அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கிகடன்

1. இருஷபனுக்குச் சயந்தியிட முதித்த குமரன். 2. சங்கடன் குமரன். இவன் துர்க்காபிமான தேவதைகளைப் பெற்றவன்.

கிகடன்

1. இருஷபனுக்குச் சயந்தியிடமுதித்த குமரன். 2. சங்கடன் குமரன். இவன் துர்க்காபிமான தேவதைகளைப் பெற்றவன்.

கிடங்கன் பெருமாள்முதலியார்

இவர் தமிழ்நாட்டு அரசன் சமஸ்தானத்தி லமர்ந்திருந்தவர். இவரை அரசன் (32) அறம் வளர்ப்பவர் யாவர் என்று வினாவினன். இதற்கு உத்தரவாக முதலியார் வேளாளரே என்றனர். அரசன், அரசர்கள் அல்லவோ என முதலியார் சும்மாவிருந்தனர். இத னால் அரசன் உட்பகை கொண்டு கிடங்கன் பெருமாள் முதலியாரைக் கொலைபுரியக் கட்டளையிட்டனன். ஒரு முறை இந்த அரசன் குமரனைப் பகைவர் துரத்திவந்தனர். அந்த இராசகுமாரன் கிடங்கன் பெருமாள் வீட்டிலடைக்கலம் புகுந்தனன். கிடங்கன் பெருமாளின் குமரன் தன்குமர னை யரசகுமரனெனக் காட்டி யாசகுமாரனைக் காத்தனன். இதனைக் குமானால் அறிந்த அரசன், தந்தையைக் கொன்ற பகை பாராட்டாமல் தருணத்தில் காத்ததையெண்ணி வேளாளரே (32) அறம் வளர்ப்பவர் என்று சிறப்புச் செய்தனன்.

கிடங்கல் காவிதிகீரங்கண்ணனார்

இவரது இயற்பெயர் கண்ணனா ரென்பதே, கீரன் தந்தையின் பெயர்போலும் காவிதிபட்டம் பெற்றமையின் உழுவித்துண்ணும் வேளாண்மரபினராவார். கிடங்கில் என்பது நடுநாட்டசத்துள்ள திண்டிவனம்; இஃது ஒய்மா (ஏறுமா) நாட்டு நல்லியக்கோட னாட்சியுட்பட்டிருந்தது கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற்கோமான்” சிறுபாணாற்றுப் படை 160. மற்றுமிவ்வூர் “கிடங்கிற்கிடங்கிற் கிடந்தகயலைத் தடங் கட்டடங்கட் டளிரியலார் கொல்லார் கிடங்கில், வளையாற்பொலிந்தகை வையெயிற்றுச் செவ்வா, யிளையாடன்கண் ணொக்கும் என்று. ” எனப் பொய்கையாழ்வாராற் சிறப்பித்துப் பாடப்பெற்றது. இக்கீரங் கண்ணனார் நெய்தல், குறிஞ்சி, முதலாய வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் பிரிந்தாரை யொறுக்கு மாலைக்காலத்தியல்பும், இரவுறு துயறமும் விளங்கப் பாடியுள்ளார். நற் 218. இவர் பாடியனவாக நற்றிணையில் 218ம் பாடலொன்றும், குறுந் தொகையிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றிணை.)

கிடங்கிற்தலபதினைக் கண்ணன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர் இவர் பெயர் கண்ணராக இருக்கலாம் மற்றையடைமொழிகள் இவரது ஊரைக் குறிக்கும் மொழிகளாம். (குறுந் 252.

கிடங்கில்காவிதி பெருங்கொற்றனார்

கொற்றன் எனப் பலரிருத்தலின் அவர்களின் வேறென்பது தெரிய இவர் பெருங்கொற்றனார் எனப்பட்டார். இவர் முல்லைத் திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற், 364ம் பாட்டு.

கிடாம்பி அப்பா

நயினாராசாரியர் திருவடி சம்பந்தி.

கிடாம்பி அப்புள்ளார்

சுப்பிர திஷ்டாம் சாரன இவர் கலி (4321)க்குமேல் விக்ரம வரு. சித்திரை வெள்ளிக்கிழமை காஞ்சியிலவதரித்தவர். உடையவர் திருவடி சம்பந்தி. நடாதூர் அம்மாள் திருவடிகளில் ஆச்ரயித்தவர்.

கிடாம்பி ஆச்சான்

சண்டாம்சரான இவர் கலி (4058)க்குமேல் ஏவிளம்பி சித்திரைமீ வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் அவதரித்தவர். பெரிய திருமலை நம்பிக்கு மருமகன், பெண்சாதியுடன் பிறந்தான் குமரன். இவர்குமரர் இராமானுசப் பிள்ளான், இவர் திருக்கோட்டியூர் நம்பி நியமனத்தால் உடையவர்க்கு மடைப்பள்ளி கைங்கர்யஞ் செய்தவர். எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை)

கிடாம்பி இராமானுசப் பிள்ளான்

சர்வ நேத்ராம்சரான இவர் கலி (4209)க்கு மேல் சர்வதாரி ஐப்பசி திங்கட்கிழமை ஸ்ரீகாஞ்சியிலவதரித்தவர். ஸ்ரீரங்கராஜர்.

கிடாம்பி நயினார்

மணவாள மாமுனிகளுக்கு ஆசாரியர், கிடாம்பி ஆச்சான் வம்சத்தவர். பிரமதந்திர சதந்திரசீயர் திருவடி சம்பந்தி.

கிடாம்பி ஸ்ரீரங்கராசர்

குமுதாக்ஷாம்சரான இவர் கலி (4264)க்குமேல் சுபானு வரு பங்குனி திங்கட்கிழமை திருக்காஞ்சியி லவதரித்தவர்.

கிடாம்பித் திருமலை நயினார்

கிடாம்பி யாச்சான் மருகர்.

கிடாம்பிப் பிள்ளை

தேசிகர் திருவடி சம்பந்தி.

கிடாம்பிப் பெருமாள்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம் பரை)

கிட்கிந்தை

1. ஒரு சிறு கிராமம். துங்கபத்திராவின் வடகரையிலுள்ளது. 2. சுக்ரீவனாண்ட இராச்யம், இது மைசூருக்கு வடக்கிலிருக்கிற தென்பார். A Small Village on the northern bank of the river Thungabhadra, near Humpi in the District of Bellary, Madras Presidancy.

கிணறுகள்

உலகத்திலுள்ள தேசங்களில் சில கிணறுகளில் இருவகை நீர் ஊறுகிறது. அமெரிக்கா நாட்டு பிட்ஸ்பெர்க் எனும் பிரதேசத்திற்குச் சற்றுத் தூரத்தில் உள்ள கிணற்றில் கீழ்நீர் உஷ்ணம் மேல் நீர் குளிர்ந்தது. ஷை நாட்டு நியூபர்லிங்கடனில் உள்ள ஒரு கிணற்றில் அடியிலுள்ள ஜலம் உப்பு, மேலுள்ள ஜலம் நல்ல ஜலம். நாட்டுபார்டோ எனும் ஊரில் ஒரு கிணறுண்டு. அக்கிணற்றினுள் பிள்ளைக் கிணறொன்றிருக்கிறது. அப் பிள்ளைக் கிணற்று நீர் கந்தகநீர் வெளிக் கிணற்றில் நல்லநீர். கள்ளூறுங் கிணறு காண்க.

கிணை நிலை

1. மருத நிலத்திற் கழனியிடத்து வேளாளனைத் தெளிந்த கிணைகொட் மெவன் நல்ல கீர்த்தியைச் சொல்லியது, (பு~வெ.) 2. செல்வம் பெருகும் பாந்தமாளிகையிடத்து அழகிய கிணைகொட்டு மவனது நன்மையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

கிந்தவர்

ஒரு இருடி.

கினியாமதம்

இத்தேசத்தவர்கள் ஆசாரம், நாகரிகம், கல்விகள் இல்லாதவர். அவ்வாறிருப்பினும் தெய்வபக்தியுள்ளவர்கள், இவர்கள் பெட்சி எனும் தேவதைகள் இருக்கின்றனர் எனவும், அத்தேவன் தம்மைப்போல் கருநிறம் உள்ளவன் எனவும், கெடுதி அதிகஞ் செய்வன் எனவும், எண்ணியிருப்பர். இவர்கள் இடிவிழுந்த இடம் பயங்கர ஸ்தலமென்று எண்ணி அவ்விடம் விக்ரகங்களைத் தாபித்துப் பூசித்துக் கோயில் கட்டுவர். இவர்கள் குருவிற்கு மாசௌகி என்று பெயர். இவர்களின் துஷ்ட தேவதை கருநாய்போல் அவதரித்துத் தீமை செய்யு மென்று எண்ணியிருக்கின்றனர். மங்களவாரம் இவர்களுக்கு விசேஷதினம் அந்நாளில் அந்தத் தேவதைகளுக்கு நரபலியும், ஆட்டின்பலியும் இடுவர். இச்சாதியாரில் இறந்தவர்களைப் பெண்களே கொண்டுபோய் அடக்கஞ் செய்வர்.

கின்னரகீதம்

ஒரு வித்யாதர நகரம்.

கின்னரன்

புலகன் புத்ரன்.

கின்னரப்பிரமையர்

இவர் பெருஞ்செல்வ முள்ளாராய்ச் சிவனடியவர்க்கு நாடோறுமிட்டு வரும் அன்னத்தால் வறுமையடைந்தும் சிவபெருமான் சந்நிதானத்து நித்தியம் பாடி வரும் கின்னரிமுடிவில் சிவமூர்த்தி யளித்த பொன்னைக்கொண்டு அடியவர்களை ஊட்டிவருங்கால் வசவதேவர் மடத்தில் சென்றிருந்து ஆங்கிருக்குஞ் சிவாலயத்திற் சிவதரிசனஞ் செய்து மீண்டனர். அக்காலையில் தூர்த்தெனொருவன் ஆடொன்றினைப் பிடிக்கத் துரத்தினன். அந்த ஆடு சிவாலயத்துட் புகுந்தது. அந்த ஆட்டினைக் கண்ட பிரமையர் அதனைப் பிடிக்கவொட்டாமல் தடுத்து அதன் விலையை அவன் சொற்படி கொடுத்தும் அவனுக்குரிய தாசி அந்த ஆட்டினையே கேட்டனள். காமுகன் மீட்டும் வந்து பிடிக்கப் பிரமையர் கோபித்து அவன் சிரத்தைச் சேதித்தனர். அரசன் ஆலயத்துட் சென்று உண்மையறிய விரும்புகையில் சிவமூர்த்தி பிரமையாமீது குற்றமில்லை யெனச் சாக்ஷிகூறப் பெற்றுச் சில நாட்களுக்குப் பிறகு முத்தி பெற்றவர்.

கின்னரர்

பிரமன் பிரதிபிம்பத்திற் பிறந்தவர். மானிடவுருவத்தையும் குதிரை முகத்தினையும் பெற்ற தேவவகுப்பினர்.

கின்னரையர்

வசவர்க்குப் பிரியாநண்பர். இவர் தேகவியோகமடைந்த காலத்து வசவதேவரும் அவரைப்பிரிய மனமில்லாதவராய் உயிரொன்றியிருக்க, மடிவால மாச்சையர் வந்து மூர்ச்சை தெளிவித்துக் கின்னரையரையும் உயிர்ப்பித்தனர்.

கிம்புருடன்

1. புலகர்குமரரில் ஒருவன். 2. ஆக்னியித்ரனுக்குப் பூர்வசித்தியிடத்து உதித்தகுமான். தேவி அப்ரதி.

கிம்புருஷம்

இமயமலைக்கு வடபாகத்திலுள்ள தேசம்.

கிம்புருஷர்

பிரமன் பிரதிபிம்பத்தி லுதித்தவர், மனுஷமுகத்தையும், குதிரையினு ருவத்தையும், பெற்ற தேவவகுப்பினர்.

கிம்மீரன்

ஒரு அசுரன் பீமனால் கொல்லப் பட்ட பகாசுரன் தம்பி, இவன் பாண்டு புத்ரர் அரண்யவாசத்தில், திரெளபதியைக் கவரவந்து வீமனால் கொல்லப்பட்டனன், இவனுக்குக் கிம்மீரணன் எனவும் பெயர்.

கியவர்க்கர்

சூரியனிடம் காசிமகாத்மியம் கேட்டவர்.

கியாதி

1, கர்த்தமர் பெண், பிருகுருஷியின் தேவி, தக்ஷன் பெண் எனவும் கூறுவர். குமரர் தாதா, விதாதா, விஷ்ணுவுக்கஞ்சிய அசுரருக்கு இடங்கொடுத்துத் திருமாலால் உயிர்நீங்கி மீண்டும் சுக்ரனால் உயிர்பெற்றவள், 2. தாபசன் எனும் மனுப்புத்ரன். 3. உல்முகன் குமரன்.

கியாது

ஜன்பனுடைய பெண், இரண்யகசியின் தேவி, பிரகலாதன் தாய். ஒரு காலத்து இந்திரன் இரண்யகசிபில்லாக் காலம் பார்த்து இவளைச் சிறையெடுக்கையில் நாரதர் விடுவித்தனர். இவள் நாரதரிடம் உபதேசம் பெற்றுத் தன் புருடன் தவம் நீங்குமளவும் நாரதராச்சிரமத்தில் இருந்து பின்பு புருடனிடஞ் சேர்ந்தவள்.

கியான தேவர்

கங்கைக்கரையில் ஆப்கா வெனுமூரில் கருணிகர் மரபில் கோவிந்த பண்டிதர் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தேவி நிருபாய். இவ்விருவருக்கும் விடோபாவெனும் ஓர் குமரன் பிறந்தான். இவ் விடோபாவென்பார் தீர்த்தயாத்திரை செய்து அளகாபதியை யடைந்திருக்கையில் சித்தோபண்டிதர் அவரைக்கண்டு நீவிர் யாரெனவினவத் தம்பெயர்கூற அப்பண்டிதர் தமது வீட்டிற்கு அழைத்துச்சென்று விருந்து செய்வித்தனர். அன்றிரவு பெருமாள் பண்டிதர்கனவில் உமது பெண்ணை விடோபாவிற்குக் கொடுக்க என அவ்வாறு மணம்புரிந்து பண்டரிசென்று பெருமாளை வணங்கி மீண்டுந் தம்மூர் சென்றார். இவ்வாறிருக்கையில் தாய் தந்தையர் மரணமடைய மாமனார் வீடுசென்று மனைவியிடம் தாம் சந்நியாசம் பெறவேண்டு மென்று விடைகேட்க அவள் மறுக்கக் கேட்டுக் கங்கா தீர்த்தமாடி வருகிறேனென்று காசி சென்று ஸ்ரீபாதரால் சந்நியாசம் பெற்றிருந்தனர். இதைக்கேட்ட மனைவி அரசமரஞ் சுற்றி வருகையில் சந்நியாசம் தந்த ஸ்ரீபாதர் அவ்விடம் பிரதக்ஷணஞ் செய்யும் விடோபாவின் மனைவியைப் பார்த்து உனக்கு நான்கு புத்திரர்களுண்டா குகவென அவள் சிரிக்கக் கண்டு காரணம் வினவத் தன்கணவன் சந்நியாசமடைந்த காரணங்கூறினள். பின் ஸ்ரீபாதர் அவளுடன், காசி சென்று விடோபாவைக் கண்டு மனைவியுடனிருக்கச் செய்தனர். விடோபா மனைவியுடன் தனித்த ஓர் காட்டிற் சென்று ஓர் குடிலில் வசித்தனர். அவருக்கு மூன்று குமாரர்களும் ஒரு குமரியும் பிறந்தார்கள். அவர்களில் மூத்தோன் பெயர் நிவர்த்தி, இரண்டாம் குமரன் பெயர் கியானதேவன். மூன்றாங் குமரன் சோபானன், குமரி பெயர் முத்தாயி. இவர்கள் பருவமடையத் தாய் உபநயனச் சடங்குகள் செய்யவேண்டுமென்று கூற வேதியர்கள் மறுக்கச் சிலர் செய்யலாமென்றும் சிலர் செய்யக் கூடாதென் றும் கூறிக்கொண் டிருக்கையில் ஒருவரெழுந்து இவர்கள் கியானதேவர் முதலிய பெயர்கள் வகித்திருப்பதினால் உபநயனஞ் செய்யலாமென, மற்றொருவர் எழுந்து கடாவிற்கு ஞானனென்று பெயரிருக்கின் பயனென்னையென, கியானதேவர் கேட்டு இவர் கூறியது சரியே அதற்குற்றது எனக்குமாம் என்றனர். ஆயின் எதிரில் நின்ற ஒரு கடாவைத் தடியால் அடிக்க அது ஞானதேவர் முதுகில் தடித்தது. இதனைக் கண்ட வேதியர் உன்னைப்போல இந்தக் கடா வேதங்கூறுமோ வென்ன ஞானதேவர் அதின் தலையில் கைவைத்து வேதங்கூறுக என்ன அக்கடா நான்கு வேதங்களையுங் கூறியது. பின் வேதியர்கள் இவரைப் புகழ்ந்து நீங்கினர். அவ்வேதியர்களுள் ஒருவர் வீட்டில் நால்வரும் அத்தியயனஞ்செய்து கொண்டிருக்கையில் அவ்வேதியன் தந்தைக்குத் திதிவா அவன் ஏனையவேதியர்களை யழைக்க நீ சந்நியாசியின் குமாரர்களைக் கூட்டிக்கொண்டிருப்பதினால் நாங்கள் உன் வீட்டிற்கு வரோ மென மறுத்தனர். இதனை ஞானதேவர் கேட்டுப் பிதுர்களே வந்து புசிப்பார்கள், நீவிர் வேண்டிய காரியங்களைச் செய்கவென அவ்வாறே அவ்வேதியர் செய்து அன்னம் படைக்கையில் பிதுரர்கள் வராமைகண்டு வேதியன் கேட்க ஞானதேவர் அக்ஷதை யெடுத்து இலையில் இறைக்க பிதுரர்கள் வந்து அன்னமுண்டனர். இதனைச் சாளரவழியாகக்கண்ட ஏனையவேதியர்கள் இவர்கள் மனிதரல்லர், தேவர்களே என்றும் இவர்களை வீணே இகழ்ந்தோ மென்றும் மனமழுங்கினார்கள். பின்பு நால்வரும் தாங்களிருந்த வேதியனைவிட்டு நீங்கித் தம்மூரடைய எல்லோரும் எதிர்கொண்டனர். அவர்களில் ஒருவனாகிய விசோபன் இவர்களோடு கூடுதல் அடாதெனக் குறைகூறினான். ஒருநாள் நிவர்த்தி என்பவர் தங்கையை நோக்கி எனக்கு அப்பம் செய்து தருதி என்றனர். முத்தாயி அம்மை மாமுதலிய செய்து பாண்டமின்மையால் பாண்டங்கொள்ளக் குயவன் வீட்டிற்குச் செல்லுகையில் விசோபன் கண்டு குயவனைப் பாண்டம் கொடாதிருக்கக் கட்டளையிட்டனன். இதனால் முத்தாயி விசனமடைந்திருக்கையில் நிவர்த்தி காரணங்கேட்க அவள் நடந்ததைக்கூற அது அவனது சுவபாவம் நீ விசனப்படவேண்டாம், என் முதுகில் சுடுவாயென்று முதுகைக் காட்டினர், அவ்வகையே அவள் முதுகில் அப்பஞ்சுட்டு அண்ணனுடன் புசித்தனள். இதைக் கண்ட விசோபன் நடுங்கித் தண்டஞ் சமர்ப்பித்து அவர் உண்ணு மெச்சிலையுண்டு அருள் பெற்றனன். இவ்வாறிருக்கையில் நாமதேவர் எதிரில்வர அவரைக்கண்டு வணங்கி உம்மோடு தீர்த்தங்களாடவேண்டி வந்தேனென்ன அது பெருமாள் கட்டளையின்றிக் கூடாதென்று நாமதேவர் கூற, ஞானதேவர் பெருமாளைக் கேட்கப் பெருமாள் விடைதர இருவரும் பெருமாள் வழிகாட்ட நீங்குகையில் பெருமாள் காலில் புழுதி படியத் திரும்பக்கண்ட மலர்மகள், பெருமாளுடைய திருமுகம் வேறு பட்டதற்குக் காரணங்கேட்கப் பெருமாள் நாமதேவர் நீங்கிய காரணத்தால் விசனமடைகின்றேனென்று சோர்ந்திருந்தனர் பின்பு நாமதேவர் பெருமாளை நீங்காமல் நீங்கி ஞானதேவருடன் பல தீர்த்தங்களில் படிந்து அத்தினபுரியை யடைந்தனர். அவ்வூராளும் அவிந்த னென்னுமரசன் இவரைக் கண்டு செத்த பசுவை யுயிர்ப் பிப்பாயானால் நீ ஹரிபக்தன் அன்றேல் உன்னைக் கொல்வேன் என்றனன். நீ அதனை எத்தனை நாளில் பிழைப்பிப்பாய் எனத் தேவர் நான்கு நாள் செல்லும் என்றனர். இந்த நான்கு நாளும் நமதேவர் பெருமாளைத் தொழுது பசுவை உயிர்ப்பித்தார். பின்பு அரசன் நாமதேவரைப் பணிந்து சென்றனன். பின் நாமதேவர் காசியடைந்து கபீரர் வீட்டில் நடுராத்திரியில் செல்லக் கபீரர் மனைவி வந்தபாகவதருக்கு உணவளித்தல் வேண்டிக் கடைத்தெருவில் செல்லக் கடைகளில்லாமையால் ஓர் வணிகன் வீட்டைந்து உணவுப் பொருள்கள் கேட்க அவன் என் எண்ணப்படி நிற்பையேல் பொருள்கள் தருவேனென்று கூற அவ்வாறேயிசைந்து பொருள்களை விருந்தினருக்கு உபசரிக்க அனுப்பிக் கபீரரிடம் நடந்தவைகூற அவர் தம் மனைவியாரை யழைத்துக்கொண்டு வணிகனை யடைந்தனர். வணிகன் கண்டு ஞானோதயமாய் நான் பல பிறவிகளில் செய்த பாவத்தால் இவ்வகைச் சிந்தித்தேன். என் தீமைகளைப் பொறுக்கவென வேண்டிக் கபீரரிடத்தில் விட்டு என்னை. அநுக்கிரகிக்க வேண்டுமென அவ்வாறு கருணை செய்தனர். அவ்விடமிருந்து ஞானதேவரும் நாமதேவரும் பல தலங்களுந் தரிசித்து மார்வாட தேசஞ்சென்று தாகத்தாலே ஓர் கிணற்றின் கரையடைந்து அவ்விடத்தில் கிணற்றில் இறங்க வழிதெரியாமல் திகைத்து நிற்கையில் நாமதேவர் பெருமாளைத் துதிக்கக் கிணற்று நீர் மேல் வந்து ஒழுகிற்று, இருவரும் உண்டு தாகம் தணிந்தனர். பின் இருவரும் நாகேசுரமடைந்து ஹரிபஜனை செய்கையில் அங்கிருந்த வேதியர் நீங்கள் சூத்திரர்கள் நீவீர் அகன்று போமென்று கோபிக்க இவ் விருவரும் ஹரிபஜனை செய்ய நாகேசர் இவர்பக்கந் திரும்பினர். இதனால் வேதியரெல்லாம் வியப்புற்று நாமதேவரை வணங்கிப் பொறுத்தருளவேண்டு மென்றனர், பின்னர் பண்டரிபுரமடைந்து திருமாலை வணங்கத் திருமால் அவருக்குத் துளபமணிந்து கண்ணீர்மாற்றி மலர்மகளிடத்து நாமன் விரதபூர்த்திக்கு வேதியர்க்கு விருந்தளிக்க வெனக் கட்டளையிட்டுப் பெருமாளும் பின்சென்று சந்திரபாகை தீர்த்தக் கரையிலிருந்த வேதியரைநோக்கி நாமன் செய்யும் விருந்திற்கு வருகவென வழைத்து அவருக்கு முந்திக் கோயிலையடையத் திருமகள் அஷ்டசித்திகளைக் கொண்டு வேண்டியவைகளைச் செய்ய நாமரும் மங்கள ஸ்நானஞ்செய்து மந்திரமோதி விருந்தளித்து விரத முடித்தனர். பின்பு அந்த வேதியர்கள் காணச் சூத்திரனாக வந்த பெருமாளுடன் உண்ண, வேதியர்கள் கோபித்துச் சந்திரபாகை தீர்த்த ஸ்நானஞ் செய்து தக்ஷிணை கொடுக்கவென அவ்வாறு செய்து கோயிலடையத் திருமால் மீண்டும் அந்த வேதியருக்கு விருந்தளித்து அவர்களில் சிலருக்குத் தம் கையால் அமுதூட்ட எச்சில் முதலிய தம்மேல் தெறிக்க அவ்வேதியர்கள் அருவருத்தனர். அதனால் திருமால் தன் உண்மை உருகாட்டினர். பின் கியானதேவர் பெருமாளை வணங்கப் பெருமாள் நீ இந்த வேதியர்களுக் கெல்லாம் உபதேசஞ்செய்க எனக் கட்டளையிட்டனர். பின்பு ஒருநாள் ஞானதேவர் பெருமாளை நோக்கி எனக்குச்சமாதி வேண்டுமெனக் கேட்கப்பெருமாள் பாகவதர்களை யெல்லாம் வரவழைத்து ஞானதேவர்க்குக் கார்த்திகை மாதம் கிருஷ்ணபக்ஷத்தில் திருவோண நக்ஷத்திரத்தில் இந்திராயணிக் கரையில் இயலளிந்தி என்னுமூரில் சித் தேச்வரன் கோயிற்கருகில் சமாதி தந்த னர். பின்பு நாமதேவரும் ஞானதேவர் பிரிவாற்றாமையால் ஆறுமா தமிருந்து நீங் கினர். பின் நிவர்த்தி தேவருக்குத் திரி யம்பகத்திலும் சோபானுதேவருக்கு ஒரு வருஷத்திற்குப் பின்னும் சமாதி தந்தனர்.

