ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஊகூ | இவன் தேவலருஷியின் சாபத்தால் முதலை யுருப்பெற்று, கஜேந்திரனைப் பிடித்துக்கொண்ட ஒருகாந்தருவன். (பாகவதம்) |
ஊக்கா | இது, பெரும்பாலும், மகம்மதியரும் சிறுபான்மை மற்றவர்களும் பனை வெல்லத்துடன் கலந்திடித்த புகையிலை லேகியத்தை வைத்துப் புகை பிடிக்கும் சூழல். |
ஊங்கனூர் | சேரநாட்டின் கடற்கரையூர், இந்நகரத்தின் கடலில் வஞ்சவுருக் கொண்டு முளைத்து நின்ற கடப்பமாத்தைச் சேரன் வெட்டினான். (சிலப்பதிகாரம்). |
ஊங்காரப் பறவை | இது நமது நாட்டின் சிட்டின மொத்தவை. ஊங்காரப் பறவை காண்க. |
ஊங்காரப்பறவை | இவ்வினத்தில் பலவகை உண்டு. இவை 500. இனத்திற்கு மேலுண்டு. இதில் சிறியவை 2 அங்குலம், பெரிது 8 ½ அங்குலம். இவற்றின் சிறகுகள் அழகுள்ளவை. சில அழகான பெரிய வால்களைப் பெற்றுள்ளன. இவற்றின் அலகு நீண்டு நா உருண்டு மலரினுள்ளிருக்கும் தேன்மகரந்தங்களை இழுக்கக் கூடியனவையாயிருக்கின்றன. இவற்றின் வகை 1. லோபார்நிஸ் ஒர் நாடஸ் மத்ய அமெரிக பறவை, 2. லாம்ப்ரோல யீமாராமி~மெக்ஸிகோ, 3. ரைமன் காந்தா பிரேவல், 4. ஸ்டிகா நூரா அண்டர் வூடி கொளம்பியா 5. கிரைஸோலாம் பிஸ் மாஸ்கிடோஸ் நியூகிரனடா, 6. ளைனா லஸ்பியாகார்கோ வெனிஸலா, 7. ஹெலியோ டிரிக்ஸ்பரோடி மத்ய அமெரிகா, 8. ஹிலாடோ போரஸ்ரூபஸ்~யுனைடட்ஸ் டேட்ஸ் அமரிகா, 9. ஸாபோஸ் பார்க னூரா~பெரு, பொலீவியா, 10. டொ பாஸாபெல்லா~கியானா, 11. ஹெலியோ மாஸ்டாஸ்போலிட்மஸ் ஆமைகா, 12 ஹெலியாங்கிலஸ் ஸ்டோரிபியானஸ், ஈக்வடார். இந்தப் பிரதேசங்களில் இந்தப் பறவைகள் வசிக்கின்றன. |
ஊசிகன் | கிருதி புத்ரன். |
ஊசிக்காந்தம் | இது சிறிய காந்த ஊசி. இதனைத் தன்னிலையில் விடின் வடக்குத் தெற்குகளைத் தெரிவிக்கும். இது கப்பலோட்டிகளுக்கு உதவி. |
ஊசிமுறி | இடைக்காடரால் செய்யப்பட்ட செய்யுள். |
ஊடலுணெகிழ்தல் | செறிந்த இருளையுடைய மாலைக்காலத்துத் துளங்காநின்ற துயரநெருக்க ஒள்ளிய தொடியாற் சிறந்த தோளினையுடையாள் வழக்காட்டிடத்துக் குழைந்தது (பு. வெ பெருந்திணை.) |
ஊட்டியார் | கடைச்சங்க மருவிய தமிழ்ப் புலவர். இவர் பாடலுள் வழங்கிய ‘ஊட்டி’ என்பதே இவர்க்குப் பெயராயின்மை காண்க. (அக~று.) |
ஊண்பித்தை | இவர், நற்றமிழறிந்த நங்கையரில் ஒருவராயிருக்கலாம். குறுந்தொகையில் ”உள்ளார் கொல்லோதோழி” எனப்பாலையைப் பாடியவர். ஊன் பித்தையெனவுங் கூறுவர். (குறு. 232.) |
ஊதீலர் | அசுவதராசுவன் புத்திரர். |
ஊன் | பல பிராணிகளின் இறைச்சிகள். இவை பல நாட்டார் பெரிதும் சிறிதுமாகிய மிருகம் பக்ஷி மீன் முதலியவற்றைக் கொன்று அவற்றின் ஆகாதவைகளை ஒதுக்கி வேண்டினவற்றைப் பாசுஞ் செய்தும் செய்யாதும் உண்பது. |
