அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
அகண்டாநந்தர்

பௌத்தமுனிவரிற் ஒருவர், பொதிகையில் இருந்தனராம்.

அகத்திணைக்குரிய பதினான்குவகைக்கருப் பொருள்கள்

தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ்,பன், தொழில், என்பன. (அகப்).

அகத்தியதீர்த்தம்

ஒருதீர்த்தம், இது, தென்கடற்கரைக் கருகிலுள்ளது. இதில் அருச்சுனன் தீர்த்தயாத்திரையில் தங்கினான். இதில் நீராடில் மகாபாதகங்கள் நீங்கும். (பார~ஆதி).

அகத்தியநக்ஷத்திரம்

ஒரு நக்ஷத்திரம், இதுகடலலையை நிறுத்துவது.

அகத்தியன்

(2) ஒரு வேதியன் போகனைக் காண்க.

அகத்தியபக்தவிலாசம்

சிவனடியார்கள் சரிதையை வடமொழியிற் கூறும்நூல்.

அகத்தியபர்வதம்

காலாஞ்சர பர்வதத்தருகிலுள்ளமலை.

அகத்தியப்பிராதா

அகத்தியனுடன் பிறந்தவன். வயிற்றிலேயே ஞானமடைந்தவன்.

அகத்தியமுனிவர்

1. தாரகன் முதலிய அரக்கர் உலகைவருத்த அவர்களை நிவர்த்திக்க, இந்திரன், அக்கி, வாயு முதலியவர்களுடன் கூடிப் பூமியில் வந்தனன். அதைக்கண்டு அசுரர் கடலில் ஒளித்தனர். ஒளித்த அசுரர், தேவர்களை வருத்த உபாயந் தேடுகையில் அக்கி, அவர்களுடைய துராலோசனையை யறியாமல் அசுரர் கடவிற் பயந்து ஒளித்தாராதலின் வருத்தலாகாதென முயற்சியின்றி யிருந்தனன். பின் அசுரர், காலாவதியிற் பூமியில் வந்து தேவர், மக்கள், நாகர், இருடிகள் முதலியவர்களை வருத்த இந்திரன், மருத்துக்களோடு கூடிய அக்கியைப் பார்த்து நீ சும்மா விருந்தமையால் இத்துன்பம் விளைந்தது. ஆகையால் கடலிலுள்ள நீரை வறட்டின் அசுரர் அகப்பட்டு நம்மா வழிவரென அக்கி, இந்திரனைப் பார்த்து அசுரர் பொருட்டுக் கடல் நீரை வறளச்செய்தால் சலசரங்கள் அழியுமென்று கூற, இந்திரன் கோபித்து நீ என்சொல்லை மறுத்தனையாதலால், வாயுவுடன் கூடிப் பூமியிற்போய்க் கும்பத்திற்பிறந்து கடனீரெல்லாங் குடிக்க என்றனன். பிறகு தேவசரீரங்கொண்ட அக்கி, மருத்துக்களுடன் கூடிப் பூமியில் விழுந்து அகத்தியனாயினான். எவ்வாறெனில், பூர்வம் விஷ்ணுமூர்த்தி, தருமன் குமானாய்க் கந்தமாதன பருவதத்தில் தவஞ் செய்கையில், அத்தவத்தைக் கெடுக்க, இந்தான், அப்சாசுக்களை யனுப்ப, அத்த போதனர், சலிக்காமல் தம் தொடையினின்றும் அதிரூபலாவண்யத்துடன் ஒரு பெண்ணைச் சிருட்டித்து ஊர்வசியெனப் பெயரிட்டனர். அந்த ஊர்வசியை மித்திரன் மணந்து அவளோடு கூடியிருக்கையில் வருணன், அவளை விரும்பினன். அதற்கு அவள், புன்னகையுடன் என்னையொருவன் மணந்திருக்கையில் அந்நியன் விரும்பலாமோவென, வருணன், அவளைப்பார்த்து ஆயின் அம்மித்திரனுடன் நீ கூடியிருக்கையில் உன் எண்ணமாத்திரம் என்னிடத்தில் வைக்க என, அதற்கு ஒப்புக்கொண்டு மித்திரனுடன் கலந்திருந்தனள். இதனை ஞானதிருஷ்டியால் அறிந்த மித்திரன், ஊர்வசியைப் பார்த்து, நீ, வேறுஎண்ணத்துடன் என்னிடமிருந்தனை யாகையாற் பூமியில் மனுஷப் பிறவியடைந்து புரூரவன் தேவியாக எனச் சாபமிட்டனன். இவ்வகைப்பட்ட ஊர்வசியின் மோசத்தால் மித்திரா வருணருக்கு வெளிப்பட்ட ரேதஸு ஒரு கும்பத்திலடைபட, அதிலிருந்து நிமிபிறர் தனன். அந்த நிமி அநேக பெண்களுடன் கூடி விளையாடுகையில் வசிட்ட முனிவர் வா, அவரை அவன், மரியாதை செய்யா, கனால் அவர் கோபித்து நீ தேகமில்லாத வனாக எனச் சபித்தனர். அச்சா பஞ்சகி பாதநிமி, வசிட்டரையும் அவ்வாறு தேகமில்லாதிருக்கச் சபித்தனன். இவ்வகை ஒருவர்க்கொருவர் சாயமேற்று எமபிரமனிடத்திற் போகப் பிரமன், நிமியை நேத்திரத்தில் வசிக்கச் செய்தனன். அது காரணமாக நிமிஷம் உண்டாயிற்று. பிறகு இமி சாபத்தால் தேகமிழந்த வசிட்டர், மித்திராவருண வீரியமுள்ள கும்பத்திருந்து முதலினும், இரண்டாவது சதுர்ப்புஜத்துடன் கமண்டலங் கொண்டவராய் அகத்தியரும், பிறந்து நிவமியற்றி, தாரகாசுரன் முதலியவர்களைக் கொல்லுதல் வேண்டிச் சமுத்திரபானஞ் செய்து, இரண்டாவது மிருத்துயுவை நியமித்து, ஈடவிற்பிறந்த காலகூட விஷத்தை வியர்த்தமாக்கி யிருக்கையில், இவரிடம் திரிமூர்த்திகள் வந்து உனக்கென்ன வரம் வேண்டுமென்ன 25000000000 கணக்குள்ள சிருட்டி கர்த்தாக்கள் மாறுமளவும் தக்ஷிணபதத்தில் ஆகாச வீதியிலிருக்க வரங்கேட்டுப் பெற்நனர். (மச்சபுராணம்). இவரைப் புலத்திய புத்திரர் என்றும் கூறுவர். 2. வாதாபி, வில்வலன் என்னும் அரக்கர் இருவரில், வில்வலன் வேதியர் உருக்கொண்டு வழியிற் செல்லும் வேதியர் இருடிகள் முதலாயினாரைவிருந்திற்கு வலிய அழைத்து வந்து, வாதாபியை ஆடாக்கி யறுத்துப் பாகஞ்செய்து விருந்தாக வந்தவரை யுண்பித்து இறுதியில் வில்வலன் வாதாபியை அழைப்பன், அவனுண்டோர் வயிற்றைக் கிழித்து வெளிவர இறந்தவனை அவ்விரண்டு அரக்கருந் தின்று பசிதீர்வர். இவ்வகையியற்றும் இந்த அரக்காது தீமைகளை இருடிகள் அகத்தியருடன் முறையிட அகத்தியர், அவர்களிடம் விருந்தாகச் சென்றுண்டனர். வில்வலன் அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியைக் கூப்பிட, அகத்தியர் “வாதாபே ஜீர்ணோபவ’ என்று வயிற்றைத் தடவ அரக்கனி றந்தனன். வாதாபி வராமை கண்ட அரக்கன், கோபித்து அகத்தியரையடிக்கச் செல்ல முனிவர், சினத்துடன் நோக்கித் தருப்பையில் பாசுபத மந்திரமேவி அரக்கனைக் கொல்ல முயன்றனர். பின்வில்வவன், அகத்தியர் வேண்டிய பொருள்களைக் கொடுத்து உயிர்ப் பிச்சையேற்றுப் பிழைத்தான் என்ப (பாரவன~ப). 