கிரக மறைவுத்தானங்கள்

சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது இவர்கள் இலக்கினத்திற்கு 8 வது 12 வது வீட்டிலிருந்தால் மறைவு, சந்திரன், புதன், குரு, 3 வது, 6 வது, 8 வது, 12 வது வீட்டில் இருந்தால் மறைவு.

கிரகங்களின் நட்டாட்சியுச்ச முதலிய

மேடச்செவ்வாய், இடபசுக்ரன், மிதுன புதன், கர்க்கடகசந்திரன், சிங்காதித்யன், கன்னிபுதன், துலாசுக்ரன், விரிச்சிக செவ்வாய், தனுவியாழன், மகரச்சனி, கும்பச் சனி, மீனவியாழன் எனக் கோட்களுக்கு ஆட்சியானவாறு காண்க. இவற்றின் நவாம் சமாவது; மேடத்திற்கும் சிங்கத்திற்கும் தனுவிற்கும் மேடமுத லொன்பது. இடபத்திற்கும் கன்னிக்கும் மகரத்திற்கும் மகரமுத லொன்பது. மிதுனத்திற்கும் துலாத்திற்கும் கும்பத்திற்கும் துலாமுத லொன்பது. கர்க்கடகத்திற்கும் விருச்சிகத்திற்கும் மீனத்திற்கும் கர்க்கடகமுத லொன்பதும் நவாம்சமாம். உச்சமதியுச்சம் நீசம் அதிநீசம்; ஆதித்தனுக்கு மேடமுச்சம், இதிற் 10ம் பாக மதியுச்சம். சந்திரனுக்கு இடபமுச்சம், இதில் 3ம் பாகமதியுச்சம், செவ்வாய்க்கு மகரமுச்சம், இதில் 28ம் பாகமதியுச்சம். புதனுக்கு கன்னியுச்சம், இதில் 15ம் பாகமதியுச்சம். வியாழனுக்கு கர்க்கடச் முச்சம், இதில் 27ம் பாகமதியுச்சம், சுக்ரனுக்கு மீனமுச்சம், இதில் 27ம் பாக மதியுச்சம் சனிக்குத் துலாமுச்சம், இதில் 20ம் பாகமதியுச்சம் என அறிக. சொன்ன அடைவே உச்சத்திற்கு 7 ஆம் இராசி நீசம் என்றும், அதிற் சொன்ன பாகை அதிநீச மென்றும் அறியப்படும். (விதானமாலை)

கிரகங்கள்

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சநி, இராகு, கேதுக்களாம். இவர்களின் முறையே புத்திரர், லிங்கம், நிறம், வடிவம், சாதி, பாஷை, குணம், (சரம், ஸ்திரம், உபயம்) முப்பிணி, திக்கு, லோகம், ரத்தினம், தானியம், புஷ்பம், சமித்து, சுவை, வாகனம், முதலிய வருமாறு: சூரியன்; காலன், ஆண், செகப்பு, சமனர், க்ஷத்திரியர், சமஸ்கிருதம், குரூரர், ஸ்திரம், தாமதன், பித்தம், நடு, தம்பாக்கு, மாணிக்கம், கோதுமை, செந்தாமரை, எருக்கு, கார்ப்பு, தேர். சந்திரன்; கலைஞானபாதன், பெண், வெள்ளை, குறுமை, வைசியன், தமிழ், சௌமியர், சரம், சத்வம், சிலேத்மம், தென்கிழக்கு, ஈயம், முத்து, நெல், வெள்ளல்லி, முருக்கு, தித்திப்பு, விமானம். செவ்வாய்; கரேசன், ஆண், செகப்பு, குறியர், ஷத்திரியர், மந்திரம், குரூரர், சரம், பித்தம், தெற்கு, செம்பு, பவளம், துவரை, செண்பகம், கருங்காலி, துவர்ப்பு, அன்னம். புதன்; அர்த்த பிரகரணன், அலி, பச்சை, நெடுடுமை, வைசியர், சோதிஷம், சௌமியர், உபயம், தாமதம், வாதம், வடகிழக்கு, பித்தளை, பச்சை, பச்சைப்பயறு, வெண்காந்தள், நாயுருவி, உப்பு, குதிரை, வியாழன்; யமகண்டன், பெண், மஞ்சள், நெடுமை, பிராமணன், சமஸ்கிருதம், சௌமியன், உபயம், சத்வம், வாதம், வடக்கு, பொன், புட்பராகம், கடலை, முல்லை, அரசு, தித்திப்பு, யானை. சுக்கிரன்; விஷகடிகன், பெண், வெள்ளை, சமனர், பிராமணன், சமஸ்கிருதம், சௌமியன், இராசதம், சிலேத்மம், கிழக்கு, வெள்ளி, வைரம், மொச்சை, வெண்டாமரை, அத்தி, தித்திப்பு, கருடன். சனி; குளிகன், அலி, கறுப்பு, குறியர், சூத்திரன், அன்னியபாஷை, குரூரர், உபயம், தாமதம், வாதம், மேற்கு, இரும்பு, நீலம், எள், கருபாங்குவளை, வன்னி, கசப்பு, காகம், இராகு; அமுதகடிகன், அலி, கறுப்பு, நெடுமை, சங்கரசாதி, அன்னியபாஷை, குரூரர், சரம், தாமதன், பித்தம், தென்மேற்கு, கருங்கல், கோமேதகம், உழுந்து, மந்தாரை, அறுகு, புளிப்பு, ஆடு. கேது; அவமிருது, அலி, செகப்பு, நெடுமை, சங்கரசாதி, அன்னியபாஷை, குரூரர், சரம், பித்தம், வடமேற்கு, துறுகல், வைடூரியம், கொள், செவ்வல்லி, தருப்பை, புளிப்பு, சிங்கம். கிரககேந்திர சதுட்டயம்; (4) லக்ன கேந்திரம், சதுர்த்தகேந்திரம், சப்தமகேந்திரம், தசமகேந்திரம். கிரக நட்பு; சூரியனுக்கு குருவும்; சந்திரனுக்கு புதனும் குருவும்; செவ்வாய்க்கு புதனும் சுக்கிரனும்; புதனுக்கு சந்திரனும், செவ்வாயும், குருவும், சுக்கிரனும், சநியும்; குருவுக்கு சூரியனும், சந்திரனும், புதனும், சுக்கிரனும்; சுக்கிரனுக்கு செவ்வாயும், புதனும், குருவும், சனியும்; சனிக்கு புதனும், குருவும், சுக்கிரனும், நட்பாம். கிரக பலக்குறை சதுட்டயம் (4) மூன்றாமிடம், ஆறாமிடம், எட்டாமிடம், பன்னிரண்டாமிடம், இவற்றைத் திருதிய சஷ்டாஷ்டக மென்பர். கிரகபல சதுட் டயம் (4) தனஸ் தானம், இலாபஸ் தானம், கேந்திரஸ் தானம், திரிகோணஸ் தானம். கிரகப்பகை: சூரியனுக்கு குரு நீங்கிய கிரகங்களும், சந்திரனுக்குப் புதன், குரு, நீங்கிய கிரகங்களும், செவ்வாய்க்கு புதன், சுக்கிரன், ஒழிந்த கிரகங்களும், புதனுக்கு சூரியனும், குருவுக்கு செவ்வாயும், சந்திரனுக்கு சூரியனும், சந்திரனும், சனிக்கு சூரியனும், சந்திரனும், செவ்வாயும் பகைவராம். சுபக்கிரகங்கள்: பூரணசந்திரன், குரு, முழுச்சுபர்; சுக்ரன் முக்காற்சுபன் புதன் அரைச்சுபன்; குறைந்தசந்திரன், காற்சுபன்; சந்திரன் அமாவாசையில் புதனுடன் கூடியிருக்கின் முக்காற் சுபன்; பாவியரோடு கூடிய புதன் காற்சுபன்; புதன் சுபரோடு சேர்ந்தால் சுபன். பாபக்கிரகங்கன் சனி, இராகு, கேது முழுப் பாபிகள்; செவ்வாய் முக்காற்பாவி; சூரியன் அரைப்பாவி; பாம்புகளோடு கூடிய புதனும் சந்திரனும் காற்பாவி; இராகு வுடன் கூடிய குரு முழுப்பாவி; புதன் பாவிகளோடு சேர்ந்தால் பாவி.

கிரகங்கள் ஒவ்வொரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம்

சூரியன் மாதம் 1, சந்திரன் 2 1/4 நாள், செவ் 1 1/2 மாதம், புதன் 1 மாதம், வியாழன் 1 வருஷம், சுக்ரன் 1 மாதம், சனி 2 1/2 வருஷம், இராகு 1 1/2 வருஷம், கேது 1 12/ வருஷம்.

கிரகசன்

ஒரு காபாலி மதத்தவன், சங்கராசாரியரை யெதிர்த்தவன்.

கிரகண சூலம்

சந்திரகிரகணமும் சூரியகிரகணமும் கிரகத்தாத் தமயமாகில் முன்னே 3 நாட்கள் தோஷமாம், கிரகத்தோதயமாகில் பின்னே 3 நாட்கள் தோஷமாம். முழுக்கிரகணமாகில் முன் 7 நாட்களும், பின் 7 நாட்களும் தோஷமாம். அரைக்கிரகணமாகில் முன்னே 3 நாட்க ளும், பின்னே 3 நாட்களும் தோஷமாம், பக்ஷக்கிரகணமாகில் இடையிலுள்ள நாட்களெல்லாங் கழிக்கப்படும். (விதான.)

கிரகணபலன்

பூராடம், ஆயில்யம், திருவாதிரை, மூலம், சதயம், உத்திராடம், இரேவதி இவை வருணமண்டல நாட்களாம். கார்த்திகை, விசாகம், பூசம், பூரட்டாதி, மகம், பூரம், பரணி இவை அக்னி மண்டல நாட்களாம். உரோகணி, அனுஷம், அவிட்டம், கேட்டை, திருவோணம், உத்திரட்டாதி இவை பூமண்டலமான நாட்களாம். அசுவனி, மிருகசீரிஷம், புனர்பூசம், அத்தம், சித்திரை, சோதி, உத்திரம் வாயு மண்டல நாட்களாம். வருணமண்டலநாளில் கிரகணமுற்றால் நலம் பூமண்டலம், மத்திமம், வாயு மண்டலத்தாயின் வாயுபீடை. அக்னிமண்டலமாயின் யுத்தம், துர்பிக்ஷமாம்.

கிரகணபுண்யகாலம்

இராகு கேதுக்கள் இருவரும், தேவர்கள் அமுதம் புசித்த காலையில் தாங்களும் தேவவுருக்கொண்டு உடனிருப்பதைச் சூரியசந்திரர்கள் திருமாலுக்குச் சமிக்கையாகக் காட்டினர். இதனையறிந்த விஷ்ணுமூர்த்தி அவர்களைக் கொலை புரிந்தனர். அசுரரிருவரும் அமுதம் புசித்த அளவும் தேகம் பெற்றுத் தங்களைக், காட்டிக்கொடுத்த சூரிய சந்திரர்களை மறைத்து வரும் காலம். இக்காலத் தில் பிதுர்க்களையெண்ணித் தருப்பணாதி காரியங்களியற்றின் நற்கதி அடைவர்.

