரை, வரிக்கோரை, வரட்கோரை யெனப் பல. |
கோரோசனம் | 1. இது, பசுவின் வயிற்றிலுண்டாம் பொருள். இதனைச் சீதளாதி ரோகங்களுக்கும் மற்றுமுள்ள ரோகங்களுக்கும் உபயோகிக்கின் றனர். |
கோலம் | இது தேவபிதுர்க்கள் விஷயமாய் நாடோறும் அரிசிமாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம். இது யந்திர வடிவாய்ப் பல தேவமந்திர எழுத்துக்கள் அடைக்க இடமுள்ள தாயும் எண்கோணம், அறுகோணம், முக்கோண வடிவங்களாகவும் இடப்படுவது. இவ்யந்திர வுருவத்தால் கிருகத்தில் வரக்கூடாத தீய தேவ தைகள் வராவாம். இவ்யந்திர வுருவமைந்த கோலங்களைப் பிதுர்க்கள் கண்டு அஞ்சி வீட்டுள் புகார். ஆதலால் அமாவாஸ்யை, பிதுர் மாதுர்க்களுடைய சிரார்த்த தினங்களில் கிருகஸ்தர் இடார். மற்ற சுபதினங்களில் தீய தேவதைகளினின்று காத்துக்கொள்ளும் வகை வீட்டினுள்ளும் புறம்பும் இடுவர். |
கோலா | இது, ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒருவகை சிறு மிருகம். இது, உருவத்தில் குச்சுநாயைப் போன்றும், கரடியைப் போல் மயிரடர்ந்தும் காதுகள் வளைந்தும் உள்ளது. பற்களில்லை, தளிர்களைத்தின்று மரங்களிலேயே வசிப்பது. இதற்கு வயிற்றில் பையுண்டு, அப்பையில் குட்டிகளை வைத்து வளர்க்கிறது. மரமேற அறியாத பெரிய குட்டிகளை முதுகிற்தாங்கி மரத்தில் தாவும். தாய் குட்டிகளைத் தரையில் விட்டு அவை விளையாடக்கண்டு களிக்கும், இது, தன் குட்டிகளுக்குத் தீங்கு நேரும் போது தன்னுயிரையும் விடும். |
கோலாகலன் | 1 இமவந்தன் புத்ரன், மைநாகன் தம்பி. 2 இவன் தாயைப் புணர்ந்த மகாபாவி, இவன் நோயால் வருந்தி அபுத்தி பூர்வகமாய் வேதாரண்யஞ் சென்று முத்தியடைந்தவன். இவன் பிறப்பால் சூத்திரன். (வேதாரண்ய~புராணம்). |
கோலாகலம் | 1. வசுவினால் தள்ளப்பட்ட சேதிநாட்டு மலை. 2. மத்திய இந்தியாவில் பண்டில் கண்டிலிருந்து மால்வாவைப் பிரிக்கும் ஒரு மலை. |
கோலாசுரன் | ஒரு அசுரன் பராசத்தியாராற் கொல்லப்பட்டவன், (சிவரகசியம்). |
கோலியர் | தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள நெய்வோர். இவர்கள் தாழ்ந்த சாதியர். |
கோளகன் | 1. கைம்மையாகிய பார்ப்பினி சோரவேதியனைக் கூடிப்பெற்ற குமரன். 2, சாகல்யன் மாணாக்கன். 3. காசுமீர தேசத்து வேதியன், இவன் குமரி குணநிதி, இவளைத் தந்தை கபிச்ச முனிவருக்கு மணம்புரிவித்தான். கபிச்ச முனிவர் விஷந் தீண்டி இறக்க மனைவி தேவி உபாசனையால் சுவர்க்கம் பெற்றனள். |
கோளியூர்கிழார் மகனார் செழியனார் | இவர் வேளாண்மரபினர் ஏனைய வெளிப்படை, இவர் பிறயாதுஞ் செய்ததாக இதுவரையில் தெரியவில்லை, இவர் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர்பாடியது, நற். 383ம் பாட்டு. |