ஊன்பொதிபசுங்குடையார் | ”வழிபடுவோரை வல்லறிதியே” எனுஞ்செய்யுளில் “மகளிர் மலைத்தலல்லது மள்ளர் மலைத்தல் போகிய” எனக்கூறிச் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி (சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கான விளஞ் சேட்சென்னி) யையும் சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னியையும் பாடியவர். (புற. நா.) 10, 203, 370,378. |
ஊன்றுகோல் | மூங்கில் பிரம்பு முதலிய பொருள்களால் வயோதிகராலும் மற்றவராலும் மேடுபள்ளங்களையும் பிராணிகளையு மறிந்து நடக்கவும், வன்மை, திடம் தரவும் கைக்கொள்ளும் தண்டம். |
ஊமத்தை | இது ஒரு மயக்கத்தை உண்டாக்கும் செடி. இது, வெள்ளூமத்தை, கருவூமத்தை, அடுக்கூமத்தை, பேயூமத்தை, மருளூமத்தை, பொன்னூமத்தையெனப் பலவகைப்படும். |
ஊரணை | சித்திராதன் தேவி. |
ஊராளி | மதுரை திருநெல்வேலியிலுள்ள உழவரில் ஒருவகையார். இவர்கள் அம்பலக்காரர், முத்திரியரில் ஒருவகையாராகலாம். இவர்கள் தங்களை முத்து ராஜாவின் சந்ததியார் என்பர். (தர்ஸ்டன்.) |
ஊரின்கட்டோன்றிய காமப் பகுதி | ஒழியாத அன்பினையுடைய ஆடவரும் மகளிரும் அழகுபொருந்தக் கூடும்பதியைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.) |
ஊர்கொலை | கடுகின செலவையுடைய பரியை முடுக்கி வில்லினையுடைய வீரர் முழங்கெரிபரப்ப அரணினை அழித்தது. (பு~வெ.) |
ஊர்க்குருவி | இது தான்யம் பூச்சி முதலிய தின்னும் பறவைகளில் ஒன்று. இது வீட்டினிறப்பில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது. கபில நிறமுள்ள சிறு பக்ஷி. இது கிராம வாசியாதலாலிப்பெயர் பெற்றது. |
ஊர்க்குருவி | இது வரிகளமைந்த கபில நிறமுள்ளது. இதனலகு தான்ய பக்ஷணிகளாகிய பிராணிகளுக்குள்ளது போல் குறுகியதாயிருக்கும். இது ஊரில் வீட்டுக் கூரைகளில் கூடுகட்டி வாழ்வது. |
ஊர்சயோனி | விஸ்வாமித்திரன் புத்திரன். |
ஊர்சல்வதி | ஊர்ச்சசுவதிக்கு ஒரு பெயர். |
ஊர்சி | தக்ஷன் பெண், வசிட்டன் தேவி, இவளுக்குச் சித்திரகேது முதல் எழுகுமார். |
ஊர்ச்சச்வதி | பிரியவதன் பெண். தேவயானிக்குத் தாய், சுக்கிரன் பாரி. |
ஊர்ச்சன் | உச்சிரன் குமரன். |
ஊர்ச்சிதன் | கார்த்தவீரியன் குமரன் சூரனென்று பெயர். |
ஊர்ச்செரு | பகைவராற் புகுதற்கரிய காவற்காட்டோடு அகழ்சிதையாதபடி பூசல் செய்த மதிப்பினைச் சொல்லியது (பு. வெ.) |
ஊர்ச்சை | ஊர்சிக்கு ஒரு பெயர். |
ஊர்த்த ரேதஸ் | ஏகாதச ருத்ரருன் ஒருவன் தேவி இளை. |
ஊர்த்தகசன் | புலியுருக்கொண்டு பால விநாயகரைச் சூழ்ந்த சிறுவரை வருத்தி விநாயகராற் கொலையுண்ட அசுரன். (விநாயகபுராணம்) |
ஊர்த்தகேது | (சூ.) சனத்துவசன் குமரன். |
