அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
குகன்

1. இவன் சூரியவம்சத்து லவன் சந்ததியான் இவர்களது சந்ததியாரின் இராஜ்தானி வல்லவிபுரம். கி. பி. 524 இல் இப்பட்டணம் சித்தியர்களால் பிடிக்கப் பட்டபின் இவன் தாய் தன் தாய் நகரம் சென்று திரும்புகையில் தம் நகரம் சித்தியர்களால் பிடிக்கப்பட்ட தென்றறிந்து ஒரு குகையில் ஒளித்தனள். அங்கே இவன் பிறந்ததனால் இவனுக்கு இப்பெயர் வந்தது. இவள் தன் குழந்தையை ஒரு பார்ப்பினியிடம் ஒப்புவித்துத் தீக்குளித்தனள், பார்ப்பினி இவனைப் பிள்ளைபோல் வளர்த்தனள். இவன் சந்ததியார் குகலோதியர் எனப்பட்டனர். இவன்பில் எனும் மலையாளிகளைச் சேர்ந்து தன் சௌரியத்தைத் தெரிவித்து அவர்களால் மலைநாட்ட ரசனானான். இந்நாட்டில் இவன் சந்ததி யார் (250) வருஷம் ஆண்டனர். இவர்களில், ஒன்பதாவது அரசனான நாகதீதன் மலைநாட்டாருடன் போரிட்டு மாண்டான் நாகதீதன் குமரன் பப்பா. 2. தன்சேனைகளைக் காத்துக்கொள்ளும் குமாரக்கடவுளுக் கொருபெயர், 3. சிருங்கிபேரநாட்டு அரசனாகிய வேடன். பரத்துவாசர் ஆச்சிரமத்திற்கு விருந்தான இராமமூர்த்தியிடம் நட்புக் கொண்டவன், நற்குண நல்லொழுக்கம் பூண்டவன். கங்கையில் இடம் விடுந்தொழில் மேற்கொண்டோன். 4. குருத்ருஹனைக் காண்க.

குகமுனிவர்

ஓர் இருடி. இவர் யாகத்தில் தெய்வீக அரசன் எனப் பர்வதராசன் பிறந்தனன்.

குகர்த்தமன்

ஒரு அரசன் இவன் பாபத்தால் பிரேத ஜன்மம் எடுத்துத் திரிந்து புண்ய தீர்த்த ஸ்நானத்தால் ஜன்மம் நீக்கமடைந்து சுவர்க்கமடைந்தவன். (பதும புராணம்).

குகலோதியர்

சூர்யவம்சத்துக் குகனது சந்ததியார். குகனைக் காண்க,

குகவேளாளர்

இவர்கள் செம்படவர்கள், இவர்கள் குகன் இராமர்க்குப் படகோட்டினவன் அவன் வம்சத்திற் பிறந்தவர்கள் என்பர். மறவரும் இந்தக் குகன் வம்சத்தவர் எனத் தங்களைக் கூறிக்கொள்வர். (தர்ஸ்டன்)

குகு

1. ஆங்கீரச ருஷிக்குச் சிரத்தையிட முதித்த குமரி, 2, தாதா என்னும் ஆதித்தன் பாரி, குமரன் சாயம். 3. பிரமன் தேவியருள் ஒருத்தி. 4 வைசுவ தேவபலிகொள்ளும் தேவதை.

குகுரன்

(யாதவன்) அந்தகன் குமரன். இவன் குமரன் விருக்ஷணி.

குகுரர்

யதுகுல பேதம், கம்சன் பகைவர்.

குகை நமச்சிவாய மூர்த்திகள்

இவர் திருவண்ணாமலையில் ஒரு குகையில் நிஷ்டை செய்துகொண்டிருந்த சித்தர். இவர் குகையிலிருந்த தால் இப்பெயர் பெற்றனர். இவர் அம்மலையில் தூங்கும் உஞ்சலிட்டு அதில் சயனித்து நிஷ்டைபுரிந்து வந்தனர். இவரது மாணாக்கர் குருநமசி வாயர். இவர் செய்த நூல் அருணகிரி யந்தாதி. இவரது மற்றச் சரிதங்களைக் குரு நமசிவாயரைக் காண்க. இவர் சைவர்.

குகைகள்

இவை மலைகளிலுள்ள உள்ளறைகளும், குடைவுகளுமாம். இவை இந்தியாவில் பல இடங்களில் பல மலைகளில் உண்டு. இவை அதிக நீட்சியும் விசாலமும் உள்ளவை அல்ல. பஸிபிக் மகா சமுத்திரத்திலுள்ள பீஜி தீவை யடுத்து உங்காவா என்னும் தீவிருக்கிறது. அங்குள்ள மலையில் ஒரு குகையிருக்கிறது. இக்குகையினுள்ளிடம் (60) அடி உயரம், அகலம் 20 அடிமுதல் 30 அடிகள் அதிக நீளமுள்ளது. இக்குகைக்குட் செல்லும் வாயில் கடலுக்குள் (7) அடிக்குக் கீழ் இருக்கிறது. குகையின் உயரம் சமுத்திர மட்டத்திற்கு அதிகம். இதுவே குகைகளில் பெரிதென்பர். ஆஸ்திரேலியா கண்டத்தின் சிட்னி பட்டத்திற்கு (30) மைல் தூரத்தில் பல சுண்ணாம்புக் குகைகள் பல வியப்பைத் தருவனவாக வளர்ந்து வருகின்றன என்பர். சாக்கடல் (Dead sea) எனும் கடலுக்கு வடகோடியிலுள்ள *ஒரு குன்று கல்லுப்புப்பாறைகளாலானது. அதற்கு ஜெபல் உஸ்டம் என்று பெயர். அதில் பல கல்லுப்புக் குகைகள் உண்டு.

குகைமறைஞான சம்பந்த நாயனார்

இவர் சிதம்பரத்திலிருந்த சைவ ஆசாரியர் தமிழில் அருணகிரிபுராணம் பாடியவர்.

குக்கிடமண்டபம்

காசியிலுள்ள முத்தி மண்டபம். மாகந்தனைக் காண்க,

குக்குடன்

சூத்ரனுக்கு நிஷாதஸ் திரீயிடம் பிறந்தவன். (மநு.)

குக்குடர்

புண்டலீகரைக் காண்க.

குக்யகர்

(குய்யகர்) குபேரன் சபையைச் சுமப்போர்.

குக்ஷி

(சூ) இக்ஷ்வாகு குமரன், இவன் குமரன் விகுஷி.

குக்ஷிமான்

குந்தளதேசத்துப் பருவதம்,

குங்கிலியக்கலய நாயனார்

திருக்கடவூரில் வேதியர் குலத்தில் பிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தனர். இவர் திருவீரட்டா னேச்சுரருக்குத் தினந்தோறும் குங்கிலியக் கலயப்புகை யிட்டுவரு நாட்களுள் இவர்க்குத் தெய்வச் செயலால்வ றுமையுண்டாயிற்று, ஒருநாள் இவரது மனைவியார் வறுமையால் தமது சுற்றத்தவர் வருந்து தலைக் கண்டு தமது மாங்கல்யத்தைக் கணவரிடம் தந்து அரிசி முதலிய வாங்கிர அனுப்பினர். நாயனார் தெருவிற் செல்கையில் எதிரில் ஒரு வணிகர் குங்கிலியப்பொதி கொண்டு வருதலைக் கண்டு மனங்களித்து அந்த மாங்கல்யத்தைத் தந்து அம் மூட்டையைப் பெற்றுத் திருக்கோயில் பண்டாரத்திலிருத்தித் தாமும் வீடு சேராமல் அவ்விடமிருந்தனர். எல்லாம் வல்ல சிவ மூர்த்தி நாயனாரது வீடு முழுதும் நெல்லும் பொன்னுமாகக் குவிப்பித்து நாயனாரது மனைவியர்க்குத் தெரிவித்து நாயனாரிடஞ் சென்று நீ வீடு சென்று பாலன்ன மருந் துக என்று திருவாய்மலர்ந்து மறைந்தனர். நாயனார் கட்டளையை மறுத்தற்கஞ்சி வீடுசென்று பொன் முதலியவற்றைக் கண்டு மனைவியரை வினாவிச் சிவனடியவருடன் அமுதருந்தியிருக்கு நாட்களுள் திருப்பனந்தாளில் சிவலிங்கஞ் சாயந்தி ருக்க அரசன் மூர்த்தியை நிமிர்த்துச் சேவிக்கவெண்ணி ஆனை முதலிய கட்டி பிழுத்தும் நிமிராதது கண்டு, நாயனார் கேள்வியுற்றுச் சென்று தமது கழுத்திற் கயிறு பூண்டிழுக்கச் சிவலிங்கம் நிமிரக் கண்டு களித்து அவ்விடஞ் சிலநாள் தங்கித் திருக்கடவூர் சென்று திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளையும் திருநாவுக்கரசு சுவாமிகளையும் கண்டு திருவமுது செய்வித்துச் சில நாட்களுக்குப் பிறகு முத்தியடைந்தவர். இவர் காலம் திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள் காலம். (பெ~பு.)

குங்கிலியன்

கள்ளர்களுக்குப் பட்டம்.

குங்கிலியம்

தேவதாரு மரத்தின் பாலைச் சலத்துடன் கலந்து கழுத்து வளைந்த பாத்திரத்திவிட்டுக் காய்ச்சும்போது வெளிக்கிளம்பும் நீராவியைக் குளிரவைத்தால் ஷை பிசினும் ஆவியாகிக் குளிர வைத்த நீரில் மிதக்கும். இவ்வாறு மிதப்பதைச் சேர்த்தெடுத்தால் அது கர்பூரத் தைலமெனும் டர்பன்டைன் ஆகும். தாமிர பாத்திரத்தின் அடியில் தங்கும் வண்டல் குங்கிலியம்.

குங்குமப்பூ

இது ஒரு பூண்டின் மகரந்தம், இதற்கு (காரிகஸ்) என்று (Croeus) ஆசியா மைனரில் பெயர். இது ஆசியா மைனரிலுள்ள காரிகஸ் எனுமிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்றதென்பர். இது இப்போது எங்கும் பயிரிடப் பட்டு வருகிற தாயினும் இந்தியாவில் காஷ்மீர் எனும் மலைநாட்டினதே சிறந்த தென எண்ணுகின்றனர். இதன் புட்ப கோசங்களை அக்டோபர், நவம்பர் மாதங்களில் பறித்து உலர்த்தித் தண்ணீரில் அலம்ப இதழ்கள் மிதந்து போய்க் கோசங்கள் அடியில் தங்குகின்றன; அவைகளைப் பக்குவப்படுத்தி விற்கின்றனர்.

குங்குமம்

இது தேவிக்குரிய காப்பு, இதனைக் குங்குமப்பூ, உயர்ந்த பச்சைக்கற்பூரம் முதலியவற்றுடன் சேர்த்துத் தேவிக்குப் பனிநீரில் இழைத்திடும்படி ஸ்ரீகாரணாகமம் கூறும். இதற்குப் பிரதியாகத் தற்காலத்தில் மஞ்சட்பொடியுடன் வேறெதையோ சேர்த்துக் குங்குமம் எனச் செய்து கொள்ளுகின்றனர். தேவிக்குரிய மங்கலப் பொருளாதலின் மங்கலம் பெற மங்கையர் அணிவர்.

குங்மகுபாண்டியன்

வாகுவலய பாண்டியனுக்குக் குமரன்.

குசஅத்தர்

ஓர் இருடி. விஷ்ணுவை யெண்ணித் தவஞ்செய்து முத்திபெற்றவர்.

குசத்தலம்

1, சராசந்தன் மதுரையைத் தீக்கிரையிட்டபின் கிருஷ்ணன் ஆண்டது. ரைவத் துர்க்கத்திலுள்ள பட்டணம். 2. Dwaraka, the capital of the Krisna’s kingdom in Guzerat.

குசத்தலி

இரேவதன் என்னும் சூர்யவம் சத்தரசனாண்ட தேசம்,

குசத்துவசன்

1. சநகன் தம்பி, தசரதன் மைத்துனன், பாதசத்துருக்கருக்கு மாமன். 2. வேதவதிக்குத் தந்தை, இவர் முனிவர். இவர் வேதமோதிக் கொண்டிருக்கையில் இவர் நாவில் வேதவதி பிறந்து இம்யமலையில் விஷ்ணுமூர்த்தி தனக்கு நாயகனாகத் தவமியற்றினள். இவர் ஒரு அரக்கனாலிறந்தனர்.

குசத்துவயஹாரிணி

ருதுஹாரிணியின் குமரி, காலந்தவறி மணப்பவளுடைய இரண்டு ஸ்தனங்களையுங் கெடுப்பவள்.

குசநாபன்

1. (ச) குசகன் குமரன். 2. காதியின் தந்தை. இவனுக்கு நூறு பெண்களிவர்களை வாயுவிரும்ப, அவர்கள் இணங்காமையால் வாயு கோபித்து முதுகுகளை முரித்தனன். இவர்களைத் தந்தை சூளிருஷிக்குக் கொடுத்தனன். அந்த ருஷி தொட்டதும் இப்பெண்கள் கூனிபிர்ந்து அழகுபெற்றனர். (இராமாயணம்.)

குசன்

1. சுகோதரன் குமான், இவன் குமரன் பிரீதி. 2. (ச) அசகன் குமாரன். 3. செவ்வாய்க் கிரகம். 4. இராமருடைய புத்திரன், குழந்தைப் பருவத்தில் வான்மீகியால் இரக்ஷையின் பொருட்டுக் குசையால் தடவப்பெற்ற தால் இப்பெயரடைந்தனன். இவனும் தம்பியும் வால்மீகர் பாடிய இராமாயணத்தை இராமமூர்த்தி செய்த அச்வமேதத்திலரங்கேற்றித் தம்மை யறிவித்தனர். இவன் ஆண்ட பட்டணம் குசாவதி, அயோத்தி பெண்ணுருக் கொண்டு வேண்ட அயோத்தியை ஆண்டவன். சாயுவில் கங்கணம் விழ அதனை ஒரு நாகம் கவ்வியது. அதனால் கோபித்து அம்பெடுத்தனன். அதைக்கொண்ட நாககன்னிகை அதனைக் கொடுக்க அந்நாககன்னி கையையும் மணந்தவன். 5. விதர்ப்பன் குமரன். 6. சுத்தவிர தன் இரண்டாவது குமரன். 7. காதி தந்தை, சிலநாள் சௌநகருக்கு உபசாரஞ் செய்து வருகையில் அவர் நாற்பத்திரண்டு நாள் தூங்கினர். குசன் அவர்க் குபசரித்தது கண்டு மனமகிழ்ந்து இவன் குலத்தில் ஒரு ருஷி பிறக்கும்படி வரந்தரப்பெற்றவன், 8. பிரமபுத்ரன், குசநாபனுக்குப் புத்திரர் பிறக்க வரந்தந்து உடலுடன் சுவர்க்க மடைந்தவன்.

குசப்லவனம்

இது திதி இந்திரனை வெல்ல புத்ரன் வேண்டித் தவஞ்செய்த இடம், இங்கு இந்திரன் அவள் கருவைச் சேதித்தான். (இரா~பால.)

குசம்பன்

1. தாரகயுத்தத்தில் வருணனால் கொல்லப்பட்ட அசுரன். 2. துவட்டாவால் நிருமிக்கப் பட்ட உலக்கை கொண்டு உலகத்தை வருத்தி வத்சந்திரனால் கொல்லப்பட்ட ஒரு அரக்கன்.

குசலன்

கற்கைநாட்டு வேதியன், இவன் தெய்வமில்லையென வாதித்துச் சாகுங் கால் யமபடர்பற்றத் திரிகூடம் நினைந்து குற்றாலம் என உயிர்விட்டு யமபடரி னீங்கித் தேவர் பூமாரிபெய்து பொழியும் மணத்தால் புட்பகந்தன் எனப் பெயரடைந்து முத்திபெற்றவன்.

குசலவதி

கோசலத்திலுள்ள பட்டணம், குசன் ஆண்டது.

குசலாசுரன்

இவன் சிந்தாசுரன் எவலால் கேமாசுரனிடன் கூடிப் பெருச்சாளியுருக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் குழந்தையுருக்கொண்ட விநாயகர்மீது விழுந் தனன். விநாயகர் பூனை யுருக்கொண்டு இவர்களைக் கொன்றனர்.

குசவன் ஆயுதங்கள்

மண், செம்மண், திரில், கவருகோல், பிடி துணி, அறுகுச்சு, தட்டுப்பலகை, வலைச்சல், பத்தை, முள்ளு, மட்பகை, திரைசல், கரைமணிக்காய், தட்டுக்கல், இடுமம், (கூர்.)

குசவர்

மண்ணால் பாத்திரங்கள் செய்து சூளை போட்டுப் பிழைப்பவர். இவர்களுக்கு உடையார் பட்டம், இவர்களிற் பெரும் பாலோர் வீரசைவர். இவர்களிற் சிலர் பூணூல் தரிப்பர். இவர்களின் ஆயுதங்கள், மண் பாத்திரம் செய்வதற்குச் சக்கரம், தண்டம் முதலிய, இவர்களிற் சிலர் பிடாரி கோவில்களில் பூஜாரிகளாக இருக்கின்றனர். இவர்கள் கிராமங்களில் கல்யாணத்திற்குச் சால், குடம், காகம், முதலிய கொடுத்துப் பரிசு பெறுவர். இவர்கள் எலும்பு முதலிய பிசகின் வைத்தியம் செய்வர். (தர்ஸ்டன்.)

குசஹாரிணி

ருதுஹாரிணியின் குமரி, கல்யாணத்தில் நாந்திசிரார்த் தத்தால் பிதுர்க்களைப் பூசிக்காதவளின் ஒரு ஸ்தனத்தைப் போக்குபவள்,

குசாக்ரன்

குருவம்சத்துப் பிருகத்ரதன் குமரன், சராசந்தன் சகோதரன்.

குசாசுவன்

சகதேவன் குமரன், இவன் குமரன் சோமதத்தன்.

குசாபன்

உபரிசாவசு குமரன்.

குசாம்பன்

குசன் குமான், இவன் குமரன் காதி. (இரா.)

குசாவதி

குசனாண்ட நகரம். இது கோசலத்தின் வடக்கிலுள்ளது.

குசாவர்த்தம்

கௌதமரைப் பகைத்து வேதியர் அப்பாபம் தீரத் தருப்பையால் பவித்திரமணிந்துகொண்டு ஸ்நானஞ் செய்த கோதாவரிதீரம்.

குசாவிரதன்

இருஷபனுக்குச் சயந்தியிடத்துதித்த குமரன்.

குசிகன்

புரூரவன் குமரனாகிய அமவசு குலத்தவன், விச்வாமித்திரனுக்கு மூதாதை. பலகாச்வன் குமரன்.

குசீராத்தி

இது கூர்ச்சரம், ஆநர்த்ததேசம் எனப்படும். இத்தேசவாசிகள் குசராத்தியர் எனப்படுவர்.

குசீலவன்

மைத்திரேயனுக்குத் தந்தை,

குசுமபுரம்

பாடலீபுரத்திற் கொரு பெயர்.

குசுமேஷூ

மன்மதனுக் கொருபெயர்.

குசுமை

இவள் சுதன்மன் எனும் வேதியனுக்கு இளைய மனைவி இவளைச் சுதன்மனுக்கு அவனது மூத்த மனைவியாகிய சுதேகை என்பவள் தனக்குப் புத்திரப் பேறில்லாமையால் மணஞ் செய்வித்தனள். இவளிடத்துச் சுப்பிரியன் எனும் குமரன் பிறந்தான். இதனால் வேதியன் களிப்படைந்து சிவபூசை கைவிடாதிருக்கையில் சுதேகை பொறாமை மனதிடம் வைத்து வந்தனள். பின் தாய்தந்தை யரிருவரும் சுப்பிரியனுக்கு மணமுடித்து மகனையும் மருமகளையும் அருகில் வைத்துக்கொண்டு களிப்புறக்கண்ட சுதேகை எவ்வகையேனும் சுப்பிரியனைக் கொன்று பகைமுடிப்பேனென்று சுப்பிரியனும் அவன் தேவியும் உறங்குகையில் சுப்பிரியனைத் துண்டித்துக் குசுமையும் அவள் கணவனும் பார்த்திப்பூசை செய்து சிவலிங்கங்களை விடும் குளத்திலெறிந்து ஒன்றும் அறியாதவள் போல இருந்தனள். இதனையறிந்த குசுமை மனந்தளராது வழக்கம்போல் சிவபூசை முடித்துச் சிவலிங்கத்தைவிடுங் குளத்தருகிற் சென்று மீள் கையில் இறந்து குளத்திலழுந்திய மகன் தாடை நோக்கி கானும் வருகிறே னெனக் கேட்டுச் சிவமூர்த்தியைத் துதிக்கையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து யாது வேண்டுமென இக்குளமே கோயிலாக் கொண்டருள்க என அவ்வாறே கூச்மேச் வரமாக அமர்ந்தனர். (சிவமகாபுராணம்).

குசும்பன்

உபரிசரவசுவின் குமரன்.

குசும்பா

இது, ஒருவகைச் செடி, இதன் விதைகள் வண்டை விதைகள் போலிருக்கும், இவ்விதைகளிலிருந்து எண்ணெய் உண்டாக்கிப் பலகாரங்கள் செய்கின்றனர்.

குசேலர்

கண்ணனுடன் வாசித்த வேதிய நண்பர். இவர் வறுமை யடைந்திருந்த காலத்து மனைவியார் இவரை நோக்கி உமக்கு நண்பராகிய கண்ணபிரானிடஞ் சென்று உமது தரித்திரத்தைக் கூறிப் பொருள் பெற்று வருக என்றனள். இதனைக்கேட்ட குசேலர் ஆயின் நண்பரிடஞ் சென்றால் எதேனுங் கையுறையாகக் கொண்டுபோக வேண்டுமென்றனர். மனைவி கொஞ்சம் அவல் பலகாரஞ்செய்து தரக் கொண்டு சென்று கண்ணனைக் கண்டனர். கண்ட கண்ணன், யோகக்ஷேமங்களை விசாரித்து அருகிருந்த மூட்டையிலிருந்த அவலில் ஒருபிடி எடுத்து வாயிலிட்டு உண்டனர். மறுபிடி உண்ண எடுக்கையில் அருகிருந்த தேவியார் விலக்க உண்ணாது நின்று குசேலருக்கு ஒன்றுங் கொடாது அனுப்பக் குசேலர் துக்கத் துடனீங்கி வீடுவந்து தமது பெருஞ் செல்வத்தினைக் கண்டு களித்தவர்.

குச்சகர்

கடகமென்னும் பட்டணத்திலிருந்த முனிவர். இவர் குமரன் கௌச்சிகன் அல்லது மிருகண்டு, இவர் தம் குமாருக்குப் பெண்கொள்ள உசத்தியரிடஞ் சென்றனர். அந்த வுசத்தியர் பெண் விருத்தை, காட்டானைக்குப் பயந்து மடுவில் விழுந்திறந்தனள், அவளை உயிர்ப்பிக்கக் குச்சகர், தடாகக்கரையில் தவமியற்றுகையில் ஒரு காட்டானை இவரைத் தூக்கிக் கொண்டு காட்டுள் சென்றது. முனிவர் யானையின் வரலாறு வினவ யானை அறிவு தோன்றித் தான் தவதத்தன் என்பவன், தருமத்தைவிட்டு இரசவாதஞ்செய்த பாதகத்தால் மத்தயானை யானேன் என முனிவர் தமது தபோபலத்தில் சிறிது அந்த யானையுருக் கொண்டவனுக் களித்தனர். உடனே தனதத்தன் யானையுரு நீங்கித் தேவவுருக்கொண்டு சென்றனன். முனிவர் மீண்டும் யமனையெண்ணித் தவமியற்றி விருத்தையை யமனருளா லுயிர்ப்பித்து தமது குமரருக்கு மணஞ் செய்வித்துத் தாம் தவத்திற்குச் சென்றனர்.

