அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஒக்கூர்மாசாத்தனார்

ஒரு தமிழ்ப் புலவர். இவருக்கு எக்கூர்மாசாத்தனார் எனவும் பெயர். (புற~நா.) (அக~நா.)

ஒக்கூர்மாசாத்தியார்

ஒரு தமிழ்க்கவி. கடைச்சங்க மருவியவர். இவர் பெண்பாலர் போலும், (அக புற~நா.)

ஒங்காரேசன்

காசியில் உள்ள சிவப்பிரதிட்டை.

ஒசைக்குற்றம்

அறுத்திசைப்பு, வெறுத்திசைப்பு, அகன்றிசைப்பு என்பன. (யாப்பு~வி.)

ஒட்டகச்சிவிங்கி

ஒட்டகக்குதிரை, கிராபி இது ஒட்டகத்தைப்போல் கழுத்தும் காலும் நீண்டும், சிவிங்கியைப்போல் தேகத்தில் புள்ளியுமுடையது ஆதலால் இப் பெயர் பெற்றது. இது கழுத்து நீண்டும், கண் பருத்தும், தோல் புள்ளி பெற்றும், நாக்கு ஒரு முழம் நீண்டும், மேலுதடு நீண்டும், தோல் மஞ்சளும் கறுப்புங்கலந்த புள்ளிபெற்றும், காற்குளம்புகளிரு பிளவாய் அகன்றுமிருக்கும். மிரட்சியுள்ளது. முள்ளடர்ந்த இலைகளில் விருப்பமுள்ளது. சாதுவானது. சிங்கத்தையொத்த மிரு கங்களும் இதன் உதைக்கஞ்சும். இது ஓடத்தொடங்கின் வேகமுள்ள குதிரையும் இதன் வேகத்தைப் பிடிக்காது. இது முள்ளுள்ள காடுகளில் வசிப்பதால் இதை வேட்டையாடுதல் கடினம். இதன் தசை ருசியுள்ளதாலும் தோல் அழகாகவும் கனமாகவுமிருத்த லாலிதை வேட்டையாடுகிறார்கள்.

ஒட்டகம்

1. பாலைவனக்கப்பல் இது, கழுத்தும் காலும் நீண்டும், வால் குறுகியும், முதுகு நிமிர்ந்தும் உள்ளது. நிறம் பழுப்பு, கொம்பில்லை; குளம்பு மணலில் புதை யாதபடி விரிந்திருக்கும். வயிறு பலநாட்கருக்கு வேண்டிய தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ளும் அளவினது. அரேபிய ஒட்டகங்களுக்கு ஒரு திமிலும், மத்திய ஆசிய ஒட்டகத்திற்கு இரண்டு திமில்களும் உண்டு. சுமையை இதற்கு அளவாகப் போட வேண்டும். அளவிற்கதிகமாயின் எழுந்திராது. பொறாமையுள்ளது. இரை கிடைக்காவிடில் தன் கொழுப்பைத் திமிலினின்று கிரகித்துத் தின்னும். இது பாலை வனங்களில் நீரின்றி யாத்திரை செய்யும். நீருள்ள இடங்களை மோப்பத்தாலறியும். ஆகாரம் கசப்பு, முள்ளுள்ள இலைகள், அரேபியா, மத்ய ஆசியா, சீனா, திபெத் முதலிய இடங்களில் அகப்படும். இதில் நாளொன்றுக்கு (30) யோசனை விழுக்காடு சுமை தாங்கிச் செல்வதும் (6) தால உயாமுள்ள வலியவுடம் பினையுடையதும் நல்ல முகத்தினையுடையதும் உத்தமமானது. 2. சோம்பலுள்ள ஒட்டகம் ஒன்று இரைதேடச் சோம்பிப் பிரமனை நோக்கித் தவம் செய்து நீண்ட கழுத்தைப்பெற்று இருந்த இடத்திலிருந்தே ஆகாரந்தேடி மழைக்கஞ்சிக் குகையில் கழுத்தைப் புகுத்தி நரியால் இறந்தது, (பார~சாந்தி.)

