அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஓகருதாசர்

ஒரு பாகவதர். இவர் பாகவதர்க்கு அன்னம் படைத்து வருநாட்களில் பெருமாள் இவரது அன்பு சோதிக்க வீட்டில் தாசர் இல்லாத போதும் தான்ய முதலிய இலாதபோதுமடைந்து தாசரது மனைவியரை அன்னங்கேட்கத் தாசர் மனைவி, தம்மிடமிருந்த பொன்னைக் கடையில் மாற்றி வேண்டியது கொண்டு விருந்தானவர்க்குப் பசிபோக்க, விருந்தானவர் இன்று முதல் உன் வீட்டு அடுக்கல்தோறும் எல்லாப் பொருள்களும் நிறைகவென்று அவற்றைத் தொட்டுப் போயினர். கணவர்வரத் தேவியார் நடந்தவை கூற, இதைச் சோதிக்கக் கணவனார் வந்த விருந்தினர்க்கு ஒன்றுமிலாத அடுக்கலில் கையிடப் பல பொன்கள் அகப்பட அவை கொண்டு விருந்தளித் தனுப்பித் தம் முன் பெருமாள் தரிசனங்கொடாமைக்கு விசனமுறப் பெருமாள் தரிசனந்தரக் களித்திருந்தவர்.

ஓகவதி

வசுவின் குமரி.

ஓகவான்

1. வசுவின் குமரன்.