கோள்கள் இராசிகளில் நிற்கும் நிலை | ஜன்மராசிமுதல் 12 ராசிகளிலும் (சூரியனிருக்குங்காலத்தில்) முறையே ஸ்தான மாறுதல், தனம், ஸம்பத்து, மானஹானி, விசாரம், சத்ருநாசம், பிரயாணம், தேக ஜாட்யம், துவேஷம், தர்ம்மானுஷ்டானம், தனலாபம், தனஹானி இவைகளும்; (சந்திரனிற்கில்) நல்லபோஜனம், திரவிய நாசம், தனலாபம், வயிற்று நோய், காரியக் கேடு, தனலாபம், ஸ்திரீலாபம், மாரணம், பயம், சவுக்கியம், தனம்விரயம் முறையே இவைகளும்; (குஜன் நிற்கில் சத்துருபயம், தனநாசம், லாபம், சத்துருபயம், விரயம் லாபம், துக்கம், மரணம், தேகாபிமானம், தேகசுத்தி, பூலாபம், வியாதியால் நஷ்டம் இவைகளும்; (புதனிற்கில்) பந்தனம், லாபம், ஸம்பத்து, புத்திவிருத்தி, சவுக்கி யம், தைரியம், அபிமானம், தனம், ரோகம், புத்திரலாபம், லாபம்விரயம் இவைகளும்; (தருநிற்கில்) பயம், மேன்மை, ரோகம், விரயம், சுகம், சுத்தி, சம்பத்துஹானி, தனம், இடம் மாறுதல், ஸ்தானப்பிராப்தி, பீடை இவைகளும்; (சுக்கிரனிற்கில்) சந்தோஷம், தனம், சுகம், தனம், சந்தோ ஷம், சத்துருபயம், சுத்தி, திரவ்யலாபம், வஸ்திரலாபம், ரோகம், லாபம், தனம் இவைகளும்; (சனிநிற்கில்) பயம், தன ஹானி, மனதிற்பீடை, லாபம், விரயம், துக்கம், லாபம், தேகபீடை, விரயம், மனோவ்யாதி, திரவியலாபம், திரவ்யநாசம் இவைகளும்; (ராகுகேதுக்கள் நிற்கில்) குஜன் நிற்கும் பலமுமுண்டாகும். |
கோழி | உறையூர்க்கொரு பெயர், அரசர் சூளாமணிச் சோழனைக் காண்க. இதிலிருந்த ஒரு கோழி யானையைப் போரில் வென்றமையால் இதற்கு இப்பெயர் வந்தது. (சிலப்பதிகா.) |
கோழிகள் | இவை, பறவை இனத்தில் உடல் பருத்தும் தலைசிறுத்தும், கழுத்தும் கால்களும் குறுகியும் பலவகை நிறங்கொண்டும் இருப்பவை. இவ்வினச் சேவலுக்குக் கொண்டைசிவப்பு அலகு உறுதி. இவ்வகையில் (6) அங்குல உயரமுதல் (3) அடிகள் உயர்ந்த வகையுமுண்டு, தங்கக் கோழி: இது சீனதேசத்தது. இது, புறா அளவுள்ளது, இதன் கொண்டை மஞ்சள், கழுத்து மஞ்சள் கலந்த செம்மை, இதன் கழுத்தின் பக்கம் வரி வரியான கருங்கோடுகளுண்டு. இதன் இறக்கைகள் செந்நிறம், வால் மூன்று வகை நிறங்கள் கொண்டவை. மயிற்கோழி: இது, பர்மா முதலிய நாடுகளிலிருக்கிறது. இது, மயில்போலழகுடைய தாயிருக்கிறது. இது, கோழிபோன்ற வுருவமும், மயில் போன்ற வாலும் உடையது. இதன் இறக்கைகள் பசுமையும் நீலமும் கலந்தவை. இதில் மற்றொருவகை ஆர்கஸ்கோழி இது கருமை கலந்த செந்நிறம். வேறொருவகை லூபோபர்கோழி, இதற்குத் தலையும், முதுகும் மஞ்சள், கழுத்தும் வயிறும் நீலம், இறக்கையும் வாலும் இருண்ட செந்நிறம். இதன் இறகுகள் வெண்மைக் கோடுகளையும் கரியபுள்ளிகளையும் பெற்றவை. இது வருஷத்தில் 140 முட்டைகளிடுகின்றன. ஐரோப்பாவிலுள்ள கோழிகள் வருஷத்தில் 160 முட்டைகளும், அமெரிக்கா தேசத்து நல்ல கோழிகள் வருஷத்தில் 200, 300 வரையில் முட்டைகளிடுகின்றன என்பர். பெட்டைக்கோழி தன் முட்டைகளின் மீது அவயங்காந்துக் குஞ்சுகளைப் பருந்து முதலிய கொடிய பறவைகள் கவர்ந்து செல்லாமல் சிறகில் வைத் துக் காக்கும். சேவல் விடியற்காலையில் கூவிச் சூர்யோதயம் தெரிவிக்கும், சில