ஒட்டக்கூத்தர்

1. இவர், செங்குந்தர் மரபிற் பிறந்து கூத்தர் எனும் பெயருடன் வளர்ந்து கல்விபயின்று புதுவைச்கணிருந்த சடையன் தந்தையாகிய சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்து வந்தனர். இவரை அவ்விடம் வதிந்த காங்கேய முதலியார் எனும் உபகாரி ஆதரித்துப் போற்றிக் கல்வி வல்லவராக்கிக் கவுடப்புலவன், கவிராக்ஷஸன் எனப் பெயரிட்டனர். அந்நன்றி பாராட்டிக்கூத்தர். இவர்மேல் நாலா பிரக்கோவையென ஓர் பிரபந்தம் பாடினர். அக்கோவை சொன்னோக்கம், பொரு ணோக்க முடையது. இவர் கவிவல்லவராயின பின் புவிச்சக்கரவர்த்திகளாகிய விக்ரமசோழன் முதலிய மூவர்க்கும் சிறந்த கவிச்சக்கரவர்த்தியாக விளங்கியவர். விக்கிரம சோழனிறக்கவும் இவனது குமரனாகிய குமாரகுலோத்துங்கனுக்குப் பல வாற்ருனுஞ் சிறந்த பெருந்துணையாய்ச் சிறந்து தம் சொல்வழியே அவனை இயக் கிய பெருமையுடையவர். அவனுக்குப் பின்னும் அவன் மகனாகிய இராஜராஜ சோழனாலும் சிறப்புப் பெற்றவர், இவர் விக்ரமம்சாழனிடம் முதல் முதல் சென்ற போது அவன், இவர் பாடிய அரும்பைத் தொள்ளாயிரத்து ஓர் கவியைத் தனக்கு ஒட்டப்பாடச் சொன்னதாகவும் அவ்வாறே உலாப்பாடியபோதும் அவ்வுலாவிற் கண்ணியை இணைத்து ஒரு வெண்பாவாக ஒட்டப்படச் சொன்னான். அவ்வாறே யிவர் பாடியதால் இவர்க்கு ஓட்டக்கூத்தர் எனப் பெயர் உண்டாயிற்று. கூத்தர் ஒட்டிப்பாடிய விக்ரம சோழன் உலா “கையுமலரடியுங் கண்ணுங் கனிவாயுஞ் செய்ய கரிய திருமாலே வைய, மளந்தாயகளங்கா வாலிலைமேற்பள்ளி, வளர்ந்தாய் தளர்ந்தா ளென்மான்” அரும்பைத் தொள்ளாயிரத்து ஒட்டப் பாடியகவி, ”நடித்தது நச்சரவுச்சி மதிலிலங்கை, பிடித்தது வென்ற விருப்பது தோள் பதினெண்பகலே முடித்தது பார தம் வீரப்புலிவைப்ப மூரிச் செண்டால், அடித்தது பொற்கிரி விக்ரமசோழ வகளங்கனே,” இவரைச் செங்குந்தர் தங்கள் மீது ஒரு பிரபந்தம்பாடக் கேட்கக் கூத்தர் நான் அந்தப்படிப் பாடின் குலப்புகழாமென எண்ணிச் சும்மா இருந்தனர். அச்செங்குந்தர் இவர் குலாபிமான மற்றவர் என்று கோபித்து இவரைக் கொல்வதற்கு ஒருப்பட்டனர். அதனை அறிந்த கூத்தர், புவனையென்னு மூரிலிருந்த தன் பாலன் புள்ளசோமன் என்பவனிடம் ஓடி அடைக்கலம்புக்கனர் “அடையென் பார் தள்ளென் பாரன் பொன்றிலாமற், புடையென்பார் தங்கடைக்கே போகேங் கொடை யென்றான், முந்துஞ் சோமா புவனை முன்னவனே நின் கடைக்கீழ், வந்துஞ் சோமாதலான் மற்று,” சோமன் புலவரைக் காக்கவேண்டித் தன்னொரு மகனைப் பேழையுளடைத்துத் தன் வீட் டைச் சூழ்ந்துகொண்டிருந்த பழிகாரர் பால் காட்டி இதன்கணுள்ள கூத்தனை நீங்கள் விரும்பியவாறு செய்ம்மின் எனப், பழிகாரர் பேழையெடுத்துச் சென்று தனித்த இடத்திற் கொண்டுபோய்ப் பார்க்கக் கூத்தரைக் காணாது அதில் சோமன் புதல்வனைக் கண்டு சோமனது வண்மையைவியந்து அவன் மகனைச் சோமனிடம் விட்டனர். சோமன் செங்குந்தரை நோக்கி உங்கள் வீரத்தை இப்போது காட்டுவீரா யின் புலவர் உங்களைப் பாடாதிரார் என்ன அவர்களதற்குடன் பட்டுத் தம் தலைகளை முன்பே அறுத்துவிடக் கூத்தர் அவைகளைச் சோழன் அரண்மனைக்கு முன்னிட்டு, அரசன் காண அவற்றை ஆசனம்போ லடுக்கியிடக் கட்டளையிட்டு அச்சிரச் சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து பதுமாசனமிட்டுச் சரஸ்வதியைத் தியா னித்துக் கடைசியில் ”கலைவாணி நீ புலகிலிருப்பதுவும் கல்வியுணர் கவிவல் லோரைத், தலையாகக் காப்பது வுமவர் நாவில் வாழ்வதுவும் சத்தியமேயன்றோ, சிலை வாணனா விருந்தாயிரம் புயங்கடுணிந்து முயர்சீவனுற்றான், தலையாவி கொடுத்திடும் செங்குந் தருயிர் பெற்றிட நீதயை செய்வாயே” என்ற செய்யுளைப் பாடி அற்ற தலைகளைச் சரஸ்வதியின் கிருபையால் ஒட்டச்செய்து இறந்தவர்களை எழுப்பினர். ஆதலால் சோழன் இவருக்குக் கூத்தரென்னும் பெயருடன் அடைமொழி புணர்த்தி ஒட்டக்கூத்தரெனவும், இவர் மரபினர்க்குச் சீரச் சிம்மாசனாதிபதிகள் எனவும் சிறப்பும் விருதுங்கொடுத்தனன் என்ப. இவர் தங்கள் மரபினர் விஷயமாகப் பாடிய பிரபந்தம் ஈட்டியெழுபது எனப்படும். இவர் பின்னும் தம்மரபினரை (நிலை தந்தா ருலகினுக்கு மியாவருக்கு மானமதை நிலைக்கத் தந்தார், கலைதந்தார் வணிகருக்குஞ் சீவனஞ் செய்திட வென்றேகையிற் றந்தார், விலை தந்தார் தமிழினுக்குச் செங்குந்த ரென்கவிக்கே விலையாகத் தந், தலை தந்தார் எனக்கு மொட்டக் கூத்தனென்னப் பெயரினையும் தாம் தந்தாரே ” எனப் புகழ்ந்து பாடினர். இவரையும் கம்பரையும், சோழன் இராமாயணம் பாட ஏவ, இவர் பாடி முடித்துக் கம்பர் இயற்றிய செய்யுளைக் கேட்டுக் கம்பர் செய்யுளின் முன் என் செய்யுள் ஏதாமெனக் கிழித்தெறிகையில் கம்பர் உத்தரகாண்டத்தை மாத்திரம் கிழியாது வாங்கிக்கொண்டனர். சோழன் வரிசையளித்து விடுத்த போது கூத்தர் கூறிய வகுப்பு ” இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன் றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களத் திடுக்குற்றஞ்சும் வெஞ்சினத்துச்செம்பியன் றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன, படுக் கக்கம்பளம் பரக்கக் குங்குமம்பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம், கடுக்கக் குண்டலங் கலிக்கச் சங்கினங்கவிக்குப் பஞ்சரங்க விக்குத் தொங்கலே ” இந்த விருதுகள் யாருக் கென்றபோது கூத்தர் பாடியது “பத்துக்கொண்டன திக்கும் பதறிப் போய் முடியப், பைம்பொற்றாரகைசிக் தப் பதிரண்டத் திடையே, மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால், வடி வாகிப் புவிகைக்கொண் டருண்மானா பரணா, முத்துப்பந் தரினிற்குங் குருளைக் குஞ்சினவேன், முருகற்கும் பொதியக்கோ முனிவற்கும் பதுமக், கொத்தாக் குஞ் சடிவக்கொந் தளருக்கு மல்லாற், கூழைத்தண்ட மிழர்க்கேன் கொடியுங்கா னமுமே. ” இப்புலவா சோழன் பாற்றமக் குண்டாகிய செல்வாக்கினால் புன் கவிகளைத் தலையறுப்பித்து வந்தனர். அவர்களைத் தலையறுத்தபோது சேரனும், பாண்டிய னும் பாவ மென்றோலை வரவிட இராஜா வெட்டவந்தபோது பாடியது ” அன்றை யினு பின்றைக்க கன்றதோ வல்லாது, குன்றெடுத்து நீ திருத்திக்கொண்டாயோ வென்று, மடைந்தாரைக்காக்கும் களங்கா நீயு, நடந்தாயோ நாலைந் தடி. ” கவிகளையறுத்தபோது புலவரெல்லாம் வெருளப் பாடியது பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே, தாட்டுக் கடற்புலியஞ் சலன்றோ வறுத்துக் கிடந்த, சூட்டுக்கதிர் கணிலத் தடங்காமற் றொகுத்து மள்ளர், மேட்டுக்குவாலிடும் பொன்னி நன்னாடுடை வேற்கண்டனே. ” கவிஞரை வெட்டவேண்டா மென்று நெற்குன்றவான முதலியார் பாடியது “கோக்கண்டு மன்னர் குரைகடற் புக்கிலர் கோகனகப், பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூவில் விண்ணோர், காக்கண்ட செங்கைக்கவிச் சக்ரவர்த்தியின் கட்டுரையாம், பாக்கண் டொளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே. ” தேவி யூடலாய்க் கதவடைத்த போது பாடியது காத்துஞ் சிரத்துங் களிக்குங் களிற்றுடைக் கண்டன் வந்தா, னிரத்துங் கபாடமினித் திறப்பாய் பண்டி வனணங்கே, யுரத்துஞ் சிரத்துங் கபாட திறந்திட்ட துண்டிலங்கா, புரத்துங் கபாட புரத்துங் கல்யாண புரத்தினுமே” கண்டன் துலாபுருடதானம் பண்ணிய போது கூத்தர் பாடியது. “தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட செம்பொற்றுலாத் திடைவண், இழுகின்ற தார்க்கண்டனேறிய ஞான்றினு வாமதிபோய், விழுகின்ற தொக்கு மொரு தட்டுக் காலையில் வேலை யில்வந், தெழுகின்ற ஞாயிறொத்தான் குலதீப னெதிர்த்தட்டிலே. ” ஆனை நிகளம் விடுத்தபோது கூத்தர் பாடியது இன்னங் கலிங்கத்திகல் வேந்தருண்டென்றோ, தென்னன் றமிழ்நாட்டைச் சீறியோ சென்னி, யகளங்காவுன்றன யிராவதத்தின், நிகளங் கால்விட்ட நினைவு. ” கண்டன் செண்டு வெளியிற் குதிரையேறிய போது சுத்தர் பாடியது. ”கண்டன் பவனிக் கவனப்பரி நெருக்கான், மண்டுளங்காதேயிருந்தவா கொண்டிருந்த பாம்புரவி தாயல்ல பாரருவி தாயல்ல, வாம்புரவி தாயவகை. ” ஒட்டக்கூத்தர் பாதி சோழன் பாதி பாடியது. ஆடும் கடைமணி நாவசையாம வலை மெல்லா, நீடுங்குடையிற் றரித்த பிரானென்று நீந்தருவம், பாடுங் கலிப்பெருமா னொட்டக்கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென்றே யென்னைச் சொல்லுவரே. இராஜா கை கொடுத்த போது கூத்தர் பாடியது, “கொலையைத் தடவிய வைவேலரக்கர்குல மடியச், சிலையைத் தடவிய கையேயிது சகதண்டத்துள்ள, மலையைத் தடவிய விந்தத்தடவி மலைந்த வொன்னார் தலையைத் தடவி நடக்குங் கொல்யானைச் சயதுங்கனே. ” மடையனைத் தண்டஞ் செய்ததை விலக்க கூத்தர் பாடியது மீனகம்பற்றிய வேலையு மண்ணையும் வெற்படங்கப், போனகம் பற்றிய மாலலையோ பொருந் தாவரசர், கானகம்பற்றக் கனவரைபற்றக் கலன்கள்பற்ற, வானகம்பற்ற வடிவேல் விடுத்த வறதுங்கனே. “கூத்தர் மாணாக்கன் பாடிய அந்தாதிச் சழத்தி “மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக், காவுறங்கினவின்ன மென்மகள் கண்ணுறங்கிலள் கைடணைக், கோவுறங்கு கடைத்தலைக்குல தீபவள்ளைகுதட்டநின், சாவுறங்கு புகார சஞ்சலவஞ்ச லென்ன வடுக்குமே. ” இராசாவுக்கு வேளையேதென்று கேட்ட சோமனுக்குக் கூத்தர் சொல்லியது. ” தன்னுடைய தேவியர்க்குத் தார்வளவன் நானுரைப்ப, துன்னுடைய சீர்த்தியுயர் நலமே துன்னு புகழ்ச் சோமாதிரிபுவனத் தோன்றவே நின்புகழை, யாமா ருரைக்க வினி. ” அரியைப் பாடவேண்டு மென்ற போது கூத்தர் பாடியது, “ஆரேயெனு மொன்று சொல்லத் தொடங்கனு மவ்விடத்துன், பேரே வருமென்ன பேற பெற்றேன் பெரு நான்மறையின், வேரே மிதிலையின் மின்னுட னேவெய்ய கானடந்த, காரே கடல் கொளுந் தச்சிலை வாங்கிய காகுத்தனே. ” இவர் சோழனுக்குப் பெண் வேண்டிப் பாண்டியன் சமஸ்த்தானத்திற்குச் சென்றபோது சோழனைப் புகழ வேண்டிப் பாடிய செய்யுள் “கோரத்துக் கொப்போகன வட்டமம்மானே, கூறுவ துங்காவிரிக் குவையையோ வம்மானே, ஆருக்கு வேம்புநிக ராகுமோவம் மானே, ஆதித்தனுக்கு நிகாம்புலியோ வம்மானே, வீரர்க்குள் வீரனொரு மீனவனோவம்மானே, வெற்றிப்புலிக் கொடிக்கு மீன கொடியோ வம்மானே, ஊருக்குறந்தை நிகர் கொற்கையோவம்மானே, ஒக்குமோசோ ணாட்டைப் பாண்டி நாடம்மானே. ” இவர் சோழனைப் புகழவேண்டி ” வென்றி வளவன் விறல் வேந்தர் தம்பிரான், என்று முதுகிற்கிடான் கவசம் துன்றும் ” எனக் கூறிச் சற்று நிதானிக்கையில் பாதி புக ழேந்தி முடித்தனர். இது நிற்க, ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்ணைக்கேட்டுத் தீர்மானித்தனர். சோழன், மணத்தின் பொருட்டுத் தன்னாட்டைக் காக்க ஒட்டக் கூத்தரை வைத்துவிட்டு மதுரைக்குச் சென்றனன், மணமுடித்த பின்னர் தன் குமரிக்குச் சீதனப்பொருளாகப் புகழேந் திப்புலவரையும் மற்றுமுள்ள பலபொருள் களையுமனுப்ப ஒட்டக்கூத்தர், புகழேந்தி தன்னைப் பாண்டியன் சமத்தானத்திலவமதித்த தனிமித்தம் புகழேந்தியைச் சிறையிட்டனர். கல்யாணம் முடிந்தபின் தன் னூருக்கு வந்த சோழன், ஒருநாள் கூத்தருடன் பவனி வருகையில் புகழேந்தி மேன் மாடத்திருந்து பார்க்கச் சோழன் ஒட்டக்கூத்தரை நோக்கி இப் புலவர் சிறந்தவ என்றே வென்னக், கூத்தர் (மானிற்குமோ வந்தவாளரிவேங்கை முன் வற்றிச் செத்த, கானிற்குமோ வவ்வெரியுந்தழன் முன்கனை கடலின், மீனிற்குமோ வந்த வெங்கட்சு றவமுன் வீசுபனி, தானிற்கு மோவக்கதிரோனு தயத்திற்றார் மன்னனே” என்றனர். இவர் தம் வினாவுக்கு விடை தராதவர்களைச் சிறையிலிட்டு நவராத்திரியில் பலியிடுவது வழக்கம், அவ்வழக்கப்படி இவர் நவராத்திரி பூசையில் இராஜன் சமுகத்துப் புலவர்களை வரவிடச் சிறையிலடை பட்டுப் புகழேந்தியால் வல்லவனாய குயவன் வந்து இறுமாந்துநிற்க அவனைக் கண்ட கூத்தர் ” மோனைமுத்தமிழ் மும்மதமும் பொழியானை முன் வந்தெதிர்த் தவனாரடா” என்றனர். இதைக் கேட்ட குயவன் ” கூனையுங் குடமுங் குண்டுசட்டியும், பானையுஞ் செய்யு மங்குசப்பையல் யான்” என்றனன், இதைக் கேட்டயர்ந்த கூத்தர், மற்றொருவனை அழைப்பிக்கப் பொட்டைக்கண் அம்பட்டன் வந்தனன். அவனைக் கண்டு ” விண்பட்டகொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக்கப், புண்பட்ட நெஞ்சொடு மிங்கு நின்றாய் பொட்டையாய் புகலாய்” என்றனர். இதைக் கேட்ட அம்பட்டன் ”கண் பொட்டையாயினும் அம்பட்டன் யான் கவிவாணர் முன்னே, பண்பட்ட செந்தமிழ் நீயுந்திடுக்திடப் பாடுவனே” என்றனன். இதைக் கேட்டு மற்றவனை வருவிக்கக் கம்மாளன் வந்தனன். அவனை நீ யார்? என வசனமாய்க் கேட்க அவன் செல்வன் புதல்வன் திருவேங்கடவன் சகத்குருவாங், கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடுகொண்டு, பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டமாட்டிப் பகைவர் முன்னே, அல்லும்பகலும் அடிப்பேன் கவி யிருப்பாணி கொண்டே என்றனன், இதனைக் கேட்டஞ்சி வேறொருவனை வரு விக்கத் தச்சன் வந்தனன். அவனை நீ யார்? என்ன, அவன் சொன்ன சந்தக்கவி யாவருஞ் சொல்லுவர் சொற்சுவை சேர், இன்ன சந்தக்கவி யாதென்றபோதி லெதிர்த்தவரை, வன்னசந்தங் கெடவாயைக் கிழித்திந்த வாய்ச்சியினால், கன்ன சந்தங்களிற் கவியாப்பைக் கடாவுவனே. என இதைக் கேட்டு மற்றொருவனை வரு விக்க, வண்ணான் வந்து நின்றனன். அவனை நீ யாரடாவென்று செருக்குடன் கேட்க, அவன் “சேலேய் விழி மடவாரிற் செங்கா வன்னஞ் சேர்பழனப், பாலேய் மணவயிற் கூத்தநின் போலியர் பாப்புனைந்த, நூலேய் துகளறத் தூய்தாக்கு நோன்மை நுவல்வதல்லால், மேலேய் தமிழ்ப் புலவோரென்னை யென்ன விளம் புவதே” என்றனன். இதில் ஒட்டக்கூத்தர் கைக்கோளரும் தான் வண்ணானுமாத லால் “பாப்புனைந்த நூலேய்து களறவென்பதில், பாவோட்டி நெய்த வஸ்திரத் திலுள்ள மாசு நீங்க” எனக் கூறியதால் இவன் தம் ஜாதியையும் கூறினான். ஆத லால் யாவரினுந் தீயன் என்று இருக்கையில் புகழேந்தியின் மாணாக்கனாகிய வேளாளன் இவனை இம்மட்டிலே விடுதல் தகுதியன்றென்று கருதி, நீர் சோழ ராஜன்மேற் பாடிய அண்டத்துப் பரணி யென்னும் நூலில், இவ் வண்டத்தையே நகரமாகவும், சக்கரவாளகிரியையே மதிலாகவும், அதற்குட் புறத்திலுள்ள கடல் களையே அகழாகவும், பூமி நடுவிலுள்ள மகமேருவையே கோட்டைக் கொடிக் கம்பமாகவும், உருவகப்படுத்தி வருணித் திருக்கிறீரே அகழ் மதிலின் புறத்திலன் றோ இருக்கவேண்டும், அகத்திலிருப்பதாகக் கூறியது குற்றமன்றோ ? பெரும்புறக் கடலையே அகழெனக்கூற மறந்தீர்போலும், கவிச் சக்கரவர்த்தியாகிய கம்ப நாடர், அயோத்தியா நகரவருணனையில், நேமிமால்வரை மதிலாகநீள்புறப், பாம மாகடல் கிடங்காகப்பன்மணி, வாமமாளி கைமலையாக மன்னற்குப், பூமியு மயோத்திமா நகரம்போலுமே” என்ற செய்யுளைப் பார்த்ததும், கேட்டதும் இல்லையோ என்றான். அந்தமட்டிலே அக்நிதேவனுக்கு அபிடேகஞ் செய்தாற்போல ஒட்டக் கூத்தர் முகங்கருகி வாளா இருந்தனர்; அவரைப் பிடித்திருந்த அகங்காரதுட்டப் பேயோ விட்டுத் தொலைந்தது. நமக்குச் சம்பவித்த மானக்கேடெல்லாம் புகழேந்தி யால் சம்பவித்ததென்று உணர்ந்து மற்றக் கவிஞரை வரவழைத்து அவர்கட்குத் தக்க பரிசு