கிரகணம்

எல்லாம் கிரகங்களும் பூமியின் கோளாக்ருதிகளாக இருக்கின்றன. அவற்றுள் சூரியவொளியால் மற்றக் கிரகங்களும், பூமியும், பிரகாசத்தோடே கூடி இருக்கின்றன. அவ்வொளி கிரக பூமி களின் ஒருபுறத்தைப் பிரகாசப்படுத்தும் போது, அவற்றின் மறுபக்கம் இருளாகின்றது. இவ்விருளுக்கு நேரே அகப்பட்ட கிரகங்களும் இவ்விருளால் தடுக்கப்பட்ட கிரகங்களும் நக்ஷத்திரங்களும் காணப்படா. அவை தாம், சூரியசந்திர அங்காரகனாதியாய ஐந்து கிரகங்களின் கிரகணங்கள். இவற்றுள் சூரிய கிரகணமாவது: சந்திரன் தன்னுடைய உபரிபாகத்தில் சஞ்சரித்து வரும் ஆதித்தனுக்கு நேராக வருங்காலத்தில் ஆதித்தனுடைய ஒளி சந்திரனுடைய மேற்பாகத்தைப் பிரகாசப்படுத்துகிறது. நாம் காணுகிற மறுபுறத்திற்குச் சூரியனுடைய ஒளி இல்லாதபடியால் இருளாகிறது. இவ்வகை இருள் வடிவாகத் தோற்றும் சந்திரபிம்பம், சூரிய பிம்பத்தினுடைய நேர் விலகிப்போகிற வரையில் சூரியனை மறைத்து நாம் காணாமற் செய்கிறது. அது தான் சூரியகிரக ணம் என்னப்படும். சூரியனும் சந்திரனும் நேராக வருவது அமாவாசையின் முடிவிலானதால் அது சந்திராநுஷ்டானப்படி மாசாந்தம் என்று சொல்லப்படும். இதனைத்தவிர வேறெந்தத் திதிகளிலுங் சூரிய கிரகணம் வரமாட்டாது. இவ்வாறே சந்திர கிரகணமாவது: சந்திரன் சூரியனுக்கு ஆறு இராசி தாண்டி நேராகப் பிரிந்து வருகிறபோது சந்திரனுடைய மேற்புறம் இருளாகவும் நாம் காணும் மறுபுறம் பிரகாசமாகவும் வரும். அந்தச் சமயத்தில் சூரியனுடைய ஒளி பூமியின் மறுபுறத்தில் இல்லாதபடியால் பெரியதாகிய பூச்சாயை உண்டாகும். அப்போது சந்திரன் பூச்சாயைக்கு நேராக அதிலே மறைந்து வெளியில் வருகிற வரையில் சந்திரனை நாம் காணமாட்டோம். அது தான் சந்திரகிரகணம். இவ்வகை சூரியனுக்கு ஆறு ராசி பிரிந்து பூச்சாயைக்கு நேராகச் சந்திரன் வருவது பூரணையின் முடிவிலானதால் அதற்குச் சந்திராநுஷ் டானப்படி பக்ஷாந்தம் என்று கூறப்படும், இதனைத் தவிர வேறெந்தத் திதிகளிலும் சந்திரகிரகணம் உண்டாகமாட்டாது. இவ்வாறே அங்காரகாதி நக்ஷத்திர கிரகணங்களை நிச்சயித்தல் வேண்டும். அன்றி ஒன்றுக்கொன்று நேரே தடுத்து வரும்போதும் கிரகணம் நிச்சயிக்கலாம். இதனாலே சந்திரன் பூச்சாயையிலே பிரவேசித்து மறைந்து தன் கிரகணத்தை உண்டுபண்ணிக் கொள்ளுகிறான் என்றும், உபரிபாகத்தில் வரும் சூரியனை மறைத்துச் சூரிய கிரகணத்தை உண்டுபண்ணுகிறான் என்றும், அதி நிச்சயமாகவும் யுக்தியாகவும் இருக்கையில் நம் புராணங்கள் இராகு கேதுக்கள் சந்திரசூரியரை மறைப்பதாக விரோதங் கூறியிருப்பது என்னையோ வெனில் சமாதானம் கூறுவாம். செவ்வாய் முதலிய ஐந்து கிரகங்களுக்குள் ஒவ்வொன்றிற்கும் அதிர்ஷ்டங்களாக இரண்டு பாதக் கிரகங்கள் உண்டு. அதுபோலவே சந்திரனுக்கும் இரண்டு பாதக்கிரகங்கள் உண்டு. அவற்றின் பூர்வபாதன் இராகு என்றும், இரண்டாவது பாதன் கேது என்றும் சொல்லப்படும், முதல் பாதன் இருந்த ஏழாவது பாதத்தில் இரண்டாவது பாதன் இருப்பன். இந்தப் பாதக் கிரகங்களுடைய பிரவிர்த்தி என்னவெனில், நேரே கிழக்குமேற்காக இருப்பது கடிகாமண்டலம், அதிலிருந்து இருபத்தினாலு பாகைக்குத் தெற்கும் வடக்கும் பிரிந்திருக்கிறது. அபக்கிரம் மண்டலம் அதில் சூரியன் ஸ்திரமாய்ச் சஞ்சரித்து வருவதால் அதற்குச் சூரியமார்க்கம் என்று பெயர் கூறப்படும். அச்சூரிய மார்க்கத்தில் தத்தம் கிரகமார்க்கங்களை இரண்டு சந்தியில் பொருத்திவைக்கவும், இரண்டு சந்தியில் பிரித்துவைக்கவும் செய்கிறது. எவ்வகையெனின் செவ்வாயின் பூர்வபாதன் செவ்வாயின் மார்க்கத்தை ஆதித்தமார்க்கத்துடன் ருஷபம் பத்தாவது பாகையிலும், இரண்டாவது பாதன் விருச்சிகம் பத்தாவது பாகையிலும், பொருத்தி வைக்கிறார்கள், சிங்கம் பத்தாவது பாகையில் ஒன்றரைப்பாகைக்கு வடக்கும், கும்பம் பத்தாவது பாகையில் ஒன்றரைப்பாகைக்குத் தெற்கும், பிரித்துவைக்கிறார்கள். புதனுடைய் பூர்வ பாதன் புதபாதத்தை ஆதித்த மார்க்கத்துடன் மேஷம் இருபதாவது பாகையிலும், இரண்டாவது பாதன் துலை இருபதாவது பாகையிலும், பொருத்தி வைக்கிறார்கள், கடகம் இருபதாவது பாகையில் இரண்டு பாகைக்கு வடக்கும், மகரம் இருபதாவது பாகையில் இரண்டுபாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். குருவினுடைய பூர்வ பாதன் குருவினுடைய மார்க்கத்தை ஆதித்திய மார்க்கத்துடன் மிதுனம் இருபதாவது பாகையிலும், இரண்டாவது பாதன் தனுசு இருபதாவது பாகையிலும் பொருத்தி வைக்கிறார்கள். கன்னி இருபதாவது பாகையில் ஒரு பாகைக்கு வடக்கும், மீனம் இருபதாவது பாகையில் ஒரு பாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். சுக்கிரனுடைய பூர்வபாதன் சுக்கிய மார்க்கத்தை ஆதித்தமார்க்கத்துடன் இருஷபாந்தத்திலும், இரண்டாவது பாதன் விருச்சிகாந்தத்திலும் பொருத்தி வைக்கிறார்கள். சிங்காந்தத்தில் இரண்டு பாகைக்கு வடக்கும், கும்பாந்தத்தில் இரண்டு பாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். சனியினுடைய பூர்வபாதன் சனி மார்க்கத்தை ஆதித்திய மார்க்கத்துடன் கடகம் பத்தாவது பாகையிலும், இரண்டாவது பாதன் மகரம் பத்தாவது பாகையிலும் பொருத்தி வைக்கிறார்கள். துலை பத்தாவது பாகையில் இரண்டு பாகைக்கு வடக்கும், மேஷம் பத்தாவதுபாகையில் இரண்டு பாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். இவர்களுடைய பாதக் கிரகங்களுக்குக் கதி வெகுகாலம் ஆகிறபோது ஒருகலை பேதம் வருவதால் அவர்களுடைய மார்க்கத்திற்கு அதிக பேதம் வரமாட்டாதென்பது விசாரித்து அறியலாம். சந்திரனுடைய பாதக்கிரகங்களாகிய இராகு கேதுக்கள் இருக்கிற இடங்களில் சந்திரமார்க்கத்தை ஆதித்தமார்க்கத்துடன் பொருத்துகிறார்கள். முதற்பாத னாகிய இராகு இருக்கிற நான்காம் இராசியில் நாலரைப்பாகைக்கு வடக்கும், இரண்டாம்பாதனாகிய கேது இருக்கிற நான்காம் இராசியில் நாலரைப்பாகைக்குத் தெற்கும் பிரித்துவைக்கிறார்கள். இந்தப் பாதக்கிரகங்களுக்குக் கதி இருக்கிறபடியாலே சந்திர மார்க்கம் ஸ்திரம் இல்லாமல் எப்போதும் சஞ்சரித்து வருகிறது. இந்தப்படி சூரிய மார்க்கத்திலிருந்து தெற்கும் வடக்கும் பிரித்து வைக்கப்பட்டதற்கு விக்ஷேபம் என்றும், சந்திர அங்காரகாதிகள் சஞ்சரித்து வருகிற மார்க்கத்திற்கு விக்ஷேபமண்டலமென்றும், பெயர் சொல்லப்படும். இவ்வாறு சந்திரமார்க்கம் சூரிய மார்க்கத்துடனே பொருந்தியிருக்கிற மாதத்திலும், அதற்கு முன்பின்னிருக்கிற மாதங்களிலுமாக வருஷத்தில் மூன்றுக்குக் குறைவும் ஏழுக்கு அதிகமும் வராமல் சந்திரசூரிய கிரகணங்கள் உண்டாம். மற்ற மாதங்களில் மார்க்கத்தினுடைய வித்தாரதினாலே ரவி சந்திரபூச்சாயா பிம்பங்கள் ஒன்றுக்கொன்று ஸ்பரிசஞ் செய்வதற்கு நேரிடாமல் கிரகணங்கள் உண்டாகமாட்டா. இராகு கேதுக்களுக்குத் தினமொன்றுக்கு ஏகதேசம் மூன்று சலையும் பதினொரு விகலையுமாகிய வக்கிரகதி உண்டு. இந்த வக்கிரகதிப் படி கோள சக்கிரத்தில் அப்பிர தக்ஷிணமாகச் சஞ்சரித்து ஏகதேசம் பத்தொன் பது வருஷம் முடியும்போது எவ்விடத்திலிருந்து சஞ்சரிப்பதற்குத் தொடங்கினரோ அவ்விடத்தில் தாமே வந்து சேருவர். இவ்வாறு இராகு கேதுக்களுடைய மார்க்கத்தைப் பொருத்திவைத்துச் சூரிய சந்திரர் களுடைய கிரகணத்தை உண்டு பண்ணவும், மார்க்கத்தை விஸ்தாரமாக்கிக் கிரகணம் இல்லாமலிருக்கும்படியும் செய்து வருவதால், நம்முடைய புராணாதிகள் இராகு கேதுக்களை, மறைப்பதற்கு ஏதுவாகக் கூறும். திருஷ்டாந்தம் என்னவெனில், ஒரு சிற்பிசெய்த பிரதிமையைக் கண்டோர், சிலர் அதனைச் செய்தான் சிற்பி என்றும், மற்றும் சிலர் அவனது ஆயுதம் எனவும் கூறுவது போல நமது புராணிகர்கள் கர்த்தாக்களாகிய இராகு கேதுக்களை ஏதுவாகக் கூறி இருக்கின்றனர். ஆனதால் இது மாறன்றாம். (கிரகணதர்ப்பணம்.)

கிரகணஸ்நாத விரதம்

எவனுடைய ஜந்மராசியில் கிரகணம் பிடித்திருக்கிறதோ அப்படிப்பட்டவன் அந்த கிரகண காலத்தில் விதிப்பிரகாரம் விரதமிருந்து தானாதிகளைச் செய்யின் கிரகண பீடை அடையாது. இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது.

கிரகணிரோகம்

அதிசாரரோகத்தில் திரிதோஷ விகற்பத்தால், சுபாவமாகவும், சீதங்கலந்ததாகவும், செரித்ததாகவும் செரியாதாகவும், பலவிதமாகவும், பேதியுண்டாம். இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷ கிரகணியெனப் பலவிதமாம். பின்னும், உஷ்ணவாயு கிரகணி, மூலவாயு கிரகணி, குன்மகிரகணி, கருப்பகிரகணி, ஒட்டுக்கிரகணி, சங்கரகிரகணி யெனவும் பல இவை வில்வாதி லேக்யம், மதகஜ கண்டீரவ மாத்திரை முதலியவற்றால் வசமாம். (ஜீவ.)

கிரகநாடி

குரு,புதன், சனி வாதநாடி; சூரியன், செவ்வாய், இராகு, கேது பித்த நாடி; சுக்ரன், சந்திரன் சிலேத்மநாடி.

கிரகபலம்

ஆதித்யனும் சந்திரனும் உத்தராயணகாலத்துப் பலவான்கள். அல்லாதவர்கள் ஒருவருடன் ஒருவர் கூடி நிற்பினும், வகரித்திருப்பினும் பலவான்கள். உதித்து நிற்பினும், யுத்தஞ்செய்யினும், உத்தரகதி யாயினும் பலவான்களாம். சுபக்ரகங்கள் பூர்வபக்ஷத்துப் பலவான்கள், திவா நிசிகிரகபலம் சந்திரனும், சனியும், செவ்வாயும் இரவு பலமுடையர். புதன் இரவும் பகலும் பலமுடையன். ஆதித்யனும் வியாழனும் சுக்ரனும் பகல் வலியுடையர். கிரகங்கள் எல்லாம் தத்தம் கிழமையினும், தத்தம் ஆண்டினும், தத்தம் மாதத்தினும் பலமுடையர். சனியிற் செவ்வாய் பலவான். இவ்விருவரினும் புதன் பலவான். இம் மூவரினும் பிரகஸ்பதி பலவான். இந் நால்வரினும் சுக்ரன் பலவான். இவ்வைவரினுங் சந்திரன் பலவான். இவ்வறுவரினும் ஆதித்தன் பலவான். இவ்வெழுவரினும் இராகு கேதுக்கள் பலவான்கள். (விதானமாலை)

கிரகபாதம்

சூரியன், செவ்வாய், சனி நான்கு பாதம்; புதன், குரு, சுக்ரன் இரண்டுபாதம்; சந்திரன், இராகு, கேது விசேஷபாதம்,

கிரகப்பார்வை

கிரகங்களின் பார்வையையறியுமிடத்து அவன் நின்ற ராசிமுதல் 3, 10ம் கால்நோக்கு; 5, 9ம் அரை நோக்கு, 4, 8ம் முக்கால் நோக்கு; எழும் தானின்ற இராசியும் முழுநோக்கு. இவற்றிற் கால்நோக்கில் சனி வலிது. அரைநோக்கில் பிரகஸ்பதி வலியன். முக் கால்நோக்கில் செவ்வாய் வலியன், முழு நோக்கில் இவையல்லாத கிரகங்கள் வலியர். குரு 5, 7,9 ஐயும், சனி 3, 7, 10 ஐயும், செவ் 4, 7,8 ஐயும், குளிக 7,12 ஐயும் மற்றவை 7 ஐயும் பார்ப்பர். (விதானமாலை.)

கிரசனன்

தேவாசுர யுத்தத்தில் விஷ்ணு மூர்த்தியால் கொலைசெய்யப்பட்ட அசுரன்.

கிரசனாசுரன்

யமனுடன் யுத்தம் புரிந்து யமனை வென்றவன். (மச்சபுராணம்.)

கிரணை

பஞ்சநதத்தைக் காண்க.

கிரது

ஜன்மாந்தரத்திலும் இப்போதும், கிரது சமூகத்தை ஆதரித்தவனாதலால் இப்பெயர் பெற்றவன்.

கிரதுஸ்தலி

ஒரு அப்ஜரஸ்திரீ.

கிரந்தி

நரம்புகளின் முடிச்சுகளில் உண்டாம் இரணம். அவை வாதகிரந்தி, பித்தகிரந்தி, சிலேஷ்மகிரந்தி, ரத்தகிரந்தி, மாமிசகிரந்தி, மேதோகிரந்தி, அஸ்திகிரந்தி, நரம்பின்கிரந்தி சோணிதாற்புத கிரந்தி, சாத்யாசாத்ய அற்புதகிரந்தி யென்பன.

கிரன்

பிரமன் தேகத்திலிருந்த இருடி,

கிரமன்

வத்சந்திரன் குமரன்.

கிரய பத்திரம்

இல்ல முதலியவற்றை அவற்றிற்கு தக்க விலை பெற்று உரியவன் எழுதித் தருவது

கிரவுஞ்சன்

சிங்கமுகாசுரன் பட்டணத்திலிருந்த ஒரு அரக்கன். இவன், தென்னாட்டை நோக்கி வரும் அகத்தியமுனிவரை மலையுருக்கொண்டு எதிர்நின்று தன் மலையுருவத்தில் பல வழிகளைக்காட்டிக் காட்டுத் தீ, சூறாவளி முதலியவைகளைக் கொண்டு மயக்கினன். இதனை ஞான நோக்காலறிந்த முனிவர் அதிகோபங் கொண்டு தமது காத்திலிருந்த யோக தண்டத்தால் அந்த மலையைப் பல குகைகளாகக் குத்தி இம் மலையுருவாகவே யிருந்து குமாரக்கடவுள் வேலால் பிளவடையச் சாபமளித்தனர். மலையுருவடைந்த கிரவுஞ்சன், வீரவாகு தேவரை மயக்கவோடிய தாருகனுக் கிடங்கொடுத்து அவனைத் தொடர்ந்த வீரவாகுதேவருள்ளிட்ட எண்மரைத் தன்மயக்கத்தினுட்படுத்திக் குகை யிலிருத்திவிட்டுக் குமாரக் கடவுளுடன் போரிட்டு வேலாயுதத்தாற் பிளவுண்டனன்.

கிரவுஞ்சம்

கிரவுஞ்சத் தீவிலுள்ள ஒரு மலை, இது குமாரக்கடவுள் வேலால் பிளக்கப்பட்டது. கிரவுஞ்சனைக் காண்க.

கிராதன்

வேடன் வடாரண்ய மென்னுந் திரு ஆலங்காட்டு முத்தி தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து முத்தியடைந்தவன்.

கிராதமூர்த்தி

அருச்சுநன் முதலிய சிவனடியவர் பொருட்டுச் சிவமூர்த்தி கொண்ட சிவவடிவாம்.

கிராதம்

வங்காளத்தைச் சேர்ந்த தேசம், Hill Tippers, Comilla in Bengal.

கிராமணி

1, ஒரு அரக்கன், சுகேசனுக்கு மாமன். 2. தேவவதியின் தந்தையாகிய காந்தருவன், 3. சாணார்க்கு ஒரு பெயர்.

கிராமதேவதை

கிராமத்தைத் தீயபிணி முதலியவராது காக்கும் தேவதை, இரேணுகை.

கிராமத்தலைவன்

கள்வராலும், தீயொழுக்கமுள்ள அதிகாரிகளாலும் துன்பம் விளையாதபடிகுடிகளைத் தந்தை தாய்போல் காப்பவன். (சுக்~நீ.)

கிராமம் முதலியவற்றின் உருவம்

(12) வகைப்படும். அவை தண்டிகம், ஸ்வஸ்திகம்,ப்ரஸ்தரம்,ப்ரகீர்ணகம், சம்பத்காம், பராகம், பத்மகம், ஸ்ரீபரதிஷ்டிதம், ஸ்ரீவத்ஸம், வைதிகம், நந்தியாவர்த்தம், கும்பகம் என்பன.

கிராமலக்ஷணம்

பிராமணர்களால் அநுபவிக்கத்தக்க இடம் அக்ரஹாரம். அந்தணாராலு மற்றவராலும் அநுபவிக்கத்தக்கது கிராமம். கிராமாதிபதி எவ்விடத்தில் தன் எவலாளிகளுடன் இருக்கின்றாரோ அது குடிகம் அல்லது ஏகபோகம், கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் ஜனங்களாலும், பலஜாதியாராலும், தேவாலயங்கவாலும் சூழப்பட்ட இடம் நகரம். புரத்தில் வசிக்கிற வேதியர்க்கும், அந்தப் புரவாசிகளான பிராமணர்க் குளவாசமானதும், பட்டணத்திற்கு ஆவரணமானதும், வைசியர்களால் சூழப்பட்டதும் கர்வடம் எனப்படும். கொடுக்கல் வாங்கலுடன் கூடியதும், கடற்கரையடுத்ததும், தேசாந்தரத்தவரால் நிறைந்ததும், அநேக ஜாதிகளுடன் கூடியதுமானது பட்டினம். செல்வமுள்ள சிற்றரசர்களுக்கு யாது இடமோ அது சிபிரம். யானை குதிரைக்ளுடன் கூடிய இடம் சேநாஸ்தானம். இராஜக்ரஹம், பல ஜாதியர், ரகஸ்யப்ர தேச முதலியவற்றுடன் கூடியது சேநாமுகம். அதிதிகள், துறவிகளுக்கிருப்பிட மாய் அன்னம், தீர்த்தங்களுடன் கூடியது மடம். வெகு சேனைகளுடன் கூடி யவ்வாறிருப்பது வித்யாஸ்தானம். இராஜக்ர ஹத்தோடு கூடியது இராஜதானி, கிராம முதலியவற்றிற்கு அருகானது தப்சம் அல்லது சேரிகை கிராம முதலியவற்றிற்குச் சேணியர் இருப்பிடம் நகரி. (ஸ்ரீ காமிகம்.)

கிரிகாசுவன்

1, தக்ஷன் மருகன், பாரி அர்ச்சிசு. 2. கிரிசாசுவனுக்கு அர்ச்சிசு இடம் பிறந்த குமரன்.

கிரிகை

உபரிசரவசுவின் தேவி.

கிரிசா

கிரிகைபெற்ற புதல்வி, சத்யவதி.

கிரிசாகவன்

(சூ.) பெரிகிணாசுவன் குமரன்.

கிரிசுனன்

ஒரு அசுரன் தன் நண்பராகிய சம்பன் நிமி முதலியோருடன் திருமாலுடன் போரிட வந்து பல பாணங்களை யெய்து கடைசியில் அவர் சக்ராயுதத்தால் மாண்டவன், (மச்ச~புரா.)

கிரிசுவா

தக்ஷன் மருகன்.

கிரிதாலால்

இவர் பிருந்தாவனத்திலிருந்த பாகவதர். இவர் அரிநாமசங் கீர்த்தனஞ் செய்து வருகையில் சில பாகவதர் ஒரு நாள் இவரைக் கண்ணன் சந்நிதியில் பஜனை செய்யக் கூற அவ்வாறு பஜனை செய்தற்குத் தக்க உடையிலாமையால் கண்ணனை யுடைவேண்ட ஆகாயத்திலிருந்து நல்லுடைகள் விழுந்தன இதைக்கண்ட பாகவதர்கள் அன்பரைப் புகழ்ந்தனர். பின்பு தாசர் கண்ணனது சரித்திரம் நடத்தினர். ஓர் நாள்த்வாதசநாமம் தரித்த பைராகியின் பாததீர்த்தங் கொள்ளக் கண்டோர் இவரைநோக்கி நீர் பிணத்தைக் கழுவிய நீருண்டீர் ஆதலால் வேதமோத அருகரல்லீர் என்றிகழக் கேட்டு அப்பிணத்தைப் பிழைப்பிக்கக் கண்ணனை வேண்டிப் பிழைப்பித்தனர். கண்டோரிவரிடத்தன்பு பூண்டு பணிந்தனர்.

கிரிதேயு

(சங்.) ரௌத்திராசுவன் குமரன்.

கிரிபத்திரை

அனுமித்திரன் தேவி, சாக்ஷசமனுவின் தாய். சாக்ஷச மனுவைக் காண்க.

கிரியா

நவசத்திகளி லொருத்தி.

கிரியாசக்தி

இது ஞானசத்தியில் ஆயிரத் தொருகூறாய்ப் பஞ்சகிருத்யத்தை நடத்துஞ் சிவசக்தி. (சதா.)

கிரியை

1. விதாதாவென்னும் ஆதித்தன். 2. கோலாகலன் என்னும் மலைக்கும், சுத்தமதியெனும் நதிக்கும் பிறந்த பெண். 3. தருமன் எனும் மனைவின் பாரி, தக்கன் பெண். 4. கர்த்தமர் குமரி, கிருதமகருஷியின் தேவி. குமரர், வாலகில்லியர். 5. தக்ஷனுக்குப் பிரகுதியிடம் உதித்த குமரி, இமயன் தேவி 6. உத்யோகன் தேவி, இவளில்லாத இடம் செயலற்றிருக்கும்.

கிரிவிரசம்

மகததேசத்தின் இராஜதானி. இது வைஹாரம், வராகம், ருஷபம், சைத்யகம், எனும் (5) மலைகளால் சூழ்ந்தது. பரதன் தாயைப்பெற்ற பாட்டனரசு. பின்பு சராசந்தன் இதை ஆண்டனன். இப் பெயரால் மற்றொரு பட்டணமுண்டு அது கேசுய தேசத்து ராஜதானி. முதலிற் கூறியது குசிகன் நான்காம் புத்திரன் கட்டினது. இவ்விடத்தில் கௌதமருஷி யௌசீநரியெனும் சூத்ரப் பெண்ணிடம் காஜீவன் எனும் குமரனைப் பெற்றார். (பார்~சபா) Rajgir in Bahar, the ancient Capital of Magadha.

கிரிஷேயு

(சந்.) ரௌத்திராசுவன் குமரன்.

