ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஏகசக்ரநகாம் | இது, அரக்குமாளிகையினின்று தப்பிப் பிராமணவேடம் பூண்ட பாண்டவர் வசித்த நகரம். இதில் இருக்கையில் வீமன் பகாசுரனைக் கொன்றனன். திரௌபதியின் திருமணம் நடந்தது. தற்கரலம் அவ்விடம், ஏரா என்கிற பட்டணம் இருக்கிறது. |
ஏகசக்ரன் | தநு புத்திரர்களில் ஒருவன். |
ஏகசத்தி ஆசாரி | ஏகசந்தியெனும் நூல் செய்தவன். |
ஏகசந்தி | சகதேவன் குமரன். சராசந்தன் பேரன். |
ஏகதந்தன் | விநாயகமூர்த்தி, கசமுகாசு ரனைக் கொல்லத் தந்தங்களில் ஒன்றை விட்டெறிந்தமையால் அது தொடங்கி விநாயகருக்கு இப்பெயருண்டாயிற்று. |
ஏகதன் | 1. கௌதமன் புத்ரன். 2. பிரமன் குமாரர்களில் ஒருவன். |
ஏகதர், துவிதர், திரிதர் | இவர்கள் பிரம புத்ரர். இவர்களில் திரிதருடைய சாபத் தால் முதலிருவரும் ராமாவதாரத்தில் குரங்குகளாயினர். (பார~சாந்) |
ஏகநாதசுவாமி | பைடனபுரியில் வேதியர் குலத்தில் பிறந்து இளமையிலே ஜனார்த்தன சுவாமியின் அடிமையாகி அவர்க்குச்சிச்ருஷை செய்துவரும் நாட்களில் ஆசிரியர் மகிழ்ந்து இவர்க்குத் தமதாசிரியராகிய தத்தாத்திரேயரைச் சேவித்து வைக்க எண்ணி அவ்வாறு செய்து இவரை அவரது இருப்பிடஞ் செல்ல விடுத்தனர். ஏகநாதர் அவ்விடஞ்சென்று ஆசாரியர் உபதேசத்தை மறவாமல் ராமாயணம் பிராக்ருதபா ஷையிற் பாடத் தொடங்கி இராமமூர்த்தி இவரை எழுப்பி இவர்க்கு எழுத மசிக்கூடும் இலேகினியும் வைத்து மறைதலைக் கண்டு ராமகதை எழுதி வருகையில் அயல்வீட்டான் இவரையணுகி உபதேசம் வேண்ட அவன் அருகனல்லாமை தெரிந்து அவனைவிலகிச்சுலீப் பர்வதமடைந்து நாகமிவர்க்கு நிழல் செய்ய யோகத்திருக்கையில், கண்ணனருள் பெற்று ஆசாசியர் சொற்படி தமதூரடைந்திருக்கையில் பெருமாள் ஏவலாளராக இவரிடம் வந்து ஏவல் செய்து வருகையில் தாசரின் பிதுர்த்தினம் வந்தது. அந்நாளில் பிதுர்க்களுக்குச் சமைக்கப்பட்ட அன்னத்தை வேறுசிலர்க்கு அமுது செய்வித்ததால் வேதியர் சிரார்த்தத்திற்கு வராது நின்றனர். அக்காலத்து ஏவலாளராயிருந்த பெருமாள் பிதுர் தேவதைகளை அழைத்து அன்னம் படைப்பித்து வேற்றோர்க்கிட்ட அன்னத்தால் ஒருவனடைந்திருந்த குஷ்ட வியாதியைப் போக்கியிருந்தனர். இது நிற்கத்தவத்தி னர் ஒருவர் துவாரகை சென்று பெருமாளைக் கோயிலில் காணாது பைடனபுரியில் இருப்பதறிந்து ஏகநாதரிடம் வந்தனர். இதனைப் பெருமாளுணர்ந்து மறைய ஏகநாதர் பெருமாள் நமக்கு ஏவலாளராக இருந்தனர் என மிகவும் விசனமுற்றுத்துதித்திருந்தவர். |
ஏகநேத்ரர் | அஷ்ட வித்யேச்வரரில் ஒருவர். |
ஏகன் | (சந்.) இரேயன் குமரன். |
ஏகன் சாம்பன் | வாண முதலியாரின் பண்ணையாள். (ஏகம்பவாணரைக் காண்க.). |
ஏகபாததிரிமூர்த்தம் | தாம் ஒருவரே சிருட்டிதிதியின் பொருட்டுப் பிரம விஷ்ணுக்களைத் தம்மிடந் தோற்றுவித்த சிவமூர்த்தியின் திருக்கோலத்தொன்று. |
ஏகபாதன் | அட்டவக்ரனுக்குத் தந்தை. |
ஏகபாதமூர்த்தம் | சிருஷ்டிக்கு முன்னும் சர்வசங்காரத்துக்குப் பின்னும் தனித்து நிற்கும் சிவமூர்த்தி, இவர்க்கு ஒரேபாதம். |
ஏகபாதர் | கேரளதேசவனவாசிகள். (பாரசபா.) |
ஏகம்பர் | காஞ்சியில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தியின் திருநாமம். |
ஏகம்பவாண முதலியார் | இவர் மகத நாடெனப்படும் நடு நாட்டிலுள்ள ஆற்றூமருக்குரியவர். இவர் குலோத்துங்க சோழன் காலத்திருந்த வானபூபதி யென்னும் வேளாளரின் குமரர். இவர் பிறந்த ஒரு வருடத்தில் தாயிறந்தனள். பிறகு இவர் தந்தை தமக்கு மரணம் வருதல் அறிந்து தம்மிடமிருந்த ஏகன், சாம்பன் என்னும் பண்ணையாளை அழைத்துத் தம்மிடமிருந்த செல்வ முதலியவைகளை ஒப்புவித்து மரணம் அடைந்தனர். இவ்வகை முதலியார் இறந்த பிறகு ஏகன், முதலியார் குமாரனை முதலியாரின் குலத்துக்கேற்றவரிடம் ஒப்புவித்துப் பாதுகாத்து வந்தனன். அந்தப் பிள்ளைக்கு ஐந்தாம் வயது வந்தபோது ஏகன், கம்பநாடரிடம் பிள்ளையை