அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கை

அஃதாவது தனது எண்ணத்தினையும் மற்றவரது எண்ணத்தினையும் கரத்தால் தெரிவிப்பதாம். அது இரண்டு வகைப்படும். இணையாவினைக்கை, இணைக்கையென. இவற்றை ஒற்றைக்கை, இரட்டைக்கை யெனவுங் கூறுவர். இவற்றுடன் ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கையென நான்கினையுங் கூட்டி ஆறெனவுங் கூறுவர். அவற்றுள் இணையா வினைக்கை (33) அவை (1) பதாகை, (2) திரிபதாகை, (3) கத்திரிகை, (4) தூபம், (5) அசாளம், (6) இளம்பிறை, (7) சுகதுண்டம், (8) முட்டி, (9) கடகம், (10) சூசி, (11) கமலகோசிகம், (12) காங்கூலம், (13) பித்தம், (14) விற்பிடி, (15) குடங்கை, (16) அலாபத்திரம், (17) பிரமரம், (18) தாம்பிரகுடம், (19) பசாசம், (20) முகுளம், (21) பிண்டி, (22) தெரிநிலை, (23) மெய்ந்நிலை, (24) மண்ட லம், (25) உன்னம், (26) சதுரம், (27) மான்றலை, (28) சங்கு, (29) வண்டு, (30) இலதை, (31) கபோதம், (32) மகாமுகம், (33) வலம்புரி என்பனவாம். இணைக்கை பதினைந்து வகைப்படும். அவை (1) அஞ்சலி, (3) புட் பாஞ்சலி, (3) பதுமாஞ்சலி, (4) கபோதம், (5) கற்கடம், (6) சுவத்திகம், (7) சுட காவருத்தம், (8) நிடதம், (9) தோரம், (10) உற்சங்கம், (11) புட்புடம், (12) மகரம், (13) சயந்தம், (14) அபயவத்தம், (15) வருத்தமானம் என்பனவாம். இவற்றைப் பாதத்திற் கூறினாம், ஆண்டுக் காண்க.

கைகசன்

இவன், சூரியனிடம் என் கண்ணிற்கு முன் போர்புரிய நிற்போர் எரிந்து போக வேண்டும் என வரம் பெற்றுத் தேவியின் சைந்யத்துடன் யுத்தஞ்செய்ய வந்து சைரியங்களைக் கண்ணொளியால் தகித்தனன். இவனைத் தேவியி னேவலால் திரஸ்கரிணி தேவி தமோ மாயையால் ஒளிமங்கச்செய்து இவனையும் இவன் சேநாதிபதிகளாகிய வலாகன் முதலிய எழுவரையும் வதைத்தனள். (தே~பா.)

கைகசி

ஒருவகைக் கணக்கர் சாதி, இவர்களில் மருமகள், தன் மாமியாருடன் நேராகப் பேசாது கை சமிக்ஞையால் பேசுவாள்.

கைகேசி

தசரதன் தேவி, பரதன் தாய். சம்பரன் யுத்தத்தில் தசரதனுக்குச் சாரதியாயிருந்து இரண்டு வரம் வாங்கினவன். கூனியாகிய மந்தரைகூறிய சூழ்ச்சியால் இராமமூர்த்தியைக் காட்டிற்கு அனுப்பி னவள். இவட்குக் கைகேயியெனவும் பெயர். இவள் தவளாங்கமுனிவரிடத்தில் பெற்ற வரத்தால் தசரதனுடன் மாயை புரிந்தெதிர்த்த அசுரரைவென்று இரண்டு வரம் வேண்டினவள் என்பர்.

கைகேயி

1. கைகேசிக்கு ஒரு பெயர். 2. விராடன் தேவியாகிய சுதேஷ்ணை.

கைகை

ஓர் கற்பினி, சாந்திலையிடத்துக் கற்பினிலை கேட்டறிந்தவள்.

கைக்கிளை

1. கோடாத அன்பினையும் நுடங்குத் தன்மையினையு முடையவள் தலைவனுடைய வளவியமாலையை ஆசைப்பட்ட கூறுபாட்டைச் சொல்லியது (பு. வெ~பாடாண்.) 2. இது, காமநுகர்தற் கமைந்த தலைமகளிடத்துண்டாம் குறிப்பினைத் தானறியுமளவும் தலைமகனவளைச் சார்ந்து நின்று பின் வசமாம் நெஞ்சொடு கூறல் 3. தலைவியைக் கண்ட தலைமகன் சிற்றுறவு கொள்ளுதல். இது காட்சி, ஐயம், துணிவு குறிப்பறிதல் என நால்வகைத்து, இது முதனாள் நிகழ்ச்சி.