3. சிவபிரான், பார்வதி தேவியாரைத் திருமணஞ் செய்த காலையில் தேவர் முதலியோர் வடதிசை நிறையத் தென்திசை யுயர்ந்ததால் சிவபிரான் கட்டளைப்படி அகத்தியர், தென்திசையிற் பொதிகை மலையிலிருக்க வருகையில் ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த இருடி கூட்டங்களைப் பார்த்து நீங்களேன் இவ்வகைத் தொங்குகின்றீர்களென இருடிகள், எங்கள் சந்ததியில் அகத்தியன் என்ற ஒருவன் பிறந்து இல்லறமடையாது இருக்கின்றானாதலால் எங்களுக்கு இத்துன்பம் நேரிட்டதென மறுமொழி கூற, அகத்தியர்கேட்டுத் திடுக்கிட்டு, அவர்களைத் தன்னைச் சபியாதிருக்க வேண்டி, நானே அகத்தியன், அதி சீக்கிரத்தில் இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்தினின்று நீக்குகின்றேனென்று, விதர்ப்பநாடடைந்து அவ்வரசன் யாகத்திற்பிறந்த உலோபாமுத்திரையை அதிக பொருள் தந்து மணந்து தாதைகளைச் சுவர்க்கமடைவித்தவர். (பார~வன) 4. இவர், தென்திசைநோக்கிச் செல்லுகையில் விந்தமலையின் மிகுதியைத் தேவர் அகத்தியருக்குக் கூறினர். அதைக்கேட்ட அகத்தியர், அவ்விடம் வருகையில் விந்தம், மேருவுடன் மாறுபட்டு வழியிலாது நிற்ற இலக்கண்டு அதனிடஞ் சென்றனர். விந்தம் முனிவரைப்பணிய அகத்தியர், நாம் தென்றிசை நின்று மீளும்வரையில் இவ்வகை பணிர்திருக்கவென்று பொதிகையி லெழுந்தருளி இராவணன் தமிழ்நாடாளாமல் அவனைக் காந்தருவத்தாற் பிணித்தவர். (திருநெல்வேலிப் புராணம், தொல்காப்பியப் பாயிரம்) 5. தமிழ்நாட்டைக் கந்தமூர்த்தி அகத்தியருக்குக் கொடுக்க இருடி, பாண்டினுக்குக் கொடுத்தனர். (நெல்~புரா). 6. அகத்தியருக்குத் தாமிரபர்ணி சிவமூர்த்தியாற் கொடுக்கப்பட்டது. 7. மதியநந்தை யென்பவள், தவத்திற் கிடையூறுசெய்ய, அவளை மனிதப் பிறவியடையச் சபித்தவர், 8. தேவர்களை வருத்திய விருத்திராசரன் இந்திரனது வச்சிராயுதத்திற்குப் பயந்து கடலில் ஒளிக்கத் தேவர் வேண்டுகோளாற் சமுத்திர ஜலத்தை ஆபோசனஞ் செய்து அவனை இந்திரன் கொலைபுரிய, மீண்டும் ஜலத்தைவிடுத்தவர். (திருவிளை) 9. சந்திர வம்சத்தாசனாகிய நகுஷன் என்போன், இந்திரபட்டமடைந்து புலோமசையிடம் விருப்பங்கொண்டு அவளைக்கேட்க, அவள், சத்த இருடிகள் தாங்குஞ் சிவிகையிலூர்ந்து என்னிடம் வரின் அவ்வகை உடன்படுவேனென அவ்வாறே இருடிகள் தாங்கச் சிவிகையிலேறிச் செல்லுவோன் காமவெறியால் இருடிகள் என்று மதியாமல் “சர்ப்ப சர்ப்ப” என்ன அந்த இருடிகளின் முதலிலிருந்த இவர் அவனைச் சர்ப்பமாகச் சபித்தனர். (திருவிளையாடல்.) 10. ஒருமுறை இருடிகள், மூவாண்டு நெற்கொண்டு யாகஞ்செய்து வர, தேவர்கள் கோபித்து வேள்வியை அடையாமல் அகத்தியரிருக்கும் நாட்டினும் மழையிலாது வளங்கள் குன்றும்படி செய்து வேள்விக்கு இடையூறு செய்வித்தனர். இருடிகள், அகத்தியரிடம் வந்து முறையிட முனிவர், உத்தரகுருவிலிருந்து பொருள்களை வருவித்து வேள்வியை நடத்தித் திரிமூர்த்திகளுக்கு அவிர்ப் பாகந்தர “இருக்கையில் தேவர்கள் நடுங்கி அபராதக்ஷமை வேண்டி யாகதரிசனஞ் செய்து அவிர்ப்பாகங் கொண்டு மழைபொழியச் செய்தனர். (பாரா~வன). 11. நீரிற்படுத்துப் பன்னிரண்டு வருடந் தவஞ்செய்தவர். 12. ஸ்ரீஇராமமூர்த்திக்கு விருந்தளித்துத் திவ்யபாணங்கள் கொடுத்து அப்பாணங்களின் வரலாறும் மந்திரமுங் கூறியவர். (இரா). 13. சுவேதனுக்குப் பிணந்தின்னுஞ் சாபம் போக்கியவர். (உத்தரராமாயணம்). 14. இவர், நைமிசாரண்ய முனிவர்களுடன் மாறுபட்டுத் தென்னாடடைந்து பொதிகையிற் கந்தமூர்த்தியை வழிபடக் கந்தமூர்த்தி, அவரது இருக்கையில் ஒரு மணமுண்டாக்க அகத்தியர் அதனை எடுக்க அது பரிமளித்த இனிமை நோக்கித் தமிழென, அதுமுதல் தமிழெனப்பட்ட பாஷையை வளர்த்தவர். 15. தாடகை, தன் கணவன் சுந்தன் அகத்தியராலி றந்தபின் அகத்தியரை வருத்த அவளை அரக்கியாகச் சபித்தவர் (இரா). 16. சிவாநுக்கிரகத்தாற் சிவபூசையின் பொருட்டுக் கமண்டலத்திற் கங்கையைப் பெற்றுத் திரும்பிவருகையில் மாயமாபுரத்தருகில் மலையுருவாயிருந்த கிரவுஞ்சன் மாயையிற்பட்டு அதினின்றுந் தெளிந்து அவனை மலையுருவாகவே இருந்து குமாரக்கடவுளின் வேலாற் பிளப்படையச் சாபம்ளித்து நீங்கிக் காசித்தலத்தைச் சேவித்தவர். (காசி~கா). 17, தேவர் வேண்டுகோளால் விநாயகமூர்த்தி, அகத்தியர் கமண்டலத்திலுள்ள சலத்தைக் காக வுருக்கொண்டு சாய்த்தோட, அகத்தியர் வினாயகரைக் கோபித்துப் பின்தொடர விநாயகர், கைக்கு அகப்படாது விலக வருந்திப் பின்னர் அருகுவா அகத்தியர் குட்ட நினைக்க, கணபதி தமது உருக்காட்டப் பிழைபொறுக்க வேண்டிக் குட்ட நினைத்ததைத் தாமே செய்து கொண்டு அவ்வகை உலகத்தவரும் செய்ய வரம்பெற்று, காவிரியிற்சிறிது கணபதிபாற் பெற்றவர். 18. திருக்குற்றால மடைந்து அவ்விடமிருந்த விஷ்ணு ஆலயத்துட்புக இவரது சிவவேடத்தைக் கண்ட வைணவர் மறுக்க, மீண்டு வைணவ வேடம் பூண்டு கோயிலுட்சென்று விஷ்ணுமூர்த்தியைச் சிவமூர்த்தியாகத் தியானித்து மூர்த்தியைத் தொட்டுச் சிவலிங்கமாக்கினவர். (திருக்குற்றால~பு). 19. கந்தமூர்த்தியை எண்ணித் தவம்புரிந்து சகலகலைகளையும் பெற்றவர். (பழனித்தல பு). 20. சூரியனிடந் தமிழைக் கற்றவர் என்றுங் கூறுவர். 21. மணிமந்தனை மனிதனாலிறக்கச் செய்தவர். 22. கொல்லாபுரத்தில் திருமகளை வணங்கி அவள் குமரவேள் உனக்கு வேண்டியவை கொடுப்பர் எனக்கூறக் கேட்டுக் களித்தவர். 23. இந்திரத் துய்ம்மனை யானையாகச் சபித்தவர். 24. கவேரன குமரியாகிய காவிரியை மணந்தவர். இவளே உலோபா முத்திரையெனக் காவிரிபுராணங் கூறும். இவளை விதர்ப்பராச புத்திரியெனப் பாரதம் கூறும். 25. பிரமதேவன், உருப்பசியின் நடனத்தைக்கண்டு தன் வீரியத்தைவிட அதிலிருந்து அகத்தியர் பிறந்தனர் என்பர். (காவிரிபுராணம்). 