அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கூகை

இது ஆந்தையினினத்தில் பெரிது. இது பகலெல்லாந் தூங்கியிரவில் இரை தேடப்புறப்படும். இது கபில நிறமுள்ளது, தலை அகன்று கண்உருண்ட பறவை. இது மரங்களிலிருந்து கூ என மனிதனைப் போல் கூச்சலிடுவதால் கூகை எனப்பட்டது. தவளை எலி உணவு.

கூகைக்கோழியார்

இவர் பாடலுள் வழங்கிய கூகையும் கோழியுமே இணைந்து இவர்க்குப் பெயராயினமை காண்க. இவர் ஊர் வாகை. இவர் பாணருக்கு முற்பட்ட புலவர். (குறுந்தொகை.)

கூகைதோஷம்

அமாவாஸ்யை முடிவிலும் பிரதமை முடிதலிலும்த்யாஜ்யம் வரும் காலம்.

கூசுமாண்டர்

ஒரு இருடி, மண்டபனைக் காண்க.

கூச்சம்

நாடக விகற்பத்தொன்று. இது, தலைவரிரு வரையிடையிட்டுப் பேசப்பட்டு வாரத்தோடிருக்கும்.

கூச்மாண்டன்

1. ஒரு அசுரன். இவன் தேவர்களைத் துன்பஞ் செய்து கொண்டிருந்ததினால் இவனை விஷ்ணுமூர்த்தி கொலை செய்தனர். இவன் உடலின் உரோமத்தில் கூஸ்மாண்டம் என்னும் கல்யாண பூசுணைக்கொடி உண்டாயிற்று. இதனைப் பிதிர்பிரீதியின் பொருட்டுத் தானஞ் செய்யின் விசேட பலனுண்டாகும். 2. பசுவைப் பிடித்துக்கொண்டு அதனிடம் இறைச்சி வேண்டியவசுரன்.

கூச்மாண்டம்

இது பெகுபீஜ முள்ளது. இதனைப் பிரமதேவர்படைத்தனர். பிதுர்ப்பிரீதிக்காக விஷ்ணுவின் பொருட்டுத் தரப்பட்டது. இந்தக் கூச்மாண்டத்தைக் கந்தபுட்பாதி அக்ஷதைகளும் பஞ்சரத்னங் களுடனும் பசுவெண்ணெய் தக்ஷணையுட னும் பிராமணருக்கு நிவேதிக்க வேண்டியது. இவ்வாறு செய்யின் பிதுர்க்கள் பிரீதி அடைகின்றனர்.

கூடசதுக்கம்

சித்திரக் கவியிலொன்று, இது நான்காமடிக்கு எழுத்து, முதல் மூன்றடியுள்ளும் பெருக்கிக் கொள்ளப் பாடுவது. (யாப்பு~வி).

கூடன்

1, ஒரு அசுரன், நராந்தகன் ஏவலால் காசிப்பட்டணஞ்சென்று அரசன் வேண்டுகோளால் அவனது அரண்மனை செல்லும் மகோற்கடரது வரவைப் பாறையுருக் கொண்டு வாயிற்படியிலிருந்து தடுத்தனன். இதனையறிந்த மகோற்கடராகிய விநாயகமூர்த்தி அநேகந் தேங்காய்கள் கொண்டுவரக் கட்டளையிட்டு அவைகளில் அஸ்திர ஆவாகனஞ்செய்து அந்தப்பாறை யுருக்கொண்ட அசுரன் மீது உடைக்கச் கட்டளையிட்டனர். அரசனும் ஏவலாள்ரும் அந்தப்படி செய்ய அசுரன் சகிக்காது எழுந்து மகோற்கடர் பாசத்தா லிறந்தனன. 2. இவன் ஒரு அசுரன், பாலவிநாயகரை வஞ்சிக்க ஒரு தடாகமுண்டாக்கி அதில் விஷங்கலந்து ஆகாயத்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனன். சில இருடிகுமார்கள் இந்த நச்சுத் தடாகத்தின் நீரைப் பருகி மாய்ந்தனர். இதனைக்கண்ட பாலவிநாயக மூர்த்தி இதை அமுதப்பார்வையால் பார்க்கத் தடாகம் நஞ்சுநீங்கி இருடி குமரரும் உயிர் பெற்றனர். விநாயகர் அசுரனை அக்நி நேத்திரத்தால் எரித்துக் கொன்றனர். 3. கம்சனால் மல்லயுத்தத்திற்கு ஏவப்பட்டுப் பலராமரால் மாய்ந்த அசுரன்.