குச்சன்

1. ஒரு வேதியன் புத்திரப்பேறு வேண்டி விரதம் அனுஷ்டித்து மாக ஸ்நானஞ் செய்து இஷ்டசித்தி யடைந்தவன் (பதுமம்.) 2. இருக்கு வேதம் 15 வது அத்தியாயத்தில் புகழ்ந்து சொல்லப்பட்டவன். இவன் கிணற்றில் தள்ளப்பட்டு இருக்கோதி மாண்டதாக இருக்கு வேதம் கூறும். 3. சாக்ஷசமனுவிற்கு நடவலையடத் துதித்த குமரன். 4. அங்கீரசன் சந்ததியான்.

குச்சரக்குடிகை

சம்பாபதியின் கோயில். (மணிமேகலை.)

குச்சரன்

ஓர் இருடி, திரேதாயுகத்தில் சிவபூசையால் முத்திபெற்றவன்.

குஜாதிபஞ்சகிரகங்கள்

குஜன், புதன், குரு, சுக்ரன், சநி.

குஞ்சம்பூர் இராமாநுசாசாரியர்

வேதாந்த தேசிகரின் திருவடி சம்பந்தி.

குஞ்சரன்

1. அதுமானுக்குப் பாட்டனும், அஞ்சனாதேவியின் தந்தையு மாகிய வாநரன், 2. கத்ருவின் குமரன், நாகன்.

குஞ்சீகாரர்

சேலம் ஜில்லாவிலுள்ள உழுது பயிரிடும் சாதியார். (தர்ஸ்டன்).

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை

ஒரு சேரன், பெருங்குன்றூர்க் கிழாராற் பாடப்பெற்றவன்.

குடபன்

ஓர் இருடி.

குடபுலவியனார்

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய தமிழ்ப்புலவர். (புற~நா.)

குடமலை

காவிரிபிறத்தற்கு இடமாயுள்ள மலை. (சிலப்பதிகாரம்.)

குடமுருட்டி

சோழநாட்டு உறையூரிலுள்ள ஒருநதி.

குடமூக்கிற்பகவர்

இவர் யாப்பருங் கலக்காரிகை யுரையிற் கூறப்பட்ட தொல்லா சிரியர்களில் ஒருவர். கும்பகோணத்தவர் போலும்.

குடம்

1. கொச்சி நாடு, 2. அநிருத்தனை வாணன் சிறையிட்ட காலத்தில் அவ்வாணாசுரன் பட்டணத்தில் கண்ணன் லோகத்தாலும், மண்ணாலுஞ் செய்த குடங்கொண்டாடிய கூத்து.

குடல்விருத்திரோகம்

வாயு அதிகரித்தெழுந்து அதோமுக மார்க்கமாக அண்டங்களுக்குள் சஞ்சரித்து அவ்விடங்களில் வீக்கத்தையும் சூலையையும் பிறப்பித்து நாபியின் வழியாய் ஆண்குறியைச் சேர்ந்து அதிலுள்ள நரம்புகளுக்கும் அண்டத்திலுள்ள நரம்புகளுக்கும் உபத்திர வத்தை யுண்டாக்கும். இது, வாத, பித்த, சிலேஷ்ம, ரத்த, மேதோ, மூத்திர விருத்திகளெனப் பேதப்படும். இவைகளுக்கு சிற்றண்டமெழுகு, போண்டச்சுன்னம், அபிரகபஸ்மம் முதலியவைகள் நலந்தரும்.

குடவாயிற் கீரத்தனார்

கீரத்தனாரெனப் படுபவரும் இவரே. குடவாயில் சோழநாட்டின் கண்ணதாகிய தஞ்சாவூர் ஜில்லா நன்னிலந் தாலுக்காவைச் சார்ந்ததொரு பெரியவூர் இவர் தம்மூரைத் தண்குட வாயிலன்னோள்” (அகம் 44) ‘ கொற்றச் சோழர் குடந்தைவைத்த (அகம் 60) தேர்வண்சோழர் குடந்தைவாயில் எனச் சிறப்பித்துக் கூறாநிற்பர். இதனுள் குடவாயிலென்பதனைக் குடந்தையென மேலை யோர் திரித்தனரென்பர் நச்சினார்க்கினியர். தொல், பொருள். 388 உரை. இவர் முன்பொரு காலத்துச் சோழனொருவன் சேர நாட்டகத்துச்சென்று கழுமலமென்னும் நகரை முற்றித் தன் சேனாபதி பழையன் என்பானைப் பகைப் புலத்தவர் சேநாபதி கணையனென்பான் கொல்லக்கண்டு பொறாது அவனையும் அவ்வூரையும் கைப்பற்றிய கதையைக் கூறுகின் றவர் அப்போரில்வந்த மற்றுமுள்ள சேனாபதிகளையும் பிறசிற்ற ரசர்களையும் எடுத்துக்கூறிச் செல்லுகின்றார். அகம் 44. சோழரது திரவியசாலை குடவாயிலின்கணுளதென்று குறிப்பிக்கி றார். அகம் 60. திரவியசாலை மிக்க போர் வீரராற் காக்கப்பட்டுள்ள தெனவும் காவன் மிக்குடைமையின் சிறைச்சாலையும், குடவாயிலின் கட்டப்பட்டுள்ள தெனவுங் கொண்டு சோழன் செங்கணான் சேரன் கணைக்காலிரும் பொறையைப்பற்றிக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிட்டானென்று களவழியிலும் புறத்துங்கூறி யிருப்பதை ஆய்ந்து கொள்க. நன்னனது ஏழில் மலை இவராற் பாடப்பட்டுள்ளது அகம் 345. சோழநாட்டிலுள்ள அன்னியும் திதியனும், போர்செய்யத் தொடங்குகையில் இடையில் சமாதானஞ் செய்யச் சென்ற நாகபட்டினந் தாலுக்கா வைப்பூரிலுள்ள எவ்வியென்பவனைச் சிறப்பித்துக் கூறுகிறார். அகம் 366 உறையூரும், காவிரியும், இவராற் பாராட்டப்பட்டுள்ளன. அகம் 385. இவர் பெரும்பாலும் பாலைத்திணையையும், சிறுபான்மை மற்றைத் திணைகளையும் புனைந்து பாடியுள்ளார். மருதநிலத்துப் பள்ளர் பொலி தூற்றிய கூளம், உப்புப்பாத்தியிற் படிதலின் நுளையர்போந்து மற்போர் புரியக்கண்ட முதியோர் இருவரையும் கைபிணிவிடுத்து நுளையர்க்குக் குடக்கள் கொடுத்து விடுத்தார் என்று திணை மயக்கங்கூறி மகிழ்விக் கிறார். அகம் 366. வினைவயிற்சென்று மீண்டு வந்த தலைமகனைக் கண்ட காதலி தான் முற்றுப்பெறாத கோலத்தோடு ஓடி வந்து முயங்குவதாகக் கூறியாவர்க்குஞ் சுவையமிழ் தூட்டுகிறார். நற் 42 இவர் பாடிய பாங்கி பேதமை யூட்டற்றுறை ஆராயத்தக்கது. நற் 739. இவர் பாடியனவாக நற்றிணையில் நாலு (27, 42, 212, 379.) பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் பத்துமாகப் பதினேழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

குடவாயில் நல்லாதனார்

பெருஞ்சாத்தனைப் பாடிய தமிழ்ப்புலவர். (புற~நா.)

குடாசுரன்

ஒரு அசுரன், இவன் தேவரை வருத்தத் தேவர் வெள்ளிமலையி லடைக்கலம் புகுந்தனர். சிவமூர்த்தி பிராட்டியின் குறிப்புணர்ந்து போர்க்கனுப்பினர். பிராட்டி போர்புரிகையில் சிவமூர்த்தி பிரத்தி யக்ஷமாகப் பிராட்டி பூசை செய்தனள். சிவமூர்த்தி தரிசனம் தந்து சூலத்தாற் கொன்று இவனை யுயிர்போக்கினர்.

குடாரன்

கத்ரு தநயன்.

குடிசைக்காரி

குச்சுக்காரி தாசிகள். (தர்.)

குடிதாங்கிமுதலியார்

1. இவர் பொன் விளைந்த களத்தூரிலிருந்தவர். இவர், இரப்போருக்கு இல்லையென்னாது கொடுத்து வந்தமையால் இவர் கழனி ஒருகால் பொன்கதிர்விட அவைகளைப் பிராமணர் முதலிய பலர்க்கும் தானஞ்செய்து புகழ் படைத்தவர். ‘வெறும்புற் கையுமரி தாய்க் கிள்ளைசோரவென் வீடுகெட்டேன், எறும் புக்கோ ராற்பதமில்லை கண்டாயென்னிருங் கலியின், குறும்பைத்துரத்துங் குடிதாங்கியைச் சென்று கூடியபின், தெறும்புற் கொள்யானை கவளங்கொள்ளாமை தெவிட் டியதே. ” இச்செய்யுளில் பாதிகேட்டுப் பரிசில் கொடுத்தபின் புலவர்பாதி பாடினார் என்பர். (தமி. நா. சரி.)

குடிநிலை

மண்செறிந்த பூமியிடத்துப் பழமையும் தறுகண்மையு முட்கொண்டு பிறரறியும் குடியின் வரலாற்றினைச் சொல்லியது. (பு. வெ.)

குடிமகன்

அம்பட்டன். (தர்ஸ்டன்)

குடிமிக் குயவன்

பிரமன் சிகையில் பிறந்தவனாம். இவர்களுள் முதல்வன் அமிர்த கண்டன். குயவர் முதல்வன்.

குடுதடுப்பைக்காரர்

இவர்கள் ஒருவித மகாராஷ்டகசாதியார் இவர்கள் கூட்டம் கூட்டமாகத்திரியும் நாடோடிகள். இவர்கள், கிராமங்களிலும் பட்டணங்களிலும் எதிர்கால நிகழ்ச்சி கூறுவதாய்ச் சிற்றுடுக்கை கையிற்கொண்டு குடுகுடுவென்று தட்டிக்கொண்டு அம்பா பலுக்குகிறா ளென விடியற்காலத்தில் கூறிக்கொண்டு விடிந்தபின் அரிசி காசு பழந்துணிகள் கைக்கொண்டு கள்ளுக்கு மாறிப்பிழைக்கும் சாதியார். (தர்ஸ்டன்)

குடுமி

இஃது ஒரு உழவர் ஜாதி இவர்கள் கொங்கண பிராமணருடன் வந்தவர்கள், கொச்சி முதலிய இடங்களில் வேலை செய்து பிழைக்கின்றனர். இப்பெயர் கொண்ட வேட்டைக்காரர் சிலர் விஷ வைத்தியம் செய்து பிழைக்கின்றனர்.

குடுமிகளைந்த புகழ்சாற்று நிலை

நீண்ட அரணினையழித்து நிரைத்த மாலையினையுடைய வேந்தன் குடுமிகளைந்த மிகுதியைச் சொல்லியது. (பு. வெ. பாடா.)

குடும்பாண்டி

1, வைசியனுக்குப் பிராமணஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்கு மணியடித்துக்கொண்டு பிக்ஷையெடுப்பது தொழில். 2. மைத்திரேயனைக் காண்க.

குடை

1. கோடையில் வெயிலைத் தணிக்கவும் மழை தடுக்கவும் குடைவாய் அமைந்தது. இது நடுக்கம்பியில் பல பிரம்புகளாலும் மூங்கில்களாலும் தொடுக்கப்பட்டுத் துணியாலும் பட்டாலுமாகிய போர்வையுடையது அன்றித் தாழங்குடை சம்பங்குடை, பனங்குடை முதலியவுமிவ்வகையிலுண்டு, 2. செங்குடை, பீலிக்குடை, பீலிக்குஞ் சக்குடை, பஞ்சவர்ணக்குடை எனப் பல வகைப்படும். சிவனுக்கு (1) விஷ்ணுவிற்கு (2) சிநனுக்கு (3) 3. அசுரர் அறுமுகனுடன் போர்க்காற் முது படைக்கலத்தை யெறிந்துவிட்டு விசனத்துடனிருக்கையில் தன் குடையை ஒருமுக எழுனியாகச் சாய்த்துக் குமரனாடிய கூத்து.

குடைச்செலவு

பழங்குடிக் கொடுவினையாளர் முன்னே சூழ்ந்து போக அழலும் நெருப்புப்போன்ற வேலினையுடையவன் குடையைப் புறவீடுவிடுத்தது.

குடைநாட்கோள்

செருத்துக் கூடாதாருடைய அரணைக்கொள்ள நினைந்து வெற்றி மன்னவன் குடையைப் புறவீடு விட்டது. (பு. வெ.)

குடைநிலை

தன்மேலிட்ட மாலையிலே வண்டுளொலிப்ப மிக்க அறிவினையுடையோர் கீர்த்தியைச் சொல்லக் கத்தரிகையால் மட்டஞ்செய்த மாலையினையுடைய வேந்தன் குடையைப் புறலீடுவிட்டது. (பு. வெ.)

குடைப்பறவை

(Umbrella Bird) இப்பறவை காக்கை போன்ற வுருவுள்ளது. இதுதென் அமெரிகா அமேசான் நதி தீரத்திலுள்ளது. இதன் தலைமீது வளர்ந்துள்ள கொண்டையிறகு குடைபோன்று விரிக்கக்கூடிய தாயிருக்கிறது. இதன் கழுத்தில் அலைதாடிபோன்று இறகுகள் அடுக்கிட் டதுபோல் வளர்ந்திருக்கின்றன. இது பூச்சி புழுக்களைத்தின்று சீவிக்கிறது.

குடைமங்கலம்

நான்கு திக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசன் குடையைப் புகழ்தது. (பு. வெ. பாடாண்)

குடைமுல்லை

பூசலைத் தடுத்த மிக்க உரத்தாலுயர்ந்த தோளினையுடைய மட்டஞ்செய்த மலையான் குடையைப் புகழ்ந்தது. (பு. வெ.)

குட்ட நாடு

கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று கோட்டயத்திற்கும் கொல்லத்திற்கு மிடையில் பாலையாற்றால் பல ஏரிகளும், தீவுகளு முடையதாகியுள்ளது. திருவாங்கூரைச் சார்ந்த ஆலப்புழை யென்ப.

குட்டவ்வை

இவள் உடம்பில் வெண்குட்டத்துடன் வீரசைவ வேடத்தளாய் ஒரு அக்ராகாரத்தின் வழி நடக்கையில் அவ்விடத்திருந்த வேதியர், அசுத்தையாகிய நீ யெங்கள் தெருவழி வரலாமோவெனக் குட்டவ்வை வெகுண்டு நீங்கள் பாண்டு ரோகிகளாகவெனச் சபித்துச் சௌராட சோமையரிடஞ் சென்று சிவாநுக்கிரகத்தால் குட்டநோய் நீங்கிப் பிராமணருக்குத் தன்னைக் காட்டினவள்.

குட்டுவன்

இவன் சேரர் மரபினன், குட்ட நாட்டை யாண்டமையின் சோமரபினர் குட்டுவரெனப்பட்டார். குட்டநாடு மலை நாட்டின் ஒருபகுதி, கடைச்சங்கநிலையிட்ட முடத்திருமாறனாற் புகழ்ந்து பாடப் பெற்றவன். இவன் இற்றைக்கு 2500 வருஷத்தின் முற்பட்டவனாக வேண்டும். இவனைப்பாடியவர் முற்கூறிய முடத்திருமாறனார். (நற்~105.)

குட்டுவன் கண்ணன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவராக இருத்தல்கூடும். இவர் பெயர் கண்ணனாக இருக்கலாம். இவர் சேரர் குடியினராதலின் குட்டுவன் கண்ணன் எனப்பட்டனர். குறு 179.

குட்டுவன் கீரனார்

ஆய் என்னும் வள்ளலைப்பாடிய புலவர். (புற~நா.)

குட்டுவன் சேரல்

ஒரு சேரன்.

குணகன்

(சூ.) சூத்ரகன் குமரன்.

குணகாங்கியம்

கருநாடகச் சந்தமும், மகடூஉ முன்னிலையுமாகச் சொன்ன நூல்.

குணகேசி

மாதலி புத்திரி. இவளுடன் பிறந்தான் கோமுகன் தாய் சுதர்மா.

குணசாகரர்

யாப்பருங்கல நூலாசிரியர், காரிகைக்கு உரையாசிரியர், இவர் சைந சந்நியாசி. இவர் காலம் சாலிவாகன சகம் 300க்குமேல் இருக்கலாம் என்பர்.

குணசாலினி

தனபதிக்குத் தேவி.

குணசீலன்

சாந்திகன் குமரன் கண்ணபிரானால் முதலைவாயினின்று வருவிக்கப்பட்டவன்.

குணசேநன்

அச்சுவக்கிரீவன் சேநாவீரரில் ஒருவன்.

குணநாற்பது

ஒரு பழைய நூல் சங்க மருவியதா யிருக்கலாம். தொல்~நச்சர் உரை.

குணநிதி

1. கோசல தேசத்துக் கிரிநாதன் புத்திரனாகிய வேதியன். இவன் குருபத்தினியைப் புணர்ந்து குருவையும், தாய் தந்தையரையும் கொன்றனன், இவனை யூரார் காட்டிற்றுரத்தினர். இவன் வழி பறித் துண்டிறக்கையில் யமபடர் பற்ற வருகையில் சிவகணங்கள் இவனிவ்வனத்தில் உருத்திராக்ஷ காற்றுப்போக்கி லிருந்ததால் சிவகணத்தவனாயினன். நீங்கள் விடுக என உருத்ரவுல கடைவித்தனர். (தேவி. பா.) 2. வேள்விதத்தன் குமரன். குபேரனைக் காண்க. 3. கோளகனைக் காண்க.

குணநிதிபாண்டியன்

இவன் சரிதையைச் சுந்தரபாண்டியனைக் காண்க.

குணநூல்

இது நாடகத் தமிழ் நூல்.

குணபத்திரன்

வீரை மண்டல புருடன் மாணாக்கனா யிருக்கலாம்.

குணபரன்

பல்லவர்களில் ஒருவன். சோழ நாட்டை யாண்டு திரிசிராப்பள்ளி மலைமேல் சிவாலயம் புதுப்பித்தவன். இவனுக்குப் புருஷோத்தமன், சத்துருமல்லன், சத்தியசந்தன் எனவும் பெயர்.

குணமாலை

சீவகன் மனைவியரில் ஒருத்தி.

குணம்

1, குணத்தன்மை சாமான்ய முடையது. ஒரு திரவியத்தைப் பற்றியுள்ளது. இது, ரூபம், ரஸம், கந்தம், பரிசம், சங்கியை, பரிமாணம், பிரதக்தவம், சையோகம், விபாகம், பரத்வம், அபரத்வம், குருத்வம், திரவத்வம், சிநேகம், சத்தம், புத்தி, சுகம், துக்கம், இச்சை, துவேஷம், பிரயத்னம், தருமம், அதருமம், சமஸ்காரம் என (24) ஆம். 2. ஆடூ உக்குணம் (4) அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மகடூஉக்குணம் (4) அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. 3. 3. சத்துவம், இராசதம், தாமதம். இவற்றுள் சத்துவம் ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, மேன்மை, மோனம், ஐம்பொறி அடக்கல் முதலியவாம். இராசதம் மனவூக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி முதலியவாம். தாமதம் பேருண்டி, நெடுந்துயில், சோம்பு, நீதிவழு, ஒழுக்கவழு, வஞ்சம், மறதி, பொய், கோபம், காமம் கொலை முதலியவாம்.

குணவதி

அபிசித் எனும் தமிழ்நாட்டரசன் தேவி. பிரமன் சரஸ்வதியிடம் காமவசப் பட்டு வெளிப்பட்ட வீரியம் ஆற்று ஜலத்தில்விழ, தாகத்தால் ஆற்றில் நீருண்ணப் புக அதன் வழிவந்த வீரியத்தையுண்டு கருக்கொண்டு கணன் எனும் குமரனைப் பெற்றவள். (பார்க்கவ புராணம்.)

குணவதிபாயி

மாதவசிங்கென்னும் அரசன் தேவி. இவள் தன் தோழியரில் ஒருத்தி எக்காலமும் வாய் மொருமொருத்தலைக் கவனித்து நோக்கி நீ எக்காலமும் வாய் மொருமொருத்தற்குக் காரணம் கூறுக என, அவள் இம்மை மறுமைப் பயன் தரும் அரிபதத்தினைப் பஜனை செய்திருப்பதேயன்றி வேறன்று என்றனள். குணவதி ஆயின் அம்மந்திரத்தினை எனக்குபதேசிக்க என அவள் அவ்வாறுபதேசித்தனள். குணவதி மந்திரத்தினை விடாது செபித்துப் பேய்கொண்டார்போ லிருத்தலைக் கண்ட அரசன் இவளுக்கு யாரோ ஒரு பாகவதனில்வாறு உபதேசித்துக் கெடுத்தனன் என்று இவளைக் கோபத்துடன் கடுகடுக்கக் குணவதி கண்ணை மூடிக்கொண்டு அரசனைக் காணாது அரியைத் தியானிக்கப் பெருமாள் தரிசனந்தந்து அஞ்சாதை என அருளி மறைந்தனர். உடனே குணவதி களித்துக் கணவனையடைய அரசன் அன்று முதல் பாகவதர் அரண்மனைக்கண் வராதிருக்கக் கட்டளையிட்டனன். பின்பு ஒரு நாள் அரசன் தன்னிரண்டு குமாருடன் வேட்டைக்குச் சென்றனன், குணவதி பாகவதரையழைத்துபசரித்து வேண்டியதரக்கண்ட மந்திரி அரசனுக்கறிவிக்க அரசன் மனைவியைக் கொலை செய்ய இருவரை ஏவ அவர்கள் கொலைசெய்ய அவளையணுக அவளிடமிருந்து ஒரு புலி தோன்றிக் கொலை செய்ய வந்தவர்களைக் கொலை செய்தது. இதனையறிந்த அரசன் மனைவியிடம் அச்சங்கொண்டு வீட்டிற்குத் திரும்பினன். வரும் வழியில் நதி ஒன்று வெள்ளங்கொண்டு குறுக்கிட அரசனும் குமார்களும் படகேறி நட்டாற்றில் வருகையில் படகு சுழவிலகப்பட்டுச் சுழன்று மூழ்கத் தொடங்குகையில் அரசன் செயலற்றுத் தன் மனைவியை நினைக்கப் படகு திடீரெனக் கரைக்கண் வந்து சேர்ந்தது. அரசன் மனைவியையன்று முதல் பெருமாள் காரியத்தி லிருக்கச்செய்து தானும் அவ்வாறிருந்தனன்.

குணவாதம்

அந்நியப் பிரமாணத்திற்கு விருத்தமாய் அமைக்கப்பட்ட பொருளைக் குணவாயிலாகத் துதிக்கும் வாக்யம்.

குணவாயில்

வஞ்சிநகர்க்குக் கிழக்கிலுள்ள ஊர், இளங்கோவடிகள் துறவுபூண்டு இவ்வூரிலிருந்தார். (சிலப்பதிகாரம்.)

குணவீரபண்டிதர்

இவர் தொண்டை நாட்டில் சிங்களப்பேட்டைக் கருகிலுள்ள களந்தை அல்லது கழுத்தையிற் பிறந்தவர். சமயத்தால் ஜைநர், இவர் வாமநாதபுரம் என்னும் தென்மயிலையிலமர்ந்த நேமிநாத சுவாமிகள் பெயரால் நேமிநாதயென்னும் இலக்கணஞ் செய்தனர். வெண்பா பாட்டியலும் இவர் செய்தது. இவ்வெண்பா பாட்டியல் வச்சணந்தி முனிவராகிய இவரது ஆசிரியர் பெயரால் செய்யப் பட்டது. இவர் திரிபுவன தேவனென்னும் அரசன் காலத்தவர். (நேமிநாதம்.)

குணாட்யன்

ருத்ரசாபத்தால் பூமியிற் பிறந்த மால்யவந்தன்.

குணி

1. செயன் குமரன். 2. யுகந்தரன் தந்தை.

