ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
கொக்கிதேவர் | வீரசைவ அடியவர்களில் ஒருவர். இவர் நந்தவனம் வைத்திருக்க அல்லமர் இவரிடம் வந்து அந்த நந்தவனத்தின் ஒருபுறம் தோண்டக் கட்டளையிட்டு அதில் ஒரு யோகி இருத்தலைக் காட்ட அவரைப் பணிந்து தீக்ஷைபெற்றவர். |
கொக்கினம் | இப் பறவை உஷ்ணப்ரதேசத்தைச் சேர்ந்தது. இது கழுத்து நீண்டு வால் குறுகிய பக்ஷி. கால்களும் மூக்கும் நீளம். இதன் வால் குட்டையாதலால் பறக்கையில் உடனே திரும்புதல் கூடாது. கழுத்தை உதவியாகக் கொண்டு திரும்பும். இது நிறத்தால் பெரும்பாலும் வெண்மை. இவ்வினத்தில் பலவகை வேறுபாடுள்ளவை யுண்டு இவ்வினத்தில் 6 முதல் 10 அடி உயரமும் உண்டு. இப்பறவை நீர்வாழ் சிறு பிராணிகளைப் பிடித்தருந்த நீரில் அசையாது நிற்கையில் தன் அரு கில்வரும் இரைக்கமைந்த மீன்களைப் பிடித்தருந்தும். வாத்துமூக்குக் கொக்கு: இது, ஆசியா, ஐரோப்பா முதலிய நாடுகளிலுண்டு. இதனிறம் வெண்மை, இவ்வின ஆண்பறவைக்குத் தலையில் கொண்டையுண்டு. இதன் முதுகு மேகநிறம். தலையில் வெண்மையும், கருமையுமான கோடுகள் உண்டு. இது 2 அடி உயாம், மூக்கு வாத்தின் மூக்கைப்போல் தட்டையாய் அடிசிறுத்து முனை அகன்று வட்டமாயிருக்கும். இதன் மேல் மூக்கின் முனை கீழ்நோக்கி வளைந் திருக்கிறது. இது சதுப்பு நிலங்களிலும்ள்ள புழுப்பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். செம்மூக்குக் கொக்கு: இது மேற் கூறிய வாத்து மூக்குக் கொக்கினினம், இதன் மூக்கும் கால்களும் செவந்திருக்கின்றன. மூக்குத் தட்டை, சிறகுகள் வெண்மை. நீலக்கொக்கு: இது கொக்கினத்தைச் சேர்ந்தது. இதனிறம் நீலம், இதன் தலையில் மயிலுக்கிருப்பது போல் கொண்டை யுண்டு. விசித்திரக் கொக்கு: இது இங்கிலாந்தின் வடபாகத்திலுள்ள ஏரி குளங்களின் அருகில் கூட்டம் கூட்டமாயுண்டு. இதன் கழுத்தின் பக்கத்தில் சிங்கத்திற்கிருக்கும் பிடரிமயிர்போல் இறகுகள் கழுத்தைச் ஈற்றிலும் மலர்ந்திருக்கின்றன. நெற்றியின்மீதும் விரிந்த சிறகுகள் உண்டு. இதன் முதுகு மேகநிறம், வயிறு வெண்மை, இதன் கால் விரல்கள் தடித்து நீண்டு குறுகிய நகங்கள் பெற்றிருக்கின்றன. இது கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இது உரத்த சத்தமிட்டுப் பேட்டின் முன் ஆடும். பொதுவாகக் கொக்கினங்களில் சில கூட்டமாய்க் கூடியே வாழ்கின்றன. |
கொக்கோகம் | கொக்கோகர் செய்த மதன நூல், இதனைத் தமிழில் அதிவீரராமபாண்டியன் செய்யுளாகச் செய்தனன் என்பர். |
கொக்கோகர் | ஒரு இருடி, வைணதத்தன் சொற்படி மதன நூலியற்றியவர். |
கொங்கணர் | இவர் ஒருசித்தர். போகரிஷியின் மாணாக்கர் என்பர், இவர் பளிக்கிச் சாதியார். இவர் வீரட்டகாசமூர்த்தியின் சிரத்தில் தமது குளிகையை வைக்க அச்சிவலிங்கமூர்த்தம் அக்குளிகையை நீராக்காது மறைத்ததால் அச்சிவமூர்த்தியைப் பூசித்துக் குளிகைபெற்றவர். இவர் போகர் விரும்பிய பெண் அகப்படாது வருந்திப் பிரதிமையைப் பெண்ணாக்கி ஆசிரியரிடம் கொண்டுசென்றவர். இவர் திருமழிசையாழ்வாரிடஞ் சென்று ரஸக் குளிகையொன்று கொடுத்து இது காணி கோடியைப் பேதிப்பதென்று கூற ஆழ்வார் தம்தேகத்து அழுக்கையுருட்டி இது காணி கோடியாக்கும் என்று கொடுத்தனர். சித்தரிதனைப் பரீக்ஷித்தறிந்து களிப்புற்று ஆழ்வாரிடம் நட்புக் கொண்டனர். இவர் கோயம்புத்தூருக் கருகிலிருந்ததாகக் கூறுவர். இவர்காலம் திருவள்ளுவர் காலமாக இருக்கலாம். இவர் தவத்திலிருக்கையில் கொக்கொன்று இவர்மீது எச்சமிட அதை இவர்பார்க்க அது எரிந்து சாம்பராயிற்று, கொங்கணர் தவம்விட்டு நீங்கித் திருவள்ளுவரிருக்கு மிடத்தில் பிக்ஷைக்குந்தனர். திருவள்ளுவர் தமது தேவியாருக்குக் கட்டளையிட அவள் வருதற்கு முன் சித்தர் கோபித்து நோக்க அந்தக்கற்புடையாள் “கொக்கென்றெண்ணினையோ கொங்கணவா ” எனச்சித்தர் இவள் மகா பதிவிரதையென்று வெட்கிச் சென்றவர். இவர் சில வைத்திய நூல்கள் செய்திருக்கின்றனர். அவை கொங்கணர் கடைக் காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் முதலியன. அகத்தியர் மாணாக்கர் என்பர். இவரதுநாடு கொங்கு நாடாயிருக்கலாம். இவர் வடக்கிலிருந்து தெற்கில் வந்து தஞ்சாவூரில் தம் பெயரால் சிவலிங்கம் தாபித்துப் பூசித்து முத்திபெற்றனர் என்ப. |
