அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கீசகன்

சுதக்ஷணையின் சகோதரருள் மூத்தவன், பானனென்னுங் காந்தருவனம்சம், இவனைப் பாண்டுபுத்ரனாகிய வீமன் காந்தருவாமிச மென்னும் வியாசங்கொண்டு, திரௌபதியை மோகித்த காரணத்தால் பெண்வேஷந் தரித்துச் சென்று யாருமறியாமல் கொன்றனன். இவனுக்குச் சிங்கபலன் எனவும் பெயர்.

கீசகர்

விராடன் மைத்துனர் நூற்றுவர். வீமனால் கொல்லப்பட்டவர்கள். சுதிக்ஷ்ணா தேவியின் சகோதரர், இவர்கள் நூற்று. நால்வர். இவர்களில் மூத்தவன் கீசகன். இவர்கள் பூர்வசன்மத்தில் காலகேயரென்னுங் காந்தருவர் பாணனை முதலாகவுடைய நூற்று நால்வர்.

கீடபேதங்கள்

கீடம் (18) ஒணான் (4) தவளை (8) காட்டு ஈ, (6) வீட்டுப்பல்லி, (5) காட்டு மசகம், (8) மக்ஷிகா, (6) மலைப்பி பீலிகா (6) சிலந்தி, (28)

கீடபேதம்

(கீடம் புழு) இந்தக் கீடங்கள் பலவகையாயினும் வாயு கீடம், அக்னி கீடம், சோமகீடம், சங்கீரணகீடம் என (4) வகையாகப்பிரித்து அவற்றை (67) ஆகவிரிப்பர். வாயுகீடவிரி. குன்னசம், துண்டிகேரம், சிருங்கிசரம், குகுந்தகம், உச்சிலிங்கம், அபிலாபம், சுவேதகம், மயூரகம், அபிசாரு, உலூகம், விருத்தம், சாரிபம், வைதளம், சராலம், கூர்மம், பருஷம், சித்திரசீரிஷம், துவிராசிகம், என்பன. இவை (18) அக்னிகீடம். இவை (24) கௌண்டின்யம், கண்டபவம், லாதரி, பத்திரவிருக்ஷிகம், சீநாதுகம், பிரம்மணிகம், விடபப்பிரமணம், பாகியகி, பிச்சிலம், கும்பி, வர்ச்சகீடம், அருமேதகம், கண்டுபம், பதுமகீடம், மகரம், சதபாதி, பஞ்சாவம், பாந்தமச்சம், சூஷ்மதுண்டம், அதிகர்த்தமி, கீடக்கிரமம், சராஷி, சீதபி, சிலேஷ் மகம் என்பனவாம். சோமகீடம். (13) பேதம், விஸ்வம்பாம், பஞ்சசுக்லம், பஞ்ச மக்குரோதம், சௌண்டிகம், சையகம், துலாகம், படம், கிடிகை, சடி, சூசி முகம், கிருஷ்ணகோதம், அதப்பரம், காஷாயவாசி யென்பனவாம். சங்கீரணகீடம். இவை (12) வகை, துங்கீநசம், கலகள்தம், பகம், பாஹடகம், கோஷ்டகாகி, கிருமிகரம், மண்டலபுஷ்பகம், காளகாபம், சாஷபசம், மத்குளி, சம்பளி, அக்னி கீடம், என்பனவாம்.

கீதமாபுரம்

ஒரு வித்யாதர நகரம்.

கீரகங்களுக்கு நட்பான வீடுகள்

சூரி தனுசு, மீனம், சந் மிதுனம், கன்னி, தனுசு, மீனம். செவ் ருஷபம், மிதுனம், கன்னி, துலாம். புத மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம். குரு ரிஷபம், மிதுனம், சிங்கம், கன்னி, துலாம், கும்பம், சுக் மேஷம், மிதுனம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், சனி ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம். இரா. மேஷம், சிங்கம், கன்னி. கேது துலாம், கும்பம். குளி துலாம், கும்பம். கீரகப் பகை வீடுகள் சூரி ரிஷபம், மிது பகை நதுலாம், கும்பனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம். சந் மேஷம், சிங்கம், துலாம், மகரம், கும்பம். செவ் சிங்கம், தனுசு, கும்பம், மீனம், புத சிங்கம். குரு மேஷம், விருச்சிகம். சுக் கடகம், சிங்கம். சனி கடகம், சிங்கம், விருச்சிகம். இராகு துலாம், கும்பம், மீனம். கேதுக்கும், குளிகனுக்கும் மேஷம், சிங்கம், கன்னி, தனுசு.

கீரங்கீரனார்

கீரனுடைய மகனாகிய கீரனார். இவர்நெய்தலைப் புனைந்து பாடியுள்ளார் தலைவன் தேர்மணிக்குரல் பலருங்கேட்கும்படி வருதலால் நின்னைவரைய வருகிறானென்று தோழி கூறுவது இனிமை தாராவிற்கும் இவர் பாடியது. (நற் 78.)