கைக்கோளன் கருவிகள்

பன்னே, அச்சு, பில்லு, நாடா, தூத்துக்கோல், ஊணி, தடைமரம், பாவு.

கைக்கோளர்

1. பருத்தி நூலாலும் பட்டு நூலாலும் சீலைகள் நெய்யும் வகுப்பினர். இவர்கள் குமாரக் கடவுளுக்குக் குந்தம் பிடித்துச் சேவகரான தால் செங்குந்த ரெனவும் படுவர். இவர்கள் சோழியர், ராத்தர், சிறு தாலி, பெருந்தாலி, சீர்ப்பாடம், சேவகாவிர்த்தியென வகுக்கப்பட்டிருக்கின் றனர். இவர்களிற் பெரும்பாலார் சைவர். மாகாட்டான் இவர்களுக்குப் பெரிய அதிகாரி. (தர்ஸ்டன்.) 2. (சாலியர்) வைசியன் அரசகன்னி கையைப் புணரப் பிறந்தவன். துணி நெய்வோன். அல்லது வைசியன் சூத்திர கன்னிகையைப் புணரப் பிறந்தவன். (அருணகிரிபுராணம்.)

கைசிகி

காமவிகற்ப முபாங்கமாவது (வீரசோ.)

கைடவன்

விஷ்ணுவின் காதின் வழிப் பிறந்து விட்ணு சிட்ணுவால் சங்கரிக்கப் பட்டவன். இவன் பிறகு அதிகாயனாகப் பிறந்தனன். மதுவைக் காண்க, விஷ்ணுவின் மூச்சில் பிறந்தவன் என்றுங் கூறுவர். இவன் மதுவுடன் கூடிப் பிரமனை வருத்தப் பிரமன் விஷ்ணுவையடைய விஷ்ணு இவர்களை நோக்கி யென்ன வரம் வேண்டுமென்ன இவன் திருமாலை நோக்கி உமக்கு வேண்டும் வரம் விரும்புக என விஷ்ணு என்னால் நீவிர் இறக்கவெனக் கேட்டு அங்ஙனம் பெற்று அவனைக் கொலைசெய்ய மாண்டவர்.

கைத்தொழில்

(5) எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்.

கையங்கண்ணனார்

கடைச்சங்கமருவியப் புலவர்.

கையடர்

ஒர் பழைய தமிழாசிரியர். இவர் செய்த நூல் இறந்தது.

கையனார்

தமிழாசிரியரில் ஒருவர். இவர் யாப்பிலக்கண நூலாசிரியர். அமுதசாகரர் செய்த காரிகையுரையில் இவர் செய்த யாப்பியற் சூத்திரம் ஆங்காங்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறது.

கையறுநிலை

1. தொழில் அழகு பெற்ற வீரக் கழலினையுடைய வேந்தன் அஞ்சினானாக அணைந்தோர் இறந்தமையைச் சொல்லி ஒழுக்கந் தளர்ந்தது. (பு. வெ. பொதுவியல்,) 2. இறந்தோன்றன்னுடைய நாமத்தை அன்புற்றுச்சொவ்வினும் முன்பு சொன்ன துறையென்று சொல்லுவர். அறிவுடையோர். (பு. வெ. பொதுவியற்) 3. அஞ்சத்தகும் வாட்பூசலிலே பட்டோனைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் பட்ட படியைச் சொல்லியது. (பு. வெ.)