ஒப்புவித்துக் கம்பர் அவாவின் அளவு பொருள்கொடுத்துக் கல்வியில் வல்லவர் ஆக்கினன். குமரன் கல்வி முதலியகற்றுப் பதினாறு வயது அடைந்ததும் வாணமுதலியார் தன்னிடம் ஒப்புவித்துச் சென்ற நிலம், தனம் முதலிய எல்லாவற்றையும் கும ரனிடம் ஒப்புவித்துப் பூமியில் சேமித்து வைத்த நிதியை மாத்திரங் கூறாது இருந்தனன். பின் ஏகன், அவர் குலத்துக்கேற்ப ஒரு நற்குலமாதை அறிந்து விவாகம் முடித்தனன். இக்குமரனும் அவனைத் தந்தை போலெண்ணி அவன் பெயர் முன்னும் தனக்குக் கல்வி போதித்த கம்பர் பெயர் இரண்டாவதும் தன் தந்தை பெயர் மூன்றாவதுமாக வைத்து ஏகம்பவாண பூபதியென்னும் பெயர்தரித்து வாழும் நாட்களில் ஏகன், சேமித்திருக்கும் நிதியைத் தெரிவிக்கும் பொருட்டு ஏகம்பவாணரை அழைத்துப் பொருளிருக்குமிடத்தைக் கூறினன். ஏகம்பவாணர் பொருளை எடுக்கும்படி யத்தனிக்கையில் பூதம் ஒன்று தோன்றி, நான் இதுவரையில் இந்நிதியைக் காத்து வந்தமையால் எனக்கு, ஒரு தந்தைக்கு ஒரே குமரானாகிய ஒருவனைப் பலிதரல் வேண்டும் என்றது. அதனைக் கேட்ட முதலியார் அப்படிப்பட்ட செல்வம் வேண்டாது ஏகனிடம் நடந்ததைக் கூறினர். ஏகன் இச்செய்தியை அறிந்து தான், ஏகம் பவாணருக்குத்தெரியாமல், தானே அந்தப் பூதமிருந்த இடத்திற் சென்று தன்னைக் கொலைசெய்து கொண்டனன். அந்நிதிக்குக் காவலாயிருந்த பூதம் ஏகம்பவாணரிடத்துவந்து என் பலியைப் பெற்றுக் கொண்டேன். இனி உம் செல்வத்தை எடுத்துக்கொள்ளும், என்னையும் உம் ஏவலாளாகக் கொண்டிரும் என்றது. இதனைக்கேட்ட ஏகம்பவாணர் திடுக்கிட்டுச் சென்று கண்டு ஏகன் இறந்ததைப்பற்றி மனம் வருந்தி அவனுக்கு வேண்டிய கருமாதிகளைத் தாமே முடித்துப் பொருள் பெற்று இருந்தனர். இவ்வகை இருந்த காலத்துத் தமிழ்நாட்டு வேந்தராகிய மூவரும் ஏகம்பவாண முதலியாரைக் காண வந்தனர். அக்காலத்தில் முதலியார் எங்கு என்று கேட்க வீட்டிலுள்ளார், முதலியார் கழனிக்குப் போயினர் என்றனர். இதனைக்கேட்ட மூன்று அரசரும் முதலியார் நாற்றுமுடி பிடுங்கப் போயினரோ என்று இறுமாப்புடன் கூறியது அறிந்து இவர் தேவி சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி, ஆனை மிதித்தவருஞ்சேற்றின்மான, பாவேந்தர் வேந்தன் பறித்து நட்டானேகம்பன், மூவேந்தர் தங்கண்முடி. ” என்ற செய்யுளைக் கூறி அவமதித்தனள். இச்செய்தி அறிந்த வாணபூபதி தம்மிடந் தங்கியுள்ள பூதத்தை ஏவித் தமிழ்நாட்டு மூவேந்தரைச் சிறைசெய்யக் கூறப், பூதம் சேரன், சோழன் இருவரையும் சிறையிட்டுப் இப்பாண்டியனை வேப்பமாலை தரித்து இருத்தல் பற்றி அஞ்சி அவனிடத்தில் போகாது நின்றது. இதனைப் பூதத்தாலறிந்த வாணபூபதி, கம்பரது தாதிகளைப் பாண்டியனிடம் அனுப்பி அவனைப்பாடி அவனிடம் இருக்கும் வேப்பமாலையை வாங்கிவர ஏவினர். அந்தப்படி தாதிகள் சென்று “தென்னவாமீனவாசீவிலி மாறா மதுரை, மன்னவா பாண்டிவரராமாதுன்னுஞ், சுரும்புக்குத்தாரளித்த துய்ய தமிழ்காடா, கரும்புக்கு வேம்பிலேகண்”. “மாப்பைந்தார்க் கல்லமுத்து வண்ணத்தார்க் கல்லவஞ்சி, வேப்பந்தார்க்காசை கொண்டுவிட்டாளே பூப்பைந்தார், சேர்ந்திருக்குநெல்வேலிச் சீவிலி மாறாதமிழை, ஆய்ந்திருக்கும் வீரமாறா”. “வேம்பாகிலுமினிய சொல்லுக்கு நீபுனைந்த, வேம்பாகிலுமுதவ வேண்டாமோ மீன்பாயும், வேலையிலே வேலைவைத்தமீனவாயின் புயத்து, மாலையிலே மாலைவைத் தாண்மான்”. என்று அரசனைப் பாட அவன்மாலையைத் தரத் தாமதிக்கக்கண்ட தாதி “இலகுபுகழாறை யேகம்பவாணன், அலகைவரும் வருமென்றஞ்சி உலகறிய, வானவர் கோன் சென்னிமிசை வண்கைவளை யெறிந்த, மீன்வர்கோன் கைவிடான்வேம்பு. ” என்றதைக் கேட்டு நாணி மாலையைத் தந்தனன். அவன் தந்த வேப்பமாலையினைப் பெற்று நீங்கப் பூதம் பாண்டியனைத் தூக்கி ஏகம்பவாணரிடம் சேர்த்தது. பின் முதலியார் பாண்டி நாட்டைப் பாணனுக்குப் பரிசாக அளிக்கப் பாண்டியன் மனைவி மாங்கல்ய பிக்ஷை கேட்டனள். முதலியார் பாணனுக்கு நான் கொடுத்த பாண்டி நாட்டை