அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
காகங்கரைதல்

பகல் 8 முகூர்த்தங்களில் 1 மு லாபம், 2 மு சேதம், 3 மு வரவு, 4 மூ தனம், 5 மு மழை, 6 மூ யுத்தம், 7 மு மாணம், 8 மு அச்சம். (கிழக்கு) ஆலஸ்யம், (தெ~கி) மரணம், (தெ) தன லாபம், (தெ~மே) சந்தோஷம், (மே) கலகம், (வ~மே) அபயம், (வட) விருந்து, (வ. கி) பொல்லாங்கு, தனக்கு முன்னும், படுக்கைவிட் டெழுகை யினும் கத்தினால் நினைத்துச் செல்லுங் காரியஞ் செயம்.

காகசங்கன்

பிராமணியின் குமரன், சந்தி யாகாலத்தில் போகிப்பவரைக் கூடிச் சந்தோஷத்தைப் போக்குபவன்.

காகதத்தன்

1. சோமதத்தன் குமரன். இவன் குமரன் சுமதி. 2. இராமபிரான்.

காகதுண்டகன்

இவன் இராசகிரிய நகரின் புறத்ததாகிய சோலை யொன்றிலுள்ள ஒரு பெரியவன். தோற்றப் பொலிவை யுடையவன், வாசவதத்தை இறந்து விட்டாளே யென்று கவலைக்கடலில் அழுந் திச் செயலற்றிருந்த உதயணனை எப்படி யேனுங் காப்பாற்ற வேண்டுமென்று தனியே வந்திருந்த மந்திரியருடைய வேண்டு கோளின்படி அவனை நோக்கி “இனி இரண்டு மாதம் நான் சொல்லு கிறபடி விரதத்தோடிருப் பாயாயின் வாசவதத்தையைப் பழைய வடிவத்தோடே பார்க்கலாம்” என்று சொல்லி, அவ்விரத வொழுக்கத் தையும் தெரிவித்து அவன் கவலையை மாற்றியவன். (பெ~கதை.)

காகந்தன்

காவிரிப்பூம் பட்டினத்தை முதலில் ஆண்டிருந்த அரசன்.

காகந்தி

காவிரிப்பூம்பட்டினம் காகந்தனா லாளப்பட்டதாலிப் பெயர் பெற்றது. (மணிமேகலை).

காகனார்

நான்மணிக்கடிகை இயற்றிய புலவர். இவர் கடைச்சங்கத்தார் காலத்தவர்.

காகபர்ணன்

சுகநாகன் குமரன். இவன் குமரன் க்ஷேமவர்ணன்.

காகபாதன்

ஒரு சிவகணத்தவன்.

காகமுனி

கண்ணனுக்கு உபநயனஞ் செய்தவர்.

காகமுனிவர்

திருமணநல்லூரில் சிவமூர்த்தியைத் தரிசிக்கத் தலையால் நடந்து தவமிருந்து திருஞானசம்பந்த சுவாமிகள் திரு மணத்து முத்திபெற்றவர். (ஆச்சாபு: புராணம்).

காகம்

இது கருநிறமான உருவமும் நீண்டு வலுத்த அலகும் உடைய பறவை. இதில் மணிக்காக்கை, அண்டங்காக்கை என இரு வகை யுண்டு. இது ஊரில் வசித்து அவ்வூரில் சிந்திய உணவாதிகளை அருந்தும். இது ஊரில் நாற்றமாய் அழுகிய மாம்ச ஜாதிகளையும் மற்றவைகளையுந் தின்பதால் இதனை ஊர்த்தோட்டியென்பர். இது பறவைகளில் தந்திரமுள்ளது. பிள்ளைகளை ஏமாற்றி உண்பதோடும் பிள்ளைகள் வைத்துள்ள தின்பண்டங்களையும் கவர்ந்து செல்லும். இதனிடத்தில் சில நற்குணங்களும் உண்டு. காலையெழுதல், காணாமல் புணர்தல், மாலை குளித்தல். மனைக்கேகல், உற்றாரோடுண்ணல், உறவோம்பல் முதலிய. இவ்வினத்தில் வெள்ளைக் காக்கை என்பதுமுண்டு. அவை இங்கு அருமை. இவ்வினத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த இடங்களில் ஒருவகை காக்கை உண்டு, அவை சாம்பல் நிறங்கொண்டவை. அவற்றின் இறகுகளிலும் வயிற்றிலும் வெண்மை கலந்திருக்கிறது. அதன் வால் நீளம், இதனை மக்பி, பைக்கா, கீத்தா எனப் பெயரிட்டு முறையே ஆங்கிலர், இத்தாலியர், கிரீஸ் ஜாதியார் அழைப்பர். இது இந்திய காக்கையின் தொழிலைச் செய்கிறது. இக்காக்கை பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டைகளைத் திருடிக் குடித்து விடுதலால் மற்றப் பறவைகள் இதனை விரோதிக்கும். இதுபோல் அமெரிக்கா நாட்டில் ஒருவகை காக்கையுண்டு. அதனைக் காரியன் என்பர். இவை ஐந்திராம், வாருணம், வாயவ்யம், யாம்யம் என நான்கு வகை. இவற்றிற்குப் பலியிட்டோர் யமதண்டனை யினின்று நீங்குவர். காணப்படாத பிதுரர் வாயசரூபமடைந்து திரகத்தனை ஆக்ரயித்தலின் பலியிட வேண்டும்.

காகாசுரன்

இவன் இந்திரகுமாரன். இராமமூர்த்தி சதாபிராட்டியுட னிருக்கையில் அபசாரப்பட்டு ஒரு கண்ணிழந்தவன்.

காகி

தாம்சையின் புத்திரி, உலூகன் தாய்.

காக்காய்க்குறவர்

இவர்கள் காக்காய்களுக்குச் சோற்றில் கள்ளிப்பால் கரந்து விசிறிக் காக்கைகளை மயங்கச்செய்து பிடித்துத் தின்போர். இவர்களிற் சிலர் காவிட் டியான், மணிப்பறையன், மேலூத்தான், சாத்தப்பறையன் எனப் பகுக்கப்படுவர்.

காக்கை

1. ஆலமரத்தைக் காண்க, 2. தருமன் பெண். இவளுக்குக் காக்கைள் பிறந்தன.

காக்கைபாடினியம்

காக்கைபாடினியரால் செய்யப்பட்ட இலக்கண நூல், இது பிற்காலத் திறந்துபோய் ஆங்காங்குச் சிற்சில அரிய சூத்திரங்களே வழங்கிவருகின்றன.

காக்கைபாடினியார்

அகத்தியர் மாணாக்கா பன்னிருவருள் ஒருவர். இவர் சிறு காக்கைபாடினியம் எனும் இலக்கண நூல் செய்தவர்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்

ஒரு தமிழ்ப் புலவர். இவர் பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்துப்பாடி நாடு கோட்பாடு சேரலாதனிடம் ஒன்பது காப்பொன்னும் தூறாயிரம் காணமும் பெற்றவர். இவர் கடைச்சங்கத்தார் காலத்தவராக இருக்கலாம். (பதிற்றுப்பத்து) (குறுந்).

காக்ஷிவந்தன்

கண்ட கௌசிகருஷிக்குத் தந்தை, ஜராசந்தனுக்குப் புத்திர சந்ததி கொடுத்தவன்.

காக்ஷிவன்

கௌதமருஷி யௌசீநரியெனும் சூத்ரப்பெண்ணிடம் பெற்ற குமரன். இவர் கிரிவிரஜத்திலிருந்தவர். (பார~சபா.)

காங்கேயன்

1. இவர் புதுவையிலிருந்த ஒரு பிரபு, ஒட்டக்கூத்தரை ஆதரித்து அவர்க்குக் கவுடப்புலவன், கவிராக்ஷதன் எனும் பட்டமளித்து அவரால் நாலாயிரக்கோவை யெனும் பாடல் பெற்றவர். 2. குமாரக் கடவுள், கங்கை வளர்த்த தனாற் பெற்ற பெயர். 3. வீஷ்மன் கங்காபுத்திரன், பீஷ்மனைக் காண்க. பிரபாசன் எனும் எட்டாம் வசுவின் அம்சமாயுதித்தவன். 4. ஒரு சித்திரன்.

காங்கேயர்

இவர் தொண்டைமண்டலத்துச் செங்குந்தர் மரபிற் பிறந்த தமிழ்ப் புலவர். உரிச்சொல் நிகண்டியற்றியவர்.

காங்கேரு

இது ஆஸ்திரேலியா நாட்டுமிருகம். இதன் முன்னங்காலிரண்டும் குட்டை, பெட்டைக் காங்கேருக்கு அடிவயிற் றில் பைபோன்ற ஒரு உறுப்புண்டு. அதில் அது தன் குட்டிகளை வைத்துக்கொண்டு காக்கிறது. குந்தி, குந்தி நடப்பது. காடுகளிலும், வயல்களிலும், மரங்களிலும் அணில் போல் சஞ்சரிக்கும். இது வருடத்திற் கொருமுறை குட்டி போடுகிறது. காங்கேருவின் குட்டி, ஈனும்போது மாம்ச பிண்டம் போல் உருவமின்றி யிருக்கிறது. இப் பிண்டத்தைத் தாய் தன்னிடமுள்ள பையிலடக்கிக்கொள்ளுகிறது. அக்குட்டி அப்பையிலிருந்தே பாலுண்டு அவயவங்களைப் பெற்றுத் தேகத்தில் மயிர்முளைத்த பின் வெளிப்படுகிறது.

காங்கோ அங்கோலாமதம்

காங்கோதேசத்தவர் தங்களரசனைத் தேவனென்று எண்ணித் துதிப்பர். அவ்வரசனைச் சாம்பர் எனவும் பிங்கோ என்றும் பெயரிட்டழைப்பர். ஆயினும் அவ்வரசனும் குடிகளும், மாகிஸ்ஸோ, சிகாதி, எனுமிரண்டு விக்ரகங்களைப் பூஜிப்பர். கங்காகம் பேரி எனுந்தேவதை சகல சுபங்களையுந் தருவதென்று அவளை ஆராதிப்பர். மாடாம்போ மாகாணத்தில் மிராம்ப எனும் பயங்கர விக்ரகமுண்டு, அதனைச் செயத்தை விரும்பியவர் ஆராதிப்பார். சிலர் புலி, பாம்பு, ஆடு, பசு முதலியவற்றை ஆராதிப்பர். படைப்புக்கடவுளர் அநேகம் உண்டு, அவர்க்குத் துயுஸ்கதா என்று பெயர். இவர்கனின் குருக்கண்மார் கங்கா எனப்படுவர், இக்குருமார் பிணியாளரைக் காணச் செல்லுகையில் வியாதி நீங்கும் நிமித்தம் இஷ்டதேவதைகளின் விக்ரக மொன்று பிணியாளருக்குக் கொடுப்பர். அங்கோலியருக்குப் படைப்புக் கடவுளர் பலர் உண்டு. அவர்களுக்கு ஜம்பன், பாரண்யோ என்று பெயர். இவர்கள் மாகிச்சோ எனும் பல தேவதைகளை ஆராதிப்பர். திருவிழாக் காலங்களில் கீம்பரா எனும் மதசம்பந்த நிருத்தம் செய்வர். பின்னும் சிதோம்பி எனும் மகாத்மாக்களையும், நிகாம்போ எனும் குருக்கண்மாரையும், நிகோனி எனும் வைத்திய தேவதைகளையும், இவ்வாறே குஷ்டு, செவிடு முதலியவைகளைப் போக்கும் தேவர்களையும் ஆராதிப்பர். இவ்விடத்திலிருக்கும் காகாசியர் ஸ்விஸாங்கோ எனும் தேவதையை விக்கிரகமாகச் செய்து பூஜிப்பர்.

காசன்

சுகோத்தின் குமாரன்.

காசரோகம்

இது முதவில் கண்டத்தில் நமைச்சல், அரோசகம், இருமல், அவயவங்கள் நறுக்கித் துவைத்தன போலுதல், கண்கள் மின்மினிப் பறப்பது போலுதல், முதுகு, மார்பு, விலாமுதலிய இடங்களில் நோய், வெண்கலத் தொனிபோல் தொண்டையில் சத்தம், வாயில் கோழையுண்டாதல் முதலியவற்றைப் பூர்வரூபமாகப் பெறும். இது வாதகாசம், பித்தகாசம், சிலேஷ்ம் காசம், ரத்தகாசம், க்ஷயகாசம் எனப் பேதப்படும். இவை ஒன்றினும் ஒன்று அதிபலம் உடையன. இவற்றிற்குடனே மருந்து செய்யாவிடின் மரணந் தரும். (ஜீவ)

காசி

1, இது சத்தமோக்ஷ ஸ்தானங்களில் ஒன்று. இது கங்கா தீரத்திலிருந்து தன்னிற் பிரகாசிக்கும் தன்மையுள்ளது. இதில் சிவமூர்த்தி அடியவர் தியானித்தபடி காட்சி தந்து சித்தியளிப்பர். இத்தலம் சர்வ சங்காரகாலத்தில் சிவமூர்த்தியின் சூலத் தலையி லிருந்து அழிவடையாதது. இத்தலத்தில் உயிர்நீங்கும் ஆத்மாக்களுக்குப் பார்வதி பிராட்டியார் சிரமபரிகாரஞ் செய்யச் சிவமூர்த்தி தாரகமந்திர முபதேசித்து முத்தியீவர். இத்தலத்தில் சயிகடவியன், இயக்கர், சம்வர்த்தனன் முதலியவர்பூசித்த சிவலிங்கங்களும் கோபூசித்த கோப்பிய ரேகம், கபிலாகாரமும், இன்னும் இருஷபத்து வசலிங்கம், பத்திரதோய தீர்த்தம், இரணியகற்பேசம், சுவலினேச்சுரம், பரலிங்கம், கந்துகேச்சுரம், சயிலேச்சுரம், சங்கமேச்சுரம், சுத்திமேசம், சுக்கிரேசம், சம்புகேசுரம், மல்லிகார்ச்சுனம், ஈசானம், கணேச்சுரம், அகிலேச்சுரம், இராமேச்சு ரம், கதம்பேச முதலிய தலங்களுமுண்டு. இந்த மகாத்தலத்தில் ஐந்து குரோசம் சிவலிங்கங்கள் இருத்தலால் ஆநந்தகானம் எனவும், இறந்த உயிரையளித்தலாலும், வேதியன் எடுத்த பிடி மணலில் தோன்றிய சிவலிங்கமிருத்தலாலும், அவிமுத்தம் எனவும், ஆன்மாக்கட்குச் சிவானந்த மளித்தலால் ஆனந்தகானம் எனவும், சர்வசங்கார காலத்தில் பூதங்கள் ஒடுங்குமிடம் ஆதலால் மாமயானம் எனவும், சிவமூர்த்தி சோதியுருவாய் எழுந்தருளியிருத்தலாலும் முத்தி மாதுக்கு இருப்பாதலாலும், காசி எனவும் உயிர்க்குத் தருமம் அளித்தலால் தரும் வனம் எனவும், பெயர் பெறும். இக்காசி பெண்ணுருவம் பெற்றுச் சிவமூர்த்தியை வணங்கித் தன்னை வணங்கினவர், முத்தி யடைய வரம் பெற்றனள். 2. காசிபன் குமரன். இவன் குமரன் விஷ்ட்ரன்.

காசிகாண்டம்

காசி மகாத்மியம் கூறிய நூல். இது அதிவீர ராமபாண்டியனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

காசிபன் கீரனார்

இவரது இயற்பெயர் கீரன் கடைச்சங்கத்திலே தலைமை பெற்றிருந்த நக்கீரரின் வெறென்பது தெரிய ஏனைக் கீரர்களெல்லாம் ஒவ்வோரசை மொழி கொடுக்கப் பட்டமையின் இவரும் அவ்வாறே காசிபன் கீரனாரெனப்பட்டார். காசிபனென்ற தனால் இவர் காசிபகோத்தி சத்தினராகிய அந்தண ரென்றறியப்படும் இவர் முல்லைத் திணையைப் பாடியுள்ளார். வம்பமாரி யென்று தலைவி கருதியாற்றுமாறு தோழி மருட்டி மழையை நோக்கிக் கூறுவதாக இவர் பாடியது மிக்க நயமுடையதாகும். இவர் பாடியது நற் 248ம் பாட்டு.

காசிபர்

A. மரீசி அல்லது அரிசி ருஷியின் குமரர். தாய், களை. இவர் தக்ஷப் பிரசாபதியின் குமரிகள் பதின்மூவரை மணந்தனர். அவர்களாவார்: அதிதி, திதி, தது, அநாயு அல்லது காலை, பிரதை அல்லது ஆயு, முனி, சுரசை அல்லது சிங்கிகை, இளை, குரோதவசை, தாமிரை, சுரபி, விநதை, கத்ரு. இவர்களுள் அதிதியிடம் ஆதித்தியரையும், திதியிடம் தைத்தியரையும், தநுவிடம் தானவரையும், அநாயுவிடம் சித்தரையும், பிரதையிடம் காந்தருவரையும், முனியிடம் அப்சரசுக்களையும், சுரசையிடத்து யக்ஷரையும் இராக்கதரையும், இளையிடத்து விருக்ஷம் கொடி பூண்டுகளையும், குரோதவசையிடம் புலி சிங்கமுதலிய மிருகங்களையும், தாமரையிடம் குதிரை கழுதை புக்ஷி முதலியவற் றையும், சுரழியிடம் பசுக்கூட்டங்களையும், விநதையிடம் அருணனையும் கருடனையும், கத்துருவிடம் நாகரையும் பெற்றனர். இவர்களன்றி வைசியாநார் குமரிகளிருவரில் காலையிடத்துக் காலகேயரையும், புலோமையிடத்துப் புலோமரையும் பெற்றனர். இவர், பின்னும் பர்வதன் எனத் தேவருஷியையும், விபாண்டகன் என்னும் பிரமருஷியையும் பெற்றனர். இவர் பரசுராமர் செய்த அச்சுவமேதயாகத்தில் பூமியைத் தானமாகப் பெற்றவர். இதனால் பூமிக்குக் காசினி என ஒரு பெயர் உண்டாயிற்று. இவர்க்கு அதிதியிடம் உபேந்திரரும் பிறந்தனர் என்பர். இவர் மாயையால் மயங்கிச் சூரபன்மன் முதலியவரையும், ஊர்வசியைப் புணர்ந்து வசிட்டரையும் பெற்றார் என்பர். B. வசுதேவனுக்குப் புரோகிதன். குந்தி பாண்டவர்களைப் பெற்ற காலத்துப் பொன்னணி கொண்டு செலுத்தினவன், பாரிசாதாபஹரணத்தில் இந்திரனுக்கும் கண்ணனுக்கும் சமாதானங் கூறியவன். C. ஒரு இருடி. உரோமகரு வணருக்கும் சுகருக்கும் மாணாக்கர். D. தாட்சபனைக் காண்க, E. பரீத்தைப் பாம்பு கடிக்கப் போகிறதென்று கேள்விப்பட்டு அதை நீக்கிப் பரிகாரஞ் செய்து பொருள் பெறவந்த வேதியன், இவனைத் தக்ஷகன் வழியில் சந்தித்து ஒரு மரத்தினைக் கவ்வித் தனது விஷமூட்டி அது எரியக்காட்டி இதனை மீண்டுந் தளிர்க்கச் செய்வையேல் நீ அரசனை எழுப்புவாய் எனச் சொல்லினன். வேதியன், தனது மந்திரசக்தியால் விஷத்தினை மரத்திலிருந்து இறக்கி மீண்டும் மரத்தினைத் தளிர்க்கச் செய்தனன். இதனால் தக்ஷகன் திடுக்கிட்டு வேதியனுக்கு வேண்டிய பொருளளித்து அரசனிடஞ் செல்லாமல் அனுப்ப வீடுசேர்ந்தவன்.

காசியன்

A. சுகோத்திரன் குமரன். இவன் குமரன் காசி. B. சனசித்தின் குமரன். C. ஆயுவின் பௌத்திரன்.

காசியரசன்

1. பதுமாபதியின் தந்தை; உதயையோடை யென்பவளுடைய கணவன் மிக்க சேனையை யுடையவன் (பெருங்கதை). 2. நீலகேசி என்பவளுடைய தந்தை.

காசிரகசியம்

காசியின் சிறப்புக் கூறிய நூல். இது தமிழில் மீனாகசுந்தரம் பிள்ளையவர்களா லியற்றப்பட்டது.

காசிலி

ஒரு இருடி மேற்குச் சமுத்திரக் கரையில் தவஞ்செய்து கொண்டிருந்தவர். பிரசேதசுகட்கு ஞான உபதேசஞ் செய்தவர்.

காசுக்காரர்

செட்டிவகைகளில் ஒன்று.

காச்மீரம்

பரதகண்டத்தின் வடக்கிலுள்ள ஓர் தேசம்.

காச்யபன்

காசம் எனும் நாணற்பூப் போல் வெளுத்திருப்பவன்.

காச்யபர்

காசிபரைக் காண்க.

காச்யபி

கச்யபரைக் காண்க.

காஞ்சனன்

1. காயசண்டிகையின் கணவன், காயசண்டிகையின் உருக்கொண்ட மணிமேகலைபால் வந்த உதயகுமாரனை வாளால் வீசிக்கொன்றவன். (மணிமேகலை.) 2, பூரூரவா புத்ரனாகிய அமவசு பவுத்திரன். 3. பீமன் குமரன்.

காஞ்சனபுரம்

காயசண்டிகையின் கணவனிருக்கை வித்யாதர நகரம். இது வின்ஞ்சைமா நகரெனவும் வழங்கப்படும். (மணி மேகலை.)

காஞ்சனமாலை

1. கர்ணன் தேவி, 2. சூரசேநன் பெண், மலையத்துவசன் தேவி. இவள் பூர்வத்தில் விச்சுவாவதி எனுங் காந்தருவ மாது. பார்வதி பிராட்டியைப் புத்திரியாகப் பெறத் தவஞ் செய்தவள். விச்சுவாவதியைக் காண்க. இவளிடம் புத்திரியாகப் பிறந்த பிராட்டியின் திருநாமம் தடாதகை, 3. பாண்டியன் புத்திரியில் ஒருத்தி, தெய்வீக அரசனைக் காண்க. 4. இவள் வாசவதத்தையின் உயிர்ப் பாங்கி. அவளுடைய கண்மணி போன்றவள் பேரழகினள் சுவை பயக்கும் இனிய மொழியினள் தலைவியின் குறிப்பறிந்து நடப்பவள். வாசவதத்தையின் கருத்தை இவள் போல் அறிந்து நடப்பவர்கள் இல்லை. அவளுக்கு மனக்கலக்கம் நேரும் போதெல்லாம் தக்க பரிகார மொழிகளைச் சுருக்கமாக மெல்ல கூறித் தெருட்டுபவள். அவள் பால் உண்மை அன்புடையவள். அவள் வீடு தீக்கிரையாயிற்றென்று கேட்டபொழுது அவள் இறந்து விட்டாளென் றெண்ணி, கனங்குழை மடவோய்! பொன்னே! திருவே! அன்னே! அறிவாய்! நங்காய்! நல்லாய்! என்று இவள் புலம்பியதால் விளங்கும். அவளுடைய இன்பகாலத்தும், துன்பகாலத்தும் பிரியா தவள். இவள் பந்து விளையாட்டில் மிகப் பயிற்சியுள்ளவள். இவள் பெயர் காஞ்சனை, கஞ்சனமாலை யெனவும் வழங்கும். (பெருங்கதை)

காஞ்சனமாலை கோயில்

இது எழுகடற்றீர்த்தத்தின் தென்மேற்கில் உள்ளது; மிகப் பழமையானது. இதில் ஜலகண்டேசுவாரென்று திருநாமமுள்ள சிவபெருமானும் அவரைத் தரிசித்த வண்ணமாக அமைந்த காஞ்சனமாலையின் வடிவமும் உண்டு. (திருவிளை~புரா.)

காஞ்சனை

ஒரு தெய்வகன்னிகை பார்வதியாருக்குத் தோழியாகத் தவஞ்செய்து மானாகி விந்தமலையிற் பிறந்து வள்ளிநாய்ச் சியாரைப் பெற்றவள். (திருச்செந்தூர்ப் புராணம்.)

காஞ்சி

1. சத்தமுத்தி புரியினொன்று. இதில் சுவர்ணகாஞ்சி விருக்ஷம் கிளைகள் பொன்மயமாகவும், இலைகள் மரகதங்களா கவும், கனிகள் நவமணிகளாகவும் ஓங்கி மகருஷிகளால் காணப்பட்ட தடாகத் தருகிலிருந்ததால் இப் பெயர் பெற்றது. இப்பட்டணத்தைப் பிரளயசித் எனவும், சிவபுரம் என்றும், விண்டு புரம் என்றும், சிரி மூர்த்தி வாசம் என்றும், பிரமபுரம் என்றும், காமபீடம் என்றும், தபோவனம் என்றும், ஜகச்சாரம், சகலசித்தி என்றும், கன்னிகாப்பு என்றும், தொண்டாபுரம் என்றும், தண்டகபுரம் என்றும், காமபீடம் என்றும், புராணங்கள் கூறும், இதில் சிவத்தலம், கச்சபாலயம், ஏகம்பம், கச்சிமயானம், காரோணம், மாகாளம், பச்சிமாலயம், அநேகதங்காபதம், பணாதரம், பணீச்சுரம், வராகம், சுரகரீச்சுரம், இராமம், வீராட்டம், வேதாபுராம், உருத்திரம், வச்சிரநகரம், பிரமம், திருமாற்பேறு, மறைசை, திருமேற்றளி, இந்திராலயம், மணீசம், நான் முகம், சங்கரம், பரசிராமம், ஓத்தூர், அநேகபேசம் முதலிய இருக்கின்றன. இதிலுள்ள விஷ்ணுத்தலங்கள் புண்ணியகோடி விமானம் அல்லது அத்திகிரி, அட்டபுயம், திருவெஃகா, ஊரகம், நீரகம், திருத்தண்கா, திருவேளுக்கை பாடகம், நிலாத்திங்கட் இண்டம், காரகம், கார்வனம், கள்வனூர், பரமேசவிண்ணகரம், பவளவண்ணம் முதவியன. இதிலுள்ள தீர்த்தங்கள் அருந்தம், அக்கி, பௌரந்தரம், குசம், வாமனம், மங்களம், சிவகங்கை, சர்வ தீர்த்தம், பாண்டவம், சுரகரம், கருடம், பஞ்சம், பம்பை, எமாம்போசம், குண்டம், சந்திரம், சித்தி, காயாரோகணம், கஜேந்திரம், சடாயு, சாச்வதி, இருத்தாபநாசனி, பிரமம், வசிட்டம் முதலியன. பின்னும் விளக்கம் ஒன்று, இடம் இரண்டு, தெற்றிகள் மூன்று, அரண்கள் நான்கு, தருக்கள் ஐந்து, புட்களாறு, நதிகள் ஏழு, பொதுக்கள் எட்டு, பொய்கைகள் ஒன்பது, சிலைகள் பத்து, மன்றம் பதினொன்று உண்டு. இதன் விரிவைப் புராணங்களுட் காண்க. இதில் ஜைனரா லயமும் உண்டு, இது, சிலநாள் சோழ ராஜாக்களுக்கும் பல்லவர்க்கும் இராசதானியா யிருந்தது. இது, சத்திபீடங்களுள் ஒன்று. இது, காமகோடி பீடம் எனப்படும். இது, சைவ சமயாசாரியர்கள் ஆழ்வாராதிகளால் பாடப்பெற்றது, 2. ஒரு நகரம், இதில் முக்காலத்தையு மறிவிக்கும் கந்திற்பாவைத் தெய்வமும், துணையிளங்கிள்ளி யென்பவனாற் கட்டப்பட்டுள்ள புத்தாலயம் ஒன்றும், தருமத வனம் என்று பெயருள்ள ஒரு வனமும் இருந்தன. மணிமேகலை அறவணவடிகள் பால் அறங்கேட்டுப் பலநாள் தங்கி மரித்த இடமும் இதுவே. (மணிமேகலை.) Conjeevaram, in Chengleput District in the Madras Presidenoy It was the Captial of Chola Kings. 3. வெவ்விய சினத்தையுடைய வேற்று மன்னன் வந்துவிட அரசன் காஞ்சி யென்னும் பூவை மலைந்து காவலிடத்தைக் காக்க நினைந்தது. (பு. வெ.)

