ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
உகதன் | நிச்சக்கிரன் குமான். இவன் குமரன் சித்திராதன். |
உகரன் | A. க்ஷத்திரியனுக்குச் சூத்திர மனைவியிடம் பிறந்தவன். எலி, உடும்பு முதலிய பிடித்தல் தொழில். (மநு). B. சிவன் திருநாமங்களில் ஒன்று. C. பூதனுக்குச் சுரபியிடத் துதித்த குமரன். எகாதசருத்திரருள் ஒருவன், D. சண்முக சேநாவீரன், மகாபலசாலி, அதிசூரனிடம் பெரும்போரிட்டு இளைக்காமல் அவனைக் கொன்றவன். E. சூத்திரப்பெண்ணை வணிகன் கூடிப் பெற்ற பிள்ளை. F. பிரமதேவன் கோபத்திலுதித்து அவராலிறந்தவன். G. சாஷூசூசமனுவைக் காண்க. |
உகரவீரியர் | சிவபூசா துரந்தரராகிய ஒரு இருடி. |
உகாசேந பாண்டியன் | இராசபயங்கர பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சத்துருஞ்சயன். |
உகாய்க்குடிகிழார் | இவர் உகாய்க்குடி எனும் ஊரினர் போலும், வேளாளராக இருக்கலாம். கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். (குறு~43.). |
உகீரசிரவன் | 1. திருதராஷ்டா புத்திரன். 2. உரோமகர்ஷன் குமரன். சூதபுராணிகருக்குப் பெயர். சூதனைக் காண்க. |
உகீரசேநன் | 1. வடமதுரைக்கு அரசன். தேவகன் தமயன். கம்சன் தந்தை. 2. அபிமன்னனுக்குப் பௌதரன். சனமேஜயன் தம்பி. |
உக்கமுகரன் | கத்ரு குமரன், நாகன். |
உக்கருஷணி | நவசக்திகளில் ஒருத்தி. |
உக்கலம்மாள் | உடையவர் திருவடிசம்பந்திகளில் ஒருவர். உடையவருக்கு ஆலவட்டகைங்கர்யஞ் செய்தவர். (குருபரம்பரை). |
உக்கலாழ்வான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். வைஷ்ணவாசாரியர். (குருபரம்பரை). |
உக்கிரகுலம் | இது சைன நூல்களிற் காணப்படும் ஐந்து குலங்களுள் ஒன்று. மற்ற நான்காவன இக்ஷவாகுகுலம், ஹரிகுலம், குருகுலம், நாதகுலம் என்பவை. இக்குலத்திற் பிறந்தவன் சண்பை நகரத் தரசனான விசயவானென்பவன். (பெருங்கதை). |
உக்கிரப் பெருவழுதி | இவன் பாண்டி நாட்டாசன், கடைச்சங்கத்தை ஆதரித்தவன், சங்கப்புலவருடன் ஒப்பப்பாடும் ஆற்றலுடையான். இவன் வேங்கை மார்பன் எனும் கானப்பேர் (பாளையார் கோயில்) அரசனை வென்று கானப்பேரெயில் கடந்தபாண்டியன் உக்கிரப் பெருவழுதியெனப் பெயர்பெற்றவன். இவன் மாவெண்கோ எனும் சோமானுடனும், இராஜ சூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடனும் நட்புப் பூண்டவன். ஔவையாராலும், ஆவூர் மூலங்கிழாராலும் பாடப்பெற்றவன். உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருதிரசன் மரைக்கொண்டு அகநானூறு தொகுப்பித்தோன். இவனது அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது. நற் 1ம் அக 1 திருவள்ளுவமாலை 1 ஆக (3) பாடல்கள் இவன் கூறியவை. இவன் காலம் 3 ஆம் நூற்றாண்டென்ப. |
உக்கிரவேகன் | பாரத யுத்தவீரன். |
உக்தி | இவன் வீடுகளிலிருந்து சுபாசுபங்களைப் பேசும்போது சதாஸ்து என்பவன். இவன் குமரன் காலசிக்வன். |
உக்னம் | பாசுபதர் வசிக்கும் உலகம். |
உக்ரச்யோதி | சைவசித்தாந்த பத்ததி செய்த சிவாசாரியருள் ஒருவர். |
உக்ரதமஷ்டரை | அரிவருஷனுக்கு மேரு தேவியிட முதித்த குமரன். |
உக்ரதமாரபாண்டியன் | சோமசுந்தர பாண்டியனுக்கும் தடாதகை பிராட்டியாருக்கும் பிறந்து சகலகலைகளும் கற்றுக் காந்திமதியை மணந்து அரசாக்ஷி கைக்கொண்டு ஆளும் நாட்களில் (69) யாகங்கள் செய்ய இந்திரன் பொறாமை கொண்டு கடலை விட்டனன். கடல் மதுரையை வளைக்கப் பாண்டியன் தாமதித்திருக்கக் கண்டு சிவமூர்த்தி சித்தவடிவு கொண்டு தரிசனந் தந்து வேலெறிய ஏவி மறைந்தனர். பாண்டியன் வேலெறிந்து வருணனது வீறடக்கினன். இவனாசாக்ஷியில் நாடு மழையிலாது வறப்ப மூவேந்தரும் தேவருலகு சென்று இந்திரன் சபையைச் சோ இந்திரன் மூவர்க்கும் ஆசனமிட இருவரும் அவனிட்ட ஆசனத்திருக்கப் பாண்டியன் இந்திரனுடன் ஓர் ஆசனத்திருந்தனன். இதனால் இந்திரன் மனம் பொறாதவனாய்ச் சேர சோழர்க்கு மரியாதை செய்து அவர்கள் நாட்டில் மாத்திரம் மழை பொழிவித்து, உக்ரபாண்டியனுக்கு மரியாதை செய்பவன் போல் அநேகரால் தாங்கப்பட்ட ஒரு பெரிய மாலையைக் கழுத்திலிட்டனன். அதனைச் சலிக்காது தாங்கி ஆரந்தாங்கு பாண்டியன் எனப் பெயரடைந்து இந்திரனை ஒன்றுங்கேளாது தன்னாடடைந்து சில நாட்கள் பொறுத்து வேட்டைக்குச் சென்று காட்டில் வந்து மேய்ந்து கொண்டிருந்த இந்திரனது மேகங்களைப் பிடித்துச் சிறையிட்டனன். இதைக் கேட்ட இந்திரன் யுத்தத்திறகு வர அவன் முடிமேல் வளையெறிந்து முடி விழும்படி பங்கஞ்செய்து, பின்னிடையச் செய்தனன். பிறகு, இந்திரன் மழை பெய்விக்கிறேன் மேகத்தைவிடுக்க எனத் தூதனுப்புவிக்கச் சம்மதிக்காது இருக்க, வேளாளர் இந்திரனுக்குப் பிணையாகி விடுவிக்க விடுத்தனன். இவன் அரசு செய்கையில் மழையிலாதிருக்கப் பாண்டியன் சோமசுந்தரமூர்த்தியை வருந்திக் கேட்கச் சிவமூர்த்தி இவ்வகை ஒருவருடமிருக்கும் அது தீர நீ மேருமலையிற் சென்று அங்கிருக்கும் பொன்னறை திறந்து நிதிகொண்டு அவ்வறையைமூடி உன் முத்திரையிட்டு மீளுக எனப் பாண்டியன் அவ்வகை சென்று மேருத் தெய்வத்தினை அழைக்க அதுவராது தாமதிக்கத் தனக்குச் சிவமூர்த்தி அருளிய செண்டை விட்டெறிய அவ்வடியால் நடு நடுங்கி முன்னின்று பொன்னறைகாட்டி வேண்டியகொண்டு செல்க என்றது. பாண்டியன் அவ்வகை செய்து தன்னாடு சேர்ந்து குடிகளுக்களித்து வறுமை நீக்கித் தன் குமரன் வீரபாண்டியனுக்கு அரசளித்துச் சிவாநந்தவாழ் வடைந்தனன். இவனுக்கு உச்ரபாண்டியன், ஆரஞ்சாத்துப் பாண்டியன் எனவும் பெயர். |
உக்ரபீடம் | சத்திபீடங்களிலொன்று. |
உக்ரர் | சூர்யாதிட்டான தேவர். இவரது சத்திபலப் பிரமதனி. |
உக்ராயுதன் | பூருவம்சத்தவன், கிருதி குமாரன், சந்தனு மரணமடைந்தபின் யோசனைகந்தியிடத்து மோகித்துப் பீஷ்மனால் கொல்லப்பட்டவன். இவன் குமரன் ஷேமியன். |
உக்ரேசன் | சண்முக சேநாவீரன். |
உசகச்சன் | வியாழன் சகோதரன். |
உசகத்தியர் | ஆங்கீரஸ ருஷிக்குச் சிரத்தையிட முதித்த குமார். |
உசங்கு | ஒரு ருஷி, இவரது ஆசிரமத்தில் ஆர்ஷ்டிஷேணர் தவஞ்செய்தனர். இவர் தம் புத்திரர்களை அழைத்துத் தம்மைச் சாஸ்திரசேத்துள்ள புரூதக தீர்த்ததிற் கொண்டுபோகக் கட்டளையிட அவர்களவ்வாறு செய்யப் போய்த் தீர்த்தஸ்நானஞ் செய்து உயிர் விட்டனர். இந்தத் தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாதலின் பலராமர் தீர்த்தயாத்திரையில் ஸ்மானம் செய்தனர். (பார~சல்ய.) இந்த இடத்தில் விஸ்வாமித்திரன் தவம் செய்து பிராமணத்வ மடைந்தான். இவனுக்கு ருசங்கு என்றும் ஒரு பெயர். |
உசத்தியன் | 1. ஒரு முனிவன், இவன் தன் குமரியரிருவருடன் மாகஸ்நானத்திற்குச் செல்லுகையில் காட்டானை துரத்தப் பெண்களிருவரும் கிணற்றில் வீழ்ந்திறந்தனர், இதனால் வருந்திய உசத்தியனுக்கு முன் மிருகசிங்க முனிவர் தோன்றி மிருத் தஞ்சய மந்திரத்தால் பெண்களை எழுப்பித் தந்தனர். (பதும புராணம்). 2. ஆங்கீகரசன் புத்திரன் உடன் பிறந் தார். சம்வர்த்தன் பிரகஸ்பதி, தேவி மமதை, புத்திரன் தீர்க்க தமனன். இவன் தேவியினிடத்தில் பிறந்தவன் பாத்து வாஜன். (பாரதம், விஷ்ணு புராணம்). 3. அகாமயமென்னும் வனத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரகஸ்பதியின் தமயன், தேவி மங்கலை. |
உசத்தியர் | இவர்க்குச் சந்திரன் தன் குமரியாகிய பத்தினாயை மணஞ்செய்வித்தான். இவளிடத்தில் வருணன் நெடுநாள் ஆசை வைத்திருந்ததால் அவளைத் தூக்கிச்சென்று தன் மாளிகையில் வைத்திருந்தனன், இதனை அறிந்த முனிவர் நாரதரிடம் மனைவியை யளிக்கக்கறி யேவினர். அவர் கூறியும் வருணன் கொடாததனால் இருடிகோபித்து எல்லா நீர்களையும் கடலையும் குடித்து விட்டனர். அதனால் பூமிதேவி நீங்கப் பூமி மருக்காந்தாரமாயிற்று. இதனால் துன்பமடைந்த வருணன் பத்ரையை ருஷியிடம் விட்டுப் பணிந்தான். ருஷியும் பழையபடி பூமியை நீருடன் நிறுத்தினர். (பார~அநு) |
உசநசு | தருமன் குமரன். இவன் நூறு அசுவமேதஞ் செய்தனன். இவன் குமரன் ருசகன் |
உசநன் | 1. வேதசிரசையின் குமரன். 2. வெள்ளிக்கு ஒரு பெயர். |
உசீகன் | கிருதியின் குமான். இவன் குமரன் சேதி. |
உசீநரன் | மகாமநுவின் மூத்த குமரன். சிபிக்குத் தந்தை. வகாமனசின் குமரன் என்பர். தீர்க்கதமரால் புத்திரப்பே நடைந்தவன். |
உசீரபீசம் | மருத்துமகாராஜன் யாகஞ் செய்த இடம். |
உசேநஸ் | வேதசிரன் குமரன். |
உச்சவசங்கேதர் | எழுகூட்டமாகிய அரசர். |
உச்சைசரவன் | சந்திர வம்சத்து அரசன். தாய் வாகினி. |
உச்சைச்சிரவம் | பாற்கடற் பிறந்த வெள்ளைக்குதிரை, இந்திரற்குரியது. இதைப் பலிச்சக்கரவர்த்தி கொண்டான் என்பர். |
உச்சையந்தம் | பிரபாச தீர்த்தத்திற்குச் சமீபத்திலுள்ள பர்வதம். (MOUNT GIMAR, CLOSE TO JUNAGAR IN KATHIWAR.) |
உஞ்சமான் | ஒரு மலை. |
உஞ்சல் | மரத்தால் வீச்சாகச் செய்யப்பட்டு விட்டத்திலுள்ள சங்கிலியில் தொங்குவது. |
உஞ்சானகம் | ஒரு தீர்த்தம். (A SADRED PLACE ON THE RIVER INDUS IMMEDIATELY WEST OF KASHMIR.) |
உஞ்சேனை | உச்சைனி நகரம். உஞ்சையெனவும் வழங்கும். இஃது அவந்தி நாட்டிலுள்ளது. பிரச்சோ தனனுடைய இராசதானி. மதில் முதலிய அரண்களாலும், சேனைகளாலும், பலவசைச் செல்வங்களாலும் சிற்ப அமைதிகளாலும், சிறப்புற்றது. குளிர்ச்சியும், பலவகை நுகர்ச்சியும், இதில் அதிகம் அகநகர், புறநகர்களின் டாகுபாடுகளினால் மிக்கது. யாதொரு குற்றமு மில்லாதது, சத்ருபயம் இதற்கில்லை. இதில் வாழ்வோர் பெரும்பாலும் முருகக் கடவுளை வழிபடுவாரென்று தெரிகிறது. இது பெருநகர் மாநகரெனவும் வழங்கப்படும். இதனயலில் மாகாள வனம் அல்லது காளவனமென்ற ஒரு தவவனமும், அதில் ஒரு காளிகோயில் முதலியனவும், ஒரு நதியும், அந்நதி பாயப்பெற்று ஒரு யோசனை அளவுள்ளதான ஒரு பொய்கையுமுண்டு. அந்நதியின் இருகரையிலும், அப்பொய்கைக் கரையிலும், இந்நகரத்தார் வருடத்திற்கு ஒருமுறை நீர்விழவு, அயரா நிற்பர், யாதொரு கவயும் தமக்கு இல் லாமையாலும், இன்பவகையையே பெறுதலாலும், இந்நகாமாந்தர் ”எமக்கு எந்தப் பிறப்பும் இந்தசரத்திலேயே எய்தவேண்டும், இந்நகரம் நீடூழி வாழ்க என்று மகிழ்ந்து கூறுவர். உதயணன் வஞ்சனையாற் பிடிக்கப்பட்டுச் சிறையிலிருந்தது முதல் வாசவதத்தையை அவன் பிடிமேலேற்றிச் சென்றது இறுதியாகவுள்ள கதைப்பகுதி இந்நகரில் நிகழ்ந்தது. இந்நகரம் அவந்தி யென்றுங் கூறப்படும், இது முத்திநகரங்கள் ஏழனுள் ஒன்று. பழைய நூல்களாலும், சில சாசனங்களாலும் இதிற் சைனமுனிவர் பலரிருந்ததாகத் தெரிகிறது. வடநூல்கள் பலவற்றிலும், சிலப்பதிகாரம், யசோதா காவிய முதலிய தமிழ் நூல்களிலும், மிகப் பாராட்டப்பட்டுள்ளது. உச்சைனி மகாகாள மென்னும் ஒரு சிவஷேத்திரம் இதில் உண்டு. (பெருங்கதை) |
உஞ்சை | உச்சினிபுரம். அவந்தி நாட்டு இராஜதானி, உஞ்சேனைகாண்க. |
உடனிகழ்ச்சியணி | அஃதாவது கற்றோரை மகிழ்விக்கு முடனிகழ்தலைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் சகோத்திய லங்கார மென்பர். தண்டியாசிரியர் புணர்நிலை மென்பர். |
உடன் போக்கடையீடு | இது நம்மனையில் வரைந்துகொள்ளாது தன்னூரில் வரைந்தானென்று தலைவி சுற்றத்தார் வெறுப்படைதலால் தலைவியை உடன்கொண்டு போம்போது தலைவி சுற்றத்தாரிடை ஈடுபட்டு மீண்டு தலைவி வருதல், இது, போக்கறிவுறுத்தல், வரவறிவுறுத்தல், நீக்கமிரக்கம், மீட்சியென நால்வகையினையும், நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவுணர்த்தி விடுத்தல், தலைமகள் தன் செல் வின்னாட் குணர்த்தி விடுத்தல், நற்றாய்க் கந்தணர் மொழிதல், தலைவற் குணர்த்தல், தலைமகளைத் தலைமகன் விடுத்தல், தமருடன் செல்பவள் அவன் புறநோக்கிக் கவன்றரற்றல் எனும் விரியினையு முடைத்து. (அகம்). |
உடன்போக்கு | இது, தலைமகன் தன்னூர்க்குத் தலைவியை உடன்கொண்டு போதல். அது, போக்கு, கற்பொடு புணர்ந்த கௌவை, மீட்சி, என மூன்றுவகை. அவற்றுள் போக்கு, போக்கறிவுறுத்தல், போக்குடன் படாமை, போக்குடம்படுத்தல், போக்குடம்படுதல், போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல் என எட்டுவகை. இது, பாங்கி தலைவற்கு உடன் போக்குணர்த்தல், தலைவன் உடன்போக்கு மறுத்தல், பாங்கி தலைவனை உடன்படுத்தல், தலைவன் போக்குடன்படுதல், பாங்கி தலைவிக்கு உடன்போக் குணர்த்தல், தலைவி நாணழி விரங்கல், கற்பின் மேம்பாடு பாக்கி கழறல், தலைவி ஒருப்பட்டொழுகல், பாங்கி சுரத்தியல் புரைத்துழி தலைமகள் சொல்லல், பாங்கி கையடை கொடுத்தல், பாங்கி வைகிருள் விடுத்தல், தலைமகளைத் தலை மகன் சரத்துய்த்தல், தலைமகன் தலைமகளசைவறிந்திருத்தல், உவந்தலர் சூட்டியுண் மகிழ்ந்துரைத்தல், கண்டோரயிர்த்தல், கண்டோர் காதலின் விலக்கல், கண்டோர் தன் பதி அணிமைசாற்றல், தலைவன் தன் பதியடைந்தமை தலைவிக் குணர்த்தல் என்பனவாம். (அகப்) |
உடலற்ற நாள் | நக்ஷத்திரம் காண்க. |
உடலவர்த்தனை | (9), மெய்சாய்த்தல் (1), இடைநெரித்தல் (2), சுழித்தல் (3), அணைத்தல் (4), தூக்குதல் (5), அசைதல் (6), பற்றல் (7), விரித்தல் (8), குவித்தல் (9) முதலிய. |
உடலுதயராசி | மீனம். |
உடுண்டி விநாயகர் | வக்ரதுண்டரைக் காண்க. |
உடுண்டுபன் | ஒரு பாம்பு, சர்ப்பங்களைக் கொல்லும் விரதமேற்ற குருவைக் கண்டு நான் பூர்வத்தில் ஒரு வேதியன், எனக்கு மேககன் என்று ஒரு நண்பன் இருந்தான். அவன் மகாவிரத ஒழுக்கம் உள்ளவன். நான் அவனிடத்தில் அவன் அஞ்சத்தக்க சில விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு வரும் நாட்களில் ஒருநாள் ஒரு பொய்ப் பாம்பைச் செய்து அவன் அக்நிஹோத் திரஞ் செய்யுங் கிருகத்தில் இருக்கும் போது அவன் அருகிற்போட்டு இதோ பாம்பு பாம்பு என்று அலறினேன். அது கண்டு அவன் அறிவுதப்பி நடுங்கிப் பின் பொய்ப் பாம்பென்று கண்டு தெளிந்து என்னைப் பயப்படச்செய்த நீ மெய்ப் பாம்பு ஆகுக எனச் சாபம் அளித்தனன். நான் சிநேகமுறையாக அவனை விமோசனங் கேட்கக் குருவால் நீங்கும் என்றனன். ஆதலால் உன்னைக் காண எனக்குச் சாபம் நீங்கியது. நீ இனிச் சர்பங்களைக் கொல்லற்க எனக் கூறிச் சென்றவன். |
உடுப்பின்வகை | இவை, உலகத்தவர் உடுக்கும் உடைகள். அங்கவஸ்திரம், தோவத்தி, முழுஅங்கி, அரைஅங்கி, உள்ளங்கி, துண்டம், குட்டை, தலைப்பாகை, குல்வாய், தொப்பி, பனியன், ஷர்ட், கோட், ஜங்கோட்டா, நிஜாரு, கச்சு, டை, காலர், சால்வை, துப்பட்டி, புடவை, ரவிக்கை, ஜாகெட், பாடி, துகில், மயிர்ப்படாம், சித் திரப் படாம், கம்பளிப்படாம், சட்டை, பாவாடை, மாராப்பு, தாவணி, விடுந்தலைப்புலுங்கி ஜிப்பா முதலியன. |
உடும்பு | இது மலையோணான், இது ஒணானைப்போல் உருவமுடையது. இது இரண்டடி நீளமுடையது, மலைகளினிடுக்குகளிலும், காடுகளிலும் வளை தோண்டிக் கொண்டு வாழ்வது. இதன் நாக்குச் சற்று நீண்டது நகங்கள் கூர்மையுடன் உறுதி பெற்றவை, கால்கள் குறுகியும் உடல் மீண்டும் இருக்கும். இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது, செல்லு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். இதன் நகங்களும் கால்களும் உறுதியுள்ளவையா தலால் அரசர்கள் பகைவாது கோட்டை மேற்செல்லக் கூடாத இடங்களில் இதனை ஏறவிட்டு அதனைக் கட்டிய கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலேறுவர் என்பர். |
உடைய நங்கை | நம்மாழ்வாருக்குத் தாய். காரி முதலியாருக்குத் தேவியார். |
உடையார் | இவர்கள் கொங்குநாட்டு வேடர் சாதியின் வகுப்பு. இவர்களில் மூன்று பிரிவுண்டு. நட்டமான், மலையமான், சுதர்மான், நட்டமான் காட்டுக் குரியவன், மலையமான் மலைக்குரியவன், சுதர்மான் வீரன். இவர்கள் சேரராஜ குமார்கள் என்பர். இப்பட்டம் குசவர்க்கும் உண்டு. |
உட்கலம் | கலிங்கதேசத்துக்கு வடக்கிலுள்ள தேசம். (ORISSA). |
உட்ணசிகை | ஆதித்யன், செவ்வாய், சநி, இவர்கட் கடைத்த இராசிகளில் கிடந்த நாட்கள், இவர்கள் காலாகிய அம்சங்கள் உட்ணசிகை என்பர் ஓரம்சம் (15) நாழிகை இதில் ஆதித்யனம்சத்தில் முதலைந்தும், செவ்வாயம்சத்தில் நடுவில் ஐந்தும், சநியம்சத்தில் கடையில் ஐந்து நாழிகையும் கழித்துக் கொள்வது. இதில் சுப கன்மங் கள் நீக்கவேண்டும். (விதானமாலை). |
உட்ணீசர் | ஒருவகை அரக்கர். |
உட்பகை | 6. காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம். |
உணர்ந்ததை உணர்தல் | முன்பு குளிர்வந்துற்ற காலத்து நெருப்பு மருந்தென்றுணர்ந்தவன் பின்பு அது வந்தகாலத்து அதற்கு அது மருந்தென உணர்தல். |
உணவாதி வகைகள் | பாகசாலை முதலியவற்றில் சமைக்கும் உணவு, உயிர்களின் பசி முதலிய பிணிகளை நீக்கித் தேகத்தை ஆரோக்கியமாகச் செய்வதாம். இது கிரியா பேதங்களால் பலவகைப்படும். இது நாவிற்கு இனிமை தந்து மனதைச் சுகப்படுத்தும். இதனைச் சித்தஞ் செய்வதற்கு ஏற்ற கருவிகளின் வகையும் இதனைச் சித்தஞ் செய்வதற்குப் பாகசாலையின் முறையுமாவன. (32) அடி நீளமும், (8) அடி அலமும் உள்ள தாய் மேவில் புகை முதலிய செல்வதற்கும், அக்நிக்கு உதவியாகிய காற்று இயங்குவதற்கும், புகைக்கூண்டு, பலகணிகள், நீர்த் தாரைகளைப் பெற்றதாய்ச் சுத்தமுள்ள தாய் ஒரு பெரிய அறை இருக்கவேண்டும். இவ்வறைக்கு அக்கிரி திசையிலாவது இந் திரதிசையிலாவது பரணி, கிருத்திகை முதலிய நக்ஷத்திரங்களில் பசுவின் வால் போல் செங்கல்லினாலாவது, களிமண்ணிலாவது அடுப்பு நிருமித்தல் வேண்டும். அவ்வடுப்பின் இருபுறத்திலேனும் ஒரு புறத்திலேனும் மீயடுப்பு, கிளையடுப்பு, புடையடுப்பு இருத்தல் வேண்டும். அடுப்பின் அடிப்புறத்தில் சாதம் வடிப்பதற்குக் கஞ்சிநீர்க்குழியும், எனைப் பதார்த்த பாண்டங்களை அமைத்தற்குச் சிறு குழிகளையும் வைக்கவேண்டியது. இவ்வகைச் செப்பஞ் செய்த அடுக்களையை நாடோறும் மெழுகிட்டுக் கோலமிட்டு மலரிட்டு இஷ்ட தேவதைகளையும், நவக்கிரகங்களையும், கிரக தேவதைகளையும், பூசித்து அடுப்பில் அக்கிநியைப் பதித்தல் வேண்டும். இவ்வடுக்களைக்கு வேண்டிய உபகரணங்களில் அக்கிரியை அல்லது தீபத்தை அக்கிநிதிசையிலும், யமன் திசையில் விறகையும், வருண திசையில் நீர்க்குடத்தையும், வாயுதிசையில் விசிறி முதலியவற்றையும், நிருதி திசையில் முறம், துடைப்பம் முதலியவற்றையும், குபேரதிசையில் தானியம், காய்கறி முதலிய பொருள்களையும், ஈசானிய திசையில் உரல், அம்மி, உலக்கை முதலியவற்றையும், அமைத்தல் வேண்டும், வலது பக்கத்தில் பாகபாத்திரங்கள் அமைத்திருக்க வேண்டும். இவ்வகை அமைந்த பாகசாலையில் சமைப்போன் அரோகியாய்த் தேகபுஷ்டியுள்ளானாய், பதார்த்த இலக்ஷணம் அறிந்தவனாய், நற்குலத் துதித்தவனாய் உள்ளவன், தான் ஸ்நானஞ்செய்து அரையில் சிறு துண்டும் மேலில் சிறு துண்டும் உடையவனாய்ச் சிகையை நன்றாய்த்தட்டி உதறி அவிழா முடியிட்டு நகங்களை நன்றாகச் சுத்திசெய்து கைகால் அலம்பி அடுக்களையில் பிரவேசித்துச் சுத்தபாத்திரங்களாகிய பாகபாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும். பாக பாத்திரங்களுக்கு உரிய கருவிகளாவன. அகப்பை, கரண்டி, உரல், முறம், சல்லடை, அம்மி, குழவி, மாக்குழவி, இருப்புவாணா, சில்லிக்காண்டி, அரிவாள் மணை முதலிய. பித்தளைப் பாத்திரங்கள் இருக்கின் ஈயம் பூசப்பட்டனவாக இருத்தல் வேண்டும். சாதம் சமைக்கும் லக்ஷண மாவது, செம்மையாகக் குத்தித் தவிடு போக்கிய அரிசியை உமி, கல் முதலிய இல்லாமல் பலமுறை அலம்பி, அதன் குற்றங்கள் நீங்கும் அளவும் அரித்துப் பின் தூய்மையை உடையதென அறிந்து அரிசியிலும் மூன்று பாகங் கொள்ளத்தக்க அளவுள்ள பாத்திரத்தில் வைத்த