கிரீக் மதம்

இது நெடுங்காலமாய் வியாபித்துள்ளது. இம்மதத்தவர்க்கு ஆதி தேவதைகளென்றும், கவிகளின் தேவதைகளென்றும், தத்வக்ஞான தேவதைகளென்றும் மூவகைத் தேவர்களுண்டு. இவர்களில் முதலாகிய ஆதிதேவதை ஜூஸ் என்னப்படும். இந்த ஜுஸ் லோகங்களை யெல்லாம் கட்டி ஈர்த்தவனென்றும் முக்கியமானவனென்றும் கூறுவர். இவனுடைய இடம் ஒலிம்பஸ் என்னும் மலைச் சிகரம். பின்னும் அநேக தேவர்களுளர். இந்தத் தேவர்களில் யூரான் திஸ் என்னும் தேவதைகள் முதலாகவும் தீதான்ஸ் இரண்டாவதாகவுங் கூறுவர். ஆதியில் கூட்டமான பூதங்களே கயா என்னும் பூதேவியாயிற்று, அதிலிருந்து டார்ட்டாரஸ் எனும் இருள் தேவதை யுண்டாயிற்று, பின்பு இரோஸ் என்னும் பிரியதேவதையும் இதர் என்னும் தினதேவதையும் உண்டாயினர். இவர்களால் யூரானோஸ் என்னும் மோக்ஷலோக முண்டாயிற்று. பிறகு, கயாதேவதையும் யூரானஸ் தேவதையும் சங்கமித்துச் சமுத்திரங்களையும் வேறு சில தேவதைகளையும் உண்டாக்கினர். கவிகனின் தேவதை கிரேக்கர் கவிசிரேஷ்ட ராகையால் அவர்களுள் இசைட், ஓமர், அச்சிலஸ், சொபாசிலஸ், யுரிபிடீஸ் இவர்கள் புருஷர்களையும் ஸ்திரிகளையும் கிருமி கீடாதிகளையும், தேவதைகளாகப் பாவித்துப் புகழ்ந்தனர். இவர்கள் டியுஜியூஸ் இடிக்குத் தேவதையாகவும் நெப்டியூன் சமுத் திர தேவனாகவும், அபாலோ சூரியனாகவும், ஆர்டிமிஸ் சந்திரனாகவும் பாவித்து விக்கிரக ஆராதனஞ் செய்வர். தத்வத்ஞான தேவதைகள் கி. பி. 600 வது வருஷம் இருந்த தேல்ஸ் என்பவன் ஜலமே தேவதையென்றும், அனாகவமன்ஸ் வாயுவே தேவனென்றும், ஹெரிகிலிட்ஸ் என்பவன் அக்நியே தேவனென்றும், பிதகோரஸ் தேவன் ஒருவனே யென்றும், பார்மென்டீஸ் பிரசித்தமான எண்ணமே தேவனென்றும், இம்பிடோகிலிஸ் என்பவன் ஜீவாத்மாக்கள் பரமாத்மாக்கள் வேறென் றும், கார்கியஸ், அப்டிரேட், பிதகோரஸ், பிராடிகஸ், கிரிடியஸ் முதலியவர் தேவனில்லை யென்றும், சாடாயீகவ் என்பவன் பரமாத்மாவே பிரபஞ்சமாயின னென்றும், பிரேடோ என்பவன் ஜிவாத்மாக்கள், பரமாத்மாக்கள் வேறென்றும், அரிஸ்டாடல் கடவுள் ஒருவனாயினும் அவன் ஆவியுருவாயிருக்கிறா னென்றுங் கூறுவர். கிரேக்கர் ஆசாரம் இந்துக்களைப்போல் இருக்கிறது. தேவர்களுக்குப் பலியிடுகிறார்கள்.

கிரீடி

அருச்சுநன் பெயர்கள் பத்துள் ஒன்று.

கிருகதேவதை

1. இந்து தேசத்து இந்துக்கள் வீட்டில் கொண்டாடப்பட்ட தெய்வம். சிலர் சிவமூர்த்தி முதலிய திருவுருப் பேதங்களையும், வைணவர் விஷ்ணுபேதங்களையும், மற்றவர்களிற் சிலர் கும்பம் வேம்பு, புடைவை முதலிய வைத்துக் கொண்டும் பூசிப்பர். 2. கிராமத்தில் நோயணுகாது காக்குங் மாரி. 3. குடியிருக்கும் மனையில் தேவதை இருந்து குடும்பத்தைக் காக்க வேண்டுமெனக் குடும்பிகள் பூசிக்கும் தெய்வம், (உல~வ.)

கிருகத்தரின் கிருத்யா கிருத்யங்கள்

இவை இல்லறத்துணைவியுடன் கூடிய கிரகத்தன் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களாம். பிழைப்பிற்காக விகடமும் குற்சித வார்த்தையும் பேசக்கூடாது. தனக்குக் கிடைத்த மட்டில் திருப்தி அடையவேண்டியது. அவனவன் ஜாதிக்குக் கூறிய நித்யகருமங்களை மறவாமாற் செய்தல் வேண்டும். பாட்டுப் பாடுதல் கூத்தாடுதல் முதலிய விருத்த கருமங்களைச் செய்யக் கூடாது. சப்தாதி விஷயங்களிலும் அதிகமாய் மனதைச் செலுத்தக்கூடாது. தன் மனைவியாயினும் சாஸ்திர விரோதமாய்க் காமசேஷ்டைகளைச் செய்தல் கூடாது. வயது, யாகாதி காரியம், பொருள், குலம் இவற்றிற்குத் தக வாக்கு வேஷம் புத்திகளை வகிக்க வேண்டியது. சாஸ்திராப்பியாசஞ் செய்ய வேண்டியது. பஞ்சமகா எக்யங்களை நடத்தவேண்டியது. காலைமாலைகளில் அக்கினிஹோத்திரஞ் செய்ய வேண்டியது. அமாவாசையில் தருசேஷ்டியும், பௌர்ணிமையில் பௌர்ணமாசேஷ்டியும் செய்ய வேண்டியது, கார்த்திகை மாதத்தில் ஆக்கிரயணேஷ்டியும், இருதுவின் முடிவில் சாதுர்மாசேஷ்டியும், உத்தராயண தக்ஷிணாயனங்களில் பசுவதேஷ்டியும், வசந்தகாலத்தில் அக்நிஷ்டோமமும் செய்ய வேண்டி யது. புதிதாய் விளைந்தநெல்லை ஆக்ரயணேஷ்டி செய்யாமல் தான் புசிக்கக் கூடாது. தன் வீட்டிற்கு வந்த அதிதியை ஆசனம் போசனம் சயனம் தண்ணீர் கிழங்கு பழம் முதலியவற்றால் பூசிக்கவேண்டியது. அதிதியைப் பூசிக்குங்காலத்தில் மதவிரோதிகள் குயுக்தி கூறுவோர், மோசக் கருத்துள்ளவர்கள் வரின் அவர்களுடன் வார்த்தையாடவே கூடாது. வேதம் புராணம் ஸ்மிருதி அறிந்தவர்களைப் பூசிக்கவேண்டியது. பிரமசாரி சந்நியாசிகளைப் பூசித்துத் தனக்கு உபயோகமான விருக்ஷாதிகளை நீரால் திருப்தி செய்விக்கவேண்டியது. கிரகஸ்தன் அன்ன வஸ்திரங்களுக்குக் கஷ்டப்படின் அரசனிடத்தாயினும், தன்னிடம் யஞ்ஞம் செய்துகொண்டவன் இடத்திலாயினும், தன் மாணாக்கனிடத்திலாயினும், பொருள் தேடிக்கொள்ளலாம், ஆஸ்தி இருக்கையில் கிழிந்தும் அழுக்குள்ளதுமான உடைதரிக்கலாகாது. மயிர், நகம், மீசை, தாடி இவைகளை விதிப்படி க்ஷெளரஞ்செய்து உள்ளும் புறம்பும் சுத்தனாய் அழுக்கில்லாத உடைதரித்துத் தேக ஆரோக்கியத்தின் பொருட்டு ஒளஷத சேவனமும் செய்ய வேண்டியது. மூங்கிற்றண்டம், தீர்த்த கமண்டலம், எக்யோப வீதம், தருப்பை, பவித்ரம், சுவர்னகுண் டலம் இவற்றை யெப்போதும் தரிக்க வேண்டியது. சூரியனை உதிக்கும் போழ்தும், உச்சியில் இருக்கும் போழ்தும், அஸ்தமிக்கும் போழ்தும், கிரகணகாலத்திலும், பார்க்கக் கூடாது. கன்று கட்டிய கயிற்றைத் தாண்டக் கூடாது, மழை பெய்யும் போழ்து ஒடக்கூடாது. ஜலத்தில் தன்னுருவைப் பார்க்கக் கூடாது. செல்லுமார்க்கத்தில், மண்மேடு, பசு, தெய்வம், பிராமணன், நெய்க்குடம், தேன்குடம், நாற்சந்தி, அரசு முதலிய புண்ணிய விருக்ஷங்கள் எதிர்ப்படின் வலமாகச் செல்லக்கடவன். மாதவிடாயான மனைவியுடன் பேசவும் கூடாது. அவளுடன் படுக்கவுங் கூடாது. அந்த ருதுவானவளை மூன்று நாளைக்குப் பிறகு புணர வேண்டும். தன் மனைவியுடன் ஒரு பாத்திரத்தில் புசிக்கக் கூடாது. அவள் சாப்பிடும் போதும், கொட்டாவி விடும்போதும், இருமும்போதும், தன்னிஷ்டப்படி உட்கார்ந்திருக்கும் பொழுதும், கண்களுக்கு மை தீற்றிக் கொள்ளும்போதும், எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போதும், மேல் வஸ்திரம் இல்லாதிருக்கும்போதும், பிரசவிக்கும் போதும், கணவன் பார்க்கக்கூடாது. கிரகஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் அன்னத்தைப் புசிக்கக் கூடாது. வஸ்திரம் இல்லாமல் ஸ்நானஞ் செய்யக்கூடாது, மல மூத்தி ராதிகளைச் சாம்பலிலும், மாட்டுத் தொழுவத்திலும், மார்க்கத்திலும், உழுத நிலம், ஜலம், யாகசாலை, மலை, பாழ்ங்கோயில், புற்று, ஜந்துக்கள் வசிக்கும் நிலவெடிப்புக்கள், ஆற்றங்கரை, மலையுச்சி, வாயு, அக்கினி, பிராமணர், சூரியன், பசு இவைகளைப் பார்த்துக் கொண்டும், நடந்து கொண்டும், விடக்கூடாது. தான் மலமூத்திரம் நிவர்த்திக்கும் இடத்தை உதவாத புல், செத்தை முதலியவற்றால் மறைத்து அங்கவஸ்திரத்தைத் தலையில் சுற்றிக்கொண்டு பகலிலும், இருசந்தியிலும், வடக்கு முகமாகவும், இரவில் தென்முகமாகவும், இருந்து இருமலம் கழிக்க வேண்டியது. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது. புணர்ச்சிக்காலம் அன்றி மற்றைக் காலத்தில் மாதர்களை நிர்மாணமாகப் பார்க்கக்கூடாது. அசுத்த வஸ்துவை நெருப்பில் போடக்கூடாது. கால்களை நெருப்பில் காய்ச்சக்கூடாது. தான் உயரத்தில் படுத்துக்கொண்டு கீழே நெருப்பை வைத்துக் கொள்ளக்கூடாது. அக்கினியைக் காற்புறம்வைக்கக் கூடாது. அதைத் தாண்டவும் கூடாது. எவருக்கும் பிராணாபாயம் வரும் காரியத்தைச் செய்தல் கூடாது. சந்தியாகாலத்தில் சாப்பிடவும், வழிநடக்கவும், தூங்கவும் கூடாது. பூமியைக் குச்சி முதலியவற்றால் காரணமின்றிக் கீறவுங்கூடாது. தலையில் சூட்டிய மலரைத் தானேவாங்கி எறியக்கூடாது. ஜலத்தில், மூத்திரம், மலம், கோழை, எச்சில் பட்ட வஸ்து, இரத்தம், விஷம் இவைகளைப் போடக்கூடாது. குடியிலா வீட்டில் தான் தனித்துத் தங்கக் கூடாது. வேதம், பொருள் முதலியவற்றினால் உயர்ந்தவன் தூங்கும் பொழுது அவனை எழுப்பக்கூடாது. தன்னை அழையாத காரியத்திற்குப் போகக்கூடாது. பசு, நீருண்ணுகையிலும், கன்றுக்குப் பாலூட்டும்போதும், தடுக்கலாகாது. மற்றொருவருக்கும் காண்பிக்கக்கூடாது. ஆகாயத்தில் இந்திர தனுவைக் கண்டால் அதை ஒருவருக்கும் காட்டக்கூடாது. தருமம் அறிந்தவர்கள் இல்லாதகிராமம், வியாதிக்கு இடமான கிராமம் இவைகளில் வசிக்கக் கூடாது. தான் தனியாய் வழிநடக்கக்கூடாது. பிண்ணாக்கு முதவிய சாரமில்லா வஸ்துக்களைச் சாப்பிடக் கூடாது. இராப்பகல்களில் அன்னத்தை அதிகமாகப் புசிக்கக்கூடாது. வயிற்றின் அரைப் பகுதியை அன்னத்தாலும் காற்பங்கை ஜலத்தினாலும் நிரப்பிக் காற்பங்கை வாயு சஞ்சரிக்க விடவேண்டும். உதயாஸ்தமன காலத்தில் புசிக்கக் கூடாது. மத்யான்னம் புசிப்பு, அதிகமானால் இரவில் புசிக்கக் கூடாது. தண்ணீரை இரண்டு கையால் அள்ளிக் குடிக்கக்கூடாது. பக்ஷணங்களை மடியில் வைத் துக்கொண்டு சாப்பிடலாகாது. சாஸ்திர விரோதமாய்ப் பாடவும் மத்தளம், தாளம், கொட்டவும் கூடாது. கையினால் புஜத்தைத் தட்டவும், பல்லை மூடிக்கொண்டு இருமவும், கொழுப்பினால், கழுதைபோல் கத்தவுங்கூடாது. வெண்கலப் பாத்திரத்தால் கால்கழுவல் ஆகாது. பின்னமான மண்பாத்திரத்திலும், மனதிற்கு ருசிக்காத பாத்திரத்திலும் புசிக்கக் கூடாது. அன்னியன் அனுபவித்தபாதுகை, பாதரக்ஷை, வஸ்திரம், எக்யோபவீதம், புஷ்பம், மாலை, கமண்டலம் இவைகளைத் தான் தரிக்கலாகாது. பழக்கப்படாதவைகளாயும், பசி, பிணி இவைகளால் பீடிக்கப்பட்டதாயும், பின்னமான கொம்பு, கண், குளம்பு, வால்இவைகளையுடைய எருதுகள் பூண்டவண்டியில் ஏறக்கூடாது. சாமத்துக்கு உட் பட்ட இளவெயில், பிணப்புகை, பின்னமான ஆசனம் இவைகளை நீக்கவேண்டியது. நகம் மயிர் இவைகளைத் தாமாகச் சேதிக்கக்கூடாது. நகத்தைப் பல்லினாற் கடித்து இழுக்கக் கூடாது. காரணமின்றி மண்கட்டியை உடைக்கவும், நகத்தால் ரணத்தைக் கிள்ளவும் கூடாது. எக்காரியத்திலும் பிடிவாதத்துடன் கக்ஷி சொல் லக்கூடாது. குடுமிக்கு வெளியில் பூவைச் சுற்றிக் கொள்ளக்கூடாது. எருதின் மேலேறிக்கொண்டு போகக்கூடாது. வீடு, ஊர் இவைகள் சாத்தியிருக்கையில் வேறு வழியாய்ப் போகக்கூடாது. இரவில் மரத் தினடியில் போகக் கூடாது. சொக்கட்டான் முதலிய விளையாடக் கூடாது. தன் பாதக்குறடு பாதரக்ஷை முதலியவற்றைத் தன் கையில் எடுத்துப் போகக்கூடாது. படுக்கையிலிருந்தும், இடக்கையில் அன்னத்தை வைத்துக்கொண்டும் ஆசனத்தின் மீது இலைபோட்டுக் கொண்டும் புசிக்கலாகாது. எள்ளு சம்பந்தப்பட்ட எல்லாப் பதார்த்தங்களையும் இரவில் நீக்கவேண்டியது. கௌபீனம் இல்லாமல்படுக்கலாகாது. சாப்பிட்ட கையை அலம்பாமல் வெளியில் போகக்கூடாது. கால்கழுவிய ஈரம் உலருமுன் அன்னம் புசிக்கவேண்டும், கால் ஈரம் உலர்ந்தபின் படுக்கை சேர வேண்டியது. கண்ணுக்குத் தெரியாத புதரில் பிரவேசிக்கக் கூடாது. மல மூத்ரங்களைப் பார்க்கக் கூடாது. ஆற்றைக் கையால் நீந்தித் தாண்டக்கூடாது. ஆயுளை விரும்பினோன் மயிர், சாம்பல், எலும்பு, ஒட்டாஞ்சல்லி, மண்டையோடு, பஞ்சு, உமி இவைகளில் அறிந்து நிற்கவும் கூடாது. பதிதர், சண்டாளர், புழுக்கையர், மூர்க்கர் பொருளால் செருக்கடைந்தோர், வண்ணான் முதலிய தாழ்ந்த ஜாதியருடன் ஒரு மரநிழலிற்கூட வசித்தல் கூடாது. இரண்டு கைகளையும் சேர்த்துத் தலையைச் சொரியலாகாது. சாப்பிட்டுக் கைகால் சுத்திசெய்யாமல் இடது கையால் தலையைத் தொடக் கூடாது, நோயில் லாது இருக்கும் போது தலை நீக்கி ஸ்நானஞ் செய்யக் கூடாது. கோபத்தினால் ஒருவன் தலைமயிரைப் பிடித்து இழுக்கவும், தலையில் அடிக்கவுங் கூடாது. ஒரே தினத்தில் ஸ்நானஞ்செய்து பின் அப்யங்கனம் செய்யக்கூடாது. க்ஷத்ரியனல்லாத அரசன், கசாய்காரன், திலகாதகன், கள்ளுக் கடைக்காரன், வேசைத் தொழில் செய்பவள் இவர்களிடம் தானம் வாங்கக் கூடாது. இரவில் நான்காம் சாமத்தில் விழித்துக்கொண்டு தருமார்த்தத்தைப் பெறுமார்க்கத்தை ஆலோசிக்க வேண்டியது. பின் நித்யகர்மாதிகளைச் செய்ய வேண்டியது. தன் மனைவி ருதுஸ்நானம் செய்திருந்தாலும் அமாவாசை, சதுர்த்தசி, அஷ்டமி, பௌர்ணமி இந்த நாட்களில் புணரக்கூடாது, புசித்தபின் காரணமின்றி வேடிக்கையால் ஸ்நானஞ் செய்தல் கூடாது. நோயாளி தலைமுழுகக் கூடாது. பிறப்பு இறப்புக் கிரகண காலமன்றிப் பாதிராத்திரியில் ஸ்நானஞ்செய்யலாகாது. ஜலத்தின் குணந்தெரியாத குளம் முதலியவற்றில் ஸ்நானஞ்செய்யக் கூடாது. தெய்வபிம்பங்கள், மாதா, பிதா, அரசன், விரதானுஷ்டான முள்ளவன், ஆசாரியன், யாகத்தில் தீக்ஷை பெற்றவன் இவர்களுடைய நிழலை மிதிக்கக்கூடாது. நடுப்பகலிலும், அர்த்தராத்திரியிலும், இருசந்தியிலும், நாற்சந்தியிலும் நிற்கக்கூடாது. அறைப்புஸ்நானம் செய்த ஜலம், மூத்திரம், மலம், உதிரம், கோழை, உமிழ்ந்த தாம்பூலம், வாந்தி யெடுக்கப்பட்டவை இவைகளில் நிற்கக்கூடாது. சத்துரு, அவனுக்கு நண்பன், அதர்மம் உள்ளவன், திருடன், பிறன் மனைவி இவர்களுடன் சிநேகிக்கக் கூடாது. பிறன் மனைவியைப் புணரின் ஆயுள் குன்றும். சாமளவும் பொருள் தேட முயலவேண்டும். சத்தியமாகப் பார்த்த தைச் சொல்ல வேண்டியது. அமங்கலமாயிருப்பினும் முதலில் மங்கலமென்றே அமங்கலத்தைத் தெரிவிக்க வேண்டியது. தனித்தும் ஜாமத்திலும் இன்னான் என்று அறியாதவனுடனும் வழிநடக்கக் கூடாது. குரூபிகள், கல்வியறிவிலார், கிழவர், ஈன சாதியார், தரித்திரர் முதலியவர்களை அவர்கள் தோஷங்களைச் சொல்லிப் பரிகசிக்கக் கூடாது. புசித்தகையைச் சுத்தி செய்யாமல் பசு, பிராமணன், அக்கினி இவர்களை இடதுகையால் தீண்டக்கூடாது. அசுத்தனாகச் சூரிய சந்திர நக்ஷத்திரர்களைப் பார்க்கக் கூடாது. தனக்குத் தினவு முதலியன இல்லாதபோது இந்திரியங்களையும் மயிரையும், இரகஸ்ய ஸ்தானங்களையும் தொடக்கூடாது. தனது அக்னிக் கிரகத்திற்குத் தூரமாகவே மலமூத்ரம், பாதப் பிரக்ஷாளணம், எச்சில் போடுதல் செய்ய வேண்டும். மலநிவர்த்தி, பல்விளக்குதல், ஸ்நானஞ் செய்தல், எண்ணெயிட்டுக் கொள்ளுதல், தேவபூசை முதலியவற்றைப் பகல் பதினைந்து நாழிகைக்கு முன்பே செய்ய வேண்டும். அமாவாசை பௌர்ணமி முதலிய புண்ணிய தினங்களில் தேவதா தரிசனஞ் செய்தல் வேண்டும். மாதா பிதா குரு பெரியோர் தம் வீட்டுக்கு வரின் எதிர்கொண்டு அழைத்து ஆசனத்திருத்தித் தாம் கூப்பிய கரத்துடன் நின்று உபசரித்துப் போகையில் பின் சென்று உபசரிக்க வேண்டியது, தேவ தூஷணம் தீக்குணம் முதலிய விடவேண்டியது. ஒருவனை அடிக்கிறேன் என்று தடி முதலிய தூக்கவும் அதனால் அடிக்கவுங் கூடாது. புத்திரன் மனைவி முதலியோர் தீமை செய்யின் அவர்களைப் பிரம்பு முதலியவற்றால் தண்டிக்க வேண்டும். (ஸ்மிருதி.)

