ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
எகீசீலன் | துச்சீலனைக் காண்க. |
எக்ஞகோபன் | ஒரு இராவண வீரன். |
எக்ஞசூத்திரம் | வேதியன் தனக்கு மேல் பாகமாய் மூன்று தரஞ் சுற்றின சூத்திரத்திற்கு எக்ய சூத்திரமென்று பெயர். கிரந்தியோடு சேர்த்த சூத்திரமானது உத்தமம். கிரந்தியானது பிரணவத்திற்குச் சமானம். எக்ய சூத்திரம் கழுத்து முதல் நாபிவரையில் நீண்டிருக்கின் உத்தமமாம், ருக், எஜுர், சாம, வேதிகள் நாபிவரையில் எக்ய சூத்திரம் தரித்தல் வேண்டும். அதற்குக் கீழ்ப்பட்டால் ஆயுள் க்ஷணமாகும். மற்றவற்றிற்கு உபவீதம் காண்க. |
எக்ஞதத்தர் | சண்டேசருக்குப் பிதா, சண்டேசரைக் காண்க. |
எக்ஞன் | உத்தமனென்னும் மனுவின் புத்ரன். |
எக்ஞபாகு | பிரியவிரதனுக்குப் பெரிகிஷ் மதியிட முதித்த குமரன். |
எக்ஞமூர்த்தி | ருசிப் பிரசாபதிக்குக் குமார், தேவி ஆகுனாதி. |
எக்யசருமன் | இவன் அங்கதேசத்து வேதியன். இவன் குமரன் தருமசருமன். இந் தத்தருமசருமன் தருப்பை முதலிய சேதரிக்க உனஞ்சென்று அவ்விடம் தவஞ் செய்துகொண்டிருந்த வைகானச முனிவர் குமாரராகிய மாலுதான முனிவர் மீது கல், மண் முதலியவற்றை விட்டெறிய அவர் தருமசருமனைப் பாறையாகச் சபித்தனர். இச்சாப விளைவறிந்த எக்யசருமன் தன் குமானாகிய பாறையைத் தலைமீது சுமந்து பவானி கூடற் தீர்த்தத்தில் இட்டுச்சாபம் நீக்கினன். |
எக்ஸிமோ | இவர்கள் வடசமுத்திரத் தீவுகளில் வசிக்கும் ஜாதியார். பாகம் செய்யாத மாயிச பக்ஷணிகள். இவர்கள் தங்களுக்கு உணவு கிடையாதபக்ஷத்தில் நாய்களையுந் தின்னுவர் என்பர். |
எங்களாழ்வான் | விஜயாம்சரான இவர் கலி 4207க்கு மேல் வியவருடம் ஆனிமாதம் திங்கட்கிழமை திருவெள்ளறையி லவதரித்தவர். திருக்குருகைப்பிரான் பிள்ளானிடம் பாஷ்யம் சேவித்தவர். திருவெள்ளறைச் சோழியர். நடாதூரம்மாளைச்சு வீகரித்துப் பாஷ்யமுதலிய சொல்லிவைத்தவர். (குருபரம்பரை). |
எச்சசன்மர் | 1. அகத்தியரைக் கல்வி வேண்டி அவராற் தவத்திற்கு அனுப்பப் பட்டவர். 2. ஒரு வேதியன், பொருளாசையால் தானம் வாங்கி மறுபிறப்பில் அரக்கனாய் காஞ்சி புரிக்கருகில் ஒரு ஆலில் இருக்கட் பீமசன்மன் குமரன் சோமசன்மன், காஞ்சிபுரியில் தீர்த்தமாடி வருவோரைக் கண்டு அத்தீர்த்தப் பெருமைகளைக் கேட்க, அவ்வழிப்போக்கர் கூறிய பெருமைகளை ஆலிலிருந்தபடி கேட்டு அரக்கவுரு நீங்கியவன். |
எச்சதத்தன் | எஞ்ஞதத்தருக்கு ஒரு பெயர். சண்டேசருக்குப் பிதா. |
எச்சதேவன் | சுமதியைக் காண்க. |
எச்சன் | 1. தக்கன் சிவனை நீக்கியாகள் செய்யத் தணிகையில் யாசஞ்செய்விக்க குருவாயிருந்தவன். 2. இவன் சுசீந்திரத்தில் வக்கிரபாவசச் சார்பில் கள்ளி நிழலில் ஞானகீதை ஒதித் தவம்புரிந்த வேதியன். அந்தக் கீதையைக் கேட்ட சள்ளி (12) நாட்களில் உலர்ந்து சுசீந்திரத்தில் பானுசோரன் குமரியாய்க் கலாவதியெனும் பெயருடன் எச்சனை மணந்து வாழ்ந்தனள். (சுசீந்திர புராணம்) |
எச்சம் | சொல்லேயாயினும் ஒரு குறிப்பேயாயினும் கூடிப் பொருண் முடித்தல் வேண்டி நிற்கும் பெயர்வினைக் குறைகளாம். |
எச்சம் | (8) குறள், கூன், ஊமை, செவிடு, குருடு, முடம், உறுப்புமயக்கம், உறுட்பில் பிண்டம். |
எச்சம்பத்து | பெயரெச்சம், வினையெச்சம், உம்மையெச்சம், சொல்லெச்சம், பிரிநிலையெச்சம், எவெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், இசையெச்சம், குறிப்பெச்சம் என்பனவாம். |
எச்சான் | உடையவர் திருவடி சம்பந்தி. கீழ்த்திசையி லிருந்தவர். உடையவரைக் கண்டு பணிந்துலிருந்து செய்வித்தவர். இப்பெயர் கொண்ட ஒருவர்க்கு உடையவர் திருவேங்கடஞ் செல்கையில் அம்மாள் வீட்டில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குத் திருப்பரியட்டம் திருத்திச் சமர்ப்பிக்கும் கைங்காயம் நியமித்தனர். எண்ணாயிரத் தெச்சானென்று ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது. |
எச்சிலுடன் காணத்தகாதவை | புலையன், சந்திரன், சூரியன், நாய், எரிநக்ஷத்திரம். (ஆசாரக்கோவை.) |
எச்சிலுடன் தீண்டத்தகாதவை | 4, பார்ப்பார், நெருப்பு, தேவதைகள், உச்சந்தலை. |
எச்சு | சசிபிந்தின் குமான். |
எஜநயன் | பரமேஷ்டியின் புத்ரன். |
எஜு | ஒரு வேதியன், இவன் யாகத்தின் பொருட்டுப் பசுவின் வயிற்றில் கன்றிருக்கக் கண்டு அசரீரியால் கோவத்தி செய்தவனென அறிவிக்கப்பட்டுப் பெண்ணை நதியில் மூழ்கி நீக்கிக்கொண்டவன். |
எஞ்ஞகுத்தன் | ஒரு வணிகன். அவிநாசித்தலத்துக்கோயில் தாசியைக்கண்டு மோகித்து அங்கிருந்த வசிட்டரிடம் அத்தல புராணங்கேட்டு நடித்திருந்த தாசிமீது ஆவலாக விரைவில் உணவுண்டு அன்னபடைத்து இறந்து முந்தியடைந்தவன். (அவிநாசித்தலபுராணம்). |
எடுத்துக்காட்டுவமையணி | அதாவது பிம்பப்பிரதிபிம்பபாவத்தைக் காட்டுதலாம். பிம்பப் பிரதிபிம்ப பாவமாவது, சுபாவத்திலே பின்னங்களாயிருந்தாலு மொன்றற் கொன்றுண்டாகிய ஒப்புவமையினால் அபின்னங்களாகிய உபமானோபமேயங்களுடை ய தருமங்களை இரண்டு வாக்கியங்களிலே தனித்தனி சொல்லுதலாம். இதனை வடநூலார் திருஷ்டாந்தாலங்கார மென்பர். |