அவனுக்குக் கோடிப் பொன் கொடுத்துப் பெறுக என்று பாண் டியனுக்குப் பல பரிசு அளித்து அவனிருப்பிடத்திற்கு அனுப்பினர். ஒருகாள் முதலியார், கம்பரைக்காணப் பாதிராத்திரியிற் சென்று கதவைத் தட்ட கம்பர் யார் என முதலியார் கம்பரடியான் எனக் கம்பர் வெளிவந்து முதலியாரைப் பார்த்து ”பாண்டியனைப் பேர்மாற்றிப் பாணர்க் கரசளித்த, வாண்டகையென் றுன்னை யறியேனோ~மூண்டெழுந்த, கார்மாற்றுஞ்செங்கை கடகரிவாணாவுனது, பேர் மாற்றுவதரிதோ பேசு. ” எனுஞ் செய்யுளைக்கூறி வீட்டினுள் அழைத்துச்சென்று உபசரித்து இருவரும் உறையூர் சென்று “தேருளைப் புரவிவாரணத்தொகுதி திறை கொணர்ந்து வருமன்னநின், தேசமேதுனது நாமமேது புகல் செங்கையாழ் தடவுபாணகேள், வாருமொத்த குடி நீருநா முமக தேவனாறை நகர் காவலன், வாண பூபதி மகிழ்ந்தளிக்க வெகு வரிசை பெற்றுவரு புலவன்யான், நீருமிப்பரிசு பெற்று மீளவாலாகுமேகும் அவன் முன்றில்வாய், நித்திலச் சிகரமாட மாளிகை நெருங்கு கோபுரமருங்கெலாம், ஆரும் நிற்கும் உயிர்வேம்பு நிற்கும் வளர்பனையும் நிற்கு மதனருகிலே, அரசு நிற்கு மரசைச் சுமந்த சில அத்திநிற்கும் அடையாளமே” என்பது முதலாகிய செய்யுட்களைப் பாடிக்களித்திருந்தனர். இவரைப் பற்றி இன்னும் சிலகவிகள் உண்டு. அவை பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான், வாணர் புகழவருமேகம்ப~வாணன், கரும்போ தகமேநின் கால்பணிவேன் மீண்டு, வரும்போதகமேவரின். (எ~ம்). ”என்சிவிகை என்பரியீதென்கரியீ தென்பரே~என் கவனம், மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற, பாவேந்தரை வேந்தர் பார்த்து. (எ~ம்.) “சேற்றுக் கமலவயல்றென்னாறை வாணனையான், சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் வேற்றுக்களிக்குமாவைத் தந்தான் கற்றவர்க்கு, செம்பொன், அளிக்குமாறெவ்வாறவன் முதலியன. இவர் காலத்திருந்த பாண்டியன் சீவலமாறன் எனும் ஸ்ரீ வல்லப தேவன் எனும் அதிவீரராமபாண்டியன் அதிவீரராம பாண்டியர் (கி. பி. 1564) இற்றைக்கு (360 வரு) களுக்கு முன்னிருந்தவர். அக்காலத்துத் தமிழ் நாட்டாசர் வலிகுன்றி விஜயநகரத்தரசர் கீழ்த்தங்கி வாழ்ந்தனர். இவர் விஜயநகரத் தரசருக்குப் பிரதிநிதியாக இருக்கலாம், ”அலங்கலணி மார்பனாறையர் கோன்வாணன், விலங்கு கொடுவருகவென்றான் இலங்கிழையீர் சேரற்கோ சோழற்கோ தென்பாண்டி நாடாளும் வீரற்கோயார்க் கோவிலங்கு” என்பன வற்றாலறிக. |
ஏகம்பவாணன் மனைவி | இவள் தமிழ் நாட்டு மூன்றாசரையும் மதிக்காது அவமதித்தவள். ஏகம்பவாணரைக் காண்க. |
ஏகம்பவாணருலா | காஞ்சி ஏகம்பர்மீது இரட்டையராற் பாடப்பட்டது. தமிழ் உலாப் பிரபந்தம். |
ஏகயன் | 1. சத்ருசித் குமரன். இவன் குமரன் தருமன். 2. அத்திரியைக் கொல்லவந்து துரு வாசரால் சாம்பலானவன். |
ஏகயம் | நருமதைக்கு அருகிலுள்ள நாடு, கார்த்த வீரியார்ச்சுநன் ஆண்டது. |
ஏகருத்ரர் | அஷ்டவித்யேச்வாரில் ஒருவர். |
ஏகலன் | வசுதேவன் தம்பியாகிய தேவச்ரவஸுவிற்குக் குமரன், நிஷாதர்களால் கொல்லப்பட்டவன். |
ஏகலவன் | ஹிரண்ய தனுவன் புத்ரன் வேடன். |
ஏகலவன் | ஒருவேடன், துரோணர் வில்வித்தை சீடர்களுக்குக் கற்பிப்பதை அறிந்து அவரிடத்துச் சென்று அவரை வில்வித்தை கற்றுக் கொடுக்கும்படி கேட்க அவர் மறுத்தனர். பிறகு வேடன் துரோணரைப்போ லுருச்செய்து அவ்வுருவத்தைக் குருவாகக்கொண்டு வில் வித்தை முழுமையுங் கற்றுக் குரு தக்ஷிணை கொடுக்கத் துரோணர் முன்பு சென்று கேட்க அவர் இவனுக்கு அந்த வித்தைகள் பலியாதிருக்க வேண்டி இடதுகைப் பெருவிரல்தனைக் கேட்டனர். அவ்வகையே வேடன் கொடுத்துப் பாரதயுத்தத்திற்கு முந்திக் கிருஷ்ணனால் கொலை செய்யப்பட்டனன். |
ஏகலைவன் | ஏகலவனுக்கு ஒரு பெயர். |