கோழிகள் சாமந்தோறும் கூச்சலிடும், அதனைச் சாமக்கோழி யென்பர். இக்கோழியினத்தில் பலவகை அழகான கோழிக பூண்டு, ஜபான் தேசத்திலுள்ள ஒரு வகைக் கோழிக்குத் தோகை 15 அடிகள் நீளம்; அமெரிக்காவனத்தில் சில நாட்களுக்கு முன் நீலமுட்டையிடும் கோழி கண்டு பிடிக்கப்பட்டதாம்; அதற்கு வால் இல்லை; அதற்குப்பதிலாக செவிகளுக்குப் பக்கத்தில் சிறகடர்ந்த தசைப்படை ஒன்றிருக்கிறதென்பர். கோழிகளை அமெரிகா நாட்டார் அதிகமாகப் போஷித்து வளர்க்கின்றனர். அங்குள்ள கண்காட்சிசாலை யில் பஞ்சவர்ணக்கோழி ஒன்று கொண்டு வரப்பட்ட தென்பர் இவர்கள் பெட்டைக்கோழிகளை முட்டைமீதிருக்க விடாமலே முட்டைக்கு யந்திரமூலமாக உஷ்ணம் உண்டாக்கிக் குஞ்சுபொரிக்கச் செய்கின்றனர். இவ் வழக்கத்தை ஈஜிப்ட் தேசத்தவர் முதலில் கண்டு பிடித்தனர். காட்டுக்கோழி: இது காட்டில் வசிக்கும் அழகான கோழி. இது நாட்டுக்கோழியைப்போன்று இருப்பினும் பறந்து வேகமாய்ச் செல்லும் குணமுடையது. இதன் வாற் சிறகுகள் பலநிறமாய் அழகாயிருக்கும். இதன் சிறகுகள் பொருட்டு இதனை வலையிட்டுப் பிடிப்பர். பிளாக்குரோஸ்: இது கோணையுள்ள சிறகுபெற்ற கோழி. இது ஸ்காட்லண்ட் தேசத்தது, இது நம் நாட்டுக் கோழியைப் போன்று சற்று உயர்ந்தது, நீலமும் கறுப்பும் கலந்த நிறமுடையது; இதன் வாலின் முனை வெளிப்புறம் வளைந்து சுருண்டிருக்கிறது; இவை பல ஒன்றுகூடி வசந்த காலத்தில் தோகையை விரித்துச் சத்தமிட்டு ஆடுகின்றன. இவையிரவில் மரங்களிலுறங்குகின்றன. ஜிங்கோழி (The Guinea fowl): இது ஆபிரிக்கா நாட்டிலிருந்து பல தேசங்களுக்குப் பரவியது. இதன் உடல் பெரிது, தலை சிறிது, இதன் தலை வெளுத்திருக்கிறது. உடல் நீலங்கலந்த மேகநிறமுள்ளதாய்ப் புள்ளி பெற்றிருக்கும், இதன் சிறகுகள் அதிதூரம் பறக்கத்தக்கவையல்ல. ஆயினும் விரோதிகளினின்று தப்பித்துக் கொள்ளும்படி பறக்கக்கூடியவை. இவை இரையின் பொருட்டுச் சதுப்பு நிலங்களில் நெடுந்தூரம் செல்லும். இது, கோழி போல் காலை ஆயு தமாகக் கொள்ளாமல் வாயால் கௌவிச் சண்டையிடும். இது காடுகளிலுள்ள புதர்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இதன் முட்டை சிவந்த மஞ்சள் நிறமாய்க் கரும்புள்ளிகளைப் பெற்றிருக்கும். இது பல முட்டைகளிடும். ரீகா: எனும் மலர்ந்தவாலுள்ள கோழி (The Rhea) இவை, தென் அமெரிக்காவின் மத்தியிலுள்ள காடுகளிலுள்ளவை, இவை சாம்பல் நிறமுள்ளவை. இவற்றின் உரு, தீக்கோழி போல்வது. முருக்குள்ள இதன் சிறகுகள் மலர்போல் அழகுள்ளவை. இவை பறவா வேகமாய் ஒடும். இவை காட்டிலுள்ள புற்களையும் பழங்களையுந்தின்று ஜீவிக்கும். இவை கோடைகாலத்தில் மிருதுவான புற்களைக் கோலி முட்டையிட்டு அவற்றைப் பகலில் வெயிலிலிருத்தி இரவில் அவயங்காத்துக் குஞ்சு பொரிக்கும். வான் கோழி: இவை எல்லாக் கண்டங்களிலும் இருக்கின்றன. இவை