கிருகத்தில் வைக்கத்தகாத விருக்ஷங்கள்

அகத்தி, அலரி, நந்தியா வட்டம், முருக்கு, எருக்கு, பருத்தி, கருங்காலி, ஆல், புளி, கல்லால், ”பருத்தி யகத்தி பனை யெட்டி நாவல், எருக்கு முருக்கிலவை யெட்டும் பெருக்கமுடன், இல்லருகி னின்றக்கா லிந்திரனே யானாலும், செல்லப் போய் நிற்பாள் திரு. “

கிருகபதி

ஒரு அக்னி, இவன் தேவாவிஸ்ஸை சுமந்து கொண்டு தேவர்க்குக் கொடுப்பவன், இவன் தேவர்க்கு ஏவல் செய்யப் பயந்து கடலில் ஒளிந்தனன். அக்கடலின் மீன்கள் இவனைத் தேடிய தேவர்க்கு இவனது இருப்பைக் கூறின. அதனால் இந்த அக்னி கோபித்து அந்த மீன்களைச் சனங்களுக் காகாரமாகச் சபித்தனன்.

கிருகஸ்தன்

பிரமசரிய முடித்த பிரமசாரி ஆசாரியர் கட்டளைபெற்றுக் கிருகமடைந்து தந்தையின் அநுமதி பெற்று வருணத்திற்குத் தக்க கன்னிகையை மணக்க வேண்டியது. அக்கன்னிகை, தன் தாயின் ஏழு தலைமுறைக் குட்பட்டவளாயும், தன் தகப்பன் கோத்திரத்திற் பிறவாதவளாயும் இருத்தல் வேண்டும், மணமகன், புருஷப்பிரசை இல்லாமல் பெண்களையே பெறும் குலம், தேகத்தில் நீண்ட மயிருள் ளவன் குலம், வேதமோதாதவன் குலம், மூலரோகம், க்ஷயரோகம், பெருவியாதி, வெண்குஷ்டம், குஷ்டம், அக்னிபுஷ்டி இன்மையுள்ள குலங்களை நீக்கவேண்டியது. செம்பட்ட மயிருள்ளவள், அதிக உயரம் உள்ளவள், தீராப் பிணியுள்ளவள், மயிரில்லாதவள், உடம்பெல்லாம் மயிருள்ளவள், குரூரமாகப் பேசுகிறவள், செங்கண்ணி, நக்ஷத்திரம், நதி, ஈனசாதி, மலை, பக்ஷி, பாம்பு, வேலைக்காரி, பயங்கரமான பெயருள்ளவர்களை மணத்தலாகாது. அழகுள்ளவளாயும், நல்ல பேருள்ளவளாயும், அன்னம், யானை யிவற்றை யொத்த நடை, மெல்லிய சரீரம், மயிர், பல், சிறு குரல் உள்ளவர்களை மணக்கவேண்டும். மணந்து பிரமயஞ்யம் முதலிய ஐந்து யஞ்யங்களை (யந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, தண்ணீர்க்குடம் முதலியவற்றை யுபயோகித்துக் கொள்வ தால் உண்டான பாவங்களை நீக்குயக்ஞம்) செய்து தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தாய், தந்தை, தான் என்பவர்களைக் காத்துத், தன்னை நீங்கிய மற்ற மூன்று ஆச்ரமத்தாரையும் ஆதரித்து, மிகுந்த அன்ன முதலிய பக்ஷணங்களைத் தான் தன் மனைவி மக்களுடன் உண்டு செய்தக்க செய்து சுகித்திருப்பவனாம் (மநு)

கிருசன்

ஒரு இருடி, சிருங்கி, தன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைச் சுற்றியவன் யாரென்று தேடியபோது இக்குற்றஞ் செய்தவன் பரீக்ஷித்தென்று தெரிவித்தவன்.

கிருச்சயதன்

1. சுகோத்ரன் குமரன். (சுநகன்). 2. முகுந்தையைக் காண்க.

கிருச்சிரம்

இத்தனை காலம் வரையிலின்ன வுணவை யிவ்வளவு இந்த முறையாலே கொண்டு அவ்வளவிலே பிராணனைத் தரிக்கச்செய்து பசியைப் பொறுத்தல். இதில் சாந்தாபனம், சாந்திவியனம், பிரஜாபத்திய பாரகம், தப்தம் முதலிய விரதங்கள் சேர்ந்தவை.

கிருச்சிராகரம்

கலிங்க நாட்டிலுள்ள ஒரு தீர்த்தம்.

கிருதகன்

வசுதேவருக்குப் பத்திரையிடமுதித்த குமரன்.

கிருதகர்மா

தனகன் குமரன்.

கிருதகிருத்யன்

விரக்தனாயிருந்த திரிகர்த்தன் குமரன்.

கிருதகோடி

அளவை நூல் செய்த முனிவன். (மணிமேகலை)

கிருதகௌசகம்

விதர்ப்ப தேசத்திலுள்ள ஒரு பட்டணம். In Berar, once the Capital of Vidarbha.

கிருதக்ஷணன்

விதேகராசனுக்கு ஒரு பெயர்.

கிருதசன் மதன்

சுநகன் தந்தை, சுகோத்ரன் புத்ரன், க்ஷத்ரவிருத்தன் பேரன்.

கிருதசமகன்

ஒரு இருடி. இருக்வேதத்பின் இரண்டாவது காண்டத்தின் கீதங்களுக் கதிகாரி.

கிருததன்வா

கிருஷ்ணனால் வெல்லப்பட்ட அரசன்.

கிருதத்துதி

சித்திரகேதுவின் தேவி, அங்க நாட்டரசன் பெண்.

கிருதத்துவசன்

1. (சூ.) தர்மத்துவசனுக்குக் குமரன். 2. கேசித்துவசனுக்குத் தந்தை.

கிருதன்

1. இரண்யநாபனுக்கு மாணாக்கன், 2. தருமன் குமரன், இவன் குமரன் துர்மதன். 3. விதர்ப்பன் குமரன், இவனது குமரன் குந்தி. 4. வசுதேவருக்கு ரோகணியிடம் பிறந்த குமரன். 5. கம்பீரன் குமரன். 6. சயன் குமரன், இவன் குமரன் அரியஸ்வன். 7. பதினான்காம் நாள் பாரதப்போரில் சாத்தகியிடம் போர் புரிந்தவன்.

கிருதபவன்

இன்பங் காரணமாக, வேண்டிய பொருள் தன்னிடம் இலாது அகத்தியர்க்குத் தெரிவித்துக் குறை வேண்டிய அரசன்.

கிருதமாதனம்

ஒரு வித்யாதர நகரம்.

கிருதமாலா

1. ஒரு நதி, இதில் மச்சாவதார மூர்த்தியுற்பவித்தனர். 2. மலயமலையிலுள்ள ஒரு நதி.

கிருதயுகத் தெய்வம்

கையிற் செபமாலை கொண்டு, ஞானமயமான உருவத்துடன் பக்தி வைராக்யமென்னும் கவசம்பூண்டு ஈச்வரத் தியானத்துடன் இருக்கும்.

கிருதயுகம்

சதுர்யுகத்தொன்று. இதற்கு வருஷம் பதினேழுல க்ஷத்து இருபத்தெண்ணாயிரம். யுகத்தைக் காண்க. இது முதல் யுகம்.

கிருதராதன்

மகாதிருதி புத்ரன்.

கிருதர்

பிரமன் குமரர், தேவி கிரியை.

கிருதவன்மன்

1. அச்வபதி அம்சம், பாரத முதனாள் யுத்தத்தில் கேகயனுடன் போர் புரிந்தவன். சாத்தகியுடனும் போர்செய் திறந்தவன். 2. இருதயன் குமரன், இவன், சியமந்தகமணியின் பொருட்டுச் சததன்வனிடம் சத்ராசித்தைக் கொலைபுரியத் தூண்டினவன். 3. தேவமீடனுக்குத் தம்பி, இவன் பாசறை யுத்தத்தில் இளம்பஞ்ச பாண்டவர்களைக் கொன்ற அச்வத்தாமனுக்கு உதவி புரிந்தவன்.

கிருதவீரியன்

தனகன் குமாரன், தேவி சுகந்தை. இவன், இதற்கு முன்பிறப்பில் சாம்பன் எனும் அரசனாய் வறுமையால் மாபாதகஞ்செய்து மறுபிறப்பில் இப்பெயர்கொண்ட அரசனாய்ப் புத்திரப்பேறி லாது தவத்தால் கைகாலில்லாமல் கார்த்தவீரியனைப் பெற்றனன். இவன் அநேக யாகஞ் செய்தவன். இவன் புத்திரர் பிருகு முனிவர் குமரர்களைக் கொன்றனர்.

கிருதவுஜஸ்

கிருதவீரியன் தம்பி.

கிருதவேந்தன்

பாரதவீரருள் ஒருவன்.

கிருதாக்னி

தனகன் குமரன், கிருதவீரியன் தம்பி.

கிருதாசி

1. குசநாபன் தேவி, 2. (சந்.) ரௌத்திராசுவன் பாரி, கிருதேயு முதலிய (10) பிள்ளைகளைப் பெற்றவள். இவள் ஒரு அப்சரசு. 3. ஒரு தெய்வ கணிகை, இவள் வாசு இருடியின் தவச்சாலைக்கு இந்திரனால் ஏவப்பட்டுச் சென்று அவரை மயக்க எண்ணுகையில் மகருஷி சினந்து நீசவுருக்கொளச் சபிக்கப்பட்டவள்.

கிருதாச்வன் பர்ஹிணாச்வன்

முதற்புத்திரன், ரூபாச்வன், கிருசாச்வன் என்றும் இவனுக்குப் பெயர் உண்டு. குமரன் யுவனாச்வன.

கிருதாந்தன்

ஒரு அசுரன், இவன், காளன் என்பவனுடன் கூடி ஆளியுருக்கொண்டு பாலகணபதிக்கு முன்வர இவர்களைத் துதிக்கையைப் பிடித்து இழுத்து விநாயகர் கொன்றனர்.

கிருதி

1. பிரமன் உடலில் உதித்த ஒரு இருடி. 2. (சூ.) திருதியின் குமரன், இவன் சிதேந்திரியன். 3. சந்நதிமான் குமரன், இரண்யநாபனிடத்தில் யோகங்கற்றவன். இவன் குமரன் உக்ராயுதன். 4. சுகோத்ரன் குமாரன், இவன் குமரன் உபரிசரவசு. 5. புரு குமரன், இவன்குமரன் உசீகன். 6, சவநன் குமான். 7. விபு குமரன். 8. பகுளாசவன் குமரன். 9. யமன் தேவி. தூமோர்ணை மார்க்கண்டர் தேவி. குருத்தி குபேரன் தேவி. கௌரி வருணன் தேவி. சுவர்ச்சலை சூரியன் தேவி.

கிருதிமந்தன்

யவீநரன் குமரன்.

கிருதிவந்தன்

வசுதேவருக்குத் தேவகியிடத் துதித்த குமரன்.

கிருது

1. உன்முகனுக்குப் பிரீதகேசியிடம் உதித்த குமரன். 2 தக்ஷன் மருமகன், இவனுக்குச் சந்நதியிடம் வாலகில்லியர் பிறந்தனர். 3. ஒர் வேதியன், இவன் ஒழுக்கம் குன்றி ஒருவன் சிவபூசைக்கு எடுத்துச் செல்லும் புட்பத்தைப் பறித்தணிசையில் அது பூமியில் விழச் சிவார்ப்பணமென்று எண்ணி நற்கதியடைந்தவன்.

கிருதுமான்

எமிநரன் குமரன் இவன் குமரன் சத்தியதிருதி

கிருதெளசஸ்

கிருதவீர்யன் தம்பி.

கிருதோசா

தனகன் குமரன்.

கிருத்தி

1. அணுகன் பாரி, சுகன் குமரி. 2. குசிகனுக்குப் பீவரியிடம் பிறந்தவள்.

கிருத்திகை

1. சப்த இருடிகளில் வசிட்டரொழிந்த மற்ற அறுவரின் தேவிமார். அக்னியொருகால் சத்த இருடிகளின் தேவியரை மோகித்தனன், இதையறிந்த அக்னியின் தேவியாகிய சுவாகை ஒருவேளை அவர்களால் தன்னாயகனுக்குச் சாபம் நேரிடக் கூடுமெனப் பயந்து அருந்ததி நீங்கிய அறுவரைப் போலுருக்கொண்டு அக்னியைக் கூடினள். இதையறிந்த ஆறு இருடிகளும், தம் தேவிமார் குற்றப்பட்டனர் என்று தமது தேவியரை வினாவினர், இருடி பத்தினிகள் உண்மை கூறவும் இருடிகள் தேறாராயினர். இதனாலறுவரும் தனிக்கூட்டமாக நக்ஷதாபத மடைந்தனர். இவர்களறுவரும் குமாரக் கடவுளுக்கு முலைப்பாலூட்டி விரதபல மடைந்தனர். 2, அக்னி யென்னும் வசுவின் தேவி, குமரன் ஸ்கந்தன், விசாகன்.

கிருத்திகைவீரதம்

இது கார்த்திகை மாதத்துக் கிருத்திகை நக்ஷத்ர முதல் கிருத்திகை தோறும் கந்தமூர்த்தியை யெண்ணி அநுட்டிக்கும் விரதம், இதில் உபவாசம் உத்தமம்.

கிருத்திரகூடம்

மகததேசத்தின் இராஜதாசரியாகிய இராஜகிருக நகரத்தின் அருகேயுள்ள மலை. கௌதமபுத்தர் இதன்மீதிருந்து தருமோப்சேதஞ் செய்த மலை இது பாத பங்கயமலையெனப் பெயர் பெறும்.

கிருத்திரமவிஷம்

நாபி முதலிய விஷப்பூண்டுகளையாவது, பாம்பு முதலிய செந்துக்களின் விஷங்களையாவது மற்றொரு வஸ்துவில் கலந்து கொடுப்பது.

கிருத்திராசுரன்

ஒரு அசுரன், விநாயக மூர்த்தியின் பாலப்பருவத்தில் கழுகுருக் கொண்டு அவரைத் தூக்கிச்சென்று அவரால் கழுத்திறுக்குண் டிறந்தவன்.

கிருத்திவாசன்

காசியிலெழுந்தருளிய சிவமூர்த்தி, கயாசுரன் முதலியோர் தோலைப் போர்த்ததனால் பெற்ற பெயர்.

கிருத்ரராசன்

சோணாட்டுப் புள்ளம்பூதங்குடியில் தவமியற்றி விஷ்ணு மூர்த்தியின் அருள் பெற்றவன்.

கிருத்ஸமதர்

1. இவர் இந்திரன் செய்த சத்ரயாகத்தில் சந்திரமென்னும் சாமத்தை தவறாக வுச்சரித்ததால் யாகத்தில் இருந்த சாக்ஷ சமனுவின் புத்திரரான வசிஷ்ட ரென்பவர் இவரைச் சலமில்லாக் காட்டில் பதினொராயிரத்தெண்ணூறு வருஷம் மிருகமாக இருக்கவெனச் சபிக்கப் பட்டுச் சிவபூசையால் சிவபஞ்சாக்ஷரஞ் சபித்துச் சிவபெருமானால் மிருகமுகமுடைய கணநாதனாய் லம்போதரர் கணத்தையடைந்து சாபநீங்கப் பெற்றவர். (பா~அநுசா~ம்.) (சிவபுராணம்.)

கிருபன்

1, இவன் கௌதமர் வம்சத்தில், ஏகாதசருத்ரர் அம்சத்தில் பிறந்தவன். சதாநந்தருக்கும் அரம்பைக்கும் பிறந்தவன் என்றும், சாத்துவந்த மகருஷி புத்ரன் என்றும், சிரத்துவான் குமரன் என்றுங் கூறுவர். இவன் தங்கை கிருபி. இவர்களிருவரையும் வேட்டைக்கு வந்த சந்தநுமகாராசன் எடுத்து வளர்த்தனன். தாய் சத்யத்திருதி. மருத்கணாம்சம் என்ப. 2. பாணாணாரன் நண்பன்.

கிருபாவதி

நபாகனைக் காண்க.

கிருபி

சதாநந்தர் பெண், சந்தனுவால் வளர்க்கப் பட்டவள், கிருபன் தங்கை, துரோணர் மனைவி, இவளது கற்பினைச் சோதிக்க ருத்ரமூர்த்தி தவசியுருக்கொண்டு வந்து நிருவாணபிக்ஷை கேட்டு வீரியத்தை வெளிப்படுத்தினர். அதனை அன்னத்துடன் பெட்டைக் குதிரையிடம் வைத்தனர். அக்குதிரையின் வயிற்றைப் பிளந்து கொண்டு குதிரை முகத்துடன் அசுவத்தாமா பிறந்தான். சிரத்துவான் குமரியென்ப, தாய் சத்யதிருதி.

கிருபிஷ்டன்

பிரியவிரதனுக்குப் பெரிஹஷ்மதியிட முதித்த குமரன்.

கிருமி

உசீநரன் நான்காம் புத்ரன்.

கிருமிகண்டசோழன்

ஒரு சோழன், இவன் விஷ்ணுவிற்குப் பரத்வங் கூறிய கூரத்தாழ்வார் கண்ணைப் பிடுங்கினவன் என்பர் சைவர். இந்தச் சோழனைப் பார்க்கக்கூடா தென்று கூரத்தாழ்வாரேயிவன் மீது கண் ணைப்பிடுங்கி எறிய இவனுக்குக் கிருமி ரோகம் உண்டாயிற்று; அதனால் கிருமி கண்டசோழன் என்று வைணவர்கூறுவர்.

கிருமிரோகம்

தேகத்தின் மேல் அழுக்குகள் சேர்ந்த இடம், தேகத்திற்குள் சிலேஷமஸ் தானம், ரத்தஸ் தானம், மலஸ் தானம் இவ்விடங்களில் 20 வித பூச்சிகள் உண்டாம். இவற்றில் சரீரத்தின் மேல் தலைப்பேன், சீலைப்பேன், மலத்தில் சில கிருமிகள் உண்டாம். இவற்றால் குஷ்டம் பிறக்கும், சேஷ்மத்தால் ஆமாசயத்தி லுண்டாம். (7) கிருமிகள் பெரும்பூநாகக் கிருமி, நீர்ப்பாம்புக் கிருமி, நெல்முளைக் கிருமி, சந்தநீளக் கிருமி, அணுக்கிருமி, வெண்கிருமி, செங்கிருமி. உதிரங்கூடிய நரம்புஸ்தானத்தில் (6) கிருமிகள் அவை அணுக்கிருமி, வட்டக்கிருமி, மிகுசூக்மக் கிருமி, காலில்லாக்கிருமி, செங்கிருமி, தோன்றாக்கிருமி என்பன. மலத்தில் உண்டாம் கிருமிகள் (5) ககேருகம், மகே ரூகம், சவுரசம், சலூனம், வேலிகம் என்பன. இவ்விரோகம் முருக்கம்விதை கற் கம், பாகற்குடிநீர், வாய்விளங்கக் குடிநீர், வேப்பம் நெய் முதலியவற்றால் வசமாம்.

கிருமிலாபுரம்

கிருமியால் நிருமிக்கப்பட்ட பட்டணம்.

கிருஷ்ண சயந்தி

ஆவணி மாதத்தில் கிருஷ்ணபக்ஷ ரோகணி நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் கிருஷ்ணமூர்த்தியின் திரு அவதாரத்தை யெண்ணிக் குழந்தைகளுக்குரிய பலகாராதிகள் செய்து நிவேதித்து விரதமிருப்பது,

கிருஷ்ண ஜன்மாஷ்டமி

இது ஆவணியா கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்ரம் கூடிய தினத்தில் கிருஷ்ண மூர்த்தியைப் பற்றி யுபாசிப்பது.

கிருஷ்ண துவபாயனன்

வியாசன்.

கிருஷ்ணசர்மா

சுகுணன் குமரன். வேதியன் ஒருவன், தன் மனைவியைவிட்டுத் தீர்த்த யாத்திரை செய்ய எண்ணி மனைவியை இந்த அரசனிடம் தான் வருமளவும் காக்கும்படி ஒப்புவித்துச் சென்றனன், அரசன், இந்தப் பார்ப்பினிக்கும் அவள் குழந்தைக்கும் ஆறு மாதத்திய ஆகாரம் வைத்து வீட்டை முத்திரையிட்டு மறைந்தனன். யாத்திரை சென்ற வேதியன் சிலநாள் பொறுத்துத் திரும்பி மனைவியை யொப்புவிக்கக் கேட்க அரசன் நினைவுதோன்றி வீட்டைத் திறந்து பார்க்கையில் பார்ப்பினியும் குழந்தையும் இறந்திருக்கக் கண்டு திருவேங்கடஞ் சென்று திருமால் அநுகிரகத்தால் இருவரையும் உயிர்ப்பித்தவன். (திருவேங்கடத்தல புராணம்.)