ஏகவீரன் | இவன் லக்ஷ்மிதேவி பெண் குதிரையாய்த் தவஞ்செய்கையில் ஆண் குதிரை வடிவாய்ப் புணர்ந்த விஷ்ணுவிற்குப் பிறந்து சம்பகனென்கிற காந்தருவனாலும் அவன் தேவி மதனாலசை யென்பவளாலும் இந்திரவுலகங்கொண்டு போகப்பட்டு இந்திரன் கட்டளையால் இருந்த இடத்தில் விடப்பட்டு யயாதி யென்னும் தூர்வசுவின் குமரனால் எடுத்து வளர்க்கப்பட்டவன். இவன் சலக்கிரிடையில் காலகேதுவால் வஞ்சித்தெடுத்துச் சென்ற ஏகாவலியின் அழகு முதலியவற்றை அவள் தோழி யசோவதியாலுணர்ந்து அத்தோழியிடம் தேவி மந்திரம் பெற்றுப் பாதாளஞ்சென்று காலகேதுவைச் செயித்து ஏகாவலியைச் சிறையினின்று மீட்டு அவன் தந்தையிடம் விட்டு அவன் அவளை மணஞ்செய் விக்க மணங்கொண்டு தன் மனைவியாகிய ஏகாவலியுடன் யசோவதியையும் அழைத்துக்கொண்டு தன் நாடடைந்து சுகமாக வாழ்ந்து கிருதவீர்ய னென்னும் புத்திரனைப் பெற்றனன். இக் கிருதவீர்யன் குமரன் கார்த்தவீரியன், இவனுக்கு ஐஹயன் எனவும் பெயர். (தேவி~பா.). |
ஏகாக்ஷபிங்களன் | குபேரன், இவன் உமையைத் தன் கண்ணால் கபடமாய்க்கண்டமையால் ஒருகண்ஒளி மழுங்கிப் பிங்கள நிறம் பெற்றவன். |
ஏகாதசருத்திரர் | 1. அஜைகபாத், அஹிர் புத்தியர், பிநாகி, ருதர், பித்ருரூபர், திரியம்பகர், மஹேச்வரர், விருஷாகபி, சம்புஹவனர், ஈஸ்வரர். (பார~அநு. 2. பிரமன் சிருட்டி முடியாமை கண்டழுது உயிர் நீங்கிய காலத்து அவன் உயிர் பதினொரு கூறாய்த் தேவவுருப் பெற்றது. அதுவே பிரமனுக்குப் பதில் சிருஷ்டி புரிந்தது. (இலிங்க புராணம்.) |
ஏகாதசி | இது வித்தியாதரப் பெண்ணொருத்தி இலக்ஷமியைப் பூசித்துப்பெற்ற பூமாலையை அடைந்த துருவாசர், இந்திரனுக்குக் கொடுக்க இந்திரன் தான் ஏறி வந்த யானைமீது வைக்க, யானை யெடுத்துத் தேய்த்து விட்டதால் கோபித்து இந்திரன் செல்வம் கடலில் விழச் சபித்தனர். இதனை மீண்டும் பெற ஏகாதசியில் தேவர் கடல்கடைந்து துவாதசியில் இலக்ஷ்மியின் அனுக்கிரகம் அடைந்து விஷ்ணுவைப் பூசித்த நாள். |
ஏகாதசி | வஞ்சுள ஏகாதசி விரதம்; அருணோதயத்தில் தசமி சம்பந்த மாய்ச் சூரியோதயத்தில் ஏகாதசி வியாபித்திருத்தல் நலம் என்பர். இத்தினத்தில் ஔதும்பர பாத்திரமாகிய அத்திமரத்தால் செய்த பாத்திரத்தில் நீர்கொண்டு விரத சங்கற்பஞ் செய்து கொண்டு விரதமிருந்து விஷ்ணு மூர்த்தியைப் பூசித்து அந்நாளில் ஆகாரம் முதலியன இல்லாமலும், பகலிற்றூங்காமலும், இரவில் விஷ்ணுவை மந்திர பூர்வகமாகப் பூசித்துப் பரான்னம் புசியாமலுமிருந்து மறு நாள் விஷ்ணுவைப் பூசித்துத் துளசி தளத்துடன் தீர்த்தார்ப்பணம் பெரு மாளுக்குத் தர்ப்பணஞ்செய்து நெல்லிக்கனியுடன் பாரணஞ் செய்யில் சுத்தியடைகிறான். இத்தினத்தை “தத்ரசுகாதிகை ஏகாதசி புதாத்வாதசி உன்மீலினீ,த்வாதசி வர்த்ததே சேத்ஸாவியஞ்ஜலி” என்பதால் வஞ்சள ஏகாதசி யென்பர். |
ஏகாநங்கை | யசோதையின் மகள். தந்தை நந்தகோபன். |
ஏகாநந்தி | யசோதையின் புதரி. |
ஏகாநேகை | ஆங்கிரஸபுத்ரி, இவளுக்குக்குகு என்றும் பெயர். |
ஏகாந்தராமையர் | அப்பாலூரிலிருந்த சிவனடியார். இவர் சிவயோகத்திலிருந்து நாடோறும் திருக்கைலையில் சிவமூர்த்தியையும் சிவனடியவரையும் தரிசித்து வசவாது பெருமை வினவி அவருடனன்பு பூண்டு இருந்தவர். ஒரு வாதில் அரசன் காணத் தம் தலையரிந்து சிவத்தியானஞ் செயச் செய்தனர். |
ஏகாம்பாபீடம் | சத்திபீடங்களில் ஒன்று. |
ஏகார்க்களம் | கீழ்மேலாக ஒருரேகை கீறி அதில் தெற்கு வடக்காக (13) ரேகைகள் கீறில் இவை இரண்டு பக்கங்களும் உச்சியுமாக இருபத்தேழாம். இதில் விட்கம்பம் ஆதியாகக் கழித்த ஒன்பது யோகங்களுக்குச் சொல்லுகிற நாளையுச்சியில் வைத்துத்தொடங்கி, ஆதித்தனியன்ற நாளளவும் வலமாக எண்ணிக் குறிசெய்து, பின்பும் உச்சியிலே தொடங்கிச் சந்திரனின்ற நாளளவும் வரவெண்ணினால், இருவர் நாட்களும் ஒரு கயிற்றிலே இருக்குமாகில் இந்த யோகமுற்ற நாள் மிகுதியும் சுபகன்மங்களுக்காகாவாம். தோஷமான யோகங்களுக்கு உச்சியிலே வைக்குநாள், அதிகண்டத்திற் கனுஷம், வைதிருதிக்குச் சித்திரை, வச்சிரத்திற்குப் பூசம், சூலத்திற்கு மிருகசீரிடம், விட்கம்பத்திற்கு அசுவரி, வியதிபாதத் திற்கு ஆயிலியம், கண்டத்திற்கு மூலம், பரிகத்திற்கு மகம், வியாகாதத்திற்குப் புனர்பூசம், இவற்றைவைத்துச் சந்திராதித்தர் நின்ற நாள்ளவும் தனித்தனியே எண்ணிக் காண்க. இவையே யேகார்க் களமாம். (சோதிடம்.) |