எட்டாம் நாள் | போர்க்களம் புகுந்துவீஷ்மர் தம்படைகளைச் சூசிகாயூகம் வகுக்கக் கண்ணன் சகடயூகம் வகுத்து யுத்தஞ் செய்கையில், துரியோதனன் தன் தம்பியருடன் வீமனை எதிர்க்க வீமன் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றனன். பின் அரவான் எதிர்த்துத் துரியோதனன் சேனைகளைப் பாழாக்குகையில் அலம்புதன் அவனைக்கொல்ல அபிமன்யு கண்டு சேனைகளை எதிர்த்துக் கொல்லுகையில் சூரியன் மறைந்தனன். |
எட்டி | செட்டிகளின் பட்டத்துள் ஒன்று. |
எட்டிகுமரன் | காவிரிப்பூம் பட்டினத்து வணிகன். அரசனாற்கொடுக்கப்பட்ட எட்டிப்பட்டம் பெற்றோன், மணிமேகலை உவவனஞ் சென்றதை உதயகுமாரனுக்குத் தெரிவித்தவன். (மணிமேகலை). |
எட்டிப்பூ | வணிகர்க்கு எட்டிப்பட்டத்தின் பொருட்டுத் தரப்பட்டபொற்பூ. |
எட்டியல் | அழுக்காறிலாமை, அவாவின்மை, தூய்மை, ஒழுக்கம், குடிப்பிறப்பு, வாய்மை, நற்புலமை, நடுவுநிலைமை. (வீரசோழியம்) |
எட்டுத்தொகை | நற்றிணை 400, குறுந்தொகை 400, ஐங்குறு 100, பதிற்றுப்பத்து, பரிபாடல் 70, கலித்தொகை 150, அகநானூறு, புறநானூறு முதலிய எட்டுச் சேர்ந்த தமிழ் நூல். |
எட்டுவகைப்பொருள் கோள் | ஆற்று நீர், மொழிமாற்று, நிரைநிரை, விற்பூண், தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு. அடிமறி மாற்று. (நன்) |
எட்டுவிதபாவங்களாவன | தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவர்யம் இந்தப்புத்தியின் குணங்கள் நான்கும் சாத்விக பாவங்கள். அதர்மம், அஞ்ஞானம், அனைசுவர்யம், இவை தாமசபாவங்கள். அவைராக்கியம், ராஜஸபாவம் இவை புத்தியில் வாசனாரூபமாயிருக்கும். |
எட்டெட்டந்தாதி | இது காஞ்சீபுரம் காமாக்ஷியம்மை விஷயமானது. வகைக்கு எவ்வெட்டுப் பாடலாக எட்டு வகையான பாடல்களமைந்த (64) செய்யுட்களால் அந்தாதியாகப் பாடப்பெற்றுள்ளது. சில பாவும், சில பாவினமுமாக இருக்கின்றன. அன்றியும் முதலில் விநாயக வணக்கமாக ஒருபாடலும், ஈற்றில் நூற்பயனாக ஒருபாடலுமுள்ளன. |
எண் | இது இரண்டுவகை. அவை கணிதமும், காரணமும், கணிதம், பதினாறு வரி கருமமும், ஆறு கலாசவருணமும், இரண்டு பிரசாணசாதியும், முதகுப்பையும், ஐங்குப்பையும், பரிசருமமும், மிச்ரகமும் என்பனவாம். இவற்றை அவினந்தமாலை, அரசசட்டம், வருத்தமான முதலியவற்றிற் காண்க. (யாப்பு வி.) |
எண்கிரிகள் | சைனர்களுடைய மலைகள். (திரு) |
எண்டிசையோநிகள் | கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, காகம். (பிங்.) |
எண்ணெய் ஊற்றுக்கள் | ஆசியா கண்டத்தின் மத்யபாகத்திலுள்ள காஸ்பியன் கடலையடுத்தபாக, நகரையடுத்த பிரதேசங்களில் பல மண்ணெண்ணெய் ஊற்றுகள் இருக்கின்றன. அமெரிகா கண்டத்திலுள்ள காலிபோர்னியா நாட்டுச் சந்தாபார் பாராவை பதித்துள்ள கடலில் பல எண்ணெய்க் கிணறுகளிருக்கின்றன. பர்மாவின் தென்கீழ்ப்பாகத்திலுள்ள பாட்டான் எனும் பிரதேசத்து மலையடிவாரத்தில் ஒரு எண்ணெய் ஊற்று இருக்கிறது. |
எண்ணெய்வகை | எண்ணெயென்பது பலவித தைலசத்துள்ள வித்துக்களைச் செக்கி விட்டு ஆட்ட உண்டாம் திரவம். அவை, நல்லெண்ணெய், ஆமணக் கெண்ணெய், கடலை யெண்ணெய், பனையெண்ணெய், புங்க எண்ணெய், வாதுமை, இருப்பை, வேம்பு, தெங்குசணல், முதலியவற்றி லுண்டாம் எண்ணெய்கள். |
எண்பேராயம் | காணத்தியல்வர், கருமா திகாரர், கனகச்சுற்றம் கடைகாப்பாளர், நகாமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவர். |
எண்பேரெச்சம் | குருடு, வடிவில்லாத தசைத்திரன், கூன், குறள், ஊமை, செவிடு, மணைபோல் பிறப்பது, விலங்கின் வடிவினது, மருளும் முடமும்கூறுப. |
எதாகரன் | சுபாலன் புத்ரன். இவன் புத்ரன் வபுத்திரத்தன். |
எதி | நைட்டிகப் பிரமசரிய மநுட்டித்த பிரமபுத்திரராகிய இருடி. |
எதியுதக்கரன் | ஒரு அசுரன். திதிபுத்ரன். |
எதிரொலி | ஆகாயத்தை இடமாகக்கொண்ட ஒலி, திசைமுழுதும் பரவிச் செல்கையில் அதற்கெதிரிடமான திடப்பொருள்களால் தடையடையின் அப்புறஞ் செல்வதற்கிலாது மீண்டும் அவ்வொலி திரும்புவதாம். ஓசையுண்டான இடத்திலிருந்து (224) அடிகளுக்கு மேற்பட்ட தூரமாயின் அவ்வொலி நன்றாக விளங்கும், அல்லாவிடின் குழப்பமுறும். இவ்வாறு சில கட்டடங்களில் எதிரொலி, 30, 17, 12, முறை கேட்கப்படுகிறதாம். எதிரொலி மாறிச் செல்லுமிடம், நற்கட்டடங்களாகிய பெரிய வாராவதிகளின் தூண்களின் ஓரமாகிய சுவர் இடத்தில் இருவர் எதிராக நின்றுகொண்டு இருவருக்கிடையில் ஒருவரை நிறுத்தி நின்ற இருவரும் சுவர்ப் புறமாகப் பேசுவராயின் இவ்விருவரும் பேசினசொற்கள் மத்தியிலிருப்பவரிடத்துக் கேட்பதில்லை. இவ்வேறுபாடு வாராவதியின் வளைவால் ஏற்படுவதாம். |
எதிர் நிலையணி | அஃதாவது உவமானத்திற்குக் குறைவு தோன்றச் சொல்லுதலாம். இது உவமையணிக்கு எதிரியதாய் நிற்றலின் அப் பெயர்த்து, இதனை வடநூலார் பிரதீபாலங்கார மென்பர். |
எதிர் நூல் | தன் கொள்கையை நாட்டி அயலான் கொள்கையை மறுப்பது. (யாப்பருங்~உரை.) |