உலையில் அரிசியை ஒருமிக்கப் பெய்து அடிக்கடி துழாவிப் பதத்தில் பாலாவது நெய்யாவது சிறிதுவிட்டுத் துழாவி வடிபதத்தில் வடி தட்டால் வடிகுழிக்கு மேலிட்டு வடித்து விடல் வேண்டும். வடித்த சாதத்தில் கஞ்சியிருக்குமேல் சோகத்தை விளைக்கு மாதலின் அக்கஞ்சி சுவறச் சிறிது நெருப்பை வெளியிற்றள்ளி அதன்மீது சாத பாத்திரத்தை வடியுமட்டும் வைத்தல் தகுதியாம். இவ்வகை சமைக்காத அன்னம், எண்வகைக் குற்றங்களுக்குள்ளாகி உண்பவனை ரோகியாக்கும். அதற்கு எண் வகைத் தோஷங்களாவன, அஸ்திரீதம், பிச்சளம், அசுசி, குவதிதம், சுஷுமிதம், தக்தம், வீரூபம், அநர்த்துஜம் என்பனவாம். இவற்றுள் அஸ்திரீ தம், கஞ்சி சுற்றிக்கொண்ட அன்னம். இதைப் புசிப்போர்க்கு ஆமயம் முதலிய ரோகங்களுண்டாம். பிச்சளம், அளிந்த அன்னம், இதைப் புசிப்போர்க்குக் குன்மாதி ரோகங்களுண்டாம். அசுசி, புழு, மயிர், சேர்ந்த அன்னம், இதைப் புசிப்போர்க்கு வாய்நீர் ஒழுகல் உண்டாம். குவதிகம், நருக்கரிசி பட்ட அன்னம் இதைப் புசிப்போர்க்கு அஜீரண ரோகமுண்டாம். சுஷுமிதம், சிறிது வெந்தும் வேகாத அன்னம், இதைப் புசிப்போர்க்கு இரத்தபீடனம் உண்டாகும். தக்தமாவது காந்தின அன்னம், இதைப் புசிப்போர்க்கு இந்திரிய நாசமுண்டாம். விரூபம் விறைத்த அன்னம், இதைப் புசிப்போர்க்கு ஆயுள்க்ஷணம் உண் டாகும். அனர்த்துஜம் பழஞ்சாதம், இதை உண்போர்க்கு அதி நித்திரை சீதாதிசோ கங்கள் உண்டாம். இவ்வகை அன்னமும், பலகாரங்களும் சமைக்கும் அரிசியாவன. ஈர்க்குச் சம்பா, புழுகு சம்பா, கைவரைச் சம்பா, செஞ்சம்பா, மல்லிகைச்சம்பா, குண்டுசம்பா, இலுப்பைப்பூச்சம்பா, மணிச் சம்பா, வளை தடிச் சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுசம்பா, சீரகச்சம்பா, காளான் சம்பா, மைச்சம்பா, கோடைச் சம்பா, காடைச் சம்பா, குன்று மணிச் சம்பா, அன்னமழகி அரிசி, கார் அரிசி, மணக்கத்தை அரிசி வாலான், கருங்குருவை, சவ்வரிசி, மூங்கிலரிசி, கோதுமை யரிசி, கம்பரிசி, சாமையரிசி, தினையரிசி, சோள அரிசி, வரகரிசி, கேழ்வரகரிசி, இவையன்றிக் கேடி லிச்சம்பா, கவிங்கஞ் சம்பா, கனகம்சம்பா, கலப்புச்சம்பா, கம் பஞ்சம்பா, காடைக்கழுத்தன் சம்பா, கோடன் சம்பா, பாசடைச்சம்பா, சன்னசம்பா, சின்னசம்பா, சிறுமணிச் சம்பா, சுரைக் காய்ச்சம்பா, சுகுதாச்சம்பா, செம்பாளைச் சம்பா, சொரியஞ்சம்பா, திருவாங்கச்சம் பா, துய்யமல்லிகைச்சம்பா, பாலாஞ்சம்பா, பெருஞ்சம்பா, பேய்வள்ளைச்சம்பா, பை கோச்சம்பா, மங்கஞ்சம்பா, மணல்வாரிச் சம்பா, மலைகுலிக்கிச்சம்பா, மாவாம்பைச் சம்பா, முனைவெள்ளைச்சம்பா, கார்த்தி கைக்கார், முட்டைக்கார், சித்திரைக்கார், கருமோசனம், வெள்ளை மோசனம், வால்மோசனம், பொச்சாரி, அருஞ்சோதி, இரங்கமாட்டான், ஈசுரக்கோவை, பிச்சவாரி, செம்பாளை, கல்லுண்டையரிசி, புட்டரிசி, குளிப்பியரிசி, குச்சலாடியரிசி, கௌரிகுங்கவரிசி முதலிய பலவாம். இவற்றால் பலவிதமாகிய சுத்தான்னங்கள், சித்ரான்னங்கள், பலகாரங்கள் செய்து இலைக்கறிகள், காய்கள், பிஞ்சுகள், கனிகள், பயறுகள் முதலியவற்றை ஐங்காய மிட்டுச் சமைத்த துணையுடன் அருந்துக. அவ்வாறு அருந்தின உடற்கு நோய்கள் வரா. |
உண்கலவகைகள் | பொன், வெள்ளி, வெண்கலம், இவற்றால் செய்வித்த கலங்கள், வாழையிலை, பலா, முந்திரி, தாமரை, மந் தாரை, காட்டு முருக்கு மற்ற இலைகளால் தைத்த கல்லைகள். |
உண்டாட்டு | கட்டி ஆர்க்கும் வீரக்கழலினையுடைய தறுகண்ணர் மதுவை உண்டு மனங்தளித்து ஆடியது (பு. வெ). |
உண்டி | இது, வாய்குவிந்து காசிடமாத்திரம் துவாரமுள்ள பேழை. இந்த வகையில் மேல்நாட்டார் பலவகையாகக் கண்டு பிடித்திருக்கின்றனர். தற்காலம் இருப்புப் பாதையில் பிளாட்பாரம் டிகட் வாங்குவதற்கு ஒரு அணா துண்டை உண்டியிலிட்டால் ஒரு டிகட்டு வருகிறது. இது ஒரு வகை. |
உண்ணுமுலை எல்லப்பநயினார் | இவர் ஒரு புலவர். திருவண்ணாமலையிலி ருந்தவர். சேறைக் கவிராஜ பண்டிதர் காலத்தவர். இவரைப் பற்றி வேறொன்றுந் தெரியவில்லை. “பாழ்ப்பாய் மடத்துப் பரமாவுன் பாண்கவிதை கேட்பாரெல்லாம் புத்தி கேட்டபேர் தோட்பாவும், ஒணான் விழுந்தாலு முண்டு பரிகாரமிது வாணால்ளனவே வரும். இவர் கவிராசரைப் பாடியது. |
உண்மை | (சம்பவம்) ஒரு கல் இரும்பை ஈர்த்ததெனில் அது காந்தமென அறிதல். |
உண்மையாநந்தர் | அரிசிற் கரைப்புத் தூரிற் சிவபூசை செய்து பேறடைந்தவர். |
உதக்சேநன் | விஷ்வக்சேநனுக்குக் குமரன் விசவ்சேநன் குமான் என்றுங் கூறுவர். இவன் குமான் பல்லாதன். |
உதங்கன் | உத்துங்க முனிவன் குமரன். திருதமன் குமரியாகிய பிரபையை மணந்து கங்கா யாத்திரை செய்து, கங்கையில் ஸ்நானம் செய்கையில் இவன் தேவியை முதலை பிடித்துச் செல்ல விசனம் அடைந்து மீண்டவன். |
உதங்கமேகம் | உதங்கர் நீர் வேண்டிக் கண்ணனை வேண்ட அவ்வகையே கண்ணன் அமுதங்கொடுக்க இந்திரனுக்குக் கட்டளையிட அவன் நீசவுருக்கொண்டு தோற்பையில் அமுதங்கொண்டுவர உதங்கர் கோபித்து இது கண்ணன் வஞ்சனை யென்று எண்ணுகையில் கண்ணன் எதிர் நின்று உதங்கருக்குண்மை கூறி நீ எக்காலத்து ஜலத்தை விரும்புகின்றனையோ அப்போது மேகங்கள் உனக்குச் சலத்தை வருஷிக்கும் அந்த மேகங்கள் உன்பெயர் கொள்க என்றனர். (பாரதம்~அச்வ). |
உதங்கர் | 1. பிருகு வம்சத்தவர். பயிலவ முனிவர்க்குச் சீடர். இவர் ஒருமுறை ஆசாரியர் பொருட்டுக் காட்டிற்சென்று விறகுசுமை தூக்கிக்கொண்டுவந்து கீழிறக்கினபோது விறகில் சடையொன்று சிக்கிக் கொண்டு அறுந்தது. அறுந்த அந்தச் சடைவழியாய் உதிரம் ஒழுகி அக்நியாய் உபத்திரவப்படுத்தப் பயிலவர், தமது குமரியையேவி அவரைத் தூக்கித் தேறுதலை செய்வித்துத் தமது குமரியை மணம் புணர்ப்பித்தனர். பாரதயுத்த முடித்துத் துவாரரைக்குச் செல்லுங் கண்ணனை வழியில் சந்தித்து நீ பதினெட்டு அக்குரோணிப் படைகளின் உயிர்களைக் கொலைசெய்வித்தமையால் உன்னைச் சபிக்கிறேன் என்னக் கண்ணன் இவரைச் சமாதானப்படுத்தி அவர்க்கு விச்வரூப தர்சனங் காட்டி உண்மை தெரிவிக்கத் துதித்தவர். இந்த உதங்கர் குருனீணையின் பொருட்டுக் குருவின் பத்தினி விருப்பின்படி பெளடிக மகாராஜன் பாரிக்கு ஒரு முனிவர் கொடுத்த நாசாத்தின காதணியை வாங்கிக்கொண்டு வந்த சமயத்தில் அது வழியில் தக்ஷகனால் கவரப்பட்டது. அதனைப் பூமிதேவியின் சகாயத்தால் நாகலோகஞ் சென்று குதிரையாக வந்து தவிய அச்நிதேவன் காதிலூதி நாகரைத் துன்பப்படுத்திக் குண்டலத்தை மீண்டும் பெற்றுக் குருபத்தினிக்குத் தந்து குரு விசுவாசம் பெற்றவர். சனமேசயனைச் சர்ப்பயாகஞ் செய்யத் தூண்டியவர். குவலயாசுவனால் துந்துவைக் கொலை செய்வித்தவர் இவர் அமுதம் பெறும்படி தவஞ்செய்ய அத்தவாக்கி தேவரை வருத்தியதால் இந்திரன் சிவ மூர்த்தியிடம் முறையிடச் சிவமூர்த்தி அவனுக்கு வேண்டியது அமிர்தம் அதை அவனுக்குக் கொடுக்க என இந்திரன் கோபத்தால் நீசவுருக்கொண்டு அமிர்தங் கொள்க என முனிவர் நீசனுக்கு அமிர்தம் எது என்றெண்ணித் தூர அகல்க என இந்திரன அகல, முனிவர் இந்திரன் வஞ்சனை அறிந்து இந்திரன், அமுதத்தை இழக்கச் சாபமிட்டனர். 2. சூதர் சீடரில் ஒருவன் இவன் க்ஷய ரோகத்தால் வருந்தி ஆசாரியரை வேண்ட அவர் விபூதிகுண்ட ஸ்நானஞ் செய்கவென அங்கனம் ஸ்நானஞ் செய்து நீங்காமை கண்டு ஆசாரியரை இகழ ஆசாரியரால் காகவுருப் பெற்று விபூதிப் பையினைத் தின்னுமுணவெனக் கிரகித்து அவ் விபூதி பரிசத்தால் சாபம் நீங்கியவன். 3. சங்கராசாரியரை வழிபட்ட ஆசிரியர். |
உதச்சியர் | ஆவந்தியர் மாணாக்கர். |
உதட்டில் உண்டாகும் (11) ரோகங்கள் | 1. கண்டோஷ்ட ரோகம் 2. வாதோஷ்ட ரோகம் 3. பித்தோஷ்டரோகம் 4. சிலேஷ்மோஷ்டரோகம் 5. சந்நிபாதோஷ்ட ரோகம் 6. ரத்தோஷ்டரோகம் 7. அற்பு தோஷ்டரோகம் 8. மாமிசோஷ்டரோகம் 9. மேதோஷ்டரோகம் 10. க்ஷதோஷ்ட ரோகம் 11, சலாற்பு தோஷ்டரோகம். (ஜீவ ரக்ஷாமிர்தம்.). |
உதத்தன் | ஓர் அசுரன். நராந்தகன் ஏவலால் இவனும் துந்துபியுங் கூடிக் கிளியுருக் கொண்டு, மகோற்கடரைக் கொல்ல வந்து பருந்துருக்கொண்ட விநாயகமூர்த்தியாற் கொல்லப்பட்டவன். |
உதத்தியன் | சத்தியவிரதனைக் காண்க. |
உதத்யன் | உசத்தியன் காண்க. |
உதயகிரி | இருக்ஷபர்வதம். |
உதயகுமரன் | காவிரிப்பூம் பட்டினத்தரசனாகிய நெடுமுடிக்கிள்ளியின் புதல்வன். இவன் இதற்கு முன் பிறப்பில் இராகுலன். இவன் அப்பிறப்பில் மணிமேகலைக்கு நாயகன். இப்பிறப்பிலும் அவளிடத்து ஆசைகொண்டு பலமுறை அவளிடஞ்சென்று தன்னை மணக்க விரும்பினவன். மணிமேகலை இவன், விருப்பத்தை மாற்ற காய சண்டிகையின் உருக்கொள்ள இவன் தனித்து மணிமேகலை இருந்த இடஞ்செல்லக் காயசண்டிகை என்னும் வித்தியாதர மங்கையின் கணவனாகிய காஞ்சனன் மணிமேகலையைத் தன் தேவியென் று எண்ணித் தன் தேவியிடம் இவன் களவுப்புணர்ச்சி வேட்டுவந்தான் என்று கொலைபுரிய அவனாற் கொலையுண்டவன். (மணிமேகலை). |
உதயசிங் | இவன் இராஜபுத்ர அரசன்ரானா சங்கன் குமரன். மொகல் அரசனாகிய அக்பரை எதிர்க்காமல் ஹராவலி பள்ளத்தாக்கில் ஒளிந்தவன். இந்த யுத்தத்தில் அரசனில்லாமலே ரசபுத்ர வீரர் மனைவியர் சகிதராகச் சென்றனர். சிலராஜ புத்திரிகள் வாளெடுத்து யுத்தஞ்செய்து மாண்டனர். இதில் சித்தூர்கோட்டைத் தரையாக்கப்பட்டது. பல ராஜபுத்திரிகள் தீப்புகுந்தனர். |
உதயணகுமாரகாவியம் | இது ஒரு தமிழ் நூல். இது வத்சதேசத் தரசனாகிய உதயண குமாரனுடைய சரித்திரத்தைக் கூறுவது. உதயணன் கதை இது. பெரும்கதை யென்றும் வழங்கப்படுந் தமிழ் நூல். |
உதயணன் | குரு குலத்திற் பிறந்தவன். சதானிகனுக்கு மிருகாவதிபாற் றோன்றியவன், இவன் நாடு வத்தவநாடு. இராசதானி கோசம்பிநகர், சூரியோதய காலத்திற் பிறந்தது பற்றி இவனுக்கு இப்பெயர் அமைந்தது. தேவியார் வாசவதத்தை முதலிய நால்வர். தன்னிகரில்லாதவனே தொடர் நிலைச்செய்யுட்குத் தலைவனாக இருத்தல் வேண்டுமென்று ஆன்றோர் கூறியதற்கேற்பக் கல்வி முதலிய சிறப்பியல்புகள் பலவற்றாலும் ஒப்பற்று விளங்கியவன் இவன். அரசர்க்கரசனென்றும், ஏகச் செங்கோலினனென்றும் வழங்கப்படுவான். இவனுடைய தாய்மரபு, தந்தைமாபு இரண்டும் மிகப் புகழ்பெற்றவை. தந்தையின் குலம் குருகுலம். தாயின் குலம் ஏயர் குலம். இவன் இந்த இரண்டு குலத்திற்கும் உரிமைபூண்டு விளங்கினான். ஏயர் குடிக்கும், சேதி நாட்டிற்கும், உரியவர் இவன் தாய் மரபினர். வத்தவநாட்டிற்கும், குரு குலத்திற்கும் உரியவர் இவன் தந்தை மரபினர். இயற்கையழகிலும், செயற்கையழகிலும் சிறந்தவன். மிக்க இளமைப் பருவத்திலேயே பலவகைக் கலைகளையும், பழம் பிறப்பிற் செய்த தவத்தால் முற்றக்கற்றுத் தேர்ந்தோன். விற்படை முதலியவற்றிலும், யானை ஏற்றம் முதலியவற்றிலும், யாழ் விச்சையிலும் வல்லுநன். விற்படை முதலியவைகளைக் கற்பித்தலிலும் சிறந்தவன். இது பற்றியே ஆசான், தேசிகனென்றும் சிறப்புப் பெயர்களுக்கு உரியனாக இவன் விளங்கினானென்றும் விச்சை வீரனென்று சிறப்பித்துப் பாராட்டுதற்கு உரியனாக இருந்தானென்றும் தெரிகின்றன செல்வத்துட் செல்வமாகிய கேள்விச் செல்வமும் இவன் பால் அமைந்திருந்தமை புலனாகின்றது. இன்னும், இவன் யானையை அடக்கும் ஆற்றலுடையானென்றும், யானையிலக்கணத்தை நன்கறிந்தவன் என் றும், யானைப் பேச்சில் வல்லவனென்றும், கருதப்படுகிறான். பிரச்சோதனுடைய பட்டத்து யானையாகிய நளகிரியென்பது மதவெறிகொண்டு திரிந்து ஒருவருக்கும், அடங்காமல் உஞ்சேனை நகரத்தைப் பாழ்படுத்திய பொழுது அவன் வேண்டுகோட்கிரங்கிச் சிறையினின்றும் சென்று அதனை மிக எளிதில் அடக்கியது பற்றியே அவனாலும், மற்றையோராலும் மிக மதிக்கப் பட்டு விளங்கினான். இதனாலே தான் பிரச்சோதனன், உஞ்சேனை நகரியின் குஞ்சரச்சேரியிலுள்ள மாளிகையை இவனுக்கு இருப்பிடமாக அமைத்தனன் போலும். இவனுடைய யாழின் பெயர் கோடபதி என்பது. அஃது எக்காலத்தும் தன் தன்மை திரியாதது. அஃது இந்திரனாற் பிரமசுந்தர முனிவருக்கும் அவரால் இவனுக்கும் கொடுக்கப்பட்டது. அதன் பால் இவனுக்கு மிக அன்பு உண்டு. யாழிற்குரிய மரங்களினியல்பையும், நரம்புகளின் இலக்கணங்களையும் இவன் நன்கு அறிந்தவன், அதிவிசித்திரகரமான கண்ணி கட்டுதலிலும், வாழைக் குருத்தில் நகத்தினாற் பொய்கை முதலிய பலவகையான சித்திரங்கள் பொதித்தல் முதலியவற்றிலும், வல்லவனாக இருந்தான். தன்னைச் சுமந்து வந்தபிடி இறக்கும் தருணத்தில் நற்கதியடையுமாறு பஞ்ச மந்திரத்தை அதன் காதில் ஓதினனென்றும் தெரிதலாலும், பிறவற்றாலும் இவன் மந்திர வித்தையில் வல்லவனென்று தெரிகிறது. ஒவ்வொன்றையும், ஆராய்ந்தே தெளிபவன். இவனுக்கு இடவகன், உருமண்ணுவா, யூகி, வயந்தகனென்னும் நான்கு முக்கிய மந்திரிகளும், வேறு பல மந்திரிகளும் இருந்தனர். அவர்கள் இவனுக்காகச் செய்த உதவிகள் மிகப் பல. இந் நால்வரும், இவனுடைய தோழர்களாகவும் விளங்கினார்கள். அவர்களிடத்து இவனுக்கு விசேஷ அன்பு உண்டு. மேற்கூறிய மந்திரிகளாகிய தோழர்களை யன்றி இசைச்சன் முதலிய அன்புடைத் தோழர்கள் பலர் இவனுக்கு இருந்தார்கள். அறப்போரிலும், மறப் போரிலும் பேராற்றலுடையவர். குறித்த இலக்கை ஊடுருவிக்கொண்டு அப்பாலுள்ளவற்றையும் துளைத் துருவும்படி எய்ய வல்ல இராமன் ஓரி என்பவர்களைப்போல் அம்புகளை எய்யும் வீரருள் வீரனாக இவன் விளங்கியது பற்றி வில்வல்லியென்றும் பாராட்டப்படுவான். நன்றி யறிவிற் சிறந்தவன். (பெருங்கதை). |
உதயன் | 1. சதா நீகன் குமரன். இவன் அகீநரன். 2. சகத்திராநீகன் குமரன். |
உதயபலம் | புதன் உதயத்து நிற்கின் (500) குற்றத்தைப் போக்குவன். சுக்கிரனும் உதயத்த நிற்கின் (500) குற்றத்தைப் போக்குவன் வியாழன் உதயத்து நிற்கில் (10) லக்ஷம் குற்றம் நீக்குவன். இவர்கள் கேந்திரங்களில் நின்றாலும் தோஷங்களைப் போக்குவர். இவை நட்பாட்சி உச்சமாகில் நலம் என்ப. பகை நீசமாகிலாகாது. |
உதயார்வன் | அசாதசத்ருவின் பேரன், பாடலி புத்ரநகரம் நிருமித்தவன். |
உதயையோடை | இவள் பதுமாபதியின் நற்றாய். சிவமதியின் சகோதரி. காசியரசன் மனைவி. (பெருங்கதை). |
உதரரோகம் | வாயினடியும், உதடும் சுருங்கல், கைகால் வீங்கல், பலம், நடை அசனம் குறைதல், தேகம் உலரல், வயிறு வீங்கல் இவைகளைப் பூர்வரூபமாகப் பெற்றிருக்கும். இது வாத உதரரோகம், பித்த உதரரோகம், சிலேஷ்ம உதரரோகம், திரிதோஷ உதரரோகம், பீலிகோதர ரோகம், பந்தோதர ரோகம், க்ஷதோதா ரோகம், சலோதாரோகம், யகுர்தோதாரோகம், ஜலஸ்தம்போதர ரோகம் எனப் பலவகை. இதனை மகோதரம், பெருவயிறு, துந்திரோகம் என்பர். இதனைப் பில்வாதிலேக்யம், அயச்செந்தூரம் முதலியவற்றால் வசமாக்கலாம். (ஜீவரக்ஷாமிர்தம்). |
உதவகன் | சண்முக சேநாவீரன். |
உதவாசு | 1 (சூ.) சநகன் குமரன். 2. பிரசை குமரன். |
உதாசநன் | அக்நீ. |
உதாசித் | கேகய நாட்டரசன் தூதன். பரதனைக் கேகயத்திற்கு அழைத்துச் சென்றவன். |
உதாசீநமதம் | இம்மதம், நாநக் என்பவனால் தாபிக்கப்பட்டது. இதற்குச் சீக்மதம் எனவும் பெயர். இந்த நாநக் என்பவன் பஞ்சாபில் பீயாஸ் நதி தீரத்திலிருக்கும் ராமபுரத்தில் இக்ஷவாகு வம்சத்தவனான கல்யாணசந்த் என்பவனுக்கு (1319) இல் பிறந்தவன். இவன் முதலில் தன் மதத்தைவிட்டுப் பிறகு மகம்மதிய மதத்தைப் பின்பற்றினான் எனினும் மகம்மதியர்க்குரிய சுந்தத்தென்னும் சடங்கைச் செய்து கொள்ளவில்லை. இவன் இந்து மதத்தில் சிலவற்றைக் கைக்கொண்டு வேறொரு புதிய மதத்தை ஸ்தாபித்தான். இவன் தன் சீடரை மிக்க சாந்தராகச் செய்வித்தான். இவனுக்குப் பின் வந்த குரு கோவிந்தென்னும் சீடன், சீக்கியரைச் சூரர் ஆக்குவித்தான். அது முதல் இச்சாதியார் ஆயுதபாணிகளாயிருக்கின்றார்கள். இம்மதத்தவர் இம்சை செய்யாமையைப் பாமதர்மமாகக் கொண்டிருக்கின்றனர். |
உதாத்தவணி | வியக்கத்தக்க செல்வத்ததும், மேம்பட்ட உள்ளத்ததுமான உயர்ச்சியை மிகுத்துச் சொல்வது. இதனைத் தமிழ் நூலார் வீறுகோளணி யென்பர். |
உதாரம் | இது வைதருப்பச் செய்யுணெறியீலொன்று. இது சொல்லப்பட்ட செய்யுளில் சொற்படு பொருளின்றி, அதன் குறிப்பினால் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றுவது. (தண்டியலங்காரம்). |
உதார்மன் | 1. பாரதயுத்தத்து விடசேனனுடன் போர்புரிந்தவன். 2. பாஞ்சாலன் குமரன். |
உதாவகன் | சூரபதுமன் படைத்தலைவன். |
உதாவர்த்தரோகம் | இதுவும் மூலரோகத்தை யொத்த ரோகம். இது வாததேகி கட்கு பயறு, வரகு, சோளம், கடலை கார வஸ்துக்கள் சேர்கையில் வாயு அதிகரித்துக் குதத்தில் நோவையும், மலபந்தத்தையுஞ் செய்யும். இது குதத்தில் வேதனை செய்வதால் குதகீலம் என்பர். இதற்கு மூலரோக சிகிச்சை நலம். (ஜீவரக்ஷாமிர்தம்). |
உதிட்டிரன் | பாண்டுபுத்ரனாகிய தருமராஜனுக்கு ஒரு பெயர். இவன் குமரன் பிரதி விந்தியன். இவற்குக் கௌரவியிடத்துத் தேவகன் பிறந்தான். |
உதிதகாலம் | சூரியன் கிரணங்களுடன் கோடு கிழித்தமாத்திரையே எதுவரையில் காணப்படுகிறானோ அக்காலம் (பராச~ம). |
உதியஞ்சேரல் | இவன் ஒரு சேரர்தலைவன். நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தை, இவன் தேவி நல்லினி. |
உதியன் | இவர் சேரலர் மரபினன் பாரதப் போரில் இருபடையாளர்க்கும் போர் முடியுமளவும் உணவளித்தவனாதலிற் பெருஞ்சோற்றுதியஞ் சோலெனவுங் கூறப்படுவான். முதற்சங்கப் புலவராகிய முரஞ்சியூர் முடிநாகராயராற் புகழ்ந்து பாடப்பெற்றவன். புறம் 2. தன் குலத்து முதியோரிறந்தார்க்குச் செய்யுங் கடன்களெல்லாம் குறைவறச் செய்து ஏனையோரை ஆதரித்து வந்தவன். “முதியர்ப்பேணிய வுதியஞ் சோல்” அகம் 233. தனது நாட்டினைத் துன்பமெய்தாதபடி பாதுகாத்து வந்தவன் “நாடு கன்னகற்றிய வுதியஞ் சேரல்” அகம் 65. பதிற்றுப்பத்து முதற் பத்துக்குத் தலைவன் இவனேயென் றூகிக்கப்படுகின்றது. இவன் புதல்வர்கள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என இருவர். இவ்விருவரும் முறையே பதிற்றுப் பத்து 2ம் பத்துக்கும் 3ம் பத்துக்கும் தலைவராயினார். இவ்வுதியஞ் சேரலை நற்றிணை 113ல் பாடியவர் எயினந்தை மகனார் இளங்கீரனார். |
உதிரன் | மித்திரசக னென்னுஞ் சூர்யவம் சத்தரசன். வசிட்டர் சாபத்தால் அரக்கனாய் விச்வாமித்ரர் ஏவலால் வசிட்டர் புத்ரர்களைக் கொன்றவன். |
உதீச்சீதேவர் | இவர் தொண்டமண்டலத்துப் பையூர் கோட்டத்து ஆரணிநெடுந்துறை ஆற்பாகை, சைநர். திருக்கலம்பக மெனுஞ்சைநக்கலம்பகஞ் செய்தவர். (திருக்கலம்பகம்.). |
உத்கசம் | ஒரு புண்யதீர்த்தம். |
உத்கருஷசமை | அவ்யாப்தமான திருஷ்டாந்த தருமத்தால் சாத்யபக்ஷ அவ்வியா பகமான தருமத்தை வருவித்தல். |
உத்கலன் | 1. துருவன் மூத்த குமரன். இவன் தம்பி வத்சரன். இளமையில் உண்மை ஞானம் பிறந்து இராஜ்யத்தை விட்டுத் தவநெறியடைந்தவன். இவனாண்டதேசம் உத்கலம் ஒட்டிரதேசம் என்பர். 2. சுத்யமன் குமரன். |
உத்கலம் | (1) ஒட்டிரதேசம். (2) புருஷோத்தம க்ஷேத்ர மென்னும் ஜகந்நாதக்ஷேத்ரம். இந்த க்ஷேத்ரமகிமை பிரகன்னாரதீய புராணத்தில் கூறியிருக்கிறது. |
உத்கலை | சம்பிராட்டின் தேவி. |
உத்காதா | தேவதைகளைக் கெட்டியாய்த் துதிப்பவன். |
உத்காரமடங்கம் | இது நாடக விகற்பத்தொன்று. இது, மக்கள் பலரைத் தலைவராகப் பெற்றும் பெரும் பொல்லாத பேருடைத்தாய்ப் பெண்களாலாற்றப்பட் இச்சந்தி ஐந்துமுடையது. (வீரசோழியம்). |
உத்கீதன் | பூமாவின் குமரன். தாய் ருஷிகுல்லி, தேவி தேவகுல்லி, குமரன் பிரஸ்தாவன். |
உத்தமச்சோழப் பல்லவராயன் | ஒரு சோழன், சேக்கிழாருக்குத் தனதுரிமைச் செங்கோன் மரியாதை செய்து திருத்தொண்டர் புராணங்கேட்டுச் சைநசமயத் திருந்து சைவசமயமாகத் திருந்தியவன். |