குணிகார்க்கியர்

கார்க்கிய குலத்திலுதித்தவர். இவர் ஒரு குமரியைப் பெற்று இறந்தனர். இவள் கௌமார பிரம்மசாரிணியாய்த் தவம்புரிந்தனள். இவள் தவத்தினால் இளைத்துமேல் உலகத்தையடைய எண்ணுகையில் நாரதர் குமாரி ஸமஸ்காரமில்லாத உனக்கு யோகங்கள் எப்படிக் கிடைக்குமென இவள் தன்னை மணப்பாருக்குத் தன் தவத்திற் பாதிகொடுப்பதாகச் சொல்லக் காலவருடைய புத்ரரான சிருங்கவான் இவளை நோக்கி ஒரு நாளே உன் கையைப் பிடிப்பேன் என அவ்வாறி சைந்து மணந்து அழகுள்ளா ளாயன்றிருந்து மறுநாள் தவத்திற் பாதிகொடுத்துத் தானீங்க இருடியுமவளை நீங்கித்தரியாது நல்லுலக மடைந்தனன். (பார~சல்லி.)

குண்டகன்

1. சிவகணத்தவரில் ஒருவன். 2. அயலான் மனைவியைப் புணரப் பிறந்தவனுக்கும், பார்ப்பினி, வேறு பிராமணனுக்குப் பெற்றபிள்ளைக்கும் பெயர்.

குண்டசன்

திருதராட்டிரன் குமரன்.

குண்டதாரன்

ஒரு மேகதேவன், ஒரு பொருளாசை கொண்ட வேதியன் பொருட்டு மாணிபத்ரனுடன் வாதிட்டிரந்து தர்மம் ஞானமருள வேண்டினவன். (பார~சார்.)

குண்டத்தில் அக்னியிலக்கணம் அறுவகை

விரியால் (50) அவை வர்ணம், சப்தம், கந்தம், சுவாலை, தூமம், ஈரணம் என்பன. வர்ணம் (11) சப்தம் (5) கந்தம் (13) சுவாலை (5) தூமம் (4) ஈரணமாகிய கதிபேதம் (12) வகை ஆக (50) வகை. (சைவ~பூஷணம்.)

குண்டன்

1. கத்ரு குமரன், நாகன். 2. திருதராட்டிரன் குமரன். 3. ஒரு சிவகணத்தவன், 4. யானையுருக்கொண்டு மகோற்கடர் முன் வந்திறந்த அசுரன்.

குண்டபேதி

திரிதராட்டிரன் குமரன்.

குண்டம்

இது யாகாதி கிருத்தியங்களுக்கு உபயோகமாகப் பலவித மாகத்திக்குகளுக்குத் தக்கபடி வேதாகமங்களில் கூறப்படுவது. இது நாற்கோணகுண்டம், யோனிகுண்டம், அர்த்தசந்திரகுண்டம், திரிகோண குண்டம், விருத்த குண்டம், ஷடச்ர குண்டம், பத்ம குண்டம், அஷ்ட கோணகுண்டம் எனப் பலவிதப்படும், இக்குண்டங்களின் உருவம் வருணதேவ மந்திரங்களுக்குக் குடத்தினுருவம், வாயுதேவ மந்திரங்களுக்குத்வஜ உருவம், மகேந்திர மந்திரங்களுக்கு வஜ்ராயுதம் போன்ற வுரு. ஆக்னேயங்களுக்கு அக்நியின் ஏழு சிகையைப் போலும், மத்திம உத்தம வீர்ய தேவதைகளுக்கு நாற்கோணம், அற்பவீர்யதே வதைகளுக்கு முக்கோணம், ஸ்திரீரூபமுள்ள தேவதைகளுக்கு யோனி குண்டம், ருத்ரதேவதாம்சங்களுக்கு அர்த்த சந்திர குண்டம், சாந்த தேவதைகளுக்கு வட்டகுண்டம், திரிமூர்த்திகளுக்கு ஐங்கோணம், கின்னரர்களுக்கு ஐங்கோணம், வித்யா, வித்யேச்வார்களுக்குப் பதுமகுண்டம், ஸ்தம்பனத்திற்கு நாற்கோணம், தாபனத்திற்கு யோனிவடிவம், மாரணத்திற்கு அர்த்தசந்திரவடிவம் அல்லது பதினாறு கோணம். சாந்திக்கு வட்டமாகிய குண்டம், உச்சாடனத்தில் அறு கோணம், புஷ்டிக்குப் பத்மகுண்டம், முத்திக்கு எண்கோணமும் ஆகும். இவற்றின் மேகலை, கண்டம், கோமுகம், செய்வகை முதலியவற்றைக் காமிகாதி ஆகமங்களில் பரக்கக் காண்க.

குண்டலகேசி

1. இவள் ஒரு வைசிய கன்னிகை. இவள் மாளிகையில் விளையாடுகையில் ஒரு வணிகபுத்ரன் காளன் என்பானை யிவள் மணந்திருக்கையில் ஒரு நாள் பரிகாஸத்தால் கணவனை நீ கள்வன் என்னக் காளன் கோபங்கொண்டு ஒருநாள் ஒரு வியாஜங்காரணமாகத் தனிக்கொண்டு பர்வதத்திலேறி நீ என்னைக் கள்வனென்ற மையினுன்னைக் கொல்லத் துணிவேனென அவளும் அவனை முன் கொல்லவெண்ணி நான் சாவேனாகிலும்மை வலங்கொண்டு சாவேன் என வலங்கொள்வாள் போன்று கணவனைப் பர்வதத்திருந்து விழத்தள்ளி னள். அவனும் இறக்க இவளும் கணவனைப் பிரிந்த துக்கத்தால் பல்லோரும் இயங்குதற்குரிய கோட்டை வாயிலில் நாவல் நட்டு அவரியங்காமை விலக்கி ஆங்குத் தன்னுடன் வாதிப்பாரைப் பெற்ற போது அதனைக்களைந் தெறிந்து வாதம் புரிந்து பரசமயங்களை வென்று காலமாயினள். இக்குண்டலகேசிக்குப் பௌத்த மத உபதேசஞ்செய்தவன், உஞ்சைமா நகரத்திருந்த அருக்கசந்திரன். 2. இஃது தமிழிற்சிறந்த ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இதில் கூறப்படுவன புத்தவாதம், இஃது இப்பெயர் பெற்ற வணிககுலமகளிரின் வரலாறு கூறி அவள் பல சமயங்களை வென்று புத்தமதத்தை நிறுத்தினதைத் தெரிவிக்கும். இது ஒருபௌத்த பேய்க்கும் சைநப் பேய்க்கும் நடந்த வாதத்தைப் பற்றிக் கூறும் வாத நூல்.

குண்டலன்

ஒரு காந்தருவன், திருவேங்கடத்தில் மனைவியருடன் விளையாடி அரங்கதாசன் பிறப்பிற்குக் காரணமானவன்.

குண்டலபுரம்

ஒரு வித்யாதர நகரம்.

குண்டலபோகி

துரியோதனன் தம்பி.

குண்டலபோசன்

துரியோதனன் தம்பி, பதிநான்காம் நாள் பீமனால் இறந்தவன்.

குண்டலாதன்

துரியோதனன் தம்பி.

குண்டலி

மந்திரங்களுக் குற்பத்திஸ்தானமாய்ச் சிவனது பரிக்கிரகரூபையான கிரியாசத்தி.

குண்டலை

1. விந்தியவந்தன் பெண், இவள் நினைத்தவிடங்களில் சரிக்கத்தக்க சத்தியுள்ளவள். இவள் கணவன் சும்பனால் கொல்லப்பட்டான். 2 மதாலசையின் நண்பி, தீர்த்தயாத்திரை பொருட்டு வருகையில் இருதுத்துவசனால் பாதாளகேது என்னுமரக்கன் அடிபட்டு ஓடிவருதல் கண்டு சிறைபட்டிருந்த மதாலசைக்குச் சுபசெய்திகூற அரசன் காணும்படி பில வழி புகுந்து அரக்கனது மாளிகையிற் சிறையிருந்த மதாலசையை யடைந்தவள்.

குண்டவிகுண்டர்

இவர்கள் பாபஞ்செய்த வேதியர்கள், இவர்கள் நரகலோகஞ் சென்று அவ்விடத்திலிருந்தே சிவபூசை செய்து நரக நீக்கமடைந்தவர்கள். பதும புராணம்.

குண்டாலரோகம்

இது, மாமிச தாதுவையொட்டித் தேகத்தில் கட்டிகளைப் பிறப்பித்து வேதனை தருவது. இது வாத குண்டாலக் கட்டி, பித்தகுண்டாலக் கட்டி, சிலேஷ்மகுண்டாலக் கட்டி. இதனைச் செவ்வாப் பென்பர்.

குண்டினபுரம்

விதர்ப தேசத்து இராஜதானி. THE ANCIENT CAPTAL OF VIDARBHA.

குண்டுகட்பாலியாதனார்

இவர் ஆதன் என்னுமியிற் பெயருடையவர். பாலி இவரது ஊர். ஆழ்ந்த கண்ணுடைமையிற் குண்டுகணென்றும் அடைமொழி கொடுக்கப்பட்டார் போலும். இவர் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிப் பரிசில் பெற்றவர். புறம் 387, குறிஞ் சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். முகம்புகு கிளவி பாடியவருள் இவருமொருவர். இவர் பாடியனவாக நற்றிணையில் 220 ஆம் பாடலொன்றும், புறத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (புற~நா.)

குண்டூர்க்கூற்றம்

சேரநாட்டின் ஒருபகுதி.

குண்டை

சுப்பிரர்தேவி, குமரர் வைகுண்டர்,

குண்டையூர்க்கிழவர்

ஒரு வேளாளர், இவர் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நாடோரும் நெல்கொடுக்கும் திருப்பணியேற்று நடத்திவந்தனர். இடையில் ஷாமகாலம் வர நெல்கொடுக்குந் திருப்பணி முட்டுப்படுதல் எண்ணி விசனமடையச் சிவமூர்த்தி குபேரனுக்குக் குண்டையூர்க்கிழவர்க்கு நெல்தரக் கட்டளையிட்டனர். குண்டையூர்க்கிழவர் தமது வீடெங்கும் நெல் நிறைந்திருக்கக் கண்டுகளித்து இந்த அற்புதத்தினைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கறிவித்துச் சிவாநுக்கிரகத்தால் திருவாரூர்முழுதும் நெல் தந்தவர்.

குண்டோதரன்

1, கத்ருகுமானாகிய நாகன். 2, திருதராட்டிரன் குமரன், 3. இவன், சிவமூர்த்திக்குக் குடைபிடிப்பவன். மதுரையில் திருவவதரித்த தடாதகை பிராட்டியாரின் திருமணத்தில் அம்மையார் தேவராதியர்க்கு விருந்திட்டு அளவிலாது மிகுந்த அன்னங்களைப் புசிக்க யாருங் கிடைக்கவில்லை யென்று சோம சுந்தரபாண்டியராகிய சிவமூர்த்தியிடம் குறிப்பித்தனள். சிவமூர்த்தி லீலைகாரணமாக அருகிருந்த குண்டோதரன் வயிற்றில் ஊழித்தீயை மிருத்தி இந்தக் குடையாளுக்கு அன்னமிடுக என்றனர். அம்மையார், இவனென்ன சாப்பிடப் போகிறானென்று அன்னமிடக் கட்டளையிட அன்னமிடுவோர் இருந்த எல்லா அன் னங்களையும், வேறு பாகமாகாத பொருள்களையுமிடப் பசி நீங்காது வருந்திப் பசி தணியச் சிவமூர்த்தியை வேண்டி அன்னக்குழியும் தாகநீங்க வையையாற்றையும் பெற்றுப் பசியும் தாகமும் நீங்கியவன்.

குண்ணுவர்

தாராபுரம், காங்கேயம் பழனிமலை முதலிய இடங்களில் பயிரிடும் குடிமக்கள். இவர்கள் தங்களை வேளாளர் என்பர். இவர்கள் கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள குண்ணூரிலிருந்து குடியேறினவர்தலால் இப்பெயர் பெற்றனர். இவர்கள் கிராமாதிபதி மன்றாடி இவர்கள் பெரிய குண்ணுவர் சிறிய குண்ணுவர் என இருவகை.

குதக்கூடரோகம்

பிள்ளைகளின் வயிற்றில் புளித்த மலஞ்சேர்தலால் குதஸ்தா னத்தில் சிவந்த சிலேஷ்மம் திரண்டுருண்டு முண்டாகி வேதனை தருவது,

குதன்

சுபாரிசுவம் என்னும் மலையிலுள்ள அரசன்.

குதம்பேய்ச் சித்தர்

இவர் ஒரு சித்தர். இவர் பெண்களைப் பேய்களென எண்ணி உண்மையுணர்ந்து நன்மை யடைந்தவர். இவர் செய்ததுல் குதம்பேய்ச் சித்தர்பாடல்.

குதரன்

1. குரோதகீர்த்தியின் குமரன். 2. கத்ரு குமரன், நாகன்.

குதிரை

இது, கழுத்தும், காலும் நீண்டுள்ள பிராணி முதுகெலும்புள்ள பிராணி வர்க்கத்தைச் சேர்ந்தது. இதற்குப்பிடரியில் மயிர் உண்டு. தவடைகள் விசாலமாயும் பருத்தும் இருக்கும். காதுகள் நீண்டவை பிளவாத குளம்புள்ள பாதமுள்ளது. தலையில் கொம்புகள் கிடையா மேல் வாயிலும் கீழ்வாயிலும் பற்கள் உண்டு முன்பற்களாலும் பின்னரைக்கும் பற்களாலும் இரை தின்னும் மூக்கினால் மூச்சுவிடுமாதலால் ஓடுகையில் இளைக்காது. உதடுகள் தோலுந்தசையுமாக இருத்தலால் புல்லைப் பொருக்கித்தின்னும். இது அறிவும் சுருசுருப்புமுள்ளது. கருத்தறிந்து நடப்பது, இதன் வகை மட்டக்குதிரை, நாட்டுத்தட்டு ஆஸ்திரிய குதிரை, அரபிக்குதிரை, முதலியன. இதனினம் கோவேறு கழுதை, கழுதை, வரிக்குதிரை, பின்னவை பளுவையிழுப்பதற்கும், வண்டியிழுப்பதற்கும், வயலில் உழுதற்கும் உதவும். இக்குதிரை யினத்தில் பலவகை உண்டு. அவை பல தேசங்களில் பலவிதமாக இருக்கின்றன. இந்தியாவில் பெரிய குதிரை, மட்டக் குதிரை, நாட்டுத்தட்டு முதலிய. மற்ற நாடுகளில்த்ரோப்ரேட், போலோபோனி, ஷெட்லண்ட்போனி, ஹட்ஸ்டேல், யார் கஷயர், கோச்குதிரை, ஸப்லாக்பஞ்ச், ஷயர்குதிரை, காப், அரபிகுதிரை, வெலிஷ்போனி, டார்ட் மூர்போனி, கிளீவ் லாண்ட்பே, பெர்சீரன், ஹாகெனி, அமெரிகன்ட்ராடர், ஹண்டர், பெருபோனி, ஆஸ்திரிய குதிரை, முதவிய.

குதிரைத்தறியனார்

குதிரைத் தறியெனபது ஒரூர்போலும் விஷயம் விளங்கவில்லை. இவர்பாலைத் திணையைப்பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியது. நற் 266 ஆம் பாட்டு.

குதிரைமறம்

எய்யுந்தொழில் மாட்சிமைப்பட்ட பெரிய மதிலிடத்துப்பாயும் குதிரையது பகுதியைச் சொல்லியது. (பு. வெ.) 2. எறியும் வேற்படை யுடையான்றன் மாறுபாட்டினைச் செய்யும் பொருட் செறிந்த கலையினையுடைய குதிரையின் திறப்பாட்டைச் சொல்லியது. (பு. வெ.)

குதிரைமலை

இது தென் கன்னடத்திலுள்ள குதிரைமூக்கு மலை. (புற, நா.)

குதிரையின் சுழிகள்

(அச்வல அணங்க காண்க.) பிரமரம் இடமுகம், வலமுகம் எனும் வேறுபாட்டையுடையது. பூரணா நந்தம் நெற்றியில் இரண்டு சுழிகளும், மூன்றாவதாகத் தலையிலொரு சுழியும் விளங்கப்பெற்றது. இது சிறந்தது. சூரியன் முதுகெலும்பில் ஒரு சுழியுடையது. இது உடையானுக்கு மிக்க குதிரைகளைச் சேர்க்கும். சருவ நாமம் இரண்டு கபோலங்களிலும் ஒற்றைச்சுழியுடையது இது கேடு தரும். சிவம் வலப்பக்கத்துக் கபோலத்தில் மாத்திரம் ஒருசுழி அமைந்தது. இதுபெரு நலந்தரும். இந்திராக்ஷம் செவியினடியில் இரட்டைச் சுழிகளுடையது. இது உடையானை வளர்க்கும்.

குதோதரி

கும்பகர்ணனது புத்திரனாகிய நீகும்பன் பெண்ணும் காலசஞ்சனுடைய பாரியாளும் விகஞ்சனுடைய தாயுமானவள் இவள் இமயமலையில் சிரத்தைவைத்தும் நிஷதமலையில் கால் நீட்டியும் சயனித் தவள். விகஞ்சனுக்குப் பால் ஊட்டியதால் அப்பால் சிதறி க்ஷரநதியாயிற்று. மற்றொரு குமரன் கரஞ்சன். இவள் கல்கியால் கொல்லப்பட்டாள். இவள் ஓர் அரக்கி. (கல்கி புராணம்).

குத்தன்

யமனிடமுள்ள கணக்கன்.

குத்புமினார்

இது (கி. பி. 1206~1290) டில்லியையாண்ட அடிமை யாசர்களில் ஒருவனாகிய குட்புடீன் என்பவனால் டில்லியில் கட்டிய ஒருஸ் தம்பம். இது (250) அடிகள் உயரமுள்ளது.

குநி

சிதத்துவசன் குமரன்.

குந்தமர்

ஒரு முனிவர். இவர் தம் மனைவியுடன் மானுருக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கையில் பாண்டு மானென நினைத்து எய்யப் பாண்டுவிற்குத் தன் மனைவியரைச் சேராதிருக்கச் சாபமளித்துயிர் விட்டவர்.

குந்தயம்

குந்தி பிறந்ததேசம். An ancien, town of Malwa, the birth place of Kunte.)

குந்தலன்

ஒரு அரசன் காலவனிடம் கால அளவு வினவினவன்.

குந்தலம்

வடநாட்டில் பல்லாரிக்கணுள்ள நாடு, The ancient name of the Province in which Kuruko~de is situated, A portion of the Bellary District in the Madras Presideney.

குந்தளை

ஒரு தெய்வமாது, விசுவசேனரைக் காண்க.

குந்தி

1 இவள் சித்தி அம்சம், குந்திபோசனுக்கு அபிமான புத்ரி. தேவமீடனுக்கு மாரிஷையிடம் பிறந்தவள். இவள் இளமையில் தந்தையாகிய சூரனாலேவப்பெற்றுத் துருவாசமுனிவர்க்குப் பணிவிடை செய்து அவர் அநுக்கிரகத்தால் ஆறு மந்திரங்கள் உபதேசிக்கப் பெற்று ஒரு நாள் தனித்து மாளிகையிலிருக்கையில் சூரிய மந்திரத்தை உச்சரித்துச் சோதிக்கச், சூரியன் இவளுக்கு முன் தரிசனந்தந்து அம் மந்திரபலத்தைத் கூறினன். குந்தி தான் கன்னியென, அவளுக்குத் தக்க பருவமளித்து அவளுடன் கூடினன் உடனே கவசகுண்டலத்துடன் குமாரன் ஒருவன் பிறக்க அக்குழந்தையை ஒரு பெட்டியிற் கிடத்தித் தனது முன்தானையில் ஒரு பாகத்தை அதிலிட்டு அருகிருந்த ஆற்றில் விட்டவள். இவனே பின்பு கன்னன் எனப் பட்டனன். கிருஷ்ணனுக்கு நல்லத்தை, பாண்டுவை மணந்து அவன் கட்டளைப் படி மந்திரபலத்தால் யமன் முதலியவர்க்குத் தருமனாதியரைப் பெற்றவள். கண்ணனேவலால் கன்னனிடஞ் சென்று தன்னைத் தாயெனச் சேலையுடுததித் தெரிவித்து நாகாஸ்திரம் அருச்சுநன்மீது ஒரு முறைக்குமேல் எய்யாமல் வேண்டி, கன்னன் வேண்டியபடி இறந்தபின் பாலூட்ட வரம் தந்து மீண்டு பாரத முடிவில் அவ்வாறு செய்து பாரதயுத்தத்தில் இறந்தவர்க்குப் பாண்டவர் தில தர்ப்பணஞ் செய்கையில் முதலில் கர்ணனுக்குச் செய்யச் சொன்ன வள். 2. குந்தி போஜனுக்கு ஒருபெயர். 3. குந்திபோஜ வம்சத்தில் கரம்பியென்பவன். 4. சசிபிந்து குலத்தவனாகிய கிருதுவின் குமாரன், விதர்ப்பன் பேரன். 5. தர்மநேத்ரன் குமரன், ஏஹயன் பேரன். 16. ஒரு தேசம். 7. நேத்திரன் குமரன். இவன் குமரன் சோஹநாசி. 8. கிருதன் குமரன், இவன் குமரன் விருஷ்ணி. 9. சகுனி குமான், இவன் குமரன் தேவாரதி.

குந்திபுரி

தற்காலத்தில் குவாலியர் என்று சொல்லப்படும் பட்டணம், மத்திய இந்தியாவிற்கு முக்யபட்டணம்.

குந்திபோசன்

யாதவ அரசன். பாரத முதனாள் யுத்தத்து அசுவத்தாமனுடன் போர் புரிந்தவன், குந்தியை வளர்த்தவன்.

குந்தியர்கள்

யாதவபேதம்.

குந்து தீர்த்தங்கர்

பதினேழாவது சைந்தீர்த் தங்கரர், சூரசேன மகாராஜா குமரர். தாய் ஸ்ரீகாந்தை, சுவர்ணவர்ணம், 35 வில் உன்னதம். வைகாசியா பூர்வபக்ஷ பிரதமை கிர்த்திகை சநநம். 95,000 வரு. ஆயுஷ்யம், சுயம்பு முதல் கணதரர் (35) பெயர்.

குனு

(Gunu) கடம்பை போன்ற காட்டு மிருகம். இது பைஸன் போல் உருவுடையது. இதன் கொம்புகள் நீண்டு வளைந்து மேலெழுந்திருக்கும். கழுத்தில் பிடரிமயிருண்டு, 4 அடி உயரம் ஆபிரிகாதேசவாசி.

குன்நூர்க்கிழார்மகனார்

நெடுவேளாதனைப் பாடியவர். (புற~நா.)

குன்மம்

இது திரிதோஷங்களால் ஏப்பம், மலபந்தம், துர்ப்பலம், குடலிரைச்சல், உப்பிசம், வயிற்று வலி, அசீரணம், அசதி, இவைகளைத் தனக்குப் பூர்வரூபமாகப் பெற்றிருக்கும். இது வாத, பித்த, சிலேஷ்ம, பித்தசிலேஷ்ம, திரிதோஷ, ரத்த குன்மம் எனப்பலவகை. இவையன்றி ரத்தவாத பித்தகுன்மம், அசாத்யகுன்மம், பாயுருகுன்மம், எரிகுன்மம், சர்த்தி குன்மம், வலிகுன்மம் என வேறும் உள இவை, நவாக்ஷாரக் குழம்பு, கலிங்கா தலேகியம் முதலியவற்றால் வசமாம்.

குன்றத்தூர்

சேக்கிழார் பிறந்த கிராமம், தொண்டைநாட்டின் கணுள்ளது.

குன்றத்தூர்முதலியார்

சேக்கிழார் தந்தை. இவரைச் சோழன் உலகப் பொருள்களுள் எது பெரிதென்று கேட்க, இவர் விடை தரமயங்கிச் சோர்ந்திருந்தது கண்டு குமரராகிய சேக்கிழார் அறிந்து தந்தைக்கு “காலத்தினாற் செய்தநன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது” எனும் திருக்குறளை யெழுதித்தந்தனர். முதலியார் அதனை வேந்தனுக்குக் காட்டினர். சோழன் அதிக்களிப்படைந்து சேக்கிழாரைத் தனது சமத்தான வித்வானாக்கினன். மற்ற சரிதங்களைச் சேக்கிழார் சரிதையிற் காண்க.