26. ஒரு காலத்து அகத்தியர், இந்திரன் சபைக்குச் செல்ல இந்திரன் உருப்பசியை ஈடனஞ்செய்ய எவினன். இவள் சித்திரசேநன் யாழ் அமைப்ப நடனஞ் செய்பவன் சயந்தனிடம் வைத்த காதலால் இசைபிறழ நடித்து இந்திரனையும் சவையிலுள் ளோரையுங் களிப்பித்திலள். அதனால் சயந்தனையும், உருப்பசியையும் பூமியிற் பிறச்சர் சபித்தவர். (சிலப்பதிகாரம்). 27. அங்கிராமுனி, அறிவிற்குறியை யெனக்கூறக் கேட்டுச் சத்திகிரி, சிவகிர பெற்று அறிவடைந்து குமாரக் கடவுளருலால் இலக்கண மியற்றியவர். (பழனித்தல புராணம்.) 28. தேவரெல்லாருங் கூடியாஞ்சோ இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை யுயர்ந்ததற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்கு உரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள அவரும் தென்றிசைக்கட்போதுகின்றவர், கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு பின்னர், யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபாமுத்திரையாரை அவர் கொடுப்ப நீருடன் பெற்றுப் பெயர்ந்து, துவாரவதி வந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையும், அருவாளரையும் கொண்டுவந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதிகையிலிருந்து இராவணனைக் தந்தருவத்தாற் கட்டி (வசித்து) இராக்கதர் தென்னாடடையாமற் செய்து திரணதூமாக்கினி யாராகிய தொல்காப்பியனாரை நோக்கி நீர் சென்று குமரியாரைக் கொண்டுவருக என்ன, அவரும், எம்பெருமாட்டியை எவ்வகைக் கொண்டு வருவன் என்றார்க்கு, முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளமகல நின்று கொண்டுவருக என்றார்க்கு, அவரும் அங்கனங் கொண்டுவருகையில் வையைநீர் கடுகிக் குமரியாரை யீர்த்துக்கொண்டு போயவழி, தொல்காப்பியனார், கட்டளை கடந்து சென்று ஒரு மூங்சிற்கோலை முரித்து நீட்ட அது பற்றியேறினார். அது குற்றமென்று அகத்தியனார், குமரியாரையும் தொல்காப்பியனாரையும் சுவர்க்கம் புகாப்பிரெனச் சபித்தார். யாங்கள் ஒரு குற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையால், எம்பெருமானுஞ் சுவர்க்கம் புகாதிருக்கவென அகத்தியனாரையும் சபித்தனர். அதனாலவர் கோபித்தனராதலின், இவன் செய்தநூலை அதங்கோட்டாசிரியரைக் கேளற்க என்று கூறியவர். (தொல்~பா). 29. வதுவாதிபராசன், திராவிடபூபதி, கிருதபவன, இந்த அரசர்களைப் பொருள்கேட்க அவர்களிடம் பொருளிலாதது கண்டு அவர்களையும் உடனழைத்துக் கொண்டு அசமுகிகுமானும் வாதாபியின் சகோதரனுமாகியவில்வலனிடஞ் சென்று பெருஞ்செல்வமடைந்து அம்மூன்றரசருக்கும் கொடுத்தவர். 30. புலத்தியருக்கு ஆவிர்பூவிடம் உதித்த குமரன் என்பர். சிவசன்மாவைக் காண்க. 31. இவர் வண்டுருக்கொண்டு புஷ்பங்களிலிருந்த தேனையெரித்துச் சிவபூசை செய்த தாலீங்கோய்மலை யென்னுந் தலமுண்டாயிற்று. (திருச்செங்கோட்டுப்புரார்). 32. இந்திரசாபத்தால் பூமியில் வேசையாகப் பிறந்த அரம்பையின் சாபத்தைப் பார்வையாற் போக்கியவர். (அவிநாசித் தல புராணம்). 33. மதியநந்தை யென்பவளுக்கு மானிடஜன்மம் வரச் சபித்தவர். 34. காந்திருவர் சிலர், தமது சிவபூசை வேள்விக் கிடையூறு விளைவிக்க அவர்களைச் சபித்தவர். விஷங்களுக்கஞ்சி இவரால் இருக்கு வேதத்தில் ஒரு கீதம் செய்யப்பட்டிருக்கிறது. இவர் காய்சினவழுதி காலத்து முதற்சங்கத்தில் முதல்வராயிருந்து தமிழை வளர்த்துவருகையில் மதுரை கடல்கொண்டு அழிந்தது. குமரியாற்றினருகே (சக) நாடுகளு மழிந்தன. இவர் பெயரால் ஒரு நக்ஷத்திரமாக ஆகாயத்திலிருந்து உதயத்தில் கடலலையை வற்றச்செய்யும். 35. துட்பண்ணியனுக்கு யானையாயிருந்த சாபம் போக்கியவர். துட்பண்ணியனைப் பார்க்க. 36. கிருதாசி எனும் அரம்பையை அங்காரகை எனும் அரக்கியாகச் சபித்தவர். 37. இந்திரனைச் சபிக்க அவன் பூமியில் விழுந்து பிரமகத்தியால் பீடிக்கப்பட்டு மானததடாசத்திலுள்ள தாமரை நாளத்தில் ஒளித்திருந்தனன். (தேவி~பாகவதம்). 38. காந்தன் எனும் அரசன் வேண்டுகோளால் தமது கமண்டலத்துள்ள காவிரியைப் பெருகச்செய்தவர். அவ்வரசன், பாசிராமருக்குப் பயந்து தம்மிடம் அடைக்கலம் புகுந்தகாலத்து அவனைக் காத்தவர். 39. தூங்கெயிலெறிந்த தொடித்தோட்செய்பியன் காலத்துக் காவிரிப்பூம்பட்டினத்து இந்திரன் விழாவை யெடுப்பித்தவர். (மணிமேகலை). 40. இவர் தம் மாணாக்கர்கள், திரணதூமாக்கினி அல்லது தொல்காப்பியமுனிவர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைபாடினியன், நற்றத்தன், வாமநன் முதலியவர்கள். இவர்க்குக் கும்பமுனி, குறுமுனி, கலசயோநி எனப் பல நாமங்களுண்டு, இவர் செய்தநூல்கள் அகத்தியம், (இது ஐந்திலக்கண மடங்கிய நூல்) வைத்தியநூல்கள், பெருந்திரட்டு, ஆயுள்வேத பாஷ்யம், விதிநூன் மூவகைக் காண்டம், வைத்திய சிந்தாமணி, செந்தூரம் 200, மணி 4000, சிவசாலம், சத்திசாலம், சண்முகசாலம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியரத் நாகரம், வைத்தியம் 1500, 1600, கர்மலியாபகம், கரிசில்பஸ்மம் 200, தண்டகம், பக்ஷணி, நாடி. இவர், முதல் இடைத் தமிழ்ச்சங்கங்களில் புலவராயிருந்தவ ரென்ப. அகஸ்திய சம்மிதையெனும் வைத்திய வடநூலிவராற் செய்யப்பட்டது. அகத்தியர் என்ற சப்தத்திற்குப் பொருள் விந்தமலையை யடக்தியவர் என்பது. 41. இவருக்கு இத்மவாகு, அல்லது திருடன் என ஒரு குமரன் உண்டு (பார~வந) இவரது சிஷ்யர் அக்னிவேச்யர். இவர் யாகஞ் செய்யத் தனம்வேண்டிச் சுருதாவணன், பிரத்னச்வன், திரிசதஸ் என்பவரிடஞ் சென்று செல்வமடைந்தனர். இவர் யக்ஷேப்யனைச் சபித்தனர்.