கூடற்கிழார்

குன்றத்தூரிலிருந்த வேளாண் குலத்தினவர்.

கூடலசங்கமர்

மாதாம்பைக்கு எதிரில் தோன்றி வசவருக்குச் சிவநிவேதனத்தையே உண்பிக்க எனப்பணித்து மறைந்த சிவாவசரம்.

கூடலூர்க்கிழார்

முதுமொழிக்காஞ்சி பாடிய தமிழாசிரியர். கோச்சேரமான், யானைக்கட்சேய், மாந்தாஞ்சோ லிரும்பொறையைப் பாடியவர். இவர்க்குப் புலத்துறைமுற்றிய கூடலூர்க்கிழார் எனவும் மதுரைக்கூடலூர்க்கிழார் எனவும் பெயர். கடைச்சங்கத்தார் காலம். (புற~நா) (குறு~தொ)

கூடல்கிழான்

சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒருகுடி. வேளாண்மரபு.

கூடாமையணி

அஃதாவது ஒரு காரியம் பிறத்தலையருமை யுடைத்தாகச் சொல்லுதலாம். இதனை வட நூலார் அசம்பவாலங்கார மென்பர்.

கூடை

இது பொருள்களைத் தாங்கிச் செல்ல மூங்கில், பிரம்பு, ஈச்சன் கசங்கு, தென்னை பனை முதலிய நரம்புகளால் குழிந்தாழ முடைத்தாய்ச் செய்யப்பட்டது. இது பிட்டுக்கூடை, தட்டுக்கூடை, முதலிய பலவகை,

கூடைகட்டி

இவர்கள் வந்நியர் அல்லது பள்ளிகளில் ஒருவகையார், குறவர்களிற் சிலர் இந்த வேலை செய்வர் அவர்களும் மேற்கூறிய பெயர் பெறுவர்.

கூடைகட்டிப்பறம்பு

இது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே பூதங்கண்ட குளத்திற்குத் தென்கிழக்கேயுள்ளது; குளத்தை வெட்டிய பூதம்மண் கூடையைத் தட்டுதற்கு இடமாக இருந்தமையின்; இது இப்பெயர் பெற்றது. (திருவிளையாடல்,)

கூட்டத்துக்குழைதல்

இட்ட மாலையினையுடைய அகலத்தை நீங்குதல் பொறாத பரித்த தழையாற் சிறந்த அல்குலினையுடையாள் புணர்ச்சியிடத்து நெகிழ்ந்தது. (பு. வெ. பெருந்திணை.)

கூட்டவணி

பகையில்லாமையால் ஒரு காலத்திற் கூடத்தக்க பொருள்களுக்குக் கூட்டத்தைச் சொல்லுதல். இதனைச் சமுச்சயாலங்காரம் என்பர்.

கூதிர்ப்பாசறை

கூற்றை யொத்தவலுடைய அகன்ற பாசறையிடத்துக் கூதிர்க் காலத்துமேகம் உறையைக் கொடுப்பப் பிரிவாற்றாமை மேன் மேன்மிகவும் கூரிய எஃகினை யுடையான் கருணையை ஒழிந்தது. (பு~வெ.)

கூத்தநூல்

நாடகத் தமிழ்நூல். இந்நூலாசிரியர் மதிவாணர் என்பவர்.

கூத்தனூர் அப்பன்

கிருஷ்ண தேவராயர் காலத்திருந்த ஒரு தமிழ்க்கவி. தத்வப்ரகாசரைக் காண்க.

கூத்தபாற்றுப்படை

தலைவனைக் கண்டு துதித்து மீண்ட இரப்பாளர் கூத்தாடும் வரை வழியிலே செலுத்தியது. (பு வெ. பாடாண்).

கூத்தர்

எண் வகைச்சுவையும், மனத்தின் கட்பட்ட குறிப்புகளும் புறத்துப் போந்து புலப்பட ஆடுவார். அது விறலாதலின் அவ்விறல்பட ஆடுவாளைவிறலி யென்ப.