ஓசை

(தொகை, வகை, விரி.) வண்ணங்கள். 1. செப்பல், 2. அகவல், 3. துள்ளல், 4. தூங்கல், 5. கொஞ்சல் யென்னும் தொகையானும்; 1. பா அவண்ணம், 2 தா அவண்ணம், 3. வல்லிசைவண்ணம், 4. மெல்லிசைவண்ணம், 5. இயைபுவண்ணம், 6. அளபெடைவண்ணம், 7. நெடுஞ் சீர்வண்ணம், 8. குறுஞ்சீர்வண்ணம், 9. சித்திரவண்ணம், 10. ஈலி புவண்ணம், 11. அகப்பாட்டு வண்ணம், 12. புறப் பாட்டு வண்ணம், 13. ஒழுகுவண்ணம், 14. ஒரூஉ வண்ணம், 15. எண்ணு வண்ணம், 16. அகைப்புவண்ணம், 17. தூங்கல்வண்ணம், 18. எந்தல் வண்ணம், 19. உருட்டு வண்ணம், 20. முடுகு வண்ணமோடு ஆங்கவையென்ப அறிந்தி சினோரே என்னும் வகையானும், குறிலகவற்றூங்கிசை வண்ணம் முதலாகிய வண்ணம் நூறு என்னும் விரியானும் அறிக. வண்ணம் நூறு 1. தூங்கிசைவண்ணம், 2. ஏந்திசைவண்ணம், 3. அடுக்கிசை வண்ணம், 4. பிரிந்திசைவண்ணம், 5. மயங்கிசைவண்ணம் என்னும் இவ்வைந்தினை முதல்வைத்து, 6. அகவல் வண்ணம், 7. ஒழுகிசைவண்ணம்,8. வல்லிசைவண்ணம், 9. மெல்லிசைவண்ணம் என்னும் இந்நான்கினையும், இடைவைத்து குறில் வண்ணம், நெடில் வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசைவண்ணம், இடையிசைவண்ணம் என்னும் இவ்வைந்தினையுங் கடைவைத்துக் கூட்டி யுறழ நூறு வண்ணமும் பிறக்கும். அவற்றின் விரிவாவன : 1 குறிலகவற் றூங்கிசைவண்ணம், நெடிலகவற் நூங்கிசைவண்ணம், வலியகவற் றூங்கிசைவண்ணம், மெலியகவற் றூங்கிசை வண்ணம், இடையகவற் றூங்கிசைவண்ணம் (எ~ம்.) குறிலொழுகற் றூங்கிசை வண்ணம், நெடிலொழுகற் றூங்கிசைவண்ணம், வலியொழுகற் றூங்கிசைவண் ணம், மெலியொழுகற் றூங்கிசைவண்ணம், இடையொழுகற் றூங்கிசைவண்ணம் (எ~ம்.) குறில்வல்லிசைத் தூங்கிசைவண்ணம், நெடில்வல்லிசைத் தூங்கிசைவண் ணம், வலிவல்லிசைத் தூங்கிசைவண்ணம், மெலிவல்லிசைத் தூங்கிசைவண்ணம், இடைவல்லிசைத் தூங்கிசைவண்ணம் (எ~ம்.) குறில் மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், நெடில்மெல்லிசைத் காங்கிசைவண்ணம், வலிமெல்விசைத் தூங்கிசை வண்ணம், மெலிமெல்லிசைத் தூங்கிசை வண்ணம், இடைமெல்லிசைத் தூங்கிசை வண்ணம் (எ~ம்.) தூங்கிசைவண்ணம் (20) குறிலகவ லேந்திசைவண்ணம், நெடிலகவ லேந்திசைவண்ணம், வலியகவ லேந்திசைவண்ணம், மெலியகவ லேந்திசைவண்ணம், இடையகவ லேந்திசைவண்ணம் (எ~ம்.) குறிலொழுக லேந்திசைவண்ணம், நெடிலொழுக லேந்திசைவண்ணம், வலியொழுக லேந்திசைவண்ணம், மெலியொழுக லேந்திசைவண்ணம், இடைட்யொழுக லேந்திசைவண்ணம் (எ~ம்.) குறில்வல்லிசை யேந்திசைவண்ணம், நெடில்வல்லிசை யேந்திசைவண்ணம், வலிவல்லிசை யேந்திசைவண்ணம், மெலி வல்லிசை யேந்திசைவண்ணம், இடைவல்லிசை யேந்திசைவண்ணம் (எ~ம்.) குறில் மெல்லிசை யேந்திசைவண்ணம், நெடின்மெல்லிசை யேந்திசைவண்ணம், வவிமெல்லிசை யேந்திசைவண்ணம், மெலிமெல்லிசை யேந்திசைவண்ணம், இடைமெல்லிசை யேந்திசைவண்ணம், (எ~ம்.) எந்திசைவண்ணம், (20) குறிலகவ லடுக்கிசைவண்ணம், நெடிலகவ லடுக்கிசைவண்ணம், வலியகவ லடுக்கிசை வண்ணம், மெலியகவ லடுக்கிசைவண்ணம், இடையகவ லடுக்கிசைவண்ணம், (எ~ம்.) குறிலொழுக லடுக்கிசைவண்ணம், நெடிலொழுக லடுக்கிசைவண்ணம், வலியொழுக லடுக்கிசைவண்ணம், மெலியொழுக லடுக்கிசைவண்ணம், இடை யொழுக லடுக்கிசைவண்ணம் (எ~ம்.) குறில்வல்லிசை யடுக்கிசைவண்ணம், நெடில்வல்லிசை யடுக்கிசைவண்ணம், வலிவல்லிசை யடுக்கிசைவண்ணம், மெலிவல்லிசை யடுக்கிசைவண்ணம், இடைவல்லிசை யடுக்கிசைவண்ணம் (எ~ம்.) குறின்மெல்லிசை யடுக்கிசைவண்ணம், நெடின்மெல்லிசை யடுக்கிசைவண்ணம், வலிமெல்லிசை யடுக்கிசைவண்ணம், மெலிமெல்லிசை யடுக்கிசைவண்ணம், இடைமெல்லிசை யடுக்கிசைவண்ணம், (எ~ம்.) அடுக்கிசைவண்ணம், (20) குறிலகவற் பிரிந்திசைவண்ணம், நெடிலகவற் பிரிந்திசைவண்ணம், வலியகவற் பிரிந்திசைவண்ணம், மெலியகவற் பிரிந்திசைவண்ணம், இடையகவற் பிரிந்திசைவண்ணம் (எ~ம்.) குறிலொழுகற் பிரிந்திசைவண்ணம், நெடிலொழுகற் பிரிந்திசைவண்ணம், வலியொழுகற் பிரிந்திசைவண்ணம், மெலியொழுகற் பிரிந்திசைவண்ணம், இடையொழுகற் பிரிந்திசைவண்ணம் (எ~ம்.) குறில் வல்லிசைப் பிரிந்திசைவண்ணம், நெடில்வல்லிசைப் பிரிந்திசைவண்ணம், வலிவல்லிசைப் பிரிந்திசைவண்ணம், மெலிவல்லிசைப் பிரிந்திசைவண்ணம், இடைவல்லிசைப் பிரிந்திசைவண்ணம் (எ~ம்.) குறின் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடின்மெல்லிசைப் பிரிந்திசைவண்ணம், வலிமெல்லிசைப் பிரிந்திசைவண்ணம், மெலிமெல்லிசைப் பிரிந்திசைவண்ணம், இடைமெல்லிசைப் பிரிந்திசைவண்ணம் (எ~ம்.) பிரிந்திசைவண்ணம் (20) குறிலகவன் மயங்கிசைவண்ணம், நெடிலகவன் மயங்கிசைவண்ணம், வலிய கவன் மயங்கிசைவண்ணம், மெலியகவன் மயங்கிசைவண்ணம், இடையகவன் மயங் கிசைவண்ணம் (எ-ம்.) குறிலொழுகன் மயங்கிசைவண்ணம், நெடிலொழுகன் மயங்கிசைவண்ணம், வலியொழுகன் மயங்கிசைவண்ணம், மெலியொழுகன் மயங்கிசைவண்ணம், இடையொழுகன் மயங்கிசைவண்ணம் (எ~ம்,) குறில் வல்லிசை மயங்கிசைவண்ணம், நெடில்வல்லிசை மயங்கிசைவண்ணம், வலிவல்லிசை மயங்கிசைவண்ணம், மெலிவல்லிசை மயங்கிசைவண்ணம், இடைவல்லிசை மயங்கிசைவண்ணம் (எ~ம்,) குறில்மெல்விசை மயங்கிசைவண்ணம், நெடில்மெல்லிசை மயங்கிசைவண்ணம், வலிமெல்லிசை மயங்கிசைவண்ணம், மெலிமெல்லிசை மயங்கிசைவண்ணம், இடைமெல்லிசை மயங்கிசைவண்ணம் (எ~ம்.) மயங்கிசைவண்ணம் (20) ஆக வண்ணங்கள் நூறு,