கிருஷ்ணதேவராயர்

தொண்டை மண்டலத்துச் சிற்றரசர், இவர் சபையில் விகடர் வேளாண்மகளிரைப்போல் நடித்தமையால் வேளாளர் கோபித்து இவரை மாய்த்தனர். இவர்மீது ஞானப்பிரகாச சுவாமிகள் கலம்பகஞ்செய்தனர். இவர்க்கு மந்திரி அம்பி அறம்வளர்த்தான் முதலி யார். இவர், காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதருக்குக் கோபுரமுதலிய திருப்பணிகள் செய்துவைத்தனர். இவர் காலம் சாலிவாகன சகம் (1433). இவரைச் சந்திரகிரி ராசா என்பர்.

கிருஷ்ணன்

1. ஆவணிமீ கிருஷ்ணபக்ஷம், அஷ்டமிதிதி, உரோகணி நக்ஷத்திரத்தில் வசுதேவருக்குத் தேவகிவயிற்றில் திருவவதரித்தவர். இவர் தமது பஞ்சாயுதத்துடன் தரிசனங்காட்டி அவ்விருகுரவரின் முற்பிறப் புணர்த்தித் தம்மை நந்தகோபர் மனைவியிடம்விடக் கட்டளையிட்டு அந்த ஆயர்பாடியில் வளர்ந்து வந்தனர். இவர் குழந்தைப் பருவத்தில், பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்று, கர்க்கிய முனிவரால் நாமகரணஞ் செயப்பெற்று, கோபிகைகளின், நவநீதம் உண்டு, தெருவில் மற்றக் குழந்தைகள் போல் மண் தின்றதைக்கண்ட தாய் பயமுறுத்த அவளுக்கு இல்லையென்று தமது வாயைத் திறந்து தம்மிலடங்கிய அண்டங்க ளனைத்தையுங் காட்டினவர். இவர் வீடுவிட்டுத் தவழ்ந்து போதலைத் தடுக்கத் தாய் தாம்பினால் இடுப்பில் கட்ட அத்தாம்புகள் தமது இடுப்பிற்குப் பற்றாமைகாட்டிப் பிறகு அவள் உரலில் தாம்பினால் கட்டத் தவழ்ந்து மருதமரமாயிருந்த நளகூபர மணிக்கிரீவர்களுக்கு நற்கதி தந்து, நாவற் பழக்காரிக்கு அரிசியிட்டு மாணிக்கமாக்கி, கன்றுரு வடைந்துவந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக்கொன்று, கொக்குருவடைந்த பகாசுரனை வாய் பிளந்து, மலைப்பாம் புருக்கொண்ட அகாசுரன் வாயுட்புகுந்து கொன்று, பிரமன் மாயையால் மறைத்த குமரர்களுக்கும் கன்றுகளுக்கும் அந்தந்த வுருக்கொண்டு அந்தந்த வீட்டிலிருந்து, யமுனை நதியிலிருந்த களிங்கமடுவின் சலத்தை யுண்டிறந்த கோபாலரையு யிர்ப்பித்துத் தாம், அந்தமடுவிற் குதித்து அவனுடன் தொந்த யுத்தஞ் செய்து கர்வபங்கப்படுத்தி ஆயர்குறை முடித்து, காளியனென்னும் மடுக்கரையில் வந்திருந்தவர்களைச் சூழ்ந்து தகிக்க. வந்த காட்டுத் தீயை விழுங்கிப் பின்னொரு முறை காட்டுத் தீக்குப் பயந்த கோபாலருக்கு அபயந்தந்து அவர்களைக் கண்ணை மூடச்செய்து தாமே அதனை விழுங்கி, அந்த ஆரண்யத்தை நீங்கிப் பாண்டீரம் என்னும் ஆலடிவந்து கோபாலரை யிந்திரனுக்கு யாகாதி கிர்த்தியங்கள் செய்யாதிருக்கும்படி தடை செய்து, அதனால் கோபித்து இந்திரன் பெய்வித்த மழையைக் கோவர்த்தனத்தைக் குடையாகத் தூக்கித் தடுத்துக் காத்து, காமதேனுவாலும் இந்திரனாலும் கோவிந்த பட்டாபிஷேக மடைந்து, வருணப்பிரத்தியனால் கவரப்பட்ட நந்தகோபரை அவ்வுலகஞ் சென்று மீட்டுத் தந்து, தமது உலகை நந்தகோபருக்கும் கோபாலருக்கும் மடுவில் காட்டி, அம்பிகைபூசைக்குச் சென்ற நந்தகோபரை விழுங்கிய பாம்பைக் காலா லுந்தி நந்தகோபரை மீட்டவர். பின்னும் கோபிகைகளைக் கவர்ந்த சங்கசூடனைக் கொன்று சிரோமணியைப் பலராமருக்குக் கொடுத்து மகிழ்ந்தவர். இடபவுருக் கொண்ட அரிஷ்டனைக் கொம்பைப் பிடுங்கியும், குதிரையுருக்கொண்ட கேசியையும், வியோமாசுரனையும் கழுத்தை யிறுக்கி மாய்த்தவர். அக்குரூரருக்கு யமுனையில் திவ்ய தரிசனம் தந்து கம்சன் வீட்டு வண்ணானைக்கொன்று, சேணியனாலாடை யலங்காரம் பெற்று, சுதர்மாவென்னும் மாலைக்காரனிடம் பூமாலைசூடி, சந்தனங் கொண்டுபோம் திரிவக்ரையின்கூனை நிமிர்த்தி யவளிடஞ் சந்தனமணியப்பெற்று, கம்சன் ஆயுதசாலையிற் சென்று அவன் வில்லை முரித்து, கம்சனது பட்டத்து யானையாகிய குவலயாபீடத்தைக் கொம்பை யொடித்துப் பாகனையும் யானையையும் கொன்று, மல்லயுத்தத்திற்கு வந்த சாணூரனை வதைத்து, சுபலனையும் தோச வனையுங்காலால் மோதி யுயிர்போக்கியவர். இந்த வெற்றிகளைப் பொறாத கம்சன், கண்ணனது தந்தையர் முதலியோரைச் சிறைசெய்யக் கட்டளையிடக் கண்ணன், திடீரென்று கம்சன் மீது பாய்ந்து அவனுடன் யுத்தஞ்செய்து உயிர்போக்கி, வசு தேவ, தேவகிகளுக்குத் தாம் குமரர் எனத் தெரிவித்து, உக்ரசேன மகாராஜனுக்குப் பட்டமளித்து இந்திரனிடமுள்ள சுதர்மை யென்னுஞ் சபையை யவற்குக் கொடுத்து, சாந்தீபனியிடத்துக் கல்விகற்று அந்த ஆசிரியருக்குக் குருதக்ஷணையாகப் பிரயாக தீர்த்தத்துச் சென்றிருந்த குமரனை வருணனாலறிந்து பஞ்சசனைக் கடலில் சென்று வதைத்து அவனுடலினாகிய பாஞ்சசன்னியத்தைக் கைக்கொண்டு யமபுரஞ் சென்று ஆசாரியபுத்திரனை மீட்டுக் கொடுத்தவர். திரிவக்ரையாகிய சைரந்திரியின் வீடணைந்திருந்து உத்தவரை அத்தின புரிக்கு எவிச்சராசந்தன் சேனையைப் பதினேழுமுறை சின்னஞ்செய்து, மேற்கடலில் விச்வகர்மனால் நிருமிக்கப்பட்ட பட்டணத்திற் குடிபோய்க் காலயவனனுக்கு ஒட்டங்காட்டி முசுகுந்தன் உறங்கும் குகையில் ஒளித்து முசுகுந்தனால் அவனைக் கொலை செய்வித்து, சராசந்தனுக்குப் பயந்தவர்போல் நடித்துக் கோமந்தபருவதத்தில் ஒளித்தனர். சராசந்தன மலையைக் கொளுத்த கண்ணன் ஆகாயவழியாய் வந்து அவன் சேனைகளை யதமாக்கி, உருக்மணி தேவியை உருக்மி அவமானப்பட இரதத்தி லேற்றிக்கொண்டு துவாரகைக்கு வந்தனர். அது கண்ட உருக்மி பொறாமல் போர்க்குவர அவனைப் பிடித்துத் தேர்க்காவில் கட்டி உருக் மணி வேண்டக் கொல்லாது விட்டவர். சத்திராசித்தின் சியமந்தகமணியை யுக்கிரசேனனுக்குக் கேட்க அவன் கொடாதிருந்தனன். அம்மணி சிலநாள் பொறுத்துக் காணாமற் போயிற்று. கண்ணன், அபவாத நிவர்த்தியின் பொருட்டுச் சாம்பவானிடஞ் சென்று யுத்தஞ்செய்து மணியைப் பெற்று அவன் பெண் சாம்பவதியை மணந்து, சததன்வாவைக் கொலை புரிந்து சியமந்தகமணியைக் கவர்ந்த அக்குரூரனைச் சபையில் வருவித்து மணி யைக் காட்டி யபவாதந்தீர்த்துக் கொண்டு, காளிந்தியையும், விந்தானுவிந்தர் தங்கையாகிய மித்திரவிந்தையையும், மணந்து, ஏழு விடைகளை யேழுருக்கொண்டு கீழே தள்ளிச் சத்தியவதியையும், பத்திரையையும், மத்திரதேசாதிபதியின் குமரியாகிய லஷ்மணையையும் நாகாசுரன் பட்டணத் திருந்து கொணர்ந்த (16000) பெண்களையும் சத்தி அல்லது நப்பின்னையையும் மணந்தவர். லீலாமாத்திரமாய் இருக்குமணியைச் சாதிகுலமில்லாதவனை மணந்தனையென்று சொல்லி மூர்ச்சிக்கச் செய் தவர். முராசுரனையும், அவன் குமரரையும், நரகாசுரளையுங் கொன்று அவன் பத்துப் பெண்களை மணந்தவர். பகதத்தனுக்கு அபயந் தந்து அவன் பட்டணத்துள் சென்று ஆங்குச் சிறையிருந்த பதினொரு ஆயிரத்து அறு நூறு இராசகன்னிகைகளை மணந்து, ஒவ்வொருவரிடத்தும் தனித்தனி கலந்து களிப்புடனிருந்தவர். தேவேந்திரன் மணிகூடபர்வதத் தையும், வருணன் வெண்குடையையும் மீண்டும் பிரசாதித்து அதிதிக்குக் குண்டலமளித்து, பாரிசாத விருக்ஷத்தைச் சத்தியபாமை பொருட்டுத் துவாரகையில் நாட்டி, தமது தேவியர் ஒவ்வொருவருக்கும் பத்துக் குமார்களைத் தந்து, பிரத்தியும்நனுக்கு மணமுடித்து, அநிருத்தன் பொருட்டு வாணாசுரனைக் கர்வபங்கஞ் செய்து, அவன் குமரியாகிய உஷையையவன் கொடுக்க அநிருத்தனுக்கு மணஞ் செய்வித்துக் கிணற்றில் ஓணானாயிருந்த நிருகராசன் சாபத்தைத் தீர்த்து, வாசுதே வனுக்குத் துணையாய்வந்த பௌண்டர்கனையும், சுதக்ஷணனையும் அவன் விட்ட பூதத்தினையும் சக்கரத்தால் மாய்த்து, சாம்பனுக்கு மணமுடித்து நாரதருக்கு வியாபக மறிவித்துச் சாளுவனை மாய்த்துக் குசேலரென்னும் எழை வேதியருக்குப் பெருஞ் செல்வமளித்து, தேவகி கருவிலுதித்த அறுவரையும் தேவகிக்குக் காட்டி அவர்க்குத் திவ்யதேக மளித்து வியூக வைகுண்டத்திலிருந்த பிராமணக் குழந்தைகளை யருச்சுந சகிதராய்ச் சென்று மீட்டுப் பிராமணர்க்களித்துச் சராசந்தனைப் பீமனால் கொல்வித்து அரசர்சிறைவிடுத்துக் காண்டவ வனத்தை அக்கினிக்கு இரையாக்குவித்து தருமராஜனால் இராஜசூய முடிப்பித்துச் சிசுபாலனை வதைத்துப் பாண்டவர்க்குத் துணையாய்த் திரௌபதிக்குப் புடவை வளரச்செய்து மானங்காத்து, திரௌபதியாடிய சூதாட்டத்தில் அவள் வெல்லும்படிக் கருணை புரிந்து, அருச்சுனனுக்குத் தேரோட்ட இசைந்து கீதை உபதேசித்து, துரியோதனனிடம் தூது சென்று விதுரன்மனையில் விருந்துண்டு துரியோதனன் செய்வித்தவஞ்சச் சிங்காதனத்தின் மீதிருந்து அச்சிங்காசனத்தின் கீழிருந்த அரக்கர் முதலியவர்களை விச்வரூபங்கொண்டு கொலை புரிந்து, குந்தியைக் கன்னனிடம் ஏவி நாகாத்திரம் ஒருமுறைக்கு மேலெய்யாமல் கேட்பித்து, இந்திரனை யவனிடமேவிக் கவசகுண்டலங் கேட்பித்து, பாரதப்போரில் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்துப் பகதத்தன் அருச்சுனன் மீதுவிட்ட வேலைத் தாங்கி, தருமன் அசுவத்தாமா அதாகுஞ்சர மென்கையில் சங்கம்பூரித்து, மற்றும் பல உதவிகளைப் பாண்டவர்க்குப் புரிந்து, உத்தரைகர்ப்பத் திருந்த பரிச்சித்தினைக் காத்து, உதங்கருக்கு விச்வரூபதரிசனங் காட்டி, வேதங் களுக்குப் பரத்வநிர்ணயங்கூறியைய மறுத்தவர். ஒருநாள் சாம்பவதி எனக்குப் புத்திரப்பேறின்றி யிருத்தல் கூடாதென யாசிக்கக் கண்ணன் உபமன்யு முனிவரையடைந்து சிவதீக்ஷைபெற்றுச் சிவதரிசனஞ் செய்து புத்திரப்பேறு அடைந்தவர். சிவேதன், வெகுலாசுவன் இவர்களிடம் இரண்டு உருவமாய் ஒரேகாலத்து விருந்துண்டவர். பின்னும் இவரது சரிதம் பாரத சம்பந்தப்பட்டவை பலவுள. அவற்றை விரிவஞ்சி விடுத்தோம், பாரத முதலிய கதைகளிற் கண்டுகொள்க. இவரது தேர்ப்பாகன். தாருகன். இவரது தேர்க்குதிரைகள், சைனியம், சுக்கிரீவம், மேகபுஷ்பம், வலாகம். இவர்க்குத்தேவியர் பதினாயிரத்து நூற்றெண்மர். இவர் குமரர்கள் பிரத்தியும்நர், அநிருத்தர், தீபதிமான், பானுதேவர், சாம்பர், மித்திரர், விருகத்பாநு, பாநுவிந்தர், உருகர், அருணர், புஷ்கரர், தேவபாகு, சுருததேவர், சுநந்தனர், சித்திபாகி, வருதகர், மது, விநிக்குரோதனர்; இவர்க்குத் திரிவக்ரையிடம் யுபசுலோகர் பிறந்தனர். இவர் புத்திரப்பேறு வேண்டி ருக்மணியுடன் தவஞ்செய்கையில் இவர் வாயினின்று தவாக்கிதோன்றி அசுரன் ஒருவனைக்கொன்றது. இவர் கம்சனைக் கொல்லுமுன் வேட்டைக்குவந்த அவனுடன் நண்பாய் அவன் இவரைக் கிருஷ்ணன் என்பவன் யார் என்று கேட்ட கேள்விகளுக்குத் தன்னைப் பிறன்போல் கூறி அவனை வஞ்சித்து அவனுடன் இரவு முழுதும் ஒரேயிடத்திலிருந்தவர். இவ்வகை சிலநாளிருந்து பிராமண சாபத்தால் நேரிட்ட யுத்தத்தில் யாதவர் மடியத் தாம் தனித்து அருச்சுனனுக்கு ஆள் விடுத்து ஒரு ஆலடியில் யோகநித்திரை புரிந்தனர். பூர்வம் துருவாசர் சாபப்படி சான் என்கிற வேடன் பக்ஷியொன்றை எய்த அம்பு திருவடியில் பட அவ்வழி தேவர் எதிர் கொள்ளப் பரமபதமடைந்தவர். உபமன்யு முனிவரால் சிவபூசை யெழுந்தருளச் செய்துகொண்டு வடுககிரியில் ஏழுமாதம் தீக்ஷைவகித்துச் சிவபூசை செய்கையில் சிவபெருமான் எழுந்தருளிப் பல வரங்களளித்து வில்வேச்வாரென ஆண்டெழுந் தருளியிருக்கின்றனர். இவர் சிவமூர்த்தி யிடம் பலவரம் பெற்றனர். (சிவமகா புராணம்.) இவர் கோலோகத்தில் ராதையுடன் கூடியிருக்கையில் விரஜை, கங்கை கிருஷ்ணனைக் கண்டு மோகிக்க ராதை கோபித்தது கண்டு கங்கை மறைந்தனள். அதனால் உலகமெங்கும் நீரிலாது மறையப் பிரமன் முதலியோர் கண்ணனை வேண்ட கிருஷ்ணன் கங்கை வெளிப்படின் இராதையவளை வாயிலிட்டு உமியக் காத்திருக் கின்றாளாதலால் இராதைக்குச் சமாதானங் கூறுங்களென்னப் பிரமன் முதலியோர் இராதையைத் துதித்தனர். பின் கிருஷ்ணனது கட்டைவிரலிலிருந்து கங்கை வெளி வந்தனள், அக் கங்கையிலிருந்து பிரமன் தன் கமண்டலத்துச் சிறிது வைத்துக் கொண்டனன், இவர் சோபை எனும் கோபியுடன் ரமிக்கையில் இராடை கோபிக்க அவள் சந்திரமண்டலமடைந்து காந்தியாய் மறைந்தாள். பிரமையுடன் இருக்கையிலும் அவ்வாறு கோபிக்க அவள் தேஜோரூபமாய் சூரியனிட மறைந்தாள், சாந்தியெனும் கோபிகையுட னிருக்கையில் கோபிக்க அவள் கிருஷ்ணனிடமே மறைந்தாள். க்ஷமை யைக் கோபிக்க அவன் பூமியில் மறைந்து பொறுமையடைந்தாள். (தேவி~பா.) இவர் புத்திரனை வேண்டித் தவஞ்செய்ய இவர் முகத்தில் ஒரு ஜ்வாலை தோன்றிற்று, அச்சுவாலையால் புல் பூண்டு மலை முதலிய கரிந்தன. மீண்டும் குளிர்ந்து நோக்க அவை தளிர்த்தன முதலிற்றோன் றிய தீ பிரமனிடஞ் செல்லப் பிரமன் அத்தீயினைக் குழந்தை உருவாக மீண்டும் கண்ணனிடம் அனுப்பினன். இந்தத் தபாக்னி சம்பராசுரனைக் கொல்லக் கிருஷ்ணனிடம் உண்டான அனங்கனெனும் மன்மதன். (பார~அநு.) 2, அவிர்த்தானனுக்கு அவிர்த்தானி யிடமுதித்த குமரன், 3. பெலிபகனுக்குத் தம்பி, இவன் குமரன் ஸ்ரீசாதகர்னன், 4. திருவேங்கடத்தில் கிருஷ்ண தீர்த்தத்தில் முழுகி இஷ்டசித்தி பெற்றவன். 5. குசிகனுக்குப் பீவரியிடம் உதித்தவன். பித்ருக்களைக் காண்க. 6. வேதவியாசமுனிவன். 7. அர்ச்சுனன்.

கிருஷ்ணமீச்ரர்

ஒரு அத்வைத பிராமணர் தேசிகருடன் வாதிட்டுத் தோற்றவர்.

கிருஷ்ணராஜன்

1. இவன் இரண்டாம் விக்ரமாதித்தனுக்கு நேசன். சூடாமணி நிகண்டில் புகழப்பட்டவன். 2. செஞ்சியையாண்ட அரசன்,

கிருஷ்ணராயன்

இவன் விஜயநகரம் ஆண்டவன், இவன் பிரபுடதேவராசாவிலிருந்து 14 வது அரசன்.

கிருஷ்ணர்

சுகர் புத்தர்.

கிருஷ்ணவேணி

ஒரு தீர்த்தம்.

கிருஷ்ணஸாரம்

கறுப்புப் புள்ளிகளையும் உடலிற் கொண்ட மான், இது உலவுமிடம் புண்ணிய பூமியென்று ஸ்மிருதி கூறும். (ஆரீதஸ்மிருதி.)

கிருஷ்ணா

1. ஒரு மாயாதேவி. 2, திரௌபதிக்கு ஒரு பெயர்,

கிருஷ்ணாங்கனை

நைருதன் ராஜதானி.

கிருஷ்ணாசுரன்

ஒரு அசுரன், இவன் பக்ஷி யுருக்கொண்டு விநாயகமூர்த்திக்கு முன் வஞ்சனை செய்து அவராலிறந்தவன்.