காஞ்சிசோமயாசியார்

எழுபத்துநான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் (குருபரம்.)

காஞ்சிநதி

மேலைச் சிதம்பரம் அல்லது பேரூரிலுள்ள நதி.

காஞ்சிபுரம் சபாபதி முதலியார்

இவர் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் தமிழ்ப்புலமை நடத்திய மகா வித்வான். சென்னையில் வசித்தவர் சைவர் பெரிய புராணம் திருவிளையாடல் மற்றுஞ் சிலதல புராணங்களுக்கு உரையியற்றியுரை யாசிரிய ரெனப் பெயர் பெற்றவர். இற்றைக்குச் சற்றேறக்குறைய எழுபது வரு ஷங்களுக்கு முன்னிருந்தவர், தமிழில் அருணாசலசதகம் முதலிய இயற்றினவர்.

காஞ்சிபுராணம்

இது காஞ்சி மகாத்மியம் சொன்ன தழிழ்நூல். இது இரண்டு காண்டங்களுடையது. இதன் முதற்காண்டம் திருவாவடுதுறை சிவஞான முனிவராலும், இரண்டாங் காண்டம் சிவஞான முனிவர் மாணாக்கர் கச்சியப்ப முனிவராலும் இயற் றப்பட்டது. இது நாலாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தொரு செய்யுட்களுடையது.

காஞ்சிப் புலவனார்

மாங்குடி மருதனா ரென்பவர் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நிலையாமை அறிவுறுத்தவேண்டி மதுரைக் காஞ்சிபாடியதனால் மதுரைக் காஞ்சிபுலவரென்றும், காஞ்சிப் புலவரெனவுங் கூறப் பெறுவாராயினார், மாங்குடிகிழாரென்ப வருமிவரே இவர் வேளாண் மரபினர். மேற்கூறிய நெடுஞ்செழியனது அவைக்களத்துப் புலவராய் அவனைப்பாடி மகிழ்வித்து வைகுவாராயினர். புறம் 24, ஒரு காலத்துச் சோனுஞ் சோழனும் மதுரையை முற்றியபோது இளைஞனாகிய நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறுவான் ”ஓங்கிய சிறப்பினுயர்ந்த கேள்வி, மாங்குடி மரு தன்றலைவனாக (புறம் 72) என்று இவரைப் பாராட்டிக் கூறினானெனின் இவருடைய மேன்மையும், கல்வி கேள்வி களினுயர்வும் நம்மனோராலள விடப்படும் கொல்லோ ? இவர் பாடிய மதுரைக் காஞ்சியைப் படிப்பவர்க்கு இவரது ஆற்றல் விளங்கும், பின்பொரு பொழுது வாட்டாற் றெழினியாதனைப் பரிசில் வேண்டிப்பாடி அவனால் ஆதரிக்கப் பெற்று மீண்டு மதுரையை அடைந்து வைகுவாராயினர். புறம் 396. இவர் எல்லாத்திணைகளையும் புனைந்து பாட வல்லவர். நெடுஞ்செழியன் போரிலே உள்ளஞ் செலுத்தி அவ் வழியே யொழுகுவானை நன்னெறிப்படுத்தி மறுமைக் காய வேள்வி முதலியவை செய்யப்பண்ணினவர் இவரே. புறம் 26. கடற்கரையில் மகளிர் விளையாட்டயாவதனை விளங்கக்கூறியுள்ளார். நற் 123. இவர் பாடியனவாக மதுரைக் காஞ்சியகவ லொன்றும், நற்றிணையில் 123 பாட லொன்றும், குறுந்தொகையி லொன்றும் அகத்திலொன்றும், புறத்திலாறும், திருவள்ளுவமாலையி லொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா திருத்துறைப்பூண்டித் தாலுக்காவில் மாங்குடி மருதவனமென இரண்டு ஊர்கள் ஒன்றை ஒன்று அடுத்துள்ளன. அவற்றுள் முன்னது இவரூரும் பின்னது இவரால் நாட்டப்பட்டதும் போலும். (நற்றிணை.)

காஞ்சியெதிர்வு

எதிரூன்றுஞ் சேனைமே விடுதலைப்பொறாத வேற்றொழிலை வல்ல வீரனுடைய வெற்றியை மிகுத்துச் சொல் லியது. (பு. வெ).

காடர்

1. ஆனைமலைக்கண் வசிக்கும் ஒரு வகைகாட்டுச் சாதியர். இவர்களுக்கு வேட்டையாடுதல், தொழில் அவற்றுள் யானை வேட்டை முக்யம். 2, கொச்சி சமஸ்தானத் தருகிலுள்ள குன்றுகளில் வசிக்குஞ் சாதியார்.

காடவன்

இவன் சைந அரசத் தலைவன். திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்துச் சைவனாய்ப் பாடலிபுரத்திலிருந்த சைநராலயத்தை யிடித்துக் குணதரீச்சுரங் கட்டுவித்தவன்.

காடவர்கோன்

காஞ்சியாண்ட அரசர் வம்சத்தவரைச் சேர்ந்தவர். இவர் காஞ்சியில் சிவாலயஞ் செய்வித்து அதற்குக் கும்பாபிஷேகஞ் செய்விக்க எண்ணி நாள் வைத்தனர். சிவமூர்த்தி இவரிடந் தரிசனங் தந்து அரசனே நீ வைத்தநாளில் பூசலார் நாயனார் செய்யும் கும்பாபிடேகத்திற்குப் போகிறோம்; நீ வேறுநாள் வைத்துக் கொள்க என்று திருவாய்மலர அரசர் பூசலாரைத் தேடி அவரைத் தரிசித்து இன்பமடைந்தனர்.

காடுகாள்

இவளுக்குக் காடுகிழாள் எனவும் பேர் இவள் ஒருசத்தி. மோடிகாரி தாய், கொற்றி, பாரி, சூரி, வடுகி, மூதணங்கு எனவும் பேர்.

காடுகிழாள்

இவள் வருத்தில் சஞ்சரிக்கும் வநதேவதை. காடுபடுவான். அரக்கு, தினை, தேன், கருந்தினை, நாவி, மயிற்பீலி முதலியன.

காடுவாழ்த்து

பலர்க்கும் இசைக்கும் பெரிதாக ஒலிக்கும் சாப்பறை அனுகரண சத்தமுடைத்தாகக் கறங்கும் சுடுகாட்டை வாழ்த்தியது. (பு. வெ. பொதுவியல்.)

காடுவெட்டிய சோழன்

காஞ்சி நாடாண்ட சோழர்களில் ஒருவன். இவன் சிவபக்திமான். குலபூஷண பாண்டியன் காலத்தில் மதுரையைச் சேவிக்க எண்ணிப் பாண்டியனுக்காகப் பயந்து இருந்தனன். இவன் கனவில் சிவமூர்த்தி சித்தராய்த் தோன்றி யிப்போதே சென்று தரிசிக்க என அரசன் சேனை முதலிய இன்றிப் புறப்பட்டு மதுரையடைந்து வையை வெள்ளங்கொண்ட தறிந்து துக்கமடைந்தனன். அக்காவையில் சிவமூர்த்தி சித்தராய் எழுந்தருளி வெள்ளத்தை விலகச் செய்து காவல் கடக்கக் கொண்டு சென்று பொற்றாமரையில் முழு குவித்துத் தம்மையும் பிராட்டியாரையும் தரிசனஞ் செய்வித்து வழித்துணைசென்று வையைநதி கடந்து விட்டு நெற்றியில் திருநீறிட்டு அனுப்பினர். சோழன் பயமின்றி நாடு போய்ச் சேர்ந்தனன். வழித்துணை சென்ற சிவமூர்த்தி கோயிலடைந்து விடையி லச்சினையிட்டு மறைந்தனர். பொழுது விடிய, திருக்கோயிற் காவலாளர் மீனமுத்திரையிலாது இடபமுத்திரை யிருப்பதைப் பாண்டியனுக்கறிவித்தனர். பாண்டியன் எந்தவகை ஆராய்ந்தும் உண்மை அறியாது விசனத்துட னிருக்கையில் சிவமூர்த்தி கனவிற்றோன்றி நடந்ததை அறிவிக்கக் களித்துச் சோழனுடன் நட்புக் கொண்டனன். இவனது மற்ற சரித்திரங்களை இராசேந்திர பாண்டியனைக் காண்க. இவனுக்கு வாதராசபணிகொண்ட சோழன் எனவும் பெயர்.

காடை

இது கபில நிறமான வரிகளமைந்த பக்ஷி. இது கூட்டம் கூட்டமாகக் காடுகளில் வசிப்பது, இதற்குக் கழுத்தும் மூக்கும் குட்டை கால்கள் குறுகிக் கூர்மையற்றவை. பூமியைக் கிளறி தான்யமும் பூச்சுகளையும் தின்னும் இனத்திற் சேர்ந்தது. இதனை மனிதர்கள் வளர்த்து போருக்கு விடுவர். இது அதிக கோபத்துடன் சண்டையிடும். பூமியைத்தோண்டி முட்டையிடும். இவ்வினத்தில் வயல்களில் மேயும் அரிக்காடையும் உண்டு, இது உருவத்திற் கவுதாரியிற் சிறியது.

காட்சிவான்

சிபி பாரியையின் தோழிமார்களில் தீர்க்க தமசால் பிறந்த புத்திரன்.

காட்டக் கோட்டையர்

இவர் வீரசைவர், பிறப்பாலிடையர். ஆட்டின் சாணத்தால் வேதிகையும் சிவலிங்கமும் அமைத்துப் பசு, ஆடு முதலியவற்றின் பாலைக் கறந்து சிவமூர்த்திக்கு அபிஷேகித்துக் காட்டிலுள்ள மலர்களால் அருச்சித்து வந்தனர். இவர் இவ்வகை செய்துவருகையில் ஒரு நாள் இவர் தந்தை பசுக்கள் பால்குறையக் கண்டு உண்மையறியும் பொருட்டு ஒளித்திருந்து குமாரர் செய்யுஞ் செய்கையறிந்து கோபத்துடன் சென்று சிவலிங்கத்தைக் காலாவிடறினர். குமரர் கோடரியால் தந்தையென்றும் பாராமல் இடறிய கால்களை வெட்டச் சிவமூர்த்தி தர சனந்தந்து குமரரைத் திருக்கைலைக்கு அழைத்துச் சென்றனர். (பசவ~புரா.)

காட்டாசான்

இவர்கள் கூடைகட்டிகள், கிளிஞ்சல் சுடுவோர். இவர்கள் திருநெல்வேலி ஜில்லா முதலிய இடங்களிலுள்ளவர்கள்.

காட்டு நாடு

களவேள்விநாடு. (திருவிளை.)

காட்டுப்பூனை

இது சிறுத்தைப் புலிக்கும் பூனைக்கும் நடுத்தரமான உருவுடையது. கறுத்தநிறமும் கொடுமையான பார்வையுங் கொண்டது. பகலில் புதர்களில் பதுங்கியிருந்து இரவில் இரைதேடப் புறப்படுவது. இது பறவை, கோழி, முயல், வாத்து முதலிய பக்ஷிகளை வேட்டையாடித் தின்னும், கிராமத்திலும், கிராமத்தை யடுத்த காடுகளிலும் வசிக்கும். இதுவும் சிங்கம் புலியினங்களைச் சேர்ந்தது.

காட்டுமராட்டி

குருவிக்காரனுக்குப் பெயர்.

காட்டூர்க்கிழார்மகனார் கண்ணனூர்

கடைச்சங்க மருவிய புலவர். வேங்கடநெடுவரை வென்வேற்றிரையனை, “நன்னுதல் பசப்பவு” மெனப் பாடியவர், இவர் பெயர் கண்ணனார். இவர் தந்தை பெயர் காட்டூர்கிழார். இவரது ஊர் காட்டூர்போலும். (அகநானூறு.)

காட்டெரி

இது ஒரு க்ஷத்ரதேவதை. காட்டில் வசித்துக் கொண்டிருந்த இந்துக்கள் தம்மேல் அத் தீச்சார்ந்து தம்மை அழிக்காதவண்ணம் வனதேவதையை வழிபட்டனர். அதனைக் காட்டேரியென்பர்.

காட்டெருமை

(பைஸன்) இது பார்வைக்கு விகாரமான ஜந்து. இதன் முதுகிற் கொழுப்படர்ந்த திமிலொன்று உண்டு. தேக முழுதும் மயிரடர்ந்து தொங்கும். இது குனிந்த தலையும் குறுகிய கண்களும் உடையது. இது அமெரிக்கா கண்டத்துச் சம வெளிகளிலுள்ள புல் பூண்டுகளைத் தின்று ஜீவிக்கும். இவ்வினம் சீரில்லாவிடத்திலும் தண்ணீர் குடியாமல் வசிக்கும். இவை பல நாட்களுக்கு வேண்டிய நீரைத் தம் வயிற்றில் கொண்டிருக்குமாம். இவை யெங்கும் நீரினைக்கண்டாலும் அதில் வீழ்ந் து புரளும். இவற்றினுடலின்மாமிசம் ருசி யுள்ளனவாதலால் வேட்டைக்காரர் இவை கூட்டமாக இருக்குமிடஞ் சென்று சத்தமிடாமல் பலவற்றை மடக்கி வேட்டை யாடுகிறார்கள். இவை அற்ப சத்தம் கேட்கினும் அஞ்சி ஓட்டம் பிடிக்கும். இவை சாகபக்ஷணி. அமெரிக்கா கண்டவாசிகள்.

காணிஷ்கன்

இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தை யரசாண்ட ஒரு புத்த அரசன். இவன் அசோகனைப்போல் புத்த மதத்தை எங்கும் பரவச் செய்து கீர்த்தியடைந்தவன்.

காணுவர்

யாக்ஞவல்கியரின் மாணாக்கர்.

காண்டவபிரஸ்தம்

பாண்டவர்கள் அரசாண்ட அஸ்தினபுரத்துட் பிரதேசம். திரௌபதியின் மணத்திற்குப் பிறகு பாண்டவர் வசித்த இடம். (பார~சபா.)

காண்டவம்

யமுனை யாற்றங்கரையில் கிருஷ்ணார்ச்சுனர்களா லழிக்கப்பட்டு அக்கினிக்கு இரையாகத் தரப்பட்ட இந்திரவனம்,

காண்டிகையுரை

செய்யுளின் கருத்து, பதப்பொருள், உதாரணம், வினாவுதல், விடைகூறல், முதலியவற்றால் செய்யுளினுட் பொருளைத் தோற்றுவிப்பது. (நன்~பா.)

காண்டிக்யன்

(சூ.) மிதத்துவசன் புத்திரன். சனகன் பேரன், இவன் தன் ஞாதியாகிய கேசித்துவசனோடு விரோதித்துக் காட்டிற்சென்று தவமேற்கொண்டவன்.

காண்டிநேவியன் மதம்

இந்த மதத்தில் முக்கிய தேவதைகளுக்கு எட்டாஸ், சாகாஸ் என்று பெயர். எட்டாசென்றால் கிழவியென்று பொருள். இம்மதசிருட்டிக் கிரமம். அபிஸ் என்கிறபிண்டம் தெற்கு வடக்கு உலகங்களாக விருந்தது. அதன் மேல் வெனமென்னும் மழை பெய்யத் தென்றலால் அந்தப்பிண்டம் கரைந்தது. அவ்வாறு கரைந்தத்தினின்றும் இமிர் என்னும் அரக்கன் பிறக்க அந்த அரக்கனால் துஷ்டர்கள் உண்டாயினர். அந்தத் துஷ்டர்களால் மாண்டன் என்னும் பசுபிறந்து அந்தப் பசுவினால் போர், வேண்டின், விலா முதலிய தேவதைகள் உண்டாயினர். இமிர் என்னும் ராக்ஷசனைப் போர் முதலிய தேவதைகள் கொல்ல, அவன் தேகத்தி லிருந்து ஆகாசமும் பூமியும் உண்டாயின. வொடின் என்னும் தேவன் சிருட்டிகர்த் தாவாகிய உலகபிதா. ஆஸ்சா என்னும் மரத்தடியி லிருப்பன். இவனுக்கும் பூமியே பாரியை, தார் என்பவன் குமாரன். இவன் அபாரசக்தி யுள்ளவன். பால்டர் என்பவனிரண்டாவது குமாரன், மோக்ஷ விசாரணை செய்பவன், டைர் என்பவன் யுத்தத்தில் சமர்த்தன். இவனுக்கு ஒரே கையுளது. அந்தியகாலத்தில் அநேகருடன் யுத்தஞ் செய்கையில் பால்டர் இறக்க அவனுக்காக உலகம் துக்கிக்கும். பிறகு தார் என்பவன் ராக்ஷசர்களுடனும் முஷ் கார்ட் என்னும் பாம்புடனும் சண்டை செய்து இறக்க உலகங்களெல்லாம் எரிந்துபோம், பிறகு புதிய உலகம் உண்டாம். விடார், வாலி என்னும் இரண்டு தேவதைகள் தோற்றுவர். இந்த மதத்தில் ஒவ்வொரு வருஷத்தில் உற்சவத்தில் பலியிடுவர். தங்களைத் தாங்கள் குத்திக்கொண்டு சாதல் நலம் என்பர்.

காண்டீவம்

1. இது அருச்சுனன் வில், முதலில் பிரமனிடமிருந்து பிறகு இந்திரனிடம் அறுபத்து நான்கு வருடமிருந்து பின் வருணனிடம் 100 வருடமிருந்து வருணன் அக்கினிக்குக் கொடுக்க அக்கினியால் காண்டவ வனத்தை எரித்த அருச்சுனனுக்குக் கொடுக்கப்பட்டது. இது இவனிடம் 65 வருடம் இருந்ததாம், 2. பிரமன் வில், கண்ணுவரைக் காண்க.

காண்டோபகரணம்

காண்டருஷியைத் திருப்தி செய்தல். மந்திரத்தால் ஓமமுதலிய செய்து சுவர்ண முதலியவற்றால் செய்த பிக்ஷா பாத்திரத்தில் பவதி பிக்ஷாக்தேகி யெனக் கூறிப் பிக்ஷை யெடுத்தல்.

காண்வாயன்

கண்ணுவன் மரபினனாகிய மேதாநிதி ரிஷிக்குப் பெயர்.

காதம்பரி

ஒரு காந்தருவ கன்னிகை; இவளை உச்சயனிநகரத் தாசனாகிய சந்திரா பீடன் மணம் புரிந்தான். காதம்பரி இவள் கதைகூறிய நூலுமாம். இது பாணகவியால் வடமொழியில் செய்யப்பட்டது.

காதற்பரத்தையர்

யாவரையும் விரும்பாத வியல்பினான் மிக்க சேரிப்பரத்தையருடைய மகளிராய்த் தம் மன்பின் தலைமகனுடன் கூடுவோர். (அகம்.)

காதலர் (3)

புருஷன், தோழன், மகன்.

காதலிற்களித்தல்

மேகம் பொருந்தின மலைநாடனுடைய மார்பிடத்தே மேவி நீங்குதலறியாத அன்பினால் மகிழ்ந்தது. (பு. வெ. பெருந்திணை.)

காதாமுனி

விறகுகட்டிற் பிறந்தவர் என்பர்.

காதி

1. குசநாபன் குமரன், விச்வாமித்ரன் தந்தை. இவன் யாகத்திற் பிறந்தவன் இவனை யிராவணன் யாகத்திற் செயித்தான். 2. (ச) குசாம்பன் குமரன். 3. ஒரு வேதியன் இவன் விஷ்ணுவை யெண்ணித் தவஞ் செய்து மாயையைக் காண வரம் வேண்டி யொருகுளத்தில் மூழ்கித் தானிறந்து போனது போலவும் தன்னைக் கொளுத்திச் சாம்பலாய் மறுபிறவி புலையனாய் ஒருத்தியை மணந்து பல புத்திரரைப் பெற்றுப் புத்திரரும் மனைவியும் நரைவந்திறக்கத் தானிறவாது கீரநாட்டில் தனித்துச் செல்லும்போது அந்த நாட்டுப் பட்டத்துயானை அந்த நாட்டரசனிறக்க இவனை அரசனாக்கிற்று. இவன் கவலன் எனும் பெயருடன் அரசாண்டு ஒரு நாள் தன் வேடம் நீங்கித் தனித்து உலாவுகையில் நாய்க்கெரிப்போ னொருவன் கண்டு இவன் தம்மவன் என்று வார்த்தையாடினன். அரண்மனை வாசிகள் இவனிடம் அசூயையடைந்து இவனை விட்டு நீங்கி யூராருடன் தீக்குளித்திறந்தனர். காய்க் கெரிப்போனிது நம்மால் வந்ததென்று தீக்குளிக்கையில் உடல் சுருக்குண்ணக் காதியுடல் சலத்தில் பதைபதைக்க விழித்தனன். இவை நடந்த காலம் இரண்டு முகூர்த்தம். மீண்டும் காதி சலத்திலிருந்து எழுந்து வெளிவந்து தன்னூர் நோக்கி வருகையில் வழியில் ஒரு வேதியனைக் கண்டு நீ யார் என நெருப்பில் குளித்த வூரிலிருந்து கங்கை யாத்திரை வந்தே னெனக் காதி கேட்டு வியப்படைந்து நடந்தவைகளைக் கண்டு வியந்தனன். (ஞான வாசிட்டம்.)

காதியாயன்

கதயன் சந்ததியானாகிய இருடி, இவனுக்குத் தபந்தீ எனவும் பெயர்.

காதீனன்

விச்வாமிதான் தந்தை, இவன் தந்தை கூஷிகன்.

காது

இது, தலைக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உள்ள ஓசை அறியுமுறுப்பு. காது மூன்று பிரிவினைபுடையது. (4) வெளிக்காது, (2) நடுக்காது, (1) உட்காது, வெளிக்காது, காதின் மடலும், காதிற்குள் செல்லும் தொளையும் சேர்ந்தது. மடல் ஓசையைக் கொண்டுவரும் காற்றினலைகளைத் தடுத்துக் காதின் தொளைவழியாய் அதை உட்புகச்செய்கிறது. காதின் தொளை, ஓரங்குல அளவு நீண்டு சற்று வளைந்திருக்கும். இத்தொளை வழியிலிருக்கும் மயிரும் குறும்பியும் காதில் தூசு முதலிய உட்செல்லாது தடுக்கும். நடுக்காது: இது, காதின் தொளைக்குள்ளிருக்கும் ஜவ்வு இருக்கும் பாகம். காதினுட் செல்லும் ஓசை உட்சென்று இந்தச் சவ்வின் மேற்பட இந்த ஜவ்வதிரும்; அந்த அதிர்ச்சியை உட்காது பெறும். இது, ஒரு பள்ளமும், வளைவாய் குழல் போன்ற (3) எலும்புகளையும், நத்தைச் சிப்பி போன்ற ஓர் எலும்புக் கொண்டது. அதனை அடுத்த மூன்று அறைகளுள் ஒருவித ஜலம் நிறைந்திருக்கிறது. அச்சலத்தில் மூளையின் சம்பந்தமான கேள்வி நரம்புகள் மிதந்து கொண்டிருக்கின்றன. மேற்கூறிய ஜவ்விற்பட்ட அதிர்ச்சி, வளைந்த (3) எலும்பில் பட அவ்வளைந்த எலும்புகள் ஜலத்தில் மிதக்கும் நரம்புகளைத் தாக்க அவை மூளைக்குச் சத்தத்தை அறிவிக்கும்.

காதுகுத்திக்குறவர்

இவர்கள் காடுகளில் ஜனங்களுக்குக் காதுகுத்திப் பிழைப்போர்.

காதைக்கரப்பு

சித்திரக் கவியிலொன்று. இது ஒரு பாட்டினுள் மற்றொரு பாட்டிற்கு எழுத்துக்களுளவாய்ச் சொற்புகாமே பாடுவது.

