ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஐக்கக்கொடி | இதனை யூனியன் ஜாக் என்பர். (UNION JACK) யூனியன் என்பதின் பொருள் ஐக்கம், அதாவது ஒன்று சேர்ந்தது என்பது. இது, ஆங்கில அரசாட்சியாரது சொடி. இக்கொடி மூன்று சிலுவைகள் சேர்ந்தது. அச்சிலுவைகள் சத்திரி பால் ஒன்றின் குறுக்காக ஒன்று கீரப்பட்டவை. இதில் முதற்சிலுவை சென்ட் சார்ஜ் சிலுவை. இது ஆசைவருக்குரியது. இரண்டாவது செட் ஆண்ட்ரு சிலுவை. இது ஸ்காத்லாண்டரைச் சேர்ந்தது. மூன்றாவது சென்ட்ப்ரட்ரிக் சிலுவை இது உயர்லாண்டிற்குரியது. இத் தீவுகள் தனித்தனி ஆளப்பட்டு வந்த காலத்தில் இவை தனித்தனி இக் கொடிகளைப் பெற்றிருந்தன. இத் தீவுகள் ஆங்கில அரசாட்சிக்கு ஐக்கப்பட்ட காலத்து ஐக்கக்குறிகாட்ட அம்மூன்றின் சிலுவைக் கொடி களை ஒன்றாகச் சேர்த்து ஐக்கக் கொடியாக்கினர். |
ஐக்கவாதி | சிவன், பதி. மாயை, கன்மம் எனப் பாசமிரண்டு. இருவினைக்குத் தகுந்தபடி கன்மம் புசிக்கையில் இருவினை யொப்புவந்து சத்திநிபாதம் வந்த அவசரத்தில் சிவன் ஆசாரியனாய் எழுந்தருளி உபதேசித்து ஆன்மாவைத் தன்னிடம் ஒடுக்குவன் என்பான். (தத்வநிசானுபோக சாரம்.) |
ஐங்குரவர் வணக்கம் | அரசன், உவாத்தியாயன், தாய், தந்தை, தமயன். இவர்களைத் தேவரைப்போலத் தொழல் வேண்டும். (ஆசாரக்கோவை.) |
ஐங்குறுநூறு | அகத்தின் பகுதியைப் பகுதி பொருளாகக் கொண்டுவரும் (500) அகவல் கொண்ட நூல். இதில் ஒவ்வொரு நூறும் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் முதலியவர்களாலும், இந்நூவின் கடவுள் வாழ்த்துப் பாரதம் பாடிய பெருந்தேவனாராலும் பாடப்பட்டன. இத்தொகை தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். இது இடைச்சங்கத்தவர் கையாண்ட நூல். |
ஐசந்திவினாயகர் | தேவர் வேண்டுகோளால் தேவருலகில் அமர்ந்த கணபதி. |
ஐச்வர்யம் | (8) இராஜாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை. |
ஐதரேயன் | 1 வினையன் குமரன். எட்டெழுத்தைக் கடைப்பிடித்து வேதமோதாக் குறையால் தந்தை, இவன் தாயையும் இவனையும் காட்டில் துறத்தினன். இவ்விருவரும் இருடிகள் வசிக்கும் இடம் போக்கிச் செல்ல அங்கிருந்தவர்க்கு நா எழாமல் போயிற்று. இவன் எட்டெழுத்தைக் குறித்து அது கிரகம் பெற்றுப் பின் வேதமுணர்ந்து பரமபதம் அடைந்தவன். 2. ஒரு ருஷி, ஜநமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தினவன. |
ஐதிகம் | உலகத்தார் இந்த மரத்தில் பேய் உண்டெனில் தானும் அஃதுண்டென்று கோடல், அன்றியுண்டோ இல்லையோவென ஐப்படா தொழிதல். |
ஐந்தவர் | இந்து என்னும் வேதியன் தவஞ்செய்து பெற்ற ஐந்து புத்திரர். |