கிருஷ்ணானந்தன்

வேடல் அப்பையிடம் கல்விகற்று மணவாளமா முனிகளுடன் வாதிடவந்து வேடலப்பை அநுமதியால் வாதிடாமல் திரும்பின ஏகதண்ட சந்தியாசி.

கிருஷ்ணாஷ்டமி விரதம்

மார்க்க சீரிஷமாதம் முதல் (12) மாதத்தில் (12) கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் சங்கரன் முதலிய வர்களை விதிப்பிரகாரம் பூசித்துத் தானாதிகளைக் கொடுத்தால் முத்தியடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

கிருஷ்ணி

ஒரு நதி.

கிருஷ்ணை

1. ஒரு நதி. 2. திரௌபதி.

கிருஹன்

மனிதர் காதிலிருந்து கலகம் விளைக்குந்தேவதை.

கிரேணு

இவள் ஒரு சிவபக்தியுடையாள், புத்திரபேறு வேண்டித் தவஞ்செய்து கங்கையைக் குழந்தையாக எடுத்தனள். அக்கங்கை, வயிரமலையாசன் வளர்க்க வளர்ந்து சிவமூர்த்தியை மணந்தனள்.

கிரோதன்

சித்திராதன் கஞ்சுகி.

கிரௌஞ்சன்

ஒரு காந்தருவன், சௌபரி முனிவரின் தேவியாகிய மனோமயை தனித்திருக்கையில் அவளைக் கைப்பிடித்தனன். கண்ட முனிவர் இவனைப் பெருச்சாளியாகச் சபித்தனர். காந்தருவன் வேண்ட மீண்டும் கணபதிக்கு வாகனமாக அருள் புரிந்தனர்.

கிரௌஞ்சம்

1. ஒரு பட்டணம், யமபுரியின் வழியிலுள்ளது. இவ்விடம் உடல் நீங்கிய ஆத்மா சேர ஆறுமாதஞ் செல்லும், இந்த இடத்திலிருந்து ஆறாமாசிக பிண்டத்தை ஆத்மாபுசித்து யமபுரிக்குச் செல்வன். 2. கிரவுஞ்சனைக் காண்க.

கிர்த்திகை

கிருத்திகையைக் காண்க.

கிறிஸ்து

இவர் ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் யோசேப்பின் மனைவியாகிய மரியாளிடம் பிறந்து, இயேசு, அல்லது இம்மானுவேல் என்று பெயரடைந்து, ஏரோதுவிற்குப் பயப்பட்டுத் தேவதூதன் சொல்லால் எகிப்துக்குக் கொண்டு போகப்பட் டுப் பின் தேவகட்டளையால் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து நாஸரத்தூரில் வாசஞ் செய்து யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுப் பிசாசினால் சோதிக்க ஆவியானவரால் வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டு இரண்டு மூன்று முறை சோதிக்கப்பட்டவர். இவர் யோவான், காவலில் வைக்கப்பட்டதைக் கேட்டு நாசரத்தை விட்டுக் கப்பர்நகூமிலே வாசஞ்செய்தனர். பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் என்னுஞ் செம்படவர்களைக் கடற்கரையிற்கண்டு தம்முடன் அழைத்துக் கொண்டு சென்றார். ஒருமுறை மலையிலிருந்து இறங்கினபோது குஷ்டரோகி யொருவனைச் சொஸ்தப்படுத்தினார். கப் பர்நகூமிலே பிரவேசித்தபோது நூற்றுக் கதிபதியொருவன் திமிர்வாதக்காரனான தன் அடிமை யொருவனைச் சொஸ்தப் படுத்த வேண்ட அவனைச் சொஸ்தப்படுத்தினார். பேதுருவின் மாமிக்குச் சுரத்தைக் குணப்படுத்தினார். ஒருமுறை படவில் ஏறினபோது பெருங்காற்றில் கடல் மும்முறமாயிருக்கச் சீடர்கள் வேண்டுகோளின்படி அதையடக்கினர். கெர்கெசேனர் நாட்டில் பிசாசுபிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக் கல்லறைகளிலிருந்து வர அவர்களைப் பன்றிக்கூட்டத்தில் போகக் கட்டளையிட்டனர். இவர், ஒருவன் தன் மகன் மரித்திருந்ததைக்கூறி யுயிர்ப் பிக்கவேண்ட அவனை யுயிர்ப்பித்தனர். அப்போது ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீயையும் சொஸ்தப்படுத்தினர். குருடர் இரண்டுபேர் கண்வேண்டக் கண்கொடுத் தனர். பிசாசுபிடித்த ஊமையனைப் பிசாசு நீக்கிப் பேசுவித்தனர். இயேசு வனாந்தரத் திலிருந்தபோது திரளான ஜனங்கள் கூடிவந்தார்கள். பொழுது போனபடியனால் சீஷர்கள் அவர்களுக்கு ஆகாரமில்லை யென்று தங்களிடத்திலிருந்த இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும் ஏசுவினிடங்கொடுக்க இவர் வானத்தை யண்ணாந்து பார்த்து ஆசீர்வதித்து எல்லாருக்குங் கொடுக்கக் கட்டளையிட்டார். இவை 5,000 பெயர் உண்டபின் பன்னிரண்டு கூடைகள் மிகுந்துநின்றன. இவர் சீடர் களை அனுப்பிவிட்டுத் தனியே மலையின் மீதேறி ஜபமுடித்துக் கடலில் நடந்து நடுக்கடலில் படவிற்செல்லும் சீடரையடைந்தார். தீருசீதோன் பட்டணத்தில் கானானியஸ்திரீயின் வேண்டுகோளின்படி அவள் மகளின் பிசாசை ஓட்டி அவ்விடம் விட்டுப் புறப்பட்டுக் கலிலேயாக் கடலருகேவந்து தம்மிடத்துக் கூடியிருந்த ஜனங்களின் பசிக்கிரங்கி அப்போது சீடரிடத்தி லிருந்த ஏழு அப்பங்களையும் சிலமீன்களையும் எடுத்துத் தோத்தரஞ்செய்து எல்லாருக்குங் கொடுத்தனர். அவற்றில் எழு கூடைகள் மிகுந்து நின்றன. ஒருமுறை பேதுரு, யாக்கோபு, யோவான் முதலிய வரைக் கூட்டிக்கொண்டு ஒரு மலையின் மீதேறி முகம் சூரியனைப் போலவும் வஸ்திரம் வெளிச்சத்தைப் போலவும் பிரகாசிக்க மாறுரூபமானார். இவர் கூடார விஷயமாய்ப் பேதுருவிடத்தில் பேசும்போது மேகத்திலிருந்து ஒரு சப்தம் “இவன் என் குமாரன், இவனுக்குச் செவிகொடுங்கள்” என்று உண்டாயிற்று. சீடரால் தீர்க்கமுடியாத சந்திரரோகியின் ரோகத்தைத் தீர்த்தனர். ஏசு, கலிலேயாவில் தம் சீடரை நோக்கித்தாம் மனிதர் கைகளில் தம்மை ஒப்புக் கொடுப்பதாகவும், அவர்கள் தம்மைக்கொலை செய்வதாகவும், மூன்றாம் நாளில் உயிர்த் தெழுவதாகவுங் கூறினார். கப்பர் நகூமில் வந்தபோது வரிப்பணங்கேட்ட வனுக்குப் பேதுருவை நோக்கி நீ கடலுக்குப்போய்த் தூண்டில் போட்டு முதலில் அகப்படுகிற மீனின் வாயைத் திறந்து பார் அதில் வெள்ளிப்பணம் கிடைக்கும் அதை எனக்காகவும் உனக்காகவும் செலுத்து என்றனர். பூதேயாவின் எல்லைகளில் வந்த ஜனங்களைச் சொஸ் தப்படுத்தினார். எரி கோவாவிலிருந்த இரண்டு குருடர்களுக்குக் கண் கொடுத்தார். ஒலிவமலைக்கு அருகான பெத்பகேவிற்கு வந்தபோது சீடரைநோக்கி எதிரிலுள்ள கிராமத்தில் காணப்படும் கழுதையையும் அதன் குட்டியையுங் கொண்டுவரக் கூறி அதன்மேல் ஏறினார். பெத்தானியாவிலிருந்து காலையில் வருகையில் பசியுண்டாயிற்று. அவ்வழியிலுள்ள காயில்லாத அத்திமரத்தைப் பார்த்து ஒருக்காலும் உன்னிடத்தில் பழ மில்லாதிருக்கக்கடவது என்று சபிக்க அது பட்டுப்போயிற்று, இவரது அபோஸ்தலர்களில் முந்தினவன் பேதுரு, மற்றவர்கள் அந்திரேயா, ஜபதேயுவின் குமாரன் யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலோமியு, தோமா, மத்தேயு அல்பேயுவின் குமாரன் யாக்காபு, லப்பேயு, சீமோன், யூதாஸ்காரியோத். இவர் ஒலிவாமலைக்குப் புறப்பட்டுப்போன போது இந்தராத்திரியில் நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடர் அடைவீர்கள் யானுயிர்த் தெழுந்தபின் உங்களுக்கு முன்கலிலேயாவிற்குப் போவேனென்றார். பேது ருவைநோக்கி என்னிமித்தம் “நீ மூன்று முறைமறு தலிப்பாய்” என்றார். இவர் கெத்செமனெயிடத்திற்கு வந்து தம்முடைய பிதாவைநோக்கி இந்தப்பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று மூன்று முறை பிரார்த்தித்தார். இவர் தம்முடைய சீடர்களை நித்திரை செய்யச்சொல்லி உடனே என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோவந்தான் எழுந்திருங்கள் போவோமென்றார். இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு அநேகர் கூடிவந்தார்கள், அவர்களுடன் நான் எவனை முத்தஞ் செய்வேனோ அவனைப் பிடித்துக்கொள்ளுங்களென்று அடையாளஞ் சொல்லியிருந்த யூதாஸ்காரி யோத் என்பவன் “ரபிவாழ்க” என்று முத்தங்கொடுக்க ஏசுவை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள், ஏசுவைப் பிடித்தவர்கள் பிரதான ஆசாரியனான காய்பாவினிடத்திற்கு இவரைக் கொண்டுபோக இரண்டு பொய்ச்சாக்ஷிகள் இவன் தேவாலயத்தை யிடித்து மூன்று நாட்களில் என்னால் கட்டவுங்கூடுமென்று சொன்னான் என்றார்கள். என்ன இவ்வாறு சொல்லுகிறார்கள் என்று அவன் கேட்க ஏசு, பேசாமலிருந்தார். பிரதான ஆசாரியன் நீ தேவ குமாரனாவென்று கேட்க ‘ஆம்’ என்றார். அதனால் கோபித்துச் சபையில் உள்ளாரை நோக்கி உங்களுக்கு என்ன தோன்றுகிற தென்று கேட்க இவன் மரணத்திற்கு உள்ளானவனென்று கூறச் சிலர் முகத்தில் துப்பியும் குட்டியும் கன்னத்திலறைந்தும் உம்மை அறைந்தவன் யார் என்று பரிகசித்தார்கள். அங்குள்ளவர்கள் அங்கிருந்த பேதுருவை நீயும் இவனுடன் சேர்ந்தவனல்லவா என்று கேட்க ‘அல்ல’ வென்று மூன்று தரம் மறுதலித்தான். பின் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கட்டிக்கொண்டு போய்த் தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்தினிடத்து ஒப்புக் கொடுத்தார்கள். அப்போது இவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் ஏசு மரணாக்கினைக் குள்ளாக்கப் பட்டதைக்கேட்டுத் தான் பரிதானமாகப் பெற்ற முப்பது வெள்ளிக்காசை அவர்களிடத்தில் எறிந்து போட்டு நான்று கொண்டு செத்தான். தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் ஏசுவிற்குச் சிவப்பான அங்கியை உடுத்தி முள் முடியைப் பின்னி அவர் சிரசின் மேல்வைத்து அவர் வலது கையில் ஒரு கோலைக்கொடுத்து அவர் முன்பாக முழங்கால் படியிட்டு யூதருடைய ராஜாவே வாழ்கவென்று பரிகாசஞ்செய்து அவர்மேல் துப்பிக் கோலால் சிரசின் மேல் அடித்தார்கள். பின் அவருடைய சொந்த உடையைக் கொடுத்து சீமோன் எனும் ஒருவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி பலாத்காரஞ் செய்து கொல்கொதாவென்னு மிடத்திற்குக் கொண்டுவந்து கசப்புக் கலந்த காடியை அவருக்குக் கொடுத்தார்கள். அதை அவர் குடிக்க மனமில்லா தவராயிருந்தார். அவரைச் சிலுவையிலறைந்து அவர் உடையைச் சீட்டுப்போட்டுப் பங்கிட்டுக் கொண்டார்கள். இவர் சிரசிற்கு மேலாக இவன் யூதருடைய ராஜாவாகிய ‘ஏசுவென் றெழுதி வைத்தார்கள்’ தேவ குமாரனே இறங்கிவாவென்று பரிகாசஞ் செய்தார்கள். இவருடன் சிலுவையிலறை யப்பட்ட இரண்டு கள்ளரும் இவரை நிந்தித்தார்கள். ஆறாம்மணி முதல் ஒன்பதாம்மணி வரையிலும் பூமி அந்தகாரமாயிற்று, ஒன்பதாம்மணி நேரத்தில் ஏசு மிகுந்த சத்தமிட்டு “என் தேவனே என் தேவனே என்னைக் கைவிட்டீர்” என்று கூப்பிட்டார்; அப்போது ஒருவன் கடற்காளானைக் காடியில்தோய்த்துக் குடிக்கக் கொடுத்தான். சிலர் பொறு பொறு எலியாரக்ஷக்க வருவானா பார்ப்போம் என்றார்கள். எசு மறுபடியும் மகாசப்தமாய்க் கூப்பிட்டு ஆவியைத் துறந்தனர். அப்போது தேவாலயத்தின் திரைச்சீலைமேல் தொடங்கிக் கீழ்வரையிலும் இரண்டாகக் கிழிந்தது; பூமி அதிர்ந்தது; மலைகள் பிளந்தன; கல்லறைகள் திறந்தன; நித்திரை யடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய தேகங்களும் எழுந்திருந்தன. இவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து கலிலேயாவில் பதினொரு சீடர்களுக்கும் காணப்பட்டார். அவர்கள் இவரைப் பணிந்து கொண்டார்கள். பின்பு இவர் சீடர்களை நோக்கி நீங்கள் சகலரையும் சீடர்களாக்கி அவர்களுக்குப் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞான ஸ்நானங் கொடுத்து உங்களுக் குபதேசித்த யாவற்றையும் அவர்களுக்கு உபதேசியுங்கள் “நான் உலகழடியும் பரியந்தம் உங்களுடனே இருக்கிறேன்” என்றார். (லூகா)

கிறிஸ்துமதசித்தாந்தம்

இறந்தவர்களின் ஆத்மா கல்லறையிலிருக்குமென்றும் நியாயத் தீர்ப்புக்காலத்தில் உயிர்த்தெழுவர்கள் என்றும் இம்மதத்தில் ஞானஸ்நாநமே தீக்ஷை. கிறிஸ்து பரலோகஞ் செல்லுமுன், அபோஸ்தலர்களுடன் கூடி ஞானபோஜனஞ் செய்து கொண்டிருந்தனர். கிறிஸ்து பரமண்டலத்திற்குப் போனபோது தன் மாமிசத்தை அப்பமாக வும் தன் உதிரத்தைத் திராகூரசமாகவும் உண்பீராக என்றனர். ஆதலால் தேவாலயங்களில் அந்தத் தினத்தில் அப்பமும் திராக்ஷரசமும் பெற்றுக்கொள்வர். இவற்றைப் பெறுவோர் பரிசுத்தர், 17 வது சகாப்தம் வரையில் கிறிஸ்துமத கலகம் நடந்துகொண்டிருந்தது. முதலில்ரோமன் காதவிக் என்னும் மதத்தவரும் பிறகு புரோடஸ்டன்ட் என்னும் மதத்தவரும் போராடிக்கொண்டிருந்தனர். அதன் பிறகு பலபேதமாகக் கிறிஸ்துமதம் வியாபித்தது. தற்காலத்தில் கிறிஸ்துமத சங்கங்கள் 250 உண்டு, அவற்றில் முக்கிய மானவை சில கூறுவோம்:1, கிரீக்மிஷன் :இவர்கள் போப்பைத் தங்களுக்கு அத்தியக்ஷனாக ஒப்புக்கொள்ளார், அப்பமும் திராக்ஷாசமும் கிறிஸ்துவின் மாமிசமும் ரசமும் அன்றென்றும், வேதபுத்தகத்தைத் தங்கள் தங்கள் பாஷைகளில் எழுதிப் படிப்பிக்கலா மென்றும், பாவநிவாரணம் விற்கத்தக்கதன்றெனவும், பரிசுத்த ஆவி குமாரனிடத்தில் இல்லை என்றும், அவனுடைய தந்தையிடத்தி லிருக்கின்றதென்றும், குருக்கள் செய்து கொள்ளும் விவாகத்தைக் கெடுதல் செய்தல் கூடாதென்றுங் கூறுவர். 2. ரோமன்மிஷன் : இச்சங்கத்தவர்க்குப் பிரதானகுரு போப் என்பவர். இந்தப் போப்பினுடைய கட்டளையால் எல்லா காரியங்களும் நடத்தல் வேண்டும். ரோமன் மதத்தவர்க்கும் மற்றவர்களுக்கும் உள்ள பேதங்கள் (1) அன்னிய பாஷையிலுள்ள வேதபுத்தகத்தை வாசிக்கக் கூடாது; குருவின் உத்திரவு பெற்று அன்னிய பாஷையிலுள்ள வேதபுத்தகத்தை வாசிக்கலாம். (2) அன்னியபாஷையால் தேவாராதனம் செய்விக்கலாம். (3) இறந்தவர்க ளைப் பற்றி விஞ்ஞாபனஞ் செய்யவேண்டியது, (4) குருவினிடத்தில் செய்த பாவத்தை அறிவிக்க வேண்டியது. (5) குருக்கள் விவாகஞ் செய்து கொள்ளக் கூடாது, (6) லௌகீக விஷயங்களில் குருக்கள் பிரவேசிக்கக்கூடும். (7) போப் வாக்கியத்தைத் தேவவாக்கியத்திற்குச் சமானமாக நினைக்கவேண்டும். மரியாள் முதலிய சகலபக்தர்களும் பூஜிக்கத் தக்கவர்கள், மேமாதத்தில் உபவாசஞ் செய்யவேண்டும். 3, லூதரீமீஷன் : இவர்களுக்கு வேதம் பிரமாண நூல் விசுவாசத்தால் மனுஷர் நீதிமான்கள் ஆவர். ரோமன் சங்கத்தவர் தங்கள் குற்றங்களை நீக்கவேண்டும். பெரியோர்களது கட்டளையின்படி காரியங்களைச் செய்யவேண்டும். இந்த லூதர் என்பவன் 1583 நவம்பர்சு ஜெர்மனியைச் சார்ந்த ஓர்கிராமத்தில் பிறந்து சீக்கிரத்தில் வித்வானாய்ப் பெரும்பதவி யடைந்திருக்கையில் 1517 வது வருஷத்தில் போப்புகள் ஜனங்களின் பாவங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறார்கள் என்று கேள்வியுற்று அதைக் கண்டித்து அதுவரையில் எவர்களாலும் வெளியிடாத பைபிலை வெளியிட்டனன். அப்போது லூதரைத் தண்டித்தற்குப் போப் ஜெர்மனி சக்கரவர்த்தியைத் தூண்டினான், இவன் எல்லாவற்றிற்கும் தப்பித்துக்கொண்டு பின் கல்யாணஞ் செய்துகொண்டு சிலவருஷம் சென்றபிறகு இறந்தனன். 4, புரோடஸ்டன்ட்மிஷன் : இவர்கள் கி. பி. 1529 வது வருஷத்தில் லூதர் கூறிய பத்ததியை அனுசரித்து நடக்கின்றவர்கள். முதலில் இவர்கள் ஆர்மீனிய மதத்தை அனுசரித்து இருந்தார்கள். இப்போது ரோமன் காதலிக் மதத்தவர் தவிர மற்றையவரும் மிகுதியாய் லூதரின் பத்ததியைக் சேர்ந்தவர்கள். 5. மோரேனியன் : இவர்களும் சற் றேறக்குறைய லூதரின் அபிப்ராயத்தை அனுசரித்து நடப்பவர்கள். முதலில் இவர்கள், ஒருவர் காலை ஒருவர் அலம்புவார்கள். இவர்கள் மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக்குவது விசேஷமென் றெண்ணியிருப்பவர். 6. பாப்டிஸ்ட்மிஷன்: இவர்கள் தேவனிடத்து அதிக விஸ்வாசமுள்ளவருக்கு மாத்திரம் ஞானஸ்நான முண்டென்பர் மற்றவர்களுக்குக் கிடையாதென்பர். மற்ற விஷயங்கள் சுயேச்சா சங்கங்களின் கட்டளைப்படி யிருக்கும். பின்னும் இச்சங்கத்தில் அநாபாப்டிஸ்டி, ஸேவந்த்டே பாப்டிஸ்ட், பெர்டிகுலர் அன்ட் ஜெனரல் பாப்டிஸ்ட், பிடோபாப்டிஸ்ட் முதலிய பேதங்களுண்டு 7. வேஸ்லியன் சங்கம் : வெஸ்லியன் என்னும் ஒருஞானியினுடைய போதனையினால் பிரவர்த்தித்தது. பின்னும் இவர்கள் ஆர்மீனியன் சங்கத்தவர்கள் போத னையை ஒத்துக்கொள்வார்கள். ஜான் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லி, என்னுமிரண்டு சகோதரர்கள் அமரிக்காவில் மத விஷயமாகப் பிரசங்கஞ்செய்து பின்பு ஐரோப்பாவிலும் பிரசங்கஞ்செய்து பல சீடர்கள் ஏற்படுத்திக்கொண்டு இச்சங்கம் நிருமித்தனர். 8. வொயிட்பீல் டிஸ்ட்மிஷன்: இச்ச பையில் சேர்ந்தவர்கள் ஏசுவைப்போலப் பரிசுத்தமான விசுவாசமும் சத்திய முள்ளவராயு மிருப்பர். இவர்கள் பெரும்பாலும் ஆர்மீனியன் பத்ததியை அனுசரித் திருப்பவர்கள், 9. கால்வனிஸ்ட்மிஷள்: இவர்கள் 16 வது நூற்றாண்டிலிருந்த ஜான்கால்வன் என்பவனுடைய பத்ததியை அனுசரித்தவர்கள். இவர்கள் ஆதியில் தேவன் உலகங்களைச் சிருட்டித்தபோதே மனிதர்கள் நடந்துகொள்ள வேண்டியனவற்றை நியமித்திருக்கிறார் என்பர். இவர்கள் ரோமன் மதத்தினரைக் கண்டித்துக் கொண்டிருப்பர். 10. ஆண்டினேமியன் சங்கம்: இவர்கள் சித்தாந்தப்படி விஸ்வாசத்தால் மோக்ஷம் உண்டாம் என்பர். சத்காரியங்களாலும் துஷ்காரியங்களாலும் சாதக பாதகங்களில்லை யென்றும் கூறுவர். 11. பிரஸ்பிடேரியன் சங்கம்: இவர்கள் சபைமுதலான காரியங்களைப் பெரியவர்களால் நடப்பிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். 12. யூனிடேரியன் சங்கம்: இது நாலாவது சகாப்தத்தில் ஹாரிஸ் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது, தெய்வீக சுபாவத்தில் மூன்று வகையான புருஷர் இவர். ஏசுகிறிஸ்துவின் ஆத்மா ஆதியிவிருந்தது பற்றி ஏசுவை பூஜிக்கக்கூடாது. அவன் பாவமே அவன் மரணத்துக்குத் தண்டனை ஒவ்வொருவரும் தம் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபலனை அனுபவிப்பார். 13. சோஷீனியன் யூனிடேரியன் சங்கம்: ஏசுகிறிஸ்து யோஸேப்பிற்கும் மேரிக்கும் நியாயமாய்ப் பிறந்தவன். பரிசுத்த ஆத்மாவென்பது தேவனல்லன் பூர்வத்தில் பாவங்கிடையாது. அவரவர்கள் தங்கள் நடக்கைக்குத் தக்கபலனை யடைவர் என்பர். 14. லண்டன் சங்கம்: இந்தச் சங்கம் 1795 வருஷத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இது இங்கிலாண்டிலுள்ள ரோமன்மிஷ னைச் சற்றேறக்குறைய அனுசரித்திருக்கும், 15, ஸ்காட்சங்கம்: இவர்களுடைய அனுஷ்டானம் புரோடஸ்டான்டாரை அனுசரித்திருக்கும் 16. இங்கிலீஷ் எபிஸ் கேரபல் சங்கம்: இந்தச் சங்கத்தில் உபதேசிக்கும் டியகன்ஸ் (Deacons) என்னும் உதவி போதகர்களும் பிரீஸ்ட் என்னும் குருக்களும் பீஷ்ப்புக்களென்னும் மதாசாரியர்களும் இருக்கின்றனர். 17. குவாகர் சங்கம்: இதில் போதகர்கள் முழங்கால் ஊன்றித் தியானிக்கையில் மற்றவர்கள் நின்று கொண்டு தியானிப்பர். இவர்கள் ஜலத்தால் செய்யும் ஞானஸ் நானத்தைப் பிரயோஜனமற்ற தென்பர். பொய் முதலிய துர்க்குணங்களை விடல் வேண்டுமென்றும் சுவிசேஷங்களை விற்க வாங்கக்கூடா தென்றும் உபதேசிக்கிறதற்கு ஸ்திரீகளும் புருஷர்களும் தக்கவர்களென்றுங் கூறுவர். 18. சுவீடன் பர்கீயன் சங்கம்: 1288 வருஷம் பிறந்த இம்மானுவல் பத்ததியை அனுசரித்தவர்கள். இவர்கள் பிதா, புத்தி சென், ஆத்மா இந்த மூவரையும் ஒன்றாக்கிப் புருஷாகாரமாகத் தியானிப்பர். இவர்கள் விஸ்வாச முள்ளவரா யிருக்கவேண்டுமென்றும் ஒவ்வொருவனும் பாவநீக்கமடைய சுதந்தான் என்றும் தூலதேகம் நீங்கச் சூஷ்மதேகம் கடவுளையடையு மென்றும் கூறுவர். 19. பிரிமேசன் சங்கம்: இது பலநாளாக உள்ளதென்று கூறுவர். இம்மதத்தவர்க்குப் பைபிலால் பிரயோஜனங் கிடையாது, ஒரேதெய்வத்தை நம்பினவர்கள். இவர்கள் சகோதரவாஞ் சையை விர்த்தி செய்து இந்த உலகத்தைச் சுவர்க்க உலகமாக எண்ணியவர்கள். இம்மதத்தில் அநேக ரகவியங்களும் அடையாளங்க களும் உண்டு. இம்மதத்தில் சேராதவர்களுக்கு அதைத் தெரிவிக்கார்கள். ஆங்கிலேய கனவான்களில் அநேகர் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய பட்டணங்களில் எல்லாம் இச்சபை உண்டு. ஜாதிபேதங் கிடையாது. இந்தச்சங்கத்தில் சேர்ந்தவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் ரக்ஷக முண்டு. இந்துக்களில் அநேகர் இம்மதத்தின் கொள்கைகளை அனுசரிக்கிறார்கள்.