உத்தமநம்பி | மணவாளமாமுனிகள் காலத்தில் திருவரங்கத்தில் பெருமாளுக்குத் திருவாலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர். |
உத்தமன் | 1, மூன்றாம் மநு. பிரியவிரதனுக்கு இரண்டாவது பாரியிடத்து உதித்த குமான். இவன் உலகையாண்டு தேவர்க்கு நன்மை செய்து உத்தமன் எனும் மனுவாயினன். 2. உத்தானபாதனுக்குச் சுருசியிடம் பிறந்த குமரன். இவன் வேட்டைக்குச் சென்று இயக்கன் ஒருவனுடன் சண்டை செய்து கொல்லப்பட்டான். இந்தத் துயர் சகிக்காத தாய் இவனைத் தேடிச் சென்று காட்டிலிறந்தாள். இவன் தன் பத்தினியைக் கள் குடிக்கச் சொல்ல அவள் மறுத்ததனால் அவளைக் காட்டிற்கு அனுப்பினன். அரசனை நீங்கிய தேவி, பாதாளத்திலுள்ள சாலபோதகன் என்னும் நாகராசனால் கிரகிக்கப்பட்டு இருந்தனள். நாகன் அவளை வலிய அணையச் செல்லுகையில் தன் குமரியால் மறுக்கப்பட்டு இருந்தனன். அரசன் பல தர்ம நூல்களாலும் பத்தினியில்லாமல் நடத்தும் அறம் வீணெனக்கண்டு முனிவர்களைக் கேட்டுத் தன் பத்தினியிருக்கும் நிலையறிந்து தன் நண்பனாகிய பலாகனால் வருவித்து அவளைக்கூடி உத்தமன் என்னும் குமரனைப் பெற்றான். |
உத்தமபாநு | பாண்டவர் படை விரன். |
உத்தமறி | தாமசனுடன் பிறந்தவன். |
உத்தமலக்ஷணம் | (32) நகங்கள், கண்கள், மூக்கு, தன்மதயபாகம், முழங்கால்கள், எனும் ஐந்துறுப்புக்கள் நீண்டிருத்தல் வேண்டும். கழுத்து, கணுக்கால், முதுகு, குறி, எனும் நான்கும் குறுகியிருத்தல் வேண்டும். நகம், தோல், கூந்தல், பற்கள், விரல்களின் கணுக்கள் எனும் ஐந்தும் மிருதுவாயிருத்தல் வேண்டும். வயிறு, பிடரி, தோள்கள், மூக்கு, மார்பு, நெற்றி, இந்த ஆறும் உயர்ந்திருக்க வேண்டும். கண்கள், உதடு, மோவாய்க்கட்டை, உள்ளங்கால், உள்ளங்கை, நகம், பீஜம் எனும் ஏழும் சிவந்திருத்தல் வேண்டும், முஷ்டி, மணிக்கூடு, மார்பு எனும் மூன்றும் வலுத்திருத்தல் வேண்டும். நெற்றி, மார்பு இரண்டும் விரிந்திருத்தல் வேண்டும். (சைவபூஷணம்). |
உத்தமோசா | துருபதன் குமரன். திருட்டத்துய்ம்மன் தம்பி. பாசறை யுத்தத்தில் தூங்குகையில் அச்வத்தாமனால் கொல்லப் பட்டவன் பாஞ்சாலன். |
உத்தரகீதை | பாரதத்தில் ஒரு பாகமாகிய வேதாந்த நூல். |
உத்தரகுரு | போக பூமியிலொன்று. இது இமயம், ஏமகூடம், நிடதம், மேருமுதலியவற்றிற்கு அப்பாலிருப்பது சஞ்சீவியைக் காண்க. அதுமான் சஞ்சீவி பொருட்டுச் சென்றபோது இதனைக் கண்டு பொழுது விடிந்ததென்று திடுக்கிட்டு இது வேறு கண்டமெனத் தேறினன். (சிலப்பதிகாரம்). |
உத்தரகோசமங்கை | இது பாண்டி நாட்டிலுள்ள தலம். திருவாதவூரடிகள் உபதேசம் பெற்ற தலம். அம்பிகை இத்தலமான்மியத்தை வினவ இறைவன் உத்தரத்தை (கோசம்) இரகசியமாகக் கூறியதால் இப்பெயரடைந்தது. (வீரசிங்காதனபுராணம்). |
உத்தரகௌத்தன் | வாரணாசி நகரத் தாசன். (சிலப்பதிகாரம்). |
உத்தரசிந்து | ஒரு நதி வடக்கிலுள்ளது. |
உத்தரநல்லூர் நங்கை | இவள் ஒரு பெண்கவி, இவள் பிராமணரை வசைபாடினாள். ”சந்தனமரமும் வேம்பும் தனிமையாக் கந்தநாறும், அந்தணர் தீயில் வீழ்ந்தாலது மண நாறக்காணேன், செந்தலைப் புலையனார்க்குத் தீமணமதுவே நாறும், பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர் கிராமத்தாரே” என்றாள். |
உத்தரன் | 1. விராடன் குமரன். தாய் சுதக்ஷணை. பாண்டவர் அஞ்ஞாதவாசத்திலிந்த இடத்தில் இருக்கின்றார்களென்று துரியோதனாதிகள் பசுக்கூட்டத்தைக் கவர உத்தரன் பேடியைச் சாரதியாகக் கொண்டு அவ்விடஞ் சென்ற காலத்தில் அந்தச் சேனையைக்கண்டு பயந்து பின்னிடப்பேடியுருக் கொண்ட அருச்சுனன் உண்மையுருக் காட்டியகாலத்தில் அருச்சுநனுக்குத் தேரோட்டிப் பசுக்கூட்டத்தை மீட்டவன். முதனாள் யுத்தத்தில் சல்லியனால் மாண்டவன். 2. கனகவிசயர்க்குத் துணையான ஓர் அரசன். (சிலப்பதிகாரம்). |
உத்தரமீமாம்சை | மீம்சா சாத்திரத்தின் பிற்பகுதி. |
உத்தரம் | இது, வாதி பிரதிவாதிகளால் ஐயமிலாதும், செவ்விதாகப் பொருண் முற்றியதும், எளிதிலுணாத் தக்கதும், மிக்க விரிவில்லதுமானது. அது, சத்தியோத்தாம், மித்தியோத்தரம், காரணோத்தரம், பூர்வநியாயோத்தரம் என நான்கு வகைத்து. பூர்வ நியாயோத்தரமாவது முன்னமே இவன் இந்த விவகாரத்தில் நியாயத்தானத்தில் என்னால் வெல்லப்பட்டான் என்பது. மற்றவை வெளி, (விவகார சங்கிரகம்). |
உத்தரவேதி | 1. ஒரு நதி. 2. குருக்ஷேத்ரம் காண்க. |
உத்தராதித்தன் | விரதன் என்னும் வேதியனுக்கும் சுபவிரதை யென்றவளுக்கும் சுலக்ஷணை யென்னும் ஒரு புத்திரி இருந்தனள். இவள் உத்தராதித்தனை அடைந்து தவஞ்செய்கையில் ஒரு ஆடு அவளை வலஞ்செய்து வந்தது. ஒரு நாள் சிவபிரான் பிராட்டியுடனணைந்து வேண்டிய கேள் என்ன சுலக்ஷணை இந்த ஆட்டிற்கு நற்பதவி தருக எனப் பிராட்டியார் இந்த ஆடு காசிமன்னன் புதல்வியாய்ப் பிறகு முத்தியடைக என்று சுலக்ஷணையைத் தோழியாகக் கொண்டனள். |
உத்தராபதி | சிறுத்தொண்டர் பொருட்டு ஆத்தி விருக்ஷத்தடியில் இருந்த சிவமூர்த்தி யின் பெயர். |
உத்தரை | மச்ச தேசாதிபதியாகிய விராடன் குமரி, தாய் சுதக்ஷணை, பரீக்ஷித்தின் தாய், அருச்சுனனிடம் நடனம் பயின்றவள். அசுவத்தாமன், பாண்டவர் கருவறுக்க ஏவிய அத்திரம் இவள் கருவிலிருந்த பிண்டத்தைச் சேதிக்கப் புகுந்தகாலத்தில் அவ்வத்திரத்தால் கெடுதி உண்டாகமல் விஷ்ணு மூர்த்தியால் காக்கப்பட்டவன். அபிமன்யுவின் தேவி. |
உத்தவசித்கனர் | தாரூர் எனும் கிராமத்தில் இருந்த வேதியர். இவர் ராமபஜனை செய்து கொண்டிருக்கும் நாட்களில் ஸ்ரீ ராமநவமியன்று பிதருபட்டண மடைந்து உற்சவங் கொண்டாடுகையில் திருவிழா வீதி வலம்வா அவ்விடமிருந்த துருக்கர் வலம் வராதபடி தொந்தரைசெய்து வேதியரை அடிக்க வேதியர்கள் உத்தவசித்கனரிடம் கூறத் தாசர் பெருமாளைத் துதிக்கப் பெருமாளிடமிருந்த அநுமன் கோபங்கொண்டு அவ்விடமிருந்த மசீதை இடித்துத் தள்ளினன். இதை அறிந்து திருக்கராசன் கோபிக்க அவனுக்கு வயிற்று வலி கண்டு வருந்தி அவ்விடமிருந்த பக்கிரியிடங்கூறப் பக்கிரி அநுமனைத் துதித்துத் தாசரிட மடைந்து பிரார்த்திக்கத் தாசர் பெருமாளை வேண்டி அவனடைந்த நோயைப் போக்கி முன்போல் திருவிழா நடத்தினர். |
உத்தவர் | 1. பிரகஸ்பதியின் சீடர். வசுதேவன் தம்பியாகிய தேவபாகன்குமார். கண்ணனைப் போலுருவியற்றிப் பூசித்தவர். விதுரருக்குத் தத்வமுபதேசித்தவர். பூர்வசன்மத்தில் வசுவாயிருந்தவர். கிருஷ்ணனுக்கு மந்திரி. இவர் கிருஷ்ணனால் நந்த கோபிகைகளைச் சமாதானஞ் செய்விக்க அனுப்பப்பட்டவர். கிருஷ்ணனால் தத்வோபதேசம் பெற்றவர். 2. நகுஷன் குமரன். |
உத்தாநபரிகசு | (சூ) சையாதியின் குமான். |
உத்தாநபர்கி | சர்யாதி குமரன். |
உத்தாநபாதன் | சுவாயம்பு மனுவிற்குச் சதரூபியிட முதித்த இரண்டாங் குமான். இவனுக்குச் சுநீதி, சுருசி என இரண்டு பாரிகள். இவ்விருவரில் சுருசியிடத்தில் அரசன் ஆசைவைத்துச் சுநீதியையும் அவள் குமரனையும் அலக்ஷ்யம் செய்திருக்கையில் சுநீதி குமரனாகிய துருவன், தாய் தந்தையரை விட்டு நீங்கித் தவமேற்கொண்டு காசிபராச்சிரமமடைந்து உபதேசம் பெற்று விஷ்ணுவையெண்ணித் தவமியற்றித் துருவபதம் பெற்றனன். இவனுக்குச் சுருசியிடம் பிறந்த குமரன் உத்தமன். |
உத்தாமகுசுமை | உமாதேவியாரின் தோழியரில் ஒருத்தி, தேவி கௌரியாக வரம் பெற நீங்கியகாலத்துத் திருக்கைலையில் காவலாக நின்றவள். |
உத்தாரகன் | உபமன்யு. |
உத்தாலகர் | 1. தௌமியர் மாணாக்கர். இவர்குமரன் சுவேதகேது. முதலில் பெண்கள், வாம்பில்லாமல் பரபுருஷரைப் புணர்ந்திருந்தனர். ஒருநாள் இவர் தேவி ருது ஸ்நானஞ்செய்து மீளுகையில் ஒரு வேதியன் இவர் மனைவியைப் புத்திர வாஞ்சைக்காக யாசிக்க இவர் கோபித்து இது முதல் பெண்கள் பரபுருஷரைச் சேரக்கூடா தெனக் கட்டளையிட்டவர். 2. அருணன் புத்ரர். |
உத்தி (32) | நுதலிப்புகுதல், ஒத்து முறைவைப்பு, தொகுத்துச் சுட்டல், வகுத்துக்காட்டல், முடித்துக்காட்டல், முடிவிடங்கூறல், தானெடுத்துமொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள்விரித்தல், தொடர் சொற்புணர்த்தல், இரட்டுறமொழிதல், எதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந்தொழுகல், இறந்தது விலக்கல், எதிரதுபோற்றல், முன் மொழிந்துகோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்ததுமுடித்தல், உரைத்துமென்றல், உரைத்தாமென்றல், ஒருதலை துணிதல், எடுத்துக்காட்டல், எடுத்தமொழியினெய்த வைத்தல், இன்னதல்லது. இதுவென மொழிதல், எஞ்சிய சொல்லின் எய்தக்கூறல். பிறநூன் முடிந்தது தானுடம்படுதல், தன்குறிவழக்க மிகவெடுத்துரைத்தல், சொல்லின் முடிவினப் பொருண்முடித்தல், ஒன்றின முடித்தல், தன்னின முடித்தல், உய்த்துணர வைப்பு என்பனவாம். 2. ஒரு இலக்கணத்தால் உணர்த்தப்படும் பொருளை நூல் வழக்கொடும் உலக வழக்கொடும் பொருந்தக் காட்டி அப்பொருளை மற்றோரிலக்கியப் பொருளினும் ஏற்குமிடமறிந்து இவ்விடத்திற் கிது ஆகுமெனத் தக்க வகையாகச் செலுத்துவது. (நன்~பா). |
உத்தியணி | தனது மர்மததை மறைத்தற் பொருட்டுச் செய்கையான் பிறரை வஞ்சித்தலாம். இதனை யுத்தியலங்காரம் என்பர். |
உத்துங்கன் | ஒரு முனிவன், இவன் தேவி குணவதி. இவனுக்கு இவளிடம் உதங்க முனி பிறந்தனன். குவலயாசுவனுடன் சென்று துந்துவைக் கொலை செய்தவன். (பிரமபுராணம்). |
உத்தேசம் | பெயர் மாத்திரையாற் பொருளைச் சொல்வது. |
உத்பலாவதி | ஸுராட்டின் பாரி. தாமஸ் மனுவிற்குத் தாய். ஒரு இருடியின் சாபத்தால் பெண்மானுருக்கொண்டு ஸுராட் தொடுதலால் கருவுற்றவள். |
உத்பலினி | ஒரு நதி இமயமலைக்குக் கிழக்கிலுள்ளது. |
உத்பாதங்கள் | 3. திவ்யம், அந்தரிக்ஷம், பார்த்திவம். |
உத்பிரமன் | அரிகேசனைக் காண்க. |
உத்ரேசுரம் | சேடதாசையரைக் காண்க. |
உத்விருத்தம் | ஒருமலை. இந்திரப்பிரத்தத்திற் கருகிலுள்ளது. |
உனபு | மரீசி பிரசாபதியின் தேவியரி வொருத்தி. இவள் குமார் செய்தி மரீசியைக் காண்க. |
உன்னதி | தக்ஷனுக்குப் பிரசூதியிட முதித்த குமரி. இயமன் தேவி. |
உன்னநிலை | கிட்டுதற்கரிய நன்மையினையும் கட்டுங்கழலினையுமுடைய வேந்தனை நிமித்தம் பார்க்குமரத்தொடு கூட்டி மிகு புகழைச் சொல்லியது (பு. வெ. பொது வியற்). |
உன்மத்தன் | 1. சண்முக சேநாலீரன். 2. மால்யவந்தன் குமரன். |
உன்மனி | நிராதாரத்தால் தியானிக்கப்படும். |
உன்மாதரோகம் | வாதாதிமூன்றும் தம்வழி தப்பி நடக்கையில் மனத்தில் ஒருவித மதம் பிறக்கும். அதுவே உன்மாதமாம். அது, வாத, பித்த, சிலேஷ்ம, திரிதோஷ, வியாத்தியோன்மாத, விஷோன்மாதி மென அறுவகையாம். அவை, முலைப்பால், செங்கரும்பின் ரஸம், முந்திரிப்பழம், கோரைக்கிழங்கு, அதிமதுரம் முதலியவற்றால் வசமாம். |
உன்முகன் | உல்முகனைக் காண்க. |
உபகரணப்பொருளதிபன் | வேந்தன் காரியங்களுக்கு வேண்டியஉபகரணங்களை அமைப்பவன். |
உபகற்பவிபூதி | உபகற்ப விபூதியாவது காட்டிலே மரங்கள் ஒன்றோடொன்று இணைந்து தானே உண்டாகிய அக்கினியினாலே வெந்து விளைந்த சாம்பலையும், செயற்கையாலுண்டான செங்கற்சூளை, குயவன்சூளை முதலியவற்றின் சாய்பல்களையும், வாமதேவ மந்திரத்தினால் பஞ்ச கவ்வியத்தை வார்த்துக் கலந்து அகோர மந்திரத்தினாலே பிசைந்துருட்டித் தற்புருட மந்திரத்தினாலே பதரை விரித்து வைத்துச் சிலாக்கினியிலே தகனம் பண்ணி ஈசானமந்திரத்தினாலே எடுத்துக்கொள்வதாம். |
உபகீசகர் | கீசகனுக்குத் தம்பிமார்கள் கோபன் என்னும் பெயருள்ள சூதபுத்திரர்கள். இவர்கள் பீமசேனனால் வதைக்கப்பட்டார்கள். |
உபகுப்தன் | (சூ.) உபகுரு புத்ரன். இவன் அக்நி வம்சம். |
உபகுரு | (சூ.) சத்தியாதன் குமரன். |
உபக்கிரகங்கள் | சூரியனைச் சுற்றி வரும் எட்டுக் கிரகங்களைப் பல கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை சற்றேறக்குறைய (700) உள்ளவாகக் கணித்திருக்கின்றனர். அவற்றில் (400)க்குப் பெயருண்டு. மற்றவற்றிற்குப் பெயரிடப்படவில்லை. இவ்வுபகிரகங்களில் பெரிது சந்திரன். மற்ற உபக்கிரகங்கள் குறுக்களவில் (450) மைல் உள்ளனவாய்ச் சிறிய உருவாகக் காணப்படுகின்றன. |
உபசயகேந்திரங்கள் | இலக்னத்திற்கு 3ம் இடம், 4ம் இடம், 10ம் இடம், 11ம் இடம், இந்நான் கிடங்களும் உபசயங்களாம், இலக்னத்திற்கும், 4ம் இடத்திற்கும், 10ம் இடத்திற்கும் 7ம் இடத்திற்கும் முதலாம் இடத்திற்கும், கேந்திரம், கண்டம், சதுட்டயம் எனும் பெயர்கள் வழங்கும். (விதானமாலை). |
உபசாரம் (16) | தவிசளித்தல், கைகழுவ நீர் தரல், கால் கழுவ நீர் தரல், முக்குடி நீர் தரல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரி நூல் தரல், தேய்வைபூசல், மலர்சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும்புகை காட்டல், விளக்கிடல், கருப்பூரமேற்றல், அமுத மேந்தல், அடைகாய்தால், மந்திர மலரால் அருச்சித்தல் (32) ஆவாஹனம், ஆசனம், அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானம், வஸ்திரம், எஞ்ஞசூத்திரம், பூஷணம், கந்தம், அக்ஷதை, புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், அமுதவாசனம், நீராசனம், தர்ப்பணம், பலார்ப்பணம், தாம்பூலம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், ஸ்தோத்திரம், புராணபடனம், சத்திரம், சாமரம், விசிறி, மஞ்சம், சங்கீதம், நிருத்தம், வாச்சியம் ஆத்மாரோபணமாம். |
உபசுந்தன் | இரண்யகசிபுவின் குலத்தவன் நிகும்பன் குமரன், திலோத்தமையைக் காண்க. |
உபசுருதி | 1. அபிமான தேவதையாகிய துர்க்காதேவி. இந்திராணி பால் பூஜிக்கப்பட்டவள். 2. தருமதேவதை இந்திராணியைக் காண்க. 3. ஒரு காரியத்தையெண்ணிச் செய்கையில் சமயத்திற்கும் வார்த்தைக்கும் பொருந்தியும் பொருந்தாமலும் அந்நியர் கூறும் வாக்கு என்பர். |
உபச்கரன் | புரஞ்சயனுக்கு நண்பன். |
உபச்சரன் | ஒரு அரசன் தேவரும் முனிவரும் யாகத்தில் உயிர்வதை செய்தல் நன்றோ (அசம்.) மூன்று வருஷத்து நெற்கொண்டு யாகஞ்செய்தல் நலனோ என்று கேட்கத் தேவர்பக்ஷமாய் உயிர்க்கொலை நன்றெனத் தீர்மானித்தவன். |
உபதானவி | இரண்யாக்ஷன் பாரி. விச்சுவாநரன் பெண். |
உபதிட்டன் | சண்முகசே தாவீரன். |
உபதிட்டா | சம்வர்த்தனன் தேவி. |
உபதேவன் | 1. அக்குரூரன் குமரன். 2. தேவகன் குமரன. 3. ருத்திரசாவர்ணி மநுப்புத்ரன். |
உபதேவா | தேவகன் குமரி. |
உபதேவி | தேவகன் பெண். வசுதேவன் பாரி. இவள் குமரர்கள் கல்பவிருஷ்டி முதலியவர். |
உபநந்தன் | 1 யதுவம்சத்து நந்தன் தம்பி வசுதேவன் குமான், தாய், மத்திரை அல்லது பத்திரை. 2. திருதராட்டிரன் குமரன். |
உபநிதி | எந்தப் பொருள் அதன் உருவக்கணக்கைக் கூருது அயலானிடத்தில் கொடுக்கப்பட்டதோ அப்பொருள் உபநிதியெனப்படும். அப்பொருள் கொடுத்தவண்ணமே பெறத்தக்கது. |
உபநிஷத்து | 1. இறைவனைக் குறித்துத் துதிக்கும் வேதபாகம். இச்சொல், உப, நி, சத்து எனும் மூன்று பதத்தால் ஆகியது. உப என்பதற்கு, அருகென்றும், நி என்பதற்கு, செம்மையென்றும், சத் என்பதற்கு அடையப்பட்ட தென்பது பொருள். பின்னும் உபநிஷத்திற்கு, வேதாந்தமென்றும், வேதசிரம் என்றும், ரகஸ்யமென்றும் பல நாமங்கள் உள. இருக்கு எசஸ் சாமாதர்வண வேதங்களிலிருந்து (1180) உபநிஷத்துக்கள் தோன்றின. எவ்வாறெனின் இருக்கினின்று (21) சாகைகளும், எசுர் வேதத்தில் (109) சாகைகளும், சாமவேதத்தில் (1000) சாகைகளும், அதர்வண வேதத்தில் (50) சாகைகளும் உண்டாயின, இவற்றுள் சில (840) கர்மங்களைப் போதிப்பன. ஆதலால் அவை கர்மகாண்டமென்றும், சில (232)த்யேய பிரமத்தைப் போதிக்குமாதலால் அவை உபாசனா காண்டமெனவும், சில (108) ஞேயப்பிரமத்தைப் போதிக்குமாதலால் அவை ஞானகாண்டம் என்றும் பெயர் பெறும். சிலர் உபநிஷத்துக்கள், (235) என்றும், சிலர் (180) என்றும், சிலர் (108) என்றும் கூறுவர். (108) வழங்கி வருகின்றன. இவற்றுள் தசோப நிஷத்துக்கள் மிக்கபிரசஸ்தமாக விருக்கின்றன. தசோபநிஷத்துக்களாவன, ஈசோவா சோபநிஷத்து, கேனோப நிஷத்து, முண்டகோப நிஷத்து, மாண்டுக்யோப நிஷத்து, தைத்திரீயோபநிஷத்து, ஐதரேயோபநிஷத்து, சாந்தோக்யோபநிஷத்து, பிருகு தாரண்ய கோபநிஷத் என்பனவாம். உபநிஷத்துக்களின் நூற்றெட்டு பேதமாவன. 1. வாஜஸ நேயம், 2. தலவ சாரம், 3. கடோபநிஷத், 4. பிரச்நோப நிஷத், 5. முண்டகோபநிஷத், 6. மாண்டுக்யோபநிஷத், 7. தைத்திரீயோபரிஷத், 8. ஐதரேயோபநிஷத், 9. சாந்தோக்யோட நிஷத், 10. பிருகதாரண்யம், 11. பிரம்மோபநிஷத், 12. கைவல்யோபநிஷத் 13. சாபாலோபநிஷத், 14. சிவேதாச்வத ரோபரிஷத், 15. அம்சோபநிஷத், 16. ஆருணிகோபநிஷத், 17. கர்ப்போபநிஷத், 18. நாராயணோபநிஷத், 19. பரமஹம் சோபநிஷத், 20. அமிர் தபிந்தூபநிஷத், 21. அமிர்தநாதோபநிஷத், 22. அதர்வசி ரோபநிஷத், 23. அமிர்தசி கோபநிஷத், 24. மைத்திராயண்புபநிஷத், 25. கௌஷீதபிராம்மணோபநிஷத், 26. பிருகத் சாபாலோபரிஷத், 27. நிருசம்மதாபநீ யோபநிஷத், 28. காலாக்னிருத்ரோப நிஷத், 29. மைத்திரேயோவுபநிஷத், 30. சுபாலோபநிஷத், 31. க்ஷரிகோப நிஷத், 32. மந்திரிகோபநிஷத், 33. சர்வசாரோபரிஷத், 34. நிராலம் போப நிஷத், 35. சுகாஹஸ்யோபநிஷத், 36. வச்ரசூசியுபநிஷத், 37. தேஜோபிந்தூப நிஷத், 38. நாதபிந்து பரிஷத், 39. தியானபிந்துபநிஷத், 40. பிரமவித்யோப நிஷத், 41. யோகதத்வோ பநிஷத், 42. ஆத்மபோதோபநிஷத், 43. நாரத பரிவிராசகோபநிஷத், 44. திரிசிகீபிராம் மணோபநிஷத், 45. ஸீதோபநிஷத், 46. யோகசூடாமண்யுபநிஷத், 47. நிர்வாணோபநிஷத், 48. மண்டலப்பிராம்மணோபநிஷத், 49. தக்ஷிணாமூர்த்தியுபரிஷத், 50. சரபோபநிஷத், 51. ஸ்கந்தோபநிஷத், 52, திரிபாதவிபூதி மஹாநாராய ணோபரிஷத், 53. அத்வயதாரகோபநிஷத், 54. ராமாஹஸ்யோநிஷத், 55. ராமதாபநீயோபரிஷத், 56. வாசுதேவோபரிஷத், 57. முத்கலோபநிஷத், 58. சாண்டில்யோபநிஷத், 59. பைங்கலோபநிஷத், 60. பிக்ஷகோபநிஷத், 61. மஹோபநிஷத், 62. சாரீரகோபநிஷத், 63. யோகசிகோபநிஷத், 64. துரியாதீதாவதூ தோபநிஷத், 65. ஸந்யாஸோபநிஷத், 66. பரமஹம்ஸப ரிவ்ராஜகோபநிஷத், 67. அக்ஷமாலிகோபநிஷத், 68. அவ்யக்தோபநிஷத், 69 கொக்ஷரோபநிஷத், 70. அந்நபூர்ணோபநிஷத், 71. சூர்யோபநிஷத், 72. அக்ஷ்யுபநிஷத், 73. அத்யாத்மோபநிஷத், 74. குண்டிகோபநிஷத், 75. சாவித்ரியும் நிஷத், 76. ஆத்மோபநிஷத், 77. பாசுபதபிரம்மோபநிஷத், 78. பாப்பிரம்மோ பநிஷத் 79. அவதூதோபநிஷத், 80. திரிபுரதாபிந்யுபநிஷத், 81. தேவ்யுபநிஷத், 82. திரிபுரோபநிஷத், 83. கரோபநிஷத், 84, பாவனோபநிஷத், 85. நத்ர ஹ்ருதயோபநிஷத், 86. யோக குண்டல்யுபநிஷத், 87. பஸ்மசாபாலோ பநிஷத் 88. ருத்ராக்ஷஜாபாலோபநிஷத், 81. கணபத்யுபநிஷத், 90. தர்சநோபநிஷத், 91. தாரஸாரோபநிஷத், 92. மஹாவாக்யோபநிஷத், 93. பஞ்சப்பிரம்மோபரிஷத், 94. பிராணாக்னி ஹோத்ரோபநிஷத், 95. கோபாலதபனோப நிஷத், 96. சிருஷ்ணோபநிஷத், 97. யாஞ்ஞவல்கோபநிஷத், 98. வராகோபநிஷத், 99. சாட்யாய நீயோபநிஷத், 100. அயக்கிரீவோபநிஷத், 101. தத்தாத்ரேயோபநிஷத், 102. காருடோபநிஷத், 103. கலிஸந்தரணோபநிஷத், 104. சாபால்யுபநிஷத், 105. சௌபாக்யலக்ஷ்மி யுபநிஷத், 106. சாஸ்வதீரஹஸ்யோபநிஷத், 107. பஹ்ருசோபநிஷத், 108. முக்திகோபநிஷத் முதலியவாம். |
உபபத்திசமை | உபயபக்ஷ சாதர்மியத்தினால் சாதனம் பொருந்துமாறு கூறுதல். |
உபபர்க்கணன் | நாரதரைக்காண்க. இவன் பூர்வத்தில் நாரதமுனி. பிரமசாபத்தால்த்ரமிளனுக்கும் களாவதிக்கும் புத்திரனாய்ப் பிறந்தவன். |
உபபாண்டவர் | இளம்பஞ்ச பாண்டவர்க்கொரு பெயர். |