அரசனைக்கொண்டு கொடுப்பித்து, அவர்கள் யாவரையும் தங்கள் இருப்பிடஞ் சேரும்படி செலவு கொடுத்தனர். புகழேந்தியைச் சிறையினின்றுவிடாத செய்திகள் யாவும் தோழிகளாலுணர்ந்த சோழன்மனைவி அரசனிடம் ஊடல் கொண்டு சோழன், பள்ளியறைக்கு வருகையில் கதவடைக்கக் கண்ட சோழன், ஊடல் தணிக்கப் பல இனியமொழிகள் கூறியும் திறவாததால் சோழன், தங்கள் மனைவியர்க்கு ஊடல் நிகழுங்காலத்துப் புலவர்களைக்கொண்டு தணிக்கும் வழக்கம்போல் ஒட்டக்கூத்தரை அனுப்பினன். கூத்தர் பள்ளியறைக்கண் சென்று “நானேயினி யுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த், தேனே கபாடந் திறந்துவிடாய் செம் பொன்மாரி பொழி, வானேறனைய விரவி குலாதிபன் வாசல் வந்தால், தானே திறக்கு நின்கைம்மலராகிய தாமரையே” எனக் கூறக்கேட்ட சோழன் மனைவி, “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என மற்றொரு தாழ்ப்பாளிட்டனள். ” கூத்தர் ஔவையார், கம்பர் புகழேந்தி இருவர்களையும் கண்டு கால் மடக்குதற்கும் தம்மைக்கண்டு கால் மடக்காதிருப்பதற்கும் காரணம் சோழனைக்கொண்டு கேட்பிக்க, ஔவையார் அவர்கள் கவிவன்மைக்கும் நுண்ணறிவிற்குமென்று அறிவித்து அவற்றைத் தெரிவிப்பான் வேண்டிப் புகழேந் தியும் கூத்தருமிருக்கும் சவைக்கண், தம்துகையால் சில மிஞ்ஞைகளைக் காட்டி யவற்றிற்கிணங்க வெண்பா பாடுக என இருவரையுங் கூறக் கூத்தர் ” இவ்வளவு கண்ணினா ளிவ்வளவு சிற்றிடையாள், இவ்வளவே போலுமிள முலையாள் இவ்வளவு, நைந்தவுடலாணல் மேவுமன்மதன் கை, ஐந்து கணையால் வாடுவாள்” என்ன அக்கருத்துத் தமதல்லாததைத் தெரிவித்து மீண்டும் திங்களின் பெயரில் ஒரு கவி, பொருள் வேற்றுமையாய் மும்முறை வரப் பாடுக எனக் கூத்தரும் “வெள்ளத்தடங் காச்சினவாளை வேலிக்கமுகின் மீதேறித், துள்ளிமுகிலைக் கிழித்து மழைத்துளியோ டிறங்குஞ் சோணாடா, கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா அண்டர் கோபாலா, பிள்ளை மதிகண்டெம்பேதை பெரியமதியு மிழந்தாளே” என்றனர். இதனைக் கேட்ட ஔவையார் “ஒட்டா ஒருமதி கெட்டாய் ” என்று அரசனுக்கு அவ்விருவரின் வன்மை தெரிவித்தனள். பின்னொரு நாள் சோழன் தனது சமஸ்தான வித்வான்களிருவரையும் அழைத்துக் கொண்டு திரு நெய்த்தான மென்னுஞ் சிவத்தலஞ் சென்று சேவித்து அவர்களிருவரையும் பாடக்கூற, ஒட்டக்கூத்தர் “விக்காவுக்கா வித்தாவிப்போய் விட்டானட்டார் சுட்டூர் புக்கார், இக்காயத்தாசைப் பாடுற்றேயிற் றேடிப்போய் வைப்பீர் நிற்பீர், அக்கா டப்பேய் தொக்காடச் சூழப்பாடத் தீவெப் பாடப்பூண், நெக்காடக்கானத் தாடப்போ நெய்த்தானத் தானைச் சேவித்தே” என்றனர். மற்றொருநாள் திருக்குறுங்குடிப் பெருமாளைப் பாடக்கூறக் கூத்தர் “திக்குக ளெட்டுக்கயந்துக்க முற்றுத் திடுக்கிட் டலற, மைக்கடற்குட் சரந்தைக்க விட்டோற் கிடமாமதுர, இக்கு முற்றிக்கணுச் சற்று விட்டுத் தெரித்திட்ட முத்தைக், கொக்குமொக்கிக் கக்கிவிக்குமச் சோலைக் குறுங்குடியே” இவர் புகழேந்தி நளவெண்பா பாடிச் சோழன் சமஸ்த்தானத் தரங்கேற்றுகையில் “மல்லிகையே வெண்சங்கா வண்டூத” எனுஞ் செய்யுளில் சங்கூது வோன் ஊதுங்கால் சங்கினடிப்புறத் தூது வானேயன்றி மேற்புறத் தூது தல் வழக்கன்றெனவும் செப்பிளங் கொங்கை மீர் திங்கட் சுடர்பட்டுக் கொப்புளங் கொண்ட குளிர்வானை” எனும் வெண்பாவில் திங்களின் சுடர் பட்டுக் கொப்புளங்கொண்ட குளிர்வான் என்றது சரியே ஆயினும் அக்கொப்புளத்தி லிருந்து சீயாவது சிலை நீராவது வடிதலுண்டோ என வினாவி அவர் கூறிய விடையா லமைந்து, ஒருநாள் புகழேந்தியின் கல்வித்திறத்தை வியந்து இராப் போஜனத்திற்குச் செல்லாமலிருக்கையில் மனைவியார் கால நீட்டித்ததறிந்து போஜனத்திற் கழைக்க, வராமை கண்டு சீனிகலந்த பால் கொண்டு வருவல் எனக், கூத்தர், நீ பாலில் புகழேந்தியின் வெண்பாவைப் பிழிந்து தரினும் வேண்டேன் என்றனர். இதனைக் கேட்டு ஆங்குவந்து ஒளித்திருந்த புகழேந்தியார், பொருக்கென வெளிப்படத் தம்பாற் பகைவிட்டுச் சிநேகம் பாராட்டக் கண்டு இருவரும் களித் திருந்தனர். இவ்வாறு சோழனிடத்து வளம்பெற வாழ்கையில் ஒருநாள் குடந்தை வீரசிங்காதன மடத்தில் வாழ்ந்த தவசிகள் பலரில் ஒருவர் முத்தமிழ் விரகராகிய ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தை யோதிப் பலியேற்பவர், திருவீழிமிழலை யீசர் திருப்பதிகத்தை ஓதிக்கொண்டு பலியேற்கு மொருதினம், அத்திருப்பதி கத்திலுள்ள தாகிய “கல்லானிழற்கீழா யிடர்காவா யெனவானோ, ரெல்லாமொரு தேராய யன்மறை பூட்டி நின்றுய்ப்ப, வல்வாயெரி காற்றீர்க் கரிகோல் வாசுகி நாண்கல், வில்லாலெயி லெய்தானிடம் வீழிம்மிழலைய்யே. ” என்னுந் தேவாரத்தைச் சொல்லிக்கொண்டே ஒட்டக்கூத்தரது மனைவாயிலில் நிற்க, அப்புலவர் பலவும் அறிந்தவராயினும், அத்தேவாரப் பொருளைப் பலகாற் சிந்தித்தும் விளங்கா மையின் மயங்கி, அச்சிவயோகியாரை “இத்தேவாரத்தின் பொருள் கூறுக” என்று கேட்டனர். அவ்யோகியார் சினந்து, ‘இதன் பொருள் யானறிந்திலேன். நீ அறிந்துரைப்பினும், அத்தேவாரத்தின் ஒரு மொழியேனும் பொருள் நிரம்புமோ’ என்றனர். இது கேட்ட புலவர், விருப்பமிகும் இன்னிசையோடு பாடுதலால் நிச்ச யித்தற் கரிதாயிற்று; ஆதலின் அதன் பொருள் யாது என்று கேட்டவழி, அவர் அதன் பொருளை மொழியாது வசைமொழிந்தனரென்று பெருங்கோபங் கொண்டு அச் சிவயோகியாரைப் புலவர் கசையைக் கொண்டு அடிக்க, அவரும் மடிந்து வீழ்ந்தார். மாறுபட்ட மனத்துடன் பெருஞ்சினங்கொண்ட ஒட்டக்கூத்தர், அழிவற்ற சிவனடியார்க்கு இவ்வாறு அழிவியற்றித் தம் மனையடைய அச்சிவயோகியார் வசிக்கும் மடத்திலுள்ள சங்கமர்கள் இச்செய்தி கேட்டலும் பெரிதொலித் தெழுந்து ஆசிரியரை இறைஞ்சி அநுமதி பெற்று வில், வாள், அம்பு முதலிய ஆயுதங்களை ஏந்தியவராகி அப்புலவர்மனையை அடைந்தனர். இவர்கள் வருவதை முன்னரே அறிந்த புலவர், அரசனையடைந்து நடந்த தனைத்தும் அறிவிக்க, ஒருபசுங்கன்றின் பொருட்டுத் தன் புதல்வனைத் தேர்க்காலி லிடறிய சோழன் குலத்துதித்த இராஜ ராஜன் கேட்டு, பெரிதும் மயங்கிக் கலங்கி; இப்பெரும் பழிக்கு என்ன செய்வதென்று நடுங்கி நிற்க, அத்தருணத்தே, ஆங்குப் புலவரிருப்பதை அறிந்த சங்கமர்கள் அரசன் திருமுன்பெய்தி நடந்ததை முறையிட்டார்கள். அம்முறைப்பாடு கேட்ட மன்னன் “சிவபெருமானுக்குரிய வடிவம் குரு, இலிங்கம், சங்கமம் என மூன்றாகுமென்று வேதாகமங்கள் இயம்பாநின்றன. இவ்வொட்டக்கூத்தர் இவற்றை யெல்லாம் அறிந்தும், தம்மனையிற் பலிக்கெய்தி யாதொரு குற்றமுமிலராய் நின்ற சிவயோகியரைக் கொன்று நம்பாலடைந்தனர். இதற்கு யாது புரிவம் என்று வருந்தி அச்சங்கமரை நோக்கி ” அடிகளே இச்சங்கமக் கொலைக்குச் சிவாகமங்களில் விதித்த பரிகாரம் யானே புரிகின்றேன்” என்று பணிந்தனன். சங்கமர், அக்கூத்தனை ஒறுத்தற் குரியேம்; ஆதலால் அவனைக் கொண்டாலன்றி மீளேம் என்று உறுதியாக நிற்க, அரசன் புலவரை வேறோரிடத்திற் சேமித்து வைத்து, புதல்வனை மந்திரியால் அழைப்பித்து, ” எனக்கு நேர்ந்த குறையை மாற்றுவாயாக” எனத் தன் மகனை வேண்ட, அவனும் “பிதாமாதாக்கள் இயம்பியது யாதாயினும் அது தவமென்று கொள்வதே மைந்தர் கடமை; சூரிய குலத்தவருள் தந்தை, ஆசிரியர் இவர் சொற்களைக் கடக்கும் கொடியோரை இப்பூமி தாங்காது, நரகமே தன் பாற்கொள்ளும். மனைவி, புத்திரர் செல்வ முதலியவை அருமையல்ல; கீர்த்தியொன்று அரியது. உடலம் நிலையன் றென்பதை அறிந்தும் அதைப் பொருளாக எண்ணி, உமது உரையைக் கடப்பவனல்லேன். என்னை உமது இஷ்டப்படியே செய்க” என்றனன். இவற்றைக் கேட்ட மனைவன் மகிழ்ந்து மகனை மூடுபல்லக்கில் ஏற்றித் திரையிடுவித்துக் கொண்டு அவையையடைந்து சங்கமரை நோக்கி, “சங்கமக் கொலை புரிந்த இவனை நீர் நோக்குவதுந் தகுதியன்றாதலால், ஓர் மறைவிடத்தில் வைத்துக் கொல்க” எனக் கூறி விடுத்தான். அரசன் சொல்லை மதித்து அச்சிவிகையுடன் ஓரிடத்தைச் சேர்ந்த போது, அச்சங்கமருட் சிலர் ‘இவன் ஒட்டக்கூத்தன் தானா? என்று முகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு பின் கொல்ல வேண்டும். செய்யுங் கருமத்தைத் தெளிந்து கொள்ளாமவே செய்யின், அது மனத் துன்பத்துக்கு ஏதுவாகும்’ என்ன, இது கேட்ட அனைவரும் அவ்வாறே பார்க்க விசைந்து சிவிகைத்திரையை நீக்குதலும் அரசனுடைய குமாரன் அதிலிருத்தல் கண்டு கவலை கூர்ந்து, அவனை அணைத்துக் கொண்டு எல்லாரும் அழுதொலிக்க, அக்குமாரன் “நீவிர் எண்ணியதை என்பாற் செய்க” என்றனன். அப் பெரியரோ, “குழந்தாய்! பாதகமெவற்றினும் கொடிய சங்கமக்கொலை புரிந்தவன் ஒட்டக்கூத்தனாயிருக்க, அவனை விடுவித்து இளவரசுக்குரிய நின்னைக் கொல்லும்படி, நின் பிதா வஞ்சகம் செய்தான்” என்னலும், புதல்வன் யானும் என் தந்தையும் உடன் பட்டு இவ்விதச் செயல் புரிதலின் நீர் விரும்பி எங்களுடன்பாட்டின்படி புரிவது நீதியாம் ” என்றனன், இது கேட்டலும், அப் புதல்வனது அரும்பெருஞ் செய்கையை வியந்து கூறி அவனுடன் திரும்பி அரசனிடஞ்சென்று “அண்ணலே! உன் அரும்பெறற் புதல்வனைக் கொன்று கொலைஞனாகிய கூத்தனைக்காக்க வெண்ணியது நீதியா; நீதிப்படி புலவரை எம்பாற்றருக” என்று உறுதியாக நின்றனர். இம்மொழி கேட்டுக் கலங்கிய வேந் தனது செயலறவு நோக்கிய ஒட்டக்கூத்தர், வேறொரு சூழ்ச்சியை உள்ளத்திலுன்னி. அரசே என்னை, இவ்வடியர்பால் ஈக அடைக்கலம் புக்கயானே இவர்க்கீக என வேண்டும் போது நீர் தருதலால் உமக்கு வருங்குறையாது’ என்றவளவில் அரசன், இதனால் வித்துவாபிமானம் இலனாயினேன்; இனி உங்கள் சித்தம்’ என்று கூறி னன். உடனே புலவரைக் கொண்டு அச்சிவனடியார் சென்றனர்; சூரியன் மேற்றிசை யடைந்தான். அக்காலத்தே, புலவரும் அக்கூட்டத்தவரை வணங்கி, “யோன் முக்காலமும் சிவபூசை செய்யும் நியமமுடையேன்; இன்று அந்நியதி தவ றிற்று; அது தவறா வண்ணம் விடைநங்க” என்று கேட்டுக்கொள்ள, அப்பெரியோ எனைவரும் அன்புடன் “அதுபுரிக” என்றனர். புலவர் அங்குள்ள அரிசொலார் நதியடைந்து நீராடி வெண்ணீறுங் கண்டிகையு மணிந்து ஐந்தெழுத்தைச் சிந்தித்துச் சிவபெருமானைப் பூசித்து ‘என் மனக்கவலையகள் அருள் புரிக’ எனப் பிரார்த்தித்து, பின்பு அருகிலிருந்த முளைச்சாளம்மை என்னுங் காளிகோயிலை அடைந்து யாவரும் விலகியிருக்குந் தருனம் பார்த்து அக்கோயிற் கதவடைத்துத் தாழிட்டுக் கொண்டனர். இஃதறிந்த சிவனடியார்கள் பெருங்கோபங்கொண்டு புலவரை எவ்வாறாவது கொல்ல நினைபுங்கால், அவருட்சிலர், புலவர் ஆலயத்து ளிருப்பதால் விடிந்தபின் வெளிபடுத்திக் கோறலே விழுமிதென்று சொல்ல, அதகுடம்பட்டு அன்றிரவெல்லாங் காவல் பூண்டிருந்தனர். உள்ளேயிருந்த புலவர் ‘இவ்வாபத்தை அகற்றி யருள்வாய் ” என்று அக்காளிகாதேவியைப் பிரார்த் தித்தவழி தேவி அவர் முன்பு தோன்றி, “அருந்தவர்க்கு அநாதித் தெய்வமாக விளங்கும் வீரபத்திரக் கடவுளே உம்குல தெய்வம் என்றெண்ணி, அப்பெருமான் பேரில் ஒர் பிரபந்தமியற்றுக” என்றநள், அது கேட்ட புலவர், தேவியே! யானியற்றும் பிரபந்தத்தை, நீயே எழுதத் திருவுளம் வைத்தால் விரைவின் முடித்து விடலாம் என்னலும் தேவியும் சம்மதித்து, புலவர் சொல்லச் சொல்ல எழுதி வருவாளாயினள். இங்கனம் எழுதும்போது தேவியின் ஒருகையிலேந்திய தீபம் சிறிது சலனமடைய, அத்தருணம், புலவர் வீரரசம்பாடும் நிலைமையிலிருந்த தினால் அக்குண முடையராய், “கைத்தீபம் அசைவதென்’ என்று அத்தேவியின் கன்னத்திலே தங்காத்தாலடித்து, பின் சாந்த ரசம் ஒதுங்கால் தாம் செய்த தவறு தெளிந்து உடனடுங்க, தேவியும், பரிவுடன் இச்செயல் நின்போதமின்றி நிகழ்ந்த தாகலின் அதுபற்றிக் கவலற்க’ என்றருளினள். இவ்வாறு, வீரபத்திரக்கடவுள் வெற்றியை நாறசீரடிப் பாடல்களால், பரணி, என்னும் பிரபந்தமாகப் பாடி முடித்தலும் சூரியனும் இருளகல உதயமாயினன், காத்திருந்த சிவசரணரும் புல வரை வெளியேறும்படி அழைத்தனர். அதற்குப் புலவர் இஃது’ என்று ஓர் துவாரத்தின் வழியே பரணியை நீட்ட, அதனை வாங்கி வாசித்து, இவ்வாறு நம்கடவுள் சரித்திரத்தை முடித்தது வியப்பு எனக் கூறி அதனைப் பாராட்டி, கோபந் தணிந்து குதுகலித்தவராய்த் தங்கைக் கத்தியைத் துவாரத்தின் வழியே நல்கி உம திஷ்டப்படி செய்வீராக’ என்று கூறினர். அதைக்கேட்ட புலவர் யான் செய்த கொலைகாரணமாக என்னைக் கொல்லத் துணிந்த நீர் இங்ஙனமிசைத்தல் ஏன்? எனவினாவ, அச்சிவசரணர், ‘நம்கடவுள் தக்கன் யாகத்தை அழித்த சரிதத்தை நீர் இனிது பாடி முடித்தமையால், உம்மால் இன்னும் பல பிரபந்தங்கள் பாடிக் கொள்ளலாம் என்பதுட்கொண்டு இக்கைக் கத்தியீந்தோம்’ என்னலும், புலவர் வெளிவந்து வணங்கினர். அவ்வருந்தவர், முன்பொருவன் கொணர்ந்ததொரு புஸ்தகம் மெய்ப்பொருணாயனாரது இறுதிக்கேது வாயிற்று; நீர்வரைந்த இந்நூல் தானுங் கொலைதவிர்தற்கு எதுவாயிற்று’ என வியந்து புலவரைப் பலவாறு புகழ்ந்து, அப்புலவர் பிரார்த்தனைப்படி அவர் தீவினைக்குப் பரிகாரமும் இயற்றியருள் புரிந்தார்கள். பின்னர், புலவர், கங்கை வீரேசர் சந்நதியில் தக்கயாகப் பரணியை அரங்கேற்றி, அப்போது தாம் அடிமைப்பட்ட சங்கமக் குரவராற் பலவரிசைகள் அளிக்கப் பெற்றனராய்த் திரும்பி அரசனவையை யடைந்தனர். அரச னெதிர்கொண்டு வந்து ‘புலவரே! கொலைப்போர் வழக்கு எவ்வாறாயிற்று’ என்று வினாவினான். புலவர்”ஆழாக்கு எண்ணெயோடொழிந்தது” என வியப்பிற்கூறி, பரணிபாடியது முதலிய செய்திகளை அறிவித்தலும், அரசனு வந்து அவையோர் மகிழ ஒட்டக்கூத்தரை வியந்து புகழ்ந்து வரிசை பலவளித்து விடுக்க, புலவர் தம்மனையினெய்தி அந்தணர் வறியவராதியர்க்குத் தான தருமமளித்து முன்போலச் சுற்றத்துடன் சுகமாகக் களித்துவாழ்ந்து மரணமடைந்தனர். இவரது மரணச்செய்தியறிந்த ஒளவையார் இவரது பிரிவாற்றாதவராய் “நூற்றெண் பதின் காததூங்கு நறுந் தமிழி, னேற்ற மினியென்னா யியலுமோ போற்று, புவிராசர் யாரும் புகழு மொட்டக்கூத்தக், கவிராசன் காட்சியிலாக்கால். ” எனக் கிலேசித்து நீங்கினர். இக் கதைகளுள் புகழேந்தி சம்பந்தமுள்ள கதைகள் தமிழ் நாவலர் சரிதையிற் கூறப்படவில்லை, தொண்டைநாட்டுப் பிரதிகளில் கண்டவை. இவர் செய்த நூல்கள் இராமாயணம் உத்தரகாண்டம், ஈட்டியெழுபது எழுப்பெழுபது, அண்டத்துப்பரணி, குலோத்துங்க சோழன் உலா, குலோத்துங்கன் கோவை, தக்கயாகப்பரணி முதலிய. 2. “செங்கான் மடவன்னம் படர் தீயா மென வெருவி, சிறையின் பெடை மறை யக்கொடு திரியத்திரள் கமுகின், பைங்காய் மரகதமீது படர்ந்தேறி நறுந்தண், பாளைக்கிடைப்பவளக் கொடிபடர் காவிரி நாடா, தங்காதலியருமைந் தருமுடனாக வணங்கித், தலைகா வெமதுடல்கா வெமதுயிர் காவகளங்கா, கொங்கா மனதுங்கா வெனமதுரே சர்வணங்கும், கொல்யானை யபங்காவிவள் குழலோசை பொறாளே. ” இரண்டாமடி அம்பிகாபதி பாடியது. ”ஏகாவடமென்னிரு கொங்கையின் மேல். ஆகாவடமான தறிந்திலையே, தியாகா பரணா திசையானைகளின், பாகாபரராச பயங்கரனே. ” இச்செய்யுட்களும் ஒட்டக்கூத்தர் பாடியதாகத் தெரிகிறது. இது எந்தச் சமயத்தில் பாடியசோ தெரியவில்லை.