ஓச்சன்

(அல்லலு உவச்சன்) பிராமணன் சூத்திர கன்னிகையைப் புணரப் பிறந்த வன். இவனுக்குக் காளியைப் பூசிப்பதும் சிவாலயத்தில் மத்தள முழக்குவதும் தொழில். (அருணகிரிப் புராணம்)

ஓச்சர் அல்லது உவச்சர்

இவர்கள் காளியம்மை, மாரி, தர்மராஜாகோவில் முதலிய இடங்களில் பூசை செய்வோர். இவர்களில் பெரும்பாலார் சைவர். சிலர் வைணவர். இவர்களிற் சிலர் பூணூல் தரிப்பர். இவர்கள் உடுக்கை, சிலம்புகொண்டு காலை யில் ஓசையிட்டு மாரியை விழிக்கச் செய்வதால் ஓச்சர் எனப்பட்டனர். இவர்கள் வடநாட்டில் ஐந்து வகுப்பினராக இருக்கின்றனர். மாராயன், பாண்டி, கந்தப்பன், பல்லவராயன், புலவன், இவர்கள் அர்ச்சகர், தேவர், பாரசைவர், முதலியார், வல்லபராயர், பூசாவி, புலவர் என்று பட்டம் பெறுவர். (தர்ஸ்டன்)