கொங்கணித்தாதன் | சக்கரம் பெறும்படி விநாயகருக்கு முன் கோணங்கிக் கூத்தாடிய விடுவசேநன். |
கொங்கணிவர்மன் | கொங்கு நாட்டவரைச் சயங்கொண்டு நாட்டிற்குக் கொங்கு நாடெனப் பெயரிட்டவன். |
கொங்கன் | கொங்குநாட்டுக் குடிமையாளன். இப்பெயர், தமிழ்நாட்டு மக்களாகிய தொழிலாளர் முதலியவர்க்கும் இழிவு நோக்கி வழங்கி வருகிறது. ‘நீ யென்னடா கொங்கானா?’ என்பர். |
கொங்கர் | கொங்குமண்டலத்தரசர். (சிலப்பதிகாரம்.) |
கொங்காணியர் | கோங்காணத்திலிருந்து வந்து குடியேறினவர்கள், இவர்களில் பிராமணர் கடை முதலிய வைத்து ஜிவிப்பவர்கள். இவர்களில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் உண்டு. இவர்களில் கௌட பிராமண வகுப்பில் சராச்வத பிரிவைச் சேர்ந்தவர்கள் திராவிட பிராமணர். கொங்காணி சூத்திரர் குடுமிக்காரர் எனப்படுவர். (தர்ஸ்டன்.) |
கொங்கிலாச்சான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், வைணவாசாரியார். (குருபாம்பரை.) |
கொங்கிளங்கோசர் | இவர்கள் குடகுநாட்டை ஆண்டவர்கள். |
கொங்கு | கொங்குமண்டிலம். (சிலப்பதிகாரம்.) |
கொங்குப்பிராட்டி | இந்தம்மாள், உடையவர் சந்யசித்துக்கொண்டு ஒருவீட்டில் மதூகரித்துக்கொண் டிருக்கையில் அவரால் ஆத்மஸம்ரக்ஷணம் பண்ணப்பட்டவள். இவள், சோழனுக்குப் பயந்து சென்ற உடையவர் சீட்ர்களுக்கு அன்னமளித்தவள். |
கொங்குவேளிர் | இவர் கொங்கு நாட்டு வேளாளரில் ஒருவராகிய சிற்றரசர். இவர் பெருங் கொடையாளி. இவரது ஊர் கொங்குநாட்டின தாகிய விஜயமங்கலம். அடியார்க்கு நல்லார் இவர் செய்த உதயணன் கதையாகிய கொங்குவேண்மாக் கதையைப் பாராட்டி யிருத்தலால் இது அவர் காலத்திற்கு முற்பட்டதாகும். இவர் பிறந்தவூர் கொங்குநாட்டின தாகிய மங்கை யென்பது. பேராசிரியரும் தம் உரையில் இவர் நூலை யெடுத்தாளுதலால் இவர் செய்த நூல் பேராசிரியர்க்கும் முற்பட்ட நூலாம். இவர் சமணசமயத்தவராக இருக்கலாம். இவர் தம் நூலில் பல இடங்களில் சைநக் கொள்கைகளை யெடுத்தாளுதலால் இவர் சைநரே. (உதயணன் கதை.) |
கொசுகு | இது ஒருவகைப் புழு. அழுக்கடைந்த இடங்களிலுண்டாகிப் பின் இறக்கை முளைக்கக் கொசுக்களாய் மாறுகிறது. இது தனது ஊசிபோன்ற உறுப்பால் உதிரத்தை உறிஞ்சிக் குடிக்கும். பகலெல்லாம் ஒளிந்திருந்து இரவில் வெளிவந்து கடிக்கும். இது முதுகெலும்பில்லாப் பிராணி. இதற் கெட்டுப்பற்கள் உண்டு. |
கொச்சகக்கலிப்பா | பாவினத்தொன்று, இது தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணைக் கொச்சகக்கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகைப்படும். (யாப்பு~இ.) |
கொச்சை | சீர்காழிக்கோர் நாமம், கொச்சைமுனியைக் காண்க. |
கொச்சைமுனி | பராசர், இவர் சத்த இருடிகளை இல்லறத்தவர் என்று இகழ, இவரை அவர்கள் நீ மச்சகந்தியைப் புணர்ந்து நாற்றமோடிருக்க எனச் சபித்தனர். சாப மேற்ற முனிவர் நாற்ற நீங்கி நன்மணம் பெறச் சீர்காழியிற் பூசித்தனர். இதனால் கொச்சையென்று அத்தலத்திற்கும் பெயராயிற்று. |
கொடி நிலை | அரி அயன் அரனென்னும் மூவர் கொடியுள்ளும் ஒன்றோடுவமித்துப் பலரும் பொருந்துதல்வரும் வேந்தனுடைய கொடியைப் புகழ்ந்தது. (பு. வெ. பாடாண்.) |