உபபாதகங்கள் | கோவதை, காலத்தில் உபாயனம் அடையாதிருத்தல், களவு, கடன் தீர்க்காதிருத்தல், ஆஹிதாக்கினி இன்றி இருத்தல், விற்கக்கூடாப்பொருள் விற்றல், மூத்தோன்மணஞ் செய்யாதமுன் மணங்கொள்ளுதல், பொருள் கொடுத்து வேதாத்யயனம் அடைதல், பொருள் பெற்றுவேதாத்யயனம் கூறல், பாதார கமனம், நிஷேதவட்டி வாங்கல், உப்புண்டாக்கல், க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர்ஸ்திரீகளை வதைத்தல், நிந்திக்கத்தக்க பொருளால் ஜீவித்தல், கடவுள் இல்லை என்றல், விரதலோபம், பிள்ளைகளை விற்றல், தனதான்ய பசுக்களைக் களவுசெய்தல், யாகஞ்செய்ய அருகாலார்க்கு யாகஞ்செய்வித்தல், தாய் தந்தை குமாரை விட்டு விடல், கன்னியர்மேல் குற்றங்கூறல், தமயன் விவாகமின்றி இருக்கத் தம்பியால் யாகஞ் செய்வித்துக்கொளல், க. டம், வியதலோபம், ஸ்வபிரயோஜனம் பற்றி பாகாதி கிரியாரம்பம், கள்குடித்த ஸ்திரீயுடன் போகித்தல், வேதாத்யயனம் யாகாக்னிவிடல், குமானை நீக்கிவிடல், பந்துக்களை விட்டு விடல், சமைத்தற்பொருட்டு மாங்களை வெட்டுதல், ஸ்திரீகளாலும் ஹிம்சையாலும் ஒளஷதத்தாலும் ஜீவனஞ்செய்தல், சொக்கட்டான் சூது முதலிய ஆட்டுவித்தல், தன்னை விக்ரயித்தல், சூத்திர சேவயம், நீசனுடன் சிநேகம், ஹீனஸ்திரீயினிடம் போகித்தல், ஆச்சிரமம் இன்றி இருத்தல், பரான்னத்தால் தேகபோஷணஞ் செய்து கொள்ளல், சத்தில்லாத சாஸ்திர அப்யாசம், பெண்டு விற்றல் முதலியவாம். |
உபப்பிலாவியம் | பாண்டவர் பாரதயுத்தத்திற்கு முன்னிருந்த இடம். |
உபமன்யு | 1. வியாக்கிரபாதருஷியின் குமரர். இவர் வசிட்டதேனுவினிடம் உண்டபாலால் அத்தன்மைத்தான் பால் விரும்பித் தாயைக்கேட்கத் தாய் மாவைக் கரைத்துப் பால் என உண்பிக்க அஃதறிந்த குழந்தை தாயை நோக்கத், தாய் எல்லாமுடையான் சிவமூர்த்தி அவனை எண்ணித் தவம்புரிக என அவ்வாறு செய்யச் சிவமூர்த்தி இந்திரனுருக்கொண்டு எதிர்தோன்றிச் சிவனை இகழ அச்சொற்களைக்கேளேனென இந்திரனைச் சினந்துநிற்கச் சிவமூர்த்தி தம் முருக்கொண்டு பாற்கடலையுண்ண அநுக்கிரகித்தனர். (ஆதித்ய புராணம்). 2. இவர் அதிதிகளுக்கு அன்னமிட்டு அந்தப் பரிகலத்தைப் புறத்திலெறிந்தனர். அது அவ்விடம் பல்லியுருக்கொண்டிரு ஈத தம்பதிகள் மீது பட்டு அவற்றின் தலைகள் பொன்னுருவடைந்து பூர்வக்ஞானத்தால் முனிவரைத்துதிக்க முனிவர் பல்லிகளைப் புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்ய ஏவிப் புனிதராக்கினர். 3. இவர் கிருஷ்ணமூர்த்திக்குச் சிவதீக்ஷை செய்து தவத்திற்கனுப்பினர். இவர், உமாதேவியைப் பூசிக்கையில் கால் பீடத்தில் பட்டு முயலுருப்பெறச் சாபமடைந்து காட்டில் வசிக்கையில் ஆதிலீசன் எனும் அரசன் வேட்டைக்கு வர அவனாலடியுண்டு பாதிரி விருக்ஷத்தருகில் சாபம் நீங்கப்பெற்றுப் பண்டையுருப் பெற்றனர். 4. தாம் திருப்பாற்கடல் வேண்டித் தவம்புரிகையில் மரீசி முனிவரால் பேயுருவடைந்த சில முனிபுத்திரர்கள் தவத்திற்கிடையூறு விளைக்க அவர்களைப் பஞ்சாக்ஷர ஜபத்தால் பேயுரு வொழித்தனர். இவர் தவஞ்செய்கையில் சிவபெருமான் இந்திரனுருக்கொண்டு எதிர்சென்று சிவபெருமானைப் பலவாறு நீந்திக்க முனிவர் அகோராஸ்திர மந்திரத்தை உச்சரித்து விபூதியெடுத் திந்திரன் மீது எறிந்தனர். அதனை நந்திமாதேவர் தடுக்க முனிவர் மூலாக்னியால் உயிர்விட எண்ணுகையில் சிவபெருமான் காட்சி கொடுத்து வேண்டிய சித்திகளை அருளினர். 5. இவர்த்ருமன்யு என்பவரின் புத்ரர். இவர் பிறந்தபின் தாய் பால் இல்லாமையால் அரிசிமாவினைச் சர்க்கரை கலந்து நீராக்கி ஊட்டி வளர்த்து வந்தனள். இவ்வாறு 5 வயது வரையிலுண்டு வருகையில் தாய் தன் சகோதரராகிய வசிட்டரிடஞ் சென்று ஒரு மாதமிருக்கையில் அருந்ததி ஓமஞ்செய்து மிகுந்த காமதேனுவின் பாலைத்தர உண்டுவந்தனர். அவ்விடம் விட்டு நீங்கிய அன்னை தம் வீடு வந்து தமக்கு மாவின் பால் தர, வேண்டாது ரோதனஞ் செய்யத் தாய் பூர்வம் சிவபூசை செய்தவர்க்கே எல்லா நலமும் உண்டாம். நமக்கில்லாமையால் வறுமை அடைந்திருக்கிறோமென்று புலம்பத் தமது ரோதனத்தை விட்டுச் சிவமென்பதென்ன அதனைப் பூஜைசெய்யும் வகை எவ்வகையெனத் தாயைக்கேட்கத் தாய் தந்தையை வினாவக் கூறக், கேட்டுணர்ந்து தந்தையிடம் தீக்ஷைபெற்றுத் தவமேற் கொண்டு திரிகூடபர்வதத்தில் சிவோபாசனை செய்து மகாதவஞ்செய்யச் சிவபெருமான் எழுந்தருளி என்ன வரம் வேண்டுமென்னப் பரமபதியே எம் தாய் தந்தையர் பாலன்னம் புசிக்கவும் நான் காமதேனுவின் பாலினுமினிய பாலுண்ணவும் வேண்டுமென்ன அவ்வாறே அவர்கள் புசிக்கவும் இவர்க்குத் திருப்பாற்கடலையும் தந்து யாவர்க்கும் ஆசிரியராம் பதமும் தரப் பெற்றுத் தாய் தந்தையரை அடைந்தவர். (சிவாஹஸ்யம்). |
உபமேயம் | உபமானத்தை ஏற்ற பொருள். |
உபயகர் மஜசையோகம் | யாண்டு இரண்டன் றொழில்களால் சையோக முண்டாகின்றதோ அது. |
உபயகோமுகிதானம் | பசுவின் கன்று தாய் வயிற்றைவிட்டுத் தலையை வெளிப்படுத்தினவுடன் முன்னும் பின்னுமாக இரண்டு முகங்கள் இருக்கும். அக்காலத்தில் அந்த வெளியில் வராத கன்றுடன் பசுவினை விதிப்படி தானஞ்செய்தல். |
உபயதன்மவிகலன் | காட்டப்பட்ட திருட்டாந்தத்தில் சாத்யமாயுள்ள துணி பொருளும், சாதனமாயுள்ள ஏதுவும் நிறையாது குறைவுபடுதல். |
உபயபாரதி | சரஸ்வதி அம்சமானவள், இவளுக்குச் சாரதா, சரச்சுவாணி, மந்திரேசுவரி, அக்ஷரமாதுருகை, வாக்குவாதினி என்று பெயர். இவள் திருவாசர்வேதம் அதுதல் கண்டு நகைத்ததால், பூமியில் விஷ்ணுமித்திரன் குமரியாகப் பிறந்து சுரேச்வராசாரியரை மணந்தனள். |
உபயராசி | மேஷம், மிதுனம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம். |
உபயவியாவிருத்தன் | எது சாத்யங்களுக்குக் கடாதியைப் போல என்கிற திருஷ்டாந்தம் பொருந்துதல், (சிவ~சித்). |
உபயாசன் | கங்கைக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த வேதியன். துருபதனுக்குப் புத்திரகாமேஷ்டியாகஞ் செய்வித்தவன். |
உபரிசரவசு | 1. இவன் சேதிநாட்டரசன். இந்திரனையெண்ணித் தவம் செய்து ஆகாயத்தில் சஞ்சரிக்க விமானம் பெற்றவன். இவன் கனவில் பிதுருக்கள் தோன்றி வேட்டையாடக் கூறுகையிலதற்கிசைந்து வனஞ் செல்லுகையில் மனைவியின் ருது காலமறிந்து வருந்த வீரியம் வெளிப்பட் டது. இவன் தன் வீரியத்தைத் தொன்னையில் வைத்துத்தான் வளர்த்தடேகையிடம் கொடுத்துத் தன் மனைவியிட மனுப்ப அதை மற்றொரு டேகை கண்டு ஏதோ இரையென்று மறுத்துப்பிடுங்க அவ்வீர்யம் சலத்தில் விழுந்தது. அதை ஒரு மீன் விழுங்கிற்று. அம்மீனிடம் ஒரு பெண்ணும் குமரனும் பிறந்தனர். பெண் மச்சகந்தி, குமரன் மச்சன். அப்பெண்ணைச் சந்தனு மணந்தனன். இவன் குமரர் பிரகதாது, சாபன், மச்சியன், பிரத்தியக்கிரன், சேதிமாத்தியன், மணிவாகனன், சௌபலன், யது, இராசன்யன். இவன் சரிதையை வசுவைக்காண்க. இவன் முனிவர் சாபத்தால் பாதாளத்திலிருக்க இவனைத் திருமால் கருடனையேவிப் பூமியில் கொண்வெந்துவிட்டு அரசளிப்பித்தனர். இவன் பல இடங்களில் திருமால் அருள் பெற்றவன். இவன் தேவி கிருகா. இவளிடமிவனுக்கு ஐந்து குமரர். இவனைக் கிருதியின் குமரன் என்பர். அத்திரிகையைக் காண்க. 2. சராசந்தன் குலத்தரசன். 3. ஒரு காலத்தில் ருஷிகள் மாம்சம் புசிக்கக் கூடாதெனப் புசிக்கலா மென்றதால் ஆகாயத்திலிருந்து தள்ளப்பட்டான். பின்னும் அவ்வாறே கூறிய தால் பாதாளத்திற் தள்ளப்பட்டான். 4. பிரகஸ்பதியின் சீடன். இவன் தம் ஆசிரியரைக் கொண்டு ஒரு யாகஞ் செய்வித்தான். அதில் நாராயணர் நேராக அவிகொள்ளாது முனிவர் கண்ணிற்றோன்றாது அவிகொண்டனர். அதனால் முனிவர் கோபித்தனர். பின் பிரம புத்தார்களாகிய ஏகதர், துவிதர், திரிதர், என்பவர்களால் சமாதானஞ்செய்யப்பட்டார். பின் ஒரு முறை இந்திரயாகத்தில் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் யாகப்பசுவைப்பற்றி வாதம்வா வசு தேவர்களுக்காகப் பொய்கூற இருடிகள் இவனைப் பூமியில் விழச்சபித்தனர். இவன் சாபத்தால் பூமியில் விஷ்ணுவைப்பூசை செய்ய விஷ்ணு கருடனையேவி இவனைத் தூக்கி ஆகாயத்தில்விடக் கட்டளையிட அவ்வாறு செய்ய இவன் ஆகாயவாசி ஆயினன். (பா~சார்). |
உபலப்திசமை | சாதனாபாவம் வாதியாற் காட்டப்படினும் சாத்தியம் காணப்படுவதாகக்கூறல். |
உபவிதம் | 1. இது, சுருதி ஆசமஸ்மிருதி அனுட்டான முடையோர் பூணும் நூல், இதனை மூன்றிழை சேர்ந்த பருத்தி நூல் சேர்த்துத் திரித்து அதனை முப்புரியாக்கி முறுக்கிக்கொள்ளல் வேண்டும். சூத்ரருக்கு ஒரு சரமும், வைசியருக்கு இரண்டு சரமும், க்ஷத்ரியருக்கு மூன்று சாமும், அந்தணருக்கு எழு சரமும் பூணுதல் தகுதி. அவ்வாறன்றி ஐந்து சரமேனும் மூன்று சாமேனும் பூணல் தகுதி. செய்யும் வகை, நூலிழையை நான்கங்குலப் பிரமாணத்தில் (11) சுற்றுச்சுற்றி, அவ்வாறு மூன்றிழையெடுத்து ஒன்று சேர்த்து ஜலத்தில் நனைத்துக் கிழக்கு முகமாக இருந்து சமமாகவும், நன்சாகவுங், கீழ் முறுக்காகவும் முறுக்குதல் வேண்டும். பின் அந்த முறுக்கியநூலை முப்புரியாகப் பிடித்து வலதுகரத்தில் ஏற்றி மேல் முறுக்கு முறுக்குதல் வேண் டும். பூமியில் விழின் நீக்குதல் வேண்டும். முறுக்குங்காலத்தில் எவ்விதமாகப் பூமியை அடையக்கூடுமோ அவ்வி தமாகச்செய்க. மாமுதலியவற்றின் மேல் வைத்து முறுக்கின் முனிவர்கள் திருப்தி அடைவர். ஆயுளைக கோரினவன் அநேகந் தரித்தல் வேண்டும். இரட்டை தரித்தல் ஆகாது. மற்றை விஷயங்களில் அபேக்ஷித்தவன் ஒற்றைப்படையும், சுவல்ப சூத்ரமும் தரித்தல் வேண்டும். யஞ்ஞோபவீதத்தை முறுக்கியபின் தன் கண்டத்திலிருந்து இரண்டுபாகஞ் செய்து விதிப்படி ஸ்தனத்திற்கு நேராகக் கொண்டு அச்சூத்திரத் தினால் முடிச்சில் மூன்று சுற்றுச்சுற்றி மூன்று முடியாகப் போடவேண்டும். உத்தரீயாக்ருதியாகிய யஞ்ஞோபவீதம் அவை பிற் பாதிப்பிரமாணம் பருமனிருத்தல் உத்தமமாகக் கருதப்படுகிறது. எஞ்ஞருத்ரம் காண்க, 2. வேதியன் பூணூலையாவது உத்தரீ பத்தையாவது இடது தோளிலும் வலது கையின் கீழிலும் போட்டுக் கொள்ளல். (மனு, அத்~1). |
உபவேதங்கள் | நான்கு வேதங்களினின்று முறையே நான்கு உபவேதங்கள் உண்டாயின. அவை ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம், அர்த்தவேதம் என்பனவாம். அவற்றுள் ஆயுர் வேதத்தை இயற்றியோர் பிரமன், அஸ்வனிதேவர், தன்வந்தரி பகவான் முதலியோர். இதனுள் ரோகஉற்பத்தி, ரோகநிதானம், சிகிச்சை முதலிய கூறப்படும். தனுர்வேதம் இதனை விச்வாமித்திரர் இயற்றினர். இதனுள் முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம், யந்திரமுக்தம் என்று நான்கு வேறுபாடுகள் உண்டு. சக்ராதிகளை விடுதல் முக்தம், வாள் முதலிய அமுக்தம், நாராசாதிகள் முக்தாமுக்தம், சதக்னி முதலிய யந்திரமுக்தமாம். இவ்வேதத்தில் அத்திரசஸ்திர பிரயோக மந்திரங்களும், பகைவர் நாசமும், சிஷ்டபரி பாவனமும், ஜாரசோராதிகளின் கண்டனமும், கூறப்பட்டிருக்கின்றன. காந்துருவ வேதம் இது, பரதமுனிவரால் கூறப் பட்டது. இதனுள் ஸ்வர, தாள, மூர்ச்சாதிகளும், நிருத்ய, வாத்யாதிகளின் விஷயங்களும் தெளிவாகக் கூறப்படும். அர்த்த வேதம் இதற்குப் பலர் ஆசிரியர். இதில் சில்பம், பாகம், நீதி, அஸ்வசாஸ்த்ரம் முதலிய கூறப்படும். |
உபஸ்மிருதி | தரும நூல், அவை கண்ணுவம், கபிலம், லோகிதம், தேவலம், காத்யாயனம், லோகா, புதஸ்மிருதி, சாதாதபம், அதிஸ்மிருதி, பிரசேதம், தக்ஷம், விஷ்ணு, விருத்தவிஷ்ணு, விருத்தமனு, தௌமியம், நாரதம், பௌலஸ்தியம், உத்தராங்கிரம் என்பன. |
உபாசனை | இது இரண்டுவகை. தூலம், சூக்ஷ்மம், கன்மகாண்டம் பற்றியது தூலம். ஞானகாண்டம்பற்றிய உபாசனை சூக்ஷ்மம். |
உபாதி | சாத்தியத்தில் வியாபித்து ஏதுவில் வியாபியாமலிருப்பது. |
உபாத்யாயன் | வேதத்தையும், யாகாதி மந்திரங்களையும் கொஞ்சம் சம்பளம் வாங் திக்கொண்டு சொல்விப்பவன். மநு~அத் 1. |
உபாயன பத்திரம் | கையுறையாக கொடுக்கப்படும் பொருளைப் பற்றியது. |
உபாயம் | 1. அரசர்கள் பகைமேற் செல்கையில் செய்யும் மனோவ்யாபாரம். இது (4) வகைப்படும். சாமம், பேதம், தானம், தண்டம். இவற்றிக்கு முறையே சமாதானம், பிரித்துக்கோடல், பொருள்தால், போரிடுதல் என்பன பொருள். இவற்றுள், சாமம், பரஸ்பரோபகாரம், சக்ருதம், குணங்களைப் புகழ்தல், சுற்றத்தினனாதலைத் தெரிவித்தல், நானுன்னைச் சேர்ந்தவனென்று நல்வார்த்தை உறல் என ஐவகைப்படும். பேதம் ஒருவர்க்கொருவர் ஆகவிடாமற் கெடுப்பது, பாஸ்பா சங்கர்ஷணத்தை உண்டு செய்தல், ஸந்தர்ஜனம் என மூவகைப்படும். தானம் தன் பொருள் முழுதுமீகை, எங்கேனும் பொருள் வாங்கிக்கொண்ட பகத்தில் அதற்கு அநுகூலனாகக் கழித்தல், அபூர்வங்களாகிய வஸ்துக்களைத் தருதல், இவன் பொருளைக் கொள் அது உன் பொருளென ஒருவன் பொருளில் தானே பிரவர்த்திக்கச் செய் தல், ருணப்ரமோசனம் என ஐவகைப்படும். தண்டம் வதம், அர்த்த ஹாணம், பரிக்லேசம் என மூவகைப்படும். பின்னும் சந்தி கோசப்ரதான ஹேதுகம், தண்டப்ரதானஹேதுகம், பூமிப்ர தான் ஹேதுகம், எனவும், விக்ரஹம், பிரகாச யுத்தம் கூடயுத்தம், பாஷணியுத்தம், எனவும், ஆயனம், தவை தம், ஆச்ரயம் எனவும்படும். தண்டம் விக்ரஹயானம், ஸந்தானயானம், சம்பூயயானம், பரஸங்கயானம், உபேக்ஷ்யயானம் என ஐவகைப்படும். இவற்றுள், விக்ரஹயானம், சத்ருவைக் கேவலமாகவுபசம் ஹரிக்கவேண்டுமென்று போகை, சந்தானயானம், சத்ருவைத் தன்வசஞ் செய்துகொண்டு தன துர்க்காதிகளைக் ரெகிக்கச் செல்கை. சம்பூயயானம், தன்னால் சத்துரு செயிக்கக் கூடாதவனாயிருக்கையில் தனக்குச் சமமான அரசர்களைக் கூட்டிக்கொண்டு படையெடுத்தல். பாஸங்கயானம், ஒரு திசையில் போகவேண்டியிருக்க வேறொரு திசையில் படையெடும்த்துச் செல்கை. உபேக்ஷ்யயானம், பகைவனையான் வெல்லேன். என்னை அவன் வெல்லான் எனும் புத்தியால் தேசகாலாதிகளைப் பாராமல் படையெடுத்தல். 2. இந்த உபாயம் பின்னும் நட்புபற்றியசாமம், நட்புபற்றியதானம், நட்புபற். றியபேதம், நட்புபற்றியதண்டம் எனவும், பகைமைபற்றியசாமம், பகைமைபற்றியதானம், பகைமைபற்றியபேதம், பகைமை பற்றியதண்டம் என எண்வகைப்படும். அவை எனக்கு நின்னையொத்த நண்பன் வேறிலை என்பது நட்புப்பற்றியசாமம். என் வாழ்க்கைக்குரிய எல்லாப் பொருளும் நின்னுடையவே என்பது நட்புப்பற்றிய தானம். ஒரு நண்பன்பால் பிறநண்பர்களின் குணத்தை ஒருவன் பாராட்டிப் பேசின் அது கேட்கும் நண்பனது மனதை வேறுபடுத்து மாதலின் அது நட்புப்பற்றிய பேதம். நீ இப்படிப்பட்டவனாயின் நான் உன்னோடு நட்புக்கொள்ளேன் என்பது நட்புப்பற்றியதண்டம். ஒருவன் என்பகைவனை நோக்கி நீயும் நானும் ஒருவர்க்கொருவர் கேடுசெய்ய எண்ணலாகாது துணை செய்பவராதல் வேண்டுமெனல் பகைமைபற்றியசரமம். ஒருவன் தனக்குரிய பகைவர் பலருள்ளும் வலிமையுள்ள பகைவருக்கு ஆண்டுதோறும் அரசிறைகொடுத்து மகிழ்வித்தல் பகைமை பற்றிய நானம், பகைவரது பொருள் முதலிய கருவிகளுக்குக் குறைவு செய்தலும், அந்தப் பகைவரினுஞ் சிறந்த வலியுள்ளாரைச் சார்ந்திருத்தலும், அப்பகைவரிற் வாழ்ந்தாரை வலியுடையராகச் செய்தலும் பகைமைபற்றிய பேதம், பகைவரைக் கள்வரால் துன்புறுத்தலும், அவரது பொருள் தானிய முதலியவைகளைக் கெடுத்தலும், அவரிடம் தீயொழுக்கம் கண்டு அவரினும் சிறந்த வலியுளாரால் அச்சுறுத்தலும், போர்நேரிட்டவிடத்துச் சுத்தவீரரால் அச்சுறுவித்தலும் பகைபற்றிய தண்டமாம். தண்டத்தின் வகைகள் கடுஞ்சொற்கூறி விலக்கல், மானக்கேடு செய்தல், உணவில்லாது வைத்தல், தளையிட்டுச் சிறைப்படுத்தல், அடித்தல், பொருள் கவர்தல், நகரத்தினின்று வெளிப்படுத்தல், உடலிலென்றும் மாறா அடையாளமிடல், மாறுபட தலைமழித்தல், கழுதைமீதேற்றி ஊர்திரிவித்தல், கை, கால் முதலிய உறுப்புக்குறைத்தல், முதலியவாம். |
உபாலி | புத்தனுக்குச் சீடன். |
உபேந்திரர் | விஷ்ணுவினவதாரமாகக் கச்யப பிரசாபதியின் தவத்தால் அதிதி வயிற்றிற் பிறந்தவர். தெய்வலோகத்தில் இந்திரனுக்குத் துணையாயிருப்பவர். |
உபேந்திராசிரியர் | சிநேந்திரமாலை செய்தசைநர். இவர்க்குச் சைநமாமுனிவர் என்றும் பெயர். |
உப்பணன் | வசிட்டருக்கு ஊர்சையிட முதித்த குமரன். |
உப்பு | 1. உவர்மண்ணிலுண்டானது. இது மண்ணில் உவராக இந்திரனுடைய பிரமகத்தியைத் தேவர்கள் பிரித்ததனால் தேவர்களுக்கு அவிஸ் உப்பில்லாமல் சமைக்கப்படுகிறது. (பார~சாங்). 2. இது, கறியுப்பு, பதார்த்தவகைகளில் சேர்ப்பது. இது கடல் நீரைக் கடற்கரை யோரத்திலுள்ள இடங்களில் நீரைப்பாத்தி போல் கட்டிப் பலமுறை உப்பு நீரை இறைத்து இறைத்து உலர்த்தினால் அவற்றில் உப்பு எழும். இதுவே கறியுப்பு. இந்த நீரைக் காய்ச்சினும், உவர்மண்ணைக் காய்ச்சினும் உப்புண்டாம். கல்லுப்பு பூமியிலிருந்து வெட்டியெடுப்பது. இவ்வுப்புகள் பலவகை. அமுரியுப்பு, இருதுப்பு, கந்தக உப்பு, கரி உப்பு, பொட்டிலுப்பு, வெடியுப்பு, இவற்றின் நிறங்களும் குணங்களும் வேறு. 3. விஷ்ணுலோகத்தில் உண்டானது. இதைத் தானஞ் செய்பவன் மிகவும் விசேஷபதம் பெறுவன். இதனை மரணகாலத்தில் தானஞ்செய்யின் யமபயமில்லை. (கருடபுராணம்). |
உப்புரவர் | இவர்கள் சகார் ஆயாயைத் தோண்டிய காலத்தில் பூமியைத்தோண்டி உதவி செய்தவர் என்பர். இவர்கள் உப்பு அளத்தில் வேலை செய்வதால் இப்பெயர் அடைந்தனர் என ஊகிக்கப்படுகிறது. |
உப்பூரிகுடிகிழார் | உருத்திரசன்மனார்க்குத் தந்தை. |
உப்பூர் | உருத்திரசன் மனாருடைய ஊர். இதில் இராமராற் பூசிக்கப்பட்ட விநாயகராலய மொன்றுண்டு. இவ்வூர் பாம்பக்குடிக்கு ஈசானத்திலுள்ளது. (திருவிளை). |
உப்பை | ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்து ஊற்றுக்காட்டிலமர்ந்தவள். இவள் பிருகு பத்தினி திரிமூர்த்திகளைச் சனனமெடுக்கச் செய்ததால் அவர்களிவளைச் சனனஞ் செய்யச் சொன்னபடி பூமியிலவதரித்து வண்ணார் வளர்க்க மாரியம்மையாயினள். (திருக்குறள் வள்ளுவர் சரிதை). |
உமட்டூர் கிழார்மகனார் பரங்கொற்றனார் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர் இவர் தந்தையார் உமட்டூர் கிழார் என்பவர். வேளான் குடியினர். இவர் ஆய் என்பானது கானத்தின் வளத்தைப் பாடினர். (அகம்~46). |
உமாபதி | சிவன். |