ஐந்தாம் நாள் | நான்காநாள் யுத்தமுடிந்த பின் வீஷ்மர், துரோணர், கர்ணன், அசுவத்தாமன் இவர்கள் மனக்குறை பெற்று ஒருவரோடொருவர் சண்டை செய்யத் தொடங்குகையில் துரியோதனன் தடுக்கத் தடையடைந்து மறுநாள் படைகொண்டு சண்டை தொடங்கினர். அருச்சுநனும், வீமனும் பலரை எதிர்த்து மாய்க்கையில் துச்சாதனன் எதிர்க்க அவனை வீமன் முதுகிட்டோட அடிக்கையில் துரியோதனன் எதிர்க்க மூர்ச்சையாக்கி அவன் சேனைகளில் (25000,) வீரர்களைக் கொல்லுகையில் பூரிசிரா எதிர்க்க அவனைச் சாத்தகி எதிர்க்கையில் சூரியன் அஸ்தமித்தான், |
ஐந்திணைக்குரிய கருப்பொருள் | புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல், இவற்றி னிமித்தம் எனப் பத்து வகை. (அகம்) |
ஐந்திணைக்குரிய கைகோள் இரண்டு | களவு, கற்பு. |
ஐந்திணையெழுபது | மூவாதியர் இயற்றியது. அகப்பொருளைந் திணைக்கும் பதினான்கு பதினான்காகப் பாடிய எழுபது வெண்பாக்களையுடையது. |
ஐந்திணையைம்பது | மாறன் பொறையனார் இயற்றியது. ஒவ்வோர் அகப்பொ ருட்டிணைக்கும் பப்பத்தாகப் பாடிய ஐம்பது வெண்பாக்களையுடையது. |
ஐந்திரம் | சிவனது கீழ்த்திசை முகம். (பார. அநு. அத்; 206.) |
ஐப்பசி உத்திரவிரதம் | ஐப்பசி மாதத்து உத்திராகூத்திரத்தில் பார்வதி தேவியாரை யெண்ணி நோற்பது. |
ஐப்பசி பௌர்ணமி | கௌமுதி ஜாகரவிரதம்; இது உத்தரதேசத் தில் அனுஷ்டிப்பது. இதில் லக்ஷ்மிவிரதம் விசேஷம். |
ஐப்பசிப் பரணி விரதம் | இது ஐப்பசி மாதம் பரணியில் வைரவக்கடவுளை யெண்ணி அநுட்டிப்பது. |
ஐமவதி | விஸ்வாமித்திரன் தேவி. |
ஐமினி | சாட்சூசமனுவைக் காண்க. |
ஐம்படைத்தாலி | இது காத்தற் கடவுளாகிய திருமாலின் பஞ்சாயுத வடிவமாகப் பின்ளைகட்கு ஐந்தாமாதத்தில் கட்டப்படும் அணிகலன். |
ஐம்புலநுகர்ச்சியினிறப்பன | சுவையாலிறப்பன மீன், நாற்றத்தால் வண்டு, பரிசத்தால் யானை, ஓசையால் அசுணம். ஒளியால் விட்டில். |
ஐம்பெருங்குழு | அமைச்சர், புரோகிதர், சேநாபதியர், தூதுவர், சாரணர். |
ஐயங்கார் | வடகலை வைஷணவப் பிராமணர்களுக்கும் சிலப் பட்டு நூற்காரர்களுக்கும் பட்டப் பெயர். |
ஐயடிகள் நாயனார் | இவருக்கு ஐயடிகள் காடவர்கோன் நாயனார் எனவும் பெயர் இவர், திருக்காஞ்சியில் பல்லவர் குலத்தில் திரு அவதரித்துப் பரமசிவனிடத்தில் அன்புபூண்டு அரசாட்சி துக்கத்திற்கேது என்று புத்திரனுக்களித்துச் சிவத்தல யாத்திரை சென்று திருவெண்பா பாடித் துதித்து முத்தியடைந்தவர், இவர் அருளிய பிரபந்தங்கள் க்ஷேத்திரத் தருவெண்பா முதலியன. (பெரிய புராணம்). |