அகத்தியம்

அகத்தியராலியற்றப்பட்ட எழுத்துச் சொற்பொருள், யாப்பு, அணி முதலிய அடங்கிய இலக்கணத் தமிழ்நூல். இது, இறந்தது.

அகத்தியவடம்

இமயத்தருகிலுள்ள ஒரு தீர்த்தம். (பார~ஆதி)

அகத்தியவேளாளன்

அகத்தியர் செய்த வைத்தியநூலை விருத்தி செய்தவன்.

அகத்தியாச்சிரமம்

பஞ்சவடிக்குச் சமீபத்திலுள்ள புண்ய ஷேத்ரம். இந்த இடத்தில் லோமசேனனுடன் யுதிஷ்டிரன் சென்றான். இது நாசிக் எனும் இடத்திற்கு (24) மைல் தூரத்திலுள்ளது. (பார). AGASTIPURI 24 MILE’S TO THE SOUTH EAST OF NASIK, NOW CALLED AGASTIPURI.

அகத்துழிஞை

மாறுபாடுகெடக் கோபமிக்க உழிஞையார் எயிலினுள் நொச்சியாரைப் போரை வென்றது. (பு~வெ)

அகநானூறு

இது எட்டுத் தொகையில் ஏழாவது. பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலிய புலவர் பலரால் அகப்பொருட் பகுதியையே பொருளாகக் கொண்டு பாடப்பட்டது; இது களிற்றுயானைநிரை எனவும், மணிமிடைபுவளம் எ~ம், நித்திலக்கோவை எ~ம் பிரித்துத் தொகுக்கப்பட்டது. இது, தொகுத்தான் உருத்திரசன்மன், தொகுப்பித்தான் உக்கிரப்பெருவழுதி, இதற்கு நெடுந்தொகைஎனவும் பெயர்.

அகநில்தோமன்

பிரமனால் வசுக்களுக்கு யாகஞ் செய்விக்க நியமிக்கப்பட்ட ஒரு இருடி. (யசுர்).

அகனிஷ்டன்

புத்தன்

அகன்

வசுக்கள் எணமரில் ஒருவன். இவன் குமாரன் ஐயோதி. இவனுக்கு ஆபச்சைவன் என்றும் பெயர்.

அகப்பாட்டுறுப்புக்கள்

திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடன், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை, எனப் பன்னிரண்டு வகைத்து. (அகம்).

அகப்புறக்கைக்கிளை

காமஞ்ச்சாலா இளக்தலை மகளிடத்துக் குறிப்பறியாது சென்று சேர்ந்து அவளோடு மேன்மேலும் கூறுவது. (அகம்).

அகப்புறப் பெருத்திணைக் குரியவை

மடலேறல், விடைதழுவல், குற்றிசை, குறுங்கலி, சுரநடை, முதுபாலை, தாபதநிலை, தபுதாரநிலை, எனக் கூறினவையியற் பெயர் பொருந்தாது வருவன.