எதிர்மறையணி | அஃதாவது, ஒழிப்பணிக்கு வேறாகியும், கேட்போரை மகிழ்விப்பதாகியு மிருக்கின்ற மறுப்பைச் சொல்லுதலாம். இதனை வட நூலார் ஆக்ஷேபாலக் காரமென்பர். |
எது | 1. ஒருவகை மிலேச்சசாதியார். 2. யயாதிக்குத் தேவயானியிட முதித்த குமரன். |
எந்திராசுரன் | தேவர்களை வருத்திச் சிவபிரான் நெற்றிவிழியா லெரிந்தவன். |
எனாதி திருக்கள்ளி | கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனாரால் பாடப் பெற்றவன். கொடையும் வீரமும் உடையன். (புற~நா.) |
எமிநரன் | திவிமீடன் குமரன், இவன் குமரன் கிருதுமான். |
எம்பார் | கோவிந்தப் பெருமாளைக் காண்க. (குருபரம்பரை). |
எம்பெருமானரப்பன் | நாயினாராசாரியர் திருவடி சம்பந்தி. |
எம்பெருமானார் | 1. ஆதிசேஷாம்சரான இவர் கலி (4118)க்கு மேல் பிங்கள சித்திரையா வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்பூதூரில் அரீதகோத்தரத்தவராகிய ஆசூரி கேசவப்பெருமாளுக்கும் பூமி பிராட்டி யென்னும் அவர் மனைவிக்கும் திருஅவதிரித்துப் பெரிய திருமலை நம்பியால் இராமாநுசன் என்று பெயரிடப்பட்டு யாதவப் பிரகாசரிடத்தில் பூர்வபக்ஷம் வாசித்து யாதவப்பிரகாசர் சொன்ன “கபியாஸாக்ஷ னென்னும்” தொடர்க்குப் பொருள் வேறு கூறி மறுத்ததனால் அவர் இவரிடம் பொறாமை கொண்டு இவரைக் கொலைசெய்ய எண்ணிக் கங்காயாத்திரை செய்ய ஆரம்பித்து இராமாநுஜரை உடனழைத்துச் சென் றனர். ஒருநாள் ஒரு காட்டின் வழிச் செல்லுகையில் சௌசத்திற்காக இளையாழ்வார் தனித்து நிற்பதையறிந்த கோவிந்தபட்ட யாதவப்பிரகாசர் எண்ணத்தை அறிவித்து அகலப்போ மென்றனர். இளையாழ்வார் அவ்வழிவிட்டு ஒரு மரத்தடியில் நின்று பார்க்கப் போருளாளரும், பெருந்தேவித் தாயாரும், வேடனும், வில்லிச்சியுமாய் எதிரில் தரிசனந்தந்தனர். எம்பெருமானார் அவர்களை நீங்களெங்குப் போகிறவர்களென்ன? அவர்கள் நாங்கள் ஸ்ரீகாஞ்சி செல்கிளே மென நானும் உம்மைத் துணை கொண்டு வருகிறேனெனத் தொடர்ந்து செல்லுகையில் வில்லிச்சி தாகத்திற்குச் சலம் வேண்டுமென்று கேட்க ஆழ்வார் கிணற்றிலிறங்கி நீர் கொண்டுவரத் தம்பதிகளிருவரும் உண்டு இதோ புண்ணிய காடி விமானங் காணும் என்று அருளிச்செய்து அந்தர்த் தானமாயினர். ஆழ்வார் காஞ்சிநகாஞ் சேர்ந்திருக்கையில் தீர்த்தயாத்திரை முடித்து வந்த யாதவப்பிரகாசர் இளையாழ்வாரைக் கண்டு எவ்வகைவந்து சேர்ந்தீரென, நடந்த செய்தியைக் கூறக்கேட்டு ஆச்சரிய மடைந்தனர். இவ்வகை இருக்கையில் காஞ்சிநகர ஈசன்பிள்ளையைப் பிரமாக்ஷஸ் பிடித்துக் கொண்டு வருத்த அரசன் அதை ஓட்ட யாதவப்பிரகாசரை அழைத்தனன். அப்பேய் அவரை நோக்கி உம்மால் என்னை ஒட்டலாகாது. உம்மிடம் கற்கும் இளை யாழ்வான் போகக் கட்டளையிடில் நீங்குவே னென்றது. யாதவப்பிரகாசர் இதை ஆழ்வாருக்குக் கூற அதை ஒட்டினர். மற் செருநாள் யாதவப்பிரகாசர் ஒரு சுருதிக்குப் பொருள் அத்வை தபுறங்கூற ஆழ்வார் அதை மறுத்து விசிட்டாத்வைதங் கூற யாதவப்பிரகாசர் இதைக்கேட்டு இனி என்னிடம் வரவேண்டா மென்றனர். ஆழ்வார் இதைத் தாயிடம் கூறத்தாய் போருளாளனுக்குக் கைங்கர்யஞ் செய்திருக்க என்றபடி கைங்கர்யம் செய்திருந்தனர். ஆளவந்தார் நியமனத்தால் பெரிய நம்பி இளைய பெருமாளை அழைத்துவரக் காஞ்சிக்கு வந்து ஆள வந்தார் அருளிய சுலோகத்தைச் சொல்லிக் கொண்டிருந்தனர். இளைய பெருமாளிதைக்கேட்டு இவை யாரருளியதெனப் பெரிய நம்பிகள், ஆளவந்தாரருளிச் செய்தவையெனக் கேட்டுக் களிப்புற்று அவரைக் காணவேண்டு மென்னும் அவாவால் பெரிய நம்பிகளுடன் திருவரங்க மெழுந்தருளினர். ஆழ்வார் செல்லுமுன் ஆளவந்தார் திருநாட்டுக்கன்று எழுந்தருளிய செய்தி கேட்டுச் சோகித்துத் திருக்கரம்பன் துறையிலே நின்ற பெருங்கூட்டத்துள் புகுந்து ஆபா தமத்தகம் அவரது சாம விக்ரகத்தைச் சேவித்து மூன்று விரற்கள் முடங்கி இருந்தமை கண்டு ஆழ்வார், இதற்கு முன் இப்படி உண்டோ என, இருந்தவர்கள் இல்லையெனக் சருத்தறிந்து ஆங்கி கிருந்தமுதலிகளை வினாவி அவர்கள் வியாஸ பராசர்களிடத்திலே உபகாரஸ் மிருதியும், நம்மாழ்வாரிடத்தில் பிரேமாதி சயமும், விசிட்டாத் வைதமாக வியாக்யான சூத்திரத்தில் வியாக்யான வாஞ்சையும் உண்டு என்ன, பெருமாள் தலைக்கட்டின் இந்த விழவு மூன்றையும் தீர்க்கின்றேன் என அவை நிமிரக்கண்டு சேவித்துப் பெரிய பெருமாளைச் சேவியாது ஸ்ரீ காஞ்சிக்கு எழுர்தருளினர். இவரைத் திருக்கச்சி நம்பிகள் காணவா இளையாழ்வார் அவர்க்கு ஆசனமிட்டுத் தண்டன் சமர்ப்பிக்க நிற் கையில் நம்பி, நாதமுனிகள் செய்தி கூறித் தடைசெய்ய இளையாழ்வார் தமக்குள்ள ஐயத்தைப் பெருமாளுக்கு விண்ணப்பித்திச் சொல்ல என்று நம்பிக்கு வழிவிட்டு அவர் சொல்லக்கேட்டுப் பெரிய நம்பியை ஆசாரியராகக் கொள்ளும்படி புறப்பட்டு மதுராந்தகத்தில் ஏரிகாத்த பெருமாள் சந்நிதியில் பெரிய நம்பியைத் தரிசித்துப் பெருமாள் நியமனத்தைக் கூறி ஏரிகாத்த பெருமாள் சந்நிதி மகிழமரத்தடியில் பஞ்ச சமஸ்காரம் பெற்றுப் பெரிய நம்பிகளுடன் காஞ்சிக்கு எழுந்தருளி யிருந்தனர். ஒரு