ஊர்த்ததாண்டவம் | சிவமூர்த்தியின் நடன பேதம், சப்ததாண்டவம் காண்க. |
ஊர்த்தபாகு | ஐந்தாம் மன்வந்தரத்து ருஷி. |
ஊர்த்தயன் | உருத்திரருக்கு வேள்விசெய்ய நியமிக்கப்பட்ட ருஷி. |
ஊர்த்வ, அதோதிரயமுகராசி | ஆதித்தன் விட்ட இராசி ஊர்த்வமுகம், நிற்கப்பட்ட ராசி அதோமுகம், பற்றப்பட்ட ராசி திரயோமுகமென்றும் பெயர்பெறும். |
ஊர்நாயு | ஒரு காந்தர்வன், பாரியை மேனகை. |
ஊர்ன நாமன் | திருதாராஷ்டர புத்திரன். |
ஊர்னை | இவள் மரீசிருஷியின் பதனி. இவள் சுவாயம்பு மன்வந்தரத்தில் மரீசியுடன் கூடி ஆறு புத்ரர்களைப் பெற்றனள். இவ்வறு வரும் பிரமன் தன் புத்ரியோடு சங்கமித்ததைக் கண்டு நகைத்ததால் பிரமன் கோபங்கொண்டு நீங்களறுவரும் அசுர யோனியிற் பிறக்கக் கடவீர்களென்று சபிக்க, அவ்வாறே காலதேவிக்குப் புத்ரராகவும் பின் இரண்யகசிபுக்குப் புதரராயும் பிறந்து சாந்தசித்தராய்ப் பிரமனை பெண்ணித் தவஞ்செய்து பிரமன் பிரத்யக்ஷமாக எங்களுக்குத் தேவ மானுஷ்ய மிருகாதிகளால் மரணமின்றி இருக்க என வரம் பெற்றனர். இவர்களிவ்வாறு வரம் பெற்ற செய்தியை இரண்யகசிபு அறிந்து அவர்களை நோக்கி நீங்கள் என்னை அலக்ஷ்யஞ்செய்து பிரமனை யெண்ணித் தவஞ்செய்து வரம் பெற்றமையால் நீங்கள் என்னிடமிருக்கின் கொலை புரிவேன். நீவிர் பிழைத்திருக்க வேண்டின் பாதலஞ் சேர்ந்து உறங்கியிருந்து பின் தேவகி கர்ப்பத்தில் வருடந்தோறும் ஒவ்வொருவராகப் பிறந்து காலநேமியாகிய உங்கள் பிதா கம்சனாகப் பிறந்து உங்களை ஒவ்வொருவராகக் கொல்ல இறக் ஈக் கடவீர்கள் என்று சாபமடைந்தனர். |
ஊர்மிளை | சநகன் பெண். இலக்குமணன் தேவி. இலக்குமணர் தன் தமயனுடன் அரண்யவாச நீங்கி நகர்வருமளவும் பிற வியாபாரமின்றி உறங்கியே இருந்தவள். (இராமாயணம்). |
ஊர்வசன் | சுசியின் குமரன். |
ஊர்வசி | 1. இவள் தெய்வதாஸி, நாநாராயணர் பதரியில் தவஞ்செய்கையில் அவர்கள் தவத்தைக் கெடுக்க அநேக தேவதாஸிகளை இந்திரன் அனுப்பினன். இதனால் நாராயணர் கலங்காது இருந்து தம் தொடையாகிய ஊருவில் ஊர்வசி முதல் அநேக தாசிசளைப் பிறப்பித்தகர், இவர்களைக் கண்டு அப்பெண்கள் மயங்கி ஊர்வசி முதலியவரைத் தங்களுக்கு நாயகிகளாகக் கொண்டு தெய்வலோக மடைந்தனர். 2. ஒருமுறை இவள், தெய்வலோகத்திற்குக் காலகேயரது வதைநிமித்தஞ் சென்ற அருச்சனனைக் கண்டு தன்னைச் சேர வேண்டுகையில் அவன் மறுத்ததால் அவனைப் பேடியாகச் சபித்தனன். 3. இவன் சதாநந்தருஷியை மயக்கினள். 4. இவள் ரைப்பிய முனிவரைத் தேவ சேவலால் மயக்கச் சென்று அவரால் விகார வடிவமடைந்தனள். 5. விசவாமித்திரர் வேள்வியழிக்கச் சென்று கல்லாய்ச் சுவேசமுனிவராற் சாப நீங்கியவள். 