கீரந்தையார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். பரிபாடலில் இரண்டாம் பாடல் பாடியவர், திருவள்ளுவமாலையில் “தப்பா முதற்பாவால்” எனும் செய்யுள் கூறிய வரும் இவரே. (பரிபாடல்.)

கீரன்

நக்கீரருக் கொருபெயர்.

கீரவிகொற்றனார்

நக்கீரருக்குக் குமரர்.

கீரி

இது பாண்டுபுத்ரராகிய தருமர் யாகஞ் செய்த காலத்து யாகத்தில் வந்து இவர் செய்தயாகம் அதிதிக்குத் தன் பங்கையும் மனைவி, குமரன், மருமகள் முதலியோர் பங்காகிய மாவை, பசிக்குதவிய வேதியன் தந்த மாபட்டு என்மேனி பொன்னாயது ஆகையால் இது அந்தத் தானத்திற் கொவ்வாதென்று இகழ்ந்தது. இது ஜமதக்ளியைச் சோதிக்கக்கீரி யுருக்கொண்டு வந்த கோபம், இது தருமர் யாகத்தை நிந்தித்து தன்னுருமாறியது. இது தருமருக்குப் பன்னிரண்டுவருடம் யாகஞ் செய்ய விரும்பிய அகஸ்தியர், பசு இம்சைசெய்யாது யாகஞ் செய்ய இந்திரன் கோபிக்க அவனை வெறுத்து மானஸயாகஞ் செய்யத்தொடங்க இந்திரன் மழை பெய்வித்தான் என்பதையும் கூறியது. (பார~அச்.)

கீரிடாப் பிரம்வாதிமதம்

பிரமத்தின் முக்குணத்தில் மும்மூர்த்தி களுண்டாய் முத்தொழிலியற்தச் சகத்துண்டாய் ஆத்மாக்கள் சநநமரணப்பட்டுக் குருவால் உபதேசிக்கப்பட்ட உறுதிகொண்டு அந்நிலையில் நின்று மோக்ஷமடைவது.

கீரிப்பிள்ளை

இது ஆசியா கண்டத்து தக்ஷிணபாகத்தில் சஞ்சரிக்கும் பிராணி. இது பெருச்சாளியைப்போல் நீண்ட மூக்குடன் நீண்ட தேகத்தையும் குறுகிய கால்களையும் பெற்று உடம்பெங்கும் மயிரடரப்பெற்றிருக்கும். இது பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். பாம்புகள் அகப்பட்டால் கழுத்தில் பாய்ந்து கொன்று விடும். இதை வீட்டில் வளர்த்துப் பழக்கலாம். இது தண்ணீரில் மூச்சுப்பிடித்து நீந்தும். இது கிராமங்களில் கோழிகளைக் கொள்ளை கொள்ளும், இரவில் அதிக சுறுசுறுப்பாய் இரைதேடும். இது சுவர் மரங்கள் மீது வேகமாக ஏறும். உறங்குகையில் தலையையும் வாலையும் வயிற்றில் சேர்த்துக்கொள்ளும். இது கோழி, பக்ஷிகள், சிறு பிராணிகள், எலி, மூஞ்சூறு, பாம்பு, பல்லி முதலியவற்றை ஆகாரமாகக்கொள்கிறது. இது எலியினத்தில் ஒருவகை. இது குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பிராணி. இதற்குப் பால் தரும் உறுப்பு மார்பிலிருக்கிறது. இது இரைதேடச் செல்லுகையில் குட்டிகளை முதுகிற் தாங்கிச்செல்லும். தென் அமெரிகா பிரேஸில் நாட்டில் ஒருவகைக் கீரிகளுக்கு உடலில் முள்ளம் பன்றி போன்ற கூரிய முட்களும் வாழைப்பூ போன்ற தட்டையான வாலுமிருக்கின்றன. இந்தியாவின் மேற்கரை மலைநாட்டில் மரம் ஏறத்தக்க ஒருவகைக் கீரிகளிருக்கின்றன. அவைமரம் ஏறிப்பதுங்கி பறவைகளைப் பிடித்தருந்தும். பூனைக்கீரி: இது பூனையினத்தைப்போல் கால்களும் உடலும் காதும் வாலும் பெற்று அதன் நகம்போல் நீட்டவும் குறுக்கவும் பெற்ற நகங்களையும் பெற்றுள்ளது. முகம் கீரிக்குள்ளது போல் நீண்டு மீசை கொண்டிருக்கும்.

கீரீத்திபூதரம்

ஒருமலை.

கீரைவகை

கீரைத் தண்டுக்கீரை, வள்ளைக்கீரை, பருப்புக்கீரை, வங்காரவள்ளைக் கீரை, கொடிவயலைக்கீரை, சிறுபசலைக் கீரை, பாற்சொரிக்கீரை, சாணக்கிக்கீரை, துயிலிக்கீரை, பண்ணைக்கீரை, பரட்டை கீரை, முளைக்கீரை, முள்ளிக்கீரை, புளிச்சிறுகீரை, சிறுகீரை, கலவைக்கீரை, மணலிக்கீரை, நீர் ஆரைக்கீரை, புளியாரைக் கீரை, கோழிக்கீரை, புளிப்புக்கீரை, பிண்ணாக்குக்கீரை, முக்குளிக்கீரை, வெந்தயக் கீரை, கொத்துமல்லிக்கீரை, காசினிக் கீரை, குப்பைமேனி, முன்னை, நல்வேளை, சிறுகீரை, மணத்தக்காளி, முருங்கை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி முதலியன.