உமாபதிசிவாசாரியர் | இவர் சோழநாட்டில் திருப்புலியூரில் சைவவேதியர் குலத்தில் அவதரித்து வேதசிவாகமங்களை ஓதியுணர்ந்து மூவாயிரநாட்களுக்கு ஒருநாளில் நடராஜ்ன் பூசைபுரிந்து சிவிகையூர்ந்து செல்வோர், திருக்கடந்தை மறைஞான சம்பந்தர் ஆண்டு மதுகர விருத்தி செய்வாரை நோக்காது செல்லுகையில் பட்ட கட்டையிற் பகற்குருடன் போகிறான் என அவர் கூறக்கேட்டு, அவரது திருவடி பணிந்திருக்கையில் ஒருநாள் இவரது பரிபாகமறிய மறைஞானசம்பந்தர் நெய்வார் தெருவில் சென்று அக்காருகர் பாவிற்கு இடும் கஞ்சியினைக் கையேற்றுண்கையில் உமாபதியாரும் அக்கையினின்றும் ஒழுகிய கூழையுண்டு உடன் வதிந்தனர். மறைஞானசம்பந்தர் இவரது பரிபாகமறிந்து சிவஞான போதத்தை உபதேசித்தனர். இவ்வகை இருக்கையில் இவரைத் தில்லை மூவாயிரவர் ஆசாரபிரஷ்டனென்று விலக்கக் கண்டு அரசனால் கொற்றவன் குடியில் ஓர் மடங்கொண்டு அதில் தாம் நிட்டை புரிந்திருக்கையில், தமக்கு நடராஜன் பூஜை முறைரை அக்காலத்து உமாபதியார். பூசிக்கச் செல்ல அத்தில்லை மூவாயிபவர் விலக்க உமாபதியார் மீண்டும் மடமடைந்து மானதத்தால் பூசித்திருந்தனர். படுத்த அந்தணர் திருக்கோயிலடைந்து திருக்கதவம் நீக்கிப் பூசைப்பெட்டகத்தை நோக்கப் பெட்டகம் காணாதவராய்த் திகைத்து வருந்துகையில் நாம் உமாபதிப் பெட்டகத்தில் இருக்கின்றோமென அசரீரியால் கூறக்கேட்டு அந்தணரனைவரும் உமாபதியாரைப் பணிந்து அழைத்து வந்து பூசைபுரிவித்தனர். இவ்வகை இவர் கொற்றவன் குடியில் எழுந்தருளியிருக்கையில் பூர்வஞ்செய்த பாபவசத்தால் வேதியன் ஒருவன் புலையனாய்ப் பெற்றான் எனும் பெயருடன் வளர்ந்து ஒரு புலைச்சியை மணந்து தன்பிறப்பில் அருவருப்படைந்து பூருவ புண்ணியத்தால் சுற்றத்தைவிட்டுத் தன்னூரைவிட்டு நீங்கித் தில்லையடைந்து கட்டை வெட்டித் திருச்சிற்றம்பல முடையார் திருமடைப்பள்ளிக்கு வேதியர்வழியாகக் கொடுத்து வருகையில் பரிபாகமடையச் சிவபெருமான் பெற்றான் சாம்பான் கனவிடைத்தோன்றி உமாபதிசிவாசாரியருக்குக் கொடுக்கும்படி திருமுகப்பாசுரம் ” அடியார்க் கெளியன் சிற்றம்பல வன்கொற்றங், குடியார்க்கெழுதிய கைச்சீட்டுப், படியின்மிசைப் பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து, முத்திகொடுக்க முறை” என எழுதிய திருமுகங்கண்டு சிரமேற்றாங்கி அதனைப் பத்திரப்படுத்திக் கொற்றவன் குடிவந்து அங்குச் சிலநாள் மடத்திற்கு விறகு வெட்டித் தரும் திருப்பணி செய்து வருநாட்களில் ஒருநாள், மழையால் பெற்றான் சாம்பான் வரத்தாமதித்ததால் போஜன வேளை தாமதிக்க உமாபதியார் காரணங் கேட்க அந்தணர்கள் மடைப்பள்ளிக்கு நாடோறும் ஒருவர் விறகு தந்து வருவர். அவர் இன்றைக்கு வராததனால் தாமதித்தது என்றனர். இதனைக் கேட்ட உமாபதியார் நாளை அவர்வரின் நம்மிடைக்கூறுக என்றனர். அவ்வாறே பெற்றான் சாம்பான் மறுநாள் இரண்டு நாள் விறகும் கொண்டுவரக் கண்டோர் உமாபதியாரிடங் கூற, உமாபதியார் பெற்றானை அழைத்து நீ யார் எனப் பெற்றன். இறைவன் தந்த திருமுகத்தை வைத்துத் தொழலும் அத்திருமுகத்தை வேதியர் உமாபதியார்க்குத் தர அதனை நோக்கிச் சிரத்தில் வைத்துத் திருநயனங்களில் ஒற்றி அரனாணையை யெண்ணியப் பெற்றான் சாம்பானுக்குச் சத்தியோநிருவாண தீக்ஷையால் முத்தியளித்தனர். இவர் சிதம்பரத்தில் துவசாரோகணம் தடைபட்டிருக்கக் கொடிக்கவி அருளிச்செய்து அதை ஏற்றினர். இவர், பௌஷ்கர வியாக்யானம், கோயிற்புராணம், திருத்தொண்டர்புராணசாரம், திருமுறைகண்டபுராணம், சேக்கிழார்நாயனார்புராணம், திருப்பதிகக்கோவை, சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்பநிராகாணம், சிவபுண்ணியத்தெளிவு முதலிய அருளிச் செய்தனர் இவர் காலம் சாலி வாகனசகம் (1228) என்பர். |
உமாமகேகரவிரதம் | சித்திரை அல்லது மார்கழி பூர்வபக்ஷத்தில் அஷ்டமி சதுர்த்தசி, பௌர்ணமிகளில் தொடங்கி மண்டபமமைத்து அதில் உமாமகேசுவரரைத் தாபித்து விதிப்படி பூசைசெய்து பிராமன தம்பதிகளை உமாமகேசுரராகப் பாவித்து அவர்களுக்கு வேண்டிய கொடுத்துப் போஜனமளித்து உபசரிப்பது. |
உமாமகேசன் | பஞ்சகிருத்தியத்தின் பொருட்டு உமையோடு பொருந்திய சிவாவசரம். |
உமாறு புலவன் | சீதக்காதியின் மந்திரியாகிய அப்துல் காசிம் என்பவரால் சன்மானிக்கப்பட்டு மகம்மத்கபியைப்பற்றிச் சீராபுராணம் பாடியலப்பை. |
உமிழ்தலு மலசல மோசனம் செய்தலு மாகா இடங்கள் | புல் முளைத்துள்ள இடம், பயிர் விளைகின்ற இடம், பசுச் சாணமுள்ள இடம், சுடுகாடு, பலர் நடமாடுமிடம், தீர்த்தம், கோயில், நிழலுள்ள இடம், பசுமந்தை நிற்குமிடம், சாம்பல் முதலிய இடங்களாம். |
உமேசன் | உமாமகேசனைக் காண்க. |
உமை | 1. சத்திக்கு ஒரு பெயர். மேனையின் புத்ரி, பித்ருவம்சம் காண்க. 2. மகான் என்னும் ஏகாதசருக்ரன் தேவி. 3. சத்தியாதனனைக் காண்க. |
உம்பர்க்காட்டிளங்கண்ணனார் | கடைச்சங்க மருவிய புலவர். |
உம்பூதவுரு | தோற்றிய உருவமுடைமை. |
உயர்வு நவிற்சியணி | அஃதாவது ஒரு பொருளானது தன் சொல்லாற் சொல்லப்படாமற் கேட்போரை மகிழ்விப்பதும். இஃதஃதன்றென்று தெரிந்து தன்னிச்சையாலாமென்று கொள்ளப்படுவதுமாகிய ஆரோப நிச்சயத்திற்கு விஷயமாகுதலாம். இதனை வடநூலார் அதிசயோக்திய லங்காரமென்பர். |
உயிச்சன் | திருதராட்டிரன், தன் குமரருள் ஐவர். நான்காநாள் யுத்தத்தில் இறக்கக்கேட்டு விசனப்படும்போது திருதாரட்டிரனைத் தேற்றிய நண்பன். |
உயிரல் பொருட்குணம் | அறிவுமயமாகிய உயிர் ஒன்றும் நீங்க மற்ற எல்லாப் பொருட்குணங்களாம். |
உயிரளபெடை | பாட்டில் ஓசை குறை பின் அவ்வோசையை நிறைக்க நெட்டெழுத்தேழிலொன்று அளவில் நீளுதல். |
உயிரின் தொழிற்குணம் | துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல் முதலிய. (நன்). |
உயிருண்ணிப்பூண்டுகள் | 1. இவ்வகைப் பூண்டுகளும் செடிகளும் அமெரிக்கா தேசத்தில் மிகுதியாக இருக்கின்றன. இவற்றுள் சிலவற்றில் பூச்சிகள் தாமே போய்ச் சிக்கிக் கொள்வனவும், சில தாமே பூச்சிகளைத் தாவிப் பிடிப்பனவும். சில தமது பசையில் பற்றிக்கொள்ளப் பிடித்துக் கொன்வனவாகவும் இருக்கின்றன. மத்ய அமெரிக்காவில் வாழைப்பூவின் புறஇதழ் போன்று அகன்று ஓரத்தில் முட்கன் பெற்றும் இடையில் மினு மினுப்படைந்து கூரிய முட்கள் பெற்றுமுள்ள இவைகளைப் பெற்ற ஒருவகைப் பூண்டிருக்கிறது. இதனிடையிலுள்ள மினு மினுப்பைக் கண்டு பூச்சிகளதனை அடைந்தவுடன் இலைகள் அப்பூச்சுகளை மூடிக்கொள்ள ஒருவகை திரவம் அதிலுண்டாகிப் பூச்சியைக் கரைத்துத்தின்கிறது. மற்றொருவகைச் செடி அமெரிக்காவில் உண்டு. அதன் இலைகள் சுணையுள்ளனவாயும் அகன்று அழுத்தமாகவும் இருக்கின்றன. இது, சுண்டெலி ஒணான் போன்ற பிராணிகள் தன்னை நெருங்கிவரினவற்றைத் தாவிப் பிடித்து இலைக்குள் வைத்துச் சுருட்டிக்கொண்டு மாமிச முழுதும் உறிஞ்சியபின் விரிந்து விடுகிறது, 2. வீனஸ் பிளைட்ராப் (VENUS FLYTRAP) இப்பெயருள்ள மற்றொரு செடி அமெரிக்கா நாட்டிலுண்டு. இதனிலைகள் நீண்டு (2) மடல்களாகப் பிரிந்து இருக்கின்றன. மடல்களினுள்ளிடத்தில் நுண்ணிய முட்கள் நிறைந்திருக்கின்றன. பூச்சிகள் விரிந்துள்ள இலைகளில் பட்டவுடன் இலைகள் குவிந்து பூச்சிகளை வெளிப்படுத்தாது கொன்று அடிப்பாகத்திற் செலுத்தி அதிலுள்ள திரவத்தால் கரைத்து உறிஞ்சி விடுகிறது. 3. சாரசினியா (SARRACENIA) இது அமெரிக்காவிலுள்ள ஒரு செடி. இதன் இலைகள், உட்புறத்தில் குடைவுள்ளவாயும் மேற்புறம் குடத்தின் கழுத்துப்போல் குறுகி நுனிவிரிந்துமிருக்கும். இவ்விலையினுட்புறம் ஒருவகை மணம் உண்டு அந்த மணம் பூச்சுகளையுள்ளிழுக்க அவை சென்று மீண்டும் வெளி வருதற்கியலாது சாகின்றன அவற்றை அச்செடிகள் உணவாகக் கொள்ளுகின்றன. 4. டார்லிங்டோனியா (DARLINGTONIA) இது, ஒருவகை உயிருண்ணிப் பூண்டு. அமெரிக்காவிலுள்ளது. இதனிலைகள் நீண்டு குழல்போல் நுனியில் குவிந்து மூடிக்கொண்டிருக்கிறது. இவ்விலையின் மேற்பக்கம் கண்ணாடி போலவும், அடிப்பாகம் சிறு துவாரம் பெற்றும் இருக்கிறது. அத்துளை வழியில் தேன் போன்ற திரவம் கசிந்து கொண்டிருக்கிறது. அதைக் குடிக்கச் சென்ற சிறு பூச்சிகள் மீண்டும் வெளிவர முடியாதிறக்க அவற்றை ஆகாரமாகக் கொள்ளுகிறது. 5. நீபன்தீஸ் (NEPANTHES) இது பூச்சிகளைப் பிடித்துண்ணும் செடி. இது கிழக்கு இந்தியத்தீவிலுள்ளது. இதன் இலைகள் இரண்டு பாகமாகப் பிரிந்து இருக்கின்றன. இலைகளின் முனையில் கம்பி போல் ஒரு கொடி நீண்டு அதன் முனையில் குடம் போல் ஒரு உறுப்பைப்பெற்று அதன் வாயை மூட இலைபோல் ஒரு மூடி பெற்றிருக்கிறது. குடத்தின் தலையிலுள்ள இலையினடியில் தேன் போன்ற திரவம் திரவிக்கிறது. அதை உண்ண பூச்சிகள் உட்சென்றவுடன் இலைபோன்ற மூடி வெளி வரவிடாது மூடிக்கொள்கிறது. விழுந்த பூச்சிசன் அதன் திரவத்தில் வீழ்ந்திறக்க பூண்டு அவற்றைக் கரைத்து உணவாகக் கொள்கிறது. 6. சன்ட்யூ (SUNDEW) இது, அமெரிக்காவிலுள்ள ஒருவகைச் செடி. இதன் இலைகள், நீண்ட காம்புகளைப் பெற்று முனையில் திரட்சியடைந்திருக்கின்றன. இலைகளின் உட்புறம் குழிந்தும் வெளிப்புறம் கவிந்துமிருக்கிறது. இலைகளின் வெளிப்புறத்தில் முட்கள் நிறைந்துள்ளன. அம்முட்களில் ஒருவகைப் பசை உண்டு. அச்செடி தன்னருகில் பூச்சிப் புழுக்கள் உலாவுதல், பறத்தலை அறிந்து கொள்கிறது. உடனே அதன் இலைகள் பேயாடு வதுபோல் ஆடத் தொடங்கிப் பூச்சிகளைத் தாவிப்பிடித்துக் குழிந்த உட்புறஞ்செலுத்திச் சுருட்டிக்கொண்டு தன்னிடம் உள்ள திரவப்பசையினால் கொன்று கரையச் செய்து உணவாக்கிக்கொண்டு முன்போல் விரிகிறது. இதுபோல் தண்ணீரில் ஒரு வகைச் செடி மீன்களைப் பிடித்துத் தின்கிறதாம். 7. பிளாடர் ஓர்ட் (PLADDER WORT) இது ஆஸ்திரேலியாவிலுள்ள ஒருவகை உயிருண்ணிப்பூண்டு. இது, நீர் தேங்கியுள்ள இடங்களில் மிகுதியுமிருக்கிறது. இதன் இலைகள் இளம்பசுமை கூடிய மங்கல் நிறமானது. இலையின் மேற்புறம் மெல்லிய தொளையுடன் ஜவ்வு போன்ற உறுப்பால் மூடப்பட்டிருக்கிறது. அத்தொளை வழியில் சிறு முட்கள் உட்புறம் கவிந்திருக்கிறது. அத்தொளையின் நீரின் அசைவால் திறத்தலும் மூடலும் பெறுகிறது. அம்மூடியினுள் புகும் பூச்சி புழுக்கள் மீண்டும் வரவிடாமல் மூடிக் கொள்ளப் பிராணிகள் உள்ளடங்கி அதிலுள்ள திரவத்தால் கரையச் செடி அவற்றை உணவாகக் கொள்கிறது. |
உயிரெழுத்துக்கள் | இவை தமிழ்ப் பாஷைக்கு முதலெழுத்தின் வகை. இவை மெய்யெழுத்திற்கு உயிர்போலிருத்தலின் இப்பெயர் பெற்றன. இவை தனித்தியங்கும் எழுத்துக்கள். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஆகப்பன்னிரண்டு. (நன்). |
உயிர் | ஆன்மாவின் ஒற்றுமைப்பட்டு கால முடிவு வரையினின்று காலத்திறுதியில் பூததேக நீங்கிச் சூக்ஷ்மசரீரத்துடன் ஆன்மாவைப் பின்பற்றிச் செல்லும் அருவுருவப்பொருள். அது உருவமாய் பௌதிக தேகத்தால் காணப்படுதலின் உருவும், இன்னவுருவென அறியப்படா திருத்தலின் அருவுமாம். இது புருடனிடத்து ஆறறிவுடனும், விலங்குகளிடத்து ஐயறிவுடனும், வண்டு, ஞெண்டு முதலியவற்றில் நான்கறிவுடனும் சிதல் எறும்பாதியில் மூவறிவுடனும், நந்து, அட்டை முத லாதியில் ஈரறிவுடனும், புல், மரம் முதலியவற்றில் ஓரறிவுடனும் காணப்படும். |
உயிர்க்குணம் | அறிவு, அருள், ஆசை, அச் சம், மணம், நிறை, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மையல், நினைவு, வெறுப்பு, உவப்பு, இரக்கம், நாண், வெகுளி, துணிவு அழுக்காறு, அன்பு, எளிமை, எய்த்தல், துன்பமின்பம், இளமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவிமுதலிய. |
உயிர்மெய் எழுத்துக்கள் | உயிரும் மெய்யும் கூடிப் பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்தாம். உயிர்மெய் எழுத்துக்கள் இரு நூற்றுப் பதினாறு. |
உயிர்வேதனை | (12) அனல், சீதம், அசனி, புனல், வாதம், ஆயுதம், விஷம், மருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை. |
உய்த்தலில் பொருண்மை | இது வைதருப்பச்செய்யுணெறியி லொன்று. கவி தன்னாற் கருதப்பட்ட பொருளை விளங்க விரிக்குஞ் சொல்லைச் செய்யுளுள்ளே யுடைத்தாய்ப் பிறிது மொழிகூட்டி யுரைக்கும் பெற்றியின்றி வரத்தொடுப்பது. (தண்டி) |
உய்த்துணர்வணி | அஃதாவது ஒரு காரியம் முற்றுப் பெறுதற் கிஃதிவ்வாறாமெனினென ஊகித்தலாம். இதனை வடநூலார் சம்பாவனாலங்கார மென்பர். |
உய்யக்கொண்டார் | 1. நாதமுனிகளுக்குப் பின் வந்த வைஷ்ணவாசாரியர். இவர் சயத்சேநாம்சமாய்க் கலி (3627) இல் பராபவ சித்திரையா புதன்கிழமையில் அவதரித்தனர். 2. புண்டரீகாக்ஷரைக் காண்க. |
உய்யவந்த தேவநாயனார் | 1. இவர் உத்தர பூமியிலிருந்து தக்ஷணயாத்திரையாகச் சென்று காவிரிக்கரையி லெழுந்தருளி யிருக்கையில் திருவியலூர் ஆளுடைய தேவநாயனார் இவரைக் கண்டு பணிந்து ஞானோபதேசம் பெற்றனர். இவர், மாணாக்கர் வேண்டுகோளுக் கிரங்கித் திருவுந்தியார் என்னும் சைவசித்தாந்த சாத்திரம் திருவாய் மலர்ந்தருளினர். இவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாருக்குப் பரமாசிரியர். இவர் காலம் சாலிவாகனசகம், 1070. 2. இவர் திருக்கடவூர். திருவியலூர் ஆளுடைய தேவநாயனார்க்கு மாணாக்கர். இவர் ஸ்ரீ சிதம்பரத்தில் எழுந்தருளி யிருக்கையில் தம்மையடுத்த மாணாக்கர் பொருட்டு ஒரு சாத்திரஞ் செய்து நடேசர் சந்திதியில் இட, அவ்விடம் கருங்கற்படியில் சிலையாற்செய்த யானை அதை எடுத்து நடேசரிடம் இட்டது. ஆதலின் இவர் அருளிச்செய்த சாத்திரத்திற்குத் திருக்களிற்றுப்படியார் எனப் பெயரிட்டனர். இவர் காலம் சாலிவாகனசகம் 1100 என்பர். |
உரகபுரி | தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கரை துறைபட்டணம். இதுவே நாகப்பட்டணம். அர்ச்சுனனால் ஜயிக்கப்பட்டது. NAGAPATAM, & SEAPORT TOWN IN THE DISTRICT OF TANJORE. IT WAS ONCE THE CAPITAL OF PANDYS. |
உரல் | கல்லாலும் மரத்தாலும் பொருள்களை நசுக்கவும் சுத்தஞ் செய்யவு மமைத்த குழிந்த உரு. பொருளை நசுக்கும் கருவி உலக்கை. |
உரானஸ் | (URANUS) இது ஒரு நவீன கிரகம். இது சூரியனுக்கு ஏழாவது வட்டத்தில் உள்ள து. இது (1781) இல், S. W. ஹர்சல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட தாம். இது, (178) கோடியே (10) லக்ஷம் மைல் தூரத்திற்கப்பாலிருந்து சூரியனைச் சுற்றி வருகிறதாம். இது, (30,686) சுமார் (84) வருஷகாலத்தில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் குறுக்களவு (31,900) மைல். இதற்கு (4) உபக்கிரகங்களிருக்கின்றன என்பர். இதனை அடுத்த வட்டத்தில் நெப்டியூன் கிரகம் இருக்கிறதென்பர். |
உரிசிராசுவன் | சேநசித்தின் குமரன். |
உரிசை | தேவசன்மன் தேவி. இந்திரன் இவளைக்கண்டு மோகித்து இருடியுருக்கொண்டு வர விபுலனால் தப்பினவள். ஆகாயத்தில் போகும் அப்சரசின் மாலையைக் கண்டு புருஷனிடங் கூறி மாணாக்கனால் பெற்றுக்கொண்டவள். |
உரிச்சொனிகண்டு | இது காங்கேயரியற்றியது. உரிச்சொற்களைத் திரட்டிக் கூறிய நூல். |
உரிச்சொல் | பலவகைப்பட்ட பண்புகளையுங்கூறும் பெயராய் ஒரு குணத்தையும், பல குணத்தையும் தழுவிப் பெயர்வினைகளை நீங்காவாய்ப் பொருட்குரிமை பூண்டு நடப்பன. |
உரிமைக்காரர் | இவர் தப்பட்டையடிப்பவர். இவர்கள் தோட்டிகள். பறைச்சாதியாரில் சேர்ந்தவர்கள். மதுரை முதலிய இடங்களில் வசிப்போர். |
உரு | ஒரு அசுரன். துற்கனுக்குத் தந்தை. |
உருகன் | கிருஷ்ணன் குமரன். |
உருகாயன் | திரேதாயுகத்தில் விஷ்ணுவின் பெயர். |
உருகுஏகன் | சிவகணத்தவரில் ஒருவன். |
உருக்காதேவி | (சந்). அரசர்மீளியின் பாரி. |
உருக்கிரமர் | 1. காச்யபருக்கு அதிதியிட முதித்த குமார். இவர் விஷ்ணுவின் திரு விக்ரமாவதாரம். பாரி கீர்த்தி, குமரன் சௌபகன். 2. துவாதசாதித்தரில் ஒருவன். |
உருக்கீரயன் | விஷ்ணுவி னவதாரங்களில் ஒன்று. தந்தை நாபிப்பிரசாபதி, தாய் மேரு. |
உருக்கும நேத்ரன் | பீஷ்மகன் குமரன். இருக்குமணியுடன் பிறந்தவன். |
உருக்குமகேசீ | பீஷ்மகன் குமரன். இருக்மணியுடன் பிறந்தவன். |
உருக்குமணி | இருக்குமணியைக் காண்க. |
உருக்குமதரன் | பீஷ்மகன் குமரன். இருக்மணியுடன் பிறந்தவன். |
உருக்குமன் | சாருமதிக்குத் தந்தை. |
உருக்குமபாகு | பீஷ்மகன் குமரன். இருக்மணியுடன் பிறந்தவன். |
உருக்குமி | பீஷ்மகன் குமரன் இருக்கு மணியுடன் பிறந்தான். கம்சனுக்கு நண்பன். இவன் இருக்குமணியைச் சிசுபாலனுக்கென வைத்திருந்தனன். இதனைக் கண்ணன் அறிந்து இருக்குமணியைக் கவர்ந்து உருக்குமியைத் தேர்க்காலில் கட்டித் துவாரகைக்குக் கொண்டுபோக, இவன் இருக்குமணியை மீட்காமலும் கண்ணனைச் சங்கரிக்காமலும். மீளேன் என்று போஜ கூடமென ஒரு பட்டணம் நிருமித்ததிலிருந்தவன். குமரி உருக்மவதி, இவன் குமரி உருக்மவதி கல்யாணத்திற்கு வந்திருந்த கலிங்கன் இவனைப் பலராமருடன் சொக்கட்டானாட ஏவ இவன் அவருடன் சொக்கட்டானாடித் தோற்றுத்தான் செயித்ததாகத் தன்னை உயர்த்தி அவரை இகழ்ந்ததனால் பலராமரால் கொல்லப்பட்டவன். அக்காலத்தில் கலிங்கனுக்கும் பற்களுதிர்ந்தன. |
உருக்கெம்பீரன் | இந்திரசாவர்ணி மநுப்புத்ரன். |
உருக்க்ஷயன் | (பு) மகாவீர்யன் குமரன். இவன் குமரர் திரையாருணி, புஷ்கராருணி கவி, இந்த வம்சத்தவர் வேதியராயினர். |
உருக்மவதி | உருக்மியின் குமரி, பிரத்தியும் நன்பாரி. |
உருக்மாங்கதன் | இருக்குமாங்கதனைக் காண்க. இவன் வீமன் குமரன். இவன் வேட்டைக்குச் சென்று தாகத்தால் கவிமுனிவர் ஆச்சிரமம் போய்த் தாகத்திற்கு நீர் கேட்க, அவர் பத்தினியாகிய முகுந்தை இவனைக் கண்டு காதல் கொண்டழைக்க அரசன் மறுத்தமையால் முகுந்தை யென்னுமிருடி பத்தினி, அரசனுக்கு வெண்குட்டரோக முண்டாகச் சபிக்க அரசன் நகாஞ் செல்லாது காட்டிலிருந்து நாரதமுனிவருபதேசத்தால் சிந்தாமணி தீர்த்த முதலிய ஆடிப் புனிதமாயினன். |
உருசங்கு | (ருசங்கு.) உசங்கைக் காண்க. |
உருசி | 1. பிரமாக்களில் ஒருவன். ஸ்ரீ யஞ்ஞ மூர்த்தியாகிய விஷ்ணுவைக் குமரராகப் பெற்றவன். தேவி, ஆகுனாதி அல்லது ஆகுதி. குமரி தக்ஷணை, குமரன் சுயக்யன். 2. இத்மவாகன் தேவி. |
உருசிப்பிரசாபதி | இவன் தன் தேசமுதலியவற்றை விட்டுக் கல்யாணமில்லாதிருக் கையில் பித்ருக்கள் தோன்றி என் நீ கல்யாணஞ் செய்து கொள்ளவில்லை என்றனர். உருசி, தனக்கு இல்லறத்திலுள்ள வெறுப்பைக் கூறப் பித்ருக்கள் நீ மணங்கொண்டு இல்லறம் நடத்தாவிட்டால் எங்களுக்கு நாகம் உண்டாகுமென அரசன், நான் கிழவனாய் விட்டபடியால் எனக்கு யார் பெண் கொடுப்பாரென்று பிரமனையெண்ணித் தவமியற்ற அப்பிரமன் தரிசனம் தந்து, நீ நல்ல புத்ரனைப் பெற்றுப் பிரசாபதியாக என்று வரந்தந்து மறைந்தனன். பின்பு மச்சடி நதியிலிருந்து பிரமலோசையெனும் ஒரு அப்சரசு வந்து அரசனைப்பார்த்து எனக்கு வருணபுத்ரனாகிய புஷ்கரன் தேசசால் மாலினி எனும் பெண்ணிருக்கின்றனள். அவளை நீர் மணந்து ஒரு புத்ரனைப் பெறுக என்றனள். அரசன் அவ்வகை செய்து சோச்சியனென்னும் புத்ரனைப் பெற்றுப் பிரசாபதியாயினான். தவத்தால் இவன் சித்தம் ருசி பெற்றதால் இப்பெயர் பெற்றனன். |
உருசீகன் | (ய) உசநசு குமரன். இவன் குமரர் புருசித், ருக்மன், ருக்மேசி, பிருது, சாமகன். தருமன் குமரன் என்பர். |
உருசு | வசுதேவருக்குத் தேவகியிடமுதித்த குமரன். |
உருசுகன் | (சந்) தேவாபிகுமான். மனைவி தேவை. |
உருச்சவன் | சதச்ரவன் குமரன். |
உருட்சூதன் | (சூ.) பிரகத்திரதன் குமான். |
உருத்தன் | கத்ரு குமரன், நாகன். |
உருத்திர தீர்த்தம் | ஒரு தீர்த்தம். இது கங்கைக் கரையிலுள்ளது. |
உருத்திரகோடி | இது வேதாசலமென்னும் தலத்திலுள்ள தீர்த்தமும், தலமும் இதில் அநேக ருத்ரர் ஸ்நானஞ்செய்து சித்தியடைந்தனர். (திருக்கழுக்குன்றபுராணம்). |
உருத்திரகோடிதீர்த்தம் | பாண்டவர்கள் வனவாசத்தில் ஸ்தானம் செய்த ஒரு தீர்த்தம். (பா. வன). |
உருத்திரங்கண்ணனார் | இவர் சங்கப்புலவருள் ஒருவர். இவரைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பர். பத்துப்பாட்டில் தொண்டைமானிளந்திரையன் பொருட்டுப் பெரும்பாணாறு பாடியவர். பெரும்பாணாறு, இளந்திரையன் நாட்டின் வளத்தையும், அவன் கொடையையும் புகழ்வது, பட்டினப்பாலை, கரிகால்வளவன் நாட்டினையும் ஆற்றினையும் கொடையையும் புகழ்வது. |
உருத்திரசன்மர் | 1. மதுரை உப்பூரிக் குடிக்கிழார் மகனார். 2. சிவபூசையால் குருடு நீங்கிய அந்தணர். |
உருத்திரசாவர்ணி | பன்னிரண்டாம்மன் வர்தாத்து மனு. |
உருத்திரசித்தமகருஷி | உருத்திரர் உடலிற் பிறந்த ருஷிசிரேட்டர். |
உருத்திரசுவாமி | ஒரு வேதியன். இவன், பத்தினி அதிதிக்கு அன்னமிடாததால் கோபித்து, அவளைக் கொன்று கிணற்றி விட்டு நீங்கப் பிரமகத்தியாற் பிடியுண்டு இருபத்தைந்து வருடம் துன்பமடைந்து பிறகு வடவனத்தில் முத்தித் தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து புனிதனானவன். (திரு வாலங்காட்டுப் புராணம்). |
உருத்திரசேநன் | குபேரன் குமரன். |
உருத்திரதத்தன் | சச்சந்தன் மந்திரி. |