கொடிகள் | 1. அதாவது அவ்வவர்களுக்குரிய விருதுகளைத் தெரிவிப்பது. சிவபிரானுக்கு விடைக்கொடி. கந்தமூர்த்திக்கு சேவற்கொடி. பார்வதியார்க்குச் சிங்கக்கொடி. வேதியர்க்கு வேதக்கொடி. ஐயனாருக்குக் கோழிக்கொடி. காளிக்கு அலகைக்கொடி. யோகினிக்குப் பேய்க்கொடி, விஷ்ணுவிற்குக் கருடக்கொடி, பலபதிரனுக்குப் பனைக்கொடி, காமனுக்கு மீனக்கொடி, பிரமனுக்கு வேதக்கொடி, இந்திரனுக்கு இடிக்கொடி, அக்கினிக்கு மேஷக்கொடி. யமனுக்கு மகிஷக்கொடி. நிருதிக்கு நாக்கொடி, வருணனுக்கு முதலைக்கொடி, வாயுவிற்குக் கலைமான் கொடி, குபேரனுக்கு அச்வக்கொடி, மேஷக்கொடி, வைரவனுக்கு ஞாளிக்கொடி. மூதேவிக்குக் காக்கைக்கொடி, அருகன் கொடிகள், காட்சி, ஞானம், சீலம். இராவணனுக்கு வீணைக்கொடி, வீட்டுமனுக்குப் பனைக்கொடி. அசுவத்தாமனுக்குச் சிங்கக்கொடி, கிருபனுக்கு ருஷபசக்கொடி, சல்லியனுக்கு யானைக்கொடி, விடசேநனுக்கு மயிற்கொடி, துரோணா சாரிக்கு வேதக்கொடி. தருமனுக்கு முரசக்கொடி, துரியோதனனுக்கு நாகக்கொடி, கன்னனுகுக் கச்சைக்கொடி. வீமனுக்குச் சிங்கக்கொடி, அருச்சுநனுக்கு அநுமக்கொடி, சேரனுக்குப் பனைவிற் கொடிகள். பாண்டியனுக்கு மீனக்கொடி. சோழனுக்குப் புலிக்கொடி, வேளாளருக்கு வெள்ளைக்கொடி, மேழிக்கொடி, அம்சக்கொடி, அநுமக்கொடி, மயிற்கொடி. கன்னிடையருக்குப் பசவ சங்கரக்கொடி, பஞ்சவர்ணக்கொடி, வடுகு வேளாளருக்கு அம்சக்கொடி, இரெட்டிகளுக்குக் கலப் பைக்கொடி. கம்மவாருக்கு ருஷபக்கொடி, கொந்தளவருக்குச் சகோர பக்ஷிக்கொடி, நத்தமான்களுக்கு யாளிக்கொடி, மலையமான்களுக்கு அரிதாளக்கொடி, இடையருக்குச் சக்கரச்கொடி, வடுகிடையருக்குச் சங்குக்கொடி. பத்மசாலியருக்கு ஆண் புலிக்கொடி, பட்டுச்சாலியருக்கு இருதலைப்புக்கொடி. வடுகுசேணியருக்குப் பெண்புலிக்கொடி, சேன்றவர்க்கு முதலைக்கொடி, பட்டு நூற்காரருக்குப் பட்டுக்கொடி. சேடருக்குக் கூர்வாள் கொடி, கொழிஞ்சிக்கொடி. செக்கு வாணியருக்குக் கருடக்கொடி, இலைவாணியருக்குக் குயிற்கொடி. ஒண்டியெருது வாணியருக்குப் பஞ்சவர்ணக்கிளிக்கொடி, சணப்பருக்குச் சவுரிக்கொடி. முச்சியருக்கு மாரமீன்கொடி, காஞ்சியருக்குப் பொதிக் கொடி. செட்டிகளுக்குக் கருடக்கொடி, கைக்கோளருக்குச் சிங்கம், மான், கரடி, மயில் முதலிய கொடிகள், கம்மாளருக்கும் கிளிக்கொடி, கழுகுக்கொடி, வன்னியருக்கு அக்கினிக்கொடி, சேவற்கொடி, சிலைக் கொடி, மாலக்கொடி, கழுகுக்கொடி, போத்துக்கொடி, நரிக்கொடி, பள்ளருக்கு அலவங்கொடி, வேதகாரர்களுக்குச் கிச்சிலிக்கொடி, கத்திக்கொடி, நரிசோகிகளுக்கு நாய்க்கொடி. குசவர்க்குக் குசக்கணக்கர்க்குந் தாளவிருஷபக்கொடி. மேளகாரருக்கு டமாரக்கொடி. நட்டுவர்க்குத் தாளக் கொடி, தாசிகளுக்கு மன்மதக்கொடி சாணாருக்குச் சிங்கக்கொடி. குறவருக்குக் கழுதைக்கொடி, சுக்காசெட்டி, லம்பாடிகளுக்குச் சித்திரக்கொடி. வேட்டைக்காரருக்குக் கவுண்டுக்கொடி, பட்டணவருக்கு ஆமைக்கொடி. கரையாருக்கு மச்சக் கொடி. ஒட்டருக்கு மண்வெட்டிக்கொடி, உப்புரவருக்குப் பன்றிக்கொடி. போயிகளுக்குப் பல்லக்குக்கொடி. பணிசெய்வாருக்குத் தாரைக்கொடி, வண்ணார்க்கு வெள்ளை யானைக் கொடி, நாவிதர்க்குப் புருஷாமிருகக்கொடி, தொம்பாவருக்குக் கெடைக்கொடி, மாரியம்மைக்காரருக்கு உடுக்கைக்கொடி, பூசாரிக்குச் சிலம்புக் கொடி, ஏனாதிகளுக்கு முயற்கொடி. அரிப்புக்காரர்களுக்குத் தாமரைக்கொடி, வடுகு பண்டாரங்களுக்குச் சூலக்கொடி. வஞ்சூராருக்கு முத்துக்கோவைக் கொடி, குடுகுடுப்பைக்காரருக்குச் சத்திக்கொடி. இருளருக்குச் சில்லாக்கோற்கொடி, வெளிக்கருமானுக்குத்துருத்தி, சம்மட்டிக் கொடி. வெளிக்கற்றச்சருக்கு உளிக்கொடி, கப்பல் தச்சருக்கு வாச்சிக்கொடி, கப்பல் வடுகருக்குக் சப்பற்கொடி, பவுனியர்க்கு டமாகக்கொடி. பண்டருக்குக் கத்திக்கொடி, வள்ளுவர்க்கு வெள்ளைக்கொடி, மகம்மதியருக்குப் பிறையுடுக்கொடி, மேனாட்டாருக்குப் பலவகைக் கொடிகள். 