ஓட்

இது, ஒரு தானியம். முக்யமாய் இதைக் குதிரைகளுக்கு ஆகாரமாக உப யோகிக்கின்றனர். இதன் மாவினைச் சில நாட்டார் ஆகாரமாக உபயோகிக்கின் றனர். இது பெரும்பாலும் குளிர்ந்த மலைநாடுகளில் விளைகிறது. இது ஸ்காத்லாண்ட், ஆஸ்திரேலியா, வடமத்ய ஆசியா, வட அமெரிக்காவில் விளைகிறது.

ஓணன்

வாணாசுரனது படைத்தலைவன். இவன் காஞ்சிபுரியில் சிவமூர்த்தியைப் பூசித்துப் பேறு பெற்றவன். இவன் பூசித்த திருத்தலமே ஓணகாந்தன் தளி.

ஓணான்

இது வீட்டிலுள்ள பல்லியை ஒருவாறு வொத்து வால் நீண்டும், தேகம் நீண்டும் மெலிந்தும் இருக்கும். இது பூச்சிபுழுக்களைத் தின்னும், மரங்களில் தொத்தியேரம். இவ்வினத்தில் சில முதுகில் முள் பெற்றும் இருக்கும். மலையோணான் கறுத்தும் தலை சிவந்து மிருக்கும். பல நிறமுள்ளவை உண்டு. இவற்றில் பச்சை ஒணான் அதிக விஷமுள்ளது. இது பல நிறம் பெறும். இது மணவில் முட்டையிட்டு மூடும். அம்முட்டைகள் சூரிய வெப்பத்தால் பொரியும். இதற்கு ஒந்தி யெனப் பெயர் உண்டு.

ஓதற்பிரிவு

தலைவன் கல்விகாரணமாகப் பிரிதல். இது, கல்விக்குப் பிரிவைத் தலைமகனால் உணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல், தலைமகள் கார்ப்பருவங் கண்டு புலம்பல், தலைமகளைப் பாங்கி யாற்றுவித்தல் முதலிய.

ஓதலாந்தை

ஐங்குறு நூற்றில் பாலைத்திணை பாடிய புலவர். (ஐங்குறு நூறு.)

ஓதவான்

சூர்யவம்சம்சத்தரசன், பிரதீதன் புத்ரன். இவன் குமரன் ஓதாதன். புத்ரி ஓதவதி. (பார.)

ஓதா

ஒமஞ் செய்கிறவன்.

ஓதாதன்

க்ஷத்ரியன், சூர்யவம்சம் ஓதவதன் புத்ரன். இவன் குமரன் கிருகன். (பார)

ஓத்து

ஒரு சாதியான மணிகளை வரிசையாகப் பதித்தது போல ஒரு சாதியான பொருள்களை ஒருவழிப்படச் சொல்வதாம்.

ஓநாய்

இதற்குக் கோனாய் எனவும் பெயர். இது பெரும்பாலும் குளிர்ந்த தேசங் களில் வசிக்கும் ஆகையால் உடம்பில் மயிர் அடர்ந்திருக்கும். இக்கொடிய மிருகங் கூட்டமாகச் சென்று காட்டுக் குதிரை, கழுதை முதலியவற்றைக் கொன்று தின்னும். சமயம் வாய்த்தால் மனிதரையும் கொல்லும். இது தனித்தே வசிக்கும். தன்னை விரோதிகள் துரத்தின் காற்றிற் கெதிர்முகமாகவோடித் தப்பித்துக் கொள்ளும்.