நாட்டுக் கோழியினும் உருவத்தில் பெரியவை. இவை கறுப்பும் வெண்மையும் சேர்ந்த நிறங்கொண்டவை; இவற்றின் தலை சிறியது; கழுத்துங் காலும் நீளமானவை; கழுத்தில் மயிரில்லை; இவற்றிற்கு மூக்கின் மேல்பாகத்தில் நீண்ட தசைத் தொங்கலுண்டு. இதன் கழுத்தையிறுக்கி மூக்கைத் தொங்கு தசையால் மறைத்துக்கொண்டு குறுகிய கரிய இறகை விரித்துப் பேடை காண ஆடும். இது வருடத்திற் கொருமுறை 8, 10 முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவ்வினத்தில் ஆஸ்திரியாநாட்டில் ஒருவகை உண்டு. அவற்றிற்கு டெலிகோவி என்று பெயர். இதன் கழுத்தில் சிறு முட்டைகளைப்போல் தசை உருண்டு மாலைபோல் தொங்குமென்பர். நியூசீலாண்டு, ஆஸ்திரேலியா காடுகளில் ஒருவித வான்கோழி உண்டு அதனை மெக்போடஸ் என்பர். அவற்றிற்குக் கழுத்தில் ரோமம் இல்லை; முகத்திலும் தசை தொங்கும்; புல் முதலியன உணவு; இவை புற்களைப் போர்போல் குவித்து அவற்றினடுவில் 2 அடி ஆழத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். ரே: எனும் அமெரிகன் கோழி. இது இக்கண்டத்தில் பிரேசில், கயானா நாடுகளின் சதுப்புநிலவாசி, இதன் கழுத்தில் குறு மயிருண்டு; இதுவும் பறவாது, இது தரையிலும் தண்ணீரிலும் உலாவும்; புல், பூண்டு, தானியம், மீன், பூச்சி முதலிய உணவு. பெட்டைகள் சூரிய வெப்பம் படாத இடத்தில் முட்டையிட்டுச், சூரிய வெப்பத்தில் பொரிந்தபின் குஞ்சுகளுக்கு இரைதேடியுண்பிக்கும். காசோவாரி: இதுவும் வான் கோழியினத்தைச் சேர்ந்த பறவை. ஆஸ்திரேலியா, நியுகினியா முதலிய நாட்டிலுள்ளது. இதில் 8 வகைப்பேத முள்ளவை உண்டு. இது 5 அடி உயரம், உடல் பருத்தும், கழுத்துச்சிறுத்தும் இருக்கும். இதன் உடம்பில் சிறகுகளுக்குப்பதிலாகக் கரு மயிருண்டு, ஆண் பறவையின் சிரத்தில் உறுதியான தசைக்கொம்புண்டு. இதன் கழுத்தின் முன் பாகத்தில் தோல் வளர்ந்து தாடி போல் தொங்குகிறது. இறக்கைகளின் கடையில் முட்பன்றியின் முட்கள் போன்ற முட்களுண்டு. இது காலாலும் முட்களாலும் விரோதிகளை விலக்கும், இது சாகபக்ஷணி. இது, புதர்களில் பசு மையான முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவ்வினத்தில் மற்றொன்று ஏழ என்பர். இது, 6, 7 அடிகள் உயாம். இதன் உடல் பருத்து அழகிய சிறகால் மூடப் பட்டிருக்கிறது. இவை, கூட்டமாக வரும். இவைகளும் பூமியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும், நிலக்கோழி (Send Grouse): இது, கோழியினத்தில் விசித்திரவுருவமுள்ளது. இது பூர்வம் மத்ய ஆசியாவிலிருந்து ஐரோப்பாவில் பரவியது. இது, பல நிறங்கொண்ட சிறகுகள் கொண்டது. இதன் கால்கள் முழுதும் மயிரடர்ந்திருக்கிறது. சிறகுகள் நீண்டு கடையில் முட்கொண் டிருக்கும். இது, நிலத்தைக் கிளறிப் பூச்சுப் புழுக்களைத் தின்னும் இது, தன்னிறத்தை விரோதிகளிடம் வேறுபடுத்துகிறதாம். இது, புதர்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவ்வினத்தில் பலவகை இருக்கினும் சிலவற்றின் பெயர்மாத்திரம் கூறுகிறேன். அவை ஆங்கிலப் பெயர்களாம். 