ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
கேகசீ | விசிரவசுவின் தேவிகளில் ஒருத்தி, குமரர் இராவணன் முதலியோர். |
கேகடன் | சங்கடன் குமரன். இவனுக்குத் துர்க்காபிமான தேவதைகள் பிறந்தனர். |
கேகயத்தரசன் | இவன் கேகயதேசத்தை யாண்டவன். சகல பிராணிகள் பேசும் பாஷையறிந்தவன். இவன் ஒருமுறை தன் மனைவியுடன் பஞ்சணையில் காலை நீட்டிக்கொண்டிருக்கையில் எறும்பொழுங்கில் ஒன்று அரசனது காலைக்கடப்பது அருமையாகத் தோன்றியதால் கோபித்தது. இதனைக் கேட்ட அரசன் நகைத்தனன். அருகிருந்த மனைவி நீர் நகைத்ததற்குக் காரணங்கூற வேண்டுமென்றனள். அரசன் அவ் விரகசியத்தைக் கூறின் என்னுயிர் நீங்கு மென்றனன். அரசி அதற்கும் அஞ்சாது கேட்டதனால் அரசன் இவளை நீக்கியிருந்தனன். இவன் கைகேசிக்குத் தந்தை. |
கேகயன் | 1. சிபியின் குமரன். 2. சூதகுலத்தரசன், மனைவி ராசகன்னிகை. இவனது இரண்டாவது மனைவி மாளவி. இவன் பாரத முதனாள் யுத்தத்தில் கிருதபன்மனுடன் போரிட்டவன். 3. அசுபதியின் தந்தை. 4. இவன் ரக்ஷஸால் பீடிக்கப்பட்டுத் தருமசாத்திரோப தேசத்தால் விடுபட்டவன். |
கேகயம் | சிபிச்சக்கரவர்த்தியின் குமரனாகிய கேகயன் ஆண்டதால் இந்நாட்டிற்கு இப்பெயருண்டாயிற்று. இந் நாட்டின் இராசதானி கிரிவிரசம். The Country between Beas and the Sutleg. |
கேசகம்பளன் | நரி வயிற்றிற் பிறந்த முனி. (மணிமேகலை.) |
கேசன் | ஒரு வாநரன், தபனனை மாய்த்தவன். |
கேசரி | 1. ஒரு வாநரன். பிரபாசதீரத்தில் உபத்திரவஞ் செய்துகொண் டிருந்த ஒரு யானையைக் கொன்றதால் இப்பெயர் பெற்றனன். இவன்தேவி அஞ்சனாதேவி, குமரன் அநுமான். 2. அஞ்சனையின் தந்தை, |
கேசரியோகம் | யோகவகைகள் லொன்று. இதில் பரியங்கியோகம், அமுரிதாரணை சந்திரயோகம் எனப் பலவுண்டு. |
கேசவதாசர் | இவர் ஜீஜாபுரத்தில் அரிபஜனை செய்து கொண்டிருக்கையில் இவரது சீடர் ஒருவர் பகவதாராதனையின் பொருட்டு இரவில் ஒரு செட்டியின் கடை சென்று சுக்கும் சர்க்கரையும் கேட்டனர். செட்டி தூக்கத்தின் மிகுதியால் சுக்கென்று நாபிக்கிழங்கைத் தர மாணாக்கர் கொண்டு வந்து ஆசாரியரிடங் கொடுக்க, தாசர் அதனைப் பகவானுக்கு நிவேதித்து அனைவர்க்கும் பகிர்ந்து கொடுத்தனர். பகவானருளால் அந்தநாபி எவர்களையுங் கெடுக்கவில்லை. இதனையுணராத தாசர் விடிந்து பூசை முதலிய முடித்துப் பெருமாளைச் சேவிக்கையில் பெருமாள் திருமேனி கறுத்திருத்தலை நோக்கிக் கவலுகையில் செட்டி தானறியாது செய்த தீமையை யெண்ணி இவரைத் தேடிச் சென்று நடந்தவைகூறி மன்னிக்க வேண்டினன். தாசர் பெருமாளைப் புகழ்ந்து துதித்தனர். |
கேசவனார் | இவர் கடைச்சங்கத்துப் புலவர் காலத்தவர். இவர் பரிபாடலில் (14) ஆம் பாடலைப் பாடியவர். இவரைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. (பரிபாடல்.) |