2. தாவரவகையைச் சேர்ந்த படர் கொடிகள். இவ்வகையில் பலவகைக் கொடிகள் உண்டு. கட்டுக்கொடி, இது நீரை தயிர்போல் கட்டிவிடுகிறது. புல்லுருவி, இது தரையில் வேர் பரவாமல் மரத்திலேயே பயிராய்த் தான் சேர்ந்த மரத்தைப் பாழாக்குவது. வெற்றிலைக்கொடி, இது காரமுள்ளதாய் இந்தியாவில் பலரால் உபயோகிக்கப்பட்டு வருவது. இவ்வகையில் வெற்றிலைவள்ளி, மிளகு, திப்பிலி சேர்ந்தவை. காஞ்சொறி, இதன் கொடியில் சுணையுள்ள முட்களுண்டு. இவை உடம்பில் படின் தினவுண்டாம். புதினா வைக்கோலை வெல்லத் தண்ணீரில் கலைத்துப் பாத்தியிவிட்டு மேல்மண் தூவி தண்ணீர் நனைத்தால் முளைப்பது. கருடன் கிழங்குக்கொடி, இது நீர் வேண்டாது அந்தரத்தில் நெடுநாள் தளிர்ப்பது, மற்றும் பல விநோதக் கொடிகளுண்டு. அவை அப்பைக்கோவை, அம்மான் பச்சரிசி, அவரை, ஆதொண்டை, இலைக் கொடி, உப்பிலாங்கொடி, ஊசிமல்லிகை, கற்கோவை, கரசனாங்கண்ணி, கர்ப்பூர வள்ளி, கருங்கோவை, கழற்கொடி, களிப்பிரண்டை, காக்கட்டான், கானாம்வாழை, கொடிவேலி, கொட்டைப்பாசி, கொத்தான், கொல்லங்கோவை, கோழி அவரை, சத்திக்கொடி, சிறு அம்மான் பச்சரிசி, சிறு கட்டுக்கொடி, சிறுகுறிஞ்சான்கொடி, சிறு புள்ளடி, சிவப்பு அம்மான்பச்சரிசி, சீந் திற்கொடி, சுரைக்கொடி, செங்கோவை, செப்பு நெருஞ்சல், தீம்பிரண்டை தொட்டாற்சுதுங்கி, நற்பாகல், நறுந்தாளி, நஞ்சு முரித்தான், நாளை, நிர்ப்பயற்றன், நன்னாரி, நன்மல்லி, நன்னெருஞ்சல், நாய்ப்பாகல், நீர்மேனெருப்பு, பவளக்குன்றி கொடி, பம்பந்தராய், பாகல், பிரம்மிய வழுக்கை, பிரண்டை, பீர்க்கு, புடல், புளிப்பிரண்டை, புனற்றண்டு, பூசினைக் கொடி, பெருங்கட்டுக்கொடி, பேய்ப்புடல், பேய்பாற்சொரி, பொடுதலை; பொற்றலைக்கையான் தசுரை, பொன்னாங்காணி, பொன் முசுட்டை, மிளகாணை, மிளகுக் கொடி, மிதிபாகல் மிரியார்கூந்தல், முடக் கறுத்தான், முசுமுசுக்கை, முல்லை, முசுட்டை, மூக்குறட்டை, மூசுமல்லிகை, யானை நெருஞ்சில், வல்லாரை, வரிக்கோவை, வனமல்லிகை, விஷ்ணுகிராந்தி, வெண்குன்றி, வெள்ளைச்சாறடை முதலிய பல. |
கொடிக்கம்பம் | இது முதலில் உபரிசரவசுவிற்கு இந்திரனால் கொடுக்கப்பட்டது. இக்கம்பத்தின் பொருட்டு உபரிசரவசு மார்கழி மாதம் சுக்லபக்ஷத்து இந்திரபூசையாக உற்சவம் செய்தனன். அது முதல் எல்லா அரசர்களும் அவ்வாறு பூசை செய்து வந்தனர். இக் கம்பம் 32 சாண் உள்ளது. இதனால் இந்திரனும் மற்றத் தேவர்களும் பூசிக்கப்படுகின்றனர். |
கொடிஞாழன் மாணிபூதனார் | கடைச் சங்கத்துப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை) |
கொடிப்பூ | மல்லிக்கைப்பூ, முல்லைப்பூ, வெட்சிப்பூ, தூதுளம்பூ, வெங்காயப்பூ, சாதிப்பூ முதலிய. |
கொடிமங்கலத்துவாதுளி நற்சேந்தனார் | கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் ஊர் கொடிமங்கலம் போலும். இதனைக் கோடிமங்கலம் என்பர். வாதூல கோத்திரத்து அந்தணராக இருத்தல் கூடும். (அகம்) |
கொடியூர்கிழார்மகனர் நெய்தற்றத்தனார் | இவர் கடைச்சங்கமருவிய புலவரில் ஒருவர். இவரியற்பெயர் தத்தர். இவர் நெய்தனிலத்தவர் போலும். தந்தையார் கொடியூர்கிழார். வேளாளர். (அக. 243) |
கொடுகொட்டி | சிவநிருத்தத் தொன்று. இது திரிபுரம் தீப்பட்டு எரியக்கண்ட சிவமூர்த்தி யாடியது. |
கொடுங்கோளூர் | 1. கழறிற்றறிவார் நாயனாருடைய இராசதானி, (திருவிளையா.) 2. சோநாட்டிலுள்ளதோர் ஊர். இக்காலத்துக் கொடுங்கலூரென்று வழங்கப்படுகின்றது. (சிலப்பதிகாரம்.) |
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டு | பொங்காநாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலையமாநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு என்பன. “தென்பாண்டிகுட்டம்குடம் கற்காவேண் பூழி, பன்றியரு வாவதன் வடக்கு நன்றாய, சீதமலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிருநாட் டெண். |
கொடும்பாவி | பறையரைக் காண்க, (தர்.) |
கொடும்பை | இது பாண்டி நாட்டுள்ள நாடு. (சிலப்பதிகாரம்.) |
கொடைமாட்சி | சம்விதத்தம்: கடவுளர், வேள்வி, பசுக்காத்தல் முதலியவற்றிற்குக் கொடுக்கப்படும் பொருள், பாரிதோஷிகம், வந்தியர், மாகதர், வல்லர், ஆடல் பாடல்களுக்குக் கொடுக்கப்படும் பொருள். சிரீதத்தம்: புகழைக் கருதியும், பயனைக் கருதியும் கொடுக்கப்படும் பொருள். இலஜ்ஜாதத்தம்: நண்பர், சம்பந்திகள், உறவினர் ஆகிய இவர்களிடத்தும் விவாக முதலிய காரியங்களிலும் மகிழ்ச்சியுண்டாம்படி கொடுக்கப்படும் உபகாரப் பொருள், பயதத்தம்: அரசனுக்கும், வலிய வர்க்கும், காரியக்கேடு விளைப்போர்க்கும், அச்சம் காரணமாகக் கொடுக்கப்படுவது. பாபதத்தம்: மக்களுக்குத் துன்பம் உண்டாக்கும் விலங்குகளுக்கும், சூது முதலியவற்றா லிழந்த பொருளும், கள்வராற் கவரப்பட்ட பொருளுமாம். (சுக்~நீதி.) |