உருத்திரன் | 1. தேயுபூதத்தை அதிட்டித்துக் காரணமாயையெனும் உபாதானத்திருந்து மாயை முதல் பிருதுவி முடிவாக நெருங்கின (21) தத்துவத்திலும் பொருந்த அதோவியாத்தியாக வியாபித்திருப்பவன். (சதா). 2. இவர் சங்கமருவிய தமிழ்ப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகையில் “புற வுப்புறத் தன்னபுன்காலுகா” எனப் பாலை யைப் பாடியவர். (குறு. உஎ ச.) 3. கனகவிசயர்க்குத் துணையாயின ஓர் அரசன். (சிலப்பதிகாரம்.). |
உருத்திரபசுபதி நாயனார் | சோழநாட்டுத் திருத்தலையூரில் பிராமணகுலத்தில் சிவ பக்தியிற் சிறந்த பசுபதி யென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தாமரை மடுவில் அரோராத்ரம் கழுத்தளவு ஜலத்தில் சிர மேற்குவித்த கையராய் ஸ்ரீ ருத்ரமந்திரஞ் ரெபித்திருந்து பரமசிவன் திருவடியடைந்தனர். ஆதலாலிப் பெயரடைந்தனர். (பெரியபுராணம்). |
உருத்திரபர்வதம் | சாநவிநதிக் கருகிலுள்ள மலை. |
உருத்திரப்ரயாகை | மந்தாகினிக்கும் அளக நந்தைக்கும் இடையிலுள்ள க்ஷேத்ரம். |
உருத்திரமன்யமுனிவர் | இரேவண சித்தர் என்பவர் சோழராஜன் புத்ரி முதலிய மங்கையரை மணந்து இருக்கையில் ஒரு தடாக மெடுக்க உன்னி அத்தொழிலை உடனிருந்தியற்ற மேற்படி மங்கையர்களுக்குக் கட்டளையிட்டார். அம்மங்கையர் அவ்வாறு இயற்றுகையில் சோன் புதல்வி கருக்கொண்டிருத்தலில் முடியாதென்றனன். சித்தர் என் கட்டளை மறுத்ததால் என் கருவைத் தந்து நின் தந்தைபாற் செல்கவென, அரசகுமரி கருவை எவ்வாறு தருவதெனச் சித்தர் அவள் வயிற்றை நகத்தாற் கீறிக் கருவை யெடுத்து இச்சிசுவைப்போற்றுக எனப் பூதேவிபால் அளித்தனர். அவள் பூமியைப் பிளந்து வந்து சிசுவை எடுத்துச்சென், வளர்த்தனள். இவர் தாய்க் கருவிலிருந்து உக்கிரகோபத்தாற் கவாப்பட்டுப் பூதேவியரால் வளர்க்கப்பட்டமையின் இப்பெயர் பெற்றனர். (வீரசிங்காதன புராணம்.). |
உருத்திரமுனிவர் | திருமூலர் மாணாக்கரில் ஒருவர். |
உருத்திரர் | 1. பிரமன் வேண்டுகோளால் சிவமூர்த்தியா லதிட்டிக்கப்பட்டுப் பிரமனெற்றியில் தோன்றிச் சிருட்டி செய்த உருத்திரர் பதினொருவர். இவர்கள் உலக பாலகராயினர். இந்த உருத்திரர் ஒவ்வொருவரும் கோடி உருத்திரரைப் படைத்தனர். இவர்களைப் பிரமன் கண்டு வினைக்கீடாகப் படையாமல் முடியாச் சிருட்டி செய்தல் கூடாதென வேண்ட, நின்று சிவசாரூபந்தாங்கித் தேவர் கூட்டமானவர்கள். இவர்களில் திக்குப்பாலகர் உருத்திரர்கள். இந்தாதிக்கில் கபாலீசன், அசன், புத்தன், வச்சிரதேகன், பிரமத்தனன், விபூதி, இவ்வியன், சாத்தா, பினாகி, திரிசோதியன். அக்த்திக்கில் உருத்திரன், உதாசநன், பிங்கலன், சாதகன், அயன், சுவலன், தகனன், வெப்புரு, பிரமாந்தகன், க்ஷயாந்தகன். இயமதிக்கில் யாமியன், மிருத்யு, அரன்தாதா, விதாதா, கத்துரு, காலன், தன்மன், சங்யோத்தா, வியோகிருதன். நிருதிதிக்கீல் நிருதி, மாரணன், அரந்தா, குரூர திருட்டி, பயாந்தகன், ஊர்த்வகாயன், விரூபாக்ஷன், தூமிரு, உலோகிதன், தெங்கிருட்டினன், வருணதிக்கில் பலன், அதி பலன், மகாபலன், பாசத்தன், சுவேதா, செயபத்திரன், தீர்க்கவாகு, செலாந்தகன், வடவாமுகன், தீமான், வாயுதிக்கில் சீக்கிரன், லகு, வாயுவேகன், தீக்ஷணன், சூக்குமன், க்ஷயாந்தகன், பஞ்சாந்தகன், பஞ்சசிகன், கபத்தி, மேகவாகனன். தபோ திக்கில் நிதீசன், ரூபவான், தன்யன், சௌமியன், சௌமியதேகன், பிரமத்த னன், சுப்பிரகடன், பிரகாசன், லக்குமிவான், சோமேசன். ஈசானதிக்கில் வியாத்தியா தீபன், ஞானபுகன், சர்வன், வேத பாரகன், மாத்ருவிருத்தன், பிங்கலாக்ஷன், பூதபாலன், பலிப்பிரியன், சர்வவித்யாதிபன், தாதா. அண்டகடாக வோட்டுக்குக் கீழ் விஷ்ணுதிக்கில் அநந்தன், பாலகன், வீரன், பாதாளாதிபதி, விபு, இடபத்துவசன், உக்ரன், சுப்பிரன், லோகிதன், சர்வன். அண்டகடாகத்தின் மேல் பிரமதிக்கில் சம்பு, விபு, கணாத்யக்ஷன், திரியக்ஷன், திரீதேசகவாதகன், சன்வாகன், விவாகன், நபன், லீபசு, விலக்ஷணன் என்பவர்களாம். 2. அக்நிக்கு அதிதேவர். இவர் வெண்ணிறத்துடன் கரங்களில் வியாக்யான முத்ரை, அக்கி, ஞானமுத்ரை, சூலம், அரவப்பூணூல் கொண்டிருப்பர். 3. பதினொருவர் மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசாகன், விசயன், வீமதேவன், பவோற்பவன், சபாலி, சௌமியன். |
உருத்திரவாசம் | காசிக்கு ஒரு பெயர். |
உருத்திராகாரன் | சண்முக சேநாவீரருள் ஒருவன். |
உருத்திராக்ஷம் | இது இமய மலையைச் சார்ந்த நாடுகளிலுண்டாம் விருக்ஷத்தின் பழத்திலுள்ள வித்து. இது வைதீகரால் கொண்டாடப்பட்டது. இதனைச் சைவர் கேசாதிதேக பரியந்தம் தரிக்கின்றனர். இது ஆணவாதி, மனக் குற்றங்களையும் வாதாதி முத்தோஷங்களையும் போக்கும். இது திரிபுர சங்காரத்தின் பொருட்டு எழுந்தருளிய ருத்ரமூர்த்தியின் கோபக்கண்ணில் உண்டான ஒரு வித்தினின்று முளைத்த விருட்சத்தின் மணி. உருத்திரன் கண்ணிற் பிறந்ததால் உருத்திராக்ஷம் எனப் பெயர் பெற்றது. இதனைச் சிவா கமத்திற் கூறிய முறைப்படி சிர முதலிய தலங்களில் தரிப்பவர் சகல பாபங்களினின்று நீங்குவர். இம்மணி தரித்து முத்தி பெற்றோர் சரிதைகளை உப தேசகாண்டம் சூதசம்மிதை முதலிய நூல்களிற் காண்க. இதில் வெண்ணிற முள்ளன வேதியர்சாதி யெனவும், செந்நிற முள்ளன க்ஷத்திரிய சாதியெனவும், பொன்னிறமுள்ளன வைசியர்க்குரிய எனவும், கருநிறத்தன சூத்திரர்க் குரியவெனவும் கூறும். இவற்றில் ஒன்று முதல் (13) முகமளவும் உண்டு. அவற்றின் அதிதேவதைகளாவார். 1, 2 சிவன், 3. அக்கி, 4. பிரமன், 5. காலாக்கி, 6. கந்தன், 7. ஆதிசேஷன், 8. கணபதி, 9. வைரவன், 10. விஷ்ணு, 11. ஏகா தசருத்ரர், 12. துவாதசாதித்தர், 13. குமாரக்கடவுள். இவற்றில், சிரத்தில் 1. மாலையாக (34), கழுத்தில் (32) மார்பில் (108) மணிக் கட்டுகளில் (12) காதுகளில் (6) தரித்தல் வேண்டும். |
உருத்திராசுவன் | அகம்யாதியின் குமரன். இவனுக்குக் கிருதாசி என்பவளிடம் பத்துக் குமரர் பிறந்தனர். அவர்களில் மூத்தவன் இருசேயு. |
உருத்ரருத்ரிகள் | 1. இவர்கள், சுத்தவித்யாதத்வத்தில் வாம, சேஷ்ட, ருத்ர, கால, கலவிகரண, பலவிகரண, பலப்பிரமதந, சர்வ பூததமா, மனோன்மா, திரிகுணி, பிரம்மவேதாளி, தாணுமதி, அம்பிகை, ரூபிணி, சுவாலை, நந்தினி, வித்யாபதி, புவனங்களில், பத்தாங்கச்சவியுள்ளவர்களாய், சூலகபால பாணிகளாய், தம்மூர்த்தித்யான நமோச்சாரண மாத்திரத்தில் சர்வசக்திப்ரதராயிருப்பர். அவர்களாவார். 2. உருத்திரர் ஸ்ரீகண்டர், அருந்தர், சூக்ஷ்மர், திரிமூர்த்தி, அமரேசர், அரபீஜர், பாரபூதி, திதீசர், தாணுகர், அரசேங்கிடேசர், பவுரீகர், சத்யோசாதர், அநுக்ரஹர், ஈச்வரர், அக்ரூரர், மஹாசேநர், குரோதசர், சண்டேசர், பஞ்சாந்தகர், சிவோத்தமர், ஏகருத்ரர், கூர்மர், எகநேத்ரர், சதுரானனர், அஜேசர், சரு, சோமேச்வார்லாங்குலி, தாருகர், அர்த்தநாரீசர், உமாகாந்தர், ஆஷாடி, டிண்டி, அத்ரி, மீனர், மேஷர், லோகிதர், சஹிஸ்தர், கலண்டர், ததுவி லண்டர், மஹாதாளர், வர்லி, புஜங்கேசர், பினாகேசர், கஷ்டசர், பகர், சுவேதர்,ப்ருகு, லகுலி, சிவர், சம்வர்த்தர், உருத் ரிகள் பூர்ணோதரி, வீரசேநி, சால்மலி, லோலாக்ஷி, வர்த்துளாக்ஷி, தீர்க்கநாசிகை, தீர்க்கமுகி, தீர்க்கசிம்சு, குண்டோதரி, அர்த்தகேசி, விகிர்தமுகி ஜ்வாலாமுகி, உலூகமுகி, ஸ்ரீமுகி, வித்யாமுகி, சரஸ்வதி, மாகாளி, சர்வசித்தி, சமன்மிதி, கௌரி, திரிலோக்யை. வித்யை, மந்தாசத்தி, ஆத்மசத்தி, பூதமா, தேவாம்போதி, திராவிணி, நாகரீகேசரி, மஞ்சரிரூபிணி, விரை சேகாசோதரி, பூதாதனி, பத்ரகாளி, யோகினி, சங்கினி, கர்சினி, காளராத்ரி, முர்த்தன்யகபர்த்தினி, வாசன்மையை, சயை, சுமுகை, டஸ்வர்யை, ரேவதி, மாதவி, வாருணி, சக்ஷோவதரணி, சதாசைலக்ஷ்மி, பிநாகி, வியாபினி, மாயாகனி, விதை. |
உருபுமயக்கம் | ஒரு வேற்றுமையுருபு நின்று வேறொரு வேற்றுமைப் பொருளைத் தருவது. (நன்). |
உருப்பசி | ஊர்வசியைக் காண்க. (சிலப்.) |
உருப்புட்டூராச்சான் பிள்ளை | நாதமுனி களை ஆச்ரயித்த வைஷ்ணவாசாரியர். (குருபரம்பரை). |
உருமண்ணுவா | 1. இவன் பலவகைப் பெருமையும் வாய்ந்த உயர்குடியிற் பிறந்தவன். உதயணனுடைய மந்திரிகள் நால்வருள் ஒருவனும். உயிர்த் தோழர்களுள்ளும் ஒருவனும் ஆவன். வயந்தகனுடன் சேர்த்தே பெரும்பாலும் வழங்கப்படுவான். யூகிக்கு அடுத்தபடி யெண்ணும் பெருமை வாய்ந்தவன், சேனைகளைப் போரில் நடத்துவதில் மிக்க ஆற்றலுள்ளவன். எந்தச்சமயத்திலும் மனநடுக்கம் கொள்ளாதவன். மிக்க புகழினன், நட்பு, ஊக்கம், வீரம், பகைவர்க் கஞ்சாமே, காலம், இடம், முதலியவற்றை நன்கு ஆராய்ந்தே ஒவ்வொன்றையும் செய்யத் துணிதல், நன்றியறிவு முதலியவை இவன்பாலுள்ள விசேட குணங்கள். வாசவதத்தையை வலிந்து கொண்டு வந்த உதயணனை மிக உபசாரத்துடன் வரவேற்று அழைத்துச்சென்று சயந்திநகரில் அவளை அவனுக்கு யாதொரு கவலையு மில்லாதபடி பாதுகாத்து மகிழ்வித்து வந்தோன். அவளைப் பிரிந்து வருந்திய அவனுக்கு அடிசில் உடை முதலியவற்றைக் கொடுக்கும்படி தோழர்களால் நியமிக்கப் பெற்ற உண்மையன்பினன். இராசகிரிய நகரத்தில் உதயணன் மறைந்திருந்த பொழுது தானும் மறைந்து அவனைப் பாதுகாத்து வந்தவர்களில் இவனுமொருவன். உதயணனுடைய வாழ்வைக்கருதித் தன்னுடைய உயிருக்குச் சிறிதும் இரங்காமல் போரில் அவனுக்கு முன்சென்று பகைவராற் சிறைப்படுத்தப்பட்டோன். கோசம்பி நகரத்தைப் பெற்றபின்பு தன் பிரிவாற்றாமல் வருந்தி. “இருமணமெய்திய வின்பமெல்லா முருமண்ணுவாவினை யுற்றதற்பின்னை” என உதயணனாற் கூறப்பெற்ற உத்தமசீலன். மறைந்திருந்த யூகியின் கருத்தைத் தானறிந்து கொள்ளுதற்கும், அவனுக்குத் தெரிவித்தற்குமாகச் சாதகனென்னும் ஓரன்பனை இடையே வைத்துக்கொண்டு சில முக்கியமான காரியங்களை முடித்தவன். மிகவும் சிக்கலான வழக்கைத் தீர்த்தலில் வல்லவன். உதபணன் விருப்பத்தின்படி பதுமாபதியின் தோழியாகிய இராசனை யென்பவளை மணஞ் செய்துகொண்டோன். பல பரிவாரங்களினிடையே அவன் தன் கையினால் அலங்கரித்து அளித்த ஏனாதி மோதிரமும் சேனாபதிப் பட்டமும், பெற்றதன்றிச் சயந்தி இலாவாணக மென்னும் பெரிய நகாங்களையும் அவற்றைச் சூழ்ந்த இடங்களையும் மிக்க வருவாயையுடைய பல ஊர்களையும், சதுரங்கப்படைகளையும், பெற்றவன். துறவறம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த தன் தந்தைக்கு யாதொரு துன்பமும் நேராதபடி வேண்டியவற்றை அளித்து வழிபாடு செய்து ஒழுகியவன். கருவுற்ற வாசவதத்தையுடன் விமானமேறி ஆகாய வழியே சென்ற உதயணனோடு கூட சென்றவர்களில் இவனும் ஒருவன். இவனுடைய புதல்வன் பூதியென்பான் (பெ. கதை.). 2. ஜமதக்கினியின் ஜேஷ்ட புத்திரன். இவன் சகோதரர் சுஷேணன், வசு, விஸ்வாவசு, பரசிராமன் முதலியவர்கள். (பார). |
உருமண்ணுவாவின் தந்தை | இவன் துறவு பூண்டு இலாவாணகத்திற்கும், இராசகிரிய நகர்கும், இடையே உள்ளதும், சேதி நாட் டைச் சார்ந்ததுமான வனமொன்றிலுள்ள ஆச்ரமத்திற் பல முனிவர்களுடன் தவம் செய்துகொண் டிருந்தவன். தாம் தீயில் வெந்ததாகப் புலப்படுத்தி வேற்றுருவங்கொண்டு யூகியுடன் போந்த வாசவத்தையும், சாங்கியத் தாயையும் சிலநாள் பாதுகாத்துச் சண்பை நகாத்திலிருக்கும்படி அவர்களை அனுப்பியவன். உருமண்ணுவாவின் குணவிசேடங்களுக்கும் அவனேற்றத்திற்கும், இவனது நல்லொழுக்கமே காரணம். சயந்திநகர முதலியவற்றை உருமண்ணுவாவிற்குச் சீவி தமாகக் கொடுத்த உதயணன் ”உன்னுடைய அருமைத் தந்தைக்கு வழிபாடு செய்து கொண்டு அங்கிருந்துயாம் வேண்டிய பொழுது வந்து செல்க” என்று சொன்னமையால் இவன்பால் அவனுக்குள்ள அன்பு வெளியாகிறது. இவனது இயற்பெயர் தெரியவில்லை. (பெருங்கதை.) |
உருமிளை | யமன் பாரி. |
உருமை | சுக்ரீவன் தேவி. வாவியால் சிறிது நாள் போஷிக்கப்பட்டவள். (இரா.) |
உருரு | 1. இவன் ஒரு அசுரன், இவன் கடலிலிருக்கும் பட்டணத்தை யாள்பவன். இவன் கடலினின்று வெளிவந்து தேவர்களை வருத்த நீலாசலத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த ரெளத்ரி தேவியைத் தேவர்வேண்ட தேவி சிரித்தனள். அந்நகையிலிருந்து பல ரௌத்திரிகளுண்டாயினர். இவர்களுடன் சாமுண்டி, காளராத்ரிகள் தோன்றினர். இவர்களை ஏவி அசுரனைச் சங்கரிப்பித்தனள். (வராக புரா). 2. ஒரு இருடி. 3. பிருகுவின் பத்தினி புலோமைக்கு சவனர் பிறந்தார். அவருக்குச் சர்யாதி என்னும் அரசன் குமரி சுகன்யை பாரியையாயினள். அவளுக்குப் பிரமதி என்பவர் பிறந்தார். அப்பிரமதி பிரதாபியை மணந்து உருருவைப் பெற்றனள். அந்த உருரு பிரமத்வாயை மணந்தனர். இவர் பிரமத்வரையை மணக்குமுன் அவளிடம் கொண்ட மோகத்தால் அவளைக் காணச் செல்லுகையில் அவள் பாம்பு கடித்து இறக்கக்கண்டு தாம் சாகத்துணிந்து ஒரு வாறு தேறித்தாம் இருந்த ஆற்றை அடைந்து ஸ்நானாதிகள் முடித்து நான் சூரியபூசை நித்ய கர்மாதிகள் விடாமற் செய்திருந்தேனாயின் என் மனைவி உயிர் பெறக் கடவுள் எனக், கால தூதன் ஒருவன் எதிர்வந்து உன் ஆயுளிற் பாதி தரின், அவள் உயிர் பெறுவாள் என அங்ஙனம் இசைந்து விசுவாவசுவுடன் காலதூதன் யமபுரஞ் சென்று மீண்டு உயிர்தரப்பெற்று மணம் புணர்ந்தவன். இவன் தன் மனைவியைக் கொன்ற பாம்புகளின் பகைதீரக் கண்ட இடங்கள் தோறும் பாம்புகளைக் கொன்று வருகையில் டுண்டுபன் என்ற பாம்பைக் கொலைசெய்யச் செல்லுகையில் அப்பாம்பு தன் வாலாறு கூறக்கேட்டுச் சர்ப்பங்களைக் கொலை செய்வதை விட்டு நீங்கி இருந்தனன். 4. ஒரு அசுரன். இவன் மகாபலவான். தாக்ஷாயணியை மனைவியாகப் பெற எண்ணித் தவம்புரிந்து பிரமதேவர் வந்து அது கூடாத காரியமெனக் கேளாது, மீண்டும் சிவபெருமானை யெண்ணித் தவமியற்றுகையில் தாக்ஷாயணி கோரவுருக் கொண்டு சங்கரிக்க இறந்தவன். தாக்ஷாயணி மீண்டும் சிவபெருமானை யடைந்தனன். |
உருளைக்கிழங்கு | 1. இது முதலில் அமெரிக்கா தேசத்திலிருந்து மற்ற தேசங்களுக்குக் கொண்டுபோகப்பட்டது. இக்கிழங்கில், சிகப்பு, வெள்ளை, பூந்திக்கிழங்கு, கிட்னிக் கிழங்கெனப் பலவகை உண்டு. இக்கிழங்குகள் செடிகளின் அடிப்பாக வேரில் தனித்தனி பெருத்துக் காணப்படுகின்றன. இவை உண்டாம் நாட்டிற் சிலர் இதனையே ஆகாரமாகக் கொண்டிருக்கின்றனர். இது வாய்க்கு இனிமையும் வன்மையுந் தருவது, 2. மாமிச பக்ஷணிகளாகிய அசுரருடன் நெடுநாள் போரிட்ட தேவர்கள், தன்வந்திரி பகவானை மாம்சத்தையொத்த ஆற்றலுள்ள பொருள் என்னவெனக் கேட்கப் பகவான் இக்கிழங்கினைகூறத் தேவர்களுண்டு பகை வென்றனர் எனத் தேரையர் கூறுவர். |
உருவகவணி | அஃதாவது உபமேயத்திலுபமானத்தை ஒற்றுமையினாலாவது அதன் செய்கையினாலாவது ஆரோபித்தலாம். இதனை வடநூலார் ரூபகாலங்கார மென்பர். |
உருவசி | ஒரு தெய்வதாசி. புரூரவனைக் காண்க. இவளுக்கு ஊர்வசி, உருப்பசி எனவும் பெயர். |
உருவர்க்கன் | வசுதேவருக்குப் புத்ரன். |
உருவலகன் | வசுவதேவருக்கு இளையிட முதித்த குமரன். |
உரூபப்பிரமர் | உலகம் முப்பத்தொன்றனுள் பன்னிரண்டாவதாகிய, பிரம்ம காயிகலோக முதலிய பதினாறிலுமிருக்கும் உரூப பிரம்மகணங்கள். இவர்கள் பதினாறு வகையினர். (மணிமேகலை). |
உரூபம் | கட்புலனால் கிரகிக்கப்படுவது,ஜாதியுடையது, விசேஷகுணம் பிரதிவி முதலிய மூன்றனுள் இருப்பது. |
உரூபாசுவன் | கிருதாசுவனுக்கு ஒருபெயர். |
உரூபாவதாரம் | ஒரு நூற்பெயர். அமுத சாகரர் இதைத் தாமியற்றிய யாப்பிற்கு முதனினைப்புக் கட்டளைக் கலித்துறைக்குக் காட்டாகக் கொண்டனர். |
உரூவரன் | சநகன் குமரன், மனைவிக்கு ஆகாயவாணியாலாயுள் கொடுப்பித்துப் பாம்புகடித் திறந்தவளை உயிர்ப்பித்தவன், இவனைப் பிரமதிக்குக் கிருதாசியிடம் பிறந்தவன் என்பர். இவன் பாம்புகளைக் கொல்லத் தொடங்குகையில் டுண்டுப மென்னும் பாம்புருப்பெற்ற சகஸ்திரபாத முனிவர் நீக்கினர். குமான் சுநகன், உருவைக் காண்க. |
உரேௗத்ரி | இவள் சாய்ங்காலத்தில், கருநெய்தற் புஷ்பம்போற் காந்தியுள்ளவனாய்ச் சற்றே திரும்பின யௌவனமுடை யளாய், சதுர்ப்புஜம், முக்கண், சடைமுடி, பூணுநூல், சந்திரசூடம் உள்ளவவாய்ச் சூலம், ஜபமாலை வலக்கரத்தும், அபயமும், சத்தி ஆயுதமும் இடக்கரத்திற் பெற்று இடபவாகனத்தில் பதுமாசனியாய்த் தியானிக்கப்படுஞ் சிவசத்தி. |
உரை | (சத்தப்பிரமாணம்) ஆகமம், ஆபதவாக்யப்ரமாணம். |
உரை | 14 :அவை, 1. பாடவுரை, 2. கருத்துரை, 3, சொல்வகையுரை, 4. பதவுரை, 5. தொகுத்துரை, 6. உதாரணவுரை, 7. வினாவுரை, 8. விடையுரை, 9. விசேடவுரை, 10. விரியுரை, 11. அதிகாரவுரை, 12. துணிவுரை, 13. பயனுரை, 14. ஆசிரிய வசனவுரை என்பனவாம். இவையன்றிக் காண்டிகையுரை யெனவும் விருத்தியுரை யெனவும் இரண்டுள. அவற்றுள் காண்டிகையுரையாவது: கருத்து, பதவுரை, உதாரணம், வினா, விடை ஆகிய ஐந்துங் கூடியதாம். விருத்தியுரையாவது இக்காண்டிகை உரையுடன் மேற்கூறிய பதினான்குவகை உரைகளையும் பொருந்தி ஆண்டைக் கின்றியமையாத யாவற்றையும் விளங்கும்படி யாகத் தன்னுரையானும், பிறநூலானும், செய்யுளின் உண்மைப் பொருளை விளக்குவதாம். |
உரைகேட்டு நயத்தல் | துன்பத்தோடு தங்கிய சூழ்ந்த தொடியினையுடைய தோளி, உயர்ந்தமலை நாடன்றன் வார்த்தையைக் கேட்டு விரும்பியது. (பு~வெ. பெருந்திணை). |
உரையன் | இவர் சங்கமருவிய தமிழ்ப் புலவருள் ஒருவர் செப்பினஞ் செலினே” எனும் பாலைப்பாடியவர். (குறு. 207). |
உரோகி | இது ஒருநதி AFGHANISTAN. IT WAS ALSO CALLED ROHA. |
உரோகிணம் | வாலகில்லியர் தவஞ் செய்து கொண்டிருந்த கசகச்ச பலவிருக்ஷம். அலம்ப தீர்த்தக்கரையிலுள்ளது. இதில் கருடன் கச்சபத்தையும் யானையையும் உணவு கொள்ள இதன் மீதிருக்க, கிளை முரிதல் கண்டு அம்மரத்தினையுமுடன் கொண்டு வாலகில்லியருடன் நிஷ்புருஷ மலையில் இறங்கி, உணவருந்தி அமுதங்கொள்ளச் சென்றனன். (பார). |
உரோகிணி | 1. சுரதையின் பெண். காசி பர்பௌதரி, மான்களைப் பெற்றாள். (பார) 2. வசுதேவர் மனைவியரி லொருத்தி, இவள் வயிற்றில் தேவகி வயிற்றுதித்த பலராமர் மாறிப் பிறந்தனர். (பாக). 3. தக்ஷன் பெண்களிலொருத்தி. சந்திரன் தேவி, நக்ஷத்திரங்களில் ஒன்றாயிருக்கிறவள். (பார). |
உரோகிதன் | (சூ.) அரிச்சந்திரன் குமரன். இவன் புருஷமேதத்திற்குப் பயந்து ஆறு வருஷம் தீர்த்தயாத்திரை செய்து அசிகிரதனிடத்தில் சுனச்சேபனை யாகத்திற்குக் கிரயமாகக் கொண்டவன். தந்தை விச்வாமித்திரர் வஞ்சனையால் நகர்நீங்கிய காலத்து உடன் சென்று துன்பமடைந்து பாம்பு கடித்திறந்து மீண்டுந் தேவர்களாற் பிழைத்து நகரடைந்தவன். |
உரோகிதம் | இது ஒருதேசம். RSHTAK, 42 MILES NORTH WEST OF DELHI. |
உரோகிதாசர் | இவர் தோல் துன்னும் சக்கிலியர் குலத்துள் பிறந்து பரமோபகாரியாய் அரிபக்தியுடையராய் விடியற்காலத்தி லெழுந்து ஸ்நாகமுதலியவை முடித்து தோலினால் ஆசன முதலிய அமைத்துத் துளசிவன மடைந்து சாளக்கிராமமாகிய திருமால்வடிவை வந்தனை செய்து வந்தனர். இதனை அவ்விடம் வந்தவேதியன் சண்டு தோலின் மேல் சாளக்கிராமத்தை வைத்துப் பூசித்தல் சுத்தமுடையதோ வென்ன தாசர் எக்காலத்தும் எப்பொருளினும் நிறைந்திருக்குந் திருமாலைத் தியானிக்கும் மனம் தோலல்லவா? துதிக்கின்ற நான் தோலல்லவா? பூசிக்குங் தோலல்லவா! என்ன, கேட்டவே உபவீதம் புனையும் வேதியர்களே அருள்புரிய அருகர் நீ இவ்வாறு பூசை செய்யாதே என வேதியனுரைப்ப ரோகிதாசர் என்னிடத்தும் உபவீத மிருக்கின்றது. நீ அறி என்று தன் மார்பைப் பிளந்து விளங்குகின்ற நூலை வெளியாக விடுக்க வேதியன் கண்டு மனத்தூய்மை யுடையோர் யாதுசெய்யினும் அடுக்குமெனத் துதித்துப் போயினன். ரோகி தாசர் திருமாலருளால் துன்பமில்லாது எழுந்து பெருமாளை வாழ்த்தினர். |