அகப்பேய்ச்சித்தர்

ஒருசித்தர். இவர் தம்மனதைப் பேயாக அலைதல் பற்றிப் பேயென உருவகப்படுத்தி அலையாது நிற்க என அறிவுகூறிப் பாடியவர். இவர் செய்த நூல் அசப்பேய்ச்சித்தர் பாடல்.

அகப்பை

இச்சொல் அகழ்ப்பையென்பதின் மரூஉ; இது, அன்னத்தைத் தோண்டும் கருவி. இது, மரத்தினாலும், தேங்காகாயின் ஓட்டினாலும் செய்யப்பட்டது.

அகப்பொருட் பெருந்திணை

அகன்றுழிக் கலங்கல், மடற்கூற்று, குறியிடையீடு, தெளிவிடை விலக்கல், வெறிகோள்வகை, விழைந்துடன் போக்கு, பூப்பியலுரைத்தல், பொய்ச்சூளுரைத்தல், தீர்ப்பிலூடல், போக்கழுங்கியல்பு, பாசறைப்புலம்பல், பருவமாறுபடுதல், வன்புறையெதிர்ந்து மொழிதல், மனைவியுந்தானும் வனமடைந்து நோற்றல், பிறவுமாம். (அகம்).

அகப்பொருள்

இது, கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்னும் எழுவகைப் பொருள்களை விரித்துக் கூறும் நூல்.

அகமருஷணன்

சூசந்தியின் குமரன்.

அகமருஷணம்

விந்தியமலைக் கருகிலுள்ள ஒரு தீர்த்தம். (2) ஒரு மந்திரம் இது, நீரில் மூழ்குவோர் கூறுவது.

அகமர்ஷன்

மதுச்சந்தன் புத்ரன். இருக்குவேதி

அகமலர்ச்சியணி

ஒன்றன் குணகுற்றங்களான் மற்றொன்றற்கு அவையுளவாதலைச் சொல்லுதலாம். இதனை உல்லாசாலங்காரம் என்பர். (குவல)

அகமுடையார்

இவர்கள், தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒரு வசைச் சாதியார், இவர்கள் இராமநாதபுரம், மதுரை முதலிய இடங்கிளில் கோவில் வேலை செய்கிறார்கள். சிலர் ஜமீன்தார்கள் வீடுகளில் வேலையாட்களு மாயிருக்கின்றனர். இவர்கள் மறவர் கள்ளர் முதலியவர்களிலிருந்து அகமுடையராய்ப் பிறகு நாகரிகத்தினால் வேளாளர் எனத் தம்மைக் கூறுகின்றனர். (தர்ஸ்டன்).

அகம்பனன்

ஒருஅரசன், இவன் சத்ருக்களுடன் யுத்தஞ் செய்கையில் இவன் குமரனாகிய அரிஇளையவன் சத்ருக்களுடன் யுத்தஞ் செய்து மரணமடைந்தான். இதனால் இவன் விசனமடைய நாரதர் இவன் விசனத்தை மிருத்யுவின் கதைகூறி மாற்றினர். (பார~து)

அகம்பன்

இவன் சுமாலியின் புத்திரனாகிய அரக்கன், கரன், தூஷணன், திரிசிரன முதலியோரை இராமமூர்த்தி வதைத்த காலத்தில் இராவணனுக்கு இறந்த செய்தி அறிவித்தவன். இராமமூர்த்தி இலங்கையை முற்றுகை செய்தகாலத்து அநுமனால் கொல்லப்பட்டவன். முற்பிறப்பில் கந்தமூர்த்தியா லிறந்த தாருகன், கரனுக்கு மந்திரி, (இரா) (ஸ்கா).

அகம்பன்மாலாதனார்

அகம்பல் எனும் ஊர்க்குத்தலைவர். இவர் மதுரை ஜில்லாவிலுள்ள அசமலையென்னும் கிராமவாசியாக இருக்கலாம். இவர் நற்றிணையில் முல்லைத்திணையைப் பாடியிருக்கின்றனர்.

அகம்யாதி

பூரு வம்சத்தவனான சம்யாதியின் குமரன். பாரி, பானுமதி; கார்த்தவீரியன் தங்கை.

அகர்க்கரன்

கத்துரு குமரன், ஒரு சர்ப்பம். (பார~ஆதி).

அகர்த்தவிருஷ்ணர்

உரோம கருஷணருக்கும் சுகருக்கும் மாணாக்கர்.

அகலிகை

(1) கௌதம முனிவர் பத்தினி முத்கலமுனிவர் குமரி. இவளைக் கணவன் கங்காதீர்த்தத்திற்கு நீங்கிய சமயங்கண்ட இந்திரன், கணவனைப் போலுருக்கொண்டு புணர்ந்து கற்புக்குலைத்தனன். முனிவர், தம் வரவறிந்து பூனையுருக்கொண்டு செல்லுமிந்திரனை நோக்கி நீ ஆயிரம் பெண்களுக்குரிய குறியும், பீஜமறுகையும் பெறுகவெனச் சபித்துப் பாரியையுங் கல்லாகச் சபித்தனர். பின் அகலிகை வேண்ட முனிவர், மனதிரங்கி இராமமூர்த்தி மிதிலைக்கு ஏகும் காலத்தில் அவரது திருவடித்துகளால் உருப்பெற, கருணை செய்தனர். இவள் பஞ்சகன்னியராகிய கற்புடைப் பெண்களில் ஒருத்தி. இவள்பாற்கடலிற்பிறந்தவள் என்பது சிவபுராணம். இவள் குமரர், சதாநந்தருஷி. (இரா). (2) இந்திரத்துய்ம்மன் எனும் மகதநாட்டரசன் தேவி. இவள் வஞ்ச இந்திரனுடன் களவுப்புணர்ச்சி செய்த தினிமித்தம் நாட்டைவிட்டுக் கணவனா லகற்றப்பட்டனள்.

அகளங்கநாட்டாழ்வார்

திருவரங்கர் சந்நிதியின் காரியங்களைப் பார்க்க இளையாழ்வாரால் நியமிக்கப்பட்டவர். உடையவர் திருவடி சம்பந்தி, உடையவரிடமிருந்து பிரதிபக்ஷ நிரசனம் செய்பவர்.

அகளங்காசாரியர்

அகளங்காஷ்டகம் செய்த பண்டிதர்.

அகவற்பா

நாற்சீர் கொண்ட அளவடிய தாய், இயற்சீர் பயின்றும், அயற்சீர் விரவியும், தன்றளை தழுவியும், பிறதளை மயங்கியும், கருவிளங்கனி, கூவிளங்கனி, யெனுமிரு சீருங்கலவாது, மூன்று முதலிய பல வடிகளான் வருவது, அது நேரிசை யாசிரியப்பா, இணைக்குற ளாசிரியப்பா, நிலமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா என (4) வகை, (யாப்பு~இ).