கொடைவஞ்சி | உச்சமாகவும் மந்தமாகவும் அதன்மேற் சமமாகவும் இசையை அளந்து பாடின அறிஞர்க்குப் பரிசிலைக் கொடுத்தது. (பு. வெ.) |
கொட்டம்பலவனார் | இவர் கொட்டம்பலம் என்னும் ஊரினர். இவர் பாடலில் “குறக் குறுமாக்கள் தாளங்கொட்டும்” என்னும் தொடரிற் கொட்டுமென்னுஞ் சொற்சிறப்பானே கொட்டம்பலவன் எனப்பட்டா ரெனினுமாம். எனின் சேரமான் கொட்டம்பலத்துத் துஞ்சியமாக்கோதை என அகத்திலும், புறத்திலும் வருதலின் கொட்டம்பலமென வோரூருண்டு எனவும் அதனால் கொட்டம்பலவனாரென்பது ஊர் பற்றி வந்த பெயரெனவு மறிக. கழைக் கூத்தி கயிற்றில் நடக்கின்ற வழக்கு அக்காலத்தும் உண்டென்று இவர் பாடலான் அறியப்படுகிறது. இவர் குறிஞ்சித திணையைப் பாடியுள்ளார். தலைமகன் தன்னெஞ்சம் கொடிச்சிகைப்பட்டு விட்டதெனவும், அவள் விட்டாலன்றிப் பிறரால் விடுத்தற் கரியதெனவும், கூறுவதாகப் பல படப் புனைந்து கூறியுள்ளார். இவர் பாடியது நற். 95ம் பாட்டு. |
கொட்டரி | பாணாசான் தாய், கிருஷ்ணனுடன் யுத்தஞ்செய்த தன் குமரன் இறக்குந்தருணத்தில் நிர்வாணமாய் மத்தியிலிருந்து யுத்தத்தைத் தடுத்தவள். |
கொட்டாரச் சோமேசம் | வாச்சையரைக் காண்க. |
கொட்டாவி | இது முதலில் இந்திரனை விழுங்கிய விருத்திரன் வாயில் ஒட்டிக் கொண்டிருந்தது. இந்திரன் வெளிப்படும்படி தேவர் விருத்திரன் மேல் ஏவிய ஜிரும்பி காஸ்திரத்தால் அவன் வாயைத் திறக்கச்செய்த அங்க சேஷ்டை, இது தீச்சகுனம், இது தவஞ்செய் காலத்திலும், அநுஷ்டானம், ஜபம், ஈச்வராராதனை செய்யும் காலத்திலும் உதவாது. (தே~பாகவதம்). |
கொட்டைமுந்திரி | ஒருவகை தென்னிந்திய விருக்ஷம். இதன் இலையைத் தைத்து உண்கலமாக உபயோகிப்பர். இது தன் பழத்தினடியில் கொட்டைகொண்ட மரம். இதன் பழத்தின் ரஸத்தில் ஒருவகை மயக்கமுண்டு. கொட்டையினுள் உள்ள வித்தினைப் பலகாராதிகளுக்கு உபயோகப் படுத்துவர். |
கொண்கானங்கிழான் | கொண்கானத் தரசன், மோசிகீரனாராற் பாடப்பெற்றவன். (புற~நா). |
கொண்கானம் | இது ஒரு மலை. (புற~நா.) |
கொண்டகம்புகுதல் | அன்புமிகக் கொழுநனைக்கண்டு மாலையாற் கட்டி அகத்திலே கொண்டு புக்கது. பு. வெ. பெருந்திணை. |
கொண்டாழி | சோழனை உட்கொண்டு ஆழ்த்திய தோரோடை. (திரு.) |
கொண்டு கூட்டுப்பொருள்கோள் | செய்யுளடி பலவினும் தொடுக்கப்பட்ட சொற்களைப் பொருளுக்குத் தக்கபடிக் கூட்டுவது. (நன்னூல்.) |
கொண்டைகட்டிகள் | 1. வேளாளருள் ஒரு வகை வகுப்பினர். இவர்கள் குடுமிக்குப் பிரதியாகச் சிகையைக் கொண்டைபோற் கட்டியிருந்ததாற் பெற்றபெயர், இவர்கள் குறும்பரசருடனிருந்த பழக்கத்தா லவ்வாறு கொண்டை பெற்றிருந்தார்கள் என்பர். அன்றியும் நாவிதன் தங்கள் சிகை யைத் தொடாது கொண்டை கட்டிக் கொண்டிருந்தவராதலின் இப்பெயர் அடைந்தனர் என்பர். 2. இவர்கள் வேளாளரில் உயர்ந்தாரென்று தங்களில் மதிப்பு. இவர்கள் நவாபு அரசாட்சியில் உயர்ந்த உத்யோ கத்தில் இருந்தனர் என்பர். இவர்கள் தங்கள் சிகையை மேல் முடிந்திருந்ததால் இப்பெயரடைந்தனர். இவர்களில் பெரும்பாலார் சைவர். ஆசாரமுள்ளவர்கள், இவர்களில், மேல் நாடு, கீழ்நாடு, தக்ஷிணத் தார் தொண்டைமண்டலத்தார் எனப் பிரிவுகள் உண்டு, |
கொண்டைலாத்திக்குருவி | இது மீன்குத்திக் குருவியினத்தைச் சேர்ந்தது. இதன் தலையில் அழகிய கொண்டை ஒன்று உண்டு. அந்தக் கொண்டையை அது களிப்படைத் திருக்கையில் விரித்தும் குவித்தும் விளையாடும். இது செம்மை கலந்த மஞ்சணிரமுள்ளது. இதன் தோகையினும் இறக்கையினும் வெண்மையான வரிகள் இருக்கின்றன. இது மரங்களிலும் பூமியிலும் பூச்சிப் புழுக்களைத் தோண்டியுண்ண இதன் மூக்கு நீண்டிருக்கிறது. இப் பறவையினம் கோடைகாலத்தில் வெகுதூரம் யாத்திரை செய்து மழைக்காலத்தில் திரும்புகிறது. |