ஒட்டணி

தன்னாற கருதப்பட்ட பொருளை மறைத்து அதனை வெளிப்படுத்தற்குத் தக்க பிறிதொன்றனைச் சொல்லுதல், இது அடைமொழியால் வேறு பலபெயர் பெறும். (தண்டி)

ஒட்டர்

இவர்கள் முதலில் ஒட்டரம் (ஒரிஸா நாட்டிலிருந்து குடியேறினவர்கள்) இவர்கள் கபடமற்ற ஜனங்கள் ஆண்களும் பெண்களும் வேலை செய்து ஜீவனம் செய்வர். இவர்கள் தொழில், வீடுகட்டுதலில் கடைக்கால் தோண்டல் கிணறெடுத்தல் குளம் தோண்டல் முதலிய. இவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியினால் உழைப்பின் சிரமம் நீங்க லாகிரி வஸ்துக்களைப் பானஞ் செய்வர். இவர்கள் பன்றி முதலிய மாமிசபக்ஷணிகள். இவர்களில் பெண்கள் ஒரு புருஷனை நீக்கிவிட்டு வேறொருவனை மணக்கலாம் இவர்கள் பாஷை வடுகு. (தர்ஸ்டன்)

ஒட்டியமுனி

ஒட்டிய நூல் இயற்றியவன். இது மந்திரசாத்திரம்.

ஒட்டிரவாகனன்

ஒரு ராஜரிஷி. அம்பையின் தாயுடன் பிறந்தவன்.

ஒத்தாயனமகாராஜன்

இவன் சில்பி எனும் நாட்டரசன் சைனன், பிறரைக் கருணை புடன் காப்பவன். இவனை சோதிக்க மணி சூடனென்பான் தொழுநோயுடன் வர அவனது அழுகிய திருவடி தீர்த்தங்கொண்டு நற்கதி பெற்றவன்.

ஒத்தாழிசைக்கலிப்பா

இது, ஒத்தாழ்ந் திசைத்தலின் ஒத்தாழிசை. இது, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா, நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா என மூன்று வகைப்படும்.

ஒன்னாருழவர்

ஓரம்போகியாருக்கு ஒரு பெயர். இவர்க்கு ஒரேருழலர் எனவும் பெயருண்டு.

ஒன்பதாம் நாள்

இருவர் சேனைகளும் கைகலந்து யுத்தஞ்செய்கையில் அலம்பு தன் வீமனை எதிர்க்க வீமன் வேலாயுதத்தால் அவனைக் கொன்றனன். அப்போது அருச்சுநனால் (70,000) வீரர் இறந்தனர். பின் திட்டத்துய்ம்மன், தருமன், சிகண்டி, பாஞ்சாலர், இவர்கள் வீஷ்மரையும் துரியோதனன் தம்பியரையும் எதிர்த்தனர். வீஷ்மரால் படையழிவதைக் கண்ட சிகண்டி வீஷ்மர் திகைக்கும்படி அம்புகள் எய்தான். இதைக் கண்ட துச்சாதனன் சிகண்டியைப் பின்னிடச் செய்தான். இவ்வகை இருக்கையில் சதாநீகன் வீஷ்மர்மேல் கணைபெய்து அவரால் இறந்தான், சூரியனும் அஸ்தமித்தான்,

ஒன்பது வாசல்

தேகத்திலுள்ள நவத் துவாரங்கள்.

ஒன்றற்கொன்று தவியணி

அஃதாவது, ஒன்றற்கொன்று உபகரித்தலைச் சொல்லு. தலாம். இதனை வடநூலார் அந்நியோந் நியாலங்கார மென்பர்.

ஒன்றினையொன்று பற்றுதல்

இது குற்றங்களில் ஒன்று, இதனை அன்னியோன் னியாச்சிரயம், இதரேதராச்சிரயம் என்பர் வடநூலார்.

ஒன்றொழிபொதுச் சொல்

ஒரு தொடரிலுள்ள பொதுமொழி ஒரு பாலையொழித்து ஒரு பாலை உணர்த்துவது.

ஒப்பிலா மணிப்புலவர்

இவர் தொண்டை நாட்டார். இவர்மகா கொடையாளி யாகிய குமணனைப் பாடிச்சென்று அவனில்லாமையால் அமணனை நோக்க அவன் என் தமயன் சிரத்தினைக் கொண்டுவந்து கொடுக்கின் வேண்டியது தருவேன் எனக்கேட்டுக் காட்டிற்சென்று தன் தம்பிக்கு அரசைக் கொடுத்து வேடனைப்போல் காட்டிற் காலங்கழித்து வரும் குமணனைச் சில அடை யாளங்களா லறிந்து அவனை நோக்கி மாந்தையிலே வாழும் மகுடத்தியாகி யுனக்கேந்து தழும்போவிரண்டுளதே வேந்தர், முடித்தழும்புன் காலிலே முத்தமிழோர்க் கீயும், படித்தழும் புன்கையிலே’ பார். எனுஞ் செய்யுளைப்பாடி இரப்போர்க்குச் கொடுத்துத் தழும்பேறிய கையாலும், தோளிலுள்ள விற்றழும் பாலும், குமணன் என்றறிந்து ஆடெரிபடர்ந்த கோடுயர் அடுப்பில், ஆம்பிபூப்பத் தேம்பசி யழல, இல்லி தூர்ந்தனள் பொல்லாவறு முலை, சுவைதொறும் சுவைதொறும்பால் காணாமல், குழவி தாய்முகநோக்க, மனைவியென் முகநோக்க யாமும், நின் முகம்நோக்கி வந்தனம் குமணா” என்ற செய்யுளைப் பாடினர், இவன் வள்ளல் ஆதலினால் என் தம்பி விரும்பியது என் தலை, நீர், நான் அரசுசெய்கையில் வரவில்லை இப்போது வந்தீரெனுங் கருத்துடன் ‘. அந்த நாள் வந்திலை யருங்கவிப் புலவோய், இந்த நாள் வந்து நீ நொந்தெனை யடைந்தாய், தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்த தன், விலைதனை மீட்டுன் வறுமை நோய்களையே. ” என்று கூறித் தன் தம்பி தன் தலை ஆயிரம் பொன் விலை பெற்றதாக மதித்ததைப்பற்றி “வெம்புங்காலை வெதும்பி விழுஞ்சிரம், செம்பொன் கோடி விலையெனச் சிந்தித்தான், உம்பர் நாடு முலகினுந் தேடினும், எம்பிபோல் எமக்கியா வருரியதே” என்று உடைவாளை எடுக்கப் புலவர் தடுத்து ஆறு பெருக்கற்ற ருந்திடர் தான் பட்டாலும், ஊறலமையாதோ வுலகாற்றத் தேற, வறியையே யானாலுமென் வறுமை மாற்றச், சிறியை யோசீர்க்கு முணாசெப்பு. ” என்று ஒரு சிற்பியையடுத்து அவனுக்குத் தன்னெண்ணம் தெரிவித்துக் குமணனது வெட்டிய சிரத்தைப்போலச் செய்வித்துக் கொண்டுபோய் அமணராசன் முன் காட்டினார், அமணன் தமயன் சிரத்தைக் கண்டுதுக்கமடைந்து புலவரைக் கொல்ல எண்ணுகையில் புலவர் தமயனை உயிருடன் கொண்டுவரின் இராச்சிய முதலிய அவருக்கே தருவனென்று அவன் உறுதி செய்தபின் அரசனைக் கண்டு தம்பியின் எண்ணம் தெரிவித்து அழைத்து வந்து அரசு கொடுப்பித் துப் பரிசுபெற்றுச் சென்றவர். இவர் மற்றுஞ் சில பிரபுக்களைப் பாடினதாகப் பல செய்யுட்கள் காணப்படுகின்றன. அவை “இடுவோர் சிறிது விரப்போர் பெரிது, கெடுவாய் நமனே கெடுவாய் படுபாவி, கூவத்து நாரணனைக் கொன்றாயே கற்பகப்பூங்கா வெட்டலாமோ கரிக்கு” “மையூருங் கண்ணார் மயங்கப்பொரு கரும்பு, கையூருங் காமாவுன் கண்ணாணை செய்யூர், வளவனையினான் பிரிந்த வாறுனக்குச் சொன்ன, வுளவனையினா னென்றுரை. ” எனக் கூவத்து நாரணனையும், வளவனயினானையும், பல இனிய கவிகளையும் பாடின செந்நாப்புலவர்.

