அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
இகழ்ச்சியணி

அஃதாவது, ஒன்றன் குணகுற்றங்களான் மற்றொன்றற்கு அவையுளவாகாமையைச் சொல்லுதலாம். இதனை வட நூலார் அவஞ்யாலங்காரம் என்பர்.

இக்ஷு

பிரசானியன் புத்ரன். இவன் புத்திரன் இக்ஷவாகு.

இக்ஷுமதி

குசத்துவசன் இராஜதானியாகிய சாங்காச்ய புரிக்கணுள்ள ஒரு நதி. கபிலராச் சிரமம் இதன் கரைக்கண்ணது என்பர்.

இக்ஷ்வாகு

(சூ) ஒரு நாள் மது தும்புகையில் அவன் மூக்கிலிருந்து பிறந்தவன். இவனுக்கு விகுக்ஷி, நிமி, தெண்டன் முதலிய நூறு குமாரர். ஒரு நாள் தந்தை விகுக்ஷியைச் சிரார்த்தத்திற்கு மாமிசம் கொண்டு வரும்படி காட்டிற் கனுப்பினன். விகுஷி காட்டிற்குச் சென்று சிரார்த்த மிருகங்களை வேட்டையாடிப் பசியினால் மறந்து முயலைப் புசித்துக் கொண்டு போய்க் கொடுத்தனன். வசிட்டர், இந்த மாமிசம் உச்சிட்டமானதை அரசனுக்கு அறிவிக்க அரசன் சிரார்த்தத்திற்குத் தடைசெய்த அந்தக் குமாரனை நாட்டிலிருந்து ஓட்டித் தானும் தவமேற் கொண்டனன். இவன் பிரமனிடத்தில் வாகுவலயம் பெற்றவன். கௌசிகன் என்கிற முனிவனிடத்தில் சபத்தைத் தானம் வாங்கினவன். இவனுக்கு அவம்புசையிடம் விசாலன் பிறந்தனன். இவனைச் சூரிய வம்சத்து இக்ஷுவின் குமான் என்பர். திருவரங்கனைப் பிரதிட்டை செய்தவன். (பாகவதம்).

இசை

(3) மந்தரம், மத்திமம், தாரம். இசை (7) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். இவற்றுள் மிடற்றால், குரல், நாவால், துத்தம், அண்ணத்தாற் கைக்கிளை, சிரத்தால் உழை, நெற்றியால் இளி, நெஞ்சால் விளரி, மூக்கால் தாரம். (இவற்றிற்கு ஓசையுவமை) முறையே மயில், இடபம், ஆடு, கொக்கு, குயில், குதிரை, யானை (சுவையுவமை) பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி. (மணவுவமை). மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், பொன்னாவிரை, புன்னை. (அக்ஷரங்கள்) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐ இ, ஓஓ, ஔஉ, (மாத்திரைகள்) குரல் 4, துத்தம் 4, கைக்கிளை 2, உழை 3, இளி 4, விளரி 3, தாரம் 2, இவற்றுள், எழுபாலை பிறக்கும். பாலையைக் காண்க.

இசைச்சன்

இவன் உதயணனுடைய பார்ப்பனத்தோழன். அவனுடை அமைச்சனாகவுங் கூறப்படுவன். இளமையில் இரு முது குரவரையுமிழந்தோன். வாசவதத் தையையும், யூகியையுமிழந்ததனால் மிகுந்த கவலையுற்று மெலிந்த உதயணனை நோக்கி “இறந்த வாசவதத்தை பிறந்த இடத்தை அறிந்து பழைய உடம்போடு அவளைத் தருதற்குரிய மந்திர விச்சையில் வல்லவராகிய பெரியவரொருவர் இராசகிரிய நகரின் பக்கத்தே யுள்ளார் அவரை அடைந்து வழிபட்டால் வாசவதத்தை யையும் யூகியையும் நாம் பெற்றுவருதல் எளிது” என்று சொல்லித்தேற்றி அவனை வேற்றுவடிவங் கொள்வித்து மற்றைத் தோழர்களோடு அந்நகர்க்கு அழைத்துச் சென்றவன். சென்ற இடத்துக் காமன் கோட்டத்தின் வாயிலிற் காணப்பட்ட பதுமாபதி தன்னை விரும்பினாளென்று வேட்கையுற்ற உதயணனுக்கு மகத்தேயத்து மகளிரது நிறையுடைமையைக்கூறி அவனது காம வேகத்தைத் தணிவித்தவன். அவன் பதுமாபதியின் கன்னிமாடத்தில் வேற்று வடிங்கொண்டு மறைந்திருந்த காலத்தில் மற்றத் தோழர்களோடு தானும் வேற்றுவடிவம் கொண்டு அயலிடத்திலிருந்து அவனைப் பாதுகாத்து வந்தோன். தருசகனோடு பெரும் போர்புரிதற்கு வந்த பகைவருடன் போர் செய்தற்குச் சென்ற உதயணனுக்குத் துணையாகச் சென்றவன். பதுமாபதியை நீ மணஞ்செய்து கொள்ள வேண்டும் என்று தருசகன் உதயணனை வற்புறுத்தியபொழுது இசைச்சனென்னும் உயிர்த்தோழனருமறை நாவினந் தணனவன்றனக் கிருமுது குரவருமிறந் தனராதலின் வேதத்தியற்கையின்னே தந்தீரக்கிரிசையின் வழா அ வரிசை வாய்மை யோரந்தணன் கன்னியை மந்திர விதியின்வன் பாற்படுத்த பின்னரென்னையும் மிதன் பாற்படுக்கஎன உதயணனாற் கூறப்பெற்று ஒழிக்கினும், குலத்தினும் விழுப்பமிக்க ஆப்பியாயினி யென்னும் அந்தணக்கனியை மணஞ்செய்து கொண்டவன். படம் வருவாயையுடைய பல ஊர்களைச் சீவிதமாக உதயணன் பாற்பெற்றவன் மயக்கமில் கேள்வியிசைச்சன்” வாய்மொழிக் தாய்ந்த வுயர்ச்சியுள்ளத் திசைச்சான் “இழுக்காவியல் பினிசைச்சன்” என்பர். (பெருங்கதை).

இசைஞானியார்

சடையனார் பத்தினியார், சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பெற்றவர். (பெரியபுராணம்).

இசைநுணுக்கம்

இது சாரகுமாரனிசையறிதற் பொருட்டுச் சிகண்டியாற் செய்யப்பட்ட இசைநூல். அகத்தியர் காலத் திருந்தது. இடைச்சங்க மருவியதென்றுங் கூறுவர்.

இசையானந்தம்

அவலமுற்றிருந்தோர்க் குரிய இசைகள், தலைவன் பாட்டிற்கு இசையாகி வரப்புணர்க்கும் நூற்குற்றம் (யா~வி).

இசையெச்சம்

வாக்கியத்திற் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது. (தொல். சொல். 440).

இச்சாசத்தி

இது, ஆதி சத்தியில் ஆயிரத்தொரு கூறாக வடிவைப் பிரேரிப்பது. (சதா~ம்)

இச்சுவா

தக்ஷன்பெண். அத்திரிக்குத் தேவி.

இச்மிருதி

யமனுக்கு மேதையிட முதித்த குமரன்.

இஞ்சியம்

பிரமன் மூச்சிற் றோன்றிய மேகம்.

இடக்கரடக்கல்

நன்மக்களிடத்தே சொல்லத்தகாத இடக்கான வார்த்தைகளை மறைத்துப் பிறவற்றாற் சொல்வது. தகுதி வழக்குளொன்று. (நன்)

இடக்சழிநாட்டுநல்லூர் நத்தத்தனார்

இவர் ஏறுமாநாட்டு நல்லியக்கோடன்மீது சிறு பாணாறு பாடிப் பரிசுபெற்ற புலவர்.

இடங்கழி நாயனார்

கோனாட்டுக்குள்ளிட்ட குறிஞ்சிநிலமாகிய எயினர் வாழும் கொடும்பாளூரில், சூரியவம்சக் குறுநிலமன்னர் குலத்தில், திருவவதரித்து அரசாட்சி செய்து கொண்டு, சிவபத்தி மேலிட்டவராக இருக்கையில், சிவனடியார்க்கு அமுதுப்படைக்கும் நியமம் பூண்ட அடியவர் ஒருவர், அடியவர் பூசைக்குப் படைக்க அமுதில்லாமல், இராஜாவின் அம்பாரத்தில் திருட, சேவகர் பிடித்து அரசன் முன் விட்டனர். அரசன் அடியவரை நோக்கி என் திருடினீரென, சிவனடிய வர்க்கு அமுது படைக்க இல்லாமையால் திருடினேன் என்ன, அரசன் கேட்டு இரக்கமுற்றுத் தமது பொக்கிஷத்தையும், அம்பாரத்தையும், சிவனடியவர் கொள்ளை கொள்ளவிட்டு அரசு செய்து முத்தியடைந்தவர். இவர் கோச்சிங்கப்பல்லவன் காலத்தவர் என்பர். இவ்வம்சத்தவன் விசயாலயன் எனும் சோழன். (பெரியபுராணம்).

இடச்சுத்தம்

குடிபுக (12)ம், முடிபுனைய (11)ம், அன்னப் பிராசனத்திற்கு (10)ம், மயிர்கழிக்க (9)ம், உபநயனத்திற்கு (8)ம், விவாகத்திற்கு (7)ம், கோடியுடுக்க (9)ம், யாத்திரைக்கு (5)ம், வித்யாரம்புத்திற்கு (4)ம், பொன் பூண (2)ம், நிஷேகாதிகளுக்கு லக்னமும், சுத்தமாக இருத்தல் வேண்டும்.

இடச்பதி

யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிடத் துதித்த குமரன்.

இடந்தலைப்பாடு

முதனாளில் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் மற்றைத் தினத்திலவ்விடத்தேவந்து தலைமகளைக் கூடுதல். இது தெய்வந்தெளிதல், கூடல், விடுத்தல் எனும் வகையினையும், தந்த தெய்வந் தருமெனச் சேறல், முந்துறக் காண்டல், முயங்கல், புகழ்தல், ஆயத் துய்த்தல் எனும் விரியினையு முடையது. (அகம்) இரண்டாநாள் முடிவு.

இடபகிரி

திருவேங்கடம, ஆடபாசுரனைக் காண்க. 2. இது சோலைமலையெனவும் வழங்கும். (திரு).

இடபதீர்த்தங்கார்

இவர் ஜைன தீர்த்தங்கரரில் முதற்றீர்த்தங்கரர். இவர் இத்தீர்த்தங்கர ராதற்குமுன் பத்துப் பிறவியெடுத்தனர். முதலாவது ஜயவர்மா, 2 வது மகாபலர், 3 வது லளிதாங்கதேவர், 4 வது வச்சிரசங்கர், 5 வது போக பூமியில் ஆரியமனுஷன், 6 வது ஸ்ரீதாதேவர், 7 வது சுவிதிராசர், 8 வது அச்சுதேந்திரன், 9 வது வச்சிரநாபிசக்கிரவர்த்தி, 10 வது சர்வார்த்தசித்தி அகமிந்திரதேவர். இந்த ருஷபதீர்த்தங்கரருக்குத் தந்தை நாபிமகாராசா, தாய் மருதேவி. இவர் கருவில் வந்தவுடன் தாய் பதினாறு சுவப்பனங்கள் கண்டாள். இவர் பிறந்தவுடன் தேவர்களிவரைத் தாய் தந்தையரறியாது எடுத்துச் சென்று மேருசிகரத்திலுள்ள பாண்டுக சிலையில் வைத்து க்ஷிரசமுத்திர சலத்தால் அபிஷேகஞ்செய்து, அலங்கரித்து மீண்டும் தந்தையிடம் விட்டனர். இவர்க்குத் தேவிமார் யசச்சுதி, சுநந்தை. அவருள் யசச்சுதிக்குப் பரதேசுரர், இருஷபசேநர் முதலிய (99) குமரரும், பிராமியென்னும் ஒரு பெண்ணும், சுநந்தைக்குப் பாகுபலியென்னும் ஒரு குமரனும், சுந்தரியென்னும் ஒரு பெண்ணும் உண்டு. இவர் சிலநாளரசுபுரிந்து, தீக்ஷை மேற்கொண்டு, (108) கர்மங்கெடுத்துத் தீர்த்தங்கரராயினர். இவர் உன்னதம் (500) வில், ஆயுள் (82) லக்ஷம் பூர்வம், (நிறம்) பொன்மை, இவரிடமிருந்தார் (82) கணதரர். அவருள் முதல்வர் ருஷபசேனர்.

இடபதேவர்

இடபவடிவாக மூன்று கண், மனதில் சிவத்யானம், சாக்ஷாத் தர்மஸ்வ ரூபம், சுத்தஸ்படிகநிறம், சமஸ்த்தத்திற்கும் ஆதாரபூதம், கூர்மையான கொம்புகளுடன் மகாபலம் உள்ளவராக இருப்பர். (ஆகமம்) இவர் சிவபூசைசெய்து எக்காலத்தும் சிவபெருமானை நோக்கி எதிரில் தரிசிக்கும் வாகனமாயிருக்கும் வரமும் பெற்றவர். (சிவரஹஸ்யம்)

இடபத்துவசன்

ஏகாதச ருத்திரருள் ஒருவன், தேவி சற்பி.

இடபத்வசன்

காசியிலுள்ள சிவலிங்கத்தொன்று.

இடபநேசன்

பாரதவீரருள் ஒருவன்.

இடபன்

1. உபரிசரவசு வம்சத்தவன் 2. சுக்கிரீவன் சேனையிலுள்ள ஒரு வானரன், வயமத்தனென்னும் அரக்கனைக் கடலில் விழத்தள்ளிக் கொன்றவன். 3. இந்திரனுக்கு இரண்டாம் புத்திரன், 4. நாபியின் குமரர், மகாயோகி. இவருக்குப் பரதன் முதல் நூறுகுமரர் இருந்தனர். அவர்களில் மூத்தோனாகிய பரதனுக்கு இராச்சியங் கொடுத்துத் தவநிலைக்குச் சென்றார். தாய் மருதேவி, தேவி சூர்யபுத்திரியாகிய சயந்தி, இவர் விஷ்ணுவி னவதாரமென்பர். இவர் தம் நூறு குமரருக்கும் ஞானோபதேசஞ் செய்தனர். இவர் மகாசித்தராய் மலமுதலானவைகளால் பூசப்பட்டாலும், நல்ல மணமுடையவராய் ஆகாயகமனம் முதலிய செய்து காட்டி, யோகியர்கள் சரீரத்தை விடுகை இவ்வகையென்று விட்டுக் காட்டினர். பிறகு இவர் தேகம் மாத்திரம் யோகவாசனையால் சஞ்சரித்துக்கொண்டிருந்தது. அத்தேகம் குடன சலமென்னும் காட்டருகு பித்தனைப்போல் மயிர்விரித்தலையக் காட்டுத் தீயாற்றகிக்கப்பட்டது. இவரை ருஷபதீர்த்தங்கரரென்று ஜைநர் கூறுவர். பாகவதம் 5. ஒரு கோபாலன். 6. சக்கிரனென்னும் ஆதித்தனுக்குப் பௌலோமியிட முதித்தவன். 7. அதலலோகத்தவன். 8. அயோத்தியை இராமருக்குப்பின் செழிப்பித்த சூர்யவம்சத்தரசன். 9. பிருகத்ரதனைக் காண்க.

இடபயோகி

மேருதேவியின் குமரர், விஷ்ணுவின் அம்சம்.

இடபருபன்

சண்முகசேனாவீரருள் ஒருவன்.

இடபவிரதம்

வைகாசிமாதத்தில் சுக்லபக்ஷ அஷ்டமியில் இட்டாரூடராகிய சிவமூர்த்தியை யெண்ணி விரதமிருப்பது,

இடபவீதி

மீனம், மேடம், கன்னி, துலா மென்னு மிராசிகளடங்கிய சூரியனியங்கும் நெறி. (பிங்கலம்).

இடபாசுரன்

ஒருநாள் திருமால் வேட்டைக்குச் சென்றனர். அப்போது இவன் எதிர்க்கத் திருமால் சக்கிராயுதத்தை ஏவினர். அதனால் அசுரன் திருமாலென அறிந்து வேண்டித் தன் பெயர் அவனிருந்த மலைக்கு வர வரம்வேண்டி முத்தியடைந்தவன். அதுவே இடப மலை. (திரு வேங்கடபுராணம்).

இடபாந்திகமூர்த்தி

சிவமூர்த்தி சர்வ சம்மாரஞ் செய்தகாலத்து, எக்காலத்தும் அழியாத தருமம் இடபவுருக் கொண்டு இறைவனை அடைய அதற்கு அடைக்கலங் கொடுத்து ஆதரித்த திருக்கோலம்.

இடபாருடமூர்த்தி

சிவமூர்த்தி திரிபுரமெரித்தகாலத்து, வந்த விஷ்ணு, இடபமாகி நிற்க, அவரை வாகனமாக ஏறிய திருக்கோலம்.

இடப்நேசர்

ருஷபதீர்த்தங்கரருக்கு யசச்சுதியினிடம் பிறந்த குமரர்.

இடம்

(3) தன்மை, முன்னிலை, படர்க்கை.

இடம்பன்

அதர்மத்தின் குமரன்.

இடவகன்

உதயணனுடைய மந்திரிகளில் ஒருவன், அவனுடைய உயிர்த்தோழன். சூழ்ச்சி, வாய்மை, நன்றியறிவு, வீரம், இவை இவனுடைய சிறப்பு குணங்கள், வசவதத்தையை உதயணன், உஞ்சை நகரத்திலிருந்து வரைந்து அழைத்துவரும் பொழுது பகைவரால் அவனுக்கு யாதோரிடையூறும் உண்டாகாதபடி நீ இங்கே சேனைகளுடனிருந்து பாதுகாக்கவேண் டும் என்று யூகிசொல்லியவண்ணம் புட்பக நகரத்திற் சன்னத்தனாக இருந்தவன். உதயணனுடைய மேம்பாட்டை அறிந்து பொறாமையுற்றுத் தந்திரமாக அவனை அடக்கப் பிரச்சோதனனுடைய தமர் கண்ணபிரானை அகப்படுத்து தற்காகத் துர்யோதனன் அமைத்தது போலப் படைக்கலங்கள் உள்ளே நிறுவப்பெற்ற பொய்ந்நிலமொன்றை அமைத்து அதனைக் காட்டி அவனை வீழ்த்தினர் என்று பொய்மொழி யொன்றைக் கேட்டு வருந்தி இச்செய்தி மெய்மையாயின் யானும் உயிர் துறப்பேன் என்று நிச்சயித்துக்கொண்டு உடனே உண்மை தெரிந்து வரும்படி உஞ்சைநகர்க்கு ஓரொற்றனை அனுப்ப நினைந்து புறப் பட்டுநின்ற பொழுதில் வந்த வயந்தகனைக் கண்டு உயிர்த்துணைத் தோழனுளனென வுவந்து பெயர்ச்சியிலுலகம் பெற்றான் போலச் செந்தாமரைக் கட்காவலன் செவ்வியை முந்துறக்கேட்ட பின்றை உதயணன் கூறி விடுத்த அடையாளச் சொல்லால் வயந்தகனை நம்பி அவனுடன் பெரும் படை தொகுத்துக்கொண்டு போய்த் தான் இன்னானென்று அறியாத புளிஞ்சர் சவரர்களால் வளைப்புண்டு துணையற்று நின்ற உதயணனையும், வாசவதத்தையையும் கண்டு மிக்க உபசாரத்தோடும் அழைத்துச்சென்று சயந்திநகரிற் சேர்த்தியவன். அங்கனம் சேர்த்தியபொழுது “துன்பப் பெருங்கடற் றுறைகட்பொருந்திய வின் பப்பெரும்புணை யாயினிரெமக்கு” என மனங்குளிர்ந்து உதயணனாற் பாராட்டப்பெற்ற பெருமை வாய்ந்தவன், உஞ்சை நகாத்திலிருந்து பிறரறியாதபடி நேரே தன்பால் தனியே வந்து வினவிய யூகிக்கு உதயணன் செய்தி முழுவதையுங் கூறிச் சயந்தியில் வாசவதத்தையை மணந்த பின்பு, “மாகவிசும்பின் மதியமும் ஞாயி றும், எழுதலும் படுத்தலும் அறியாவின்ப மோடு அரசன் இருக்கின்றனன், ஆருணி யரசன் கோசம்பியைக் கைப்பற்றிக்கொண்டு ஆளுதலையும் அவனறிகிலன். தன்னுயிரன்ன தம்பியரையும், நினைந்திலன் பொன்னகர் புகுந்த நகுடன் போல்கின்றான், அவனது சமயம் யாருக்கும் கிடைத்திலது என்று விளங்கச்சொல்லி மேலே ஆகவேண்டியவற்றை யூகி ஆராய்ந்து செய்யும்படித் தூண்டியவன். தருசகன் பொருட்டுப் பகைவரோடு போர்செய்தற்கு உதயணன் சென்றபொழுது அவனுக்குத் துணையாகப் பல வீரர்களுடன் சென்று போர்செய்து வெற்றியடையும்படி செய்தவன். ஆருணியாசனைக் கொன்று கோசம்பியைக் கைப்பற்றுதற்கு வருடகாரனுடனாராய்ந்து இவன் செய்த உதவிகள் பல. ஆருணி இறந்தபின் “உதயணனையன்றி வேறு யாரையும் உள்ளே விடோம்” என்று கோட்டைவாயிலை அடைத்துக்கொண்டிருந்த கோசம்பி நகரத்தார் இவன் வந்தமை தெரிந்தவுடன் மிக்க மரியாதையோடு அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். உதயணனால் இவன் சீவிதமாகப் பெற்றவை புட்பக மென்னும் நகரமும் சிறு நாடுகள் ஐம்பதும், பிறவருவாய்களும், இவன் புட்பகத்தையே தலைநகராக்கி அரசாட்சி செய்து கொண்டிருந்து அழைத்தபொழுது சென்று உதயணனுக்கு வேண்டியவைகளைச் செய்துவருபவனாக இருந்தான். (பெருங்~க).

இடவயம்

காந்தார நாட்டுப் பூர்வ நகரம். இதற்கரசன் அத்திபதி. (மணிமேகலை).

இடவாகுபெயர்

இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள பொருளுக்க ஆகிவருவது. (நன்னூல்)

இடவிவரம்

1, 4, 7, 10 கேந்திரம்; (5, 9 திரிகோணம் 6, 8, 4 ஷஷ்டாஷ்டகம்; 3, 6, 8, 12 மறைவிடம்; 1 லக்னம்; 2. கண், வாய், முகம், குடும்பம்; 3 வெற்றி, சகோதரம்; 4 வாகனம், பூமி; 5 புத்ரஸ்தானம்; 6 ரோகம், சத்ரு, சோரம்; 7 களத்ரம்; 8 மாரகம், ஆயுள்; 9 பிதா, குரு, செல்வம்; 10 உத்யோகம்; 11 லாபஸ்தானம், தமயன்; 12 விரயம்.

இடாகினி

பிணந்தின்னும் பேய், ஒரு வஞ்ச துஷ்டதேவதை.

இடி

மழை பெய்யுங் காலத்தில் மேகங்கள் பூமிக்கருகில் வருவதால் அம்மேகங்களிலிருந்து மின்சாரம் பேரொளியாகப் பாய்வது. இந்த மின்னல், அதிக உஷ்ணமாக இருப்பதால் இதன் வழியிலிருக்கும் எந்தப் பொருளையுந் தகர்த்து எரித்து ஒடித்துவிடும். இம் மின்னலின் உஷ்ணத்தினால் காற்றுள் பிளவு உண்டாகி உடனே சேருவதால் இடியெனும் ஒரு பேரோசை உண்டாகிறது. இம்மின்சாரம், இரும்புகள், செப்புக் கம்பிகள், பெரிய கண்ணாடிகள், முதலியவற்றால் இழுக்கப்படுதலால் இவைகளுள் உயர்ந்த இடங்களினடியிலிருத்தல் அபாயத்தை விளைக்கும். இந்தக் காரணத்தால் தான் உயர்ந்த கட்டடங்களுக்குக் காந்தக் கம்பிகள் பொருத்திப் பூமியில் விட்டிருப்பது.

இடிசிகன்

சராசந்தன் நண்பன். இவர்களிருவரும் ஆயுதங்களாவிறப்பிலாது வரம் பெற்றவர்கள். இவனும் அம்சனென்போனுங் கண்ணனுடன் போரிடுகையில் இருவருள் ஒருவன் இறந்தான் என்று வெறுஞ்சத்த முண்டாயிற்று. உண்டாதலும் அதைக்கேட்டு இடிசிகனிறந்தான். இடிசிகனிறந்த சங்கதிகேட்டு அம்சனு மிறந்தான். இவனுக்கு இடிம்பிகனெனவும் பெயர்.

இடிபிகன்

அம்சனுடன் பிறந்தவன்.

இடுமருந்தின்வகை

ஸ்திரீகள் தங்கள் புருஷரையும், புருஷர் ஸ்திரீகளையும், தொழிலாளிகள் எசமான்களையும் வசியப்படுத்தும பொருட்டு அன்ன முதலிய உண்ணும் பொருள்களிலாவது, நீர் முதலிய பானஞ் செய்யும் பொருள்களிலாவது, தாம்பூலாதிகளிலாவது சேர்த்துக் கொடுக்கப்படுகிற பற்பல செந்துக்களின் கபாலபஸ்பம், அற்பவீரியவிஷம், மலமூத்ர ஔஷதம், பச்சிலை முதலியவாம். (ஜீவ).

இடும்பன்

1, ஒரு அரக்கன். இவன் வனத்தில், அரக்குமாளிகையினின்றும் உயிர்பிழைத்த வீமன், சகோதரருடன் அறியாது புக இடும்பன் வீமனுடன் போர் செய்து மாண்டனன். 2. அசுரர்க்கு ஆயுதவித்தை கற்பிப்பவன். இவன் தாருகன், சூரன் முதலியவர் தோற்றகாலத்தில் காட்டிற்றவம்புரிந்தனன். இவனை அகத்திய முனிவர் கண்டு நீ யாரெனத் தனது வரலாறு கூறிச் சூரன் குமரன் இரணியன், குமாரக்கடவுள் வலிக்குத் தோற்றுத் தந்தையர்க்கு நீர்க்கடன் செய்யக் கடலிலொளித்தனன்; நான் காட்டில் வசிக்கிறேன் எனக் கூறக்கேட்டச் சடாக்ஷரத்தை முனிவர் உபதேசிக்கப் பெற்று அகத்தியர் கட்டளைப்படி சத்திகிரி, சிவகிரிகளைக் காவடிபோ லேந்தி வருகையில் குமாரக் கடவுள் வேடனைப்போல் வந்து, மலைகளை யிறுத்திவிட இடும்பன் கோபித்துக் குமாரக்கடவுளுடன் சண்டை செய்யக் குமாரக்கடவுள் இடும்பனுடன் போரிட்டு அவனை, மூர்ச்சிக்கும்படி செய்தது கண்டு, இடும்பியழக், குமாரக்கடவுள் தரிசனந்தந்து இடும்பனை உயிர்ப்பித்து, அவன் துதிக்கத் தமது கணத்தலைவனாக்கினார். (பழனித்தலபுராணம்). 3. கரடிகளுக்குத் தலைவன். இராமருக்குத் துணையாயமர்ந்தவன்.

இடும்பாசுரன்

விநாயக ரவதரித்த இடத்தில் மலையுருக் கொண்டிருந்து விநாயகர் பெருமூச்சாலிறந்தவன்.

இடும்பி

இடும்பன் சகோதரி அரக்கி. அரக்கு மாளிகையினின்றும் உயிர் தப்பி வந்து, இடும்பன் வனமடைந்து தன்னைக் கொல்லவந்த இடும்பனைக் கொன்று நின்ற வீமனை மோகித்தவள். வீமன், தாய் சொற்படி இவளை மணந்தனன். இவளிடத்து வீமனுக்குக் கடோற்கசன் பிறந்தனன். இவளுக்குக் கமலக்கன்னி யெனவும் பெயர். இவள் முக்காலமுமுணர்ந்து சொல்பவள்.

இடும்பில்

ஓர் ஊர். (சிலப்பதிகாரம).

இடைக்காடர்

இவர், தொண்டைமண்டலத்தில் இடையன் திட்டிலிருந்த இடையா, பொதிகைமலைச் சாரலில் ஆடுமேய்த்திருக்கையில், நவசித்தரில் ஒருவர் வந்து பால்கேட்க அவருக்குப் பால் முதலியன கொடுத்து உபசரித்ததனால், அவர் ஞானோபதேசஞ்செய்து போயினர். அதனாற் சித்தியடைந்து சித்தராயினார். ஒரு முறை மழையிலாது நாடு பன்னிரண்டு வருடம் வற்கடமாகுமென முன்னறிந்து இவர், தம் ஆடுகளுக்கு எருக்கிலை முதலியன கொடுத்துப் பழக்கிக் குருவிரகு என்னும் தானியத்தைச் சேற்றோடு கலக்கிச் சுவர்வைத்துக் குடிசையொன்று கட்டி அதில் தம் ஆடுகள் எருக்கிலை தின்னும் ஊறலாற் சுவரில் தேய்க்க, உதிர்ந்த சிறிது தானியத்தைப் புசித்து வாழ்ந்து வந்தனர். நாடுவற்கடமாய் உயிர்கள் எல்லாமழிய, இவரும் இவர் ஆடுகளும் மாத்திரம் பிழைத்திருப்பதை அறியும்படி நவக்கிர கங்களுமிவரிடத்து வந்தனர். சித்தரெதிர்கொண்டு பெசரித்து விருந்தினர்க்கு ஆட்டின் பாலில் குருவாகைப் பாகஞ்செய்து இடக் கிரகதேவர்கள் புசித்துமயக்கத்தா லுறங்கினர். அந்தச் சமயத்தில் சித்தர், ஒன்றுடன் ஒன்று மாறுகொண்டுலகத்தை வருத்திய கிரகங்களை மழை பெயதற்கு வேண்டியபடி மாற்றியிருத்தினர். உடனே நல்ல மழை பெய்தது. கிரக தேவர்கள் விழித்துத் தம் நிலையடைந்தனர். இவர் சாரீரம் என்னும் வயித்திய நூல் இயற்றினர். இவரைப் போகர் மாணக்கர் என்பர். மதுரைக்குக் கிழக்கிலுள்ள இடைக்காட்டில் பிறந்தவர் எனக் கூறுவர். இவர் காலம் கடைச்சங்கத்தவர் காலம், திருவள்ளுவர்க்குக் “கடுகைத் துளைத்தெனும்” கவிசாற்றிக் கொடுத்தவர். இவர் இடைக்கழி நாட்டிற் பிறந்தவர் எனவும், ஊசிமுறி இவராலியற்றப்பட்டதெனவும் கூறுவர். இவர் குலசேகரபாண்டியன் காலத்திருந்தவர் என்பர். இவர் கபிலருடன் சேர்ந்து அரசனைக் காண அரசன் மரியாதை செய்யாததால், கோபித்து நீங்கக் கபிலர் முதலிய புலவரும் உடன் நீங்கினர். அரசன் இடைக்காடரை உபசரித்தழைக்க மற்றைப் புலவரும் வந்தனர் என்பர். இவர் விஷ்ணுவினவதார மென்பர். சங்கமழியச் சாபமிட்டவர். இவரிடம் சித்தர் சிலர் வந்து விஷ்ணுவின் தசாவதாரத்தில் வணங்கத்தக்கவை எவை யென ” ஏழை, இடையன், இளிச்சவாயன்” எனக்கூறிச் செல்லச் சித்தர்கள் தெரிந்து சென்றார்கள் என்பர். (கர்ண பரம்பரை.) இவர் மலையாளம் ஜில்லாவிலுள்ள இடைக்காடென்னும் ஊரினராக இருக்கலாம். இவர் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியிருத்தலின் அவன் காலத்தவர் போலும், இவர் இடையரது ஆடுமேய்த்தலை வர்ணித்திருத்தலின் இவர் பொதுவராதல் வேண்டும், முல்லைத் திணையைச்சிறப்பாகக் கூறியுள்ளார். ஆயர் மழையில் நனைந்தபடியே ஊன்றுகோல் மேல் கால்வைத்து நின்று ஆட்டையழைக்கப் பாடியதும், அங்ஙனம் அழைப்பது கண்டு அங்கு ஆட்டைக் கவர்ந்து போக வந்து பதுங்கியிருந்த நரி அஞ்சியோடா நிற்குமெனக் கூறியதும் சுவையுடையன (நற்~142, அகம்~274) வம்பமாரியென்று தோழி தலைவியையே மாற்றியது இனிமை தரும். (நற்~316) இவர் முயற்கண்ணிற்கு நெல்லிக்கனியை உவமைகூறினர். (அகம்~284) இவர், நற்றிணையில் (3)ம், குறுந்தொகையில் (1)ம், அகத்தில் (5)ம், புறத்தில் (1)ம், திருவள்ளுவ் மாலையில் (1)ம், ஆக (11) பாடல்கள் பாடினதாகத் தெரிகிறது,

இடைக்குன்றூர்க்கிழார்

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர். (புற, நா),

இடைச்சங்கம்

இச்சங்கம் பாண்டி நாட்டில் கபாடபுரத்தில் வெண்டோட்செழியன் காலமுதல் முடத்திருமாறன் காலமீராக (3700). இருந்தது. இதிலிருந்து தமிழாராய்ந்தார், அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன்மாறன், துவரைக்கோமான், கீரந்தை முதலிய (59) பெயர். இவரை யுள்ளிட்டு (37000) பெயர் பாடினர். சங்கத்து நூல்களும், மருவிய நூல்களும், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலையகவல், இசைநுணுக்கம், அகத்தியம், தொல்காப்பியம், மா புராணம், பூதபுராணம் முதலியன. நாடு கடல் கொண்ட பிறகு சங்கங்கெட்டது.

இடைச்சொல்

தனித்தியங்கு மாற்றலிலா தனவாய்ப் பெயரினும் வினையினும் பின்னு முன்னுமாகிய இடத்து ஒன்றும் பலவுமாய் வருஞ் சொற்கள். (நன்).

இடைநிலை

பெயர்வினைகளின் பகுதி விகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு. (நன்னூல்)

இடைநிலைமெய்ம்மயக்கு

சொல்லினிடையில் மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்று கூடும் நிலை (நன்னூல்.

இடைப்பிறவரல்

வேற்றுமையுருபுகளும் முற்றுக்களும் எச்சங்களும் கொண்டு முடியும் பெயர்க்கும் விளைக்குமிடையே ஆண்டைக்குப் பொருந்துவனவாகப் பிறசொற்கள் வருவன.

இடைமருது

திருஇடைமருதூருக்கு ஒரு பெயர். இதற்கு மத்யார்ச்சுனம் எனவும் ஒரு பெயர் வழங்கும். இது மல்லிகார்ச்சுனம் புடார்ச்சுனம் இவ்விரண்டனுக்கும் இடையிலிருப்பதால் இப்பெயர் பெற்றது, (வீரசிங்~பு).

இடையநெடுங்கீரனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~று.)

இடையன் சேந்தன் கொற்றனார்

கடைச் சங்கமருவிய புலவர். (அக~று.)

இடையர்

சூத்திரன் வைசியக் கன்னிகையைப்புணாப் பிறந்தவர். இவர்கள் ஆடுமாடுகள் மேய்த்து வாழ்வர். (அருணகிரி புராணம்). (இவர்க்குத் தசாங்கம்) மலை, கோவர்த்தனம், நதி, யமுனை, நாடு, நந்த மண்டலம், நகரம், கோகுலம், கொடி, கருடன், வாத்யம், முரசம், மாலை, முல்லை, வாகனம், யானை, குதிரை. இவர்களைக் கோவைசியர் என்று சூடாமணி நிகண்டு கூறும். தமிழ்நாட்டு ஆடு மாடு மேய்த்துச் சீவிப்போர். இவர்கள் யாதவர் எனப்படுவர். இவர்களிற் சிலர் சைவராகவும் இருக்கின்றனர். இவர்கள், கால்கட்டி, பாசி, பெண்டுக்குமேக்கி, சங்குகட்டி, சாம்பன், புதுக்கநாட்டார், பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சரம்கட்டி, மணியக்காரன், சோழியன், ஆனைக்கொம்பு, பெருமாள் மாட்டுக்காரன், பூ இடையன், புதுகாட்டிடையன், போண்டன், கோனார் என வகைப்படுவர் (தர்ஸ்டன்).

இடையாகெதுகை

அடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது. (காரிகை).

இடையாலத்துமுதலியார்

தொண்டை மண்டலத்து இடையால மென்னும் ஊரிலிருந்து, தமிழ்ப் புலவரை ஆதரித்து, அடையாத வாயிலுடையான் எனக் கவி பெற்றவர்.

இடையின வெதுகை

இடையினத்துள் வந்த எழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழுத்தாக நிற்கவரும் எதுகை. (காரிகை)

இடையினமோனை

இடையினத்துள் யகர வகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது. (காரிகை).

இடையெண்

மூச்சீர் ஓரடியாக வரும். அம்போதரங்கவகை. (காரிகை).

இடையெழுத்துக்கள்

இது மெய்யெழுத்துக்களில் வன்மை, மென்மையெனும் ஓசைகொண்ட எழுத்துக்களுக்கு இடை நிகரானவாக ஒலிக்கும்ய்,ர்,ல்,வ்,ழ்,ள் எனும் ஆறுமாம். (நன்).

இடைவள்ளல்கள்

அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கன்னன், சந்தன்,

இட்சுச்மதி

ஒரு நதி. இந்த நதி தீரத்தில் சடபாதர் வசித்தனர்.

இட்சுமான்

தேவசிர வசுவிற்குச் சங்கவதியிட முதித்த குமரன்.

இட்டசித்தி

ஒரு பொய்கை. அழகர் மலையிலுள்ளது. நினைத்தவை யெல்லாந்தரத் தக்கது. (சிலப்பதிகாரம்).

இணை மோனை

ஓரடியின் முதலிரு சீரினும் மோனை இயைந்து வருந்தொடை. (காரிகை).

இணைக்குறளாசிரியப்பா

ஈற்றடியும், முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவல். (காரிகை).

இணைக்கை

அஞ்சலி, பதுமாஞ்சவி, கபோதம், கர்க்கடகம், சுவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம். (சிலப்)

இணைத்தொடை

அளவடியுள் முதலிரு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது.

இணையளபெடை

முதலிரு சீரினும் அளபெடை வருந்தொடை. (காரிகை)

இணையாரமார்பன்

கம்பர் சோழநாட்டை வெறுத்துப் பாண்டிநாட்டிலிருந்த போது அவரை அழைத்துவரப் பாண்டியன் சமஸ்தானத்திற்குச் சென்றவர். இவர் சரராமமுதலியாருக் கிளையார்.

இணையியைபு

ஓரடியின் ஈற்றுச் சீரிரண்டும் இணைந்து வருந்தொடை (காரிகை).

இணையெதுகை

ஓரடியின் முதலிரு சீரினும் எதுகையியைந்து வருந்தொடை. (காரிகை).

இதமன்

யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிட முதித்த குமரன்.

இதரவிதரம்

உவமைகளுள்ள இரண்டு வாக்கியங்களுள், முதலாவதன். உபமேய உபமானங்கள் முறையே இரண்டாவதன் உபமான உபமேயங்களாகத் தொடர்ந்து வருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப்படும் ஒருவகை உவமையணி (தண்டி).

இதிகாசம்

இராமாயணம், பாரதம், சிவரகசியம் முதலியனவாம்.

இத்மசிக்குவன்

பிரியவிரதனுக்குப் பெரிகிஷ்மதியிட முதித்த குமரன்.

இத்மவாகன்

1. அகத்தியன் பேரன். 2. ஓர் இருடி. இவனுக்குத் தந்தை மலயத்துவசன். இவனுக்குத் திரட்சுதன் எனவும் பெயர். 3. துருவி நீதனுக்குத் தந்தை. இவன் தேவி, உருசி.

இந்தியத்தீவுகள்

லக்ஷத்தீவுகள், மாலத் தீவுகள் இது, மலபாரிலிருந்து (50) மைல் தூரத்திலுள்ளது. இலங்கைத் தீவு இந்தியாவின் தென் கோடியிலுள்ளது. இராமேச்வரம் இந்தியாவிந்கும் இலங்கைக்கும் நடுவிலுள்ள தீவு. அந்தமான் நைகோபார் இது, வங்காளக்குடாக் கடலிலுள்ள இரண்டு தீவுகள். இதை இந்தியக் குற்றவாளிகளைச் சேமிக்கும் இடமாக அரசாணியார் வைத்திருக்கின்றனர்.

இந்தியரப்பர்

இது ஒருவகை மரத்தின் பால், இது, ஈஸ்டிண்டிஸ், பிரேசில், இந்தியா முதலிய சில உஷ்ணப்ரதேசங்சுளில் வளர்வது. இந்த மரத்தின் நடுவிலும் கிளைகளிலும், வேரினும் துளைகளிட்டு அவற்றில் குழாய்களைப் பொருத்தி வைக்கக் குழாய்களின் வழியாகப் பால் ஒழுகும். ஒழுகிய பாலின் ஒரு பாகம் பசையுள்ளதாகவும் ஒரு பாகம் நீராகவும் பிரியும், பிறகு அந்த ரஸத்தைக் காய்ச்சினால் ரப்பராகும். இதைப் பலவிதமாக உபயோகப்படுத்துவர். பென்ஸலால் எழுதி யதை அழிக்கவும், துணியில் தோய்த்து மழை நீர்படாது தடுக்கவும் உபயோகிப்பர்.

இந்தியாவின் நதிகள்

சிந்துநதி இது, இமயமலையின் வடபால் மானஸஸாவில் தோன்றி அரபிக்கடலில் சேருகிறது. காபூல், ஜீலம், சீனாப், ரெவி, பியாஸ், ஸட்லேஜ் என்பவை சிந்து நதியின் உபநதிகள் பிரமபுத்ரா: இது மானஸஸரசில் தோன்றிக் கிழக்கு நோக்கிச் சென்று சம்புவெனவும், பின் தெற்கு முகமாகத் திரும்பி தீஹாங் என்றும் கூறப்படும். இதன் மேல்பாகம் கோனை எனப்படும். இதன் கிழக்குப்பாகம் மெக்னாஎனப்படும். இதன் நீளம் (1,800) மைல். இதன் கிளை நதிகள் திக்கு, சுர்மா, கும்தி, நில்கோமார், தீஸ்தா என்பன. கங்கை: இது பாகீரதி, அலகநந்தையுடன் கூடியது. இது, இமயமலையின் தென்பாகத்திற் பிந்து ஸரசிற் பிறந்து அரித்வாரத்தருகில் பூமியிற்பிரவேசித்து 1500 மைல் ஒடி வங்காளக்குடாவில் சங்கமமாகிறது. இதன் கிளைநதிகள் யமுனை, செம்பல், பெத்வா, சோணை, ராமகங்கை, கௌமதி, கோக்ரா, குமதி, கூசி, தோணை, கர்மநாசம், பாகீரதி, ஊக்லி முதலியவை. உலூனை இது, அரவல்லி மலையிற்றோன்றி அரபிக்கடலில் விழுகிறது. நருமதை: இது, இராமகரம் எனும் ஜில்லாவில் உள்ள அமரகண்டகம் எனுமிடத்தில் தோன்றி விந்தியமலைக்குத் தெற்காக (800) மைல் சென்று காம்பே குடாவில் விழுகிறது. தபதி: இது, பெய்தவால் எனுமிடத்தில் தோன்றி (450) மைல் மேற்காக ஓடிச் சூரத்திற்கருகிலுள்ள காம்பே குடாவில் விழுகிறது. மகாநதி: இது, வங்காளத்திற்குத் தென்மேற்கிலுள்ள நியூயகதையெனு மிடத்தில் தோன்றி (520) மைல் ஓடி வங்காளக்குடாவில் விழுகிறது. கோதாவரி: இது, நாசக்குக்கருகில் மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றித் தென்கிழக்காக ஐதராபாக்கம், வடசர்க்கார் வழியாக (900) மைல் ஒடி வங்காளக் குடாவில் சங்கமமாகிறது. மைஞ்சூரை, பூரணை, பிராணஹிதை, பேனகங்கை, வேணு கங்கை, இந்திரவதி இதன் உபந்தி கிளைநதிகள். கிருஷ்ணாநதி:இது மேற்குத்தொடர்ச்சி மலைகளின் கீழ்பால் மகாபலேச்வாத்தருகில் தோன்றித் தென்கீழ்ப்பாகமாக (800) மைல் ஓடி வங்காளக்குடாவில் விழுகிறது. துங்கபத்ரை, மலப்ரபை, பீமை, இதன் உபநதிகளும் கிளை நதிகளுமாம். காவேரி: இது, வட இந்தியாவிற்குக் கங்கை போலத் தென்னிந்தியாவிற்குப் பெருநதி. இது, குடக நாட்டில் மேலை மலைத் தெடரைச் சார்ந்த பிரமகிரியில், தலைக்காவிரி யென்னுமிடத்தில் உற்பத்தியாகி அந்தநாட்டினூடாக வந்து மைசூரின் தென்பாகத்தில் பாய்ந்து சேலம், கோயமூதூர்களுக் கிடையில் ஒழுகித் திரிசிராப்பள்ளி வழியாகத் தஞ்சாவூரடைந்து பல கிளைகளாகப் பிரிந்து (470) மைல் ஓடி வந்து சமுத்திர சங்கமமாகின்றது. இதன் உபாதிகள், பவானி, அமராவதி, நொய்யல். வடபெண்ணை: இது, மைசூரிலுள்ள சந்திரதுர்க்கம் ஏரியில் தோன்றி (355) மைல் பாய்ந்து ஓடி வங்காளக் குடாவில் விழுகிறது. பாலாறு: இது மைசூரில் தோன்றி (200) மைல் ஓடிச் செங்கல்பட்டு ஜில்லாவாகிய சதுரங்கபட்டணத்தையடுத்து வங்காளக் குடாவில் சங்கம மாகிறது. தென்பெண்ணை: இது, மைசூரிலுள்ள நந்திதுர்க்கமெனும் மலையிற் றோன்றி (244) மைல் ஓடிச் சென்று வங்காளக்குடாவில் சங்கம மாகிறது.

இந்திர விகாரம் ஏழு

காவிரிப்பூம் பட்டினத்துள்ள புத்தாலயத்தில் இந்திரனால் நியமிக்கப்பட்டுள்ள எழரங்குகள். (மணி.)

இந்திரகாளீயம்

1. யாமளேந்திரர் செய்த இசைத்தமிழ் நூல். 2. ஒரு யாப்பிலக்கண நூல்; இதனை வெண்பாபாட்டியலுக்கு முதனூலென்பர்.

இந்திரகீலம்

ஒரு பர்வதம், இதில் அருச்சுனன் சிவபெருமானைக் குறித்துத் தவம் இயற்றினன்.

இந்திரகோபப்பூச்சி

இது பட்டுப்போல் மழமழத்த உருவமுடைய சிறு பூச்சி. செம்பட்டின் தோற்றமுடையது. இது பூமியில் காணப்படின் பட்டுத்துண்டுகளைத் துணித்துப் போட்டது போலக் காணப்படும். இதனைத் தம்பலப் பூச்செபனர்.

இந்திரசஞ்சயம்

ஒரு வித்யாதர நகரம்.

இந்திரசந்தனம்

ஒரு நதி.

இந்திரசாவர்ணி

பதினான்காம் மன்வந்தரத்து மது.

இந்திரசித்

இவன் அரக்கன். இராவணன் குமரன். இவன் பிறந்தவுடன் மேகமெனக் கர்ச்சித்தமையால், மேகநாதன் எனப் பெயர் பெற்றவன். இவன் தவத்தாற் சிவ மூர்த்தியிடம் எங்கு முலாவுந்தேரும், யுத்தத்தில் யாருமறியாது ஒளித்து யுத்தஞ்செய்யும் வலிமையும் பெற்றவன். மகா மாயாவி. இராவணன் இந்திரனுடன் யுத்தஞ் செய்கையில், இவன் இந்திரனை மாயையாற் கட்டிச் சிறையிட்டுப் பிரமன் வேண்ட விடுத்தவன். இவனுக்கு இராவணியென ஒரு பெயருண்டு, பதினான்கு வருஷம் ஆகாரம் நித்திரையில்லாதவன் எவனோ அவனாலிறக்க வரம்பெற்றவன். அநுமன் இலங்கைக்கு முதலில் வந்த போது, பிர்மாஸ்திரத்தைக் கொண்டு கட் டித் தந்தைமுன் விட்டவன். இவன் கையிற் கொண்டவில், பிரமன் இந்திரனுக்குக் கொடுக்க இந்திரனிடமிருந்து அம்பறாத் தூணியுடன் இவனாற் கவரப்பட்டது. இவன் (40) வெள்ளஞ் சேனைகளுடன் முதலில் யுத்தத்திற்கு வந்து அநேக வானரர்களை மாய்த்துக் கடைசியில் இலக்குமணருடன் போரிட்டு முடியாது நாகாஸ்திரப் பிரயோகஞ் செய்து கட்டிவிட்டு மறைந்தோடி வாநாவீரர்களெல்லாரையும் மூன்று முறை மூர்ச்சிக்கச் செய்தவன். மீண்டும் இலக்குமணருடன் போரிட்டுக் கவசமறக்கண்டு ஆகாயத்தில் மறைந்து, இலங்கைப் பட்டணஞ் சென்று பிரமாத்திரத்திற்குப் பூசைசெய்து மகோதரனுக்குப் பின்னால் மறைந்து, இராமமூர்த்தி தவிர மற்றவரிறக்கும்படி பிரமாஸ்திரப் பிரயோகஞ் செய்தவன். மாயையாற் சீதையுருநியமித்து அநுமனுக்கு முன் வெட்டியெறிந்து, நிகும்பலைக்கு யாகஞ்செய்யச் சென்று அநுமனாற் பங்கப்பட்டு மீண்டும் இலக்குமணருடன் போரிட்டு விபீஷணரை நிந்தித்துப் பாணப் பிரயோகஞ் செய்து மூன்றாம் முறை மறைந்து இலங்கைக்குச் சென்று வேறொரு தேரேறி வந்து இலக்குமணருடன் போரிட்டுத் தேரழிய வில்லுடன் கையறுப்புண்டு, அர்த்தசந்திரபாணத்தால் தலை யறுப்புண்டவன். இவன் தேகத்தை இராவணன் தைலத்திட்டு வைத்தனன்.

இந்திரசேனன்

1. வேதருஷபர் குமரன். 2. சூரிய புத்திரன். 3. தருமன் குமரன். 4 நளன் குமரன். பிராமணனாற் பாட்டனிடம் ஒப்புவிக்கப்பட்டவன். இவன் குமரன் சந்திராங்கதன். 5. சூரியவம்சத்துச் சனுவானின் குமரன். 6. ஒரு அரசன். இவன் பாம்புகடித்து இறக்க விண்டு சேநனாகிய குமரன் கயாதீர்த்தத்தில் சிரார்த்தஞ் செய்யத் தந்தை கனவில் தோன்றி என் பாவம் நீங்கினேனல்லன் நீ நாக தீர்த்தத்தில் சிரார்த்தம் செய் என. அவ்வாறு செய்யப் பாவம் ஒழிந்தனன். 7. பாண்டவர் தூதன். 8. ஜனமேஜய புத்திரன்.

இந்திரசேனை

1. முத்கலர் தேவி. 2. நளன் குமரி, 3 நாளாயினியின் ஒரு பிறப்பு, 4. நரிஷ்யந்தனைக் காண்க.

இந்திரதுவஜ உற்சவம்

உபரிசர வசுவால் செய்யப்பட்ட உற்சவம்.

இந்திரத்துய்ம்மன்

1, பரதன் குமாரனாகிய சுமதியின் குமரன். இவன் ஒரு முறை கொலுவில் யோகவானாயிருக்கையில், இவன் கொலுவிற்கு அகத்தியமுனிவர் வந்தனர். அரசன் எழுந்து உபசரிக்காமையால் முனிவர் கோபித்து, நீ மத்த யானை போல் மதியாதிருந்தமையால் யானையாகக் கடவையென்று சபித்தனர். அரசன், சாபவசத்தால் கஜேந்திரனென்னும் யானையாயினன். இவ்யானை காட்டில் நெடுநா ளுலாவித்திரிந்து ஒருநாள் நீருண்ண ஒரு தடாகத்திற்குச் சென்றது. அவ் விடம் சாபத்தால் வேற்றுருக் கொண்டிருந்த முதலை, யானையின் காலைப் பிடித்துக்கொண்டது. யானை தன் வலி முழுதும் பயன்படுத்தி வெளியிலிழுக்கவும் பயனற்று முடிவில் தன் வசமற்று, நாராயணனை எண்ணி ஒலமிட விஷ்ணுமூர்த்தி சக்கரத்தை ஏவி முதலையைக் கொலை செய்வித்துத் தரிசனந் தந்தனர். அதனால் பரமபத மடைந்தவன். (பாகவதம்) 2. சந்திரகுலத் தரசருள் ஒருவன். தேவருலகத்தி லநேகநா ளிந்திர பட்டம் அடைந்து ஆண்டு, தேவர்களால் பூமியில் தள்ளப்பட்டு மார்க்கண்டேயரைக் கண்டு வரலாறு கேட்டவன். வெள்ளைக் குதிரை யாய் மார்க்கண்டேயரைத் தாங்கினவன். 3. கிருஷ்ண மூர்த்தியால் செயிக்கப்பட்ட அரசன். 4. பாத்ம கற்பத்திலிருந்த ஒரு பாண்டியன். இவன் புராணங்கேட்டு மறுபிறப்புப் பிராமணனாயுதித்து, விஷணுவை எண்ணித் தவம்புரிய விஷ்ணுமூர்த்தி தரிசனந்தந்து, தவத்திலிருத்தி முத்தியடைவித்தனர். இவன் குமரன் சுத்துய்மன், விப்பிரவாகு எனவும் கூறுவர். 5. மகதநாட்டரசன். இவன் தேவி அகலிகை. இவன் வஞ்ச இந்திரன் தன் மனைவியுடன் கள்ளப்புணர்ச்சி நடத்தியதறிந்து, தன் மனைவியையும் அவனையும் ஊரைவிட்டு நீக்கியவன். 6. பல்லவி சந்ததியான் (சாமவேதம்.)

இந்திரத்துய்ம்மம்

ஒரு மடு. இந்திரத்துயம்மன் என்னும் அரசன் தானஞ்செய்த பசுக்களின் குளம்புகளாலுண்டாகியது.

இந்திரத்யும்நன்

ஒரு அரசன், ஜகந்நாத க்ஷேத்ர நிர்மாணஞ் செய்தவன். (பிரகன்னார தீய~புரா.)

இந்திரன்

பதரபாசனம் காண்க. B. வஞ்ச இந்திரனுக்கு ஒரு பெயர் C. சண்முகசேனாபதி. தருமகேபனுடன் யுத்தஞ்செய்து மூர்ச்சையடைந்தவன்.