கூத்தாடினவள்

இவள் ஒரு கூத்தி, பாண்டியனிடங் கூத்தாடுகையில் அவன் தன் மனைவியை நோக்கியிருந்து. என்னைக் கவனிக்காமல் இருந்தது பற்றிப் பறவைவிடு தூதாக “மாகுன் றனைய பொற்சோளான் வழுதிமன் வாழ் கரும்பின், பாகொன்று சொல்லியைப் பார்த்தெனைப் பார்த்திலன் பையப்பையப் போகின்ற புள்ளினங்காள் புழற்கோட்டம் புகுவ துண்டேல், சாகின்றனனென்று சொல்லீரன்றைச் சடையனுக்கே” எனப் பாடினள்.

கூத்து

1. அகக்கூத்து, புறக்கூத்து என இருவகைப்படும். கந்தமுதலாகப் பிரபந்த மீறாக இருபத்தெட்டு உருக்களும் அகத்திற்கும், தேவபாணிமுதல் அரங்கொழிச் செய்யுள் ஈறாகக்கொண்ட செந்துறை விகற்பங்களும் கொண்ட பாட்டுடையனவாய்க் கூத்தின் விகற்பத்திற்கேற்ற வாச் சியங்களாகிய கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கங்களைப் பெற்றன வாய் அவ்வங்கங்களுக்குரிய ஆடல்களாகிய கீற்று, கடிசரி முதலிய தேசிக்குரிய கால்களும், சுற்றுதல் முதலிய வடுகிற்குரிய கால்களும் உடற்றுக்கு முதலிய உடலவர்த்தனையும், அகக்கூத்திற்கும், பெருநடை, சாரியை, பிரமரி முதலிய புறக்கூத்திற்குரிய ஆடல்களையும் பெற்று இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன் சொல், இறுதி, மந்தம், உச்சங்கொண்ட பாடல்களைப் பெற்று, பலவகைத் தாளத்துடன் கண்டாரை மகிழ்விப்பது. தேசி முதலியவற்றைத் தனித்தனி காண்க. கூத்து, பாவராக தாள வகை கொண்டு பதத்தால் பாட்டிற்கு இயைய நடிப்பதாம். அக்கூத்துச் சாந்திக்கூத்தும், விநோதக்கூத்தும் என இருவகைப்படும். அவற்றுள் சாந்திக்கூத்தாவது, தலைவன் அவிநயம் ஏந்திநின்று ஆடியதாம். அது நான்குவகைத்து. அவை சொக்கம், மெய், அவிநயம், நாடகம் எனப்படும். நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாதலால் சாந்திக் கூத்து எனப்படும். சொக்கம் என்பது சுத்த நிருத்தம். அது நூற்றெட்டுக் கரணமுடையது, மேய்கீகூத்தாவது, (மெய்த தொழிற் கூத்தாதலின் மெய்க்கூத்து எனப்படும்.) அது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். அவிநயக்கூத்தாவது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குத்தகக் கை காட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து. நாடகக்கூத்தாவது கதை தழுவிவருக்கூத்து. விநோதக்கூத்தென்பது கொடித்தேர் வேந்தரும், குறுநில மன்னரும் முதலாக உடையோர் பகைவென்று இருந்த இடத்தில் விநோதங்காணுங்கூத்து என்பதாம். அது குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம் நோக்கு, தோற்பாவை என்ப. குரவை என்பது காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின்மரேனும், கைபிணைந்து ஆடுவது, கலிநடம் என்பது கழாய்க்கூத்து,. குடக்கூத்து என்பது மாயோன் ஆடல், காணமாவது படிந்த ஆடல், நோக்கு என்பது பாரமும், நுண்மையும், மாயமும் முதலாயினவற்றை உடையது. தோற்பாவை என் பது, தோலால் பாவை செய்து ஆட்டுவிப்பது. இவற்றுடன் நகைத்திறச் சுவையாகிய வசைக்கூத்து அல்லது விதூடக் கூத்து சேர்த்து ஏழெனவும் கூறுவர். இவ்வெழுவகைக் கூத்தும் இழிஞர் ஆடலாம் என்ப. பின்னும் வென்றிக்கூத்து, விநோதக்கூத்து, வசைக்கூத்து என மூவகைப்படுத்தியும், உறுவர். வென்றிக் கூத்து மாற்றான் ஒடுக்கத்தையும், மன்னன் உயர்ச்சியினையும் கூறுவதாம். விநேரதக்கூத்து மேற்கூறிய இலக்கணத்தது. வசைக்கூத்துப் பலவகை உருவங்களையும் பழித்துக்காட்ட வல்லவன் ஆடுதலாம். பின்னும் “வாசிகை வைத்து மணித்தோ டணியணிந்து, மூசியசுண்ண முகத்தெழுதி தேசுடனே, யேந்துசுடர் வாள் பிடித்திட் டீசனுக்குங் காளிக்குஞ், சாந்திக்கூத்தாடத் தகும்” என்பதனால் ஒரு வகைச் சாந்திக்கூத்தும் உண்டு. துணங்கைக்கத்து “முடக்கிய இருகை பழுப்புடை ஒற்றித், துடக்கிய நடையதுணங்கையாகும். ” இதனைச் சிங்கி எனவுங் கூறுவர். 2. சிவனாடல், பாண்டரங்கம், காபாலம், கொடுகொட்டி, பதினொருருத் திர ராடல் கொட்டி, குரவை, குடம், குடை, வெறி, மல், பேடு, பாவை, கடையம், பாண்டரங்கம், மரக்கால், மாயோனாடல் குடம், திருமகளாடல் பாவை, முருகனாடல் குடை, துடி, காமனாடல் பேடு, அயிராணி ஆடல் கடையம், துர்கை ஆடல் மரக்கால், சத்தமாத ராடல் துடி, கை கோத்தாடல் குரவை, முடக்கிய இருகை பழுப்புடை யொற்றியாடல் துணங்கை, வேலனாடல் வெறி, ஒற்றறுத்தல் வட்டணை, கைகுவித்துக் கொட்டல் கொம்மை, குந்திநிற்றல் குஞ்சிதம், கைகூப்பி மெய்கொட்டி நிற்றல் குடந்தம். 3. பாரதி விருத்தி, விலக்கியற் கூத்து, கானகக்கூத்து, கழாய்க்கத்து.