ஐயனாரிதனார் | தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர் இயற்றிய பன்னிரு படலத்திற்கு வழிநூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை யியற்றிய நூலாசிரியர். இவர் சேரர் பரம்பரையைச் சேர்ந்தவர், (புறப்பொருள் வெண்பா) |
ஐயனார் | அரிகர புத்திரர். இவருக்கு ஆயுதம் வளை, செண்டு, வாகனம் குதிரை, யானை. ஒரு சோழன் இவரை வணங்கிச் செண்டு பெற்று மேருவிலிருந்த செல்வம் பெற்றனன். அரி, அரர், கூடப்பிறந்ததால் இப்பெயர் இவர் பூண்டார். |
ஐயம் | ஒரு பொருளை மாறுபட்ட பல பொருள்களாக உணர்தல். |
ஐயர் | க்ஷத்திரியர். சர்யாதி புத்திரர். |
ஐயவணி | அஃதாவது ஒப்புமையினாலே ஒரு பொருளைக் கண்டிதுவோ அதுவோ வெனச் சந்தேகித்தலாம். இதனை வடநூலார் சந்தேகாலங்காரம் என்பர். |
ஐயாதிச்சிறு வெண்டேரையார் | இவரைச் சிறுவெண்டேரையா ரெனவுங் கூறுவர். “இருங்கடலுடுத்த” எனப் பெருங்காஞ்சி பாடியவர். (புறத்திணை~3363) |
ஐயூர் | பாண்டி நாட்டகத்ததோரூர். இவர் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் ஆற்றலைச் சிறப்பித்து அரசவாகை பாடியவர். (புறம்~51) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனால் ஆதரிக்கப்பட்டு வந்தவர். இவர் நடக்க இயலாமையின் ஓர் ஊர்தி (வாகனம்) வேண்டித் தாமான் தோன்றிக் கோனிடஞ் சென்று பரிசில் வேண்ட அவன் இவருக்கு உணவளித்தலும் அதனை விரும்பாராய்த் தாம் வந்த செய்தி தெரிவிப்ப அவ்வண்ணமே யானையும் அதற்கு வேண்டுவ பிறவும் நல்கப்பெற்று மீண்டனர். புறம்~399. கிள்ளிவளவன் இறந்ததறிந்து பெரிதும் புலம்பி வருந்தினார். புறம் 228. அதியன் எழினிபோரிற் பட்டதைப் பாராட்டிக் கூறியுள்ளார். அகம் 216. இவர் நற். 334ல் கூறிய உள்ளுறை யாவரும் வியக்கத்தக்கது. இவர் குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார்; முகம்புகு கிளவி பாடியவருள் இவருமொருவர். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு. 206, 334 பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும் அகத்தில் ஒன்றும், புறத்தில் நாலுமாகப் பத்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றிணை) |
ஐயூர் முடவனார் | முடவனாரென்பது வடிவுபற்றிய பெயர். இவர் முடவர். இவ ரதியற் பெயர் தெரியவில்லை. |
ஐயூர்மூலங்கிழார் | கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் “புலவரை இறந்த” என பாடிய தமிழ்ப்புலவர். (21) (புற~நா) |
ஐயை | மாதரி மகள். கண்ணகியிடம் பற்றால் சேரனாடு சென்று கண்ணகியின் கோயிலடைந்தவள். (சிலப்பதிகாரம்). |
ஐராணி | இந்திரன் மனைவி. |