கேசவன் | சிவநிந்தையால் நாயாய்ப் பிறந்த வேதியன், (திருப்பெருந்துறை, புரா.) |
கேசவாதபன் | சூரியன், கேசவன் சொல்லக் கேட்டுக் காசியில் சிவப்பிரதிட்டை செய்து பூசித்து இப்பெயர் பெற்றவன். (காசிகாண்டம்.) |
கேசவார்த்தம் | விஷ்ணு தவம்புரிந்து சிவமூர்த்தியின் திருமேனியிற் கலந்த திருவுரு. |
கேசி | 1, கம்சனுக்கு நண்பனாகிய அசுரன். இவன் கம்சன் ஏவலால் குதிரையுருக் கொண்டு கோகுலமடைந்து பிராணிகளையும் கோபாலரையும் வருத்திக் கண்ணனிருந்த இடமடையக் கண்ணன் தமது கரத்தை வாயில் நுழைத்து வளரச்செய்ய வயிறு பிளந்திறந்தவன். 2, பத்திரையின் பெண். 3. தேவசேனையைத் தூக்கிச் சென்ற அரக்கன். இவள் இந்திரனால் விடுபட்டனள். இவனை விநாயகர் கொன்றனர் என்பர். 4. ஓர் அசுரன், இவன் பிரமன் வரத்தால் தேவர்களை உபத்திரவஞ் செய்து விஷ்ணுமூர்த்தியால் மாண்டவன். 5. இரண்யபுர மாண்ட அசுரன், இவன் மனைவியிடம் வல்லபைசத்தி பிறந்தனள். கணபதி. இவளை வெளிப்படுத்தி மணந்தனர். (காஞ்சிபுராணம்.) |
கேசித்துவசன் | (சூ.) கிருதத்துவசன் குமரன். இவன் வேதாந்தயாயினான். |
கேசினி | 1, சகான் பாரி. 2. தமயந்தியின் தோழி. 3. ஒரு ராஜகன்னிகை. இவள் சுயவம்வரத்தின் பொருட்டு, பிரம்மக்ஷத்திரியர் விவாதம் செய்தனர். 4. ஓர் அப்சா ஸ்திரீ. 5. அஜமீடன் பாரியை. |
கேடிலியப்பப் பிள்ளை | தாயுமானார் என்னும் சந்நியாசி சுவாமிகளுக்குத் தந்தையார். |
கேதனன் | ஒரு ஆந்திர கவி. |
கேதன் | வசுதேவருக்கு ரோகணியிடம் பிறந்த குமரன். இவனைத் தேவரக்ஷதி குமரன் எனவும் கூறுவர். |
கேதாரகௌரிவிரதம் | ஆச்வயுசப்பகுள (ஐப்பசி கிருஷ்ணபக்ஷம்) சதுர்த்தசியில், நல்ல புருஷனையும், சம்பத்தையும் விரும்புவோர் பார்வதி பிராட்டியை யெண்ணிச் செய்யும் விரதம். இதை முதலில் பார்வதி பிராட் டியே அநுட்டித்துக் காட்டினள். |
கேதாரதீர்த்தம் | கங்கை முதல் தமசாநதி வரையில் செல்லும் புண்ணிய தீர்த்தம். A Sacred stream Called Koliganga has its rise here. It is about 146 miles Morth of Hardwar and is very near to Badarinath. |
கேதாரம் | 1. ஒரு தலமும் தீர்த்தமும். இதில் உமாதேவியார் சிவமூர்த்தியைப் போற்றிப் பக்தர்செய்யும் வழிபாடு தமக்கு வேண்டினள், இது இமயத்திற் கருகிலுள்ள து. 2. பனியின் அதிதேவதை சிவபூசை செய்து பாபம் நீங்கிய தலம். (வீரசிங்காதன புராணம்.) |
கேதாரேச்வர விரதம் | இது ஐப்பசி அமாவாசையில் கலசத்தில் சாம்ப மூர்த்தியை ஆவாகித்துக் கிரமப்படி பூஜை செய்து (21) திரந்திகளைப் பூஜைசெய்து நோன்புக் கயிறு செய்து பூஜித்து (21) எண்ணுள்ள பழவகைகளும், மற்றவைளும் நிவேதித்துப் பூஜைசெய்து விரதமிருப்பது. இது முதலில் பிருங்கி சிவ மூர்த்தியை வணங்கித் தம்மை வணங்காத காரணஞ் சிவமூர்த்தியால் கேட்டு உணர்ந்த பிராட்டியார் அர்த்தபாகம் பெற