உரோசநன் | 1 யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிட முதித்த குமாரன். 2. இரண்டாம் மன் வந்தரத்திலிந்திரன். |
உரோசனை | வசுதேவன் பாரி, குமார் அஸ்தன், ஏமாங்கதன் முதலியோர். |
உரோசமானன் | அச்வக்ரீவனம்சம், பாரதவீரன். கரூரதேசத் தரசன். |
உரோசஸ் | விபாவசு என்னும் வசுவிற்கு உஷையிடமுதித்த குமரன். |
உரோச்சியன் | உருசியைக் காண்க. |
உரோடோகத்துக் கந்தரத்தனார் | இவர் கந்தரத்தன் என்னும் இயற்பெயருடையவர். உரோடோகம், ஊர். இவ்வூர்ப் பெயர் ஒரோடோகமெனவும், ஒரோடக மெனவும், உரோடகமெனவும் ஏடுகளிற் பலபடியாகப் பிறழ்ந்து காணப்படுகிறது. இப்பொழுது இவ்வூர் ஒரகடமென்று திரிந்து வழங்குகிறது. காஞ்சிபுரம் தாலுக்காவிலுள்ளது. இவர் குறிஞ்சித்திணையையும் பாலைத்திணையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 306ம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்தில் மூன்றுமாக (5) பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றி). |
உரோதனன் | அநுபாவுகன் குமரன். இவன் குமரன் தேவாதிதி. |
உரோமகமதம் | இவர்கள் கிரீக்மதத்தை அனுசரித்தவர்கள். இவர்களுக்கு ஜூனஸ் என்பவன் சிருட்டிகர்த்தா. இந்தத் தேவன் ஜனிகூலம் என்னும் பர்வதத்தில் இருப்பன். இவனால் வருஷம் ஆரம்பமாகிறது. ஜனுவரி மாதத்தில் இவனை ஆராதனஞ் செய்வார்கள். இவர்களுக்குச் சூபிடர் பிரதான தேவன். இவன் ஒலிம்பஸ் மலையிலிருந்து மோக்ஷங்கொடுப்பன். இடிகளை உண்டாக்குவன். இவனுக்கு விக்டர் முதலிய அநேக நாமங்களுண்டு, இவன் இடியை உண்டாக்குபவனாதலால், இடி விழுந்து சாபவன் மோக்ஷமடைவன் என்பர். இவர்கள் ஜூனைச் சுபதேவதையாகவும், மினர்வாவை ஞானதேவதையாகவும் பூஜிப்பர், இவளுக்கு அதீனா என்றும் பெயர். இவர்களுக்கு இந்துக்களைப்போல் எல்லாத் தேவதைகளுமுண்டு, உற்சவாதிகள் செய்வர், பலியிடுவர். சாஸ்திரப்பிரகாரம் நடந்து கொள்வர். கன்னியர்களை ஜீவபரியந்தம தேவ கைங்கர்யங்களைச் செய்யம்படி விடுவர். ரோமகர்களில் தத்வக்ஞானியான செனிகா, தேவன் ஒருவனே என்பன். எபிக்டிடன் தேவர்களில் ஜூபிடர் சிரேஷ்டனென்றும், ஆரூலியஸ், ஆண்டோனின்ஸ் என்பவர்கள் பிரபஞ்ச முழுதும் தேவனுடைய உபாதியேயென்றுங் கூறுவர். |
உரோமகருஷணர் | 1. உக்கிரசிரவசுவின் தந்தை அதாவது சூதபுராணிகர்க்குத் தந்தை. 2. சௌநகர்க்குத் தந்தை. |
உரோமசன் | 1. சிவகணத்தலைவரில் ஒருவன். 2. பிரமனுடன் முனிவர் வாதிட்ட காலத்தில் அவர்களை வாதில் வெல்லப்பிரம தேவர் தமது தலையின் நரைமயிரில் இவரைச் சிருட்டித்தனர். (திரு ஆமாத்தூர்புராணம்) 3. திருக்கண்ணமங்கையில் பெருமாளாலிஷ்டசித்தி யடைந்த இருடி. |
உரோமசன்மன் | ஒரு பூனை, பலிதனென்னும் எலியைக் காண்க. (பார). |
உரோமசன்மர் | ஒரு இருடி, தெய்வலோகத்தில் அருச்சுனன் செய்த வீரத்தைத் தருமன் முதலியோருக்குத் தெரிவிக்க இந்திரனாலனுப்பப்பட்டவர். தருமன் வனத்தி லிருக்கையில் அவனுக்கு நளன் கதை உரைத்தவர். (பார). |
உரோமதத்தன் | ஒரு வேடன், வழிபறித்துத் திரிந்து ஒரு வேதியனது நட்பால், சிதம்பரத் தலத்திற்கு ஐந்து நாழிகைவழி தூரத்தில் நின்று கோபுர தரிசனஞ் செய்தும், செய்வாரைப் போற்றியும் முத்தி பெற்றவன். (சிதம்பர புராணம்.) |
உரோமபதன் | 1. அங்கதேசத் தரசன். தர்மரதன் குமான். இவன் தசரதன் குமரியாகிய சாந்தையைச்சு வீகாரமாகர் கொண்டவன். இவன் குமரன் சதுரங்கன். பிராமணரைப் பகைத்து இவனாடு மழையிலாது வறப்பக் கலைக்கோட்டு முனிவரிடம் தாசிகளை அனுப்பி அவரை வருவிக்க மழை பெய்தது கண்டு களித்தவன். தசாதர் வேண்டக் கலைக்கோட்டு முனிவரைப் புத்ரகாமேஷ்டிக்கு அனுப்பியவன். (இரா). 2. விதர்ப்பன் குமரன். இவன் குமரன் புரு. |
உரோமமுனி | இவர் புசுண்டமாமுனிவர் குமார். இவர் செய்த நூலைச் சட்டைமுனி கிழிக்காதபடி புசுண்டர் சடையிலொளித்து வைத்து அகத்தியருக்குக் காட்ட அவர் நெடுநாள் பொறுத்து மீண்டுங் கொடுத்தனர். இவர்க்கு உடம்பெல்லாம் மயிர். ஒரு பிரமனிறந்தால் ஒரு மயிர் உதிரும், அப்படி மூன்றரைக் கோடி பிரமாக்களிறந்தால் ஆயுள் முடிவு. இவரிறக்கின் அட்டகோண ருஷிக்கு ஒரு கோணம் நிமிருமாம். |
உரௌகிதம் | கௌரவசேனைக்குப் பாசறை செய்த இடம். |
உரௌத்திராச்வன் | அகம்யாதி புதரன். இவனுக்குக் கிருதாசியிடம் (10) குமார்கள் பிறந்தனர். அவர்களுள் இருசேயு மூத்தவன். |
உர்பனன் | ஒரு அரசன். இவன் திருச்சேர்ந்த மங்கலத்தில் சிவபூசை செய்து பேறு பெற்றவன். |
உர்மிளை | யமன் பாரி. |
உறந்தை | 1. உறையூர், சோழராஜாக்களின் இராஜதானி. (சிலப்பதிகாரம். 2. ஒரு நகரம். (சூளா.) |
உறழ்ச்சியணி | அஃதாவது சமானமாகிய வவியையுடைய இரண்டு பக்ஷங்களைக் காட்டி விகற்பித்தலாம். இதனை வடநூலார் விகற்பா லங்கார மென்பர். |
உறி | பொருள்களின் காப்பின் பொருட்டுக் கயிற்றால் பின்னப்பட்ட சிக்கம். |
உறித்தாபஸன் | ஒரு சைந திருடன். பொய்த்தவ வொழுக்கத்தால் திருடித் தாசியுடன் கூடித் தண்டனை அடைந்தவன். |
உறுப்பா | இஃது ஒருவிதமான மரம். மலை யாள தேசத்தில் வளருகிற சிம்புசிராயுள்ள மரமாக இருக்கின்றது. இது கப்பல் செய்யத் தேக்கு மரத்துக்குப் பதிலாக உபயோகிக்கப்படுகிறது. |
உறுப்பு | (கீதஉறுப்பு) 4. அவை உக்ரம், துருவை, ஆபோகம், பிரகலை என்பன. |
உறுவை | ஆதியும் பகவனும் காவிரிப்பூம்பட்டினத்திலொரு மண்டபத்திலிருந்தபோது பிறந்து கள்விற்போர் எடுத்து வளர்க்க வளர்ந்து காளியானவள். (திருவள்ளுவர் சரிதை.) |
உறையூர் | இது சோழர்களுடைய பழைய நகரம். இஃது உறந்தையென்றும் கோழியென்றும் வழங்கப்படும். பழைய உறையூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பாண்ட மங்கலத்தில் இருபதடிக்குக் கீழ் இருக்கிறது. மண்மாரியால் முழுகியது. (புற~நா). |
உறையூர் இளம்பொன் வாணிகனார் | ஒரு தமிழ்ப்புலவர். இவர் வணிகராயிருக்கலாம். (264) (புற~நா.) |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | இவர் ஊர் சோழநாட்டு உறையூரையடுத்த ஏணிச்சேரிபோலும், முடமோசியார் என இவர்க்கு உறுப்பால் வந்த பெயராக இருக்கலாம். இவர் பிறப்பாலந்தண ரென்பதை மரபியலில் (74) ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறியதாலறியலாம். இவராற் பாடப்பட்டோர் சோழன் முடித் தலைக்கோப் பெருநற்கிள்ளி, ஆய், புறநானூற்றில், 13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375, செய்யுட்களைப் பாடினர். இவர் ஆயை, முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேனே எனப்பாடினர். |
உறையூர் நாய்ச்சியார் | சோழன் பெண், பெரிய பெருமாளை மணந்தவள். |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் | இவர், மருத்துவராயிருத்தல் வேண்டும். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும், பிட்டங் கொற்றனையும் பாடிய தமிழ்ப்புலவர். (புற~று.) (அக~நா.) |
உறையூர் முடவனார் | ஐயூர் முடவனாரைக் காண்க. |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | சோழன் நலங்கிள்ளியைப் பாடிய தமிழ்ப்புலவர். (புற~று.) |
உறையூர் முதுகூத்தனார் | சோழநாட்டிலிருந்த தமிழ்ப்புலவர். இவர்க்கு முதுகூற்றனார் எனவும் பெயர். (அக~று.) (புற~று). |
உறையூர் முதுகொற்றன் | இவர் கடைச் சங்க மருவிய தமிழ்ப்புலவர்களில் ஒருவர். இவர் ஊர் உறையூர். இவர் பெயர் கொற்றன் என்பது இவரது பெருமை நோக்கி முதுகொற்றன் என்பர் போலும். (குறு 221~340). |
உறையூர்க்கதவாய்ச் சாத்தனார் | கதுவாய் முரிந்தவாய், இவ்வடமொழி எக்காரணம்பற்றிக் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இவர் மருதத்திணையிற் பயிற்சி யுடையவர். இவர் பாடலில் தலைவி ஊடிய வழித்தலைவன் கூறுவது வியப்புடைய தாகும். இவர் பாடியது நற் 370ம் பாட்டு. (நற்றிணை.) |
உறையூர்ச் சல்லியன் குமாரன் | இவர் உறையூரிலிருந்த சல்லியர் என்பவரின் குமாரராக இருக்கலாம். கடைச்கங்க மருவிய புலவர்களுள் ஒருவர் இவர் குறுந்தொகையுள் மருதக்கவி பாடியவர். (குறு~309.) |
உறையூர்ச் சிறுகந்தன் | இவர் உறையூரி லிருந்தவர். கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் சிறுகந்தனெனப்படுதலில் இவர்க்கு முன்னொருவர் கந்தரென இருந்திருக்கலாம். குறு 257. |
உறையூர்ப்பலாகாயனார் | உறையூரிடத்தவர். இவர் பெயர் உறையூர்பாராயனார் என்று மற்றொரு பிரதியில் காணப்படுகிறது. இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர் குறுப~374. |
உற்கசம் | தவுமியரைப் பாண்டவர் புரோகிதராகக் கொண்ட புண்ய தீர்த்தம். |
உற்கம் | ஆதித்தியன் நின்ற நாளுக்குப் பத்தாம் நாள் உற்கமாம். இதில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. (விதான மாலை) |
உற்கோரன் | சூரபன்மன் தூதன். |
உற்சவதி | பிராணனென்னும் வசுவின் தேவி, குமரன் சகன் முதலிய மூவர். |
உற்சவம் | இது தேவாலயங்களில் உண்டாம் நித்ய நைமித்திகக் குறைவுகளைத் தீர்க்கும்படியும் எல்லார்க்கும் நன்மை யுண்டாம் பொருட்டும் செய்யப்படுவது. இது சாகல்யம், பாவனம், சாந்தம், மாங்கல்யம் என நான்கு வகைப்படும். துவசாரோகணமுதல், தீர்த்தவாரிவரையில் உற்சவம் செய்வித்தல் சாகல்யம் எனப்படும். துவசாசோகணம், செய்விக்காமல் தீர்த்த வாரிவரையில் உற்சவம் செய்வித்தால் பாவனம் எனப்படும், துவசாரோகணமும் காலை உற்சவமும் இல்லாமல் இரவில் உற்சவமாத்திரம் நடப்பித்தல் சாந்தம் எனப்படும். காலையில் மாத்திரம் உற்சவம் நடப்பித்தல் மாங்கல்யம் எனப்படும். முற்கூறிய சாகல்யம் ஒன்பது வகைப்படும். அவை, சவுரம், சாந்திரம், சாவித்திரம், கௌமாரம், தைவீகம், பவுரும், பௌதி கம், கணம், சைவம் எனப்படும். இவற்றிற்கு நாட்கள் முறையே இருபத்தேழு. பதினேழு, பதினைந்து, பதின்மூன்று, ஒன்பது, எழு, ஐந்து, மூன்று, ஒன்றாம். இவ்வுற்சவம், துவஜாரோகணஞ் செய்து பலியிட்டு நடத்துதல் ஒன்று. அவை இரண்டும் இன்றி நடத்துதல் ஒன்று, துவசாரோகணம் செய்தலாவது, கொடித் தம்பம், பதிப்பொருள், படம், பசு, வளை கயிறு, பாசம் என்னும் திரிபதார்த்த உண்மை தெரிவித்தலாம். (ஆகமம்.) |
உற்சாகன் | மித்திரனுக்கு இரேவதியிடம் உதித்த குமரன். |
உற்படர் | ஒரு வீரசைவ தேசிகர், இவரிறந்தபின் இவர், சோமவ்வை யென்கிற பாணிச்சியைச் சேர்ந்தனரென்று அரசன் முன் வேதியர் குறைகூற அரசன் அவரது பெருமையை வேதியர்க்குத் தெரிவிக்க மறுநாள் சபை கூட்டினன். அந்தச் சபைக்கு அருகிலிருந்த ஓர் ஆலமரத்தில் பேரொலியொன்று உண்டாயிற்று, அரசன் அதை நீயாரென்ன நான் ஒரு பூதம், என்னுடன் சேர்ந்த எழுநூறு பூதங்கள் பன்னிரண்டு வருடமாக உற்படர் மூலமாய்க் கைலையடையக் காத்திருந்தனர். அவர்கள் உற்படர் உடம்பிலுண்டான புகையால் கைலையடைந்தனர். நான் பசியா விங்கிலாது அயலூருக்குப் போயிருந்ததால் கைலை அடையவில்லை. இப்போது நீ அவர் எலும்பைப் புகைத்தால் கைலை அடைவேனென அவ்வகையே அரசன் நீ பூதம், சிவகிரி சேர்தற்கு அடையாள மென்னவென்ன அது தானிருந்த ஆலைப்பிடுங்கிக் காட்ட அரசன் தன் சுற்றத்துடன் வந்து உற்படர் எலும்பைப் புகைக்கப் பூதமும் அரசனும் சுற்றத்த வரும் கைலையடைந்தனர். |
உற்பலன் | 1. சத்தியைக் காண்க. 2. விஷ்ணுபக்தனும் படனும். |
உற்பலாக்ஷபீடம் | சத்திபீடங்களிலொன்று. |
உற்பலாங்கி | இவள் ஒரு பார்ப்பினி. துங்கபத்ரை நதிக்கரையிலிருந்த கோபால வேதியன் குமரி. இவள் தந்தை இவளை இருபது வேதியர்க்குத் தனித்தனிபாணிக் கிரகணஞ் செய்யநிச்சயித்துத் தானஞ் செய்யுமுன் கணவர் இறக்கக்கண்டு இருக்கையில் தந்தையும் இறந்தனன். இவள் திருப்பூவணஞ்சென்று மணிகர்னி கையில் ஸ்நானஞ்செய்து காலமுனிவரைக் கண்டு வணங்குகையில் அவர் இவளது செய்தி அறிந்து நீ கௌரிவிரதம் அநுட்டித்து உத்யாபனஞ் செய்யாததால் இவ்விடுக்கண் வந்தது, இத்தீர்த்தபலத்தால் பாவம் நீங்கினை, இனிக் கௌரி பூசனை செய்து உத்யாபனஞ் செய்க என இவள் அவ்வாறு செய்து தீர்க்க சுமங்கலி ஆயினவள். |
உற்பலாவதி | தாமசமனுவைக் காண்க. |
உற்பலை | அஷ்டசத்திகளில் ஒருத்தி. |
உற்பவன் | துருவனுக்கு இளையிடமுதித்த குமரன். |
உற்பாதம் | மழையின்றி யிடித்தாலும், கார்வானமின்றி வெண்மழையாகப் பெய்யினும், சூறைக்காற்றடிக்கினும், பூமி ஆகாய மதிரினும், எரிகொள்ளி வீழினும், கிரகங்களைப் பரிவேடிக்கினும், பல இடங்களில் ஓரியிரையிலும், காரணமின்றிப் பூமியில் பிரசித்தமான மரங்கள் சாயினும், முரிந்து விழினும், திக்குகள் எரிந்து புகைந்து கிடப்பினும், உற்பாதங்களாம். இவை உண்டான நாள் தொடங்கி (7) நாட்கள் அளவும் சபகன் மங்கள் தவிரப்படும். (விதானமாலை) |
உலக நாதன் | இவன் உலகநீதியென்னும் நீதி நூல் செய்தவன். |
உலக நீதி | இது நீதிகளைத் திரட்டி எளிய நடையிற் செய்யப்பெற்றதொரு நூல். உலகநாதரென்பவரால் இயற்றப் பெற்றது. இவர் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் மனத்தை நோக்கி முருகக்கடவுளை வழிபடுவாயாக வென்று கூறியிருக்கிறார். |
உலகசாரங்கமாமுனி | பெரிய கோயிலென்னுந் திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த பாகவதர். இவர் பெருமாளுத்தாவால் திருப்பாணாழ்வாரைத் தோளில் தூக்கி வந்து பெருமாள்முன் விட்டவர். சம்பாதி இறகுதிர்ந்து வந்தபோது ஆதரித்தனர். |
உலகசிருட்டி | இவ்வுலகம் ஆதியில் ஆத்மாவாக இருந்தது. சராசரமாகிய அனைத்தும் அதை ஒழிந்து, வேறில்லை. கடவுள் உலகத்தைச் சிருட்டிப்பேன் என்று நினைத்து ஜலம், வெளிச்சம், ஜீவர்கள் இவைகளைச் சிருட்டித்தார். இவ்வித ஜலத்திவலிருந்து பிண்டமான ஒரு வஸ்துவை உண்டாக்கினார். கடவுள் அதை நோக்கிப் பார்த்தார். அது முட்டையைப் போல் வாய் திறந்தது. அந்த வாயில் இருந்து வாக்கு உண்டாயிற்று. ‘அந்த வாக்கில் இருந்து அக்கிநி உண்டாயிற்று, நாசிகள் பாவின. அவற்றிலிருந்து மூச்சு உண்டாயிற்று. மூச்சிலிருந்து வாயு உண்டாயிற்று. கண்கள் திறந்தன. கண்களிலிருந்து நோக்கம் பிறந்தன. அந்தக் கண் ணோக்கில் இருந்து சூரியன் பிறந்தான். காதுகள் விரிந்தன. காதுகளில் இருந்து கேள்விகள் பிறந்தன. அதிலிருந்து மண்டலங்கள் பிறந்தன. சருமம் விரிந்தன. சருமத்திலிருந்து உரோமம் உண்டாயிற்று. அதிலிருந்து பூண்டுகளும், விருஷங்களும் உண்டாயின. மார்பு திறக்கப்பட்டது, மார்பிலிருந்து மனது பிறந்தது. மனத்திலிருந்து சந்திரன் உண்டாயினான். தொப்புள் வெடித்தது. அத்தொப்புளில் இருந்து விழுங்குகை பிறந்தது. அதிலிருந்து மரணம் பிறந்தது. பிறப்பிக்கிற அவயவம் வெடித்தது. அதிலிருந்து உற்பீஜம் பிறந்தது. அதில் இருந்து அதன் மூலமாகிய ஜலங்கள் பிறந்தன. இவ்வண்ணமாகத் தேவர்கள் உண்டாக்கப்பட்டு இந்த விரிந்த சாகரத்தில் விழுந்தார்கள். கடவுளிடத்து அவர்கள் பசி தாகத்தோடு வந்தார்கள். அவரை அவர்கள் இவ்வண்ணமாகக் கேட்டுக்கொண்டார்கள். எங்களுக்கு ஒரு சிறிய உருவத்தைக் கொடும். அதில் நாங்கள் அடங்கி ஆகாரம் புசிப்போம் என்றார்கள். அவர் அவர்களுக்கு ஒரு பசுரூபத்தைத் தந்தார். அவர்கள் அது எங்களுக்குப் போதாது என்றார்கள். அவர் அவர்களுக்கு ஒரு அசுவரூபத்தைக் காட்டினார். அவர்கள் அதுவும் தங்களுக்குப் போதாது என்றார்கள். அவர் அவர்களுக்கு மனிதவடிவைக் காட்டினார். அவர்கள் நன்ராய்ச் செய்தீர். ஆ! ஆ! அதிசயமென்று கூவிச் சொன்னார்கள். ஆகையால் மனிதன் மாத்திரமே நல்ல வடிவமாகவே செய்யப்பட்டான் என்று சொல்லுகிறது. இருக்கு வேதம், யஜுர் வேதத்தில் இந்த உலகம் ஆதியில் ஜலமாக இருந்தது. அதில் சிருட்டிகர்த்தா வாயுவாகி அசைந்து ஆடிக்கொண்டிருந்தார். அவர் இந்தப் பூமியை வராக உருக்கொண்டு தாங்கிக் கொண்டிருந்தார். பின் பிரபஞ்ச சிற்பியாகிய விச்வகர்மனாகி இந்தப் பூமியை உருப்படுத்தினார். அது பிருதுவி ஆயிற்று. சிருட்டிகர்த்தா பூமியைக் குறித்து ஆழ்ந்த சிந்தையாய்த் தியானித்துப் பார்த்துத் தேவர்களையும், உருத்திரர்களையும், ஆதித்தர்களையும் சிருட்டித்தார். அந்தத் தேவர்கள் சிருட்டி கர்த்தாவை நோக்கி ஜீவ கோடிகளை நாங்கள் எவ்வாறு சிருட்டிப்போம் என்றனர். தியானத்தால் சிருட்டிக்க என்று வேதாக்கினியைக் கொடுத்துத் தேவபக்தியை முடியுங்கள் என்றார். அதைக்கொண்டு அவர்கள் தபசுகளைச் செய்தனர் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடவுள் தம்முடைய தேகத்தில் பிரஜைகளைச் சிருட்டிக்கவிரும்பி முதலில் தியான மாத்திரத்தினாலே ஜலத்தைச் சிருட்டித்து அதில் பீஜத்தை விட் டார். அது ஒருபொன் அண்டம் ஆயிற்று, அதில் தாமே பிரவேசித்துப் பிரமனாயினார். அம்முட்டையில் தாம் பிரமாணத்தின் படி ஒரு வருஷகாலம் இருந்து அதனை இரண்டு பங்காக்கி ஒரு பங்கினால் சுவர்க்கத்தையும், மற்றொன்றால் பூமியையும் சிருட்டித்தார் பின் தத்துவங் களைச் சிருட்டித்தார். பின் தேவர் கூட்டங்களையும், சராசரங்களையும், யாகத்தையும், தமது முகம், கை, தொடை, பாதம் முதலிய உறுப்புக்களினின்று பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களையும், தமது தேகத்தை இரு பிரிவாக்கி, ஒன்றை ஆணாகவும், மற்றொன்றைப் பெண்ணாகவும் செய்து, புணர்ந்து விராட் என்னும் புருஷனையும் சிருட்டித்தார். அப்புருஷனே நான். அப்புருஷனில் இருந்து பத்துப் பிரஜாபதிகள் தோன்றினர். அப்பிரஜாபதிகளிடமிருந்த பலவித சிரு பட்டிகள் உண்டாயின எனவுங் கூறப்பட்டிருக்கிறது. வேதபுருஷன் முகத்தில் வேதியனும், தோளில் க்ஷத்திரியனும், தொடையில் வைசியனும், பாதத்தில் சூத்திரனும் பிறந்தனர் எனவும் காசிபராலும் தக்ஷப் பிரஜாபதி முதலியவரால் பிராணிகள் முதலிய உற்பத்தியெனவும் கூறும். சிவபுராணங்களில் சிவசத்தி சங்கற்பத்தால் உலகமும் பத்தி யெனவும். விஷ்ணு புராணங்களில் விஷ்ணுமூர்த்தி பிரமனைப் படைத்து உலகோற்பத்தி செய்வித்தனர் எனவும், பல படித்தாகப் புராணங்கள் கூறும். பிரமன் உலகமனைத்தையும் சிருட்டித்து அவற்றைக் காக்கும்படி சிலபூதரைச் சிருட்டி செய்து நீங்கள் இவற்றைக் காக்க என அவர்களுட் சிலர் பசியுடன் யக்ஷாம் என்றார், மற்றவர் ரக்ஷாம் என்றனர். அக்காரணத்தால் மக்ஷராகவும் மற்றவர் ராக்ஷஸ ராகவும் ஆயினர் எனவும் மற்ற ஜாதிகள் உயர்குலத்தவர். இழிகுலத்தவரையும் இழிகுலத்தவர் உயர்குலத்தவரையும் கலந்ததால் உண்டாயின என்றும் புராணாதிகள் கூறும். |
உலகத்திலுள்ள எழுவகை அற்புதங்கள் | (1) வட அமெரிகாவில் நயகரா நீர்வீழ்ச்சி, (2) இத்தாலியா நகரத்துச் சாய்ந்த கோபுரம், (3) மத்ய தரைக்கடலை யடுத்த ரோட்ஸ் தீவின் துறைமுகத்வாரத்திலுள்ள பிரமாண்ட பூதவுருவம், (4) எகிப்த்துத் தேசத்திலுள்ள கற்கோபுரங்கள், (5) ஆக்ரா நகாததிலுள்ள தாஜ்மாலென்னும் கல்லறைவாசல், (6) இங்கிலாந்தில் சக்கரவர்த்தியிடமுள்ள கோஹினூர் எனும் பெருத்தவயிரக்கல், (7) சீனாதேசத்துப் பெருமதில். |
உலகத்திலுள்ள ஜனங்களின் உருநிற முதலிய | ஆப்பிரிகர்: இவர்கள் நீக்ரோஜாதியார் எனப்படுவர் நிறம் கறுப்பு, சப்பை மூக்கு, உதடு தடிப்பு மயிர்சுருட்டை, கென்அமெரிகர் இவர்கள் செந்நிறம், நீண்டகன்னம், நீண்டமயிர் உடையர். மலேயர் பழுப்புநிறம், முறட்டு மயிர் முகம் தட்டை, குறுகிய தலை, உறுதியான பேகம் உடையார். சீனர், ஜபானியர், திபெத், மங்கோலியர் மஞ்சள் நிறம், கீழ்கோக்கிய பார்வை, தட்டை முகம், குறுகிய தலை, முரட்டு மயிர் ஐரோப்பாகடைத்தவர் வெண்ணிறம், அழகிய முகம், பொன்னிறமயிர், பொன்னிறக்கண்களுடையவர்கள், ஆசியா கண்டத்தின் தென்பாகத்திலுள்ளவர்கள் பொன்னிறம் மங்கலான கருமை அழகிய முகா, சமப்பார்வை, கறுத்து நீண்ட மயிர் உடையவர்கள். (பூகோளம்). |