அகாசூரன்

இவன், பகாசுரன் சகோதரன். கஞ்சன் ஏவலால் விருந்தாவனத்திலிருந்த கிருஷ்ணபகவானைப் பாம்புருவாக விழுங்கி அவரால் கொல்லப்பட்டவன். (பாக).

அகி

பிரமன் கேசங்களிலுதித்த பாம்புகளின் வகை

அகிக்ஷேத்ரம்

உத்தரபாஞ்சாலத்து ராஜதானி.

அகிச்சத்திரம்

உத்தர பாஞ்சாலத்தில் உள்ள தேசம். துரோணாசாரியரால் கொள்ளப்பட்டது. RAMNAGAR 20 MILES WEST OF BERELI. IT WAS THE CAPITAL OF NORTH PANCHALA IN ROHILKHAND.

அகிதமிஷ்டிரன்

ஒரு அசுரன், விதூமனைக் காண்க.

அகிநியோகம்

ஞாயிற்றுக்கிழமையில் துவாதசியும், திங்களில் சஷ்டியும், செவ்வாயில் சத்தமியும், வெள்ளியில் தசமியும், சனியில் ஏகாதசியும் வருவதாம்.

அகிநிழகன்

சூரபன்மன் குமரன். இவனுக்கு இரண்டு முகம். வீரவாகுவுடன் பிறந்தவரைக்கொன்று பிறகு வீரவாகு தேவருடன் யுத்தஞ்செய்து ஆற்றாது தேரில் விழுந்து தன் குலதேவதையாகிய காளியையேவி அவள் பின்னிடைந்த பின் வீரவாகு தேவரால் இறந்த வீரன். தாய் பதுமகோமளை. (ஸ்கா~பு)

அகிருத்திரமவிஷம்

தாவர சங்கமங்களா லுண்டாம் விஷம். இதில் தாவரவிஷம் விருக்ஷம், பூண்டு, செடி, கொடி, புல், கிழங்கு, வேர், பட்டை, பால், பிசின், இலை, புஷ்பம், காய், கனி, பாஷாணம் முதலியவற்றி லுண்டாம் விஷம்

அகிர்ப்புத்தநீயன்

சுதரிசனம் வேண்டித் தவஞ்செய்து சுதரிசன தீர்த்தம் கண்டவன்.

அகிர்ப்புத்தியன்

பூதனுக்குச் சுரபியிடமுதித்த குமரன். ஏகாதச உருத்திரருள் ஒருவன்.

அகிற்கூட்டு

சந்தனம், கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம்.

அகிற்புத்தி

திருவேங்கடமலையில் தவஞ்செய்து சித்திபெற்ற இருடி, (திருவேங்கடதல~பு).

அகிலதரன்

பத்திராதன் குமரன், இவன் குமரன் பிரகத்ரதன்.

அகிலேசன்

காசித் தலத்திலெழுந்தருளிய சிவமூர்த்திக்குப் பெயர்.

அகில்

அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் முதலியன சேர்ந்தது.

அகீநரன்

(சந்) உதயன்குமரன். இவன் குமரன் தண்டபாணி.

அகீநிமாதா

பாஷ்களருக்குச் சீஷர்.

அகீநிவான்

சூ. சந்தனன் குமரன்.

அகுதை

மதுரையில் இருந்த ஒரு வள்ளல். ஏற்பார்க்கு யானை கொடுப்பவன். போர் வல்லன். இவனைப் புகழ்ந்த புலவர் கபிலர். (புற~நா).

அகுர்தவருணன்

பிரம்மரிஷி இவன் பரசுராமனுக் குநண்பன், இவனிடம் யுதிஷ்டிரன், அன்புற்றிருந்தனன். (பார) வனபர்.

அகுர்ஷன்

கத்துரு தநயன்.

அகூபான்

ஒருஆமை, இந்திரத்துய்மனம் எனும் தடாகத்திருந்தது.

அகோபிலமடம்

சடகோபாசாரியரைக் காண்க. இதற்கு அழகிய சிங்கர் மடமெனவும் பெயர்.

அகோரசிவாசாரியர்

ஆதிசைவர். பதினெண்பத்ததி செய்தவர்களில் ஒருவர், இவர் ஸ்ரீசிதம்பரத்தில் வசித்தவர் என்பர். இவர் செய்த பத்ததி அகோரபத்ததி எனப்படும். இவர் பத்ததியே சித்தாந்த சைவர்களால் பரதகண்டத்தில் கையாளப்படுகிறது.

அகோரமூர்த்தி

இவர் வெண்மைகலர்த கருநிறத்தராய், காதிற்குண்டலம், மீசை, சிசை, கோரப்பல், பயங்கரமுகம், கபாலமாலை, சர்ப்பபூஷணம், கட்டுவாங்கம், கபாலம், கேடயம், பாசம் முதலிய இடக்கரங்களிலும்; சூலம், கோடரி, கத்தி, தடி,வலக்கரங்களிலும் பெற்று எட்டுத் தோள்களையுடையராய் இருப்பர். (அகோரபத்)

அகோரம்

சதாசிவ மூர்த்தியின் திருமுகங்களுள் ஒன்று. நீலகற்பத்தில் பிரமன் நினைக்க அவன்முன் தோன்றி அருள்புரிந்த சிவாவசரம். இவர் பிரமனுக்கு நான்கு இருடிகளைச் சிருட்டித்துக் காட்டினவர்.

அகோராஸ்திரழர்த்தி

சத்ததந்து என்னும் அசுரனைக் கொலை செய்ய எழுந்த சிவாவசரம். (சிவ~பரா) (2) சிவாஸ்திரம்.

அக்கன்

இராவணன் குமரன்.

அக்கபாதர்

நியாயநூல் இயற்றிய கௌதமருக்கு ஒரு பெயர்

அக்கமாதேவி

உடுதடையெனும் கிராமத்தில் நின்மலன் என்பவனுக்கும், சுமதி யென்பவளுக்கும் பிறந்து மாதேவியெனப் பெயரடைந்து அழகிற் சிறந்தவளாய் இருந்தனன். இவளை விச்சலன் என்னும் சமண அரசன் மணக்கவிருந்தது அறிந்து அவன் தன்னை வலியத்தொடாதிருக்கச் சபதம் பெற்று அவனை வீரசைவனாக என்று கூற அவன் மறுத்ததால் துறவு பூண்டு ஞானாசாரியரைத் தேடித்திரிந்து அவ்லமரைக் கண்டு ஞானோபதேசம் பெற்றுக் கதலிவனத்தில் நிஷ்டைகூடி யிருந்தவள். (பிரபுலிங்கலீலை).

அக்கமாலை

அருந்ததி.