அநுட்டித்தது. பிறகு சித்சாங்கதனென்னும் காந்திருவன் அநுட்டித்துச் சகல சித்திகளையும் பெற்றனன். பிறகு புண்யவதி, பாக்யவதிகள் என்னும் பெயருள்ள இரண்டு ஏழை வைசிய கன்னியர் ஆலடியிலிருந்து அனுஷ்டித்து இராஜைஸ்வர்ய மடைந்து பிறகு அவ்விருவரில் ஒருத்தியாகிய பாக்யவதி, செல்வச்செருக்கால் மறந்து விரதத்தைவிட்டுச் செல்வமிழந்து கள்ளரால் பலமுறை பறியுண்டு நினைவு வந்து விரதமநுட்டித்து இழந்த இராஜ செல்வங்களைப் பெற்றனள். இதனை அநுட்டிப்போர் பெருஞ்செல்வ வாழ்வினையும் முத்தியினையு மடைவர். |
கேது | 1. தாமசன் என்னும் மனுவின் புத்ரன். 2. சண்முக சேநாவீரன். 3. விப்பிரசித்திக்குச் சிம்மிகையிடத்துப் பிறந்த அசுரன். இவன் தவத்தால் கிரகபதம் பெற்றான், அக்நிக்கு விகேசியிடம் பிறந்தான் எனவுங் கூறுவர். இராகுவைக் காண்க. ஆறு குதிரைகள் பூட்டிய தேருடையான். |
கேதுக்கள் | பிரமபுத்திரர்களும், கிரகபாவத்தை யடைந்தவர்களும், பிரமத்தை யடைந்தவர்களும், யௌவகமுடையவர்களும், சமதக்னி கோத்திரருமான தேவர்கள். |
கேதுமதி | நருமதையின் பெண். சுமாலியின் பாரி. |
கேதுமந்தன் | 1, சுருதாயு குமரன், களிங்க தேசாதிபன். 2. தன்வந்தரியின் குமரன், கேதுரதனுக்குத் தந்தை 3. அம்பரீஷன் குமரன். |
கேதுமான் | 1, தன்வந்திரியின் குமரன், இவன் குமாரன் பீமரதன். 2. அம்பரீஷன் குமரன். 3. தனு புத்திரனாகிய அசுரன். 4. ஏகலைவன் புத்திரன், வேடன். |
கேதுமாலன் | 1. ஆக்னியீத்ரனுக்குப் பூர்வ சித்தியிடத்துதித்த குமரன் பாரி, தேவியென்பவள். 2. கலிங்கராசன் குமரன் எனபர். |
கேதுமாலம் | நவவருஷத்து ஒன்று. |
கேதுமாலி | சண்முக சேநாவீரன். |
கேதுரதன் | பகீரதனுக்குத் தந்தை, கேதுமந்தன் குமரன். |
கேதுவன்மன் | திரிகர்த்த தேசாதிபதியின் குமரன். இவன் பாண்டு புத்திரரின் அசுவமேதக் குதிரையைக் கட்டித் தோற்றவன். |
கேந்திரம் | 1. இது, (உதயம்) முதலாமிடம், ஏழாமிடம், நாலாமிடம், பத்தாமிடம். கேந்திரபலம் சுபக்கோளாயினும், பாபக் கோளாயினும், உச்சத்தானத்தும், மித்திரத்தானத்தும், ஆட்சித்தானத்தும் நிற்பராகில் வலியர். புதனும் குருவும் உதயத்து வலியர். சந்திரனும் சுக்ரனும் (4) ஆம் இடத்து வலியர். சநி இராகு கேதுக்கள் (7) ஆம் இடத்து வலியர். பாபக்கோள்கள் அமரபக்ஷத்து வலியர். (விதானமாலை) 2. லக்ன கேந்திரம், சதுர்த்தகேந்திரம், தசமகேந்திரம், சப்தமகேந்திரம். இவை முறையே உதயம், நீர்க்கீழ் உச்சம், அஸ்தமனம் எனும் இடங்களைப் பெற்று கால், அரை, பூரணசுப, பாவமிச்ரம பலங்களைத் தரும். |