ஏகாலி | (ஈரங்கொல்லி) வண்ணான். இவனுக்கு வேஷ்டிகளை வெளுத்தல் தொழில். |
ஏகாவலி | இரப்பியன் எனும் அரசன், புத்ர காமேஷ்டி செய்ய, அதிற் பிறந்து வளர்ந்து நீர் விளையாடத் தாமரைப் பொய்கைக்கு வந்து காலகேது எனும் அரக்கனாற் பிடிபட்டுப் பாதாளத்திருந்து தோழியாகிய யசோவதியின் முயற்சியால் ஏக வீரனென்னும் அரசனால் சிறை நீங்கி அவனை மணந்து கிருதவீர்யனைப் பெற்றவள். |
ஏசாநந்தி | பூதநந்தனோடு பிறந்தவன், பிங்கலைதேசத்தரசன். |
ஏணி | இரண்டு மூங்கில்களுக்கிடையில மரக்குச்சுகளால் படிகள் போல் இயற்றப்பட்டு உயர்ந்த இடங்களிலேற உபயோகிப்பது இது, கண்ணேணி, நூலேணி எனப் பலவகை. |
ஏணிநிலை | இட்ட வீரக் கழலினையுடைய கொடுவினையாளர் செறிந்து செறியாதார் மண்ணின் ஏவறைகளையுடைய மதிலிலே ஏணியைச் சார்த்தியது. (பு. வெ). |
ஏதி | சிருஷ்டியில் பிரமனால் சிருஷ்டிக்கப்பட்ட அரக்கன். இவன் தேவி காலப்பகினியெனும் மாயை. இவன் தம்பி தபசியாயினன், இவன் ராக்ஷஸ வம்சத்திற்கு மூலபுருஷன். குமரன் வித்யுத்கேசன் அல்லது மின்னுக்கேசன். |
ஏது | இது மூன்று வகை. இயல்பேது, காரியவேது, அநுபலத்தி ஏது என்பன. (ஏது என்பது தர்மத்திற்குப் பரியாயப் பெயர்.) தருமத்தாற் றருமியை அறிவிப்பது இயல்போது, காரியமாயிருந்து காரணத்தை அறிவிப்பது காரியவேது. அபாவத்தைச் சாதிக்கும் ஏது அதுபலத் தியேது. (தருக்கம்). |
ஏது அணி | யாதானும் ஒரு பொருட்டிற மிதனினிது நிகழ்ந்ததென்று காரணம் விதந்து சொல்வது. இது காரகம், ஞாபகம் என இருவகைப்படும். பின் வரும் பொருள் முதலியவற்றுடன் காரகத்தைக் கூட்டிப் பொருட்காரக ஏது முதலியவாகக் கூறுப. ஞாபக ஏதுவாவது சொல்லிய ஆறுகாரணமன்றிப் பிறகாரணத்தால் வருவது. பொருள், கருமம், கருவி தூர காரியம், ஒருங்குடன் தோற்றம், காரியமுந்துறு காரணநிலை, யுத்தம், அயுத்தம், அபாவம் என்பனவும் இதில் அடங்கும். (தண்டி). |
ஏதுப்போலி | (3) அவை, அசித்தன், விருத்தன், அநைகாந்திகன் என்பன. அசித்தனாவது நிச்சயிக்கப்படாத பக்ஷவிருத் தியையுடையது. விருத்தன் பக்ஷத்திலும் விபக்ஷத்திலு முடைத்தாயிருக்கை, அநை காந்திகம் பக்ஷத்திரயத்திலும் விருத்தியிருத்தல். (சிவ~சித்). |
ஏதுவாந்தாம் | வாதி சொன்ன சாத்யந்தரமாயிருக்கிற ஏது முதலியவற்றைப் பிரதிவா தியானவன் தூஷிக்சையில் அவன் பின்னையுமொரு விசேஷத்தோடேகூடத் தான் முன் சொன்ன ஏதுவைத் திடப்படுத்திச் சொல்லுகை. (சிவ~சித்.). |
ஏனாதி | 1. இது சாணார்க்கும், அம்பட்டர்க்கும், மந்திரியர்க்கும் பட்டப் பெயர். இது ஒரு வடக்கிலுள்ள ஒருவகைத் தாழ்ந்த சாதிக்கும் பெயர். (தர்ஸ்டன்.) 2. தமிழ்நாட்டு அரசர்களால் சூட்டப் பட்ட சேநாபதிப் பட்டம். |
ஏனாதிகள் | இவர்கள் ஒருவகை தாழ்ந்த ஜாதியார். இவர்களிற் சிலர் மீன் பிடிப்பவர் படகோட்டிகள், இவர்களில் செஞ்சு என்பதும் ஒரு ஜாதி. இவர்கள் நெல்லூர் ஜில்லா வாசிகள். இவர்களில் ரெட்டி எனாதிகள், அடவி எனாதிகள், மஞ்சி ஏனாதிகள் எனப் பிரிவுண்டு. இவர்களில் சிலர் தவளை தின்பர். சோம்பேறி எனாதிகள் எச்சில் உண்பவர். இவர்கள் தெலுங்கு பேசுவர். |
ஏனாதிநாதநாயனூர் | சிவபக்தி, சிவனடியவரிடத்து அன்பு, உள்ளவர். எயினனூரில் சழக்குலச்சான்னார் குலத்தில் பிறந்து அரசருக்கு வாட்படை பயிற்றி, வரும் பொருட்களைச் சிவனடியவர்களை உபசரித்துச் செலவு இட்டு வருநாட்களில், அதிசூரனென்பவனொருவன் இவரிடம் பகைகொண்டு சண்டைசெய்து வெல்லுதலரிது, வஞ்சனையால் வெல்லவேண்டுமென எண்ணிச் சண்டைசெய்யப் புறப்பட்டு நெற்றியில் விபூதி தரித்து அதைக் கையிலுள்ள பலகை (ஓர் ஆயுதம்) யால் மறைத்து நாயனாருடன் சண்டைக்குச் சமீபித்து நின்றவுடன் விபூதியைக் காட்ட நாயனார் அஞ்சிச் சிவனடியரென்று செயலற்று நிற்கக் கண்டு அதிசூரன் தன் எண்ணப்படி முடித்தனன். இதனால் நாயனார் சிவபதமடைந்தனர். (பெரிய புராணம்.) |