கூனி

கைகேசிக்குத் தோழி, இராமமூர்த்தியைப் பட்டம் பெறாது தடுத்துக் காட்டிற்கு ஏவக் கைகசியைத் தூண்டினவள். 2. சண்பகமாலை. 3. மாதவி தோழி, இவளுக்கு வசந்த மாலை யெனவும் பெயர். (சிலப்பதிகாரம்.)

கூன்

வெண்பா முதலிய செய்யுட்களின் முதலடியின் ஒரோவிடத்துப் பொருள் படத் தனித்து நிற்பது. (யாப்பு~இல.)

கூன் பாண்டியன்

சத்துருசாதன பாண்டியனுக்குக் குமரன், இவன் சரித்திரத்தைத் திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரத்தைக் காண்க.

கூபக்கண்ணன்

வாணனுக்கு நண்பன்.

கூபன்

இவன் கந்தன் என்பவனுடன் கூடிக் கிணறும் தவளையுமாயிருந்து விநாயகரை யழுத்தி அவராலி றந்த அசுரன்.

கூரகுலோத்தமதாசர்

பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி.

கூரத்தாண்டாள்

கூரத்தாழ்வான் தேவி, பெருமாள் அனுப்பின பிரசாதம் உண்டு இரண்டு குமாரைப் பெற்றவள்.