ஒப்பில்போலி

தன்னை ஒத்தவீரன் இலன் (நான் சிங்கம்) எனும் சொல் போல்வது.

ஒப்புமைக்கூட்டவணி

அஃதாவது வர்ணியங்களாகிய பல பொருள்களை யாயினும் அவர்ணியங்களாகிய பல பல பொருள் களையாயினும் பொதுவாகிய ஒரு தருமத்தின் முடித்தலாம். இதனை வடநூலார் துல்லிய யோகி தாலங் காரமென்பர்.

ஒரரூஉத்தனார்

ஒரு தமிழ்ப்புலவர். ‘கோடங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும், வேட்டது சொல்லி வேந்தனைத் தொழுதலும் ஒத்தன்று எனப் பாடியவர். (புற~நா.)

ஒரு பொருட்பன்மொழி

ஒரே பொருளைத் தருகின்ற பல சொற்கள் சிறந்து நிற்றல், (நன்.)

ஒரு பொருட்பாட்டு

சித்திரக் கவியிலொன்று ஒன்றனையே வருணித்துப் பாடுவது.

ஒருசார்பகற்குறி

அதாவது ஒரு கூற்றுப் பகற்குறி, யாதெனில் தலைவன் மற்றை நாள் தன் வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்து வந்துநிற்க. தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக் கூறத்தலைவன் வருந்திப் போதலான் இது பகற்குறியாகாது ஒருசார் பகற்குறி யெனப்பட்டது. இது, இரங்கல், வன்புரை, இற்செறிப் பெனும் வகையினையும், கிழவோன் பிரிந்துழி கிழத்திமாலையம் பொழுது கண்டிரங்கல், பாங்கி புலம்பல், தலைவனீடத் தலைவி வருந்தல், தலைவியைப் பாங்கி கழறல், தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல், பாங்கியொடு பகர்தல், பாங்கியச் சுறுத்தல், நீங்கற் கருமை தலைவி நினைந்திரங்கல், தலைவிக்கவன வரல் பாங்கி சாற்றல், சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுதல், முன்னிலைப் புறமொழி மொழிக் தறிவுறுத்தல், முன்னின்றுணர்த்தல், முன்னின் றுணர்த்தியோம் படைசாற்றல், கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சோடு கிளத்தல் எனும் விரியினையு முடையது.

ஒருசிறைப்பெயரியனார்

இவர் நாஞ்சில் வள்ளுவனைப் பாடிப் பரிசில் பெற்றவர். (புறம்~137) முல்லையையுங் குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார். தலைமகனைத் தேர்ப்பாகன் தேற்றுவதாக இவர் கூறியது இன்பந்தரற்பாலது. இவர் பாடியனவாக நற்றிணையில் 127ம் பாடலொன் றும், குறுந்தொகையி லொன்றும், புறத்தி லொன்றுமாக (3) பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்).

ஒருதனிநிலை

போரினைச் செய்யும் சேனையிடத்து வெள்ளம் தள்ளாதபடி கல்லாற் கட்டினகரையே போலப் பெரும்படையை ஒரு வீரன் தடுத்த நிலையைச் சொல்வி யது. (பு. வெ.)

ஒருபுலவன்

வண்டியூர்க் கெழுந்தருளப் பண்ணுகின்ற மண்டபத்திற் கூறியது. ” அடும்போதுஞ் சொல்லில்லை யென்று மடுஞ்சோ, றிடும்போதுஞ் சொல்லில்லை யென்றும் குடும்பமெனும், பேய்க்கொளித்துப் போகின்றேன் பேறை யூராதிபனே, தாய்க் கொளித்த சூலுண்டோ தான். இதைக் கேட்டு வேம்பத்தூர் வேதியப் பிள்ளைகள் கூறியது. ”ஒன்று மறியோமும் மாணையப்பரே, சென்று தொழில் புரியுஞ் சீபதியார் கன்றக், கயிற்றினாற் கட்டிக் கதவுபடத் தெற்றி இயற்றினாலென் செய்வோம்யாம். ” இந்தப் பாடல்களைப்பற்றிய கதை யொன்றுந் தெரியவில்லை. தமி~நா சரி.

ஒருவழித்தணத்தல்

இது கூறிய பாங்கியுடன் வரைதற்கு உடன்பட்ட தலைவன், தன் ஊருக்கு ஒருவழிப்போய் வருகின்றேன் எனப் போதல். இது செலவறிவுறுத்தல், செலவுடன் படாமை, செலவுடன் படுத்தல், செலவுடன் படுதல், சென்றுழிக் கலங்கல், தேற்றியாற்று வித்தல், வந்தழி நேர்ந்துரை, எனும் (7) வகையினையும், தன் பதிக்ககற்சி தலைவன் சாற்றல், பாங்கிவிலக்கல், தலைவனீங்கல், வேண்டல், பாங்கி விடுத்தல், பாங்கி தலைவிக்கவன் செலவுணர்த்தல், தலைவிநெஞ்சொடு புலத்தல், சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர் கிளவி, தலைவியைப் பாங்கியாற்று வித்தல், தலைவன் வந்தமை பாங்கியுணர்த்தல், பாங்கி தலைவனொடு நொந்து வினாதல், தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல், தலைவியை யாற்றுவித்திருந்த வருமை கூறல் எனும் விரியினை யுடைத்தாம் (அகம்.)

ஒற்றர்

பகைவர், குடிமக்கள் வினைசெய்வோர் இவர்களின் செய்திகளைத் திறமை யாக அறிந்து உணர்ந்தவைகளை மறைவில் அரசனுக்கு அறிவிப்போர். (சுக்~நீ.)

ஒற்றளபெடை

பாட்டில் ஓசை குறையின்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள், ஃ தம்மோசையின் மிக்கு ஒலிப்பது. (நன்.)

ஒற்றுப் பெயர்த்தல்

இது சித்திரக்கவில் லொன்று. இது ஒரு மொழியைப் பாட்டினிறுதியில் வைத்துப் பிறிதொருபொருள் தாப்பாடுவது, (யாப்பு~வி.)

ஒற்றைமணிமாலையணி

அஃதாவது பின் பின்னாக வருவனவற்றிற்கு முன் முன்னாக வருவனவற்றை விசேஷியங்களாக வேனும் விசேஷணங்களாக வேனுஞ் சொல்லுத்தலாம். இதனை வடநூலார் ஏகாவளியலங்கார மென்பர்.

ஒல்லையூர் கிழான்

பெருஞ்சாத்தனுக்குத் தந்தை.

ஒல்லையூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன்

குடவாயில் நல்லாதனாராற் பாடல் பெற்றவன், வீரர், பாணர் முதலியவருக்கு உதவி புரிந்தவன். இவன் பெயர் சாத்தனெனவும் வழங்கும் வேளாளன். (புற~நா.)

ஒல்லையூர் தந்தபூத பாண்டியன்

இவன் கவிவல்ல பாண்டியன். இவனுக்குப் பூத பாண்டியனெனவும் பெயருண்டு, இவன் சிநேகர் மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத் தன், ஆதனழிசி, இயக்கன் முதலியவர்கள். இவன் மனைவி இவனுடன்றீயிற் பாய்ந்தாள். “மடங்கலிற் சினை இமடங்கா வுள்ளத், தடங்காத்தானை வேந்தருடங்கி யைந், தென்னோடு பொருத்து மென்ப” என வஞ்சினக்காஞ்சி பாடினவள். (புற~நா.) (அக~நா.)

ஒளத்தமர்ணிகம்

வட்டியோடு தருவதாகப் பேசிப் பெற்றுக்கொண்ட பொருள் (சுக்~நீ)

ஒளபநிதிகம்

நலலோர்களால் நம்பி அடைக்கலமாக வைக்கப்பட்ட பொருள். (சுக்~நீ)

ஒளர்வி

ச்யவனபுத்ரன், தாய், மனுகன்யை.

ஒளவர்வன்

பிருகு வம்சத்தவன், இவன் கோபத்தீயினால் உலகங்களை அழித்து மீண்டும் வடவையால் அணைத்து விடுவான். இவன் புத்திரன் ரிசீகன் தன்னிடம் வந்த தனுர் வேதத்தைக் குசிக்குலமழியும்படி ஜமதக்னியிடம் கொடுத்தான். (பார~அநுசர)