காத்தமப்பிரசாபதி

பிரமன் நிழலில் பிறந்தவன். இவன் தேவி தேவவூதி, குமரன் கபிலன். இவனிடம் அநேகம் பெண்கள் பிறந்தனர். வேதத்தில் ஸ்புடமாய்ச் சாயாவாசகாமாயுள்ளது கர்த்தமம், அதனால் ஜனித்ததால் இப்பெயர்பெற்றனன்,

காத்தவராயன்

1. பார்வதிபிராட்டியார் சிவமூர்த்தி உலகமெங்கும் ரக்ஷிப்பவர் என்பதில் சங்கைகொண்டு ஒரு எறும்பைப் பிடித்துப் பரணியில் அடைத்து வைத்தனர். மறுநாள் அதனை நோக்க அது ஒரு சிறு அரிசியை வாயில் கொண்டிருக்கக் கண்டு தாம் செய்த காரியத்தைச் சிவமூர்த்தியிடம் அறிவித்தனர். சிவமூர்த்தி பிராட்டியை நோக்கி அந்த எறும்பைத் துன்பஞ் செய்ததற்கு நீ ஒரு நந்தவனம் வைத்து அந்தப் பாபத்தைப் போக்குக என்றனர். பிராட்டி அவ்வகை ஒரு நந்தவனம் வைத்து அதைக் காவல் செய்ய ஒருவனைச் சிவமூர்த்தியிடம் பெற்று அவனுக்குக் காத்தான் எனப் பெயரிட்டனர். இவன் மலையாளஞ் சென்று தொட்டியத்துச் சின்னான் என்று சொல்லப்படும் மந்திரவாதியைச் செயித்துத் தனக்கு மந்திரியாக்கி ஆரியமாலை முதலிய பல பெண்களை மணந்தான் என்பர். இவன் தேவிமார் வண்ணாரவல்லி, கந்தழகி, கறுப்பழகி முதலியவர். இது வளையாபதி என்னும் இலக்கிய கதையை யொத்திருக்கிறது என்பர். (காத்தவராயன் கதை.) 2. இவன் முத்தம்மையெனும் தேவதையின் மகன். இவனுக்கு நாரதர் மூன்று மாதர்களின் சௌந்தர்யங்களைக் கூறி மணம்புரியக் கூற இவன் அவ்வாறே வங்கணச் சின்னான் எனும் சேவகனுடன் சென்று ஆரியதேசத்துக் கன்னிமாடத்திருந்த ஆரியமாலையிடம் குனிவடிவு, குறத்தி வடிவுமுதலிய கொண்டு சென்றும், காவிரிப்பூம் பட்டினத்துக் கன்னிமாடத்திருந்த உகந்தாயியிடம் நூல் வியாபாரம் செய்யும் கிழச்செட்டியாய்ச் சென்றும், செம்பு குமாரன் வனத்திருந்த கறுப்பாயியிடம் பாம்பு பிடாரன் வடிவுகொண்டு சென்றும், பல ஆச்சர்யமான செய்கைகளைச் செய்து அவர்களை மணம்புரிந்தான் என்பர். (காத்தவராய நாடகம்,)

காத்தவராயர்

வண்ணார் இவர்கள் இத்தேவரைக் குல முதல்வராகக் கொண்டவர்கள். (தர்ஸ்டன்.)

காத்தியாயனர்

1. யக்ஞவல்கியருக்கு ஒரு பெயர். 2. பாணினி சூத்திரத்திற்கு வியாக்கியானஞ் செய்தவரருசி.

காத்தியாயனி

1, காத்யாயனர் தவத்தால் பிறந்த பார்வதி தேவிக்கு ஒரு பெயர். 2. யஞ்ஞவல்கியருக்குத் தேவி.

காந்தக்கல்

இது இரும்பையொத்த ஒருவித லோகம். இதனை யிரும்பிற்கு முன்னீட்டினால் அதனையிழுக்கும் சக்தியுள்ளது. இதில் திசையறி கருவிகள் செய்து கப்பலோட்டிகள் திசையறிந்து கப்பலைச் செலுத்துவர். இது எத்திசை திருப்பினும் வடதிசையையே காட்டும். இது, அரக்குக் காந்தம், உருளைக்காந்தம் ஊசிக்காந்தம், கற்காந்தம், எனப் பலவகைப்படும்.

காந்தன்

1, சிவகணத் தலைவரில் ஒருவன். 2. வாணாசுரன் படைத்தலைவரில் ஒரு அரசன், காஞ்சியில் சிவபூஜை செய்து முத்தியடைந்தவன். 3. ஒரு சோழன், இவன் பொருட்டு அகத்தியர் கமண்டலத்திருந்த காவிரியைப் பெருகச் செய்தனர். பரசிராமர் போருக்கஞ்சி வேறிடத்திருந்தவன். இவனுக்குக் காந்தமன் எனவும் பெயர். 4. சித்திர தன்வனைக் காண்க.

காந்தபுராணம்

இது மகாபுராணங்கள் பதினெட்டனுள் ஒன்று. இது லக்ஷம் கிரந்தமுடையது. இது தத்புருஷ கற்பத்தில் நடந்த சம்பவங்களையும் கந்தமூர்த்தி தோற்றம் சூராதிகள் ஒடுக்கம் முதலிய வற்றை விரித்துக்கூறும், இதிற் சங்கர சங்கிதையைக் கச்சியப்ப சிவாசாரியர் தமிழில் மொழிப் பெயர்த்தனர்.

காந்தமதீர்த்தம்

தென்கடற்கரையிலுள்ள தீர்த்தம்.

காந்தம்

இது வைதருப்பச் செய்யுணெறியிலொன்று, இது ஒன்றனை உயர்த்துப் புகழுமிடத்து உலகநடை யிறவாமல் உயர்த்துப் புகழல். (தண்டி.)

காந்தருப்பம்

கந்தமூர்த்தி எழுந்தருளியிருக்கும் மலைகளில் ஒன்று, இதில் ஒரு ஆண்டு பாண்டு புத்திரர் தவமியற்றினர்.

காந்தருவ நகரம்

யமபுரிக்குச் செல்லும். வழியிலுள்ள பட்டணம்.

காந்தருவதத்தை

ஜீவகன் மனைவியரி லொருத்தி.

காந்தருவம்

ஓர் மலை.

காந்தருவருலகு

இது குய்யகர் உலகத்தின் மேலுள்ளது. இதை விரதம் பூண்டோரும் யாழில் வல்லவராய்த் தேவரைப் பாடியவரும் அடைவர்.

காந்தருவர்

பிரமனது நீலவுருக்கொண்ட தேகத்திற் பிறந்தவர் தேவவகுப்பினர்.

காந்தள்

கரிய கடலிடத்துச் சூரபன்மாவைக் கொன்றவனுடைய காந்தட்பூவின் மிகுதியைச் சொல்லியது. (பு. வெ.)

காந்தாரகன்

இவன் பாஞ்சால அரசனுடைய பெரும்படைத் தலைவர்களில் ஒருவன்; இவன் பிங்கலகடகராற் போரிற் கொல்லப்பட்டனன். (பெரு. கதை).

காந்தாரநாடு

இதில் இரத்தினபுரமென்று ஒரு நகரமுண்டு சிறந்த குதிரைகள் பிறக்குந் தேயத்துள் இஃது ஒன்று, (பெரு. கதை). The Country of Gandhara lies along the Kabul river between the Kunar and the Indus. Its Capital was purushapura now Called Peshawar.

காந்தாரன்

1. ஆரத்தன் குமரன். இவன் புத்திரன் தருமன். 2. யயாதி குமரன்.

காந்தாரம்

சிந்துநதிக் கருகிலுள்ள ஒரு தேசம். (மணிமேகலை).

காந்தாரி

காந்தாரதேசத் தரசனாகிய சுபலன் அல்லது சுவேதமகராசன் குமரி. வசுமதி தேவதை அம்சத்தாற் பிறந்தவள். திருதராட்டிரன் தேவி, துரியோதனன் தாய். இவள் தன் கணவன் அந்தகன் என்று கேள்வியுற்றதும் பிறரைப் பாரேன் என்று கண்ணைப் பொற்றகட்டினால் மூடிக்கொண்ட கற்புடையாள். குந்தியிடம் பொறாமையடைந்து வயிற்றில் கல்லாலிடித்துக் கொண்டு வியாசரருளால் துரியோதனன் முதலிய நூற்றுவரைப் பெற்றவள். படுகளம் காணவந்த காலத்துக் கிருஷ்ணனை நோக்கி என் வமிசத்தை யழித்ததால் உன் வமிசமும் அழிக எனச் சபித்தவள்.

காந்தி

1. ஏமவன்மன் தேவி. குமார் சிங்கவன்மன், சுவன்மன், தேவவன்மன். 2. புலாரமர் தேவியரில் ஒருத்தி.

காந்தினி

1. சுவல்பகன் தேவி. அக்ரூரன்றாய். 2. சுவர்க்கன்றேவி.

காந்திமதி

1. சோமசேகர பாண்டியன் பெண், உக்கிரகுமார பாண்டியன் தேவி, 2. பவன வேகன் மனைவி. (சூளா) 3,துவட்டாவின் குமரி, 4 மஞ்சுளனைக் காண்க.

கானங்கோழி

இது சிறு கோழியைப் போலுள்ள தாயினும் அலகு நீண்டு கழுத்து வெளுத்துள்ள பறவை. காட்டில் வசித்தலால் இப்பெயரடைந்தது.

கானட்டனார்

காவட்டனாரைக் காண்க. காரிக்கிழார்க்கு ஒரு பெயர்.

கானன்

கிருதாந்தனைக் காண்க.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

இவன் சேரமான் மாவெண்கோ சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலியவர்க்கு நண்பன், கடைச்சங்கமிருத்திய பாண்டியர்களுள் ஒருவன், இவன் முன்பாகத் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது. அகநானூறு தொகுப்பித்தோன் இவனே, இவனைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி எனவும் கூறுவர் வேங்கைமார்பன் என்பவனை வென்றவன் இவன் என்பர். கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் இவனைக் கூறுவர். ஐயூர் மூலங்கிழாரால் பாடப்பட்டவன். (புறநானூறு.)

கானப்பேர்

1. இது சிறந்த போரண்; பல சிற்றரண்களை யுடையது; இதின் தலைவன் வேங்கைமார்பன். இஃது இக்காலத்துக் காளையார் கோயிலென்று வழங்கப் படுகின்றது; கானப் பெயர் என்றுங் கூறுவர். (புற. நா.) 2. பாண்டி நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று, இது ஈழநாட்டுப் பராக்கிரம பாகு என்பவனுடைய சேநாதிபதிகைப்பட் டிருந்ததாகக் கூறப் பட்டிருக்கிறது.

கானல்நீர்

இது உஷ்ணமான கோடைகாலத்தில் பெரு வெளிகளில் ஆவி, உஷ்ணத்தால் மாறுதலடைந்து வாயுவுடன் கலக்குமாயின் குளம் ஏரி முதலியவற்றில் நிறைந்த நீர் தளும்புவதுபோல் காணப்படுவது. நீர் நிறைந்த குளங்களின் கரையிலுள்ள மரங்கள் அந்நீரில் தலை கீழாகப் பிரதிபலித்துத் தோன்றுவதுபோல் இக்கானல் நீரிலும் அருகிலுள்ள மரங்கள் முதலிய பிரதிபலித்துத் தோன்றும். சில வேளைகளில் இந்தப் பிரதிபலனக் காட்சி ஆகாயத்திலும் காண்பதுண்டு. அது ஆகா யத்திலுள்ள வாயுவுடன் ஜலவாயு அதிகமாகச் சேர்ந்திருக்கையில் உஷ்ணத்தால் அந்த வாயுகானல் நீராக மாறிவிடுகிறது அதில் பூமியிலுள்ள பட்டணங்கள், மலைகள் மரங்கள் நீர் நிலைகள் பிரதிபலித்துத் தோன்றுகின்றன. இவை பெரிய பாலைவனங்களி லுண்டாகின்றன. இத் தோற்றங்கள் வெகுதூரத்திலுள்ள பொருள் களையும் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

கானவிந்து

மானசோதர பர்வதத்திலுள்ள கூகை. இது பூர்வத்தில் புவனேசன் என்னும் அரசன். இந்தப் புவனேசன், அரிமித்திரன் என்போன் தன் புகழைப் பாடவில்லையென்று கோபித்து அவன் செல்வத்தைக் கவர்ந்து யமபுரி சென்று யமனால் கூகையாகி உடம்பையே யொருமன் வந்தரம் தின்னும் கதியடைந்து, பரமபதமடைந்த அரிமித்திரனிடஞ் சென்று யாழ்கற்று அதைக் காந்தருவருக்கும், நாரதருக்கும் பயிற்றி மறு சன்மத்தில் கருடனாயினன்.

கானினன்

அக்நிவேசனுக்கு ஒரு பெயர். இவன் இருடியாயினன்.

கானோபாத்ரை

இவள் மங்களவேடு என்னும் கிராமத்திலிருந்த அழகுமிகுந்ததாசி. இவள் மிக்க அழகுள்ளவளாதலால் பூமியிலுள்ள மனிதர் ஒருவரும் தான் விரும்பத்தக்கவால்லர் என்று ஆசை யொழித்துப் பண்டரிபுரத்துப் பெருமாள் விஷயத்திலீடுபட்டு ஆண்டுச் சென்றனள். அவ்விடத்தில் பெருமாளைப் பஜனை செய்து வருகையில் ஒருவன் அரசனிடஞ் சென்று இவளது அழகு முதலியவைகளைக்கூற அரசன் இவளைத் தனது சமுகத்திற்கு வரும்படி கட்டளையிட்டனன். அவ்வகையே ஒற்றர் இவளை வந்து அழைக்கத் தாசி பயந்தவளாய்க் கண்ணனிடஞ் சென்று உன்னை நம்பியவென்னை யரசனிடங் காட்டிக் கொடுக்கலாமோ வென்னப் பெருமாள் அர்ச்சகர் முதலியோர் காணும் படி தரிசனந்தந்து அவளதுயிரைத் தம் தொடையிலடக்கினர். அர்ச்சகர் கண்டு வியந்து அவளுடலைக் கோபுர வாயிற் புறத்தி வடக்கஞ்செய்தனர். அவ்வுடல் உடனே ஒரு விருக்ஷமாயிற்று. கோயிலினுள் புகுந்தவள் வராமை கண்ட தூதர் அர்ச்சகரைக் கேட்க அர்ச்சகர் நடந்ததைக் கூறி னர். தூதர் அரசனிடங்கூற, அரசன் அர்ச்சகரை வருவித்தனன். அர்ச்சகர் அரசனிடஞ் சென்று அக்ஷதை முதலிய கந்தங்கள் அரசனுக்குத்தர அதிலொரு உரோமம் இருந்தது. இது என்ன எனப் பெருமாளுக்கிருந்தது ஒன்று தவறிவந்தது போலு மென்றனர். அரசன் அத்தாசி யெவ்வகையா யினள் என அர்ச்சகர் நடந்தது கூறினர். அரசன் உண்மையறிவான் வேண்டிப் பெருமாளைத் தரிசிக்கச்செல்ல அருச்சகர் பெருமாளை நோக்கி நாங்கள் அறியாது செய்த பிழைபொறுத்து அரசன் காணச் சிகை காட்டவேண்டுமென்று வேண்டினர். அரசன் பெருமாளைத் தரிசிக்கையில் சிகையையும், தாசியினது உருவத்தைப் தொடையினுங் கண்டு ஆனந்தமடைந்து தன்னூர் புகுதனன்.

கான்பியூகஸ்மதம்

சீனா தேசத்தில், லு எனும் நகரம் ஒன்று உண்டு. அவ்விடத்தில் கிறிஸ்துபிறக்க (551) வரு.க்கு முன் கான்பியூகஸ் எனும் மதஸ்தாபகன் பிறந்தான். கன்பியூஷியஸ் என்று இவனைக் கூறுவர். இவனது மூன்ரும் வயதில் தந்தை யிறந்தனன். இவன் (15) வது வயதில் கல்விகற்றான். (19) வது வருஷத்தில் பரிணயமடைந்தான். (50) வருஷம் அரசனிடம் மந்திரியாயிருந்தான், பிறகு ஜீவதசையில் உண்மை அறிந்து கடவுளின் மகிமைகளை யுபதேசிக்கத் தொடங்கினான். இவனுக்கு (300.) சீடர்கள் சேர்ந்தனர்; இவன் பல நூல்கள் செய்தான். இவன் (57) வது வயதில் மரணமடைந்தான். இவனுக்குப் பிறகு இவன் சீடரில் முதல்வரானார் லன் தியூ தாவித் யுல்கு கான்பியூகஸ் என்பவர்கள், கான்பியூகஸ் தர்மாசனத்தை யடைந்தனன். இம்மதத்தவர்க்கு (1660) கோயில்களுண்டு. ஒவ்வொரு வருஷத்திலும் இரண்டு முறை திருவிழா நடத்துவர். இவர்கள் தங்கள் தேவர்களுக்குப் பலிகொடுப்பது வழக்கம். இம்மதத்தில் கடவுள் ஒருவரே; இக் கடவுளை யடைதலே மனித ஜன்மத்திற்குச் சிரேட்டத் தன்மை. ஆகாசம், பூமி, மனு ஷஜன்மம் இவை மூன்றுங் கூடினது ஒரு தத்வம், இம்மூன்றில் மனுஷஜன்மம் விசேடம். சம்பன்னர்களையும், பெரிய மனுஷரையும் மற்றவர்கள் சேவிக்க வேண்டும். மனுஷப்பிறவிக்குத் தாய் தந்தையர் காரணமாதலின் அவர்களை வணங்க வேண்டும். தாய் தந்தையர் வார்த்தைகளைக் கடக்கக் கூடாது. தாய் தந்தையர் இறக்கின் மூன்று வருஷம் வரையில் துக்கம் கொண்டாடுவர். பிறகு, மாத்ரு பிதாமஹாலயம் என்று ஒரு இடங்கட்டி நாடோறும் அவர்களைத் துதித்து வருவர். சிறுமிகள் விருத்தஸ்திரீகளைப் பூஜிப்பர். ஜாதிபேதம் இல்லை. அனைவரையும் சகோதரர்போல் எண்ண வேண்டும். சந்ததியுள்ளோருக்கு ஜன்மம் இல்லை. எல்லாரும் நீதி, தயை முதலிய சுகுணங்களுடன் கூடியிருத்தல் வேண்டும்.

காபச்யன்

இவன் பாரியாதர கிரியில் வசித்த வேடன் திருட்டுத்தனத்தால் தாய் தந்தையரையும் பெரியோர்களையும் காத்து சித்தி பெற்றவன். (பார~சார்.)

காபாசனன்

சூரியவம்சத்தரசன். இவன் யோகியானான்.

காபாலன்

விஷ்ணுபடரில் ஒருவன்.

காபாலி

1. சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று. 2. ஏகாதசருத் திரருள் ஒருவர்.

காபாலிகமதம்

இந்தமதம், மாயாதத்துவ ருத்திரர்கள் மதம். இம்மதத்தவர் ஆன்மா நித்திய வியாபக சைதன்னியன் என்பர். கர்த்திருத்துவமான சமுசார பாவத்தை விட்டு ஞப்திமாத்ரமா யிருப்பதே மோக்ஷம் என்பர். (தத்துவநிஜாநுபோகசாரம்).

காபிரியமதம்

இவர்கள் சாதாரணமாய்க் காப்பிரியர் எனப்படுவர். இவர்களின் படைப்புக் கடவுளுக்குக் குவினியாடிக் வோசா என்று பெயர். இவர்கள் பல விக்ரகங்களைச் செய்து அநேக தேவாலயங் களில் வைத்துப் பூசிப்பர். சிலர் சூரியன், சந்திரன், சிலர் ஆகாசம், சிலர் நக்ஷத்ரங்கள் முதலியவற்றைப் பூசிப்பர். இவர்கள் மேபக் எனும் ஒருவிதமான புழு சுபங்களைத் தெரிவிப்பதென்று நினைத்து அதைக் காப்பாற்றுவர், ஆடு, மாடுகளைத் தேவர்களுக்குப் பலியிடுவர். இவர்களின் குருக்கண்மார் ஸ்பின் என்று பெயர் பெறுவர். குருக்கண்மார் வயதிலும் ஞானத்திலும் உயர்ந்தவராயிருப்பர். குருக்கண்மார் தங்களிஷ்டத்திற்கும் சாத்திக்கும் தக்க அநேக பெண்களை மணந்து கொள்வர். விபசாரிகளைச் சிரச்சேதஞ் செய்வர். விதவைகள் மறுமணங்கொள்கையில் தங்கள் விரலின் நுனிகளை வெட்டிக்கொள்வர்.

காபிலகாலயூபம்

சிற்ப நூலில் ஒன்று.

காபிலம்

கபிலரால் ஏற்படுத்தப்பட்டமதம். இது யோகத்தில் மோக்ஷம் என்னும்.

காபில்யன்

பாஞ்சாலதேசத் தரசனாகிய பரமாசுவன் குமரன்.

காபுரம்

ஒரு பட்டணம். (சூளா).

காப்பவ்யன்

ஒரு வேடராசன் குடிகளுக்கு நற்புத்தி போதித்து நல்வழியடைந்தவன்.

காப்பிச்செடி

இது வளர்ந்தால் 20 அடி வளரும். இதை 5, 6 அடிகளுக்கு மேல் வளரவிடுவதில்லை. இதன் புஷ்பம் பார்வைக்கு மல்லிகைபோல் காணப்படும். ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு காயுண்டாகும். செடிகள் 2, 3 வருஷம் வளர்ந்தபின் காய்க்கத் தொடங்கும். கொட்டை, ஒருபுறம் உருட்சியாயும், மறுபுறம் பிளப்புள்ளதாகவுமிருக்கும். செடிகளைக் குலுக்கின் பழம் உதிரும். உதிர்ந்த பழங்களை யுருளைகளால் உருட்டி மேல்தோல் போக்கிக் கொட்டை யெடுப்பார்கள். கொட்டையை வருத்துக் கஷாயஞ் செய்வார்கள். இவை, உஷ்ணதேசங்களில் பயிராகும். அரேபியாவில் முதலில் பயிரிடப்பட்டன. இப்போது இந்தியாவில், நீலகிரி, சேர்வராயன்மலை, பழனிமலைச்சாரல், மைசூர், ஸிலோன் முதலிய பல இடங்களில் பயிரிடப்படுகின்றன.

காப்பியக்குடி

1. இது ஒரு குடிப் பெயர். இக்குடிப் பெயர் முற்காலத்தேயிருந்த தென்பதற்குக் காப்பியத் தொல்குடிகவின் பெற வளர்ந்து என்பதால் இஃது ஓர் குடிப்பெயரென அறியலாம். இக் குடியிற் பிறந்தார், வெள்ளூர் காப்பியனார் பல்காப்பியனார், முதலியோர். இது ஓர் ஊரின் பெயர் என்பர். 2. சோழநாட்டிறுள்ள ஒரூர், சீர்காழிக்கருகிலுள்ளது. தேவந்தியின் கணவனாகிய சாத்த னிவ்வூரில் வளர்ந்தவன். (சிலப்பதிகாரம்.)

காப்பியஞ் சேந்தனார்

இவரது இயற்பெயர் சேந்தனென்பதே ஏதேனும் காப்பியஞ் செய்ததனால் இவ்வடைமொழி கொடுக்கப் பெற்றாரோ அன்றேல் காப்பியம் என்பது இவருடைய ஊர்தானோ தெரியவில்லை. காப்பியன் மகனாகிய சேந்தனா ரென்றும் கொள்ளலாம். இவர் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைமகன் வருவதற்குரிய பல்லி சொல்லுதல் முதலாய நிமித்தங்கள் பலவற்றைச் சேர விரித்துக் கூறியுள்ளார். இவர் பாடியது நற். 249ம் பாட்டு.

காப்பியம்

பெருங்காப்பியத்திற்குக் கூறிய அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கனுள் ஒன்றும் பலவுங் குறைந்து வருவது. இருவகைக் காப்பியங்களும் ஒரு வகைச் செய்யுளானும் பலவகைச் செய்யுளானும் உரைவிரவியும், பாஷைவிரவியும் வரும். (தண்டி)

காப்பியாற்றுக் காப்பியனார்

களங்காய்க் கண்ணி நார்முடிச் சோலைப் பாடிப் பரிசில் பெற்றவர், (பதிற்றுப்பத்து).

காப்புக்குரிய கடவுள்

காப்பாக நூன்முகத் துரைக்கப்படுங் கடவுள் திருமால். அத்திருமால் திருமகளைப் புணாந்தவ னாதலாலும் கிரீடமும், கடகமும், மலர்மாலையும், குண்டலமும், உபவீதமும், கௌத்துவா பாணமுமாகிய இவற்றையணியும் இறை வனாதலாலும், படைப்புக் கடவுளாகிய பிரமன் தாதை ஆதலாலும் நூன்முகத்துக் கூறுதற் குரியவனாமென்று கூறுவர். எல்லா இடையூறுகளை நீக்கும் கடவுளாதலின் விநாயகரையும் காப்புக் கடவுள் என்பர்.

காப்புநாண்

அதாவது ரக்ஷாபந்தனம், அல்லது பிரதிஸா பந்தனம், கங்கணம், இது உற்சவம், பிரதிஷ்டை, அஷ்டபந்தனக்ரியை, தீக்ஷை, புரோக்ஷணகார்யம், ஸ்நபனகார்யங்கள், அந்யமான மங்கள கார்யங்களிலும், மேற்கூறிய பந்தனங் கட்டப்படும். இக் கங்கணம் மந்திரபூர்வகமாய்த் திக்காகாதிகளையும் வேறு தேவர்களையும் பூசித்துத் தூபதீபங் கொடுத்துப் புருஷர்களுக்குத் தக்ஷிணஹஸ்தத்திலும், ‘ஸ்திரிகளுக்கு வாமஹஸ்தத்திலும் கட்டுவது. (ஸ்ரீகாரணம்,)

காமகலை

ஒரு தாசி. இவள் காசிசென்று கங்கா ஸ்நானஞ் செய்து தம் நாட்டரசன் வீரசேனனுக்குக் காசிமான்மியங்கூறி முத்தியடைந்தவள். (காசிரகசியம்).

காமக்கணிப் பசலையார்

இவர் மதுரைக் காமக்கணி நப்பசலையா ரெனவுங் கூறப்படுவர். பெயர்க்காரணத்தாற் பெண்பாலா ரென்பது தெளிவு; காமக்கணி காமாக்ஷி என்றும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு சங்கத்தார் வடசொற்களை அவற்றிற்கு நேராகிய தமிழ்மொழியாலே கூறுதல் வழக்காக வுடையவர்கள் நக்கீரனார் திருமுருகாற்றுப் படையுள் ஜம்பு நதியிற் பிறந்தமையால் ஜாம்புநதமெனப் பெயர் பெற்ற தங்கத்தினை அப்பெயராற்கூருது “நாவலொடு பெயரிய பொலம்” என்றார். இதனை நோக்கியறிக (மகளிர்க்குண்டா கும்பசலையைப் பாராட்டிப் பாடினமையின் இவர் பசலையாரெனப் பட்டார் போலும், அத்தகைய பாடல் இவர் பாடியது கிடைத்திலது) இவர் பாலை முல்லை வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைவர் காள் நிலையில்லாத பொருள் காரணமாக நுங்காதலியரைக் கைவிடா திருங்கோளென்று குயில் கூவா நிற்கும் என்று இளவேனிலை வருணிக்கிறார் நற். உசிங இவர் பாடியனவாக மேற்காட்டிய பாடலொன்றும், அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

காமக்கண்ணி

காமாக்ஷி.

காமக்கிழத்தியர்

இவர் பலர்க்கு முரியரன்றி யொருவர்க்கே யுரிமைபூண்டுவரும் குலப்பரத்தையர் மகளிராய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவர்கள், (அகம்.)