கொத்தப்பியர் | பரதகண்டமாண்ட பூர்வ அரசசாதியர். |
கொத்துமல்லி | (உருளரிசி) இது சம்பாரங்களில் சேர்க்கப்படும் பொருள். இது களிப்பும் கரிசலுமான நிலத்தில் பயிராவது, உஷ்ணத்தைத் தணிக்கும் பொருள். இதன் இலை மணமுள்ள தாதலால் கறி முதலிய பதார்த்தவகையில் சேர்த்துண்பர். |
கொந்தகக்குலம் | மதுரைக்கு அக்கினி மூலையில், 4 நாழிகை வழித்தூரத்திற் கொந்தகையென்று ஒரூருண்டு: அதிற் கொந்தக வேளாளரென்று ஒரு வகுப்பினருளர், (திருவிளையாடல்.) |
கொந்தகை | கொந்தகக்குலம் காண்க, (திருவிளை.) |
கொன்றை | ஒருவகை மணமுள்ள மலர் கொண்ட மரம், இது, சரக்கொன்றை, சிறுகொன்றை, புலிநகக் கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக் கொன்றை, மயிற்கொன்றை, செம்மயிற் கொன்றை, பொன்மயிற் கொன்றை, முட்கொன்றை, கருங்கொன்றையெனப் பலவகைப்படும். |
கொன்றைவேந்தன் | ஔவை அருளிச் செய்த நீதி நூல், சிவபெருமான். |
கொப்பரகேசரிவன்மர் | ஒரு சோழ அரசர். இவர் மதுரை ஈழம் முதலிய நாடுகளைச் செயித்தவர். இவர் ஆதித்த சோழரது குமரர். இவருக்குப் பராந்தகன், வீராநாரணன் என்று வேறு பெயர்களுண்டு. இவர் மனைவி கோக்கிழார் என்பவள். இவள் கோளதேசத்து அரசன் புதல்வி. இவர்க்கு இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் என மூன்று குமரர். |
கொம்பரக்கு | இது ஒருவித அரக்கில் சேர்க்கையான பொருள். சாயம் போடுவதற்கும் மருந்திற்கும் உதவி. இவ்வினத்தில் பலவுண்டு அவற்றில் அவலரக்கு, இதனைத் தட்டார் பெரும்பாலும் உபயோகிக்கின்றனர். செவ்வரக்கு முண்டு. |
கொம்பு கொண்ட பறவை | (பாலமீடா) இது தென் அமெரிக்கா நாட்டில் பிரேசில், சயானா முதலிய பிரதேசங்களில் வசிப்பது. இது மயிலையொத்த வுருக்கொண்டது, இதன் கழுத்தில் சிறகுகளில்லை, இதன் சிறகுகள் நீலங்கலந்த பொன்னிறமுள்ளவை, இதன் அலகு நீண்டு முனை வளைந்தது, இதன் நெற்றியில் அழுத்தமான கொம்பொன்று முளைத்திருக்கிறது. இக் கொம்பு ஆண் பறவைக்கேயுண்டு, இது அந்நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களில் வசித்துப் பூச்சி, தான்யம், நீர்ப் பூண்டுகளையுணவாக் கொள்ளும், இது கோடைகாலத்தில் புதர்களில் மெத்தென்ற சரகு சேர்த்து வருஷத்திற் கொருமுறை முட்டையிட்டு அவயங்காத்துக் குஞ்சு பொரிக்கும். |
கொம்புள்ள ஒருவித பறவை | (Horned Screamer) ஒருவித பறவை. பெரிய வாத்துப் போன்றது. தலையில் கொம்பு போன்ற உறுப்புக்கொண்டது. கறுப்பும் வெண்மையுங் கலந்த இறகுகளையுடை யது, தென் அமெரிக்காவிலுள்ளது. |
கொம்புள்ள தேரை | இது ஆறு அங்குலம் நீளமும், பெரிய வாயும், கண்ணிற்கு நேராகப் பெரிய கொம்பு போலுறுப்பும் உள்ளது. இது தவளைகளைப் பிடித்துத் தின்பது. தென் அமெரிக்காவிலுள்ளது. |
கொம்புள்ள மூக்குப் பறவை | இது சென்னை இராஜதானியைச் சேர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளி லிருக்கிறது. இதன் உடல் 1 1/2 அடிகள் நீளம், 3/4 அடி கனம். இதன் இறக்கைகள் பெரியவை, இதன் மூக்கு 10 அங்குலம் நீளமுள்ளதாய்ப் பருத்திருக்கிறது. இந்த மூக்கின் மேலிடத்தில் மூக்கையொத்த ஒரு உறுப்பு மேல்நோக்கி வளர்ந்திருக் கிறது. இவ்வினத்தில் ஒற்றைக் கொம்புள்ளதும், இரட்டைக் கொம்புள்ள தும் உண்டு. இதன் மூக்குச் செவந்த நிறம். இது கரிய சாம்பல் நிறமானது. இதன் கால்களில் நகங்கள் கூர்மையாய் வளைந்தவை. இஃது உரத்துக் கத்தும் ஒலி 1 மைல் கேட்கும், இது மரப் பொந்துகளில் கூடுகட்டி முட்டையிட்டு அவயங்காக்கும். இது, அவயங்காக்கும் பெட்டை இருக்கும் கூட்டை மண்ணாலடைத்து ஒரு தொளையிட்டு அத்தொளையின் வழி பேட்டிற்கு இரை தரும், முட்டை பொரிந்த பின் குஞ்சுகளுக்கும் தொளை வழி இரை தரும். |
கொம்புள்ள விரியன் பாம்பு | இது வட அமெரிக்காவிலுள்ள மணலுள்ள இடங்களில் உடல் முழுதும் மணலில் மறைத்துத் தலை, கொம்பு, கண்களை வெளியில் காட்டிக்கொண்டிருப்பது. 30 அங்குல நீளமுள்ளது, அதிக விஷமுள்ள பிராணி. |