குன்றம்பூதனார்

இவர் கடைச்சங்கத்தவர் காலத்துப் புலவர். இவர் பரிபாடவில் பாண்டிநாட்டு முருகவேள் குன்றமாகிய திருப்பரங்குன்றத்தை மிக வருணித்திருத்தலின் இவர்க்கு இப்பெயர் வந்திருக்கலா மெனத் தோன்றுகிறது.

குன்றியனார்

இவாது பெயர்க் காரணம் விளங்கவில்லை. குறுந்தொகையில் மேலைக் கடற்கரைத் தொண்டியைச் சிறப்பித்தி ருக்கிற படியால் இவர் சேரநாட்டவர் என்று தோன்றுகிறது. குறு. 238. இவர் களவு கற்பாகிய இருவகை ஒழுக்கத்தையும் நெய்தற்றிணையி லமைத்துப் பாடியுள்ளார். மாலைப் பொழுதை அழகாக வருணிக்கிறார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (117, 236) பாடலும், குறுந் தொகையில் ஆறும், அகத்தில் இரண்டுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

குன்று

மலை சிறியதாக இருந்தால் அதற்குக் குன்று என்று பெயர் (பூகோளம்).

குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார்

இவர் வேளாளர் மரபினர், குன்றூர் என்று பல வூருஎவாதலின் இவரூர் இன்னதென்நறிய இயலாது. இவர் குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 332 ஆம் பாட்டு.

குன்றையெல்லப்பன்

குன்றத்தூரிலே புலவருக்குக் கொடுத்தபிரபு. இவர்மீது பலபுலவர் ” ஆலெங்கேயங் கேயரும் பறவை யாற்றுயிலு, மாலெங்கேயங்கே மலர்மடந்தை, சோலைதொறும், செங்கேதகை மணக்குஞ் செங்குன்றை யூரனெங்கே, யங்கேயிரவலரெல்லாம் ” எம் “தலையிந்தாவெனுமைந்தா தாலோதாலேலோ, தண்குன்றைப் பதியெல்லா தாலோ தாலேலோ’, எம் பாடிப் பரிசுபெற்றனர், இவர் வேளாளர்.

குபன்

1. கிருதயுகத்தில் ஜனங்களுக்கு அரசளில்லாததால் பிரமனால் திக்குப் பாலக அம்சமாய்ச் சிருட்டிக்கப்பட்டவன், ததீசியை வச்சிரத்தாலெறிந்து அவரால் முடிமேலுதையுண்டவன். (காஞ்சி புராணம்). இவன் சரிதையை ததீசியைக் காண்க. இவன்தேவி மாலினி. (சூ.) சையாதி குமரன் என்ப. 2. இவன் தருமமாய் அரசாண்டு வீர னென்பவனைப் பெற்றனன், அந்த வீரன் விதர்ப்பராசன் குமரியாகிய நந்தினியிடம் விவிம்சனைப் பெற்றான்.

குபாகும்பார்

இவர் மார்வாடதேசத்துக் குயவர், அரிபக்திமிகுந்தவர். இவர் நாடோறும் ஒவ்வொரு பாண்டஞ்செய்து முப்பது நாட்களுக்கும் முப்பது பாண்டஞ் செய்து சூளையிடையிட்டு வெந்தபின் விற்றுப் பாகவதர்க்கு அன்னமளித்து வருவர். ஓர் நாள் பெருமாள் இவரிடத்திரு நூறு சாதுக்களுடன் விருந்தாகவரக் கும்பார் எதிர்சென்று உபசரித்துக் கையில் பொருளிலாமையால் ஒருவணிகனையடைந்து பொருள் கேட்க அவன் நீர் எழையாதலால் பொருள் தர வல்லீரல்லீர் ஆதலால் ஓர் கிணறு தோண்டித் தருவதாக வாக்களிப்பீரேல் தருவன் என அவ்வாறேயுடன் பட்டுப் பொருள் பெற்றுப் பாகவதர்க்கு அன்னமளித்தனர். பின் சொல் லியபடி கிணறெடுக்கச் சென்று நீரூறுந் தருணத்தில் மண்ணிடியக்கும்பார் பூமிக்குளகப்பட்டுக் கொண்டனர். கும்பாரிறந் தனரென்றனை வருஞ் சென்றனர். மனைவியும் வீடு சேர்ந்தனள். பின் ஒருவருடம் பொறுத்து அவ்வழியிற் செல்லும் பாட்டைசாரிகள் ஆங்கு இரவில் தாள மிருதங்க வோசைகேட்டு அரசனுக் கறிவிக்க அரசன் பூமியைத் தோண்டக் கட்டளையிட்டனன். ஆண்டுப் பஞ்சாயுதங்களுடன் பெருமாள் முன்பு கும்பார்பஜனை செய்திருக்கக்கண்டு பெருமாளை யாண்டிருந் தெடுத்துப் பிரதிட்டை செய்து கும்பார்க்கு மடமொன்று சமைத்து இனிதிருக்கச் செய்தனன்.

குபாண்டன்

பாணாசுரனுடைய மந்திரி, இவன் குமரி சித்ரலேகை.

குபேரதத்தன்

சுரமஞ்சரியின் பிதா.

குபேரதுங்கம்

ஒரு தீர்த்தம்.

குபேரன்

1. விசிரவஸுமுனிவர்க்கு இளிபிளையிட முதித்தவன். இது பதுமகற்பத்தில். 2. இவன், வராக கற்பத்தில் காம்பிலி நாட்டிலிருந்த வேள்விதத்தனுக்குக் குணநிதியெனப் பிறந்து தந்தை தேடியபருள்களைச் சூதிலும் வேசைசள் பொருட்டும் செலவு செய்தனன் இவனது நடக்கைகளைத் தாய், மகனிடம் வைத்த அன்பால் கணவனுக்குத் தெரிவிக்கா திருந்தனள். இதனையறிந்த தந்தை, தாயையும் குமரனையும் நீக்கி வேறு மணஞ்செய்து கொள்ளக் குணநிதி, பசியாற்றாது சிவராத் திரியில் சிவ தரிசனஞ் செய்வாருடன் சிவசந்நிதானத்திற் சென்று சிவதர்சனஞ்செய்து பரிசாரகர் உறங்கும் வேளையில் சிவத்திரவியங் கவர எண்ணி விளக்கைத் தூண்டித் திரவியம் எடுத்துக்கொண்டு திரும்பு கையில் இவன் கால் ஆங்கு உறங்கி இருந்தவர்மேல்பட அவர்கள் எழுந்து இவனைக் கொலைசெய்தனர். கொலையுண்டோனை யமபடர் பிடிக்கச் சிவகணங்கள் விலக்கிச் சிவராத்திரியில் கிவதர்சனஞ் செய்ததாலும், திருவிளக்குத் தூண்டிய புண்ணியத்தாலும் கலிங்க நாட்டில் அருந்தமன் புதல்வனாகிய தமன் என்பவனாகப் பிறப்பித்தனர். இந்தத் தமன், தவம்புரியச் சிவ பெருமாள் என்னவேண்டுமென்ன உம்மைக் காணக்கண் வேண்டுமென்றனன். அவ்வகையருள அருகிருந்த பிராட்டியைக் கண்டு ஒளியால் கண் மறைவுபெற்று மீண்டும் துதித்துப் பொற்கண்ணனாகவும், அளகைக்கு அரசனாகவும், அரனுக்குத் தோழனாகவும் பெற்றவன். இவன் விஞ்சையர் கின்னரர்க்கு அரசன், வட திசைக்கிறைவன். (காசிகாண்டம்). 3, தன்னை வெருட்டிய சுக்கிரன் சர்வ பங்கப்படச் சிவமூர்த்தியை வேண்டிக் கொண்டவன். பாத்மகற்பத்தில் தந்தை சொல்லால் இலங்கையை யிராவணனுந்குக் கொடுத்து அளகையாண்டவன், 4, இராவணனுக்கு நான் தவத்தால் சிவனுக்குத் தோழனானேன் நீ தேவரை வருத்தாதையெனத் தூதுவனிடத்துச் சொல்லி யனுப்பித் தூதுவர் கொலையுண்ண வருந்தினவன். 5. தனக்குக் கப்பங்கட்டிய இயக்கன் ஒருநாள் தன் மனைவியிடம் அந்த முடிப்பைக் கொடுக்கக் குபேரன் கோபித்து ஒரு வருஷம் மனைவியை நீங்கியிருக்கச் சாபமிட்டவன். 6. அட்டவக்ரனுக்கு உபசாரஞ்செய்து பலநாள் விருந்தளித்தவன். 7. இலக்குமி தேவிக்கு வைசயந்தங் கொடுத்தவன். இவன் தேவி சித்ரரேகை; வாகனம் குதிரை, கிளி, நரன்; ஆயுதம் கட்கம்; மாலை சீரக்கதார், பூந்தோட்டம் சைத்திரரதம். இவன் புத்ரன் நளகூப்பரன். விமானம் புஷ்பகம்.

குபேரமித்திரன்

குணமாலையின் தந்தை.

குப்சாதேவி

திரிவக்ரையைக் காண்க. இவளுக்குக் குப்சை எனவும் பெயர்.

குப்பித்தைலம்

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் மணல் நிரப்பி அதினடியில் ஒருத்வாரமிட்டுப் பாத்திரநடுவில் மருந்திட்ட புட்டியைத் தலைகீழாகத் திணித்து அடியில் புட்டியின் கழுத்திற்கு நேராகப் பாத்திரம் வைத்துப் புட்டியின் கழுத்தில் கம்பி நுழைத்துப் பாத்திரத்தைத் தொடவைத்து மேலெரிக்கின் புட்டியின் வாயில் தைலம் சொட்டும்.

குப்பைக்கோழியார்

இவர்தாம் பாடிய குறுந்தொகையில் குப்பைக் கோழியின் தனிப்போரினைத் தலைவியுள்ள நோய்க்கு உவமித்த பெருஞ் சிறப்புப்பற்றிப் பாடினார்க்கும் அதுவே பெயராக வழங்கினர் போலும். இவர் பெண்பாலாராக இருக்கலாம். (குறுந்தொகை,)

குமட்டூர் கண்ணனார்

இவர் தலைச்சங்கநாளிலிருந்த புலவர்களிலொருவர். பாண்டவர் காலத்திருந்த முதல் வள்ளலாகிய அக்குரூரனை “போர் தலை மிகுத்த ஈரைம்பதின் மரொடு, துப்புத்துறை போகிய துணிவுடையாண்மை, யக்குரனனை யகைவண் யையே. ” எனப் பாடி இருக்கின்றனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயம் பெற்று (308) யாண்டு தென்னாட்டுள் வருவதிற் பாகம் பெற்றவர். (பதிற்றுப் பத்து.)

குமணன்

1, இளங்குமணன் சகோதரன் தன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்தபொழுது பெருந்தலைச் சாத்தனாரிரப்பத் தன் தலைக்கு வாளைக்கொடுத்தவன். இதுபோன்ற ஒருகதை ஒப்பிலா மணிப்புலவர்காலத்துக்கூறுவர். (புற~நா.) 2 இவன் கடையெழு வள்ளல்களின் பிற்காலத்தில் இருந்தவன். இவன் மிக்க கொடையாளி, முதிரம் என்னும் மலைக்குத் தலைவன். இவனைப் பாடிய புலவர்கள் பெருஞ்சித்திரனார் பெருந்தலைச்சாத்தனார்.

குமதி

ஒரு அரக்கி, இவளை இந்திரன் கொலை *புரிந்தனன்.

குமரகுருதாச சுவாமிகள்

இவர் யாழ்ப்பாணத்தவர்; இராமேச்வரத்தை அடுத்த பாம்பனிலிருந்த துறவி; சைவசாத்திரம் வல்லவர். இவர் நாலாயிரப்பிரபந்த விசாசம் சைவசமய சாபம் எனும் நூலியற்றியவர். இவரைப் பாம்பன் சுவாமிகள் என்பர்.

குமரகுருபரர்

இவர் பாண்டி நாட்டில் ஸ்ரீவைகுண்ட மென்னும் கைலாசபுரத்தில் வேளாளர் குலத்தில் ஏறக்குறைய (180)) வருஷங்களுக்கு முன் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமசுந்தரி யம்மைக்கும் நெடுநாள் புத்திரப்பேறிலாதிருந்து பல விரதங்கள் நோற்ற பலத்தால் பிறந்தவர். இப்பிள்ளை ஐந்து வயதாகியும் பேசாமையால் ஊமையென நிச்சயித்துத் தாய் தந்தையர் இருவரும் திருச்செந்தூர் சென்று வதனாரம்பமென்னும் ஸ்நான கட்டத்தில் ஸ்நானஞ் செய்து குறித்த நாளில் பிள்ளை பேசாவிட்டால் உயிர் போக்க நிச்சயித்தநாளில் முருகக்கடவுள், அர்ச்சகர் வடிவத்துடன் பிள்ளைக்கு முன் எழுந்தருளி நாவில் சடாக்ஷரம் எழுதித் தரிசனத்திற்கு வரும்படி கட்டளையிட்டு மறைந்தனர். பிள்ளையெழுந்து அம்மே, அப்பா என, தாய் தந்தையரை எழுப்பித் தரிசனஞ் செய்து கந்தர் கலிவெண்பா பாடினர். இவர் மதுரைமா நகர்க்குப் போக விரும்பிச் சென்று அவ்விடத்தில் மீனாக்ஷியம்மைப் பிள்ளைத் தமிழ்பாடி அக்காலத்திருந்த அரசராகிய திருமலை நாயகர் வேண்டுகோளின்படி தம்பியாகிய குமார கவி வாசிக்க நாளொன்றுக்கு ஒவ்வொரு பருவமாகப் பிரசங்கித்து வருகையில் வருதைப் பருவத்தில் மீனாக்ஷியே குழந்தையுருக்கொண்டு வந்து கேட்டு ஆனந்திக்கப் பிரசங்கித்து முடித்தனர். இவர் திருமலைநாயகர் வேண்டுகோளால் மீனாக்ஷியம்மைக் குறம் மீனாக்ஷியம்மை யிரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், நீதி நெறிவிளக்கம் முதலிய பாடி முடித்துத் தருமபுர ஆதீனத்து ஸ்ரீமாசிலாமணி தேசிகரை ஆசிரியராகப் பெற்று ஞானமடைந்து அவர் கட்டளைப்படி காசியாத்திரை செய்து சரஸ்வதி யநுக்கிரகத்தால் இந்துஸ்தானி பாஷை கற்று டில்லிபாகாவைக் காணச் சிங்கத்தில் ஏறிச்சென்று அவன் முன் பிரசங்கித்துச் சைவ சமயத் தைப் பொய்யென்ற துருக்கர் முன் பழுக்கக்காய்ச்சிய மழுவேந்தி மெய்ப்பித்துப் பாக்ஷாவிடம் இடம் பெற்று மடங்கட்டி, மீண்டும் தருமபுரம் அடைந்து ஆசாரியரைத் தரிசித்து அவர் உத்தரப்படி காசியிலிருந்து திருவடியிற் கலந்தனர். இவர் செய்த நூல்கள் கந்தர் கலிவெண்பா, மீனாக்ஷியம்மன் பிள்ளைத்தமிழ், கைலைக் கலம்பகம், மீனாதியம்மைக் குறம், மீனாஷியம்மை யிரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக் குமார சுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமியம்மை யிரட்டைமணிமாலை, பண்டாரமும் மணிக்கோவை, காசிக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை முதலியன.

குமரன்

1. கலிங்க நாட்டுக் கபிலைநகரத்தரசன். (மணிமேகலை) (சிலப்பதிகாரம்.) 2. குமாரக்கடவுள்.

குமரவேள்

குமாரக்கடவுள், இவர் முதற் சங்கத்தில் ஒருவராயிருந்தனர்.

குமராபுரி

திருச்சேஞ்ஞலூர், இது குமாரக்கடவுள் தாருகனுடன் யுத்தஞ்செய்து தங்கிய இடம்.

குமரி

வள்ளி நாய்ச்சியார் முதற்பிறப்பிற் பெற்றபெயர்.

குமரிக்கோடு

பரதகண்டத்தின் தெற்கின் கணுள்ள மலை. (சிலப்பதிகாரம்.)

குமரியாறு

1. பரத கண்டத்தின் தெற்கிலுள்ள ஆறு. இது கடல் கொள்ளப்பட்டது. இதன் கரையில் புஷ்பஹாஸி எனுந்தெய்வம் எழுந்தருளியிருக்கும். இது கடல் கொள்ளப்பட்ட காலத்து ஏழ்தெங்க நாடும், ஏழ்பனை நாடு முதலிய (49) நாடுகள் அழிந்தன. (மணிமேகலை). 2. இந்தியாவின் தென்பாகத்திலிருந்து 2300 வருஷங்களுக்கு முன் கடல் கொள்ளப்பட்டது. இது சந்திரகுப்த தூதராய் அக்காலத்து இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனீஸ் எழுதிய குறிப்பாலறியலாம். Megasthenes says that the island (Ceylon) was separated from the main land (India) by a river. ” Dutts civilisation in Ancient India. Paat 1, Page 219, இதனால் இந்தியாவின் தென் பாகத்தில் குமரியாறு இருந்த தென்றறிக.

குமாண்டூர் அப்பை

தேசிகர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்.

குமாண்டூர் ஆச்சான்

நயினாராசாரியர் திருவடி சம்பந்தி.

குமாண்டூர் பிள்ளை

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், தேசிகரை யாச்ர யித்தவர் என்பர். (குருபாம்பரை).

குமாரகுலோதுங்கன்

சங்கர ராஜசோழன் குமரன்.

குமாரக்கடவுள்

1, சிவமூர்த்தி யோகத் தெழுந்தருளியிருக்கையில் தேவர்வேண்டு கோளால் நெற்றி நேத்திரத்திருந்து ஆறு தீப்பொறிகள் சிதறின. அவற்றை அக்கி சிவமூர்த்தியின் கட்டளையாற் கங்கையில் விட்டனன். கங்கை வெப்பஞ் சகிக்காது சரவணத்தில் வைத்தனள், அந்த இடத்திலிந்த ஆறு பொறிகளும் ஆறுருக்களாய்க் கிருத்திகை முதலறுவர் பாலூட்ட வளர்ந்து உமாதேவியார் எடுக்க ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களுமாய் ஒருருவாய் எழுந்தருளியிருந்தவர். இவ ருடைய ஆறு திருமுகங்களும், முற்றறிவு, அளவிலின்பம், வரம்பிலாற்றலுடைமை, தன்வய முடைமை, பேரருளுடைமை, இயற்கையறிவு என்னும் ஆறு குணங்களாம். திருமேனி அருளுரு, இவரது ஆயுதம், தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு, வேல் இவை பன்னிரண்டு கரத்திலுள்ளன. வேல் தவிரப் பதினொரு ஆயுதங்களும் பதினொரு உருத்திரர். வேல் மூன்று சத்திகளின் உரு. இது நாததத்துவம், வாகனம் மயில், இது விந்து தத்வம், இரண்டு நாய்ச்சிமாரும் சிற்சத்தி, பராசத்தியர். இவர்க்குச் சேவற்கொடி. இதனை ஆண்டலைக் கொடியென்ப, தலை ஆண் தலையென்றும் மற்றது சேவலுருவின தென்றுங் கூறுவர். இவர் இந்திரனிடம் தம் வலிமையைத் தெரிவித்து அவனுக்கு விச்வரூப தரிசனந் தந்து இந்திரனாற் செய்விக்கப் பட்ட மகாமண்டபத் தெழுந்தருளி அபி ஷேகங்கொண்டு தேவசேநாபதி பட்டமடைந்து கயிலையி லெழுந்தருளி யிருந்தனர். நாரதர்செய்த வேள்வியில் பிறந்த வெள்ளாடு உலகத்தைத் துன்பப்படுத்த தேவர் வேண்டுகோளால் அதை வீரவாகு தேவரை எவிப் பிடித்துவாச் செய்து அதனை வாகனமாகக் கொண்டு கயிலையில் வீற்றிருக்கும் நாட்களில், ஒருநாள் சிவமூர்த்தியைச் சேவித்துச் செல்லும் தேவர் கூட்டங்களில் ஒருவனாகிய பிரமதேவன், கந்தமூர்த்தியைப் பணியாது போகக்கண்டு பிரமனையழைத்து நீர் என்ன தொழில் செய்வதென்று வினவினர். பிரமன் நான் வேதங்களை யுணர்ந்து சிருட்டி முதலிய தொழில்களியற்றி வருபவன் என்று இறுமாந்துகூற, கந்தமூர்த்தி வேதத்தின் ஆதியாகிய பிரணவத்திற்குப் பொருள் வினாவ அதற்கு விடைகூற அறியாது மயங்கினன். அதனால் கந்தமூர்த்தி பிரமனைச் சிரத்திற் குட்டிக் கந்தமாதனத்திற் சிறையிட்டனர். சிவபிரான் பிரமனை விடும்படி கட்டளையிடச் சிறைநீக்கிச் சிவமூர்த்தி பிரணவத்திற்குப் பொருள் கேட்க விடையீந்து விஷ்ணுமூர்த்தியின் குமரிகளாகிய சுந்தரி, அமுதவல்லி யென்பவர்க்கு நீங்கள் இந்திரனிடத்தும் சிவமுனிவரிடத்தும் பிறந்திருங்கள் நாமுங்களை மணக்கின்றனமெனத் திருவாய்மலர்ந்து திருக் கைலையில் எழுந்தருளியிருந்தனர். தேவர் வேண்டுகோளால் கந்தமூர்த்தி சிவ மூர்த்தியின் கட்டளையேற்று அசுரருடன் யுத்தத்திற்கு யத்தனஞ் செய்து வீரவாகு தேவரை எவ, அவர் தாரகாசுரனுடன் யுத்தஞ்செய்ய ஆற்றாது மூர்ச்சித்ததறிந்து அத்தாரகனை வேலாயுதத்தாற் கொலை புரிந்து மாயை செய்த மலையுருக்கொண்ட கிரவுஞ்சனைப் பிளந்து நவவீரரை மூர்ச்சை தெளிவித்து எழுப்பிப் பகைவர் இல்லாமையால் மண்ணியாற்றங்கரை வந்து சேர்ந்து அங்கிருந்து, திருச்சேஞ்ஞலூ ரடைந்து சிவபூசை முடித்துப் பாசுபதம் பெற்று அங்குத் தவஞ்செய்திருந்த பராச புத்திரருக்கு அநுக்கிரகஞ் செய்து திருச்செந்திலில் எழுந்தருளியிருந்து சயந்தன் கனவிடைத் தோன்றித் தேற்றினவர். வீரவாகுதேவர் முதலியோர் பானுகோபன் ஏவிய மோகனாஸ்திரத்தால் மயங்கி யிருந்தகாலத்துத் திருவுளத்தறிந்து மோகனாஸ்திரப் பிரயோகஞ் செய்து போக்கினவர், இரண்டாநாள் சூரபதுமனுடன் போரிட்டு அவனேவிய தேவாஸ்திரம்களின் வலியடக்கி அவனைப் பின்னிடச் செய்து சிங்கமுகாசுரன், வீரவாகு முதலியவரைக் கட்டிக் கடலில் இட அவர்க ளைத் திவ்யாஸ்திரப் பிரயோகத்தால் மீட்டும், சிங்கமுகாசுரன் விழுங்கிய பூதரை அவன் முதுகில் தொளையிட்டு வெளிப்படுத்தியும், வெட்டவெட்டத் தளிர்க்கும் ஆயிரம் சிரங்களையும் இரண்டாயிரம் கரங்களையும் பலமுறை வெட்டி, கடைசியினுங் கரித்துத் தளிர்க்காமலடக்கி, வேலா யுதத்தால் அவனது உயிரைப் போக்கினவர். சூரபதுமனுடன் யுத்தஞ்செய்து அவனைப் பதாதியாக்க, அவன் மாயையின் போதனையால் இந்திரஜாலத் தேரைக் கொண்டு சஞ்சீவியா லுயிர்ப்பித்த பானுகோபன், சிங்கமுகன், தருமகோபன் முதலிய சேனாவீரராகிய இராக்கதருடன் யுத்தஞ் செய்யப் பாசுபதத்தால் மீளக்கொன்று, சூரன் கொண்ட மாயாவுருக்களனைத்தையும் தக்க ஆயுதவகையால் கண்டித்து அவன் கொண்ட மாமரவுருவை வேலாயுதத்தா லிருபிளவாக்க அவன்கொண்ட வரபலத்தால் மீண்டும் நல்லுருவுடன் வர அவனை வேலால் இருபிளவாக்கினர். அப்பிளவு கொண்ட உரு மயிலும் சேவலுமாக அந்த மயிலை வாகனமாகக் கொண்டும் கோழியைக் கொடியாகப் பிடித்தும் புவனங்களனைத்தும் நடுங்கவலம்வந்து தேவர்க் கருள் புரிந்து தேவர் சிறை நீக்கி அவுண பாலிறந்த பூதகணத்தை யெழுப்பி வருணனால் மயேந்திர முதலிய அவுணர் புரங்களை அழிப்பித்துத் திருச்செந்திலில் எழுந்தருளிச் சிவபூசை செய்து அவ்விட மிருந்து திருப்பரங்குன்றடைந்து பார்ச முனிவர் குமரர் அறுவருக்கும் யோகம் அருளிச்செய்து தேவேந்திர குமரியாகிய தெய்வயானையை மணந்து விண்ணகர் குடியேற்றித் திருப்பாங்குன் றமர்ந்து நாரதரால் வள்ளிநாய்ச்சியாரது அழகு முதலியவற்றைக் கேள்விப்பட்டு வேடுருக் கொண்டு அவளுடன் வார்த்தையாடிக் கொண்டிருக்கையில் வேடர் வர வேங்கைமாமாய் நின்று அவர்கள் சென்ற பிறகு பழையபடி வேடராயிருந்து பின்னும் அவர்கள் வர விருத்த சந்நியாசியாய் அவர்களை ஆசீர்வதித்தனர். வேடர் இந்தச் சந்நியாசி நமது வள்ளிநாய்ச்சியாருக்குக் காவலாளியாவர் என்று காவலிடக் காவ்விருந்து தாகம் வேண்ட வள்ளிநாய்ச்சியாருடன் சென்று சுனையிலிருக்கையில் விநாயகரை நினைக்க விநாயகமூர்த்தி யானையுருக்கொண்டு வந்தனர். யானை யைக்கண்ட வள்ளிநாய்ச்சியார் பயந்து விருத்தரைத் தழுவக் குமாரக் கடவுள் தமது உண்மையுருக்காட்டிக் களிப்பித்து வள்ளியை மணந்து சென்றனர். வேடர், வள்ளிநாய்ச்சியாரைக் காணதவராய்த் தேடிச்சென்று கண்டு கோபித்துக் கந்த மூர்த்தியுடன் போர் செய்து மாண்டனர். வள்ளிநாய்ச்சியார் வேண்டுகோளால் கந்த மூர்த்தி வேடரை உயிர்ப்பித்துத் தணிகையில் எழுந்தருளி யிருந்தனர். ஒரு காலத்தில் பகீரதன்பொருட்டு வேலையேவிக் கோரனைக் கொல்வித்தவர். வீரவாகு தேவருக்கு ஞானோபதேசஞ் செய்து விச்வ ரூபதர்சனந் தந்தவர். 2. குழந்தையாயிருக்கையில், சிவன், பார்வதி, கங்கை, அக்னியிவர்கள் ஓரிடத்தில் ஒருங்கிருந்து நால்வரும் தங்களில் எவரிடத்தில் குமாரக்கடவுள் வருவானென எண்ணினர். இவர்களது எண்ணமறிந்த குமாரக்கடவுள் தம்மை ஸ்கந்தர் சாகர், விசாகர், நைகமேயர் என நான்காகச் செய்துகொண்டு நால்வரிடஞ் சென்றனர். (பார~சல்லி.)