காமக்கிழவமகருஷி கோத்ரன்

திருக்காஞ்சியில் உமையம்மை தவஞ்செய்த காலத்து வேண்டிய உதவி அருள் பெற்றவன். இவன் வணிகன்,

காமஞ்சேர் குளத்தார்

இவர் கடைச்சங்க காலத்தவர். இவர் தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துதலின் ஆற்றாமை கூறுதலின் இவர் பெண் பாலாராயிருத்தல் கூடுமென எண்ணப்படுகிறது. இவரது நாடு முதலிய தெரியவில்லை. “நோமென் னெஞ்சே நோமென்னெஞ்சே” யென பிரிவிடையாற்றுந் தோழிக்குத் தலைவி கூறுவதாகக் குறுந்தொகையில் பாடியுள்ளார். (குறு 4)

காமதகனமூர்த்தி

மன்மதனை எரித்த திருவுரு.

காமதேநு

அமிர்த மதனகாலத்துப் பிறந்த பசு, இதை இருடிகள் விரும்பிக்கொண்டனர். இது வேண்டியவற்றைக் கொடுக்கும் வலியுள்ளது.

காமதை

ஒரு அரசன் தேவி. இவள் துர்ப்புத்தி என்பவனைக் களவிற் புணர்ந்து நீங்கி வசுமதி என்பவனைப் புணர்ந்து ஒரு குமரனைப் பெற்று வசுமதி யிறக்க மீண்டும் துர்ப்புத்தியைப் புணர்ந்து கப்பலேறிச் சென்று கப்பல் கவிழ்ந்திறந்தனள். காமதை பெற்ற குமரனை வசுமதியின் தேவி வளர்த்துச் சங்கான் எனப்பெயரிட் டழைத்த புண்ணியத்தால் நற்கதி யடைந்தனள்.

காமத்தாலுண்டான பத்துத் துக்கங்கள்

வேட்டையாடல், சூதாடல், பகலிற்றூங்கல், வம்பளத்தல், பெண்ணாசை யுள்ளவனாதல், குடித்தல், பாட்டு, கூத்து, வாத்யம் இவைகளில் விருப்பு, வீணான அலைச்சல், ஆக பத்து.

காமந்கன்

ஒரு ரிஷி. அரிட்டநாமன் என்னும் அரசனுடன் தர்மசம்வாதம் செய்தவன். (பார~சார்.)

காமந்கன்

ஒரு ருஷி ஆங்கரிஷ்டனுக்குத் தர்மம் உபதேசித்தவன். (பா~சாந்தி.)

காமந்தன்

சோமகாந்தனைக் காண்க.

காமன்

1. தருமனுக்குச் சிரத்தையிடம் உதித்த குமரன். பாரி ரதி. 2. பிரசாபதியின் படை வீரரில் ஒருவன். (சூளா.) விஷ்ணுவின் குமரன்.

காமன் கோட்டம்

மன்மதனுடைய கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இவ்வாலயம் இருந்தது. இதில் தலைவன் தலைவிகள் இருத்தற்குரிய மணவறை முதலியன இருந்தன. இராசகிரியத்தில் இத்தெய்வத்திற்கு விழவு நடந்த தென்றும் அதன் காலவரை ஏழுநாளென்றும் நகரத்தார் இத்தெய் வத்தைத் தரிசித்தற்கு இங்கே வருவதுண்டென்றுந் தெரிகின்றது. கண்டோர்க்கு இன்பமளிக்குந் தோட்ட முதலியன இக்கோட்டத்தைச் சூழ்ந்திருந்தன. உதயணன் பதுமாவதியை முதலிற் கண்டு களித்தது இக்கோட்டத்தின் வாயிலிலே தான். தம்முடைய எண்ணம் பலிக்க வேண்டுமென்று தலைவன் தலைவிகள் தனித்தனி இதிலிருந்து தானஞ் செய்வதுண்டு. (பெ~கதை.)

காமபாலன்

பலராமன்.

காமபீடம்

மோக்ஷ முதலியவற்றை எண்ணித் தவமியற்றுவோர்க்கு இஷ்டசித்தியருளுவதா லிப்பெயர் பெற்ற காஞ்சிமா நகரம்.

காமயோனி மண்டலம்

சத்தி பீடங்களிலொன்று.

காமரதன்

சைலரதன் குமரன், இவன் குமரன் மகாரதன்.

காமரூபம்

ஆரியாவர்த்தத்திற்குத் தென் கிழக்கிலிருக்கும் தேசம்,

காமலக்ஷணம்

இது, பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி முதலிய சாதிப் பெண்களின் குணமறிந்து உத்தமனாகிய புருஷன் புணர்வது. கூடுமிடத்து லதாவேஷ்டிதம் (கொடி போலச் சுற்றித் தழுவல்.) விரு ஷாதிருடாலிங்கனம் (மரத்தைப் போல் எறித்தழுவுதல்.) தில தண்டுலா லிங்கனம் (எள்ளும் அரிசியும் போலக் கலந்து தழுவல்.) க்ஷர நீராலிங்கனம் (பாலு நீரும் போல ஒன்றுபடத் தழுவல்.) ஊருப்பிர கூடாலிங்கனம் (தொடையால் நெருக்கித் தழுவல்.) சகனோப சிலேஷாலிங்கனம், (சேரத் தழுவல்.) ஸ்தனாலிங்கனம் (கொங்கைகள் அழுந்தத் தழுவல்.) லலாடிகாலிங்கனம் (நெற்றி பொருந்தத் தழுவல்.) ஆக எட்டு வித ஆலிங்கனங்கங்களையும், கண், கபோலம், தனம், நெற்றி, கைம்மூலம், நிதம்பம் வாயினிதழ், உந்தி என்னும் எட்டுவித இடங்களின் சும்பனங்களையும், நகக்குறிகளையும், தந்தக்குறிகளையும், சங்கோசம், பக்கத்தம், பிரசுரிதம், முஷ்டி என்னும் தாடனங்களையும், உத்தானிதம், திரியக்கு, ஆசிதகம், ஸ்திதம், ஆன்மிதம் முதலிய கரணங்களால் கிராமியம், நாகரம், உற்புல்லிதம், சிரும்பிதம், இந்திராணிகம், உத்தானசம்புடம், பாற்சம்புடம், ஊருபீடிதம், வேஷ்டிதம், பாடவம், உற்புக்கினம், பணிபாஷம், உரபூஷணம், மத்திநிபீடிதம், மதனசிரும்பிதம், ஊருத்துவநிபீடிதம், வேணுவிதாரிகம், சூலசிதம், கர்க்கடம், பிரேங்கா, பத்மாசனம், அர்த்தபத் மாசனம், சமயனம், கூர்மம், பரிவர்த்தனம், அதிபீடிதம், கடிபீடிதம், சமுற்கம், விபரிவர்த்தனம், யுக்மபதகரணம், விதர்ச்சிதம், மர்க்கடம், சாநுகூர்ப்பரம், அரிவிக்கிரமம், துவிதலம், அவலம்பிதம், பசுகரணம், வியாக்கிரமம், சித்திரம், சங்காடகம் முதலிய (40) வகைப்பட்ட காரணங்களையும் நடத்தியின்புற்று, இல்லறத் துணைவியுடன் சுவர்க்கமடைவது.

காமாக்ஷி

சத்தி பீடங்களில் ஒன்றாகிய திருக்காஞ்சியில் எழுந்தருளிய சிவசத்தி. இவள் திரிமூர்த்திகளையும் மூன்று நேத்திரங்களில் பெற்றவள் என்பது சத்தி மகாத்மியம்,

காமாக்ஷிவிளக்கு

கல்யாண முதலிய சுப நாட்களில் கஜலக்ஷ்மி காமாக்ஷி யமைத்த விளக்கு.

காமாட்டி

தச்சன், மண்ணாற் சுவர் வைப்போன், கொல்லன்.

காமாந்தகன்

சிவன்.

காமாரி

தாரகாசுரனால் வருந்திய தேவர் யோகத்திருந்த சிவமூர்த்தியிடம் மன்மதனை ஏவினர். மன்மதன் சிவமூர்த்தி மீது காமத்தை யுண்டாக்கும் பாணத்தை ஏவினன். அதனால் சிவமூர்த்தி கோபித்து நெற்றிக் கண்ணை விழிக்க மன்மதன் எரிந்தனன். பின்பு இரதிதேவி வேண்டச் சிவமூர்த்தி அவளுக்கு உருவாயும் மற்றவர்க்கு அருவாயும் இருக்க அருள் புரிந்தனர். இந்த மன்மதனை யெரித்த திருவுருவே காமாரி யெனப்படும்.

காமாலைரோகம்

இது நரம்புகளை அநுசரித்த பித்தம் ரத்த மாமிசத்தைத் தகிக்க உண்டாவது. பாண்டுரோக முதிர்ச்சியில் பித்த வஸ்துக்களைப் புசிப்பதாலும் புணர்ச்சியாலும் உண்டாவது. இது, ஊதுகாமாலை, வறட்காமாலை, வாதகாமாலை, பித்த காமாலை, சிலேஷ்மகாமாலை, வாதசிலேஷ் மகாமாலை, பித்தசிலேஷ்மகாமாலை, திரிதோஷகாமாலை, மஞ்சட்காமாலை, அழகுகாமாலை, செங்கமலக்காமாலை, கும்பகாமாலை, குன்மகாமாலை, எனப் பதின்மூன்று விதம். இது நுரைச்சீரகக் கண்டு, கீழ்க்காய் நெல்லித்தயிலம் முதலிய கொடுக்கக் குணமாம்.

காமாள்

பதினோராம் மன்வந்தரத்துத் தேவர்.

காமிகம்

சிவாகமத்துள் ஒன்று. ஆகமம் காண்க.

காமினிகள்

ஒருவகைப் பாதாளகன்னியர் சுபலன் முகத்துதித்தவர். சகல சாதியிலும் விபசாரம் செய்பவர்.

காமியகம்

காண்டவ பிரஸ்தத்திற்கு மேற்கே மறுதன்வசு யென்னப்பட்ட புண்ணியவனம்.

காமியவனம்

பாண்டவர் அரணியவாசத் திற்றங்கிய இடம்.

காமியாகனம்

இது சற்புத்திரர் செல்வம் முதலியவற்றை விரும்பி நல்லோர்க்கு உதவுதல்.

காமுகன்

பிரசாபதியின் படைவீரர்களுள் ஒருவன்.

காமேச்வரன், காமேச்வரி

மணித்வீபத்தில் சிந்தாமணி மண்டபத்தில் சக்ராலயத்தில் வீற்றிருக்கும் சிவசத்தியர்.

காம்பன்

ஒரு வாநரசேனாபதி.

காம்பிலி

துருபதனது ராசதானி. பஞ்சால தேசத்தின் ஒரு பாகம்.

காம்பில்யன்

அரம்மியாச்வன் குமரன்.

காம்பில்லியம்

தட்சணபாஞ்சலத்திலுள்ள ஒரு நகரம். அரசன் துருபதன்.

காம்போசம்

பரதகண்டத்திற்குக் கிழக்கிலிருக்கும் தேசம். இத்தேசாதிபதி அருச்சுநனிடம் சண்டை செய்திறந்தான்.

காம்போஜம்

நிஷதயாலத்திற்குத் தெற்சில் உள்ள தேசம். அஸ்வஸ்தானம் குதிரைகளிருக்குமிடம், இதற்கு அரசன் சுதட்சணன் (Afghanistan) The name has been derived from Aswasthan, the place of horses.

காம்போதியார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர் (குறு~384)

காம்போதிராசன்

பாரதயுத்தத்தில் சீகடனுடன் யுத்தஞ்செய்தவன்,

காயங்கரை

ஒரு நதி, இதன் கரையில் பிரமதருமன் எனும் புத்தமுனி தவஞ் செய்து கொண்டிருந்தனன். அத்திபதி யெனும் அரசன் அவந்திக்குச் செல்லும் பொழுது இதன் கரையில் தங்கினன், (மணிமேகலை).

காயசண்டிகை

வித்தியாதரமங்கை, காஞ்சனன் தேவி, இவள் தன் கணவனுடன் பொதியமலையின் வளங்காணச் சென்று அங்கு விருச்சிகரெனும் முனிவர்பொருட்டுப் பன்னிரண்டு வருஷத்திற்கொரு முறை பழுத்து அவர் பசியைப் பன்னிரண்டு வருடம் வரையிற் போக்கவல்ல நாவற்கனியைக் காலாற் சிதைத்து அந்த இருடி தந்த சாபத்தால் யானைத் தீயென்னும் பசிநோயால் வருந்தி மணிமேகலை தந்த உணவால் பசிநீங்கித் தன்னகாஞ் செல்லுகையில் விந்தமலை காக்கும் விந்தாகடி கையா லிழுக்கப்பட்டு அவள் வயிற்றி லடங்கியவள். (மணிமேகலை).

காயத்திரி

1. காலை மத்தியானம் மாலை முதலிய காலங்களில் சைவ வைணவ ஸ்மார்த்தர்களால் அந்த அந்தச் சந்தியா ரூபங்க ளாகத் தியானிக்கப்பட்ட தேவதா மந்திர சுவரூபம். (பிரமன் தேவியரில் ஒருத்தி). 2. ஒருமுறை பிரமன் வேள்விபுரியத் தொடங்குகையில் சரஸ்வதி வரத் தாமதித்தனள், அந்தக் காலத்தில் முனிவரும் தேவரும் ஒரு பசுவை நிருமித்து அப்பசுவின் வயிற்றிலிருந்து அவ்விடமிருந்த இடப் பெண்ணை வருவித்து அவளுக்குக் காயத்திரி என்ற பெயரிட்டுப் பிரமனுக்கு யாகதேவி யாக்கினர்.

காயத்திரிபீடம்

சத்திபீடங்களி லொன்று.

காயலான்

காயல்பட்டணத்து மகம்மதியன்.

காயாரோகணம்

இது சிவமூர்த்தி சர்வசங் காரகாலத்தில் பிரமவிஷ்ணுருத்ராதி சமஸ்த தேவமானுஷாதி சராசரங்களைத் தம்மில் ஒடுக்கின தானங்களாம். (காஞ்சி~பு.)

காயை

தஷன் பெண், தருமன் றேவி,.

காய்சினவழுதி

முதற்சங்கமிருத்திய பாண்டியன். இவனை உக்கிரபாண்டியன் என்பர்.

காய்தான்ய வகை

துவரை, உளுந்து, கடலை, மொச்சை, வெண்மொச்சை, கராமணி, கருங்காராமணி,பனிப்பயறு, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, வெண்பயறு, கரும்பயறு, கொள்ளு, எள்ளு, பட்டாணி முதலிய (பதார்)

கார உப்புக்கள்

வெங்காரம், சீனக்காரம், சௌகாரம், அப்பளகாரம் நவாக்ஷாரம், யவாக்ஷாரம், சத்திக்ஷாரம், தும்பஷாரம், உமிலி க்ஷாரம் முதலிய.

காரகர்

ஓர் இருடி காஞ்சியில் திருமாலருள் பெற்றவர்.

காரகர்கள்

சூரியன்; பிதுர்க்காரகன் சந்திரன்; மாதுர்க்காரகன், செவ்வாய்; சகோதரகாரகன், புதன்; வித்தியாகாரகன், குரு; புத்திரகாரகன், சுக்ரன்; களத்திர காரகன், சநி; ஆயுஷ்காரகன், இராகு; ஞானகாரகன், கேது; மாரககாரகன்.

காரசாரப் பிறப்பு

(10) சூடன், சீனம், பூநீறு, வளையலுப்பு, பச்சைகர்ப்பூரம், கல்லுப்பு, கறியுப்பு, பொன்னம்பர், மீனம்பர், கடல் நுரை முதலிய. (போகர்.)

காரணமாலையணி

அஃதாவது பின்பின்னாக வருவனவற்றிற்கு முன் முன்னாக வருவனவற்றைக் காரணங்களாக வேனுங் காரியங்களாக வேனுஞ் சொல்லுதல் இதனை வட நூலார் காரணமாலா என்பர். (குவல)

காரணம்

பிறிதொன் றற்காகாமல் நியதமாய்க் காரியத்திற்கு முன்னிற்பது,

காரணர்

ஒர் இருடி,

காரணவாராய்ச்சியணி

அஃதாவது குறைவில்லாத காரண மிருந்துங் காரியம் பிறவாமையைச் சொல்லுதலாம். இதனை வட நூலார் விசேஷோக்தி யலங்காரமென்பர்.

காரண்டன்

தெய்வீக அரசனைக் காண்க. புரையூர் மலையாண்டவன்.

காரபசனம்

ஒரு தீர்த்தம் ஸரஸ்வதிந்தி தீரத்துள்ளது.

காரபிமதம்

இத்தேசத்தவர்கள், நல்ல ஆவியும், தீய ஆவியும் இருக்கின்ற தெனவும், நல்ல ஆவியைச் செமின் எனவும், தீய ஆவியை மாபோய என்றும் கூறுவர். ஒவ்வொருவரிடத்தும் தீய ஆவியிருக்கிற தென்றும், லூகோ எனும் ஆதிமனுஷனால் எல்லாச் சீலர்களும் உண்டாயினர் எனவும், அந்த லூகோ சுவர்க்கமடைந்தனன் எனவும், சுவர்க்கம் சிருட்டிக்கப்பட்ட தன்றெனவும் கூறுவர். பின்னும் சிமென எனும் ஆவியைத் தேவர்களில் உயர்ந்தவனென்று எண்ணிப் பெரிய விக்ரகம் செய்து பூசிப்பர். மாபோயி எனுந் தேவதை துஷ்டதேவதை யாகையால் சிறு விக்ரகமாகச் செய்து பூசிப்பர். இவர்களின் குருக்கண்மார் போயல் எனப்படுவர். குருமார் ரொட்டியும் நீருமுண்டு சிறு குடிசைகளில் வசிப்பர். இவர்கள், ஒவ்வொரு தேகத்திலும் அநேக ஆத்மாக்கள் இருக்கின்றன என்றும், அந்த ஆத்மாக்கள் செய்த புண்ணிய பாபங்களைத் தாமே மறு பிறவியில் அனுபவிப்பர் என்றும் கூறுவர்.

காரளன்

1. சூரபத்மன் படைத்தலைவரில் ஒருவன். 2. இவன் காட்டெருமை யுருக்கொண்ட விகாரனுடன் கூடித் தான் காட்டுப் பன்றி யுருக்கொண்டு விநாயகரிடம் வந்து இறந்தவன்.

காராக்கிருகக்குகை

திருப்பரங்குன்றத்திலுள்ள குகைகளுள் ஒன்று; இது நக்கீரரைப் பூதம் சிறைவைத்த இடமாம். (திருவிளை)

காரி

1. இவர் திருக்குருகூரிலிருந்த வேளாளர். இவர்க்குக் காரிமுதலியார் என்று பேர். இவர் நம்மாழ்வாருக்குத் தந்தையார். இவர் தேவி உடையநங்கை; இவர் தந்தை போர்க்காரியார். 2. இவன் மலையமான் திருமுடிக்காரி எனவும் கூறப்படுவன். மலையமானாடாகிய திருக்கோவலூர் பக்கத்தை அரசாண்டவன். கடையெழு வள்ளல்களி லொருவன். சேர சோழ பாண்டியர்களுக்குப் படைத்துணை யாயிருப்பவன். புலவர்க்குப் பலவாகப் பரிசுகொடுத்து ஆதரிப்பவன். புலவர்க்குத் தேர்கொடுத்தலானே தேர்வண் மலையனெனப்படுபவன் (நற் 100) முள்ளூர் மலையை யுடைமையின் “முள்ளூர் மன்னன் கழ றொடிக்காரி” எனவுங் கூறப்படுவன். கபிலராலும், பரணராலும், மறோக்கத்து நப்ப சலையாராலும் பாடப்பெற்றவன். விற்போ ரால் வென்று நிரை கவர்பவன் ”பல்லா நெடுநிரைவில்லினொய்யும், தேர்வண் மலையான்” (நற் 100) “மாயிருமுள்ளூர் மன்னன்மாவூாந், தெல்லித்தரீ இயவினநிரைப் பல்லான்கிழவரின்” (நற் 291) இவன் அரசாளுநாளில் ஆரியர் பெரும் படையோடு வடக்கிலிருந்து தமிழ்நாடு புகுந்து திருக்கோவலூரை முற்றினார். அது கண்ட காரி அஞ்சாது எதிர்த்துப் போர்செய்ய அவர் ஆற்றாராய்ப் பின்வாங்கி ஓடலாயினார் “ஆரியர் துவன்றிய பேரிசைமுள் ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாண்ம லையன, தொருவேற்கோடியாங்கு” (நற் 170) இவ்வாறு இவன் வெற்றிமேன்மே லெய்தக்கண்ட தகடூர்அதிகமா னெடுமானஞ்சி படையொடு வந்து கோவலூரை முற்றிக் காரியைத் தோற்கச் செய்து ஓட்டிவிட்டு இவனது நாட்டினைக் கைப்பற்றிக் கொண்டான். தோற்றோடிய காரிபெருஞ் சேரலிரும் பொறையை யடைந்து அவன் கருத்துப்படி கொல்லிமலையை யாண்ட வல்வில் லோரியைப் போரிலே கொன்று அவ்வோரியினது நாட்டைச் சேரலனுக்குக் கொடுத்துவிட்டு அவனை அஞ்சிமேற் படை யெடுக்குமாறு செய்வித்தான். சேரன் தகடூரை முற்றி அஞ்சியைக் கொன்று போக்கி அவன் கைப்பற்றியிருந்த கோவலூர் நாட்டைக் காரியிடம் கொடுத்தனன். அவன் அதனைப் பெற்று முன்போல ஆண்டிருந்தனன், நற்றிணையில் இக்காரியைப் பாடியவர், கபிலரும் பரணரும் 100,170, 29, 320. 2. இவர் பழயனூரிலிருந்த ஒரு வள்ளல், இவர் தாம் வறுமையடைந்த காலத் துத் தம்மிடம் வந்த ஒளவையாரை உபசரித்துத் தமக்கிருந்த அன்னத்தை ஒளவை யாருக்கிட்டுத் தமக்குச் சீவனாதாரமாயிருந்த களைகட்டையும் ஒளவையார்க்குத் தந்தவர். ஒளவையார் பாரிபரித்த பரியும் பழையனூர், காரிகொடுத்த களைகட்டும் சேரமான், வாராயென வழைத்த வாய் மையு மிம்மூன்றும், நீலச் சிற்றாடைக்கு சேர்” எனப் பாடப்பெற்றவர். 3. ஒரு வள்ளல் பிறப்பால் இடையர் என்பர். மலைநாட்டுத் திருக்கோவலூரை யும், முள்ளூர் மலையையுமுடையார். (கோகுல சதகம்).

காரிகிழார்

பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைப் பாடியவர். வேளாளர். இவருக்குக் கானட்டனார் எனவும் பெயர். (புற~நா.)

காரிகை

அமுதசாகரர் இயற்றிய யாப்பிலக்கணம். இது நாற்பத்தினான்கு கட்டனைக் கலித்துறை கொண்டு உறுப்பு, செய்யுள், ஒழிபு என்னும் மூன்று இயல்களால் ஆனது.

காரிக்கண்ணனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பாரும் இவரே. இவர் வணிகர் மரபினர். “கழைமாய் காவிரி கடன் மண்டு பெருந்துறை” எனத் தம்மூரைச் சிறப்பித்தலின் இவர் அக்காவிரிப்பூம் பட்டினத்தார் என்றே கூறலாம். இவர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனது வெற்றியைச் சிறப்பித்துக் கூறினர். (புற 57) ஒருகால் சேரலன் சேநாபதி பிட்டங்கொற்றனிடஞ் சென்று அவனைப் புகழ்ந்து பரிசு பெற்றனர். (புற 169) சோழன் பெருந்திருமாவளவனும், பாண்டியன் பெருவழுதியும் ஒருசேர இருந்தாரை உடனிலையா வாழ்த்தினர். (புற 57) ஆஅய் அண்டிரனைப் பாராட்டிக் கூறினர். (நற் 237) பிரிந்த காதலனைக் கருதி வருந்தினாயு மில்லையேயென்று தலைவியைத் தோழி கடிந்து கூறுவதாக உரை மாறுப்படப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் (1) குறுந்தொகையில் (1) அகத்தில் (2) புறத்தில் (5) வள்ளுவர் மாலையில் (1) ஆக பாடல்கள் (10) உள.

காரிநாயனார்

திருக்கடவூரில் வேதியர்குலத்திற் பிறந்து தமிழில் நூல்கள் செய்து தமிழ் நாட்டரசர்களுக்கு அதை விளக்கிப் பொருள் பெற்றுச் சிவாலயத் திருப்பணிகள் செய்து சிவநேசமுள்ளவராய் முத்தி பெற்றவர் (பெ~புராணம்.)

காரியசமை

வாதியாற் கூறப்பட்ட ஏதுவிற்கு அந்நிய காரியத்தினாற் சம்பவித் தலைக் கூறல்.

காரியத்தன்மை

பிறிதொன்றற் காகாது நியதமாய்ப் பின் நிற்பதன் தன்மை.

காரியாசான்

மாக்காயனார் மாணாக்கர். சிறு பஞ்சமூலம் இயற்றியவர். இவர் காப்புச் செய்யுளால் சைநர் எனத் தெரிகிறது.

காரியார்

1. இவர் பாண்டி நாட்டில் கொற்கையெனும் பதியில் புத்தன் என்பவனுக்குப் புத்திரராய்ப் பிறந்து புராரி நாயனார் வேண்டுகோளால் கணக்கதிகாரம் இயற்றினவர். 2. அநபாயச் சோழன் காலத்திலிருந்த ஒருவர்.

காரியார், நாரியார்

மதுரையில் பாண்டியனிடம் பரிசுபெற நினைத்துவந்த தமிழ்ப் புலவர்கள் இருவர். இவர்களிருவரும் தம் நாடுவிட்டு மதுரைக் கடுத்து வந்த காட்டில் வழி தடுமாறுகையில் சொக்கேசர் ஓர் இடையர்போல் வந்து இவர்களைத் தம்மைப்பாட இரந்து, அவர்கள் கூறிய பாடல்களைக்கேட்டு, பாண்டியர் புகழ் அரியதென வழிகாட்டி மறையப் புலவர்கள் கடவு ளென்றறிந்து சன்னதியடைந்து சொக்கரைப் பாடிக் களித்தனர். இச்சிவாவச ரத்தைச் சுந்தரக்கோ னென்பர் இடையர்.

காரியாறு

1. ஒரு நதி (மணிமேகலை) நெடுங்கிள்ளி யென்னும் சோழனிறந்த இடம்.

காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி

சோழ பரம்பரையைச் சேர்ந்தவன். கோவூர் கிழாரால் பாடப்பெற்றவன். இவனிருந்தது உறையூர். சோழன் நலங்கிள்ளிக்குப் பகைவன். இவன் பெயர் நெடுங்கிள்ளி எனவும் வழங்கும் (புற~நா.)

காரிரத்னகவிராயர்

இவர் திருநெல்வேலி ஜில்லா ஆழ்வார் திருநகரியை யடுத்த பேறையூரில் சற்றேறக்குறைய (300) வருடங்களுக்கு முன்னிருந்த வைணவர். மாறனலங்காரவுரை, பரிமேலழகர் நுண் பொருண்மாலை முதலிய செய்தவர்.