இந்திரன் A

1. தேவராசன், காசிபமுனிவர்க்கு அதிதிதேவியிடம் உதித்த குமரன், இவன் இராஜதானி அமராவதி; ஆயுதம். வச்சிரம்; தேவி, இந்திராணி; வாகனம், ஐராவதமெனும் யானை, உச்சைச்சிரவம் எனும் வெள்ளைக்குதிரை; சபை, சுதர்மை; வனம், நந்தனம்; சாரதி, மாதவி; செல்வம், கற்பகத்தரு; சந்தானம், அரிச் சந்தனம்; பாரிசாதம், மந்தாரம்; உப்பரிகை, வைசயந்தம்; குமரன், சயந்தன்; இரதம், வியோமயானம்; பானம், அமிர்தம்; தேவவைத்தியர், அச்வநிதேவர், தன்வந்தரி; அரம்பையர், ஊர்வசி, திலோத்தமை முதலியவர். இவன், நூறு அஸ்வமேதயாகஞ் செய்து இந்திரபதம் அடைந்தவன். கிழக்குத் திக்குப்பாலகன். 2. தக்ஷகனைச் சர்ப்பயாகத்தில் காக்கும் பொருட்டு அபயந்தந்தவன், 3. வசு என்பவனுக்கு விமான முதலிய பெற வரம் அளித்தவன். 4. கோபாலர் தனக்குச் செய்யும் பூசையை நிறுத்தினதால் கோபித்துச் சத்த மேகங்களை ஏவி அவர்கள் பாடியை அழிக்க முயலுகையில் கிருஷ்ணமூர்த்தியால் கர்வ பங்கப்பட்டவன். பிரமன் ஏவலால் கிருஷ்ணமூர்த்திக்குக் கோவிந்த பட்டாபிஷேகஞ் செய்து அபராதக்ஷமை பெற்றவன், (பாகவதம்) 5. துர்வாசர் சாபத்தால் செல்வங்களை இழந்து அமிர்தமதனத்தால் அச்செல்வங்களைப் பெற்றவன், 6. ஒரு முறை பிரகஸ்பதி, இவன் சபைக்குவர அவரைக் கண்டு மரியாதை செய்யாததனால் குரு மறைந்தனர். ஆசாரியரைத் தேடியுங் காணாமல் பிரமனிடங் குறைகூறப் பிரமன் வினைவிளைவறிந்து துவட்டாவின் புத்திரனாகிய விச்சுவவுருவனைக் குருவாகக் கொள்க என அவ்வகைகொண்டு ஒரு யாகஞ் செய்ய என உடன்பட்டு விச்சுவவுருவனைக்கொண்டு யாகஞ் செய்விக்கையில் அவன் வாக்கால் தேவர்க்கு ஆக்கங்கூறி மனதினால் அசுரர்க்கு ஆக்கமுண்டாகத் தேவர் துன்பமடைக என யாகஞ் செய்தலை ஞான நோக்கினால் இந்திரன் உணர்ந்து, வச்சிரத்தினால் அவனது மூன்று சிரங்கள் கழுகு, பருந்து, காகம் ஆகிய மூன்று பறவைகளாகப் பறந்தோட வெட்டினன். அதனால் இந்திரனைப் பிரமகத்தியடைய, அதை மரம், மண், சலம், பெண்கள் முதலியவர்க்குத் தேவர் பகுந்தளிக்கச் சுத்தமடைந்திருந்தனன், விச்சுவவுருவனுக்குத் தந்தை தன் குமரன் இந்திரனால் இறந்ததறிந்து ஒருவேள்வி செய்து அதில் விருத்திராசுரனை உண்டாக்கி இந்திரன் மீது ஏவினன். அவ்வசுரன் இந்திரனிடம் யுத்தத்திற்குவர மகவான் சண்டையிட்டுத் தோல்வியடைந்து ததீசிமுனிவர் தந்த முதுகெலும்பால் புதிய வச்சிரஞ் செய்து கொண்டு அவன் நடுக்கடலில் தவஞ் செய்வதுபோல் ஒளித்திருந்ததால் அகத்தியரைவேண்டிக் கடலைப் பானஞ் செய் வித்து அவனைக் கொலை புரிந்தவன், விருத்திரனைக் கொல்ல விஷ்ணுவிடஞ் சத்தி பெற்றவன் என்பர். பிரமகத்தி யடைந்து தீர்த்தயாத்திரையால் பவித்திர னானவன், (திருவிளையாடற் புராணம்). 7. சியவநமுனிவர் அச்வநிதேவர்க்கு அவிர்ப்பாகங் கொடுக்கையில் இவன் கோபங்கொண்டு அவர்மீது வச்சிரம் எறிந்ததனால் முனிவர் கோபங்கொண்டு அவ்வச்சிரங்கொண்ட கை தம்பிக்கத் தண்டனையேற்றுக் கடலில் ஒளித்தவன். 8. மலைகள் சிறகு பெற்ற காலத்தில் அவற்றின் துன்பம் பொறாமல் சிறகுகளை அரிந்தவன். இதனால் மைநாகபர்வதம் கடலில் ஒளித்தது. மலைகளின் உதிரம் சிந்திய இடத்தில் பவளமுண்டாயின. 9. கௌதமர் பாரியாகிய அகலிகை இடத்து ஆசையுற்றவனாய் அவரை ஸ்நாநத்திற்குப் போக நடு இராத்திரியில் கோழியாகக் கூவி எழுப்பி அவர் கங்கா ஸ்நாநத்திற்குப் போனபின் அவரைப் போல் உருவெடுத்து அவளுடன் புணர்ந்து அகப்பட்டு முனிவரால் ஆண்குறியும் பீஜமுமறவும் பெண்களுக்குள்ள அநேகம் குறிகள் தேகத்தில் வரவும்பெற்று நாணத்தால் தாமரைத் தண்டில் ஒளித்திருந்து தேவர் வேண்டுகோளால் முனிவர், அவை மற்றவர்க்குக் கண்களாகவும். இவனுக்குப் பெண்குறிகளாகவுந் தரப்பெற்றுத் தன்னுலகடைந்தவன். தேவர் ஆட்டின் பீஜத்தை இவனுக்குப் பீஜமாகப் பொருத்தினர் (இராமாயணம்.) 10. அசுவசனன் என்னும் நாகன் காண்டவனத் தீயிற்பட்டு இறவாமல் வரம் தந்தவன். (பாரதம்.) 11. அருச்சுனன் காண்டவ வநத்தை அக்கிநியின் பசிக்குத்தர எரிக்க அருச்சுனனுடன் யுத்தஞ் செய்தவன். (பார.) 12. விந்தமலையின் கர்வமடங்க அகத்தியரை வேண்டினவன். (காந்தம்.) 13. சிபிச்சக்கரவர்த்தியை வேடனாகச் சென்று சோதித்தவன். (ரகுவம்சம்). 14. சௌநகரால் உடல் தம்பித்து அவர் ஏவிய பூதத்திற் கஞ்சி இருடியைச் சரண்புகுந்து சுகமடைந்தவன். 15. மகாபலிக்குப் பயந்து அநேககாலம் தாமரைத் தண்டில் ஒளித்திருந்தவன். 16. பிருது சக்கிரவர்த்தியின் அஸ்வ மேதத்தில் யாகக்குதிரையைத் திருடிச் சென்றவன். 17. ஆபிசார யாகஞ்செய்து இரசியின் (500) குமரரையுங் கொன்றவன். 18. கண்ணனிடம் சென்று நரகாசுரன் செய்யும் துன்பங்கூறிக் கொல்வித்தவன். (பாகவதம்). 19. சிவபூசை செய்து கைலைசென்று அவ்விடமிருந்து பாரிஜாத விருக்ஷம் கொண்டு வந்து தெய்வலோகத்தில் வைக்க, அதைக் கிருஷ்ணன் அபகரிக்கப்பொறாது யுத்தஞ்செய்து காசிபர் சொல்லால் சமாதானம் அடைந்தவன். (பாகவதம்.) 20. இராவணவதத்தில் இராமருக்குத் தேர் அனுப்பினவன். (இரா.) 21. வச்சிரமந்திரத்தால் விரோகனன் குமரியைக் கொன்றவன். 22. சகரன் அச்வமேதத்தின் பொருட்டு விட்ட குதிரையைக் கபிலருக்குப் பின் ஒளித்தவன். (இரா.) 23. திதிவயிற்றில் தன்னை வருத்த இருந்த கருவை ஏழு கூறாக்கி மருத்துக்களாக வரந்தந்தவன். (இரா) 24. ஒருமுறை அம்பரீஷனது யாகப்பசுவை மறைத்தவன், 25. சரபங்கரைச் சத்தியவுலக மழைக்க அவர் மறுத்து நீங்குகையில் இராமமூர்த்தியைக் கண்டு தரிசித்தவன். 26. கோரதவஞ் செய்திருந்த முனிவர் தவத்தைக் கெடுக்க, அவரெதிரில் தோன்றி ஒரு வாளைக் கொடுத்து அவர் முதலில் புல், கொடி முதலியவற்றை அறுத்துப் பிறகு உயிர்க்கொலை செய்து தவம் நீங்கக் கண்டவன். 27. மாண்டு கண்ணரை மயக்க அரம்பையரை எவினவன். (காஞ்சி~பு.) 28. மயனை உயிர் போக்கினவன். 29. இராவணயுத்தத்தில் இறந்த வானரர்கள் பிழைக்க இராமர்க்கு வரந்தந்தவன். (இராமாயணம்,) 30. சூரிய வம்சத்து அரசனாகிய ககுத்துவை எருதாகத் தாங்கினவன் (அயோம்) 31. தன் தாயின் காதணியைப் பறித்துச்சென்ற நாகனிடம் கண்ணனை ஏவிச் சண்டையிடக் கூறினவன். 32. சீர்காழியில் சூரபதுமனுக்குப் பயந்து மூங்கிலில் ஒளித்திருந்து சிவபூசை செய்ய நந்தவனம் வைத்து அது உலர்ந்ததனால் அதைச் செழிப்பிக்க அகத்தியரிடம் காவிரி இருப்பதை நாரதரால் உணர்ந்து விநாயகரை வேண்டிக் காவிரிபெற்று வனம் செழிக்கக் களித்தவள், 33, தான் கைலைக்குச் செல்லுகையில் தன் தேவியின் தனிமைக்கஞ்சி மகாசாத்தாவால் மகாகாளரைக் காவலாக வைத்துச்சென்று இந்திராணிக்கு அசமுகியால் நேரிட்ட துன்பத்தை நாரதரால் அறிந்து மீண்டு மகாகாளரைத் துதித்து மனைவியை அணைந்தவன். 34. சூரபதுமன் யுத்தத்தில் மயிலாகிக் கந்தமூர்த்தியைத் தாங்கினவன். (காந்தம்.) 35. ஒருகாலத்தில் தெய்வபக்தி பூண்டு அரசாக்ஷியில் கவலையில்லாதிருந்தது கண்ட குருவாகிய பிரகஸ்பதி, அரசாக்ஷி யில் விருப்பமுண்டாக்குவிக்க உலகாயத மதம் போதிக்கக் கேட்டு அவ்வழியிருந்து நீங்கினவன், 36. நந்திதேவரிடம் அன்னம் யாசித்துப் பெற்று ஒருவனுக்குச் சுவர்க்க மளித் தவன். 37. அபிமன்யு இறந்த செய்தி அருச்சுனன் அறியாமுன்னம் அருச்சுனன் காணப் பிராமணவுருக்கொண்டு ஒரு தீக்குழி உண்டாக்கி அதில்விழ ஆயத்தமாகி இருப்பவன் போல் நடித்தனன். அதை வழிப்போக்கனாகிய அருச்சுனன் தடுக்க, உனக்கு அப்படி உண்டாகுங் காலத்தில் சாகாதிருக்கின் நான் தீக்குளியா திருக்கிறேனென்று கூறி அவ்வாறே வாக்குப் பெற்றவன் (பாரதம்). 38. தேவசன்மன் தேவியாகிய உரிசையை மோகித்து விபுலனைப் பணிந்து தன் குற்றத்தை மன்னிக்கவேண்டியவன். 39. சுநச்சக ருஷியாய்ச் சத்த இருடிகளின் கிழங்கு மூட்டையை ஒளித்து அவர்களைக் கொல்ல வந்த பூதத்தைக் கொன்று மூட்டையைக் கொடுத்தவன். 40. ஒருமுறை கௌதமரிடம் திருதராட்டிரன் போல் சென்று யானைக்குட்டி யாசித்தவன். 41. மருத்துக்களுக்கு அவிர்ப்பாகம் கொடாததனால் அவர்கள் பெரும்பூதத்தைச் சிருட்டித்து அனுப்பப் பயந்து சவனருஷியால் உயிர் தப்பினவன். 42. வியாழபகவானை மருத்து யாகத்திற்குப் போகாதிருக்கத் தடுத்து அக்நியையும் காந்தருவனையும் தூதாக அனுப்பி வியாழபகவானால் யாகஞ் செய்தல் நலம் எனக்கூறி அவர் மறுத்தது கண்டு வச்சிரத்தை ஏவ அது சம்வர்த்தனரால் தடை பட்டது கண்டு வெட்கினவன். 43. உதங்கர் குருகாணிக்கையாகக் கொண்டுவந்த குண்டலத்தை ஐராவத மென்னும் நாகன் திருடிச்செல்ல அவ்விடம் வந்து நாகலோகத்திற்கு உதங்கருக்கு வழி தெரிவித்தவன். (பாரதம்.) 44. அகத்தியர்பசு நீக்கி, நெற்கொண்டு செய்த வேள்விக்கு இடையூறு விளைத்து அவர் கோபத்திற்குப் பாத்திரனாகாமல் க்ஷமை வேண்டினவன். 45. சிலாதரருக்கு யுகதருமம்,சிவபூசை, தேவியிடம் பிரமனுற்பத்தி கூறினவன். 46. யக்ஷனாக வந்த சிவமூர்த்தியால் சத்தியைக் கவரப் பெற்றவன். 47. தன் பட்டத்திற்கு மாந்தாதா வராமல் தடைசெய்ய எண்ணி அவனுக்கு லவணாசுரனைக் காட்டிப் போரிட்டு இறக்கச் செய்தவன். 48. சிவ தரிசனத்திற்குச் சென்று கர்வமடைந்து பூதவுருக்கொண்ட சிவமூர்த்தியால் வச்சிரம் இழந்து நொந்தவன். 49. தக்ஷயாகத்தில் வீரபத்திரமூர்த்திக் குப்பயந்து குயிலாக ஓடி ஒளித்தவன், 50. பிரகலாதனைச் செயிக்க அவனிடத்து அடிமைவேலை செய்து அவனிடத்துள்ள ஒழுக்க முதலியவைகளைத் தானம் பெற்று அவனை வென்றவன். 51. பிராமணவுருக் கொண்டு காசிதேசத்து வேடனால் எய்யப்பட்ட உலர்ந்த மரத்திலிருந்த நன்றி மறவாக் கிளியின் பொருட்டுப் பட்டமரம் தளிர்க்க வாமளித்தவன். 52. பங்காசுவனைப் பெண்ணுருவுடன் இருக்கச் செய்தவன். 53. சூரபத்மன் ஏவலால் மீன்பிடித்து அரண்மனைக்கு இட்டவன். சூரபத்மன், தாருகன் முதலியவர்க்குப் பயந்து தன் ஆபரணங்களைச் சீர்காழி வனதேவதையிடம் ஒப்புவித்துத் தாருகன் இறந்தபின் அத்தேவதை அந்த ஆபரணங்களைத் தரப்பெற்றவன். (ஸ்காந்தம்). 54. முசுகுந்தன் உதவியால் வலனைக் கொன்று தான் விஷ்ணுமூர்த்தி இடம் பெற்றுப் பூசித்துவந்த சோமாஸ்கந்தமூர்த்தியை அவன் கேட்க, கொடுக்க மனமிலாது வேறு ஆறு சோமாஸ்கந்த மூர்த்தங்களை மயனால் நிருமிப்பித்துத்தர அவன் மறுத்தது கண்டு விஷ்ணுவால் பூசிக்கப்பட்ட அந்த மூர்த்தத்தையே கொடுத்துச் சிவகோபத்தால் நீச்சனாகத் திருவாரூரிற் பிறந்தவன். (திருவாரூர்~புரா.) 55. சலந்தரன் தேடிய பெண்ணிடத்தில் தானும் மயல்கொண்டு அவனுடன் கடலில் தேடியவன். 56. சுகோதரன் அரசாட்சியில் இடை விடாது பொன்மாரி பொழிவித்தவன். 57. குமதியெனும் அரக்கியை வதைத்தவன். 58. சிவவிஷ்ணுக்களின் பலாபலமறிய இரண்டு விற்கள் நிருமித்துத் தந்து சிவ மூர்த்தியின் வில்முரிந்தது கண்டு அதைப் பெற்றுச் சனகனிடம் வைத்தவன். 59. சுவயம்பிரபை, ஒரு அசுரனுக்கும், அரம்பைக்கும் பிலத்தினிருப்பிடம் கூறி, அவர்களுடன் இருக்க அசுரனைக்கொன்று, அரம்பையைத் தெய்வலோகத்திற்கு அனுப்பிச் சுவயம்பிரபையைப் பூமியில் அநுமான் வருமளவும் பிலத்திலிருந்து வருந்தச் சாபமிட்டவன், 60. கட்டுவாங்கனை வேண்டி அசுரரைச் செயித்தவன். 61. கபந்தன் தலை, வயிற்றில் அழுந்த வச்சிரத்தால் எறிந்தவன். (இரா.) 62. சுக்கிரசன் என்பவனிடம் பக்ஷி உருவாகச் சென்று நரமாமிசம் வேண்டுமெனக் கேட்டு அவன் மறுக்கச் சென்றவன். 63. தன் அங்கத்தில் ஒரு பிரிவைப் பிரித்துக் கோழியாக்கிக் கந்தமூர்த்திக்குக் கொடியாகக் கொடுத்தவன். (ஸ்கா.) 64. இரணியகசிபின் தேவியைச் சிறை கொண்டு நாரதர் இதோபதேசத்தால் விடுத்தவன், 65. செம்பன எனும் அசுரனைக் கொன்றவன். 66, இவன் யாகஞ் செய்தலால் தேவர்களுக்குப் புகழ் வருதல் கண்ட விஷ்ணு இவர்களது யசசைக் கவர்ந்தோட, தேவர் யுத்தத்தால் விஷ்ணுவை வெல்லாது அஞ்ச, இந்திரன் செல்லுருக் கொண்டு விஷ்ணுமூர்த்தியின் வில்லின் நாணியை அறுத்து யசசைக் கவர்ந்தவன். 67. முகுந்தையிடம் உருக்குமாங்கதன் உருக்கொண்டு புணர்ந்து கிரிச்சமதமுனிவரைப் பெற்றவன், 68. கபிலமுனிவர் விருந்திட அவருக்குச் சிந்தாமணி கொடுத்தவன். 69. அசுரருக்கஞ்சிய முசுகுங்கனைக் காக்கப் பூதத்தை அனுப்பிப் பலி கொள்ளச் செய்தவன். 70. தக்ஷகன், ஜனமேசயன் செய்யும் சர்ப்பயாகத்திற்கு அஞ்சி இந்திரடம் அடைக்கலம் புக, மந்திரம் இவனுடன் இழுக்க அஸ்திகன் ஜநமேசயனை வேண்டி யாகத்தை நிறுத்தினன். (பார.) 71. துருவாசர் சிவபூசை செய்தபுஷ்பத்தை மதியாது யானைமேல் வைத்து அவர் கோபத்திற்குப் பாத்திரனாகி உக்கிரகுமார பாண்டியனால் முடி சிதறவும் வெள்ளையானை காட்டானையாகவும் சாப மடைந்தவன். (திருவிளை.) 72. உக்கிரகுமார பாண்டியனிடம் மாறுகொண்டு கடலையேவி அவனுடன் யுத்தத்திற்கு வந்து வளையால் முடீ சிதறுண்டவன். (திருவிளை.) 73. வலாசுரனுடன் யுத்தஞ் செய்து ஆற்றாது அவனை என்ன வரம் வேண்டுமென்ன, வலன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்ன, எனக்கு நீ யாகப்பசுவாக வேண்டுமென்ன வேண்டி அவ்வகை பெற்று அவனைக் கொன்றவன். 74. ஒருமுறை தாருகாசுரனுக்குப் பயந்து எறும்பினுருவாகப் பூமியில் ஒளித்திருந்தவன் (எறும்பியூர்ப் புராணம்.) 75. இவன் அரம்பையர்களுடன் கூடி இருக்கையில் நாரதர் வர அவரை உமக்கு இப் பெண்களில் வேண்டியவரைப் பணிவிடைக்கு ஏற்றுக்கொள்க என்று வபு என்பவளை அவர்க்குக் கொடுத்தவன். 76. பூபார நிவர்த்தியின் பொருட்டுப் பூமிதேவி வேண்ட இவனிடம் இருந்த பிரமொளி பஞ்சபூதத்தில் ஒடுங்கக் குந்தியிடம் ஐந்து உருவாகி வெளிப்பட்டவன், இவர்களே பாண்டு புத்திரர். இவர்கள் பொருட்டு இந்திராணி துருபதன் யாகத்தில் திரௌபதி ஆயினள், 77. வச்சிராங்கியின் தவத்தைக் குரங்காகச் சென்று கெடுத்தவன், 78. இவன், நளாயினிக்கு ஆசையுற்றுக் கைலாசத்திற்கு அழைத்துச்சென்று, சச்வரியுடன் நிருத்தஞ் செய்யும் சிவமூர்த்தியைக் கண்டு வச்சிராயுதத்தால் ஒங்க, அப்போது சிவமூர்த்தி திரும்பிப் பார்க்க அதனால் கைவழக்கமற்று வலது தோளில் வாதவியாதியாய்த் துக்கத்தையுற்று வலியிழந்தவன். 79. பார்க்கபூமி யென்பவனால் அசுரரைக் கொல்வித்தவன். 80. பிரமகத்திக்கு அஞ்சி ஒளித்திருந்த காலையில் அக்நியால் இந்திராணியின் செயல் அறிந்தவன். 81. அமுதம் வேண்டித் தவஞ்செய்த உதங்கரிடம் நீசவுருக்கொண்டு அமுதம் தர அவர் மறுத்தது கண்டு நீங்கி அவரால் செல்வமிழக்கச் சாபம் பெற்றவன். (பூவாளூர்ப் புராணம்.) 82. பிரதாத்தனுக்கு வேதாந்த சாத்தி ரம் உபதேசித்தவன், 83. பிரமஞான மில்லாத (100) சந்தியாசிகளின் தலைகளை உடைத்து நரிகளுக்கு இரையாக்கினவன், 84. இந்திராணி ஒருமுறை கொலுவில் சகல போகத்துடன் இருக்கும் இவனைக் கண்டு என்னால் இப்போகம் உனக்கு வந்ததெனக் கூறக் கேட்டுச் சினந்து நீ பூமியில் பெண்ணாக எனச் சபிக்க, இந்தி சாணியும் அவ்வாறே கணவனை நீ ஆணாக எனச் சபித்தனள். இவர்கள் இருவரும் பூமியில் புண்ணியகீர்த்தி என்பவனுக்குப் புத்திரனாயும் புத்திரியாயும் பிறந்தனர். (நாகைக்காரோண புராணம்). 85. கலி என்னும் அசுரனுடன் யுத்தஞ் செய்து ஆற்றாது அஞ்சி மறைந்து திரிந்தவன். 86. இந்திரன் பொருட்டு மழைக்காக உலகத்தவரால் செய்யப்படும் விழவேற்பவன். (இதனைச் சிலப்பதிகாரம் இந்திரன் விழவூரெடுத்த காதையால் அறிக). 87. வற்சநாபனைக் காண்க. 88. வாலகில்லியரைப் பரிகசித்துக் கருடனால் அவமதிப்படையச் சாபமடைந்தவன். கருடனைக் காண்க. 89. பாரிஷதன் எனும் அரசன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து ஆசையுற்றுப் பலவகையிலும் எண்ணம் முடியாமல், அவ்வரசன் அசுவ மேதயாகஞ் செய்ய ஒரு புரவியைக் கொல்லக் கண்டு உயிர்விட்ட அந்தப் புரவியின் உடலில் புகுந்து இருந்தனன். யாகமுறைப்படி யாககர்த்தாவின் மனைவியாகிய வபுஷ்டமை யுடலுக்கும் குதிரையின் குறிக்கும் சம்பந்திக்கும் சமயம் பார்த்து இந்திரன் தன் எண்ணத்தை முடித்தனன். இதனால் யாகம் பலனற்ற தாயிற்று. (சிவமகா புராணம்). 90. இவன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியனால் விழாக்கொள்ளும் படி வேண்டப்பட்டான். மணிப்பல்லவத்தில் புத்தபீடிகையை நியமித்துத் தரிசித்தோருடைய பழம்பிறப்பைத் தெரிவிக்கும் பெருமையை அதற்குண்டாக்கி அதனைக் காக்கும்படி தீவதிலகையை நியமித்தான். உயிர்களைக் காக்கும் ஆபுத்திரனுக்கு வரமளித்தற்கு வந்து தன்வார்த்தையை அவன் மதியாததை எண்ணி இரப்பாரில்லாதவகை மழை பெய்வித்து இரப்பொழித்தவன், தனது ஆசனமாகிய பாண்டு கம்பளத்தினடுக்கத்தால் உலகிலுள்ள அறவியல்புடையார் வேண்டியவற்றைச் செய்பவன். சாவக நாட்டுள்ள நாகபுரத்தரசர் இவன் பாம்பரையோர். (மணிமேகலை). 91. இவன் சுரபியை நோக்கி இறவாதிருக்கவேண்டச் சுரபி நீ கன்றாகி என் பாலை உண்பையாயினிறவாமையும் பெரும்பலமும் அடைவாய் என அவ்வாறு கன்றாய்ப் பாலுண்டு துன்ப நீங்கினான். 92. பிராமண உருவாகச் சென்று ஒரு காலத்தில் சம்பராசுரனிடம் பிராமணரின் மகிமையைக் கேட்டுணர்ந்தான். 93. இந்திரன் கௌதமர் சாபத்தால் அகல்யைச் சேர்ந்ததால் பச்சை நிறமான மீசையையடைந்தான். அண்டமில்லாத வனுமானான்.

இந்திரப்பிரத்தம்

இந்திரனேவலால் விச்சுவகர்மனால் நிருமிக்கப்பட்ட பட்டணம் இது பாண்டவரிருக்கை. இதற்குக் காண்டவப்பிரத்த மெனவும் பெயர். இது தற் காலம் டில்லிப்பட்டணத்திற் கருகிலிருக்கிறது. THE OLD DELHI ON THE BANKS OF THE RIVER JUMNA.

இந்திரப்பிரமிதி

வியாசர்மாணாக்கராகிய பைலவருக்குச் சீடர். இவர் இருக்கு வேதத்தினை நான்கு சங்கிதைகளாகப் பிரித்துப் பாஷ்கலர், போத்யர், யாஞ்ஞ வல்கர், பராசர், மாண்டுகேயர், அக்நிமதி யென்பவருக்கு உபதேசித்தனர்.

இந்திரமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர்,

இந்திரர் பதினால்வர்

அரி, விபசித்து, சுசாந்தி, சிபி, விபு, மனோசவன், புரந்தரன், மாவலி, அற்புதன், சாந்தி, விருடன், இருததாமன், திவஸ்பதி, சுசி இவர்களுள் விபுவை, வசு, இரவி எனவும் புரந்தானை ஓசஸ்வி எனவுங் கூறுவர்.

இந்திரவதி

கோதாவரியின் உபநதி.

இந்திரவர்மன்

1. ஒரு அரசன். இவன் இராச்சியத்தை இழந்து மீண்டுந் தவஞ்செய்து அந்த இராச்சியத்தை அடைந்தவன். 2. மாளவதேசாதிபதி இவன் யானை அசுவத்தாமா, பாரதம் பதினைந்தாம் போரிலிறந்தது.

இந்திரவாகள்

(சூ.) புரஞ்சயன் அல்லது காகுத்தனுக்கு ஒரு பெயர். இவனை இந்திரன் வாகனமாகத் தாங்கினதால், இப் பெயரடைந்தனன்.

இந்திரவிழா

அகத்திய முனிவர் கட்டளையின்படி தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனால் தொடங்கப்பட்டு வருடந்தோறும் காவிரிப்பூம் பட்டினத்திற் சோழ பரம்பரையோரால் இந்திரனுக்கு நடத்தப்பட்டு வந்த உற்சவம். இதனை நெடுமுடிக்கிள்ளி யென்னும் சோழன் செய்யாதொழிந்ததால் காவிரிப் பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டது. (மணிமேகலை.)

இந்திரஸ்பிருகு

ருஷபனுக்குச் சயந்தியிடத் துதித்த குமரன்.

இந்திராணி

1. பாறகடலிற் பிறந்து, இந்திரனை மணந்தவள். 2. சிவமூர்த்தியிடம் சூரனாதியர் செய்யுந் துன்பத்தை முறையிடச்சென்ற இந்திரன் இவள் தனிமைக் கஞ்சி, மகாசாத்தாவைக் காவலிருக்கவேண்ட, சாத்தன் அவ்வகையிருக்க அருள் புரிந்தனர் இந்திராணி, பூஞ்சோலையிற் கைலை சென்ற நாயகன் விரைவாக வரத் தவமியற்றியிருந்தனள். இவளை அசமுகியென்னும் அரக்கி கண்டு இவள் தன் தமயனுக்கு உகந்தவளெனக் கைப்பற்றி இழுத்தனள். அதனால் இந்திராணி வருந்திய குரல் கேட்டு, மகாகாளர் அசமுகியின் கையைத் தறித்து, இந்திராணியை விடுவிக்க, இந்திராணி பாதலவழியாக மறைந்தனள். 3. பாண்டவராகப் பிறக்கும் இந்திரன் பொருட்டுத் துருபதன் யாகத்தில் துரௌபதியாகப் பிறந்தவள். 4. நகுஷன் இந்திரபதம் பெற்றுத் தன்னைப் புணரவர அவனை நோக்கி நீ, சத்த இருடிகள் சுமக்கும் பல்லக்கில் என்னிடம் வரின் உடன்படுவேனென்று மறுத்தவள், 5. நகுஷனால் மனைவியாகக் கேட்ட பொழுது விசனமடைந்து உபசுருதி தேவியை வேண்ட அவள் கணவனிருக்கும் இடத்தைக்காட்ட, கணவன் சொற்படி மகருஷிகளால் தாங்கப்பெற்ற சிவிகையில் வருகவென்று கூறினவள். (பாரசாந்) 6. இவள் சத்தமாதர்களில் ஒருத்தி. இவளைத் துவஷ்டாவின் மகள் என்பர். இந்திரனுக் கொப்பாக வச்சிரம், சூலம், கதை முதலியவைகளைத் தரித்து யானை வாகனம் ஏறியிருக்குஞ் சத்தி, 7. ஒருமுறை கண்ணனை நோக்கி யுன்மடிமிசை நானிருக்க அருள் செய்யென்றாள். இதைக் கேட்ட திருமால் அணங்கே நீ பூமியிற்சென்று (40000) வருஷம் தவஞ்செய்யின் நாம் துவாரகையில் கிருஷ்ணனாக அவதரித்து நீ விரும்பியபடி செய்வோமென்ன அவ்வகை இந்திராணி தவம் புரிந்து இராதையாகக் கோகுலத்தில் கண்ணனுடன் விளையாடி அவன் துவாரகை சென்றபின் வருந்தி வேறுருக்கொண்டு கண்ணனைத் தரிசிக்க, கண்ணன் இவளை எடுத்து மடியிலிருத்தினான். இதனைக் கண்ட ருக்மணி பொறாளாய்த் திண்டீரவனஞ் சென்று தவமியற்றினாள். கண்ணன் இவளைத் தவவேடங் கொண்டு திண்டீரவனஞ் சென்று கண்டு ருக்மணியென்னை விட்டுத் தவஞ்செய் கின்றனையென ருக்மணி நீ யார் என, நான் உன்பதியென நீ வஞ்சவுருக்கொண் டிருக்கின்றாய் அகல்க என்று அகன்று தவமேற் கொண்டனள்.

இந்திராயுதம்

சந்திராபீடனது குதிரை; கபிஞ்சலன் வைமானிகனது சாபத்தால் இவ்வாறு ஆயினன்.

இந்திராவாஜன்

உபேந்திரன்.

இந்திரியக்காட்சி

ஆத்மா, இந்திரியங்களும், கலாதிகளும், சூர்யாதி பிரகாசங்களுடன் கூடி உருவமுதலியவற்றை ஐயக்காட்சி முதலிய குற்றமின்றி அறிவது. இது, சையோகம், சையுக்த சமவாயம், சையுக்த சமவேத சமவாயம், சமவாயம், சமவேத சமவாயம், விசேடணவிசேடியபாவம். என அறுவகை. (சிவ~சித்.)

இந்திரேசுவரர்

இந்திரன் பெயரால் ஐராவதம் ஸ்தாபித்துப் பூசித்த சிவலிங்கப் பெருமானுடைய திருநாமம். (திருவிளையாடல்)

இந்திரோதர்

ஒருவேதியர் ஜகமேசயனுக்கு ஆபத்தருமம் கூறியவர். சௌநகன் எனும் பெயருள்ள ரிஷி (பார~சாங்.)

இந்தீவராக்ஷன்

நளநாபன் எனுங் காந்தருவன் குமரன். இவன் கபடமா யொருகுரு வினிடத்து வில்வித்தை கற்றுப் பின் குருவைப் பரிகசித்த காரணத்தால் வேடனாக வும் அரக்கனாகவும் அவராற் சபிக்கப்பட்டு ஸ்வரோசி ருஷியால் நீங்கப் பெற்றவன். பிரமமித்திரர் எனும் மௌரி, தம்சீடருடன் உபதேசித்த மந்திரத்தை மறைந்து கேட்டு அரக்கனானவன். குமரி மனோரமை.

இந்து

சந்திரனைக் காண்க.

இந்துசேனன்

பகையரசரா லரசுதுறந்து அகத்தியர் மகேசுரவிரதம், அநுஷ்டிக்கக் கூறியபடி அதை அநுஷ்டித்துக் குபேரனாற் செல்வம் பெற்றவன்.

இந்துதேசத்திலுள்ள மலைகள்

இமயம் அட்டகுலாசலங்களில் ஒன்று. இதிற் கங்கை முதலிய மகாநதிகள் உற்பத்தியாகின்றன. தென்கடலிலிருந்து (4000) யோசனையிலுள்ளது. இதன் விஸ்தாரம் (2000) யோசனை. தனியே காண்க. சுவாலிகமலை: இது, கங்கை, பீயஸ் எனும் நதிகளுக்கிடையில் உள்ள மலை, அரவாலிமலை: ஹிந்து, கங்கைகளுக் இடையிலுள்ளது. இதில் பெரிது ஆபுமலை. விந்தியபர்வதம்: இது அரவாலி மலையிலிருந்து மாஹி மலையால் பிரிக்கப்பட்டது. கைழர்மலை: இது விந்திய பர்வதத் தின் ஒரு கிளை. சாத்பூராமலை: இது, நருமதை தபதி களுக்கு இடையிலுள்ளது. வடக்குத் தொடர்ச்சிமலை: இது, தக்ஷிணத்திற்கு வடக்கிலுள்ள தொடர்ச்சி, மேற்தத் தொடர்ச்சிமலை: இது தபதியிலிருந்து தொடர்ச்சி. கன்னியாகுமரி வரையில் கீழ்க்கரையோரமானது. இதில் சையாத்ரி, மகாபலேச்வாம், நீலகிரி முக்யமானவை. தொடபெட்டா: நீலகிரியில் முக்யமானது. கிழக்குத் தொடர்ச்சிமலை: தக்ஷிணத்தில் தொடர்மலை. இதில் முக்கியமானது சேர்வராயமலை. பழனிமலை: கிழக்குத்தொடரின் ஒரு கிளை. வேறு சிறு மலைகளும் உள.

இந்துமதி

அகன்தேவி, தசரதன் தாய், விதர்ப்பதேயத் தரசனாகிய போஜன் பெண். அரினியைக் காண்க.

இனன்

சூரியன்

இனமோனை

வல்லினமோனை, மெல்லின மோனை, இடையின மோனை, இனவெழுத்தால் வரும் மோனை. (காரிதை).

இனவெதுகை

வல்லின வெதுகை, மெல்லின் வெதுகை, இடையினவெதுகை, இனவெழுத்தால் வரும் எதுகை, (காரிகை).

இனிசந்த நாகனார்

இவர் இனிய குரலோடுபாட வல்லராதல் பற்றி இவ்வடைமொழி கொடுக்கப்பட்டார் போலும். சந்தம் குரல், இனிய சந்தம் இனிசந்தமென விகா சப்பட்டு நின்றது. இவர் பாலயைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடிய ஈற்றாய் மனை மருட்சி கேட்போர் யாவரையும் மருளப்பண்ணும், இவர் பாடியது நற்சுகம் செய்யுள். (நற்றிணை)

இனியவை நாற்பது

சங்க மருவிய பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்கிய நீதி நூல். மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூஞ்சேந்தனார் இயற்றியது.

இன்னா நாற்பது

கபிலரியற்றிய நீதி நூல், பதினெண்கீழ் கணக்கினுள் ஒன்று.

இன்னாரிதனால் கெட்டா ரென்பது

வணக்கமில்லாததாற் கெட்ட அரசர் வேநன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி. சூதால் கெட்டோர் நளன், தருமர், உருக் குமி. பரதார மோகத்தால் கெட்டோர் இராவணன், கீசகன், இந்திரன், வாலி முதலியோர். காமத்தால் துன்புற்றேர் சம்பநிசும்பர், பிரத்யும் நன், உருரு, அந்தகா சுரன், சம்பராசான், இராவணன், அசுரர் திருப்பாற்கடல் கடைகையில் தோன்றிய அப்ஸரஸுகளைக் எண்டு மயங்கி அமுதமிழந்து தேவரோடு போரிட்டு மடிந்தனர். விஷ்ணுமூர்த்தி அமிர்த மதனத்தித் அசுரரைப் பின்செடர்ந்து பாதாளஞ் சென்று அவ்விடமிருந்த அப்சாஸ் திரிகளைக் கண்டு மோகித்து நெடுங்கால மவர்களுடன் கூடியிருந்து பலபுத்திரரைப் பெற்றனர். பிரமதேவன் பிராட்டியார் திருவடி அழகைக் கண்டு மயங்கி அபராதக்ஷமை வேண்டினான். இந்திரன் அகலியைபொருட்டுச் சாபம் பெற்றான். சந்திரன் தாரையிடமும், இந்திரன் வபுஷ்டமையிடமும் சோரப்புணர்ச்சி செய்தனர். வாயு குசநாபன் புத்திரிகளை விரும்பி அவர்கள் முதுகொடித்தனன். சூரியன் சஞ்ஞைப் பொருட்டுக் குதிரை வடிவேற்றுத் தன்னொளியைச் சாணையில் தந்தனன். அவ்வொளிப் பொடியால் தேவர் பல ஆயுதங்கள் செய்துகொண்டனர். இவன் குந்தியிடத்துக் கர்ணனைப் பெற்றனன். சந்திரன் ரோகிணியிடம் மிக்க ஆசை வைத்தலால் தக்ஷசாபத்தால் கலையிழந்த னன், தாரையைப் புணர்ந்தனன். மித்ராவருணர் ஊர்வசியைக் கண்டு மோகித்துக் கும்பத்தில் வீர்யதானஞ் செய்தனர். தக்ஷன் வித்யுத் பர்ணையால் துன்புற்றான். யவக்கிரீவன் காமத்தாலுயிரிழந்தனன், சகோதரனை இகழ்ந்து கெட்டோன் வாலி, இராவணன். கெட்ட வார்த்தையா லழிந்தவன் சிசுபாலன், சொல்லிச் செய்யாது கெட்டவன் உத்தான். வஞ்சனையால் கெட்டவன் மாரீசன், வில்வலன். அகங்கா ரத்தா லழிந்தவன் துரியோதனன், இரண்யாக்ஷன். கள்ளாலழிந்தவன் சுக்கிரன். கோபத்தாற் கெட்டவர் தச்கன் முதலியோர். கொடுங்கோலாற் கெட்டவன் கம்சன். புல்லறிவாற் கெட்டோர் மதுகைடவர், சலந்தான். உட்பகையாந் கெட்டவன் சம்பான். பெரியோர்ப் பிழைத்ததனால் கேட்டோர் இந்திரன், நால்வேந்தர் முதலியோர். களவால் தீமையடைந்தோர் வசுக்கள் எண்மர். ஆணுருவா யிருந்து பெண்ணுருவானோர், இளன், இருகதாச்சு அல்லது ரிக்ஷரஜசு.

இன்னிசை வெண்பா

நான் கடியாய்த் தனிச் சொலின்றி வருவதும், அடிதோறும் தனிச்சொற்பெற்றும் நேரிசைவெண்பாவிற் சிறிது வேறுபட்டு வருவனவாம்.

இன்னிலை

பொய்கையார் பாடியது. மதுரையாசிரியர் பூதனார் தொகுத்தது. கடவுள் வாழ்த்து பாரதம்பாடிய பெருந்தேவனார் இயற்றியது. அறப்பால் பத்தும், பொருட்பால் ஒன்பதும், இன்பப்பால் பன்னிரண்டும், வீட்டிலக்கப்பால் பதினான்கும் ஆகிய நாற்பத்தைந்து வெண்பாக்களை யுடையது.

இன்பம்

இது வைதருப்பசெய்யுணெறியி லொன்று. இது, சொல்லினால் சுவைபடத் தொடுத்தலும், பொருளினால் சுவைபடத் தொடுத்தலுமாம். (தண்டி)

இன்பவணி

முயற்சியின்றி விரும்பப்பட்ட காரியஞ் சித்தித்தலும், விரும்பப் பட்ட பொருளினு மதிகஞ் சித்தித்தலும், உபாயஞ் சித்தித்தற் பொருட்டுச் செய்யு முயற்சியால் பலமே சித்தித்தலுமாம். இதனைப் பிரஹர்ஷணாவலங்காரம் என்பர்.

இன்மை நவிற்சியணி

யாதேனு மொன்றில் வாமையால் வர்ணியத்தை உயர்வடைவதாகவேனும் தாழ்வடைவதாகவேனும் கூறுவது, இதனை விநோக்தி யலங்காரமென்பர்.

இப்பர்

செட்டிகளின் பேதம்.

இமயமலை

இது உலகத்திலுள்ள எல்லா மலைகளிலும் உயர்ந்தது. இது நீளத்தில் 1500 மைல், இதன் அகலம் (200) மைல், இது செங்குத்தாக உயர்ந்திருக்கிறது. கம்பீரமான தோற்றமுடையது. உலகத்திலுள்ள எல்லா சீதோஷ்ண சமநிலைகளையும் தன்னிடம் பெற்றது. இதிலுள்ள சீதோஷ்ண நிலையால் இதனை (3) நிலையாகப் பிரித்திருக்கின்றனர். இதன் சிகரங்களென்றும் நிலையாகப் பனியால் மூடப் பட்டிருக்கின்றன. காலை வேளையிலிதை அண்ணாந்து நோக்கின் பனி படர்ந்திருப்பது தெரியுமன்றிச் சிகரம் தோற்றாது. இதை நோக்குவோர் மண்ணுலகினின்றும் விண்ணுலகத்திற்குச் செல்லும் ஏணியென்பர். இம் மலைத்தொடர். ஒரே அளவாக உயர்ந்திருக்கவில்லை, ஒன்றின் மேலொன்றாகப் படிப்படியாக உயர்ந்து இருக்கிறது. இதில் அநேக கொடுமுடிகள் ஒன்றன்பின் ஒன்றாக உயர்ந்திருக்கின்றன. இம்மலையின் பின்புறமாக உயர்ந்த சிகரங்கள் இருக்கின்றன. அவைகள்: நங்கை பர்வத், நந்திதேவி, தவளகிரி, யவாஸ்த், கின்சின் சிங்கா. இவற்றுள், யவரஸ்ட் கடல் மட்டத்திற்குமேல் (29,000) அடி உயர்ந்திருக்கிறது. கின்சின்சிங்கா 28,000 அடி, தவளகிரி 26,000 அடிகள் உயர்ந்திருக்கின்றன. இதின் அமைப்பு ஓரிடத்தில் உள்ளதுபோல் ஓரிடம் இல்லை. இதன் மேலுண்டாம் நதிகள், கீழ்புரண்டோடி அடியில் சதுப்புண்டிருக்கிறது. அந்த இடங்கள் காட்டு விருக்ஷங்களடர்ந்து போக்குவரவில்லாமலிருக்கின்றன. அடி தொடங்கி (5000) அடிவரையில் முதற் பாகம், இதில் உஷ்ணதேச விருக்ஷங்கள் மிருகங்களுண்டு. அதன்மேல் (9000) அடி வரையில் இரண்டாம் பிரிவு இதில் சமசீதோஷ்ணபிரிவிலுள்ள விருக்ஷங்களும் பிராணிகளும் உண்டு. ஐரோப்பிய செடி பறவை மிருகங்களிருக்கின்றன. அதன்மேல் மூன்றாம் பிரிவு இது, ஐரோப்பா, அமெரிகா கண்டத்து வடபாகத்துச் சீதோஷ்ண நிலையையொத்தது. இதன் நுனி துருவதேசங்களைப் போல் எப்போதும் பனி படர்ந்தேயிருக்கும். இதில் கைலாசமலை முக்கியமானது. இம்மலை பல பெருநதிகளுக்கும் பிறப்பிடமானது. இவற்றுள் சிறந்தவை, கங்கை, பிரமபுத்ரா, சிந்து. இவற்றுள் பிரமபுத்ரா, சிந்து, இவ்விரண்டும் கைலாசமலையிலுள்ள மானஸஸரஸில் ஒன்றுக்கொன்றெதிர் முகமாகத் தோன்றுகின்றன. செங்குட்டுவனென்னுஞ் சேரன் கண்ணகியுருவத்தைச் சமைப்பித்தற்கு வருவித்த கல் இம்மலையினதே, (மணி மேகலை.)

இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல் புகழ்க்குட்டுவன்

இவன் சேரன், பாலைக் கௌதமனாராற் பாடப்பட்டவன். இவன் உம்பர்க் காட்டைத் தன் கைப்படுத்தி ஒன்பது வேள்விகள் செய்வித்து மேற்கடல் கீழ்க்கடல் நீர்களை ஒருநாளில் ஆடி அயிரை மலையிலுள்ள தேவியை வணங்கிப் பாரதாயனாரை வேள்வியால் சுவர்க்கம் புகச்செய்தவன்.

இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்

இவன் சேரவம்சத்துக் கீர்த்திபெற்ற அரசன். வடநாட்டின் மீது படைகொண்டு சென்று அவர்களை வென்றவன். இவனை “வடவருட்கும் வான்றோய் நல்லிசை குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்” எனவும் ஆரியர் துவன்றிய பேரிசையிமயம், தென்னங் குமரியோடாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே ” எனவும் பதிற்றுப்பத்தில் புகழப்பட் டிருக்கிறது. இவன் குமரர் சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள். இவன் தந்தை உதியஞ்சேரல். இவன் தாய் வெளியன் வேண்மான் மகள் நல்லினி. இவன் இமயம்வரை படையெடுத்துச் சென்று அம்மலைமீது தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். தன்னுடன் எதிர்த்த ஆரிய அரசரை வென்றான். யவன அரசரை வென்று அவர்களைக் கட்டியவரிடம் தனம் பெற்று அவற்றை வஞ்சியிலுள்ளார்க்கு அளித்தான். கடலிடையிருந்த பகைவரை வென்று அவரது காவன் மரமாகிய கடம்பை வெட்டி யெறிந்தான். இவனைக் குமட்டூர் கண்ணனார் பாடி உம்பற்காட்டில் (500) ஊர் பிரமதாயமும் தென்னாட்டு வருவாயிற் பாகமும் பெற்றனர். இவன் 58 ஆண்டு அரசாண்டான் என்பர். இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவன் தேவியர் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை, மற்றொருத்தி வேளா விக்கோமானான பதுமன் என்பவனின் மகள். இவனுக்குப் பதுமன் மகளிடம் பிறந்த மக்கள் களங்காய்க்கண்ணிநார்முடிச் சோலும், ஆடுகோட்பாட்டுச் சோலா தானுமாவர். இவன் வேற்பஃறடக்கைட பெருநற் கிள்ளி எனும் சோழனுடன் போர் புரிந்த தொந்த யுத்தத்தில் இருவருமே மாண்டனர். இவர்களிருவருமிறந்து கிடத்தலைக்கண்டு கழாத்தலையாரும், பரணரும் உருகிப்பாடினர். இவன் சிவ பிரான் திருவருளால் செங்குட்டுவனைப் பெற்றான். இவன் உயிர் நீத்தபோது நற்சோணையும் உடனுயிர் நீத்தாள் என்பது. (புறநானூறு.)

இமயவல்லி

உமை, இவள் மணத்தின் பொருட்டுத் தேவர்வேண்டச் சிவமூர்த்தி உமையிடமறிவித்து மீண்டுந் திருக்கல்யாணகாலத்து ஒரு குழந்தை யுருக்கொண்டு, அம்மையார் மடிமீதிருக்கத் தேவர் சினங்கொள்ளப் பிரமனறிந்து, துதிக்கச் சிவமூர்த்தி சோதியுருக் காட்டினர்.

இமவாள்

1. இவனுக்கு, இமவந்தன் எனவும் பெயர். இவன் பர்வதராசன். இவன் மேனையை மணந்து, கங்கை பார்வதியென்னும் பெண்களைப் பெற்றுச் சிவ மூர்த்திக்குக் கொடுத்தனன். மேருவிற்குப் பந்து. 2. இவன் பாரியை பிதுருக்களின் புத்திரியாகிய மேனை, புத்திரன் மைநாகன், இவனுக்கு மூன்று பெண்கள் (1) அபரணை. (2) ஏகவருணை. (3) ஏகபாடலை. அபரணை என்பவள் மகாதேவனையும், ஏகவருணை, அசிதருஷியையும், (3) ஏகபாடலை. ஜயக் கீஷௌய ரிஷியையும் மணந்தனர். (மச்சபுராணம்.)

இம்பூறல்

ஒரு பூண்டு. இதன் வேர், கடுக்காய் படிகாரஞ் சேர்த்துச் சிவப்புச்சாயம், கிச்சிலிப்பழச்சாயம், ஊதாச்சாயம் போடுகிறதற்கு உபயோகப்படுகின்றது, இது, ராமேச்சுரத்தில் விஸ்தாரமாக விளைகிரபடியால் இராமேச்சுர வேரென்று சொல் லப்படுகின்றது. இந்தச் செடிக்குச் சிறிய வெளுப்பான பல இலைகள் உண்டாயிருக் கின்றன. இது சிறு கசப்பாகவும், பருப்பமில்லாத உருசியுடையதாகவும் இருக்கின்றது. பேதியாக்குகிற மருந்தாகவு மிருக்கின்றது. இதை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கி அரிசிமாவோடு சேர்த்து அடை சுட்டுக் கயரோகம், அல்லது சுவாச சோகஸ்தர் அருந்துவர்.

இம்மித்திரபட்டாசாரியர்

சுரேச்வராசாரியருக்குத் தந்தை.

இம்மென்கீரனூர்

இவர் கடைச்சங்கமருவிய புலவர். இவர் இயற்பெயர் கீரனார்போலும். இவர் தாம்பாடிய குறிஞ்சியில் “இம் மென்றலமரன் மழைக்கண் டெண்பனி மல்க” என்று இம்மெனத் தொடுத்தமையின் இப்பெயர் பெற்றனர் போலும். (அகம்~398)

இயக்கன்

பூதபாண்டியனுக்கு நண்பன். (புற~நா).

இயக்கர்

இராக்கதரைக் காண்க.

இயக்கி

(இசக்கி) ஒரு பெண் தெய்வம். (சிலப்).

இயன் மொழிவாழ்த்து

மயக்கமற்ற மிக்க புகழினையும், குதிரையாற் பூட்டப்பட்ட தேரினையுமுடைய அரசன் தன்மை வினைச் சொல்லினும், இத் தன்மையோர் இத் தன்மைய வழங்கினார் நீயும் அத்தன்மையார் போல் அப்படியான பொருள் களை எமக்குத் தருவாயாக என்று சொல்லி எத்தன்மையோரும் உணர உயர்த்துச் சொல்லுவது. (பு. வெ. பாடாண்).

இயமநியமம்

இவற்றுள் இயமமாவது, பிரமசரியம், தயை, பொறுமை, தியானம், சத்தியம், சரியாயிருத்தல், இம்சைசெய்யாமை, திருடாமை, யாவர்க்கும் பிரியனா யிருக்கை, இந்திரியங்காகம்செய்கை ஆகப்பத்து. நியமமாவது ஸ்நானம், மௌனம், உபவாசம், தேவபூசை, வேதாதயயனம், புணராமை, குருசிசுருஷை, பரிசுத்தம், கோபமின்மை, ஜாக்ரதை ஆகப்பத்து.

இயமன்

1. சூரியபுத்திரன். தென் திசைக்கிறை. இவன் வாகனம் எருமைக்கிடா. ஆயுதம் தண்டு பாசமுதலிய. பிரஜைகளை நியமிக்கிற யமாள் எனும் கிங்கரர்களுக்குத் தலைவன், யமுனையுட னிரட்டையாகப் பிறந்தவன். அஞ்சமைலைபோன்ற கருதிறம் பதினெட்டுக் கைகள் பிறைபோன்ற பற்கள் தீப்பொறி சிதறும் விழிகள், துடிக்கும் இதழ்களுடன் மிருத்யு காலன், அந்தகன், முதலினோர் சூழத் தன பட்டணத்தில் வீற்றிருப்பவன். மாற்றான்றாயை உதைத்ததாற் சாபம் பெற்றவன். 2. ஒர் இருஷி சாபத்தாற் கீழ்ப்பிறப்பிற் பிறந்தவன், 3, சிவேதன் பொருட்டும் மார்க்கண்டர் பொருட்டும் சிவபெருமான் கோபத்துக்கு உள்ளாகி உயிர் நீங்கி மீண்டும் அடைந்தவன். 4. பாண்டவரைக் காக்கப் பிரமசாரி யுருக்கொண்டு, அவரிடஞ் சென்று ஒரு மான் என் மான்றோலைப் பிடுங்கிக் கொண்டது வாங்கிக் கொடுங்கள் என அபயங்கேட்டவன். 5. சாவித்திரி தொடர்ந்து வந்ததனால் அவள் கணவன் உயிரைத் தந்தவன். 6. தருமனுக்கு அஞ்ஞாத வாசத்தில் யார் கண்ணுக்குங் காணப்படாதிருக்க மந்திர முபதேசித்தவன். 7. உசீனரதேசத் தரசனாகிய, சுவயயக்கியன் மனைவியருக்குப் பாலனாய்த் தோன்றி அநித்தியங் கூறினவன். இவன் பாண்டு புத்திரரிற் றருமராசனாகப் பிறந் தான் என்பர். 8. ஒருமுறை சிபிச்சக்ரவர்த்தியி னுண்மையறிய வல்லூறாகச் சென்றவன். 9 இறலித் தீவிலிருந்த அரக்கரால் ஒருமுறை விலங்கிடப்பட்டவன். 10. பாண்டவர், ஆரண்ய வாசத்திற் காளமா முனியினால் விடுக்கப்பட்ட பூதத்தாலி றவாவகை நச்சுநீரா லுயிர்நீங்கித் தருமரைத் தடுத்துச் சில தருமசந்தேகம் வினவியவன். 11. பாண்டு புத்திரனாகிய தருமன் சுவர்க்கஞ் சென்றபோது நாயுருக்கொண்டு சென்று தருமனது உறுகியைத் தெரிவித்தவன். 12. சுவர்க்கஞ் சென்றபோது ஆகாய கங்கையில் ஸ்நானஞ் செய்தபின் தரிசனம் தந்தவன். 13. ஞானசு தரிசனன் தேவியாகிய யோகவதியைப் புணர்ந்து கற்புநிலை தெரி வித்து, யமவாதனை நீக்கினவன், இவனைச் சுதர்சனன் என்பர் (இலிங்க புராணம்.) !4. ஆணிமாண்டவ்யர் சாபத்தால் விதுரனாகப் பிறந்தவன், 15. இராவணன், திக்கு விஜயஞ் செய்து வருகையில், அவனுடன் எதிர்த் துப் போரிட்டுத் தன் ஆயு தங்களை இழந்து, கடைசியில், ஏவினால் உயிர் வாங்காமல் நீங்காத கால தண்டத்தை ஏவ இருக்கையில், பிரமன் தோன்றி இவன் மகாவரப் பிரசாதி இதை எய்வையேல், உயிர் வாங்காது மீளாதெனத் தடுத்துச் சமாதானஞ் செய்விக்க அடங்கினவன் (உத்தர ராமாயணம்). 16. இவன், புண்ணியர்க்குச் சாந்த முள்ளானாயும் பாவிகளுக்குக் கோரவுருவுடனும் தோன்றுவன். ஆதிசேஷன் மூச்சிற்றோன்றிப் பிராணிகளைத் தண்டிப்பவன், இவன் பட்டணம் சையமினி, தேவியர் அப்பிராப்தி, சாமளை, இரி என்பர்.

இயற்கைப்புணர்ச்சி

தெய்வத்தாலும் தலைவியாலும் புணரும் புணர்ச்சி. இது வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டம் என நான்கு வகையினையும், இரந்து பின்னற்றற்கெண்ணல், இரந்து பின்னிலை நிற்றல், முன்னிலையாக்கல், மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம்பெற்றுத் தழால், வழி பாடுமறுத்தல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்திரங்கல், மறுத்தெதிர் கோடல், வறிது நகைதோற்றல், முறுவற்குறிப் புணர்த்தல், முயங்குதலுறுத்தல், புணர்ச்சியின் மகிழ்தல், புகழ்தல் முதலிய பதினைந்து விரியினையு முடையதாம்.

இயற்சொல்

யாவருக்கும் பொருள் விளங்குஞ்சொல்.

இயற்பகைநாயனார்

சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் வைசியர் குலத்தி லுதித்துச் சிவனடியவர்க்கு வேண்டியவைகளைக் கொடுத்திருக்கு நாட்களிலே சிவபெருமான் ஒரு காமுகவேதியருருக் கொண்டு வந்து அவர் மனைவியைத் தாம் பெற்றுச் செல்கையில் வழியில் சுற்றதார் தடுக்க நாயனார், அவர்களுடன் போரிட்டு விலக்கி மனைவியாரை வேதியர்க்குப் பின் அனுப்ப, வேதியர் திருச்சாய்க்காடு என்னும் சிவஸ்தலம்வரை நாயனார் பின் வரச்சென்று, நாயனார் நிற்றல் கண்டு ஏதோ பயந்தவர்போல் கூவ, நாயனார் கேட்டு விரைந்து செல்லச் சிவமூர்த்தி தரிசனந்தர முத்திபெற்றவர். (பெரிய புராணம்).

இயல்பு புணர்ச்சி

விகாரமின்றிச் சொற்கள் புணர்வது. (நன்னூல்)

இயல்புவழக்கு

1. எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப்பெய ராலேயே அப்பொருளைக் கூறுகை, இது, இலக்கண முடையது; இலக்கண நெறியில் விளங்குவது, இலக்கணப்போலி; இலக்கணத்தைப்போல் சொல் முன் பின் மாறி வருவது, மரூஉ; இலக்கணஞ் சிதைந்து மருவியது. என மூன்று வகையையுடையது. (நன்னூல்)

இயைபின்மையணி

அஃதாவது, ஒருவாக்கியத்துள் ஒரு பொருளையே உபமானமாகவு முபமேயமாகவுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் அருந்வயாலங்கார மென்பர்; தண்டியாசிரியர் பொது நீக்குவமை யென்பர்.

இயைபு

ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்ற பதினொரு புள்ளியீறாய் வந்த பாட்டு, (யாப்பு~வி.)

இரகுநாதசேதுபதி

இவர் இராமநாதபுரத்தரசர்களி லொருவர். தமிழருமையுணர்ந்து புலவரை ஆதரித்தவர். ஒரு துறைக்கோவை இவர்மீது அமுதகவிராயராற் பாடப்பட்டது. சேதுபதிகளின் வரலாறு காண்க.

இரகுவம்சம்

சூரியவம்சத்தரசர் சரித்திரம் சொன்ன நூல் தமிழில் அரசகேசரி யென்பவராற் செய்யப்பட்டது.

இரக்ததந்தி

சத்தியைக் காண்க.

இரக்தபிக்ஷாடனம்

பிக்ஷாடனராய்ப் புறப் பட்டு விஷ்ணுமூர்த்தியின் நெற்றியினைச் சூலத்தாற் கீறி நரம்பின்வழி ரக்த பிக்ஷையேற்ற பைரவத்திருக்கோலம்.

இரக்ஷாபந்தனம்

காப்பு நாணணிதல். ஆசிரியன் வடக்காக இருந்து அணிந்து கொள்ளுபவனைக் கிழக்காக நிறுத்தி ஒரு பாக்கும் மூன்று வெள்ளை வெற்றிலையும் ஒரு தேங்காயும் ஒரு பாத்திரத்தில் வைத்துப் பொற்காப்பு அல்லது, 3, 5, இழைமுதலாக ஒற்றைப்படும் இழையினால் முறுக்கப்பட்ட பருத்தி நூலாற் செய்த காப்பாவது பாத்திரத்தில்வைத்து மந்திரித்து மூன்று முறை மந்திரத்தால் அதை உருவிக் கட்டிக் கொள்வோனது வலக்கையில் கட்டுவதாம். (சைவ-பூ.)

இரக்ஷேமுகன்

கத்ருவின் குமரன் நாகன்.

இரங்காரி

ஒருவகை மராட்டிய ஜாதி. தொழில் சாயந் தோய்த்தல், தையல் வேலை செய்தல், இவர்கள் அம்பாபவானியை வணங்குவர். இவர்கள் தங்களை ஷத்திரியர் என்பர், இவர்கள் இராமனுடன் படைத்துணையாக இலங்கை சென்றதால் லங்காரி என்று தங்களுக்குப் பெயர் என்பர். இப்பெயர் சங்காரியென மாறியதென்பர்.

இரங்குகுடிக்குன்றநாடன்

கடைச்சங்க மருவிய தமிழ்ப்புலவன்.

இரங்கேசவெண்பா

அரங்கரை முன்னிலையாக்கிப் பாதிவெண்பாவிற் குறளும், பாதிவெண்பாவி லதற்கியைந்த பழங்கதையும் சொன்ன நீதி நூல். இது சாந்த கவிராயன் கூறியது.

இரசகற்பூரம்

கந்தகத்துடன் இரசத்தைச் சேர்த்துப் பதங்கமிடின் இரசகற்பூரமாம். வைத்திய நூற்களைக் காண்க. இது வைப்புச் சரக்கு.

இரசக்கியன்

புரஞ்சயனுக்கு நண்பன்.

இரசதாஸ்வன்

சௌனேயன் சாத்தியகி. (பார~து.)

இரசனை

பூஷாவின் தேவி.

இரசன்

1. ஆயுவெனுஞ் சந்திரவம்சத்தரசன் சந்ததியான். இவனுக்கு (105) புத்தி ரர்கள். இவன் இந்திரன் வேண்டுகோளால் தானவரை வென்று அவனுக்கு இந்திரபத மளித்தான். பின் சிலகாலம் பொறுத்து இவன் புத்திரன் இந்திரனுடன் போர் புரிந்து இந்திரபத மடைந்தான். மீண்டும் இந்திரன் அவன் பதத்தைப் பெற்றான். (பிரமபுராணம்). 2. விரசன் குமாரன்.

இரசபுத்ரர்

இவர்கள் பூர்வ ராஜாக்களின் புத்திரராகக் கூறுபவர். இவர்கள் வட இந்தியாவில் தாகூர், சத்ரி எனப் பட்டமடைவர். இவர்களில் சிலர் வடஆற்காடு, சித்தூர், வேலூரில் குடியிருக்கின்றனர். இவர்கள் ராஜபுதனத்திலிருந்து மகம்மதிய அரசர் சேனைகளுடன் வந்தவர்கள். இவர்களிற் பெரும்பான்மையோர் போர்ச் சேவகராயிருந்து உபகாரச்சம்பளம் பெற்று ஜீவிக்கின்றனர். பழக்க வழக்கக்கள்: இவர்கள் மகுடம்பூண்ட மறுநாட்காலையில் அரசன் தன் சேனைகளுடன் புறப்பட்டுத் தனக்குப் பகைவனது நாட்டின் மீது படைகொண்டு சென்று செயித்தல் வேண்டும். பகைவர் இல்லாவிடின் ஒரு போலி படையெழுச்சியாவது நடத்த வேண்டும். திருமண வழக்கம்: பெண்ணைக் கொடுக்க எண்ணியவர்கள் ஒரு தேங்காயை மணமகனுக் கனுப்ப வேண்டும். அதனை அங்கீகரிப்பது மணத்திற் குடன் பட்டதாம். அதனை அங்கீகரியாமை உடன்படாமை. அங்கீகரித்த மணமகன் பெண்வீட்டாரிடஞ்சென்று கல்யாண காலத்தில் முக்கோணம் போன்ற (3) மரச்சட்டங்களின் மீது வைக்கப்பட்டிருக்கும் ஒரு மயிற் பிரதிமையை மணமகன் குதிரைமீதேறி ஈட்டியினால் அந்த முக்கோண தோரணத்திலுள்ள மயிலையும் தோரணத்தையும் முரித்துவிடவேண்டும், அந்தச் சமயத்தில் அருகிருக்கும் பெண்கள் மணமகன் மீது பாடல்களைப் பாடிக் கொண்டு புஷ்பபாணங்களையும், மஞ்சட் பொடிகளையும் தூவுவர். (தர்ஸ்டன்)

இரசம்

சிங்காரம், வீர்யம், பெருநகை, கருணை, ரௌத்ரம், குற்சை, சந்தம், அற்புதம், பயம், 2. இது (பாதரஸம்) வெள்ளிபோல் பளபளப்பான திரவபதார்த்தம். தொட்டால் கையில் ஒட்டாது. பளுவானது. உஷ்ணமான நெருப்பில் ஆவியாகிப் போய்விடும். கீழ்கொட்டினால் சிதறிவிடும். இது ஐரோப்பா, அமெரிக்கா, திபெத், சீனா முதலிய இடங்களில் கனிகளில் வெட்டி யெடுக்கப்படுகிறது. இந்துக்களிதைச் சிவவீர்யம் என்பர். இதை மருந்துகளில் உபயோகிக்கையில் இதற்குள்ள எண்வகைத் தோஷங்களை நீக்கத்தக்க எண்வகைச் சுத்திசெய்து உபயோ கிக்கவேண்டியது. அவ்வகை உபயோகிக்காவிடின் பல விகாரங்களை உண்டாக் கும். எண்வகைத் தோஷங்கள்: சர்ப்பம், வங்கம், கந்தி, வன்னி, சாஞ்சலம், மலம், காளம், மந்தம், என்பன இவைகளை நீக்காது உபயோகித்தால் முறையே ரணம், பெருவியாதி, தீச்சுவாலை, தபித்தல், நிறமாறல், வீர்யநாசம், மரணம், சோபம் என 8 வித ரோகங்களுண்டாகும். இதனாலின்னும் துணியைக் கிழித்தல், கல்லாலடித்தல், உயரத்திருந்து குதித்தல், தண்ணீரில் மூழ்கிமூழ்கிக் கிளம்பல், மயங்கிப் பித்துக்கொள்ளல், அழலைகொள்ளல், வாயில் ஜலமூறல், வேர்வை பெருகல், பிரலாபம் உண்டாம். சுத்திவைத்திய நூல்களிற் காண்க. (பதார்த்தகுண சிந் தாமணி). 3. நாவால் கிரகிக்கப்படுவது. விசேஷ குணம், பிருத்வி, புனல்களி லிருப்பது

இரசஸ்

திரிக்குத்துத் தந்தை,

இரசாதலம்

ஒருபாதாள உலகு. இதுகற்கள் நெருங்கியது. இதன் முக்கிய பட்டணம் போகவதி. இதிற் பலியிருப்பன்.