நாள் எண்ணெயிடுவான் பசியாயிருக்கக் கண்டு தமது மனைவியை யபூபம் சாதிக்கக் கட்டளையிட்டனர். அவள் மறுத்தது கண்டு தாமே சென்று இருக்கப்பார்த்து எடுத்துத் தந்தனர். சிலநாள் பொறுத்து ஸ்ரீபெரும்பூதூருக்குப் போயிருக்கையில் இவரது மனைவியார் பெரிய நம்பி களின் மனைவியாருடன் சண்டையிட்டனள். இதை அறிந்த பெரியநம்பிகள் சம்சாரத்துடன் திருவரங்கஞ் சென்றனர். இளையாழ்வார் ஸ்ரீபெரும்பூதூரிலிருந்து காஞ்சிக்கு எழுந்தருளிப் பெரியநம்பிகள் திருவரங்கஞ் சென்றதறிந்து மனைவியை நோக்கி நீ முன்பு திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளியிருந்த மணையைச் சுத்திசெய்து நீயும் தீர்த்தமாடினை, எண்ணெயிடுவானுக்கு அபூபம் கொடுக்கச் சொன்ன காலத்திலில்லை யென்றனை, ஆசார்ய பத்தினியுடன் ஒரு தோண்டி விஷயமாகப் பகைத்தாய், ஆதலால் பிறந்தகம் போக என நியமித்துத் தாமே பெருமாள் சந்நிதியில் துரியாச் சிரமம் பெற்றுப் பெருமாள் அருளிய நம் ராமாநுஜ னெனவும், யதிராஜ னெனவும் பெயர் பெற்றிருந்தனர். பின் யாதவப் பிரகாசருக்குத் திரி தண்டகாஷாய மளித்துக் கோவிந்த சீயரெனப் பெயரிட்டு அரையருடன் திருவாங்க மெழுந்தருளிப் பெருமாளைச் சேவிக்கையில் பெருமாளும் நம்முடையவன், என்று திருநாமம் அருளப் பெற்று, பெரிய திருமலை நம்பியால் கோவிந்தபட்டரை ஸ்ரீ வைணவராக்கித் திருவ ரங்கப்பெருமாளரையர் கட்டளைப்படி அவரிடத்தில் திருவாய்மொழி ஓதி ஆளவந்தார் அருளிச் செயலுக்கு வியாக்யானஞ் செய்து லக்ஷ்மண் முனியெனப்பெயர்பெற்றுத் திருக்கோட்டியூர் நம்பியிடம் (14) முறைபோய்க் கடையில் அவர் ஒருவர்க்கும் சொல்லவேண்டாமென்று அருளிய திருமந்திரார்த்தத்தையும், சரமசலோகத்தையுங் கேட்டுணர்ந்து மறுநாள் அதை உலகறியக் கூறினர். பெரிய நம்பிகள் இது அடுக்குமோ என ஆசாரியர் சொல்லைத் தடுத்ததாலுண்டான நரகம் என்னொருவனுக்கானால் இந்த மந்திரார்த்தத்தைக் கேட்ட அநேக ஆத்மாக்கள் மோக்ஷமடைக என்று கூறி அவரால் எம்பெருமானூர் எனும் நாமம் பெற்றுத் திருமாலை யாண்டானிடத்தில் திருவாய்மொழி கேட்டுணர்ந்து விரோதத்தால் புருஷன் சொற்படி கேட்டு விஷங்கலந்த அன்னமிட்டவநிதை தண்டனிட்டதால் விஷங்கலந்த தென அறிந்து அதைத் திருக்காவேரியில் கரைத்துவிட்டு ஒரு மாதம் அன்னமின்றி உபவாசமிருந்தனர். பின் திருக்கோட்டி யூர் நம்பியின் சொற்படி கிடாம்பியாச்சானால் மாதுகரங் கொண்டு யஞ்ஞமூர்த்தியுடன் வாதிட்டு வென்று அவரை ஸ்ரீ வைணவராக்கி அருளாளப் பெருமாள் எம் பெருமானார் என்னும் பெயரிட்டுக் கொடுகுப் பிராட்டிக்குத் திருவடி நிலைகளைப் பிரசாதித்துப் பாஷ்யம் அருளி, நித்யமென்கிற கிரந்தஞ்செய்து திருக்குறுங்குடி நம்பிக்குப் பஞ்சசமஸ்காரஞ்செய்து ஸ்ரீவைஷ்ணவகம்பி யென்ற பெயருமிட்டுச் சந்நிதியில் பெருமாளைச் சேவிக்கையில் தாமிட்ட சின்னமிருக்கக் கண்டு சாணாகதி கத்யத்தால் க்ஷாமணஞ்செய்து திருவேங்கட யாத்திரை செய்து பருத்திக் கொல்லையம்மாள் திருமாளிகையில் அமுதுண்டு தீர்த்தப் பிரசாதம் சாதித்துத் திருமலை சென்று திரு வேங்கட முடையானைச் சேவித்துப் பெரிய திருமலை நம்பியிடம் ஸ்ரீமத் ராமாயணவ்யாக்யானம் கேட்டுணர்ந்து சோவிங்தப் பெருமாளைப் பெற்று, எண்ணாயிரத் தெச்சான்றிரு மாளிகையிலமுதுண்டு காச்மீரஞ் சென்று அங்கிருந்த அத்வைதிகளுடன் வாதஞ்செய்து வென்று பதரி நாராயணனைச் சேவித்துத், திரும்பிச் சரஸ்வதிபீடஞ் சென்று சரஸ்வதியா லெதிர் கொள்ளப்பட்டு ஸ்ரீ பாஷ்யமென நூலுக்கும் ஸ்ரீபாஷ்யகாரரெனத் தமக்கும் பெயரிடப் பெற்றுச் சைவர் தமதென வாதிட்ட திருமலையைத் திருவாழிசங்கு டமருகஞ் சூலஞ்செய்துவைத்து எதைத் தரிக்கின்றனரோ அந்தமதத்தவர் வணங்குங் கடவுளாகுக என்று முத்திரையிட்டு சீக்கிச் சங்கு சக்ரம் தரித்த திருமாலாகத் தரிசித்து வைணவத்தலமாக்கி நீங்கினர். பின் தென்னாட்டில் பல திவ்யதேசங்களைத் தரிசித்தனர். இப்பால் பிள்ளானை ஞானபுத்ரனாய்ச் சுவீகரித்துத் திருக்குருகைப்பிரான் என ஆழ்வார் திருநாமமிட்டுச் சோழராசன் வர விட்டகாலத்துக் கூரத்தாழ்வானுக்குத் திரிதண்ட காஷாயமளித்துத் தாம் வெள்ளையுடுத்து மேனாட்டுக்கெழுந்தருளி வழியில் நல்லான் திருவடி சம்பந்திகளான வேடராலுபசரிக்கப் பெற்று வடுக நம்பிக்குச் சாளக்கிராமத்தில் தரிசனார்த்தங்களைப் பிரசாதித்து விடல தேவராயன் குமரியைப் பிடித்திருந்த பிசாசத்தைத் தொண்டனூர் நம்பி சொற்படியோட்டி அவ்வரசனையும் வைணவனாக்கி அவனுக்கு விஷ்ணுவர்த்த நாயன் எனப் பெயர் தந்து சமணரை வாதில் வென்று அவர்களைக் கற்சாணத்திலிடாது தடுத்து யதுகிரியில் நெடுநாள் மறைந் திருந்த பெருமாளைச் சுவப்பனத்தின்படி கண்டு வெளிப்படுத்தித் திருநாராயணபுர மென்று அவ்வூருக்கும் திருநாராயணப் பெருமாளென்று பெருமாளுக்கும் ‘திரு நாமமிட்டுத் தேவராசபட்ட ரால் புரோக்ஷணஞ் செய்வித்து உற்சவ போத்திற்குப் பெருமாள் நியமனப்படி டில்லி அரசனிட மிருந்த இராமப்பிரியரைப் பாக்ஷா விடஞ் சென்று கேட்க, அவன் நீர் வருவித்துக் கொள்ளுமென்றனன். உடையவர் பெருமாளை