ஒளவையார்

1. இவர் சோழநாட்டில் உறையூரில் பகவன் அல்லது ஞாளிதத்தன் என்பவனுக்கும் ஆதிக்கும் பிறந்தவர். இவருடன் பிறந்தார் ” கபிலாதிகமான் கார்க்குறவர் பாவை, முகிலனைய கூந்தன் முறுவை நிகரிலா, வள்ளுவரவ்வை வயலூற்றுச் காட்டிலுப்பை, யெண்ணிலெழுவரிவர். ” தாய் இவளைவிட்டு எவ்வாறு நீங்குவது என்று கவலையடைகையில் அவளை நோக்கி இட்டமுடன் என்றலையிலின்ன படியென்றெழுதி, விட்டசிவனுஞ் செத்து விட்டானோ முட்டமுட்ட, பஞ்சமேயானாலும் பாரமவனுக் கன்னாய், நெஞ்சமே யஞ்சாதே நீ” என்ற செய்யுளைப் பாடிப் பாணன் வீட்டிலும் புல்வேளூர், அதியமானூர், திருக்கோவலூரினும், வளர்ந்து வந்தனர். பாணன், இவருக்கு வயது வந்தது ஆதலின் மணஞ்செய்ய ஒரு மணமகனை நிச்சயித்து அவனிடம் தன் குலாசாரப்படி சேலைமுதலியன பெற்றுத் தன் குமரியை உடுத்திக்கொண்டு வரும்படி கட்டளையிடப் பெண் சேலையை உடுத்திக்கொண்டு கிழவுருத் தாங்கி வந்தனர். மணமகன், எனக்கிந்தக் கிழவி வேண்டாம் என நீங்கினான். பெண்ணும் அன்று முதல் மணமிலாது ஒளவையெனப் பெயர்பெற்றுக் காலங்கழித்துச் சிலம்பியிட்ட கூழாலச் சிலம்பிமீது பொய்யாமொழிப்புலவர் பாடாது விட்ட ” தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே, மண்ணவதுஞ் சோழ மண்டலமே பெண்ணாவாள், அம்பொற்சிலம்பி யாவிந்தத் தாளணியும், செம் பொற்சிலம்பே சிலம்பு ” எனப் பாடி முடித்துக் கூழுக்குப்பாடியெனப் பெயர் பெற்று ஒரு சுடுகாட்டுச் சாவடியில் வந்து தங்கியிருந்தனர். அவ்விடம் அளகாபுரத்து அரசன் குமரியாகிய ஏலங்குழலி முதற் சாமத்தில் ஆவேசமாகத் தம்மிடம் வந்து பயமுறுத்த அந்த ஆவேசத்தின் தன்மையை அறிந்து வெண்பாவிருகாலிற் நல்லானை வெள்ளோலை, கண் பார்க்கக் கையாலெழுதானைப் பெண் பாவி, பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே, எற்றோமற் றெற்றோமற் றெற்று ” என்றும், மற்று மவ்வாவேசம் இரண்டாம் சாமத்தும் வர “எண்ணாயிரத் தாண்டு நீரிற்கிடந்தாலும், உண்ணீரம் பற்றாக் கிடையே போல் வண்ணமுலைப், பொற்றொடி மாதர் புணர்முலைமேற்சாராரை, எற்றோ மற்றெற்றே மற்றெற்று. ” என்றும், பின்னும் மூன்றும் சாமத்தும் வர அதை நோக்கி ” வானமுளதான் மழை யுள்தான் மண்ணுலகில், தானமுள தால் தயையுள் தால் ஆன்பொழு தெய்த்தோ மிளைத்தோ மென்றேமாந்திருப்போரை, எற்றோ மற்றெற்றோ மற்றெற்று. “என்றும், பின்னும் நான்காம் சாமத்து வந்து பயமுறுத்த அதைக்கண்டு கருங்குளவிச் சூறைத்தூறீச் சங்கனிபோல, விருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கை அரும்பகலே, இச்சித்திருந்தபொருள் தாயத்தார் கொள்வாரே, எற்றோ மற்றெற்றே மற்றெற்று? என்றும் பாடிப் பிறப்பினைத் தெரிவித்து அவளைத் தழிழறியும் பெருமாளாகவும், அவளை விரும்பி உயிரிழந்த அரசகுமானை விறகு தலையனாகவும் பிறக்க அருள் புரிந்து நடுநாட்டின் வழிச் சென்றனர். அந் நாட்டின் பெருங்கணவாய் ஊரின் வழிப் போகையில் பெருமழையில் நனைந்து உதறல் கொண்டு ஒருவீட்டில் நுழைய அவ்விடம் இவரைக் கண்ட அங்கவை, சங்கவை என்னுமிரண்டு பெண்களும் தீமூட்டமிட்டுக் குளிரைநீக்கி நெய்யொடு கலந்த இலைக்கறி யன்னமிட அவர்களிட்டவுணவுண்டு களித்து ‘வெய்தாய் நறுவி தாய் வேண்ட மாவுந் தின்பதாய், நெய்தானளாவி நிறை யிட்டுப். பொய்யே, யடகென்று சொல்லிய முதத்தையிட்டாள், சடகஞ் செறியாதோ கைக்கு. ” எனப்பாடி அவ்விருவரையும் தெய்வீக ராசனுக்குக் கல்யாணஞ் செய்விக்க அரசனைக் கேட்கையில் அரசன் தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்து செய்விக்கின் செய்து கொள்கிறேன் என ஒளவை அந்த மூவரசருக்கும் ஓலையெழுத விநாயகரைத் தியானித்து “ஒரு கையிரு மருப்பு மும்மதத்து நால்வாய்க், கரியுரி வைக் கங்காளன் செம்மல் கரி முகவன், கண்ணால வோலை கடிதெழுதவாரானேல், தன்னாண்மை தீர்ப்பேன் சபித்து” எனப் பாடி விநாயகரெழுத புகார் மன்னன் பொன்னிப்புனனாடன் சோழன், தகாதென்று தானங்கிருந்து நகாதே, கடிதின்வருக கடிக்கோவலூர்க்கு, விடியப் பதினெட்டாநாள்” எனவும் “வையைத்து றைவன் மதுராபுரித் தென்னன், செய்யத் தகாதென்று தேம்பாதே தையலர்க்கு, வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பா னாள், ஈண்டு வருகவிசைந்து” எனவும், ” சோவர்கோன் சேரன் செழும் பூந்திருக் கோவல், ஊரளவுந் தான் வருகவுட்காதே, பாரிமகள் அங்கவையைக் கொள்ளவா “சன் மனமிசைந்தான், சங்கியாதே வருகத் தான்” எனக் கடிமண ஓலை விட்டு வருவித்தனர். அரசர் மூவரும் வந்து ஒளவையை நோக்கிச் செய்தியறிந்து எதிரிலிருந்த பனந்துண்டந்தளிர்த்துப் பழுக்குமாயி. இப்பெண்களைத் தெய்வீகராசனுக்கு மணப்பிக்கலாம் என, அவ்வாறே ஒளவை பனந்துண்டை நோக்கி ” திங்கட்குடையுடை சோனும் சோழனும் பாண்டியனும், மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே, சல்கொக்கவெண் குருத்தீன்று பச்சோலை சலசலத்து, கொங்கிற்குறத்தி குவி மூலைபோலக் குரும்பை விட்டு, நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து, பங்குக்கு மூன்று பழந் தரவேண் இம்பனந்துண்டமே ” என அது பழுத்துக் கனி தந்தது. அரசர் மூவரும் களித்து மணஞ் செய்து கொள்ளலாம் என, ஒளவையார் தெய்வீக ராசனுக்கு இரண்டு பெண்களையும் மணஞ்செய்வித்து அக்கல்யாணத்திற்கு வந்தவர் களிப்புடன் பொன் பெறும்படி வருணனை நோக்கி கருணையா லிந்தக்கடலு லகங்காக்கும், வருணனே மாமலையன் கோவல் திருமணத்து, முன் மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப், பொன் மாரியாகப் பொழி” எனப் பாடினர். அதனால் பொன்மாரி பொழியக் களித்துக் கலியாணத்திற்கு வந்தவர்கள் ஆடை பெறும்படி அவ்விடமிருந்த பருத்திச் செடிகளை நோக்கி (பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி யாடையாம், அன்னான் வயலரிசி ஆகுமூர் எந்நாளும், தேங்கு புகழேபடைத்த சேதிமா நாடதனில், ஓங்குந் திருக்கோவலூர். ” என ஒளவை வேண்டியவர் வேண்டியபடி ஆடைகளையும் வயல்கள் அரிசியையும் தரக்கண்டு களித்தனர். பின்னும் அங்கிருந்தவர்க்குத் தாகம் தணியும்படிக்த அவ்விடம் செல்லும் பெண்ணை நதியை நோக்கி (முத்தெறியும் பெண்ணை முது நீரது தவிர்த்துத், தத்திய நெய் பால் தலைப்பெய்து குத்திச், செருமலை தெய்வீகன் திருக்கோவலூர்க்கு, வருமளவிற் கொண்டோடிவா. ” என அது பால், தயிர், வெண்ணெயாகப் பிரிந்துவாக் கண்டு களித்து (ஆயன்பதியிலரன்பதிவந்துற்றளக மாயனூதுங் கருவியானாலும் தூயமணிக் குன்று போல் வீறுகுவி முலையார் தம் முடனீரின்று போலென்று மிரும்,” என அரசரை வாழ்த்தி நீங்கினர். இவர் பசியால் ஒரு சம்சாரியை அன்னங் கேட்க, அவன் பெண்டாட்டி கோபித்த படியால் (இருந்து முகந்திருத்தி யீரொடு பேன்வாங்கி, விருந்து வந்ததென்று விளம்ப வருந்திமிக, ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தாற், சாடினாளோடினான்றான். எனவும் “காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே, மாணொக்க வாய்திறக்க மாட்டாதே வீணுக்கென், என்பெலாம் பற்றி யெரிகின்ற தையையோ, அன்பிலானிட்ட வமுது. ” எனப்பாடித் தம்மை வணங்கிய அச்சமுசாரியின் இல்வாழ்க்கையை இகழ்ந்து சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்வடிவு, கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே, தொண்டா, செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம், நெருப்பிலே வீழ்ந்திடுதனேர். ” எ~ம். பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுண்டானால், எத்தாலுங் கூடி யிருக்கலாஞ் சற்றேனு, ஏறுமாறாக விருப்பளேயாமாயிற், கூறாமற் சந்நியாசங் கொள்,” எ~ம். ” ஏசியிடலினிடாமையே நன்றெதிரிற், பேசுமனையாளிற் பேய் நன்று நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகைவாழ் வில்லாச், சங்கடத்திற் சாதலே நன்று எனக்கூறி நீங்கி ஒரு காட்டின் வழிச் சென்றனர். அக்காட்டில் இவரிடம் கவிபெறக் கந்தமூர்த்தி மாடோட்டும் பையனைப்போல் வேடங்கொண்டு ஒரு நாவல் மரத்தின் மீது பழந்தின்று கொண்டிருந்தனர். ஒளவையார் கோடைவெயிற்குச் சகிக்காது அம்மர நிழலிற் சென்று மீதிருக்கும் பையனை நோக்கித் தாகந்தணியும்படி ஒரு பழம் போடப்பா எனப் பையன் ” கிழவி சுட்ட பழம் வேண்டுமோ சுடாதபழம் வேண்டுமோ எனக் கிழவி சுட்டபழமே வேண்டும் எனப் பையல் சில அளிந்த கனிகளை உதிர்த்திட்டனன். அவை மணலில் விழுந்து அழுந்தி மணல் பழத்தில் ஒட்டிக் கொள்ள, ஒளவை அம்மணல் நீங்கும்படி பழத்தை ஊதினர். கந்தமூர்த்தியாகிய பையல் இவரைப் பரிகசிக்கும்படி ஏடி கிழவி அதிகமாய்ச்சுடுகிறதோ ஆற்றியுண் எனக் கிழவி வெட்கிப் பையலுக்குத் தோற்றதற்காக “கருங்காலிக் சட்டைக்கு நாணாக் கோடாலி, இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானில், காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்றோற்ற, தீரிரவுந்துஞ்சாதென் கண்” என்றனர். உட னே கந்தமூர்த்தி தரிசனந் தந்து அரியது, பெரியது, இனியது, கொடியது கேட்க அரியது கேட்கின் தனி நெடுவேலோய், மக்கள் யாக்கையிற் பிறத்தலுமரிதே, மச் கள் யாக்கையிற் பிறந்தகாலையு, மூங்கை யுஞ் செவிடுங் கூனுங் குருடும், பேடு நீக்கிப் பிறத்தலரிது, பேடு நீக்கிப் பிறந்த காலையும், ஞானமுங் கல்வியு நயத்தலரிது, ஞானமுங்கல்வியு நயந்த காலையும், தானமுந் தவமுந் தரித்தலரிது, தானமுந் தவமுந் தரித்தார்க்கல்லது, வானவர் நாடு வழி திறவாதே” (பெரியது கேட்கின் எரி தவழ்வேலோய், பெரிது பெரிது புவனம் பெரிது, புவனமோ நான்முகன் படைப்பு, நான் முகன் கரியமாலுந்தி வந்தோன், கரியமாலோ வலைகடற்றுயின்றோன், அலைகடலோ குறுமுனி கையிலடக்கம், குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன், கலசமோ புவியிற்சிறு மண், புவியோ வரவினுக்கொரு தலைப்பாரம், அரவோ உமையவள் சிறுவிரலின் மோதிரம், உமையோ விறைவர் பாகத் தொடுக்கம், இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம், தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” “இனியது கேட்கிற் றனிநெடு வேலோய், இனிது இனிது ஏகாந்தமினிது, அதனினுமினிது ஆதியைத்தொழுதல், அதனினுமினிது அறிவினர்ச்சேர்தல், அதனினுமினிது அறிவுள்ளாரைக், கனவினு நனவினுங் காண்பது தானே. ”கொடியது கேட்கின் நெடிய வெவ்வேலோய், கொடிது கொடிது வறுமை கொடிது அதனினுங் கொடிது இளமையில்வறுமை, அதனினுங்கொடிது ஆற்றொணாக் கொடுநோய், அதினுங்கொடிது அன்பிலாப் பெண்டிர், அதனினுங்கொடிது இன்புற வவர்கையி லுண்பதுதானே” எனப்பாடித் தனிமையாகப் பாண்டி நாடடைந்தனர். பாண்டியன், சங்கத்தாரைச் சோதிக்க ஓர் நாள் தன் வாயிலில் ஐந்து பொற்கிழிகள் கட்டி மூன்று கிழிகள் சங்கிலியிறப்பாடுக எனவும், ஒருகிழிக்கு நிறைநில்லாத கவி பாடுக எனவும் மற்றொன்றுக்கு நாலுகோடி கவிபாடுக எனவுங்கூற, அவர்கள் அஞ்சுகையில் அவ்வழி வந்த ஒளவையார் ‘ஆர்த்தசபை நூற்றொ ருவராயிரத்தொன்றாம் புலவர், வார்த்தை பதினாயிரத் தொருவர் பூத்தமலர்த், தண்டாமரைத்திருவே தாதாகோடிக்கொருவர், உண்டாயினுண்டென்றது. ” ”தண்டாமலீவது தாளாண்மை தண்டி, யடுத்தக்காலீவது வண்மை யடுத்தடுத்துப், பின் சென்றாலீவது காற்கூலி பின் சென்றும், பொய்த்தா னிவனென்று போமேலவன்குடி, யெச்ச மிறுமேலிறு வழக்குடையார் நிற்ப வரும் பொருள் கைவாங்கி, வழக்கை வழக்கழிவு சொல்வின் வழக்குடையார், சுற்றமுந் தாமுந் துடைத் தெழுகண்ணீராலேழ், சுற்றமிறுமேவிறு. ” “சென்றுழு துண் பதற்குச் செய்வதரிதென்று, மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை முன்றிலிற், றுச்சிலிருந்து துடைத்தெழுகண்ணீராலே, ழெச்சமிருமேலிறு ” ” உள்ளவழக்கிருக்க வூரார் பொதுவிருக்கத், தள்ளிவழக்கம் னைத் தான் பேசி எள்ளளவும், கைக்கூலி தான் வாங்குங் காலறுவான்றன் இளையு, மெச்சமிறு மேலிறு. ” என்று செய்யுன் கூறி மூன்று கிழிகளையற்று வீழ்த்தி, “ வையகமெல்லாம் வயலாய் வானோர், தெய்வமா முகடு சேரியாகக், காணமு முத்துமணியுங் கலந்தொரு, கோடானு கோடி கொடுப்பினு மொருநா, ளொருபொழுதொருவனூ ணொழிதல் பார்க்கு, கேர் நிறை நில்லாதென்னுமென் மனனே’ நேர் நிறை நில்லாதென்னு மனனே” என ஒரு நிறை நில்லாத அகவலும், ”மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று, மிதியாமை கோடியுறும், உண்ணீருண்ணீ ரென்றுட்டாதார் தம் மனையி, லுண்ணாமை கோடியுறும், கோடி கொடுத்துங்குடிப் பிறந்தார் தம்மோடு, கூடுவதே கோடியுறும், கோடானுகோடி கொடுப்பினுந் தன்னுடை நாக்கோடாமை கோடியுறும். ” எனப்பாடிப் பாண்டியன் மகிழவிருந்து பின் சோழ நாடடைந்து சோழன் பல சமயங்களில் கம்பரை வியந்தபோது மாறக “விரகரிருவர் புகழ்ந்திடவே வேண்டும், விரனிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டுமவர்கவி தை, நஞ்சேனும் வேம்பேனு நன்று” எனவும் ” வான்குருவி யின்கூடு வல்லாக்குத் தொல்கரையான், தேன் சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் யாம் பெரிதும், வல் லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண், எல்லார்க்கு மொவ்வொன்றே ளிது. ” எ~ம், ‘சித்திரமும் கைப்பழக்கஞ் செந்தமிழுநாப்பழக்கம், வைத்ததொருகல் விமனப்பழக்க நித்த, நடையு நடைப்பழக்க நட்புந் தயையுங், கொடையும் பிறவிக் குணம். ” எ~ம். ‘கற்றது கைம்மணளவு கல்லாது லகளவென், றுற்றகலை மடந்தை யோ துகிறாள் மெத்த, வெறும் பந்தயம் கூறவேண்டாம் புலவீ, ரெறும்புந்தன் கை யாலெண்சாண். ” எனப்பாடி நீங்கிப் புல்வேளூர்ப்பூதன் தனக்கிட்ட அன்னததால் அவன் கிணற்று நீர் தானே பெருகிப் பாயச்செய்து அவன்மீது “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும், மறமு றெனவே புளித்த மோரும் பரிவுடனே, புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட் டசோ, றெல்லாவுலகம் பெறும். என்று புகழ்ந்து கோரைக்கால் ஆள்வான் கொடையையிழித்து” ”கரியாய்ப்பரியாகிக் காரெருமை தானாய், எருதாய் முழப் புடவையாகித் திரிதிரியாய்த், தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்து காலோய்ந்ததே. கோரைக்காலாள் வான் கொடை, என நிந்தித்து, காலையி லொன்றாவர்கடும் பகலில் ஒன்றாவர், மாலேயி லொன்றாவர் மனிதரெல்லாம் சாலவே, முல்லானைப் போல முகமும் அகமும் மலர்ந்த, நல்லானைக் கண்டறியோம் நாம். ” என முல்லானைப் புகழ்ந்து பாடினர். இவர் பந்தன் என்பான் மேல் பந்தனந்தாதியும் தவமணி மாலையும் பாடிக் கருநெல்லிக் கனியும் உடுக்க இளமை தரும், தெய்வீக வஸ்திரமும் பெற்றனர். இவ்வாறு அன்றியும் அதியமா னெடுமானஞ்சி அமுதமாகிய சொல்லிக்கனி தந்ததாகவும் கூறுவர். இவரால் பாடப்பெற்றவர்கள் தொண்டை மான். அதிகமான் மகன் பொகுட்டெழினி, நாஞ்சில்வள்ளுவன், சேரமான் மாவெண்கோ, பாண்டியன் கானப் பேர்தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் கேட்டபெரு நற்கிள்ளி முதலியவர். தமிழ் நாட்டு மூவேந்தரும் ஆதொண்டைச் சக்கரவர்த்தியும் இருந்த போது எந்நாடு சிறந்தது எனக் கேட்க அதற்கு வேழமு டைத்து மலை நாடுமேதக்க, சோழவள நாடு சோறுடைத்து பூழியர்கோன், றென் னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொருண்டை, நன்னாடு சான்றோருடைத்து. ” “வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்ற, னான்மாடக் கூடலிற் கல்வலிது, சோழனுறந்தைக் கரும்பினிது தொண்டைமான், கச்சியுட்காக்கை கரிது. ” எனவும் பாடியவர். குலோத்துங்க சோழன் கலியாணத்திற்குச் சென்று வரப்புயர ” எனப் புகழ்ந்து வாழ்த்தச் சோழன் அதன் கருத்தறியாது ஒட்டக்கூத்தரை நோக்க அவர் அஃதறிந்து ‘வரப்புயர நீருயரும், சீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும். கோலுயரக் கோனுயரவான்” என்றனர். பின்னும் பற்பல