இரசாதி

இவை யாகத்திற் குரியவை. ரஸம், நெல்லிக்காய்கந்தகம், சாதிலிங்கம், அரிதாரம், சிலாசத்து. (சைவ~பூ).

இரசானை

1 மகாகாளனென்னும், ஏகாத சருத்ரன் தேவி, 2. திதியின் பெண், துவடடாவின் தேவி.

இரசி

ஆயுசின் குமரன், புரூரவன் பேரன். இவனுக்கு (100) குமரர். இவன் இந்திரனாற் பிரார்த்திக்கப்பட்டுத் தைத்தியரைக் கொலைபுரிந்தவன். பிரகலாதனுக்குப் பயந்த இந்திரனுக்குத் தன்னைத் தத்தம் செய்தவன். சில நாள் பொறுத்து இரசிலோகாந்தரத்தை அடைந்தனன். இந்திரன் சுவர்க்கத்தை வேண்டிப் புத்திரரைக் கேட்கப் புத்திரர் மறுத்து யஞ்ஞபாகத்தையும் கவர்ந்து கொண்டனர். அதனாலிந்திரன் கோபித்து ஆபிசாரயாகஞ்செய்து நூறு குமாரரையுங் கொலை செய்வித்தனன்.

இரச்சு

ஒரு வட்டத்தையிட்டு இதன் புறம்பாக மூன்று வட்டத்தையிட்டு இதிலே தன்னிலொக்கக் கதிர்போல மூன்று விட்டத்தையிடின் அது இரச்சுச்சக்கிரமாம். இதன் புறம்பில் வட்டத்தி லொருவிட்டத் தின்றலை தொடங்கி அஸ்வினி முதலாக உள்ளே புக (5) நாளெண்ணிப் பின்பு பிரதக்கிணமாகத் திருவாதிரைமுதல் (4) நாட் புறப்பட வெண்ணப் பின்பு மகமுதல் (5), நாளுள்ளே புகவெண்ணிப் பின்பு சோதி இரட்டைக்கிளவி முதல் (4) நாட் புறப்படவெண்ணிப், பின்பு மூலமுதல் (5) நாளுள்ளே புக வெண்ணிப், பின்பு சதய முதல் (4) காட் புறப்படவெண்ணி, இப்படி (27) நாளுமெண்ணி நின்ற உச்சமத்தியத்திலே மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் கூடக்கிடக்க வெண்ணுவது. அஃதாவது மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், சிரோரச்சு, உரோகிணி, திருவாதிரை, அத்தம், சோதி, திருவோணம், சதயம் இவ்வாறு நாளுங்கண்டாச்சு, கார்த்திகை, புநர்பூசம், உத்திரம், விசாகம், உத்திரட்டாதி, பூரட்டாதி இவ்வாறு நாளு முதரரச்சு. (சிலர் பரணி, பூசம், பூரம், அனுடம், பூராடம், உத்திரட்டாதி இவ்வாறையும் ஊருச்சென்பர்.) பரணி, பூசம், பூரம், அதுடம், பூராடம், உத்திரட்டாதி இவ்வாறு நாளும் யோனிரச்சு, அசுவதி, ஆயிலியம், மகம், கேட்டை, மூலம், இரேவதி, இவ்வாறு நாளும் பாதரச்சு இப்படி நாலுவட்டமும் நடுவுந் தலை, கழுத்து, வயிறு, யோனி காலெனப்படும். இவையிற்றிலே வட்டத்திலொரு விட்டத்திலே திரிபுமான்கள் நாட்கிடக்கில் ரச்சுப் பொருந்தாது, பின்னமாகிற் பொருந்தும். (விதானமாலை)

இரச்மிகேது

ஒரு இராவணபடன்.

இரச்வரோமன்

சுவர்ணரோமன் குமரன்.

இரட்சிதை

ஒரு அப்சரசு.

இரட்டைக்கிளவி

இரட்டைச் சொற்களவ்விரட்டையினின்று பிளவுபடாதது

இரட்டைச்செக்கர்

வாணியரில் ஒருவகையோர். (தர்ஸ்டன்)

இரட்டையர்

கவிவல்ல தெய்வப் புலவர். ஒரு வேளாளன் தன் மனைவியுடன் புத்திரப்பேறு வேண்டிச் சிவபணி செய்து வந்தனன் சிவமூர்த்தி தவசிபோல் வந்து உமக்கு என்ன வேண்டும் என்றனர். அவ்விருவரும் குணமும் கல்வியும் ஒத்த இரு குமரர் வேண்டும் என்றனர். ஆயினும் உறுப்புக் குறையில்லாத குமரரைக் கேட்கிலர், ஆதலால் பூர்வம் அச்வினி தேவர் வேண்டுகோளின்படி சிவமூர்த்தி அவர்களை இவர்களுக்குப் புத்திரரா யுதிக்கச் செய்தனர். இவர்கள் பல சமஸ்தா னங்கள் சென்று, எது தரினும் வேண்டாது ஒரு பணம் மாத்திரம் பெற்றுச் செல்வர். இவர்களில் இளையவர் அந்தகர், மூத்தவர் முடவர். இவ்விருவரும் தெய்வத் தருளாற்றமிழில் வல்லமைபெற்று அந்தகர் முடவரை முதுகிற் சுமந்து பல தலயாத்திரை செய்து வருவர். இவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் எனப்பட்ட பெருங்கவிப் புலவர்கள் எனவும், திருவக்கையிலிருந்த ஆட்கொண்டான் எனப் பெயரிய கொங்கராயன் காலத் திருக்தவர்கள் எனவும், அக்கொங்கராயனாலும் கச்சியிலிருந்த சம்பராயனாலும் நன்று போற்றப்பட்டவர்கள் எனவும், திருவா மாத்தூர்க் கலம்பகம் பாடினார்கள் எனவும், திருவண்ணாமலைச் சம்பந்தன் சொன்ன சமுத்தி பாடினார்களெனவும் ஆறுவிலகப் பாடினார்க ளெனவும், வறுமைமிகுத்துக் குன்றும் வனமுங்கடந்து போய்ப் பிறரைப் புகழ்ந்து பாடி வாணாள் கழித்தனர் எனவும் தமிழ்நாவலர் சரிதையால் அறியலாவன, ‘கலம்பகத்திற் கிரட்டையர்கள்’ எனப் பிற்காலத்தார் பாடியது. இவர்களியற்றிய திருஆமாத்தூர்க் கலம்பகம் பற்றியே யாமெனத் தோன்றுகின்றது. ஒரு செய்யுளை ஒருவர் பாதியும் மற்றொருவர் பாதியுமாகப் பாடி முடிப்பார்கள் எனவுங் கூறுவர். இரட்டையர் திருவக்கைக் கொங்கராயன் அசனம் இடுவித்தபோது பாடிய கவி “சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயன்றமிழ்க்கொங்கர் கோன், பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகபாதி பக்கத்திலே, ஊணுக்கு வாரா திருப்பாய் விருப்பாகி யுயர்வானிலே, வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வெண்டிங்களே” திருவண்ணாமலைச் சம்பந்தன் சமுத்தி பாடச்சொன்னபோது பாடியது, “மன்னு திரு வண்ணா மலையிற்சம் பந்தனுக்குப், பன்னு தலைச்சவரம் பண்ணுவ தென் மின்னி, னிளைத்த விடை மடவா ரெல்லாருங்கூடி, வளைத்திழுத்துக் குட்டாமலுக்கு,” சம்பராஜன் விகடசமுத்தி பாடச்சொல்லப், பாடியது, ”எறிக்கும் புகழ்க்கச்சி யேகாம்பரன் சம்பனெண்டி சைக்கும், பொறிக்கும் புலிக்கொடி, யான் புயம் வேட்டபின் பூவையன்னாள், வெறிக்குங் குமக்கொங்கை மீதே விழிசொரி வெள்ளந்துள்ளித் தெறிக்குந்துவலை பழிக் குஞ்சிந் தூரத் திலகத்தையே. ” படை வீடு முற்றியிருந்த பாண்டியனுக்குப் பாடியது. ”காற்றா லலைப்புண்டு கண்ணன் கடல்கடைந்து, மேற்றானெடுத்து வளைத் தெய்து மாற்றாத, செம்பொன் மலையில் லைச் சேலுக் கிடங் கொடுக்கச், சம்பன் மலைகைக்குவா. ” ஆறு விலகிய பாட்டு, “ஆற்குழையோ வரவோ வாயர்பாடி யருமனையோ, பாற்கடலோ தம்பமோதங்கு மாவம் பலபல்வா, மாற்கமு மாகி நின் றார்மாதை நாதர் வலங்கொள் பம்பை, மேற்கரை கோயில் கொண்டார்புரஞ் சீறியவெங்கணைக்கே. ” திருவாமாத் தூர்க் கலம்பகம் பாடச்சொன்ன போது பாடியது. தொல்காப்பிய தேவர் சொற்ற தமிழ்ப் பாடலன்றி, நல்காத் திருச்செவிக்கு நாமுரைத்த தேறுமோ, மல்காப் புனறதும்ப மாநிலத்துக் கண்பிசைந்து, பல்காற் பொருளழற்கும் பாற்கடலொன் நீந்தார்க்கே. ” காட்டு வழியிற் போகும் போது இளஞ்சூரியர் வினாவுக்கு முது சூரியர் விடைகூறியது. “குன்றும் வனமுங் குறுகி வழிநடந்து, சென்று திரிவ தென்றுந் தீராதோ வொன்றுங் கொடா தாரைச் சங்கென்றுங்கோ வென்றுஞ் சொன்னா, லடாதோவதுவே யிது. ” இவ்விருவரும் தலயாத்திரையால் வருந்திப் பசித்துன்பத்தால் ஆங்கூர் சிவாலயத்திற் சிவதரிசனஞ்செய்து நீங்குகையில் இவ் விருவரில் தமயனார் ‘தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனேயல் லாளியப்பா, நாங்கள் பசித்திருக்க நியாயமோ” என்ன, மற்றொருவர் போங்கானும் ” கூறு சங்குடோன் முரசு கொட்டோசை யல்லாற். சோறு கண்ட மூளியார் சொல்” என நீங்கி வேறொருவனைப் பாடி அவன் செய்யுளின் அருமை யறியாதவனா சுலால், மூடர் முன்னே பாடன் மொழிந்தாலறிவரோ,” என வசைபாடி நீங்கி, மாங்காடடைந்து அவ்விடமிருந்த வேளாளன், சற்றுப் பரா மரிக்கையாய் மகளுடன் ஊர்விட்டு மரு மகனிடம் நீங்குகை கண்டு மாங்காட்டு வேளாளன் மகளை மருமகன் பால், போங் காட்டி. லின்பம் புணர்ந்தானே, அங்காணும், மக்கண் மெய் தீண்டல் உடற்கின்ப மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” எனப் பாதி வெண்பா ஒருவர் பாடு தல்கண்ட வேளாளன் பயந்து பணிந்து உபசரிக்க, மற்றவர் மற்றப்பாதி வெண்பா வைத் துதியாகப்பாடி நீங்கினர். இவர்கள் திருவாரூர் சென்று நாணென்றால் நஞ்சி ருக்கும் நற்சாபங்கற்சாபம்” என மதிலிலெழுதி வெண்பா முடிக்காது சென்று பலதல யாத்திரைகள் செய்து மீண்டும் அத்தலத்திற்குவந்து எழுதிய வெண்பா வைக்கண்டு ‘பாணந்தான் மண் தின்ற பாணமே தாணுவே, சீராரூர் மேவுஞ் சிவனே நீயெப்படியோ நேரார்புரமெரித்த நேர்” என முடித்திருத்தல் கண்டு காளமேகப் புலவரால் முடிந்ததென்றறிந்து அவரைக் காணச் சென்று, அவரன்றைக்குச் சிவபதமடைந்து வேகுதல் கண்டு ஆசு கவியாலகிலவுல கெங்கும் வீசு புகழ்க்காள மேகமே பூசுரா, விண் கொண்ட செந்தழலாய் வேகு தேயையையோ, மண்டின்ற பாணமென்றவாய்” எனப் பாடி விசனமடைந்து நீங்கிக் காஞ்சி ஏகாம்பரநாதர் மீது, எகாம்பரர் உலாப்பாடிப் பல்லவராயன் சமஸ்தானத்தில் அரங்கேற்றுகையில், முதல் வெண்பாவில் ஆயிரக்கால் மண்டபம் விகடசக்கர விநாயகர் எனக் கூறியதால் அரசன் இல்லாததைக் கூறினீர் எனப், புலவர் அரசனை நோக்கி நாமுமறியோம் அவளும் பொய் சொல்லாளென்று பிரசங்கித்துப் பரிசு பெற்று நீங்கினர். சில நாள் தரித்துப் பல்லவன் கோபுரத் திருப்பணி செய்ய அங்கிருந்த மண்மேட்டை நீக்க, அவ்விடம் ஆயிரக்கால் மண்டபத்தையும் விகடசக்கர விநாயகரையுங் கண்டு வியப்படைந்து உலாவுக்குத் தெய்வீக உலாவென்று பெயரிட்டனன். இவர்கள் சிலாக்ஞையால் திருவாமாத்தூர் சென்று ஆமாத்தூர்க் கலம்பகம் பாடி அங்காட்டாசன் சமஸ்தானத்துப் பிரசங்கிக்கத் தொடங்கி முதற்செய்யுளில் திருமால் துயர் தீர்த்தானுக்குப் பம்பையாற்றுக்கு மேற்கில் ஆலயமிருக் கிறதெனக் கூறினர். இதைக்கேட்ட அந் நாட்டுப் புலவரும் அரசனும் இது பொய்யென நகைத்த துணர்ந்து இது திருவருளின் செயல் இது உண்மைப்படினன்றிப் பிரசங்கிக்கோமென்று நிறுத்தினர். அன்றிரவு பெருமழை வருஷித்து, பம்பை வெள்ளங்கொள்ள ஆற்றிற்கு மேற்குக் கரையிற், கோவில் தோன்றியது. அரசனும் மற்றப் புலவரும் மகிழ்ந்து வியப்படைந்து புலவரை வணங்கிப் பிரசங்கங் கேட்டுப் பொருள் தருகையிலிரட்டையர் பொருள் பெறாது எமக்கு அவமானம் வராது காத்தான் காப்பன் என நீங்கினர். இவர்கள் இயற்றிய நூல்கள் தில்லைக் கலம்பகம், கச்சியுலா, கச்சிக்கலம்பகம், திரு ஆமாத்தூர்க் கலம்பகம், பல தனிப் பாடன் முதலியன. இவர் காலம் வக்க பாகை வரபதியாட்கொண்டான் எனும் கொங்கர் குலபதிகாலம். வக்கபாகைநடு நாட்டின் கண்ணது. இற்றைக்கு (450) வருஷங்களுக்கு முன்னாயிருக்கலாம்.

இரண மோசனம்

அனுஷமாதல், வியாதிபாதயோகமாதல் உத்திரட்டாதியாதல் இந் நாட்களுடனே இருத்தைகளாதல் வியாழக்கிழமை, சனிக்கிழமையாதல், குளிக னாதல் சனியங்கிசம், மகரம், கும்பம், உதயமா தல்வாப் பூருவபக்கத்துச் சந்தி ரோதயமான காலத்துப் பகலிலே தனிசு வாங்கின பொருள் கொடுத்துச் சீட்டுக் கிழிப்பது. (விதான மாலை)

இரணஞ்சயன்

(சூ.) தனஞ்சயன் குமரன்.

இரணபேரிகை

அது யானை முரசம், ஒட்டகமுரசம், போர் தொடுக்க அறைதல் யானைமுரசு, போர்விடுக்க அறைதல் ஒட் டகமுரசு.

இரணமத்தன்

இராவணசேநாபதி. இவன் பெயர் கேட்டமாத்திரத்திற் பகைவர் ஒடுங்கும்படியான வலியுள்ளவன்.

இரண்டாம்நாள்

பாண்டவர்க்குத் திட்டத்துய்ம்மன் சேநாபதியாகித் துரோணருடன் எதிர்த்துப் போரிட்டுப் பின்னிடையக் கண்டவீமன் எதிர்த்துச் சேனைகள் பின்னிடையச் சாடுசையில் கவிக்கராஜன் யானைச் சேனை களுடன் யுத்தத்திற்கு வர அவனையும் அவன் குமாரர்களையு மடித்து வீஷ் மரை எதிர்த்து அவர் தேர்ச்சாரதியின் தலையை உடைத்துச் சேனைகளைச் சங்கரிக்கையில் அபிமன்யுவுடன் வந்து சேனைகளைப் பின்னிடச் செய்தனன். சூரியன் அஸ்தமனமாயினன்,

இரண்மயன்

அக்கினியித்திரனுக்குப் பூர்வசித்தியிட முதித்தகுமரன். தேவிசநதை.

இரண்ய அச்வதானம்

(1008) அல்லது (108) கழஞ்சு பொன்னால் ஒரு குதிரை செய்வித்து, வெள்ளியினால் முகமுங் காலுமமைத்து அலங்கரித்து, வேதம் நன்றாக அறிந்த வேதியனை அழைத்து அவனை இந்திரனாகப்பாவித்து (5) கழஞ்சு பொன், தக்ஷினை வைத்து வேதியர்க் குணவளித் தளித்தலாம். இதைச் செய்தவர் சுவர்க் காதிகளை அடைவர்.

இரண்ய இடபதானம்

முகமுங் கொம்பும் வெள்ளியாலும் வால் கழுத்து முசிப்பு இவைகளுக்குப் பதுமராகம், கோமேதகம், முத்து இவைகளைப் பதிப்பித்து, பொன்னாலிடப் வுருச்செய்வித்து, படிகத்தாற் பிறை செய்து கழுத்திலணிந்து முத்துக்களாற் பலவணிகள் செய்திட்டுக் கிழக்கு நோக்கவைத்து வேதியர்க்குத் தக்ஷிணையுடனளித்து அமுது செய்வித்தலாம். இவை செய்தவர் சுவர்க்காதிபோக மடைவர்.

இரண்ய பூதானம்

ஒரு துலாம் பொன்னிலாவது அல்லது அதிலரைப் பாகத்தா லாவது சதுரத்தகடு செய்வித்து, அதில் சத்த தீவுகள், எழுகடல்கள், குலாசலங்கள், நதிகள், மேரு, வருஷங்கள், விருகங்கள் முதலிய அமைப்பித்து, ஓமமுதலிய சடங்குகள் முடித்து, பஞ்சகவ்ய பூசை தகட்டிற்குச் செய்வித்து வேதியர்க் கன்ன தானஞ் செய்வித்துத் தகட்டை உத்தமனாகிய வேதியனுக்குத் தானஞ் செய்தலாம். (ஸ்ரீலைங்கபுராணம்.)

இரண்யகசிபு

காசிபருக்குத் திதியிட முதித்த அசுரன். இவன் மூத்தவன், இவனது கனிஷ்டன் இரண்யாக்ஷன். இவர்களிருவரும் வைகுந்தத்திலிருந்த துவாரபாலகர். சநந்தனாதிகளின் செல்லுகையைத் தடுத்துப் பூமியிற் பிறக்கச் சாபம் பெற்றுப் பிறகு விஷ்ணுமூர்த்தியை வேண்ட அவர் நம்மிடம் பகைவராலீரேல் மூன்று பிறவியில் வைகுந்த மடைவீர்கள் என அவ்வகையே அசுரர் முதலியவராகப் பிறந்தவர்கள் இவர்கள், முதற்பிறப்பில் இரண்ய கசிபு. இரண்யாக்ஷன். இரண்டாவது இராவணன், கும்பகர்ணன், மூன்றாவது சிசுபாலன், தந்தவக்கிரன். திக்குவிஜயத் அலவனுவேதில் விஷ்ணுமூர்த்தி இவன மூக்கில் ஒளித்து மறைந்தனர். இவன் பாரி தியாதி, குமரர் அறுகிலா தன், சமகிலா தன், கிலா தன், பிரகலாகன்; குமரி சிம்மகி, இவர்களுள் முதலில் விஷ்ணுமூர்த்தியால் தம்பியாகிய இரண்யாக்ஷன் கொல்லப்பட, இரண்யகசிபு விசனமுற்றுப் பிரமனை நோக்கித் தவம் புரிந்து எங்கும் எவராலு மிறவா வரம்பெற்றுத், தவ வன்மையாற் றேவர் இருடிகளை வருத்திவந்தனன். இதனாற் றேவர் முதலியோர் விஷ்ணுமூர்த்தியை வேண்டினர். அசரீரி அவர்களை நோக்கித் தேவர்களே இவனுக்கு நான்கு புத்திரர்; அவர்களுள் பிரகலாதன் என்பவனிடம் இவனுக்கு எக்காலம் பகைமை யுண்டாகிறதோ அக்காலம் அவனுக்கு மரணம் நேரும் என்றது, அதனைக் கேட்ட தேவர்கள் சமயம் பார்த்திருந்தனர். இவன், பிரகலாதனிடம் பகைமைபூண்டு நரசிம்மமூர்த்தியாற் கொல்லப்பட்ட செய்தியைப் பிரகலாதனைக் காண்க. இவன் போர் கும்பன், நிருபன், விரோசநன். (பாகவதம்) நரசிங்கபுராணம்.

இரண்யகன்னிகாதானம்

ஒரு பிராமணக் கன்னிகையைத் தந்தையரிடம் விலைக்கு வாங்கி, அவளைப் பொன்னாலும் ஆடையாலும் அணிந்து பிரமசாரிக்குத் தீமூன்னர்ப் பாணிக்காகணஞ் செய்வித்துப் பூமி முதலிய தானஞ்செய்து வேயதிரை அருத்துவதாம்.

இரண்யகருப்பமதம்

இதனைப் பிராணாத்ம வாதிமத மெனவுங் கூறுவர். சேகத்தில் செவி, கண், வாக்கு முதலிய இந்திரியங்கள் குறைந்தகாலத்தில் முறையே செவிடு, குருடு, மூங்கை உண்டாயினும் தேகமாத்திரம் இருக்கும். பிராணமில்லையாயின் தேகநாச பண்டாகிறது. ஆகையால் ஆத்மா இந்திரியாதிகளுக்கு வேறென்பர். இவர்கள் பிராண கீக்கமே மரணம் ஆதல் பற்றிப் பிராணனே ஆத்மா என்பர்.

இரண்யகற்பதானம்

பொன்னினால் மனிதன் புகத்தக்க ஒரு குடம் விதிப்படி செய் வித்து, யாகவேதிகையிவிருத்திப் பூசித்து அதில் யஜமானன் புகுந்து கிழக்காயிருக் குங்காலையில் கருப்பா தானம், சீமந்தம் முதலியன செய்து, வலப்பால் அறுகும் அத்திப்பழத்தையும் பிழிந்து, பின் புருஷன் குடத்தினின் றெழுந்த பின்பு சாத கர்ம முதலியன செய்வித்து வேதியர்க் கமுதளித்து, முப்பதுகழஞ்சியிற் பெண்ணுருச் செய்வித்து ஆலயத்திற்கு அதைத் தானஞ்செய்து குடத்தையும் மற்றுள்ள அதிக பொருள்களையும் வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்.

இரண்யகற்பன்

1. தமோசிருட்டி செய்து விட்டவுடல் நீங்கி வேறுடல் கொண்டு பிரமன் பெற்ற பெயர். 2. இரண்யமயமான அண்டத்திற் பிறந்தவனாகையாற் சூரியனுக்கு ஒரு பெயர். 3. கேதாரம் தரிசித்து முத்தியடைந்த ஒரு பாசுபதன். 4. காசியிலிருந்து அகமபரமவாதங் கூறிக் காலவயிரவரால் தண்டிக்கப்பட்ட ஒரு மடாதிபதி. (காசிரகசியம்).

இரண்யகற்பேசம்

காசியிற் பிரமனால் பிரதிட்டை செய்து பூசித்த சிவலிங்கம்.

இரண்யகேசன்

சியாமகனுக்குச் சூரபூமியிட முதித்த குமரன்.

இரண்யதனு

ஏகலைவனது தந்தை,

இரண்யநாபன்

1. (சூர்) விவச்வகன் குமரன். இவன் யஞ்ஞவல்கிய முனிவரிடம் யோகம் உணர்ந்தவன். சுகவர்மாவின் மாணாக்கன் எனவுங் கூறுவர். 2. (சூ.) துர்த்தி குமரன். இவனிடம் யஞ்ஞவல்கிய முனிவர் அத்யாத்மயோகம் பெற்றனர். இவன் குமரன். பாஷ்யன்.

இரண்யன்

சூரபன்மனுக்குக் குமரன். இவன் நீதிமான். தந்தைக்குக் குமாரக் கடவுளுடன் போர் செய்யாதிருக்க நீதி கூறத் தந்தை கோபித்த தறிந்து வீரவாகு, சிங்கன், நீலன் முதலியோருடன் போரியற்றி வீரவாகுதேவர் எவியப்படைக் கஞ்சியும், தந்தைக்குத் திலதர்ப்பணம் முதலிய செய்யவும் மீனுருக்கொண்டு கடலில் ஒளித்துச் சூரபன்மன் இருபிளவு பட்ட பின்பு கடலினின்று வெளிப்பட்டுத்துக்கித்து அவற்குச் செய்யவேண்டிய நீர்க கடனை ஆசாரியரைக்கொண்டு செய்வித்துத் தவமேற்கொண்டவன். (ஸ்காந்தம்.)

இரண்யபிந்து

ஓர் நதி.

இரண்யபுரம்

நிவாதகவச காலகேயர் பட்டணம்.

இரண்யரேதஸ்

பிரியவிரதனுக்குப் பெரிஹிஷ்மதியிட முதித்த குமரன்.

இரண்யரோமன்

1. ஐந்தா மன்வந்தரத்து ருஷி 2. உலகபாலகர் நால்வரி லொருவன்.

இரண்யழட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

நன்னன்மீது மலைபடு கடாம் அல்லது கூத்தராற்றுப்படை பாடிப் பரிசுபெற்ற புலவர். இவரது ஊர் இரண்யமுட்டத்துப் பெருங்குன்றூர்போலும். இவர், சௌசிக ரென்றதனால் அந்தணராயிருக்கலாம்.

இரண்யவன்மன்

1. ஓர் இருடி. 2. சிங்கவருமனைக் காண்க.

இரண்யவர்மன்

தசாரணவ தேசாதிபதி. சிகண்டி பின் சுற்றத்தான்.

இரண்யஸ்தூயன்

அங்ரேசன் சந்ததியான். ஓர் இருடி.

இரண்யாக்ஷன்

1. காசிபருக்குத் திதியிடமுதித்த குமரன். இவன் சகோதரன் இரண்யகசிபு. இவர்கள் வைகுண்டத்திலிருந்த துவாரபாலகர்களாகிய சய, விசயர், சனந்தனாதியர் சாபத்தா லிப்பிறப் படைந்தனர். இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிக்க விஷ்ணுமூர்த்தி சுவேதவராகவுரு கொண்டு கொம்பினா விவன்மார்பைப் பிளந்து பூமியைப் பழமைபோல் நிறுத்தினர், (நாரசிங்க புராணம்) 2. யதுவம்சத்துச் சியாமகன் குமரன். தாய் சூரபூமி. 3. இவன் பிரமனது இடது நாசிக் கண் தோற்றிப் பூமியை அபகரித்துச் சென்ற அசுரன். இவனை விஷ்ணு மூர்த்தி பிரமனது மூக்கினின்று நீலவராகராகத் தோன்றிக் கொலை புரிந்தனர். இவனுக்கு ஆதியிரண்யாக்ஷன் எனப் பெயர். (திருமுஷ்ட~புராணம்)

இரண்யாததானம்

பொன்னால் துலைக்குச் சொன்ன அளவில் தேர்செய்வித்து, அதிற் சுற்றித் தேவர்க் கிருக்கையமைத்து 8, 4, 2 பொற் குதிரைகளைப் பூட்டி இடையிற் சூரியனை எழுந்தருளச் செய்வித்து மான் தோலில் எள்ளைப் பரப்பித் தேரில்வைத்து வலஞ்செய்வித்து வேதியர்க்குத் தானஞ் செய்தலாம். (புராணம்.)

இரண்யாஸ்தன்

ஒரு ரிஷி புத்திரனாகிய மகரிஷி, பாரியை மதிராசுவன் புத்திரி யாகிய சுமத்தியமை. (பா~சா~அநு.)

இரண்வதி

குருக்ஷேத்திரத்திற்கு அருகிலுள்ள ஒரு நதி.

இரதகாரன்

அரசன் சோரத்தால் அரச கன்னிகையைக் கூடிப் பெற்ற குமரன்.

இரதசப்தமி

இது சூரியனது பதம் உத்தராயணத்திற் றிரும்புங்காலம். இக்காலத் திற் சூரியனை எண்ணிப் பலகாராதிகள் செய்து நிவேதிப்பர்.

இரதநூபுரம்

ஒரு வித்தியாதர நகரம். (சூ.)

இரதந்தரி

இளீனன் பாரியை இவள் புத்திரர். துஷ்யந்தன், சூரன், பீமன், பிரவசு முதலானவர்கள். (பா~ஆதி.)

இரதபதி

சித்தூரை ஆண்ட இராஜபுத்ர அரசர்களில் ஒருவன். இவன் கி. பி. 1201 இல், பட்டமடைந்து மாண்டாரா நாட்டின் மீது படையெடுத்து அதைக் கைக் கொண்டான். சிசோதா எனும் பட்டணத்தைக் கட்டினவன் இவனே. இதனால் மீவார் நாட்டு இராஜபுத்ரர் சிசோதயர் எனப்பட்டனர்.

இரதமகாராஜன்

(சூர்.) தீர்க்க பாகுவின் குமரன், இவனது குமாரன் அஜன். இவன் விச்வசித் என்னும் யாகஞ்செய்து வறியனாய் இருக்கையில் கவசர் என்ற ஒரு வேதியர் இவனிடங் குரு தஷிணைக்காக வந்தார். அரசன் எதிர்கொண்டு மட்பாத்திரத்தாற் கால் கழுவ நீர் தந்ததைக் குறிப்பால் அரசன் யாகஞ்செய்ததால் வறுமையடைந் தனனென்றுணர்ந்து திரும்புகையில் அரசன் வேதியரை மறுத்து வந்தகாரியம் வினாவினான். வேதியர் நான் குருதக்ஷிணையாகப் பதினான்கு கோடி பொன்பெற வந்தனன். நீ மட்பாத்திரத்தால் நீர் தந்த நிலையறிந்து செல்கின்றேன் எனக்கேட்டு அரசன் பிராமணரை இருத்திக் குபேரனிடம் யுத்தத்திற்குச் செல்லத் துணிந்தனன். குபேரனிதையறிந்து அரசன் பொக்கிஷத்தை நிரப்பினன். இதனை வேவுகாரராலறிந்த அரசன் வேதியரைத் திருப்தி செய்தனுப்பினன்.

இரதம்

இது பல சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலிய உறுப்புக்களா வாக்கப்பட்டு இரண்டு முதலிய பல குதிரைகளா விழுக்கப்படுவது.

இரதவாகனன்

விராடன் உடன் பிறந்தவன். (பா~துரோண).

இரதி

1. இவள் இல்லாத இடத்துச் சந்தோஷமில்லாததனால் இப்பெயர் அடைந் தனள். மன்மதன் தேவி, பாற்கடலிற் பிறந்தவள். மன்மதன் தேவரேவலால் தன் வலிமையைச் சிவமூர்த்தியிடங்காட்டி யவரால் நீராயினன். அதனா லிரதி சிவ பெருமானை நோக்கி இரக்க, உன் புருடன் உனக்கு மாத்திரம் உருவமாகவும் மற்ற வர்க்கு அரூபியாகவும் சில நாளிருந்து, கிருஷ்ணனிடம் அவன் பிறக்குங்காலை யில் உருவத்துடன் உன்னிட மிருப்பனென வரம்பெற்றவள். மனுவின் குமரி யெனவுங் கூறுப. சம்பராசுரன் மனையிற் பிறந்து மன்மதனை மணந்தவள். (பூவாளூர்ப்ப ராணம்.) 2. இவள் மயன் வீட்டில பிறந்திருக்கையில் சம்பான் என்னும் அசுரன் இவளைப் பலாத்காரமாகக் கொண்டு போக இரதி தன்னைப்போல் மாத்தாற் பதுமை செய்வித்து அதனை அலங்கரித்துப் பிராணப் பிரதிஷ்டை செய்து தான் பிரத்தியும் நனை அடைந்தனள், சம்பரன் பொய்ப் பிரதிமையுடன் இன்பம் அது பவித்திருந்தனன். (சிவமகாபுராணம்.)

இரதிகன்

ஜயத்சேநன் குமரன்.

இரதிதன்

(சூ) பிரஷதசவன் குமரன், இவனுக்குப் புத்திரரில்லாமையாலிவன் தேவியிடத்தில், ஆங்கிரசர் புத்திரோற்பத்தி செய்தனர். அவர்களே தீதகோத்திரத் தவர்கள். ஆங்கீரசப்பிராமணர்கள்.

இரதிமுகன்

கத்ரு குமரன் நாகன்.

இரதீத கோத்திரம்

இரதிதனைக் காண்க.

இரதீதரன்

சூ. இக்ஷ்வாகு வம்சத்தரசனாகிய அம்பரீஷன் புத்ரன்.

இரதை

பிரசாபதியின் மனைவி. குமரன் நகு.

இரதையன்

திருதராட்டிரனுக்குச் சாரதி, என்னவாப் பேழையிற் கங்கையினிடம் கண்டு எடுத்து ஆகாயவாணி சொற்படி கன்னனென்று பெயரிட்டவன்.

இரத்தகற்பம்

இது முப்பதாவது கற்பம். இதிற் பிரமன், சிவபெருமானை எண்ணித் தவம்புரிந்து நான்கு முனிவரை உதவப்பெற்றனன்.

இரத்தக்கண்ணன்

(அர) இராவண சேநா வீரருள் ஒருவன் மகர்க்கண்ணனுக்குத் துணையாக வந்தவன். நளனென்னும் வாநாவீரனாற் கொலை செய்யப்பட்டான். இவனுக்குக் குருதிக்கண்ண னெனவும் பெயர். (இராமாயணம்.)

இரத்ததூணம்

(4) இராசியும், (8) பாகையும் வைத்ததிலேயற்றைச் செவ்வாயுடைய சுத்த புடத்தைக் களைந்து நின்றதனை, நாள் பார்க்கும்படியே பார்த்தால் அற்றை நாளுறில் அந்நாள் இரத்த தூண மென்று பெயராம். இந்நாள் சுபகன்மங் களுக்காகாது. (விதான.)

இரத்தபித்தரோகம்

இது, ரத்த விருத்தியனாலும், ரத்தக் கெடுதியினாலும், வாதாதிக ளின் கூட்டத்தினாலும் வெளிப்பட்டு அபாயத்தைத் தருவது. ரத்தத்திற்குத் தூர்க் கந்தமின்றிச் சுபாவகந்தமாகவும், சுபாவ வன்னமின்றி ரத்தம் மாறுவர்ணமாகவும் இருப்பதாலிதற்கு இப் பெயருண்டாயிற்று. இந்த ரத்தம் இருதயத்திற்கு இட வலப் புறங்களிலுள்ள மாமிச கண்டத்திலிருந்து வரும். இது தேகத்திலுள்ள கண், காது, மூக்கு, வாய், ஆண்குறி ரோமம், மலத்வரரங்களின் வழியா வெளிப்படும். இவ்விரோகம் தலைப்பாரம், அரோசகம், தேககறுப்பு, வாயின் ருசி வேறுபடல், கண்ணினிறமாறல் முதலியவற்றைப் பூர்வரூபமாகப்பெறும். (ஜீவ)

இரத்தபீசன்

சும்பரிசும்பருக்கு மருமகனாகிய அரக்கன். இவன் தன் உதிரம் எவ் வளவு பூமியில் விழுமோ அவ்வளவு கோடி அரக்கர்கள் பிறந்து பகைவரைக் கொல் லும்படி வரம்பெற்றவன். இவனைக் காளி ஒரு துளி உதிரமும் பூமியில் விழாமல் உதிரத்தையுண்டு கொன்றனள். (தேவி பாகவதம்.)

இரத்தமாடியுடையான்

காஞ்சியிற் காமாக்ஷி சந்ததியில் பலியிடக்கொண்டு சென்ற குசப்பெண் வயிற்றிற் பிறந்த குசவன். (குவால் புராணம்.)

இரத்தம்

இது, தேகத்தை மரத்திற்கு நீர் போன்று வளர்க்கும் திரவப்பொருள், இது, நரம்புகளின் வழியாய்த் தேசமுழுதும் வியாபித்திருக்கிறது. இப்படி வியாபிப்பதற்கு இருதயமே மூலம். இது, இருதயத்திலிருந்து பெருங்குழாய், நடுத்தரமான குழாய், சிறுகுழாய்களாகப் பிரிந்து ஏற்றவிறக்கமாகப் பாய்ந்து தேகத்தைப் போஷிக்கும். இருதயம்: இது, ஆழ்ந்த சதைத் பேதரிக்காய்ப் போன்ற உறுப்பு. இதுவே இரத்தவோட்டத்திற்கு மூலம். இதில் மரணம் வரையில் இரவும் பகலும் இடைவிடாது வேலை செய்யும் குழாய் ஒன்றுண்டு. இது, ஒரு மெல்லிய ஜவ்வு போன்ற மூடியால் சுற்றப்பட்டிருக்கிறது. இருதயம், மார்பினிடையில் மார்பெலும்பின் பின்னும், வல இடங்களிலுள்ள இரண்டு ஆசயங்களுக் கிடையிலுமிருக்கிறது. இது, சற்றேறக் குறையப் (5) அங்குல நீளமும், (3 1/2) அங்குல அகலமும், (2 1/2) அங்குல கனமுள்ளதாக இருக்கிறது. இதில் (4) அறைகள் உண்டு. (2) மேலும், (2) கீழுமாக இருக்கும். இரு மேலறைகளுக்குச் சிரவம் எனவும், இரு கீழறைகளுக்கு ஜடாம் எனவும் பெயர். வல இடப்பக்க அறைகளுக்கு இடையில் தடித்ததசைச் சுவரிவற்றைப் பிரிக்கிறது. இருதயத்தின் வலப்பக்கத்தில் கறுத்த இரத்தமும், இடது பக்கத்தில் சிவந்த இரத்தமும் இருக்கும். இரு சிரவங்களிலுள்ள இருவகை ரத்தங்களும் ஜடாங்களில் விழும்படி ஒவ்வொரு சிரவத்தினடியிலும் பெரிய துவாரம் அமைந்துள்ளது. ஜடாம் அடைந்த உதிரம் மீண்டும் சிரவத்தித்துப் போகவொட்டாமல் தடுக்கச் சிரவங்களினடியில் ஜவ்வு கபாடங்கள் உண்டு. இருதயத்திலிருந்து இரத்தம் ஓடுகையில் இரத்தத்தை வெளிப்படுத்தலும், அடக்கலுமாகிய இத்தொழிலே இருதயத் துடிப்பாம். இந்த இருதயத்துடிப்பே நாடிநடை, இது, அந்த ஓசையில் மிகினும் குறையினும் நோயைக்காட்டு.

இரத்தாக்ஷன்

கத்ரு தநயன் நாகன்.

இரத்தினகண்டன்

அசுவகண்டன் மக்கள் நூற்றுவரில் மூத்தவன். (சூளா.)

இரத்தினங்கள்

வயிரம், முத்து, பவழம், கோமேதகம், இந்திரநீலம், வைடூரியம், புட்பராகம், மரசதம், மாணிச்சம். இவை நவமணிகளாம். வைரம் எல்லாவற்றினும் சிறந்ததாம். கோமேதகமும், பவழமும் எல்லாவற்றினும் தாழ்ந்தனவாம். மரகதமும் மாணிக்கமும், முத்தும் தலையாய மணிகளாம். இந்திரநீலமும், வைடூரியமும் இடையாயமணிகளாம். இந்த இரத்தின பகள் சருக்கராபம், சிபிடம், தளாபம், வருத்துலம் என (4) வகைப்படும். சருக் கராபம் சுக்கான் கல் போல்வது, சிபிடம் அவல்போலிருப்பது, தளாபம் நீண்ட உருவுள்ளது, வர்த்துலம் உருண்டை வடி வுள்ளது, (சுக்~நீ.)

இரத்தினசாநு

மேருவிற் கொருபெயர்.

இரத்தினசூடன்

சங்கசூடன் புதல்வன். இரத்தினாவலிக்குப் புருஷன்.

இரத்தினதீபன்

இரத்தினாவவியைக் காண்க.

இரத்தினதீவகம்

இது மணிப்பல்லவத்திற்கு அயலிலுள்ள ஒரு சிறு தீவு. இதில் புத்தருடைய பாதப்படிமை அமைக்கப் பட்ட ஒரு மலை உண்டு. இதுவே இலங்கை. அம்மலைக்குச் சமனொளி எனப் பெயர். (மணிமேகலை.)

இரத்தினதேனுதானம்

வேதிகை செய்வித்து அதில் வெள்ளுப்புப் பரப்பி அதில் கன்றினுடன் பசு எழுதி மூக்கில் ஏறு புட்பராகம், முகத்தில் (81) பதுமராகம், நெற்றியில் முத்து, பொற்பட்டம், கண்களில் நூறு முத்துக்கள், கழுத்தில் நூறு கோமேதகம், முதுகில் நூறு நீலம், இரண்டு பக்கங்களில் நூறு சீவரத்தங்கள், பற்களுக்குப் பளிங்கு, வாலில் நூறு முத்துகள், அரையில் நூறு மாணிக்கம், பொன் னாற் குளம்பு, மூக்கில் சூர்ய சந்திரகாந்தி கற்கள், வெள்ளியால் நாபி, சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியவைகளால் உரோமகூபங்கள் செய்வித்துக் “கருடப் பச்சை தன்னாற் கால்களமைத்து, சந்திக ளினவமணிகள் பதித்து, கற்கண்டிற் கோமய மமைத்து நெய்யைக் கோசலமாக *வைத்து, கன்று மிவ்வாறமைத்து, காலில் கவடிகட்டி, இடங்கள் தோறும் நெல் முதலிய குவித்து வேதிகையிற் பூசைமுதலிய செய்வித்து வேதியர்க் கருத்தித் தஷிணையுடன் தானஞ் செய்வதாம். (ஸ்ரீலைங்கபுராணம்.)

இரத்தினபல்லவம்

ஒரு வித்தியாதர நகரம்.

இரத்தினபுரம்

காந்தார நாட்டிலுள்ளதொரு நகரம். பெருங்கதை.

இரத்தினமாலை

நீலன் பாரி

இரத்தினாவதி

ஆநர்த்த தேசாதிபன் குமரி, இவள் சிவ பூசையால் சித்தியடைந்தவள்.

இரத்தினாவலி

1, இவள் பூர்வசன்மத்திற் கலாவதியென்னுங் கூத்தி. சிவபூசையால் வசுபூதி யென்னுங் காந்தருவன் மகளாகப் பிறந்து, இரத்தினேனென்னுஞ் சிவ மூர்த்தியைப் பூசித்து வருகையில் சிவமூர்த்தி, உன் பெயர்கொண்ட புருஷன் உன் னை மணப்பான் என்றனர். இரத்தினாவவி தன் கனவிலவனைக் கண்டு விரும்பத் தோழியாகிய சந்திரலேகை சித்திரித்துக் காட்டிய சித்திரத்தால் அவன் நாகலோகத் துப் புருடனென நினைத்து இருக்கையில், சுவா என்னும் அரக்கன் இவளைத் தூக்கிச் செல்லச் சங்கசூடனெனும் நாகராஜன் குமாரனாகிய இரத்தினசூட னரக்கனைக் கொன்று இவளை மணந்தனன். (காரி காண்டம்) 2. இரதின தீபன குமரி இவள் மந்தாரதாமன் எனுங் காந்தருவன் குமரனாகிய பரிமளாலயனை மணந்து சிலநாளிருந்து இருவரும் முத்தியடைந்தனர். இவர்கள் பூர்வசன்மத்திற் புறாக்கள்; ஒரு பருந்துடன் சண்டையிட்டு அயோத்தியில் உயிர் நீங்கியதால் மறு சன்மததிற் புருஷ உரு எடுத்தனர். இவர்கள் தோழியர் கலாவதி, பிரலாவதி

இரத்தினுயுதன்

இவன் சகாபுரத்தரசன் குமரன். இவன் மோஹத்தால் மயங்கி யிருந்தனன். இவனது பட்டத்து யானை வச்ர தந்தரெனும் முனிவருபதேசத்தைக் கேட்டுப் பூர்வத்தில் தானிருந்த நிலையுணர்ந்து கவளங்கொள்ளாதிருக்க அரசனாங்கிருந்த முனிவரைக் கேட்க முனிவர் அஸ்தினபுரத்தில் பீரீதிபத்திர னெனுமரசன் ஒருவனிருந்தான். அவன் தேவி வசுந்தரை புதல்வன் பிரீதிங்கான், மந்திரி சித்திரமதி, இவன் தேவி கமலை, இவர்கட்குப் புதல்வன் விசித்திரமதி, அரசகுமானு மிவனு மில்லற வெறுப்படைந் திருந்தனர். அக்காலத்துப் புத்திஷேணை இவர்களில் பிரீதிங்கரன் உபதேசத்தால் நன்னடையடைந்ததைக் கூற விசித்திரமதி அவளிடம் மோகங்கொண்டு அந்நகரத்தரசனாகிய கந்த மித்திரனுக்குச் சமையற்காரனாகி அவனது தவியால் புத்திஷேணையைச் சேர்ந் தான் அவனே பட்டத்து யானையானான். இச்சரி தங்கேட்டு இரத்னாயு தன் விரக்தி பெற்றுப்பட்டத்தை மகனுக்குக் கொடுத்த வச்ராந்தரிடம் உபதேசம் பெற்று உலக துச்சியடைந்தனன். அபராசிதனைக் காண்க. (மேருமந்தரம்.)

இரத்தினேசன்

காசியிலுள்ள சிவப்பிரதிட்டை, இது, பர்வதராசன் தன் குமரி யாகிய பார்வதியாருக்குக் கொடுத்த இரத்தினங்கள் சிவலிங்கமானதா லிப்பெயர் பெற்றது.

இரத்தினேற்பத்தி

வலன் எனும் அசுரன், சிவபூசை செய்து முக்கண்மூர்த்தி பிரத் தியக்ஷமாய் என்னவாம் வேண்டும் என்ன, யான் யுத்தத்தில் சாகா வரமும், அங்ஙனம் விதியாலிறப்பின் என்னுடல் எவரும் விரும்புகின்ற நவமணிகள் ஆகக்கேட்டனன், அவ்வகை வரமளிக்கப் பெற்று அரசாண்டு இந்திரன் செய்த வஞ்சனையால் அவனுக்கு யாகப்பசுவாயினன். இவன் உடல், விலையுயர்ந்த இரத்தினங்களாயின. இந்திரனுக்கு யாகப்பசுவான வலன் இரத்தம் மாணிக்கங்கள் ஆயின. பற்கள் முத்துக்களாயின. மயிர்கள் வைடூரியமாயின. எலும்புகள் வைரமாயின. பித்தம் மரகதமாயிற்று. நிணம் கோமேதகமாயிற்று. தசைகள் பவளமாயின. கண்கள் நீலமாயின. கபம் புஷ்பராகமாயிற்று, இவற்றின் இடங்களும், நிறங்களும், சாதிகளும், தெய்வங்களும், ஒளிகளும், குற்றங்களும், பயனும் சுருக்கிக் கூறுகிறேன். மாணிக்கங்கள் கிருதயுகத்தில் யவன தேசத்தில் மக்கத்திலும், திரேதாயுகத்தில் காளபுரத்திலும், துவாபர யுகத்திலும், கலியுகத்திலும், சிங்களத்திலும் உற்பத்தியாம், அந்த மாணிக்க மென்ற பதுமராகம், ஒன்பது வகை நிறத்துடன் இருக்கும். அவை: தாமரைப்பூ, மாதுளம்பூ, மாதுளவிரை, நெருப்பு, செங்கழுநீர், மின்மினி, நாரத்தம்பழம், விளக்கு, இந்திரகோபம் என்கிற நிறங் களைப் பொதுவில் பெறும். இதில் பிராமணசாதி சாதாங்க மெனவும், க்ஷத்திரிய சாதி குருவிந்தம் எனவும், வைசியசாதி சௌகந்திகம் எனவும், சூத்திரசாதி காவாங்கம் எனவும் கூறப்படும். ‘மேற் உடறிய சாதரங்கத்தின் நிறம் பத்துவகை. அவை தாமரைப்பூ, கருநெய்தற்பூ சூரியனொளி, நெருப்பு, மின்மினி, மாதுளம்பூ, மாதுளவிரை, மேசம், விளக்கு, இந்திர கோபம். இம் மாணிக்கங்களில் பன்னி ரண்டு குணமும் பதினாறு குற்றமும் இலாதன கொள்க. குருவிந்தத்திற்கு நிறம் எட்டுவகை, குன்றி மணி, முயலிரத்தம், விளாம்பூ, பலாசப்பூ, மஞ்சாடிப்பூ, செவ் வரத்தம்பூ, முள்ளிலவம்பூ, எரிபொன். சௌகந்திகத்திற்கு நிறம் ஆறுவகை, இல வம்பூ, குயிலின்கண், அசோகின் தளிர், அவிர்பொன், செம்பஞ்சு, ஐவனப்பூ, காவாங்கத்திற்கு நீறம் நால்வகை; குரவம்பூ, குசும்பைப்பூ, செங்கல், கொவ் வைக்கனி முதலியவற்றின் நிறத்துடன் இருக்கும். இவற்றைச் சோதிக்கும் இடத்துக் கெட்டியாய் மேலே காந்தினால் உத்தமம், கீழே காந்தினால் மத்திமம், சுற்றுப் பக்கத்தில் காந்தினால் அதமம் என்பர். சாதரங்கத்தை அணிந்தவர், வித்யாதானம், கோதானம், கன்னிகா தானம் முதலிய பல தானங்களைச் செய்த பலனும் அச்வமேதயாக பலனும் அடைவர். குருவிந்த மணிந்தவர்கள், உலகம் ஆண்டு வீரலக்ஷ்மியுடன் வாழ்வர். சௌகந்திக மணிகதோர் செல்வம், கீர்த்தி முதலிய பெறுவர். காவாங்கத்தை அணிந்தவர்கள் வீட் டில் பாலும் மலைபோல் நெற்குவியல்களும் அகண்ட ஐச்வர்யத்தையும் பெறுவர். இவர்களிடம் மற்ற இரத்தினங்களும் வந்துசேரும். இவற்றில் புள்ளி, புள்ளடி, கீற்று, வேறுநிறச்சார்பு, தராசம் என்கிற குற்றம் இலாது இருக்கின் அணிந்தோன் பகைவென்று விசயலக்ஷ்மி நேசனாவன். அவனைப் பாம்பு, துஷ்டமிருகங்கள், பைசாசு, பூதம், தாமததெய்வங்கள், தரித்திரம், வியாதி, பாபக்கிரகங்கள், யமவாதை முதலிய சேரா, பின்னும் இரத்தின பரீக்ஷை தெரிந்தோர் வயிரத்தினையும், முத்தினையும், வேதிய சாதி யெனவும், மாணிக்கத்தையும் பவளத்தையும் க்ஷத்திரியசாதி யெனவும், புஷ்பராகத்தையும் வைடூரியத்தையும் கோமேதகத்தையும் வைசியசாதி யெனவும், மரகதத்தையும் நீலத்தையும் சூத்திரசாதியெனவுங் கூறுவர். முத்தையும் வயிரத்தையும், பச்சையையும் சாத்விக குணமுடையவெனவும், பவளத்தையும், மாணிக்கத்தையும், கோமேதகத்தையும் இராசதகுணம் உள்ளவை யெனவம், நீலத்தினைத் தாமதகுணமள்ளவை யெனவுங்கூறுவர். இவ்விரத்தினங்களை மதிப்போர் திங்களில் முத்தினையும் செவ்வாயிற் பவளத்தினையும், புதனில் பச்சையினையும், வியாழனில் புஷ்பராகம்தினையும், வெள்ளியில் வயிரத்தினையும், சனியில் நீலத்தினையும், ஞாயிறில் கோமேதகத்தையும், திங்களில் வைடூரியத்தையும், மதிக்கும் காலமெனக்கூறுவர். இனி, முத்துக்கள் தலசம், சலசம, என இருவகை, தலசம், பூமியிலுள்ள பொருள்களிலுண்டாவன. சலசம், நீரிலுண்டாம் பொருள்களில் பிறப்பான, அவை சங்கு, மேகம், மூங்கில், பாம்புத்தலை, பன்றிக் கொம்பு, வெண்ணெல், இப்பி, மீன்றலை, கரும்பு, யானைக்கொம்பு முதலிய இடங்களிலுண்டாம். கொக்கின்றலை, கற்புடை மகளிர் கண்டம் முதலியவற்றில் உண்டாம் எனவுங் கூறுவர். அவையறிய, அவற்றில் யானைக்கொம்பிற் பிறக்கும் முத்து மாடப் புறாவின் முட்டைபோற் றிரண்டு வெண் ணிறமாயிருக்கும், மேகத்தின் முத்து இளஞ்சூரிய னிறமாயிருக்கும். மூங்கில் முத்து மழைத்துளி நிறமாகும். பாம்பின் முத்து நீலநிறமாயிருக்கும். பன்றிக்கொம்பின் முத்து இரத்த நிறமாம். நெல்லின் முத்து பச்சையாயிருக்கும், மீன் முத்து பாதிரிப்பூ நிறமாம். கரும்பின் முத்து பொன்னிறமாயிருக்கும். இம் முத்துக்கள் நக்ஷத்திரம் போல் ஒளியும் உருட்சியும், அழுக்கில்லாமையும், கையில் எடுத்துப் பார்க்கையில் கெட்டியும், பார்வைக் கழகும் படிகநிறத்துடன் கூடியிருப்பின் உத்தமமாம். இவற்றை அணியின் லக்ஷமியும், ஆயுளும், செல்வமு முண்டாம், மூதேவி நீங்குவள், இனித்ததீசி முனிவரின் எலும்பும், வலாசுரன் எலும்பும், கோசலமுதலிய நாடுகளில் விழுந்து வயிரமுண்டாயின. அவ்வயிரங்களுள் கோசல நாட்டிற் கிடைப்பன குணத்திற் சிறந்தனவாம். அது உறுதியாய்த் தெள்ளியதாய் விலை மதிப்புள்ளதாயிருக்கும், இதைக் குறுநிலமன்னன் அணியினும் உலகங்களை வென்று சயமடைந்து செல்வம் உடையன் ஆவன். தரித்திரம், வியாதி, மிருகங்க ளால் வரும் வருத்தம், அற்பாயுசு, பூத கணங்களால் இம்சையுண்டாகா. இரத்தி னங்களில் வயிரத்தையே முதல் என்று கற்றோர் கூறுவர். அது மற்ற இரத்த எங்களைத் தொளமிடத் தகுந்தது மாம். தன்னைத்தானே அறுக்கும் தொளையிடு மன்றி மற்றொன்றில் அறுபடாது, மரகதம் வலாசுரன் பித்தத்தினைப் பணிகள் மூக்கினால் கொத்தித் தமக்கிரையாகக் கொண்டு சென்றகாலத்து மூக்கினின்று சிதறிவிழுந்த இடங்களே மரகத ரத்தினத்திற்கு உற்பத்தித் தலங்கள் ஆம். பின்னும் வினதை இடத்தில் அருணன் பிறந்த முட்டையின் ஓட்டைக் கருடன் ஓரிடத்தில் பத்திரமாக வைத்து இருக்க அந்த இடம் தவறிக் கடல்சூழ்ந்த தீவில் விழுந்த அந்த இடமும் மரகதம் பிறக்கும் இடமாம். மற்றும் விஷ்ணுமூர்த்தி மோகினி யுருவாகச் சென்றகாலத்து ருத்ரமூர்த்தி பின்றொடர்ந்து மந்தரமலையிற் கூடி அரிகரனைப் பெற்றபோது சிதறிய வீரியத்தைக் கருடன் கடலிலும் துருக்க நாட்டிலும் இட அது கருடப்பச்சை யாயிற்று. அந்தக் கருடப்பச்சைக்குக் காடம், சுப்பிரம், காவம் என மூன்று குணங்கள் உண்டு. அவற்றுள் காடம் அறுகம்புல்லின் நிறம் உள்ளது. அந்தக் காடம், சகுணமெனவும் சதோடமெனவும் இருவகை யென்பர். இவற்றில் சகுணமாவது காடம், உல்லசிதம், பேசலம், பித்தகம், முத்தம், பிதுகம் என அறுவகைப்படும். அவற்றில் காடம் புல்லின் நிறம், உல்லசிதம் மெலிதாயிருக்கும், பேசலம் குளச் செந்நெல் நிறமாயிருக்கும், பித்தகம், பச்சைக் கிளிச்சிறகின் நிறமாம். முத்தம், துளசி நிறமாம். பிதுகம், தாமரையிலையின் நிறமாம். சதோடமானது, தோடலே சாஞ்சிதம், துட்டம், தோடமூர்ச்சிதம், தோடலேசம் மந்ததோடம் என்று ஐந்து வகைப்படும். அவற்றில் தோடலேசாஞ்சிதம், எலுமிச்சை நிறமாயிருக்கும். துட்டம், அலரியிலை நிறமாயிருக்கும். தோடமூர்ச்சிதம், புல்லின் நிறமாகும். தோடலேசம், தாமரையிலையின் நிறமாகும். மந்ததோடம் மயிலிறகின் நிறமாகும். இவ்வகை மரக தாதிகளின் இனங்களை அணிவோர் தீர்க்காயுள் உள்ளவர்களாய்ச் சகல ஐச்வரியங்களும் அடைவர். மரகதப் பச்சைக்குக் குற்றம் எட்டுள. அவை கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பரிவு, தார், சாயையிறுகுதல் என்பன. குணம் எட்டாவன. நெய்த்த மயிற் சழுத்தொத்த பைம் பயிரிற், பசுத்தன் பொன்மை தன்னுடன் பசுத்தல், வக்கிபாய்தல் பொன்வண்டின் வயிறொத்துத் தெளிதலோடு எட்டும் குணமே” என்ப. நீலங்கனினினம் இந்நீலம் வலாசுரன் கண்களாம். அது சிவமூர்த்தியின் கண்டத்தின் ஒளிபோல் விளங்கும். அது மா நீலம் எனவும், இந்திரநீல மெனவும் இருவகைப்படும். அவற்றுள், இந்திரநீலம் விசுவரூபனை இந் திரன் கொன்ற பாபம் தீர அச்சுவமேதஞ் செய்தனன். அந்த யாகப்புகை குதிரை களின் கண்களில் நுழைந்து கலங்கிச் சேறுபோல வழிந்து ஒழுகிய இடங்களின் உண்டான நீலமாம். மாநீலமாவது, சூரியன், தேவி சஞ்ஞை, அவனது வெப்பம் பொறுக்காது பெட்டைக்கு திரை யுருக்கொண்டு ஓடின காலையில் சூரியன் ஆண் குதிரை வடிவாகப் பின் தொடர்ந்தனன். அக்காலையில் அவன் வீரியம் சிதறின இடத்தில் உண்டானவையாம். இந்நீல ரத்தினங்கள் வெண்மை கலந்து இருக்கின் பிராமணசாதி, செம்மைகலந்து இருக்கின் கத்திரியசாதி, செம்பொன்னிறங் கலந்து இருக்கின் வைசியசாதி, மிக்க கறுப்புக் கலந்திருக்கின் சூத்திரசாதியாம். இந்த நீலரத்தின மணிவோர் சகல மங்களமும் பெற்று வாழ்வார்கள். நீலத்திற்குக் குணம் பதினொன்று, குற்றம் எட்டு. “கோகுலக் கழுத்துக் குவளை சுரும்பர், ஆகுலக்கண் கள விரிச்சாறு காயா நெய்தல் கனத்தல் பத்தி, பாய்தலெனக் குணம் பதினொன்றாமே. ” கோமேதகம் இது வலாசுரன் நிணம் சிதறிய இடங்களில் உண்டாவதாம். இது உருகிய நெய்த்துளி, தேன்றுளி, கோசலம் இவை களினிறமாய்ச் சிவந்து பசும்பொன்னிற மாய் மென்மையாய்ச் சுத்தமாய் உறுதி கொண்டிருக்கும். இதை அணியின் அஞ்ஞானம் நீங்கிச் சுத்த முண்டாகும். புஷ்பராகம் விஷ்ணுமூர்த்தி வராக அவதாரங்கொண்டு தமது பிலம் போலும் வாயைத் திறந்து அட்டகாசம் செய்தடோது வாயினின்றும் விழுந்த கபம் சிந்திய இடத்திலும், வலாசுரன் கபம் விழுந்த இடத்திலும் உண்டானது. அது பாரியாத்ர கிரியின் கொடிமுடியாயும் மந்தரமால்வரைக்குப் புறஞ்சூழ் மேகலையாயும் இருக்கும். மயன் இந்த ரத்தினத்தினால் இந்திரனுக்குப் பட்டணமும், மண்டபமும் உண்டாக்கினான். இந்த ரத்தினம் அணிவோர் பகைவரை வென்று வெற்றி பெறுவர். வைடூரியம் வலாசுரன் ரோமம் எல்லாம் இளாவிருத கண்டத்திலும் கோரக்கம், மகதம், சிங்களம், மலயம், பாரசீகம், திரிகூடம் முதலிய தேசங்களிலும் மற்றத் தீவுகளிலும் பரந்து உண்டாயின. இது மேகம் இடிக்கையில் கடலிலும் உண்டாகும். இது மூங்லினிலை, மேகம், மயிலின் கழுத்து, பூனைக்கண், தேன், இந்திறங்களையுடைய தாய்க் கனமாய், தெள்ளிய தாய், உறுதியாய் இருக்கும். இது அழகாய் வலப்புறத்து ஒளி வீசின் பிராமண சாதியாம், இடப்புறத்தில் ஒளி வீசின் க்ஷத்திரியசாதியாம். மேலே ஒளி வீசின் வைசிய சாதியாம். அடிப்புறம் ஒளி வீசின் சூத்திர சாதியாம், இதனை அணிவோர் சம்பத்தை யடைவர். பவளம் வலாசுரன் மாமிசம் விழுந்த இடத்தில் உண்டாயிற்று. இன்னும் பிரமன் சந்தி வடிவமாகிய தென்புலத்தவரைச் சிருஷ்டிக்கையில் அவர்கள் உடலின் அழுக்குச் சிந்திய இடத்தினும், திருமால் மதுகைடவரைக் கொன்ற காலத்து அவர்களின் உடலினும், இரத்தம் ஒழுகிய இடங்களிலும், இந்திரன் மலைகளின் சிறகுகளை வெட்டியபோது அவற்றின் உதிரம் சிந்தின இடங்களிலும் உண்டாயிற்று, இப்பவளம், முருக்கம்பூ, பச்சைக் கிளிமூக்கு, செவ்வரத்தம்பூ, கொவ்வைக்கனி இவைகளின் நிறமாகும். இவைகளில் திருகல், கோணல் புழுவரித்தல், முகமொடிதல் குற்றமாம். இவைகளைப் பெண்களே அணிவர். அணியின் புத்திரலாபம் முதலிய உண்டாம். இந்த நவரத்தினங்கள் அன்றிச் சந்திரகாந்தக் கல்லும் சூரியகாந்தக் கல்லும் உண்டு என்பர். இவ்விரத்தினங்களுக்குக் குற்றம் பன்னிரண்டாவன, சரை மலம், கீற்று, சம்படி, பிளத்தல், தொளை, கரிவிந்து, காகபாதம், மிருத்துக் கோடிகள் இலாதன, கோடி முரிந்தன, தாரை, மழுங்கல் என விவை. இனிக் குணமைந்தாவன. எட்டுப் பலகையும், ஆறு கோடியும், தாரையும், சுத்தியும், தராசமும் என இவை, இக் குற்றங்கள் நான்கின் பயனாவன, காகபாதம், நாகம் கொல்லும். மலம் பிரியாதது நிலந்தரு கிளைகெடும். விந்து சிந்தையின் சந்தாபம் தரும். கீற்றுவரவினை யேற்றவர் மாங்வா. இவற்றின் சாதி அந்தணன் வெள்ளை, அரசன் சிவப்பு, வைசியன் பச்சை, சூத்திரன் கருமை, இவற்றினை அணியின் முறையே அச்சாதியாகப் பிறந்து நலம் பெறுவர். இதைப் பெரும்பான்மை வயிரத்திற்குங் கூறுவர். (திருவிளையாடல்)

இரத்தை

அஷ்டசத்திகளு ளொருத்தி.