வருக வருக என்று தியானிக்கப் பெருமாள் பாக்ஷாவின் புத்திரியை நீக்கி வந்து மடியிலேற என் செல்வப்பிள்ளையோ வெனப் பெருமாளுடன் அரசன் உத்தரவு பெற்று நெடுந்தூரம் வந்தனர். உறக்கத்தினின்றும் விழித்த அரசன் புத்ரி அருகிருந்த இராமப்பிரியரைக் காணாது திகைத்துப் பெருமாள் வேண்டுமென்று தந்தையிடங் கூறினள். தந்தை ஏவலாலாரைத் துரத்தி அழைத்துவரச் சொல்ல உடையவர் வழிவிட்டுமாறிப் பெருமாளுடன் பஞ்சமர் குடிசையில் ஒளித்திருந்து திருநாராயணபுரம் வந்து பெருமாளைப் பிரதிட்டித்து ஆபத்திலுதவிய பஞ்சமர்க்குத் தலத்தில் மரியாதை செய்வித்து அவ்வரில் வசிப்போர் இவரது பிரிவாற்றாது வேண்டத் தம்மைப்போல் விக்ரகஞ்செய் வித்துத் தந்து திருவேங்கடஞ்சென்று அடியில் தில்லை கோவிந்தராசப் பெருமாள், ஆழ்வார் முதலியவரைப் பிரதிட்டிப்பித்துத் திருவரங்க மெழுந்தருளி (74) திருவாழி திருச்சங்கம் பிரதிட்டித்து (74) திருநாமங்களுக்குக் கொடுத்து அவர்களுக்கு அழகிய சிங்கரைத் திருவாராதனமாகக் கற்பித்து ஆசார்யர்களாக்கிக் கூரத்தாழ்வானுக்கு ஸ்ரீ பாததீர்த்த மருளிக்கோயிலுக்குப் பலவிதகைங்கர்ய பார்களை நியமித்துத் திருமேனியில், பெருமாளைப் பிரார்த்தித்து நோய்சாத்தியாள, பிள்ளான் வேண்டுகோளின் படி தம்முடைய விக்ரகஞ் செய்வித்து அதைத் தாம் ஆலிங்கனஞ் செய்து விக்ரகத்தைத் திருவரங்கத்திலும், ஸ்ரீ பெரும்பூ தூரிலும், திருநாராயணபுரத்திலும், பிரதிட்டை செய்வித்துத் தமது திருவாராதனப் பெருமாளைப் பிள்ளானுக்குப் பிரசாதித்துப் பிள்ளான் மடியில் திருமுடியும் கிடாம்பியாச்சான் மடியில் திருவடியுமாய்த் திருநாட்டிற் கெழுந்தருளினர். இவர்க்கு எம்பெருமானார், இராமாநுசன், இளையாழ்வார், பாஷ்யகாரர், உடையவர் என்று திருநாமங்கள். இவர் அருளிச்செய்த நூல்கள் ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்தசாரம், வேதார்த்தசங்கிரகம், கீதாபாஷ்யம். இவர் பிங்கள்ளு பங்குனியா சநிவாரம் தசமி திருவாதிரை நக்ஷத்திரத்தில் பரமபத மெழுந்தருளினர். இவர் அறுபது வயதிருந்ததாகத் தெரிகிறது. (குருபரம்பரை). 2. உடையவர் எம்பாருக்கு முதலில் இட்ட பெயர். |
எயினந்தை மகனிளங்கீரனார் | கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர் இளங்கீரனார் காண்க. (அக~று.) |
எயினந்தையார் | எயின் தந்தை எயினந்தை, எயினனைத் தந்தையாக உடையவரென்பது, அன்றி இவர்பாடலில் ‘’எயின் மன்னன்போல” என்றிருத்தலால் இவ்வருந் தொடர் மொழிபற்றி இப்பெயர் கொடுக்கப் பட்டதோ தெரியவில்லை. இவர் இளங்கீரனாரின் தந்தையாராவர். பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைவன் மகிழ்ச்சியும் தலைவி துயரமும் தோழி கூறுவதாக இவர்கூறியது ஆராயற்பாலது. இவர்பாடியது நற் 43ம் செய்யுள். (நற்.) |
எயிறனையழித்தல் | தெளிவுடைத்தான கட்டுங்கழலோன் அழகிய மதிலின்கட் கேட்டினைச் சொல்லியது. (பு. வெ) |
எயிற்பாசி | முனையும் செற்றத்தினையுடை யார் காவற் குறும்புவலிகெட எணிமேல் ஏறியது. (பு. வெ.) |
எயிற்போர் | கூரிய ஆயுதத்தாலே குறும்பினைக் காக்கும் மதிலிடத்துப் போர்வீரர் மாறுபாட்டைச் சிறப்பித்தது. (பு. வெ.) |
எயிற்றியனார் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் குறுந்தொகையில் “மடந்தை தமூரன் முறுவலாகிய எயிற்றை உள்ளிக்காண்பன்” எனக்கூறினமையின் எயிற்றியனார் என்பர் போலும். குறு. 286. |
எயில் | திண்டிவனந் தாலூகாவிலுள்ள ஓர் ஊர். பழைய பாடல்களிலுள்ளது. (புற) |
எரிநக்ஷத்திரங்கள் | இரவில் ஆகாய வெளியிலிருந்து நக்ஷத்திரங்களைப்போல் பூமியில் ஒரு நேராகவும் சாய்ந்தும் வீழ்பவை, இவைகளை விண் வீழ்கொள்ளி யென்பர். இவை சூரியனைச் சுற்றி கோடிக்கணக்காய்ச் சுழன்று வரும் கற்களும், பாறைகளும் நிலைமாறி வாயுமண்ட லத்தைக் கிழித்துக் கொண்டு அதிவேகமாகப் பூமியை நோக்கி வருதலால் சுடர் விட்டு எரிகின்றன வென்றும் அவ்வகை வருவதில் சில வழியில் நீற்றுவிடுகின்றன வென்றும், சில பூமியில் கல்லுருக்கொண்டு வீழ்கின்றன என்றும் எண்ணப்படுகிறது. இவ்வாறு விழும் விண் வீழ்கொள்ளியின் தொகை ஒரு நாளைக்கு 10 முதல் 20 கோடிக்கணக்கென்று எண்ணப்படுகிறது. |
எரிமலைகள் | பூமிக்குக்கீழ் உள்ள தீ, உள்ளிருக்கும் மண்ணை உருக்கி மலைப்புழை வழியாக மேல்வீசுவது. தென் அமெரிகா கண்டத்தின் மேல்கரையில் உள்ள கொடபாக்ஸி எனும் எரிமலை இது, (7) ஆனை பளுவுள்ள மலைக் கல்லை (9) மைல் உயரம் ஆகாயத்தி லெறிந்ததாம். இவ் வெரிமலைகள் கடல்களிலுண்டாயின் கடல் கொந்தளிப்படைகிறது. இவை பெரும்பாலும் கடற்கரை சார்ந்தே உண்டாகின்றன. அமெரிகாவில் கொடபாவி, சிம்பரோசா, ஒரிசாபா, போபோகாடிபிடல், கீழிந்திய தீவில் சில, ஐஸ்லாண்டில் எக்லா, இடாலியில் வெசுவியஸ், எட்னா, ஸ்டராம்பொலி, இவற்றுள் சில எரிந்து அவிந்து போனவை ஆக (772) எரிமலைகள் உள எனக் கூறு கின்றனர். |
எரிமுகன் | சூரபதுமனுக்குக் குமரன். |