கீர்த்தி

1. தருமன் எனும் மனுவின் தேவி, தக்ஷன் பெண். 2. பிரமபுத்ரன் தவத்தால் கீர்த்தி பெற்றவனாதலால் பெற்ற பெயர். 3. உருக்கிரமன் எனும் ஆதித்தன் தேவி 4. சுகர்மன் தேவி, இவளில்லாத இடம் புகழ்கிடையாது.

கீர்த்திகேது

சிவபூசையால் நற்கதி பெற்ற சைவன்.

கீர்த்திதரன்

(சூ.) பிரணிந்தகன் குமரன்.

கீர்த்திபூஷண பாண்டியன்

அதுலகீர்த்தி பாண்டியனுக்குக் குமரன். இவன் காலத்தில் மதுரை மாநகர் கடல்கொண்டது. இது ஒரு பிரளயம். இவனுக்குப்பின் வங்கிய சேகரபாண்டியன் அரசாண்டான்.

கீர்த்திமதி

சுகன் குமரி, அணுகன் தேவி.

கீர்த்திமான்

வசுதேவருக்குத் தேவகியிடமுதித்த குமான்.

கீர்த்திமாலினி

சந்திராங்கதன் மகள்.

கீர்த்திரதன்

பிரதிரதன் குமரன். மிதிலை நாட்டாசன்.

கீர்த்திராதன்

1, (சூ.) மகாகிருதி குமரன். 2. மகாபர்க்கன் குமரனாகிய மிதிலை நாட்டாசன்.

கீர்த்திவர்த்தன சோழன்

இவன் பாரிசூரிய சேகர பாண்டியன் குமரியாகிய கமலினி. இவன் தன்னாட்டில் குமாரசுவாமிக்கு ஆலயம் புதுக்கி நீதி தவறாது (77) வரு. அரசாட்சி செய்து கீர்த்திமான் என்கிற நதியுண்டாக்கித் தன் குமரன் ஜயசோழனுக்கு அரசளித்து முத்தியடைந்தவன்.

கீர்வாணம்

ஒரு பாஷை, பரசிராமரால் நிருபிக்கப்பட்டது.

கீலகன்

கிரிபுரத்தரசன். இவன் குமரர் சிவாலயத்தை இடித்து நரகமடைந்தனர்.

கீழாலவத்தை

ஆன்மா கருவிகளுடன் கூடி மேனின்று மூலாதாரம் வரையில் படும் வேறுபாடு, சாகீரம்: ஆன்மா, ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, தன் மாத்திரை 5, வசனாதி 5, வாயு 10, புருடன் 1, அந்தக் கரணம் 4, ஆகிய 35 கருவிகளுடன் லலாடத்தானத்தில் நிற்ப சொப்பனம்: முன்சொன்ன கருவிகளில் ஞானேந்திரியம், கன்மேந்திரியம் நீங்கலாக மற்ற 25 கருவிகளுடன் ஆன்மா கண்டத்தானத்தில் நிற்பது. சுழத்தி: ஆன்மா, புருடன் 1, கித்தம் 1, பிராண வாயு 1, ஆக 3 கருவிகளுடன் இருதயத்தானத்தில் நிற்கு நிலை. துரியம்: ஆன்மா, பிராணவாயுவும் புருடனுமாகிய இரண்டு கருவிகளுடன் நாபித்தானத்து நிற்குநிலை. துரியாதீதம்: ஆன்மா. புருடனோடு மூலாதாரத்து நின்றநிலை. (சித்தா.)

கீழையகத்தாழ்வான்

நாதமுனிகளிடத்துப் பிரபந்தத்தைக் கானத்துடன் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்.

கீழையூர் சடகோபாதாசர்

இவர் அரிசமய தீபம் என்னும் நூலாசிரியர். தொண்டநாட்டினின்று தென்னாட்டுக்குச் சென்ற வல்லை காளத்தியப்ப முதலியார் மரபிலுதித்தவரெனவும், இற்றைக்கு இருநூற்றைம்பது வருஷங்களுக்குமுன் நாகப்பட்டினம் தாலுக்கா கீழையூரில் சடகோப ராமாநுஜ முதலியரென்னுந் திருநாமத்துடன் பிரபலமாக வாழ்ந்தவ ரெனவும் இவாது குமாரர் பத்தராவி முதலியாரவர்களது பெண்சந்ததியார் இப்போது அவ்வூரிலிருக்கின்றன ரெனவும், தாயாதிகள் சிலர் வேறிடத்திலுள்ளா ரெனவும் தெரிகின்றது. மற்றுமிவரது சரித்திரத்தையும் இவரியற்றிய வேறு ஏல்களையும், பற்றி ஒன்றுந் தெரிந்திலது. (அரிசமய தீபம்.)