இரத்னலிங்கம்

எண்வகை. வசரலிங்கம் மாணிக்கலிங்கம், வைடூர்யலிங்கம், ஸ்படிக லிங்கம், பவளலிங்கம், இந்திர நீலலிங்கம், கோமேதகலிங்கம், மரகதலிங்கம் (சைவபூ.)

இரந்திதேவன்

1 சங்கிரதி குமரன். இகத்தில் வெறுப்புள்ளவனாய்த் தனக்குக் தெய்வகதியால் வரும் அன்னத்தை அதிதிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து (40) நாள் ஆகாரமில்லாதிந்தனன். ஒரு நாள் தனக்குக் கிடைத்த அன்னத்தையும், பாய சத்தையும் நீரையும் உண்ண ஆவலுடன் வருகையில் முதலில் ஒருவேதியன், இரண் டாவது சூத்திரன், மூன்றாவது மிலேச்சன் மூவருந் தனித்தனி விருந்தினராகவர, அவர்களுக்கு முறையாக முதலில் வந்தவனுக்கு அன்னத்தையும், இரண்டாவது வந்தவனுக்குப் பாயசத்தையும், மூன்றாவது வந்தவனுக்குத் தண்ணீரையும் கொடுத்துத் தான் ஆகாரமில்லாதிருக்கத் திரிமூர்த்திகளும் தரிசனந்தந்து, அநுக்கிரகித்தனர். (பாகவதம்.) 2. இவன் யாகத்தில் பசுக்கள் தாமே தம்மை நல்லவழியில் உபயோகிக்க வேண்டுமென வந்தன. இந்தப் பசுக்களின் சருமச்சுவையிலிருந்து ஒழுகிய நீர் சர்மண் வதியென ஓர் ஆறாயிற்று. (பார~சாங்.)

இரன்யஹஸ்தர்

காலவிருக்ஷரைக் காண்க.

இரபசன்

இரம்பன் குமரன். இவன் குமரன் கம்பீரன்.

இரப் எனும் காக்கை (Ruff)

இது ஐரோப்பிய காக்கை. இதனிறகுகள் மேக நிறமானவை. இதன் மூக்கு நீளம். கால்கள் நீண்டவை. இதன் கழுத்தில் வெண்மையான இறகுகள் பிடரிமயிர்போல் வளர்ந்துள்ளன. அவற்றை இது வேண்டிய போது விரித்துக் குவித்துக் கொள்ளும், இதன் பேட்டிற்குப் பிடரியி லிவ்வகை இறகுகள் கிடையா. இது மீன்களைப் பிடித்தருந்தும். இவ்வினத்தில் கடற்காக்கையும் உண்டு, அதை முன்பே எடுத் தெழுதினோம். மாட்டுப்புழு எடுக்கும் காக்கை இது ஆபிரிக்கா கண்டத்திலுள்ளது. அக்கண்டத்து மாடுகளுக்கு உண்டாம் புழுக் களைத் தனது முனை வளைந்த, அலகினால் கொத்தி அப்புண்ணிலுள்ள புழுக்களைத் தின்பது, இது நம் நாட்டுக் காக்கையின் உருவில் சற்றுச் சிறிது.

இரப்பர்மரம்

இந்தமரம் மலேயா தீவுகளிலும், அமெரிக்காதேசக் காடுகளிலும் பயிராகிறது. இம்மரத்தைப் பலவிடங்களில் தொளைத்துத் தொளைக்கப்பட்ட இடத்தில் தகரக்கிண்ணங்களைத் தொடுத்துவிட அதில் மஞ்சள் நிறமான அதன் பால் வடிகிறது. அப்பால்களைச் சேர்த்துத் தொட்டிகளில் ஊற்றிக் கொள்ளுகின்றனர். அது காற்றுப்பட வெண்ணிறமாய் மிருதுவாகிறது.

இரப்பியர்

ஒரு இருடி புங்கவர். பாரத்துவாசருக்கு நண்பர், இவர்குமாரர் பராவசு. பாரத்துவாசர். குமாரராகிய துல்லிய வக்ரரைப் பூதங்களையேவிக் கொலை செய்வித்தவர். இவர் பிருகுத் துய்ம்மராசனிடத்து யாகஞ் செய்விக்கப் போன பிள்ளையைத் தேடிக்கொண்டு காட்டின்வழி வர, அவ்விடந் தருப்பைக்கு வந்திருந்த குமாரன் தன்னைப் புலிபிடிக்க வருகிறதென்றெண்ணி இருளிற் றருப்பையை அபி மந்திரித்து ஏவத் தருப்பை தந்தையைக் கொன்றது. இவர் பிள்ளைகளிருவரும் அரசன் யாகத்துக்கு வந்த தேவர்களை வேண்டி இறந்த தந்தையையும், பார்த்து வாசரையும், துல்லியவக்கிரரையும் உயிர்ப் பித்தனர்.

இரமணகன்

சதிகோத்ரன் குமரன், புட்கரத்தீவை யாண்டோன்,

இரமணகம்

ஒரு தீவு. இதில் பூர்வம் காளியன் என்னும் நாகராசன் வசித்திருக்தனன். இதில் கருடன் நாகர்களைச் சுமந்தான். (பா~ஆதி)

இரம்பன்

1. வாநரத்தலைவன். 2, ஆயுசின் குமரன். புரூரவசுவின் குமரன். இவன் குமரன் ரபசன். 3. மகிஷாசுரனுக்குத் தந்தை.

இரம்யகன்

அக்கினியித்திரனுக்குப் பூர்வ சித்தியிட முதித்த குமரன்.

இரம்யதரன்

தேவா வணத்தரசன். (சூளா.)

இரம்யை

மேருவின் தேவியின் பெண், இளாவிருதன் பாரி

இரயிக்குவன்

இவன் ஒரு வேதியன். பிறக்கையில் முடவனாகப் பிறந்து ஒரு வண்டியில் ஏறிக் காட்டின்வழிச் செல்லுகையில் ஒரு பாலைவனத்தின் பாழ்ங் கிணற்றில் இருந்து வந்த (கா) எனும் ஒலிகேட்டு அது தம் பிதுரர்களின் ஓசைஎன உணர்ந்து அவர்கள் சொற்படி கயாபல்குனித்தீர்த்தம் ஆடித் தம்பிதுரர்களைச் சுவர்க்கம் அடைவித்தவன். (பூவா.)

இரயுவன்

சயுக்குவனைக் காண்க.

இரவாளர்

இவர்கள் கோயம்புத்தூர்ஜில்லா முதலிய இடங்களில் வசிக்கும் ஒரு காட்டு வாசிகள். இவர்களிற் சிலர் தமிழும் சிலர் மலையாளமும் பேசுவர்.

இரவி

நான்கு முகமுடைய சூர்யன், சிவ சூர்யனுக்கு இடப்புறத் திருப்பவன்.

இரவிபுரம்

மலைநாட்டிலுள்ள ஓர் ஊர்.

இரவிவன்மன்

அமுதபதியின் கணவன், அசோதரநகரத் தரசன், (மணிமேகலை)

இரவிவீரன்

விக்கிரமார்க்கன் குமரன். இவனாண்டது விஜயநகரம்.

இரவுக்குறி

தலைவன் தலைவியை இரவுக்குறியிற் கூடுதல். இது, வேண்டல், மறுத் தல், உடன்படல், கூட்டல், கூடல், பாராட்டல், பாங்கிற்கூட்டல், உயங்கல், நீங்கல், எனும் வகைகளையும், இறைவி இருட்குறி வேண்டல், பாங்கி நெறியருமைகூரல், இறைவன் நெறியினெளிமைகூறல், பாங்கியவனாட்டணியியல் வினாதல், கிழவோனவணாட்டணியியல் வினாதல், அவற்குத்தன் னாட்டணியியல் பாங்கி சாற்றல், இறைவிக்கிறையோன் குறையறிவுறுத்தல், நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தல், நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல், நேர்ந்தமைபாங்கி நெடுந்தகைக் குரைத்தல், குறியிடை நிறீஇத் தாய் துயிலறிதல், இறைவிக்கிறைவன் வரவறி வுறுத்தல், அவட்கொண்டு சேறல், குறியுய்த்தகறல், வண்டுறைதாரோன் வந்தெதிர்ப் படுதல், பெருமகளாற்றின தருமை கண்டிரங்கல், புரவலன்றேற்றல், புணர்தல், புகழ்தல், இறைமகளிறைவனைக் குறி விலக்கல், அவன் இறைவியை யில்வயின் விடுத்தல், இறைவியையெய்திப் பாங்கி கையறை காட்டல், இற்கொண்டே கல், பின் சென்றிறைவனை வரவு விலக்கல், பெருமகன் மயங்கல், தோழி தலைமகள் துயர்கிளந்து விடுத்தல், திருமகட் புணர்ந்தவன் சேறல், ஆகிய விரிகளையுடைத்து. இவ்வளவும் ஏழாநாள் செய்தி. (அகம்.)

இரவுக்குறியிடையீடு

எட்டாம் நாள் இரவுக்குறிக்கண் வந்ததலைவன், அல்ல குறிப்பறிதலால் இடையீடு பட்டுப்போதல். இது அல்லகுறி, வருந்தொழிற்கருமை யெனும வகையினையும், இறைவிக்கிகளையிறை வரவுணர்த்தல், தான் குறி மருண் டமை தலைவி யவட்குணர்த்தல், பாங்கி தலைவன் தீங்கெடுத்தியம்பல், புலந்தவன் போதல், புலர்ந்தபின் வறுங்களம் தலைவி கண்டிரங்கல், தலைவி தன் துணைக்குரைத்தல், தலைமகளவலம் பாங்கி தணித்தல், இறைவன் மேற் பாங்கி குறிபிழைப்பேற்றல், இறைவி மேலிறைவன் குறிபிழைப் பேற்றல், அவள் குறி மருண்டமையவ ளவற்கியம்பல், அவன் மொழிக் கொடுமை சென்றவளவட் கியம்பல், என்பிழைப்பன் றென்றிறைவிநோதல், தாய் துஞ்சாமை, நாய்துஞ்சாமை, ஊர்துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், கூகை குழறல், கோழி குரல் காட்டுதல் என் பனவிரி. (அகம்)

இரவுத்தலைச்சேறல்

தலைவனைக் காண வேண்டுமென்னும் ஆசையோடு செறிந்த இருளையுடைய ஒத்த யாமத்து மாட்சிமை பட்டமென்மையால் தன் இல்லினின்றும் இறந்தது. பெருந்திணை. (பு. வெ.)

இரஷபன்

ஆயுஷ்மனுவிற்கு அம்பு தாரையிட முதித்த குமரன்.

இரஸிகமுராரிதாசர்

மதுராபுரியில் சாயன நகரத்தில் கிருஷ்ணபூசையி லன்புற்றவ ராய்ப் பாகவதபத தீர்த்தங்கொண்டு அவர்களுக்கு அமுதுபடைத்து ஆசார்யபக்தி யதிகமாய்க்கொண்டு ஒழுகு நாட்களில் ஆசாரியர் நில முதலியவைகளை ஒரு மிலேச்ச அரசன் ஜப்தி செய்தது கேட்டு அவனிடஞ் சென்றனர். அவ்வரசன் இவர்மீது யானையையேவ அவ்யானையை இவர் தாரகமந்திரத்தால் வசஞ்செய்து கொண்டு மான்ய முதவியவைகளை ஆசார்யருக்கு மீண்டுங் கொடுப்பித்துப் பரமபத மடைந்தவர். (பக்தமாலை)

இரா

கச்யமன் தேவி.

இராகத்தகுதி

இடம், செய்யுள், குணம், காலம். இவற்றுள் இடம், பற்றிய இராகம், ஐந்திணை இராகம். செய்யுள் பற்றிய இராகத்துள் வெண்பா இராகம், சங்கராபரணம், அகவல் இராகம். தோடி. கலி இராகம், பந்துவராளி, கலித்துறை இராகம்பைரவி, தாழிசை, இராகம், தோடி, விருத்த இராகம், கல்யாணி, காம்போதி, மத்யமாவதி முதலிய. உலா இராகம், சௌராட்டிரம். தோடைய இராகம், சௌராட்டிரம், நாட்டை, மங்கள ராகம், மங்கள கௌசிகை. தேவாரத்தினிராகம், பூபாளம், பிள்ளைக்கவி இராகம், கேதார கௌளம். குணம்பற்றிய இராகத்துள் ஆகிரி, கண்டாராகம், நீலாம்புரி, பியாகடை புன்னாகவராளி துக்கராகங்கள். இரக்க இராகம், வராளி. காம்போதி, சாவேரி, தன்னியாசி, மகிழ்ச்சியிராகம். நாட்டை யுத்த இராகம். காலம் பற்றிய இராகத்துள் வசந்தகால இராகம் காம்போதி, அசாவேரி, தன்னியாசி. மாலையிராகம், கல்யாணி, காபி, கன்னடம், காம்போதி. யாமராகம், ஆகிரி, விடியலி ராகம், இந்தோளம், இராமகலி, தேசாக்ஷரி, நாட்டை பூபாளம். உச்சியிராகம், சாரங்கம், தேசாக்ஷரி அன்றியும், ஆகிரி, இந்தோளம், இராமகலி சாரங்கம், பூபாளம், நீக்கி நின்ற மற்றவை எக்காலத்திற்கும் பொதுமைய. (பரத சாத்திரம்.)

இராகம்

இதனைப் பாடுமிடத்துச் சித்திர வஞ்சனைகளை அறிந்து பாடுதல் வேண்டும், அவையாவன: சித்திரப் புணர்ப்பு என்பது இசை கொள்ளும் எழுத்துக்களின் மேல் வல்லெழுத்து வந்தபோது மெல்லொற்று நிறுத்தல், வஞ்சனை புணர்ப்பாவது இசைகொள்ளா வெழுத்துக்களின் மேல் வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் புணர்த்தல், இராகம் பாதத்திற் கூறினாம்.

இராகவன்

இரகு என்பவனது வமிசத்திற்பிறந்த விஷ்ணுமூர்த்தியின் திருநாமம்.

இராகவாநந்தர்

ஏகான்மவாதி, திருவேங்கடசுவாமிக்கு ஆசிரியன்.

இராகா

1. ஆங்கீரச ருஷிக்குச் சிரத்தையிட முதித்த குமரி. 2. சுமாலியின் பெண். கர தூஷணர் தாய். விசிரவசுவின் தேவி. 3. தாதா வென்னும் ஆதித்தனுக்குப் பாரி. குமரன் பிராதம்.

இராகாகும்பார்

இவர் குஜராத்தி தேயத்திலுள்ள குயவர். இவர் தேவி பாங்கா பாயி. இவர் மட்கலஞ்சுட்டுப் பிழைத்து வருங்காலத்து ஒருநாள் சூளை போடும்படி யாக வைத்த சாலில் ஒரு பூனை, குட்டி போட்டு வளர்த்து வந்தது. அத்தாய்ப் பூனை இரைக்குப் போயிருந்த சமயம் ஆதலால் ராகாகும்பார் இதனை அறியாமல் குட்டிகளிருந்த மட்பாண்டங்களைச் சூளையிலடுக்கித் தீயிட்டனர். பின் இரைக்குச் சென்ற தாய்ப்பூனை திரும்பிக் குட்டியிருந்த சாலைக் காணாமல் கத்துங்காலத் தில் சூளையிலிருந்த குட்டிகள் கேட்டுக் கதற ராகாகும்பார் அதிக விசனத்துடன் தன்னுடைய மனைவிக்குக் கூற மனைவி பூனைகள் படும் பாடும் தன்னாயகன் படும் பாட்டையும் கண்டு மூர்ச்சையடைந்து பண்டரிநாதனை வேண்டி இந்த அபாயத் தினின்றும் காப்பாயேல் மட்கலஞ் சுடுந் தொழில் இனிச்செய்யேன் என்று புலம்பி மண்ணிற் புரண்டு அழுதனன். மூன்றாம் நாள் சூளை நெருப்பாறியபின், சூளையைப் பிரிக்கக் குட்டிகளிருந்த பாண்டம் வேகாமல் குட்டிகளும் தாயைக்கண்டு களித்தன. இதனைக் கண்ட கும்பாரும் மற்றைய குயவர்களும் வியப்படைந்தனர். கும்பாரும் மனைவியரும் இந்தத் தொழிலை விட்டுக் காட்டில் கட்டைவெட்டி விற்றுக் குப்பையிலுள்ள சீலைகளையுடுத்தி ஜீவனஞ்செய்து வருங்காலத்து இவர் குமரி வங்கா என்பவள், லீமநதிக்கரையில் ஸ்நாக முடித்துப் பூசை புரிகையில் நாமதேவர் குமரி, குயவன் புத்திரிக்குப் பூசையு முண்டோ வென்ன வங்கா நாமதேவர் செத்த பசுவை உயிர்ப்பித்தது காமியமென் றிகழ்ந்து கூறக்கேட்டுத் தந்தையிடங் கூற, நாம தேவர் பெருமாளை ராகாகும்பர் காமியோ நிஷ்காமியோவென்று கேட்கப் பெருமாள் நிஷ்காமியரென அதைக் காட்டுகவென நாமதேவர் கேட்க, பெருமாள் தம்தேவி யுடன் ஒரு வேதியராய் ராகாகும்பார் கட்டை வெட்டுமிடத்திற் சென்று லக்ஷ்மியின் பொற்கங்ணத்தை அடியில் வைத்து மேலே கட்டைகளைப் பரப்பித் தூரத்தில் நின்றனர். ராகாகும்பார் விறகைத் தேடி வருங்காலத்தில் பொற்கங்கணத்தைக் கண்டு தூர விலகிச் சென்று தன் மனைவி யாருக்கு அறிவிக்க மனைவியாரும் தூர விலகிச் சென்றனர். இதனைக் கண்ட நாம தேவர் உண்மையான பக்தி யுள்ளாரென்று பெருமாளை வேண்டப் பெருமாளுந்தம் முண்மை உருவை ராகாகும்பாருக்குத் தரிசனங்கொடுக்க இராகாகும்பார் கண்டு பணிந்தனர். (பக்தமாலை).

இராகு

கிரகபதமடைந்தவர்களில் ஒருவன். இவன் தந்தை விப்ரசித்தி. தாய் சிம்மிகை, தம்பி கேது. இவர்களிருவரும் கச்யபருக்குப் பேரன் மார். விஷ்ணு மூர்த்தி சகன்மோகினி யுருக்கொண்டு தேவர்களுக்கு அமுது பகுந்தளித்த காலத்தில், இராகு தேவவுருக்கொண்டு சூரிய சந்திரரிருவருக்கும் இடையிலிருந்து வாங்கிப் புசித்தனன். இவ்விருவரும் இராகுவை விஷ்ணு மூர்த்திக்குக் குறிப்பித்தனர். மோகினி யுருக்கொண்ட விஷ்ணு, இராகுவைத் தலையிற் சட்டு வத்தா வடித்தார். பிரிந்த சிரம் இராகு வென்றும் மற்ற தேகம் கேதுவென்றும் பெயருற்றுச் சூர்யசந்திரர் தங்களைக் குறிப்பித்த காரணத்தால், அவர்கண்மேற் பகை மைகொண்டு தவவன்மையால் மறைப்பர் என்பர். இவர்கள் தவத்தால் கிரகபத மடைந்தனர். இவர்கள் விஷ்ணுவை யெண்ணித் தவமியற்றிக் கரும்பாம்பு செம் பாம்பின் உருவாயினர். சூர்யனுக்கு (13000) விஸ்தார யோசனையுள்ள மண்டலத்தி விருப்பவர்கள். இவன் தேர் (8) குதிரைகள் பூட்டிச் செல்லும். இந்த இராகு, கேதுக்கள் முறைப்படி கிரகங்கள் அல்ல. இந்துக்கள் இவற்றைச் சாயா இரகம் என்பர். ஆயினும் இவை சூரியனை ஒரு முறை சுற்றிவர (18 1/2) வருஷங்கள் ஆகின்றன என்பர்.

இராகுகாலம்

ஞாயிறு, மாலை 4 1/2 மணி முதல் 6 மணி வரையில், திங்கள், காலை 7 1/2முதல் 9 வரையில், செவ்வாய், மாலை 3 முதல் 4 1/2வரையில், புதன், நடுப்பகல் 12 முதல் 1 1/2 வரையில், வியாழன், பகல் 1 1/2 முதல் மாலை 3 வரையில், வெள்ளி, காலை 10 1/2 முதல் 12 வரையில், சநி. காலை 9 முதல் 10 1/2 வரையில், இக்காலங்களில் சுபகாரியங்கள் நீக்கப்படும்.

இராகுபணிச் சக்கரம்

இராகுநின்ற நக்ஷத்திரம் முதல் அன்றைய நக்ஷத்திரம் வரை எண்ணும் போது 27, 26 25 வரையில் சிரசுநாள்; 23, 22, 21 கழுத்து நாள். 19, 18, 17, 15, 14, 13, 11, 10, 9, 7, 6, 5, வயிற்றுநாள்; 3, 2, 1 வால் நான், 24, 20, 16,12, 8, 4 வெளிநாள்; சிரநாளாகிற் பயிர் தீயும், கழுத்து நாளாகில் வெள்ளஞ்சுழிக்கும், வயிற்று நாளாகில் நெல்விளையும், வால் நாளாகில் சாவியாம். வெளிநாளாகில் கிருமி, கீடம், மிருகம் இவைகளால் கேடு உண்டு, நெல் விதைக்க வயிற்று நாட்கள் உத்தமம்.

இராகுலன்

அத்திபதி யென்னு மரசன் குமரன். தாய் நீலபதி, தேவி இலக்குமி. இவன் திட்டிவிடமென்னும் பாம்புகடித் திறந்து உதய குமரனாகப் பிறந்தான். (மணி.)

இராக்கதர்

பிரமன், இவர்களையும் இயக்கர்களையும் வித்தையிற் சிருட்டித்தனன், உடனே இவர் பிரமனை நோக்கிப் பசியாற் பக்ஷிக்கவேண்டு மென்றனர். மற்றவர் இருக்கவேண்டு மென்றனர். இப்படிப் பட்ட புதல்வரைப் பிரமன் நோக்கிப் பக்ஷிக்கவேண்டு மென்றவர்களை இராக்கத் சாகவும், ரக்ஷிக்கவேண்டு மென்றவரை யக்ஷராகவும் ஆக என்றனர். காசிபருக்குச் சுரசையிடம் பிறந்த குமரர் எனவுங் கூறுவர்.

இராக்ஷசசத்திரம்

தந்தையைக் கொன்ற இராஷசவதைப் பொருட்டுப் பராசரரால் செய்யப்பட்ட யாகம், (பாரதம்~ஆதி)

இராக்ஷடபிரத்து

பரதருக்குப் பஞ்சசேநியிடத் துதித்த குமரர்.

இராசகம்பீரபாண்டியன்

இராசேச பாண்டியன் குமரன். இவன் குமரன் வங்கிய தீபபாண்டியன்.

இராசகிரியம்

இது புகழ்பெற்றதும், மிகப் பழமையானதுமான ஒரு பெரிய நகரம், பலவகை நுகர்ச்சிகளை யுடைமையாலும், அச்சத்தை விளைவித்தலாலும் பவணலோகத்தையும், செல்வமிகுதியால் அமராவதியையு மொப்பது. இது மகதநாட்டின் தலைநகர், பல விண்மீன்களுக்கு நடுவே தோன்றும் முழுமதிபோலச் செல்வம் நிரம்பிப் பல ஊர்களுக்கிடையே தோன்றுவது. இதன் புறத்தே யவனச்சேரிகள் நூறும், ஏறி படைப்பாடிகள் நூற்றறுபதும் தமிழ்வீரர்களின் சேரிகள் ஆயிரமும், கொல்லர் சேரிகள் பலவும், மிலைச்சச்சேரிகள் பலவும், சித்திரசாலைகள் முதலிய பலவகை இடங்களும், தண்ணீர்ப் பந்தர் முதலிய பல தருமத்தானங்களும், பலவகைத் தேவாலயங்களும் இருந்தன. அழகிய அகழிகளாலும் பல உறுப்புக்கள் வாய்ந்த மதில்களாலுஞ் சூழப்பெற்ற இதன் அகநகரில் பெரும் படைச்சேரி, போகச்சேரி, உழவர்சேரி, வணிகர்சேரி, அந்தணர்சேரி, அமைச்சர்சேரி, முதலியன அமைந்த வீதிகள் பலவற்றாற் சூழப் பெற்று இடையே விளங்கும், இராசமாளிகை, ஒரு தாமரை மலரிற் பலவகை இதழ்கள் சூழப்பெற்ற பூம்பொகுட்டைப் போல விளங்கியது. இந்நகரத்தோர் யாவரும் தத்தம் குல வொழுக்கங்களிற் சிறிதும் வழுவாமலிருந்தனர். இதனாசன் தருசகனென்பவன், உதயணன் பார்ப்பனப் பிரமசாரி வடிவங்கொண்டு தோழர் முதலியவர்களுடன் சில மாதங்கள் மறைந்திருந்து அவருக்கு உதவி செய்து பின்பு அவனுடைய நட்பைப் பெற்று அவன் தங்கையாகிய பதுமையை மணந்து சிலநாள் இதில் தங்கியிருந்தனன். இஃது இராசகிரியெனவும் வழங்கும். (பெ~கதை.)

இராசகுஞ்சாபாண்டியன்

ஆயோதனப் பிரவீண பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் துவிசராச குலோத்துங்கன்.

இராசசார்த்தூலபாண்டியன்

இராசசூடா மணி பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் துவிசராசகுலோத்துங்கன்.

இராசசிங்கன்

இராசேந்திர பாண்டியனைக் காண்க.

இராசசூடாமணிபாண்டியன்

1. இராசமா கர்த்தாண்ட பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் இராசசார்த்தூலன். 2. குலசூடாமணி பாண்டியனுக்குக் குமரன்,

இராசசூயம்

ஒருயாகம். இது செய்தவன் வருணபதமும் சந்திரபதமும் அடைவன்.

இராசசேகரபாண்டியன்

விக்கிரமபாண்டியன் குமரன். இவன் அரசாட்சியில் கரி காற்சோழனிடமிருந்து ஒரு புலவன் வந்து எங்கள் அரசனுக்குச் சகலகலையும் வரும். உமக்குப் பரதம் தெரியாது என்றனன். பாண்டியன் பரதங்கற்க எண்ணி வல்லபுலவரால் கற்றுணர்ந்தனன். ஒரு நாள் சிவதரிசனத்தின் பொருட்டுச் சந்நிதி யிற்சென்று அங்கு வெள்ளியம்பலத்துள் நடனத் திருக்கோலமாய் எழுந்தருளி யிருக்கும் சிவமூர்த்தியைத் தரிசித்து நின்றனன். வயது முதிர்ந்து பரதம் கற்கத் தொடங்கி அதிக வருத்தத்துடன் கற்றுணர்ந்தவனாதலால் நடராச மூர்த்தியைக் கண்டு மனமுருகித் தேவரீர் எக்காலத்தில் தூக்கிய திருவடியோ அறியேன். அது தேவரீருக்கு வருத்தத்தை விளைக்குமாதலின் தூக்கிய திருவடியை ஊன்றியும் ஊன்றிய திருவடியைத் தூக்கியும் நடிக்க வேண்டும் என வேண்டினன். அரசன் வேண்டியபடி நடராஜர் செய்யாதிருக்கப் பாண்டியன், என்னுயிரை இவ்வாளுக்கு இரையாக்குகிறேன் எனத் தன்னுயிரை நீக்கத் தொடங்கினன், அச்சமயத்தில் சிவமூர்த்தி அவன் காண அவன் வேண்டிய படி மாறிநடித்தனர். பாண்டியன் ஆனந்தக் கடலில் குளித்துச் சிவமூர்த்தியைப் பணிந்து இம்மதுரையில் எக்காலத்தும் யாருங் கண்டுகளிக்க அத்திருக்கோலத்துடன் எழுந்தருளவேண்டி வரம்பெற்றுச் சிறிது காலம் அரசாண்டு தன் குமரன் குலோத்துங்க பாண்டியனுக்கு அரசளித்து முத்தியடைந்தனன். (திருவிளையாடல்,)

இராசதபுராணம்

பிரமம், பிரமாண்டம், பிரமவைவர்த்தம், மார்க்கண்டேயம். பவுடியம், வாமனம். பிரமனைத் துதிக்கும் புராணத் தொகுதி.

இராசனை

பதுமையின் தோழி, மிக்க அழகுடையவள், உதயணனது விருப்பின்படி இவளை உருமண்ணுவா மணஞ்செய்து கொண்டான். பந்தாட்டத்தில் தேர்ச்சி யுள்ளவள், (பெ~கதை.)

இராசபயங்கரபாண்டியன்

இராசகுஞ்சர பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் உக்கிரசேன பாண்டியன்.

இராசபுரந்தரபாண்டியன்

இராசேந்திர பாண்டியனுக்கு ஒரு பெயர்.

இராசப்பகவி

திருக்குற்றாலக் குறவஞ்சி பாடிய கவிராயன்.

இராசப்பகவிராயர்

இவர் நடுநாட்டுத் திருவெண்ணெய் நல்லூரினர். திருநாவலூர்ப் புராணம் பாடியவர்.

இராசப்பிரபு தெரிசனம்

கேட்டை, ஆயிலியம், திருவாதிரை, பூரத்திரயம், பாணி, கார்த்திகை இவை யொழிந்த சுப நாட்களிலே சுபவாரோதயங்களிலே திரராசி, உபயராசி, உதயமாக இராசபிரபு தெரிசனம் பண்ணுவது. (விதானமாலை.)

இராசமாதேவி

நெடு முடிக்கிள்ளியின் மனைவி. உதயகுமாரனுடைய தாய். மணி மேகலைக்கு விஷ முதலிய வூட்டியும் அவள் சலியாதது கண்டு அவளை அஞ்சி அவள் கூறிய அறமொழி கேட்டுப் புத்திர சோகம் நீங்கினவள். இவளது இயற் பெயர் சீர்த்தி, இவள் மாவலி பரம்பரை யிற் சேர்ந்தவள். (மணிமேகலை.)

இராசமாபுரம்

சீவகன் பட்டணம்.

இராசமார்த்தாண்டபாண்டியன்

சித்திர விக்கிரம பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் இராசசூடாமணி பாண்டியன்.

இராசராசசோழன்

1. இவன் குலோத்துங்கசோழன் குமரன். இவன் மீது ஒட்டக்கூத்தர் இராஜராஜ தேவனுலாப்பாடினர். இவனுக்கு வீரன் எனவும் ஒரு பெயருண்டு. 2. இவன் சுங்கந் தவிர்த்த அபயன் மகனான விக்ரமன் மகனும், சிற்றம்பலம், பேசம்பலம், காமக்கோட்டம் முதலிய பெரிய திருப்பணிகளியற்றிய குலோத்துங்கனுக்கு மகனுமாவன்.

இராசராசதேவர்

இவர் திருமுறை கண்ட சோழர், இவரே அபய குலசேகர சோழ மகாராஜா. இவர் சில சிவனடியவர்கள் தேவாரம் ஒதக்கேட்டு மனமுருகி முழுதும் பெறும் வகை எவ்வகையென முயன்று நம்பியாண்டார் நம்பிகளால் தேவார மிருக்கும் இடமறிந்து தேவாரங்களை எடுத்துச் சிவாஞ்ஞையால் திருநீலகண்டத்து யாழ்ப்பாணநாயனார் மரபில் ஒரு பெண்ணினால் பண்ணமைக்கப் பெற்று இன்புற்றவர். இப்பெயர் கொண்டனர் தஞ்சையாண்ட முதலாவது பராந்தகச் சோழனுக்கு மூன்றாம் பேரர் ஒருவர் இருந்தனர். அதாவது இரண்டாம் பராந்தகனுக்குப் புதல்வரும் திருவிசைப்பா பாடிய கண்டராதித்தருக்குச் சகோதரருமானவர். இவர் தம் பெயரால் இராஜராஜேஸ்வர மென்னும் சிவாலயங் கட்டுவித்தனர்.

இராசராசன் 3

கி. பி. 1216 இவன் குலோத்துங்கனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தான். இவன் பட்டத்திற்கு வந்த காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டத்திற்கு வந்தான். இவனை அவனியாளப் பிறந்தான் கோப்பெருஞ் சிங்கன் எதிர்த்தான். இதில் இவன் ஆபத்தில்பட்டு இராஜ்யமிழந்து மீண்டும் இராஜ்யமடைந்து (1246) வரையில் அரசாண்டான்,

இராசராசபாண்டியன்

வரகுண பாண்டியனுக்குத் குமரன். இவன் காதற் பரத் தையரில் ஒருத்தி பாணபத்திரன் மனைவியுடன் இசைப்பொருட்டால் பகை கொண்டு பிறரைக்கொண்டு வெல்விக்கக் சுருதி யாழ்ப்பாணத்திருந்து யாழ்வல்ல ஒருத்தியை அரசனால் வருவித்தனள். இவள், அரசனை நோக்கித் தன் கருத்தை அறிவித்துப் பாணபத்திரன் மனைவி எவ்வாறேனும் தோற்றாளென நீர் கூற வேண்டும் எனக் கேட்க, அரசனும் அவ்வாறிசைந்தனன். பின்பு அரசன் பாடுவார் இருவரையும் வருவித்துச் சபை கூட்டிப் பாடுவிக்கையில் தோற்றவர் வென்றவ ரைத்தோளிற் றூக்கவேண்டுமென, உடன் பட்டு இருவரும் பாடினர். அதில் முதன் முறை வென்றவள் பாணன் மனைவியாயினும், அரசன் பாணன் மனைவி தோற்றாள் எனக் கூறியது பற்றிச் சபையிலிருந்த மற்றவரும் அவ்வாறு கூறினர். அரசன் மீண்டும் சபையாரை நோக்கி இவ்வொரு நாளில் வெற்றி தெரியாது ஆதலால் இதை மறுநாளும் நடத்துவோம் எனச் சபை சேர்க்கச் சபையாரும் உடன்பட்டனர். பத்திரன் மனைவி, துன்பமேலிட்டவளாய்ச் சொக்கநாதரைத் துதித்தனள். சொக்கர் கனவிற்றோன்றி நாளை நீ வெல்வை எனக் கூறி மறைந்தனர். பத்திரன் மனைவி களிப்படைந்து மறுநாள் அரசன் கொலுவிற் சென்று நீங்கள் நடுநிலை தவறியிருக்கின்றீர்கள். சொக்கர் சந்நிதியில் வந்து வெற்றி தோல்வி கூறுக என வேண்டினள். அப்படியே அரசனும் மற்றப் புலவரும் உடன்பட்டுச் சொக்கர் சந்நிதியில் பாடத் தொடங்கச் சொக்கர் வித்வானா யெழுந்தருளியிருந்தனர். இரண்டா முறை இருவரும் பாடப் பத்திரன் மனைவி வெல்லச் சபையோர் யாழ்ப்பாணி பக்கம் சொல்ல வாயெழாமல் பத்திரன் மனைவி பக்கஞ் சொல்லினர். அரசினும் தெய்வ சங்கற்பத்தா லவ்வாறு கூறினன், இவரைக் கண்ட சொக்கர் பாணன் மனைவி வென்றனள் எனக் கூறி மறைந்தனர். அரசன் சபதப்படி பத்திரன் மனைவியை யாழ்ப்பாணி மீதேற்றிப் பத்திரன் மனைவிக்கு முதல் மரியாதை செய்து யாழ்ப் பாணிக்கும் வேண்டிய கொடுத்து அனுப்பினன். இவன் குமரன் சகுணபாண்டியன்.

இராசராசேந்திர சோழன்

1. இவன் குல சேகரபாண்டியனுக்குக் குமரியாகிய கமலினியை மணந்து பிரதாபருத்திரனுடன் சண்டை செய்து அவன் நடுநெற்றியிலிருந்த கண்ணைச் சிவமூர்த்திக்கும் கண், உனக்கும் கண்ணா, எனக் குத்தி வென்று தன் மகன் வீரமார்த்தாண்ட சோழனுக்குப் பட்டங் கட்டி எழுபத்தெட்டு வருஷம் அரசாண்டு சுவர்க்கமடைந்தவன். 2. குலோத்துங்க சோழனுக்குத் தந்தை. இவன் கம்ப ரொட்டக்கூத்தர் காலத் தவன்.

இராசவர்த்தனன்

(சூ.) தமன் குமரன்.

இராசாதித்தன்

பராந்தகன் 1. குமரன். இச்சோழன. இவன் பக்தியிற் சிறந்தவன். திருநாமநல்லூரில் ஒரு சிவாலயம் நிருமித்தான். அவ்வூர் இவன் பெயரால் இரா ஜாதித்தபுரம் என வழங்குவதாயிற்று, இவன் மனைவியார் மலை நாட்டரசர் புத்திரி யாகிய மஹா தேவடிகள். இவன் இராஷ்டிரகூடத் தரசனான கிருஷ்ணன் உடன் போர் செய்செய்கையில் உடன் பிறந்தாள் புருஷனான பூதுகனால் கொல்லப்பட் டான் கி. பி. 949 E. P. I. 2. கி. பி. 947 சிங்காசனம் பெற்றவன். இவன் துங்கபத்திரியில் அரசாண்ட இராஷ்ட்ரகூட அரசஞகிய கன்னரதேவனைத் தக்கோலத்தில் ஜெயித்தான். இந்த ராஜாதித்தனைக் கன்னர தேவனுடைய மைத்துனன் பூதுகன் பூதராஜன் வஞ்ச னையால் கொன்றான். இவன் மனைவி இலாடத்தாயன் பிரதிவிபதியின் மகள். இராஜாதித்தன் இறந்தபின் சோழராஜ்யம் கன்னரதேவன் வசமாயிற்று.

இராசாலுவன்

விருகனுக்குத் துருவாக்ஷியிடம் உதித்தவன்.

இராசி

1. சூரியன் தன் வீதியிற் செல்லும் போக்கை நோக்கி ராசி மண்டலத்தைப் பன்னிரண்டு சமபாகங்களாக வகுத்திருக் கின்றனர். இராசி மண்டலத்தின் சுற் மளவு 360 டிகிரி, ஒவ்வொரு சமபாகமும் 30 வீதம், 12 சமபாகங்களமைந் திருக்கின்றன. இவற்றின் முதலிலுள்ள நக்ஷத்ர கூட்டங்களுக்கு மேஷம் என்று பெயர். இவ்வாறே மற்றவை ஒவ்வொரு ராசிக்கும் (24) நக்ஷத்திரம், சூரியன், மேஷராசியில் 1 வது டிகிரியிலிருந்து 30 வது டிகிரி நகர ஒரு மாதமாகிறது. இவ்வாறு சூரியன் மற்ற பதினொரு ராசிகளைக் கடந்து முந்திய மேஷத்தில் வர ஒரு வருஷம் ஆகிறது. ஒவ்வொரு தினத்திலும் ஒவ்வொரு இராசியும் ஒன்றின் பின் ஒன்றாய் 2 மணிக்கு ஒரு ராசி வீதம் கிழக்கில் உதிக்கிறது. இதை லக்னம் என்பர். 2. இராசி பன்னிரண்டு. இவை மேஷம், ரிஷபம், மிதுனம், கர்க்கடம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தநுசு, மகரம், கும்பம், மீனம் முதலியன. இவை சித்திரை முதல் பங்குனி வரையில் முறையே எண்ணப்படும். இவை நாளொன்றில் முறையாக 41/4, 4 3/4, 5 1/4, 5 3/4, 5 1/4, 5, 5, 5 1/4, 5, 5 1/4, 4 3/4, 4 1/2, ஆக நின்று (60) நாழிகையை நிரப்பும். அந்தந்த மாதங்களில் அந்தந்த ராசிகள் முதலாக வரும். மேற்சொன்ன ராசிகள் அவற்றின் பெயர்கொண்ட உருவங்களாம்.

இராசிகளின் உருவங்களும் அங்கங்கள் முதலியவும்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். இவற்றின் உருவங்களும் அங்கங்களுமுறையே, வெள்ளாடு, எருது, ஸ்திரிபுருஷர், நண்டு, சிங்கம், பெண, தராசு, தேள், வில், முதலை, குடம், மீன், அங்கங்கள் தலை, முகம், கழுதிது, தோள், மார்பு, பக்கம், முதுகு, பீஜம், தொடை, முழங்கால், கணுக்கால், பாதம் என்பனவாம். இவற்றின் திக்குகள் மேஷ ருஷபமிதுனம் கிழக்கு. கடகம், சிங்கம், கன்னி தெற்கு. துலாம், விருச்சிகம், தனுசு மேற்கு. மகரம், கும்பம், மீனம் வடக்கு. சாதி கட, விருச், மீன, பிராமணன், சிங், தனு, மேஷ க்ஷத்ரியசாதி, துலா, கும்ப, மிது, வைசியசாதி, கன்னி, ரிஷபம், மகரம் சூத்ரசாதி, மேஷம் வேளாளன், ரிஷபம் இடையன், மிதுனம் சக்கிலி, கடகம் கன்னான், சிங், பிராமணன், கன் நாவிதன், துலாம் செட்டி, விருச் வேடன், தனு தட்டான், மகர வண்ணான், கும்பம் குயவன், மீன பறையன் நிறம் மகர; கன், மிது கறுப்பு, விரு, கும், மீன பச்சை, மேஷ, தனு, சிங் சிவப்பு, ரிஷபம், துலாம், கர்க்கடகம் வெள்ளை. பகல்விழிப்பு சிங்,கன், துலா, விருச், கும்ப, மீன;6. இராவிழிப்பு மேஷ, ரிஷ, மிது, கர்க்கட, தனு, மகர ஆக 6. சரராசி மேஷ, கட, துலா, மகர 4, ஸ்திர ரிஷ, சிங், விரிச், கும்ப ஆக 4, உபயராசி மிது, கன் தனு, மீன ஆக 4, ஆண் அல்லது ஒற்றை மேஷ, மிது, சிங், துலா, தனு, கும்ப, ஆக 6. பெண் அல்லது இரட்டை ருஷ, கட, கன், விரி, மக, ன ஆக 4. இருகால் மிது, கன், துலா, கும்ப ஆக 4. நாற்கால் மேஷ, ரிஷ, சிங், தனு ஆக 4. பலகால் கட, விரு ஆக 2. பறக்கும் ராசி மகரம், மீனம்ஆக 2. தலையுதயம் மிது, சிங், கன், துலா, விரு, கும்ப ஆக 6. இவை பகல் வலியுடையன. காலுதயராசி மேஷ, ருஷ, கட, தனு,மகர ஆக 5. இரா வலியுடைய. உடலுதய ராசி மீனம், சுட்க ராசி மிது, சிங், கன்னி ஆக 3. லக்னத்யாஜ்யம் மேஷ, ருஷ, கன், தனு (1/2) நாழிகை, மிது, சிங், துலா, கும்ப, நடுவில் (1/2) நாழிகை, கர்க்கட, விருச், மகர, மீன, கடையில் (1/2) நாழிகைகளாம்.

இராசியதிபதிகள்

ஆதித்தியனுக்கு வியாழன், சந்திரனுக்கு வியாழனும், புதனும், செவ்வாய்க்குப் புதனுஞ்சுக்கிரனும், இவை நட்பு, அன்னியர் சத்துரு, புதனுக்கு ஆதித்தியன், வியாழனுக்குச் செவ்வாய் சுக்கிரனுக்குச் சந்திராதித்தர், சனிக்குச் சந்திராதித்தர் செவ்வாய் இவை சத்துரு. அன்னியர்மித்துரு. ஸ்திரிபுமான்களுடைய ராசிக்கதிபதி மித்துருவாகிற் பொருந்தும் சத்ருவாகிற் பொருந்தாது. (விதா)

இராசேசபாண்டியன்

இராசேந்திரபாண்டியன் குமரன். இவன் குமரன் இராச கம்பீரன்.

இராசேந்திர சோழன்

குலோத்துங்க சோழனுக்குத் தந்தை, சற்றேறக்குறைய (1000) வருஷத்திற்கு முன்னிருந்தவன். கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தவன்.

இராசேந்திரதேவன்

(கி பி 1052) இவனுக்கு விஜயராஜேந்திரதேவன் எனவும் பெயர். இவனை யானை மேற்றுஞ்சிய பெருமாள் விஜயராஜேந்திரன் எனச் சாசனம் கூறும். இவன் கொல்லாபுரம் கைக்கொண்டு ஒரு ஜயத்தம்பம் நாட்டினான். இவன் குந்தலத்தின் மேல் படை கொண்டு ஆகவமல்லனுடன் போரிட்டு முதலில் சற்று அபஜயப்பட்டுப் பின் வெற்றிகொண்டான். இவன் இந்த யுத்தத்தில் சில யானைகளையும் சாளுக்யவராகக் கொடியையும், சத்தியவ்வை சாங்கப்பையெனும் அவன் தேவிமார்களையும் பிடித்துக்கொண்டான். இவன் ஈழத்தின்மீது படைகொண்டு மானாபரணனையும், வீரசலாமேகனையும் செயித்தான் என்பர். இவன் மகள் மதுராந்தகி முதலாவது குலோத்துங்கனை மணந்தாள். இவன் காலத்து ஓர் க்ஷாமம் உண்டாயிற்று. கலிங்கத்துப் பரணியில் “மனுவினுக்தமும் மடிநான் மடியாஞ்சோழன்” எனவும், விக்ரம சோழனுலாவில் “பாடரவப்பள்ளி மேயார்க்குப்பன் மணியா, லாடாவப் பாயலமைத் தோனும்” எனப் புகழப்பட்டவனு மிவனே. ஸ்ரீரங்கத்தில் இவன் பெயரால் இராஜமஹேந்திரன் திருவீதி என்று ஒன்று ஆக்கப்பட் டிருக்கின்றது.

இராசேந்திரன்

1, பிரம்மாவர்த்த தேசத்திருந்த அரசன் சிவபூசையால் முத்திய டைந்தவன். (சிவரஹ.) 2. இராசேந்திரன் 3. இவன் மூன்றாம் இராஜராஜன் குமரன், கி. பி. 1246 இல் பட்டமடைந்தான். இவன் தன் குமரன் வீரசோமீசுவரனை அதிதாழ்ந்த நிலையில் வைத்திருந்தான். இவன் கேரள பாண்டியர்களை வென்றான். தன் மாமனைப் பகைத்தான். சோழவம்சம் இவனுடன் முடிந்தது. கி. பி. 1251 இல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இராஜாதிராசன் பட்டந் தரித்துக்கொண்டு தான் சோழ வம்சமெனு மலைக்கு இடியேறென்றும் கர்நாடக அரசனாகிய வீரசோமேசுவரனைத் துரத்தியடித்தவனென்றும், காடக தேசாதிபதியாகிய கஜபதிக்குத்தான் ஓர் குளிர்காய்ச்சல் என்றும், விஜயகண்ட கோபாலன் எனும் காட்டுக்குத் தீயெனவும், காஞ்சீபுரத்திற் கதிபனான கணபதி யாகிய மானுக்குப் புலியெனவும் தன்னைப் புகழ்ந்திருந்தவன்.

இராசேந்திரபாண்டியன்

குலபூஷண பாண்டியனுக்குக் குமரன். இவனுக்கு இராசபுரந்தரன் எனவும் பெயர். இவன் காலத்துக் காடுவெட்டிய சோழன் இவனி டம் நட்புக்கொண்டு தன் குமரியை இவனுக்குக் கொடுக்க எண்ணினன். இந்தப் பாண்டியனுக்குச் சகோதரனாகிய இராசசிங்க பாண்டியன் இந்தச் சோழனிடம் வந்து அந்தப் பெண்ணைத் தனக்குக் கொடுக்குக்கும்படிக் கேட்டுத் தான் மணந்தனன், பின்பு சோழன், மருகன் சொல்லால் இராசேந்திர பாண்டியன் மீது படையெடுக்கப் பாண்டியன், சொக்கரை வேண்டினன். சொக்கர் அசரீரியாய்க் கூறிய சொற்கொண்டு பாண்டியன் சண்டைக்குச் சென்றனன். சொக்கர் பாண்டியன் சேனை இளைப்படையாமல் தண்ணீர்ப்பந்தல் வைத்து இளைப்பு நீக்கச் சேனைகள் சோழனது சேனைகளை வென்று சோழனையும் இராசசிங்கனையும் பிடித்துக்கொண்டு வந்தனர். பாண்டியன் சொக்கர் சொற்படி சோழனுக்கு மரியாதை செய்து தம்பிக்குப் பாதிராச்சியம் கொடுத்தனுப்பினன். இவன் குமான் இராசேசபாண்டியன்.

இராச்சியவர்த்தனன்

தமனைக் காண்க.

இராச்சியாபிஷேக விவரணம்

அபிஷேகத்தை அடைய வேண்டிய அரசன், ஒரு வருடத்திற்கு முன்பே வேதசாஸ்திரம் உணர்ந்த புரோகிதரை வருவித்து மந்திரி யருடன் ஆராய்ந்து. உபகரணங்களைச் சேகரித்து ஒரு வருடமானபின் நல்ல முகூர்த்தத்தில் அரசன் அப்யங்கனஞ் செய்து புரோகிதர் முதலியோர்க்கும் அப்யங்கனஞ் செய்வித்து அரசன் உபவாசியாய்த் தன்னாசனத்தில் இருக்க, புரோகிதர், இந்திரன் முதலிய திக்குப்பாலகர்க்குச் சாந்தி செய்து மந்திரங்களுடன் ஹோமம் முதலிய முடித்து விஷ்ணு, இந்திரன், சாவித்திரி, விச்வதேவதைகள் முதலியோரைப் பூசித்து அக்கினிதிக்கிலும், தென்திக்கிலுமாகிய இரண்டு பக்கங்களிலும் இரண்டு கலசங்களைத் தாபித்துப் பூசித்துப் பின் பொன், வெள்ளி, தாம்பிரம், மண்ணிவற்றாலாகிய கலசங்களை நான்கு திக்கிலும் ஸ்தாபித்து அவற்றைப் பூசித்தல் வேண்டும். பின் பர்வதத்தின் உச்சியின் மண்கொண்டு அரசனது உச்சியினையும், புற்று மண்கொண்டு, இரண்டு காதுகளையும், விஷ்ணு ஆலயத்தின் மண்ணால் முகத்தினையும், இந்திராலயத்தின் கிழக்குத் திக்கின் மண் கொண்டு கழுத்தினையும், யானையின் தந்தத்திலுள்ள மண்ணினால் தக்ஷிண புஜத்தினையும், இடப்பக்கத்தின் கொம்பிலுள்ள மண்ணினால் வலது புஜத்தினையும், குளத்தின் மண்ணால் பிருஷ்டத்தினையும், நதிசங்கமத்தின் மண்ணினால் வயிற்றினையும், இரண்டு தடங்களின் மண்களால் பார்ச்வங்களையும், வைசியன் வாயிற்படி மண்ணினால் கடிப்பிரதேசத்தினையும், யஞ்ஞஸ் தானத்திலுள்ள மண்ணினால் தொடைகளையும், பசுவின் கொட்டில் மண்ணால் முழங்கால்களையும், குதிரை கட்டுமிடத்து உள்ள மண்ணால் கணுக்கால்களையும், இரதத்தின் சக்கரத்து அடிமண்ணால் பாதங்களையும் தேய்த்துச் சிரசினைப் பஞ்சகௌவியத்தால் அபிஷேகஞ் செய்வித்துப் பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திரராகிய நான்கு மந்திரிகளும் நான்கு திக்கிலும் ஸ்தாபித்துள்ள கலசங்களில் பிராம்மண மந்திரி பொற்கலசத்திலுள்ள நெய்யினா லும், க்ஷத்திரிய மந்திரி வெள்ளிக் கும்பத்திலுள்ள பாலினாலும், வைசிய மந்திரி தாமிர கும்பத்திலுள்ள தயிரினாலும், சூத்திரமந்திரி மட்குடத்திலுள்ள சலத்தினாலும் அபிஷேகிக்கவேண்டும். பின் வேதியர்கள் தேன் முதலியவற்றாலும், தருப்பையின் ஜலத்தாலும், அபிஷேகித்து அரசனுக்கு இராஜ்ய சித்தியின் பொருட்டு வேதமந்திரங்களால் அக்கினிகாரியம் செய்து சகஸ்திரதாரையுள்ள பொற்றாம் பாளத்தால் சர்வ ஓஷதிகள் நிறைந்துள்ள கும்பத்தினை எடுத்து அபிஷேகித்துச் சகல புண்ணிய தீர்த்தங்களாலும் அபிஷேகிக்கக் கடவர். பின் அரசன், விஷ்ணு, இந்திரன் முதலியவரையும் கிருகதேவரையும் பூசித்துப் பஞ்சசருமத்தின் மேலிருக்கப் புரோகிதர் ராஜ்யசித்தியின் பொருட்டுப் பட்டங்கட்டவேண்டும். பட்டம் அடைந்த அரசன் புரோகிதர்க்கு வேண்டிய அளவு தானாதிகளைச் செய்து பசுவினைப் பூசித்துக் கஜாரூட அசுவாரூடனாய்த் தானாதிகளைச் செய்து தன்நகரத்தை வலம்வரல் வேண்டும்.

இராஜகீய பத்திரம்

கட்டளையிடுதல், அறிவித்தல், தீர்மானித்தல், என (3) வகைப்படும். (சுக் நீ.)

இராஜகுலோத்துங்கபாண்டியன்

மதுரையாண்ட (33) வது பாண்டியன்,

இராஜகேசரி அல்லது அரசகேசரி

ஈழநாட்டரசன் ரகுவம்சம் தமிழிற்செய்தோன்.

இராஜகேசரி இராஜாதிராஜன்

இவன் இராஜேந்திர சோழனுக்குப்பின் பட்டத் திற்கு வந்தான். இவன் கி. பி. 1018 இல் பட்டமடைந்தான். இவன் மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் எனும் பாண்டியருடன் போரிட்டு மானாபரணன் தலையைக் கொய்து வீரகேரளன் தலையை யானையால் மிதிப்பித்துச் சுந்தரபாண்டியனை முல்லையூர்புகச் செய்தனன். வேணாட்டரசன் ஒருவனைச் செயித்தான். இவன் காந்தளூர்ச்சாலையில் கலமறுத்தான். இவன் குந்தவரின் அரசனாகிய ஆகவமல்லனையும் அவன் குமரர் சேனாபதிகளையும் வென்றான். பின் ஈழத்தின் மீது படை கொண்டு சென்று விக்ரமபாகு, விக்ரம பாண்டியன் என்பவர்களை வென்றான். பின்னும் குந்தளருடன் போரிட்டுக் காம்பிலியைப் பிடித்துக்கொண்டு கொப்பத்தில் போர்புரிகையில் இறந்தான். இவனுக்கு ஜயங்கொண்ட சோழன் எனவும் பெயர். இவன் தம்பி இராஜேந்திர தேவன்.

இராஜகோபாலப்பிள்ளை

இவர் சென்னை கோமளீசுரன் பேட்டையில் பிறந்த வடுகு யாதவர் குலத்தவர். அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்களிடத்தும், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியாரவர்களிடத் தும் கல்வி கற்றவர். சென்னை சர்வகலா சாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடத்தியவர். இலக்கண இலக்கியங்களில் வல்லவர். தமிழில் எம்பார் ஜீயர் வைபவம் பாடியவர். நாலடியார், நீதிநெறி விளக்கம், பாரத வெண்பா முதலியவற்றிற்கு புத்துரை எழுதினவர். எனக் கியற்றமிழாசிரியர்.