கொய்யடி நாரை | இது நீர்வாழ் பறவையினத்தின் வகையது. இது பிளந்த அடிகளையுடையது. இது கால்கள் நீண்டும் அலகும் கழுத்தும் நீரிலுள்ள மீன்களைப் பிடிக்கும் வகை மீண்டும் உள்ளது. இவ்வினத்தில் பெருநாரை, கருநாரை, வெண்ணாரை, குருட்டு நாரை முதலியவுண்டு இவற்றில் சில நீரில் நிற்கையில் ஒற்றைக் காலால் நிற்கும். |
கொறகர் | இவர்கள் ஒரு தாழ்ந்த வகுப்பினர். இவர்கள் தென்கன்னட வாசிகள் குடிசைகளில் காட்டில் வசிப்போர் இவர்கள் கூடை முற முதலிய கட்டிப் பிழைப்போர். உண்ட எச்சில் உண்போர் சிலர் உழவர்களுக்கு அடிமை செய்து வாழ்வர். |
கொற்கை | பாண்டி நாட்டுப் பழைய இராசதானி. இதற்குக் காத தூரத்திற்கு அப்பால் சாலி ஆபுத்திரனைப்பெற்றாள். (மணி) |
கொற்றங் கொற்றனார் | இவர் மாற்றூர்கிழார் மகனார் கொற்றம் கொற்றனாரென அகத்திக் கூறப்படுவர், வேளாண் மரபினர். மாற்றூர் பலவுளவாதலின் இவரூர் இன்ன இடத்ததென்றறியக் கூடவில்லை. இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். காவிரியின் வடபாலுள்ள சிறு குடியென்னும் ஊரினையும் அதனை ஆட்சிபுரிந்த பண்ணனென்பவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். (அகம் 54) இவர் பாடியனவாக நற்றிணையில் 259ம் பாடல் ஒன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் இருக்கின்றன. |
கொற்றனார் | செல்லூர் கொற்றனார் எனவும், செல்லூர் கீழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் எனவும் கூறப்படுவர் இவரே. செல்லூர் சோழநாட்டுக் கீழைக்கடலருகிலுள்ளது. பரசுராமமுனிவர் பெருவேள்வி செய்தவூரிதுவே. இக்கொற்றனார் பெரும் பூதனார் என்பவரின் புதல்வர். வணிகர் மரபினர் இவர் மருதம், நெய்தல், பாலை இவைகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைமகனைப் பரத்தையர் பலர்கூடிக் கைகளைப் பற்றியீர்த்தலும், அவரிடைப்பட்டு மயங்கும் அவனது நிலமையை விளங்கக் கூறியுள்ளார். இவர் பாடியனவாக நற். 30ம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும் அகத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
கொற்றன் கருவிகள் | அடிக்கோல், மட்டப்பலகை, நீர்மட்டப்பலகை, மணியாசலக்கட்டை, கொல்லர்பெரிது, அச்சக் கொல்லர், கட்டப்பாறை, மண்வெட்டி, சேறு, சுண்ணாம்பு, மணல், தண்ணீர். இவர்கள் கல் அடுக்கலை பாட்டு நாட்டென்பர். அவற்றிற் கிடையில் வைக்கும் சிறு பொடி கடைக்கால் என்பர். இரண்டு கற்களுக்குமிடையிலுள்ள இடத்தை இசைப்பு என்பர். |
கொற்றவஞ்சி | உலகத்துள்ளா ரெல்லாருந் தொழவாளாலே வெட்டினானெனச் சொல்லிப் பண்ணினவீரக் கழலினை யுடைய அரசனது நன்மையைப் பெருகச் சொல்லியது (பு. வெ). |
கொற்றவள்ளை | அரசன் கீர்த்தியைச் சொல்லிப் பகைவர் தேசம் கெடுவதற்கு வருந்தியது. (பு. வெ.) |
கொற்றவுழிஞை | பகைவர் தங்காவல்பதியைக் கைக்கொள்வான் வேண்டிச் சேனையோடு கைவளர்ந்து சென்றது. (பு வெ). |
கொற்றவைநிலை | 1. நீண்ட தோளினையுடையவன் வெற்றி பெறுவானாகவெனச் சொல்லி நல்ல பொருள்களால் நிறம்பிய பாத்திரத்தை வெற்றியாக வெடுத்து அரசனுடைய பகைவரை முதுகுபுறங் காணும் துர்காதேவி நிலைமையைச் சொல்லியது. (பு. வெ.) 2 விளக்கத்தினின்றும் ஒழியாதவெற் நியான்மிக்க ஆயுதத்தை உடையோளது இரக்கத்தினின்றும் ஒழியாத கருணையைச் சொல்லியது. (பு. வெ), 3. வலியினையுடைய வீரர் செய்யும் தொழிலைச் சொல்லுதலும் முடிவில்லாத அறிவினை யுடையோர் அத்துறையென்று சொல்லுவர். (பு. வெ). |
கொல்லனழிசி | (கம்மியர்போலும்) இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் அழிசியாக இருக்கலாம். இவர்க்குச் சோழர் குடியினராகிய அழிசியின் வேறுபடுக்கக் கொல்லன் அழிசி என ஜாதிப்பெயரடை இட்டனர் போலும், கு று 27, 138, 145, 240. |
கொல்லர் | கம்மாளர். |
கொல்லி | ஒரு மலை (சிலப்பதிகாரம்). |