கேபர் கெய்லி | இது ஒரு அழகான கோழி, இது, குளிர்ந்த பிரதேசமாகிய நார்வே ஸ்வீடன் முதலிய தேசங்களின் காடுகளில் வசிக்கிறது. இந்தப் பறவையின் சிறகுகள், கருமையும் பசுமையுங் கலந்து பளபளப்பா யிருக்கின்றன. இதன் வால் வட்டமாய் விசிறி போல் விரிக்கக்கூடியது. இது நாட்டுக் கோழியை எல்லாவகையிலும் ஒத்திருக்கிறது. மூக்குக் கிளியின் மூக்குப்போல் முன் வளைந்திருக்கிறது. இது, பழங்கள், மலர்கள், அரும்புகள், இலைகளைத் தின்று சீவித்து மரங்களில் வசிக்கிறது. இது கனத்தில் 6 முதல் 14 பவுண்ட் எடையுள்ளது. இப் பறவை பூமியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. இதன் சேவல் பல பெட்டைகளை விரும்பிச் செல்லும், இந்தச் சேவல் போர்க்குண முடையதாதலால் இதற்குக் குதிகாலுக்குமேல் கூரிய முள் உண்டு. |
கேமசரி | சீவகன் மனைவியருள் ஒருத்தி. |
கேமசருமன் | பரத்வாச கோத்திரத்துச் சண்டதருமன் குமரன், இவன் இளமைப் பருவத்து வேசி வலைப்பட்டு ஒருநாள் தாகங் கேட்க அவள் கள்ளுண்ணக் கொடுக்க, அறியாது உண்டு தீதென அறிந்து பிராயச்சித்தங் கேட்க வேதியர் வெண்ணெயைக் கொதிக்கக் காய்ச்சி வாயில் விடுகவெனக், கேட்ட தந்தை மைந்தனை இழப்ப வருந்தியிருக்கையில் சங்கமுனிவர் அவ்வழி வந்து திருவாரூர் தேவ தீர்த்தத்தில் முழுகச்செய்யப் பாபம் நீங்கினவன். |
கேமதரிசி | (சூ) இவன் கோசலதேசாதிபதி, விதேகராசனால் நாடிழந்து பிறகு காலயவனராற் பெற்றவன். இவன் அநீதி செலுத்திய மந்திரியுடன் சேர்ந்து கொடுமை செய்து பின்பு காவன் என்பவரால் திருந்தினன். |
கேமதர்மா | (சூ.) புண்டரீகன் குமரன். (க்ஷேம தர்மா கேமதன்வா.) இவன் குமரன் தேவாநீகன். |
கேமதூர்த்தி | காசிராசன், பாரதயுத்தத்தில் பதினாறாநாள் வீமனால் மாண்டான். |
கேமாசுரன் | குசலாசுரனைக் காண்க. |
கேமாபுரம் | சுபத்திரனூர். |
கேயன் | 1. உன் முகனுக்குப் பிரீதகேசியிடத் துதித்த குமரன். 2. நந்தன் குமரன், தாய் பரதபுத்ரை. இவன் விஷ்ணுவினம்சம், தேவிசயந்தி, குமரர் சித்திராதன், மிருகணாதி அவரோதன். |
கேயூரகன் | காதம்பரியின் யாழ் சுமப்பவன் தரளிகையினுடன் வந்தவன். |
கேரளசர்ப்பம் | இது பசுவின் மூக்கில் சனிப்பது. |
கேரளன் | துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தன் பௌத்திரன், ஆசரிதன் குமரன். |
கேரளம் | மலையாளத்தின் தென்னாடு. The Malabar Coast. It comprises Malabar, Travancore, and Kanara. |
கேள்வி | (4) அறம், பொருள், இன்பம், வீடு |
கேவலன் | (சூ.) நரன் குமரன். |
கேவலவியதிரேகி | அனலில்லாவிடத்துப் புகையில்லை மடுப்போல என்கை. (சிவசித்தி) |
கேவலாந்வயி | பிரதிக்ஞை, எது, திருஷ்டாந்தத்துடன் கூடிய அந்வய வியாப்தி. புகையினாலே நெருப்புண்டு பாகசாலை போல் என்பது. |
கேவலாவத்தை | சர்வ சங்காரகாலத்து ஆன்மாக்கள் சுத்தமாயாகாரணத்திலொடுங்கிச் சிருட்டிகால மளவும் ஆணவமலத்தால் மறைப்புண்டு கலையாதி தத்துவங்களுடன் கூடாமல் யாதொரு நினைவுமின்றி யிருப்பது. இது கண் இருளிலே தன் ஒளி கெடாமல் விழித்திருத்தல் போலும் (சித்தா) |