கிறிஸ்துமதம்

இம்மதம் உலகம் ஆறு தினத்தில் படைக்கப்பட்ட தென்றும் ஆதியில் கடவுள் முதல்நாள் வெளிச்சத்தையும், இரண்டாம் நாள் காற்றையும், மேகங்களையும், மூன்றாம் நாள் பூமியையும் சமுத்திரத்தையும் பயிர்களையும், நான்காம் நாள் சூரியசந்திர நக்ஷத்திரங்களையும், ஐந்தாம்நாள் மீன்களையும் பக்ஷிகளையும், ஆறாம் நாள் மிருகங்களையும் மனிதர்களையும் சிருட்டித்து, ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஓய்ந்திருந்தார். தேவன் மனிதரைச் சிருட்டிப்பதற்கு முன், முதல் மனிதனாய் ஆதாமைச் சிருட்டித்து ஆதாமி னுடைய இடது பாகத்தினின்றும் ஒரு எலும்பைக் கிரகித்து ஏவாளைச் சிருட்டித்தார். இந்த இருவரும் ஏடன் பட்டணத்தின் நந்தவனத்தி விருக்கையில் சாத்தானால் கடவுளின் கட்டளையை மீறித் தின்னக் கூடாததென்ற பழத்தைத் தின்று பாவத்தை யடைந்தார்கள். பிறகு அந்த இருவருக்கும் கெயின், ஏபேல் என்னு மிரண்டு குமாரர்கள் பிறந்தனர். கெயின் துன்மார்க்கனா யிருந்தான். ஏபேல் மூத்தோனைக் கொன்றான் அப்போது தேவன் ஏபேலை நோக்கி உன் தமயன் எங்கேயென்ன ஏபேல் நான் அறியேன் போ வென்றான். பின்பு தேவன் ஆதாம் ஏவாளிடத்தில் நேத் என்னும் குமாரனை அனுக்கிரகித்தனர். அந்த நேரத்திற்கு அநேகர் பிறந்தனர். அனைவரும் துன்மார்க்கர்களாக விருந்தனர். அவர்களில் நோவா என்பவன் நற்குணமுள்ளவன். அதன் பிறகு ஆதாம், ஏவா, நேத் என்னுமனைவரும் இறந்தனர். அப்போது தேவன் நோவாவை நோக்கி நீ யொரு ஓடம் நிருமித்துக்கொண்டு அதில் எல்லாப் பொருள்களையும் கிருமி கீடாதிகளையும் அதில் ஏற்றிக்கொள்ளுக என அவன் தன் பாரியையுடனும் மூன்று குமாரர்களுடனும் மூன்று மருமகர்களுடனும் படவேறினான். அது முதல் நாற்பது நாளிரவும் பகலும் பெருமழை பெய்ததால் பிரளயங்கொண்டு ஓடத்திலிருந்தவர்கள் தவிர மற்றனைவரும் மாய்ந்தனர். பிரளயங் குறைந்தபிறகு ஒடத்திலுள்ள பொருள்களால் உலகம் வியாபித்தது. இது கிறிஸ்துமத சிருட்டிக்கிரமம், இந்த மதத்திற்கு ஆதிபுருஷன், ஆப்ரகாம். அந்தச் சந்ததியானான யோசேப்பிற்கு மரியாள் என்னும் தேவியினிடத்தில் பரிசுத்த ஆவியால் கிறிஸ்து பிறந்தனர் என்பர். இவரது சரிதையைக் கிறிஸ்துவைக் காண்க.

கிலன்

அந்தகாசுரனுக்கு ஒரு பெயர், இவன் சிங்கவுருக்கொண்டவன்.

கிலாதன்

இரண்யகசிபின் குமரன், தேவ் தெமனி, குமரர் வாதாபி, இல்வலன். பிரகலாதனுக்குத் தம்பி. இவனுக்கு அநுக்கிலாதன் எனவும் பெயர்.

கிலிஞ்சன்

விராதனைக் காண்க.

கிலுகிலுப்பைப்பாம்பு

இது வட அமெரிகாலிலுள்ளது. இப்பாம்பு தன் விரோதிகளைக் கண்டவுடன் தன் வாலைக் குலுக்குகிறது. அக்கலகலத்த ஒலியால் பிராணிகள் அஞ்சியோடி விடுகின்றன.

கிளட்டன்

(Glutton) ஒருவித கிரீப்பிள்ளையினம் வட அமெரிகா, ஐரோபா இந்திய கீரிகளைப்போன்றது. தான் பிடிக்கும் பிராணிகளை விழுங்கும் தன்மையது. எலிகளின் வளைகளைக் கவ்லிப்பிடித்துத் தின்னும்.

கிளி

இது சிவவீர்யத்தைத் தாங்காது ஒளித்த அக்கினியைத் தேவர்களுக்கு வன்னி மரத்தில் அக்கினியினிருப்பைத் தெரிவித்து அக்னியால் புரண்ட நாக்குறச்சாபம் பெற்றுத் தேவர்களால் மீண்டும் பேச அநுக்ரகம் பெற்றது.

கிளிகள்

இவ்வினத்தில் பலவகைகள் உண்டு. இவை சாகபக்ஷணிகள், இவ்வினத்தில், பச்சைக்கிளி, வெள்ளைக்கிளி, கருங்கிளி, நீலக்கிளி, பஞ்சவர்ணக்கிளிகள் உண்டு, இக்கிளிகளுக்கு அலகுகள் மற்றப் பறவைகளுக் கிருப்பன போலில்லாமல் உறுதியான கொட்டைகளையும் பிளக்கத்தக்கனவாய் முனை வளைந்து இருக்கின்றன. 1. பச்சைக்கிளி: இவ்வினத்தில் பல வகை அலகுள்ளவையுண்டு. இது, இந்திய நாட்டில் உள்ளது. இதனிறம் பச்சை. இவ்வினத்தில் ஆண்பறவைக்கு கழுத்தில் செந்நிறமான வளைந்த கோடுண்டு. இதன் மூக்குக் கொவ்வைக் கனிபோன்ற செந்நிறம் கொண்டது. இதன் நாக்கு வட்ட மாயிருத்தலால் மனிதர் கற்பிக்கும் சொற்களை யினிதாய்ப்பேசும். இவ்வினத்தில் பெருங் காக்கை அளவுள்ள கிளிகளுண்டு. 2. வெள்ளைக்களி: இது சீனா, ஆஸ் திரேலியா முதலிய நாடுகளிலிருக்கின்றது. இதனைக் காக்கத்துவான் என்பர். இவ்வினத்தில் கொண்டையுள்ளனவும் இல்லனவும் உண்டு. இதன் மூக்குக் கருமை. இவ்வினத்தில் மற்றொரு வகைக்கு அலகு வெண்மை. இதன் சிறகுகள் வெளிறிய ஊதாநிறம். இவ்வினப்பறவை களுக்கு நாக்குத் தடித்திருத்தலால் இவை நன்றாய்ப் பேசுகின்றன. 3. பஞ்சவர்ணக்கிளி: தென் அமெரிகா காட்டிலிருக்கிறது. இதன் உடல் வெள்ளை, நீலம், செகப்பு, மஞ்சள், பசுமை கலந்தது. இப்பறவையின் வால் நீளம், 4. நீலக்கிளி: தென் அமெரிகாவின் தென்பாகத்தில் உள்ளது. இதன் முதுகு பக்கம் நீலம் வயிறு மஞ்சள், கண்ணைச்சுற்றிலும் கருங்கோடுகளமைந்த வெண்ணிறம், உச்சி சுத்தகறுப்பு. இவ்வினத்தில் நீலபஞ்சவர்ணக் கிளியென ஒன்றுண்டு. அதன் உடல் நீலநிறம் மிகுதியாயும், உச்சந்தலை சிவப்பாயும், மூக்குக் கறுப்பாயும் பிடரியும், வாலும் பசுமையாயும், கண்டம் நல்லகறுப்பாயும் முதுகு நீலமாயும், வயிறு மஞ்சளாயும் இருக்கும். இவ்வினத்தில் மற்றொரு வகைக்கு மூக்கு மிகவும் வளைந்திருக்கிறது. இவ்வினத்தில் ஆண்டீஸ் மலைத் தொடரில் ஒருவகையான கிளிக்குவாலில் அதிகமான இறகுகள் உண்டு, அவ்விறகு களில் வெண்மையும் கறுப்பும் கலந்த கீற்றுக்கள் உண்டு. முதுகு செந்நிறம், வயிறு மஞ்சள் இதனை செம்பஞ்சவர்ணக்கிளி யென்பர். இதில் மற்றொரு இனம் குறுகிய வாலுள்ள தாய்ப் பருத்தவுடல் கொண்டு நற்பசுமை நிறமாய் உயர்ந்த இடம்களில் கூடுகட்டி வாழ்கின்றன. மற் றொருவகை ஐரோபா முதல் ஆசியாவின் சில பாகம் வரையிருக்கிறது. இக்கிளியின் முதுகு இந்திரநீலம், வயிறு கறுப்புள்ள மஞ்சள், இக்கிளியின் மூக்கு மற்றக் கிளிகளின் மூக்குப்போலில்லாமல் மேலலகும் கீழலகும் குறுக்கே மாறியிருக்கின்றன. அதனால் இதனைக் குறுக்கு மூக்குக்கிளி யென்பர். இதன் அலகு செந்நிறம். இது, சாகபக்ஷணி.

கிளிஞ்சல்

இது முதுகெலும்பில்லாப் பிராணிவகையைச் சேர்ந்தது. இப்பிராணி இலையொத்து, அகன்ற இரண்டு மேலோட்டால் தன்னைக் காத்துக்கொள்ளும். இது, நகருகையில் கூரான பக்கமாய் மெல்ல நகருகிறது. இது குளங்குட்டை, கழி, கடல் முதலியவற்றில் வசிக்கிறது. இதன் ஒட்டைச் சுட்டுச் சுண்ணமாக்குகின்றனர்.

கிளிப்டோடன்

(Glyptodos) இது, தென் அமெரிகாவிலிருக்கும் பிராணி. ஆமைபோல் முதுகில் செதிளும், வாலும் கழுத்தும் நீண்டும் இரண்டு கால்களையும் உடையது. தலை எலும்பு போன்ற பொருளால் மூடப் பட்டது.

கிளிவிருத்தம்

இது திருஞானசம்பந்தர் காலத்து வழங்கி வந்த புத்த தூல். (திருஞா திருமுறை.)

கிளைநதிகள்

பெரிய ஆற்றிலிருந்து சில சிற்றாறுகள் பிரிந்து செல்வது, அவைகளுக்குக் கிளைநதிகள் என்று பெயர். (பூகோளம்.)

கிள்ளி

சோழன் பெயர். இக்கிள்ளிப்பெயர் முதல்வன் கரிகால்வளவன் குமரன், நெடுமுடிக்கிள்ளி. இவனுக்குப் பிறகு காஞ்சி நகராண்டவன் கழற்கிள்ளியின் பின்னோனான இளங்கிள்ளி, நெடுமுடிக்கிள்ளியே, வடிவேற்கிள்ளி, வெல்வேற்கிள்ளி, மாவண்கிள்ளி எனப் பலபெயர் பெறுவன்.

கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சோகோவனார்

இவர் இயற்பெயர் கோவனென்பதே. சோஎன்னும் அடைமொழி பற்பலர் பெற்றிருக்கிறார்கள். இன்னகாரணத்தால் இவ்வடைமொழி கொடுக்கபடுவ தென்பதும் இன்ன பொருளதென்பதும் விளங்கவில்லை இவர் வேளாளர். கிள்ளி மங்கலம் பாண்டி நாட்டகத்தோரூர். கிள்ளிமங்கலங்கிழார் என ஒருவர் குறுந்தொகையிற் கூறப்படுகிறார். அவர்க்கு இச்சோகோவனார் புதல்வராவர் போலும், இவர் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடி யுள்ளார். தலைவிபடுங் காமத்துயரையறிந்த தோழி நாம் காவல் கடந்து நாணமுதலாயின வொழித்துக் காதலனது ஊர் வினவிச் செல்லுவோமோ வென்று கூறுவது வியக்கத்தக்கது. இவர் பாடியது, நற் 365ம் பாட்டு, (நற்றிணை.)

கிள்ளிமங்கலம் கிழார்

(வேளாளர்) இவர் கடைச்சங்கமருவிய புலவர். இவர் ஊர் கிள்ளிமங்கலம் போலும், இவர் பிறப்பால் வேளாளராக இருக்கலாம். (குறு 76, 110, 152, 181.)

கிள்ளிவளவன்

இவன் புகாராண்ட சோழர்களில் ஒருவன். இவன் கரிகாற் சோழன் மகனாக இருக்கலாமென எண்ணப்படுகிறது. இவன் சகோதான் நலங்கிள்ளி இவர்களுடன் நெடுங்கிள்ளி காரியாற்றங் கரையில் நடந்த போரில் இறந்தான். இவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடினர். (மணிமேகலை.)

கிழங்குவகைகள்

இவை மாஞ்செடி, கொடிகளில் வேரிலுண்டாகும் சதைபற்றுள்ள மூலங்கள். காராக்கருணை, கரி கருணை, சேமைக்கிழங்கு, காட்டுகாணை, சேனைக்கரணை, பனங்கிழங்கு, நிலப்பனங் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, மெருகன் கிழங்கு, பேதிக்கிழங்கு, அமுக்கிராக்கிழங்கு, பூமிசர்க்கரைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பெருவள்ளிக்கிழங்கு, வெற்றிலைவள்ளிக்கிழங்கு, முள்ளங்கிக்கிழங்கு, இஞ்சிக்கிழங்கு, பிரப்பங்கிழங்கு, கோவைக்கிழங்கு, சீந்திற்கிழங்கு, கருடன் கிழங்கு, கூகைக்கிழங்கு, புளிநாளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தாமரைக்கிழங்கு, அல்லிக்கிழங்கு, கொட்டி, சிட்டி, பெருவள்ளி, சிறுவள்ளி முதலிய.

கிழமை பிறந்த நாள்

(ஞாயிறு) பரணியும், (திங்) சித்திரையும், (செவ்) உத்திராடமும், (புத) அவிட்டமும், (வியா) கேட்டையும், (வெள்) பூராடமும், (சரி) ரேவதியும் வருவன.

கிழார்

வேளாளர்க்குப் பட்டப்பெயர்,

கிழார்க்கீரனெயிற்றியார்

கடைச்சங்க மருவிய புலவர்.

கிழியறுத்தல்

மதுரையில் கிழியிற் பொதிந்த பொருளின் தொங்கலை கல்வி வன்மையா லறுத்தல். இத்திருவிழா ஆவணித் திருவிழாவில் நாலாம் திருநாளில் நடைபெறும்; இதற்கு மேலை மாசி வீதியிலுள்ள நக்கீரர்கோயில் அல்லது சங்கத்தார் கோயிலிலிருந்து இரண்டு விக்கிர கங்கள் எழுந்தருளுவதுண்டு. அவற்றைக் கபில, பரணர் வடிவங்களென்று சொல்லு கின்றனர். (திருவிளை.)