கைலாசன்

இவன் கைலாச மலையுருவாய்ச் சிவபிரானைத் தாங்கி நிற்பவன். இவன் சிவபிரானால் மானதமாகச் சிருட்டிக்கப் பட்டவன். இவன் சிவபிரானின் அருள் வேண்டிப் பத்துயுகங்கள் தவமியற்றச் சிவ மூர்த்தி தரிசனந்தந்து கிரீந்திர சக்ரவர்த்தித்வம் அளித்துக் காணாதிபத்தியமும் தமக்கு இருப்பிடமாம் தன்மையும் அருள் புரிந்தனர். இதனால் கைலாசன் நாம் சிவ பெருமானைத் தாங்கப்பெற்றோம் எல்லாச் சிவலிங்க மூர்த்தங்களையும் நாம் தாங்கப் பெற்றோம் ஆதலால் நாமேவன்மையுடை யேம் என்று சற்று இறுமாப்புற்று இருந்தனன். இதனை உணர்ந்த சிவமூர்த்தி தேவர்கள் செருக்கடைந்த காலத்து அவர்களின் செருக்கடக்கி ஆட்கொள்பவராதலால் கைலாசனை அவ்வாறு செய்ய எண்ணிச் சிவபூசாதுரந்தரனும், தன் சரீரத்தை வெட்டிச் சிவனுக்கு ஹோமஞ் செய்தவனும், தன் தலைகளை மலர் மாலையாகத் தொடுத்துச் சிவலிங்கத்திற் கணிந்து பூசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றவனாகிய இராவணன் கைலையைக் கையாற் பெயர்க்க முயன்றான். இதனையறிந்த சிவமூர்த்தி சிறிது விரலால் அழுத்தினர். கைலாயத்தி னடியில் அவனது கைகளகப்பட்டு நசுங்கக் கிலேச மடைந்து சாமவேதத்தை (1000) வருடம் தோத்திரஞ் செய்தான். பின் சிவபிரான் அவனை அனுக்கிரகித்தனர். அந்தசுக்கலால் கைலாயன் கர்வமும் பங்கமாயிற்று, (சிவரகசியம்.)

கைலாசவாசி

சிவமூர்த்தி.