குமாரக்கடவுள் வாகனம்

ஆடு, யானை, மயில், ஆயுதம், வேல், கொடி சேவல், தேவிமார் தெய்வயானி, வள்ளி நாயகி மாலை நீபம், சகோதரர் வீரவாகு முதலியோர்.

குமாரசரஸ்வதி

இவர் ஒரு புலவர், இவர் விஜய நகரத்தரசராகிய கிருஷ்ணதேவராயர் காலத்தவராக இருக்கலாம். அவரை இப்புலவர் புகழ்ந்திருக்கிறார். ”கலிங்க மிழந்து நுதிக்கைச் சங்கந்தோற்று, மெலிந்து கடகந்நழுவ விட்டாள் மலிந்த மலர்ப்,பொன்னிட்டமான கிட்ணபூபாலாவுன்றனக்குப், பின்னிட்ட வொட்டியன் பொற் பெண் இவரை யபிராமன் என்போன் நாலு பாஷையிலும் பாடுவிரோ வென்ன பாடியது. “கூத்தாடிலஞ்சகொடுக்கா அரே பேட்டிச், சோத்தாட்டாவை வேசித் தொண்டனே ஆத்தான அந்த விழுப்புரமும் அம்பி நகருங்கெடுக்க, வந்தகுலாமாவம் ராமா. ” (த~நா. ச.)

குமாரதாரிகை

திருவேங்கடத்திலுள்ள தீர்த்தம்

குமாரதேவர்

இவர் கன்னட தேசத்தாசர், சிலநாள் அரசு செய்து துறவு பூண்டு பேறையூர்ச் சாந்தலிங்கசுவாமிகளை யாசிரியராகக் கொண்டு அடிமைபூண்டு ஆசாரியர் சொற்படி விருத்தாசலத்திலிருந்து சடா முனிக்குச் சாபம் போக்கிப் பெரிய நாயகியம்மை பாலுண்பிக்க வுண்டு சாளிக்குத் திருவடி தீக்ஷையும், குஷ்டரோகிக்கு ரோகநிவர்த்தியும் புத்திரப் பேறில்லாதார்க்குப் புத்திரப்பேறும் அளித்து ஒரு அரசடியில் வசித்துத் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகளுக்கும், ரெட்டிச்சிதம்பர சுவாமிகளுக்கும் அருள்புரிந்து பரிபூரண மடைந்தனர். இவர் செய்த நூல் மகாராசா துறவு முதல் (16) சாத்திரங்கள்.

குமாரன்

1. அக்நியென்னும் வசுவின்புத்திரன். 2. கந்தமூர்த்தி.

குமாரபிரமசாரி

பூப்பிரதக்ஷணஞ்செய்யச் சென்ற குமாரக்கடவுள் வருதற்குமுன் விநாயகர் திருமணமுடியக் கண்ட குமாரக் கடவுன் கோபித்துக் கைலை நீங்கிக் கிரவுஞ் சகிரி சென்று தங்கினதால் வந்தபெயர். (சிவமகாபுராணம்.)

குமாரமலை மருந்தர்

1. பச்சைகந்த தேசிகசாதீனத்தவர். திருத்தினை நகர்ப்புராணம் பாடியவர். 2. துறையூ ராதீனத்தவர் திரிசூலகிரி புராணம் பாடியவர்.

குமாரவனம்

இவ்வனம், பார்வதிதேவியாரின் ஏகாந்தவனம். இதில் கட்டளையின்றிப் புருஷர் செல்லொண்ணாது. அங்கனஞ் செல்வரேல் பெண்ணாகக் கடவர் என்று சிவாஞ்ஞை கொண்டது. இதில் இளன் அல்லது சுத்துய்மனன் சென்று இளையாயினான்.

குமாரி

ருகூபர்வதத்திற் பிறக்கும் ஒருநதி.

குமாலன்

பிரகலாதனைக் காண்க.

குமிழிஞாழார் நப்பசலையார்

இவர் ஒரு பெண்கவி, கடைச்சங்கத்தார் காலத்தவர். இவர் பெயர் விளங்கவில்லை. பசலை யென்பது கணவனை நீங்கிய அரிவையர்க்குண்டாம் ஒளிவேறுபாடு. ந இடைச்சொல் இவர் ஊர் குமிழிஞாழாராக இருக்கலாம். இவர் மறோக்கத்து நப்பசலையாரின் வேறு போலும், (அகம் 160.)

குமு

விஷ்ணுதிக்பாலகன்.

குமுணன்

ஒப்பிலாமணிப் புலவரைக் காண்க.

குமுதம்

1. நிருதிதிக்கிலிருக்கும் பெண் யானை. 2, ஒரு பர்வதம்.

குமுதர்

சேனை முதலியார் கணாதிபதியரில் ஒருவர். இவரே, மதுரகவியாழ்வாராகத் திருவவதரித்தவர்.

குமுதவதி

1. விமரிசனைக் காண்க. 2. குசன், கங்கையில் நீர் விளையாடிய காலத்து அவனது கங்கணம் கங்கையில் விழ அதனைக் கவ்வி அவரிடம் ஆசை கொண்டு மணந்த நாககன்னிகை, 3. விந்தியபர்வதத்துற்பத்தியாகும் நதி.

குமுதா

ஒரு மாயாதேவி.

குமுதாக்ஷன்

1, விஷ்ணுபடன். 2. ஒரு வாநாவீரன்.

குமுதை

மஞ்சுளையைக் காண்க.

குமுர்தா

தக்ஷன் பெண், தருமன் தேவி.

கும்பகன்

விதேகபுரியிலிருந்த ஒரு இடையன். இவன் வீட்டில் தாரகயுத்தத்திலிறந்த காலநேமிபுத்ரர் எழுவரும் இடபங்களாய்ப் பிறந்ததாகவும் அவைகளைக் கண்ணன் தழுவிக் கொலைபுரிந்து அவன் புத்திரியை மணந்ததாகவும் கூறுவர். கும்பாண்டனுக்கும் இக்கதை யுண்டு.

கும்பகமகாராசா

மல்லிநாத தீர்த்தங்கரின் தந்தை, தேவி, பிரசாவதி, சுவர்ண வர்ணம். (30) வில் உன்னதம்.

கும்பகர்ணன்

விசிரவசுவிற்குக் கேகசியிட முதித்த குமரன், இராவணன் தம்பி. இவன் பிரமனையெண்ணித் தவம் புரிகையில் தேவர், பிரமனை நோக்கி, வரங்கொடாதிருக்கவும் சரஸ்வதியைத் துதித்து அவன் நாவிலிருந்து தூங்க வரங்கேட்கவுஞ் செய்தனர், இவன் அப்படியே கேட்டு ஐராவதத்துடன் இந்திரனையும் அட்டதிக்கசங்களையும் பின்னிடச் செய்தவன். இவன் உறங்குகையில் இவனை எழுப்புந் தூதர் ஆயுதமுதலிய கொண்டு அடித்து எழுப்புவர். இராவணன், ஸ்ரீராமமூர்த்தியிடம் யுத்தந் தொடங்குகையில் சீதையை விட்டு விடின் நாம் பிழைக்கலாமென இராவணனுக்கு வெகுவாய்ப் புத்தி போதித்து அவன் கோபிக்க இராமமூர்த்தியிடம் யுத்தத்திற்கு வந்தவன். விபீஷணன், இராம மூர்த்தியிடம் அடைக்கலம்புகுந்த செய்தி கேட்டு விபீஷணருக்கு நீதி கூறி அவரை இராமரிடமே அனுப்பினவன். வசந்த னென்னும் வாநரனைக் கசக்கிச் சந்தனமிட்டவன். நீலனைச் சோர்ந்துவிழச் செய்து அங்கதனை ஒருகுத்தில் மூர்ச்சையாக்கி அனுமனெறிந்த மலையாலடிப்பட்டுச் சளை யாதவன். மல்லயுத்தத்தில் இளைத்த சுட்ரீவனைத் தூக்கிக்கொண்டு இலங்கை நோக்கிச் செல்லுகையில் அவன் கடித்ததனால் காதையு மூக்கையு மிழந்தவன், அதியுக்ரமாய்ச் சண்டைசெய்து இராமபாணத்தால் தனித்தனி கைகள் கால்களறுப்புண்டு இராமமூர்த்தியைத் தன் தம்பியைக் காக்கவும் தன் தலை கருங்கடல் மத்தியில் விழவும் வேண்டிக்கொண்டு இறந்தவன். சிவ மூர்த்தியிடம் பெற்ற சூலமும், கவசமும் உடையான். இவனுக்குச் சிங்கக்கொடி, இவன் பூருவம் விஷ்ணுமூர்த்தியால் மடிந்த மது என்பவன்.

கும்பன்

1. பிரகலாதன் குமரன், இரண்யன் பேரன். 2. இராவணனுக்கு நண்பன்,சித்தர்களைச் சிறையிட்டவன். சுக்ரீவனாற் கொல்லப்பட்டவன். 3. தத்தாத்திரயன் குமரன். 4. சண்முகசேநாவீரன், 5. வாநரவீரன். 6. கும்பகர்ணன் குமரன், 7. ஒரு அரசன். இவன் பொருட்டுத் ததீசி முனிவர் விஷ்ணுவுடன் மாறுகொண்டு அவர் சக்ரத்தை மயக்கினர். 8. இவன் ஆருணியரசனுக்குக் கண்மணி போன்றவனும், திண்ணிய அறிவையுடைய வனுமாகிய ஒரு வீரன், பாஞ்சால ராசன் இறந்த பின்பு கோசம்பி நகரத்தே இவன் கொல்லப்பட்டான். (பெ. கதை.)

கும்பம்

இருபது துரோணம் கொண்டது,

கும்பஸ்தாபனம்

இது ஈச்வரதேகமாகும் பொருட்டுக் கும்பத்தின் வஸ்திராதிகளைத் தேகத்தின் சர்மாதிகளாக நிரூபித்திருக்கிறது. எவ்வகை யெனின் கும்பத்தின் மீதிட்ட தேங்காய் சிரமாகவும், மாவிலைகள் சிகையாகவும், கும்பத்தில் போர்த்த வஸ்திரமானது தேகத்தைப் போர்த்திருக்கும் தோலாகவும், கும்பம் சிவக்க மேலே பூசிய மண்ணானது செவ்விய உதிரமாகவும், குடத்தின் மண் மாம்சமாகவும், கும்பத்தில் நிறைந்த தண்ணீர் மேதையாகவும், தற்பகூர்ச்சம் எலும்பாகவும், கும்பத் தின் நாற்புறமுஞ் சுற்றப்பட்ட நூல் நாம்பாகவும், கும்பத்தினுள் இட்ட பொன் முதலிய இரத்தினங்கள் சுக்லமாகவும், நியாஸஞ் செய்யப்பட்ட மந்திரம் உயிராகவும், கும்பத்தடியில் படிப்படியாக இடப்பட்ட நவதான்யங்கள் கும்பமூர்த்தியாகிய ஈச்வானுக்கு ஆசனமாகவும், ஆகமங்களில் கூறப்பட்டிருக்கிறது. மாரியம்மை பொருட்டுச் சிங்காரிக்கும் கரகமும் இத்தன்மைத்தாம் ஆயினும், அதில் வேம்பை மாரிக்குரிமையாகக் கொண்டு கலசம் ஸ்தாபிப்பர். (சி~சாரா.)

கும்பாண்டன்

1. பாணாசுரன் மந்திரிகளில் ஒருவன். இவனுக்குக் கபந்தன் என்றொரு பெயருண்டு, 2. யசோதைக்குத் தம்பி, நக்னசித்தின் பசுக்களைக் காக்கிறவன், இவனிடம் ஏழு விடைகளிருந்தன. அவற்றைக் கண்ணன் சத்தியவதிபொருட்டு அடக்கினர். இவன் குமரி உஷையின் தோழியாகிய சித்திரரேகை.

கும்பானு

ஒரு அரக்கன், இராவணனுடன் சேர்ந்தவன்

கும்பி

சுபார்சுவன் குமரன்.

கும்பிநசி

1. சுமாலியின் பெண், கரதூஷணன் தாய். இவளை இராவணனில்லாத காலத்து மது என்னும் அரக்கன் சிறையெடுத்தனன். இராவணன் இச்செய்தியைக் கேள்வியுற்றுக் கோபித்து யுத்தத்திற்குச் செல்ல இவள் இராவணனை அவனுடன் யுத்தஞ் செய்யாதிருக்க வேண்டி யவள். 2, அங்காரவருணன் தேவி.

கும்போதரன்

சிவகணத்தவன், சிவமூர்த்தியிட பாரூடராகுகையில் முதுகில் திருவடிவைத்தேற இடங்கொடுத்து நிற்பவன்.

கும்மிடி சட்டி வேளாளர்

வட ஆர்க்காட்டு மானுயல் எனும் புத்தகத்தில் இவர்கள் வேளாளரின் மரணப் பிரயோஜனங்களில் நெருப்புச் சட்டிக்கொண்டுடன் செல்வோர் எனக் கூறப்பட்டிருகிறது. அல்லது இப் பெயர் அவர்களுக்குத் தங்கள் நெருப்புச் சட்டி (கும்பிடி சட்டி) யைத் தாங்களே எடுப்பவர் எனவுமாம். (தர்ஸ்டன்.)

குயக்கொண்டான்

நக்கீரரைக் காண்க.

குயவன்

வைசிய பெண்கள் கரவில் பார்ப்பானைக் கூடிப்பெற்ற குமரன். (அருண திரிபுராணம்,)

குயிலாலுவம்

இமயமலைக் கருகிலுள்ள சிவத்தலம் (சிலப்பதிகாரம்.)

குயிலுவர்

இடக்கை முதலிய வாச்சியம் வாசிப்போர்.

குயில்

காக்கையினுருப்போன்ற பறவை. இதில் கருங்குயில் வரிக்குயில் என இரு வகை, இது இனிய ஓசையுடைய பக்ஷி. இது முதுகு நீண்டு நீலநிறமாகவும், வாலுமிறகும் சுற்றிக் கூடிய கருநிறமாகவும், மூக்கு மீண்டும் உள்ள பக்ஷி. இது வசந்த காலத்தில் இனிய குரலுடன் கூகூ எனக் கூவும். இதற்குக் கூடுகட்டத் தெரியாதாதலால் காக்கையில்லாச் சமயத்தில் காக்கையின் கூண்டில் முட்டையிட்டுப் போய் விடும். காக்கையே இதன் முட்டையைப் பொரித்துக் குஞ்சைக் காக்கும். பூச்சி பழங்களைத் தின்னும். தன் குஞ்சுகளுக்குப் பருவம் வந்தபின் குரல் காட்டி அழைத்துச் செல்லும்.

குய்யகர்

வித்யாதர உலகத்துள்ள தெய்வ வகுப்பினர். குபேரன் நிதிக்குக் காவலர்.

குய்யகர் உலகு

தாம் சம்பாதித்த பொருளைப் பிறர்க்குதவிப் புண்ணியம் பெறாமல் தாமே அனுபவித்திறந்தவரும், பிறர்க்குத் துன்பம் தராதவரும் பெறும் உலகம்.

குய்யரோகம்

இது ஆண்குறியிலுண்டாம் ரோகம். இது வெகு புருஷ சஞ் சாரத்தாலும், இரணாதி மேகங்களாலும், உண்டான ரோகமுள்ள பெண்களைப் புணர்தலால் உண்டாம் ரோகம். இது (23) வகை, வாத, பித்த, சிலேஷ்ம, திரிதோஷ, ரத்த உபஸ் தம்பங்கள், அரிசோரோகம், சாஷபிகாரோகம், அவமந்த ரோகம், கும்பிகாரோகம், அலசிரோகம், உத்தபாரோகம், பீடகரோகம், புஷ்கரிகா ரோகம், சம்வியூடரோகம், மிருதி தவிரண ரோகம், அஷ்பீலிகாரோகம், அவிபாடித ரோகம், நிருத்தமணி ரோகம், கிரதித ரோகம், பரிசஆனிரோகம், சதபோனக ரோகம், தொக்குப்பாகரோகம், மாம்சபாக ரோகம், ரத்தாற்புதரோகம், மாம்சாற்புத ரோகம், வித்திரதிரோகம், திலகாலக ரோகம் முதலியவாம்.

குரங்கன்

ஒரு நாகன்.

குரங்கு

இது, மனிதனையொத்த பிராணி, இதற்கு மனிதர்க்குள்ள விரல்களைப்போல் நான்கு கைகளிலும் கால்களிலும் ஐந்து பலமான விரல்களுண்டு, அக்கைகளேயன்றி வாலும் கைபோல் உதவுகிறது. குரங்கின் தேகமுழுதும் மயிரடர்ந்திருக்கிறது. இது நிற்கும்போது மனிதனைப் போல் நிற்கும். இது உஷ்ணப்ரதேசங்களில் மரம் அடர்ந்த காடுகளில் வசிக்கும். கந்தமூல பதார்த்தங்களையும் பூச்சிகளையும் தின்று ஜீவிக்கும். இவை பலவகைப்படும். சாதாண குரங்கு, வாலில்லாக் குரங்கு, தட்டை வாங்குரங்கு, கருங்குரங்கு. குரங்குகளுக்கு மனிதனைப்போல் நடிக்கத் தெரியும். சில குரங்குகளுக்குக் கன்னத்தில் பையுண்டு. அதில் ஆகாரத்தை அடைத்து வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல எடுத்துத் தின்னும். சாதாரண குரங்கு இது, எளிதாய்ப் பழக்கக்கூடியது. இது குட்டையாய் நீண்ட வாலுள்ளது. கிராமங்களை யடுத்த தோட்டங்களிலும், மெத்தை, வீடு, கோபுரங்கள், விருக்ஷங்களிலும் வசிக்கும். பிடித்த பிடியை விடாது தாண்டவல்லது, இது நோக்கியே குரங்குப் பிடியென்பர். மேற்கூறிய வாலில்லாக் குரங்கும் குட்டைவாற் குரங்கும் மனிதக் குரங்கின் வகையிற் சேர்ந்தவை. மனிதக் குரங்கின் ஜாதியில், கொறில்லா, உராங் ஊட்டாங் என்பவை சேர்ந்தவை, கொறில்லா இது அதிக பலமும், எந்த மிருகத்திற்கும் அஞ்சாததீரமும் உடையது. உருவிலும் பலத்திலும் மனிதனில் தாழ்ந்ததன்று, உடம்பு மயிரால் மூடப்பட்டு, முகம் கறுப்பாயிருக்கும். கைகள் முழங்கால் வரையில் நீண்டிருக்கும். இவை தடி கொண்டு மனிதனைப்போல் சண்டை செய்யும். தமக்கு மரங்களின் மேல் கிளைகளால் வீடு கட்டிக் கொள்ளும். இவைகளைப் பிடித்துச் சாதுவாக்கி மனிதரைப்போல் வேலைசெய்யப் பழக்குகிறார்கள். ஆகாரம் காய் கனி கிழங்கு முதலிய, இவை ஆப்ரிகாகண்டத்து வனவாசிகள், உராங் ஊட்டாங் இது மனிதக்குரங்கு வகையில் ஒன்று. இதனை காட்டு மனிதன் என்பர். சற்றேறக்குறைய ஐந்தடி உயரமிருக்கும். தோள்களுக்கிடையில் தலை தொங்கும். நேராய் நிற்க முடியாது, நடக்கையில் கையை முஷ்டியாக்கி யூன்றி நடக்கும், மரத்தின் மேல் அதிவேகமாய்ச் செல்லும். இந்த மனிதக் குரங்குவகை இரண்டும் தனித்தனி வசிக்குமேயன்றிச் சாதாரணக் குரங்கு போல் இனத்துடன் வசியா, இவை இந்தியாவின் தென் கீழ்ப்பாகத்துள்ள போர்னியோ சுமத்ராவில் உள. நாய்க்குரங்குகள்: இவையே வாலில் லாக்குரங்குகள். இவற்றிற்குப் பாபூன் என்றுபெயர். இவை பார்வைக்கு விகாரமானவை, மூக்குச்சிவப்பு, கதுப்புநீலம், இவை கூட்டம் கூட்டமாய்ச் சஞ்சரிக்கும். தங்களில் இரண்டு மூன்று குரங்குகளைக் காவலுக்கு வைத்துவிட்டு இராக்காலங்களில் பழத்தோட்டங்களில் சென்று திரியும். இவை மூர்க்க சாதியாதலால் மனிதர் அதிக பயப்படுவார்கள். இவை ஆப்பிரிகா வாசிகள், கருங்குரங்கு: வாலுள்ள குரங்கு வகையில் சேர்ந்தது. உருவத்தில் கறுப்பு நிறமுள்ளது. சாதாரண குரங்குக்கு உள்ள இலக்கணங்களெல்லாம் இதற்கும் உண்டு, முசு: இது குரங்கினத்தைச் சேர்ந்தபிராணி. இது உடல் நீண்டும் வால் நீண்டும் இருப்பது குரங்கைப்போலவே கைகால்க ளமையப்பெற்றது. முகம் சற்றுக் கறுத்திருக்கும். தலையில் தொப்பி போட்டது போல் சிறு மயிர்த்தொகை ஒரு சிறிது உயர்ந் திருக்கும். இதனைக் கொண்டை முசு என்பர். இஃது இந்திய மலைவாசி.