ஏமகண்டன் | சோமகாந்தனைக் காண்க. |
ஏமகூடம் | அவுடகுலாசலங்களி லொன்று, மேருவின் தெற்கு இமயத்திற்கப்பால், 9000 யோசனையில் உள்ள பருவதம். இது விஞ்சையர் வாழிடம். |
ஏமசந்திரன் | விசாலன் குமரன் சுசந்திரன். |
ஏமசீதளமகாராஜன் | உக்கிரசீதள மகாராசாவின் குமரன். இவன் காஞ்சியில் அரசாண்டு சைநனாய்ப் புத்தரை இலங்கைக்கு ஒட்டினன். |
ஏமதத்தன் | ஓர் பாரதவீரன். |
ஏமநாதன் | பாணபத்திரரைக் காண்க. |
ஏமநாபன் | ஒரு பருவதராசன். |
ஏமன் | 1. கத்ரு குமரன். 2. சயத்திரன் குமரன். |
ஏமமகாருஷி | ஓர் இருடி. கும்பகோணத்தில் தவமியற்றிச் சித்திபெற்றவர். இவர்க்கு ஏமருஷியெனவும் பெயர். |
ஏமமாபுரம் | தடமித்தன் பட்டணம். |
ஏமரதன் | (சூ.) ஷேமாலி குமரன். |
ஏமவர்ணன் | ஓர் அரசன். தேவிகாந்திப் பிரபை, வருணன் குமரி. சுவீக்ஷித்தின் மாமன். |
ஏமவெருமை | மன்னர் குடைகள் தம்மில் தலைமயங்கிய வாட்போருள் தானெறிந்தவேல், பொருகளிற்றின் மத்தகத்துக் குளிப்பத் தோள்வலியால் வென்றி கொண்டது. (பு. வெ). |
ஏமாங்கதன் | 1. பாக்லிக தேசத்தாசனாகிய சலன் குமரன். இவன் புத்திரகாமேஷ்டியாற் பிறந்தவன். இவன் தந்தை இவனுக்கு நாமகாணஞ் செய்ய எண்ணுகையில் சிந்து தேசாதிபதியா வனுப்பப்பட்டடொன் தோள்வளை வந்தது அதனால் இருந்தவர் இவனுக்கு எமாங்கதன் என்று பெயரிட்டனர். இவன் வளர்ந்து பருவமடைந்து காட்டின் வளங்களைக் காண எண்ணித் தன் மந்திரி குமானாகிய மதி விசாலன் உடன் புறப்பட்டுக் காட்டில் தங்கியிருக்கையில் வனசரரால் காளிக்குப் பலியிடப் பிடிபட்டு அவ்விடம் பாதாள கந்தர் ஆலயங்கண்டு கந்தமூர்த்தியைத் தரிசித்து அவர் கருணையால் தாங்கள் முன் பிறப்பில் அசுரர் என்று உணர்ந்து சர்வ ஆயுதங்களும் பெற்று நீங்கிக் கொல்ல வந்த யானை, புலி முதலிய கூட்டங்களை ஆயுதத்தாற் கொன்று ஒட்டி அப்பால் இம்பாசலத்தின் சாரலில் சென்று தன் தந்தையா லோட்டப்பட்ட ராஜ குடும்பத்தவர் அரசனுக்குப் பயந்து வசிக்கும் பரிதாபத்தைக் கண்டு நீங்கி அம்மலை யுச்சியில் சென்று அங்கிருந்த குகைக்குள் இளைப்பாறியுறங்கி அவ்விடமிருந்த இராஜ குமரிகளால் உபசரிக்கப் பெற்று அவர்கள் காசுமீரத்து அரசன் பெண்கள் தம் தந்தையால் துறப்புண்டவர் என்றறிந்து நீங்கித் தன்னாட்டில் தன் தந்தையுடன். போரிட்டு வென்றவரைச் செயித்துத் தான் காட்டில் கண்ட காஷிகளைத் தந்தையிடங் கூறித்தான் மலையிற் கண்ட இரண்டு பெண்களையும் மந்திரியும் தானும் மணந்து அரசு ஏற்று ஆண்டிருந்தவன். 2. புழுகு பூனையாக இருந்து அருணாசலப் பிரதக்ஷிண்ததால் அரசனாகப் பிறந்து முத்தி அடைந்தவன். 3. வசுதேவன் குமரன். 4. சித்திரகூடாரசன் குமான். (சூளா.). |
ஏமாங்கதம் | 1. ஒரு நகரம். 2. சீவகனாடு (சூளா.) |
ஏமாங்கன் | சயிந்தவநகராண்டவன். இவன் புத்திரப்பேறு இல்லாமல் தன் மனைவியுடன் தவஞ்செய்து பானுவென்னும் குமரனைப் பெற்றவன். |
ஏமை | ஒரு தெய்வமாது. இவள் பிலத்து மயனால் நீருமித்த நகாத்திருந்தவள். இவளிருந்த இடத்தில் ஒரு தெய்வமாது இருந்து சீதையைத் தேடச்சென்றவானார்களால் காணப்பட்டனள். |
ஏயர் குலம் | இது மிருகாவதியின் தந்தை குலம். இக்குலத்தோர்க்கும், தன் குலத்தோர்க்கும் பரம்பரை வைரம் இருந்தமையாலே தான், இக்குவத்திற்கு உரியவனாக வந்த உதயணனிடம் விரோதமுற்று அவனுடைய இராசதானியாகிய கோசம்பி நகரத்தைப் பாஞ்சாலராசன் கைப்பற்றி அரசாளுவானாயினன். (பெரு~கதை.) |