காரீரியாயஜனம்

மழையை விரும்பினவர்கள் செய்யும் காமிய இஷ்டி. (பரா~மா).

காருகபத்யம்

இது ஒரு அக்னி. கிருஹங்களுக்குப் பதியாயிருப்பது, இது பிரம்மாவாகிறது. இது அவரிடத்தில் உண்டானது. இதுப்ருதவி, பிருத்வி வட்டமாதலால் இது வட்டவடிவுள்ளது.

காருடபுராணம்

இது ஆறாயிரம் கிரந்த முள்ளது. உலகசிருட்டி, விரத விவர ணம், சமாச்ரயணம், சோதிடம், இரத்தின பரீக்ஷை, ஔஷதசிகிச்சை, சாமுத்திரி காலக்ஷணம், புண்ய க்ஷேத்திரம் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும்.

காருண்யபாண்டியன்

கற்பூரபாண்டியனுக்குக் குமரன்.

காருபயம்

ஒரு பட்டணம், இதை ஒரு கொடுங்கோலரசன் ஆண்டிருந்தனன். இதை இவனிடமிருந்து இலக்ஷமணர் நீக்கித் தம் புத்திரருக் களித்தனர்.

காருவாரன்

நிஷாதனுக்கு விதேகஜாதி ஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்குத் தோல்வேலை (மநு.)

காருஷர்

கருஷனிட மிருந்துதித்த சந்ததியார்.

காரூடகூடன்

ஒரு சிவகணத் தலைவன்.

காரூரவம்சம்

சூரியகுலத் தாசனாகிய கரூரனாலுண்டான வம்சத்தவர். இவர் பிறகு வேதியர் ஆயினர்.

காரைக்காட்டுவேளாளர்

இவர்கள் உடையார் பாளயம் தாலூகாவில் உள்ள பிரிவினர். இவர்கள் வேளாளரில் அதிகமாகக் கலந்தவராகக் காணப்படவில்லை. இவர்கள் காரைக்காடு எனும் இடத்திலிருந்து வந்தவர்கள் என்பர். (தர்ஸ்டன்)

காரைக்காலம்மையார்

காரைக்காலில் வைசியர் குலத்தில் தனதத்தன் என்பவர் ஒருவர் இருந்தனர். அவர்க்குப் புனிதவதியார் எனும் ஒரு குமரி இருந்தனர். இந்தப் புனிதவதியாரை நீதிபதி செட்டியாரின் குமரர் பரமதத்தருக்குத் தன தத்த செட்டியார் மணஞ்செய்வித்து மருமகனையும் குமரியையும் தமக்குப் புத்திரரில்லாமையால் தம் வீட்டிலேயே நிறுத்திக்கொண்டனர். இவ்வகை பரமதத்தன் சிவனடியவர் பத்தியிற் சிறந்த புனிதவதியாருடன் இல்லற நடாத்துகையில் ஒருநாள் அவரிடம் வந்த வர்த்தகருட் சிலர் இரண்டு மாங்கனிகள் கொண்டுவந்து உதவினர். அவற்றைப் பரமதத்தர் வீட்டுக்கனுப்பினர். புனிதவதியார் அப்பழங்க ளிரண்டையும் வாங்கிப் பத்திரப்படுத்துகையில் சிவனடியவர் ஒருவர் நல்விருந்தாயினர். அடியவரைக் கண்ட புனிதவதியார் எதிர் கொண்டழைத்துபசரித்து அவர் பசியுடனிருந்தமை கண்டு அன்புடன் அன்னம் பரிமாற அந்த வேளையில் கறியமுது சித்தமாகாமையால் கணவர் அனுப்பிவைத்த மாங்கனிகளிரண்டில் ஒன்றைச் சிவனடிய வருக்கிட் பெசரித்தனுப்பினர். கணவர் தம் காரிய முடித்து அன்னம் புசிக்கையில் தாம் அனுப்பின மாங்கனிகளில் ஒன்று கேட்டனர். புனிதவதியார் ஒரு பழம் கொண்டு வந்து பரிமாற உண்டு அதிக உருசியா யிருந்தமையால் மற்றொன்றையும் கேட்டனர். புனிதவதியார் உடல் நடுங்கித் தாம் எடுத்து வருவதாகத் திரும்பிச் சிவமூர்த்தியிடம் தமது குறைகூறி யாசிக்கத் திருவருளால் மாங்கனியொன்று கையில் வந்தது. அதனைக் கணவருக்களிக்க அவருண்டு இது அமிழ்தினுமினிது, நான னுப்பிய தன்று; இதன் வரலாறு கூறுக எனப் புனிதவதியார் நடந்தவைகளை வெளிப்படுத்தினர். செட்டியார் கேட்டு வியப்புடன் ஆயின் மற்றொரு கனி வருவிக்க வென்றனர். புனிதவதியார் சிவத்தியானஞ்செய்ய மற்றொரு கனிதோன்றி மறைந்தது. செட்டியார் இந்த அற்புதச் செய்கைகளைக் கண்டு இவள் தெய்வமாதென அஞ்சி விட்டு விலக எண்ணி வர்த்தகத்திற்குச் செல்ல எண்ணுவார் போல் வேற்றூ ருக்குச் சென்று பாண்டி நாட்டில் ஒரு பெண்ணை மணந்து ஒரு புத்திரியைப் பெற்று அப்புத்திரிக்குப் புனிதவதியெனப் பெயரிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வகையிருக்கப் புனிதவதியாரின் சுற்றத்தவர் பரமதத்தர் பாண்டி நாட்டி விருப்பதைக் கேள்வியுற்றுப் புனிதவதியாரை அழைத்துச் சென்றனர். புனிதவதியாரின் வரவறிந்த பரமதத்தர் எதிர்சென்று பணிந்தனர். சுற்றத்தவர் யாதென வினவப் பரமதத்தர் இவரிடம் தெய்வச்செயல் கண்டேன் ஆகையால் நான் வணங்குந் தெய்வ மெனக் கொண்டேன், நீங்களும் வணங்குங்கள் என்றனர். இதைக் கேட்ட மனைவியராகிய புனிதவதியார் சிவமூர்த்தியை யெண்ணித் தியானித்துக் கணவன் பொருட்டுத் தாங்கிய இந்த உருநீக்கிப் பேயுரு அருள்க எனப் பெற்றுப் பல பிரபந்தங்கள் பாடித் திருக்கைலைக்குத் தலையாற்சென்று தரிசிக்கச் சிவமூர்த்தி ‘அம்மே வா’ என அழைக்கத் தரிசித்துநின்றனர். சிவமூர்த்தி வேண்டியவை என்ன என அம்மையார் சிவமூர்த்தியை நோக்கிப் பிரியா அன்பும் திருநடன தரிசனமும் அத்திருவடிக் கீழ் என்றும் இருக்கும் சிவானந்தவாழ்வும் வேண்டிப் பெற்றுச் சிவாக்ஞைப்படி திரு வாலங்காட்டிற் சென்று நடன தரிசனங் கண்டு சிவப்பேறு பெற்றவர். சிவபெருமான் அம்மையே என அழைத்த காரணத்தால் காரைக்கால் அம்மையார் எனத் திருநாமம் பெற்றனர். இவர் அருளிச்செய்த நூல்கள்: அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டைமணிமாலை, மூத்த திருப்பதிகம் முதலியன. (பெ. புராணம்).

கார்காத்தவேளாளர்

உக்கிரகுமார பாண்டியன் மேகங்களை விலங்கிட்டபோது இந்திரன் மழைபெய்விக்கிறேன், அவற்றை விடுவிக்க என வேண்டினன். பாண்டிபன் அவன் சொல்லில் நம்பிக்கையிலாமல் விடுவிக்காதிருக்க வேளாளர் இந்திரனுக்குப் பிணையாய் மேகங்களை விடுவித்தனர். ஆதலால் இப்பெயர் அடைந்தனர்.

கார்க்கன்

ஓர் இருடி தொண்டை நாட்டில் திருக்காரகத்திற்றிருமால் அருள்பெற்றவன்.

கார்க்கவன்

ஒரு வணிகன், இவன் வயிணவன் என்னும் ஒருவனுடன் கூடிப் பல வணிகரைக் கொன்று ஒரு ஆலயத்துத் தீப தரிசனஞ்செய்ய வயிணவனுடன் முத்தி பெற்றவன்.

கார்க்கி

பாஷ்களர் குமரியிடம் இருக்குவேத மோதிய ஒருமுனிவர்.

கார்க்கியமுனிவர்

1. யுதாசித் என்னும் அரசனது புரோகிதர், சித்திரகேதுவைப் பார்க்க, 2. யஞ்ஞவல்கியரோடு வாது செய்தவன்.

கார்க்கியர்

ஜலத்திற் பிறந்தவர்,

கார்க்குமரம்

இந்த மரம், சீதளப் பிரதேசத் தில் உண்டாவது. இது (15) அடி உயரம் உள்ளது. இதைச்சுற்றிய பட்டை பொருக்குப் பொருக்காய் உறுதியாயிருக்கும், மரத்தின் அடிப்பாகத்தைக் கீழும் மேலும் கத்தியால் கீறிவிடக் கீறப்பட்ட பாகம் நாளடைவில் கீழ் விழும். பட்டைகளைத் தண்ணீரில் ஊறவிட்டுத் தட்டையாகப் பதிய வைப்பார்கள், பிறகு அவற்றை உலரவைத்து அவற்றிலுள்ள சிறு துவாரங்கள் அடைய நெருப்பில் வாட்டிப் பக்குவப் படுத்துவார்கள். இவ்வாறு பக்கு வப்பட்டவற்றை வேண்டியபடி உருமாற்றுவார்கள்.

கார்க்கேயன்

சிரி குமரன்.

கார்க்கேயன்

அஜாதசத்ருவிடம்ஞானோப தேசம்பெற்ற ஆசிரியன்.

கார்க்கேயர்

இவர் ஓரிருடி. இவர் அகத்தியர், வியாசர் முதலியோர் காலத்திருந்த கிருஷ்ணன் யாகஞ்செய்தபோது மருத்துவிக்காக இருந்தவர்.

கார்க்கோடகன்

கத்துருவின் புத்திரன். அஷ்டமா நாகங்களி லொருவன், வாசுகியின் உடன் பிறந்தான். இவன் சிவமூர்த்தியின் திருவிரலில் மோதிரமாயிருப்பவன் அறியாது விஷத்தை விரலில் கக்கியதால் கைலை நீங்கி வடாரண்யமடைந்து நடன தரிசனங் கண்டு முத்திபெற்றவன்,

கார்க்கோலம்

ஒரு சிவத்தலம். இது கோதாவிரிக் கரையிலிருப்பது.

கார்த்த பருஷி

ஓர். இருடி, இவர் பிறப்பைக் கழுதையிடங் கூறுவர்.

கார்த்தவீரியன்

1. சூரியகுலத்து ஹேஹயநாட்டுக் கிருதவீரியனுக்கும் சுகந்தைக்கும் பிறந்தவன். இவன் பிறந்த காலத் திவனுக்குக் காலில்லாதிருக்க இவன் பன்னிரண்டு வயதுக்குமேல் தத்திராத்திரேயரிடம் உபதேசம் பெற்று ஆயிரம் கைகளும் இரண்டு கால்களும் பெற்றனன், (மச்சியபுராணம்). சம்ராட்பட்ட மடைந்தவன். ஒருமுறை மகாபல சாலியாகிய இராவணனிவனிடம் யுத்தஞ்செய்யக் கருதி இவனிருந்த இடஞ் சென்றனன். அவ்விடம் அரசனைக் காணாது அருகிருந்த ஆற்றங்கரையில் சிவபூசை செய்திருந்தனன். அவ்வாற்றின் மற்றொரு பாகத்தில் கார்த்தவீரியன் தன் தேவியருடன் சலக்கிரீடை செய்து தனது ஆயிரம் கைகளாற் கட்டியிருந்த நீரைவிட்டனன். அந்நீர் இராவணனது சிவபூசாதிரவிய முழுதையு மடித்துச் சென்றது. இதனால் இராவணன் கோபித்து வரலாறுணர்ந்து கார்த்தவீரியனிடம் யுத்தஞ்செய்யச் சென்று தோற்று அவனால் பிடிக்கப்பட்டுச் சிறை யிலிருந்தனன். பின்பு புலத்தியர் கார்த்தவீரியனை வேண்டி இராவணனை விடுவித்தனர். இவன் சமதக்கினி முனிவரிடமிருந்த ஓமதேனுவைக் கவர்ந்ததனால் பாசிராமர் இவனிடம் கோபித்திவனைக் கொன்றனர். இந்த வைரத்தினால் கார்த்த வீரியன் குமரர் பரசிராமரில்லாத காலத்துச் சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். பரசிராமர் வரவறிந்த சமதக்னியின் றேவியார் இருபத்தொரு முறை மார்பிலறைந்து கொண்டனர். அதனால் பாசிராமர் இவன் வமிசமாகிய சூரிய குலத்தை இருபத்தொரு தலைமுறை கருவறுத்தனர். அக்காலத்தில் பரசிராமர் கைக்குத் தப்பிய கார்த்தவீரியர் குமார் சயத்துவசன், வீரசேனன், விருஷணன, மதுசூரன் அல்லது மார்ச்சிதன். கார்த்த வீரியனாண்ட பட்டணம் மாகிஷ்மதி. இவனுக்குப் புத்திரர் பதினாயிரவர். இவன் 85,000 வருஷம் அட்டசித்திகளும் பெற்று அரசளித்தனன். சமுத்திர ராசனாலின்னான் தன்னுடன் யுத்தஞ்செய்யத் தகுந்தவனென் றறிந்து பரசிராமராலிறந்தவன். தேவர் வேண்டத் திருப்பாற்கடல் கடைர் தவன. பார்க்கவரைக் கோபமூட்டி ஆயிரம் கையும் வேதியனாலறுபடச் சாபம் பெற்றவன். இவனுக்கு அருச்சுனன் என்றும் பெயர். கிருதவீரியன் குமரனாகையால் இப்பெயரடைந்தவன், (பாகவதம்). 2. திருஷதர் எனும் ருஷியால் அக்நி தேவனை அஸ்திரமாகப் பெற்றுப் பலவா முகருஷியாச்சிரமங்களைக் கெடுத்து வருகையில் ஆபஸ்தம்ப முனிவரிருக்கை யடைந்து துன்புறுத்த அவர் இவனைப் பாசிராமராற் சிரமொழியச் சாபமளித்தனர். (சிவமகாபுராணம்).

கார்த்திகேயன்

கிருத்திகை முதல் அறுவரால் வளர்க்கப்பட்ட குமாரக் கடவுளுக்கொரு பெயர்.

கார்த்திகை

1. வார்த்திகன் என்னும் அந்தணனுக்கு மனைவி. தக்ஷிணாமூர்த்தி என்னும் வேதியனுக்குத் தாய். (சிலப்பதி காரம்). 2. நக்ஷத்திரபதமடைந்த தக்ஷன் பெண்கள். இவர்கள் கந்தமூர்த்திக்குப் பாலூட்டி விரதபல மடைந்தவர்கள். கிருத்திகையைக் காண்க.

கார்த்திகை அமாவாஸ்யை

லக்ஷ்மி விரதம்,

கார்த்திகை சுகல ஏகாதசி விரதம்

இதில் நியமத்துடன் விஷ்ணு ஸ்தாபனஞ் செய்து பூசிப்பது. இது பீஷ்மர் சாசயனத்திலிருந்து பாரத முடிவுவரைக் கண்ட நாளாதலின் இதில் பீஷ்ம பஞ்சக விரதமிருப்பர்,

கார்த்திகை பௌர்ணமி

சிவாலயங்களில் திரிபுரோற்சவவிரதம், கார்த்திகை நக்ஷத்திரத்திற்கு முன்னால் பரணி நக்ஷத்திரத்தில் சாயுங் காலம் தீபத்தில் அக்னிகார்ய மூலமாய் மகாலிங்க மூர்த்தியை ஆவாகனஞ்செய்து பூஜித்து வைத்து மறுநாள் சாயுங்காலத்தில் பிரம்ம ஸ்தானத்துத் தீபம் முன்னும் சோமாஸ்கந்தர் பின்னுமாக எழுந்தருளச் செய்து கொண்டு தீபத்தைச் சுஷ்கதீப தண்டத்தில் வைத்துச் சமஸ்காரப் படுத்தி யெரிந்தவுடன் தண்டத்தைச் சேதித்துவிட வேண்டியது. தீபகாரணம் உமையுடன் சிவபெருமான் எழுந்தருளியிருக்குங்கால் அவ்விடமிருந்த தீபவொளி குறையுஞ் சமயத்தில் நெய்யுண்ணச் சென்ற ஒரு எலி அபுத்திபூர்வகமா யதனைத் தூண்டிய பலத்தால் சக்கரவர்த் தியாய்ச் சிவாலயத்துள் செருக்குடன் பிரதக்ஷிணம் வருகையில் அரசன் மீது தீபகணமொன்று விழுந்தது. அதனால் அரசனது தேகம் புண்ணாய் வருந்துகையில் அசரீரியாய்ப் ‘பரமசிவம் நீ செருக்குற்றதால் இவ்வாறு செய்தோம். இன்று முதல் சகல சிவாலயங்களிலும் இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் தீபமிடின் சாயுச்யமுறுவா’ யென்ன அவ்வாறே தீபம் வைத்து வருகையில் கார்த்திகை பூர்வபடி கிர்த்திகை நக்ஷத்திரத்தில் தேஜோமயமாய்ச் சிவமூர்த்தி உக்ர வுருவுடன் எழுந்தருளினர். இதைக் கண்ட விதி விஷ்ணுவாதியர் நடுங்கி அவ்வுகர உஷ்ணந்தணியப் பொரி அவல் முதலியன நிவேதித்தனர். இச்சக்ரவர்த்திக்கு மாவெலிச் சக்ரவர்த்தி யென்று பெயர். விஷ்ணு வாலயங்களில் இவ்வுற்சவம் நடத்தப்படுகிறதற்குக் காரணம் திருமகள் ஒரு அசுரனுக்குப் பயந்து காட்டில் ஒளிக்க அவ்வசுரன் காட்டைக்கொளுத்தத் திருமகள் அந் தரமாய் மறைந்தனன். அந்தக் காரணம் பற்றித் தீக்கொளுத்துவர் என்பர்.

கார்த்திகைவிரதம்

கந்தவிரதங்களி லொன்று. பரணியிற் சுத்தனாய்ப் புராணாதிகள் கேட்டு மறுநாள் விதிப்படி கந்தபூசை முடித்து விரதமிருத்தல். இதை அரிச்சந்திரன், அந்திமான், சந்திமான், அனுஷ் டித்துச் சித்தியடைந்தனர்.

கார்நாற்பது

மதுரைக் கண்ணங்கூத்தனார் இயற்றியது. கார்காலத்து வருவேனென்று வினைமேல் சென்ற தலைவன் வராமையின் தலைவி பிரிவாற்றாமல் வருந்துவதைக் கூறும் நாற்பது வெண்பாக்களை யுடையது.

கார்ப்பாயணி

கெற்கன் குமரன். இவனிடமிருந்து பிரமவம்ச முதித்தது.

கார்முல்லை

பெறற்கரிய வலியினையுடைய பாசறையினின்றும் தலைவர் வருவதற்கு முன்னே கரியகடலை முகந்து கொண்டு மேகம் வந்தது. (பு. வெ. பொது.)

கார்யபரவாக்யம்

செய்யவேண்டியதைக் கூறும் வாக்யம். தரு.

கார்வளங்கொண்டமண்டலம்

பாண்டி நாட்டிலுள்ள மண்டலங்களுள் ஒன்று; இது தன் பாற்கப்பிஞ்சி யென்னும் சிறு நாட்டையுடையது; பாம்பக் குடிக்கு வடக்கேயுள்ள தான மழைக்குப் புணை கொடுத்த மங்கல நாடென்பது இதுவே யென்று சொல்லுகின்றனர். (திருவிளை.)

காற்றறிவிக்கும் கருவி

(Wather cock.) இது காற்று வீசுகிற திசையை அறிவிக்கும் கருவி.

காற்றாடி

பிள்ளைகள் சதுரமாகவும் பல விதமாகவும் மூங்கிற்குச்சுகளைக் கட்டிக் கடிதத்தால் மூடிச் சூத்திரமிட்டுக் காற்றில் பறக்கவிடும் கதவிப்படம். இதில் பல வகை உண்டு.

காற்று

1. பஞ்சபூதங்களி லொன்று, அதிபல முள்ளது. இது, கொண்டல், கோடை, வாடை, தென்றல் என பல வகைப்படும். இது, கண்ணால் காணப்படும் பொருளன்றாயினும் ஸ்பரிசத்தால் உணரும் பொருள். இது உஷ்ணத்தினால் இலேசையும், குளிர்ச்சியால் கனத்தையும் அடையும். இது தானடைந்த பொருள்களின் மணமுதலியவற்றை விரைந்து செலுத்தும் வேகமுடையது எக்காலத்தும் சலித்துத் திரட்டுவது,

காற்றுக்குறி

புதனுடன், சுக்ரன், சந்திரன், செவ்வாய் கூடி உதிக்கச் சநி (7) ஆம் இடத்து நிற்பினும் சுக்ரனும், புதனும், இராகுவும் ஒரு சரராசியில் உதிப்ப அல்லாதார் சரராசியிலாதல் சராம் சத்திலேயாதல் நிற்பினும் பெருங் காற்றடிக்கும்.

காலகன்

சிவகணத் தலைவரில் ஒருவன்.

காலகன்னிகை

ஒரு கன்னிகை பூருவைச் சபித்துப் பயனை மணந்தவள்.

காலகவி

விரோசநன்புத்ரன். விளாமரமாக இருந்து கிருஷ்ண பலராமரால் மாண்டவன்.

காலகவிருக்ஷயர்

ஒரு இருடி ஆமாத்ய பரீக்ஷையைக் கோசலாதிபதிக்குக் கூறியவர். (பார~சாந்தி.)

காலகார்முகன்

சுமாலியின் புத்திரன்.

காலகாலசோழன்

இவன் சுந்தரசோழன் மகன். இவன்தேவி கேரளதேசத்தரசன் பெண்ணாகிய குணவதி, இவன் பல சிவால யங்களைத் தரிசித்து வரும்போது தாள வனமென்னும் சிவத்தலத்தில் முன்னேருகாலத்தில் ஒரு சிவவேதியச் சிறுவன் சிவபூசை செய்ய முயன் றனன். அக்காலத்துச் சிவலிங்க மூர்த்தியின்றிருவுரு எட்டாது சிறுவன் சிவமூர்த்தியை வேண்டினன். அதனால் சிவமூர்த்தி தமது ஓங்கிய திருவுருவை வணக்கிக் காட்டினர். வேதியச் சிறுவன் தனது பூசைமுடித்துச் சென்றனன். அது முதல் சிவமூர்த்தி வளைந்தேயிருந்தனர். இந்தச் சோழன் இத்தலத்திற் றரிசனத்திற்கு வந்து தரிசிக் கையில் சிவமூர்த்தி வளைந்திருக்கக்கண்டு நிமிர்த்தித் தரிசனஞ்செய்ய வெண்ணித் தன் சேநாபலத்தினால் பலவகை முயன்றும் அந்த முயற்சிமுழுதும் பயனற்றவை யாயின், பின்பு சோழன் தனது வாளினைக் கயிற்றின் இருபுறத்திலுங் கட்டி வாளைக் கழுத்தினும் கயிற்றைச் சிவலிங்கமூர்த் திக்குமாகப் பூட்டியிழுக்க வாளிறுகிக் கழுத்தின் முக்காற்பங்கை யறுத்தது. உழுத்து உதிரத்துடன் பூமியில் விழுந்ருணத்தில் சிவமூர்த்தி இரத்தத்தை அறுத்தி அறுந்த கழுத்தை முன்போல் லைபெறச் செய்து தாம் அரசன்காண நிமிர்ந்து தரிசனந்தந்தனர். பின்பு சோழன் எழுபது வருடமரசாண்டு பல திருப்பணிகள் முடிப்பித்துத் தன்மகன் கலியாணசோழனுக்குப் பட்டமளித்து நற்கதியடைந்தனன். இவனே குருதி கொடுத்த சோழன் என்பர்.

காலகாலன்

யமனையுதைத்த சிவமூர்த்தி,

காலகூடம்

பாரதயுத்தத்தில் சேனைகள் தங்கிய இடம்,

காலகேது

இவன் பாதாளத்திலுள்ள அசுரன். இவன் ஏகாவலியென்பவள் ஜலக்கிரீடை செய்கையில் அவளைத் தூக்கிச் செல்ல ஹை ஹயன் அல்லது ஏகவீரனால் கொல்லப்பட்டவன்.

காலகேயர்

இவர்கள் கச்யபருக்குக் கலை யென்பவளிடத்துப் பிறந்தவர் எனவும் புலோமருக்குத் திதி என்பவளிடத்துப் பிறந்தவர் எனவுங்கூறுவர். இவர்கள் அசுபர், பொன்னிறமுள்ளவர், மகாபலசாலிகள். இந்திரனைப் பலமுறை வெற்றி கொண்டவர்கள். இவர்கள் கடலில் ஒளித்திருந்து தேவரை வருத்தினர், தேவர் வேண்டுகோளால் அகத்தியர் கடலையுண்ண அருச்சுனன் இவர்களைக் கொன்றனன்.

காலகை

அசுரஸ்திரி புத்திரர் காலகேயர்.

காலகௌக்ஷன்

கோசல நாட்ட திபனாசிய கேமதரியின் அமைச்சன்.

காலகௌசிகன்

காசியிலிருந்த ஒரு வேதியன். இவன் விசுவாமித்திரனால் எவப்பெற்றுச் சந்திரமதியை விலைக்குக் கொண் டவன், இவனுக்குக் காளகண்டன் எனவும் பெயர்,

காலக்கடவுள்

காலத்தைச் செய்பவன். இவனுக்குச் சந்தி, ராத்ரி, தினம் என்னு மூவரும் தேவியர். இவன் குமரிகள் மிருத்யு, ஜரை. இவ்விருவரும் பிரஜ்வரன் தேவியர்.

காலசக்ரம்

சக்கரத்தேராகிய ஒரு வட்டத்தைக்கீறி இதனடுவே கீழ்மேல் (2) ரேகையும், தென்வடபால் (2) ரேகையும், மூலைகளில் ஒவ்வோர் ரேகைகளுமாகக் கீறில், (12) கதிராய் (21) சக்கரமாம், இதில் நேர்கிழக்கு நேர்தெற்கு நேர்மேற்கு, நேர்வடக்கு இவற்றில் நிற்கும் இராசிகளாவன. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம், இதற்குவலத்து ராசிகளாவன, மேடம், கர்க்கடகம், துலாம், மகரம் என்ற (ச) ராசிகளாம். இவற்றிற்கு நாற்கோணத்து இராசிகளாவன, மிதுனம், கன்னி, தனு, மீனம், இப்படிக் கீறி நிறுத்தினது கால சக்கிரமாம்.