கூரத்தாழ்வார்

இவரது அவதாரத்தலம் கூரம், பிதா இராமசோமயாசி, உடையவர் திருவடியை யாச்ரயித்தவர். இவர் உஞ்சவிருத்தி செய்துவரும் நாட்களில் ஒருநாள் உஞ்சவிருத்திக்குச் செல்லாமலிருக்க, கோயிலில் பெருமாள் அமுது கொள்ளத் திருச்சின்னம் பரிமாறினர். பிராட்டி பெருமாளை நோக்கி ஆழ்வான் பட்டினியிருக்க, தேவர் அமுது கொள்ளலாமோ எனப் பெருமாள் உணவு தரப் பெற்றவர். இவர் குமரர் பராசாபட்டர். இவர்க்கு, ஸ்ரீவச்சசின்னமிச்சர் எனவும், நடையாடு பதஞ்சலி, எம், யதீந்திர சரணன் எம் பெயர். இவர் சோழனால் கண்ணிழந்து திருவரங்கத்திலிருந்து பெருமாளைப் பிரார்த்தித்து உடையவர் ஸ்ரீபாததீர்த்தம் பெற்றுத் திருநாட்டுக் கெழுந்தருளினர். இவர் உடையவர்க்குக் கோசபண்டார உக்ராணமட ஸமாத்யக்ஷ பாரபத்தியத்திற்கும், ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத்துணையாயு மிருப்பர். (குருபரம்பரை.)

கூரயாநன்

ஒரு அரசன், இவன் புத்ரன் பகஸ்தமனன். இவன் இருக்குவேதத்தில் புகழப்பட்ட கொடையாளி.

கூரைக்கணக்காயனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு).

கூர்ச்சம்

யாகாதிகளுக்கு உபயோகிக்கும் தருப்பை. இது, 36, 25, 15, 9, 7, 5,3 கருப்பைகளைக் கொண்டு நுனி (4) அங்குலம், முடி (2) அங்குலம், நீளம், (18) அங்குலம், அடியிலுள்ள நாளம் (12) அங்குலமாக முடிப்பது. (சைவ~பூ.)

கூர்ச்சரம்

மேலைச் சமுத்திரத் தருகிலுள்ள நாடு.

கூர்மதாசர்

பிரதட்டான நகரில் கால்களில்லாமல் பிறந்து ஹரிநாமஸ்மரணை மிகுந்தவராய்ப் பண்டரிபுர விஷ்ணுவைத் தரிசனஞ்செய்யவெண்ணிப் பண்டரி புரத்திற்கு ஏகும் பாகவதரைக் கேட்கக் காலிலாத நீ எங்ஙனமடைவாய், எங்களால் அடைய முடியாத பண்டிரியையென, கூர்மதாசர் கேட்டு அதிக விசனத்துடன் மெல்ல நகர்ந்து இளைப்பினால் ஓர் அநுமான் கோவிலடைந்து விசனமுறுகை யில் பெருமாள் ஓர் வேதியராக வந்து நான் பண்டரிக்குப் போகிறேன், நீ வருகவென வழைத்து மெல்லச் சென்று அன்னமுதலிய இட்டுப் பண்டரிபுரத்திற்குச் சமீபமடைந்து இது பண்டரிபுரஞ்செல்லும் வழியெனக் காட்டி மறைந்தனர். தாசரும் ஒரு இடத்தில் தங்கினர். பின்பு தாசர் நான்கு மாதம் தவழ்ந்து வகுளையை யடைந்து நாளை ஏகாதசியாகையால் பண்டரி யென்றடைவ தென்று வருந்திப் பண்டரிபுரஞ்செல்லும் பாகவதர்களை நோக்கித் தான் பெருமாளைக் காணவேண்டியதைக் கூறி அனுப்பினர். சென்ற பாகவதர்கள் தாசர் கூறியதைப் பெருமாளுக்குக் கூறினர். பெருமாள் தாசருக்குத் தரிசனந் தரவேண்டி நாமதேவர், கியானதேவர் முதலியவர்களை யழைத்திக் கொண்டு அவ்விருவரையும் நான் தாகம் ஆற்றி வரும் வரையில் இவ்விடத்திரு மென்று ஒரு கிளைவழியை படைந்து சாமந்தியாமேளதாசர் யோகத்திந்தவரை யெழுப்ப அவர் பெருமாளைக்கண்டு நமஸ்கரித்தனர். பெருமாள் அவரை நோக்கி யிரண்டு திருடர் என்னைத் தொடர்ந்து வருகின்றனர். யானிவ்விடம் வந்தேன் என்னை மறைத்துக்கொள்ளென யோகியும் தனது மார்பைத்திறந்து உட்புகச் செய்து கொடியாலே தன்னைச் சுற்றினர். பின் நாமதேவரும், கியானதேவரும் பெருமாள் எவ்விடம் போயினரென்று அவர் போன காலடியைப் பின்தொடர்ந்து சாமந்தியாமேளரிடம் போய் இங்கு வந்த பெருமாளைக் கண்டதுண்டோ வென்று கேட்டனர். மௌனி யொன்றுங் கூறாமையால் ஞானதேவர் அழத்தொடங்குகையில் பெருமாள் நாம் இவர் மார்பிலிருந்து எவ்வகை வருவதென ஏனைய தாசர்கள் கேட்கும்படி கூறத் தாசர்கள் அதிக துன்பத்துடன் வருந்தப் பெருமாள் மௌனியரை நோக்கி ‘எம்மை’ காட்டுகவென மௌனி, பெருமாள் என்னிடத்திலிருக்கின்றார் வருந்தவேண்டாமென்று தாம் கட்டியிருந்த கொடிகளை அவிழ்க்கப் பெருமாள் வந்தனர். பின்பு பெருமாளும் நாமதேவரும் ஞானதேவரும் கூர்மதாசரையடைந்து தரிசனந்தந்து என்ன வரம் வேண்டுமென்ன நீர் இவ்விடத்தில் எக்காலத்தும் விரும்பியிருக்க என வரங்கேட்க அவ்விடத்திலெழுந் தருளியிருந்தனர்.

