அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

இது முதுகெலும்பில்லாப் பிராணி வகையைச் சேர்ந்தது. இதற்குத் துதிக்கை உண்டு. அதனால் பொருள்களில் உட்கார்ந்து தன்னெச்சிலால் நனைத்துச் சத்தையுறுஞ்சும். இதில் பெரு ஈ முதலிய பல நிற ஈக்கள் உண்டு.

ஈங்கச்சோளாண்டான்

மணக்கால் நம்பியின் திருவடி சம்பந்தி.

ஈசாண்டான்

ஆளவந்தார் திருவடி சம்பந்தி. (குருபரம்பரை).

ஈசானசிவர்

சைவ சித்தாந்தபத்ததி செய்த ஆசிரியரில் ஒருவர்.

ஈசானன்

திக்குப்பாலகரில் ஒருவன்.

ஈசானமுனிவர்

வரதுங்கராம பாண்டியனுக்கு ஆசிரியர். இவர் வேப்பத்தூர் சங்கத்தைச் சேர்ந்தவர்.

ஈசானமூர்த்தி

படிக நிறம், மூன்று கண் உடையராய்ச் சௌமியராய், புருஷாகாரமாய், சூலம், அபயம் உடையராயிருப்பர்.

ஈசானம்

சிவனினைந்து திருமுகத்தொன்று.

ஈசானர்

வாயுவை அதிட்டித்து நிற்கும் சிவமூர்த்தம். இவரது, சத்தி காளி. இவர்க்குக் காலர் எனவும் பெயர்.

ஈசானா

நவசத்திகளில் ஒருத்தி.

ஈசானி

ஒரு மாயாதேவி.

ஈசானியசுவாமிகள்

இவர் திருவாவடுதுறை யாதினத்தவர். கவிவல்லவர். கடம் பற்கோயிற் புராணம் பாடியவர். 2. பொம்மபுர வாதீனத்தவர். கவிவல்லவர். வசவபுராணம் பாடியவர்.

ஈசுரதத்வம்

சுத்த மாயையில் சூக்ஷ்மமாய்க் காரியந்தோன்றற்கு உத்யுத்தனாய் நின்ற முதல்வன், அதிகார அவத்தையினின்று கிரியா சத்தியை மிக்குச் செலுத்திப் பிரவிருத்தி செய்தவழி, சூஷ்மமாய்க் காரியப் பட்ட சுத்தமாயையின் நான்காம் விருத்தி, ஈசுரனாய் நின்ற சிவனால திட்டிக்கப்படுவது. (சிவ~போ).

ஈசுவரமுனிகள்

வீரநாராயண புரத்தில் நித்யவாசியாய்ச் சடமர்ஷண குலத்தவராய்ச் சொட்டைக்குலத் தரசென்று பெயர் பெற்ற ஈச்வாபட்டாழ்வாருக்குப் பௌத்ரர். நாதமுனிகளுக்குக் குமரர். இவர் குமரர் ஆளவந்தார்.

ஈசுவாராசன்

கிருஷ்ண தேவராயனுக்குப்பாட்டன்.

ஈச்சமரம்

இது, பேரீந்து, நாட்டீந்து சிற்றீந்து எனப் பலவேறுபடும். பேரீந்து அரேபியாவில் உள்ளது. இதனிலைகள், நடுத்தண்டில் தென்னைபோல் பலகிளைத்து நடுநரம்புடன் கூடியவை. இதன் சூலை, பல காய்களைப் பெற்றிருக்கும். மாம், சற்றேறக்குறைய 60 அடி உயரமிருக்கும். ஒலையால் பாய்முடைவர், மட்டையால் கூடை முதலிய கட்டுவர். பழம், உணவு, குதிரையுணவு, சாராயம் முதலியவாக உதவும்.

ஈச்சம்பாடி ஸ்ரீநிவாசாசாரியார்

இவர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். சென்னை சர்வகலாசாலைத் தமிழ்ப்புலமை நடாத்திய புலவர்களில் ஒருவர். தமிழில் விஷ்ணுபுராண வசனம், உத்தரராமாயண வசனம், அதிக கதாசங்கிரக வசனம் குவலயாநந்த வசனம் எழுதியவர்.

ஈச்சம்பாடிசீயர்

உடையவர் திருவடிசம்பந்தி.

ஈச்சம்பாடியாச்சான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். வைஷ்ணவாசாரியர். (குருபரம்பரை).