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | இவர் வளங்கெழு முசிறியார்ப் பெழவளை இயருசமங்கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானையடுபோர்ச்செழியன்” எனச்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளியின் வெற்றியைப் பாடியவர். (புற~று.) (அக~நா.) |
எருமை வெளியனார் மகனார் கடலனார் | கடைச் சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கடலனார் என்பதால் இவர் நெய் தனிலத்தவர் போலும். இவரது ஊர்ப் பெயர் எருமை வெளியென்பது போலும். இவர் அரவு தன் மாணிக்கத்தை உமிழ்ந்து வைத்து அவ்வொளியில் இரைதேடுதலை “இருங்களிறட்ட பெருஞ்சின வுழுவை, நாமநல்லராக் கதிர்பட வுமிழ்ந்த, மேய்மணி விளக்கிற்புலர வீர்க்கும், வாணடந்தன்ன வழக்கருங் கவலை” அகம் (72) ஆவது செய்யுளில் கூறியிருக்கின்றனர். |
எறிச்சலூர் | இது கோனாட்டுள்ள ஊர்களுள் ஒன்று. (புறநானூறு). |
எறிச்சலூர்மலாடனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். இவரூர் எரிச்சலூர் போலும். (திருவள்ளுவமாலை). |
எறிபத்தநாயனார் | பரமசிவனிடத்தும், அடியவர்களிடத்தும் அன்புள்ள சிவனடியவர். இவர், திருக்கருவூரில் பரமசிவத்திற்குப்பூ மாலை தொடுத்துச் சாத்தும் சிவகாமியாண்டார் ஒருநாள் சுவாமிக்குப்புட்பங்கொண்டு வர, சோழராஜன் யானை, மகர் நவமிக்கு முன்னான் ஸ்தானத்திற்குப் போய் வருகையில் சிவகாமியாண்டா ரிடத்திருந்த பூக்குடவையைப்பறித்தெறிந்தது. சிவகாமியாண்டார் சுவாமியிடத்து முறையிடுத வலக் கேட்டு எறிபத்தகாயனார் அவ்விடம் வந்து யானையையும் யானைப்பாகரையும் கொன்றனர். இதனையறிந்த சோழராஜன் சிவனடியார் குற்றஞ்செய்யாரென உணர்நது அவ்விடஞ்சென்று இக்குற்றம் யான் செய்ததால் என்னைச் சேதிக்க என்று உடைவாளை எறிபத்தரிடம் தந்தனன். எறிபத்தநாயனார், அந்த உடைவாளினால் தம் கழுத்தினை அரியத் தொடங்குகையில் அரசன் அவர் கையைப் பற்றிக்கொண்டனன். அப்போது பரமசிவம், அசரீரியாய் “யாமே உங்களன்பினைத் தெரிவிக்கச் செய்தோம்” என்று யானையையும் பாகரையும் பிழைப்பித்து இவர்களுக்குத் திருவடி தந்தருளினர். (பெரியபுராணம்.) |
எறும்பி அப்பர் | தேசிகர் சாதித்தவைமாடுனவை என்று அண்ணனுடன் வாதிட்ட மணவாள மாமுனிகளின் காலக்ஷேப்பார். அஷ்டதிக்கஜங்களாகக் கொண்டவர்களில் ஒருவர். இவர் செய்த நூல் விலக்ஷண மோக்ஷாதிகாரி நிர்ணயம். |
எறும்பு | இது வண்டினத்தைச் சேர்ந்த முதுகெலும்பில்லாப் பிராணி. இதற்கும் சிலநாட்களில் இறக்கை முளைப்பதுண்டு. இதற்குப் பல கண்கள் உண்டென்பர். இது தன் பரிசவுறுப்பால் பொருள்களை அறியும். உருசியை உணரும் உறுப்பும் உண்டு. இதிற் பலவகையான எறும்புகளுண்டு, சிற்றெறும்பு, பேரெறும்பு, கட்டெறும்பு, செங்காவெறும்பு, பேய்க்காலெறும்பு, முயிற்றெறும்பு முதல் பல. இவற்றின் முயற்சி பல. விசித்திரமாகக் காரியங்களைச் செய்யும் பிராணி. |
எலி | இது வீடுகளிலும் வயல்களிலும் உலாவும் பிராணி. இதற்கு முகம் சற்றுக் கூர்மையாகவும், மீசைகள் மீண்டும், கண்களிருட்டில் நன்றாய்ப் பார்க்கக்கூடியதாகவும் கால்கள் குறுகியும், வால் நீண்டும் இருக்கும், இது தந்திரமாகப் பொருள்களைத் திருடும். கூர்மையான பற்களால் பூமியைத் தோண்டியும் கதவுகளைப் பற்களால் அறுத்தும் திருடவல்லது. இதற்குப் பூனை, நாய், பாம்பு முதலியசத்ரு. இவ்வெலிகளில் பலவகை உண்டு வரப்பெலி, வீங்கெலி, இழுப்பெலி, சிலாலஜ எலி, சபள சலி, புண்டாஎலி, ஹரித எலி, சிகுரஎலி, அசித எலி, கஷாய தந்த எலி, குனகஎலி, கோகில எலி, கபில எலி, கிருஷ்ண எலி, ரசால எலி, குரங்கரலன் நச்செலி, சத்திரிமணியன், செம்மூக்கன், வாளி, குறட்டை, கருங்காலன், தலையன், விடவெலி, செங்கண்ணன், புள்ளக்காடன், சுண்டெலி என்பன இவற்றின் குணங்களை ஜீவாக்ஷாமிர்தங் காண்க. |
எலிபேதம் | அருணம், சபலம், சுவேதம், கபோதம், உந்துரு, நச்செலி, பலினி, சுசுந்தரி, செந்தலைமுட்டி, செவ்வெலி, தூங்கெலி, உலைப்பெலி, புடையெவி, இரைப்பெலி, முதலிய. |
எலியோகிராப் | (HELIOGRAPH) இது, நேருக்கு நேராக இரண்டு வட்டக் கண்ணாடிகளையுடைய சுழற் கருவி. யுத்தகாலங்களில் சூரிய ஒளியாலும் வேறு ஒளியாலும் கண்ணாடியால் செய்தியை அறிந்து கொள்வது. |
எலியோமிடர் | ஒரு தூரதிருஷ்டிக்குழல். இது, ஆகாயத்திலுள்ள கிரகங்களின் சமீப அளவைத் தெரிவிப்பது. |
எல்லன் | தொண்டைநாட்டுக் குன்றையூரிலிருந்து யாசகருக்கு வேண்டிய கொடுத்து வரும் நாட்களில் ஒருவன் வந்து உடற்றசை கேட்க அதனை அரிந்து கொடுத்து புகழ் பெற்றபிரபு. “ஆலங்கே யங்கே யரும் பறவை யாற்றுயிலும், மாலங்கே யங்கே மலர்மடந்தை, கோலஞ்சேர், செங்கே தகை மணக்குஞ் செங்குன்றை யூரனெங்கே, அங்கேயிரவலரெல்லாம்”. |