கைலாசாதிபர்வதவிரம்

இமவத்பர்வதத்தின் பிருஷ்டபாகத்தில் கைலாசம் உள்ளது. அதில் அநேக குய்யகரோடு குபேரன் வசிப்பன், அதிலுள்ள தடாகத்திலிருந்து மந்தாகினி என்னும் நதம் உற்பத்தியாகிறது. அதின் வழியில் சந்தன வநமும், சுவேலபர்வதத்திற்கு எதிராய், சந்திரபிரபை என்கின்ற பர்வதங்களும் உண்டு. அதற்குச் சமீபத்தில் அச்சோதை என்னும் தடாகம்; அதிலிருந்து அச்சோதை என்னும் நதி பிறக்கும். அதன் கரையில் சைத்திராதவரும் இருக்கின்றது. சந்திரப்பிரபை என்கிற பர்வதத்தில் யக்ஷ சேநாபதியாகிய மாணிபத்திரன் வசிப்பன். சபலபர்வதத்திற்கு எதிரிலே சூரியபிரபை என்கிற வனம் உண்டு. அதில் லோகிதம் என்கின்ற தடாகம் இருக்கின்றது. அதிலிருந்து லௌகித்தியாதி உண்டாகிறது. அதன் தீரத்தில் தேவாரணியம் இருக்கின்றது. அதில் மாணிதான் என்னும் யக்ஷன் இயக்கர்கள் உடன் வசிக்கின்றனன். கைலாசத்திற்கு மேற்கில் குருத்மந்தம் என்கின்ற பர்வதம் உண்டு, அது சிவஸ்தானம். அவ்விடத்தினுள்ள சரோவரத்தில் பெருகிய நதியே சரயூநதி எனப்படும். அதின்கரையில் வய்பிராஞ்சம் என்னும் வனம் உண்டு. அது குபேரானுச்சாமாகும் பிரகேதியின் குமாரனாகும் பிரம்மதானன் வாசஸ் தானம் ஆம். அதற்கப்பால் அருணம், முஞ்சவந்தம் எனும் பர்வதங்கள் உள. அது சிவஸ்தானம், அவ்விடத்திலுள்ள சைலோத்த தடாகத்தில் இருந்து பெருகியது சைலோநதி எனப்படும். கைலாசத்திற்கு வடக்குக் கௌர பர்வதம் உண்டு. அதில் காஞ்சனவாலுகம் என்கிற புஷ்கரணி இருக்கின்றது. அது அபிந்து சசோவரம் எனப்படும். இவ்விடத்தில் பகீரதன் அநேககாலந் தவஞ்செய்தனன், இவ் விடத்தில் கங்கை சோமபாகத்தில் பிறந்து சப்தவாகினியாய்ப் பிரவாகித்தனள். அக்கங்கை ஆகாச முதலியவற்றைச் சுத்தமாக்கிப் பூமியில்வர யோகமாயையினால் கட்டப்பட்டதனால் கோபித்துச் சிவனை நிக்கிரகித்துப் பாதாளத்திற்குப் போக இருந்த சடியத்தில் சிவமூர்த்தி பிரமன் கூறியதை எண்ணிவிட அக்கங்கை எழுவி தமாய்ப் பிரவாகித்து நளினி, அலாதனி, பிலாவனி எனும் மூன்று வெள்ளங்கள் கிழக்கிலும், சீத, சட்சு, சிந்து எனும் மூன்று பிரவாகங்கள் மேற்கிலும், மற்றொன்று பகீரதன் பின் தெற்கிலும் பிரவாகித்தனள். இக்கங்கையில் அநேக உபகதிகள் பிறந்தன. வஸ்வோகசாரம் என்னும் நதி தீரத்தில் சுரபிவனம் உண்டு, அதில் குபேரன் நண்பனாகிய இரண்யசிருங்கன் பிரம்மரா க்ஷசர்களோடு கூடிவசிப்பன், ஏமகூடபர்வதத்தில் உண்டாம் சர்ப்பசரசில் இருந்து சரஸ்வதிந்தியும், நிஷதபர்வதத்தில் விஷ்ணுபதத்திலிருந்து சரசிந்தியும் பிறந்தன. அவற்றிலிருந்து உண்டான நதிகள் காந்தாரி, குலயு எனப்படும். மேருவின் பக்கத்தில் சந்திரப்பிரபை என்கிற தடாகம் உண்டு. அதிலிருந்து பிறந்த நதி ஜாம்பு நதி எனப்படும். பின்னும் அவ்விடத்தில் புண்டரீகபயோதம் என்கிற தடாகம் உண்டு அதில் மேகங்கள் உண்டாம். இமய பர்வதத்திற்கு வடக்கில் மானசமடு உளது. அதிலிருந்து அமிர்தகாந்தை உண்டாயிற்று. பின்னும் குருதேசத்தில் வைஜயம் என்சிற (12) மடுக்கள் உள. அவற்றில் சாந்தி, சந்தியை என்கிற இரண்டுநதிகள் உண்டாகும். கிம்புருஷம் முதலான (8) வருஷங்களில் மழை பொழியாது. அவ் விடத்திலுள்ள நதிகளிலேயே அவர்கள் திருப்தி