இராஜசிங்ரானா

இவன் அமரசிங்கின் குமரன், சித்தூர் ரானாக்களில் ஒருவன். ஜிஹாங்கிர் கட்டளைக் குட்பட்டுச் சித்தூரை ஆண்டவன். இவன் காலத்து ஔரங்கசீப் எனும் முகல் அரசன் ரூப நகரத்து ராஜபுத்ரியைத் தான் கொள்ள இச்சித்தான். ராஜகுமாரி ராஜசிங்குக்குக் கடிதமெழுதித் தன்னைக் காக்கக் கூறினாள். உடனே அம்பர் நாட்டு ஜயசிங்கம் மார்வார்நாட்டு யசஸ்வந்தசிங்கும் துணையுடன் சென்று முகம்மதியரை வென்று ராஜகுமரியை மீட்டனர். இதனால் ஒளரங்கசிப் ஜசியா தலைவரியை இந்துக்களுக்கு விதித்தான். ஒளரங்கசீப் ரானாவைத் தாக்கப் பெருஞ்சேனை சேர்த்துத் தன் பிள்ளையை அனுப்ப அவன் ராஜபுத்திரர்களுடன் வேண்டி யுயிர்தப்பி ஓடினன், ஒளரங்கசீப் பலமுறை ரானாவை யெதிர்க்க எண்ணியும் வஞ்சனை செய்தும் நிஷ்பலமாயிற்று. ராஜசிங் தன்காலத்தில் பன்னிரண்டு மைல் சுற்றளவுடையதும் அதிக உறுதியுமுள்ள ரானாராஜ சமுத்ரமெனும் ஏரியைக் கட்டினான். ராஜநகர் எனும் பட்டணமும் கட்டப்பட்டது. இவனுக்குப்பின் வந்த ரஜபுத்ர அரசர் சிந்தியா ஹோல்கார் எனும் மராட்டியரால் துன்புற்று ஆங்கிலேயரால் ராஜ்யம் பெற்றனர்.

இராஜசூயம்

ஒரு யாகம் தர்மரால் செய்யப்பட்டது.

இராஜசூயம் வேட்டபெருநற்கிள்ளி

உலோச்சனாராற் பாடப்பட்ட சோழன்.

இராஜதர்மம்

அரசன் திக்குப்பாலகர் சுயரூபம் ஆதலால் அனைவரையும் அடக்கி ஆளும் சக்தி அவனுக்கு உண்டாயிற்று. அரசன் காரியாகாரியங்களையும், தேசகா லங்களையும் எண்ணி அடங்கியும் பலமுள்ள போது உயர்ந்தும் வருவான். அரசனை ஒருவனும் அவமதிக்கக்கூடாது, அவன் கையிற் கொள் கோல் சகலபிராணிகளின் ரக்ஷகத்தின் பொருட்டாம். அது ஈசுவர சுவரூபமாகவும் சராசரங்கள் அஞ்சத்தக்கதாகவும் இருக்கிறது. அரசன் தண்டத்தை ஆளாவிட்டால் பொருள், பசு, தானியம், ஜாதி, யஞ்ஞம், அழியும். அத்தண்டத்தைப் பட்டாபிஷேகம் உள்ளவனும், உண்மை பேசுகிறவனும், பொய், மெய் இவைகளையறிந்து தீர்மானிப்பவனும், நீதிசாஸ்திரஞானம் உள்ளவனும், தர்மார்த்தகாமங்களை அறிந்தவனும் பெற வேண்டும். அரசன் நாடோறும் நீதிசாத்திரம் அறிந்தோரை உபசரித்து நீதிசெலுத்த வேண்டும். இந்திரிய நிக்ரகஞ்செய்த அரசனுக்கு உலகம் வசப்படும். காமத்தால் உண்டான வேட்டையாடல், சூதாடல், பகலுறக்கம், வம்பளத்தல், ஸ்திரீலோலனாயிருத்தல், குடித்தல், பாட்டு, கூத்து, வாத்தியம் இவைகளில் விருப்பங்கொளல், வீண்திரிச்சல் ஆகிய பத்தும், கோள், துணிவு, துரோகம், பொறாமை, பிறன் குணத்தைச் சகியாமை, ஒருவன் பொருளை அபகரித்தல், காரணம் இன்றி அடித்தல், திட்டுதல் ஆகிய எட்டையும் ஒழித்தல் வேண்டும். தன் பாட்டன் நாள்முதல் மந்திரித்தனம் செய்தார் மரபில் கலைவல்லா ராகிய எழு எட்டுப் பெயரைத் தெரிந்து, மந்திரியராக்கிக் கொள்ளல் வேண்டும். பொருளை விருத்தி செய்பவராயும், ஞான முள்ளாராயும் உள்ள வேறுசிலரை பொக்கிஷ முதலான இடங்களில் நியமிக்க வேண்டியது. பலம், சாமர்த்தியம், நற் குலப் பிறப்புள்ளவர்களைப் பொக்கிஷம், தங்கசாலை, நெற்கள முதலிய இடங்களில் நியமிக்க வேண்டியது. பயந்தோரை மடைப் பள்ளியிலும் அந்தப்புரத்திலும் இருத்த வேண்டியது. கல்வி அறிவுள்ள தூதனை அழைத்துக்கொள்ள வேண்டியது. ஆயுத வித்தையில் பழக்கமுள்ள சேனையைச் சேனாதிபனிடத்தும், தேசவிசாரணை பொக்கிஷம் முதலியவற்றைத் தன்னாதி னத்திலும், சண்டை செய்வதும் சமாதானமாவதும் ஆகிய இரண்டையும் தூதனிடத் தும் நியமிக்க வேண்டியது. தன் பட்டணத்திற்குச் சமீபத்தில் உபரோமங்களை ஏற்படுத்த வேண்டியது. தனக்காகப் பல அரண்களுள்ள கோட்டைகளையும் மனை யையும் கட்டிக்கொள்ளல் வேண்டும். தான் வாங்கவேண்டிய தீர்வையை ஆறிலொன்று வாங்கி அவற்றைத் தேவர்கோயில் தேசரக்ஷணத்திற்கு உபயோகித்தல் வேண்டும். பூமியைச் சாமபேத தான தண்டங்களால் பகைவரை அடக்கி ஆளவேண்டும். துஷ்ட நிக்கிரகம் சிஷ்டபரிபாவனம் செய்தல் வேண்டும். மூடத்தனத்தால் பெரியோரைப் பகுத்தறியாமல் துன்பப்படுத்துகிறவன் புத்திரமித்திர களத்திராதிகளுடன் அழிகிறான். அரசன் கடன் கோடல் முதலிய பதினெட்டு வகைத்தாகிய வழக்கத்தையும் புத்தி நுட்பத்தால் அறிந்து தீர்க்க. (மநு)

இராஜபுரம்

கலிங்கதேசத்தில் உள்ள பட்டணம், சித்திராங்கதன் ஆண்டது.

இராஜமந்தசர்ப்பம்

இது உடல் மினுமினுப்புடன் மந்த நடைபெற்றது.

இராஜராஜன்

1. (இராஜகேசரி) இவன் காந்தளூரில் கப்பல்களைத் தாக்கினான். அமரபுஜங்கன் எனும் பாண்டியனை வென்றான். பிறகு கங்கபாடி, நுளம்பபாடி, வேங்கைநாடு, குடகு முதலியவற்றையும் கைக்கொண்டான். கி. பி. 1006 இல் கவி யூரில் இவன் சேநாபதி கொத்தமண்டல முடையானான அப்பிரமேயன் போஜன் மந்திரியாகிய நாகண்ணனை வென்றனன். இதில் தானு மிறந்தான். இவன் (கி. பி. 972) இல் தன் மகன் வேங்கைநாடு அரசிலாமை யிருப்பது கண்டு தன் மகன் இராஜேந்திரனை அனுப்பி அந்தாட்டைத் தன் வசப்படுத்தினான். இராஜேந்திரன் அந்நாட்டுடன் சாளுக்கிய அரசனான விமலாதித்தியனைப் பிடித்துச் சிறையாக்கித் தஞ்சைக்குக் கொணர்ந்து சிலநாள் பொறுத்துத் தங்கை குந்தவ்வையை இவனுக்கு மணஞ் செய்வித்து அவனாட்டைத் தந்தான். 2. இவனது தண்டநாயகரில் ஒருவனான பஞ்சவமாராயன் பனசோகேயெனும் இடத்தில் வெற்றி கொண்டதினிமித்தம் தண்டநாயகனை வேங்கைமண்டலம், சங்கமண்டலாதிபதியாக்கி கூத்ரிய சிகாமணி, கொங்காள்வான் எனப் பட்டமு மளித்தான். கொல்லமென்னும் மலை நாடும். இராஜராஜனால் செயிக்கப்பட்டது. இவனால் ஈழமும் செயிக்கப்பட்டது. இவன் பாண்டி, சேர, ஈழமண்டலங்களை வென்றதால் இவனுக்கு மும்மடிச் சோழன் என ஒரு பெயர் உண்டு. இவன் காலமுழுதும் மேற்குச் சாளுக்கியருடன் போரிட்டான். இவனுக்குச் சீவபாதசேகரன், அருண்மொழி, இராஜாச்ரயன், க்ஷத்ரியசிகாமணி யெனவும் பெயருண்டு, இவலுக்கு, பஞ்சவண்மாதேவி, அபிமானவல்லி, சோழமாதேவி, தந்திசத்திவிடங்கி, திரைலோகயமாதேவி என ஐவர் தேவியர். இவன் குமரன் பரகேசரி ராஜேந்திர சோழன், இருவர் குமரியர் சந்தவ்வை, மாதேவடிகள், நடுவிற் பெண்ணையென மற்றொருத்தி இருந்ததாகத் தெரிகிறது. 3. இவன் தன்னாட்சியின் 29 ஆம் வருஷத்தில் துலாபார தானஞ் செய்தான். இவன் தர்மபத்தினியாகிய தந்திசக்தி விடங்க இரண்ய கர்ப்பம்புக்க கதையைத் திருவிசலூர் சாசனம் கூறும். இவன் தஞ்சையில் இராஜராஜேசுரர் ஆலயம் கட்டுவித்தான், இவனைப் புகழ்ந்து கருவூர்த் தேவர் பதிகத்தில் பாடியிருக்கிறார். இவன் தமிழ்ப் பாஷாபிமானி இவன்மீது இராஜ ராஜேசுர நாடகம் பாடப்பட்டது. நம்பியாண்டார் நம்பிகளும், கண்டாரதித்ததேவரும் இவன் காலத்தவர்கள். இவன் சைவப் பற்றுள்ளவனாயினும் மற்ற மதங்களில் வெறுப்புற்றவனல்லன். இவன் நாகப்பட்டி னத்து ஜைனவிஹாரத்திற்கு ஆனைமங்கல மென்று ஒரு கிராமமளித்தான், வைஷ் ணவாலயங்களுக்கும் நந்தாவிளக்குகள் பல வைப்பித்தான். இவனது முக்ய மந்திரி ஸ்ரீகிருஷ்ணன் ராமனான மும்மடிச்சோழ பிரம்மமாராயன். இவன் குடிகளிடம் ஆறிலொரு கடமையே வாங்கினான். (சாசனம்.)

இராஜாதி ராஜபாண்டியன்

மதுரையாண்ட 20 வது பாண்டியன்.

இராஜாதேவி

வாசுதேவன் தங்கை, ஜயசேநன் பாரி, விந்தானுவிந்தாதாய்.

இராஜு

இவர்கள் தெலுங்கரில் ஒரு பிரிவினர். இவர்கள் பூணூல் தரிப்பர் இவர்கள் தங்களை க்ஷத்ரியர் என்பர். இவர்கள் தெலுங்ககாபு, வெலமர்கள். இவர்கள் தாங்கள் வீரர் என்பதைக் குறிக்கத் தங்கள் கல்யாணத்தில் வாளைவைத்து வணங்குவர்.

இராட்சடப்பிரத்து

பாதருக்குப் பஞ்சசேனியிடம் உதித்த குமரன்.

இராணுகாதீர்த்தம்

இது ஒரு தீர்த்தம் பாண்டவர் வனவாசத்தில் தீர்த்தமாடியது. பாஞ்சாலத்திலுள்ளது. (IN THE PUNJAB, ABOUT 16 MILES NORTH OF N AHAN.)

இராதாதேவி

இவள் பிரகிருதி யம்சம், இவள் கோலோகத்தில் ராசமண்டலத்தில் கார்த்திகைமாத பூரணையில் கிருஷ்ணமூர்த்தியால் பூசிக்கப்பட்டுப் பின் கோபிகை கள் முதலியவர்களால் பூசிக்கப்பட்டனள், (தேவி~பா.)

இராதாவல்லபமதம்

இதனை ஹிதஹரி வம்சாசார்ய மதமெனவும் கூறுவர். விக் ரமசகம் (1559) இல், அர்ஷபூர் ஜில்லாவைச் சேர்ந்த தேவவனத்தில் இருந்த கௌடப் பிராமணன் புத்திரனில்லாது வருந்துகையில், டில்லிச் சக்ரவர்த்தியினிடம் உத்யோகத்தால் தன்னூர் விட்டுப் போகையில் வழியில் தன் தேவி கருக்கொண்டு மதுராபுரிக் கருகிலுள்ள தேவவனத்தில் ஒரு புத்திரனைப் பெற்றாள், இப் புத்திரனுக்கு அரிவம்சன் என்று பெயரிட்டனர். இவனுக்கு யுக்த வயசில் ருக்மணியென்பவளை விவாகஞ் செய்தனர். அந்த ருக்மணியிடம் இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒருபெண்ணும் பிறந்தனர். மூத்தவன் பெயர் மோகனசந்திரன். இவனுக்குச் சந்ததி இல்லை. இளையவன் கோபிநாதன் இவர்களை விட்டுச் சந்நியாசம் பெற வருகையில் வழியில் ஒரு விருத்த வேதியர் தன்னிரண்டு குமாரத்திகளையும் ‘மணஞ் செய்துகொள்ளும்படி தேவாஞ்ஞை இருக்கிறபடியால் அவ்வாறு செய்து கொள்க என உடன்பட்டு மணந்து அந்த வேதியர் கொடுத்த இராதாவல்லப சுவாமியைப் பிருந்தாவனத்தில் பிரதிட்டை செய்தனர். இம்மதத்தவர் கிருஷ்ண உபாஸகர், கழுத்தில் துளசிமணி தரிப்பர். இவர்களுக்கு ஏகாதசியில் தாம்பூலம் தரித்துக்கொள்ளக் கிருஷ்ணாஞ்ஞையுண்டு.

இராதி

செய்சேனன் குமான், இவன் குமரன் அனுபாவுகன்.

இராதிதேவி

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி. இவள் சயஸ்துசயனை மணந்தாள், இவள் குமரர் விந்தானு விந்தர்.

இராதை

1. கண்ணன் தேவியரில் ஒருத்தி. 2. அதிரதன் என்னும் தேர்ப்பாகன் தேவி. கர்ணனை வளர்த்தவள்.

இராநித்திரைபங்கவிதி

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலச்சோர்வு, சுட்கம், பயம், அக்கினிமந்தம், முதலிய நோய்கள் மெத்தவும் நம்பிக்கையாகத் தொடரும். இத்திரையில்லாதவரைப் பற்பல நோய்கள் கவ்விக்கொள்ளும்.

இரானஹமீர்

இவன் சித்தூர் ரானாவாகிய லக்ஷ்மணசிங்கின் பௌத்ரனும் ஆர்சிங் கின் குமரனுமாகிய இராஜபுத்திர அரசன், சித்தூரை ஆண்டவன். அலாவுதீன் சித்தூரை முற்றுகை செய்த காலத்தில் தப்பியோடிய அஜேசிங் ஹாராவளி மலைப் பிரதேசங்களின் பள்ளத்தாக்குகளின் மேட்டில் கட்டப்பட்ட கைல்வாரா என்னும் பட்டணத்தில் வசித்துவந்தான். இதிலும் முஞ்சன் எனும் மலைநாட்டாசன் இவனை அடிக்கடி வருத்தி வந்தான். இது அஜேசிங்கிக்கு மிக்க வருத்தம். இதனைக் கண்ட சகோதரன் குமாரனாகிய ஹமீர், முஞ்சனை வென்றல்லது திரும்பேன் எனச் சபதஞ்செய்து புறப்பட்டுச்சென்று சில நாட்களில் முஞ்சன் தலையை வில்லின் முனையில் தூக்கிக்கொண்டு சிற்றப்பனிடம் திரும்பினன். சிற்றப்பன் களிப் படைந்து இவனுக்கே தன் முடியைச் சூட்டினான். இவனுக்குத் தன் பிதுரார் சிதமான சித்தூரைக் கைக்கொள்ள வேண்டும் எனும் எண்ணமுண்டு, பலமுறை இவனது சைந்யங்கள் சித்தூரையடுத்த இடங்களை நாசப்படுத்திக்கொண்டு வந்தன. இந்த உபத்திரவத்தைச் சகியாத அலாவுதீனால் நியமிக்கப்பட்ட சித்தூர் அரசனாகிய மால்தேவன் தனது குமரியை ஹமீருக்கு மணம் செய்விக்க வேண்டு மென்ற எண்ணங்கொண்டான். அவ்வாறோ மணமுடிந்தது. ஹமீரின் மனைவி கணவ னுடன் கைல்வாராசென்று கருப்பிணியாய்க் கருவுயிர்த்தபின், சித்தூரிலுள்ள தங்கள் குலதேவதைக்குச் சிறப்புச்செய்ய வந்தனள். அந்தச் சமயத்தில் மால்தேவ னாகிய தந்தை சித்தூரைவிட்டு வெகுதூரத்தில் நடக்கும் போருக்குச் சென்றி ருந்தான். இது தக்க சமயமென்று ஹமீரின் மனைவி கணவனுக்கறிவிக்க, ஹமீர் சேனைகளுடன் வந்து தங்களது புராதன ராஜதானி சித்தூரைக் கைப்பற்றினான். இதில் முகம்மதியர் தூரத்தப்பட்டு முகம்திய அரசனும் சிறையாக்கப்பட்டான். மால்தேவன் குமரனுக்கு ஒரு ஜாகீர் கொடுக்கப்பட்டது. இவன் காலத்திலும் இவனுக்குப் பின் வந்த கைத்சிங், லக்கா என்பவர்கள் காலத்தில் இராஜபுத்ர அர சாட்சி பிரபலப்பட்டது. இவன் காலத்தில் அதிக திரவியச்செலவால் பல ஜயத் தம்பங்களும் மகம்மதியரால் இடிக்கப்பட்ட பல தேவாலயங்களும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.

இரானாகும்பன்

இவன் சித்தூரை ஆண்ட, ரானாலக்காவிற்குப் பௌத்திரனும் ரானா மொகல் என்பவனுக்குக் குமரனுமாகிய இரசபுத்ர அரசன். இவன்கி. பி. 1419 இல் சிங்காசனம் ஏறினான். இவன் தன் ராஜதானியைக் காக்கும் பொருட்டு (86) கோட்டைகளைக் கட்டினான். அவற்றுள் ஒன்று செங்குத்தான மலைமீது கட்டப்பட்ட கோமல்மர் கோட்டை, இவன் ஆபு சிகரத்திலுள்ள கோட்டையிலு மிருப்பதுண்டு இங்குள்ள கோவிலில் இவன் உருவச்சிலை உண்டு. இவன் கட்டுவித்த கோவில்களில் பெரிது ஸாத்ரிக்கணவாயி லுள்ளது. இவனும் இவன் மனைவியும் கல்வி விருப்பமுள்ள கவிஞர்கள், இவன் கீதகோவிந்தமெனும் நூலுக்குப் பாஷ்யம் எழுதினான். இவன் மனைவி மீராபாய், இவன் மகாவீரன் மால்வா, குஜராத் சைந்வங்களை முரியடித்தான். மாமூதைச் சிறையிட்டான். இவன் மாமூதை தயாளகுணத்துடன் அவனிடம் ஒன்றும் பெறாமல் விடுதலை செய்வித்தான். இவனுடைய பெருங்குணத்தை அபுல்பேசல் எனும் சரித்திரக்காரர் புகழ்ந்திருக்கிறார். இவன் காலத்தில் இவனால் கட்டுவிக்கப்பட்ட ஜயத்தம்பம் இன்னும் காணப்படுகிறது. இந்தச் சயத்தம்பம் கட்டிமுடிக்கப் பத்து வருஷங்களயினவாம். இவ்வாறு ரானா கும்பன் (50) வருஷம் அரசாண்டான். இவன் ஆட்சியில் ஐம்பதாவது வருஷக் கொண்டாட்டம் நடத்த இருக்குந் தரு ணத்தில் இவன் மகன் இவனைக் குத்து வாளால் குத்திக்கொன்றான். இக்குடி கெடுக்கவந்த குடிகேடி இடிவிழுந்திறந்தான். இவன் குமரர் ரேமால், ஸங்கன் முதலிய நால்வர்.

இரானாசங்கன்

இவன் கி. பி. (1509) இல் பட்ட மடைந்தவன். ரானா கும்பன் குமரர்களிலொருவன். இவன் தன் ராஜ்யத்தை வெகுதூரம் விசாலப்படுத்தி ஆண் டவன். நிலையிலாது அலைந்து திரிந்த தார்த்தாரிய அரசனாகிய பாமர், டில்லியாச னாகிய இப்ரீமை வென்று ராஜபுத்ர அரசஞாகிய ரானாசங்கனுடன் போரிட்டு முதலில் தோல்வியடைந்து பிறகு தன் சேனைகளுக்குத் தைரியம் கூறிப்போரிட்டு வெல்ல, சங்கனும் மானத்தை விடாமல் போரிட்டான். முன்பு தன்சகோதரனுடன் செய்த யுத்தத்தில் ஒரு கண் போய்விட்டது. டில்லி அரசனுடன் செய்த யுத்தத்தில் ஒருகை விழுந்துவிட்டது. ஒரு குண்டு அடிபட்டதனால் காலும் குறைந்துவிட்டது. சரீரமுழுதும் ஆயுதங்களால் (80) இடங்களில் புண்கள் ஆயின. இவ்வகைப் புறங்கொடாவீரன், வெற்றிபெறாமல் சித்தூருக்குள் நுழைவதில்லையென அருகி ருந்த மலைநாட்டி லிருந்தான். இவனுக்குப் பிறகு இவன் குமரன் ரத்நன் பட்ட மடைந்தான். இவனும் தம்முன்னோர் கௌரவம்போல் வீரதீர முள்ளவன் இவன் பிரிதுவிராஜ குமரியைக் களவாக மணம்புணர வெண்ணித் தன் வாளைத் தனக்குப் பிரதியாக வைத்து, மணஞ்செய்து கொண்டான். இச்செய்தி ரகசியம். பின்பு அவளைப் பூண்டி நாட்டரசன் ஹரன்மணம் தான். அவ்வரசியும் களவைப்பற்றி வெளியிடவில்லை. இது ரத்நன் மனதை வருத்தி ஹரனைக் கொலை செய்யக் காலத்தை நோக்கியது. அகைரியா வசந்த பண்டிகையில் அரசர்கள் தங்கள் காட்டில் வேட் டையாடும் வழக்கம்போல் ரத்நன் தன்னாட்டை யடுத்துச் சென்று அதற்கடுத் திருந்த பூண்டிக் காட்டில் ஹரனைக் கொல்ல ஒளித்திருந்து ஹரன் மீது ஒரு அம்பு விட்டான். அது அவனைக் கீழே வீழ்த்தியது. ஹரன் வஞ்சகப்போர் செய்த ரத்ந னைத் தூஷித்தான் தூஷணை பொறாத ரத்நன் இவனைக் கொன்றே நீங்கவேண்டு மென்று சமீபிக்கையில் சாகுந் தருவாயிலிருந்த ஹான் தன் கால்களால் ரத்நன் குதிரையைத் தாக்க ரத்நன் நிலை தவறிக் கீழே வீழ்ந்தான். உடனே ஹரன் உயிரைப் பிடித்துக் கொண்டெழுந்து ரத்நன் மீது பாய்ந்து பழிக்குப் பழி வாங்கினான். ரத்நன் சகோதரனாகிய விக்ரமஜித் இவனுக்குப் பிறகு பட்டமடைந்தான்.

இரானாலக்கா

சித்தூர் இராஜ புத்திர அரசனாகிய ரானா ஹமீரின் குமரன். இவன் அரசாண்டிருக்கையில் இவன் குமரன் சண்டனை இளவரசனாக்கினன். சண்ட னுக்கு மாண்டாரா நாட்டரசனிடமிருந்து முகூர்த்த தேங்காய் வந்தது. அக்காலத்துச் சண்டன் ஊருக்கு வெளியில் சென்றிருந்ததால் காய்கொண்டு வந்தவர்களை லக்காதானே உபசரித்து என்னைப் போன்ற கிழவனுக்குத் தேங்காய் கொண்டு வரவில்லையென மீசை மீதுகைபோட்டு அவர்களைப் பார்த்துச் சொன்னான். சண்டன் திரும்பி வந்ததும் இவ்விஷயங்களைத் தெரிந்து தந்தைக்கு மண ஆசை யிருப்பதறிந்து தான் தேங்காயை ஏற்பதில்லை. அதனைத் தந்தையே ஏற்கவேண்டும் என்றனன், ஆயின் எனக்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்கே முடிசூட்டி வைக்க வேண்டுமெனச் சண்டன் சபதஞ் செய்தபின் லக்கா மணஞ்செய்து கொண்டான். 1 வருஷத்தில் மொகல் பிறந்தான்.

இராமகண்டர்

சைவசித்தாந்த பத்ததி செய்தவர்களில் ஒரு ஆசிரியர்,

இராமகவிராயர்

திருவாய்ப்பாடிப் புராணம், சாரப்பிரபந்தம் முதலிய செய்தவர். பிரம்பூர் ஆனந்தரங்கனைப் பாடிப் பரிசு பெற்றவர்.

இராமகிருஷ்ணன்

கிருஷ்ணதேவராயர் சமஸ்தானத்து வித்துவான்கள் எண்மர் களில் ஒருவன், விகடகவி. இவன் பிறந்தவூர் தெனாலி. இவனுக்குத் தெனாலிராமன் எனவும் பெயர்.

இராமசந்திரகவி

தொண்டை நாட்டில் இராசநல்லூரிற் பிறந்து சென்னபட்ட ணத்தில் வசித்தவர். இவர் காலம் சற்றேறக்குறைய (90) வருடத்துக்குமேல் இருக் கலாம். இவர் பாரத கதைகளை விலாசமாகப் பாடினவர். இவர் செய்த வேறு நூல்கள் இரண்ய வாசகப்பா, இரங்கன் சண்டை நாடகம், சகுந்தலை விலாசம், தாருக விவாசம் முதலிய.

இராமசந்திரபட்டர்

அமளாள கிராமத்திலிருந்த அரசனது ஆசிரியரான வேதியர், அரிபக்தி மிகுந்தோர். இவர் அரசனுக்கா சாரியராயிருந்தும் பொன் முதலியவற்றில் வெறுப்புற்று நாடோறும் பிக்ஷை பெறுவர், இவரது செய்கையறிந்த அரசன் மனைவி, பட்டரின் தேவியாரை வருவித்து வேண்டிய மணியும் பொன்னும் தந்து பிக்ஷை செய்யாதிருக்க என, அதைக் கொண்ட அம்மையார் கணவர்க் கறிவித் தனர். பட்டர், இதில் விருப்புளதேல் நம்மைப் பெருமாள் அடையார் என்று கொடுத்த மணி, பொன் முதலியவற்றை நித்யாக்னியி லிட்டனர். இதனைக்கேள்வி யுற்ற அரசன், ஆசிரியரையடைந்து தாம் கொடுத்தமணி, பொன்களைக் கேட்கப் பட்டர் பெருமாளை வேண்ட அவை முன்னிலும் ஒளிகொண்டு ஓம குண்டத்தில் தோன்றின. இதை அவர் அரசனுக்குக் கொடுக்க அரசன் கொடுத்தவைகளைப் பெறேன் எனப் பட்டர் அதனைப் பலர்க்குத் தானஞ்செய்து அரிபத மறவாதிருந்தனர். (பக்தமாலை).

இராமசுவாமிபிள்ளை

இவர் பாண்டி நாட்டு இராமநாத புரவாசி, பின்னர் மதுரையில் வசித்தனர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்துச்சீடர். இலக்கிய இலக்கணங்களிலும் சைவசித்தாந்த சாத்திரங்களிலும் தேர்ச்சியுடையர். கம்பரந்தாதி. முல்லையந்தாகி, திருவிளையாடற் புராணம் முதலியவற்றிற்கு உரை கண்டவர்.

இராமசோமயாஜி

கூரத்தாழ்வானுக்குத் தந்தை.

இராமதாசர்

இவர் ஒரு வேதியர், தடாங்கூரிலிருந்தவர். துளசி வளர்த்து நூற் றைம்பது கோச தூரத்திலிருக்கும் கண்ணனுக்குக் கைங்கர்யம் செய்து வருபவர். இவ்வாறு ஐந்து வருடம் நீங்க ஒருநாள் போகுதல் ஒழிந்து பின்னர் துவாரகை சென்று கண்ணனைநோக்கி என் மூப்பினால் வருதல் ஒழிந்தனன், இனி அவ்வாறு நான் வராதொழியினும் பொறுக்க வேண்டுமென்று திருவடியைப் பிடித்து வேண்ட, கண்ணன் தரிசனந்தந்து மார்புடன் தழுவி உனக்கு யான் கடன்காரனாயினேன் என்னை உன்னுடன் அழைத்துச்செல் என்ன, தாசர், உன்னை எப்படி அழைத்துச் செல்வேன் என்ன, இப்போது ஒரு தேர் தோன்றும் அதில் ஏற்றிச் செல்கவென்ன அவ்வாறு ஏற்றித் தம்மூர் செல்கையில் வழியில் கண்ணனை நோக்கி உம்மை அர்ச்சகர் தேடி என்னிடம் வரில் என் செய்வேனென்னப் பெருமாள், சும்மாயிருத்தல் கண்டு தாசர் தம்மனை புகுந்திருந்தனர். அர்ச்சகர் பெருமாளைக் கோயிலில் காணாமல் தாசர் எடுத்துப் போயிருக் கலாமென்று சிலர் கூறக்கேட்டுத் தாசரிடஞ் சென்று கேட்கையில் வரவறிந்த தாசர் பெருமாளை ஓர் கிணற்றிலிட்டு நானறியேன் என்றனர். அர்ச்சகர்கள் இவர் வீடுமுழுதுந் தேடிக் காணாது கிணற் றில் ஒருவேளை இருக்கின்றனனோ வென்று தேடிக் கண்டு எடுத்துச் செல்கையில் தாசர், என்னைவிட்டு நீங்குகின்றாயோ எனத்துக்கிக்க நான் உன் வீட்டில் எக்காலத்து மிருக்கின்றேன் விசனப்பட வேண்டாமென்ன, அர்ச்சகர் தேரிலிருக்கும் நீ என்னிடம் எவ்வாறு வருவாயென்று தாசர் கேட்கப் பெருமாள் என் நிறைக்குத் தக்க பொன் கொடுத்து என்னை நீ கொள்க வென்னத் தாசர் என்னிடம் பொன்னேது என்னப் பெருமாள் உன் மனைவியின் மூக்கிலிருக்கும் மூக்கணியோடு என்னை நிறுக்கில் நான் ஒத்திருப்பேன் அதைத் தந்து கொள்க வென்ன, தாசர் அர்ச்சக ரிடஞ்சென்று இவ்விடம் விரும்பிவந்த பெருமாளை எனக்குத் தரின் அவன் நிறைக்குத் தகுந்தபொன் தருகின்றேன் என்ன அர்ச்சகர் தாசரது வறுமையைக் கண்டு பரிகசித்து அறிவோமென்று இசைந்தனர். தாசர் ஊரிலுள்ளாரை யெல்லாங் கூட்டித் துலையேற்றிப் பெருமாளை ஒரு துலையிலிட்டு உட்சென்று மனைவியின் மூக்கணியைக் கைக்கொண்டு நின்றனர். அர்ச்சகர் முதலியோர் பொருளெங்கென்னத் தாசர் மூக்கணயைக் காட்டக் கண்டோர் இது ஒக்குமோவென்னத் தாசர் ஒக்குமென்று துலையிவிட மூக்கணி பெருமாளினும் நிறை மிகுந்திருத்தலைக் கண்டு அர்ச்சகர் பெருமாளின் சித்தம் இவ்வகையாயின் என் செய்வதெனப் பெருமாளை விட்டுத் துவாரகை சென்று வேறு பிரதிட்டை செய்துகொண்டனர். (பக்தமாலை)

இராமதேவர்

ஒரு சித்தர் நாகப்பட்டணத்தில் வீற்றிருந்து சிவபூசா விசேஷத்தால் எல்லாச் சித்தியுமடைந்தவர். இவர் வைத்திய நூல் செய்திருக்கின்றனர். அதற்கு இராமதேவர் வைத்தியம் என்று பெயர். இவர் காசியிலிருந்து சட்டைநாதரை எழுந் தருளச்செய்து நாகையில் தாபித்தனர்.

இராமநாதசிவன்

சைவசித்தாந்த பத்ததி செய்த சைவாசாரியருள் ஒருவர்.

இராமநாதன்

துடிநூல் செய்தவாசிரியன்.

இராமநாதர்

இராமரால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம்.

இராமபாரதி

ஆத்திசூடி புராணம் தமிழில் பாடிய புலவர். இவர் தொண்டைநாட்டுப் பாகை நகரிலிருந்த வேளாளர்.

இராமப்பிரியர்

திருநாராயண புரத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவமூர்த்தியின் திருக்கோலம். டில்லி பாதுஷாவின் குமரியால் ஆராதிக்கப்பட்டு உடையவரால் செல்வப்பிள்ளையெனப் பெயரிடப்பட் டவர்.

இராமமிசிரர்

மணக்கால் நம்பிக்கு ஒரு பெயர்

இராமமூர்த்தி

1. அயோத்தியாண்ட சூரியவம்சத் தரசர்களில் அசன் புத்திரனாகிய தசரதன் தான் புத்திரன் இல்லாமல் கலைக் கோட்டு முனிவரால் புத்திரகாமேஷ்டி யாகஞ் செய்விக்க, அந்த யாகத்தில் ஒரு பூதம் தாம்பாளத்தில் பாயசமேந்தித் தந்தது. அதனைத் தசரதன் தனது மனைவியர் மூவருக்கும் பகுத்துத் தந்தனன். அதனால் முதற்றேவியாகிய கோசலையிடத்துத் தேவர், அரக்கர் உபத்திரவத்தைச் சகிக்காது விஷ்ணுமூர்த்தியை வேண்ட அந்தத் திருமால் நாம் தசரதன் புதல்வனாகப் பிறந்து உமது குறை தீர்க்கிறோம், என்றபடி சித்திரை மாசம் நவமி திதி புனர்பூச நக்ஷத்திரத்தில் திருவவதரித்து இராமனெனப் பேர்பெற்றுத் தன் மாற்றாந்தாயாகிய சமித்திரையின் குமரராகிய இலக்குமணரைப் பிரியாது கொண்டு பலகலையும் கற்று ஒருநாள் கூனியின் முதுகில் உண்டைவிட்டு அவளது உட்பகைகொண்டு, தந்தையின் கட்டளையால் விச்வாமித்திர முனிவருடன் சென்று அங்கநாடு கடந்து ஒரு பாலைவனங் கண்டு, அங்கு விச்வாமித்திரர் உபதேசித்த பலை, அதிபலை யென்னும் மந்திரங்களைப் பெற்றுப் பாலைவனம் கடந்து, தாடகையை வதைத்து, முனிவர் யாகத்தைப் பூர்த்தியாக்கிக் கோமதியென்கிற கௌசிகி யாற்றின் வரலாறு அவராலுணர்ந்து, கல்லாகவிருந்த அகலிகையின் சாபத்தைப் போக்கி அவளைக் கௌதமரிடஞ் சேர்ப்பித்து, மிதிலை சென்று சிவமூர்த்தி இந்திரனிடங் கொடுத்த வில், சனகனிடமிருக்க அதனை வளைத்துச் சாநகி யென்னும் சீதாபிராட்டியை மணந்து, தம் நாடுசோத் திரும்பு கையில் வழியில் பரசுராமர் தந்த வில்லை வளைத்து அவர் தவத்தைக்கொண்டு, அந்த வில்லைத் தாம் கேட்கும் போது கொடுக்கும் படி வருணனிடம் கொடுத்து, அயோத்தி அடைந்தனர். இவர் தந்தை, யுவராஜ்ய பட்டாபிஷேகஞ் செய்விக்க முயற்சி செய்வதை அறிந்தகூனி உட்பகை கொண்டவளாதலால் கைகேசியிடஞ்சென்று அவள் மனத்தை வேறுபடுத்தி இராமனைக் காட்டிற்கேவச் செய்யத் தசரதனிடம் முன்பெற்ற மூன்று வரத்தைக் கேட்பித்தனள். அவ்வகையே கைகேசி வரம் பெற்றுத் தசரதர் சொல்லென்று இராம மூர்த்திக்கு வனம் செல்லக் கட்டளையிட்டு இராமமூர்த்தியைக் காட்டிற்கேகச் செய்தனள். இராமர், தன் மனைவியுடனும் பிரியாத இலக்குமணருடனும் நாடு நீங்கிக் காகாசுரன் அபசாரத்திற்கு அவன் ஒரு கண்ணைப் போக்கிக், கங்கையில் ஓடத் தலைவனாகிய குகனை நட்புக்கொண்டு, பரத்துவாசாச் சிரமத்திற்றங்கி, அப்பால் காளிந்தி நதி கடந்து சித்திர கூடபர்வதஞ் சேர்ந்து, தாமும் தம் தேவியும் அம்மலை வளங்களைப் பார்த்து வருகையில் சண்டதபர் சாபத்தால் பெருச்சாளியாகச் சாபமடைந்த சேது எனுங் கந்தருவன் குமரனது சாபத்தைப் போக்கி அவனைக் குபேரனிடம் சேர்ப்பித்து, பரதரைக்கண்டு அவர் பிரிதலைச் சகிக்காமல் வேண்ட அவருக்குப் பாதுகையைக் கொடுத்து நீங்கி, விராதனென்னும் அரக்கனை வதைத்துச் சாபங்க ருஷிக்கு முத்தியளித்துத் தண்டகவனத்து ருஷிகளுக்கு அபயமளித்து, சுதீக்ஷண முனிவரைக் கண்டு பணிந்து அவரளித்த தவத்தைப் பெற்று, அகத்தியரைக் கண்டு விருந்து முதலிய செய்யப்பெற்று நீங்கிச், சடாயுவைக் கண்டு அவருக்குத் தம் வரவை அறிவித்துப் பஞ்சவடி சென்று சூர்ப்பனகையின் பங்கங்கண்டு, தூஷணன், திரிசிரன் முதலியவர்களை யொரு முகூர்த்தத்தில் கொன்று, கரனுடன் போர்புரிகையில் இவர் கைவில் முரியத் தாம் மிதிலையினின்று வரும் வழியில் வருணனிடம் கொடுத்த வில்லை அவனுதவப் பெற்றுக் கரனை வதைத்து, மாயமானாக் வந்த மாரீசனைப் பிடித்துத்தரச் சீதை வேண்டியபடி அதன் பின் சென்று அது மாயமானென் றுணர்ந்து அதனைக் கொன்று, கபட சந்நியாசியாகிய இராவணனால் சீதையையிழந்து துக்கித்து, இரண்டாமுறைச் சடாயுவைக்கண்டு அவரால் சீதை நிலையுணர்ந்து சீதையைத் தூக்கிச் சென்ற காலத்து அவனிடம் யுத்தஞ் செய்து இராமமூர்த்தி வருமளவும் உயிர் தாங்கி அவருக்குச் செய்திகூறி உயிர்நீங்கிய சடாயுவிற்குக் கர்மாதி கிரியைகள் முடித்துக் கவந்தனைக்கொன்று, சபரிக்கு முத்தியளித்தனர். பின் இலக்குவரைப் பிரியாத இராமமூர்த்தி பம்பாநதிக் கரையடைந்து அநுமனைக் கண்டு, அவன் முகக்குறிப்பால் அதிமேதாவியென்று புகழ்ந்து அவனால் சுக்கிரீவனை நட்புக் கொண்டு மராமரம் ஏழும் ஒரு பாணத்தால் தொளைத்துக்காட்டித் துந்துபியின் எலும்பின் குவியலைக் காலாற்றன்ளித் தமது வலியறிவித்து, சுக்கிரீவன் வாலியைக் கொல்ல வேண்டச் சரணாகதியடைந்த அவன்பொருட்டு வேற்றுமை தெரியும்வகைச் சுக்ரீவனைப் பூச்சூடி யுத்தத்திற்குச் செல்லெனக் கட்டளையிட்டு வேற்றுமையுணர்ந்து மறைவாக இருந்து வாலியைக் கொன்று, சுக்கிரீவ பட்டாபிஷேக முடித்து, மழைக்காலம் மாறுமளவும் பிரச்சிரவண மலையிலிருந்து சுக்கிரீவன்வரத் தாமதித்ததால் இலக்குமணரை ஏவிப் படை சேர்ப்பித்துச் சாநகியைத் தேடச்செய்து, விரலாழி தந்து அநுமனால் சீதை இலங்கையி லிருப்பதறிந்து, கடல் கடக்க அணை கட்டவேண்டி வருணனை எண்ணி ஏழுநாள் சரசயனத்திருக்கவும் வராததனால் கோபித்து அத்திரத்தையெடுக்க வருணன் பயந்து ஒரு மணிமாலை கொண்டுவந்து சரணடைய நானெடுத்த அம்பிற்கு இலக்கென்னென அவன் சொற்படி அதனை மருக்காந்தார இராக்கதர் மீதேவிக் கொலைபுரிந்து, வருணனைத் தாங்கக் கட்டளையிட்டு அவன் மீது அணை கட்டுவித்து இலங்கையடைந்து அங்கதனைத் தூதனுப்பினர். இராமபிரான் வரவை இராவணன் கனாவிற்கண்டு பயந்து தனித்து வந்து வேண்டிச் சீதையைக் கொடுக்கிறேன் என, சண்டை செய்யாது ஒருநாள் தாமதித்து அவன் மந்திரியர் சொற்கேட்டு வித்யுச்சுவன் அனுப்பிய மாயசீதையால் அதிகோபங் கொண்டு இராவணனுடன் யுத்தஞ் செய்ய ஆரம்பித்தனர். இராமமூர்த்தி முதனாள் இராவண னுடன் யுத்தஞ்செய்யத் தொடங்கி அந்த இராவணன் தேர், குடை முடி ஆயுதம், சேனை முதலியவைகளை நாசப்படுத்தி அவன் நிராயுதனாய்த் தனித்து இருக்கக் கண்டு, நீ யுத்தத்தில் இன்று அதிகமாய் வருந்தினை இன்று போய் நாளை வெகு சேனை சேர்த்துக்கொண்டு வா வென்றனுப்பிச் சுக்கிரீவன் சொல்லால் கும்பகர் ணனை நட்புக்கொள்ள விபீஷணரைச் செலுத்த அவன் மறுக்க அவனது கரங் களையறுத்து அவன் வேண்டியபடி வரமளித்து மாய்த்து இந்திரசித்து ஏவிய நாகாத்திரம் இலக்குமணரை மூர்ச்சிக்கச் செய்ததால் துக்கித்துக் கருடனாலதை விலக்குவித்து மகாபாரிசுவனை இருபிளவாக்கி மகாக்கண்ணனை வதைத்துப் பிரமாத்திரத்தால் இலக்ஷமணர் மூர்ச்சித்த காலத்துத் தாமும் விசனத்தால் மூர்ச்சித்து அநுமன் கொணர்ந்த சஞ்சீவியால் மூர்ச் சைதெளிந்து அநுமனைச் சிரஞ்சீவியாக வாழ்த்தி மாயாசீதையைத் தமக்கு முன் கொல்லக்கண்டு துக்கித்து இந்திரசித்தைக் கொல்ல இலக்குமணருக்குக் கவச முதலிய கொடுத்தனுப்பி, மூலபலசைந்யத்தைத் தாம் ஒருவராக நின்று நாசமாக்கி இராவணன் வேலால் மூர்ச்சையடைந்த இலக்குமணரை இரண்டாமுறை சஞ்சீவி கொணர்ந்து மூர்ச்சை தெளிவித்த அது மனைத் தழுவி வாழ்த்தி இராவணனைக் கொல்ல இந்திரன் அனுப்பின தேரில் ஏறி இலக்குமணர்மீது சென்ற மகோதரனைக் கொன்று, இராவணனது சிரம், கரம் முதலியவற்றைப் பலமுறை கொய்து கடைசியில் பிரமாத்திரத்தால் உயிர்நீக்கி அவனுடலிலிருந்த வடுவால் மனநொந்து விபீஷணர் சொல்லாற்றேறி விபீஷண ருக்கு இலக்குமணரால் பட்டந் தரிப்பித்துச் சீதையை வருவித்து அவளைக் கற்பிழந்தவளெனத் தூஷித்து அக்நியில் குளிக்கச்செய்து அக்நிதேவன் சொல்லால் தேறிலேற்றிக் கொண்டு அந்த அக்நிதேவனிடம் பாதனும் கைகேசியும் தம்மிட நட்புடனிருக்க வரம்பெற்று வைகுந்த மடைந்த தசரதரைக்கண்டு களித்து வரம் பெற்று, யுத்தத்திலிறந்த வானரர்களைப் பிழைப்பிக்க இந்திரனிடம் வரம் பெற்றுச் சீதைக்கு எதிரிலுள்ளவைகளைக் காட்டிக் கொண்டு சேதுவின் கரையடைந்து இரா வணனைக்கொன்ற பிரமஹத்தி நீங்கச் சிவ பூசைசெய்து நீங்கிப் பரத்துவாசராச் சிரமமடைந்து பாதருக்குச் சொன்ன காலவளவு நெருங்குதலறிந்து அநுமனிடம் தமது விரலாழி கொடுத்தனுப்பிப் புஷ்பக மேறி அயோத்தியடைந்து சரயு நதியில் மூழ்கிச் சடைமுடி மாற்றி வசிட்டரால் திருமுடி சூட்டப்பெற்றுப் பிரமனால் இக்ஷவாகுவுக்குக் கொடுக்கப்பட்ட வாகு வலயத்தை அங்கதனுக்குக் கொடுத்து அநுமனுக்கு வச்சிரப்பதக்கமளித்து அரசாண்டகாலத்தில் சம்புகன் என்னுஞ் சூத்திரன் தவஞ்செய்ததால் பிராமணப்பிள்ளை இறக்கப் பிராமணன் அகாலமிருத்தியு வென்று விசனப்படுகையில் இதனை நாரதராலுணர்ந்து இராமமூர்த்தி சூத்திரனைச் சங்கரிக்கப் பிராமணப் பிள்ளையுயிர் பெற் றெழுந்தனன். சீதை இரண்டாமுறை வனம்போக இச்சை கொண்ட காலத்தில் ஊரார்சொல்லை வியாசமாகக் கொண்டு காட்டிற்கனுப்பி அச்வமேதத்தில் குசலவராகிய புத்திரர்களைக் கண்டு ஆனந்தங் கொண்டு சீதையைப் பிரமாணஞ் செய்விக்கக் கேட்டு அவள் பூமியில் மறைய விசனமும் கோபமும் அடைந்து பூமி தேவியை மருட்டிப் பிரமனால் ஒருவிதந்தேறித் தாம் பதினொராயிரம் வருஷம் அரசாண்டு தம் குமாரராகிய குசலவர்க்கு உத்தரதக்ஷிண கோசலநாட்டைத் தந்து பரத இலக்ஷமண குமாரருக்குக் காருக பதம், மல்ல பூமி முதலியவற்றைக் கொடுத்து வீற்றிருந்தனர். இவர் ஒரு நாள் காலமுனிவர் வர அவரை ஏகாந்தத்தில் கொண்டு இலக்குமணரை யார்வரினும் விடவேண்டாமென வாயிலில் காவல் வைத்துத் தனித்து வசனித்துக் கொண்டிருந்தனர். அப்போது துருவாசர் இராமரைக் காண வந்தனர். இலக்குமணர் அவரை விட்டதால் இராமமூர்த்தியவரிடம் கோபித்துத் தேவரெதிர்கொள்ளச் சாயுவடைந்து சோதியிற் கலந்தருளினர். இவரரசாட்சி திரேதாயுகம். இவருக்குத் தாசரதி, இரகு நந்தனன், இராகவன், சக்கிரவர்த்தித் திருமகன், காகுத்தன், கௌசல்யா நந்தனன், பரதாக்கிரசன், கோதண்டபாணி எனப்பெயர். (அத்யாத்மவான்மீகி ராமாயணம்) 2. தந்தை சொற்படி வனத்தில் வசிக்க நேர்ந்தபோது பிதுர்க்களுக்குச் சிரார்த் தஞ்செய்ய நாள் வந்தது. இதனால் இராமர் தம்பியை நோக்கி ஏதேனும் தானியங் கொண்டு வரக்கட்டளையிட்டனர். இலக்ஷமணர் நாணத்தால் சென்று கேளாது சிராத்தகாலங் கழியும்வரை பொழுது போக்குகையில் இராமரும் தம்பியைத் தேடிச் சென்றனர். இவ்விருவரும் வருதற்கு தாமதித்தால் சீதை சிரார்த்தகாலஞ் சமீபித்ததறிந்து தாபசம், இங்குதி இவற்றின் பழத்தைக்கொண்டு பிதுர்களுக்கு மாவினால் பிண்டமிட்டனள். இதைப் பிதுராகவந்த தசரதர் ஏற்றுக் களிக்கச் சீதை அவரை நீர் யார் என்றனள். நான் உன்மாமனாகிய தசரதன் என்றனர். நீர் பிண்டம் உண்டதை என் கணவர் எப்படி நம்புவர் என நீ தக்கசாக்ஷி வைத்துக்கொள் என்றனர். அப்போது சீதை அவ்விடமிருந்த பல்குந்தி, பசு, அக்கி, தாழை இவற்றைச் சாக்ஷி வைத்தனள். பின்பு கிராமத்திற்குத் தான்யத்தின் பொருட்டுச் சென்ற இராமலஷ்மணருக்குச் சீதை நடந்தவைகூற அவர்கள் நம்பாமையால் சாக்ஷிகளைவிசாரிக்க அவர்கள் பயந்து இல்லை யென்றமையால் இருவருஞ் சிரார்த்தம் தொடங்குகையில் அசரீரியாய்த் தசரதராலும் சூரியனாலும் உண்மை கூறக்கேட்டுச் சிரார்த்தத்தை நிறுத்தினர். பொய் கூறினவர்களாகிய பல்குநதியை அந்தர் வாகினியாகவும், தாழம்பூவினைத் தன்னாற் பூசிக்கப்படும் சிவமூர்த்திக் குதவாதபடியும், பசுவிற்கு முன்புறம் அயோக்யமும் பின்புறம் யோக்யமாகவும், அக்நி ஸர்வபக்ஷகனாகவும் ஆகச், சீதை சபித்தனள். (சிவமகாபுராணம்). 3. சீதையுடன் வனவாசஞ் செய்யச் செல்கையில் ஒருநாள் கடற்கரைக்கருகில் சீதையுடனுலாவுகையில் அக்கிநிதேவன் தோன்றிச் சீதையை அபகரிக்கும் காலஞ்சமீபித்தது. நான் தேவர்களா லனுப்பப்பட்டேன். சீதையை என்னிடம் கொடுத்துவிடும். நான் கொடுக்கும் மாயாசீதையைப் பெற்றுக்கொள்ளும். அசுரவதம் முடிந்தபின் சீதையை உம்மிடம் சேர்க்கிறேன் என்றனன். அவ்வாறே உண்மையான சீதையை அக்னியிடம் சேர்ப்பித்தனர். (தேவி~பா.) 4. இவர், இராவண வதஞ் செய்து திரும்பிக்கிட்கிந்தைக்கு வந்து ராவண திரிசிராதிகள் வதை நீங்கக் கௌதமிதீரத்தில் கிஷ்கிந்தாதீர்த்தம் கண்டு சிவலிங்கப் பிரதிட்டை செய்து சிவபூஜை செய்தனர். (155 ஆம் அத்தியாயம் பிரமபுராணம்.) 5. சமதக்னி புத்திரராகிய பரசிராமருக்கொரு பெயர். இவர் சிவமூர்த்தியை எண்ணித் தவமியற்றிப் பரசு பெற்றுப் பரசிராமர் எனப் பெயர் பெற்றனர். 6. ஒரு வேதியன். இவன் திருவேங்கடமலையில் சநற்குமார முனிவராலுபதேசிக்கப்பட்டு நற்கதியடைந்தவன். 7. தருமன் எனும் மனுப்புத்திரன். இவன் மனைவி நிருதி.

இராமராஜர்

இவர் ஒரு அரசர். இவர் ராமபக்தி மிகுந்து தம் சமுகத்தி லெக்காலும் இராமாயணப்பிரசங்கங் கேட்டு வருவார். இவ்வகை வருநாட்களுள் இராமனுக்குத் துன்பம் நேரும்போது அரசன் விசனமுறுதல் கண்டு இராமஜெயம் என்று பிரசங்கிப்போர் கூறிவருவது வழக்கம். இதனால் அரசன் விசனம் நீங்கிக் கதை கேட்டு வருவன். பிரசங்கிக்கு ஒருநாள் நோய்வர, புராணிகர் தம் புதல்வரை அனுப்பி அரசனுக்கு இராமஜெயங் கூறுகவேறு ஒன்றுங்கூற வேண்டாமென, குமரர் அதை மறந்து இராவணன் மாரீசனால் மயக்குவித்துச் சீதையை இலங்கைக்குக் கொண்டு போயினான் எனப் பிரசங்கஞ் செய்யவும், அரசன் சேனையுடன் எழுந்து சேதுவிற்குச் சமீபித்துக் கடலைக்கடந்து சென்று பிராட்டியை மீட்கக் கடலிடை நெருங்குமுன் ராமபிரான் சீதா லக்ஷ்மணருடன் காட்சி தந்து சீதையை மீட்டுவந்தேன் எனக் கூறக் கோபந்தணிந்து நகரமடைந்து பகவத் பக்தியிலி ருந்தவர். (பக்த மாலை).

இராமலிங்கஐயர்

இவர் பிறப்பால் வேதியர். நல்லூரிற் பிறந்து கல்வி வல் லவராய்ச் சோதிடத்தில் சந்தான தீபிகை இயற்றியவர்.

இராமலிங்கசுவாமிகள்

திருவருட்பிரகாச வள்ளலாரென்று வழங்கப்படுகிற இராமலிங்கசுவாமிகள், சோணாட்டில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில் கருணீகர்குலத்தில் இராமையபிள்ளை யென்பவர்க்குச் சின்னம்மையா ரென்பவரிடத்தில் கலியாப்தம் 4092 வருடத்தில் நிகழும் சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் நாள் (1823ம் வருடம்) அக்டோபர் மாதம், 5 ஆம் நாள், சிவபிரானுடைய திருவருளால் பிறந்தவர். இவருடைய சிறுபிராயத்திலேயே தந்தை இறந்ததனால் இவருடைய தமையனாகிய சபாபதிபிள்ளையென்ப வர், சென்னைக்குத் தமது தாய் தம்பி மார் முதலியவர்களோடு வந்து அங் குள்ளதொரு வித்தியாலயத்திற் போத காசிரியராயிருந்து அதிற் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தைப் போஷித்து, தமது தம்பிமார்க்கு வித்தையையும் போதித்தார். இந்த இராம லிங்க சுவாமிகள் அதனை வியாசமா கக் கொண்டு நல்லறிவு தோன்றச்சுப்பிரமணியக்கடவுளை உபாசித்து அவரது திருவருளைப் பரிபூர்ணமாகப் பெற்று ஞானமுதிர்ச்சியடைந்தார். பின்பு இவருக்கு விருப்பமில்லாதிருக்கையில் இவர் அண்ணனார் தமக்கை மகளை மணம்புரிவித்தனர். இவர் பற்றற்றவ ராய் சதாநந்த சகஜநிஷ்டை சாதனமுடையராய்ப் பல பாடல்களையும் அருளிச் செய்து கொண்டிருந்தனர். பின், இவர் சிதம்பரத்தின் நான்கு கோபுரமுந் தோன்று மெல்லையாகிய வடலூரென்கிற பார்வதிபுரத்தில் சத்தியதரு மசாலை, சத்திய ஞானசபை, சமரச வேத பாடசாலை, சன்மார்க்க சங்கத் திருக்கோயில், நிருத்தசித்தி விநாயகராலயம் முதலியவைகளைத் தாபிக்க முயன்றனர், பின், இவர் வடலூரையடுத்த கருங்குழி கருகில் மேட்டுக்குப்பமென்னுஞ் சிற்றூரில் சித்தி வளாகத் திருமாளிகையில் சிவத்தியானத்துட னெழுந்தருளி யிருக்கையில், சிவஞானயோக முதிர்ச்சியால் தோன்றிய சோதிவடிவமான அருட்பெருஞ்சோதியைத் தரிசித்துப் பின் கலியாப்தம் 4978 ஆவதான ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19 ஆம் நாள் சுக்கிரவாரத்தில் செயற்கையுடல் இயற்கையுடலாகத் திரிவுபடுஞ் சின்மாத்திர சகஜசமாதியில் அசைவறவிருந்து சற்குருவைச் சிந்தித்துத் தாம் அமர்ந்திருந்த அறையை மூடிப் பூட்டிக்கொள்ளத் தமது அன்பர்க்கு குறிப்புணர்த்தித் தாமும் தமது இந்திரியக்கதவை மூடி மவுனநிட்டை கூடி நித்தியானந்தமுற்றனர். இவர் அவ்வப்போது கடவுளுடைய திருவருளாற் பாடிய பாடல்களை ஆறு திருமுறைகளாகத் தொகுத்து இவருடைய மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார் முதலியோர் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

இராமலிங்கம்

இராவணவதையில் நேர்ந்த பிரமஹத்தி நீங்கும்படி இராம மூர்த்தி பிரதிட்டித்துப் பூசித்த சிவலிங் கம். இது சேதுவிலுள்ளது.

இராமஹிருதம்

இது ஒரு தீர்த்தம். RAMA HRADA. A SACRED TANK NEAR THANESWAR, WHERE PARASURAMA IS SAID TO HAVE GIVEN OBLATIONS TO THE NAMES OF HIS ANCESTORS AFTER DESTROYING THE KSHSTRIYAS.

இராமானுசகவிராயர்

இவர் பாண்டி நாட்டு இராமநாதபுரவாசி. இவர் திருவாவடு துறை சோமசுந்தரக் கவிராயரிடம் கல்வி கற்றுச் சென்னையில் வசித்தவர். இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னூல், ஆத்மபோதப்ரகாசிகை, திருக்குறள், திருவேங்கட அநுபூதி, பச்சையப்பவள்ளல் மீது பஞ்சரத்னமாலிகை, பார்த்தசாரதி மாலை, வரதராஜர் பதிற்றுப்பத்தந்தாதி முதலியவும், சிலவற்றிற்கு நல்லுரையு மியற்றியவர்.

இராமானுசப்பிள்ளான்

1. கிடாம்பியாச்சான் குமரர். இவர் குமரர் ஸ்ரீரங்கராசர். குமரி தோத்தாரம்மன். 2. கிடாம்பி ஸ்ரீசங்கராசர் குமரர். இவருக்கு அப்புள்ளார் எனவும் பெயர்.

இராமானுசர்

எம்பெருமானாமைக் காண்க.

இராமாபாயி

இவள் காசியிலிருந்த சந்தராஜன் புத்ரி, அரிபக்தியும் பாகவதபக்தி யும் கொண்டவள். இவளை யொருவனுக்கு மணஞ் செய்விக்க அவன் ஊன் தின்பதில் அவாவுற்றவனாய் அரிதினத்தில் ஒரு ஆட்டைக் கொலைசெய்து சமைக்கக்கூற மனைவி இது தகாதகாரியமெனப் பல நீதி கூறியும் கேட்காதவனாக இருந்தான். இதனையறிந்த மனைவி, இவ்வூரில் பெருமாள் கோயில் உண்டோ பாகவதரின்றோவென அறிந்து கொண்டு தனது குழந்தைக்கு விஷமூட்டி இறப்பித்தனள். மைந்த னிறக்கக் கண்ட தந்தையும் சுற்றத்தாரும் தாய் கவலையுறா திருத்தல் கண்டு வினவ, அழியும் பண்டம் என்றும் அழியுமென விடைகூறி யிருந்தனள். பின் கணவனை நோக்கிப் பாகவதர் பாத தீர்த்தம் கொள்ளின் மைந்தன் பிழைப்பன் எனக் கூறத் தந்தை பாகவதரை அழைத்து அவர்க்குபசார நடத்திப் பாத தீர்த்தங்கொண்டு குழந்தை வாயில்விடக் குழந்தை உயிர்பெறத் தந்தை உவந்து அன்று முதல் திருமாலிடம் அன்பு மிக்கவனாய் மனைவி சொற்படி வாழ்ந்து வந்தான். (பக்தமாலை.)

இராமாயணஉத்தரகாண்டம்

ஒட்டக்கூத்தப் புலவரா லியற்றப்பட்டது. (1390) செய்யுட்களும் (22) படலங்களுக் கொண்ட தமிழ் நூல்.