ஏயர்கோன் கலிக்காமநாயனார் | மானக்கஞ்சாரருக்கு மருகர். இவர் சோணாட்டில் பெருங்கலம் என்னும் க்ஷேத்திரத்தில் வேளாளர் மரபில் எயர்கோன் குடியில் திருவவதரித்துத் திருப்புன்கூர் சிவமூர்த்திக்குப் பத்திசெய்து கொண்டிருக்கும் நாட்களில், சுந்தாமூர்த்திநாயனார், சிவமூர்த்தியைத் தூது அனுப்பினர் என்று கேட்டு அதுமுதல் அவரிடத்தில் வெறுப்புற்று இருந்தனர். இதனைச் சுந்தரமூர்த்திகள் கேட்டுத் தாம் செய்தது தீங்கென்றுணர்ந்து சிவபெருமானிடம் முறையிடச் சிவமூர்த்தி இருவரையும் நண்பு செய்விக்க எண்ணி ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்குச் சூலை தந்தனர். இவ்வகை சூலைகொண்டவர் சிவமூர்த்தியை நோய் நீங்கப் பிரார்த்திக்கச் சிவபெருமான் தரிசனந் தந்து இச்சூலை சுந்தரனால் நீங்குமென்று மறைந்தனர். பிறகு சிவமூர்த்தி சுந்தாரிடஞ் சென்று நீ சென்று ஏயர்கோன் சூலையைத் தீர்க்க என, சுந்தார் களிப்புற்று வந்தனர். இவர் வாவைக் கேட்ட ஏயர்கோன் அவரைக்காண மனமில்லாது என்னைப் பற்றிய சூலையை வயிற்றினோடுங் கிழிக்கிறேன் என்று உடைவாளினால் வயிற்றைக் கிழித்துக்கொண்டனர். சூலையும் வயிற்றுடன் நீங்கிற்று. சுந்தரர் வரவை ஏயர் கோன் மனைவியார் கேட்டு எதிர்கொண்டு அழைத்துவாச் செய்து ஆசன முதலியன இட்டனர். சுந்தரர் நாயனாரைக் கண்டு அளவளாவ இல்லையே என்று வருந்த அருகு இருந்தவர் நாயனாருக்கு உடம்பிற்கு ஒன்றுமில்லை நித்திரைசெய்கிறார் என்ன, அவரைக் காணவேண்டும் என்று அவர் இருக்கும் அறையிற் சென்று அவர் கையில் சுரிகையுடன் குடல் சரிந்து இறந்து இருப்பதையறிந்து இது நம்மால் நடந்த தீங்கு என்றுணர்ந்து நானுமிவருடன் செல்கின்றேன் என்று அவர்கையில் இருந்த உடை வாளை வாங்கினர். பரமசிவன் அருளால் ஏயர்கோன் உயிர் பெற்றவராகிச் சுந்தார் கைவாளைப் பற்றலும், சுந்தார் சாஷ்டாங்கமாகப் பணிந்து இருவரும் நண்பினராய்த் திருப்புன்கூர்ச் சிவமூர்த்தியை வணங்கியிருந்தனர். பிறகு சுந்தரமூர்த்திகள் திருவாரூருக்கு எழுந்தருள ஏயர்கோனும் எழுந்தருளி வீதிவிடங்கரைச் சேவித்துத் திரும்பித் திருத்தொண்டு செய்து சிவபதமடைந்தனர். (பெ~பு.) |
ஏரண்டமாமுனி | கனகசோழனைக் காண்க. விசிரவசுவிற்கு இல்லறங்கூறி மனைவியுடன் இருக்கச் செய்தவர். (திரு ஆச்சாபுா தலபுராணம்). |
ஏரம்பன் | ஒரு வேதியன் திருக்காஞ்சியில் சிவாராராதனம் செய்து பேறு பெற்றவன். (பதும புராணம்.) |
ஏரம்பம் | ஒரு மலை. கபிலந்தியில் உற்பத்தியாகிறது. |
ஏரம்பவிநாயகர் | பிரமன்பூசித்த விநாயகர். |
ஏரி | என்பது நாற்பக்கங்களிலும் பெருங்கரைகளையாயினும், மலைகளையாயினும் காப்பாகக்கொண்ட பெரிய நீர் நிலை. இது சிறிதாயின் தடாகம். |
ஏரிகள் | ஏரிகளில் மிகப் பெரியவை ‘வட அமெரிக்காவில் உள்ளவை. கீழ் ஆப் பிரிகாவில் (30) சதுரமைலுள்ள மகதி ஏரி சோடாவுப்பு உள்ளது. சுவிட்ஜர்லண்டில் உள்ள ஒரு ஏரிநீர், (10) வருஷத்திற் கொருமுறை செந்நிறமாக மாறுகிறது. |
ஏறாண்முல்லை | எதிரின்றியே யொழியச் சினமிகும் மேன்மே லேறாநின்ற ஆண்மைத் தன்மையினையுடைய குடியொழுக் கத்தினை உயர்த்துச் சொல்லியது. (பு. வெ). |
ஏறுகோள் | முல்லை நிலக் குடிகளிடம் பெண்பிறக்கின் பெற்றார் தம் தொழுவில் அன்று பறந்த சேங்கன்றுகளைத் தம் மூட்டியாகவிட்டு வளர்த்து அவ்வாறு வளர்ந்த ஏற்றைத் தழுவினானுக்குப் பெண்ணைக் கொடுத்தல் மரபு. இதனை அவ்வாறு கூறும். |
ஏறுதிருவுடையார் | நாதமுனிகளை ஆச்ரயித்த ஸ்ரீவைணவர். |
ஏறுமா நாட்டு நல்லியக்கோடன் | ஓய்மா நல்லியக்கோடனுக்கு ஒரு பெயர், ஓவியர் குடியில் பிறந்தவன். இவன் தன் பகைவருடன் சண்டையிடுகையில் பகைவருக் கஞ்சி வேலனைத் தியானிக்க அவர், அவ்விடமிருந்த பூவை வேலாக எறியக் கட் டளையிட அவ்வகை செய்து வெற்றி பெற்றவன். இவன் ஆண்ட ஊர், வேலூர். இக காரணத்தாற் பெற்ற பெயர். எழுவள்ளல்களிற் சிறந்த கொடையாளி, இவனைப் பாடினோர் நல்லூர் நத்தத்தனாரும் புறத்திணை நன்னாகனாருமாம். |
ஏறைக்கோன் | சேரன் படைத்தலைவன். இவன் காந்தட்பூமாலையை அணிவோன். குறவருக்குத் தலைவன். குறமக ளிளவெயினியாற் பாடப் பெற்றவன். (புற~நா.) |