1. ஹவுடன்ஸ், 2, ஸாலமன் பெவிகொலெஸ், 3 பப் ஆர்பிங்டன், 4. டார்க்டார் கிங்க்ஸ், 5. ஸில்வர் கிரேடார்கில்ஹென், 6. வில்வர் டக்விங்யா கோஹாமாகாக், 7. ஸில்வர் காம்பைன்ஸ், 8. பிரவுன் லெக்ஹா ரான்ஸ், 9. கோல்டன் ஷீபிரைட் லேஸ்ட்காக் 10. ஸ்பாங்கில்ட் ஒல்ட் இங்கிலிஷ் கேம், 11. மாடான் லாங்ஷான்ஸ். 12.வ்யான்டாட்ஸ் பிளாக்காக், 13. ஹாம்பர்க்ப்ளாக்காக் அண்ட்பென் வில்ட்ஹென், 14. அன்கோனாஸ், 15.வ்யான்டாட்ஸ் வில்வர் லேஸ்ட்காக் அண்டகோல்டன் லேஸ்ட்ஹென், 16. பார்டிரிட்ஜ் கொசின்ஸ், 17. ஆண்டலூஷியன்ஸ், 18, லெக் ஹாரன்ஸ் ஒயிட்காக் அண்ட்பப்ஹென், 19. பாலிஷ்ஷில்வர் ஸ்பாங்கில்ட், 20. டக் விங்கேம்காக், 21, பாரெட் பிளெமத்ராக்ஸ் அண்ட் ஒயிட்ராக்ஹென், 22, ரோட் அய லண்ட்ரெட்ஸ், 23. இண்டியன் கேம் பவுல்ஸ், 24. ஸ்பெகில்ட் ஸஸ்ஸெக்ஸ், 25. ஹாம்பர்க்ஸ் வில்வர் ஸ்பாங்கில்ட் காக், 26, பிளாக் மைனார்காஸ், 27, ஸ்பா னிஷ் பவுல்ஸ், 28. பிளாக்பெட் பான் டாம்கேம், 29. லயிட்பிரம்மாஸ், 30. டார்க் பிரம்மாஸ், 31, ஸில்கீஸ், 32. ஆர்பிங் டன்ஸ் பிளாக்காக் அண்ட ஜூபிளிஹென் மற்றும்பல. இந்தியாவில் சாதாரண கோழி சண்டைக்கோழி, காட்டுக்கோழி, குறுங் கோழி, கானாங்கோழி, சம்பங்கோழி, வான்கோழி, முதலியவுண்டு. |
கோழிவேந்தன் | அரசர் சூளாமணி சோழனைக் காண்க. |
கோவதை | இது நான்குவகை, ரோதம், பந்தனம், யோக்தரம், பாதம். இவற்றுள் ரோதம் கொட்டகை, வீடு, துர்க்கம், மேடு பள்ளமான இடம், எரி, கடல், குட்டை, முதலிய இடங்களில் சாதல், பந்தனம், கழுத்தின் கயிறு, தாம்பு, முதலிய பல கயிறுகளால் பந்திக்கப்பட்டிறத்தல், யோகத்ரம் வண்டியில் கட்டுதல், ஏரில் கட்டுதல், பிணையிடுதல் முதலியவற்றால் மரண முண்டாதல், பாதம் வேண்டுமென்றும், தெரியாமலும், எண்ணியும், எண்ணாமலும் கோபத்தினால் தடியாலடித்து இறவாதிருக்கினும் பாத௳அம். (பாப~மி.) |
கோவத்தன் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களிலொருவர். இவர் ஊர் பெயர் தெரியவில்லை. குறு46,194, கோவரதத்தன் எனவும் கூறப்படுவர். |
கோவனார் | கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு) |
கோவர்த்தனம் | வடமதுரைக்கருகிலுள்ள மலை. இந்திரன் கிருஷ்ணமூர்த்தியிடம் மாறுகொண்டு பசுக்களை வருத்த விடா மழை பெய்விக்கக் கண்ணன் இதனைத் தூக்கிக் குடையாய்ப்பிடித்து அப்பசுக்க வைக் காத்த மலை. |