இராமேச்சுரம்

இராவணவதத்தால் வந்த பாவம் நீங்க இராமமூர்த்தி பிரதிட்டித்துப் பூசித்த தலம். இது சேதுவிற் கருகிலுள்ள து.

இராயர்

இது மார்த்தவப் பிராமணர்களும்குப் பட்டமாக வழங்கி வருகிறது. தற்காலம்; பூணூல் தரித்துக்கொண்ட வன்னியர் சிலர் இப்பட்டத்தைப் பெற்றிருக் கின்றனர்.

இராவணன்

1, விசிரவசுவிற்குக் கேகசியிடம் பிறந்தவன். இவன் தாய் இவனைப் பெற்ற பிறகு குபேர செல்வத்தைப் பெறத் தவஞ்செய்க என, இவன் பஞ்சாக் இனி மத்தியிலிருந்து பிரமனை யெண்ணித் தவஞ்செய்து ஆயிரவருட முடிந்தபின் தனது தலைகளில் ஒன்றைத்திருகி அக்கினியிலிடுவன். இவ்வாறு தலைகளை யெல்லாக் திருகிப் பத்தாஞ் சிரத்தைத் திருகுகையில் பிரமன் தரிசனந் தந்து தேவர், விஞ்சையர், அவுணர், சித்தர், உரகா முதலியவர்களால் இறப்பிலாதும் யுத்தத்தில் அற்ற சிரங்கள் கரங்கள் மீண்டும் வளரவும் வரந்தரப் பெற்றவன். 2. பிரகத்தனைக் குபேரனிடத்து இலங்கா நகரங் கேட்க அனுப்பி அவன் தர இலங்கையைப் பெற்று அரசாண்டவன். 3. இவன் இலங்கை அழியாதிருக்கச்சிவ பெருமானை எண்ணித் தவஞ்செய்தனன். அவர் தரிசனந்தந்து ஒரு சிவலிங்கங் கொடுத்து இதனை அசுத்தத்துடன் தொடலா காது, இலங்கை போமளவும் பூமியில் வைக்கலாகாதெனத் திருவாய் மலரக் கேட்டு அதனைப் பெற்று இலங்கைக்கு மீண்டனன். இதனை யறிந்த தேவர் இவன் இலங்கையில் இம்மூர்த்தியைப் பிரதிட்டிக்கின் இவனரசழியா தாகையால் இதற்கோர் ஆலோசனை செய்ய வேண்டுமென்று விநாயகரிடங் குறைகூறி வருணனை வயிற்றில் நீர் சுரப்பிக்க ஏவினர். அவ்வகை வருடனன் செயலால் இராவணனுக்குச் சிறு நீரின் உபத்திரவ மதிகமாயிற்று. அச்சமயத்தில் விநாயகர் ஒரு பிரமசாரியாய் எதிர் வரக்கண்டு நான் கைகால் சுத்திசெய்து வருமளவும் நீர் இச்சிவலிங்கத்தைத் தயை செய்து பிடியும் என வேண்டினன். இவனது வேண்டுகோளுக் கிரங்கிய வேதியச் சிறுவர், இராவணனை நோக்கி நான் சிறுவன் இலிங்கபாரம் நான் பொறுக்காவிடின் கீழே வைத்து விடுவேனெனக்கூறி அவன் தமது கையிற் கொடுத்துப்போன சிறிது நேரத்தில் அவனை அழைத்தனர். அவன் வாராமையால் பூமியில் சிவலிங்கத்தை வைத்து நின்றனர். அவன் வந்து எடா வைத்தனை யென்று வெருட்ட அப்பா இதன் வலிமை என்னால் பொறுக்கக்கூடவில்லையென்று அகல நின்றனர். இராவணன் தன்னாற்றல் முழுதும் சிவலிங்கத்திடஞ் செலுத்தித் தூக்கியும் சிவலிங்கஞ் சற்றேனும் பெயராது பசுவின் காதுபோற் குழைந்தது. அதனால் இராவணன் சலித்து இது மகாபலலிங்க மென்ற னன். அதுவே அந்த மூர்த்திக்குப் பெயராயிற்று. இந்தச் சிவலிங்கம் பசுவின் காதுபோற் குழைந்தது பற்றி அந்தத் தலத்திற்குக் கோகர்ணமெனப் பெயராயிற்று. பின்பு இராவணன் பிரமசாரியிடம் கோடங்கொண்டு சென்று பிரமசாரியைக் குட்ட விநாயகமூர்த்தி இவனைத் தமது துதிக்கையால் செண்டாடினர். அதனால் இராவ ணன் வலியொடுங்கி வேண்ட அநுக்கிரகித்து என்ன வரம் வேண்டுமென நான் தேவரீரைக் குட்டினதுபோல் உலகத்தவர் தமக்கு முன் செய்து கொள்ளின் இஷ்ட சித்தி பெற அநுக்கிரகிக்க என அவ்வகை அருள் புரிந்து மறைந்தனர். 4. பின்பு, இராவணன் இலங்கை யடைந்து ஒருநாள் வேட்டைக்குச் சென்று மயன் குமரியாகிய மந்தோதரியை மணந்தனன். 5. இவன் தேவரை வருத்துதலைக் கேட்ட குபேரன், சகோதரன் என்ற உரிமை பற்றி, நான் தவத்தால் சிவமூர்த்தியிடம் தோழமை பெற்றேன், நீ தேவரை வருத் தாதையெனத் தூதனிடங் கூறியனுப்ப அத்தூதனை வெட்டியெறிந்து குபேரனிடம் யுத்தஞ் செய்யப்போய் மணிபத்திரனைக் கொலைசெய்து குபேரனை அடித்து அவனிடமிருந்த புட்பக விமானத்தைப் பிடுங்கிக்கொண்டு அந்த விமானத்திலேறிச் சரவணத்தருகில் வருகையில் விமானம் நின்றுவிட நந்திதேவர், இராவணனைப் பார்த்து இது சிவமூர்த்தியினிருக்கை நீ போகல் தகாதென இராவணன், நந்தி தேவரைக் கண்டு குரங்கு முகனெனப் பரிகசிக்க, நந்திதேவர் கோபங்கொண்டு உன்பட்டணங் குரங்காவழிகவெனச் சாபமேற்றுக் கைலையை எடுக்க முயன்றனன், அதுகண்ட சிவமூர்த்தி தம் திருவடி விரலாலழுத்த மலையில் கைகளகப்பட்டு நசுக்குண்டு ஆயிரம் பருவம் அழுததால் இராவணனெனப் பெயரடைந்து அவ்வழியில் வந்த வாகீசமுனிவர் சொல்லால் சாமகானம் பாடிச் சிவாநுக்கிரகம் பெற்றவன். (இரா~உத்தரகாண்டம்). 6. அகத்தியரால் காந்தருவத்தால் பிணியுண்டவன். 7. தவஞ்செய்யும் வேதவதியைத்தொட்டுக் குலமழியச் சாபமேற்றவன். 8. மருத்துவின் ஓமசாலையுள் புகுந்து அவனிடம் தோற்றேனெனச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் களித்தவன். 9. காதியையும், மயனையும், துற்சந்தனையும் வென்றவன். 10, அயோத்தியை அடைந்து அனரணியனை வென்றவன். 11. நிவாதகவசருடன் யுத்தஞ்செய்யச் சென்று பிரமனால் சமாதானஞ் செய்யப் பெற்றவன். 12. (99) திங்கள் பாதாளத்தில் தங்கித் தேனுவைப் பணிந்து வருணனைச் செயித்து அவன் பாசத்தைப் பிடுங்கிக்கொண்டு அவன் மைந்தரையுஞ் செயித்து அவனிடமிருந்த மாதரைக் கவர்ந்து இலங்கைக்கு வந்தவன். 13. சூர்ப்பநகையினைக் கரனூரிலிருக்கச் செய்தவன். 14. கும்பினசியைக் கவர்ந்த மதுவைக் கொல்லச் செல்லுகையில் கும்பினசி வேண்டுகையால் மதுவுடனட்புக் கொண்டவன். 15. நளகூபரன் தேவியாகிய அரம்பையை வலிவிற்புணர்ந்து அவனால் இனி யுடன்படா மாதரைத் தொடின் தலை வெடிக்கவெனச் சாபம் பெற்றவன். 16. கார்த்தவீரியனுடன் யுத்தஞ் செய்யப்போய் அவனாற் கட்டுண்டு சிறையிற் றங்கிப் புலத்தியரால் மீண்டவன். 17. வாலி சிவபூசை செய்யுந் தருணத்தில் அவனுடன் தனித்து யுத்தத்திற்குச் சென்று அவன் கக்கத்திலகப்பட்டு நசுங்கி அஞ்சி நட்புக் கொண்டவன். 18. திக்கு யானைகளின் தந்தங்களால் குத்துண்டு அவற்றின் தந்தங்களை முதுகில் பெற்றவன். 19. சூரியனை இலங்கையில் வரவொட்டாமல் தடுத்தவன். 20. ஆகாச வீதியிற் புட்பகத்திற் சென்று அசுமநாகத்தைக் கண்டு அங்கிருந்த பலியைக் கண்டு யுத்தத்திற் கழைத்தனன். பலி இவனை நோக்கித் தானின்னவன் விஷ்ணுவால் சிறையிலிருக்கிறே னென்ன நான் உன்னை விடுவிக்கின்றே னென்று இராவணன் கூறினன். அதைக் கேட்ட பலி குலுங்க நகைத்து அவனைச் செயிப்பதற்குமுன் இதோ என்னெதிரி லிருக்கும் இந்தக் குண்டலத்தைத் தூக்குப் பார்ப்போமென்ன, இராவணன் தன்னாலான மட்டும் தூக்கி உதிரங்கக்கிக்கொண்டு பூமியில் வீழ்ந்தனன். பலி இராவணனைநோக்கி இக்குண்டலத்தைத் தரித்திருந்தவன் என் பாட்டனான இரணியகசிபு. அப்படிப்பட்ட வலியுள்ள வனையும் மற்றும் அநேக அரக்கர் அசுரர்களையும் கொன்றவனை வென்று என்னை விடுவிப்பது உன்னால் தரமல்ல என இராவணன் கோபித்து வாயில் காவலாகவிருந்த திருமாலிடம் யுத்தத்திற்குச் செல்ல அவனைக்கொல்ல வெண்ணிய திருமால் பிரமன் வரத்தைக் காக்கவேண்டி அவன் முன்றோன்றாது மறைந்தனர். 21, இவன் சூரியனிடம் யுத்தத்திற்குச் செல்லச் சூரியன் தண்டியிடம் சொல்லி யனுப்பிய செய்தியால் வெற்றிமுரசு முழக்கி அவ்வுலகம் நீங்கினவன். 22. பருவத முனிவரைக் கண்டு யார் என்னிடம் போரிடவல்லாரெனக் கேட்டு அவர் அயோத்தி யரசனாகிய மாந்தாதா வெனக் கூறக்கேட்டு யுத்தத்திற்குச் சென்று சமயுத்தஞ்செய்ய இருவரும் பிரமாஸ்திரம், பாசுபதாஸ்திரம் பிரயோகிக்க எடுத்தகாலையில் புலத்திய முனிவரும் காலவமுனிவரும் தோன்றிச் சமாதானஞ் செய்ய ஒத்துக்கொண்டு நீங்கினவன். 23. சந்திரனிடம் யுத்தஞ் செய்யச் சென்று பிரமனால் தடையுண்டு அவரால் மந்திரசித்தி யடைந்தவன். 21. மேற்கடற்கரை யடைந்த ஒரு தீவில் பொன்னிறமும் தீப்போன்ற காந்தியுமுள்ள புருடனிற்கக்கண்டு அவனை நோக்கிப் போரிட வல்லையோவென அவனும் ஓர் முட்டியால் இராவணனைத் தாக்கினன். அதனால் இராவணன் பல குண் டாங்கரணங்கள் போட்டுத் தரையில்வீழ்ந்து மூர்ச்சை யடையக்கண்டு அப்புருடன் பிலத்தில் புகுந்தனன். பின்பு இராவணன் மூர்ச்சை தெளிந்து தானும் வாளேந் திக்கொண்டு பிலத்துள் புகுந்து அங்கு முன் கண்ட புருஷனைப்போல் அநேகரைக் கண்டஞ்சி அவ்விடம் பாம்பணையிற் பள்ளிகொண்டு சுற்றிலு மக்கினிச்சுவாலை சூழ ரூபலாவண்யத்துடன் சாமரையிரட்ட இருந்த திருமகளைக்கண்டு மயல் கொண்டு எடுக்கப்போக அங்கிருந்த மகா புருடனாகிய கபிலன் மேற்போர்வை நீக்கி இவனைக்கண்டு நகைக்க இராவணன் அப்புருடனது சுவாலாமாலையா லெரிந்து மூர்ச்சித்து வலியடங்கி நீங்கி இலங்கையடைந்து அரசாண்டிருந்தவன். சூர்ப்ப நகை தன்னை இராம லக்குமணர் செய்த பங்கங்களைச் சொல்லிச் சீதையின் அழகைப்பற்றி வர்ணிக்கக் கேட்டு மாரீசன் கூறிய புத்தி கேளாமல் அவனை மானாக எவித்தான் கபட சந்நியாசி யுருக்கொண்டு சீதாப்பிராட்டி தனித்திருக்கையில் அதிதி போல் சென்று தன்னைப் புகழ்ந்து அவளைப் பர்ணசாலையுடன் தூக்கி இரதத்திலிட்டுச் செல்லுகையில் சடாயு தடை செய்து சண்டையிட அவருடன் போரிட்டு மரணமூர்ச்சையாக்கிச் சீதையை யசோகவனத்திற் கொண்டு போய்ச் சிறைப்படுத்தித் திரிசடையுட னாக்கியரைக் காவலாக்கிப் பலமுறை தன்னை மணக்கும் படி சீதையைவேண்டி, அநுமனைக் குத்தி வலிகண்டு தானும் குத்துண்டு அநுமன் வாலில் தீயிட ஏவி அநுமன் இலங்கையைச்சுட அதை முன்போல் நிருமிக்கச் செய்து குடிபுகுந்து மாலியவானும் விபீஷணருங்கூறிய புத்தி கேளாமல் சுகசாரணரையேவிப் பகைவரது சேநாபலங் கண்டு வரச்செய்து அவர்கள் கூறியது கேட்டஞ்சி இராமரிடம், தனித்துவந்து சரண்புகுந்து சீதையைத் திருவடியில் சேர்க்கிறேனெனச் சென்று மந்திரிகளின் சொற்கேட்டு மாயாசீதையை அனுப்பி இராமமூர்த்திக்கு மிகுந்த கோபமுண்டாக்கி அங்கதனால் முடியிழந்து முதனான் யுத்தத்திற் பிரமனால் கொடுக்கப்பட்ட வேவெறிந்து இலக்குமணரை மூர்ச்சிக்கச் செய்து அவரைத் தூக்கிச்செல்ல முயன்று தூக்கமுடியாது வெட்கினவன், பின் இராமமூர்த்தியுடன் யுத்தஞ்செய்து ஆயுத முதலிய இழந்து வெறுங்கையுடன் நிற்க, இராமர் இன்று போய் நாளை வாவெனக் கூறி அனுப்ப வோடிவந்து மாலியவான் கூறிய நீதிகேளாமல் மகோதரன் துற் புத்திகேட்டுக் கும்பகர்ணன் மறுக்கக் கேளாது அவனை யுத்தத்திற் கனுப்பி இந்திரசித் திறந்ததற்கு விசனமடைந்து சீதையைக் கொல்லச்சென்று மகோதரனால் விலக்கப்பட்டு மூலபலத்துடன் யுத்தத்திற்கு வந்து வேலையெய்து ஓடிப் பின்பு யுத்தத்திற்கு வந்து இராமரெய்த பிரமாத்திரத்தால் அபரபக்ஷ பஞ்சமியில் மாய்ந்த வன். இவன் மாய்ந்தவுடலில் மந்தோதரி வீழ்ந்து உயிர்விட்டனள், இவன் இராம ருடன் எழுநாள் இராப்பகல் யுத்தஞ் செய்தனன். இவனுக்கு மூன்றரைக்கோடி ஆயுள், வீணைக்கொடி, (இராமாயணம்.) 25. சாம்பான் வீட்டிலிருந்த மாயாரதியைக் கவர எண்ணி மயனால் நிருமிக்கப் பட்டிருந்த பாசத்திற்பட்டுத் துன்புறுகையில் மந்தோதரியின் வேண்டுகோளால் மயன் தன் குமரியாகிய மாயாவதிக்குக் கூற மாயாவதி தன் கணவனுக்குக்கூறி விடுவித்தனள். (சிவமகாபுராணம்)

இராவணா அஸ்தம்

ஒற்றைத் தேங்கா யோட்டில் வீணா தண்டம் நுழைத்து மூன்று தந்திகள் பூட்டி முறுக்காணி கொண்ட இசைக்கருவி. இது, இராவணன் தன் தலையைப் பூட்டித் தன் அஸ்தத்தைத் தண்டாயமைத்து நரம்புகளிணைத்துச் சிவபிரானைப் பாடியதைக் குறிப்பிக்கும்.

இராவணி

இந்திரசித்திற் கொருபெயர்.

இராவணியம்

இராவணனா லியற்றப்பட்ட இசைநூல்.

இராவதி

உத்தரனுடைய புத்திரி. பரீக்ஷித்தின் தேவி. இவள் புத்திரர் நால்வர், அவர்களில் மூத்தோன் சநமேசயன்.

இராவான்

அருச்சுனனுக்கு உலூபியிடம் பிறந்த குமரன். இவனுக்கு அராவானெ னவும் பெயர்.

இராவுத்தன்

லப்பைகள், மரக்காயர், சோனகர்க்குப் பட்டம்.

இராவ்

மார்த்தவ பிராமணர், ஜயினர், சேர்வைக்காரர், முதலியவர்களுக்குப் பட்டப் பெயர்.

இராஷதகல நக்ஷத்ரம்

கார்த்திகை, ஆயிலியம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை மூலம், அவிட்டம், சதயம்.

இராஷ்டரபலி

உக்ரசேநன் குமரி.

இராஷ்டாபாலன்

(யது) உக்ரசேநன் குமரன். கம்சன் தம்பி.

இராஷ்டிரன்

காசியின் குமரன். இவன் குமரன் தீர்த்த பசு.

இரி

தக்ஷனுக்குப் பிரசூதியிட முதித்த குமரி. யமன் தேவி.

இரிசிகர்

ருஷி இவர் பிருகுருஷியின் புத்திரர். தமக்குச் சத்தியவதியைத் தேவி யாக்கும்படி காதியை யாசிக்க அவர் ஒரு காது பசுமையையும் மற்ற உறுப்புக்கள் வெண்மையுமான (1000) குதிரைகள் கொண்டு கொடுத்து மணந்து கொள்க என்றனர். அவ்வகையே வருணனிடம் ஆயிரங்குதிரைகள் பெற்றுச் சத்திய வதியை மணந்தவர். இவாகுமரர் சமதக்னி இவரை மாமியாரும் தேவியும் புத்ரன் வேண்டுமென யாசித்தனர். இவர் மந்திர மூலமான அவிசைப்பாகஞ் செய்து வைத்து ஸ்நானத்திற்குச் சென்றனர். சத்தியவதி தனக்கென்று வைத்திருந்ததைத் தன் தாய்க்குக் கொடுத்து மற்றதைத் தான் அறியாது புசித்தனள். “ஸ்நானத்திற்குச் சென்ற முனிவர் இதனையறிந்து மனைவியை நோக்கி உன்னிடம் தண்ட நாயகனும், உன் தாயிடம் பிரமஞானியு முதிப்பர் என்று தன் மனைவியை விட்டுச் சுவர்க்கஞ் செல்ல மனைவியாகிய சத்தியவதி யல்லது (கௌசிகை) பிரிவாற்றாது உடன் தொடர் முனிவர் திரும்பிப் பார்த்துக் கட்டளையின்றி வந்ததால் கௌசிகி நதியாகவெனச் சபித்துச் சென்றனர். (பாகவதம்.)

இரிடி

இவர் உத்தாலகர் குமரர். நலபர்வதத்தில் சிவபூசைசெய்து சிவகணத்தவருள் ஒருவராம் பதம் பெற்றனர்.

இரிதுதாமன்

கோமுகனுக்குக் கற்கனிகையிட முதித்த குமரன்.

இரிதேயு

மேதாதி குமரன்.

இரித்துவஜன்

தியுமானுக் கொருபெயர்.

இரிபன்

யதுவின் குமரன்.

இரிபு

1 வேதசிரனுக்குத் துஷிதையாடத்தித்த விஷ்ணுவினவதார விசேஷம். 2. பிரமன் குமரர். இவர் நிதாகருக்கு ஆசிரியர்.

இரிபுஜித்

ரௌரவமுனிவரின் அநுக்ரகம் பெற்ற அரசன். (பிரகன்னாரதீய புரா.) இரிக்ஷன் 1. அஜாமீடன் குமரன். இவன் குமாரன் சமாவர்ணன். 2. தேவாதிதி குமரன். இவன் குமரன் பீமசேனன்.

இரிபுஞ்சயன்

1. விசுவசித்தின் குமரன். 2. மகததேசத் தரசன் மந்திரியரால் கொல்லப்பட்டவன்.

இரிபுமர்த்தன பாண்டியன்

வம்சத்துவச பாண்டியனுக்குக் குமரன்.

இரீதன்

சாக்ஷஸமனுவறகு நட்வலையிடமுதித்த குமரன்.

இரு

அதிதிதேவிக் கொருபெயர்.

இருகதாச்சு

(ரிக்ஷாஜசு). இவன், வடபால் சென்று, வந்தவர் பெண்ணுருவடையுந் தலத்தை அறியாது செல்லப் பெண்ணுருவடைந்தனன். பெண்ணுருவடைந்த இவனை இந்திரன் புணர்ந்து வாலியையும், சூரியன் புணர்ந்து சுக்கிரீவனையும், பெற்றனர். இவன் பிரமன் அநுக்கிரகத்தால் மீண்டும் ஆணுருவடைந்து வாலிக்குப் பட்டங் கட்டினன்.

இருகன்

விருகன் தந்தை.

இருகால் இராசி

மிதுனம், கன்னி, துலாம், கும்பம், ஆக 4.

இருகு

1. சத்திய இதன் குமரன். 2, சவனன் குமாரனாகிய பிரமதிக்கும் கிருதாசி யென்னும் காந்தருவ ஸ்திரியி னுக்கும் பிறந்த இருடி. இவன் தேவி பிரமத்துவரைப் பாம்புகடித் திறந்தனள். அதனால் பாம்புகளை இவன் கொலை செய்து வருகையில் பாம்புருவடைந்திருந்த சகஸ்திர பாதருஷி வேண்டுகையால் பாம்புகளைக் கொலை செய்யாமல் நிறுத்தினன். இவனை இருருவெனவுங் கூறுவர்.

இருக்குமணி

பிரத்துயும்நன் தாய். பீஷ்மகன் குமரி. தமயனாகிய இருக்குமி தன்னைச் சிசுபாலனுக்கு மணப்பிக்க விருந்ததை ஒரு பிராமணர் மூலமாகக் கண்ண னுக் கறிவித்துக் கௌரி பூசையால் கண்ணனுடன் சகல அரசருங் கண்டிருக்க இரதத்திலேறித் துவாரகை சென்றனள். இதனால் இருக்குமி கண்ணனை யெதிர்த்து யுத்தஞ்செய்யக் கண்ணன் இருக்குமியின் சிரத்தைக் கொய்யச் சரமெடுத்தலைக் கண்ட இருக்குமனி தமயனை கொல்லாதிருக்க வேண்டினள். இவளுக்குப் பிரத துயும்நன் முதலிய பத்து குமார்கள்.

இருக்குமன்

1. இருகன் குமரன், 2. ருசன் குமரன்.

இருக்குமாங்கதன்

1. சூர்யவம்சத தரசன், இவன் தேவி சந்தியாவளி. இவனை வசிட்டர் இந்திரசபையில் புகழ்ந்து கூறினர். அதனால் இந்திரன் அதனுண்மையறிய நாரதரை அவன் சபைக்கனுப்பினன். அரசன் நாரதர் வர அவரை எதிர்கொண்டு போய் வணங்கி ஆசனத்திருத்தி வழிபாடு முதலியவை குறைவிலாது செய்து தன் பூந்தோட்டத்திலுள்ள அரிய பூக்களைத் தொடுத்து மாலை செய்வித்து மாலை சாத்தினன். இந்த மாலை பூண்ட நாரதர் தேவசபைக்கு மாலையுடன் செல்ல இந்தி ரன் கண்டு இம்மாலை ஏதென்றனன்? நாரதர் இது இருக்குமாங்கதன் பூந்தோட்டத் திலுண்டாம்மலர்கள் என்றனர். இந்திரன் இந்த நல்ல மலர்களிடத் தாசைகொண்டு தன் தூதர்களை அழைப்பித்து இன்று முதல் இருக்குமாங்க தன் தோட்டத்திலுள்ள மலர்களைக் கொய்து வருக என அவ்வகையே செய்துவந்தனர். இவ்வகை தினமும் செய்துவர அரசன் தோட்டத்துக் காவற்காரரைக் கோபித்தனன். தோட்டக்காரர் எவ்வகைத் தேடியுங் காணாது வருந்தி ஒரு நாளிரவில் இருளின் மிகுதியால் உலர்ந்த கத்திரிச்செடிகளின் பூண்டுகளைக் கொளுத்தினர். இப்புகை மிகுதியால் விமானத்தின் வலியடங்கத் தேவர் காவற்காரர் வசத்திலகப்பட்டனர். காவ லாளிகள் தேவரை அரசனிடங் கொண்டு வர அரசன் கண்டு வணங்கி இருப்பிடஞ் செல்ல அனுப்பினன். தேவதூதர் அரசனை நோக்கி அரசனே கத்திரிப்பூண்டின் புகையால் தேவவிமானம் ஆகாயத்திற் செல்லும் வலியற்றது. ஏகாதசி விரதமிருந்த யாராயினும் அந்த விரதபலத்திற் சிறிது தருவரேல் நாங்கள் விமானத்துடன் எங்க ளிட மடைகின்றோமெனத் தேவர் கூறக் கேட்டு அவ்விடம் யாரையுங்காணாது ஏகாதசியில் தன் கணவனுடன் சண்டை செய்து உணவு கொள்ளாமல் அன்று இராப்பகல் முழுதும் பட்டினியிருந்த வண்ணாத்தி ஒருத்தி ஏகாதசியில் விரதமிருந்த பலத்தைத் தரப்பெற்றுக் சுவர்க்கமடைந்தனர். இதனை அசனுணர்ந்து தன் காட் டிலுள்ளார் அனைவரையும் ஏகாதசிவிரதமிருக்கச்செய்து தானும் விரதமிருந்தனன். இவனிடம் ஒருமுறை திருவாசமுனிவர் அதிதியாக வந்து பாரணைக்கு வருகிறே னென்று சொல்லி ஸ்நானத்திற்குச் சென்று சற்றுத் தாமதித்திருந்தனர். அரசன் பாரணை காலம் தவறுவதறிந்து இருடி வராமையால் அன்னம் புசியாமல் விரத காலந் தவமுமல் தீர்த்தபானஞ் செய்தனன், இருடிவந்து நடந்ததறிந்து மிக்க கோபங்கொண்டு சாபமிடத் தொடங்குகையில் அரசன் நாராயணனைத் துதிக்க, விஷ்ணு சக்கரம் இருடியைத் தூரத்தத் தொடங்கியது. இருடி பயந்து சக்கரத்திற்கு ஒளிமழுங்கச் சாபந்தந்து அரசனிடம் வந்து குறையேற்று இருப்பிடஞ் சென்றனர். இவனாட்டிலுள்ளார் அனைவரும் ஏகாதசி விரதம் அனுட்டித்து வருகையில் யமன் தனக்கு வேலையின்றிப் பிரமனிடம் முறையிட அவன் மோகினியை யேவி அரசனை மயக்குவிக்க அரசன் அவளிடத்து மயங்கி யிருந்தனன். ஒருநாள் ஏகாதசி யன்று முரசு அறையக்கேட்டு நீங்க, மோகினி அரசனைப்பார்த்து உன்னை நீங்க திருக்கின்றேன் கேட்டது தருகின்றேன் என்ற சொல் மறந்தீரோ என அரசன் நீ எது வேண்டினு மீவேன் ஏகாதசி விரதம் இழக்கேன் என்றனன். மோகினி ஆயின் உன் குமரனைத் தாய் பிடிக்க நீ கொலைபுரிந்து தருகஎன அவ்வகையே தன் தேவியடத்துக் கூறிக் குமரனைக் கொலை செய்கையில் தேவர்கள் தரிசனம் தந்து குமரனை உயிர்ப்பித்து அரசனுக்கு வேண்டிய வரந்தந்து தமதிருக்கை சென்றனர். அரசன் சிறிது காலம் அரசாண்டு தன் குமரன் தருமாங்கதனுக்குப் பட்டமளித்து நல்லுலக மடைந்துள்ளான் (பிரகன்னாரதீய புராணம்.) 2. சல்லியனுடைய குமரன். (பாஆதி)

இருக்குமி

1, விதர்ப்பநாட்டரசன், இருக்குமணியினுடன் பிறந்தவன். 2. பீஷ்மகன் குமரன். 3. போசகட நாட்டரசன்.

இருக்குமேசு

ருசகன் குமரன்.

இருக்குமேஷூ

இருகன் குமரன்.

இருக்குவேதம்

நான்கு வேதங்களில் ஒன்று. இது இருபத்தொரு சாகைக ளுடையது. இதற்குள்ள உபநிடதங்கள் ஐதரேயம், கௌவிதகி, நாதபிந்து, ஆத் மப்பிரபோதம், நிருவாணம், முத்கலை, அக்ஷமாலிகை, திரிபுரை, சௌபாக்யம், வக்விருச்சானை எனப் பத்தாம்.

இருக்மரதன்

1. மத்திராதிபதியாகிய சல்லிய புத்திரன் இவன் புத்திரர்கள் அனை வரும் அபிமன்யுவால் கொல்லப்பட்டனர். (பா~பீஷ். 2. துரோணாசாரியருக்கு ஒரு பெயர்.

இருக்ஷ விரசன்

ஒரு குரங்கு. ஒருமுறை பிரமன் யோகத்திலிருந்தனன். அவன் கண்ணிலிருந்து ஒரு துளிநீர் பூமியில் விழுந்தது. அந்நீர் ஒரு ஆண்குரங்காய் வனமெங்குஞ்சரித்துப் பார்வதியார் வனத்திலிருந்த தடாகத்தில் நீருள் முழுகிற்று. உடனே ஒரு அழகுள்ள பெண்குரங்காயது. இக்குரங்கை இந்திரனும் சூரியனும் கண்டு மோகித்து ரேதசைப் பதித்தனர். இவர்கள் இரேதசில் சூரியன் இரேதசு கிரீவத்தில் விழுந்தது. அதனால் சுக்கிரீவன் பிறந்தனன். இந்திரன் ரேதஸ்வாலில் விழ வாலி பிறந்தனன். வாலிக்கு இந்திரன், பிறர் இவனிடம் யுத்தஞ் செய்யின் அவர் பலத்தில் பாதி வரவும் பொன் மாலையும், தந்தனன்.

இருக்ஷகன்

(சூ.) சுநக்ஷத்ரன் குமரன்.

இருக்ஷதேவன்

க்ஷத்திரியன். சந்திர வம்சத்து அரசன். துருபத புத்திரனாகிய சிகண்டி புத்திரன்.

இருக்ஷன்

1. அசாமீளன் மூன்றாங் குமரன். இவன் பேரன் குரு 2. புரூசன் குமரன். பாமியாச்வன். 3. தேவாதிதி குமரன்.

இருக்ஷம்

ஒரு பர்வதம் மாளவதேசத்தருகிலுள்ளது.

இருக்ஷயன்

மகாவீரியன் குமரன். இவன் குமரர் திரையாருணி, கவி, புஷ்கராருணி. இச்சந்ததியார் வேதியராயினார்.

இருக்ஷவான்

குலபர்வதங்களில் ஒன்று. (THE EASTERN PART OF VINDHYA RANGE.)

இருக்ஷை

அஜமீளன் தேவி புத்திரன் சம்வர்னன்.

இருங்கிருசன்

சமீக முனிவருக்குப் பாம்பைச் சூடியவன் இன்னான் என்று சிருங்கி முனிவருக்குக் கூறியவன்.

இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் சாதியில் இடையராக இருத்தல் கூடும். இவரது இயற்பெயர். செங்கண்ணனார். உறுப்பால் வந்தபெயர். இவர் அகத்தில் பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைவன் கன்னெஞ்சினை நோக்கிப் பரிதபித்தலேக் கூறுதல் இனிமை தரும். (279.)

இருங்கோவேள்

இவன், வடபக்கத்தில் ஒரு முனிவருடைய வேள்வியில் தோன் றித் துவாராபதியை ஆண்ட (49) வேளிருள் ஒருவன். ஒரு பெரியவர் தவஞ்செய்து கொண்டிருந்த காலத்தில் அவர்க்கு இடையூறு செய்ய வந்த புலியை அவர் உத்தரப்படி கொன்று புலி கடிமால் என்று பெயர் பெற்றவள், இறந்த வேள் பாரியின் பெண்களை மணந்து கொள்ளக் கூறிய கபிலர் சொல்லை மறுத்து அவரால் வெறுக்கப்பட்டவன். இவன் முன்னோரில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்து அரையநாட்டிருந்த சிற்றரையம், பேரரையம் இழந்தனன். கொடையாளி, “நீயே வடபான் முனிவன் றடவினுட்டோன்றிச், செம்பு புனைந்தியற்றிய சேணெடும்புரிசை, யுவராவீகைத்துவரை யாண்டு, நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே” “ஒலியற் கண்ணி புலிகடிமால்” என்ப. (புறநானூறு.)

இருசமய சோதி

சைவவைஷ்ணவ சமயங்களின் ஏற்றத் தாழ்வைக் கூறிய நூல்.

இருசமயவிளக்கம்

சைவவைஷ்ணவ சமயங்களின் ஏற்றத் தாழ்வைக் கூறிய நூல் அரிதா தனியற்றியது.

இருசி

1. ஒரு பிரசாபதி. 2. ஒரு க்ஷத்ர தேவதை.

இருசிகசிங்கர்

அரணி புத்ரர் என்பர். விபாண்டகர் புத்ரர் எனவும் கூறுவர். இவர் உரோமபதன் பாட்டில் மழையிலாதிருக்கையில் வேசையரால் வஞ்சிக்கப்பட்டு அந்நாடடைய மழை பெய்தது. அது கண்ட அரசன் எதிர்கொண்டு வணங்கி அமைவேண்டித் தன் குமரியாகிய சாந்தையை மணம்புரிவிக்கப் பெற்றவர். தசரதனுக்குப் புத்திரகாமேஷ்டியாகம் செய்வித்தவர். கலைக்கோட்டு முனிவரெனவும், பெயர். விபாண்டகரைக் காண்க. (பாகவதம் இராமாயணம்).

இருசிகன்

1. ஊருவன் குமரன் எனவும், பிருகுவில் குமரன் எனவுங்கூறுவர். இவன் விச்வாமித்ரன் உடன்பிறந்தவளாகிய சத்யவதியை மணந்தனன் என்பர். இவனை இரிசிகன் எனவுங் கூறுவர். ஒருமுறை சூர்யவம்சத்தாசருள் ஒருவனாகிய அம்பரீஷன் யாகப்பசுவினை யிழந்து அதற்குப் பதில் நரப்பசுவேண்டித் தேடி வருகையில் அவனுக்கு இவன் தன் குமரர் மூவரில் முன்னோனும், கடையவனுமொழிய நடுப்பிறந்தவனாகிய சுனச்சேனனை விற்றுப் பொருள் பெற்றனன். அம்பரீஷன் அந்த வேதியச்சிறுவனை அழைத்து வருகையில் சிறுவன், வழியில் சந்தித்த அம்மானாகிய விச்வாமித்திரனைக் கண்டு அழுதனன். விச்வாமித்திரன் அவன் காதில் மந்திரமுபதேசித்து இதை நீ செபித்து இரு, இதனால் தேவர் திருப்தி அடைவர் எனக் கேட்டு அவ்வகை செய்து உயிர்பிழைத்தனன். இவன் குமரன் சமதக்னி. 2. சௌநகன் குமரன். 3. தருமன் குமரன். இவன் குமரர் சியாமகன், பிரது, இருக்மேஷு, இருக்மன், புருசித்.

இருசிகர்

பிருகுபுத்ரர். இருசிகரைக்காண்க.

இருசியசிங்காச்ரமம்

கௌசகிந்தியின் தீரத்தில் உள்ள இடம். அதில் லோமசேன னுடன் தர்மபுத்திரன் சென்றதாகப் பாரதம் கூறுகிறது. THE HERMITAGE OF THE RISHI NEAR THE RIVER KUSI SITUATED AT SINGHESWAR IN THE DISTRICT OF BHAGALPUR.

இருசியமுகம்

ஒரு மலை. இது கிஷ்கிந்தைக் கருகிலுள்ளது. இதில் சுக்ரீவன் வாலிக்குப் பயந்து ஒளித்திருந்தனன். பம்பை சிரசு இதற்கருகிலுள்ளதெனவுங் கூறப் பட்டிருக்கிறது. A MOUNTAIN SITUATED 8 MILES FROM ANAGUNDI ON THE BANK OF THE RIVER UNGA THANGABHADRA.

இருசுவரோமா

சுவர்ணரோமாவின்குமரன்

இருசேயன்

ரௌத்திராசவன் மூத்தகுமரன்.

இருஞ்சிறை

பாண்டியன் மேகங்களைக் கட்டிச் சிறைப்படுத்திய இடம் ‘கட்டு நல்லூரிருஞ்சிறை” என வழங்கும்; மானாமதுரைக்குச் சமீபமானது. (திருவிளையாடல்).

இருடி கொல்லியம்

கலிங்க தேசத்திலுள்ள நதி. (THIS IS A RIVER ON WHICH GANJAM IS SITUATED. IT RISES IN THE MAHENDRA HILLS.)

இருடிகம்

வடதிசையில் காமபோஜ நாட்டிற்கு சமீபத்திலுள்ள தேசம். (THE RUSSIAN EMPIRE.

இருணத்திரயம்

கிரியாருணம், பிரமசாயருணம், அல்லது தேவருணம், ரிஷிரு ணம், பித்ருருணம்.

இருததாமன்

வசுதேவன் தம்பியாகிய அனகன் குமரன்.

இருதத்துவசன்

1. காச்யன் வம்சத்தவன். 2. குவலாயுசுவனுக்கு ஒரு பெயர். இவன் சத்துருசித்தின் குமரன். காலவ முனிவர் ஒரு நாள் தங்களை வருத்தப்படுத்தும் அரக்கனைப்பற்றிச் சிந்திக்கக், குவலயாசுவமெனும் ஒரு குதிரை ஆகாயத்திலிருந்து சூரியனாலனுப்பப்பட்டது. உடனே அசரீரி, முனிவரைநோக்கி இந்தக் குதிரையைச் சத்ருசித்தின் குமாரனாகிய இருதத்து வசனிடம் தரின் அவன் உங்கள் பகையை வெல்வானென்று மறைந்தது. முனிவர் அந்தக் குதிரையைக்கொண்டு சத்ருசித்தி னிடம் வந்து நடந்ததைக் கூற அரசன் தன் குமரனை முனிவர் எண்ணப்படி அனுப்பினன். இருதத்துவசன் அந்தக் குவலயாசுவம் ஏறினமையால் குவலயாசுவன் எனும் பெயரடைந்து முனிவருக்குப் பின் செல்ல, அசுரன் முனிவராச்சிரமத்தில் பன்றியுருக்கொண்டு தீமை செய்வதறிந்து அவனைத் தொடரப் பன்றியுருக்கொண்ட அசுரன் பலகாதம் ஓடி ஒருபிலத்தில் மறைந்தனன். அரசனும் விடாது பின்பற்றி அப்பிலத்தின் வழிச்சென்று அங்கு நிர்ச்சனமான நகரம் தோன்றக் கண்டு அவ்விடம் ஒரு பெண் வாய்பேசாமல் போதல் கண்டு தன்குதிரையை அவ்விடமிருந்த மரத்தில் கட்டி விட்டுப் பின்தொடா அவள் திவ்யமான மாளிகை யொன்றில் புக அரசனுஞ் சென்று அம்மாளிகையில் ஒரு பொன்மயமான மஞ்சத்தில் அழகு குடி கொண்டாற்போல் ஒரு பெண்ணிருக்கக் கண்டனன். அந்தப் பெண், அரசகும எனைக் கண்டு மயல்கொண்டு மஞ்சத்தில் விழுந்தனள். இவளைக் குண்டலை யென்னும் அவளது நண்பி தேற்றி அரசனை நோக்கி, அரசனே இந்தப் பெண், விசுவாவசு எனும் காந்தருவராசன் பெண், பெயர் மதாலசை, இவளைப் பாதாள வாசியாகிய வச்சிரகேதுவின் மகன் பாதாளகேது எனும் அரக்கன் கவர்ந்து இவ்விடம் வைத்திருக்கின்றான், இவுள் சாகத் துணிகைவில் காமதேனுதோன்றி இவளை நோக்கி இந்த அரக்கன் மண்ணுலகடைகையில் எவன் கையில் மாளுகிறானோ அவனே உனக்கு நாயகன் எனக் கூறியது. அதனால் இவள் சாகாதிருக்கின்றாள் என்றனள். அரசகுமரன் அவ்விடமிவளை மணந்து திரும்புகையில் பாதாள கேதுவுடன் கூடிய அரக்கர் எதிர்க்க அவர்களை வென்று மனைவியுடன் தன்னகரடைந்தனன். இவன் ஒருநாள் வேதியரைக் காக்கக் காட்டின் வழிச் செல்லுகையில் பாதாள கேதுவின் தம்பி தாலகேது தவசிவேடம் பூண்டு இவ னுக்கு முன் வந்து அரசனே உன் மார்பிலிருக்கும் பதக்கத்தைத் தரின் இந்த யமு னையில் மூழ்கி வருணயாகம் முடித்து இந்தப் பதக்கத்தைத் தக்ஷிணை கொடுத்து வருகிறேன், அதுவரையில் இந்தக் கரையிலிரு என்ன, அரசன் உடன்பட்டுப்பதக்கத்தைத் தந்தனன். அரக்கன் அதனைப் பெற்று நீரில் மறைந்து மதாலசையிடஞ் சென்று அரசன் அரக்கனா லிறந்தனன் என்று பதக்கத்தைக்காட்டப் பிரிவாற்றாக, மதாலசை யிறந்தனள். அரக்கன் பதக்கத்தை யவ்விடம் எறிந்து மீண்டும் அரசனை அவனிடம் போகக்கூறி மறைந்தனன். அரசன் பட்டணஞ் சென்று அரக்கன் செய்த வஞ்சனை யறிந்து விசனமடைர் திருந்தனன். இவ்வாசனுக்கு அசுவதரன் குமரர் நண்பர். இந்த அசுவதரன், எனும் காகராசன் தன் குமாரரால் குவலயாசுவனுக்கு நேர்ந்த ஆபத்தறிந்து சிவமூர்த்தியை எண்ணித் தவம்புரிந்து அவர் சொற்படி அவளைத் தன் படத்தில் மீண்டும் பழைய நினைவுடனும் வயதுடனும் பெற்று அரசனைக் குமரரால் வருவித்து இரண்டாமுறை மதாலசையை மணப்பித்தனன், இவன் குமாரர் விக்ராந்தன், சுபாகு, சத்ருமர்த்தனன், அலர்க்கன் முதலியோர்.

இருதன்

மிதிலை யாசனாகிய விசயன் குமரன்.

இருதம்தகை

துஷ்யந்தன் தாய்.

இருதயதேவர்

சந்திரவர்ணமாய், பதமாசனராய் மூன்றாம் பிறையைச் சடையிற் றரித்தவராய் முக்கண் நான்கு புஜம் சாத்தி சூலம், அபயம், வரதம், உடையவராய்ச் சர்வாபாண பூஷிதராயிருப்பர்.

இருதலைப்பக்ஷி

இது தலைகளிரண்டும் உடல் ஒன்றுமாகவுள்ள பக்ஷி யென்பர். இப்பக்ஷியை அவ்வுருவமாக எழுதுகிறார்களேயன்றி அவ்வகை பக்ஷியிருக்கு மிடம் செய்கை ஒன்றும் கண்டதில்லை.

இருதவாக்கு

ஒரு ராஜருஷி. இவனுக்கு ரேவதி நக்ஷத்திரத்தில் பிள்ளை பிறந்து தீயவன் ஆனமையால் இவன் அந்நக்ஷத்திரத்தைப் பூமியில் விழச் சபித்தனன். ரைவத மனுவைக் காண்க.

இருதி

பௌண்டரீகனுக்குச் சகோதரன்.

இருதிகன்

போசன் குமரன், இவன் குமரர் தேவமீடன், சததன்வா, கிருதவர்மா.

இருதுக்கள்

ஆறு. அவை. பன்னிரண்டு மாதங்களை இவ்விரண்டாகக் கொள்வதாம். அந்தருதுக்கள் வசந்தருது, கிரீஷ்மருது, வர்ஷருது, சரத்ருது, எமந்தருது, சசிரருது, என்பன. இவைகளில் வசந்தருது பிராம்மணருக்கும்,க்ரீஷ்மருது அரசர்க்கும், சரத்ருது வைசியருக்குமாம். இவைகளில் வசந்தருது வருஷத்தின் முகமென்னப்படும். மேற்கூறிய ருதுக்கள் சாந்திர சௌரமென இருவகைப்படும். அந்த மாதத்தில் சித்ராநக்ஷத்திரம் பௌரணையுடன் கூடிவரின் சாந்திரருது. மீன மேஷங்களில் சூரியன் எவ்வளவு காலம் இருப்பின் அது, சௌரம் எனப்படும்.

இருதுசர்மா

பன்னிரண்டா மன்வந்தரத்து இந்திரன்.

இருதுபர்ணன் (சூ.)

அயுதாயுவின் குமரன். சர்வகாமனுக்குத் தந்தை இவனிடத்தில் நளன் நாட்டையிழந்து வேற்றுருவடைந்து சமையற்றொழில் செய்திருந்தனன். நளனிடத்தில் அச்வ இருதயவித்தை கற்று அதற்குப்பதில் அஸ்திரவித்தை தந்தவன். (பாகவதம்).

இருதுஹாரி

ஸ்திரீகளை ருதுகாலத்தில் அபகரிப்பவள்.

இருத்தை

ஒரு பெண் தேவதை. இவள், சுபங்கள் எல்லாவற்றையும் கெடுப்பவளும் காலதூதியும், நெஞ்சில் சற்றேனும் இரக்கமில்லாதவளும் ஆவள். இவள் சிறப்பில் லாத துகிலையும், சிவந்த கண்ணையும், நெருங்கிய வலிய வெண்பல்வினையும், முழ அளவு நீண்ட நகத்தினையும் உடையவள், இவள் காலம் இரண்டு பக்ஷங்களிலு முள்ள சதுர்த்தி, சஷ்டி, நவமி, துவாதசி, சதுர்த்தசியுமாம். இவை சுபகருமங்களுக்கு ஆகாவாம். இவற்றைப் பக்கச்சித்திரையென நீக்கினார்கள், ஆகாவென்ற பக்ஷம்களில் தோஷமான நாழிகை சதுர்த்தி, 9 நவமி 25, சஷ்டி 9, அஷ்டமி 14, துவாதசி 10, சதுர்த்தசி 5, இந்நாழிகைகளைக் கழித்தால், இத்திதி நன்றென்க, சந்திரன் சிங்கத்தினின்று, குருவுதயத்தினிற்க உச்சமெய்தில் சுபகருமஞ் செய்யலாம்.

இருத்விக்

அக்னிசந்தானம், பாகயஞ்ஞம், அக்னிஷ்டோமம் முதலியவற்றைச் செய்விக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டவனாய்ச் செய்விக்கிறவன். (மநு~அத்தியாயம் 1)

இருத்விக்குகள்

இவர்கள் பதினறுவகையர். பிரம்மா, உத்காதா, ஹோதா, அத்வர்யு, பிராம்மணன், பிரஸ்தோதா, மைத்ராவருணன், பிரதிபாஸ்தாதா, புரோதா, பிரதிஹர்த்தா, அச்சாவாகன், நேஷ்டா, அக்நீத்சன், சுப்ரமண்யன், கிராவஸ்துத், உன்னேதா.

இருநிதிக்கிழவன்

1 குபேரனுக் கொருபெயர். 2. கோவலன் தந்தை கோவலனிறந் தமை கேட்டுத் துறவுபூண்டோன். (சிலப்)

இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்

இடைச்சங்கத்திருந்த தமிழ்ப் புலவருள் ஒருவர்.

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவரியற்பெயர் கொற்றன். இவரது ஊர் இருந்தையூர் போலும் இவர் அகத்தில் குறிஞ்சியில் மகளிரையே மாற்றிக் குரங்குகள் தினை கவர்ந்துண்ணலைப் பாடியுளார். (அகம்~335)

இருபத்தொரு தலைமுறை

பிதாமுதல் முன்னேழுபெயர் தன் முதல் பின்னேழு பெயர் தாய் வம்சத்தில் பாட்டன் முதல் எழு பெயர்.

இருபன்

பிரமன் புத்திரர்களிலொருவன். இவன் சிருட்டியிலிச்சைபொது தவமேற்கொள்ளப் பிரமன் மறுபடியும் மரீசி முதலியவரைப் படைத்தனன். இவனுக்கு இடபன் எனவும் பெயர்.

இருபு

பிரமபுத்ரர். நைட்டிகப் பிரமசரியமனுட்டித்த இருடி.

இருபுக்ஷன்

இந்திரன்.

இருப்புப்பாதைவண்டி

இது நீராவியந்திரத்தால் ஓடும் வண்டி இந்த யந்திரத்தை முதல் முதல் தன் யுக்தியால் கண்டுபிடித் தவன் ஜார்ஜ் ஸ்டீவின்ஸன்.

இருமல் செடி (COUGHING PLANT)

இது, அமெரிக்காவிலும் அதை அடுத்த பாகங்களிலுமுள்ள ஒருவகைச் செடி. இச்செடியின் காய்கள் முற்றி வெடித்து இலைகள் மீது விழுகையில் இலைகள் மூச்சுவிடும் பாகத்தில் காற்று நிறைந்து ஒரு குழந்தை இருமுகிறது போல் சத்தத்துடன் புழுதியை மேலெழுப்பி விதையை விசிறிக் கொண்டு இலை வெடிக்கிறது.

இருமை

இம்மை, மறுமை.

இரும்பிடர்த்தலையார்

இவர் பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும் பெயர் வழுதியைப் புகழ்ந்த காலத்து “பெருங்கை யானை விரும்பிடர்த் தலையிருந்து” எனக் கூறினமையினிவருக்கு இப்பெயர் வந்தது போலும். இவர், சோழன் கரிகால் னுக்கு அம்மான். அவனுக்குப்பெருந்துணை யாயிருந்தவர். இதனை “சுடப்பட்டு மிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றே; கடைக்காற், செங்கோல் செலீஇயினான் ” என்னும் பழமொழி வெண்பாவானும் அறிக. (புறம். செ. 4)

இரும்பு

உலோகங்கள் எல்லாவற்றிலும் மிக்க உறுதியுள்ளதும் உபயோகமுள்ளது மான லோகம். பூமியில் ஆழ்ந்த இடத்தில் மண்கல்களுடன் கலந்து இருப்பது. இத னைக் கழுவிக் கரியும் சுண்ணாம்பும் சேர்த்து உருக்கினால் சுத்தமாம். இது கறுப்புகிறமுள்ளது. இதை உருக்கி வார்த்தால் தண்டவாளம் என்பர். இரும்புடன் நூற்றுக்கு ஒரு பங்குகரியைச் சேர்த்து உருக்கினால் எஃகு ஆகிறது. நயப்பில் எஃகுபொன்னிற் கிரண்டாவதாகக் கூறலாம். எழுகினால் கத்தி, வாள், ஊசி, கடிகாரப் பொருள்கள் மற்றும் உறுதியான கருவிகளும், யந்திரங்களுக்குரிய கருவிகளும் செய்யப்படுகின்றன, இரும்பில் துரு ஏறும். இது, எல்லாத் தொழில்களுக்கும் உதவுதலால் இதை ராஜலோகம் என்பர். காந்தமும் சற்றேறக்குறைய இதனிறம் உடையது இதனுடன் கலந்திருப்பது, காந்தம் ஒன்றே இரும்பைக் கவரவல்லது. இது, எல்லாக் கண்டங்களிலும் அகப்படுகிறது, வார்ப்பிரும்பைக் காய்ச்சியதிலுள்ள கரியை நீக்கினால் தேனிரும்பாகிறது. இது துவளக்கூடியது. இதனால் ஆணி முதலிய செய்வர்.

இரும்புமலை

இரும்பு பல இடங்களில் மண்ணுடன் கலந்தெடுக்கப்படும் பொரு சாம், வட அமெரிகா கண்டத்து மெக்ஸிகோ நாட்டில் (640) அடி உயரமும் (4) சதுரமைல் விசாலமுமுள்ள ஒரு இரும்புமலை உண்டு.

இருளப்பன்

பாண்டிநாட்டில் கொண்டாடப்பட்ட ஒரு க்ஷத்ரதேவதை.

இருளர்

இவர்கள் நீலகிரி முதலிய இடங்களிலுள்ள சாதியார். இவர்கள் இருள் நிற முடையவர்கள், கோடர், படுகர், கன்னடர், குறும்பர், தோடர் இவர்கள் எல்லாம் மலை முதவிய காட்டு வாழ்க்கையர். இவர்கள் தமிழ் பேசுவர். (தர்ஸ்டன்)

இருளாயி

பாண்டி நாட்டில் கொண்டாடப்பட்ட ஒரு பெண் க்ஷத்ரதேவதை,

இருவருந் தபுநிலை

போர்செய்யும் சேனைகளிரண்டும் களத்திற்பட இருவரசரும் மாறுபாட்டாற் பட்டது.

இருஷபன்

இடபனைக் காண்க.

இருஷபம்

1. ஒரு மலை, பாண்டி நாட்டில் உள்ளது. தர்மபுத்திரன் தீர்த்தயாத்திரை யில் தங்கியது. (ALAGIRI HILLS IN THE DISTRICT OF MADURA.) 2. மகததேசத்தில் உள்ள ஒரு பர்வதம். 3. வட சமுத்திரத்தின் கரையிலுள்ள ஒரு மலை. இதில் சாண்டிலி என்னும் பிராமணன் தவம் செய்தான். 4. ஒரு தீர்த்தம். கோசல தேசத்திலுள்ளது. 5. சர்பவிசேஷம்.

இருஷயம்

ஒரு பர்வதம். அத்திரிமுனிவர் இருக்கை. மகததேசத்தில் வராகமலைக் கெதிரிலுள்ளது.

இருஷிகன்

பாரத வீரரில் ஒருவன், நிகும்பனம்சம்.

இருஷிகருமன்

திருதராட்டிரன் குமரன்.

இருஷிகள்

அத்திரி, அரிஷ்டநேமி, ஆங்கீரஸர், உசத்தியர், இந்திரப்பிரதமர், இத்ம வாகர், அதிதி, ஆரக்ஷணர், அவுசவர், அகத்தியர், இரிடி, அசிதர், அவாந்தர தமசு, ஆசூரி, இலிகிதர், உத்தாலகர், உபமன்யு, அவிஷ்மார், இருசிகசிங்கர், இருக்குவர் யர், ஆமலகப்பிரியர், ஆர்த்திகர், உக்ர வீரர், ஏகபாதர், உத்தமான், இரண்யாஷன், ஆபத்தர், உலேலுபர், அதர்ப்பர், அப்பிரீதர், அக்நிவர்ணர், இலம்பகர், அக்நிவேசர், அரீதர், ஆத்திரேயர், ஆபத்தம்பர், ஐதிசயானர், அவடர், அரஷ்டிஷேணர் அதூபர், ஔசித்யர், கட்சீவான், கௌரமுகர், கௌதமர், கமஷ்டர், கபிலர், காலவர், கவிஷ்டர், கச்யபர், கிருது, கர்த்தமர், கரணர், கைவல்யர், கங்கணர், காலாக்னி ருத்ரர், கல்லாரர், களாதாரமுனி, கிலீபர், காலரூபர், காலமாலி, கார்க்கயர், காத்யா யனர், கண்ணுவர், கபிலர், சாரத்துவார், சௌநகர், சநற்குமாரர், சுகர், சாவருணி, சங்கர், சுவேதகேது, சாண்டில்யர், சம்வர்த்தர், சுமந்து, சமதக்கி, சியவனர், சநகர், சகந்தர், சநத்குமாரர், சநச்சுசாதர், சைக ஷவ்யர், சிதசத்ரு, சுகர், சுவேதாச்வதரர், சுவேதவாகு, சங்கு, சம்பு, சக்திதர், சங்கு கன்னர், சனைச்சார், சபாவர்ணர், சமக்கிரீ பர், சரகர், சுசுருதர், சடுகர்னர், சௌமியர், சாதாதபர், சுதீஷணர், சரபங்கர், சாவர்ணி, சீவந்தி, சாபாலி, தேவலர், துருவாசர், தீர்க்கதமர், தாண்டியர், தேவஹோதரர், திரிபாதர், துவிபாதர், தக்ஷர், நாரதர் பிருகு, பராசர், பரசுராமர், பரத்துவாசர், பிரமிலாதர், பருவதர், பதஞ்சலி, பாண்டாயினி, பைலர், புலகர், பிரசேதர், புலத்தியர், பிருங்கி, பதுமநாபர், பக்ஷர், பிலர், பேளர், பார்க்கவர், போதாயனர், பார்த்தர், மித்திராவருணர், மேதை, மைத்ரேயர், மார்க்கண்டேயர், மரீசி, மணி, மகாசேநர், மகாவீரர், மகோதரர், மகாவாகு, மசகாண்டர், மாண்டுகர்னர், யஞ்ஞவற்கர், வசிட்டர், விச்வாமித்ரர், வியாசர், வியாக்ரபாதர், வைசுவாநரர், வான்மீகர், வைசம்பாயனர், வாலகில்லியர், விபாண்டகர், வாமதேவர், விரசர், விசுவர், வச்சர், வைரோஹிதி, வீதி அவ்யர், வாத்யஸ்வர், வைநர் முதலியர். மற்றும் பலர்.

இருஷிகள் பதினொருவர்

அத்திரி, வசிஷ்டர், புலத்தியர், கிருது, பரத்வாசர், விச்வா மித்ரர், பிரசேதஸ், ருசிகர், அகஸ்தியர், ததீசி, தூர்வாசர்.

இருஷிகுல்லி

1. பூமாவின் தேவி. ருஷிகுல்லி யெனவுங் கூறுவர். 2. ஒரு நதி. ஆடகதேசத்து ருஷபர்வ தத்திலுள்ளது.

இருஷிகேசன்

விஷ்ணுவிற் கொருபெயர்.

இருஷிகை

மகேந்திர பருவதத்திலிருந்து பாயும் ஒரு நதி. (ருஷிகை) வேதியச் சிறுமி இளமையில் விதவையாய் நருமதா நதிக்கரையிலுள்ள நந்திகேசுவார்க் கருகில் சிவபூசை செய்கையில் மூடன் எனும் தைத்தியன் வருத்த அவன் பொருட்டு நந்திமாதேவரும் கங்கையும் பிரத்தியக்ஷமாய் இடையூறு நீக்க இஷ்டசித்தி பெற் றவள்.

இரெஞ்சிஷ்டன்

பிரியவிரதன் பேரன். கிருதபிருஷ்டன் குமரன்.