ஐராத்மவாதம் | அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரமசரியம், சங்கிரகம், இவற்றை ஐந்து சீலம் என்பர். பௌத்தர். (சிவ~சித்.) |
ஐராபதம் | இது சிங்கச்சுவண மென்னும் உயர்ந்த பொன் பிறத்தற்கு இடமாகிய மலை. (பெருங்கதை.) |
ஐராபதி | இவன் பதுமாபதியின் செவிலித்தாயின் மகளும், அவள் உயிர்த்தோழியு மாகவுள்ளவள் கூனிய உருவமுடையளாதல் பற்றிக் கூன்மகள் கூனியெனவும் இவள் வழங்கப்படுவன், ”பாகனையொழித்துக் கூன்மகள் கோல்கொள்” என்றதனால் இவள் அவளுக்கு வையஞ் செலுத்துபவளென்றும் தெரிகிறது. இராசகிரியத்தில் காமன் கோட்டத்தயலில் பதுமாபதியைக் கண்டு மயங்கி வினவிய உதயணனுக்கு அவள் வரலாறுகள் யாவற்றையும் சொல்லி அவனுக்கும் அவளுக்கும், தான் இடையே நின்று இருவர் கருத்தையும் முற்றுவித்தவள். கூர்த்தமதியினள் எந்தக் காரியத்தையும், மந்தணமாக முடிக்கும் ஆற்றல் வாய்ந் தவள். பந்தடித்தலில் மிக வல்லமையுடையவள். இப்பெயர் அயிராவதியெனவும் வழங்கும். (பெருங்கதை.) |
ஐராவசு | ஒரு காந்தருவன். இவன் தேவகுரு சாபத்தால் யானையுருப் பெற்றுக் கதிர்காம வேலரைப் பூசித்து நல்லுருப் பெற்றவன். |
ஐராவணம் | இது ஆயிரம் கொம்புகளையுடையது. கைலாசத்தில் உள்ள வெள்ளை யானை. |
ஐராவத நல்லூர் | இஃது ஐராவதம் உண்டாக்கிய ஊர். மதுரைக்குக் கிழக்கே உள்ளது, (திரு. விளை.) |
ஐராவதகணேசர் | ஆனை யூருணிக்கரையில் ஐராவதத்தாற் பூசிக்கப் பெற்ற விநாயகர். மதுரைத் திருப்பணிமாலையில் “ஆங்க தன்பின் என்னும் பாடலைக் காண்க. (திருவிளை.) |
ஐராவததீர்த்தம் | ஐராவதத்தால் உண்டாக்கப் பெற்றது; யானை பூருணியெனவும் கணபதியேந்தலெனவும் வழங்கும், மதுரைக்கு மேற்கேயுள்ளது. (திரு. விளை.) |
ஐராவதன் | ஒரு நாகன், உதங்கர் கொண்டு வந்த நாக்குண்டலத்தைக் கொண்டு போனவன். |
ஐராவதம் | இந்திரனுடைய வெள்ளையானை, இது பாற்கடலில் தோன்றியது. நான்கு கொம்புடையது. இந்திரன் சூரனுக்குப் பயந்து ஒளித்தபோது அவன் பட்டணத்தில் வந்த பானுகோபனுடன் யுத்தஞ் செய்த சயந்தனைத் தாங்கிச் சயந்தன் மூர்ச்சிக்கக்கண்டு பானுகோபன் உடலிற்றாக்கிக் கொம்புகள் முரிந்து திருவெண்காட்டில் சிவபூசையால் வளரப்பெற்றது. இந்திரன் கந்தமூர்த்தியுடன் யுத்தஞ் செய்து தோற்கக்கண்டு கந்தமூர்த்தியைத் தாங்கத் தவஞ்செய்து தாங்கப்பெற்றது. ஒரு முறை துருவாசர் சாபத்தால் காட்டானையாயிற்று. அட்டதிக்கஜங்களி லொன்றாய்க் கீழ்த்திசையிலிருப்பது. |
ஐராவதி | இமயத்தின் தென்சாரலிற் றோன்றி வங்காளாக்குடாவில் கலக்கிற நதி. |
ஐராவதேசுவரர் | ஐராவத்தீரத்துக் கரையில் ஐராவதத்தாற் பூசிக்கப்பெற்ற சிவ பெருமான். (திரு. விளை.) |