காலசங்கன்

இலக்ஷமணரால் அதிகாயன் யுத்தத்தில் கொலைசெய்யப்பட்ட அரக்கன்.

காலசர்ப்பி

ஒரு தீர்த்தம்.

காலசிக்வன்

துன்மார்க்கருடைய நாவிலிருந்து துன்பஞ் செய்பவன்.

காலசித்தன்

சூரபத்மனுக்கு மந்திரி.

காலஞ்சரம்

மேதாவி தீர்த்தத்திற்கு அருகிலுள்ள பர்வதம்.

காலதடன்

ஜனமேஜயன் சர்ப்பயாகத்தில் இருந்த ஒரு வேதியன்.

காலதூஷன்

சௌரிநகரத் தரசன்.

காலத்துவசம்

ஆதித்தியனின்ற நாளுக்கு இருபத்தோராம் நாள் காலத்து வசமாம். இதில் சுபகாரியங்கள் செய்யலாகாது.

காலநரன்

சபாநான் குமான். இவன் குமரன் சிரஞ்சயன்,

காலநாபன்

இரணியாக்ஷன் மகனாகிய தாரகன்.

காலநேமி

1. இராவணனுக்கு நல்லம்மான், 2. ஒரு அசுரன், இவனுக்கு நூறு சிரம், ஏறுகாம், விஷ்ணுவிடம் யுத்தஞ்செய்து, அவர்மீது சூலாயு தமேவி அவாது சக்கரத்தாலி றந்தவன். இதற்குப் பின் பிறவி கம்சன். 3. பிருந்தை யென்பவளுக்குத் தந்தை. சலந்தரனுக்கு மாமன். 4. சஞ்சீவியின் பொருட்டு உத்தரதிசை சென்ற அநுமனால் வதைக்கப்பட்ட ஓர் அசுரன். இவன் கபடவேடமாய்த் தவஞ் செய்தவன்.

காலனுக்கு வழக்குரைத்த சோழன்

கிள்ளிவளவனைக் காண்க,

காலனை வென்ற சோழன்

சோழர் சரிதையில் சாகுருவைக் காண்க.

காலன்

A. துருவன் குமான். B. ஏகாதசருத்திரருள் ஒருவன். தேவி இளாவதி. C. இலக்குமணரால் அதிகாயன் யுத்தத்தில் கொல்லப்பட்ட அரக்கன். D. சிவகணத்தவரில் ஒருவன். E. யமனிடமுள்ள மந்திரியரில் ஒருவன், விபுலன் பொருட்டுச் சிவமூர்த்தியின் சூலத்தாற் குத்துண்டவன், F. சூரியபுத்திரன்.

காலபாசன்

சண்முகசேநாவீரன்.

காலபைரவர்

பைரவரைக் காண்க.

காலமுனி

உருத்திராம்சமாய் இராமமூர்த்தியைத் தம்மடிச் சோதிக்கெழுந்தருள நினைப்பூட்டிய முனிபுங்கவர்.

காலமேகப்புலவர்

இவர் திருக்குடந்தை வைணவவேதியர். பெயர் வரதர். ஸ்ரீரங்கத்துப் பெருமாள் சந்நதியில் பரிசாரகரா இருந்து திருவானைக்காவில் சிவாலயத் தொண்டு செய்யும் தாசி மோகனாங் கியிடம் அன்பு வைத்திருந்தனர். இவ்வகை ஒழுகி வருநாட்களில், மார்கழிமாதத்தில் திருவெம்பாவை சுவாமி சந்நதியில் பாடும் முறை மோகனாங்கிக்கு வந்தது. மோகனாங்கி, தன்னோடொத்த தாசிகளுடனிருந்து திருவாசகத்திற் றிருவெம்பாவையில் “உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கல மென், றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா, லெங்கன் பெருமா னுனக் கொன்றுரைப் போங்கே, ளெங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க, எங்கையுனக் கல்லா தெப்பணியுஞ் செய்யற்க, கங்குல்பக லென்கண் மற்றொன்றும் காணற்க, இங்கிப் பரிசே யெமக் கெங்கோனல் குதியேல், எங்கெழிலென் ஞாயி றேமக்கோலோ ரெம்பாவாய்” என்ற திருப்பாசுரம் கூறியவுடன், உடனிருந்த தாசிகள் கேட்டு நகைக்க மோகனாங்கி வெட்கித் தலை குனிந்தனள். அன்றிரவு வைணவ வேதியர் மோகனாங்கி வீட்டிற்கு வருதலறிந்து தாசி, கதவடைத்தனள், பிராமணர், நெடுநேரம் வேண்டியும் திறவாதிருத்தலை நோக்கி இனித் திறவாதிருக்கின் என்னுயிரை விடுவேன் என்றனர். தாசி, இதேது பழிநேரும்போல் தோற்றுகிறதென்று கதவைத்திறந்து வைணவவேதியரை நோக்கி நான் உமக்கு வேண்டிய பக்ஷத்தில் சிவ தீக்ஷை பெற்றுக்கொண்டு வருக என்றனன், வேதியர் உடன்பட்டுச் சிவ தீக்ஷை பெற்றுச் சம்புகேசுரத்தில் பரிசாரகராயினர். அக்காலத்தில் சம்புகேசுரத்தில் ஒரு வேதியன், அகிலாண்ட ஈச்வரியை வித்தையின் பொருட்டு உபாசித்துவந்தனன். ஒருநாள் மோகனாங்கியின் நண்பராகிய பரிசாரகர் மோகனாங்கியை நோக்கி அர்த்தசாம பூசையின் குடமுறை கழிந்தவுடன் தம்மை உடனழைத்துப் போகக் கூறித் தாம் ஒருமண்டபத்தில் உறங்கினர். தாசி, அர்த்தசாமத்தில் குடமுறைகழிந்ததும் வேதியரைத் தேடிக்காணாது தனித்து வீடுசேர்ந்தனள், கோயில் தானிகர் முதவியோர் திருக்கோயில் தாளிட்டு வீடு சேர்ந்தனர். பரிசாரகர் விழித்துக் கோயில் திருக்காப்பிட்டிருப்பதறிந்து மீண்டும் மண்டபத்தின் ஒரு புறத்திலுறங்கினர். முதலில் வித்தைவிரும்பி உபாசிப்பவனுக்கு அதுக்கிரகிக்க அம்மை எழுந்தருளி அவன்முன் தரிசனந் தந்து வாயைத்திறக்க என, உபாசகன் தாமதித்து அருவருக்தமையால் மீண்டு மண்டபத்திலுறங்கும் பரிசாரகரிடத்திற் சென்று வாய் திறக்கக் கட்டளையிட்டனர். பரிசாரகர் ஆகூழால் வாய் திறந்தனர். அம்மை வித்தைக்குரிய பீஜாக்ஷரத்தை அவன் வாயிற்பதித்து இன்று முதலுனக்குக் காளமேக மெனப் பெயருண்டாக என மறைந்தனர். காள மேகர் கனாக்கண்டவர்போல் விழித்து எதிரில் யாரையும் காணாது தரிசனந்தந்தவள் உலககாரணியாகிய அகிலாண்ட ஈச்வரி யென்றறிந்து, வாயாரத் துதித்துத் திருவானைக் காவுலாப்பாடி மகிழ்ந்து அதுமுதல் பல தலங்களுஞ் சென்று தரிசித்துப் பல தனிப்பாடல்களைப் பாடினர். காளமேகர், திருவாரூர் சென்று சுவாமி தரிசனஞ் செய்கையில் தியாகராசமூர்த்திக்கு வயிரப் பதக்கம் தரித்திருக்க, அவ்விடமிருந்தவர் அப்பதக்க மறவும் பொருந்தவும் பாடுக என உடன்பட்டு, “அன்னவயல் சூழ்ந் திருக்கு மாரூரா நெஞ்சத்தில், இன்னம் வயிர மிருப்பதா முன்னமொரு, தொண்டன் மகனைக்கொன்றுஞ் சோழன்மக னைக்கொன்றுஞ், சண்டன் மகனைக்கொன் றுந்தான்” எனப்பாடி அது அறக்கண்டு மீண்டும் பொருத்துவித்துத் தம்மை மதியாத சம்பந்தாண்டான் மீது வசைபாடித் நமக்குக் கண்ட வியாதியை வைதீசுரர் கோயில் மண்ணையுண்டு நீங்கக்கண்டு “மண்டலத்தினாளும் வயித்தியராய்த் தாமிருந்தும், கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ தொண்டர், விருந்தைப்பார்த் துண்டருளும் வேளூரென்னாசர், மருந் தைப்பார்த் தாற்சுத்த மண்” எனத் துதித்து விகடராமன் எனும் ஆயக்காரன் குதிரையைக் கண்டு “முன்னே கடிவாள மூன்று பேர் தொட்டிழுக்கப், பின்னே யிருந்திரண்டு பேர் தள்ள எந்நேரம், வேதம்போம் வாயான் விகட ராமன்குதிரை, மாதம்போம் காத வழி” யெனப் பரிகசித்து, வேங்கட்டன் குதிரையை “ஆறும் பதினாறு மாமூரில் வேங் கட்ட, னேறும் பரிமாவே யேற்றமா வேறு மா, வெந்தமா சும்மா வெறுமா களிகிளற, அந்தமா சந்தமா மா” எனப் புகழ்ந்து, நாகப்பட்டினஞ் சென்று காத்தான் சத்திரத்திருந்த வேதியன் உபசரிக்காமை கண்டு, “கத்து கடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில், அத்தமிக்கும்போதி வரிசிவரும் குத்தி, உலையிலிட வூசடங்கு மோரகப்பை யன்னம், இலையிலிட வெள்ளி யெழும்” என வசைபாட, அதைச் சத்திர முதல்வன் கேட்டுப் பணிய அதனையே புகழ்ச்சியாய்ச் சமர்த்தித்து, அவ்விடம் ஒரு தாசி பாடியதைக் கேட்டுத் தனக்கு விருப்பமிலாமல் “வாழ்த்த திரு நாகை வாழ்கின்ற தேவடியாள், பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் நேற்றுக், கழுதைகெட்ட வண்ணான் கண்டேன் கண்டேனென்று, பழுதையெடுத் தோடி வந்தான் பார்” என்று பழித்து, எட்டிக் குனமென்னுங் கிராமாதி பதியாகிய ஒரு பிரபு, புவவர்க்குக் கொடுக்கும் பரிசினைக் குட்டிசெட்டி என்பவன் மறுத்துத் தனக்குப் பாகந்தராமையால் அப்புவவர்களுக்கு விரைவில் பரிசளிக்காமல் துன்பமுறுத்துவதைப் புலவர்களிவரிடங் கூறி முறையிடக் காளமேகர் “எட்டிக்குளத்தி லிருந்து சரக்குவிற்குங், குட்டி செட்டி தன்மகனைக் கொண்டுபோய் நொட்டுதற்கே, ஆயிரம்யானை யறுநூறு கூன்பகடு, பாயும் பகடென்பத் தைந்து” என்று வசைபாட அவன் குமரியை அம்மிருகங்கள் துன்புறுத்தச் செட்டி பயந்து புலவர்க்கு வேண்டிய பொருளளிக்கப் புலவர் அநுக்கிரகித்து நீங்கிக் கொண்டத்தூரிற் விருந்துண்டு, அவ்விடம் சமைத்துவைத்த பூணைக்காய்க் கறியையும் விருந்திட்ட அம்மையாரையும் கண்டக்காற் கிட்டுங் கயிலாயங் கைக்கொண்டுட், கொண்டக்கான் மோட்சங் கொடுக்குமே கொண்டத்தூர், தண்டைக்காலம்மை சமைத்துவைத்த பூச ணைக்காய், அண்டர்க்கா மீசருக்குமாம். எனப் புகழ்ந்து நீங்கித் தண்டாங்காடைந்து பண்டங்கொள்ள, அவ்விடமிருந்தார் குறைவாக விற்கக்கண்டு அவர்களை தண்டாங்கூர் மாசாங்காள் சற்குணர்நீரென் திருக்தேன், பண்டம் குறையவிற்ற பாவிகாள் பெண்டுகளைத் தேடியுண்ண விட்டீர் தெருக்கள் தெருக்கள் தொறும், ஆடி முதலானி வரைக்கும்” எனப் பழித்து, ஆமூர் சென்று உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி, வெள்ளங் காலந்திரிந்து விட்டோமே உள்ளபடி, ஆமூர்முதலியமரர்கோ னிங்கிருக்கப், போமூ ரறியாமற் போய்” என புகழ்ந்து பாடி அமராவதி குருக்கள் வீட்டில் விருந்துண்டு அவனை “ஆனை குதிரை தரு” எனப் புகழ்ந்து, கயிற்றாறு செல்லுகையில் பெருமாள் கருட உற்சவங் கொண்டுவர அதைப் பார்த்திருக்கையில் அதிகாரிகள் இவரையும் ஆனாகக் கொண்டனர். புலவர் அதிநேரம் சுமத்தமையால் மனம்நொந்து பாளை மணங் கமழுகின்ற கயிற்றாற்றுப் பெருமாளே பழிகாரா கேள், வேளை யென்றா லிவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேலாயிற்றென், தோளை முரித்தது மன்றி நம்பியானையும் கூடச் சுமக்கக்செய்தாய், நாளையினி யார்சுமப்பா ரெந்நாளு முன் கோயினா சந்தானே” என வசைபாடித், திருப்பனந்தா னடைந்து ஷாமகாலமாத லால் விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்பியுணத், தண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே, உண்ணீருண்ணீரென் றுபசாரஞ்சொல்லி யபசரித்துத், தண்ணீருஞ் சோறுந் தருவான் திருப்பனந் தாட்பட்டனே” என்று பட்டனைப் புகழ்ந்து நீங்கித் தமது தாசி திரு மலைராயன் பட்டணத்திருந்து முத்துக் கொண்டு வரும்படி சொன்னபடி திருமலைாரயன் பட்டின மடைந்து வீதியிலிருக்கையில் அந்த அரசன் சமத்தானத்து அறுபத்தினாலு தண்டிகைப் புலவர்களில் தலைவனாகிய அதிமதுாக்கவிராயன். தண்டிகையில் வரக் கட்டியங்கூறுவோர் “அதிமதுரக் கவிராயர் வருகிறார்” என்று எச்சரித்து வந்தனர். அதைக் கேட்ட காளமேகர் அவனை “அதிமதுரமென்றே யகில மறியத், துதிமதுரமா யெடுத்துச் சொல்லும் புதுமையென்ன, காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக், கூட்டுச்சரக் குதனைக் கூறு அதிமதுரமென்னும் குன்றிவேர் எனப் பரிகசித்தனர். இதனைக் கேட்ட கவிராயன் அரசசபை சேர்ந்து ஒரு தூதனை விடுத்து அவன் யார் அறிந்துவருக என்று அனுப்பினன், தூதன் சென்று கேட்கக் காளமேகர் உத்தரமாக ” தூதைந்து நாழிகையிலாறு நாழிகை தனிற் சொற்சந்தமாலை சொல்லத் துகளி லாவந் தாதியேழு நாழிகைதனிற் றொகை பட விரித்துரைக்கப், பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனிற் பரணி யொருநாண்முழுதுமே பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக்கொடிக் கட்டினேன், சீதஞ்செயுந்திங் கண்மரபினானீடு புகழ் செய்ய திருமலைராயன் முன், சீறுமாறாகவே தாறுமாறுகள் சொல் திருட்டுக் கவிப்புலவரைக், காதங்கறுத்துச் செருப் பிட்டடித்துக் கதுப்பிற்புடைத்து வெற்றிக், கல்லணையினொடு கொடிய கடிவாள மீட்டேறு கவிகாள மேகநானே ” என்ற கவி பாடி யனுப்பக் கவிராயன் அஞ்சி இவன்மகாகவி இவனை அரசனாலடக்கவேண்டுமென எண்ணி அரசனுக்கறிவித்துக் கட்டளைப்படிச் சேவகரை விடுத்தனன். சேவகர் சென்று அரசன் கட்டளையைப் புலவர்க்குத் தெரிவிக்கப் புலவர் இது தருணமென்று அரசனைக் காண்பதாதலால் ஒரு எலுமிச்சம்பழங்கொண்டு சமஸ்தானஞ் சேர்ந்தனர். புலவரது வரவறிந்த சமத்தான வித்வான்கள் அறுபத்து நால்வரும் பொறாமையால் புலவர்க்கு இடமிலாது நெருங்கியிருந்தனர். காளமேகர் புலவரது மனமுணர்ந்து அரசனை ஆசீர்வதித்து அகிலாண்ட ஈச்வரியை மனதிலெண்ணி அரசன் முன்பு பழத்தை நீட்டினர். அரசன் அப்பழத்தை வாங்கவேண்டிய தருமத்தினால் புலவர் சற்று ஒதுங்கக் காளமேகர் அரசனை நெருங்கி அதைக் கொடுத்தும் அரசன் இருக்க இடந்தந்து உபசரிக்காமையால் இருந்த இடத்தில் அகிலாண்ட ஈஸ்வரியை யெண்ணிச் சாஸ் வதிமாலை (30) வெண்பாவிற் பாடி முடித்தனர். உடனே அரசனிருந்த ஆசனம் வளர்ந்து இடந்தந்தது. அதில் காளமேகர் அரசனுடனிருந்து அருகிருந்தவரை நீங்களாரென்றனர்; அவர்கள் கவிராயரென அவர்களைப் பரிகசித்து “வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு, காலெங்கே யுட்குழிந்த கண்ணெங்கே சாலப், புவிராயர்போற்றும் புலவீர்காணீ விர், கவிராயரென்றிருந்தக் கால்” என்ற னர். இதைக்கேட் அதிமதுரக்கவி நீர் காளமேகமென்றீரே அது பொழியுமோ வெனக் கேட்கையில் புலவர் ‘கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு, வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வன்கவிதை, மொழியும் புலவர்மனத்தே யிடித்து முழங்கியின்னப், பொழியும்படிக்குக் கவிகாளமேகம் புறப்பட்டதே’ என்ன இதைக்கேட்ட அதி மதுரக்கவி மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும் ஆச்சென்றாலைந்நூறு மாகாதோ பேச்சென்ன, வெள்ளைக் கவிகாளமேக மேயுன்னுடைய, கள்ளக்கவிக் கடையைக் கட்டு” என்னக்கேட்ட காளமேகன் ” இம் மென்னு முன்னேயெழுநூறு மெண்ணுறும், அம்மென்றாலாயிரம் பாட்டாகாதா சும்மா, இருந்தாலிருப்பே னெழுந்தேனே யாயிற், பெருங்காளமேகம் பிளாய்” என்றனர். இவரை அதிமதுரக்கவி நீர் என்ன பாடுவீர் எனக் காளமேகர் நான் யமகண்டம் பாடுவேனென அதிமதுரக்கவி யமகண்டம் அறியாதவனாதலால், யமகண்ட லக்ஷணங் கேட்டு அந்தப்படி யிருத்தினன். காளமேகர் அதிலிருந்து. புலவர் பலர் கொடுத்த சமுத்திகளைப்பாடி வென்று அரசன் வாளைச் “செற்றலரை வென்ற திரு மலைராயன்கரத்தில், வெற்றி புரியும் வாளே வீரவாள் மற்றைய வாள், போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள், ஆவாளிவாளவா ளாம்” எனவும், ‘வீமனென வலிமிகுத்த திருமலைராயன் கீர்த்தி வெள்ளம் பொங்கத், தாமரையி னயனோடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்க பாணி, பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்துநின்றான் சிவன் கயிலைப் பொருப்பிலேறிச், சோமனையுந் தலைக்கணிந்து வடவரைத் தண்டாலாழஞ் சோதித்தானே” என்று புகழ்ந்தனர். திருமலைராயன் சபையில் கங்கை குடத்திலடங்கப் பாடுக என்றபோது “விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல், மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை, இடத்திலேவைத்த விறைவர் சடாம், குடத்திலே கங்கையடங் கும்” எர், இவர் திருமலை ராயனைப்புகழ்ந்தது “இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா னக்கினி யுதிரம் விட்டகலான், யமனெனைக் கருதானர னெனக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான், அந்தமாம் வருண னிருகண் விட்டகலான் அகத்தினின் மக்களும் யானும், அநிலம தாகு மமுதினைக் கொள்வோம் யாரெதி ரெமக்குளா ருலகிற், சந்தத மிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராஜனை வணங்கித், தலைசெயுமெம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவ கோப்பையனு தவும், மந்தரப் புயத்தான் றிருமலை ராயன் மகிழ்வொடு விலையிலா வன்னோன், வாக்கினாற் குபேர னாக்கினா னவனே மாசிலீ சானபூ பதியே” எம், அரசன் குதிரையேறிய போது பாடியது “கோக் குதிரை நின்குதிரை கோவல் மதுரா வொன்னார், மாக்குதிரை யெல்லாம் மனைக் குதிரை தூக்குதிரைத், துங்கக்கரைக் குதிரை சொக்கன் குதிரை சதுரங்கக் குதிரை களேயாம். ” எம். திருஆரூரில் அதிமதுரக்கவிராயனுடனே வந்து கோயிலிலே ஒருகவி பாடுக என்றபோது பாடியது, “சேலை யுடையழகா தேவாகண் டார்களு நீர், மாலையழகா மணிமார்பா வேலை, அடங்கார் புரமெரித்த யாரூரா வீதி, விடங்காபிரியா விடை. ” எம், இவ்வகைப் பலவெற்றியடைந்தும் அரசனும் புலவரும் சம்மானிக்காததினால் ‘கோளரிருக்கு மூர் கோள்கரவு கற்றவூர், காளைகளாய் நின்று கதறுமூர் நாளையே, விண்மாரி யற்று வெளுத்துமிகக் கறுத்து, மண்மாரி பெய்க விந்தவான்” என்று வசைபாடித் திருமலைராயன் பட்டணத்தைத் திரும்பிப் பாராமல் செல்லப் பட்டணம் மண்மாரியால் நிறைந்தது. இவர் திருமலைராயன் பட்டணம் நீங்கித் தலயாத்திரை செய்யப் புறப்பட்டுத் திருச்செங்காடு சென்று “காலனையும்” என்ற கவிபாடித் துதித்து, காஞ்சி சென்று கருடோற்சவம் சேவிக்கையில் “பெருமாளும் நல்ல பெருமாள்” எனத் துதித்துத், திருவொற்றியூரில் தியாகரைத் தரிசிக்கையில் “எட்டொருமா” எனத்துதித்து, குமரகோட்டத்தில் ” அப்பா குமரக் கோட்டக்கீரை” எனப்பாடி திருக்கச்சபேசத்தில் “முக்காலுக் கேகா முன்” எனத் துதித்து, சிதம்பரஞ்சென்று நச்சரவம் பூண்டதில்லை ” எம். தாண் டியொருத்தி” எம்., கொங்குலவுந் தென்றில்லை” எம்., நாட்டுக்கு ளாட்டுக்கு எம்,, “பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கு” எம்., “ஞானசபை கனகசபை எம்., மாட்டுக் கோன் நங்கை ” எம்., துதித்துக் கழுக்குன்றில் ‘சொற்பெரிய எனத்துதித்துத் திருமுட்டஞ் சென்று “தெருமுட்டப் பாளை” எம்., முட்டத்துப் பன்றி” எம்., துதித்துத், திருஆலங் குடிசென்று “ஆலங்குடி யானை” எனத் துதித்து, மாயூரமடைந்து “வள்ளலெனும் பெரிய” எனப்பாடி, வைதீசுரன் கோயில் சென்று (தீத்தானுன் கண்ணிலே’ எனப் பாடித், திருவாரூரில் “ஒரு மாடுமில்லாமல்” எம்., “ஆடாரோ பின்னை” எம்., “பாரூாறிய” எம்., பாடி, திருவண்ணாமலை சென்று தரிசிக்கையில் சட்டியிலே பாதி” எனத்துதித்து, மதுரை சென்று “ஆடல் புரிந்தான்” எம்., கண்டீரோ பெண்காள்” எம்., “நல்லதொருபுதுமை” எம்., பாடி, திருவிடை மருதூர் சென்று கண்ணனிடுங்கறி” எனப் பாடித் திருத்துருத்தி சென்று காலையிலும்” எனப் பாடி, விநாயகர் பெருச்சாளி வாகனத்து வரத் தரிசிக்கையில் “மூப்பான்மழுவும்” எனத்துதித்துக், கந்தசஷ்டி தரிசிக்கையில் அப்பனிரந்துண்ணி” எனத்துதித்து, ஒரு தலத்தில் இடபவாகன சேவை கண்டு துதிக்கையில் ”வாணியன் பாடிட” எனப் பாடித் திருச்செங்காடு சென்று ஒருநாள் துயிலுகையில் காற்று வீசாமையால் தொந்தரை யடைந்து ”அம்பேந்து கையானவன் பதியி லைம்மாவைக், கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ அன்பா, லரிந்த மகவை யழையென்று சொல்லி, இருந்தவன்றன் செங்காட்டிலே” என்று ஸ்ரீரங்கஞ்சென்று விநாயகரைத் தரிசிக்கையில் ” தந்தை பிறந்திறவாத் தன்மை யினாற்றன் மாமன், வந்து பிறந்திறக்கும் வண்மையினால் முந்தொருநாள், வீணிக்கு வேளையெரித்தான் மகன் மாமன், காணிக்கு வந்திருந்தான் காண்” என்று துதித்துப் பாகவதரிட்ட சமுத்திக்கு “தடக்கட லிற்பள்ளி கொள்வோ மதனை நற் சங்கரனார், அடற் புலிக்குட்டிக் களித் தனராமது கேட்டு நெஞ்சில், நடுக்கம் வந்துற்றது கை காலெழாகளி னத்தியென்னை, யிடுக்கடி பாயைச் சுருட்டடி யேகடி யம்பலத்தே ” எம்., சைவர்களுக்கும் வைணவர்களுக்குஞ் சண்டையானபோது சீரங்கத்தாருந் திருவானைக் காவாரும், போரங்கமாகப் பொருவதேன் ஓரங்கள், வேண்டாமி தென்ன விபரந் தெரியாதோ, ஆண்டானுந்தாதனுமானால்” எனக்கூறி, ஞானவரோதயன் மதுரைக்குச் சென்ற பொழுது “முதிரத் தமிழ்தெரி நின்பாடல் தன்னை முறையறிந்தே, யெதி ரொக்கக் கோப்பதற்கேழெழு பேரில்லை யின்றமிழின், பதிரைத் தெரிந்தறிகோ வில்லை யேறப் பலகையில்லை, மதுரைக்கு நீசென்ற தெவ்வாறு ஞானவரோ தயனே” எம்., சவையப்ப நாய்க்கனைப் பாடியகவி “சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா திருக்குடந்தை, நாயா நரியாவுன்னாய் முகமும் சேய்வடிவும், தாயார் தான் தண்டிலளோ தான்” எம்., திருக்கண்ண மங்கையாரை யிகழ்ந்து பாடியது “தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தா ரெல்லாரும், திருக்குளத்து மீனொழியத் தின்னார் குருக்கொடுக்கு, நம்பிமா ரென்றிருந்தோ நாட்டிலழி கூத்தி, தம்பிமா ராயிருந்தார் தாம்” எம்., கண்ணபுரத்துத் தீத்தாளைப் பாடியது “கந்த மலரயனார் கன்னிமட வார்க்கெல்லாம், அந்த விள நீரைமுலை யாக்கினார் சுந்தரஞ்சேர், தோற்றமுள தீத்தாட்குத் தோப்பை முலை யாக்கினார், ஏற்றமிதில் யார் தானியம்பு” குடவாசல் விண்ணாளைப் பாடியது “செக்கோ மருங்குல் சிறுபயறோ தனம் சிக்களகம், வைக்கோல் கழிக்கற்றையோ குழியோ விழி வாவிதொறும், கொக்கேறி மேய்குட வாசல்விண்ணாள் வரைக் கோம்பியன்னீர், எக்கோ படைத்து நீரே நெருப்பி லெரிந் தவரே” புலிக்குட்டிச் சிங்கனைப் பாடியது “போன. போனவிடந் தொறும் தலைப் போடெழப் பிறர் குட்டவே, புண் படைத்த மனத்தனாகிய பொட்டிபுத்திர னத்திரன், மான கீனன் லச்சைகேடன் ஒழுக்க மற்ற புழுக்கையன், மாண்பனாம் புலிக் குட்டிசிங்கன் வரைக்குளேறி இறங்குவீர், பேனுமீரு மெடுக்கவோசடை பின்னி வேடபெண்ணெய் வார்க்கவோ, பிரியிழுக் கரியெழுதவோவொரு பீறு துண்ட முடுத்தவோ, கானகந் தனில் வைக்கவோவிரு கால் விலங்கிடு விக்கவோ, காற்கரங்கொடு சாடவோவொரு காரியந்தனை யேவுமே” முச்சங்கம், திருவிளையாடல், மதுரைச் சொக்கன் வரக் கவி சொல்லியது “நூலா நாலாயிரநா னூற்று நாற் பத்தொன்பான், பாலாநா னூற்று நாற் பத்தொன்பான் மேலாநாற், பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்குங், கத்தன் மதுரையிற் சொக்கன். ” குமாரசரஸ்வதி ஒட்டியனைச் செயித்தபோது பாடியது “கலிங்க மிழந்து நுதிக் கைச்சங்கந் தோற்று, மெலிந்து கடகங்கவிழ விட்டாள் மலிந்தமலர், பொன்னிட்ட மானகிட்ண பூபாலா வுன்றனக்கு. பின்னட்ட வொட்டி யென் பொற் பொன்” அபிராமன் நாலுபாஷை வல்லவபோ என்னப்பாடியது “கூத்தாடி லஞ்சக் கொடுக்கா வொரேபொட்டி, சோத்தெட்டாவை வேசித் தொண்டனே ஆத்தான, அந்த விழுப்புர முமபிநக ருங்கெடுக்க, வந்தகுலா மாவபிராமா” திருவாரூர்க் கொடியிறக்காமற் தகையப் பாடியது “மருவு புகழ்க்கிருஷ்ண மகராய ராணை, அரியார் வடமலையானாணை திருவாரூர், பாகங் குடியிருப்பாள் பாகர் திருவாணை, தியாகா கொடியிறக்காதே” மாவலி வாணனைப் பாடியது. ”சொக்கன் மதுரையிற் றொண்டற்குமுன்ன விழ்த்த, பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ மிக்க, கரசரணாவந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம், அரசான மாவலி வாணா. ” தெண்டிக்கு (வரதன்) காளமேகன் விடுத்த தீட்டுக்கவி. நள் ளாற்றுத் தெண்டிக்கு நல்வரதன் தீட்டு மயல், விள்ளாமவெத்தனை நாள் வெம்பு வேன் கள்ள, மதனப் பயலொருவன் வந்து பொருஞ்சண்டைக், குதவக்கடுகி வரவும். ” தெண்டி நள்ளாற்றினின்று திருக்குடந்தைக்கு வந்தபோது கூறியது. “தேறலமிர்தந் தெவிட்டிடினுஞ் செங்கனிவாய், ஊறலமிர்தமுவட்டாதே வீறு மதன், தன்னாணை நள்ளாளர் தம்மாணையும் மாணை என்னாணை தெண்டியாரே. ” வேளாளன் வீட்டிலிருந்து இல்லையென்று சொன்ன போது பாடியது. “பாலலகை யன்று பரிந்தளித்த கோத்திரத்துக், கால மெனவந்த வடைக்கலவன் சூலந், திருக் கையிலே யேந்துஞ்சிவனறிய வேளான், இருக்கையிலே சாகுபடியானான். ” நாகைபட்டினத்துப் பெற்றான் செட்டி அடைப்பு வீதம் பாடச்சொன்னபோது பாடியது. முற்றாத காஞ்சியினும் முல்லையினும் பாலையினும், கற்றான் பின் சென்ற கருணை மால் பெற்றான் சேர், ஆலைப்பதித்தார் அள கத்தியார்க்கயனார் வேலைப்பதித்தார் விழி. ” காளமேகர், திருவாரூர் சென்று இரட்டையர் பாடி முடிக்காது மதிலில் எழுதியிருந்த நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபம் கற் சாபம், பாணந்தான மண்டின்ற பாணமே தாணுவே, ‘ சீராரூர்மே வுஞ்சிவனே நீ ரெப்படியோ, நேரார்புரமெரித்த நேர்” என்ற வெண்பாவில் விடுபட்டிருந்த “பாணந்தான் மண் தின்ற பாணமே” என்ற தை முடித்துச் சிலநாட்களுக்குப் பிறகு சிவபதமடைந்தனர். இவர் இறந்த அன்று இரட்டையர்கள் வந்து தாங்கள் பாடிய கவி முடிந்திருப்பதை நோக்கி இது காளமேகன் கவியென்றறிந்து சுடுகாட்டிற் சிதையில் வேகையில் சென்று கண்டு ‘ஆசு கவியாலகில உலகெங்கும், வீசு புகழ்க்காள மேகமே பூசுரா, விண்கொண்ட செந்தணலாய் வேகின்ற தையையோ, மண் தின்ற பாணமென்ற வாய்” என்று பாடி விசனமடைந்தனர் என்பர். இது அதிமதுரக்கவிராயன் பாடிய கையறம் என்பர். இதிலுள்ள முதனிலைக் கவிகள் முழுதும் தனிப்பாடற்றிரட்டிற் காண்க. காளமேகர்காலம், திருமலைராயன் காலம், திருமலைராயன் விஜயநகரத்தரசரின் பிரதிநிதியாகத் தென்னாட்டை (கி. பி. 1455 – 1458) வரை ஆண்டவன் இவ்வரசன் காலத்து கவிஞர் இருந்ததாக இவரது செய்யுட்களால் காணப்படுகிறது, இதைநோக்க இவர் இன்றைக்கு (450) வருஷங்களுக்கு முன்னிருந்தவராகத் தெரிகிறது. திருமலைராயன் சாசனம் ஒன்று திருவானைக்கா ஜம்புகேசுவார் ஆலயத்திற்குக் கோபராஜன் குமாரனான ஆளுவதிருமலைராயன் ஒரு திருவாபரண மளித்ததைத் தெரிவிக்கிறது. இவர் செய்த நூல்கள், திருவானைக்காவுலா, சித்திரமடல், பரப்பிரமவிளக்க முதலிய.