குரண்டதேவர்

இரு நூற்றைம்பது பிரமாயுசுகண்ட ஒரு கொக்கு. சரஸ்வதி தீரத்தில் தவமியற்றியது.

குரற்கம்மல்ரோகம்

குரல்வளையீரம் வறண்டு சுஷ்கித்துக் குரல் முட் செருகினது போல் நோதல் கடுக்கலானத்வனி, கம்மியத்வனி, குறு குறு சத்தம், முதலிய உண்டாம். இது வாதபித்தம், சிலேஷம குரற் கம்மல், திரிதோஷதாற் கம்மல், க்ஷயகுரற்கம்மல், மேதோகுரற் கம்மல், என ஆறுவகை. இந்த சோகம் ஏலாதிச் சூரணம், ஜயாஸபஸ்மம், அரக்குத் தயிலம் முதலியவற்றால் வசமாம். (ஜீவா.)

குரவர்

(5) அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்.

குரவிநம்பி

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம்பரை.)

குரவை

ஒருவகைக் கூத்தின் விகற்பம், இது எழுவர் மங்கையர் கைகோத் தாடுவதாம்.

குராசோ

இது தென் அமெரிக்காவிலுள்ள பறவையினங்களில் சேர்ந்தது. இது ஒரு வான்கோழியளவினது என்பர். இது, குராசோதீவில் வாசியாகையால் இப்பெயர் பெற்றது.

குரு

(சந்.) அசமீடன் குமரனாகிய ருக்ஷன் பேரன், சம்வருணன் குமரன், சமந்த பஞ்சகத்தரசன். இவன் குருவாகிய வியாழன் அநுக்கிரகத்தாற் பிறந்ததால் இப்பெயர் அடைந்தனன் எனவும், சூர்ய குலத்தரசருக்குக் குருவாகிய வசிட்டர் சூரியனிடஞ் சென்று தபதியைச் சம்வருணனுக்குக் கொடுக்கச் செய்து பிறந்த குமரனாகையால் இவனுக்கு இப்பெய ரிடப்பட்ட தெனவுங் கூறுவர். இவன் வழி இந்தவம்சம் பரவின தாகையால் குருவம்சம் எனவும் இவனாண்டதாலந்நாடு குருநாடெனவும் பட்டது. குமரர் சந்நு, பரீக்ஷித்து, சதன்னிசு, நிஷதன். 2. சங்கிருதி குமரன். 3. அக்கியித்ரனுக்குப் பூர்வசித்தியிட முதித்த குமரன். தேவி நாரி. 4. இது, சூரியனைச் சுற்றியோடும் கிரகத்தில் ஒன்று, எல்லாக் கிரகங்களினும் பெரிது. இது, அவ்வளவு பெரிதாயினும் நமக்கு அதிக தூரத்தில் இருப்பதால் பிரகாசமுள்ள ஒரு நக்ஷத்திரம் போல் காணப் படுகிறது. இது, சூரியனை ஒருமுறை சுற்றிவர (12) வருஷமாகிறபடியால் ஒரு ராசியை ஒருவருஷகாலவரையில் கடந்து செல்லுகிறது. இதற்கு, 4, 5, உபகிரகங்களுண்டு. இதனைப் பிரகஸ்பதி, குரு, என்று கூறுவர். 5 கர்ப்பாதான முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப் பவன். (மநு!அத் 1.)

குரு நாடு

அத்தினபுரம், குரு ஆண்டதாலிப்பெயர் பெற்றது. குருவைக் காண்க.

குருகு

இது முதல், இடைச்சங்கங்களிலிருந்த நூல், இதற்கு முதுகுருகு வெனவும் பெயர்.

குருகுலம்

இது சைன நூல்களிற் கூறப்படும் ஐவகைக் குலத்துள் ஒன்று. உக்கிர குலமென்னும் பெயரைக் காண்க. இதிற் பிறந்தது பற்றியே சதானிகன் குருகுலத் தரசனெனவும், உதயணன் குருகுலக் குருசில், குருலத்திறையெனவுங் கூறப்படுவன். (பெ. கதை).

குருகைக்காவலப்பன்

நாதமுனிகளை யாச்ரயித்த ஸ்ரீவைணவர், நாதமுனிகள் சொற்படி ஆளவந்தாருக்கு யோகாகஸ்யங்களை உபதேசிக்க இருந்தவர்.

குருக்கள்

இப்பட்டம் தென்னாட்டு ஓதுவாமூர்த்திகளுக் குள்ளது. சிவாசாரியர்களையும் குருக்கள் என்பர்.

குருக்ஷேத்ரம்

பரதகண்டத்தில் சரஸ்வதி யாற்றின்கணுள்ள தலம், தேவர் யாக முதலிய செய்து பிரசித்தியடைந்த இடம். இதில் பாண்டவர் யுத்தஞ் செய்தனர். முற்காலத்தில் இந்த க்ஷேத்திரமானது நெடுங்காலமாகக் குருவெனும் அரசனால் உழப்பட்டது. இவரை இந்திரன் பல முறை உழுதற்குக் காரணங்கேட்க, குரு, தவமுதலிய இல்லாமலே இதில் வசிப் போர் சுவர்க்கமடையப் போகிறார்கள். அதன் பொருட்டுச் செய்கிறேன் என இவனை வஞ்சிக்க வேண்டி இந்திரன் நீ என் வருந்துகிறாய் இந்த க்ஷேத்ரத்தில் எவர் ஆகாராதிகளில்லாமல் தவத்தை மேற்கொள்வாரோ அவர்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டவரும் மிருகங்களும் சுவர்க்கம் பெறுக என்று வரந்தந்து நீங்கினன். இது தரந்துகை, ரந்துகை, ராம ஹ்ரதம், மசக்ருத தீர்த்தம் இவைகளுக் கிடையிலிருக்கின்றது. பிரமதேவருக்கு உத்தரவேதி எனப்படுகிறது. இது சமந்த பஞ்சக மெனப்படும். A tract between the rivers Saraswathi and Dhrishadvati and it was named Brabmavarta in the Period of Swayenubhuva Manu and it is about 70 miles in length and 30 miles in width. It is also a Railway Station 100 miles forth of Delhi in the District of Karnal.

குருங்கன்

ஒரு அரசன், இருக்குவேதத்திற் புகழ்ந்து கூறப்பட்ட கொடையாளி.

குருசத்திரன்

திதிட்சு குமரன், இவன் குமரன் ஓமன்.

குருசாங்கலம்

பாஞ்சாலத்திற்குத் தெற்கிலுள்ள தேசம். A forest country situated in the north west of Hastinapura, the capital of the Kurus north east of Delhi, now, entirely diluviated by the Ganges.

குருசித்

மிதிலையாசனாகிய அம்சகன் குமரன்.

குருசுகாபூஜானிரதம்

இதில் சக்கிரளைப் பிரயாணாதி காலத்தில் எதிரில் உண்டாகும் சுக்கிரபீடை நேராதிருக்க விதிப்பிரகாரம் பூஜை செய்யின் கிராபீடைகள் எல்லாம் நீக்கும். இது பிரமனுக்குச் சிவன் சொன்னது.

குருசுகீர அத்தமனம்

ஆதித்யனுடன் பிரகஸ்பதியும், சுக்ரனும் கூடில் இவர்கள் அத்தமனகாலத்தில் சுபகன்மங்கள் நீக்கப்படும். சுக்ரன் கிழக்கே அஸ்தமித்தால் விருத்த சுக்ரன் என்று (7) நாட்களும், உதிக்குமிடத்து வாலசுக்ரன் என்று (3) நாளும், மேற்கே அத்தமிக்கையில் விருத்த சுக்ரன் என்று (5) நாட்களும், இவ்விடத் துதிக்குமிடத்து வாலசுக்ரனென்று (10) நாட்களும் கழிக்கப்படும். பிரகஸ்பதி அத்தமனத்திற்கு (15) நாட்களும், உதயத் திற்கு (5) நாட்களும் கழிக்கப்படும்.

குருதத்தை

ஸ்ரீதத்தன் தாய்.

குருதாமன்

துஷ்யந்தன் குமரன்.

குருதிக்கண்ணன்

இரத்தக் கண்ணனைக் காண்க.

குருதேசம்

அஸ்தினபுரத்தினால்.

குருத்ருஹன்

இவன் ஒருவேடன் சிவராத்ரி யென்று அறியாதவன். தன் தாய் தந்தையர் பசியால் வருந்த எதேனும் ஆகாரம் சம்பாதிக்கும் பொருட்டு வில்லுமம்புமாகப் புறப்பட்டு வனமடைந்து மிருகாதிகளைத் தேடுகையில் பொழுது போய்விட்டது, அதனா வருகிருந்த குளத்தில் நீர் பருகித் தன் பாத்திரத்தில் சிறிது சலமும் கொண்டு தன்னை, நீருண்ண வரும் மிருகங்கள் காணாவகை கரையிலிருந்த வில்வமரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தான். முதல் சாமத்தில் ஒரு பெண்மான் நீருண்ண வந்தது. கண்ட வேடன் அம்பினை யெடுத்து வில்லிற் பூட்டுகையில் ஒரு வில்வதளமும் கமண்டலத்து நீரும் மரத்தடியிலிருந்த சிவக்குறி மீது சிந்தி யது. இவ்வேடனது குணத்வனி கேட்ட மான், நடுங்கி வேடனிடம் வந்து தன் குட்டிகளைச் சக்களத்தியிடை விட்டு வருகிறேனென உறுதிவாக் களிக்க வேடன் நம்பி விடுத்தனன். இது நிற்க, இரண்டாஞ்சாமத்து முன் சென்ற மானினைத்தேடி அதற்கிளைய பெண்மான் வந்தது. அதனைக் கண்ட வேடன் வில்லினாணேற்றிக் குணத்தொனி செய்கையில் தன்னிடமிருந்த ஜலத்தில் சிறிதும் வில்வபத்திரமும் அடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தது. இக்குணத்தொனிகேட்ட மான் தானும் அவ்வாறு மீண்டு வருவதாய்ச் சொல்லிச் சென்றது. மூன்றாஞ்சாமத்து அவ்விருமான்களைக் காணாத ஆண்மான் அவ்விடம் வந்தது. வேடன் வில்லினைக் குணத்தொனி செய்கையில் நீருமலருஞ் சிந்தியது. அம்மானும் தன்னிரு மனைவியரிடங் கூறி வருகிறேனென்று விடைபெற்று மீண்டு மூன்றும் சத்தியந்தவறாமல் வேடனிடம் திரும்பின. இவற்றைக் கண்ட வேடன் களிப்புற்றவனாய்த் தன் வில்லை மீண்டும் குணத்தொனிசெய்ய அவன் கமண்டலத்திலுள்ள நீரிற் சிலவும் மரத்தி லிருந்த வில்வமுஞ் சிந்தின. இதனால் வேடன் அச்சிவராத்திரியில் நான்கு ஜாமங்களிலும் தூக்கமில்லாதவனாய்ச் சிவபூசை செய்தவனானான். அச்சிவ பூசாபலத்தால் ஞானமுள்ளவனாய் அம்மான்களின் சத்தியத்தினையும் தான் உயிர்வதை செய்துண்ணும் பாவத்தினையுமெண்ணி வருந்துகையில் சிவபெருமான் தரிசனந்தந்து அவனுக்குக் குகன் எனப் பெயர் அளித்து இராஜசெல்வம் அதுக்ரகித்து இராமன் வனம் வருந்துணையிருந்து அவனை உபசரித்து முத்திபெற அநுக்ரகித்து மறைந்தனர். மான்கள் சிவதரிசனத்தால் சுவர்க்கபத் மடைந்தன.

குருநமசிவாயர்

குகை நமசிவாயருக்கு மாணாக்கர். இவர் ஆசாரியரிடத்து அன்புள்ளராய் நிஷ்டையிலிருக்கையில் ஒரு நாள் நகைக்க ஆசாரியர் அப்பா ஏன் நகைத்தாயெனத் திருவாரூரில் சுவாமிசந் நதியில் நடனமாடிக் கொண்டிருந்த தாசி, கால்வழுக்கி மல்லாந்து விழ அனைவருஞ் சிரித்தனர் யானும் சிரித்தேன் என்றனர். மற்றொருநாள் கையைத் தேய்க்க ஏன் அப்படிச்செய்தனையெனச் சிதம்பரத்திற் றிரைபற்ற அத்திரையை யெல்லாரும் தேய்த்தனர். அடியேனுந் தேய்த்தேன் என்றனர். மற்றொருநாள் ஆசாரியர் வாந்தி செய்து இதை மிதியாத இடத்தில் வைக்க என, அதை உட்கொண்டனர். ஆசாரியார் மிதியா இடத்தில் வைத்தனையா என ஆமெனக் கூறியதறிந்து மாணாக்கரின் பரிபாகத்தன்மை நோக்கி வேறுபடுத்த எண்ணி மாணாக்கரை அழைத்து ஒரு தறியில் இரண்டு யானைகள் கூடா, ஆதலால் நீ, சிதம்பரம், ஞானத்தலம் அவ்விடம் செல்க என்றனர். மாணாக்கர் பிரிவஞ்ச ஆசாரியர் அஞ்சவேண்டாம் நீ அவ்விடஞ் சென்று நடராசமூர்த்தி என்னைப்போல் தரிசனங் கொடுத்தாலிரு என்ன, உடன்பட்டுச் சென்று பசி வந்தபோது “அத்திமுதலெறும் பீறான வுயிரனைத்திற்கும், சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா~மெத்தப், பசிக்கு தையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி, எரிக்குதையா காரோணரே. ” எனக்கூற, பிராட்டி அன்னமளிக்க உண்டு ஸ்ரீசிதம்பரஞ் சென்று நடராசமூர்த்தி ஆசாரிய திருக்கோலம் பிரசாதிக்கத் தரிசித்துச் சுவாமிக்கு அநேக திருப்பணிகள் நடப்பித்துப் பொற்சிலம்பு செய்வித்துத் திருவடிச் குச் சமர்ப்பித்துத் திருநடன தரிசனம் தரிசித்துச் சபாபதிக்குப் பிக்ஷையிட்டுத் தாம் சபாபதியிடம் பொற்காசு பெற்றுப் பல பிருதுகளுடனிருந்து ஈச்வாஸ் வைகாசி மாதத்தில் திருப்பெருந்துறையில் சிவலிங்கத்தடைந்தனர். இவர் செய்த நூல்கள் பரமரகசியமாலை, சிதம்பர வெண்பா, அண்ணாமலை வெண்பா முதலியன, இவர் காலம் 300 வரு.க்கு மேலிருக்கலாம்.

குருபரம்பரை

1. இது வைஷ்ணவ ஆழ்வாராதிகள், ஆசாரியர்கள் பரம்பரைகம்பர் கூறிய நூல். இது தென்கலை வடகலையவர்களால் இருவிதமாகக் கூறப்பட்டிருக்கிறது. 2. வைணவாசிரியர்களது குருபரம்ப ரைகளைக் கூறிய செய்யுட்களாலாகிய நூல். இதை முதலில் செய்யுளிலியற்றியவர் கீழையூர்ச் சடகோபராமாநுஜ முதலியாரேனும் சடகோபதாசர், இரண்டாவது குருபரம்பரை அழகிய நம்பியென்பவரால் இயற்றப்பட்டது. மூன்றாவது குருபாம்பரை புராணம், ஊறை விஜயராகவன் என்பவராலியற்றப்பட்டது. நான்காவது பரம யோகி விலாசம் இயற்றினார் பெயர் விளங்கவில்லை. ஐந்தாவது இராமாநுஜசரிதை இந்நூலியற்றியவர் பாகை சீதாராமதாசர் என்பவர். இது (1215) செய்யுட்களால் முடிந்தது.

குருபாததாசர்

புல்வயலில் எழுந்தருளியிருக்கும் குமாரசுவாமிகளின் மீது குமரேச சதகம் பாடிய புலவர்.

குருமூர்த்தம்

ஸ்ரீமன் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு உபதேசிக்க எழுந்தருளிய சிவமூர்த்தியின் ஆசாரிய திருக்கோலம்.

குருவசு

(ய) மது குமரன்.

குருவாரவிரதம்

இதில் குருவைத் தனக்குரிய சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கில் வித்யாசெல்வ முதலியன பெறுவர்.

குருவிக்காரர்

இவர்கள் குருவி பிடிக்கும் ஒருவகை மாராஷ்டக ஜாதியார். இவர்கள்ளிற் சிலர் காடுகளில் கட்டை வெட்டியும் தோட்டம் காவல் காத்தும் வலைவைத்துக் குருவிகள் பிடித்தும் நரிபிடித்தும் ஜீவ னம் செய்வர். பெண்கள் நரிப்பல், மயிலெண்ணெய், கீரைமணி, ஊசி முதலிய விற்றுச் சீவனஞ் செய்வர். (தர்ஸ்டன்.)

குருவிருந்ததுறை

இவ்வூர் மதுரைக்கு (10) நாழிகை வழி தூரத்திலிருக் கிறது. குருவித் துறையென இக்காலத்து வழங்கும். பன்றிக் குட்டிகளாக வந்தோர் பழம்பிறப்பிற் பிறந்தவூர். (திருவிளை)

குருவைநம்பி

ஒரு குயவர், இவர் தம் தொழில் தொடங்குகையில் மண்ணைப் புட்பமாகச் செய்து திருவேங்கடத்தானை அருச்சித்து வருவர். இவ்வாறு இவர் பூசித்து வரும் புட்பத்தை ஒருநாள் அருச்சகர் அரசனுக்கு யாரோ ஒரு அன்பர் பூசித்து வருகிறார், அம்மலர் எடுக்க மாளாதிருக் கின்றது என்று அறிவிக்க, அரசன் அந்த நகசியத்தையறிந்து நம்பியைக் காண வந்து வணங்க, நம்பி நம்மை இன்றைக்குப் பெருமாள் காட்டிக் கொடுத்தனர் என்று கையிலிருந்த தண்டத்தால் தம் தலையை யெறிந்து கொண்டிறந்தனர். அரசன் இது நம்மால் விளைந்ததென்று அவ்வாறு உயிர்போக்கிக் கொள்ளத் துணிகையில் பெருமாள் தரிசனந்தந்து இருவருக்கும் பரமபதமளித்தனர்.

குரூரபுரி

யமபுரியிலுள்ள பட்டணம், இதைக் குரூரனென்னும் அரசன் காப்பன். இறந்த ஆன்மா இப்பட்டணத்தில் ஐந்தாமாசிக பிண்டத்தையுண்டு செல்வன்.

குரூராசுரன்

இவன் பூனையுருக்கொண்டு விநாயகரைக் கொலைசெய்யச் சிந்தாசுரன் எவ்லால் வந்தனன், விநாயகர் இவனை வேதங்களை நாயுருவாக்கிக் கடிக்கச்செய்து மாய்த்தனர்.

குரோதகீர்த்தி

பாரதவீரரில் ஒருவன். சுபாரன் அம்சம், இவனுக்கு நந்தகன், கண்டகன், வேஷன், சித்திராதகீஷன், சுவீர்யபாகு, மகாவீர்யன், குதரன், சித்திராதன், நீலன், வீரதாமன், தந்தவக்தாரன், தூர்சயன், சநமேசயன், ஏகல்வயன் முதலிய குமார்கள் பிறந்தனர்.

குரோதன்

1. காலைக்குக் காசிபரிடம் பிறந்தவன். 2, (சந்.) நயுதன் குமரன், பாரி கரந்துவயை, 3. கந்தமூர்த்தி யாலிறந்த ஓர் அசுரன். 4. கௌசிகனைக் காண்க.

குரோதம்

ஒரு தேவதை, சமதக்கி முனிவர் பிதுர்க்களுக்கு வைத்த பாலைக் கவிழ்த்து மறைந்தது.

குரோதவசர்கள்

ஒருவித அரக்கர்கள். இவர்கள் அசுத்தமானவர்களது யாகம், பிரதிஷ்டை முதலிய புண்யபலனை அபகரிப்பவர்.

குரோதவசை

கச்யபன் தேவி, தக்ஷன் பெண். இவளிடம் சர்ப்பங்கள் பிறந்தன.

குரோஷ்டு

1, யது குமரன். விருசினவந்தன் தந்தை. 2. ஒரு வேதியன் மார்க்கண்டரிடம் தருமமறிந்தவன்.

குறமகள் இளவெயினி

இவர் ஒரு பெண் கவியாக இருக்கலாம். குறச்சாதி. எறைக்கோனைப் பாடியவர். (புற~நா.)

குறள்

திருவள்ளுவரியற்றிய வுலகமறிந்த நீதி நூலாகிய தமிழ்மறை, திருக்குறள் காண்க.

குறள் வெண்பா

இரண்டடியாய் ஒரு விகற்பத்தா லேனும் இரு விகற்பத்தா லேனும் வருவது.

குறள் வெண்பாவிற்கினம்

குறள் வெண்டாழிசை, குறள்வெண் செந்துறை என (2) வகை. குறள்வெண் செந்துறை விழுமியபொருளும் ஒழுகிய ஓசையு முடைத்தாய் எனைத்துச் சீரானும் அளவொத்த இரண்டடியான் வருவது. குறட்டாழிசை, நாற்சீரான்மிக்க பலசீரான் வருமடியி ரண்டாய் ஈற்றடிகுறைந்து வருவனவும், விழுமியபொருளும் ஒழுகிய வோசையுமின்றிக் குறள் வெண் செந்துறையின் சிதைந்து வருவனவும், வேற்றுத்தளை விரவிய குறள் வெண்பாவுமாம். (யாப்பு~இல.)

குறவர்கள்

இவர்கள் இந்துதேச முழுதும் வசிக்கும் ஒருவகைக் கள்ள சாதியார். இவர்கள் பாஷை தமிழ் தெலுங்கு கலந்நது. இவர்கள் பலவித தொழில் செய்வர். இவர்கள் சாத்துபடி குறவர், காவடிக் குறவர், மாண்பாடிக் குறவர், செருப்புக் குத்திக் குறவர், உப்புக் குறவர், கறிவேப் பிலைக் குறவர், புளிக் குறவர், டப்பி குறவர், கஞ்சு குறவர், பூசலவாடு, உட்ள வாடு, காதுகுழிக் குறவர், கூடைகட்டிக் குறவர், வள்ளியம்மைக் கூட்டம், வாலாஜாக் குறவர், உய்யாலு குறவர், சோலைக் குறவர், தோகைமலைக் குறவர், கள்ளக் குறவர், கூத்தாடிக் குறவர் முதலிய பலவகை. இவர்கள் தெய்வம், கொல்லாபுரியம்மை, பெருமலை சுவாமி, போலாரம்மை. இவர்களிலாண்கள் திருடுதல் சிறு தொழில் செய்தல், பெண்கள் குறி சொல்லல், கறிவேப்பிலை விற்றல் கிராமங்களில் கூடை முதலிய கட்டுதல் இவர்கள் சரிதம் பல. (தர்ஸ்டன்.)

குறிசொல்வான்

தென்னாட்டு அகமுடையார் கள்ளர், மறவர் வகையிற் சேர்ந்தவரிற் சிலர் பெரிய முண்டாசு தலையிற் சுற்றியும், வெள்ளிகட்டிய பிரம்பு கையிற் கொண்டும் மிதியடியிட்டும் சில பாட்டுகளைப் பாடஞ்செய்துகொண்டு பெண்களுக்கும், புருஷர்களுக்கும் நிகழ்கால எதிர் கால செய்தி கூறுவார்போல் நடித்துப் பொருள் கொள்ளும் கபடிகள்.