எல்லப்பநாவலர் | இவர்க்குச் சைவ எல்லப்பநாவலர் எனவும் பெயர். இவர் பிறந்தது தாழைநகர். இவரைச் சிலர் யாழ்ப் பாணத்தவர் என்பர். பிள்ளைப்பெருமாளையங்கார்காலத்தி விவரிருந்ததாகப் பலர் கூறுகிறபடியால் இவர்காலம் திருமலைராய னரசாட்சிகாலம் என்று தோன்றுகிறது. இவர் செய்த நூல்கள் அருணாசல் புராணம், திருவிரிஞ்சைப்புராணம், செவ் வந்திபுராணம், தீர்த்தகிரி புராணம், திருச் செங்காட்டங்குடி புராணம், திருவெண் காட்டுப் புராணம், அருணையந்தாதி, அருணைக் கலம்பகம், செனந்தரியலகரியுரை முதலியன. இவரூர் சோழநாட்டதாகிய திருவெண்காட்டிற் கருகிலுள்ள இராதா நல்லூர் என்பர். சிலர் இவர் தருமபுர ஆதீனத்தை யடுத்து இலக்கிய இலக்கணங்களைக் கற்ற சைவ வேளாளர் என்பர். |
எல்லையம்மன் | இவள் மாரி வேறுபாடு. இவளை எல் வேயிலிருத்தலால் எல்லை யம்மன் எனவும், வீதியிலிருப்பதால் தெருவீதி யம்மன் எனவும், சந்தியிலிருப்பதால் சந்தி யம்மன் எனவும், சோலையிலிருப்பதால் சோலையம்மன் எனவும், பனையடியிலிருப் பதால் கருக்காத்தாள் எனவும், வேப்படி யிலிருப்பதால் வேம்படியம்மை எனவும், ஆலடியிலிருப்பதால் ஆலையமர்ந்தாள் எனவும், எட்டி மரத்தடியிலிருப்பதால் எட்டி யம்மன் எனவும் கூறுவர். |
எளிதின்முடிபணி | அஃதாவது ஒருவன் செய்யத்தொடங்கிய காரியம் மற்றொரு காரணவுதவியா வெளிதின் முடிதலாம். இதனை வடநூலார் சமாதி யலங்கார மென்பர். |
எள் | இது ஒரு சிறு செடி. இதன் வித்தில் எண்ணெயெடுப்பர். விஷ்ணுவின் வியர்வையில் உண்டானது, ஆகையால் மிகத் தூய்மையானது. இதனைக் கண்டால் அசுரரும் பூதப்பிரேத பைசாசர் முதலியோரும் வெகுண்டு ஓடுவர். இந்த எள் கறுப்பும் வெண்மையுமென இருவகைத்து, எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுப்பின் அதிக பயனுள்ள தாகும். சிரார்த்தத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்தேவர்கள் அதிகக்களிப் படைவர். (கருடபுராணம்). |
எழினி | மத்தியைக் காண்க. |
எழினி அதியமான் | கடையெழுவள்ளல்களி லொருவன். இவனை எழிலி யென்பர். குதிரைமலை இவனுடையது. (புற. நா). |
எழுஉப்பன்றீநாகன் குமானார் | கடைச்சங்க மருவிய புலவர். எழும்பன்றி எனவுங் உறுவர். (அக. நா). |
எழுகடற்றெரு | மதுரையிலுள்ள எழுகடலென்னும் தடாகத்தின் வடகரையிலுள்ளது. (திருவி). |
எழுகடல் | ஒரு தடாகம். காஞ்சன மாலைக்காக வருவித்த ஏழு கடல்களும் தன்பால் வந்து அடங்கப் பெற்றமையின், இஃது இப்பெயர் பெற்றது. இதன் நிருதி மூலையில் மிகப் பழையதாகக் காஞ்சன மாலை கோயிலொன்று இருக்கின்றது. (திருவிளையாடல்.) |
எழுகூற்றிருக்கை | சித்திரக்கலியிலொன்று, இது, ஏழறையாக்கி முறையாகக் குறுமக்கண் முன்னின்றும் புக்கும் போந்தும், விளையாடும் பெற்றியான் வழுவாமை ஒன்று முதலாக எழிறுதியாக முறையானே பாடுவது. (யாப்பு~வி.) |
எழுத்தாளன் | (1) படைவீரர் எவ்வளவினர் அவர்கள் பெற்ற வேதனம் எவ்வளவு அவர்களுள் பழையராய் வலியிழந்தவர் யாவர் வேற்றிடங்களில் சென்றிருப்பவர் யாவர் எனக் கணக்கிட்டறிபவன் (சுக் நீ.) (2) நூறு காலாட்களுக்குத் தலைவன். (சுக் நீ.) (3) கணக்கின் திறமை, நாடு, மொழி இவற்றின் வேறுபாடறிதல், ஜயர் தோன் சதுமறை பொருளின்றி விளக்கமாக எழுத முறைமை யுடையவன். (சுக்~நீ.) |
எழுத்து | 1. இது சூக்ஷமம், ஸ்தூலம் என இருவகைப்படும். இவற்றை விவகரிக்கும் இடத்து ஈசுவர சத்தியினது முதல் ஷோபத்தால் தவனிரூபமான நாதம் உண்டாகிறது. அதுதான் அபரநாதம் எனப்படும். இரண்டாவது க்ஷோபத்தால் சங்கல்பரூபமான விந்து உண்டாகின்றது. அதுதான் அபரவிந்து, மூன்றாவது ஷோபத்தால் வர்ணரூபமான அக்ஷரம் உண்டாகிறது. இந்த நாதவிந்து வர்ணங்கள் பாவிந்துவினது முதற்காரியங்கள். இவ்விடத்துக் காரியவிந்துவினது ஸ்தூலாவஸ்தையானது மிக ஸ்தூலமாகும்போது வைகரியென்றும், கொஞ்சம் ஸ்தூலமாகும் போது மத்திமையென்றும் இருவகையாம். சூக்கும அவஸ்தையானது மிக சூக்கும மாகும்போது சூக்ஷ்மை என்றும், கொஞ்சம் சூக்ஷமையாகும்போது பைசந்தி என்றும் கூறப்படும். மேற்கூறிய பைசந்தி உச்சியிற்றோன்றும் வாயுவால் மார்பு, கழுத்து, தலை, நாவினடி, நா, பல், மூக்கு, உதடு இவ்விடங்களில் தடையுறும்போது எழுத்துக்களாகத் திரண்டு உதானவாயு மேலெழும்போது வெளியில் வந்து பிறர் காதிற்குப் புலப்படும்படி உச்சரிக்கப்பட் இக் கடாதி பதார்த்தங்களைச் சொல்லும் போது வாக்கானது வர்ணம் என்றும் வைகரீவாக்கு என்றும் சொல்லப்படும். அவ்வைகரி தனக்கு முன்னிருக்கும் மத் திமை வாக்கினும் அதிக ஸ்தூலமாகும். புத்தியால் மாத்திரம் அறியப்பட்டும் உள் ளடங்கிய உச்சரிப்பாயும், பிறர் காதிற் கேளாமலும் எழுத்து முறை யுள்ளதாயும் இருக்கும் வாக்கானது காரியவிந்துவினது முதலவஸ்தையாகச் சூக்கும வாக்கினது விகாரமான பைசந்தி எனப்படும். ஒரு விசேஷமுமின்றி அர்த்தசுவரூபத்தை மாத்திரம் பிரகாசித்துக்கொண்டு உள்ளோர் சோதியாய் நெடுநாள் நிலைப்பதாகிய வாக்கு நாதமென்னும் பெயருள்ள சூக்குமைவாக்கு எனப்படும். இது (சி~சா) 2. “எழுத்தென்றது கட்புலனாகா வுருவும் கட்புலனாகிய வடிவும் உடையதாய் வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே உணர்த்தியும், சொற்கு இயைந்து நிற்கும் ஒசை. அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடையெறியப் படுதலானும், இன்பதுன்பத்தை