காலம்

1. திக்கின் வேறான பாத்வா பரத்வத்தால் அநுமேயம், சங்கியை, பரிமாணம், பிரதக்துவம், சையோகம், விபாகம், எனும் ஐந்து குணங்களுடையது. (தரு). 2, (3) இறப்பு, எதிர்வு, நிகழ்வு. 3. கண்ணிமை (2) கொண்டது கைந்நொடி, கைந்நொடி (2) கொண்டது மாத்திரை. மாத்திரை (2) கொண்டது குரு. குரு (2) கொண்டது உயிர். உயிர் (9) கொண்டது க்ஷணிகம். க்ஷணிகம் (12) கொண் டது விநாடி. விநாடி (60) கொண்டது நாழிகை. நாழிகை (ஏழரை) கொண்டது சாமம். சாமம் (4) கொண்டது பொழுது, பொழுது (2) கொண்டது நாள். நாள் (30) கொண்டது மாதம். மாதம் (12) கொண்டது வருஷம். வருஷம் பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் கொண்டது கிருதயுகம். அந்த வருஷம் பன்னிரண்டுலக்ஷத்துத் தொண்ணூற் ராறாயிரம் கொண்டது திரேதாயுகம். எட்டுல க்ஷத்து அறுபத்து நாலாயிரம் கொண்டது துவாபரயுகம். நாலுலக்ஷத்து முப்பத்திரண்டாயிரம் கொண்டது கலியுகம். இந்நான்கு யுகமும் கூடியவருஷம் நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதினாயிரம், இது சதுர்யுகம், இதுவே மகாயுகம், இந்த மகாயுகம் பதினெட்டுச் சென்றால் ஒரு மனுவுக்கு ராச்சியம். இந்த மனுவுக்கு ராச் சியம் எழுபத்துநான்கு சென்றால் இந்திரனுக்கு ராச்சியம். இந்த இந்திரனுக்கு ராச்சியம் இருநூற்றெழுபது சென்றால் பிரமனுக்கு ஒருநாள். இந்தநாள் முப்பது சென்றால் ஒருமாதம், மாதம் பன்னிரண்டு சென்றால் ஒரு வருஷம். இந்த வருஷம் நூறு சென்றால் பிரமனுக்கு ஆயுள் முடிவு. இப்படி முந்நூற்றறுபது வருஷம் சென்றால் ஆதிப் பிரமனுக்குப் பிரள யகாலம், இந்தப் பிரளயம் ஏறு சென்றால் ஒரு விஷ்ணுகற்பும், இந்த விஷ்ணுகற்பம் நூறு சென்றால் உரோமச மகருஷிக்கு ஒரு உரோமம் உதிரும். இந்த உரோமச மகருஷிக்குப் பத்துக்கோடி சென்றால் மீனசமகருஷிக்கு உடம்பில் ஒரு செதிள் உதிரும், இந்த மீனசமகருஷிக்கு ஒரு கோடி சென்றால் பரத்துவாச மகருஷிக்கு ஒரு நிமிஷம். இந்தப் பரத்துவாச மகருஷிச்கு முப்பது கோடி சென்றால் சத்தி தலைமயிர் அவிழ்த்து முடிக்கும் நேரமாம். இந்தப்படி எழுநூற்றெண்பது கோடிசத் திகள் கூந்தலவிழ்த்து முடித்தால் மகா சத்திக்கு ஒரு நிமிஷமரம், (தற்காலம் நடப்பது துவிதீய பரார்த்தம் 8 வது சுவேதவராக கற்பம் 22 வது வைவச்சுத மந்வந்தரம். (கணக்கதிகாரம்) 3. இது நிமிஷம் பதினைந்து கொண்டது சாட்டை, அக்காட்டை முப்பது கொண்டது களை. களை முப்பது கொண்டது முகூர்த்தம், முகூர்த்தம் முப்பது கொண்டது மனிதர்க்கு அகோராத்திரம். அந்த அகோராத்திரம் பதினைந்து கொண்டது பக்ஷம். பக்ஷம் (2) கொண்டது மாதம். மாதம் பன்னிரண்டு கொண்டது வருடம். ஒருமாதம் தென்புலத்தாராகிய பிதுர்க்களுக்கு ஒருநாள். இந்தநாள் முப்பது கொண்டது மாதம் மாதம் பன்னிரண்டு கொண்டது வருஷம், இந்த வருடம் பத்து கொண்டது சத்த இருடிகளுக்கு ஒரு வருடம். இருடிகள் வருடம் பத்து கொண்டது துருவனுக்கு ஒரு வருடம்.

காலயவநன்

ஒருமுறை சாளுவன் கார்க்கியனைப் பேடியென்றனன். இதைக் கேட்ட ஆயர் நகைத்தனர். இதனால் கார்க்கியன் அவமதிப்படைந்து ஆயரைக் கொல்ல ஒரு புத்திரனை வேண்டித் தவம் புரிந்து காலயவனனைப் பெற்றனன். இவன் ஒரு அசுரன். கிருஷ்ணனிடத்தும் கோபாலரிடத்தும் பகைகொண்டு வடமதுரையை அழிக்க வந்தனன். இதையறிந்த கண்ணன் கடலில் பட்டணம் நிருமித்துச் சதங்களை அங்கப் பட்டணத்திலிருத்தித் தாம் அவனுக்கு முன் தனித்துத் தோன்றினர். காலயவன் கண்ணனைத் தொடரக் கண்ணன் பயந்தவர் போல் ஒட்டங்காட்டி, யான் உறங்கிவிழிக்கையில் முன்னே பார்த்த வன் சாம்பராக என்று வரம்கொண்டு ஒரு குகையில் நெடுநாளா யுறங்கும் முசுகுந்த னிருக்குங் குகையில் போய் மறைந்தனர். பின்தொடர்ந்த காலயவான் அக்குகைக் குட்புகுந்து தன்னை யறியாதுறங்கும் முசுகுந்தனைக் கண்ணனென்று அடித்தனன். முசுகுந்தன் விழித்துப்பார்க்கக் காலயவநன் சாம்பராயினன்.

காலரூபி

அபிநந்தநன் இந்திரபட்டமடையச் செய்த யாகத்தை இந்திரன் ஏவலால் சிதைத்த அரக்கன்.

காலறிகடிகையார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவராக இருக்கலாம். இவர் தாம் பாடிய குறுந்தொகையில் “காலறிகடிகை கண்ணயின்றன்ன” எனக்கூறி யிருத்தலினிவர்க்கு இப்பெயர் வந்தது. (குறு 267).

காலற்றநாள்

நக்ஷத்ரம் காண்க.

காலவன்

A. விச்வாமித்ரன் சீடர்களிலொருவன். இவன் வேதமுதலிய கற்றுவல் லவனாய்க் குருதக்ஷிணைக்காக ஆசாரியரை வினவினன். ஆசாரியர் உடன் முழுதும் வெண்ணிறமாய் ஒருகாது நீலமாயுள்ள குதிரைகள் எண்ணூறு வேண்டுமென்ன மாணாக்கன் எங்குந்தேடிக் கிடைக்காது யயாதியை யடைந்து அக்குதிரைகளைப் பெற்றுக் குருததிணையாகக் கொடுத்துக் களித்தனன். குவலயாச்வனுக்கு வேண் டிய அத்திரங் கொடுத்தவன். B. கேமதரிசியின் தந்தையிடமிருந்த மந்திரி. C. காசிப்கோத்திரத்து முனிவர், தேவத்துதிக்குத் தீர்த்தமகிமை உபதேசித்தவர், உற்பலாங்கியைக் காண்க. D. குந்தலபூபாலனுக்குக் காலவரையறை கூறியவர். இவர் வீரபாண்டியனால் கையறுப்புண்டனர். E. ஓர் இருடி. சுதேவியின் முன் பிறப்பு வினவிக் களிப்படைந்து அவளுக் குச் சிவபூசா மான்மியங் உறியவர். இரு அத்துவசனைக் காண்க, F. ஓர் இருடி, தன் குமரிகள் (260) பெயரையும் திருமாலுக்குத் தினம் ஒவ் வொருவராகத் திருமணஞ் செய்வித்து நித்யகல்யாணர் எனத் திருமாவைத் துதித்தவர். துத்தமன் எனுங் காந்தருவனை விஷ் ணுசக்காந்தால் கொன்றவர். இவரை ஒரு அரக்கன் விழுங்கவர அவனையும் விஷ்ணு சக்காத்தால் கொலைசெய்வித்தவர், சுதரிசனனைக் காண்க G. இவர் திருவேங்கடத்தில் திருமாலை நாள் தோறும் தவறாது தரிசிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் திருவேங்கடத்திற்கு வருகையில் உபயகாவிரிக் கருகில் எருக்கு வனத்தில் பூர்வம் துந்திவன் என்னும் காந்தருவன் புராண தூஷணையால் அரக்கனாய் இவரைப் பிடித்துக்கொள்ள இருடி நரசிங்கமந்திரம் செபித்து அவன் மீது மந்திரநீர் தெளித்தனர்; அரக்கன் நன் உரு அடைந்தனன். முனிவர் நியமம் கெட்ட தால் தீப்புக எண்ணுகையில் காசிக்கமூர்த்தி தரிசனந்தந்து முக்தியளித்தனர். இவர்க்கு (80) மாணாக்கர். H, ஒரு வேதியச்சிறுவன் இவன் தக்தை, வறுமையால் வீட்டில் அதிதிகள் வரின் வேதியரில்லை யெனக் கூறும்படி தனது மனைவிக்குக் கூறித் தான் வீட்டிலுறங்குகையில் அதிதியொருவர்வர மனைவி தன் புருஷரில்லையென, யோகத்தாலுணர்ந்த வேதியர் இல்லாமற் போகவென, அவ்வாறே புருடனிறந்தனன். இதனைக் குருவாகிய விச்வாமித்ரரிடமிருந்து நீங்கி அங்குவந்த புதல்வனாகிய காலவன் நடந்த தறிந்து சாம்பவி யாகமியற்றித் தந்தையை உயிர்ப்பித்தனன். (சிவமகா புராணம்).

காலவயிரவர்

யமனைத் தண்டித்த வைரவக்கோலமாகிய சிவாவசரம்.

காலவர்

இவர் குருகுலவாசம் முடிந்த பின் தந்தையைக் காணாது வருந்தி வீட்டிற் சென்று தாயைத் தேற்றிச் சிவபூசை செய்து தந்தையையும் சகல சித்தியையும் அடைந்தனர்.

காலவாதி மதம்

பஞ்சமூர்த்திகள் முதல் எறும்புவரையில் உள்ள ஜீவராசிகளும் காலத்தில் இறந்து மீண்டும் பிறந்து வரச் செய்தலாலும் இத்தனை ஆயுள் சென்ற தென்று ஆயுளைக் கூறுதலாலும், காலத்திற்கு மூப்பு, இளமை இல்லாமையாலும், எல்லாம் தன்னில் அழியத் தான் அழியா திருத்தலாலும் காலமே கடவுள் என்பன். இவனுக்கு மோக்ஷம் காலங்கடந்த கடவுளை அடைவது என்பதாம். (தத்துவ.)

காலவிருக்ஷர்

இவர் ஒரு மகருவி, இவர் பறவையிடம் ஹிரண்ய ஹஸ் தரெனும் பருஷியைப் பெற்றார். (பார~அது.)

காலவேகன்

சிவகணத்தவரில் ஒருவன்.

காலவேகம்

ஒரு யானை. (மணிமேகலை).

காலவோரை

1, காலம் இரண்டரை நாழிகையாகக் கொண்டு, புதன் கிழமைக்கு அதற்கு (5) ஆம் கிழமை உதயகாலத்திலே இரண்டரை நாழிகை ஆதித்தன் ஊண், மின்னதற்கு (6) ஆம், கிழமையுடைய வெள்ளி இரண்டரை நாழிகை இப்படி அடைவே அருக்கன், வெள்ளி, புதன், இந்து, சநி, குரு, செவ்வாய் என்று எண்ணிக்கொள்ளப்படும். இதில் பாயக் கோளினூணான நாழிகை சுபகன்மங்களுக்குத் தவிரப்படும். சுபக்கோளினூணான நாழிகை கொள்ளப்படும். (விதான) 2. நாள் ஒன்றுக்கு ஓரை 24. ஒரை ஒன்றுக்கு நாழிகை 2 1/2. மணி ஒன்று ஒரு ஓரை, ஞாயிற்றுக்கிழமையில் 1 வது சூரியவோரை, 2 வது சுக்ரவோரை, 3 வது புதவோரை, 4 வது சந்திரவோரை, 5 வது சூரிவோரை, 6 வது குருவோரை, 7 வது அங்காரகவோரை, திங்கட்கிழமையில் முதலாவது சந்திரவோரை, 2 வது சநிவோரை, 3 வது குருவோரை, 4 வது அங்காரகவோரை, 5 வது சூரியவோரை, 6 வது சுக்கவோரை, 7 வது புதவோரை, இந்தப்படி மற்றக் கிழமைகளுக்கும் அந்தந்த வார வோரை முதலாகப் பார்த்துக்கொள்ளவும், இவற்றுள் சூரியவோரையும் சநி வோரையும் ஆகா.

காலாக்னிமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர்.

காலாக்னிருத்திரர்

அநந்தருடைய மூர்த்தி பேதம் பிரளயகாலத்தில் உலகங்களைச் சங்கரிக்கும் உருத்திரமூர்த்தி. இவர் பிரதிவி யெனும் பிரமாண்டத்தை அதிட்டித்திருப்பர்.

காலாஞானி

சௌமியனைக் காண்க,

காலாஞ்சரம்

ஒரு தீர்த்தம், இதில் சுவேதன் சிவபூஜை செய்தனன்.

காலாத்தீர்த்தம்

ஒரு தீர்த்தம்.

காலாத்யயா பதிட்டம்

பக்ஷத்தில் வேறு பிரமாணத்தால் நிச்சயிக்கப்பட்ட சாத்திய இன்மையேது வின்பாதிதம்.

காலாநலன்

அணுபேரன்.

காலாநாதன்

சங்கராசாரியர் காலத்தவனாகிய ஒருவாதி.

காலாந்தகன்

1. சிவகணத்தவரில் ஒருவன். 2. இராவணசேநாபதி.

காலாந்தகமூர்த்தி

மார்க்கண்டன் பொருட்டும் விபுலன் பொருட்டும் காலனைத் தண்டித்த சிவமூர்த்தியின் திருவரு.

காலாவதிக பத்திரம்

இன்ன பொருளை இவ்வளவுகாலமிவர்கள் அநுபவிக்கலாமென யெழுதித்தருவதாம்.

காலி

லீமராசன் பாரி. குமரன் சர்வகேதன்.

காலியாங்குட்டி

ஒரு சாண், இரண்டு ஜாண் நீளமுள்ளது. கடிக்க அறியாது, சடிக்கில் விஷம்.

காலியாங்குட்டி

வெண்மையாய் தேகத்தில் வரிகளைப்பெற்று ஒருசாண் இரண்டு சாண் அளவாயிருக்கும். வெண்ணந்தைப் பாம்பு (மலைப்பாம்பு) செக்கு, பனைமரம், தூண் முதலிய போல் பருத்த வுடல்கொண்டு மலை காடு முதலியவற்றில் வசிப்பது. பறவை நாகம் குக்கிடசர்ப்பம் இவை பறந்து செல்லும் நாகமாம். தற்காலமில்லே நிகண்டில் கூறப்பட்டது. கிலு கிலுப்பைப் பாம்பு இது நகர்ந்து செல்லுகையில் வாலினுனியிலுள்ள ஒரு உறுப்பால் கிலு கிலுப்பைப்போல் ஓசையைச் செய்கிறது. இது மகாவிஷமுள்ளது.

காலுதயராசி

மேஷம், ருஷபம், கடகம், தனுசு, மகரம்.

காலை

காசிபர் மனைவி, புத்திரர் விநாசன், குரோதன் முதலிய ஐம்பதின்மர். வைசு வாகரன் என்னும் தானவன் பெண்.

காலைச் சேர்ந்த எலும்புகள்

காலைச் சார்ந்த எலும்புகள், தொடையில் எலும்பு, (1) முழங்காலில் இரண்டு நீண்ட எலும்புகளும், முழங்காலையும் தொடையையுமிணைக்கும் சிப்பி எலும்பு (1) முழங்காலும் பாதமும் (7) கணுக்கால் எலும்புகளால் இணைக்கப்பட்டவை. பாதத்தில் (5) எலும்புகள் உள்ளன. கட்டை விரலில் (2) எலும்புகளிருக்கின்றன, மற்ற விரல்கள் ஒவ்வொன்றிலும் (3) துண்டெலும்புகள் உண்டு. மேற்கூறிய புஜமும் தொடையும் முறையே கழுத்தெலும்பின் சம்பந்தமான கீலிலும், முதுகெலும்பின் சம்பந்தமான பூட்டிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கீல்கள் மூன்று வகை, ஒன்று பந்துபோல் தலையுடையதாய் ஒரு பள்ளத்தில் பொருந்தியிருப்பது. அது, எப்படித் திரும்பினும் திரும்பும், அது, தோளினெலும்பை ஒத்தது. ஒன்று பெட்டியின் கீல்போல முன்பின் அசைவது; அது, மணிக்கட்டுப் போல்வது. மற்றது முளைமூட்டு, கபாலத்தைத் தாங்கி நிற்பது. தசைநார்: இது, மேல்தோலுக்கு அடியில் செந்நிறமாய்க் காணப்படுவது. இதில் பல இரத்தக்குழாய்கள் ஊடுருவிச் செல்வதால் செந்நிறத்ததா யிருக்கிறது. இது, தேகத்தை அசைக்கவும் திருப்பவும் பலவிதத்தில் உதவுகிறது. இதன் உதவியில்லாமல் அசையமுடியாது. தேகத்தில் இவ்வகையான தசைகளின் அடுக்கு பல இருக்கின்றன. இத்சசை நார்களில் சில நீளமாயும், சில அகலமாயும், சில நடுப்பருத்தும், நுனி சிறுத்தும் இருக்கின்றன. இத்தசைநார்களின் நுனிகளில் ஒன்று அசையும் எலும்பிலும், மற்றது அசையா எலும்பிலும் பொருந்தியிருக்கும். தேகத்திலுள்ளும் புறம்புமா யிருவித தசைகளுண்டு, ஒன்று நம்மனதிற்கிஷ்டப்படி செய்வது, ஒன்று தன்னிஷ்டப்படி செய்வது, தன்னிஷ்டப்படி செய்வது குடல், சீரணக் கருவி, இருதயம் முதலிய. நம்மிஷ்டப்படி செய்வன கைகால்களிலுள்ளவை.

காலைவிழிப்பின் குணம்

புத்தி தெளிவு, இரத்தத்தூய்மை, பைத்தியகுண நீக்கம், வாதாதி முத்தோஷங்கள் நிலைகடவாது தம் நிலைகளில் நிற்கும், காலை விழித்தவுடன் பார்க்கத்தக்க பொருள்கள் தாமரைமலர், தங்கம், தீபம், கண்ணாடி, சூரியன், புகையிலாநெருப்பு, செஞ்சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், முகில் சூழ்ந்தமலை, கன்றையுடைய பசு, தம் வலதுகை, மனைவி, மிருதங்கம், இவற்றைக்காணின் நலம்,

கால்தி

(கழற்றி) ஜாதிக்கடங்காப் பறைச் சாதி. (தர்ஸ்டன்.)