அடைவர், ருஷப, மைநாக, பாலக, வச்சிர, சந்திர காந்த, துரோண, சக்கிர, சுமந்து, உதிசா, நாரத, ஜீமூத, திராவண முதலிய பர்வதங்கள் நான்கு திக்கிலும் கடலில் மூழ்கியிருக்கின்றன. வச்சிரமைநாக பர்வதங்களுக்கு இடையில் சம்வர்த்தகம் எனப்படும் அச்நிபர்வதம் உண்டு, அது ஜலங்களை எல்லாம் பானஞ் செய்து கொண்டிருக்கும். (புராணம்). தேவர்களுக்கு இருப்பிடம் மேரு. இது கீழே பதினாறு கிளையாயும் மேலே முப்பத்திரண்டு வகையாயும் பிரிந்துள்ளது. இது மகாகைலாசத்தின் எதிரில் ஒரு சிறு அணுவை யொப்பது கைலாயம் அடி முதல் சிகரமீறாக லக்ஷம் யோசனை யுயரம் உள்ளது. அதினுள் ஏழு குலாசலங்களும் நூறுப்பாகார கோபுரங்களும் உள்ளன. பராகாரத்திற் கிடையில் சமுத்திரங்களோடு கூடிய எழு தீவுகளிருக்கின்றன. அது கோடி யோசனையுள்ள ஓர் ரசிதபர்வதமாய் ஜொலிப்பதாய்ப் பதினான்கு லோகங்களும் கொடுமுடிகளில் அடங்கப் பெற்றதாயுள்ளது. இம் மகாபர்வதத்திற்குக் குமுதம், பாரியாத்திரம், மைனாகம் இவைகள் கிழக்கிலிருக்கின்றன. தற்தரம், மலையம், விந்தம் இவைகள் மேற்கிலிருக்கின்றன. உதயம், அஸ்தம், முஞ்சமாகிய இவைகள் வடக்கிலுள்ளன. நீலம், தக்ஷண சைலாசம், இமவான் இம்மூன்றும் தெற்கிலிருக்கின்றன. அகழி போன்ற ஏழு கடல் களினிடையில் ஏழு தீவுகளும் ஏழு பர்வதங்களு மிருக்கின்றன. அங்குத் தேவராதிகள் வசிக்கின்றனர். பாற்கடலின் கரையாகியத்வீபத்தில் திரிமூர்த்திகளும் வசிக்கின்றனர். அப்பால் சுத்தோதக சமுத்திரத்திலுள்ளத்வீபத்தில் பிரமதகணங்கள் வசிக்கின்றனர். அதற்கு அப்பால் ரத்னமயப்ராகாரம் பதினாயிரம் யோசனை. அங்சப் பத்மராக ரத்ன மலை ஒன்றிருக்கிறது. அப்பால் சந்திரகாந்த மணிமதில் விளங்குகின்றது. அது, 5,000 யோசனை. அப்பால் வச்சிரபர்வதம்10,000 யோசனை. அதற்கு வெளியில் இந்திரநீல மதில் 50 யோசனை. அப்பால் இந்திரனீல பர்வதம் 10,000 யோசனை. அதற்கு வெளியில் மரகதமதில். அப்பால் பவள மலை 20,000 யோசனை. அப்பால் கோமேதகமதில் 30,000 யோசனை. அங்குக் குருவிந்த மணிமலை 15,000 யோசனை. அதற்கப்பால் புட்பராகப்ராகாரம் 40,000 யோசனை, அப்பால் முத்து மலை. அப்பால் வைடூர்யப்ராகாரம் அதற்கப்பால் நவரத்னமலை. அதில் அற்புதமான மண் டபமுளது, அது பல நவரத்ன கோபுரங்களால் விளங்குவது அதில் பல சிவபிர திஷ்டைகள் அமைந்துள. அம்மண்டபத்தி னிடையிலுள்ள கர்பகிருகத்தில் தேவர்கள்ளால் பூசிக்கப்பட்ட மகாலிங்கம் ஒன்று விளங்குகின்றது. அம்மலையின் சார் ஓர் புறத்தில் பரமேச்வானது. திரு உருவம் போல் பஞ்சவத்திரேச்வா லிங்கமொன்று விளங்குகின்றது. அந்த லிங்கத்தின் ஐந்து முகங்களினின்றும் ஐந்து கங்கைகள் பிரவகித்து அமுதசமுத்திரம் போய்ச் சேருகின்றன. அவை, கிழக்கில் ரத்ன கங்கை யென்றும் மேற்கில் தேவகங்கை யென்றும் வடக்கில் கைலாசகங்கை யென்றும் தெற்கில் உக்கிர கங்கையென்றும் நடுவில் பிரமகங்கை யென்றும் பெயரினவாய்ப் பிரவகிக்கும். அக்கங்கையின் கரையில் விளங்கும் மண்டபத்தில் ரத்னமயமாய் நிருமிக்கப்பட்ட சிம்மாதனத்தில் நந்தி முதலிய கணங்கள் சேவிக்கத் தேவியுடன் சிவமூர்த்தி எழுந்தருளி யிருப்பர். மேற் சொன்ன ஸ்ரீ கைலாசத்தின் மலைப்ராகாரங்களின் மத்தியில் கணங்களுக்கு