ஈச்சுரன் குணம்

இறைவனெண்குணம் காண்க.

ஈச்சுரன் பிரபுத்வ சாமார்த்தியருணம்

(3) கர்த்தத்துவம், அகர்த்தத்துவம், அன்ய தாகர்த்தத்துவம்.

ஈச்சுரன் முகம்

ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம்.

ஈட்டி எழுபது

இது, செங்குந்த மரபினர் மீது ஒட்டக்கூத்தரியற்றிய புகழ்ச்சிப் பிரபந்தம்.

ஈயசெந்தூரம்

ஈயம், பிராணவாயு சேர்ந்த பொருள் இதனுடன் நல்லெண்ணெய் சேர்த் துருக்கி ரணங்களுக்குப் போடுகிறார்கள்.

ஈயம்

(வங்கம்) இது, கனிகளில் உண்டாம் லோகங்களில் ஒன்று. இது சையாம் தேசத்திருந்தும் அரக்கன் தேசத்திருந்தும் கொண்டு வரப்படுகிறது. அரேபிதேசத்தில் ஓமன் என்ற இடத்தில் ஈயக்கனி உண்டாயிருக்கிறது. இது, நீரினும் 11 மடங்கு கனமுள்ளது. வெட்டினவுடனுட்பகுதி பளபளப்பாகவும் காற்றுப்படப்பட மங்கியும் போம். இது இயற்கையில் வெண்மை கலந்த சருகிற முடையது. நயப்புள்ளது, எளிதில் உருகத்தக்கது. இதை வெட்டியெடுக்கையில் வேறு பல பொருள்களுடன் கலந்திருக்கும். அதில் கந்தகமும் சேர்ந்திருக்கும் என்பர். இதில் பலவித குழைகள், துப்பாக்கி ரவைகள், சிற்சில ஒளஷதங்கள் செய்யப்படுகின்றன. இதனை அண்டிமொனியெனும் ஒருவகை உலோகத்துடன் சேர்த்து அச்செழுத்துவார்க்கின்றனர். இதனால் கறுப்புப் பென்ஸில் செய்கிறார்கள், இது ஸ்பெயின், இங்கிலாந்து, ஐக்யமாகாணங்கள் முதலிய இடங்களிலும் எடுக்கப்படுகிறது.

ஈயவெள்ளை

ஈயம், கரிப்பொருள், பிராண வாயு இவை சேர்ந்தது. இதனுடன் மர எண்ணெய் சேர்த்து வர்ணம் பூசுகிறார்கள் விஷமுள்ளது.

ஈயுண்ணிமாதவர்

நம்பிள்ளையின் திருவடி சம்பந்தி.

ஈயுண்ணியாண்டான்

உடையவர் திருவடி சம்பந்தி. (குருபரம்பரை).

ஈரந்தூர்

இது ஈரந்தை என்றும் வழங்கப்படும் ஊர். (புறநானூறு).

ஈரந்தூர் கிழான்

இவர் வேளாண்மரபினர். அமைச்சுத் தொழில் மேற்கொண்டவர் போலும், கோனாட்டு எரிச்சலூர் மாடலன் மதுரைக் குமானாரால் பாடல் பெற்றவர். இவர் பரிசிலர்க்கு இல்லையென்னாது கொடுப்பவர். இவர் தம்மரசருக்கு வந்த துன்பந்தாங்கிப் பகைவரை வென்றவர். இவர்க்கு ஈரந்தூர்கிழான் தோயன்மாரன் எனவும் பெயர் (புறநானூறு).

ஈளீனன்

ரப்யனென்னும் பெயருள்ள புரூரவம்சத்தவன்.

ஈழத்துப்பூதன்றேவன்

இவர் ஈழநாட்டவர்போலும், கடைச்சங்கத்தவருள் ஒருவர். (குறு~343.).

ஈழன்

இவன் ஒரு அரசன், இவன் பெண்ணுரு அடைந்து புண்ணிய நதியில் தீர்த்த மாடி ஆணுருவடைந்தவன்.

ஈழம்

பாதகண்டத்துத் தெற்கிலுள்ள ஒரு தீவு. இதனைக் குபேரனும், இராவணனும், சோழரும், பாண்டியரும், மகதநாட்டவரும், அவரைச் சார்ந்த பௌத்தரும் அரசாண்டனர். இதனை இலங்கையென்றும், சிங்களத்வீபமென்றும் சேரத்லீபமெனவுங் கூறுவர்.