கூர்மதேவர்

முந்நூற்றறுபத்தொரு பிரமாக்களைக் கண்ட ஒரு. ஆமை, இந்திரத் துய்ம்மன் அரசாட்சியிலிருந்தது.

கூர்மபுராணம்

இது (6000) கிரந்தத்தால் கூர்ம வுருக்கொண்ட விஷ்ணுமூர்த்தியால் இந்திரத்துய்ம்மனுக்கும், மற்ற இருடிகளுக்கும் புருஷார்த்தங்களைச் சொல்லிய மகாபுராணம்.

கூர்மமூர்த்தி

திருப்பாற்கடல் கடைகையில் மந்தரமசைய அது அசையாதிருக்கும் பொருட்டுத் தேவர் வேண்டுகோளால் கூர்மவுருக்கொண்டு தாங்கிய விஷ்ணுவின் திரு அவதாரம். (பாகவதம்).

கூர்மாண்டதேவர்

இவர், வியோம ரூபருடைய மூர்த்தி ரூபபேதமாய் இருபத்தெட்டுக்கோடி நரகாதி பரையதிட்டித்து எழுந்தருளியிருப்பவர்.

கூர்மாநந்தர்

யோகசாத்திரஞ்செய்த ஒரு யோகி.

கூர்யசம்மாரமூர்த்தி

கூர்மாவதாரங் கொண்ட விஷ்ணுவின் பெருமி தமடக்கி அந்த ஆமையுருவின் ஓட்டினைப் போத்து மார்பணியாக் கொண்ட சிவமூர்த்தியின் திருவுரு.

கூற்றங்குமரனார்

இவர் இயற்பெயர் குமரனென்பது, கூற்றன் தந்தை பெயர், கூற்றனுடைய குமரனார் கூற்றங் குமரனாரென்ராயிற்று. (தொல் எழுத்து 350) இவர் முகம்புகு கிளவி பாடியவரில் ஒருவர். குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 244ம் பாட்டு.

கூற்றுவ நாயனார்

இவர் குறுநில மன்னர் குலத்தில் திருவவதரித்துக் களந்தையில் அரசுபுரிந்து மறுதேசத்தாசர்களை வென்று தாம் மகுடஞ் சூட்டிக்கொள்ளத் தில்லை வாழந்தணர்களை வேண்ட வேதியர் மறுத் தனர். அரசர் ஸ்ரீநடராசமூர்த்தியின் திருவடிகளே தமக்கு மகுடமாக வென்று துயில் கொள்ளக் கனவில் சிவமூர்த்தி திருவடி சூட்டப்பெற்று அரசாட்சியிலிருந்து சிவபதமடைந்தவர். (பெ~புரா,)

கூலம்

எண்வகைத்து, அவை நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, ராகி முதலிய.