கோவலன் | 1. மாசத்துவான் என்னும் வணிகன் குமரன். இவன் கண்ணகியை மணந்து இல்லற நடத்தி வருகையில் மாதவி என்னும் வேசி வசப்பட்டு நாள் கழித்து அவள் பாடிய வரிப்பாட்டால், மனம் வேறு பட்டுப் பொருளெலாத் தோற்று மீண்டு கண்ணகியுடன் கூடி வர்த் தகத்தின் பொருட்டு மதுரையடைந்து மனைவியின் காற்சிலம்பை விற்கத் தட்டான் ஒருவனிடம் காட்டினன். அத்தட்டான் அரசியின் பொற்சிலம்பை யிவன் களவு செய்தனன் என்று நிந்தை கூறி அரசனிடம் ஒப்புவிக்க அரசன் குற்றவாளியோ அன்றோவென நிதானிக்காது மரண தண்டனை விதித்தனன். இச்செய்தியை அறிந்த கண்ணகி, கோவலனிடம் வந்து அவனுடலைத் தழுவி யுயிர்ப்பித்துச் செய்தியறிந்து அரசசபை புகுந்து கோவலன் தந்தது தன் காற்சிலம்பென்று அரசனுக் கறிவித்தனள், அரசன் அஞ்சி இறக்கக் கண்ணகி தனது கொங்கையைத் திருகி மதுரைமீதெறிந்து எரித்து மலை மீதேறித் தன் கணவனை அடைந்தனர். இவன் முற்பிறப்பில் பரதனென்னும் வணிகன். பரதனைக் காண்க. (சிலப்பதிகாரம்.) 2 மணிமேகலையின் தந்தை. (மணிமேகலை) 3. கோவலனுக்கு ஒன்பது தலை முறை முன்னோன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு நண்பன்: அவ்வேந்தனுக்குச் சாரணர் கூறிய தருமம் கேட்டுத் தான் தேடிய பொருள்களையும் தன் முன்னோர் தேடிய பொருள்களையும் ஏழுநாளில் தானஞ் செய்துவிட்டுத் தவமேற் கொண்டவன், வஞ்சி நகரத்தில் புத்தருக்குச் சயித்தியாலயங் கட்டுவித்தவன், (மணிமேகலை). |
கோவலூர் | இது அதியமான் நெடுயான் அஞ்சியால் ஒருகாலத்து எறியப்பட்டது இது கோவல் எனவும் வழங்கும். (புற நா.) |
கோவிஜய நிருபதுங்கவர்மன் | இவன் காஞ்சிபுரமாண்ட பல்லவர்களில் ஒருவன் இவன் தன்குமாரியை ஆதித்தசோழன் மணந்தான். இவனுக்குப் பிறகு பல்லவ நாடு சோழர்க்குட்பட்டது. |
கோவிந்தசீயர் | யாதவப் பிரகாசரைக் காண்க. |
கோவிந்தன் | 1. விசயைக்குச் சகோதரன். 2. கிருஷ்ணனுக்கு ஒரு பெயர். |
கோவிந்தபகவதபாதாசாரியர் | இவர் சுக முனிவர் மாணாக்கராகிய கௌடபாதமந் திரபட்டாரகர் மாணாக்கர். |
கோவிந்தபட்டர் | 1, கமலநயன பட்டருக்கு மழலை மங்கலத்தில் குரோதன வரு. தை மாதம் சோமவார பௌர்ணமியில் பிறந்து பெரிய திருமலை நம்பியால் நாமகரணம் செய்யப் பெற்று எம்பெருமானாருடன் வாசித்து யாதவப்பரகாசருடன் கங்காயாத்திரை செய்கையில் யாதவப்பிரகாசர் எண்ணத்தை இளையாழ்வாருக்கறிவித்து விலக்கித் தாம் கங்கை சென்று தீர்த்தமாடுகையில் யாதவப்பிரகாசர் செய்த மோகத்தால் லிங்கதாரியாய் உள்ளங்கை கொணர்ந்த காயனர் எனப் பெயர்பெற்று மழலை மங்கலதில் சிவப்பிரதிட்டை செய்து இருக்கையில் திருக்காளத்தியிலுள்ளவர் வந்து தமது நபருக்கு அழைத்துப்போக அவ்வி டஞ் சென்றிருந்து பெரிய திருமலைநம்பிகளால் மீண்டும் ஸ்ரீவைணவரானவர். 2 மாகாளலாம் காண்க. |
கோவிந்தப் பெருமாள் | பெரிய திருமலை நம்பிக்குக் குமரர், பெரியதிருமலை நம்பியால் உடையவருக்கும் கொடுக்கப்பட்டு உடையவரால் எம்பார் எனத் திருநாமம் பெற்ற திரிதண்டசந்நியாசி. |
கோவிந்தாசாரியர் | ஸ்ரீசங்கராசாரியர் மாணாக்கர், கௌடபாதருக்கும் மாணாக்கர். |
கோவிந்தை | நந்தகோன் புதல்வி, பதுமுகன் மனைவி. |
கோவியா | கோபிகைகளைக் காண்க. |