6. மித்திரனால் புதனுக்குப் பாரியாகச் சபிக்கப்பட்டவள். வசிட்டரைக் காண்க. 7. இவள், மித்திரனா வழைக்கப்பட்டு அவனிடஞ் செல்லுகையில் வருணனிவளை அழைக்க இவள் மித்திர னழைத்ததை உரைத்திச் செல்வதன் முன் மித்திரன் தன் தேஜசைக் குடத்திலடக்க அகத்தியனும், பிறகு வருணனிடஞ் செல்ல முந்திவராது பிந்தி வந்தனையென்று மறுத்துத் தன் தேசஸைக் குடத்திலடக்க வசிட்டனும் பிறந்தனர். உருப்பசியெனவுங்கூறுவர். 8. இவள் அகத்தியர் சாபத்தால் மானி டமகளாய் மாதவியாயினள். 9. இவள் சயந்தனை விரும்பிய காரணத்தால் அகத்தியரால் காஞ்சியில் கணிகை மகளாகவும், சயந்தன் விந்தமலைக்கண் மூங்கிலுமாகச் சாபம் பெற்றனர். |
ஊர்வன் | ஒர் இருடி. இவர் தவஞ்செய்கையில் இருடிகளிவரிடம் வந்து ஒரு புத்ரனைப் படைக்க என்ன, இவர் ஒரு தர்ப்பைத்துண்டைக் கையிலெடுத்துத் தன் ஊருவை அக்தியிலிட்டுக் கடைந்தனர். அதிலிருந்து அக்நிப் பிழம்புடன் ஒரு புத்ரன் பிறந்தனன். இருடிகளும் தேவர்களும் அவனைக் குதிரை முகத்துடன் கடலிலிருந்து நீரை ஆகாரமாய்க் கொள்ளக் கட்டளை யிட்டனர். இது வடவை யன்று. |
ஊறு | (அ) வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, திண்மை, நொய்மை, சீர்மை சருச்சரை, இவை தொடப்படும் பொருட்கு எண் குணங்களாம். |
ஊறுகாய் | இவை, புளிப்புள்ள, மா, எலு மிச்சை, கிச்சிலி, நாரத்தை, கொடிமா துளை மரிமாங்காய், கடுக்காய், நெல்லி, இஞ்சி முதலிய காய்களைப் பதமாக உப்பிட்டு ஊறவிட்டு ஊறியபின் உணவிற்குப் பயன்படுத்துவது. இதிற் சிலவற்றைத் தித்திப்பிட்டும் சம்பாரமிட்டுக் கொள்வர். |
ஊறுபாடு | (4) எரிதல், குத்தல், வெட்டல், எய்தல். |
ஊற்றுக்காடமர்ந்தவள் | இரேணுகை, உப்பையைக் காண்க. |
ஊற்றுமலைமருதப்பன் | நன்னூற்கு உரையியற்றச் சங்கா நமச்சிவாயப் புலவரை வேண்டிய பிரபு. |
ஊளையிடுங் குரங்கு | இது, தென் அமெரிகா வனாந்தாத்திலுள்ள குரங்கினம். இது பெருங்கூச்சலிடுவது. குறுகிய மயிரடர்ந்த முகமும் நீண்டு மயிரடர்ந்த வாலும் உள்ளது. |
ஊழ்வாதிமதம் | இவன் கடவுளாலும் வேதத்தாலும், யோகத்தாலும், வேதாந்த சித்தாந்தங்களாலும், பஞ்சயெக்யங்களாலும், சோடச தானங்களாலும் சிவ விஷ்ணு பூஜைகனாலும் நந்தவனம் தண்ணீர்ப்பம் தல், குளம், ஏரி, தீர்த்தயாத்திரை, தேசாந்தர யாத்திரைகளால் என்ன பயன் சிவன் கன்மத்தைக்கொண்டு எல்லாக்காரியங்களையும் நடத்தலால் கன்மமே தெய்வம் என்பன். இதம், அகிதம், சுகம், துக்கம், தரித்திரம், சம்பத்து எல்லாவற்றிற்கும் காரணம் கன்மம் ஆகையால் கன்மமே பிரமம் என்பன். (தத்துவ நிஜாநு.) |
ஊஷ்மபர் | ஆவியையுண்டு வாழுந் தேவ கணங்கள். (பார~சபா). |
ஊஹு | ஒரு காந்தர்வன். அவன் சிவபூஜையால் சர்வசித்தி யடைந்தவன். (சிவாஹ.) |