கூலவாணிகன் சாத்தனார்

மணிமேகலை நூலாசிரியர். இளங்கோவடிகள் காலத்தவர். சீத்தலைச் சாத்தனாரைக்காண்க. இளங்கோ அடிகட்கும் அவர் தமயன் செங்குட்டுவனுக்கும் நண்பர். இவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனவுங் கூறப்படுவர். இவரை நன்னூற்புலவன், தண்டமிழாசான் கூலவாணிகன் சாத்தன் என்பர் (மணிமேகலை).

கூழங்கைத் தம்பிரான்

இவர் தொண்டை மண்டலத்துக் காஞ்சியிலிருந்த வேளாளர். சைவசமயத்தவர். இற்றைக்கு நூற்று முப்பது வருடங்களுக்கு முன்னிருந்தவர். இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். இவர் சில தனிப்பாடல்களும், சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை முதலிய இயற் றியவர். இவர்க்குக் கைகூழை ஆதலால் இப்பெயர் வந்தது.

கூழாண்டர்

திருவாலங்காட்டி லெழுந்தருளியிருக்கும் தாண்டவமூர்த்திக்கு நெல் முதலிய அளித்துத் தமக்குக் கூழே போது மென்று இருந்து முத்திபெற்ற அடியவர்.

கூழிக்கொற்றன்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் கொற்றராக இருக்கலாம். கூழி இவரது ஊர் போலும், (குறு. 276.)

கூழைக்கடா

(The Palican) இது நாரையினத்தது. இது உடல் பருத்து, கழுத்தும் காலும் குறுகித் தடித்திருக்கும்; இதன் மூக்குத் தடித்துக் குறுகிச் சிவந்தது; இது தோலடிப்பாதம் பெற்று இரண்டடிகள் உயர்ந்திருக்கும். இவை கூட்டமாக நீரில் இறங்கி மீன்களைக் கரைபக்கம் ஒதுக்கித்துள்ளும் மீன்களைக் கொத்தித் தின்னும்,. இவ்வினத்தில் ஒருவகைப் பறவைகளுக்குத் தோற்பை ஒன்று கீழ்வாயில் தொங்குகிறது. இதன் நிறம் வெள்ளை. இதன் மேல்வாயின் மூக்கின் முனை சற்று வளைந்தது. இதனால், இது பிடிக்கும் மீன்களைத் தனக்குள்ள தோற்பையிலடக்கிக் கொண்டு சாவதானமாகத் தின்னும்.

கூவத்து நாரணன்

இவர் கூவத்தில் புலவர்க்கும் மற்றவர்க்கும் கைசவியாது கொடுத்து வந்த வேளாண்பிரபு. இவரிருக்கும் கூவத்தைத் தியாக சமுத்திரமென்று பாடி அச்சமுத்திரத்தில் தூண்டிலிட்டதாகப் பாடிய புலவர்க்கு இவர் பொன்மீன் செய்து அதில் பொருத்தியளித்தனர், ”மட்டாருஞ் செங்கழுநீர் மணிமார்பரை வாழ்த்து மந்தக், கிட்டாத யாசகர் கிட்டி வந்தாலதைக் கேட்டு முன்னாட், பட்டோலை வாசித்த வரவர்க்குள்ள பரிசிலெல்லாம், தட்டானளிப்பதுங் கூவந்தியாக சமுத்தி ரமே” எனப்பாடினர். இவர் இறந்தபின் ஒரு புலவர் ‘இடுவார் சிலருமிடாதார் பலரும், வடுவிலாவையத் திருக்கப் படுபாவி, கூவத்துநாரணனைக் கொன்றாயே கற்ப கப்பூங், காவெட்டலாமோ கரிக்கு” எனப் பாடினர்.

கூவநூலோர்

கீழ் நீர்க்குரிய சாத்திரமுணர்ந்து கிணறு, குளம் முதலிய நிருமிப்போர்.

கூவன் மைந்தன்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் மைந்தன் என இருக்கலாம். இவர் தாம் பாடிய குறுந்தொகைச் செய்யுளில் ”கூவற்குரலான்” எனக்கூறியது நோக்கியிவரை இவ்வா றழைத்தனர் போலும் (குறுந் 224.)

கூஷிகன்

காதீனன் தந்தை, விச்வாமித்ரனுக்குப் பாட்டன்