அக்கரச்சுதகம்

இது சித்திரக்கவி வகையுள் ஒன்று. இது ஒரு பொருள் பயப்பதொரு சொற்கூறி அதனில் ஒவ்வொரு எழுத்தாக நீக்க, வெவ்வேறு பொருள்தரப் பாடுவது, மாத்திரைச் சுதகமும் உண்டு அது எழுத்தின் மாத்திரை சுருங்கல். (தண்டி)

அக்காரக்கனிநச்சுமனர்

கடைச்சங்கப் புலவர் நாற்பத் தொன்பதின்மருள் ஒருவர் உக்கிரப்பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டவர். (திருவள்ளுவ மாலை.)

அக்கி

அக்கினி.

அக்கிரகேசன்

காசிபர் புத்திரர்களாகிய அசுரர்களில் தலைவன்.

அக்கிரசன்மன்

பிரமன்.

அக்கிரேசுரன்

ஒருஅசுரன். இவன், 3000 அண்டங்களுக்கு அரசனாய், 3000 விஷ்ணுக்கள், 3000 பிரமர், 3000 இந்திரர் முதலியோர் தனக்கு ஏவல்செய்ய ஆண்டுகொண்டிருக்கையில் தேவர் வேண்டுகோளால் சிவமூர்த்தி பூமனுக்குப் புத்திரராய்க் கந்தமூர்த்தி தமக்குத் தம்பியாக இராசசேகரர் எனும் பெயருடன் வந்து இவனைக் கொலை செய்தனர். (சிவபராக்கிரமம்.)

அக்குசூரர்

1.யது வம்சத்தவர், சுவபல்கன் குமரர். தாய் காந்தினி, கம்சன் மந்திரி, இவர் தந்தைக்குச் சுவபவர் என்றும் பெயர்கூறுவர். இவர், கம்சன் வேண்டுகோளால் நந்தகோபரிடம் சென்று தனூர்யாகச் செய்தி கூறிப் பலராமகிருஷ்ணரை அழைத்துக்கொண்டு யமுனாநதிக்கரை யடைந்து தாம் தனித்துச் சலத்தில் மூழ்கி ஸ்நானஞ் செய்தனர். இவர் பலராம கிருஷ்ணரிடத்து அந்தரங்க பக்தியுடையவராகையால் பலராமகிருஷ்ணர்கள் இருவரும் இவருக்குச் சலத்திற்குள் இரதத்துடன் தரிசனம்தரத் திடுக்கிட்டு வெளியில் வந்து அவர்களைக் கண்டுகளித்து மீண்டும் ஸ்நானம் செய்து சேஷசயனத்துடன் பரமபத நாதனாகிய விஷ்ணுமூர்த்தியைச் சலத்திற் கண்டு தரிசித்து ராமகிருஷ்ணர்களை அழைத்துச்சென்று கம்சனுக்கு வரவு கூறிய பரமச்சிரேட்டர். சததன்வாவிடத்தில் இருந்த சியமந்த கமணியை அவனிடவிருந்து கவரச்செய்து அதைக் கண்ணபிரான் அறியாதிருக்க, கங்காயாத்திரை செய்து மீண்டும் கண்ணனால் வெளியிடப்பட்டவர். இவரது பாரி, சித்திரரதை குமரர் தேவவா, உபதேவன். (பாக). 2. சுவர்கன் குமரன். 3. ஒருஇருடி, திருக்காஞ்சியில் வாதராசர் அருள் பெற்றவர். 4. இடையெழு வள்ளல்களில் ஒருவர்.

அக்குரோதன்

(சந்) குருவம்சத்தவனான அயுதானன் குமரன். இவன் தாய்பாசை; இவன் தேவிகண்டு, புத்ரன், தேவாதிதி (பாரா~ஆதி)

அக்திகோத்ரமுனி

துரோணனுக்கும், பாஞ்சாலனாகிய துருபதனுக்கும், வில்லாசிரியர், இவருக்கு அக்நிவேச்யர் என்றும் பெயர். பரத்துவாஜருடன் பிறந்தவர்; அகத்தியர் மாணாக்கர். (பார~ஆதி)

அக்திதீர்த்தம்

யமுனாநதிக்குத் தக்ஷணத்தில் உள்ள ஒரு தீர்த்தம். (பாரதம்~வனபர்வம்)