குறிஞ்சிக்கருப்பொருள்

தெய்வம் குமாரக் கடவுள், உயர்ந்தோர் பொருப்பன், குறத்தி, தாழ்ந்தோர், கானவர், புள், கிளி, மயில், விலங்கு, சிங்கம், புலி, ஊர், சிறு குடி, நீர்அருவி, சுனை, பூ காந்தள், வேங்கை, மரம் சந்தனம், தேக்கு, உணா மூங்கிலரிசி, தினை, பறை தொண்டகம், யாழ் குறிஞ்சியாழ், பண் குறிஞ்சி, தொழில் வெறியாடல், தினை காத்தல், கிழங்ககழ்தல் முதலிய.

குறிஞ்சிநிலம்

மலைசார்ந்த நிலம். இது சிலேஷ்மவீடு, இதில் வசிப்போர்க்குச் சிலேஷ்மம் அதிகரிக்கும். இதில் உண்டாம் ஓஷதிகள் வன்மை கொண்டிருக்கும். வயிற்றில் ஆமைக்கட்டி, சுரம், வல்லைக்கட்டி யும் உண்டாம்.

குறிஞ்சிப்பாட்டு

இது ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் பாடியது. இது மலைவளங்களையும் இல்லறத்தையும் விளக்கும். இதனைப் பெருங்குறிஞ்சி யென்பர்.

குறிதன்

(சூ.) விசயன் குமரன்.

குறிநிலையணி

அஃதாவது புகழ்பொருளை யுணர்த்துஞ் சொற்களாற் குறித்தறிதற்குத் தகுதியாகிய பொருளைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் முத்திராலங்கார மென்பர்.

குறிப்பு நவிற்சியணி

அஃதாவது ஒருபொருளைக் குறித்துச்சொல்ல வேண்டியதை மற்செருபொருளைக் குறித்துச் சொல்லுதலாம். இதனை வடநூலார் உடோக்தி யலங்காரமென்பர்.

குறிப்பு மொழிகள்

குறிப்பாகப் பொருளுணா நிற்கும் மொழிகள் அவை ஒன்றொழி பொதுச்சொல் விகாரம், தகுதி, ஆகுபெயர் அன்மொழித் தொகை, முதற்குறிப்பு, தொகைக் குறிப்பு, வினைக்குறிப்பு, பிறவுமாம்.

குறிப்புவினை

பொருளிடங் காலஞ்சினை குணந்தொழில்களி னடியாகத்தோன்றி வினை முதலை மாத்திரம் தெரிவித்து நிற்பது. (நன்.)

குறியிறையார்

இவர் கடைச்சங்க காலத்துப்பெண் கவியாக இருத்தல் கூடும். இவர் தாம் பாடிய குறுந்தொகையில் “குறியிறைப்புதல்வர்” எனக்கூறி யிருத்தலால் இவர்க்கு இப்பெயர் வந்தது போலும், (குறு~394.)

குறுங்கலி

நறுநாற்றங் கமழும் பெரிய குழலினையுடைய மடவாரை விரும்ப விகற்பித்த காதலைக் கெடச்சொல்லியது. (பு. வெ. பெருந்திணை.)

குறுங்கீரன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர்பெயர் கீரனாக இருக்கலாம். இவர் உருவத்தால் குறியராக இருந்திருக்கலாம். ஆதலினிவரை இப்பெயரிட்டு அழைத்தனர் போலும். (குறு. 82.)

குறுங்குடி மருதனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~று.) (குறு~தொ.)

குறுங்கோழியூர் கிழார்

யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையைப் பாடிய தமிழ்ப் புலவர். இவர் ஊர் குறுங்கோழி போலும், வேளாண் குடியினர். (புற நா.)

குறுந்தொகை

400 இது எட்டுத் தொகையுளிரண்டாவது, இது அகப்பொருளை விளக்கும். இதனை முடித்தான் பூரிக்கோ. இதனைப் பாடியவர் திப்புத்தோளார் முதல் அம்மூவனார் இறுதியானார். இதுற்கு உரையாசிரியர் நச்சிநார்க்கினியரும் பேராசிரியரும் என்ப. இது கடைச்சங்க மருவியது.

குறும்பர்

பல்லவ அரசர்களின் சந்ததியார் இவர்கள் கோங்கர், சோழர், சாளுக்கியரால் தங்களிடங்களிலிருந்து துறத்தப்பட்டு மலைகாடு முதலிய இடங்களில் ஒளிந்து பலவித தொழில் செய்து பிழைக்கின்றவர். சிலர் வர்த்தகம் செய்கின்றனர். குறும்பர் நாடு மலைநாட்டில் ஒரு பிரிவு. இவர்களிற் சிலர் கன்னடம் பேசுவர். (தர்ஸ்டன்.)

குறுவஞ்சி

மண்டி எதிர்ந்த வீரத்தையுடைய மன்னர்க்குத் திறையைக்கொடுத்து நாடுடைய அரசன் குடிக்குத் தண்ணளி பண் ணிக்காத்தது. (பு. வெ.) 2, விட்டிருக்கும் பாசறையினது கூறுபாட்டைச் சொல்வினும் முற்பட்ட குறுவஞ்சிக்கு உரிமையுடைத்து. (பு. வெ.)

குறுவழுதியார்

கடைச்சங்கமருவிய புலவர். (அகம்.)

குறையவை

இது கட்டளையைக் கடந்து நிறைவிலாச் சொல்லையும் பொருளையுந் தன்னகத்தடக்கிக் கூறுவது.

குற்றங்கள்

சொற்குற்றம், வாக்ய குற்றம், வாக்கியப்பொருட் குற்றம் என மூன்றாக வகுப்பர். இவற்றில் சொற்குற்றம் மாத்திரம் இங்குக் கூறுகிறேன். மற்றையவை இவ்விடம் எழுதின் விரியுமாதலின் பெயர் மாத்திரமே கூறுவன், சொற்குற்றங்கள் (16) அவை 1, அசாது, 2. அப்ரயுக்தம், க3. கஷ்டம், 4. அநர்த்தகம், 5. அந்தியார்த்தம், 6. அபுட்டார்த்தம், 7. அசமர்த்தம், 8. அப்பிரதீதம், 9. கிலிட்டம், 10, கூடார்த்தம், 11. நேயார்த்தம், 12. சந்திக்தம், 13, விருத்தம், 14. அப்பிர யோசகம், 15, தேசியம், 16. கிராமியம் என்பன. இவற்றுள் 1. அசாது; இலக்கண நூல்களுக்கு விரோதமாக வருஞ் சொற்பிரயோகம் யாதோ அது, 2. அப்பிரயுகீதம்; கற்றோரால் முன்னம் ஓரிடத்தும் பிரயோகிக்கப்படாத சொற்பிரயோகம், 3. கஷ்டம்: கேட்போர் காதுகளுக்கு இனிமைதராத சொற் பிரயோகம், 4. அநர்த்தகம்: அடிகளை நிறப்புதற் பொருட்டு வருந்திச் சேர்க்கப்படும் சொற்பிரயோகம், 5. அந்நியார்த்தம்: கருதிய பொருளைத் தரும் ஆற்றல் கெட்டதுவாகி வேறும் பொருள் பயப்பது, 6. அபுட்டாரீத்தம்: ஒரு சிறிய சொல்லால் சொல்லத்தக்க பொருளை விளக்குதற்குச் சொல்லப்படும் வெகுசொற் பிரயோகம்,7., அசமர்த்தம்: கருதிய பொருளை விளக்கு தற்குரிய பொருத்தமில்லாத சொற்பிரயோகம், 8. அப்பிரதீதம்: அந்நியசாத்திரம் கொண்டன்றி வேறெவ்வழியாலும் அறியப்படாத சொற்பிரயோகம், 9. கிலிட்டம்: பல சொற்களின் பொருள் கண்டு ஒழிந்தபின் கருதிய பொருள் பயக்கும் சொற்பிரயோகம், 10. கூடார்த்தம்: கருதிய பொருட்குப் பிரசித்தமான வழக்கமில்லாத சொற்பிரயோகம், 11. நேயாரத்தம்: வேறொன்றிலுங் காணப்படாத தாய்ப்பாடு வோனாற்றானே கற்பிக்கப் தபட்ட பொருளுடைய சொற்பிரயோகம். 12, சந்திக்தம்: இதுவோ அதுவோ, எனும் ஐயத்திற்கிடனான பொருளுடைய சொற்பிரயோகம், 13, விபரீதம்: கருதிய பொருட்கு மறு தலைப் பொருளும் பயக்கும் சொற்பிரயோகம், 14 அப்பிர மோசகம்: கருதிய பொருட்குப் பயன் படாத அடைசொற் பிரயோகம் உடையது, 15. தேசியம்: வேற்று நாட்டுச் சொற்பிரயோகம். (திசைச்சொல்.) 16. கிராமியம்: கேட்போர்க்கு அருவருப்தபினை யுண்டாக்கும் அசப்பியம், அமங்கலம், நிந்தை, முதலிய பொருளமைந்த சொற்பிரயோகம். வாக்யகுற்றங்கள் 16 அவை 1. சப்தஹீனம் (அபசபதம்) 2, கிரமபிரஷ்டம், 3. விசந்தி (சந்திவழு). 4. புனருத்தி (கூறியது கூறல்), 5. வியாகீர்ணம், 6. சங்கீர்ணம், 7. அபதம், 8. கர்ப்பிதம், 9. பின்னலிங்கம் (பால்வழு, 10. பின்னவசனம் (எண்வழு), 11. நியூனோபமை, 12. அதிகோபமை, 13; பக்னச்சந்தம் (சந்தவழு), 14, பக்னயதி (யதிவழு), 15. அசரீரம், 16. அரீதிமத்து (இரீதி யில்லாதது). வாக்கியப் பொருட்குற்றம் 16. 1. அபார்த்தம், 2. வியர்த்தம், 3. ஏகார்த்தம், 4. சமுசயம், 5. அபக்கிரமம், 6. கின்ன்ம், 7. அதிமாதரம், 8. பருஷம், 9. விரசம், 10. ஈனோபமம், 11. அதிகோபமம், 12. அசதிருஷோபமம், 13. அப்பிரசித்தோப்மம், 14. நிரலங்காரம், 15. அச்சிலீலம், 16. விருத்தம் முதலிய.

குற்றம்

(3) காமம், வெகுளி, மயக்கம். (5) கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன், கிடை, நட்டுவிழல். (8) ஞானாவரணியம், தரிசனாவாணியம், வேதநீயம், மோகநீயம், ஆயு, நாமம், கோத்திரம், அந் தராயம். (5). அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, வெகுளி.

குற்றிசை

அழகிய மாலை மார்பைப் பொருந்திய அரிவையர்க்கு அற்றறுதிப்பட்டு நடவாது அறத்தைக்கண் மறுத்தது. (பு. வெ. பெருந்திணை.)

குற்றியலுகரம்

உகரம் தொடர்மொழியிறுதியில் ஓசை குறைவது. குற்றிய லிகரமு மிவ்விலக்கணத்தது; மற்ற குறுக்கங்களு மிவ்வாறே. (நன்).

குற்றுழிஞை

1. சொல்லுதற்கரிய பரிசையனையுடைய சேனைத்தலைவர் ஆடுதலுடனே நொச்சியாருடைய அரணினைக் குறுகினும் முன்பு சொன்ன துறையேயாம். (பு. வெ.) 2. பகைவரானாகிய அழிவில்லாததன் மேல் தான் ஒருவனுமேயாகி மாறுபாட்டினைப் பெருக்கியது. சங்க முழங்கக் கொம்பு குறிப்பக் காவற், காட்டைக் கடந்து புகுமதுவும், முன்னஞ் சொன்ன துறையேயாம். (பு. வெ.)

குற்றெழுத்துக்கள்

உயிரெழுத்துக்களில் மாத்திரை குறைந்த ஓசையுடைய அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்துமாம். (நன்.)

குலசேகர ஆழ்வார்

கௌஸ்துவாம்சரான இவர் கலி இருபத்தெட்டாவதான பராபவ மாசிமீ சுக்கில துவாதசி வெள்ளிக்கிழமை புனர்வசு நக்ஷத்திரங் கூடிய சுபதினத்தில் திருவஞ்சைக் களம் என்னும் கொல்லிநகரத்தில் திடவிரதனென்கிற அரசருக்குப் புத்திரராயவதரித்து ஓதியுணர்ந்து ஸ்ரீமத் இராமாயண கால க்ஷேபங் கேட்டு வருகையில் இருடிகள் பெருமாளைச் சரணாகதி செய்யுந் தருணத்தில் பெருமாள் உயிரைத் துறக்கினும் செய்த பிரதிக்கினை துறவேனென்பதைக் கேட்டு, இராக்கதர் 14000 பெயர்கள், பெருமாள் ஒருவர், நான் துணை செல்வேனெனப் படையுடனெழுவன் என்று எழுதல்கண்ட ஸ்ரீவைணவர், சத்துருவை வென்று முனிவர்க்குச் சுகத்தைத் தந்த தன் நாயகனைப் பிராட்டி ஆலிங்கனஞ் செய்தாள் என்றதைப் பிரசங்கிக்க ஆழ்வார் திரும்பினர். இவைகளைக் கண்டிருந்த மந்திரியர் இந்த ஸ்ரீவைணவரால் அரசனுக்குச் சித்தப்பிரமை யுண்டாயிற்றென அவர்களை விலக்க எண்ணித் திருவாராதனப் பெருமாளுடைய திருவாபரணத்தை மறைத்து ஸ்ரீ வைணவரைச் சுட்ட அரசன் ஸ்ரீவைணவர் எடுக்கவில்லை யெனப் பாம்பின் குடத்தில் கைவைக்கப் பாம்பு கையை முத்தமிட்டதைக்கண்டு அமைச்சர் திருவாபரணன் கொடுத்துப் பொறுத்துக்கொள்ள வேண்டினர். பின்பு ஆழ்வார் தம்குமரருக்குப் பட்டந்தரித்து ஸ்ரீரங்கம், ஸ்ரீகாஞ்சி, திரு மலை முதலிய திவ்யதேசயாத்திரை செய்து, முகுந்தமாலை, பெருமாள் திருமொழி முதலிய பிரபந்தங்க ளருளிச்செய்து மன்னனார் கோவிலில் பெருமாளைத் தரிசித்து நிற்கையில் பெருமாள் நியமனப்படி திரு நாட்டுக் கெழுந்தருளினர். இவர் (25) திருநக்ஷத்திரம் எழுந்தருளி யிருந்தனர். (குருபரம்பரை.)

குலசேகரன்

1. மேலைச்சிதம்பரம் தரிசித்துக் குட்டநோய் தீர்ந்த ஒருவன். 2. இலிங்கபுராணமியற்றிய பாண்டியர்.

குலசேகரபாண்டியன்

1. மதுரையை ஆண்ட பாண்டியரில் ஒருவன், அம்பிகை மாலை செய்தவன். 2. இவன் மற்றொரு பாண்டியன். இவன் வேட்டைக்குச் செல்ல யானையொன்று புதரை வலமாகச் சென்றது கண்டு அதை வெட்ட அவ்விடம் சிவலிங்கமூர்த்தி வெண்மையான திருமேனியுடன் எழுந்தருளியிருக்கத் தரிசித்துத் திருப்பணி செய்தவன். இவரே பால் வண்ணநாதர். 3. மணவூராண்ட பாண்டியன். இவன் அரசாட்சியில் தனஞ்சயன் எனும் வணிகன், வர்த்தகஞ்செய்து திரும்புகையில் கடயபவனத்தில் பொழுது போயிற்று. அப்போது அவ்வரத்தில் எழுந்தருளியிருந்த சிவலிங்கமூர்த்தியைத் தேவர் பூசிக்கக் கண்டு தான் அந்த இராமுழுதும் ஒளிந்து தரிசித்து விடிந்தபின் தேவரைக் காணாது சிவமூர்த்தியைக் கண்டு தரிசித்து இந்த அற்புதத்தை அரசனிடங் கூறினன். அரசன், இடமறிந்து சிவமூர்த்தியைத் தரிசித்துக் காடு நீக்கி நாடாக்குவிக்க எண்ணுகையில் சிவமூர்த்தி சித்தராய் எழுந்தருளி, இன்னபடி திருப்பணி முடிக்க எனக் கட்டளையிட்டு மறைந்தனர். அரசன் அக் கட்டளைப்படி நகரம் நிருமித்தனன். இவனாண்டது மணவூர், (திருவிளை.) 4. வங்கிய குலசேகர பாண்டியன் குமரன், இவன் திருநெல்வேலி யாண்டவன். இவன் குமரன் குலேசபாண்டியன்

குலசேகரபாண்டியன் வடிவம்

பொற்றாமரையில் பாண்டியன் படித்துறையின் மேல்பாற் றூணிலுள்ள வடிவம்,

குலசேகரர்

சாத்தாத வகுப்பின் வகை.

குலசேகரவரதுங்கராமபாண்டியன்

வாயு சம்மிதையைத் தமிழிற்செய்த ஒரு பாண்டியன்.

குலச்சிறை நாயனார்

பாண்டிநாட்டில் மணமேற்குடியில் திருவவதரித்துச் சிவபக்தி, சிவனடியவர் பக்தியுடையாய் நெடுமாறன் எனும் பாண்டியற்கு முதன் மந்திரித்தொழில் மேற்கொண்டிருந்து மங் கையர்க்கரசியார் செய்த சிவத்தொண் டிற்குத் துணையானவர். திருஞான சம் பந்தமூர்த்தி சுவாமிகளை மதுரைக் கெழுந்தருளச் செய்வித்தவர். வஞ்சம் புரிந்து வாதிட்ட சமணரைக் கழுவிலேற்றியவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து பாடப்பெற்றவர். (பெ. புராணம்)

குலச்சூடாமணிபாண்டியன்

சோமசூடாமணி பாண்டியனுக்குக் குமரன்.

குலத்துவச பாண்டியன்

பாண்டீச்சுர பாண்டியனுக்குக் குமரன்.

குலபதி

இமயமலைச்சாரலில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷி,

குலபதி நாயனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (திருவள்ளுவமாலை).

குலபூஷண பாண்டியன்

அநந்தகுண பாண்டியனது குமரன். இவன் காலத்து நடந்த திருவிளையாடலைச் சவுந்தர சாமந்தனைக் காண்க, பின்னும் இவன் சிவபிரானிடம் அன்பாய்ப் பிராமணரை வெறுக்க, நாட்டில் வேதவொழுக்கம் குறைந்தது. அதனால் வேள்வி குறைந்தது, வேள்வி குறைய மழை குறைந்தது, அதனால் நாடு வறுமையடைந்தது. பாண்டியன் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி சித்தராய்க் கனவில் தரிசனந் தந்து நீ வேதியரை வெறுத்தாய் அதனால் வேள்வி குறைந்தது மழையும் நீங்கிற்று. அவ்வகை செய்யாமல் வேதியரைக் களிப்பித்து வேள்வி செய்விக்க என்று உலவாக்கிழி அருளி இதில் நீ எடுக்குந்தோறும் பொருள் குறைவுபடாது என்று திருவாய்மலர்ந்து மறைந்தனர். அரசன் விழித்து எதிரில் பொற்கிழி கண்டு பூசித்து வேதியரை மகிழ்விக்க மழைபெய்து நாடு செழித்தது. இவன் காலத்தில் சொக்கர் வளையல் விற்று, அட்டமாசித்தி உபதேசித்து, சோழன் பொருட்டு விடையிலச்சி னையிட்டனர். இந்தப் பாண்டியன் குமரன் இராஜேந்திரபாண்டியன்.

குலமாதர் செய்யத்தகாதன

குலமாதர் பிற புருஷரின் தேகத்தழகை வியந்து நோக்கலும், தம்முடையழகை கண்ணாடியில் வியந்து நோக்கலும், தலைமயிரைக் கோதுதலும், கைந்நொடித்தலும் கூடா.

குலமாரி

குடும்பத்தில் அமங்கலியா யிறந்தவர்களை வெள்ளைச் சீலையும் தின்பண்டங்களும் வைத்துப் பூசிக்கப் பூசையேற்கும் கிருகதேவதை.

குலவர்த்தன சோழன்

தந்துவர்த்தன சோழன் குமரன்.

குலாலன்

இவன் அம்புசமுனியை முதலாகக் கொண்ட சந்ததியான்.

குலிங்கன்

துர்யோதனன் மந்திரி, கணிகன் என்று வேறு பெயர் கொண்டவன்.

குலிசன்

1. அதிகாயன் யுத்தத்தில் இலக்ஷ்மணரால் கொலை செய்யப்பட்ட அரக்கன், 2. கேகய நாட்டரசன். ஒருநாள் இவனிடத்துத் துருவாசமுனிவர் விரத்தினத்துப் பாரணை செய்ய வருவதாகக் கூறினர். அரசன் வேண்டிய உணவாதிகளுடன் இறைச்சியும் சமைத்து அருத்தினன். முனிவர் உண்டபின் விரததினத்து ஊனருத்தினமையால் நீ புலியுருக்கொண்டு காட்டில் ஊனுண்டு அலைந்து நந்தினியெனும் தெய்வப்பசுவின் இனத்தால் சாபம் நீங்குக என்று போயினர். புலி யுருக்கொண்ட அரசன் காட்டில் உலாவுகையில் ஒருநாள் நந்தினி எனும் பசுவினைக்கண்டு பற்றப்போகையில் அப்பசு நான் என் இளங்கன்றினுக்குப் பால் ஊட்டிச் சிவபூசை முடித்து வருவேன் என விடைபெற்றுச் சென்று அவ்வகை முடித்து வரக்கண்ட புலிக்கு நல்லறிவு தோன்றிப் பசுவினுக்குத் தன் சாபவரலாறு கூறப் பசு சிவபூசை செய்ய ஏவ அவ்வகை செய்து நல்லுருப் பெற்றவன்.

குலேசபாண்டியன்

1. பூப சூடாமணி பாண்டியனுக்குக் குமரன். இவன் கற்று வல்லவனாய்ச் சங்கம் வளர்ப்பதறிந்து இடைக்காடர் இவனைக்கண்டு கவி கூறினர். பாண்டியன் தமிழறிந்தும் பொறா மையால் மகிழாது உபசரிக்காததால் இடைக்காடர் சொக்கரிடம் தன்னைப் பாண்டியன அவமதித்ததை முறையிட்டனர். சொக்கர் அன்றிரவு சங்கப்புலவருடன் மதுரையைவிட்டு வைகைக்குத் தென்புறத்திற் கோயில் கொண்டனர். விடிந்து கோயில் பள்ளி யுணர்த்துவோர் திருக்கோயில் திறக்கச் சிவலிங்கமூர்த்தியும் சங்கப் புலவரும் திருக்கோயிலில் இல்லாமைகண்டு அரசனுக்கறிவித்தனர். அரசன் நடுங்கிக் கோயிலுக்குவந்து பார்க்கையில் சிலர் வைகைக்குத் தெற்கில் சிவமூர்த்தியும் சங்கப்புலவரும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் புதிதாக இருக்கின்ற தெனக் கூறக்கேட்டு அவ்விடம் பாதசாரியாய்ச் சென்று தரிசித்துத் துதித்து அடியேன் என்ன குறை செய்தேனென்று வினவினன். கடவுள் ஆகாயவாக்காக அரசனே நீ இடைக்காடனுக்கு இழைத்த குற்றம் நம்மைச் செய்தது போலாயிற்று. ஆதலால் இவ்விடம் வர நேர்ந்ததென அரசன் இடைக்காடரைச் சிங்காதனத்தில் உட்காருவித்து வெண்பட்டு முதலிய உதவிப் பணிவுடன் வேண்டிய உபகரித்து அனுப்பச் சுவாமியும் சங்கப் புலவரும் தமிழ் நாட்டு மதுரைக்கு எழுந்தருளினர். இந்தப் பாண்டியன் குமரன் அரிமருத்தன பாண்டியன். 2. குலசேகர பாண்டியனுக்குக் குமரன். இவன் அரசு செய்கையில் அதிவீர னென்னும் வேடன் சேனைசேர்த்து இவனுடன் யுத்தத்திற்கு வரப் பாண்டியன் சிவமூர்த்தியிடம் முறையிட்டனன். சிவ மூர்த்தி சிவபடர்களை யேவிப் பாண்டியனுக்கு வெற்றி தந்தருளினர்.