கோவிலார் | கோவில் வேலை செய்வோர் இவர்கள் பள்ளிகள் கோவில்வேலை செய்வோர் இவர்கள் பூணூல் தரித்துத் தாங்கள் நியமித்த கோவிலில் தாங்களே அர்ச்சகராக இருப்பவர். கோவில் அடியார். என வும் கூறப்படுவர். பெண்கள் கோவில் அம்மாமார் எனப்படுவர். |
கோவுலகம் | 1. தேவாசுரர் கடல் கடைந்த காலத்துத் திருப்பாற் கடற்கண் ஐந்து பசுக்கள் பிறந்தன அவை நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுயனை என்பனவாம். இவை முறையே கபிலம், கிருஷ்ணம், வெண்மை, புகை, செம்மை நிறமுள்ளன. இவை சர்வ லோகங்களுக்கும், உதவியானவை. தேவாபிஷேகத்தின் பொருட்டு ஆனவை. இவற்றில் கோமயம், கோரோசனம், கோமூத்திரம், பால், தயிர், வெண்ணெய் உண்டாம். இவை ஆறும் பரிசுத்தமானவையும், சர்வசித்தியையும் தாத்தக்கனவுமாம். இக்கோக்களும் யக்ஞங்களுக்குப் பயன்படத் தக்கவைகளாம். இப்பசுக்களிடத்தில் தேவர்கள் வசிக்கின்றனர், இதன் கோமயத்தில் சிவப்பிரியமா யிருக்கிற வில்வவிருக்ஷம் உற்பத்தியாயிற்று. அதில் பத்மா சரியாகிய இலக்ஷ்மி வசிக்கிறாள். ஆகையால் தேவர்கள் அனைவரும் கோவினிடம் வசிக்கின்றனர். இவற்றுள் வெண்ணிற முடையவை பிராமணஜாதியாகவும், செந்நிறம் உடையன க்ஷத்திரிய ஜாதியாகவும், பொன்னிறமுடையவை வைசிய ஜாதியாகவும், கருநிறமுள்ளவை சூத்திரஜாதியாகவும் எண்ணப்படும். இக்கோலோகம் அண்டகோளத்துக்கு அருகில் இருக்கிறது. கோவைப் பூசித்தோரும் பூசிப்போ ரும், இவ்வுலகம் அடைவர். இவ்வுலகம் கோடி சூரியப்பிரகாசம் உள்ளதாய் சுத்த வெண்மையுடையது. தேவயாகத்தில் உயிர் நீக்கிய பசுக்களும் இவ்வகலம் அடையும். கபிலைப்பசு என்பது காதுங் கண்ணும் மடியும் மூக்கும் கறுப்பாய் இருப்பது. இதைப் போற்றுவோரும் உயர்கதி அடைவர். இதன் பாலைச் சாப்பிடாமல் தேவ தார்ப்பணஞ் செய்யவேண்டும் இப்பசு தேவர் அவிசுமக்க அஞ்சிய அக்கினிக்கு இடர் தந்ததால் இதற்குப் பெருமை வந்தது. தேவர்களும் இதனால் எல்லாப்பொருள்களும் பவித்திரம் அடையும் வரத்னதயும் தந்தனர். கபிலையைக் காண்க. 2. சிவலோகத்தின் ஒருபுறக்கில் இந்த லோகம் இருக்கும். இதில் நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை முதலிய பசுக் கள் நந்திமா தேவரை மருவிச் சிவமூர்த்திக்குப் பால், தயிர், நெய், கோமயம், கோசலம், கோரோசனை முதலிய ஆறு திவ்யப் பொருள்களை யுதவியிருக்கும் இவ்விடத்தில் இப்பசுக்களாதிகளைக் கண்ணன் மேய்த்திருப்பர் என்பர். (சிவதர்மோத்ரம்). |
கோவூர் கிழார் | 1, இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் வேளாண்மரபினர். சோழன் நலங்கிள்ளியையும், குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவனையும்பாடி (புறம் 31,32,33,41) அவர்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறநாளில் நலங்கிள்ளி என்பான் ஆவூரை முற்றுகைசெய்ய அக்கா லத்து உள்ளே அடைந்திருந்த சோழன் நெடுங்கிள்ளியை அதனைத் திறந்து போர் செய்யவரும் வண்ணம் பாடினர். புறம் 44. அந்நெடுங்கிள்ளி