ஓம நல்லூர் அநந்தபத்மநாபப் பிள்ளை

இவர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓமநல்லூர் வேளாண் மரபினர். இவரைக் குடியிறை பணத்திற்காகச் சிறைவைத் திருக்கையில் ஓர் கவிஞர் இவரிருக்கு மிடஞ்சென்று “குலைவைக்குஞ் செந்நெல் வயனல்லூர்ச் சங்காமூர்த்தி குமார மன்னர், தலைவைக்கும் கிள்ளாக்கைய நந்தபத்மநாபாவன் தன்மை கேளாய், விலைவைக்கும் கடையரிசி வாங்கி யுண்ணமுடியாது என் வீட்டிலிப்போது, உலைவைக்கச் சொல்லி வந்தே னெற்கொடுத்தால் அரிசி குத்தி உண்ணலாமே” எனக் கூறக்கேட்டு அவர் வேண்டியது அளிக்கக் கவிமன்னர் எந்தக் காலமும் அருந்தபத்மநாபன் சுகமாக இருக்க வேண்டும், வந்த காலவன் தனக்கே மகத்தான பெருஞ் செல்வம் வரவும் வேண்டும், பந்தக்கால் போலுயர்ந்து பருத்திருக்கு மடையர் தமைப் பாடி யொன்று, தந்தக்கா லென்னதரா திருந்தக்காலென்ன சொல்லுந் தமிழ்ச் சொல்வீரே” எனக் கூறினர்.

ஓமதிரவியங்கள்

அவ்யம் இது ஹோமம் செய்யப்படும் திரவியம். இது கிருதம், கிருதாகிருதம், அகிருதம் என மூன்று வகை. அன்னம், நெற்பொரி, வருத்தமா முதலிய அவிசுகிருதம், கிருதம் பக்குவஞ் செய்யப்பட்டது. அரிசி முதலிய கிருதாகிருதம், நெல்முதலிய அசிருதம். ஓமதிரவியங்களில்யவம் சிறந்தது. வீரிஹி எனும் நெல்லும் சிறந்ததே. இவையிரண்டும் கிடையாவிடின் தயிர், பாலால் ஓமஞ்செய்க. அவை கிடைக்காவிடிற் கஞ்சியினாலாயினும் நீரினாலாயினும் செய்க, ஓமத்திற்குக் கூறிய திரவியம் கிடையாவிடின் அதனையொத்த மற்றொன்றால் செய்க. (காத்யாயனர்.) ஓமதிரவியம் (18) விறகு, நெய், பால், தயிர், துவரை, பொரி, கடுகு, சமித்து, பயறு, பணிகாரம், வெல்லம், பொரிமா, தேன், குழைச்செந்நெல், உளுந்து, சம்பாநெல், எள், சருவாகிய அமுது முதலிய. (சைவபூஷணம்.)

ஓமன்

குருசத்திரன் குமரன். இவன் குமரன் சுதபசு.

ஓமாலிகை

(32) அவை “இலவங்கம் பச்சிலை சச்சோலமேலம், குலவிய நாக ணங்கோட்டம், நிலவிய, நாகமதாவரிசி தக்கோலநன்னாரி, வேகமில் வெண்கோட்ட மேவுசீர், போகாத, கஸ்தூரி வேரிவிலா மிச்சங்கண்டில் வெண்ணெய், ஒத்தகடு நெல்லியுயர் தான்றி, துத்தமொடு, வண்ணக்கச் சோலமரேணுகம் காஞ்சியுட, னெண்ணும் சயிலேக மின்புழுகு, கண்ணுநறும், புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னுதமாலம் பெருங்குளம், பன்னும், பதுமுக நுண்ணேலம் பைங்கொடு வேரி, ததிர்நகையா யோமாலிகை. “

ஓம்படை

இன்ன காரியத்தைச் செய்யு மது தன்மையெனச் சொல்லி வேந்தன் முன்னே நின்று புலமை மிக்கவன் அடுத்துச் சொல்லியது. (பு~வெ~பாடாண்.)