ஏற்றம் | இது, கிணற்றின் ஒரு பக்கமாகக் கற்கால் நட்டு மடல்களிரண்டைக் கற்கால்களுடன் அணைத்து மேல் துலாப்பூட்டின் தராசுபோல் நிற்கும். அதில் நீளமூங்கிலை வடத்தால் கட்டி முக்காணியில் சால்பூட்டிக் கிணற்றிலிருந்து ஒருவன் நீரை மொன்ள மேலிருந்து ஒருவர் அல்லது இரண்டு பேர் மிதிக்க நீர் ஏற்றும் யந்திரம். இறை கூடை, கையேற்றம், கவலை, ஜலசூத்ர யந்திரம். முதலியவும் உண்டு. |
ஏலக்காய் | இச்செடி, மலையாளம், திருவனந்தபுரம் முதலிய ஜில்லாக்களில் காட்டுப் பயிராக இருக்கிறது. இது மிளகாய்ச் செடியைப் போல் சிறு செடியாக இருக்கிறது. இச்செடியில் காய்கள் கொத்துக் கொத்காகப் பிடிக்கின்றன. அக்காய்களைப் பதமறிந்து பறித்து உலர்த்துகின்றனர். இது மணப்பொருள்களில் ஒன்று. |
ஏலாதி | பதினெண்கீழ்க் கணக்குள் ஒன்றாகிய நீதி நூல். இது தமிழாசிரியர் மகனாரும் மாக்காயனார் மாணாக்கரும் ஆகிய கணிமேதாவியாரால் இயற்றப்பட்டது. |
ஏலாபுத்ரன் | கத்ரு குமரன், நாகன். |
ஏலேலசிங்கர் | இவர் திருவள்ளுவர் காலத்திருந்த கப்பல் வர்த்தகர். நாயனார் இவரிடம் நூல் கொண்டு நெய்தற்றொழில் செய்து வருவர். இவ்வகை வருநாட்களில் காயனார் ஒருநாள் ஏலேலசிங்கர் சிவபூசை வேளையில் சென்று வர்த்தகர் என்ன செய்கிறாரென அவ்விடமிருந்தவர்கள் சிவபூசை செய்கிறார் என்றனர். இதைக் கேட்ட நாயனார், இங்குச் செய்கிறாரோ குப்பத்தில் செய்கிறாரோ என்று கூற ஏலேல சிங்கர் சிவபூசைவிட்டு நாயனாரைச் சரணாகதியடைந்து அவர் சொற்படி நடந்து வெள்ளத்தை நீந்தியும், மரத்தினின்று குதித்தும், ஊறுபடாமல் நாயனாரிடம் ஞானோபதேசம் பெற்றுக் கப்பல் கரை தட்ட அதை ஆசாரியர் ஏலையா என்று இழுக்கச் சொல்லி இழுத்தும், கருப்புக்காலத்து நெல் விற்று வந்த பொருளை உருக்கித் தம் பெயர் வெட்டிக் கடலிலிட்டு அதை மீண்டும் மீன்வயிற்று இருந்து பெற்றும், பின்னும் சிலவற்றை ஆசாரியாநுக்கிரகத்தால் அடைந்து ஆசாரியர் சொற்படி நாயனாருடலைப் புறத்திலெறிந்து அந்த இடத்தில் கோயில்கட்டி மகிழ்ந்தவர். இவர் குமரர் அழகாநந்தர். இவரைப் பற்றி ”ஏலேல சிங்கன் பொருள் எழுகடல் போனாலுந் திரும்பும்” எனப் பழமொழி வழங்கி வருகிறது. |
ஏலை | மதுமானைக் காண்க. |
ஏளாச்சாரியர் | திருவள்ளுவரைச் சைநர் இப் பெயருள்ள தம்மதத்தவர் குந்தகுந்தாசிரியர் என்பர். இவர் குறள், சித்தாகம் செய்தவர். |
ஏழகதிலை | ஏழகத்தகரினை மேல் கொண்டு செலுத்தினும் இத்தன்மையானென்று அவனுடைய குற்றமில்லாத மனவெழுச்சியோடு மிகுதியைச் சொல்லியது. உயருங் கீர்த்தியையுடைய ஞாலத்தின் இளமையைப் பாராதே அரசன் பூமி காவல்பூண்டு நிற்பினும் ஏழக நிலையேயாம். (பு. வெ. பொதுவியல்.) |
ஏழாந்துக்கம் | அல்லது எட்டுச் செய்தல். இது இறந்தவீட்டில் இறந்தவர் பொருட்டு ஏழாநாள் அல்லது எட்டாநாள் செய்யும் துக்கச்சடங்கு. (உலக~வ). |
ஏழாம் நாள் | இருவர் சேனைகளுடன் கூடினர். குருமக்கள் சகடபூகம் வகுக்கப் பாண்டவசோபதி மாசுணயூகம் வகுத்துப் போரிடுகையில் துரோணர் பாண்டியனைப் பின்னடையச் செய்கையில் கடோற்கசன் கண்டு மாயையால் யானைச்சேனை யுண்டாக்கி யானை மேலிருந்து போரிடுகையில் சாத்தகியைச் சதாயு முதுகிடச் செய்தனன். பின் வீமன், சகுனிசல்லியரை எதிர்த்துப் பின்னிடச் செய்தனன், வீஷ்மருடன் அருச்சுநன் எதிர்த்துப் போரிடுகையில் பொழுது சாய்ந்தது. |
ஏழூர்கள் | மேகத்துக்குப் பிணைகொடுத்த உபகாரியினுடைய ஊர்கள். இவை களவேள்வி நாட்டிலுள்ளவைகள். இவற்றுளொன்று நாமுனூரென்பது. (திருவிளை.) |
ஏழூர்நாட்டார் | இவர்கள் துளுவரில் ஒரு வகுப்பார் என்பர். இவர்கள் சாயம் போடல் முதலிய வேலை செய்கிறார்கள். |
ஏவல் | இது முன்னிற்பானை ஏவும் கட்ட அப்பொருள் தரும் முற்றுவினை, இது முன்னிலையிடத்தது. (நன்). |
ஏஷணை | 3. அர்த்தவேஷணை, புத்திர வேஷணை, உலகவேஷணை. அர்த்தவேஷ்ணை, பொருள் தேட ஆசைப்படல், புத்தீர வேடணை, புத்திரனுண்டாக ஆசைப்படல், உலகவேடணை, உலக விஷயங்களைத் தேட ஆசைப்படல். |