குலோத்துங்கசோழமகாராசா

இவரே திருநீற்றுச் சோழமகாராசா என்பர். இவர் சிதம்பரத்தில் அநேக திருப்பணிகள் நடத்தினர். இப்பெயர்கொண்ட மற்றொரு சோழன் கம்பர் ஒட்டக்கூத்தர் புகழேந்தி யார் காலத்திருந்து அவர்களை ஆதரித்தனன் என்பர்.

குலோத்துங்கன்

1. இவன் இராஜேந்திர சோழப் பெயரான். இவன் தாய் முறையில் சோழன். தந்தை வழியில் சாளுக்யன். இவன் சோழச் சக்ரவர்த்தியாகிய இராஜராஜனுக்குப் பேரன் இராஜேந்திர சோழ னுடைய மாப்பிள்ளை. இவனுக்கு அநபாயன், அபயன், கரிகாலன், ஜயதரன் எனும் பெயர்களும் உண்டு. பெரிய புராணத்தில் “ஆயசீரனபாயன்” என்றதும் செந்நியபயன் குலோத்துங்க சோழன் றில்லைத் திருவெல்லை, பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறென்றும் புவிகாக்கும், மன்னர் பெருமான் அநபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டும், தன்மை நிலவு பதியைந்தினொன்றாய் விளங்குந்தகைத் தவ்வூர்” எனத் தண்டியலங்காரத்தும் புகழ்ந்தது. இவனே கலிங்கத்துப் பரணியில் அபயனென முழுதும், சிற்சில இடங்களில் கரிகாலன் எனவும், ஜயதர னெனவும் கூறப்படுகிறான். இவன் மாமன் மகள் மதுராந்தகி அல்லது தீனசிந்தாமணி இவளுடன், ஏழிசை வல்லவி, தியாகவல்லவியென வேறு மனைவியரும் இருந்தனர். இவனுக்கு மக்கள் எழுவர் இவனுக்கு அம்மங்கையெனும் ஒரு பெண்ணும், குந்தவ்வை (3) ஒரு சகோதரியுமிருந்தனர். இவன் வெங்கி நாட்டைத் தன் சிற்றப்பன் விஜ யாதித்தனிடமிருந்து பிடுங்கித் தன் இரண்டாங் குமரன் இராஜராஜனைப் பிரதிநிதியாக்கினான். சில நாளில் அந்நாட்டிற்கு வீரசோழன் அரசனானான். இவன் பின் சக்கரகோட்டத்தில் தாராதேசத்தரசனை வென்றும், குந்தள அரசனாகிய விக்ரமாதித்தனை வென்று ஜயசிங்கனிட மிருந்து வனவாசியைப் பிடித்தான். இரண்டாமுறை விக்ரமாதித்தனைத் துரத்திக் கல்யாணபுரம் கைக்கொண்டு பின் பாண்டி நாட்டைத் தாக்கித் தன் வசப்படுத்தினான். மலையாளத்துக் குடமலை நாட்டை வென்றான்; யுத்தங்கள் தணிந்திருக்கையில் கலிங்கத் தரசனாகிய சேரடகங்கன் கப்பங்கட்ட வில்லையெனத் தன் சேநாபதி கருணாகரத் தொண்டமானை அனுப்பி வென்று கலிங்கத்தைத் தன்னாட்டுடன் சேர்த்துக் கொண்டான். இவன் தன் (14) வது ஆண்டில் திரிபுவன சக்ரவர்த்தியெனப் பட்டம் பெற்றான். இவன் சுங்கந் தவிர்த்ததால் சுங்கந்தவிர்த்த சோழன் என்பர். பல சிவ விஷ்ணு ஆலயங்களையும் ஜயினகோட்டங்களையும் புதுப்பித்தான். சிதம்பரம் பொன் மேய்ந்தான் இதனாலிவனுக்குப் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என ஒருபெயர். இவன் கல்விமான்களிடத்தில் அன்பு வாய்ந்தவன். சேக்கிழார் பெரிய புராணம் பாடியது இவன் காலம், இராமாநுஜர் காலமும் இதுவே. இவனுக்குப் பயந்தே இராமாநுசர் போசளராச்சியத்தில் தொண்டனூரில் ஒளித்தார். இவன் நாகப்பட்டினம்ஜைன இராஜ ராஜப்பெரும் பள்ளிக்கு மான்யம் விட்டான் இவனுக்குத் திருநீற்றுச் சோழன் என ஒருபெயர் இவன் பெயரால் திருநீற்றுச் சோழநல்லூர் என ஓர் ஊர் தென்னாட்டிலுள்ளது. இவன் 49 வருஷம் ஆண்டான். (1070~1118) ஆகிறது, இவனுக்குப் பின் விக்ரம சோழன் பட்டமடைந்தான். குலோத்துங்கன் (3) இராஜாதி ராஜனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு வீரராஜேந்திரன், திரிபுவன வீரதேவன் எனவும் பெயர் உண்டு. இவன் வீரபாண்டியனுடன் போர்புரிந்து துணைவந்த சிங்களவரை வென்று விக்ரம பாண்டியனுக்குத் துணையாகிப் பாண்டி நாட்டை விக்ரம பாண்டியனுக்குக் கொடுத்தான். 2. இவனுக்குச் சென்னியெனவும், அநபாயன் எனவும், செந்தி அநபாயன் குலோத்துங்க னெனவும் பெயருண்டு, இவன் விக்ரமசோழன் குமரன். இவன் குமரன் இராசராசசோழன். இவன் காலத்தவரே ஒட்டக்கூத்தர். இவனைக் கம்பர் பல இடங்களிலும் புகழ்ந்துள்ளார். ஏரெழுபதில் “முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய, கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான், இடியுடைய வொலிகெழு நீரெழுபத் தொன்பது நாட்டுக், குடியுடையான் சென்னி பிற ரென்னுடையார் கூறீரே,” இராமாயணம் “புவி புகழ் செந்நி போரமவன் றோள் புகழ், கவிகடம் மனையெனக் கனக ராசியும், சவியுடைத் தூசு மென்சாந்து மாலையும் விரிழைக்குப்பையு மளவிலாதது” மருத்து மலைப்படலத்து “வன்னிநாட்டிய பொன்மௌலிவானவன் மலரின் மேலான், கன்னிநாட்டிருவைச் சேர்ந்த கண்ணனு மாளுங்காணிச் சென்னி நாட்டெரியல் வீன்றியாகமா விநோதன்றெய்வப் பொன்னி நாட்டுவமைவைப் பைப்புலன் கொளநோக்கிப் போனான்” எனக்கூறியவாற்றா சென்னி யென்பது இவனுக்குப் பெயர். இவனை ஒட்டக்கூத்தரும் “ஆழிப்பெரு மாள பயன நபாயன், சூழிக்கடா யானைத் தோன்றுதலும், எனவும் பெருமான நபாயன் பேரிய மூன்றுந், தருமாரவாரந்தழங்க” எனக்கூறிய வாற்றால் அநபாயன் என ஒரு பெயரிவனுக்குண்டு, 3. இவன் கவிகூறுதலினும் வன்மை யுள்ளவன். ஒட்டக்கூத்தரிடம் கல்வி பயின்றவன். இவன் சிவபக்திமான், தில்லைப் பேரம்பலம் பொன்னாற் குயிற்றினவன், திருக்காமக் கோட்டம் திருப்பணி முற் றும் புரிந்தவன். “தில்லைத் திருமன்றின் முன்றிற் சிறு தெய்வத், தொல்லைக் குறும்பு தொகுத் தெடுத்து” என்பதால், இவன் தில்லை நகர்க்கண் திருமன்றின் முன்றிவில் சிறு தெய்வமாகிய பெரும்பகையை அடியோடு பெயர்த்தெடுத்துக் கடலில் மூழ்குவித்தான் எனத் தெரிகிறது. இதனைத் தக்கயாகப் பரணியிலும் முன்றிற் கிடந்த கருங்கடல் போய் முன்னைக்கடல் புகப்பின்னைத் தில்லை, மன்றுக்கிடங்கண்ட கொண்டல் பெற்ற மரகதமேருவை வாழ்த்தினவே” என்பதால் இவன் தில்லையி லிருந்த பள்ளிகொண்ட கோவிந்தராஜப் பெருமாளை மீண்டும் கருங்கடலில் பள்ளி கொள்ள அனுப்பினவன் எனத்தெரிதலால் இவன் அப்பெருமாள் கோயிலைக் கடற்கரையிற் சேர்ப்பித்தவன்.

குலோத்துங்கன்

இவன் கரவடகிராமத்தில் இருந்தவன். தேவி கோமளை. இவனிடம் சிவமூர்த்தி நடுராத்திரியில் விருத்தராய்ச் சென்று அன்னம் வேண்ட அந்தத் தம்பதிகள் களித்து அன்னமிட்டனர். அதனால் சிவமூர்த்தி குபேரனிடத்து அரசாட்சிப்பட்டமும் முடியும் தரிக்கும்படி கட் டளையிட்டனர். அப்படியே குபேரன் குலோத்துங்க பட்டந்தரித்து இருக்கையில் தனது அரண்மனையில் பெருஞ் செல்வங்கண்டு தன் வசப்பட்டிருந்த காட்டைச் சேனை கூட்டி நாடாக்கினன். அக்காலத்தி லவ்விடமிருந்த தஞ்சாசூரனுடன் போரிட்டு வென்று தஞ்சையை அரசாட்சியாக்கித் தன் மகன் தேவசோழனுக்குப் பட் டங்கட்டிச் சிவபதமடைந்தனன். இவன் பலசிவாலய விஷ்ணு ஆலயத்திருப் பணிகள் செய்வித்தனன்.

குலோத்துங்கபாண்டியன்

இராசசேகர பாண்டியனுக்குக் குமரன், இவன் தேவி மாணிக்கமாலை, இவனரசில் ஒரு வேதியன் மனைவியுடன் மாமனார் வீட்டிலிருந்து மதுரைக்கு அருகில் வருகையில் தாகத்தால் மனைவிவருந்தித் தாகத்திற்கு நீர் கேட்டனள், வேதியன் மனைவியை ஒரு ஆலடியிற் படுக்கவைத்து நீர்தேடிச் சென்றனன். தெய்வச்செயலாய் எக்காலத்திலோ மரத்தில்தைத்திருந்த அம்பு காற்றினால் அசைந்து படுத்திருந்த பார்ப்பினி மார்பில் உருவி உயிரைப்போக்கிற்று, பிராமணன் நீர் கொண்டுவந்து படுத்திருந்த தேவிமார்பில் அம்புருவி இறக்திருக்கக் கண்டு அழுது யாவர் கொன்றார் என நாற்புறமும் தேடிப்பார்த்தனன். ஒரு வேடன், அந்த ஆலமரத்திற்கருகில் பக்ஷி கூட்டங்களைத் தேடிக் கொண்டு வந்து வில்லுங்கையுமாக நிழலுக்கொதுங்கினன். வேதியன் வேடனை வில்லுங் கையுமாகக் கண்டு என் மனைவியை நீயே கொன்றனை அரசனாணை நீ போகக்கூடாதென வேடன் அஞ்சி வேதியனுடன் வந்தனன். வேதிய னிறந்த மனைவியுடன் அரசனிடம் வந்து முறையிடப் பாண்டியன் நடுங்கிப் பிரேத சமஸ்காரஞ் செய்வித்து வேதியனுக்கு விடை தந்து வேடனை நன்மையாகவும் பய முறுத்தியும் கேட்டுக் கொலைக்குறி அவனிடஞ் சிறிது மில்லாமையால் ஒன்றும் தோன்றாமல் சோமசுந்தரக் கடவுளிடம் உண்மையறிவிக்க வேண்டினான். சிவமூர்த்தி அசரீரியாய் வாணியத்தெருவில் நடக்கும் கலியாணத்தில் வேதியனுடன் சென்று அறிக என்றனர். அரசன் கேட்டுப் பிராமணனுடன் மாறுவேடங்கொண்டு இருவரும், கலியாணவீட்டின் ஒரு புறத்திருந்தனர். அன்றைக்கு அந்த மணமகனுக்கு ஆயுள் முடிவு ஆதலால் அங்குவந்த யமபடர், பேசும் வார்த்தைகள் சிவாநுக்கிகத்தால் இவர்களுக்குக் கேட்டன. அதாவது கால தூதன், உடம்பில் வியாதியில் லாத இவனை நாம் எப்படிக் கொல்வதென்று மற்றவனைக் கேட்க வேறொருவன், அன்று ஆலிலையில் என்றைக்கோ தைத்திருந்த அம்பைப் பார்ப்பினியின் மார்பில் உருவச் செய்து உயிர் நீக்கியது போல், இந்த வாத்தியவோசையால் புறத்திற் கட்டியிருக்கும் பசுவினை மருட்டிப்பாயச் செய்து நீக்குவோம் என்றனன். பாண்டியனும் வேதியனும் இதனுண்மை காண்போமெனச் சற்றுப் பொறுக்க அவ்வகையே நடந்தது. பாண்டியனும் வேதியனும் முன்னிலும் அதிக விசனமடைந்து நீங்கினர். பாண்டியன் வேதியனுக்கு மறுமணஞ் செய்வித்து வேடனுக்கு வேண்டிய பொருள் அளித்தனன். இவனுக்கு (40000) குமரர். இவர்களுள் மூத்தவன் அநந்த குணபாண்டியன். இவன்காலத்தில் அங்கம் வெட்டின திருவிளையாடல் நடந்தது. சித்தனைக் காண்க.

குல்லியன்

பவுஷ்பஞ்சி மாணாக்கன்.

குல்லூகபட்டர்

மனுஸ்மிருதிக்கு வியாக்யானஞ்செய்த ஸமஸ்கிருத கவி.

குளகச்செய்யுள்

இது பல பாட்டாய் ஒரு வினைகொண்டு முடிவது.

குளக்கோட்டன்

வரராமனைக் காண்க.

குளத்துடைய மகருஷிகோத்ரன்

தமிழ் நாட்டு மூன்று வேந்தரும் முடியில் சூட இந்திரன், சந்திரன், சூரியன் மூவரிடத் தும் பவளம், முத்து, மாணிக்கம் பெற்று அரசர்க்குக் கொடுத்துக் கீர்த்தி பெற்றவன். இவன் வைசியன்.

குளத்துழான்

சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒரு வேளாண் வகுப்பிற் சேர்ந்தவன்.

குளப்பாக்கிழான்

சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒருகுடி. வேளாண் வகுப்பு.

குளம்பனார்

குளம்பு என்னு மூரினராதலிற் குளம்பனாரெனப்பட்டார். இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். இவர்பாடியது. நற் (288)ம் பாட்டு.

குளம்பாதாயனார்

ஒரு தமிழ்ப் புலவர். (புற~நா.)

குளவி

இது முதுகெலும்பில்லாப் பிராணி வகையைச் சேர்ந்தது. பறக்கு மினம். இதற்குப் பற்களும் துதிக்கையுமுண்டு. இது துதிக்கையால் ஆகா ரத்தை உறிஞ்சியுண்ணும் புழுக்களைப் பிடித்தும் தின்னும். இது, முதலில் புழு வுருவாயிருந்து பின் இறகு பெற்றுப் பறப்பது. கொட்டுந்தன்மையது. இவ்வினத்தில் பலவகையுண்டு.

குளிகன்

1. ஒரு நாகன், பாதாளவாசி. அஷ்டமாநாகங்களி லொன்று 2. சநியின் குமரன்.

குளிகன்

விஷ்ணுமாகாத்மியங் கேட்டு நற்பதமடைந்தவன். (பிரகன் னாரதீய புரா.)

குளிகாதிதோஷம்

பகலளவை (8) சாமமாக்கி, அற்றை வாரமுதலாக சனிக்கிழமை வரையாக எண்ணிக் கண்டசாமங்களில் சனிக்கிழமை கண்ட சாமம் குளிகனாம். அற்றைவாரமுதல் எண்ணிக் கண்ட சாமங்களிலே வியாழக்கிழமை கிடந்த சாமம் எமகண்டம். இந்தத் தோஷங்களில் வாராதிபன் வலிபெற்று நிற்பினும் தன்னுடைய ஆட்சிராசி யுதிப்பினும் உதயலக்னத்தில் நிற்பினும் தோஷமில்லை.

குளிந்தன்

ஒரு அரசன்.

குளிந்தம்

1. சரஸ்வதி தீரத்திலுள்ள தேசம். The District of Shaharunpur. North of Delhi. 2. சரஸ்வதி தீரத்திலுள்ள ஒரு தேசம்.

குள்ளநரி

இது நாயினினத்தைச் சேர்ந்த பிராணி. இது நரியைப்போல உருவம் பெற்றுக் குறுகியிருத்தலால் இப்பெயரடைந்தது. இதற்கு இரவில் கண் நன்றாகத் தெரியும். இது பகலில் மரப்பொந்து குழிகளில் பதுங்கியிருந்து இரவிலிரை தேடப் புறப்படும். எதையும் தின்னும். இரை அகப்படா விட்டால் பழங்களைத் தின்னும், கிராமங்களில் கோழி வாத்து முதலியவைகளைத் திருடும். தனக்கு விரோதியாகிய நாய் முதலிய பின்றொடரின் தன் வாற்புறத்துள்ள வொருவகைத் தைலத்தை விசிறியோட்டித் தான் விரைவில் பதுங்கிவிடும்.

குழதவல்லி

திருமங்கையாழ்வாருக்கு மனைவி. இவள் ஆம்பலோடையிற் பிறந்து ஸ்ரீவைஷ்ணவ வைசியனால் வளர்க்கப்பட்டுச் சக்கிராங்கி தமில்லாத திருமங் கைமன்னனைச் சக்கிராங்கி தராக்குவித்துத் திருமணஞ் செய்து கொண்டவள்.

குழந்தை முதலியார்

இவர் திருக்குற்றால வாசி தமிழ்க்கவி; வீரராகவர் பிள்ளைத் தமிழியற்றியவர்.

குழற்றத்தன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் தத்தன் என இருக்கலாம். குழல் என்பது அடைமொழி. (குறு 242.)

குழல்

இது மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி முதலியவற்றால் செய்யப்படும். இவற்றுள மூங்கிலில் செய்வது உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம். மூங்கில் பொழுது செய்யும், வெண்கலம் வலிது, மரம் எப்பொழுதும் ஒத்துநிற்கும். இவற்றால் குழல் செய்யுமிடத்து உயர்ந்த, ஒத்த நிலத்துப்பெருக வளர்ந்து நான்கு காற்று மயன்கின் நாதமில்லை. ஆதலால் மயங்கா நிலத்தின்கண் இளமையும் நெடும்பிராயமும் இன்றி ஒரு புருடாயுசு புக்க மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாகச் செய்து அதனை நிழலிலே ஆறவிட்டுத் திருகுதல், பிளத்தல், போழ்ந்துபடுதல் செய்கை அறிந்து ஓராண்டு சென்றபின் இலக்கணப்படி குழல் செய்யப்படும். இதன் பிண்டி இலக்கணம், நீளம் இருபதுவிரல், சுற்றளவு நாலரைவிரல், இது தொளையிடும் இடத்து நெல் அரிசியில் ஓர் பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அணைசு பண்ணி இடமுகத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். தொளை அளவிலக்கணம், அளவு இருபதுவிரல். இதிலே தூபமுகத்தின் இரண்டு நீக்கி முதல் வாய் விட்டு இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினும் இரண்டுநீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் தொளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை என்று கழித்து, மிகுந் துநின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். தொளைகளின் இடப்ப ரப்பு ஒருவிரல் அகலம். ஏழு விரல்களாவன: இடக்கையிற் பெருவிரலும், சிறுவிரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையில் பெருவிரல் ஒழிந்த நான்கு விரலுமாக ஏழுவிரல் என்க. இவ்வெழு தொளையில் இசை பிறக்குமாறு எழுத்தால் பிறக்கும். எழுத்து ச ரி க ம ப த நி என்பன. இவ்வேழ் எழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில் செய்ய இவற்றுள் ஏழிசை பிறக்கும். ஏழிசையாவன: சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவம், நிடாதம் என்பன. இவற்றுள் பண்கள் பிறக்கும்.

குழவிக்கட்டோன்றியகாமப்பகுதி

குழவிப்பதத்தராகிய மைந்தரது நலத்தை விரும்பின காமப்பகுதி நிறைந்த மங்கையரது தன்மையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

குழித்தைலம்

அடியில் துவாரமிட்ட குடுவையில் மருந்தை நிரப்பிப் பூமி யில் பள்ளமிட்டு அடியில் ஒரு பாத்திரமமைத்து குடுவையைப் பாத்திரத்தின் மேல் வைத்துப் பூமியில் வைத்த குடுவையைச்சூழ வறட்டியடுக்கித் தீயிட்டெரிப்பது.

குவலயா நந்தம்

ஒரு அலங்கார இலக்கணம். இது தமிழ் ஆரியம் எனும் இரண்டு, பாஷையிலும் இருக்கின்றது.

குவலயாசுவன்

1. (சூ) பிருகதச்சுவன் குமரன், ரோகிதாச்வன் குமரன் என்றுங் கூறுவர். இவன் தேவர்களை வருத்திக் கொண்டிருந்த துந்து என்னும் அசுரனைக் கொன்றதால் துந்துமாரன் எனவும் பெயர் பெறுவன். உதங்கருக்குப் பிரீதியானவன். உதங்கரால் தன் சந்ததிக்குப் பிரா மணவிசுவாசம் உண்டாகவரம் பெற்றவன். இவனுக்கு (2,1100) பிள்ளைகள். இவர்களில் திடாசுவன், பத்திராசுவன், கபிலாசுவன் தவிர மற்றவர் அசுரன் முகாக்கினியா வழிந்தனர். (பாகவதம்.) (பிரம்~பு.) 2. தியுமானுக் கொருபெயர். 3. திவோதாசன் குமரன், இவனுக்குக் காலவமுனி அநுக்கிரகத்தால் குவலயாச் வமென்னுங் குதிரை கிடைக்க அதனால் இவன் அந்த ருஷியின் தவத்திற் கிடையூறிழைத்துவந்த பாதாளகேதுவை வென்று பாதாளத்தில் அவனால் சிறைப்பட்டிருந்த மதாலசை என்பவளை மணம்புரிந்தனன். இவனுக்கு ருதுத்துவசன் என் றும் பெயர், இருதுத்துவசனைக் காண்க. 4. காச்ய வம்சத்தவன். வச்சன்குமரன்.

குவலயாபீடம்

கம்சன் பட்டத்து யானை. கிருஷ்ணன் மீது பாகனா லேவப்பட்டுக் கொம்பிழந்தது.

குவானுகோ

ஒருவித கடம்பைச்சாதியைச் சேர்ந்த மிருகம். கூட்டமாக வசிப்பது. 4 அடி உயரம் அமெரிகாவில் உள்ளது. இவை தங்களில் எதாவதொன்று மரண மடையின் ஒன்று கூடும் என்பர்.

குஷிதன்

பவுஷ்பஞ்சி மாணாக்கன்.

குஷ்டரோகம்

(குறை நோய், பெருவியாதி,) தேக மினுமினுப்பு, தடித்தசருமம், தொட்ட இடம் தினவு, வியர்வு, நோ, எரிச்சல், ரோமச்சிலிர்ப்பு, சிறுகாயமும் மணமாதல், கறுத்தரத்தம் வடிதல், கண்ட வறட்சி, அதிநித்திரை, முதலியவற்றைத் தனக்குருவமாகக் கொள்ளும். இது வாத பித்த சிலேஷ்மத்தால், கபால குஷ்டம், ஔதும்பர குஷ்டம், மண்டல குஷ்டம், விசர்ச்சிகா குஷ்டம், ருசியஜிம்மிக குஷ்டம், சரும குஷ்டம், ஏககுஷ்டம், கிடிட குஷ்டம், சித்ம குஷ்டம், அலச குஷ்டம், விபாதிகா குஷ்டம், தத்துரு குஷ்டம், சதாரு குஷ்டம், புண்டரீக குஷ்டம், விள்போட குஷ்டம், பாமாகுஷ்டம், சர்மதல குஷ்டம், காகுசகுஷ்டம், பிளக்கும் கர்ண குஷ்டம், கிருஷ்ண குஷ்டம், அபரிச குஷ்டமுமுண்டு, ஜீவ.