அதனைத்திறந்து நலங்கிள்ளிபால் விட்டுச்சென்று உறையூரையடைந்து அங்குவைகினன். அவரைக் கைப்பற்றிய நலங்கிள்ளி அதனைத் திறந்து நலன்கள் பால்விட்டுச் சென்று உறையூரை முற்றுகை செய்தான். (புறம் 47) அந்நாளில் நலங்கிள்ளியிடத்திருந்து உறையூரினுட்பு தந்த இளந்தத்தனை ஒற்று வந்தானெனறு நெடுங்கிள்ளி கொல்லப் புகுந்த பொழுது அவனைக் கொல்லாதபடி தடுத்துப்பாடி உய்யக்கொண்டார். (புறம் 47) பின்பு பகை முற்றாவண்ணம் முற்கூ றிய சோழரிருவரையும் சமாதானப்படுத்தி போரைவிலக்கி நெடுங்கிள்ளியையும் பலவாறு புகழ்ந்து பாடி அப்பால் கிள்ளிவளவன்பால் வந்தனர். அம்மன்னன் யாதோலொரு காரணத்தால் மலையமான் மக்களை யானையின் காலில்வைத்து இடரும்படி கட்டளையிடக்கண்டு அவனைப்பாடி அம் மக்களை உய்வித்தார் புறம் 61. முற்கூறிய அரசர்களைப்பாடிய பாடல்கள் மிக்க சுவை பயப்பன. இவர் நற்றிணையிற்கூறிய உள்ளுரை வியபுடையது. இவர் குறிஞ்சித திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 393ம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன் றும், புறத்தில் பதினைந்துமாகப் பதினேழுபாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
கோவேங்கைப் பெருங்கதவன் | இவர் கடைச்சங்க காலத்தவர். கோவென்று கூறப்படுதலால் அரசரும், இவர் வேங்கைப்பூ கதத்துடன் கல்லிற்றாக் குதலைப் பாடினதால், கோவேங்கைப் பெருங்கதவன் எனப்பட்டனர்போலும், குறு 134. |
கோவேறு கழதை | 1. இது உயரத்திலும் நீளத்திலும் குதிரைபோலவும், உருவத்தில் கழுதைபோலவுமுள்ள சாகபக்ஷணி இதற்குக் காதுகள் மிகநீண்டிருக்கும், பல விதமான நிறமுடையது குதிரையைப் போல் ஒற்றைக் குளம்புள்ளது. ஆகாரம் புல்கோதுமை, கடலை முதலிய. குதிரை யைப்போல் முன்பற்களால் கடித்துத்தின்னும் அசைபோடாது, முரட்டுச் சுவபாவமுள்ளது. பெரிய பாரங்களைச் சுமக்கவும் இழுக்கவும் வல்லது. இது இந்தியா முதலிய பல இடங்களில் உண்டு. 2. ஒரு பிராமணன் இதன் குட்டியை யடிக்கக் குட்டி தாயிடங்கூறத் தாய் கிடக்கிறான் புலையன் பிராமணனானால் தெரியும் என இதைப் பிராணிகளின் பாஷையறிந்த அந்தவேதியன் கேட்டுக் கழுதையை நெருங்கிக் கேட்கக் கழுதை அது உன் தாய் செய்த தீமையெனக் கூறக்கேட்டு நான் பிராமணனாகிறேன் என்று அகோர தவம் செய்து தேவதையானான். |
கோவை | என்பது மணிச்சரம், அவை மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரி சிகை என ஐவகைப்படும். மேகலை எண் கோவையும், காஞ்சி எழுகோவையும், கலாபம் பதினாறு கோவையும், பருமம் பதினெட்டுக்கோவையும், விரிசிகை முப்பத்திரண்டு கோவையும் உடையதாம். |
கோஷன் | இவன் சூர்யவம்சத்தாசன். இவன் விரல்களில் புழுச்சொரிந்து கொண்டிருந்தது. இவன் ஒருநாள் அயோத்திக்கருகிலுள்ள சூர்ய தீர்த்தத்தில் நீராடிப் புழுநீங்கிச் சுத்தமடைந்தனன். |
கோஷமணி | பாண்டு புத்திரனாகிய நகுலராசன் சங்கம், |