சமயங்களில் தனித்தனிப் பாடல்கள் பாடியவர். ஒளவையார் திருக்கோவலூரில் மழையால் நனைந்து வந்தபோது அங்கவை, சங்கவை என்பார் தமக்கு ஈரம் புலர்த்தத் தந்த ஒரு நீலச் சிற்றாடைப் பொருட்டுப் “பாரிபறித்த பறியும் பழயனூர்க், காரி கொடுத்தகளை கொட்டும் சேரமான், வாராயென வழைத்தவாய் மையுமிம் மூன்று, நீலச் சிற்றடைக்குநேர். ” எனப் பாடினர். பாரிபாற் பரிசில் பெறச் சென்றபோது இவன் இவரைப் பிரிய மன மிலாது நீட்டித்தல் காரணமாகத் தாமதிக்க ஒளவைபோதலைக் குறிப்பிக்கப் பாரி பெரும்பொருள் கொடுத்து அனுப்பி அவர்க்குப் பின்னர் சிலரை ஏவி அவர் கொண்டு செல்லும் பொருளைக் கவரச்செய்ய அவர்கள் அங்கனஞ் செய்ய ஒளவை மீண்டு பாரியிடம் வந்து நடந்ததைக் கூற முகத்தால் வருந்தி அகத்தான் மகிழ்ந்து ஒளவையாரைத் தமதிடம் வைத்திருந்து அவர் மீளுங்காலத்து வேண்டிய தந்தனுப்பினன். இவர் பழையனூரில் காரிபாற் சென்றிருக்கையில் இவர் வேற்றுர்க்குப் போக விரும்பிக் கழனியில் வேலை செய்து கொண்டிருந்த காரியாரை விடைகேட்கையில் அவர் இவரைப்பிரிய மனமிலாது அவர் தம்கை யில் பெற்றிருந்த களைக்கோவை இவர் கையிற்கொடுத்துத் தாம்களையெடுத்த இடத்தை அளக்கச் செய்தனர். அவ்வாறு அளக்க பொழுதுபோகச் சில நாள் தங்கியிருந்து நீங்கினர். ஒருநாள் சேரன், அரண்மனையில் பலருடன் விருந்துண்ணுகையில் புதியோன்வர அவனுக்கு விருந்தளிக்க வேறிடங் காணாது மற்றவர்களை எழுப்புதற்கும் மனங்கொளாது சேரன் தன்னன்பினராகிய ஒளவையாரை வருகவெனவழைக்க உடனுண்டவர் எனவுங் கூறுவர். தகடூர் சென்று ஆண்டிருந்த அதிகமானெடுமானஞ்சிப் பரிசினீட்டித் தனனாக அவனை முனிந்து செல்வத் துணிகையில் அவன் தன்னிடமிருந்த நெல்லிக்கனியைத்தரப் பெற்று அவனை “பூங்கமல வாவி சூழ்புல் வேளூர்ப் பூதனையும், ஆங்குவரு பாற் பெண்ணை யாற்றினையும் ஈங்கு, மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றை நாவை, யறுப்பித்தாயா மலகந்தந்து. ” என்று அவனைப் பாடினர், இவர் அதிகமான் பொருட்டுத் தொண்டமானிடந் தூது சென்றார். காரிக்கு ஆடுவாங்கிக் கொடுக்க வேண்டி வாதவன், வத்தவன், யாதவன் எனும் மூவரிடஞ் சென்று கேட்க அவர்கள் கொடாமையால் வஞ்சிநகர் புகுந்து ஆண்டிருந்த சேரன்பால், வாதவர்கோன் பின்னை யென்றான் வத்தவர் கோனாளை யென்றான், யாதவர்கோன் யாதொன்று மில்லை யென்ரான் ஆதலால், வாதவர்கோன் பின் னையினும் வத்தவர் கோனாளையினும், யாதவர் கோனில்லையினிது” என்று தம் செய்திகூறி அவனிடம் பொன் ஆடுபெற்று சிரப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச், சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந்தான், இரப்பவு ரென்பெறினுங் கொள்வர், கொடுப்பவர் தாமறிவர் தங்கொடையின் சீர்” எனப்பாடிக் காரியிடம் ஆடு அனுப்பு வித்து அவ்விடஞ் சிறக்க விருந்து நீங்கினர். இவர் சேரன் மாளிகையிற் சிறக்க இருந்து அவனை நீங்கினர் என்பது “சிறு கீரை வெவ்வடகுஞ் சேதாவினெய்யு, மறுப்படாத் தண்ட யிருமாந்தி வெறுத் தேனை, வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற்பித்தானே, கஞ்சிக்கும் புற்கைக் குங்கை ” எனும் பாடலைப் பாடினதால் தெரிகிறது. இவர் எழிற்குன்றம் போய் ஆண்டுள்ள அரசன் நன்னனைப் பாட அவனிவரது பெருமை உணராமையால் “இருடீர் மணிவிளக்கத்தெழிலார் கோவே, குருடேயுயன்று நின்குற்றம் மருடீர்ந்த, பாட்டு முரையும் பயிலாதன விரண், டோட்டைச் செவியுமுன்,” எனுஞ் செய்யுளால் முனிந்து பசியால் வழிச்செல்லுகையில் ஒருநாள் ஒருவன் மனைசென்று அன்னங் கேட்க அவன் அன்னமில்லை யென்ன அவன் மனைவி உபசரிக்க அவனை முனிந்து, ‘அற்ற தலையினருகிற் றலையதனைப், பற்றித் திருகிப் பறியேனோ வற்றன், மரமனையானுக் கிம்மனையாளை யீந்த, பிரமனை யான் காணப்பெறின்” என்று பாடி, ஒரு குறவன் வளர்த்த பலாவைப் பகைவர் வெட்ட அவன் வருந்தக் கண்டு ”கூரியவாளாற் குறைப்பட்ட கூன்பலா, ஓரிலையாய்க் கொம்பா யுயர் மரமாய்ச் சீரிய, வண்டுபோற் கொட்டை வளர்கா யாய்ப் பின் பழமாய்ப், பண்டுபோ னிற்கப் பணி” என அதனைத் தளிர்ப்பிக்க அதற்குக் குறத்திகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அதனை அன்பாலேற்றுச் சோழனிடஞ் சென்று அவனிவ்விரவில் எங்கிருந்து வருகிறீரென்ன ”கானொந்தே னெந்தேன் கடுகிவழி நடந்தேன், யான் வந்ததூர மெளிதன்று கூனன், கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ்நாடா, விருந்தேனுக் கெங்கே விடம்” எனப் பாடிப் பரிசில் பெறுகையில் கூழைப் பலாத் தழைக்கப் பாடிக் குறச்சிறார், மூழக்குழக்குத் தினை தந்தார் சோழகே, ளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை, யொப்பித்து நிற்குமுளம்,” என்று, பாடியிருந்தனர். ஒருநாள் இவர் சோழனைப் பாடுகையில் சோழன்சற்றுக் கவனிக்காது ஒருவற்சீலையைக் கவனிக்க இவர் “நூற்றுப்பத்தாயிரம் பொன் பெறினு நூற்சீலை, நாற்றிங்கடன்னிற் கிழிந்துபோ மாற்றலரை, வென்றப் புறங்கண்டபோர் வேலகளங்கா, வென்றுங் கிழியாதென் பாட்டு” என்று பாடினர். இவர் அக்காலத்திருந்த இராஜ சூயம் வேட்ட பெருநற்கிள்ளி யென்பவனையும், சேரமான் வெண்கோவையும், பாண்டியன் உக்ரப்பெரு வழுதியையும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர். இவர் திருக்குடந்தை சென்று அங்கிருந்த உலோபி ஒருவனையும், மற்றொரு விதாணியையுங் கண்டு திருத்தங்கி தன் வாழை தேம்பழுத்து நிற்கும், மருத்தன் திருக்குடந்தை வாழை குருத்து, மிலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்று, முலகில் வருவிருந் தோடுண்டு. ” எனப்பாடி, அம்பர்கிழா னருவந்தையைப் பாடிப் பாண்டி நாட்டைந்து, உக்கிரப் பெருவழதியையும் அவனிடமிருந்த தமிழ்ப் புலவரையுஞ் சிறப் பித்து “நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ், வில்லந்தொறு மூன்றெரி யுடைத்து நல்லரவப், பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின், நாட் டுடைத்து நல்ல தமிழ்” எனப் பாடினர். பின் இவர் ஒரூர்க்குச் செல்லுகையில் பசி யால் வருந்துதலைக்கண்ட அசதியெனும் இடையன் புற்கைக் கஞ்சியிட வுண்டு அவன்மீது ‘அற்றாரைத் தாங்கியவை வேலசதி யணிவரைமேல், முற்று முகிழ் முலை யெவ்வாறு சென்றனள் மத்தமிழ் நூல், கற்றார் பிரிவுங் கல்லாதா ரிணக்க மும் கைப்பொருளொன், மற்றரின்மை யும்போலே கொதிக்கு மருஞ்சுரமே. ” என்று அசதிக்கோவை பாடினர். இவர் ஒருகாற் நம்மைச் சில புல்லரிவோர் தம்மைப் பாட வருத்துகையில் இவா “மூவர்கோவையு மூவிளங்கோவையும், பாடிய வென்றவன் பனுவலா னெம்மையும், பாடுகவென்றனிர் நும்மை யிங்கெங் நனம் பாடுகென்யானே, களிறுபடு செங்களங் கண்ணிற்காணீர், வெளிறுபடுநல் யாழ் விரும்பிக்கேளீர், புலவர்வாய்ச்சொற் புலம்பலுக்சிளங்கீர், இலவுவாய்ச்சிய ரிள முவைபுல்வீ, ரவிச்சுவையல்லது தமிழ்ச் சுவை தெருளீ, ருடீ இருண்ணீர் கொடீ இர் கொள்ளீர், ஒவ்வாக்கானத் துயர்மரம் பழுத்த, துவ்வாக்கனியெனத் தோன்றிய நீரே” எனப் பாடியகற்றினர். ஓர்காலத்துக் குலோத்துங்க சோழன் கவிகளைப் பராமுகமாகக் கொள்ளுதலைக்கேட்டு இவர் ஓர்நாள் காவிரிக்குத் தெற்கின்கணுள்ள குடிவளத்தை விசாரிக்கப் புலவருடன் போகையில் ஆண்டு ஔவை, அரசனைக் கண்டு ஒரு காலையும், கவிகளைக்கண்டு மற்றொரு காலையும் உடலையும் வளைத்தல் கண்டு அரசன் ஏறிட்டுப் பார்க்க அது நோக்கி ஒளவை “காவலர்க்கோர் கான் மடங்கும் கற்றோர் தமக்கிருகால், கேவலர்க்கோ வங்கமெலாங் கேட்டியால் மேவ லர்க்குச், சீரேறு போல்வாய் செழுங்கா விரிநாடா, வேறேறப் பார்த்துநிற்ப தென்” எனுஞ் செய்யுள் பாடக்கேட்டு அரசன் கற்றோரிடம் அன்பு கொண்டு நீங்கினன். சிலர் ஒளவையை எது இனிதெனக் கேட்க “எருமிரண்டுளதா யில்லத்தே வித்துள தாய், நீரருகே சேர்ந்த நிலமுமாய் ஊருக்குச் சென்று வரவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டால், என்று முழவேயினிது” என்றனர். தேவர் கூறிய புருஷார்த்தங்களைச் சுருக்கிக் கூறக் கேட்டுக்கொண்ட பொழது ”ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொரு ளெஞ்ஞான் றும், காதலிருவர் கருத்தொத் தாதரவு, பட்டதே யின்பம் பரனைநினைந் திம் மூன்றும், விட்டதே பேரின்ப வீடு” என்றும் மற்றொருபோது காட்சி முதலிய பற்றி வினவியபோது “ஒன்றாகக் காண் பதே காட்சி புலனைந்தும், வென்றான்றன் வீரமே வீரம் என்றாலும், சாகாமற் கற்பதே கல்விதனைப் பிறர், ஏவாமலுண்பதே யூண்” என்றும், பின்னும் இவர் லோபி யொருவனை நோக்கி “பாடல் பெறானே பலர்நச்ச வாழானே, நாடறிய நன்மணங்க ணாடானே சேட, னிவன்வாழும் வாழ்க்கை யிருங்கடல் சூழ் பாரில், கவிழ்ந்தென் மலாந்தென்ன காண்” என்றும், “சுற்றும் கருங்குளவிச் சூரைத்தூ ராரியப்பேய், எற்றுஞ்சுடுகா டிடிகரையின் புற்றில், வளர்ந்தமடற் பனைக்குள் வைத்த தேனொக்குந், தளர்ந்தோர்க் கொன்றீயார் தனம்” என்றும் கூறினர். அரசன் யாரை மந்திரியாகக் கொள்ளலாமென்ன “நூலெனிலோ கோல்சாயு நுந்தமரேல் வெஞ்சம்’ ராங், கோலெனிலோ வாங்கே குடிசாயும் நாலாவான், மந்திரியுமாவான் வழிக்குத் துணையாவான், அந்த வரசே யரசு” என்றும், இவர் பாண்டியன் கலியாணத்து விருந்துண்டபோது ‘வண்டமிழைத் தேர்ந்தவழுதி கலியாணத், துண்ட பெருக்க முரைக்கக்கே ளண்டி, நெருக்குண்டேன் றள்ளுண்டேனீள் பசியினாலே, சுருக்குண்டேன் சோறுண்டிலேன்” என்றும், சோமன் கொடையைப் புகழ்ந்து ‘நிழலருமை வெய்யிலிலே நின்றறிமி னீசன், கழலருமை வெவ்வினையிற் காண் மின் பழகு தமிழ்ச், சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை, புல்ல ரிடத்தே யறிமின் போய்” என்றும், இவர் அதிகமானை இழையணி பொலிந்த எனும் அகவலாற் சிறப்பித்தும் பாடினர். இவர் கூழக்குப் பாடினார் என்பதை காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி, ஆசுக்குக் காளமுகி லாவானே தேசு பெறு, மூழுக்குக் கூத்தனுவக்கப் புகழேந்தி, சுழுக்கிங் கவ்வையெனக் கூறு” என்பதால் அறிக. 2. இவர் பாணர் மரபினர். இவர் இளமையில் விறலியராக ஆடல் பாடல் முத வியவற்றில் தேர்ந்து விளங்கினர். இவர் ஒருகாலத்து அதிகமானெடுமானஞ்சியிடம் பரிசில் பெறச் சென்று அவன் நீட்டித்தலாற் சினந்து மீற அதனை யறிந்த அஞ்சி பரிசில் தரப் பெற்று மீண்டனர். இவர் அவனாற் கொடுக்கப்பட்ட கருநெல்லிக் கனியை உண்டு நெடுங்காலஞ் சீவித்தனர். அஞ்சியுடன் பெருஞ்சேர லிரும்பொறை போரிடவந்தபோது அஞ்சியைப் புகழ்ந்து பாடினர். அஞ்சி கோவலூரை வென்ற பொழுது அவனைப் புகழ்ந்து பாடினர். இவர் அஞ்சியின் மகன் பொருட்டெழினியையும் புகழ்ந்து பாடியுள்ளார். அதிகமான் இவரைத் தொண்டமானிடம் தூதாக அனுப்பியபோது அவன் தனது ஆயுத சாலையை இவர்க்குக்காட்ட இவர் அக்காலத்தும் அதிகனைப் புகழ்ந்து பாடினர். அஞ்சியி றக்கத் துக்கித்துப் பாடினர். இவர் ஒரு காலத்துக் கொண்கானாட்டதிபனும் எழில்மலைத் தலைவனுமாகிய நன்னனைப் பாட அவன் அதனைப் பாராட்டாதிருக்கக் கண்டு வசைபாடி மீண்டனர். வெள்ளி வீதியார் தம் கணவனைத் தேடிச் சென்றதைச் சிறப்பித்துப் பாடினர். மூவேந்தரும் பாரியின் மலையை முற்றுகை செய்ததைப் பாடிப் பாரியிறக்க அவனது கன்னிய ரிருவரையும் கபிலர், விச்சிக்கோ, இருங்கோவேள் முதலியோரிடம் சென்று மணங்கொளக்கூற அவர்கள் மறுக்கக் கன்னியரை மலையமான் தெய்வீகனுக்குமணம் புரிவித்தவர். இவர், அஞ்சி, பொகுட்டெழினி,பாரி, பாண்டியன் உக்கிரப்பெரு வழுதி, சேரமான், மாவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்டபெரு நற்கிள்ளி, கிள்ளிவளவன், தொண்டைமான், முடியன், கொண்கானத்து நன்னன் என்பவர்களைப் பாடினர். இவர் பாடிய பாடல்கள் நற் 7, குறு 15, அக 4, புற 33, திருவள்ளுவமாலை 1, ஆக 60. 3. பொய்யா மொழியார் பாதி பாட ஒளவையார் பாதி பாடியது. வெண்பா பத்தம்பிற் பாதியுடையா னிரண்டம்பிற், கொத்தம்பி யென்பார் கொளப்புக்குச் சுத்தப், பசும்பொனாவல்குற் பாவையர்க்கு தோற்று, விசும்பிடை வைத்தேகினான் வில்” அரிசிகேட்க யானை கொடுத்த நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய அகவல், “தடவுசினைப் பலவினாஞ்சிற் பொருநன், மடவன்மன்ற செந்நாப்புலவீர், வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த, அடகின் கண்ணுறையாக யாஞ்சில, அரிசி வேண்டினே மாகத்தான்பிற, வரிசையறி தவிற் நன்னுந் தூக்கி, இருங்கடறுவளை இயகுன்றத்தன்னதோர், பெருங்களிறு நல்கியோ னேயின்ன, தேற்றா வீகையு முண்டு கொல், போற்றாரம்ம பெரியோர் தங்கடனே” புறம் 140, ஒருவனைப்பாட அவன் ஒன்றுமிலை யென்றபோது பாடியது. கல்லாத வொருவனை நான் கற்றாயென்றேன், காடேறித் திரிவானை நாடாவென்றேன், பொல்லா தவொருவனை நான் நல்லாயென்றேன், போர்முகத்துக் கோழையை யான் புலியேயென்றேன், மல்லாரும் புயமென்றேன் றேம்பற்றோளை, வழங்கா தகையனை நான் வள்ளலென்றேன், இல்லாது சொன்னேனுக் கில்லையென்றான், யானுமென்றன் குற்றத்தா லேகின்றேனே. ” (எ~ம்.) ஒருவனைப்பாடி யவனிகழ்ச்சி சொல்ல அப்போது பாடியது. ”எம்மிகழாதவர் தம்மிகழாரே, எம்மிகழ்வோரே தம்மிகழ் வோரே, எம்புகழிகழ்வோர் தம்புகழிகழ்வோர், பாரியோரி நள்ளியெழினி, ஆஅய்ப்பேகன் பெருந்தோண் மலையனென், றெழுவரு ளொருவனு மல்லையதனால், நின்னை நோவதெவனே யுறுவட்டாற் றாக் குறைக்கட்டிபோல, நீயுமுளையே நின்னன்றோர்க்கே, யானுமுளனே யெம் பாலோர்க்கே, குருகினும் வெளியோய் தேத்துப், பருகுபாலன்னவென் சொல்லு குத்தனே. ” என்று பாடியவர். இவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் திருக் கைலைக்குச் செல்ல விரும்பி விநாயகரை விரைந்து பூசிக்க விநாயகர் ஒளவையை நோக்கி அவர்கட்கு முன்னே சேர்ப்பிக்கி றேன் சாவதானமாய்ப் பூசிக்க என அவ்வகையே சீதக்களபம்” என்னும் விநாயகரகவல் பாடித் துதிசெய்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன் திருக்கைலையில் விநாயகர் தும்பிக்கையால் எடுத்து விடச் சென்றனர். அவர்கள் எவ்வகை யெங்க ளுக்குமுன் வந்தீர்கள் என் “மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை, முதிறநினைய வல்லார்க் கரிதோ முகில்போன் முழங்கி, அதிர வருகின்ற யானையும் தேரு மதன்பின் சென்ற, குதிரையும் காதங் கிழவியும் காதங் குலமன்னனே” எனக் கூறிச் சிவதரிசனம் செய்திருந்தனர். இவர் செய்த நூல்கள்: விநாயகர் அகவல், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நவ்வழி, அசதிக்கோவை, நான்மணிக் கோவை, அருந்தமிழ்மாலை, தரிசனப் பத்து, பந்தனந் தாதி, நான்மணிமாலை, ஞானக்குறள், தனிப்பாட்டுகள் முதவியன. இவர் கடைச்சங்கத்தார் காலத்திலும் குலோத்துங்க சோழன் காலத்திலும் இருந்ததாகத் தெரிகிறதால் நீண்ட ஆயுளுள்ளவ சாகத் தெரியவருகிறது. இவர் நெல்லிக் கனியுண்ட சிறப்பும் யோகப் பழக்கமும் பெற்ற தெய்வீகமுள்ளவா ஆதலால் நெடு நாள் இருந்திருக்கலாம். ஔவையார் கோயில் ஒன்று தஞ்சை ஜில்லாவில் வள வனாற்றின் கீழ்க்கரையில் திருவிடும்பாவனம் என்ற ஊருக்குக் கீழ்த்திசையில் துளசியார்பட்டி யென்ற வூரிலுள்ளது. அதில் ஒளவையார் வடிவு விருத்தவடி வாய்த் தனஞ்சரிந்து முகந்திரைந்து காணப்படுகிறது. அதனுடன் ஓரிளம் பெண் ணுருக்கொண்ட விக்ரகம் ஒன்றுளது, அதனை உப்பை என்கிறார்கள். கோவி லுக்கு வடமேற்கில் அரை மைல் தூரத்தில் கொல்லன் திடல் என்று ஒன்று இருக் கிறது. அதன்கண் ஒரு ஆலமரமும், ஒரு மேடையும் உள்ளன. ஒரு முறை மழையானனைந்த ஒளவையை ஊரார் ஆதரிக்காது அங்கிருந்த கொல்லன் தன் உலையின் நெருப்பால் குளிர்போக்கி அன்னமளித் தாதரித்தான் என்பர். அப்போது வெள்ளங்கொண்டு ஊரெல்லாம் பரவிய போது “வள்ளையுங் கொள்ளையாகிவளவனும் பேரானாகிக், கொல்லன்றிட ரொழியக் கொள்ளாய் பெருங்கடலே. ” என்ன அக்கொல்லனிருந்த திடர் நீங்க மற்றவை அழிந்தன என்பர்.