ஐரோப்பா கண்டம் | இது, எல்லாக் கண்டங்களிலும் சிறியது. இது குணகோ லார்த்தத்திற் வடமேற்குப் பாகத்திலிருக்கின்றது. இது, வடக்கில் உத்தரமகா சமுத்திரம், கிழக்கில் யூரல்மலை, காஸ்பியன் கடல், தெற்கில் காக்ஸஸ் மலை, கருங்கடல், மத்ய தரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் மகாசமுத்திரம். ஐரோப்பிய தேசங்கள் இங்கிலாண்டு, ஸ்காட்லண்ட், அயர்லண்ட், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் ஜெர்மனி, ரஷ்யா, இடலி, ஆஸ்திரியா, ஹங்கரி, ஸ்விட்செர்லண்ட், ஸ்பெயின், போர்க்ஷகல், ஆலண்டு, பெலுஜியம், டென்மார்க், ரோமானியா, கிரீஸ், ஐரோப்பிய துர்க்கி, செர்வியா, பல்கேரியா, மாண்டி நீக்ரோ என்பன. |
ஐலன் | புரூரவஸுக்குப் பெயர். |
ஐலவிலன் | இலவிலன் மகன். |
ஐளன் | உலோபத்தால் நஷ்டமடைந்தவன். |
ஐவகை வேள்வி | பிரமவேள்வி, வேதமோதுவித்தல், பிதுர்வேள்வி, தருப்பணஞ் செய்தல், தேவவேள்வி, வேட்டல் பூத வேள்வி பவியிடுதல். மானுடவேள்வி விருந்தோம்பல். (காத்யாயனர்.) |
ஐவகை ஸ்நானம் | ஆக்னேயம், வாருணம், பிராம்மணம், வாயவ்யம், திவ்யம் என்பன. விபூதி பூசிக்கொள்ளுதல் ஆக்னேயம், ஜலத்தில் முழுகுதல் வாருணம், மந்திர நீரால் ஜலத்தில் முழுகுதல் பிரம்மஸ்நானம், பசுவின் காலிற்றோன்றும் தூளி படப் போதல் வாயவ்யம், வெயிலுடன் கலந்த மழை நீரால் முழுகுதல் திவ்யம் எனப்படும். (பாரதம்.) |
ஐவகைத் தெய்வமணிகள் | சிந்தாமணி, சூளாமணி, சியமந்தகமணி, சூடாமணி, கௌத்துவமணி. |
ஐவகைப் பண்டம் | நிலம், களம், காலேயம், மெய்ப்பொருள், மெய்ப்பண்டம். (வீர சோழியம்) |
ஐஷ்வாகி | சந்திரவம்சத்துப் புமன்யுபுத்ரனாகிய சுகோத்ரன் தேவி. இவள் புத்ரர் அசமீடன் முதலியோர். |
ஐஹயர் | இவர்கள் கார்த்தவீரியார்ச்சுநனுக்குப் பின் வந்த அரசர். இவர்கள் வறுமையால் துன்பமடைந்து தம் முன்னோரிடம் தானம் வாங்கிய பிருகு வம்சத்து வேதியரிடம் தனமுள்ளதாகத் தெரிந்து இயற்கையான வட்டிக்கு அதிகந்தருவதாக வாக்களித்தும், அவர்கள் தங்கள் செல்வங்களைப் பூமியிற் புதைத்து இவர்க்குத் தனந்தருவதற்கு லோபமடைந்து காட்டில் வசிப்பதுணர்ந்து ஹைஹயர் பூமியைத் தோண்டிப்பார்க்கத் தனங்கண்டு அவ்வம்சத்தவர் கபடர்களென்று எண்ணி அப்பிராமண வம்சத்தை நிர்மூலஞ் செய்யத் தொடங்கினர். இவர்கள் பிராமண ஸ்திரீகளைக் கொல்ல யத்தனித்துத் தேடிச் செல்கையில் இந்தப் பிராமண ஸ்திரீகளில் ஒருத்தி தொடையில் பிருகு முனிவர் தோன்றி இவர்களின் கண்ணைப்போக்க ஹைஹயர்கள் முனிவரைத் தோத்திரஞ் செய்து கண் பெற்றவர்கள், (தே~பா.), |