வாசஸ்தலமுனது. அதில் கிழக்குத்துவார் நீல ரத்னகோபுரம் 9 லக்ஷம் பிரமாணமுடையது. அங்கு நந்தீசவர ஆலயம் விளங்கும். அங்குள்ள நந்தீச்வரம் என்னும் சிவலிங்கத்தை அவர் பூசித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கிழக்குப் பிராகாரத்தில் நிடதம் என்றும் எமகூடம் என்றும் பெயரிய இரண்டு பர்வதங்களிருக்கின்றன, ஆக்னேயதிக்கில் ஐந்து லக்ஷம் பிரமாணமுடைய ஒரு கோபுரமுண்டு. அங்குள்ள சுகேசேச்வரர் என்னும் சிவபெருமானைச் சுகேசன் என்னும் கணநாதன் பூசித்துக் கொண்டிருக்கிறான். தெற்கில் நீலமென்றும் மந்தாரமென்றும் இரண்டு பர்வதங்களிருக்கின்றன. அங்குள்ள பத்து ஓம் பிரமாணமுள்ள கோபுரத்தில் சண்டீச விங்கத்தை வணங்கிக்கொண்டு சண்டீசர் இருக்கின்றனர். நிருதிதிக்கில் 5 லக்ஷம் பிரமாணமுள்ள கோபுரத்தில் பாணலிங்கத்தைப் பூசித்துக் கொண்டு பாணனிருக்கின் றனன். மேற்குப் பிராகாரத்தில் அஸ்தாத்திரி பாரியாதரமென்னும் இரண்டு பர்வதங்களிருக்கின்றன. அங்கு 10 லக்ஷட பரிமாணமுள்ள கோபுரத்தில் பிருங்கீச்வரரை வணங்கிக்கொண்டு பிருங்கி முனிவர் வீற்றிருக்கின்றனர். வாயு பாகத்தில் ஐந்துலக்ஷம் பரிமாணமுள்ள கோபுரத்தில் ருடீச்வாரை வணங்கிக் கொண்டு ருடீ என்பவன் இருக்கின்றான். வடக்குப் பிராகாரத்தில் துந்துபி, மந்தரம், ரைவதம், என்னும் மூன்று கிரிகளிருக்கின்றன. அங்குப் பத்துலக்ஷம் யோசனை யுள்ள கோபுரத்தில் காலருத்திரரை வணங்கிக்கொண்டு காலாக்கினி ருத்திரர் வீற்றிருக்கின்றார். ஈசானபாகத்தில் ஐந்து லக்ஷம் யோசனையுள்ள கோபுரத்தில் வீரபத்திரேச்வா மென்னும் மூர்த்தியை வணங்கிக்கொண்டு நீலருத்திரர் இருக்கின்றனர். மகேசாலயத்திற்குக் கீழ்த்திசையில் க்ஷாசமுத்திரமாகிய அகழியோடு கூடிய கோட்டை யொன்றுளது. அங்குத் தத் புருஷலிங்கத்தைப் பூசித்துக்கொண்டு தத் புருஷர் வீற்றிருக்கின்றனர். தென் திசையில் உவர்க்கடல் அகழியுடன் கூடிய இருப்புக் கோட்டையில் அநேகப் பிரமத கணங்களுடன் அகோரேச்வாலிங்கத்தைப், பூசித்துக்கொண்டு அகோரமூர்த்தி வீற் றிருக்கின்றனர். தவிர்க்கடலாகிய அகழியால் சூழப்பட்ட புட்பராக மணிமயக கோட்டையில் சத்தியோஜாத லிங்கத்தைப் பூசித்துக்கொண்டு சத்தியோஜாதர் வீற்றிருக்கின்றார். வடக்குத் திசையில் நெய்க்கடலாகிய அகழியால் சூழப்பெற்ற கோமேதகமணிக் கோட்டையில் அமைக்கப் பட்ட கோபுரத்தில் வாமதேவ லிங்கத்தைப் பூசித்துக்கொண்டு வாமதேவர் வீற்றிருக்கின்றனர். உச்சியில் வச்சிரமணியாலாகிய கோபுரத்தில் ஈசானேச்வாரைப் பூசித்துக்கொண்டு ஈசானர் வீற்றிருப்பர்.

கைவல்யம்

ஒரு அத்வைத நூல், இது நன்னிலம் நாராயணதேசிகர் மாணாக்கர் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது (சிவரகஸ்யம்).

கைவி

இஃது இறகிலாப்பறவை, இது நியுசீலண்ட் தேசத்தது. இதனுடலில் எலி முதவியவற்றிற் குள்ளது போல் மயிர் முளைத்திருக்கிறது. இதன் மூக்குப் பருத்து நீண்டிருக்கிறது, நிலப் புழுக்களை அலகினால் தோண்டித் தின்கிறது. இது புதர்களில் ஒளிந்து இரவில் இரைதேடப் புறப்படுகிறது. இது நெருப்பைக்கண்டால் அஞ்சும், இது ஒருவித சத்தமிடும். அச்சத்தம் போன்று வேடர் சத்தமிட்டு வெளி வரத் தீவர்த்திகளைக் காட்டிப்பிடிப்பர்.