ஓய்மானல்லியக்கோடன்

நன்னாகரால் பாடப்பெற்றவன். இவன் மாவிலங்கை ஆண்ட சிற்றரசன். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாறு இவன் பொருட்டுச் செய்யப் பட்டது. இவனை ஏறுமா நாட்டு நல்லியக் கோடன் எனவுங் கூறுவர். இவலுக்கு ஆமூர், எயிற்பட்டினம், வேலூர் முதவிய இருந்தன. இவனைப் பாடிய புலவர் புறத்திணை நன்னாகனார். (புற~நா).

ஓய்மானல்லியாதன்

புறத்திணை நன்னாகரால் பாடப் பெற்றவன், இவன் கொடையாளி. (புற~நா.)

ஓய்மான் வில்லியாதன்

நன்னாகரால் பாடப்பெற்றான், இவன் இலங்கையென்னும் ஊர்க்குத் தலைவன். ஓய்மா நல்லியக்கோடன் சந்ததியான். (புற~நா.)

ஓரம்போகியார்

ஏடெழுதுவோர் பிழையால் ஏடுகளில் இவர் பெயர் ஓரம்போதியா ரெனவும், ஒரேர்போகியாரெனவும், ஒன்னாருழவரெனவும், கரம்போகியா ரெனவும், தரம்போகியாரெனவுங் காணப்படுகிறது. மருதத் திணையை விரித்து அந்நிலத்துள்ள கருப்பொருள்களைத் திணைக்கேற்ற பொருள்களாகக்கொண்டு உள்ளுறையுவமம், இறைச்சி முதலாயவற்றையமைத்துப் பலவகை சத்துவமும் புலப்படக்காட்டிய பரத்தையிற் பிரிவு முதல் எல்லாவற்றையும் தெளிவாகக் கூறும் ஆற்றலுடையவர்; இவர் பாடியவற்றுட் புறமொன்றொழித்து ஏனைப்பாட லனைத்தும் மருதத்திணையே. இவராற் பாடப்பெற்றோர் ஆதன், அவனி, இருப் பையூர் விராஅன், பாண்டியன், சோழர், மத்தி முதலாயினோர். இத்தகைய மாதரே காதலர்பாற் புலத்தற்கு உரியரென்று தோழிகூற்றாக இவர் கூறியது அருமை வாய்ந்தது. அகம்; 316, இதிற்கூறிய உள்ளுறை பாராட்டற்பாலது, புணர்ச்சியின் பங்கூறத் தலைவியைப் புகழ்வது மகிழ்ச்சி தாற்பாலது. குறு 20; இவர் பாடி யனவாக நற்றிணையில் இரண்டு 20, 360 பாடல்களும், குறுந்தொகையில் 4ம், ஐங்குறு நூற்றில் முதல் 100ம், அகத்தில் 2ம், புறத்தில் ஒன்றுமாக 109 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவர் பாடிய ”வெள்ளி விழுத்தொடி” என்ற அகம், 286ம் பாடலை யெடுத்து உடன்பாடாக நக்கீரனார் குறிப்புரை களவியல் 18, கூறியதும், அதனை நச்சினார்க்கினியர் ”பெரியோரொழுக்கம் பெரிதெனக்கிளந்து பெறு தகையில்லாப் பிழைப்பினும்” தொல். பொருள் 150; என்ற தன்கீழ் நக்கீரனார் கூற்றுக்கெதிர் மறையாகக் குறிப்புரை கூறியதும் ஆராயத்தக்கது. (நற்.)