காளகண்டன்

1. கழுத்தில் விஷக்கதையமைத்த சிவமூர்த்திக்கு ஒரு பெயர். 2. காசியிலிருந்த ஒருவேதியன், விச்வாமித்ரனால் ஏவப்பெற்றுச் சந்திரமதியை விலைக்குக்கொண்டவன். 3. ஒருவேதியன் விட்டுணுசாமியின் குமரன். தன் தந்தை வேதமோதக்கூறியதால் கோபித்துத் தந்தையைக் கொன்று பிரமகத்தி பெற்று வசிட்டரால் நீங்கப் பெற்றவன்.

காளகவி

விரோசகன் குமரன், பலிசகோதரன், கிருஷ்ணனைக் கொல்லும்படி விளாமரமாக ஆயச்சிறுவருக்கு நோயுண்டாக்கி வந்ததைச் சங்ககர்ணனாலறிந்த கிருஷ்ண பலராமர் விளையாட்டாய் அம்மரத்தினை நிர்மூலப்படுத்தினர்.

காளகை

அதிதியின் பெண், கணவன் புலோமை. புலோமையைக் காண்க.

காளத்திமுதலியார்

இவர் பிறந்தது திருநின்றையூர். இவர் மகா கொடையாளி, இவரது கொடையினைப் புகழந்து மது கவிராயர், “நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல, நாளைக் கிருப்பாயோ நல் குரவே காளத்தி, நின்றைக்குச் சென்றக் கானீயெங்கே நானெங்கே, என்றைக்குக் காண்பேனினி” என்று கவிபாடிப் பரிசு பெற்றனர். இவர் மீது பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் “பொரடக் கயம்பிடி யென்றான் மதனுமிப் பூவையுமா, தர்டக்க முஞ்சற் றறிந்திலளே மலர்த்தாள்வணங்கா, முரடக் கவுடக்கெடிமன்னர் வெற்றி முடிபிடுங்குங், காடக்களிற் றண்ணலே வல்லைமாநகர் காளத்தியே” என்று பாடிப் பரிசுபெற்றனர். இவர்மீது படிக்காசுப் புலவர் ‘பெற்ற ளொருபிள்ளை யென் மனையாட்டியப் பிள்ளைக்குப்பால், மற்றது கஞ்சி குடிக்குந் தாரமல்ல பாலிரக்கச், சிற்றாளுமில்லையிவ வெலலா வருத்தமுந் தீர வொரு, கற்றா தரவல்லை யோவல்லை மாநகர் காளத்தியே” எனவும், ” வழிமேல் விழிவைத்து, வாடாம லென்மனை யாளுமற்றோர், பழியாமற் பிள்னையும் பாலென் நழாமற் பகீரெனுஞ்சொல், மொழியாம வென்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை, கழியாம லாவளித் தாய்வல்லமா நகர் காளத்தியே” எனவும் பாடிப் பசு நிறை பரிசு பெற்றனர். இவரிருப்பு வல்ல மெனவுங் கூறும்.

காளநாபன்

இரண்யாக்ஷன் குமரன்.

காளன்

1. வீரபத்திரர்க் கொருபெயர். 2. சண்முக சேநாவீரன். 3. சிவமூர்த்தியணிந்த நாகங்களிலொன்று, இந்தநாகன், காம இச்சைகொண்ட தால் அபசாரப்பட்டுச் சிவமூர்த்தியின் கட்டளைப்படி பூமியில் வந்து திருக்காளத்தியில் சிவபூசை செய்து கொண்டிருந்தனன். அத்தியெனும் கணநாதன் யானையாக இதற்கு முன் அவ்விடம் பூசைசெய்து கொண்டிருந்தனன், இவன் அவனுடன் பூசையின்பொருட்டுப் போரிட்டு இறந்து முத்தியடைந்தவன்.

காளபிருட்டம்

கர்ணன் வில்.

காளபைரவன்

பைரவமூர்த்திக்கு ஒரு பெயர்.

காளமாமுனி

ஓர் இருடி, துரியோதனன் சொல்லால் மாரணயாகஞ்செய்து பூதத்தினை யுண்டாக்கிப் பாண்டவர்மீது ஏவினன். அப்பூதம், கிருஷ்ணன் மாய்கையால் நச்சுப்பொய்கையின் நீருண்டு மூர்ச் சைகொண்டிருந்த பாண்டு புத்திரரைக் கண்டு. இறந்தவர் மேலேவினன் எனக் கோபித்து அனுப்பினவனையே கொன்றது.

காளமுகர்

மனிதருக்கும் ராக்ஷஸருக்கும் பிறந்த சாதியர் (பார்~சபா.)

காளராத்திரி

சத்தியின் தூதி. இவள் தூது சென்றபோது அசுரர் பிடிக்கவர அவர்களைக் கண்ணாலெரித்துக் கௌசிகியிடம் மீண்டவள். இவள் கோரரூபிணியா யிருந்தபடியால் இப்பெயர் அடைந்தனள். சத்தியினம்சம்.

காளவனம்

இப்பெயரை யுடையவனம் இரண்டு. 1. உஞ்சைநகரின் புறத்தேயுள்ளதொன்று இதுமகா காளவனமென்று வேறு நூல்களில் கூறப்படும். (பெ. கதை,) 2 உதயணன் பால்மிக்க அன்புடையவனாகிய இலாமயனென்பவனிருந் தவனம் (பெ. கதை.)

காளாஞ்சனம்

ஒரு தீர்த்தம்.

காளாத்திரி

பஞ்சபூதத்தலத்தி லொன்று வாயுலிங்கக்ஷேத்ரம்.

காளான்

இது, ஓர்வகை பூண்டு போல் பூமியிலுண்டாம் தாவரவகையிற் சேர்ந்தது. இது ஓர்வகை துர்நாற்றமும் உள்ளது, இதனை அழுக்கால் தோன்றிய தென்பர். இவ்வகையிற்பல நிறங்கொண்டவை உண்டு. இது பொருள்களினழிவில் உண்டாகும் மிருதுவான தாவரம். இதில் குடைக்காளான் முதலிய பலவகை உண்டு சிலர் இதனை உணவுப்பொருளில் ஒன்றாக உபயோகிக்கின்றனர். இவ்வகையில் விஷ முள்ளதும் உண்டென்பர்.

காளாமுகன்

மகாவிரதி மதத்துடன் ஒத்தவன். இவனுக்குப் பெத்தமுத்தி இரண்டும் ஒன்று, சிறிது ஆகமபேதம் உண்டு. இவனுக்குச் சிவன் படிகநிறமும், புத்ர தீபமணியுந் தரித்த மூர்த்தியாய் அருள் செய்வர் என்பன். இது சைவபேத உட்சமயத்தொன்று. உருத்திர கற்பிதம். (தத் துவநிஜாநு)

காளி

1, தாருகாசூரனால் துன்பமடைந்த தேவர், பெண்களுருக்கொண்டு சிவமூர்த்தியையடைந்து தமது குறை கூறினர். பெண்ணாலன்றி வேறு எவராலுமிறவாத தாருகனை வெல்லச் சிவமூர்த்தி சத்திக்குக் கட்டளையிட்டனர். அக்காலையில் தேவியின் ஒருகலை சிவமூர்த்தியின் விஷக்கறை படிந்து கனற்கண்ணிற் பிறந்து வெளிப்பட்டது. அவ்வுரு காளமாகிய விஷக்கறை படிந்து வந்ததால் காளி எனப் பெயரடைந்தது. இவ்வகை பிறந்த காளி தனது கோபாக்னியால் தாருகனை நீறாக்கினள். இவளிடம் பிறந்த கோபத்தீ, குழந்தை யுருக்கொண்டழுதது. இதனை நோக்கிய காளி குழந்தைக்குப் பாலூட்டினள். சிவமூர்த்தி, குழந்தையையும் பாலையும் தம்மிலொடுக்கினர். ஒடுங்கிய சிவமூர்த்தி யிடமிருந்து எட்டுருக்கொண்டு வைரவமூர்த்தி தோன்றினர். 2. மகிடாசுரன் செய்த துன்பத்தைத் தேவர் சிவமூர்த்தியிடம் கூறினர். அக்காலத்துச் சிவமூர்த்திக்குக் கோபமுண்டாயிற்று. அக்கோபம் பெண்ணுருவாய்த் திரண்டது; அதுவே காளியுரு என்பர். இவள் இரத்தபீசன் எனும் அசுரனை ஒரு துளியிரத்தம் கீழ்விழாது ஆகாயம் மேல் வாயாகவும் பூமி அடிவாயாகவும் அங்காந்து உண்டு மாய்த்தனள். சிவமூர்த்தியிடம் நிருத்தவதஞ் செய்து தோல்வியடைந்தவள், தக்ஷயாக அதத்தின் பொருட்டு இறைவியின் கோபத்தீயிற் பிறந்தவளென்றுங் கூறுவர். காளனென்னும் வீரபத்திரனை மணந்தவள். இவளுடன் பகை கொண்ட அசுரர், பாம்பு, தேள் முதலிய விஷ ஜெந்துக்களை விட்டுக் கடிக்க ஏவ இவள் அவை துன்பஞ் செய்யாமல் மரக்கால்கொண்டு ஆடினள். ஆதலால் இவள் கூத்து மரக்கால் எனப்படும். இவளுக்கு ஊர்தி, சிங்கம், கொடி, அலகை, படை, சூலம் 3. சத்தமாதாக்களில் ஒருத்தி. 4. வாயுரூபமான சத்தி, இவட்கீசர் காலர் அல்லது ஈசானர். 5. வேதவியாசன் தாய், சத்தியவதிக்கு ஒரு பெயர்.

காளிகூடம்

ஒரு பட்டணம்.

காளிங்கன்

காளியனைக் காண்க.

காளிங்கர்

திருவள்ளுவர் குறளுக்குரையியற்றிய ஆசிரியர்களில் ஒருவர்.

காளிதாசன்

காளிதேவியின் உபாசனா பலத்தால் கவியானவன். வடநூல் வல்லவன். இவனைப் போஜன் சமத்தான வித்வான் என்பர். பின்னும் இப்பெயர் கொண்ட மற்செருகவி விக்ரமார்க்கன் சமஸ்தானத்திலு மிருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இவர்களது சரித்திரங்களை வடநூலிற் காண்க.

காளிதேவர்

ஒரு வீரசைவ அடியவர். இவரிடம் சில வேதியர் வந்து தாம் பிறப்பாலுயர்ந்தோர் வேதமோத எமக்கே அதிகார முண்டென்றனர். இதைக் கேட்ட அடியவர், தம்மிடமிருந்த நாயை வேதமோதுவிக்க, வேதியர் வெட்கிச் சென்றனர்.

காளிந்தி

1. யமுனை நதியிலுள்ள மடு. இதில் உமை வலம்புரிச் சங்கினுருவாய்த் தவம்புரிந்தனள். இம்மடுவில் சௌபரியின் சாபத்தால் கருடன் வராததினால் காளியன் எனும் நாகன் சேர்ந்து வாழ்ந்தனன், 2, சூரியன் புத்ரி, யமுனா தீரத்தில் கண்ணனை மணக்கத் தவஞ் செய்து அவரை மணந்தவள். இவள் குமraர் சோமகன் முதலியோர். 3. சுமதியின் பாரி. 4. கிருஷ்ணன் தேவியரில் ஒருத்தி. 5. திடன் பாரி.

காளிபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

காளிமுத்து

இவள் ஒருதாசி, கவிபாட வல்லவள். இவள் மயிலைக் குழந்தை முதலியாரையும், பள்ளிக்கொண்டான் எனும் பரதவனையும் பாடிப் பரிசு பெற்றவள். ‘நெல்லைச்சொன் னாபரணத்தை” என்ற செய்யுளும், “வள்ளிகொண்டான் மயிலே றிக்கொண்டான் மதிபோலு மலை, வெள்ளிக்கொண்டான் விடையேறிக்கொண்டான் விண்ணவர்க்கமுதம், துள்ளிக்கொண்டான் புள்ளிலேறிக்கொண்டான் சுபசோபனஞ்சேர், பள்ளிக்கொண்டான் புகழேறிக்கொண்டானென்று பார்க்கவென்றே” என்ற செய்யுளும் இவள் பாடியன. (தனிப்பாடற்றிரட்டு.)

காளிம்பன்

தொண்டை நாட்டில் திரு வேங்கடத் தருகிலிருந்த பிரபு. இவர் வித்வான்களை யாதரித்துக் கவிமாலை பெற்றவர். “விடஞ்சூழ ரவினிடை நுடங்கமி. வாள் வீசி விரையார்வேங், கடஞ்சூழ் நாடன் காளிம்பன் கதிர்வேல் பாடுமாதங்கி வடஞ்சேர் கொங்கைமலை தாந்தாம் வடிக்கணீலமலர் தாந்தாம், தடந்தோளிரண்டும் வேய்தாந்தாமென்னுந் தன்கைத் தண்ணுமையே” எனும் செய்யுள் இவர்மீது பாடப்பட்டது.

காளியண்ணப்புலவர்

இவர் திருச்செங்கோடென்னும் சிவத்தலத்திற் கருகிலுள்ள மண்டகப் பாளியெனும் ஊரிலிருந்த கருணீகர். மதுரைத் திருஞானசம்பந்த ஆதீனத்தில் தீக்ஷை பெற்றவர். திருப்பூந்துறை புராணம் பாடிய புலவர். திருச்செங்கோட்டுச் சிற்றம்பலக் கவிராயரின் மாணவகர்.

காளியன்

ஒரு நாகன், கத்ரு குமரன். இவன் கருடனுக்கஞ்சி, சௌபரி ருஷியால் கருடன் வராதிருக்க வரம் அடைந்த யமுனை மடுவிலிருந்து கிருஷ்ணனால் கடலுக்குத் துரத்தப்பட்டு ரமணகத் தீவடைந்து தான் பெற்ற கண்ணனடிச் சுவட்டால் கருட பயமற்றிருந்தவன். இவனுக்கு அத்தீவிலுள்ளார் பூசை முதலிய இடப் பெற்றிருந்தவன்.

காளேச்வரம்

கோதாவிரிக்கரையிலுள்ள சிவக்ஷேத்ரம்.

காவசேவயலன்

ஒரு ருஷி யசுர்வேதி,

காவடேயர்

ஒரு முனிவர் கந்தமூர்த்தியிடம் விசேஷ தருமங்கேட்டு முத்திபெற் றவர். (சூதசம்மிதை,)

காவட்டனார்

அந்துவங்கீரனைப் பாடிய புலவர். இவர்க்குக் கானட்டனார் எனவும் பெயர். (அகநானூறு, புறநானூறு)

காவண நல்லூர்

(காவனூர்). இது மதுரைக்கு வடக்கே ஒரு காதத்திலுள்ளது. தாகம் தீரும் பொருட்டுக் குள முதலிய வற்றிலுள்ள ஜலத்தையுண்ட குண்டோதரன், மனிதர்களுடைய ஜலகஷ்டத்தைத் தீர்க்கும் பொருட்டுச் சிவபெருமான் கட்டளைப்படி உண்டாக்கிய நீர்நிலைகளுள், பந்தர் சூழ்ந்த நீர் நிலையையுடைய ஊர். (திருவிளையாடல்).

காவன் முல்லை

ஊருந்திரை ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலை வேலியாகவுடைய ஞாலத்து மணநாறு மாலையினை யுடைய வேந்தன் பாதுகாத்தலைச் சிறப்பித்தது. (பு. வெ.) 2. பொருந்தினபடி அந்நியர் சொல்லினும் முற்பட்ட துறைக்கு உரிமை யுடைத்து. (பு. வெ.)

காவன் முல்லைப்பூதனார்

இவரது இயற் பெயர் பூதனென்பதே. காவன் முல்லை புறத்திணைக்கட்பட்ட ஒரு துறை. புறப்பொருள் வெண்பாமாலை வாகைப்படலத் துட்கண்டு கொள்க, அத்துறையைப் பாடினமையின் காவன் முல்லைப் பூதனாரெனப் பட்டார். இவர் பாலைத்திணையைப் பல வாறு புனைந்து பாடியுள்ளார். காதலன் சென்ற சாநெறிகொடிய தென்று வருந்திய தலைவியை அந்நெறி மழை பெய்து நலனுடையதா பிராநின்றதென்று தோழி ஆற்றுவிப்பதாக இவர் கூறியது இன்சுவையதாகும். (நற் 274) இவர் பாடியனவாக நற்றிணையில் 274ம். பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலைக்துமாக ஏழுபாடல்கள் கிடைத்திருக்கின்றன.

காவன்மரம்

தமிழ்நாடாண்ட அரசர்பலர் தம்மாசு நிலையிட்ட தலைநகர்க்கண் தம் வீரத்திற் கறிகுறியாய்த் தம்மாலும் தம் வீரராலும் காக்கப்பட்ட மரம்.

காவற் பிரிவு

இது நாடு காத்தற்குப் பிரியும் பிரிவு. இது, தோழி தலைவன் காவற் பிரிவுணர்த்தல், தலைமகள் கூதிர்ப்பருவங் கண்டு வருந்தல், தோழியாற்று வித்தல் முதலிய உட்பிரிவுகளை யுடையது.

காவற்பெண்டு

ஒரு பெண் கவி. கேட்டார்க்குப் போர்க்குச் சென்ற தம் மகனது இருப்பைக் கூறுவாள். என் மகன் யாண் இளனோ அறியேன் “புலிசேர்ந்து போகிய கல்லளைபோல வீன்ற வயிறோ விதுவே” என விடை கூறினவன்.

காவலன்

ஓரிருடி. கண்வருஷிக்கு மாமன். அஷ்டகோணருவுக்கு மாதாமகன்.

காவாடி

காவடி தூக்கிச் செல்லும் ஒரு வகைச் சாதியார்.

காவாரி மகருஷிகோத்திரன்

தாமோதரன்றன் சோழன் வளஞ்சியனுக்காகக் காஞ்சிபுரத்தில் கலிக்கியமர்ந்தாள் சன்னிதியில் தலையரிந்து கொண்டு கீர்த்திபெற்றவன்.

காவிதிப்பட்டம்

பாண்டிநாட்டு உழுவித்துண்ணும் வேளாளர்க்கு அரசனால் கொடுக்கப்பட்ட பட்டம்.

காவியன்

சுக்கிரன் குமாரன்.

காவிரி

1. இவள் பிரமன் மனத்திருந்து கவேரனுக்குப் புத்திரியாய் நதியுருவடைந்தவள், இவள், சையமலை (ஸஹ்யபர்வதம், விற்பிறந்து துகினத்திற்கும் சேதுவிற்குமிடையில் ஒன்பதினாயிரம் யோசனை விரி வாய்ச் சையசம்பவை கவேரக்கன்னியெனப் பெயர் பெற்றனள். இவள் அகத்தியரை மணந்தனள். அகத்தியர் வரத்தால் எல்லாத் தீர்த்தங்களும் வணங்கும் வரம் அடைந்து அகண்ட காவிரியெனப் பெயர் பெற்று உலகத்தார் பாபங்களைப் போக்குபவள். அகத்தியர் கமண்டலத்திருந்த இவளை இந்திரன் வேண்டுகோளால் விநாயகர் காகவுருக்கொண்டு உருட்ட. நதியுருவாய்ப் பிரவகித்தனள். தொல்காப்பியரைக் காண்க. இவளே லோபாமுத்திரை, இதில் அரிச்சந்திரன், அருச்சுநன், சீலை, ஒருபன்றி, மண்டுகம், முதலை முதலியோர் ஸ்நானஞ்செய்து நற்கதி பெற்றனர். கன்னி, காவிரிப்பாவை, நீர்ப்பாவை, சோழர் குலக்கொடி, தமிழ்ப்பாவை யெனவும் பெயர் வழங்கும். (காவிரித்தல புராணம்) 2, கம்பநாடர் குமரி இவளிடம் சோழன் மகன் காதல் கொள்ள இவள் கற்புக் கெடுவதினும் சாதல் நலமெனவெண்ணிக் கம்புக்குதுரில் மூழ்கித் தற்கொலை புரிந்து கொண்டனள்.

காவிரி அணைகட்டிய சோழன்

சசிசேகரச் சோழனைக் காண்க.

காவிரி வாயில்

காவிரிக் கரையில் திருமுகத்துறை கழிகின்றவாயில். காவிரிப்பூம் பட்டினத்துள்ளது (மணிமேகலை)

காவிரிக்கரைகண்டசோழன்

இந்தச் சோழன் தன் சிற்றரசருக்குக் காவிரியைப் பகுத்துக் கொடுத்துக் கரைகட்டும்படி சொல்ல எல்லாரும் உடன்பட்டுக் கட்டி முடித்தனர். அவர்களுள் பிரதாபருத்ரன் என்போன் மூன்று கண்ணுள்ளான் கட்டாது கட்டளை மறுத்திருந்தனன். சோழன் காவிரியின் அணைகளைப் பார்க்கையில் ஒரு பங்கு குறைவாயிருந்ததைக் கண்டு இது யாவர் பங்கு என்றனன். ஏவலாளர் பிரதாபருத்ரன் பங்கென்று அவன் உரு எழுதிய படத்தையும் காட்டினர். சோழன் சிவமூர்த்திக்கும் மூன்று கண் இவனுக்கும் மூன்று கண்ணோ என்று தன்னிடமிருந்த வேலினால் ஒரு கண்ணைக் குத்திவிட உடனே பிரதாபருத்ரனுக்குக் கண்மறைந்தது. பிரதாபருத்ரன் அணைகட்டி முடித்துச் சோழனை வேண்டிக் கொண்டனன்.

காவிரிப்புனல் கொணர்ந்த சோழன்

சித்திர தன்வனைக் காண்க,

காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணன்

கடைச்சங்கமருவிய புலவன்.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

காரிக்கண்ணனாரைக் காண்க.

காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார்

அகம் 217ல் ‘வணிகராகிச்சென்று’ என்று கூறியதனால் இவரை வணிகர் மாபினரென்று கொள்கின்றாம். இவர் அவியனென்னும் கொடையாளியையும், அவனது மலையையுஞ சிறப்பித்துப் பாடி யுள்ளார் (அகம் 271) வாகைப்பூவை மயிலின் குடுமிக்கு உவமை கூறியுள்ளார். (குறு 347) பெரும்பாலும் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 389ம் பாட லொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலிரண்டுமாக நான்கு பாடலகள் கிடைத்திருக்கின்றன.

காவிரிப்பூம் பட்டினம்

இது சோழநாட் டில் காவிரிகடலுடன் கலக்கும் சங்கமுகத்திலிருப்பது. இது துறைமுகப்பட்டினம். இது காவிரியாற்றின் சங்கமுகத்தில் உள்ள பட்டினமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது. இதைச் சோழர்களுக்கு முன்கர் கந்தன் எனும் அரசன் ஒருவன் ஆண் டிருந்தனன். அதனாலதற்குக் காகந்தியென்று ஒரு பெயர். வங்காளத்தின் தலைநகராகிய சம்பாபதியினின்று வந்து குடியேறிய தமிழர் தங்கள் பழம்பதி மறவாதிருத்தற் பொருட்டு இதற்கும் அப்பெயரிட்டனரதனா லிதற்குச் சம்பாபதியென ஒரு பெயருண்டு. இதற்குப் புகார் என ஒரு பெயரும் உண்டு. பெரிப்ளஸ் எனும் யாத்ரிகனும், டாலமி எனும் யாத்ரிகனும் முறையே கமாரம், பேரிஸ் என்று கூறியது இந்நகரத்தையே. இந்தநதி, கடலுடன் சங்கமமாகும் முகத்வராம் தற்காலம் பல கிளைகளாகப் பிரிந்திருப்பது போல் பண்டு பிரிந்திராமல் மரக்கலங்கள் வர நீடாழமாக இருந்தது பற்றிப்புற நாட்டு மரக்கலங்கள் வந்து தங்க வசதியாயிருந்தது. இவ்வாறு இருத்தலையெண்ணிக் கரிகாற்பெருவளத் தான், தன்னாடு நிலவளம் பெற்றதேயன்றி வாணிச்யவளம் பெறவெண்ணித் தன்னிராஜதானியாகிய உறையூரைவிட்டு இந் நகரத்தை ராஜதானியாக்கிக் கொண்டான். இவன் இப் பட்டினத்தை இரு பிரிவினவாகப் பிரித்துக் கடலையடுத்த பாகத்தை மருவூர்ப்பாக்கம் எனவும், இதற்கு மேல் பாகத்தைப் பட்டினப்பாக்கமெனவும் பெயரிட்டு இடையிலுள்ள இடைவெளியைச் சந்தை கூடுமிடமாக்கினன். இவற்றில் பட்டினப்பாக்கத்தில் அரசவீதியும், ஆவணவீதியும், கொடித்தேர் வீதியும், மற்ற மறையவர், உழவர், வணிகர், மகதச்சிற்பர், மாரடக்கொல்லர், யவனத் தச்சர் முதலியோரும் இருந்தனர். பின்னையும், அன்னசாலைகள், வேள்விச்சாலைகள், கலைக்கழகங்கள், சந்திரகுண்டம், சூரியகுண்டம் யந்திரவாவிகளுமிருந்தன. மருவூர்ப் பாக்கத்தே கலங்கரை விளக்கம் துறைமுகத்தருகிலும், ஆயத்துறைகள், புறநாட்டு வர்த்தகர் தங்குவதற் கிடமும் இருந்தன. இப்பட்டணத்தின் மற்றைச் செய்திகளைச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண்க. சோழர்களுடைய பழைய இராஜதானி; இதில் இந்திரநியமனமாகிய ஏழரங்கங்களுள்ள புத்தாலய மொன்றுண்டு.

காவிரிப்பூம்பட்டனத்துச் சேந்தன் கண்ணனார்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் சோழநாடடுக் காவிரிப்பூம் பட்டினம். கண்ணப்பெயகாளத்தி முதலியார்ருடையார் வேறிருத்தலி னிவர் சேந்தன் கண்ணன் எனப் பட்டனர் போலும். (குறு 347)

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். சிவபெருமான் திருப்பெயர் பெற்றவர். இவர் சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தவர். (குறு 342)

காவுதியன்

அம்பட்டனுக்கு மலைநாட்டில் வழங்கும் பெயர்.

காஷ்டிலை

இவள் மாரகபூசத்தில் ஸ்நான விரதங்கள் நோற்று நல்லுலகடைந்தவள் (பிருகன்னாரதீய புராணம்.)

காஷ்டை

காச்யபர் தேவி, தக்ஷன் குமரி, இவளிடம் ஒரு குளம்புள்ள பிராணிகள் பிறந்தன.