இரேகைலக்ஷணம்

இது புருஷரின் அங்கத்திலுள்ள இரேகைகளை நோக்கிப் பலன் கூறுதல். நெற்றியில் நான்கு வரைகளும், கழுத்தில் 3 வரைகளுமிருந்தால் அவனுக்குத் தாரம் இரண்டு. பித வியாதியால் துன்புறுவன். நெற்றியில் 3, கழுத்தில் 2 இரேகைகள் இருந்து, முதுகின் வலப்புறம் மறுவொன்று காணப்படின் ஒருதாரம் கெடும், மறுதாரம் நிலைக்கும், வறுமையடைவன். நெற்றியில் 2 ரேகைகளிருக்க இடப்பக்க மறுவுண்டாயின் மனைவிமக்கள் பகைமை கொண்டிருப்பர். பொருள் நஷ்டமாய் உதவியின்றியிருப்பன். நெற்றியில் ஐந்து வரைகள் இருக்கின் விசனம், பொருள் நில்லாது. நெற்றியிலும், கழுத்திலும் மும்மூன்று ரேகைகள் இருப்பின் பொருளுண்டாகிக் கெடும், வேளாண்மையில் அரைப்பலன், நெற்றியில் 3 ரேகைகளும் கழுத்தில் ஒன்றும் இருக்கின், ஜலபயம், பொருள் சேரும், இடரில்லை, அதியோகம், குழந்தைகளுண்டாம், நெற்றியில் 3 இரேகைகளிருக்கக் கண்கள் கறுத்து மூக்கு நீண்டிருக்கின், இரண்டு தாரம் உடையவன், சமர்த்தன் இவனுக்கு 31 வது வயதில் ஆண்மகவுண்டாம், செல்வமும் கடனும் ஒத்துநிற்கும். நெற்றியில் 3 இரேகைகளும் இடது புறத்தில் மங்கு மறுவிருக்கின் பெருந்துயர், பொருள் நில்லாது, உயிர்ச்சேதம், மனைவி சேதம், நெற்றியில் 4 இரேகைகளும் வலப்புறத்தில் மங்கிருக்கின் துன்பம் நீங்கும். நெற்றியில் 5 வரைகளும், கழுத்தில் மூன்று வரைகளும் மத்தகத்தில் மாலைபோல் 3 வரைகளு முள்ளவனாய்க் கன்னத்தில் மறுவுள்ளவன் விசனமும் அலைச்சலுமுள்ளவன் ஆவான். நெற்றியில் 4, 2 வரைகள் துண்டித்து நிற்க உட்கழுத்தில் 3 வரைகளுள்ளவன் பொருளற்றவன் ஆவான். நெற்றியில் 4 வரைகளும், கழுத்தில் ஒருவரையும் உள்ளவன் கல்வி, பொருள் அற்றவனாய்க் கடனுள்ளவன் ஆவன். நெற்றியில் பொன் போன்றவரை 4 இல், ஒன்று துண்டாக நிற்கக் கழுத்தில் இரண்டு ரேகைகளுள்ளவன் செல்வன், யோகவான், உபகாரி, சிறு வயதில் கண்டம். நெற்றியில் இரண்டு வரைகள் நிலைகுலைந்து தோன்றில் பொறுளற்றவனாவன். கையில் அன்னவரை மேலேறி அதனருகில் கறுத்ததுபோல் ஒரு ரேகை இருந்தாலும், சிறுவிரவில் நான்கு வரைகளிருந்தாலும், ஓரங்குலத்தில் இரண்டு வரைகளிருந்தாலும் வறுமையால் வீட்டைவிட்டு விலகுவன், முதலிற் பெண் பிறந்து மாயும், பிறகு செல்வமுண்டாம். கையில் அன்னவரை கீழ்நோக்க அதன் அருகில் இரண்டு வரைவிருந்தால் பொருளற்றவன், சடனுண்டாம், விசனமுண்டு. மணிக்கட்டில் இரேகைகள் 2 இருக்கின் இராஜ போகமுள்ளவன், 3 இருக்கப் பெற்றவன் ஸ்திரி லோலன், 4 இருக்கப் பெற்றவன் பிரபுவாயிருப்பன். இவை கங்கணரேகைகள் எனப்படும். அங்கை விரிவாய் ரேகைகள் அதிகமின்றியிருப்பின் தீர்க்காயுள் உள்ளவனும் போகியாயுமிருப்பன். அங்கை சிவக்கின் தனவான். பசந்திருப்பின் பெண்போகி. சுண்டுவிரற்குச் சற்று இறக்கத்திலுண்டாய் மேல் நோக்கும் இரேகை ஆயுஷ்யரேகை. அது சுட்டுவிரலைத் தாண்டிச் செல்வின் அவனுக்குத் தீர்க்காயுள், அது எந்த விரல்களினடியில் நிற்கிறதோ அவ்விரல்களுக்கு 25 வயதுகவாகக் கணித்துக்கொள்க. ஆயுஷ்யரேகை கதறித் தடையுண்டு நிற்கில் வியாதி முதலானவற்றால் கண்டம், ஆயுஷ்யரேகையை அடுத்தரேகை ஸ்திரிரேகை. பெருவிரற்குக் கீழ் மணிக்கட்டிற்கு நடுவிற் பிறந்து மேலேறும் ரேகை புருஷ ரேகை என்று பெயர். புருஷரேகை பெண் ரேகை இரண்டும் கலந்திருப்பின் தம்பதிகள் சிகோ பான்மையாய்க் கலந்திருப்பர், கலவாதிருப்பின் வியோகமுண்டாம். புருஷ ரேகை அதிகமாகப் பெருகியிருக்கின் புருஷசர்த்தியாம். பெண்ரேகை, வளர்ந்திருப்பின் பெண்களுண்டாம். இப்புருஷ ரேகை பெண் ரேகைகளிரண்டும் கலவாதிருப்பின் மணமாகாது. விவாகமாயினும் பலனில்லை. அங்கையில் ஆயுஷ்ய ரேகை புருஷரேகை பெண்ரேகைகள் (3) மாத்திரம் இருக்கின் சம்பத்துண்டாம். பல ரேகைகள் இருக்கின் வறுமை. மணிக்கட்டின் நடுவிடத்திற் பிறந்து ஸ்திரீ புருஷ ரேகைகளுக்கு நடுவாக நீண்டு ஆயுஷ்ய ரேகைக்குக் குறுக்கில் செல்லும் ரேகை தனரேகையாம். அது செவ்வையாக மேற்சென்றிருக்கின் அவன் அதிக சீமானாய்ச் செல்வனாயிருப்பன். அது முதலில் வளைந்து புருஷ ரேகையுடன் கலந்திருப்பின் செல்வம் சுயார்ஜிதம். தனரேகையினிடையில் தடையுள்ள ரேகைகள் வரின் செல்வம் கள்வராலும் செலவாலும் அழியும் (4) கத்திரி ரேகைகள் இருக்கின் தரித்திரனானன், தனரேகை சிதறித் தோன்றின் அப்போதைக்குப் போது தனவருவாயுண்டாம். தனரேகை இல்லாதிருக்கின் வறியனாவன். சிறிதிருக்கின் கொஞ்சம் சம்பாதிப்பன். ஆயுஷ்ய ரேகைக்கு மேலாய்த் தனரேகைக்கு இடப்பக்கமாய் நீண்டிருக்கும் ரேகை வித்தியாரேகையாம். அது எவ்வளவு பிரபலமாயிருக்கிறதோ அவ்வளவிற்கு வித்வானாம். அங்கையின் விளிம்பில் ஆயுஷ்ய ரேகைக்கு மேலும் சுண்டு விரற்க்கு கீழ்பாகத்தில் நடுவிலுள்ள குறுக்கு ரேகைகளுக்குப் பத்தினி ரேகைகள் என்று பெயர். அவை ஒன்றுக்கு அதிகமாக இருக்கின் பத்னிகளே அன்றி விலை மாதரும் பலரிருக்கலாம். குதிரை, யானை சவாரி, குடை, கிரீடம், சங்கு, தாமரை, துவசம் இவை அங்கையில் இருக்கப் பெற்றவன் பிரபு ஆவன். சூர்யரேகை, சந்திரரேகை இருக்கப் பெற்றவன் தெய்வ பக்தியுள்ளவனாய் லோக பூஜ்யனாவன். மச்ச ரேகையுள்ளவன் செல்வமுள்ளவனாய்ப் பலர்க்கு அன்னம் அளித்துப் புண்யவனாய்ப் புத்ர சந்ததி உள்ளவனவன் தராசின் ரேகையுள்ளவன் பாக்யவான் ஆவன். விரல்களின் நுனியில் ஒரு சக்கரமிருக்கப் பெற்றவன் போகியாவன். இரண்டுள்ளவன் ராஜபூஜிதனாவன். மூன்று சக்கரமுள்ளவன் லோகசஞ்சாரியாவன். நான் திருக்கப் பெற்றவன் பண்டிதனாவன், அங்கையின் பெருவிரலின் மேற்கணுவில் அரிக்போலவும், கோதுமை போலவும், உள்ளரேகை யவரேகை யென்று பெயர். அது பெற்றவன் தான்ய சம்பத்துள்ளவனாய்ப் போகத்தை அனுபவிப்பன். பெருவிரலின் நுனி சுட்டுவிரலின் நடுக்கணுவைப் பொருந்தியிருப்பவன் சில்பம், சஸ்திரம், எழுத்து இவற்றில் பெயர் பெற்றவன் ஆவன், பெருவிரலின் புறத்தின் கணுவின் உள்ள ரேகைகள் புத்ரரேகைகளாம். அவற்றில் கீறுள்ளவை பெண்கள், பின்னல் போன்றவை குமார்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுளுள்ளவை. குறியவை அற்பாயுளுற்றவை. அந்த ரேகைகள் இல்லாவிடின் சந்தானம் இல்லை, சுட்டுவிரலின் அடியில் குறுக்காக இரண்டு ரேகைகளுள்ளவன் சார்யசித்தியடைவன். நடுவிரலடியிலவ்வாறு பெற்றவன் தனம், ஸ்திரீபோகம், சந்தானம், செல்வமுள்ளவனாவன். மோதிர விரலில் அவ்வாறு பெற்றவன் வித்வான் ஆவன் சுட்டு விரலடியிற் பெற்றவன் இளமையில் விளையாட்டால் சுகமடைந்தவன்.

இரேடியம்

ஒருவித லோகசத்துப் பொருள் இது பிச்சுப்பிளண்டியெனும் தாதுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இது தோற்றத்தில் மாசடைந்த உப்பு போல் காணப்படுகிறது. இதன் ஒளி உலோகப் பொருள்களையும் ஊடுருவிச் செல்லுதலால் இதன் விலை மற்ற உலோகப் பொருள்களினும் அதிகப்படுகிறதென்பர். இது இங்கிலாந்தில் காரன்வாலிலும், போர்த்துகல் தேசத்தில் குவார்டா எனுமிடத்திலு மகப்படுகின்றது. இதன் ஒளியால் மற்ற இரத்தினங்களுக்கு ஒளியூட்டி விலை மதிப்பேற்றுகின்றனர்.

இரேணு

1. ஒரு அரசன் இவன் கங்கையைப் புதல்வியாகப் பெறத் தவஞ்செய்யக் கங்கை, அத்தம்பதிகளுக்கு நடுவில் ஒரு குழந்தை வடிவாய்ப் பார்வதி சாபத்தால் பிறந்தனள். இவளுக்குத் தந்தை தாயார் ஆதிரையெனப் பெயரிட்டனர். இவளை வைரமலை வேந்தன் வளர்த்துச் சிவமூர்த்திக்கு மணஞ் செய்வித்தான். இவள் அம்மலையில் நதியுருவாய்ப் பிரவகித்துப் பச்சைமலையெனப் பெயரடைந்தனள், 2. இரேணுகையின் தந்தை.

இரேணுகபீடம்

சத்திபீடங்களில் ஒன்று.

இரேணுகம்

இது ஒரு யானை. (பார~அநு)

இரேணுகர்

அமிர்தரக்ஷகராகிய தேவர். (பார~ஆதி.) 1. திக்கு யானைகளிடத்தில் தருமங் கேட்ட யானை. நாகபலி காண்க.

இரேணுகர்

சிவகணத் தலைவரில் ஒருவர். இவரால் அகத்தியருக்குச் சித்தாந்த சிகாமணி யுரைக்கப்பட்டது.

இரேணுகாசாரியர்

இவர் திருக்கைலையில் துவாரபாலகர்களில் ஒருவர். இவரைச் சிவபெருமான் அழைக்க இவர் தாருகரைக் கடந்து வந்தமையால் நீ பூமியில் பிறக்க என்றனர். அவ்வாறே இவர் தெலுங்கு நாட்டில் கொல்லிபாகம் எனுந் தலத்தில் சோமலிங்கத்தில் அயோநிஜராகப் பிறந்து வீரசைவாசாரியராக இருந்தவர். (வீரசிங் காசன புராணம்.)

இரேணுகை

இரேணுவின் புத்ரி. வருமராஜன் பெண்ணெனவுங் கூறுவர். சம தக்கியின் தேவி. இவள் கங்கைக்குச் செல்ல அவ்விடம் அந்தரத்திற் சென்ற காந்தருவனாகிய சித்ரசேகனை நீரில் கண்டு மனங்கெட்டுக் கற்புக் குலைந்து கணவர் முன்னின்றனள். அதனை முனிவர் அறிந்து பரசிராமரை நோக்கி இவளைக் கொலை செய்க என்றனர். அவ்விதம் தந்தை சொற்படி கொலை புரியச் செல்லுகையில் பலர் விலக்க அவர்களையுங் கொலை புரிந்து தாயைக் கொலைசெய்து மனக்கவலையுடன் நிற்கத் தந்தை, குமரன் மனநிலையறிந்து தாயை எழுப்பவேண்டுமென மந்திரநீர் தந்து எழுப்பிவாக் கூறினர். அவ்வகை பாசுராமர் சென்று தாயினுடல் பல உடல்களுடன் கலந்திருத்தலால் வேறுபாடறியாது ஒரு உடலில் தன் தாயின் சிரத்தைப் பொருத்தி எழுப்பினர். எழுந்தவள் கணவரை அடைந்து நிற்க இருடி நீ கிராமங்களில் நிலைத்து, அவர்கட்கு உண்டான நோயைப் போக்கி அவர் செய்யும் பலியைப் பெறுக என்ன அவ்வகையிருந்து பூசை பெறுபவள். இந்தக் கோயில்களில் தலைமாத்திரமே இருக்கும். இவள் கார்த்த வீரியனை மோகித்தனள் என்பது சிவபுராணம். இவள், கணவன் கார்த்தவீர்யன் குமாராலிறந்தது பற்றி விசனமடைந்து பரசுராமரைக் கண்டு எழுமுறை மார்பிலறைந்து கொள்ளப் பாசிராமர் அரசரை ஏழு தலைமுறை கருவறுத்தனர். இவன் குமார் தன்னுவன், அனுவன், விசுவாவசு பாசிராமன். மாரி காண்க.

இரேணுவதி

நகுலன் பாரி. குமரன் நிர்மித்திரன்.

இரேயன்

(1) புரூரவசுவிற்கு உருவசியிட முதித்த குமரன். இவன் குமரர் துருதன், ஏகன்.

இரேவணசித்தர்

வீரசைவ ஆசாரியர்களில் ஒருவர். இவர் ஜமதக்னிமுனிவரின் தேவியாகிய ரேணுகைக்குத் தீக்ஷைசெய்து படைவீடு எனும் கிராமத்தில் அமர்த்தினர். (வீரசிங்காதன புராணம்)

இரேவணாராத்திரியர்

இவர் ஒரு புலவர். இவர்க்குப் பேராளம் இரேவணாராத்திரியர் எனப் பெயர், இரேவணசித்தர் எனவும் கூறுவர். இவர் சிதம்பரத்திலிருந்ததாகக் கூறுகின்றனர். வீரசைவர் இவர் செய்த நூல்கள், பரமாசசியம், பட்டீச்புராணம், சிவஞான தீபம், இரேவணாதரயமெனத்தம் பெயராற் சூத்திரநிகண்டு முதலிய.

இரேவதன்

1. ஆனர்த்தன் குமரன். இவன் சமுத்திர மத்தியில் ஒரு பட்டணம் நிருமித்து அதற்குக் குசஸ்தலி யென்னும் பெயரிட்டு ஆனர்த்ததேச முதலிய உண்டாக்கினவன். இவற்கு நூறு குமரரும் இரேவதியென ஒரு குமரியும் உண்டு. இவன் சத்தியவுலகஞ் சென்று பிரமனைத் தன் பெண்ணுக்குத் தக்கவானை வினவ, சதுர்முகன் அரசனை நோக்கி நீ இந்த உலகத்திற்கு வந்து (27) சதுர்யுக முடிந்தன. இனி நீ பூமியடைந்து அவ்விடத்தி லவ தரித்திருக்கும் பலராமபிரானுக்கு உன் பெண்ணைக்கொடு என அரசன் அவ்வகை செய்து பதரியடைந்து தவமியற்றினன். (பாகவதம்). 2. இவன் ஒருமுறை உச்சைசிரவமெ னும் குதிரையேறி வைகுண்டஞ் செல்ல இவன் குதிரையைக் கண்டு லக்ஷ்மி மனம் விலங்காது கண்டு விஷ்ணு சாபத்தால் குதிரையாயினன். (தே~பா) 3. குதிரையுருக்கொண்ட தன் மனைவியைத் தொடர்ந்து சென்ற சூரியரே தவரில் பிறந்தவன்.

இரேவதி

1. மித்திரன் எனும் ஆதித்தன தேவி. 2. இரேவதன் குமரி. இரைவதமனுவைக் காண்க, பலராமர் தேவி. 3. நக்ஷத்திரத்திலொன்று. 4. பிப்பிலன் தேவி. அரிஷ்டன் தாய்.

இரேவந்தன்

ஒரு குய்யகன்.

இரைப்பியன்

ஒரு இருடி. தன்னை மயக்க வந்த ஊர்வசியை விகாரவடிவாகச் சபித்தவன். இவன் அவகீர்த்தியைக் கோபாக்கினியிற் பிறந்த அரக்கனால் கொல்வித்தவன். இவன் குமரன் அர்த்தவசு.

இரையுமணல்

(SINGING SAND) இது, பசி பிக்சமுத்திரத்திலுள்ள ஹாவாவியன் தீவுகளிலும், கோலராடோ, வனாந்தரத்திலும் காணப்படுகிரதென்பர். பெருங்காற்று வீசுகையில் இம்மணல் பறவைகள் கத்துவதுபோல் சத்தமிடுகிறதாம். மணலைக் கையிலள்ளிக் கசக்கினால் ஆந்தை அகவுவதுபோல் சத்தமுண்டாகிறதாம். ஒரு சாக்கில் மணலை நிரப்பிக் குலுக்கின் நாய் குலைக்கும் சத்த முண்டாகிறதென்பர்.

இரைவதகம்

இது ஒரு மலை, துவாரகைக்குச் சமீபத்தில் உள்ளது என்பர். MOUNT GIRNAR NEAR JUNAGAR IN GUZEAT, NORTH OF PRABHASA SOMNATH.

இரைவதன்

1. பூதனுக்குச் சுரபியிட முதித்த குமரன். ஏகாதச ருத்திரருள் ஒருவன். 2. இரேவதனுக்கு ஒரு பெயர். 3. தாபசமனுவின் சகோதான். தூர்த்தமன் குமரன். ரேவதியின் குமரன், ஐந்தாம்மனு. 4. சுமதி குமரன். இளிநனுக்கு ஒரு பெயர். 5. பராவசு அர்த்தவசுக்களின் தந்தை.

இரைவதமனு

5 வது மனு ருதவாக் எனும் அரசன் நெடுநாள் புத்திரர் இலாது சிந்திக்கையில் இவனுக்கு ரேவதி க்ஷேத்திரம் நாலாம் பாதத்தில் ஒரு குமரன் பிறந்தனன். அவன் வளர்ந்து மகாபாதகம் முதலிய தீச்செயல்களைச் செய்து பழிபாவங்களைத் தாய் தந்தையர்க்குச் சேர்ப்பித்ததால் தந்தை விசனமடைந்து கர்க்கமுனிவரிடம் போய்த் தன் குமான் குறைகளைக் கூறினன். முனிவர், அரசனை நோக்கி இது உன் மகன் குற்றமன்று, இரேவதி நாலாம் பாதத்தில் உதித்த குற்றமென்றனர். அதனால் அரசன் நக்ஷத்திரத்தைக் கோபித்து அது பூமியில் விழுக எனச் சபித்தனன். அவ்வாறே அது பூமியில் ஒரு மலைமேல் விழுந்தது. அம்மலை ரைவதம் எனப்பட்டது. அந்த ரேவதி அம்மலையில் ஒரு மடுவாக அம்மடுவில் ஒரு கன்னிகை பிறந்தனள். அக்கன்னிகையைப் பிரமுச்சர் எனும் முனிவர் கண்டு அவளுக்கு இரேவதியெனப் பெயரிட்டு வளர்த்தனர். அவள் யௌவனம் அடைகையில் முனிவர் குமரிக்குத் தக்க நாயகன் வேண்டி அக்நியைப் பிரார்த்தித்தனர். அக்நி, முனிவனை நோக்கி உன் குமரிக்குத் தூர்த்தமன் எனும் அரசன் நாயகனாவான் என்றனன். அவ்வாறே சிறிது நாளில் அவளை அவ்வரசனுக்கு மணஞ்செய்விக்க நாள் பார்க்கையில் ரேவதி தந்தையிடஞ் சென்று ரேவதி நக்ஷத்திரத்தில் மணஞ்செய்விக்க வேண்டுமேயல்லாமல் வேறு நக்ஷத்திரத்தில் மணஞ் செய்து கொள்ள உடன்படேன் என்றனள். தந்தை, குமரியை நோக்கி அது ருதவாக்குச் சாபத்தால் பூமியில் விழுந்தது எனக்குமரி, ஆயின் அதை ஆகாயத்தில் ஏற்றி மணம் இயற்றுக என வேண்ட அவ்வாறே முனிவர் செய்து, மணம் முடித்தனர். பிறகு அரசன் முனிவனை நோக்கி நான் சுவாயம்பு மனு வம்சத்தில் பிறந்தவன், எனக்கு மன்வந்தராதிபனாய் ஒரு குமரன் வேண்டும் என முனிவர் அப்படியே அருள் செய்தனர். சிலநாள் தரித்த பிறகு இந்தத் தூர்த்தமனுக்கும் ரேவதிக்கும் ரைவதமனுப் பிறந்தனன். பலராம கிருஷ்ண அவதாரம் இந்த மன்வந்தரத்தி விருக்கலாம்.

இரைவதம்

இரைவ தமனுவைக் காண்க. இதிலருச்சுநன் சந்நியாசி வேடங்கொண்டிருந்தான். இதற்குக் குமுதம் எனவும் பெயர்.

இரௌகிதம்

பாண்டவர் படைதங்கிய நாடு.

இரௌத்திரகேது

அங்க தேசத்திருந்த வேதியன். இவனுக்குச் சாரதையெனும் மனைவியிடம் தேவாந்தகன், நராந்தகன் என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களிருவரும் நாரதருபதேசத்தால் தவஞ்செய்து பல சித்தியடைந்தனர்.

இரௌத்திராசுவன்

(சந்) சங்கிரதியின் குமரன். பாரி கிருதாசி. குமரர் இருதேயு முதலியவர்.

இரௌத்திரி

அக்நிக்கதிட்டான சத்தி, ஆதாரதேவர், ருத்ரர் அல்லது பசுபதி.

இரௌத்ரிதேவி

உருருவைக் காண்க.

இரௌரவம்

1. நான் எனது எனும் அகங்காரங்கொண்டவனடையும் நரகம், 2. சிவாகமத்தில் ஒன்று. குரு என்னும் இருடிக்குக் கூறியது.

இறங்குடிக்குன்ற நாடன்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரது பெயர் இடத்தால் வந்தது போலும். இவர் அகத்தில் பாலையில் எருவைகள் அழிந்த ஆடவரது கண்மணிகொண்டு பெடைக் கருத்தும் பாலையெனப் பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். (215.)

இறந்துமிறவாதார்

கவி, தியாகி, சுத்தவீரன், செங்கோல்வேந்தன், தருமி.

இறப்புப் பிறப்புகளின் தீட்டு

பல் முளைக்கும்போதும் முளைத்த பின்னும் சௌளம் செய்த பின்னும், குழந்தை இறக்கின் பத்து நாள் தீட்டு உண்டு. தனக்குப் பிற இடத்தில் பிள்ளை பிறந்தால் மூன்று நாள் தீட்டு உண்டு. இறந்த குருவுக்குச் சிஷ்யன் கருமஞ் செய்தால் பத்து நாள் தீட்டு உண்டு. கர்ப்பத்தில் மூன்று மாத முதல் எழுமாதத்திற்கு உள்ளாகச் சிசுமரித்தால் எத்தனை மாதத்தில் மரித்ததோ அத்தனை நாள் தீட்டு உண்டு. ருதுவான ஸ்திரீ அது நின்றவுடன் ஸ்நானம் செய்யின் சுத்தப்படுவாள். இரண்டு வயதிற்கு முன் சிசுமரிக்கின் அதை ஊர்க்கு வெளியில் புதைக்க வேண்டியது. சஞ்சயனம் கிடையாது. அதற்குத் தகன தர்ப்பணாதிகள் கிடையாது. பங்காளிகள் மூன்று நாள் தீட்டு இருக்க வேண்டியது. தன்னுடன் ஓதினவன் இறந்தால் ஒருநாள் தீட்டு. ஒரு பெண்ணை நிச்சயஞ் செய்தபின் அவள் இறந்தால் யாருக்காக நிச்சயப்படுத்தப் பட்டாளோ அவரும் அவர்களின் ஞாதியரும் மூன்று நான் தீட்டு இருக்க வேண்டியது, தீட்டு உள்ளோர் உப்பு, மாமிசம், புணர்ச்சி மூன்றையும் நீக்க வேண்டும். தேசாந்தரத்தில் இருக்கையில் ஞாதிகளின் இறப்பைப் பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் அப்பத்து நாட்களுடன் தீட்டு நீங்கும். சபிண்டர் பத்து நாளைக்குப்பின் கேட்டால் மூன்று நாள் தீட்டு, ஒரு வருடத்திற்குப் பின் கேட்டால் ஸ்நானத்தோடே போகும். பிறந்த செய்தியைப் பத்து நாளைக்கு மேலே கேட்டால் தீட்டில்லை. சபிண்ட கன் ஞாதிகளின் இறப்பை, பிறப்பைப் பத்து நாளைக்குள் கேட்டால் கட்டின உடையுடன் ஸ்நானஞ் செய்தால் தொட யோக்கியனாகிறான். பத்து நாள் தீட்டுள்ள இறப்பு பிறப்புகளில் வேரு தீட்டு நேரின் முன்னைய பத்து நாளோடு இதுவும் ஒழியும். அக்கினிஹோத்திரம் செய்கிறவனாயின், ஆசாரியன் இறந்தாலும் தன் பங்காளி இறந்தாலும் வேதம் ஓதின பிராமணன் தன் வீட்டில் வந்து இறந்தாலும், அம்மான் இறந்து போனாலும் மூன்று நாள் தீட்டு உண்டு. ஆசாரியன் மனைவி இறந்தால் ஒருநாள் தீட்டு உண்டு. மாணாக்கன், அம்மான் குமரன் முதலிய சுற்றத்தவர்கள் இறந்து போனால் (10) நாழிகைக்குத் தீட்டு உண்டு. இராசா பகலில் இறந்தால் பொழுதுபோகிற வரையிலும், இரவிலானால் நக்ஷத்திரம் மறைகிற வரையிலும் தீட்டு உண்டு. இவ்வாறுகூறிய தீட்டுக்களில் பிராமணர்களுக்குப் பத்து நாட்கள் தீட்டும், சத்திரியருக்குப் பன்னிரண்டு நாட்கள் கட்டும், வைசியனுக்குப் பதின் மூன்று நாட்கள் தீட்டும், சூத்திரனுக்கு முப்பது நாட்களும் தீட்டுண்டு. பறையன், தூரஸ்திரி, பதிதன் பிரசவித்தவள் பிணம், பிணத்தைத் தொட்டவன், இவர்களைத் தெரியாமல் தொட்டவன் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாவான், நித்யகர்மங்களை விட்டவர்கள், சங்கரசாதியாரில் பிறந்தவர்கள், வேதத்தைத் தூஷித்துச் சந்தியாசி வேஷம் பூண்டவர்கள், விஷத்தைச் சாப்பிட்டாவது, கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாவது இறந்தவர்கள், விபசாரிகள், கருப்பத்தை அழிக்கிறவர்கள். கணவனுக்குத் துரோகம் செய்கிறவர்கள், மத்யபானஞ் செய்கிறவர்கள் இவர்களுக்குத் தர்ப்பணஞ் செய்யவேண்டியது இல்லை. அரசன் திக்குப்பாலகர் தன்மையையடைந்து இருப்பதால் அவனுக்குத் தீட்டில்லை. ஒரு கிராமத்தில் பிணங்கிடக்கின் அது தகனம் ஆம் வரையில் கிராமத்தார் சோறும், நீரும், தாம்பூலமும் உண்ணலாகாது. ஆசௌசம் உடையோர், தேவ தாராதனம், ஓமம் முதலிய செய்தலாகாது. ஆசௌசம் உடையோர் வீட்டில் அது நீங்கும் வரை எவரும் உண்ணலாகாது. ஒருவனுக்குப் பெண் பிறந்தால் அவன் தாயத் தாருக்கு ஆசௌசம் இல்லை. தாய்க்குப் பத்து நாட்கள் ஆசௌசம் உண்டு, மணக்கோல காலத்திலும், யாககாலத்திலும், உற்சவத்திற்குக் கங்கணம் பூண்ட காலத்திலும் ஆசௌசம் நேர்ந்தால் அத்தொழில் பூண்டானுக்கு ஆசௌசம் கிடையாது. பந்துக்களின் பிணத்தைத் தூக்கினால் மூன்று நாள் தீட்டு உண்டு. பிணம் தூக்குகிறவன் தீட்டு உள்ளான் விட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் அவனுக்குப் பத்து நாள் தீட்டு உண்டு. பிணத்தைத் தொடர்ந்தவன், கட்டின வஸ்திரத்துடன் ஸ்நானஞ் செய்தால் தீட்டு இல்லை. சிசுசூதகம் கருப்பந்தரித்து ஆறுமாதத்திற்கு உட்பட்டு எந்த மாதத்திலாயினும், அந்தக் கருப்பம் கரைந்து விழுந்தால் விழுந்த மாதம் ஒன்ருயின் ஒரு நாளும், இரண்டாயின் இரண்டு நாளும் மூன்றாயின் மூன்று நாளும் முறையே நாலு, ஐந்து, ஆறு மாதங்களாயின் அத்தனைக் கணக்குள்ள நாட்கள் மாதாவிற்கு மாத்திரம் ஆசூசம் உண்டு, பிதாவிற்கு இல்லை. கரு அழியாமல் பிறந்து மூன்று வயதிற்குள் மாண்டால் மாண்ட அக்குழந்தையைக் குறித்துப் பாற்சோறும் தபர்ச் சோறும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். மூன்று வயதிற்குமேல் ஐந்து வயதிற்குள் இறந்தால் மேற்சொன்னபடி பாலகர்களுக்கு அன்னம் அளித்தல் வேண்டும். பிறந்து ஒரு மாதத்திற்குள் மாய்ந்தால் பாவ் பாய சாதிகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். (மநு).

இறைப் பொருட்டலவன்

குடிகளுக்கு வேண்டுவன உதவி சலஞ்செய்து அவர்களிடம் குடியிறை கொள்ளுவோன். (சுக்~நீ)

இறையணி

ஒரு வினாவிற்கு விடை கூறுதல். இது மறைப்பிறை ஒரு அபிப்பிராயத்தைத் தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் உத்தாம்.

இறையனாகப்பொருள்

மதுரையிலெழுந்தருளியிருக்கும் சொக்கலிங்க மூர்த்தியால் அருளிச் செய்யப்பட்டு மூங்கைப் பிள்ளையார் அல்லது உப்பூரிகுமக் கீழார் மகனார் உருத்திரசன்மனார் முன்னிலையில் உரை அரங்கேற்றப்பட்ட அகப்பொருளிலக்கணம். இந்நூல் (60) சூத்திரங்கள் கொண்டது. இதற்குச் சங்கப் புலவருள் பலர் உரை கூறினர். அவற்றுள் மதுரை மருதனிள நாகனார் உரையொரோ விடங்களினும், பெரும்பான்மையும் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரையுமே சிறந்தன.

இறையனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். சொக்கலிங்க மூர்த்தியையே ஒரு புலவராகக் கூறுவர். இவர், பாண்டியன் அகப்பொருளிலக்கணம் வேண்டி வருந்திய காலத்தில் அவ்னெண்ணத்தை நிறைப்ப இறையனார் அகப்பொருளென ஒரு அகப்பொருளிலக்கணம் திருவாய் மலர்ந்து அதனைச் செப்பேட்டில் எழுதித் தாம் எழுந்தருளியிருக்கும் திருப்பீடத்தினடியிலிட்டு ஆதிசைவாசாரியரைக் கொண்டெடுப்பித்து அரசனுக்குக் கொடுப்பித்தவர். தருமியெனும் வேதியர் பொருட்டுக் “கொங்குதேர்” எனும் கவியும் பாணபத்திரர் பொருட்டு ‘மதிமலி புரிசை’ எனும் கவியும் திருக்குறளுக்கு என்றும் புலராது எனும் பாயிரமுமியற்றியவர்.

இறைவனெண்குணம்

1. பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை. (பிங்). 2. தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களி னீங்கல், போருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பி லின்பமுடைமை. இவை சைவாகமம், கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, சடையிலா வீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு. (ஆருகதம்).

இற்கொண்டு புகுதல்

வேந்தர் போரிடத்துப் பட்டவனுடைய கல்வென்று சொல்ல வழுத்தினராய்ச் செறிந்து கோயிலெடுத்துப் புக்கது. (பு. வெ. பொதுவியல்)

இலகளேசமூர்த்தி

அப்புத் தத்துவத்திலுள்ள புவனங்களின் மத்தகத்திலுள்ள லகுள மென்னும் புவன வாசிகளால் ஆராதிக்கப்பட்ட சிவமூர்த்தியின் திருவுரு.

இலகீர்மதி

நகுலன் பாரி. குமான் மித்திரன்.

இலகுலி

இருபத்தெட்டாஞ் சதுர்யுகத்தில் வேதவியாசர் காலத்தில் சுடலையிற் கிடக்கும் ஒரு பிணத்தினுட் சிவபெருமான் புகுந்து லகுவி எனும் பிரமசாரியாய்த் தோன்றுவரென இலிங்க புராணம் 24ம் அத்யாயம் கூறும் என ஸ்ரீராமகிருஷ்ண கோபால பண்டார்கர் கூறுவர்.

இலகுளீசன்

சிவகணத்தவரில் ஒருவன்.

இலக்கண முடையது

இலக்கண வழியால் வருவது, (நன்னூல்).

இலக்கண விளக்கச் சூறாவளி

இது ஆசிரியர் சிவஞான யோகிகள் எழுதியது. இது இலக்கண விளக்கம் என்னும் நூலிலுள்ள குற்றங்களைக் காட்டுவதோர் கண்டன நூல்.

இலக்கணக் கொத்து

தமிழிலக்கணத்திலுள்ள சில அரிய நுட்பங்களைத் திரட்டிய இலக்கண நூல். இது திருவாவடுதுறை சாமிநாத தேசிகரா லியற்றப்பட்டது. தொல்காப்பியம் முதலிய இலக்கணக்களிலும், இலக்கியங்களிலும் அருகிவரும் விதிகளைத் தழுவியும், வடநூல் இலக்கணங்களைத் தழுவியும் செய்தது. இந்நூற்கு இவரே உரையுஞ் செய்து போந்தனர்.

இலக்கணஞ் சிதம்பாநாதமுனிவர்

சிவஞானமுனிவர் மாணாக்கர். திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் பாடியவர்.

இலக்கணன்

துரியோதனன் குமரன் இலக்கினன்.

இலக்கணப்போலி

இலக்கண மில்லாத தாயினும், இலக்கணமுடையது போலச் சான்றோரால் தொன்றுதொட்டு வழங்கப்படுவது. (நன்னூல்).

இலக்கணம்

இது தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகைப்படும். இதில் எழுத்து, மொழிக்குக் காரணமாய் நாதகாரிய வொலியாகும், அது எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி எனப் பத்து வகைப்படும். மேற்கூறிய பத்து வகை இலக்கணத்துடன் கூடிய எழுத்துக்கள் தனித் தாயினும் இரண்டு முதலியவாகத் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம். அப்பதம் ஒன்றுடன் ஒன்று நிலைமொழி வரு மொழிகளாக இயைவது புணர்ப்பாம். அப்புணர்ப்பு உயிர்ஈறு மெய்யீறு உருபுமாகப் புணர்கையில் தோன்றல் திரிதல், கெடுதல் எனும் விகாரம் அடைந்தும் அடையாமலும் புணர்வதும் புணர்ப்பாம். இனிச்சொல்லாவது மேற்கூறிய பதம் பொருள் குறித்து நிற்பதாம். அது பெயர், வினை, இடை, உரி என நால்வகைத்து. அப்பெயர், இரு திணை ஐம்பால் மூவிடம் வேற்றுமையேற்றுப் பொருளை விவகரிக்கும். வினைச் சொல், பொருள்களின் தொழிலை மேற்கூறிய திணை பால் இடங்களைப் பெற்று முதனிலை, தொழிற்பெயர், வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சமாக நின்று அவை அவாவி நிற்கும் பெயர்வினைகளைக் கொண்டு முடியும். இடைச்சொல், பெயர் வினைகளையடுத்து அவற்றிற்கிடையே பொருள் குறித்தும் குறியாதும் வருவது, உரிச்சொல் பெயர் வினைகளின் குண விசேஷங்களாய் வருவது. இனிப் பெயருள் அகப்பொருள், புறப்பொருள் என இருவகைத்து. அவற்றுள் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என எழு வகைப்படும். கைக்கிளையென்பது, ஒரு தலைச்காமம், ஐந்திணை யென்பது அன் புடைக்காமம். பெருந்திணை யென்பது பொருந்தாக்காமம். ஐந்திணை யென்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பனவாம். இவற்றில் முதல், கரு, உரிப்பொருள்களையும் கிளவி முதலியவற்றையும் பாந்த நூல்களிற் காண்க. ஒரு வாறு சுருக்கிக் கூறின் ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடும் கூட்டத்தில் பிறந்த இன்பம் அக்கூட்டத்தின் பின் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாம். இனிப்புறப்பொருளாவது அறம், பொருள் எனப்படும் இயல்பினையுடைய தாய்ப் புறம்பே நிகழும் ஒழுக்கமாம். அது வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என எழுவகைப்படும். வெட்சியாவது நிரைகவர் தலாம். உழிஞையாவது பகைவர் அணை வளைப்பதாம். தும்பை பாவது பசைவருடன் சண்டை செய்வதாம், வாகையாவது பகைவரை வெற்றி கொள்வதாம். காஞ்சியாவது எதிரூன்றலாம். பாடாணாவது பாடுதற்குரிய ஆண் மானது ஒழுக்கத்தைப் புகழ்ந்து கூறுவதாம், இவற்றின் விரிவுகளைப் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம் முதலியவற்றிற் காண்க. யாப்பாவது பல சொற்களால் அகம்புற மென்னும் பொருட்கு இடனாகக் கற்றுவல்ல புலவர் அணிபெறப் பாடுவது. அப்பா, பாஎனவும், பாவினம் எனவும் இருவகைப்படும். அவ்விருவகைக்கும் உறுப்புக்கள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறாம். பின்னும் அப்பா, வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என நான்காம், பாவினம் மேற்கூறிய பாக்களுடன் தாழிசை, துறை, விருத்தம், கூடுவதாம். இனி அணி யென்பது செய் யுட்கு அழகு செய்து நிற்பதாம் அது, தன்மை, உவமை, உருவகம், தீவகம், பின்வருநிலை, முன்னவிலக்கு, வேற்றுப் பொருள் வைப்பு, வேற்றுமை, விபாவனை, ஒட்டு, அதிசயம், தற்குறிப்பேற்றம், எது, நுட்பம், இலேசம், நிரைநிரை, ஆர்வ மொழி, சுவை, தன்மேம்பாட்டுரை, பரி யாயம், சமாயிதம், உதாத்தம், அவநுதி, சிலேடை, விசேடம், ஒப்புமைக்கூட்டம், விரோதம், மாறுபடுபுகழ்நிலை, புகழாப் புகழ்ச்சி, நிதரிசனம், புணர்நிலை, பரி வர்த்தனை, வாழ்த்து, சங்கீரணம், பாவிகம் எனப் பலவாம். இவை தண்டியாசிரியர் கூறியவை. இனிக் குவலயானந்தம் என்னும் அணி நூல் நூறு அலங்காரம் கூறும். அவற்றின் விரிவெலாம் அவ்வவ்விலக்கண நூல்களிற் பரக்கக் காண்க.

இலக்கணவிளக்கம்

தொல்காப்பியம் அருகி வழங்குதலும், நன்னூல் சின்னூலாயிருத்தலுங்கண்டு தருமபுர ஆதினத்து வைத்திய நாத தேசிகர் செய்தது. இவ்விலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பகுதியினையும் உடையது. இவரும் புதியன கொள்ளும் முறையான் தம்காலத்து வழக்காறு நோக்கி வடமொழி இலக்கணத்தையுந் தழுவிக்கொண்டனர் இவர் தாமே இதற்கோருரையுஞ்செய்தனர்.

இலக்கணை

1. சீவகன் மனைவியரில் ஒருத்தி. 1. பிருகத்சேநன் குமரி, கிருஷ்ணன் தேவி.

இலக்கணை

ஒரு பொருளின் இலக்கணத்தை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் அது விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டு விடாத இலக்கணை என மூன்றாம்.

இலக்கன்

கணனது சேனைகளைக் கொல்ல சித்திதேவியால் சிருட்டித் தனுப்பப்பட்ட கணபதியின் வீரன். (பார்க்கவ புராணம்).

இலக்கர்

1, சண்முகசேநாவீரர் 2. விநாயகருக்குச் சித்திதேவியிடம் பிறந்தவர்.

இலக்கின தசை

யாவனொருவன் பிறந்த பொழுது நின்ற உதயராசியின் நவாங்கிசத் தையுடைய ராசியில் (1) காலின் சுடர்த் தொகையாலாயு சறியப்படும், வலநாளிலிட நாளுண்ணுமிடத்தும் இடநாளில் வல நாளுண்ணுமிடத்தும் தத்தென்றறியப்படும். தத்துமிடத்து இடைப்பட்ட. ராசிகளிலே இராகு நின்றானாகில் அக்காலத்தின் மரணமாம். (விதானமாலை.)

இலக்கின விஷாதி நிஷத்தாபவாதம்

இடபம் மேடம், தனு, கன்னி, இவற்றின் முதற் கூற்றிற்பாம்பு உண்ணும். கும்பம், துலாம், மிதுனம், சிங்கம், இதினடுக் கூற்றில் கழுகுண்ணும். விருச்சிகம், கர்க்கடகம், மீனம், மகரம், இதன் கடைக்கூற்றில் பன்றியுண்ணும். இக்கூறுகளிற் சுப கன்மங்கள் பண்ணப்படா. சுபக்கிரக முதயமாகிலிந்தத் தோஷமில்லை, (விதான மாலை.)

இலக்கினன்

துரியோதனன் குமரரில் ஒருவன். பாரத முதனாள் யுத்தத்தில் அப் மன்னனுடன் போர்செய்து இறந்தவன்.

இலக்கினபலன்

பிரதமார்த்தத்துத் தோன்றின இலக்கினம் துலா, மிதுனம், கும்பம், மசாம், சிங்கமானாற் போகவதியாம். தனு, விரிச்சிகம் மேடம், மீனம், திருவிலியாம், இடபம், கர்க்கடகம், பாதாரமாம். கன்னியாகின் அருந்ததி போன்ற கற்பாம். (விதானமாலை)

இலக்கினமிருத்து

உதயத்தும் 4ம் இடத்தும், 2ம் இடத்தும், 7ம் இடத்தும், 9ம் இடத்தும், 5ம் இடத்தும், 8ம் இடத்தும், 12ம் இடத்தும், 10ம் இடத்தும், பாபகிரகங்கள் நின்றால், முகூர்த்தத்துக்குத் தீமை உண்டாக்குவர். 3ம் இடத்தும், 6ம் இடத்தும், 11ம் இடத் தும் இவர்கள் நிற்கில் அம்முகூர்த்தத்துக்கு மிகவும் நன்மை உண்டாக்குவர். இரவு சந்திரோதயகாலமும், ஆதித்தியன் அத்த மயகாலமுந் தோஷகாலமாம். சுபகிரகங்கள் 8ம் இடத்தும், 9ம் இடத்தும், 19ம் இடத்தும் நிற்கில் முகூர்த்தம் தீதாம். இந்த இடங்களும் மிருத்து முகூர்த்த மாகச் சொன்னவிடமு மொழியச் சுபக் கிரகங்கள் நிற்கில் நல்ல முகூர்த்தமாம்.

இலக்கினம்

இராசிகளுடைய உதயத்திற்குப் பெயர்.

இலக்குமணர்

1. தசரதருக்குச் சுமித்திரையிடம் பிறந்த குமரர். இவர் இராமரைவிட்டு நீங்காது மிதிலை சென்று சநகபுத்திரியாகிய ஊர்மிவையை மணந்து தமயனை விட்டு நீங்காமல் தாய் சொற்படி காடு சென்று இராம பிரானுடனிருக்கும் போது நித்திரைவா நாங்கள் (14) வருஷம் வனஞ்சென்று வருமளவும் வராதையென்று கட்டளை தந்து தண்டகவனஞ் சென்று சூர்ப்பநகை நாசியைப் பங்கப்படுத்திச் சீதாபிராட்டிக்குக் காவலிருந்து மாரீசன் குரல் கேட்டுப் பரிதபித்த சீதைக்குத் தேறுதல் சொல்லியுங் கேளாது அவள் கூறிய கடுஞ்சொல்லிற்கும் அவள் மரணத்திற்கும் அஞ்சி விட்டு நீங்கி, தமயனைக் கண்டு நடந்தது கூறிச் சீதையைத் தேடச்செய்து தமயன் தாகத்திற்குக் கேட்க, நீர் தேடிச் செல்லுகையில், அயோமுகியெனும் அரக்கியைக் கண்டு அவள் செய்த தீமைபற்றி மூக்கையும் காதையு மறுத்து, அநுமான், சுக்கிரிவர் முதலியோர் நட்பு கொண்டு, தமயன் சொற்படி துந்துபியின் உடலைக் காலாற் நூக்கி யெறிந்து, கார்கால மாறுமளவும் பொறுத்து வாநாவீரர் வராமையால் கோபித்து, அவர்கள் இருக்கை சென்று தாரை முதலியோரால் தேறித் திரும்பி அனுமனால் பிராட்டியினிருப்பிடமறிந்து, தமயனுடன் இலங்கைக்கு யுத்தத்திற்குச் சென்று முதனாள் யுத்தத்தில் இராவணன் விட்ட வேலினால் மூர்ச்சித்துத் தெளிந்து, அதிசாயனுடன் போர் புரிகையில் அங்கதனை வாகனமாக ஏறி அவனுடன் பெருத்த யுத்தஞ் செய்து அவன் சாகாமலிருந்தது கண்டு வாயு பகவான் கூறிய சொற்படி பிரமாத்திரப் பிரயோகஞ்செய்து கொன்றவர். இந்திரசித்துடன் போரிடுகையில் அநுமனை வாகனமாகக் கொண்டு இந்திரசித்தின் கவச முதலியவற்றை அறுத்து அவன் ஏவிய நாகபாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையடைந்து அக்காலத்து வந்த கருட பகவானால் மூர்ச்சை நீங்கினவர். மாலி, யாககேது, விரூபாக்ஷன், பிசாசன் முதலியவரைக் கொன்று இந்திரசித்தைத் தாமே கொல்லும்படிச் சபதஞ் செய்து கொண்டு இந்திரசித்துப் பிரயோகித்த பிரமாத்திரத்தால் மூர்ச்சித்துத் தெளிந்து அவனைச் செயிக்க இராமமூர்த்தியிடம் வில், கவசம் முதலிய, பெற்று அவனிடம் யுத்தஞ்செய்து இலங்கைக் கோடச்செய் தவர், தேர்பெற்று மீண்ட இந்திரசித்தை வில்லுடன் கையை அறுத்து அர்த்தசந்தில் பாணத்தால் உயிர் போக்கினவர். இராவணனுடன் யுத்தஞ்செய்கையில் அவன் விபீஷணர்மே லேவிய வேலைத் தாம் மார் பிலேற்று மூர்ச்சித்து அநுமனால் சஞ்சீவி தரப் பெற்று மூர்ச்சைநீங்கி இராமபிரானிடஞ் சென்று இராவண வதைக்குப் பின் இராமமூர்த்தியின் ஏவலால் விபீஷணருக்குப் பட்டமளித்துச் சீதையின் கற்பறி விக்கத் தீமூட்டி இலங்கை நீங்கிப் பரத்து வாசராச்சிரமம் அடைந்து தம்மிடம் வந்த நித்திரா தேவியைக் கண்டு நகைத்துத் தமயன் கட்டளைப்படி தம் குமாரருக்குக் காருபதம் செயித்துப் பட்டமளித்து இராம பிரான் ஏகாந்தத்திலிருக்கையில் துரு வாசரை விடுத்து அவர் கோபத்திற்குப் பாத்திரராக இராமமூர்த்தியை நீங்கிச் சரயுநதியடைந்து யோகத்திருந்து தேவர்களெதிர் கொள்ள ஸ்ரீ வைகுண்ட மடைந்தவர். இவர்க்குச் சௌமித்திரி, இளைய பெருமாள், இராமாநுசன் எனவும் பெயர், இவரை ஆதிசேஷா அவதாரம் என்பர். 2. இந்திரசித்து மரணமடையும் போது அவன் தேகத்திலிருந்து ஓர் நாகச்சுரம் உண்டாய் இவருடைய தேகத்தில் பிரவேசித்தது. ஏனெனில், பிரமசந்நதியில் பிறந்து அக்கிஹோத்ரம் செய்ததால் பிரம தேஜஸ் ஒர் நாகச்சுரமாய்விட்டது. அதனால் இவர் தாபத்தையடையத்வி தன் என்ற வானரன் தான் அஸ்வனிதேவ அம்சத்தில் பிறந்தவனாதலாலும் தன்வந்திரி போல் வைத்தியன் ஆதலாலும் லக்ஷ்மணருக்குச் சிகிச்சை செய்வதில் பயனில்லை யென்றுணர்ந்து லஷ்மணருக் கெதிரில் இராமருடைய பிரதிமையை எழுதிக்காட்ட உடனே லஷ்மண ரெழுந்து உனக்கு என்னவாம் வேண்டுமென்றனர். அதைக் சேட்ட வானான் “உம்முடைய கையால் யான் இறந்து வானாஜன்மம் நீங்க வேண்டு” மென்ன இலக்குமணர் “த்விதா ! இச்சன்மத்தில் உனக்கு இது நீங்காது, சமுத்திரத்தின் வடகரையில் பலராம ரூபியான என்னுடைய சரத்தால் உனக்கு நல்ல ஜன்மமுண்டாகும்” என்றனர். இப்படமானது நாகச்சுரத்தைப் போக்கும் படியானது என்று ஒரு பத்திரம் தந்தனர். (கல்கி புராணம்). 3. துரியோதனுக்குக் குமரன்.

இலக்குமணை

1. மத்திர தேசாதிபதியாகிய விருசேநன் குமரி. இவளைக் கிருஷ்ணன், அரசர் எல்லாருங் காண மச்சயந்திர மறுத்துத் துவாரகைக்குக் கொண்டு வந்து விவாகஞ் செய்து கொண்டனன். இவளுக்குக் கோத்ரவரன், பிரகோடன் முதலிய பத்துப்பெயர் குமரர். 2. துரியோதனன் குமரி. இவளுக்குத் துரியோதனன் சுயம்வரஞ் சாற்றிய காலத்தில் சாம்பன் பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு வந்து விவாகஞ் செய்து கொண்டனன். இதனால் கௌரவர் கோபித்து யுத்தத்திற்குவரப் பலராமர் அவர்களையும் அவர்கள் பட்டணத்தையும் கலப்பையால் பேர்த்துக் கங்கையில் தள்ளயத் தனிக்கையில் கௌரவர் நடுங்கிப் பணிந்தது கண்டு சினந் தணிந்தனர்.

இலக்குமி

A. இவள் இடதுகையில் வில்வப்பழம், வலக்கையில் பதுமம், தங்கநிறம், இரண்டு யானைகள் பொற்கலசங்களில் கங்காசலங் கொண்டு இரண்டு புறங்களிலும் துதிக்கைகளால் அபிஷேகங் கொள்ள இருப்பள். பிருகுருஷிக்குக் கியாதியிடத்தும், அமிர்த மதனத்தில் திருப்பாற் கடலில், ஜேஷ்டா தேவியுடனும் பிறந்து திருமாலை மணந்தவள். ஒருமுறை பசுக்களின் சோமயத்தையும் கோமூத்திரத்தையும் இடமாக் கொண்டவள். பிருகுவாலுதையுண்ட திருமாலின் மார்பினின்று நீங்கிக் கபிலரிடத் திருந்தவள். இரத்த பிக்ஷாடனத்தில் பிக்ஷாடன மூர்த்தியை விஷ்ணுவின் உயிர்ப்பிச்சை வேண்டியவன். பிரமன் சிரங்கிள்ளிய வைரவர்க்கு அக்கபாலம் கையைவிட்டு நீவ்கப் பிக்ஷையிட்டவள். தத்தாத்திரேயரிடமிருந்து அசுரர் கொள்ளச் சிலதூரஞ் சென்று மறைந்தவள், இராமாவதாரத்தில் சீதையாகவும் கிருஷ்ணாவதாரத்தில் இருக்மணியாகவும் வேதவதியாகவும், சூடிக்கொடுத்தாளாகவும் மற்றும் அடியவர் வேண்டியபடியும் திருவவதரித்து உலகத்து உயிர்களுக்கு வேண்டிய பெருவாழ்வு அளித்துவரும் விஷ்ணுவின் சத்தி. இவள், சாபத்தாற் சோட்டானாக அம்முட்டைகளில் குதிரைகள் பிறந்தன. இலக்ஷ்மி, விஷ்ணுவுட னிருக்கையில் வாலகில்லியர் வந்தனர். அவர்களது வரவை மதியாமல் நகைத்தது பற்றி விஷ்ணு மூர்த்தியால் குலக்கேடியாகச் சாபமேற்றாள். (திருப்பூவணபுராணம்). இந்த லக்ஷ்மி, தன முதலிய உதவுதலால் தனலக்ஷ்மி, தான்யலஷ்மி, கஜலக்ஷ்மி, வீரலக்ஷ்மி எனப் பல பெயர் பெறுவள், இலக்ஷ்மி, சிருட்டி முதலில் நாராயணனது வாமபாகத்தில் தோன்றித் தானே இரு கூறாய் ராதையென்றும், மியென்றும் பெயரடைந்தனள். இவள் தனது யோகத்தால் பல உருவடைந்து சுவர்க்கத்தில் சுவர்க்க லக்ஷ்மியாயும் அரசர்களிடத்து இராஜலஷ்மியாயும் கிருகத்தில் கிருஹ லக்ஷ்மியாயும், சம்பத்ஸ்வ ரூபிணியாயும், கோக்களில் சுரபியாயும், யஞ்ஞன் தேவியாகிய தக்ஷிணையாயும், ஷீரசமுத்திர கன்னிகையாயும், சூர்ய சந்திரர்களிடம் சோபா ரூபிணியாயும் மற்ற மங்கலப் பொருள்களிலெல்லாம் நிறைந்து மங்கள ரூபிணியாயும் இருப்பள், இலக்குமி பூர்வத்தில் நாராயணனால் பூசிக்கப்பட்டவள், இவள், எல்லாத் தேவர்களாலும் அரசர்களாலும் பூசிக்கப் பெற்றவள். இவள் சர்வைச்வர்யங்களுக்கு மதிதேவதை, இவள், இந்திரனுக்குச் செல்வங்கெடத் துருவாசரிட்ட சாபத்தால் வைகுண்டமடைந்து மீண்டும் தேவர் அச்செல்வம் பெறக் கடல் கடைந்தபோது பாற்கடலிற் பிறந்தனள். (பிரம்மகை வர்த்தம்) வராக்கற்பத்தில் நக்னசித்தின் குமரியாய் விஷ்ணுவை மணந்தவள். B. இலக்ஷ்மி, ரேவந்தன் ஏறியிருந்த குதிரையினழகைக்கண்டு அதில் மனதைச் செலுத்தியிருந்து விஷ்ணுமூர்த்தி கேட்கும் வினாவிற்கு விடை கூறாதிருந்தமையால் நீ எல்லாப் பொருள்களிலும் ரமித்திருப்பதால் ரமையெனவும், எவ்விடத்தும் நிலையற்றிருப்பதால் சஞ்சலையெனவும் பெயர் பெறுக என்றும் பின் குதிரையைக் கண்டு மன தழுந்தியபடியால் பெண் குதிரையாகுக எனவும் சாபமடைந்து, பூமி யில் வந்து காளிந்தி நதிக்கும் தமசாநதிக்கும் நடுவிடத்தில் தவஞ்செய்யச் சிவமூர்த்தி “உன்னை விஷ்ணு ஆண் குதிரையாக வந்து அழைத்துச் செல்வர்” என்று மறைந்தனர். அவ்வண்ணமே விஷ்ணு மூர்த்தி ஆண் குதிரையாக வர அவ்விடம் அக்குதிரைகளிரண்டும் புணர ஓர் அழகிய புத்திரன் உற்பத்தியாயினன். இக்குழந்தை பிறகு ஏகவீரன் எனப் பெயர் பெற்றனன். மற்ற சரிதைகளை ஏகவீரனைக் காண்க. (தேவி~பாகவதம்). C. இரவிவன்மனுக்கு அமுதபதி வயிற்றிற் பிறர் தவள். தாரை, வீரை யென்பவர்களின் தங்கை. இராகுலனுடைய மனைவி திட்டிவிடத்சாற் கணவனிறந்தவுடன் தீப்பாய்ந்து உயிரை நீத்தவள். சாது சக்ரனெனும் முனிவனுக்கு உணவளித்த புண்ணியத்தால் மணி மகலையாக வந்து பிறந்து பௌத்ததருங் கேட்டவள். (மணிமேகலை). D. ஒரு கற்பத்தில் கண்ணுவமுனிவர் சாபத்தால மானுருவடைந்து வனத்திலலைந்து கணவரைத் தேடித் திரிகையில் ஒரு வனத்தில் தவம் புரிந்த கொண்டிருந்த திருமாலைக்கண்டு மனங்களித்துக் கருவுற்று ஒரு பெண்ணைப் பெற்று வேடரைக்கண்டு மறைந்தனள்ப. இக்குழந்தையை வேடரெடுத்து வளர்த்தனர். (திருவோத்தூர்~புராணம்.) சரஸ்வதியைக் காண்க. E. தருமன் எனும் மநுவின் தேவி.

இலக்குமிதானம்

ஆயிரமுதல் நூறு கழஞ் சிறுதியான பொன்னில் இலஷுமியின் உருச்செய்து விதிப்படி பூசித்துத் தக்ஷிணையுடன் வேதியர்க்குத் தானஞ் செய்வது.

இலக்ஷன்

விநாயகருக்குச் சித்தியிடம் பிறந்த குமான்.

இலக்ஷ்மி

1. திருமகள் (அஷ்டலக்ஷ்மி காண்க). 2. சும்பனென்னும் அசுரன் குமரி. நிசும்பனைக் காண்க.

இலக்ஷ்மி துவாரம்

இது கைலாயத்தின தென்வாயில்.

இலங்கணி

இலங்கையைக் காத்திருந்து அநுமன் வந்தகாலத்து அவனைத் தடை செய்து அவனா லறையுண்டிறந்த அரக்கி.

இலங்கீரனார்

இவர் தந்தை எயினந்தை ஆதவின் இவரை எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பர். இவர் பாலை நிலத் துன்ள வேடரைச் சிறப்பிதுப் பாடுதலின் இவர் அம்மரபினராக இருத்தல் கூடும். இவர் உதியஞ்சேரல் செய்த போரையும் மகளிர்பிறை தொழும் வழக்கத்தையும், நாயகன் பிரிவழி நாயகி சுவரில் கோடிட்டு நாளெண்ணு தலையும் யாககுண்டத்துயாமையை வைத்து மூடலையும் சிறப்பித்துப் பாடியுள்ளார் இவர் பாடியன, நற் 6ம், அகத்தில் 8ம், ஆக~14. (நற்றிணை).

இலங்கை

1. இது தென் கடலில் திரிகூட சிகரத்தின் உச்சியில் 700 யோசனை விஸ்தாரமாயுள்ள தீவு. இதன் கோட்டையாண் விச்வகர்மனால் இலக்ஷம் யோசனை ஆழ்ந்ததாகச் சிருட்டிக்கப்பட்டது. இதனை முதலில், மால்யவந்தனும், இரண்டாவது குபோனும், மூன்றாவது இராவணனும் ஆண்டு இறுதியாக விபீஷணனுக்கு விட்டனர். இது ஒரு முறை அநுமனாலும், இரண்டாவது வாநரவீரராலுந் தீயிடப்பட்டது. இதன் உற்பத்தியை ஆதிசேடனைக் காண்க. 2. இது கயவாகுவென்னு மரசனுடைய இராசதானி. இதனை இக்காலத்து அனுராதபுரமென்பர். (சிலப்பதிகாரம்).

இலச்சை

தருமன் தேவி, தக்ஷன் பெண்.

இலஞ்சிமன்றம்

காவிரிப்பூம் பட்டினத் திருந்த மன்றம் ஐந்தனுள் ஒன்று. இது நோய்களைத் தீர்க்கும் பொய்கையுடையது (சிலப்பதிகாரம்).