கொல்லிக்கண்ணன் | சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கண்ணராக இருக்கலாம். இவர் கொல்லிமலை நாட்டைச் சேர்ந்தவர்போலும். குறு. 34. |
கொல்லிக்காவல்தாசர் | பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி. இவர்க்குக் கோட்டாரழகிய மணவாள தாசர் என்றும் பெயர், |
கொல்லிப்பாவை | இது கொல்லிமலையின் மேல்பாற் செய்து வைக்கப்பட்ட பெண் வடிவமாகிய பிரதிமை, கொல்லி மலை தவஞ்செய்வோர்க்கும் தனித்துறை வோர்க்கும் தகுதியான இடம். தேன் பழமுதலாய உணவுப் பொருள்கள் மிகுதியாகக் கிடைக்குமாதலால் இனிதினிருக்கக்கூடும். இதனை எண்ணியே தேவரும், முனிவாரும் அங்குவைகுவாராயினர். இவர்கள் தங்கியிருப்பது கண்ட இராக்கரும், அசுரரும், அங்குவந்து கூடுவாராயினர். இவ்வாறு இராக்கதாதியர் வந்து நெருங்கவே முனிவர்கள் தவத்துக்கு ஊறு நேர்வதாயிற்று. அப்பொழுது தேவரும் முனிவரும் தனியிருந்து ஆராய்ந்து அப்பகைவர் மனத்தை அடக்கவல்ல எல்லராதலின் அவர்கள் வருநெறியிற் கண்டு மயங்கி உயிர்விடும்வண்ணம் அழகமைந்த பெண் வடிவஞ்செய்து வைப்பதாக நிச்சயித்து விச்சுவகன்மாவுக்குக் கூற அவனும் அம்மலையின் மேல்பால் அசுராதியர் வருநெறியிற் கல்லாற்பாவை யொன்றமைத்து உள்ளே பலவகையான சக்தியை ஊட்டி நிலை நிறுத்தினான். இப்பாவை இயங்குந் தன்மையுடையது. இராக்கதாதியர் வாடை பட்டவுடன் நகைக்கும் திறனுடையது. கண்டவரது உள்ளத்தையும், விழியையும் கவர்ந்து அவர்க்குப் பெருங்காம வேட்கையையுறுவித்து இறுதியிற் கொல்லத்தக்க மோகினி வடிவமுடையது. இப்பாவையை நோக்கினோர் அஃது இயங்குவதையும், நகைப்பதையுங் கண்டு மடந்தை போலுமென்று மயங்கிக் காமநோய்கொண்டு கிடந்து மடிவரென்பதாம். இது நகைத்துயிர் வாங்குமென்பது திரிபுரத்தைச் செற்றவனுங் கொல்லிச் செழும் பாவையு நகைக்கக், கற்றதெல்லா மிந்த நகை கண்டேயோ என்பதனாலறிக. இப்பாவை காற்று, இடி, மழை முதலியவற்றால் கெடாதென்பதை நற். 185, 201ம் செய்யுளாலறிக. 2. இப்பாவை, தேவதைகளால் காக்கப்படுவதென்பதும், காற்று, மழை, இடி, பூகம்பம் முதலிய இடையூறுகளாலும் தனது உருக்கெடாமல் என்றும் தன்னியல்பு கெடாதிருப்பது, இதனை கொல்லித், தெய்வங், காக்குந்தீது தீர்நெடுங் சோட்டயவெள்ளருவிக் குடவரையகத் துக், கால்பொருதிடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன் றெறியினும் ஊறு பல தோன்றினும், பெருங்லங்கிளரினும் திருநலவுருவின், மாயாவியற்கைப்பாவை, (நற்றிணை) என்பதாலறிக, இப்பாவை கண்டார் மனதைக் கவருந் தன்மையுடையது என்பதைத் தமிழ் நூற் புலவர்கள் பல இடங்களில் எடுத்தாளுதல் காண்க. 3. இது கொல்லியெனும் பெயர்கொண்ட மலையின் கணுள்ள ஒரு பெண்பாற் பிரதிமை, இம்மலை வல்வில் ஓரியென்னும் சிற்றரசனுக் குரியது. இப்பாவை கண்டார் உள்ளமும், விழியையும் கவர்ந்து பெருங்காம வேட்கையுறுவித்து இறுதியிற் கொல்லத்தக்கதாகத் தெய்வத்தாலே யமைக்கப்பட்ட ஒரு மோகினிப்படிமை. இது தெய்வநிர்மாண மென்ப, இது திருமகள் முன் ஒருகாலத்துப் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இவ்வுருக் கொண்டு ஆடியதென்பர். |
கொல்லிமழவன் | ஒரு சிற்றரசன் திருஞானசம்பந்தர் காலத்தவன். திருஞான சம்பந்தரைக் காண்க. |
கொல்லைக்காரர் | தெலுங்கநாட்டுத் தோட்டிகள். |
கொள்ளந்தை மகருஷி கோத்ரன் | சோழராசன் விற்பிடி வேண்டுமென்று கேட்கக் கருடனைப் பாதலத்திற்கழைத்துச் சென்று ஆதிசேடனிடம் விற்பிடி மணி வாங்கிக்கொடுத்து இரவெழுமாதித்தன் எனப் பெயர்பெற்ற வைசியன். |
கொள்ளம் பக்கனார் | இவர் இயற்பெயர் பக்கனென்பது, கொள்ளம் ஒரூர். குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். உடம்பு வேறுபட்டமைப்பற்றி நற்றாய் வினவியதற்குக் காதலனொடு கூட்ட முண்மையை வினவியதாகக் கொண்டு வரை நாடனை அறிந்திலேன் கண்டதுமில்லை அவனோடு சுனையாடினது மில்லையே யென்று கூறி விட்டனையே, இனி என்னாகி முடியுமோ என்று தோழி கூற்றாக இவர் பாடியது வியக்கத்தக்கது, நற். 147ம் பாட்டு. |