ஆக்கலானும், அருவும் உருவுங் கூடிப்பிறத்தலானும், உந்திமுதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து, கட்புலனாந் தன்மையின்றிச் செவிக்கட் சென்றுறூஉம் ஊறுடைமையானும், விசும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மையுடைமையானும், காற்றின் குணமாயதோர் உருவாம். வன்மை, மென்மை, இடைமை கோடலான் உருவேயாயிற்று. இதனைக் காற்றின் குணம் என்பது தொல்காப்பியர் கருத்தென்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இதனை விசும்பின் குணம் என்பாரும் உளர். உருவுருவாகி எனவும், உட்பெறு புள்ளியுரு வாகும்மே எனவும் காட்சிப் பொருட்கும் சிறுபான்மைவரும் வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டம் சதுரம் முதலிய முப்பத்து இரண்டினுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் துண்ணறிவு இல்லோரும், உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலின் கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. தன்மையும் வடிவும் ஆசிரியர் தொல்காப்பியர் கூறிலர். வடிவு கூறுமிடத்து மெய்க்கே பெரும்பான்மை வடிவு கூறுவர். ஓசை உணர்வார்க்குக் கருவியாகிய வரிவடிவும் சிறப்பிலா எழுத்தாகக் கொள்க. இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பர். அறியாதார்” அதனை உருவென்றே கோடும். அதனை உருவென்பதற்குச் “செறிப்பச் சேறலானும் ” என்பதனாற் கொள்க. அருவேயாயின் ஈண்டுக் கூறியவை யின்மையுணர்க. இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூறாது ஒழிந்தார். அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு உணர்த்துதற்கு அரிதென்பது கருதி, அவ்வடிவு ஆராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம். குழலகத்திற் கூறில் எ குழல்வடிவும், குடத்தகத்திற் கூறில் குட வடிவும், வெள்ளிடையாற்கூறில் எல்லாத் திசையும், நீர்த்தரங்கமும் போல வருவதாம். மெய்க்கு வடிவாவது உருவு திரிந்து மேலுங் கீழும் விலங்கு பெற்றுங், கோடு பெற்றும் புள்ளி பெற்றும், புள்ளியும் கோடும் உடன் பெற்றும், உயிர்த்தலாம். கி, கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு, கூ முதலிய கீழ்விலங்கு பெற்றன. கா, நா முதலிய புள்ளி பெற்றன. அருகேபெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதுவர். மகரமும் இரண்டு புள்ளியுள் உட்பெறு புள்ளியை வளைத்து எழுதினார். கொ கொ கோ கோ முதலிய புள்ளியும் கோடும் உடன் பெற்றன. இவை தொல்காப்பியத்து ஆசிரியர் கச்சினார்க்கினியராற் கூறப்பட்டன. இவற்றின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதவீறிடைநிலை, போலி, பதம், புணர்ப்பு முதலியவற்றை அவ்விலக்கணஞ் சொன்ன தொல்காப்பிய முதலிய இலக்கண நூல்களுட் கான்க. உயிர்க்கு ஆன்றோர் காட்டிய வடிவே வடிவாம். 2. (தொகை, வகை, விரி). 1. சிறப்பெழுத்து, 2. உறுப்பெழுத் தென்னுக் தொகையானும். 1. ஒற்று, 2. உயிர், 3. உயிர் மெய்யென்னும் வகையானும். 1. உயிரும், 2. மெய்யும், 3. உயிர்மெய் யும், 4. குறிலும், 5. நெடிலும், 6. அளபெடையும், 7. வன்மையும், 8. மென்மையும், 9. இடைமையும், 10. குற்றிய விகரமும், 11. குற்றியலுகரமும், 12. ஆயுதமும், 13. ஐகாரக் குறுக்கமும், 14. ஔகாரக் குறுக்கமும், 15. மகரக்குறுக்க முமென்னும் விரியானும் பலவாம். (யா~வி). 3. மற்றும் இராசியெழுத்து, நானெழுத்து, தோபமுதலிய நால்வகையெழுத்து, சாதி முதலிய தன்மையெழுத்து, உச்சாடன் முதலிய உக்கிரவெழுத்து, சித்திரகா ரூட முதலிய முத்திறவெழுத்து, பாகியல் முதலிய நால்வகை யெழுத்து, புத்தேன் முதலிய நாற்கதியெழுத்து, தாது முதலிய வொளியெழுத்து, மாகமடைய முதலிய சங்கேதவெழுத்து, கலி முதலிய சங்கேதவெழுத்து, பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் பிறவுமாம். (யாப்பு-வி). |
எழுத்துப்போலி | சொற்களின் முதலிடை கடைகளில் ஓரெழுத்திற்குப் பிரதியாக மற்றோரெழுத்து வரப் பொருள் மாறாதிருப்பது. (நன்) |
எழுத்துவருத்தனம் | இது சித்திர கவிவகையுள் ஒன்று. இது ஓரெழுத்து முதலாக ஒன்று தலைச்சிறந்து ஏறிய எழுத்துக்களான் முறையே பொருள் தரப்பாடுவது. |
எழுநூற்றுமங்கலம் | ஒரூர். ஆளுடைய நாயகர், எழுநூறு நரிகளைக் குதிரைகளாகச் செய்த இடமாம். இது மதுரையில் ஆளுடையார் கோயிலுக்குத் தெற்கே உ. நாழிகைவழி தூரத்திலுள்ளது. (திருவிளை). |
எழுபதுபரிபாடல் | கடைச்சங்க மருவிநூல். |
எழுவகைத்தானியங்கள் | இவை யாகங்களுக் குதவினவை. நெல், கொள், என், உழுந்து, துவரை, கடுகு, பயறு. |
எழுவகைமதம் | உடன்படல், மறுத்தல், பிதாமதமேற்கொண்டு களைதல், தானொரு பொருளையெடுத்து காட்டியதனை வருமிடதோறு நிறுத்தல், இருவர் ஒன்றற் கொன்று விசோதமாகக்கொண்ட இரண்டனுன் ஒன்றனிடத்துத் துணிதல், பிறர் ஏவிலுள்ள குற்றங்காட்டல், பிறர்மதத் திற்கு உடம்படானாகித் தன்மதங்கொளல். (கன்~பா.) |
எவனேச்வரன் | பயனைக் காண்க. |
எவன் | கலிங்க தேசத்தரசன், |