இலதீபுஷா

இவர் ஒரு துருக்கர். இவர் ராமபக்தியைக் கடைப்பிடித்து அரிபஜனை செய்துவருகையில் துருக்கர் அரசன் இவர் வீட்டினைக் கொள்ளைவிடப் பரிஜனங்களை ஏவினன். பரிவாரங்கள், லதீபுஷாவிடம் வர இவர் அரிபஜனையில் ஈபேட்டவராய் அரசன் பணியை மறந்திருந்தனர். அரசன் தானே வந்து லதீபுஷாவைக் கண்டு அவரிருந்த வீட்டில் கிருஷ்ணனுக்கு ராதா பிராட்டி தாம்பூலம் மடித்துத்தரும் கோலத்தைச் சுவரில் எழுதியிருக்கக்கண்டு லதீபுஷாவை நோக்கக் கண்ணன் அவள் கொடுக்கும் தாம்பூலத்தை ஏன் வாங்கவில்லையென்று கேட்டனன். லதீபுஷா பகவானை அவ்வாறு செய்யப் பிரார்த்திக்கக் கண்ணன் பிரதிமை அவ்வாறு செய்யக் கண்டுகளித்தவர். (பக்தமாலை).

இலதை

1. மேருதேவியின் பெண். இலாவிருதன் பாரி. 2. ஒரு காந்தருவப் பெண். நாரீதீர்த்தம் காண்க.

இலத்திமலை

இது பாண்டியனைக் கொல்லுதற்குச் சைனர்கள் அனுப்பிய யானையின் மீது அட்டாலைச் சேவகர் நரசிங்கக்கணையை ஏவியபொழுது அந்த யானை அஞ்சிச் சொரிந்த இலத்தியாலாகியது. (திருவிளை).

இலந்தை

பதரபாசனம் காண்க.

இலபிதை

ஒருமான் பேடு. மந்தபாலமுனிவர் மானுருக்கொண்ட காலத்து உடனிருந்தது.

இலப்சேஞ்ச் மதம்

இம்மதம் மத்ய ஏஷியாவில் சுமார் 2800, வருடங்களுக்கு முன்னிருந்த வப்சென் என்னும் இராஜகன்னிகையால் ஸ்தாபிக்கப்பட்டது. இவர்களுக்கு விக்கிரக ஆராதனை இல்லை. பிரகிருதி அங்கீகரிக்கார். அவதாரங்கள் ஒத்துக்கொள்ளார்.

இலப்பைகள்

தமிழ் நாட்டிலுள்ள மகம் மதிய மதத்தைத் தழுவிய தமிழ் மக்கள். இவர்கள், மரக்காயரின் வேறுபட்டவர்கள். இவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் இராக்கில் கவர்னராயிருந்த ஹாஜி பென்குஸாப் என்பவனால் தன்னாட்டிலிருந்து துரத்தப்பட்டு இந்தியாவின் மேற்பாகத்திலும் சிலர் கன்யாகுமரி துறையிலும் குடிபுகுந்த அரபியர். இவர்கள் பல அரசர்கலாலும் மகம்மதியராலும் துன்புறுங்காலத்தில் (லபெக்) நாங்களுங்களடிமை யெனும் பொருளுள்ள இச்சொல்லை உபயோகித்ததனால் லப்பைகளெனப்பட்டனர். இவர்கள் சோனகம் எனும் அரேபியாவிலிருந்து வந்ததால் சோனகர் எனப்படுவர். தொழில், வெற்றிலை வியாபாரம், மீன் பிடித்தல், துணி, பாய்நெய்தல், படகோட்டல், இவர்களில் ஆண்பிள்ளைகள் மகமதியர்போலவும், பெண்கள் தமிழர்கள் போலவும் உடைதரிப்பர். இவர்கள் படகோட்டலால் மரக்காயர் எனப்படுவர். காயல்பட்டன வாசிகளாதலால் காயலார் எனப்படுவர். (தர்ஸ்டன்)

இலம்பகம்

இது ஒரு தேசம், LANGHAA ON THE NORTHERN BANK OF THE KABUL RIVER.

இலம்பாடியார்

இலவண வர்த்தகசாதியென்று கூறப்படும் சாதி (இலவணம்) உப்பு இவர்கள் மார்வாடிஜாதியைச் சிறிது ஒத்தவர்கள். இவர்கள் பேசுவது மராட்டி, இவர்கள் நிலையற்ற நாடோடிகள். இவர்களின் பெண்கள் மணிக்கட்டு முதல் தோள் வரையில் தந்த வளையல் பூண்டிருப்பர். வர்த்தகத்தின் பொருட்டு ஊர்ஊராகத்திரிவர். (தர்ஸ்டன்.)

இலம்பை

தக்ஷன் பெண். குமரன் வித்யோதன்.

இலம்போதகன்

பெளாணமாசன்குமான். இவன் குமரன் சிபவுகன்.

இலம்போதரன்

விநாயகர்க்கு ஒரு பெயர்.

இலலிதை

வந்த்யைக் காண்க.

இலளிதாங்கதேவர்

இருஷப தீர்த்தங்கரின் மூன்றாவது பிறப்பு. (சைநர்).

இலளிதை

1. விதூமனைக் காண்க. 2. சிவமூர்த்தியின் வலது பாகத்தில் திருவவதரித்தவள். இவளது வலம், இடம் நெற்றி முதலிய நேத்திரங்களில் பிரம, விஷ்ணு, ருத்ரர்களும், முகத்தில் அக்நி, வேதியர், வேதம், சந்திரன் முதலியோரும் பிறந்தனர். இவளது மற்ற உறுப்புக்களில் சராசரங்களுண்டாயின.

இலவக்கோட்டை

இராமபிரான் புத்திரனாகியலவனால் கட்டப்பட்ட கோட்டை இதுவே லாகூர்.

இலவங்கப்பட்டை

இது பட்டை வகைகளில் மணமுள்ள பொருள். காரமுள்ளது. இது இலங்கை முதலிய தீவுகளில் பயிரிடப்படுகிறது. இச்செடி ஏறக்குறைய 20, 25 அடியும் வளரும். இதனை அதிகம் வளரவிடுவதில்லை. இது, (10, 12) அடிகள் வளர்ந்தவுடன் கிளைகளைச் சீவிப்பட்டையெடுத்துக் கொள்கின்றார்கள். இதன் இலைகள் வட்டமாகவும், பூக்கள் உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் வெண்மை கலந்த நீல நிறமாகவும் இருக்கும். இது, வாசனையுள்ள பொருள்களில் ஒன்று ஆதலால் இதனை மருந்துகளிலும் சம்பார வருக்கங்களிலும் சேர்த்து உபயோகப்படுத்துவர். இலவங்கப் பூச்செடி இதனின் வேறு.

இலவங்கப்பூ

இது அரும்பு வகையில் மணமுள்ளதும் காரமுள்ளதுமான ஒரு செடியின் அரும்பு. இச்செடிகள் இந்தியா, மெலூகஸ் முதலிய இடங்களில் பயிராகின்றன. இச்செடி, (40) அடிகள் உயரம் வளருகிறது. இலைகள் தடிப்புள்ளவாகவும் அழுத்தமாகவும் இருக்கின்றன. இது, கொத்துக் கொத்தாகப் பூக்கத் தொடங்கி மலராமுன் இதனரும்புகளைப் பறித்து உலர்த்திப் பதப்படுத்துகின்றனர். இதன் அரும்பு மலர்ந்துவிடின் மணம் குறைந்துவிடுகிறது. இதன் பழத்தில் ஒரே விதை காணப்படுகிறது. இது, மருந்துவகைகளில் ஒன்றாகவும், சம்பார வகைகளில் ஒன்றாகவும் எண்ணப்படுகிறது.

இலவணன்

A. மதுவின் குமரன். இவன் இருடிகள் முதலியவரைத் தொந்தரை செய்ய இராமபிரான் ஏவலால் சத்துருச்கினன் இவன் ஆகாரத்திற்குச் சென்று மீளுஞ் சமயங்கண்டு இவனுடன் யுத்தஞ் செய்து கொல்லப் பெற்றவன். இவன் பட்டணம் வடமதுரை, மாந்தாதாவைக் கொன்றவன். B. உத்தரபாண்டவ நாட்டரசன். இவனரசில் சித்தன் ஒருவன் வந்து தன்னிடமிருந்த பீலியை அரசன் காணச்சுற்ற ஒரு குதிரை வந்தது. அதைக்கண்டு சித்தன், அரசனே இது நல்லகுதிரை இதில் ஏறுக என அரசனுக்கு ஒரு முகூர்த்த காலம் சோகம் உண்டாயிற்று. உடனே அரசன் தெளிவடைந்து கூறுவான். நான் குதிரையேறிச் சவாரி செய்து வேட்டைக்குச் சென்றேன். என்னைக் கொடியொன்று தடுக்க நான் கொடியைப் பிடிக்கக் குதிரை என்னைவிட்டு நீங்கிற்று. நான் இரவு முழுதும் கொடியிலிருந்து நானே இறங்கி வேறொருவரையுங் காணாது விகாரமான ஒரு புலைச்சியைக் கண்டு அவளை மணந்து மூன்று புத்திரரைப் பெற்று காமத்தால் வருந்தி உறவினர் இறக்க நானும் என் மனைவி மக்களும் நீங்கி ஒரு பனையடியில் தங்கினோம். அவ்விடம் எனது இளையகுமரன் பசிக்கு மதுமாமிசம் கேட்டுத் தளர்வதைக் கண்டு நான் பொறுக்காமல் அக்நியில் வீழ்ந்து இறக்க இருக்கையில் விழித்தேன் என்று அரசன் மந்திரியருடன் கூறி வெளியிற் சென்று மேற்கூறிய செய்தியாலாகிய விளைவைப் பிரத்தியக்ஷமாகக் கண்டவன். (ஞானவாசிட்டம்.)

இலவணாசுரன்

இவன் சிவபிரான் வரத்தால் பெற்ற அஸ்திரத்தால் மாந்தாதாவைக் கொன்றான். (பாரதம்~அநுசா.)

இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்

இவன் பாண்டி நாட்டாசர்களில் ஒருவன். நக்கீரர் முதலியோரால் பாடப்பெற்றவன்.

இலவன்

இராமபுத்ரன், வான்மீகரால் காவல்காரணமாகத் தர்ப்பையின் அடிப்புறத்தால் தடவப் பெற்றதாலிப்பெயர் பெற்றவன். இவனாண்ட பட்டணம் சரஸ்வதி.

இலவு, வரயு

இவை விருக்ஷம், காற்று இவ்விரண்டிற்கும் தன்னினும் வலியுள்ளானுக்கு அஞ்சவேண்டும் என நாரதர் செய்த கலகத்தால் இலவு வாயுவுடன் பகைத்துகிளை முதலிய நீங்கினது. (பார~சாந்தி).

இலவுகாகுஷி

பவுஷ்பஞ்சி மாணாக்கன்.

இலாங்கலக்கினகரன்

அஷ்டதிக்குப்பாலகரை வருத்திச் சிவமூர்த்தியாலிறந்த அசுரன்.

இலாங்கலன்

பவுஷ்பஞ்சியின் மாணாக்கன்.

இலாங்கிலினி

மகேந்திரகிரியி லுற்பத்தியாகும் நதி.

இலாடர்

மைசூர் நாட்டிலுள்ள ஒருவகை வர்த்தக சாதியார். இவர்கள் குஜராத்தியிலுள்ள லாத்தேசத்தவரென் எண்ணப்படுகின்றனர்.

இலாடுபாவா

இவர் ஜோத்பூர் என்னும் நகரவாசி. விரக்தராகித் தீர்த்தயாத்திரை செய்து வருங்கால் நரபலி செய்வோர் மூவர் இவரைப் பிடித்து இருவர் பிடித்துக் கொண்டும் ஒருவன் வாளுருவிக்கொண்டும் காளிமுன் நிறுத்தக்கண்டு பெருமாளைத் தியானிக்கக் காளி கோரரூபத்துடன் எதிர் தோன்றிக் கொல்லநிறை மூவரையும் கொலைபுரிந்து தாசரை என்ன வேண்டுமென இன்று முதல் நீ நரபலி வேண்டா திருக்க என அவ்வாறு உடன்பட்டு அரசன் கனவிடைத்தோன்றி இனி ஊரார் நரபலி எனக்கிடின் ஊரிலுள்ளாரைத் துன்புறுத்துவேன், நீயு மற்றவடும் என் கோயிலிடம் வந்திருக்கும் பாகவதர் அருளைப் பெறுகவெனக் கூறி மறைந்தனள். அரசன்விழித்துக் கொலை செய்யாதிருக்கப் பறையறைவித்துத் தானும் தாசர் அருள் பெற்றான். தாசர் பெருமாளைப் பணிந்திருந்தனர்.

இலாட்சி

துஷ்மந்தன் பாரியை. இவளுக்கு இலட்சணை என்றும் ஒரு பெயர் உண்டு. புத்திரன் ஜனமேஜயன். (பாரதம் ஆதி).

இலாபன்

புத்திதேவியின் கோபத்திற் பிறந்தவன், விநாயகபுத்ரன்.

இலாப்லாண்டர் மதம்

இத்தேசத்தவருக்கு ஜுமலா என்பவர் சிருட்டிகர்த்தா, அஜிகா, ஸ்தோர்ஜன்கரா, பெயூவி என்னும் மும்மூர்த்திகளுளர். இவர்களுக்குத் துணையாக அநேகபிசாசங்களுண்டு, அவர்களைத் திருப்தி செய்ய ஆடுமாடுகளைப் பலிகொடுப்பர். இவர்கள் வீட்டில் யாராவது இறந்தால், அவர்கள் அவ்வீட்டில் ஆறு மாதம் குடியிரார்.

இலாமயன்

ஓரந்தணன். இனிய மொழியையுடையவன். மந்திரவித்தையிற் சிறந்தவன் உதயணனுக்கு இவன்பால் நன்கு மதிப்புண்டு. இவனிருந்த இடம் காளவன மென்பது. (பெருங்கதை).

இலாலா

இவர்கள் பந்தல் கண்டிலிருந்து பல இடங்களில் குடியேறிய பொந்தரிய வகுப்பார்.

இலாவந்தன்

அருச்சுநனுக்கு உலூபியிடம் பிறந்த குமரன்.

இலாவாணகம்

இஃது உதயணனுக்குரிய பெரிய நகர்களுள் ஒன்று. பகைவர் வருதற்கு மிக அஞ்சும் போரணிகள் முதலியவற்றையும், இடையே மிக அழகிதான ஓரரண்மனையையும் உடையது. இதன் பக்கத்தே பலவகை வளமுள்ள ஒருமலை உண்டு. அதன் சாரல் மிக்க இன்பம் பயப்பதாக இருந்தது. உண்டாட்டுக்குரிய பல வகை மரங்கள், கொடிகளையுடைய பூஞ் சோலைகளும், சுனை முதலிய நீர் நிலைகளும் படமாட முதலியன அமைத்தற்குரிய இடவிசேடங்களும், இச்சாரலில் இருந்தன. முனிவராச்சிரமங்களும், தேவாலயங்களும் மேற்கூறிய சோலைகளில் இருந்தன. தவஞ்செய்து கொண்டிருந்த ஓரரச முனிவருடைய புத்திரியாகிய விரிசிகை யென்னும் கன்னியின் வேண்டுகோட் கிரங்கி அவள் கொடுத்த பலவகை மலர்களைக் கண்ணி முதலியனவாகக் கட்டி உதயணன் சூட்டியது. அச்சோலைகளுள் ஒன்றிலே தன் அக்கன்னிகைவேறொன்றையும் அணியாமல் அம்மாலையுடனே இருந்து முயன்று உதயணனுக்குத் தேவியாயினான். உருமண்ணுவாவிற்கு அவனாற் கொடிக்கப்பட்ட சீவி தங்களுள் இந்நகரமும் ஒன்று. இஃது இலாவானமென்றும் வழங்கும். (பெருங்கதை).

இலாவிருதவருஷம்

இது நவவருஷங்களுள் ஒன்று, சுமேருவைச் சூழ்ந்திருப்பது.

இலிகிதர்

1. இவர் சங்கரெனும் ருஷியின் சகோதரர். இவர்கள் பாகுதை யெனும் நதிக்கரையி லாச்ரமம் கொண்டிருந்தவர்கள். ஒரு கால் இலிகிதர் சங்கர் ஆச்ரமஞ் சென்று அங்கிருந்த பழங்களைப் பொறுக்கித் தின்கையில் வெளிச் சென்றிருந்த சங்கர் நீ என் ஆச்ரமத்திலிருந்த பழங்களைத் திருடினையாதலால் அதற்குத் தக்க தண்டனை சுத்யுமநனென்னும் அரசனிடம் பெறுகவென, அவ்வாறே தமயன் சொற்படி அரசனிடஞ் சென்று கையறுப்புண்டு மீண்டும் தமயனருளால் தீர்த்த ஸ்நானஞ் செய்து கைவளரப்பெற்ற ருஷிக்ரேட்டர். சுத்யம்நரைக் காண்க. (பார~சாந்தி.) 2. கண்வருஷியின் குமரர். லிகிதஸ் மிருதி செய்தவர்.

இலிங்கசரீரம்

புரியஷ்டக சரீரம் காண்க.

இலிங்கபுராணம்

இது பதினொராயிரங் கிரந்தமுடையது. இது சீவர்களுடைய சீலம், ஐச்வர்யம், சுகமோக்ஷம், அண்டகோசம், மன்வந்தரம் முதலியவற்றைக் கூறும் பதினெண் மகாபுராணங்களுள் ஒன்று.

இலிங்கம்

ஒலி முதலிய புலன்களுக்கும் மனோவாக்குகளுக்கு மெட்டாததாய், அளவில்லாத பேரொளியாய்த் தனக்குமேல் நாயகமில்லாததாய், அருவமாய், நிர்மலமாய், குணரகிதமாய், அநந்தகுணமணியாய், வண்ணமற்றதாய், நாசரகிதமாய்ச் சர்வசகத்தும் தோற்றுதற்கும் ஒடுங்குதற்கும் ஏதுவாய், அவ்யக்தமெனப் பழமறை பகர்வதாகி ஆன்மாக்களின் தியானபாவனா நிமித்தம் நிட்களசகளத்திருவுருக்கொண்ட நிலையாம். அவ்விலிங்கத்தின் பிண்டிகையே சத்தியுரு, இலிங்கம் சிவவுரு. ஆகவே இலிங்கம் ஞானசத்தியுருவம், பீடம் கிரியா சத்திவடிவம், ஆதலின் இவ்விரண்டுஞ் சிவனதிஷ்டிக்குந் தேகம். இது திரிமூர்த்தி சுஉரூபமும் ஆம். சிவலிங்கத்தின விருத்தமே ருத்ரபாகமாம். பீடத்தின் அதோபாகத்தின் அடி நான்கு மூலை பிரம பாகம், நடுவின் எட்டு மூலை விஷ்ணு பாகம், இது பிரணவசுரூபமாம். இலிங் – லயம், கம் – தோற்றம், ஆகவே சிருட்டியாதி பஞ்சகிர்த்தியததைச் செய்யு மீசுரப் பிரபாவம் இலிங்கம். இதன் விரிவை எழுதப்புகின் விரியுமாதலின் மிகச் சுருக்கி எழுதுவேன். இதன் விரிவை வேதாதிகாமிக வாதுளகமங்களினும், இலிங்கம் முதவிய மகாபுராணங்களினும், திருமந்திரம் முதலிய தமிழ் நூல்களினும் பாக்கக் காண்க. பின்னும் இவ்விலிங்கம், ஆட்யம், அநாட்யம், சுரேட்யம், ஸர்வசமம் என நான்கு விதமாம். இது சலம், அசலம் என இரு விதமுமாம். பின்னும் அவை வியக்தம,வ்யத்தாவியக்தம், அவ்யக்தம் என மூவகைப்படும். அவற்றுள் சகளமான பிரதிமாவுரு வியக்தம், சகளநிஷ்களம் வியக்தா வியக்தம், நிஷ்களம் அவ்யக்தம் கிருகங்களில் பூசிப்பது சலம் எனவும், ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டது அசலம் எனவுங் கூறப்படும். அசலம் ஸ்திரலிங்கம், சுயம்பு தானே உண்டானது, தைவிகம் தேவர்களாற் பூசிக்கப்பட்டது, காணபம் கணேசராற் பூசிக்கப்பட்டது, ஆரிஷம் ருஷிகளால் ஸ்தாபிக்கப்பட்டது, மானுஷ்யம் மனுஷரால் ஸ்தாபிக்கப்பட்டது என ஐவகைப்படும். பின்னும் ஸ்படிகலிங்கம், ரத்னாதி லிங்கங்களு முள. அவைகளி னிலக்கணங்களை ஞானரத்நாவளி முதலியவற்றிற் காண்க. இவ்வகை இலிங்கங்கள் அதமாதமந் துவக்கி உத்தமோத்தமம் வரையில் ஒரு ஹஸ்தப்பிரமாண முதல் ஒன்பது ஹஸ் தப்பிரமாணம் வரை செய் யத்தக்கவை. மேற்கூறிய நால்வகை யிலிங்கங்களுக்கும் மேலே ருத்ரபாகம் விருத்த மாகவாவது (16) அல்லது (32) அல்லது (64) மூலையாகவாவது இருக்கலாம். பிரம பாகம் அடியில் நாலுமூலை, விஷ்ணு பாகம் நடுவில் எட்டு மூலை, பின்னும் பிரம பாகம் நபும்ஸகம் எனவும், விஷ்ணு பாசம் ஸ்திரி லிங்கமெனவும், ருத்ரபாலம் பும்லிங்கம் மனவும் கூறும். ஆட்ய லிங்கத்தின் சிரம் அர்த்த சந்திர வடிவமாகவும், அநாட்யலிங்கத்தின் சிரம் வெள்ளரிப்பழ வடிவாகவும், சுரேட்யலிங்கத்தின் சிரம் கோழியின் முட்டை போலவும், சர்வசம லிங்கத்தின் சிரம் குடை வடிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அர்த்தசந்திராதி நால்வகை வடிவும் தனித்தனி நன னான்கு விதமாகப் பேதப்படும். ஆட்ய லிங்கத்தில் (1001) லிங்கஞ்செய்ய வேண்டும். சுரேட்யலிங்கத்தில் (108) லிங்கஞ் செய்யவேண்டும். சர்வசமலிங்கத்தில் 5,4 முதலிய முகங்களுள்ள லிங்கங்கள் செய்ய வேண்டும். ஆட்யாநாட்ய சுரேட்ய லிங்கங்களில் முகலிங்கஞ் செய்யக்கூடாது எனவுங் கூறுப. முகலிங்கத்தில் ஈசானாதி யைந்து முகங்களுமாம். இலிங்கத்தின் மஸ்தகத்தில் ஈசானம், கிழக்கே தற்புருடம், தெற்கே அகோரம், வடக்கே வாமதேவம், மேற்கே சத்யோசாதமுஞ் செய்ய வேண்டும். நான்குமுக லிங்கமாயின் ஈசானந் தவிரச் செய்ய வேண்டும். இருமுகமான லிங்கத்தில் தத்புருஷமும் சத்யோசாதமும் செய்ய வேண்டும். ஒரு முகலிங்கத்திற்குத் தத்புருஷ மாத்திரஞ் செய்ய வேண்டியது. இவற்றின் நிருமாண முதலியவற்றைப் பிரதிமாசாஸ்திர மறிந்து செய்க. இனிப் பாணலிங்கமாவது எப்போதும் ஈச்வரா திட்டானமாயிருக்கும். இப் பாணலிங்கம் (அரைக்கால்) அங்குல முதல் ஒரு ஹஸ் தப்பிரமாணமுள்ள தாகவும், பக்குவமான நாவற் பழத்தினிறம் போலவும் தேனினிறமாகவும், வண்டினிறமாகவும், காசுக் கல் நிறமாகவும், நீல வர்ணமாகவும் கொவ்வைக் கனிபோலவும், பச்சை நிறமாகவும், தன்னிறமான பீடங்களுள்ள தாகவும், திக்குப் பாலகர்கணி நமாகவும், பசுவின் முலை போலவும், கோழியின் முட்டை போலவும், கண்ணாடிபோல மழமழப் புள்ளதாகவும் இருக்கும். இனிப் பாணலிங்கத்தின் வாலாவவது. பாணனென்னுமோ ரசுரன் தான் பூசித்துச் சித்தி பெறும் வகை அன்புடன் ஈச்வானைப் பிரார்த்திக்க அவர் பல வகைப்பட்ட பதினான் குகோடி விங்கங்கள் கொடுத்தனர். அவன் பூசித்து அவற்றை முடிவில் லிங்காசலத்திலும், காளிகாகர்த்தத்திலும், ஸ்ரீநாகத்திலும், கன்னிகாச்ர மத்திலும், நேபாளத்திலும், மகேந்திரத்திலும், அமரேச்வரத்திலும், மற்றும் நதிமத்தியிலும், பர்வதமத்தியிலும் எழுந்தருளச் செய்தான். அவை தாம் பாண லிங்கங்கள், அவை சுவயம்பு லிங்கசமமென்று காமி காதி ஆகமங்களிற் கூறப்படும். இவற்றிற்குப் பீடஞ்சிலை, மிருத்து, லோஹம், நல்லவிக்ஷம், ரத்னம் இவற்றாற் செய்யலாம். பீடம் லிங்கஸமான வாணமாயிருத்தல் வேண்டும். இவையன்றி இந்திரனால் பூசிக்கப்பட்ட லிங்கம் ஐந்திரலிங்க மெனப்படும். அது பசும்பொன்னிறமாயும், அறுகோணமாயும், வச்சாரங்கிதமாயு மிருக்கும். அது ராஜ்யசம்பத்தைத் தரும். ஆக்னேயலிங்கம் அகதியாற் பூசிக்கப்பட்ட தாம். அது தாம்பிரவர்ணமாய்ச் சத்திடங்கிதமாய் உஷ்ணபர்சமுள்ள தா யிருக்கும். அது தேஜோவர்த்திடைக் கொடுக்கும். யாம்பலிங்கமானது யமனாற் பூசிக்கப்பட்டது. தண்டாகாரமாய் அல்லது தண்டாங்கிதமாய் அவ்யக்தமாய் முகூர்த்த காலத்தில் நிருமிக்கப்பட்டுண்டாவ தாய்க் கறுப்புவர்ணமாயிருக்கும். அது சத்ருநா சஞ் செய்விக்கும், நைருதலிங்கம் நிருதியாற் பூசிக்கப்பட்டது. இது கட்கநிறமாய்க் கட்காங்கிதமாய்த் தூமவாணமா யிருக்கும். இது சத்துருக்ஷயஞ் செய்விக்கும். வருணலிங்கம் வட்டமாய்ப் பாசாங்கிதமாய்ச் சகலவர்ண மாயிருக்கும். அதைச் சலத்தில் விட்டால் அந்தச் சலம் இனிப்பாய் நிர்மலமாயிருக்கும், வாயவ்யலிங்கம் தூமவர்ணமாய்த்து வஜாங்கிதமாயிருக்கும். அதின் சிரத்தில் பஞ்சை வைத்தால் காற்றில்லாம லசையும், அது உச்சாடன முதலான கர்மவிஷய பூசைக்குரியதாம். கௌபேரலிங்கமானது கதாகாரமா யல்லது கதாங்கி தமாயிருக்கும், நடுவிற் பொன்னிறமா யிருக்கும். அதை இரவில் பயிர் நடுவில் வைத்தால் பயிர் விருத்தியாகும். ஈசானலிங்கமானது சூலநிறமா யல்லது சூவாங்கி தமாய்ப் பனி, முல்லை, சந்திரனை யொத்த நிறங்களுள்ளதா யிருக்கும். அது சகல சித்திகளையுந் தரும். வைணவலிங்க மானது சங்க சக்ர கதாபத்ம ஸ்ரீவத்ஸ சின்னங்களும் மச்சிய கூர்மவராகாதி சின்னங்களுள்ள தாயிருக்கும். இது சர்வா பீஷ்டங்களையுங் கொடுக்கும். பிரமலிங்கமானது பத்மாங்கிதமாய்ப் பத்மவர்ணமாய் அக்ஷமாலை கமண்டலு இவற்றா லலங்கரிக்கப்பட்ட தாய் மாலை, தண்டமிவற்றின் குறியுள்ள தாயிருக்கும். இது புத்ராதிவிர்த்தியைக் கொடுக்கும். இவ் விலிங்கங்கள் பொருள்களுட னிறுக்கில் கனமுள்ளனவாகவும் வெள்ளத்தில் விடின் மறுபடியுமகப்படுவனவாயு மிருக்கும். இவையே பூசிக்கத் தகுந்தவை. இந்த (14) கோடி பாணலிங்கங்கள் அமரேச்வரம், மகேந்திர பர்வதம், நேபாளபர்வதம், கன்யா தீர்த்தம், அதையடுத்த ஆச்ரமம் இவைகளில் ஒவ்வொரு கோடியாக வைந்து கோடியும், ஸ்ரீசைலம், லிங்கசைலம், காளிகாகர்த்கம் என்னு மூன்று தலங்களில் மும்மூன்று கோடியாக ஒன்பது கோடி ஆகப் பதினான்கு கோடியாம். மற்றவை விரிந்த நூல்களிற் காண்க. காஞ்சியில் பிரதிவி லிங்கமும், திருவானைக்காவில் அப்பு லிங்கமும், திருவண்ணாமலையில் தேயுலிங்கமும், சீகாலத்தியில் வாயுலிங்கமும், சிதம்பரத்தில் ஆகாயலிங்கமும் பிரதிட்டை என்ன புராணங்கள் கூறும். இரஸ்த்தால் சிவலிங்கஞ் செய்து பூசிக்கின் பஞ்ச மகாபாதகங்களைப் போக்கும். சுயம்புலிங்கங்கள் அநந்தருடைய சிரம் அசைதலால் காலாக்னிருத்ரருடைய கோபாக்கினியினின்றும் (3) தீப்பொறிக ளுண்டாயின, அத் தீப்பொறிகள் மூன்றும் நிர்மூலலிங்கம், சமூலலிங்கம், பிரதுவிலிங்கமென மூன்றுவகை. நிர்மூல லிங்கம் ஜலத்துளிருப்பது, சமூலலிங்கம் பூமியில் மலையை ஆதாரமாகவுடையது. பிருதுவிலிங்கம் மண் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டது.

இலிங்காயதர்

வீரசைவ மதத்தைச் சேர்ந்த இலிங்கதாரணம் செய்துகொண்ட சமயத்தவர். தர்ஸ்டன்.

இலிங்கி

இவனும் விருடாகபியும் விபூதி ருத்ராக்ஷ தாரிகளாய் வனத்தில் விளையாகையில் புறாவொன்று தன் பெட்டையுடன் புணரக்கண்ட இலிங்கி அதனை இகழ்ந்தனன். விருடாகம் தன்னை இகழ்ந்ததாக எண்ணி இவனுடன் சண்டையிட இருவரும் மாண்டனர். இவ்விருவரும் அத்தேசத்து அரசனுக்கும் மந்திரிக்கும் பராவதன் வலிமுகன் எனப் பிறந்து அரசாண்டு முக்தி பெற்றனர்.

இலிங்கோற்பவம்

ஒரு காலத்துச் சிவ மூர்த்தியோகத் திருக்கையில் அவரது திருமேனியில் வியர்வை உண்டாயிற்று. அவ்வியர்வையினிடம் அநேக கோடி லிங்கங்கள் உண்டாயின. (சிவரகஸ்யம்.)

இலிங்கோற்பவம்

ஒரு கற்பத்தில் பாற்கடலில் யோக நித்திரை செய்யும் விஷ்ணு மூர்த்தியைப் பிரமன், தட்டியெழுப்பி மகனே என அழைத்தனன். விஷ்ணுமூர்த்தி நீ என் குமரனாயிருக்க என்னைக் குமரனென்பதென்னென வாதிட்டு இருவரும் போரிட்டனர். அவ்விருவர் இடையிலும் சிவபெருமான் தாணுமூர்த்தமாகத் தோன்ற இருவரும் நம்மில் யார் இந்த உருவின் அடிமுடி அறியவல்லோமோ அவர்களே பெரியர் எனச் சபதங்கொண்டு இருவரும் பன்றியும் கழுகுமாகி அடியும் முடியுந்தேடி அறியாது திகைத்திருக்கையில் ஓமென்னும் பிரணவவொலி கேட்க ஐந்து திருமுகங்களுடன் அந்த இலிங்கத் திடை காட்சி தந்து முத்தொழிற்கும் மூல காரணன் நாமென அதில் லயித்த திருவுருவம், இக்கதையை வாமன புராணத்திலும், சிவமகாபுராணம் முதல் அத்தியாயத்திலுங் காண்க.

இலீலாட்டியன்

விஸ்வாமித்திர புத்திரன்.

இலீலாப்பிரமவாதி மதம்

சமுத்திர நீர் ஒன்றே, அலை, திவலை, நுரை, குமிழி, ஆயினாற்போல, பிரமம் ஒன்றே, தனு, காண, புவன, போகங்களாய்ச் சநநமாணப்பட்டு மேற்சொன்ன அலை முதலிய, நீருள் அடங்குவது போல, சகத்தெல்லாந் தன்னுள் ஒடுங்கி நிற்பது என்று கூறுவது.

இலீலாவதி

1. இரண்யகசிபின் தேவி. 2. வடமொழிக் கணித நூல் செய்தவள்.

இலீலை

பதுமன் தேவி. இவள் சாஸ்வதியை வேண்டி ஞானமடைந்து புருஷனுடன் நற்பத மடைந்தவள்.

இலேசம்

கருதியது வெளிப்படுக்கும் சத்துவமாகிய குணங்களைப் பிறிதொன்றால் நிகழ்ந்தனவாக மறைத்துச் சொல்வது. இது, புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல், குற்றத்தைக் குண மாகவும் குணத்தைக் குற்றமாகவுஞ் சொல்லுதல். (தண்டி).

இலேபகர்

பிதுர்க்கள் பதின்மரில் மூவர்.

இலைவாணியன்

(சுசுகன்) வைசியன் சூத்திர கன்னிகையைப் புணரப் பிறந்தவன். இவன் வெற்றிலைப்பாக்கு விற்பவன். (அருணகிரி புராணம்).

இலைவித்துண்டாம் மரம்

ஐரோப்பாவின் வடபாகத்திலும் வேறு இடங்களிலும் பியாட்ரி, பார்பரிட்ரி என்பவைகளின் இலைகள், முதிருங்காலத்தில் இலைகளினடிப் புறத்தில் அரும்புகள் உண்டாகி முதிர்ந்து காய்கள் போன்று வெடித்து விதைகளை நாற்பக்கமும் பரவச் செய்கின்ற ஓர்வகை மரம்.

இலோகேத்தையர்

இவர் தீப்பட்டெரிந்த நெல்லினை விதைத்து ஒன்று கோடியாக்கிய வீரசைவர். வசவர்காலத் திருந்தவர்.

இலௌகீக பத்திரம்

பாகம், தானம், விலை கொண்டுவிற்றல், விலைகொடுத்துக் கொள்ளல், பெறுதல், தொழில் நடத்தல், கடன் என (7) வகைப்படும்.

இல்லத்தலைவன்

திருக்கோயி லாண்மனை அகழி மதில் பிரதிமை, யந்திரம், அணைக்கட்டு, வாவி, கிணறு, தடாகம், புட்கரிணி, குண்டம், நீர் முதலியவற்றை மேனோக்கிச் செலுத்தும் பொறி முதலியவற்றைச் சிற்ப நூற்படி அமைக்கும் அறிவுடையவன். (சுக்ரநீதி).

இல்லறக்கிழத்தியர் இல்லிற்குச் செய்வன

அதிகாலையிலெழுந்து வீட்டைச் சுத்தி செய்து பாத்திரங்களைத் துலக்கி வீடு முழுதும் சாணநீர் தெளித்து நீர்ச்சால் காகங்களை மலரணிந்து அடுப்பினுள் தீமூட்டுக. இவ்வாறு செய்யின் நல்ல செல்வம் உண்டாம். (ஆசார்க்கோவை).

இல்லவை நகுதல்

உள்ளன அல்லாதவற்றை உரைத்து விளங்கும் பல்லினையுடைய மடவரல் அழகிய பழனஞ் சூழ்ந்தவூரனை நகையைப் பெருக்கியது. (பு. வெ. பெரும் திணை).

இல்லாண்ழல்லை

பொருந்திய காதற் கணவனை வாழ்த்திப் பலருமிசைக்கும் அனு கரணத்தினையுடைய கீர்த்தியாற் சிறந்த இல்லின் மிகுதியைச் சொல்லியது. (பு. வெ. பொது).

இல்வலன்

1. வில்வலனைக் காண்க. வில்வலனுக்கு ஒரு பெயர். 2. கிலாதனுக்குத் தெமனியிட முதித்த குமரன்.

இல்வாழ்க்கை

(இது கற்பியலின் தொடக்கம்) என்பது, தலைவனும் தலைவியும் இல்லின் கண் வாழும் வாழ்க்கையைக் கூறுதல். இது, உள்ள மகிழ்ச்சியும், ஊடலும், ஊடலுணர்த்தலும், பிரிவும் கூறும். இது, இல்வாழ்க்கை, பரத்தையிற் பிரிவு, ஓதற்பிரிவு, காவற்பிரிவு, தூதிற்பிரிவு, துணை வயிற்பிரிவு, பொருள் வயிற்பிரிவு, எனும் கிளவிகளையும், கிழவோன் மகிழ்ச்சி, கிழத்தி மகிழ்ச்சி, பாங்கி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி எனும் வகையினையும், தலைவன் தலைவி முன் பாங்கியைப் புகழ்தல், தலைவனைப் பாங்கி வாழ்த்தல், பாங்கி தலைவியை வரையு நாளளவும் வருந்தாதிருக்தமை உரையாயென்றல், பெருமகளுரைத்தல், தலைவனைப் பாங்கி வரையு நாளளவு நிலைபெற வாற்றிய நிலைமைவினாதல், மன்றன்மனை வருசெவிலிக் கிகுளை யன்புற வுணர்த்தல், பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக் குரைத்தல், மணமனைச் சென்றுவந்த செவிலி நற்றாய்க் குரைத் தல், நன்மனை வாழ்க்கைத் தன்மையுணர்த்தல், செவிலி நற்றாய்க்கு இருவர் காதலை யுமறிவித்தல், எனும் விரியினையும் உடைத்து. (அகம்).

இளங்கண்டீரக்கோ

பெருந்தலைச் சாத்தனாரைக் காண்க. கண்டீரக் கோவின் தம்பி. (புறநானூறு).

இளங்கீரந்தையார்

கடைச் சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் இளங்கீரனாரின் வேறாக இருக்கலாம். அகத்தில் முல்லையைப் பாடியதில் இளஞ்சிறாரணிந்த கிண்கிணியின் முகப்புத் தவளையின் வாயை யொக்குமென உவமை கூறியுள்ளார். (அகம்~184).

இளங்குமணன்

குமணன் தம்பி. பெருங்தலைச் சாத்தனாரைக் காண்க. (புற~நா).

இளங்கோசர்

கொங்கு தேசத்தாசர். (சில).

இளங்கோன்

உதய குமரன்.

இளங்கோவடிகள்

இவர் சேரநாட்டு வஞ்சிநகராண்ட நெடுஞ்சேரலாதனுக்குக் குமரர். சேரன் செங்குட்டுவனுக்கு இளையார் இளங்கோவேள் எனப்படுவர். இவர் பேரறிவும் உத்தம குணமும் வாய்ந்தவர். ஒரு நாள் சேரலாதன் தன் மக்களுடன் அத்தாணி மண்டபத்திருக்கையில் நிமித் திகன் ஒருவன் மக்களிருவரையும் உற்று நோக்கி அரசனைக் கண்டு இனி நீ விண்ணுலகாளும் காலம் நெருங்கிற்று உன் மக்களிருவருள் இளையோனே உன்னரசாள் வான் எனக் கூறினன். இதனைக் கேட்ட இளையார் அவ்வாறு முறை கெடக் கூறியதற்கு அவனை வெகுண்டு தன் தமயன் ‘பெற்ற மனவாட்டம் ஒழிய அந்த அவைக் கண்ணே அரசாள் ஆசை ஒழயத் துறவு பூண்டனர். இவரைத் தேவந்தியின் மீது ஆவேசித்த பத்தினிக் கடவுளும் புகழ்ந்து கூறினள். இவர் துறவடைந்தபின் இளங்கோவுடன் அடிகள் புணர்க்கப் பெற்றனர். பின் வஞ்சிமா நகரின் கீழ்பாலுள்ள குணவாயிற்கோட்டம் என்ற இடத்து வசித்து வந்தனர். இவர் அக்காலத்திருந்த புலவர்களுள் ஒருவராகவும் விளங்கினர். இவர் தமிழ் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் இயற்றியவர். இந்நூல் பாடுதற்குக் காரணமாயிருந்தவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார். இவர் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தைச் சாத்தனாரைத் தலைமையாக் கொண்ட அவைக்கண் அரங்கேற்றினர் இவர் தமிழ்நாட்டு வேந்தரையும் புகழ்ந்துள்ளார். இவர் சைநசமயப் போக்காக ஏலியற்றினரேனும் வைதிக சமயாசாரங்களையும் தழுவினராகவே எண்ணப்படுகிறார். இவர் காலத் திருந்த புலவர்கள் சாத்தனார், பாணர் முதலிய கடைச்சங்க மருவிய புலவர்களிற் சிலராவர். இவர்காலத்து இலங்கையை ஆண்ட கயவாகு இருந்ததாகத் தெரிகிற படியால் இவர் காலம் சற்றேறக்குறைய (1790) வருஷங்களுக்கு முன்னிருக்கலாம். இவர்க்கு இளங்கோவேந்தன், சேரமுனி எனவும் பெயர்.

இளஞ்செழியன்

கொற்கை நகரத்திருந்த வெற்றிவேற் செழியன். (சிலப்பதிகாரம்).

இளஞ்சேட்சென்னி

கரிகாற் பெருவளவனுக்குத் தம்பி.

இளஞ்சோலிரும்பொறை

இவன் பெருஞ் சேரலிரும் பொறை எனுஞ் சோர்தலைவனுக்கு மையூர் கிழான் வேண்மாள் அந்து வஞ்செள்ளையெனும் மனைவியிடம் பிறந்தவன். இவன் இரு பெருவேந்தரும் விச்சியும் வீழ ஐந்தெயில் எறிந்து பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும் பழையன் மாறனையும் வென்றவன். இவனைப் பதிற்துப்பத்தில் (6) ஆம் பத்தால் பெருங்குன்றூர் கிழார் ”நிழல் விடுகட்டி, வினை நவில் யானை, பஃறோற்றொழுதி, தொழினவில் யானை, நாடுகாணெடுவரை, வெந்திற றடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக்கூந்தல், வலிகெழு தடக்கை” எனும் செய்யுட்களால் பாடி மருளில்லார்க்கு மருளக்கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணமும், ஊரும் மனையும், எரும் இன்பமும், அருங்கலங்களும் அவரறியாமலமைத்து அவரை வெறுமனே அனுப்பினன் என்ப.

இளநாகனார்

நாகன் என்னும் பெயருடையார் பலரிருத்தலின் அவரின் இவர் வேறென்பது தெரிய இளநாகனா ரெனப்பட்டார். இவர் பாலையையும், நெய்தலையும் புனைந்து பாடியுள்ளார். தலைவியைக் கருதித் தலைமகன் செலவழுங்கியது நயமிக்கதாகும். இவர் பாடியன நற்றிணையில் இரண்டு பாட்டு (205, 231).

இளந்தத்தன்

சோழன் நலங்கிள்ளியிட மிருந்து காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியிடம் ஒற்றனாக வந்து அவனால் கொல்லப் புகுந்தவிடத்துக் கோவூர்க்கிழாராற்பாடி விடுவிக்கப்பட்டவன், (புறநானூறு).

இளந்திரையனார்

தொண்டைமான் இளந்திரைய னென்பவர் இவரே. இவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரென்னும் அந்தண ராற்பாடப்பட்ட பெரும்பாணாற்றுப்படை கொண்டவர். “ஆழியிழைப்பப் பகல் போமிரவெல்லாந், தோழி துணையாய்த் துயர் தீரும்~வாழி, நறுமாலை தாராய் திரையவோ ஒவென்னுஞ், சிறுமாலை சென்றடையும்போது” எனப் பொய்கையாராற் பாராட்டிப் பாடப்பெற்றவரு மிவரே. இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் காதலி காதலனைக் கடிந்து கூறுவது வியக்கத்தக்கது. (நற். 94) வம்பமாரி யென்று தலைவியை ஏமாற்றுதல் சுவையுடையதாகும். (நற். 99) இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று பாடல்கள் உள. அவை, 94, 99, 106.

இளந்திரையன்

இளந்திரையம் செய்வித்தோன்.

இளந்தேவனூர்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனா ரென்பவர் இவரே. பண்டம்~பலசரக்கு. இவர் வணிகர் மரபினர். பாலையையுங் குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார். காதலிவிருந்து புறந்தருதலை வியப்புறப் பாடியிருக்கிறார். (நற். 41). தலைவன் இரவுக்குறி வருதலைக் கூறுவது பாராட்டற்பாலது. (அகம். 298). இவர் பாடியனவாக நற்றிணையில் 41 ஆம் பாடலொன்றும், அகத்தில் மூன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றி.)

இளன்

கருத்தமப் பிரசாபதிக்குக் குமரன். பாகுலிக தேசத்தை ஆண்டவன். இவன் சிவமூர்த்தி உமையுடன் இருந்த நந்தவனத்தில் கட்டளையின்றிச் சென்று பெண் வடிவடைந்து பார்வதி தேவியின் கட்டளையால் ஒருமாதம் ஆணுருவும், மற்றொரு மாதம் பெண்ணுருவுமாயிருந்தவன், இவன் பெண்ணா யிருந்தகாலத்துப் பெயர் இளை. இவன் குமரன் சசபிந்து. இவன் அச்வமேதத்தால் சாபநீங்கிப் பிரஷ்டா நகராண்டு புரூரவனுக்குப் பட்டமளித்தவன்.

இளம்பஞ்ச பாண்டவர்

பாண்டு புத்திரர்க்குப் பிறந்தவர், அரிச்சந்திரனைக் காண்க. அசுவத்தாமனால் பாசறையுத்தத்தி விறந்தவர். இவர்கள் விச்வதேவரம்சம்.

இளம்புல்லூர்க்காவிதி

இவரியற் பெயரெழுதப்படவில்லை. காவிதிபட்ட முடைமையால் பாண்டிநாட்டு உழுவித்துண்ணும் வேளாளரென்று கொள்ளத்தகும். இவர் முல்லைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். வாடைக் காற்றானது யானை பெருமூச் செறிந்தாற் போன்றதென்று. இவர் கூறிய உவமை வியக்கத்தக்கது. இவர் பாடியது நற்~86. (நற்றிணை).

இளம்பூதனார்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பூதனார் என்னும் புலவரின் வேறு என்பதறிய இளம்பூதனார் எனப்பட்டனர் போலும். அகத்தில் நெய்தலைப் பாடியுள்ளார். (அகம்~334).

இளம்பூரணர்

இவர் உரையாசிரியர் எனச் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் முதலில் தமிழிற் சிறந்த இலக்கணக்கடலாகிய தொல்காப்பியத்திற்கு உரையியற்றினவர். இவர் வேறு நூல்கள் செய்ததாகக் காணப்படவில்லை. இப் பெரியோர், பழைய தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியத்துக்கு முதன் முதல் உரையிட்டதனால், “உரையாசிரியர்” என்னும் பொதுப்பெயர் இவர்க்குரிய சிறப்புப் பெயராக வழங்குவதாயிற்று. பின் வந்த சேனாவரையர் முதலிய பிரபல ஆசிரியர், இளம்பூரணவடிகள் ஒரோவிடங்களில் தவறியதை அறிந்தவராயினும், அதுபற்றி அவ்வடிகள் பால் வைத்த மதிப்பை மாற்றினவரல்லர். உரையாசிரியர் கொள்கையைச் சேனாவரையர் மறுக்க நேரும் இடங்களில் “அவர் பிறர்மதம் பற்றிக் கூறினாரென்க” எனவும் “மாணாக்கர்க்கு உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பாகலாற் செய்யுண் முடிபென்று கூறாராயினார்” எனவும் “உரையாசிரியர்க்கு அது சருததன்றென்க” எனவும் இவ்வாறே எவ்வளவு அச்சத்துடனும் மரியாதையுடனும் எழுதுகின்ற ரென்பதைச் சேனா வரையத்தால் அறியலாம். அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கடலைத் தம் மதிவலி கொண்டு கடைந்து முதன் முதல் இலக் கணவமுதம் அளித்த பெரியார், மானுட வியற்கைக்குற்ற தவறுகளுடைய ராதல் பற்றி இகழற்பால ரல்லரென்பதும், பெருங்காரிய மொனறைத் தொடங்குவோர் ஒரோவிடங்களின் மயங்குத லியல்பே யென்பதும், அம்மயக்கமும் பின்னவர்க்கு நன்மையளித்தற் கேதுவாகக் கூடு மென்பதும் சேனாவரையர் முதலியோரது மேலான கொள்கைகளாகும். இளம்பூரண வடிகள் தொல்காப்பிய முழுவதிற்கும் உரை செய்தவரென்று தெரிகிறது. உரையாசிரியர் துறவு பூண்ட பெரியோரென்பது, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திலே “உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள்” எனக் கூறுதலாலும், “அடிகளென்றது துறத்தலான்’’ என அவரே அடிகள் என்ற சொற்குப் பொருள் உரைத்தமையானும் தெளிவாகின்றது. இனி, நன்னூலியற்றிய பவணந்தி முனிவர், தம் சூத்திரங்கள் சிலவற்றை, இளம்பூரணவடிகள் உரைக் கருத்தைத் தழுவியே இயற்றிப் போந்தமையால், பவணந்தியார்க்கு முந்தியவர், உரையாசிரியர் என்று ஊகிக்க இடம் தருகிறது.

இளம்பெருமானடிகள்

இவர் பொய்யடிமையில்லாத புலவர் கூட்டத் தலைவர். சிவமூர்த்தியினிடத்து அன்பு பூண்டவர். இவர் சிவபெருமான் திருமும்மணிக் கோவையென்னும் பிரபந்தஞ் செய்தனர். அதனைப் பதினொராந் திருமுறையிற் சை வாசாரியர்கள் சேர்த்துக்கொண்டு அத்தியயனஞ் செய்து வருகின்றனர்.

இளம்பெருவழுதியார்

இவர் பாண்டி நாட்டு அரசர் வகையிற் சேர்ந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் வல்லவராயிருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்வதற்முன் இவர்க்கு இப்பெயர் உண்டாயிருத்தல் கூடும் என எண்ணப்படுகிறது. இவர், பரிபாடலில் திருமாலைப் பாடியிருக்கின்றனர்.

இளம்போதியார்

போதியார் என்ற தனாலே இவர் புத்தசமயத்தினர் போலும். இவர் நெய்தற் றிணையைப் புனைந்து கூறியுள்ளார். தலைமகன் வரையாது களவின் வருதற்கு அஞ்சுகின்றானென்று தோழி கூறுவதாக இவர் கூறியது வியக்கத்தக்கது. இவர் பாடியது இப்பாட லொன்றேயாம். (நற்றிணை~72).

இளவிச்சிக்கோ

பெருந்தலைச் சாத்தனாரைக் காண்க. இவனுக்கு இளவச்சிரக்கோ எனவும் பெயர். (புறநானூறு).

இளவெயினனூர்

எயினென்னும் பெயர்க் காரணத்தால் இவர் வேட்டுவமரபினரென்று தெரிகின்றது. நெய்தற்றிணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் கூறிய உள்ளுரை வியக்கத்தக்கது. இவர் பாடியது. நற்~(263) செய்யுள்.

இளவெளிமான்

பெருஞ்சித்திரனார் வெளிமானின் தம்பி, வெளிமானிறந்தபின் இவனைப் பாட இவன் பரிசு தராததனால் அவனை இகழ்ந்தும் பாடினர். (புற~நா).

இளவேட்டனார்

மதுரையிற் பிறந்தவர். தமிழிற் சிறந்த புலவர். இப்பெயரால் இவர் வணிகருள் இளவேட்ட மகருஷி கோத்திரத்தவர் என்று காணப்படுகிறது. இவர் வஸ்திரம் விற்கும் வணிகக்குலத்த வராயிருக்கலாம். இவரை மதுரை அறுவை வாணிகர் இளவேட்டனார் என்பர் சிலர். கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். இளவேட்டனாரென்று அடைமொழி கொடாது கூறப்படதலின் இவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனாரின் வேறு போலும். இவர் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். கூதிர்ப் பருவத்து நதிகளில் நீர் குறைவதை வெகு அழகாகக் கூறியுள்ளார். இவர் பாடியவை நற்றிணையில் இரண்டு பாட்டுகள். (33, 157).

இளவேட்டமகருஷிகோத்ரன்

சோழ ராஜாவினிடத்தில் வாணியம்பாடியெனும் கிராமம் பரிசாகப் பெற்றவன் வணிகன். இக்கோத்திரத்திற்கு முதல்வர் ஓர் இருடி இப்பெயர்கொண்டிருக்கலாம்.

இளா

1. வசுதேவருக்குப் பாரி. 2. காச்யபர் தேவி, தக்ஷன் குமரி, விருக்ஷங்களைப் பெற்றவள்.

இளாவதி

காலன் எனும் எகாதசருத்திரனுக்குத் தேவி.

இளாவந்தன்

அருச்சுநனுக்கு உலூபியிட முதித்த குமரன்.

இளாவிருதன்

1. அக்நியித்ரனுக்குப் பூர்வசித்தியிட முதித்த குமான். தேவி, வதை. 2. இருஷபனுக்குச் சயந்தியிட முதித்த குமரன்.

இளிபாலன்

1. சந்திரவம்சத் தரசன். இவன் காண்டவப் பிரத்தம் ஆண்டவன். 2. குபேரனுக்குப் புத்திரன்

இளிபிளி

தசரதன் மகன்.

இளிபிளை

திரணபிந்திற்கு அலம்புசையிட முதித்தவள், புலத்தியர் தேவி, குமரன் குபேரன்.

இளீனன்

1. இரப்பியனுக்கு ஒரு பெயர். 2. சந்திரவம்சத்து அரசன். தாய் காளிந்தி பாரியை, ரதந்தரி, குமார், துஷ் யந்தன், சூரன், பீமன், பிரவசு, வசு முதலியவர்கள்.

இளை

A. வாயுவின் குமரி. துருவனுக்கு இரண்டாவது பாரி, குமான் உற்பவன். B. கச்யபர் தேவி. தக்ஷப்பிரசாபதியின் பெண். C. வசுதேவனுக்குத் தேவி. குமார் உருவலகன் முதலியோர். D. ஊர்த்தரேதெஸென்னும் ஏகாதசருத்திரரின் தேவி. E. வைவச்சுதமனுவின் குமரி. இப்பெயர்கொண்ட பெண் பிறக்க அரசன் சம்மதியில்லாமல் வசிட்டரைப் பார்க்க வசிட்டர், அரச னெண்ணமறிந்து பக வானை வேண்டி அப்பெண்ணைச் சுத்தியும் நனென்னும் அரசனாக்கினர். சுத்யும் நன் அரசனாய்த் தன் பரிவாரங்களுடன் குமாரவனஞ் சென்று மீண்டும் பெண்ணாய்ப் புதனைப் புணர்ந்து புரூரவசுவைப் பெற்றான். வசிட்டரிதனை உணர்ந்து சிவமூர்த்தியை வேண்டி அந்த மூர்த்தி ஒரு மாதம் ஆணுருவும் ஒருமாதம் பெண்ணுருவுமாக இருக்க அருள் புரிந்தனர். சுத்யும்நன் இவ்விரண்டுருக் கொண்டே உத்கலன், கயன், விமலன் முதலிய மூவரைப் பெற்றனன். (பாகவதம்.)

இளையாட்டக்குடி

நாட்டுக் கோட்டை செட்டிமார் வகுப்பு.

இளையான் குடிமாறநாயனார்

இளைசையம் பதியில் வேளாளர் குலத்திற் பிறந்து நாடோறுஞ் சிவனடியவர்க்கு அமுது செய்து படைத்து நாளுக்குநாள் வறுமை யடைந்தும், ஒழுக்கங் குறையாதிருத்தலை அறிவிக்கவேண்டிச் சிவமூர்த்தி பாதியிரவில் வேதியராய் மழையில் நனைந்து, நிற்க இடமில்லாது அவர் மனைக்கு எழுந்தருளத் தம்பதிகள் இருவருங் கண்டு உபசரித்து ஈரவஸ்திரங்களைந்து வேறு தந்து மனைவியரை அமுது படைக்க வினாவ, மனைவியார் ஒன்றுமிலாமையைத் தெரிவித்துக் கொடுப்பாருமில்லை, நாழிகையோ அதிகமாயிற்று ஆயினும் பகல் கழனியில் விதைத்த நெல்லை வாரிவரின் அமுது சமைக்கிறேனென்ன, அவ்வகையே நாயனார் செய்ய, அடுப்பெரிக்க விறகு இல்லாமல் கூரையைப்பிடுங்கி அடுப்பெரித்துக் குழிப் பயிரைக் கறியாக்கி அமுது சமைத்து வேதி யரை எழுப்ப வேதியர் ஒரு பெருஞ் சோதியுருவாயிருக்கக்கண்டு மயங்கியிருக்கையில் சிவபிரான் ருஷபாரூடராய்த் தரிசனந்தா முத்திபெற்றவர். (பெரிய புராணம்.)

இளையாழ்வான்

1. உடையவர் பிள்ளைத் திருநாமம். 2. எழுபத்தினான்கு சிங்காசனாதி பதிகளில் ஒருவர், வைஷ்ணவாசாரியர், (குரு பரம்பரை.) 3. இலக்குமணருக்கு ஒரு பெயர்.

இழிகட் பெருங்கண்ணனார்

கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர். (திருவள்ளுவ மாலை)

இழிசொல்

பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல்.

இழுமதி

THE RIVER KALINADI IN THE DISTRICT OF ROBILKHAND.

இழைபு

வல்லொற்று வராது செய்யுளியலுடையரால் எழுத்தெண்னி வகுக்கப் பட்ட குறளடி முதலாப்பதினேழ் நிலத்து ஐந்தடிய முறையானே உடைத்தாய் ஓங்கிய சொற்களான் வருவது.

இஷதகன்

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரன்.

இஷிகன்

கங்கா தீரவாசியாகிய ஒரு பிராமணன் இவனிடத்தில் சிகண்டி ஆண் தன்மையடைவதற்குச் சென்று இருந்தனன். (பாரதம் ஆதிபர்வம்).

இஷிகம்

பிருந்தாவனத்தைச் சார்ந்த ஒரு அரண்யம்.

இஷிகாஸ்திரம்

பாண்டவர் வதையின் பொருட்டு அஸ்வத்தாமனால் விடப்பட்ட அம்பு.

இஷுமந்தன்

(ய) வசுதேவன் தம்பியாகிய தேவச்சிரவனுக்கு இரண்டாவது குமரன்.

இஷ்டன்

வச்சிரனுக்குக் குமரன்.

இாகுகுணன்

சிந்துதேசாதிபதி. சடபாதரைப் பல்லக்கு எடுப்பித்து விரைவாகச் செல்லும்படி கோபித்து அவரைப் பிறகு மெய்யுணர்ந்தாரென, அறிந்து அவரால் ஞானோபதேசம் பெற்றவன் இவனுக்குச் சவ்வீரராசனென்னும் பெயரும் உண்டு.

இாச்சுமிஸ்புடம்

இது, (7) இராசியும் (10) பாகையும்வைத்து இதில் ஆதித்யன் சுத்த புடத்தைக் களைவது. (10) இராசியும் (8) பாகையையும் வைத்து இதில் செவ்வாய் வியாழனுடைய சுத்தபுடத்தைக்ச” அது. (9) இராசியும் (17) பாகையும் வைத்து இதில் புதன் சுத்தபுடத்தைக் களைவது. (5) இராசியும் (9) பாகையும் வைத்து இதில் சுக்கிரன் சுத்தபுடத்தைக் களைவது. (7) இராசியும் (7) பாகையும் வைத்து இதில் சநி சுத்தபுடத்தைக் களைவது. இரண்டு ராசியும் (13) பாகையும் வைத்து இதில் கேதுவின் சுத்தபுடத்தைக் களைவது. (8) பாகைவைத்து ராகுவின் சுத்த புடத்தைக் களைவது. இப்படிக் களைந்து நின்ற சேடம், இரச்சுமிஸ்புடமெனப் பெயர் பெறும். இதனை நாள் பார்க்கும் படியே பார்த்து உற்றநாளில் சுபகாரி யங்கள் தவிரப்படும். (விதானமாலை)

இாவிதர்மனு

திருவரங்கத்திற் பெருமாள் பிரத்தியக்ஷம் பெற்றவன்.