அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கெங்குபட்டர்

பாண்டு புத்திரராகிய தருமர் மச்ச நாட்டில் கரந்துறைந்தபோது வைத்துக்கொண்ட பெயர் என்பர்.

கெங்குபட்டர்

பாண்டு புத்திரராகிய தருமர் மச்ச நாட்டில் கரந்துறைந்தபோது வைத்துகொண்ட பெயர் என்பர்.

கெசகோமுகன்

ஒரு வாநரவீரன்.

கெசண்டாயு

விஷ்ணுபக்தர், சத்சங்கத்தால் நற்பத மடைந்தவர்.

கெசதோமுகன்

ஒரு வாநர வீரன்.

கெசமுகன்

வீரமாயேந்திரத்தை ஆகாய வழியாய்க் காக்கும் ஆயிரம் யானை முகமுடையான், இவன் வீரவாகுதேவர் மயேந்திரபுரி செல்வத்தைத் தடுத்து இறந்தவன்.

கெண்டபோண்டபக்ஷி

பக்ஷிகளில் பெரிய உருவமுடையது. இவ்விதப் பறவைகள் முற்காலத் திருந்திருக்கலாம். தற்காலபூமி சோதனையில் கண்டு பிடித்தன என்று நூதன ஆராய்ச்சியார் கூறுகின்றனர். தற்கால நூதன ஆராய்ச்சியில் (டைனோர்நிஸ்) (The Dinornus) எனும் கோழியின் எலும்புக்கூடு 14 அடி உயாம். ஜெயிண்ட் பறவை (The Giant Bird) இது அமெரிக்காவில் பூமியிலிருந்து வெட்டியெடுத்த எலும்புக்கூடு, இஃது எருமை முதலியவைகளையும் எதிர்க்கத்தக்கப் பறவையாம். மற்றும் டாஸாரீனிஸ், காஸ்டாரீ நீஸ் முதலிய பல பெரிய பறவைகளிருந்தன என்பர். டிராகன் இன்னும் 40 அடி உயரமும் 100 அடிக்கு மேற்பட்ட நீளமும் உள்ள மிருகமும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

கெம்பீரன்

(ச) இரபசன் குமரன், இவன் குமரன் சக்கிரகன்.

கெம்ஸ்பர்க்

இது ஆப்ரிகாவின் தென்மேற்குக் காடுகளில் வசிக்கும் கறுப்புமான் இதன் உயரம் 4 அடிகள், உடம்பு பிங்கள நிறம் இதன் கொம்பு 45 அங்குல நீளம், சிங்கத்தைக் கொம்பாலெதிர்த்து வெருட்டும்.

கெருதமான்

விஷ்ணுபக்தனும் படனும் என்பர்.

கெர்க்கர்கள்

ஒன்பதாம் மன்வந்தரத்துத் தேவர்கள்.

கெற்கன்

வன்னி குமரன், இவன் குமரன் பானுவுரன்.

கெற்பன்

காற்பாயணிக்குத் தந்தை, மன்யுகுமரன்.