உலகத்தில் வசிக்கும் ஜீவராசிகளின் வகை | சிங்கம், புலி, சழுதைப்புலி, வேங்கைப்புலி, கரடி, வெண்கரடி, கருங்காடி, யானை, நீர்யானை (அல்லது) டாபிர், கல்லானை, வெள்ளையானை, ஒட்டகம், ஒட்டகக்குதிரை (அல்லது) கிராப்பி, ஒட்டைச்சிவிங்கி, குதிரை, வரிக்குதிரை, எருமை, காட்டெருமை (அல்லது) பைசன், ஓநாய், செந்நாய், மான், கலைமான், புள்ளிமான், கஸ்தூரிமான், சிறுத்தை, குரங்கு, மனிதக்குரங்கு, நாய்க்குரங்கு, குட்டை வால் குரங்கு, கொறில்லா, உரங் உடாங், சிம்பன்னி, கிப்பன், நாய், நீர்நாய், மர நாய், மோப்பம் அறியும் நாய், வீரநாய், நரிவேட்டை நாய், முயல்வேட்டை நாய், கௌதாரியைப் பிடிக்கும் நாய், எலியைக் கொல்லும் நாய், ஆட்டுநாய், நரி, குள்ளநரி, பசு, எருது, முயல், பூனை, புனுகுபூனை, காட்டுப்பூனை, ஆடு, வெள்ளாடு, செம்மறியாடு, பள்ளையாடு, பன்றி, முட்பன்றி, காங்கேரு, தேவாங்கு, மயில், குயில், கருங்குயில், வரிக்குயில், ஆந்தை, நெருப்புக்கோழி, கோழி, சேவல், பட்டுப்பூச்சி, கறைப்பான் பூச்சி, மூட்டுப்பூச்சி, தெள்ளுபூச்சி, சிலந்திப்பூச்சி, எலி, சுண்டெலி, வெள்ளை எலி, பெருச்சாளி, காகம், பருந்து, கழுகு, புறா, அண் டங்காக்கை, வானம்பாடி, மாமிசம் தின் னும் பறவை, மீன் குத்திப் பறவை, மரங் குத்திப்பறவை, தட்டை மூக்குப் பறவை கொட்டையை உடைத்துத் தின்னும் பறவை, விதைகளைத் தின்னும் பறவை, ரீங்காரப் பறவை, தையற்பறவை, தூக்கணங்குருவி, தச்சன் குருவி, சிட்டுக்குருவி, ஊர்க்குருவி, பச்சைக்கிளி, மைனா தேன் சிட்டு, கனேரிப்பறவை, வாத்து, குள்ளவாத்து, பெருவாத்து, அன்னம், நாரை, நீர்க்கோழி, கொக்கு, உள்ளான், அணில், வெள்ளணில், பறக்கும் அணில், பெருஞ் செவ்வணில், சிறுநரை அணில், கொசுகு, ஈ, தேனீ, காடை, கௌதாரி, துரிஞ்சல், வெளவால், தேள், பாம்பு, நண்டுத் தெறுக்கால், நல்லபாம்பு, சாரைப்பாம்பு, மலைப்பாம்பு, நீர்நாகம், பல்லி, ஒணான், அரணை, பூரான், செய்யான், மின்னல்பூச்சி, குளவி, எறும்பு, பேன், செல், மீன், முதலை, திமிங்கலம், நத்தை, ஆமை, நண்டு, தவளை, கயல்மீன், கடற்பஞ்சு, கடல் நத்தை, அட்டை, சுருமீன், நாய்ச்சுறா, கொம்பன் சுறா, வாளஞ்சுறா, வெள்ளைச்சுறா, நெற் றிலி, கெண்டை, ஈசல் முதலிய. |
உலகந்தாதி | இந்நூல் பாண்டிநாட்டிலுள்ள பாபநாசத்திற் கோயில் கொண்டெழுந்தருளிய உலகம்மை மீது விக்கிரம சிங்கபுரம் நமச்சிவாய கவிராயரியற்றியது. |
உலகப்பெருமாள் நங்கை | உய்யக்கொண்டார் திருவடி சம்பந்தி. |
உலகம் | 1. (3) சுவர்க்கம், மத்தியம், பாதாளம், பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனகோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், இவை மேலுலகங்களாம். கீழ் உலகங்களாவன. அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன (14). 2. நாமிருக்கும் இவ்வுலகம் பெருங்கடலால் சூழப்பட்ட உருண்டை வடிவம். அக்கடல் பலவகையாக நாற்புறங்களிலும் வெவ்வேறு பெயர்பெற்றிருக்கிறது. அக்கடலில் பல பிராணிகள் வசிக்கின்றன. அவற்றின் பெயர் முதலிய பெரும்பாலும் விளங்கா. அவை அக்கடலினடியில் உள்ள பிராணிகள், வெளிச்சமென்ப தறியா. அவை எக்காலத்தும் இருளில் வாழ்வன. சிலவற்றிற்குக் கண்களும் காதுகளுமில்லை. அவற்றிற்குப் பகலுமிரவுமில்லை. சூரியனில்லை, சந்திரனில்லே, சத்தங் கேட்பதில்லை. தம்மைத் தவிர வேறு பிராணிகளை அறியா. நமக்கும் கடலில் வாழ் பிராணிகளுக்கும் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன. பூமியிலோ மேற்கூறியவற்றிற்கு மாறாக இருக்கின்றன. இருதுக்கள் மாறுபடுகின்றன. நம் கண்ணால் பார்க்கக் கூடியவைபோகப் பார்க்கமுடியாத அதிசயங்கள் பல உள. அவற்றில் முக்யமானது சூரியன். சூரியனில்லாமல் ஒரு பிராணியும் உலகத்து வாழாது. அச்சூரியனை நாம் நாடோறும் பார்த்திருந்தும் அந்த நெருப்புக்கோள மின்னதென நாம் அறியோம். சந்திரனையும், நக்ஷத்திரங்களையும் அறியோம். நாம் உயரப்பறந்தும் அவற்றை அறியோம். நாம் இருக்கும் உலகமும் அப்படிப்பட்ட தென்பதே. அது அகண்ட ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. மற்றக் கிரகங்களைப் பற்றித் தனித்தனி காண்க. இது பல பூபாகங்களாகப் பிரிக்கப்பட் டிருக்கிறது. அவை ஆசியா, ஐரோப்பா, அமெரிகா, ஆபிரிகா, ஆஸ்திரேலியா. |
உலகவறவி | இது காவிரிப்பூம்பட்டினத்துச் சக்ரவாளக்கோட்டத்துள்ள சம்பாபதி கோயிலின் முன்புள்ளது. இது பலரும் வந்து தங்குதற்குரிய தருமசாலை. (மணிமேகலை). |
உலகவழக்கு நவிற்சியணி | அஃதாவது உலகவழக்கச் சொல்லைத் தழுவிக்கொண்டு சொல்லுதலாம். இதனை வடநூலார் லோகோக்தியலங்கார மென்பர். |
உலகாயதமதம் | இவன் நீரிசுவரவாதி. இத்தூலதேகத்தில் எதனால் பல விவகாரங்கள் உண்டாகின்றன? எது நீங்கினால் விவகாரங்கள் நீங்குகின்றனவோ அதற்குக் காரணமானதே ஆத்மா என்பன். அவ்வாதமா ஸ்தூல சரீரத்திற்குப் பின் ஜீவித்தல் மரணமடைதல் இரண்டும் சரீராதீனம், இந்திரியமே ஆத்மா என்பன். உலகம் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இவை கலந்த காலத்துண்டாஞ் சிவப்புப்போலவும், விறகைக்கடைந்த காலத்திலுண்டான நெருப்புப்போலவும் உண்டாம். கடவுள், கன்மம், ஆத்மா என்பன இல்லை யென்பன். இதை விட்டுப் புறம தங்களில் சேர்ந்து பந்தித்திருப்பதே பந்தம். உலக இன்பங்களை அனுபவித்திருப்பதே முத்தியென்பன். இது வியாழபகவான் இந்திரன்பொருட்டுக் கற்பித்த மதம். (தத்வநிஜாநுபோகசாரம்). |
உலகேசன் | ஒரு விரிஞ்சன். |
உலுண்டாக்ஷன் | சுகுணபாண்டியனைக் காண்க. |
உலுபதகன் | கிருஷ்ணனை அம்பினால் கொன்ற வேடன். |
உலுபதன் | புரக்ஞயனுக்கு நண்பன். |
உலும்பினிவனம் | கோசல தேசத்திலுள்ள கபிலவாஸ்துவில் கௌதம புத்தர் அவதரித்த இடம். இது, இக்காலத்து உலம்பிதியென வழங்குகிறது. |
உலூக நாதன் | துரியோதனனுடன் பிறந்தவன். |
உலூகன் | 1. சகுனிக்குச் சிரேட்ட புத்ரன். பாண்டவரிடம் துரியோதனனே வலால் தூது சென்றவன். சகாதேவனாலிறந்தான். 2. பாஞ்சாலனுக்குக் குரு. இவர்க்கு அசரீரிவசியம். |
உலூபி | அருச்சுநன் தேவி. கௌரவியன் எனும் நாகன் மகள். குமரன் அரவான் அல்லது இராவான் அல்லது இளாவந்தன். |
உலை | கொல்லன் இரும்பு முதலிய காய்ச்சத் துருத்தியிட்டமைத்த நெருப்பிருக்கை. |
உலோகசாக்ஷி | ஒருமுகம், இரண்டு கை களுள்ளவராய், அஞ்சலியத்தராய் வெண்ணிறத்தராய் வெண்பட்டாடை காஷாய வஸ்திரந் தரித்தவராயிருக்குஞ் சூரியமூர்த்தி. |
உலோகசாரங்கமுனி | ஓர் இருடி. அவர் சம்பாதி இறத்தலை இராம தூதரால் இறகு வளருமெனத் தேற்றித் தடுத்தவர். |
உலோகபாலகர் | உலகத்திற்குத் துன்பம்வராமற் காக்குந்தேவர். இவர்கள் இரண்யரோமன், கேதுமந்தன், சுதன்வா, சங்கபாலன் முதலியவர்கள். |
உலோகப்ரகாசர் | கறுப்புநிறம், ஐந்து முகம், பத்துக்கைகள், இரண்டு கைகளில் இரண்டு கமலங்கள், சூலம், அங்குசம், தண்டம், சபமாலை, கமண்டலம், வல இடக்கைகளில் அம்பும், வில்லும், சின்முத்ரையுடையவராய் நீலரத்னாபரணங்கள், நீலவஸ்திராபரணமுடையரயிருக்குஞ் சூரியமூர்த்தி. (அ~பத்ததி). |
உலோகமாபாலன் | சீவகனுக்கு ஆசிரியன். பதுமைக்குச் சகோதரன். (சீ~சிந்தாமணி). |
உலோகம் | (5) பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் இவற்றுடன் வெண்கலம், தரா சேர்ந்து ஏழாகக் கூறுவர். |
உலோகலிங்கம் எண்வகை | சுவர்ணலிங்கம், வெள்ளிலிங்கம், தாமிரலிங்கம், வெண்கலலிங்கம், துத்தநாகலிங்கம், ஈயலிங்கம், அரக்குலிங்கம், இரும்புலிங்கம், என்பன இவற்றிற்குப் பலன் முதலிருந்து குறையும். (சைவபூஷணம்). |
உலோகாசார்யர் | நம்பிள்ளைக்குக் கந்தாடைதோழப்பராவிடப்பட்ட பெயர். (குரு~ரை). |
உலோகாந்தகன் | சிவகணத்தலைவரில் ஒருவன். |
உலோகாலோகம் | சக்கரவாளகிரி, இதன் உட்பாகம் சூரியன் ஒளி பெற்றும், புறப்பாகம் அது இன்றியு மிருக்கும். இதனை லோகம் அலோகம் எனப்பிரித்து மனிதர் வசித்தற்கும் வசிக்காமைக்கும் வசதி உள்ளதும் அல்லாததற்கும் பெயரெனக்கொள்க. |
உலோகிதன் | காச்மீரதேசத்து தரசன். |
உலோகிதாக்ஷன் | 1. ஜனமேஜயன் சர்பயாகத்தில் இருந்த ஸ்தபதி (பா~ஆதி). 2. குமாரக்கடவுளின் கணநாதரில் ஒருவன் (பா~சவ்). |
உலோகிதாசுவன் | அரிச்சந்திரன் குமரன், இவனுக்கு லோகிதாசுவன் எனவும் பெயர். |
உலோகிதார்ணன் | பிரியவிரதனுக்குப் பேரன். கிருதபிரஷ்டன் குமரன். |
உலோச்சனார் | இவர் நெய்தனிலத்தைமிகச் சிறப்பாக அமைத்துப்பாட வல்லவர். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப்பாடி இருத்தலானே அவன் காலத்தவரென்று தெரிகிறது. புறம் 377 நற்றிணை 131-ம் பாட்டிலும் அகத்திலும் பெரிய னென்னும் வள்ளலையும் அவனது பொறையாற்றையுஞ் சிறப் பித்துக் கூறியுள்ளார். நற் 38ல் கடற்கரையின் கணுளதாகிய “காண்டவாயில்” என்னும் ஊர் இவராற் கூறப்பட்டுள்ளது. அதனைக் காண்டவாயில் எனவும் அழுங்கலூர் என்றும் பாராட்டிக்கூறியிருத்தலானே இவர் அவ்வூரிலிருந்தவர் போலுமென்று கருதவுமாம். கடலிலுள்ள பலவகை மீன்களையும் உவமை முதலாயவற்றோடு தெளிவாகக் கூறுதலால் இவர் பரதவர் மரபினர் போலும். மற்றும் நற் 74ல் மருதத்து நிகழவேண்டிய பரத்தையிற் பிரிவினையும் நற் 149ல் பாலையில் நிகழவேண்டிய உடன் போக்கினையும் ஏனைப்பாடல்களில் குறிஞ்சியில் நிகழ்தற் பாலவாகிய களவொழுக்கம் அனைத்தினையும் நெய்தலில் நிகழ்ந்தனவாகவே வைத்துப்பாடிய ஆற்ல் வியக்கத்தக்கதாகும். நற் 278ல் புன்னைக்காயில் நெய்யெடுக்கும் வழக்கையும் நற் 331 லும் அகத்திலும் மகளிர் உப்புக்குவட்டின் மேலேறி மீன்பிடி படகு களையெண்ணும் வழக்கையும் கூறியுள்ளார். இக்காலத்துத் திமிங்கலத்தின் மீது ஏறியீட்டி வீசிப் பிடிக்கின்ற வழக்கம் பண்டை காலத்து முளதென்று அகத்தில் இவர் பாடலால் அறியப்படுகிறது. இவர் இத்துணை பாடலுளும் பெரும்பாலும் களவொழுக்கத்தையே பாராட்டிப் பாடுதலால் களவியல் பாடுதலில் சிறந்தவரென்று கொள்ளக்கிடக்கின்றது. நற் 64ம் பாட்டாகிய குறிஞ்சித்திணைச் செய்யுள் இவர் பாடியதாக எழுதியிருப்பது ஒரு கால் ஏடெழுதினோர் தவறாயிருக்கலாம். அஃது இவர் பாடிய தன்று, மற்றும் தலைவன் பகற்குறி வந்து மீள்வான் இன்றிங்கிருந்து விருந்துண்டு செல்கவென்று கூறும் தோழி கூற்றில் அவனுடைய குதிரைக்கும் ஆகார மமைத்துக் கொடுக்குஞ் சிறப்பை 254 வினும் அகத்திலும் விரித்துக்கூறுகின்றார். எனைநிலத்தினும் நெய்தனிலமே எந்நாளும் உருவாய் மிக்குளதென்று இவர் கூறும் (நற் 311) பாடல் கல்வியறிவில்லாதாரையும் இனிது மகிழ்விக்கும். இரவுக்குறி நேர்கின்ற தோழி கூறுமுகத் தானே நெய்தனிலத்தூர் தமர் ஒருவரை யொருவர் அறியாதபடி மக்கள் நெருக்க மிக்குடையதென்று (நற்) 331ல் சிறப் பிக்கிறார். கொல்லைப்படப்பைகள் கண்டல் மரங்களை வேலியாகயுடையன வென்று பல இடங்களிற் கூறுகிறார். கண்டல் மரத்தின்கழி (கொம்பு) களே இக்காலத்திலே தோணி தள்ளுபவர்க்குப் பற்றுக் கோடாயுள்ளன. அவை கண்டற்கழியென்றே வழுங்கப்படுகின்றன. விரிப்பிற் பெருகுமாதலின் இம்மட்டோடு நிறுத்தலாயிற்று. இவர் பாடியனவாக நற்றிணையில் (20) பாடல்களும், குறுந்தொகையில் (4)ம், அகத்தில் (8)ம், புறத்தில் மூன்றுமாக (35) பாடல்கள் உள. (நற்). |
உலோபன் | டம்பமாயைகளின் குமரன் (இது உருவகம்) வாசிட்டம். |
உலோபாமுத்திரை | விதர்ப்பதேசத்தரசன் பெண் அகத்தியர் பாரி. இவள் அகத்தியரை நோக்கி நாம் இவ்வுலகத் திருப்புழி இடம், பொருள் முதலிய வேண்டுமெனக் கணவரைக் கேட்க முனிவர், வில்வலனிடஞ் சென்று பொன் பெற்றுத்தரப் பல வகையாகிய இன்பங்களை அனுபவித்தவள். |
உலோமசன் | ஒரு ரிஷி. பாண்டவர்கள் வனத்திலிருந்த காலத்து வந்தவர். இவர் அவர்களுக்குத் தருமோபதேசம் செய்தவர். |
உலோமபாதன் | உரோமபாதனுக்கு ஒரு பெயர். |
உலோலன் | தாமசமனுவைக் காண்க. |
உலோலாதித்தன் | ஒரு சூரியன். காசியடைவேன் என்று ஆசைகொண்டு சென்றதால் இப்பெயர் பெற்றவன். (காசிகாண்டம்). |
உலோலை | மது என்னும் அரசனுக்குத் தாய். (லோலை). |
உலோஹிதகல்பம் | ஒரு கல்பத்துச் சிவமூர்த்தி லோஹி தநிறமாய்த் தோன்றினராதலால் அப்பெயரடைந்தது. இக்கற்பத்தில் லோஹிதாக்ஷி தோன்றினள். (லிங்கபுராணம்.) |
உலௌதித்தியம் | இது ஒருந்தம். A PORTION OF THE RIVER BRAHMAPUTRA NORTH OF PRAGJYOTISHAPURA. |
உலௌஹித்யம் | உதய பர்வதத்திற்கு அருகிலுள்ள கடல்~(பார.) |
உல்கணமானி | (THERMOMETER) இதர் பொருள்களின் உஷ்ண நிலைமையை அளக்கும் ஒரு கருவி. இதில் உஷ்ணத்தைத் தெரிவிக்கும் அளவுகள் கணக்கிட்டிருக்கும். அதனால் உஷ்ணத்தின் ஏற்றக்குறைகளைத் தெரிந்து கொள்ளலாம். இது பலவகைப்படும், வைத்தியர்கள் தேக உஷ்ணத்தை அறிந்துகொள்ள உபயோகிப்பது பஹிரேன்ஹீட் உஷ்ணமானி. இதை கிளினிகல் உஷ்ணமானி யெனவும் கூறுவர். அதிஉயர்வு, தாழ்வாகிய உஷ்ணத்தைத் தெரிவிக்கும் உஷ்ணமானி MAXIMOM AND MINIMUM THERMOMETER என்பர். |
உல்காமுகன் | வாநரசேனாபதி. |
உல்பகரோகம் | பிரசவித்து மறுருதுவடைந்த ஸ்திரி கருக்கொண்டபின் முன் பிறந்திருக்கிற குழந்தைக்குத் தன் பாலைத்தரின் சிசு, மயக்கம், மார்புவலி, இருமல், இரைப்பு, வாந்தி, சுரம் முதலிய கொள்ளுதல். (ஜீவ). |
உல்முகன் | 1. சக்ஷர்மனுவிற்கும் நட்வலைக்கும் பிறந்தவன். பாரியை புஷ்கரிணி. பிள்ளைகள் அங்கன், ஆங்கீரசன், கயன், கத்ரு,க்யாதி, சுமனஸ், பாரி, பிரீதகேசி யெனவுங் கூறுவர். 2. ஒரு யாதவவீரன். |
உளதிலன் | அசுவதராசுவன் சந்ததியானான இருடி. |
உளமாந்தைரோகம் | இது க்ஷயரோக பேதம், அக்னிமந்த முள்ளபோது புசித்த லாலும், இரவில் விழித்தலாலும், மிக்க புலாலுண்ணலாலும், அதிசை யோகத் தாலும், பகலுறங்கலாலும் உண்டாவது. இது வாத, பித்த, சிலேஷ்ம திரிதோஷத் தால் நான்கு வகைப்படும். |
உளுவண்டு | இது வண்டினத்தில் சிறியது இதன் வாயில் துதிக்கை போல் ஒரு அங்கம் உண்டு, அது ஊசிபோலடி பருத்தும் நுனி சிறுத்தும் உள்ளது. இதனால் இது தானிய முதலியவற்றைத் துளைத்து முட்டையிடும். இது புத்தகத்தை யூடுருவித் துளைக்கும். |
உள்ளப்புணர்ச்சி | இது களவிற் புணர்ச்சியின் வகை தலைமகன் பெருமையு முரனுமுடையன், தலைமகள் அச்சம், மடம் நாணுடையராதலின் முதலில் உள்ளப் புணர்ச்சியுண்டாவது. |
உள்ளமுடையான் | உள்ளமுடைய கவியால் செய்யப்பட்ட சோதிட நூல். |
உள்ளானின் ஒருவகை | ஆசியா, ஆபிரிகா, அமெரிகாவிலுண்டு. அதன் தலைப் பக்கம் கருமை, முதுகு சாம்பல் நிறம், வயிறு வெளுப்பு. இதன் கால்களும் விரல்களும் அதிகம் நீண்டவை. வளைவு இல்லை. இவற்றினு தவியாலிது நீரிலுள்ள தாமரை, அல்லி, பாசி முதலியவற்றில் நடந்து சென்று பூச்சி புழுக்களைத் தின்னும். இதன் முட்டை பசுமை. |
உள்ளான் | இது, சிறு கொக்குப்போல் கால்களும் அலகும் நீண்டு தலைசிறிய பறவை. இது நெல் வயல்களில் தான்யங்களைப் பொறுக்கித் தின்னும், இது, தன்னினத்துடன் கூடி வாழ்வது. வெண்மை கலந்த கறுப்பு நிறமுடையது, வேட்டைக்காரர் இதனை ஆகாரத்தின் பொருட்டு வலையிலகப்படுத்தியும் சுட்டும் கொல்வர். |
உள்ளான் | இது கொக்கினத்தைச் சேர்ந்தது. இது நீண்ட கால்களும், நீண்ட மூக்கையும் பெற்றிருக்கும். கழுத்துக் குறுகல், வால் குறுகல். இது உலாவும் போது வாலை ஆட்டிக்கொண்டே உலவும். நிறம் செம்மைகலந்த சாம்பல் நிறம். உடலில் வரைவரையான கோடுகளுண்டு. இது புதர்களில் மஞ்சள் கலந்த பசுமைநிறமான கூடுகட்டும். சதுப்புநிலங்களிலுள்ள புழுப் பூச்சிகளைத் தின்னும், |
உள்ளுறையுவமம் | புலவன் தான் புலப்படக் கூறுகின்ற உவமத்தானே புலப் படக்கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாக உள்ளத்தே கருதி உள்ளுறுத்துக் கூறுவது. (தொல்.) இது ஆராய்ந்தறியும் பகுதியினை யுடைத்தாய்ப் புள்ளொடும், விலங்கொடும் பிறவற்றோடும் தோன்றுவது. (அகம்.) |
உழபுலவஞ்சி | பொருந்தாதாருடைய நல்ல தேசத்தை மிக்க நெருப்பைக் கொளுத்தியது. (பு. வெ). |
உழவுகருவிகள் | கலப்பை, அடிப்படை, மேழி, எர்க்கால், நம்ததடி, கார், காரின் ஆணிகள், எர்க்காலின்புள், பரம்புச்சட்டம் பலுமரம், கொருகலப்பை, கட்டைபாறை, எருதுகள், பூட்டாங்கயிறு, மண்வெட்டி, குந்தாலி, கோடாலி, களைகொட்டு, கருக்கு அரிவாள், பிக்காசு, வெட்டுக்கத்தி, முன்வாள், துறட்டுக்கோல், தாற்றுக்கோல், இறைகூடை, கைரற்றம், ஆன் எற்றம், முதலியன. |
உழிஞை | தம்முடிமேலே உழிஞை மாலை யையணிந்து பகைவர் கொடியசையும் நிறைந்த குறும்பினைக்கைப்பற்ற நினைந்தது. (பு. வெ). |
உழுதுவித்திடுதல் | பகைவருடைய பல அரணும் கழுதையாகிய எரிட்டுழுது கவடியுடன் குடைவேலை விதைத்தது (பு. வெ). |
உழுந்தினைம் புல்லன் | கடைச்சங்க மருவிய புலவரில் ஒருவர். இவர் தினைப் புலத்தைப் பாடிய தாலிப் பெயர்பெற்றனர் போலும். குறுந்தொகையில் குறிஞ்சி பாடியவர் குறு~333. |
உவகைக்கலுழ்ச்சி | வாளால் வாய்ப்பு பெற்ற விழுப்புண் மிக்க உடம்புடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வீழ்த்த து (பு. வெ). |
உவசம்பனி | இவன் சனாரு முனிவன் குமரன். இவன் பாம்பு கடித்திறந்தனன். எறும்பொன்று மற்றொரு இறந்தவுடலைச் சுமந்து சென்று சுவர்க்கத் துவாரத்தில் வைத்தது. உடனேயிறந்த எறும்பு உயிர் பெற்றது. இவன் தந்தை அவ்வெறும்பைக் கண்டு தன் குமரன் உடலினையும் அவ்வாறு சுவர்க்கத் துவாரத்திலிட்டு உயிர் வரக்கண்டு களித்தனன். உயிர் கொண்ட குமான் தானுயிர் பெற்ற இடத் தில் ஒரு பிடி மண் எடுக்க அங்குச் சிவலிங்கமொன்று தோன்றிற்று. அதை அவிழத்தம் என்பர். (காசிகாண்டம்.). |
உவமையணி | அஃதாவது இரண்டு பொருள்களுக்கு ஒப்புமையை விளங்கச் சொல்லுதலாம் இதனை வடநூலார் உப மாலங்கார மென்பர் |
உவர்கண்ணூர் புல்லங்கீரன் | கடைச்சங் கமருவிய புலவர். |
உவர்மண் | இந்த உவர்ப்பானமண் இந்தியாவில் பலதிசைகளிலுமுண்டு. இது மிகுதியும் இலவணசாரம் கொண்டிருக்கின்றது. செம்மெழுகுச் சாயத்தின் சேர்மானங்களிற் சேர்க்கப்படுகிறது. வஸ்திரம் வெளுப்பதற்கும், சாயம் போடுவதற்கும் உபயோகப்படுகிறது மல்லாமல் இதனால் சீசாக்களும் சவுக்காரமும் செய்யப்படுகின்றன. |
உவற்பு | (6) ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், குற்சை, இவற்றின் பொருள், சிரிப்பு, ஆசை, வெறுப்பு, சோர்வு, அச்சம், அருவருப்புமாம். |
உவவனம் | காவிரிப்பூம்பட்டினத்தைச் சார்ந்த ஒரு நந்தனவனம். புத்த பீடிகையுள்ள பளிக்கறையுள்ளது. மணிமேகலை மலர்கொய்யச் சென்றாள் எனக்கேட்டு உதயகுமாரன் அவளைக் கவர்ந்து செல்ல முதலில் முயன்றவிடம். இது மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் காக்ஷி கொடுத்து அவளைப் பளிக்கறையில் மறைத்த இடம். (மணிமேகலை.). |
உவிநான் | அரம்யாசுவன் குமரன். |
உஷா | 1. விபாவசு எனனும் வசுவின் தேவி. குமரர் வியுஷ்டி, ரோசஸ், ஆதபன். 2. சூரியன் பாரி. |
உஷாபதி | அநிருத்தன். |
உஷை | பாணாசுரன் பெண். இவள் அநிருத்தனைக் கனவில் அணைந்து விழிக்கக் காணாது விசனப்பட்டுத் தனது குறையைத் தோழியாகிய சித்திரலேகையிடங் கூறி அவள் அரசர் உருவங்களை எழுதிக்காட்ட இன்னானென்று தெரிவித்து அவளை வேண்டினள். சித்திரலேகை அதி மாயாவியாதலால் அநிருத்தன் தூங்கிக் கொண் டிருககையில் அவனைக் கட்டிலோடு தூக்கிவந்து அவளிடம் விட இன்ப மனுபவத்திருக்கையில் தகப்பனால் களவறிபப்பட்டுச் சிறையிலிருந்து கண்ணனால் விடுவிக்கப்பட்டவள். (பாகவதம்) |