ஒளி

நாடக வகையில் ஒன்று. அது, சந்தி நிருதையும், அநிருதையும், சந்தியா நிரு தையு மெனமூன்று. அது, உள்ளோன் தலைவனாக உள்பொருளும், மிகப் பொரு ளும், இலப் பொருளும், இரவுப் பொருளு மென்றும், இல்லோன் தலைமகனாக இல் பொருளென்றும் ஐந்து வகைப்படும். (வீரசோ.)

ஒளிநூல்வல்லோன்

சங்கிதை, ஓரை கணிதம் மூன்றினையுமறிந்து முக்காலமும் அறியுந்திறம் வாய்ந்தவன், (சோதிடன்.) (சுக்~நீ.)

ஒள்வாளமலை

உரம் பொருந்திய தோளினையுடைய வாள்வீரர் ஆர்க்கும் வீரக்கழலினை யுடையானுடன் ஆடியது. (பு. வெ.)

ஒழித்துக்காட்டணி

அஃதாவது ஒரு பொருளை ஓரிடத்தில்லையென் வொழித்து மற்றோரிடத் துண்டென்று நியமித்தலாம். இதனை வடநூலார் பரிசங்கியாலங்கார மென்பர்.

ஒழிபு

(மீட்சிமொழி அல்லது பாரிசேஷம்) அது கீழைச்சேரி தோற்ற தென்றால் மேலைச்சேரி வென்றதெனச் சொல்லாமலுணர்தல். பாரிசேஷம் கூட்டிக்கழித்தல்,

ஒழிப்பணி

அஃதாவது ஒரு தருமத்தையா ரோபித்தற் பொருட்டொரு தருமத்தை மறுத்தலாம். இதனை வடநூலார் அபரதியலங்கார மென்பர்.

ஒழிவிலொடுக்கம்

இது கண்ணுடைய வள்ளலார் இயற்றிய வைதிக சைவ நூல், இது சரியைக்கழற்றி, கிரியைக்கழற்றி, யோகக்கழற்றி, துறவு, வாதனைமாண்டார் தன்மை, நிலையியல்பு முதலியவற்றை விளங்க விளக்கும். இந்நூலுக்குத் திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் உரையியற் றினர்.

ஒழுகிசை

இது வைதருப்ப செய்யுணெறியு ளொன்று, இது வெறுக்கத் தகுமின்னா இசையின்றி வரத்தொடுப்பது, (தண்டி)

ஒழுக்கம்

நல்ல வேதியரைத் தம் குரவர் போல் எண்ணல், குரவரை நமஸ்கரித்தல், கண்டவுடன் எழுந்திருத்தல், துறவிகளைக் காத்தல், பழி பாவங்களுக்கஞ்சல், குரவர் முன்புகழாமை, பார்ப்பார், தவசி, சுமையுடையார், நோயாளர், பாலியர், பசுக்கள், பெண்டிர் இவர்களுக்கு வழிவிலகிச் செல்லல் முதலிய.