ஓரி

இவன் கடையெழு வள்ளல்களி லொருவன். வல்வில்லோரி யெனவும், ஆதனோரி யெனவும் கூறப்படுவான். கொல்லிமலையையும், அதனைச் சூழ்ந்த நாட்டினையும் அரசாண்டிருந்தவன் ” ஓரி பல்பழப் பலவின் பயங்கெழுகொல்லி ” அகம் 208. ”வல்வில்லோரி கொல்லிக் குடவரை ” குறு 100 இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வண்மையன். இவன் கொல்லிமலையை ஆண்டு வருசாளிற் அதிகமானெடு மானஞ்சி சென்று திருக்கோவலூரை முற்றுகையிட்டு வென்று கைப்பற்றிக் கொண்டான். அதனை ஆண்டிருந்த மலையமான் திருமுடிக்காரி அஞ்சியோடு போரில் எதிர் நிற்கலாற்றாது தோற்றோடிச் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையிடம் அடைக்கலம் புகுந்தான். அச்சரமான் கொல்லி மலையைத் தான் பெறவேண்டு மென்றும் குறிப்புடையானதலை அறிந்த காரிபடை யொடு சென்று கொல்லி மலையில் ஓரியுடனே போர்புரிந்து ஓரியைக்கொன்று தான் மிக்க ஆரவாரத்தோடு ஓரியின துநகரினுட்புகுந்தான். அங்ஙனம்புகுதலும் ஊர்முழுதும் ஒவ்வென்னும் ஒலியுண்டாயிற்று. ”ஓரிக்கொன்ற வொரு பெருந்திருவிற், காரிபுக்க நேரார் புலம் போற் கல்லென்றா லூரே ” நற் 320. பின்னர் அக்கொல்லிமலை முதலியவற்றைச் சேரலனுக்கே கொடுத்து விட்டனன். “முள்ளூர், மன்னன் கழறொடிக்காரி செல்ல நல்லிசை நிறத்த வல்வில்லோரிக் கொன்று சேயலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி அகம் 209. இவ்வோரியை நற்றிணையில் 6ம் பாடலிலும், 265ம் பாடலிலும் சிறப்பித்தவர், பாணர்; 320ல் சிறப்பித்தவர் கபிலர். இவன் கூத்தாடுவார்க்கு வேண்டிய பொருள் கொடுத்துக் காரிப்புரவியைச் செயித்த ஓரியென்னுங் குதிரையையுடையான். கழைத் தின் யானையாரால் பாடப்பெற்றவன்.

ஓரிற்பிச்சையார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் தாம் பாடிய குறுந்தொகைச் செய்யுளில் “ஓரிற் பிச்சையார மாந்தி எனக் கூறியிருத்தலால் இவர்க்கு இப்பெயர் வந்தது போலும் குறு 277.

ஓரெழத்தினத்தா லுயர்ந்தபாட்டு

இது சித்திரக்கவியிலொன்று, இது, ஓரெழுத் தினாலும், ஒருசார் இனத்தினாலும் பாடுவது (யாப்பு~வி)

ஓரேருழவர்

ஒன்னாருழவர்க் கொருபெயர் (புற~நா)

ஓரை

ஓரையாவது மணி, நாளொன்றுக்கு (24) ஒரையாம் ஒராதிபர் எழுவர்.

ஓரோடத்துக் கந்தரத்தனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~று) (குறு~தொ.)

ஓவிய நூல்

இந்நூலின் வரலாறு தெரியவில்லை. சிற்ப நூலாயிருக்கலாம்.

ஓவியசீ சேநன்

சித்திரசேநன் என்னும் கந்தருவன், கந்திற்பாவையி லதிட்டித் திருக்கும் துவதிகனென்னும் தெய்வத்தின் நண்பன் (மணிமேகலை)

ஓஷதிகள்

இவை நான்குவகை, அவை. மரம், செடி, கொடி, புல், இவற்றில் எண் வகைப்பொருள்கள் வேர், பட்டை, ரசம், இலை, புட்பம், பழம், விதை இவைகள் ஒவ்வொன்றும் அறுவகைருசிபெற்று வெவ்வேறு தொழில்களைச் செய்யும்.