அக்நி

1. விச்வாநரன் புத்திரன், தவத்தால் திக்குப் பாலகனானவன், பிரசாபதிக்குச் சாண்டிலியிடம் பிறந்தவன். இவன். பாரி சுவாகாதேவி, இவனுக்கு இரண்டு முகம், நீண்ட எழுநாக்குகள், நான்கு கொம்புகள், முன்று பாதம். இவன் பட்டணம் தென்கிழக்கில் உள்ள தேஜோவதி, வாகனம் ஆடு, இவனுக்குக் குமரன் என்னும் பெயருள்ள ஒரு குமரன் உண்டு. 2. அமிர்தம் சுமக்க அஞ்சித் தீர்த்தத்தில் ஒளித்த காலத்துத் தேவர்கள் தேடினர். அப்போது மீன்கள் காட்டியபடியால் அக்நி அம்மீன்களைத் தூண்டிலில் அகப்படச் சபித்துத் தவஞ்செய்து அமிர்தம் சுமக்க வலிபெற்றவன். இம்மீன்களுக்குத் தேவர் இமையாவிழி அளித்தனர். 3. இவன் தந்தையாகிய விசவாநரன் தவஞ்செய்யச், சிவமூர்த்தி தரிசனந்தந்து உனக்கு என்ன வரம் வேண்டுமென்ன, உம்மைப்போல் புத்திரன் வேண்டுமென்றனன். அதனால் அக்நி, இவனிடம் பிறந்து வளருகையில் நாரதர் தந்தையிடம் வந்து உன் குமரன் பன்னிரண்டாம் வயதில் இடிவிழுந்து இறப்பன் என்றனர். கேட்ட தந்தை, விசனமடைந்து குமானுக்கு அறிவிக்க, அக்நி சிவமூர்த்தியை எண்ணித் தவஞ்செய்தனன். சிவமூர்த்தி இவனது நிலையறிய இந்திரனைப் போல் தரிசனம் தந்து என்ன வேண்டுமென்ன, உன்னிடம் யாதும் விரும்பேன் எனக், கேட்டுக் கோபித்தவர் போல், வச்சிரத்தை நோக்கினர். அதுகண்டு குமரனாகிய அக்நி, பயப்படத் தமது உருக்காட்டி உனக்கு, யமபுரிக்கும் தெய்வ உலகிற்கும் நடுவிலிருக்கும் பதமளித்தோமென்று முதுகைத் தடவி மறைந்தனர். (காசிகாண்டம்). 4. இவன் தக்ஷயாகத்தில் வீரபத்திர மூர்த்தியால் எழு நாவும், கையும் அறுப்புண்டு மீண்டும் பெற்றான். சுவாகாவைக் காண்க. 5. சுவேதகியாகத்தில் பன்னிரண்டு வருஷம் நெய்யுண்டதால் மந்த நோய்கொண்டு அருச்சுநனிடம் அது தீர்த்துக்கொள்ளக் காண்டவ வனத்தைத் தகித்துண்டவன் (பாரதம்) 6. காண்டவ வனத்தில் இருந்த தக்ஷகன் குமரனாகிய அசுவசேநனை விட்டுவிட்டபடியால் கண்ணனால் நிலையில்லாதவனாகச் சபிக்கப்பட்டவன், 7. நீலனுக்கு உதவி புரிந்தவன். 8. ஒருமுறை சத்த இருடிகள் யாகஞ்செய்து ஒரு கருமவசத்தால் தங்கள் மனைவியரை அந்த யாகாக்கி அவியாது வளர்க்கச்செய்து நீங்க, அக்நி அந்த எழுவர் பத்தினிகளையுங் கண்டு மயல் கொண்டு வரும்தினன். இதையறிந்த மனைவியாகிய சுவாகாதேவி, அருந்ததி ஒழிந்த அறுவர் போலத் தனித்தனி உருக்கொண்டு ஆசையைத் தணிக்கத் தணிந்தவன், 9. அவுரவமகருக்ஷியின் மனைவியின் தொடையில் நெடுநாள் மறைந்திருந்தவன். 10. வசிட்டரால் பூமியில் சிகண்டி வயிற்றில் பாவகன், பவமானன், சுசி என மூவருவாய்ப் பிறந்தவன். 11. தன் அம்சத்தால் சூர்ய வயசத்தில் உபகுபதனெனப் பிறர்தவன். 12. சிபிச்சக்கரவர்த்தியின் சத்தியததை யறியப் புறாவாகச் சென்றவன். 13. ஒரு காலத்து நிகும்பனுடன் யுத்தஞ் செய்து தோற்றவன். 14. இராம ராவணயுத்தத்தில் நீலன் என்னும் வாநரவுருக் கொண்டவன். (இரா). 15. இலங்கையில் சிறையிருந்த சீதை, தன் கற்பினை உலகறியும்படி தீயில்குளிக்க, அவளது கற்பின் தீயால் சுருக்குண்டு சீதாபிராட்டியைத் தாங்கி இராமமூர்த்தியிடம் வந்து முறையிட்டு உண்மையாகிய பிராட்டியைக் கொடுத்தவன். (இரா). 16. இவன், சுதரிசனை என்பவளிடம் ஆசை கொண்டிருக்க, இவள் தந்தை தனக்கு அவளைக் கொடுக்காததனால் தன் கலைகளைச் சுருக்கிப் பூமியில் யாகாதி காரியங்களை அடக்கினன். அவை நடவாமை கண்ட அப்பெண்ணின் தந்தை, வேதியர் உருக்கொண்ட அக்நிக்கு அவளை மணஞ் செய்வித்தனன்17. அக்நி, தேவர்களிடத்துக் கோபமாய்க் கபிலைப்பசவின் வயிற்றில் ஒளிக்க, அப்பசுவைத் தேவர் வேண்டி அக்நியின் நிலையறிந்து அழைத்துச் சென்று பசுவினைப் புண்ணிய தேகியாக ஆசீர்வதித்தனர். (காஞ்சி~புரா). 18. அக்கி, சிவவீரியத்தைத் தாங்கமுடியாது பூமியில் விட, அது பொன்னாயிற்று. அதனை, வேதியர் தானப் பொருளாகக் கொண்டனர். 19. மருத்து யாகத்தில் இந்திர தூதனாய்ச்சென்று வியாழ்பகவானைக் குருவாகக் கொள்ளக் கூறினவன். 20. உதங்கர், குண்டலமிழந்து அதைத் தேடி நாகலோகஞ் சென்று வழியறியாது தியங்கியபோது, குதிரை உருக்கொண்டு வந்து காதில் ஊதப்பெற்றவன். (பாரதம்.) 21. நீலனுக்கு அருச்சுநன் பெருமைகளைக் கூறியவன். (கலோற்கசன், சகாதேவன் இருவரும் நீலனுடன் போர்செய்ய வந்தகாலத்துச் சமாதானஞ் செய்வித்தவன். (பாரதம்). 22. கலிபிறந்தபின் பாண்டவர், தங்கள் நாடுகளை விட்டுத் தவசிகளாய்ச் செல்லுகையில் அருச்சுனன் தன் காண்டீவம் கொண்டு செல்வதறிந்து அவன் முன்தோன்றிக் காண்டீவத்தினை வாங்கி ஒடித்துக் கடலில் எறிந்தவன். (பாரதம்) 23. பரதனும், அவன்தாயும், என்னுடன் நண்புபாராட்ட வரமருள் என, இராமருக்கு அவ்வகை அளித்தவன். (இரா). 24. தேவர் வேண்டுகோளால் குமாரக்கடவுள் தேரில் கோழிக்கொடியானவன். (கந்த). 25. சிவபிரான் முகத்திற் பிறந்த தீப்பொறிகளைத் தாங்கிச்சென்று கங்கையில் விட்டவன். (கந்த). 26. சந்தனு அரசாக்ஷியில், விச்வாமித்திரர் வேள்வியில், தனக்கு நாயூன் அவிகொடுத்ததால் கோபித்து மழையிலாக்குறை யென்று அறிந்து மூங்கிலில் ஒளித்தனன். தேவர்கள், எவ்விடத்தும் தேடிக்காணாது ஒருயானை கூறக்கேட்டு உணர்ந்தனர். அக்நி, அந்த யானையைக் கொம்பிழக்கச் சபித்து, அவ்விடம் விட்டு நீங்கி, ஒரு அரசமரத்தில் மறையப் பிரமன் ஒரு மரத்திலிருந்த கிளிப்பிள்ளை சொன்னதைக் கேட்டு அரசமரத்திடம் செல்ல அக்கிகிளிப்பிள்ளைக்கு வாக்கொழியச்சபித்து, நீங்கித் தீர்த்தத்தில் ஒளிந்தனன். அவ்விடத்தும், ஒருதவளை, பிரமனுக்கு அக்கியின் இருத்தலைச் சொல்ல அக்நி, அதற்கு நா ஒழியச் சபித்து, வெளிவந்து இந்திரன் மழையிலாது செய்த கொடுமையைப் பிரமனுக்குக் கூறி, அவனால் மழை பெய்வித்து முன் சபித்தவைகளுக்கும் அவைபெற அநுக்கிரகம் செய்தவன், 27. சிவமூர்த்தி பார்வதி தேவியாருடன் ஏகாந்தத்தில் இருக்கையில் அக்நி, தேவர்களின் ஏவலால் காலமறியாது புறாவுருக் கொண்டு சென்றனன். இதையறிந்த பார்வதியார், அக்நியைப் புறாவாக இருந்து கல் தின்று சகோதரத்தைப் புணரச் சாபம் தரப் பெற்றுச் சிவவீர்யம் தாங்கிச் சரவணத்தில் விட்டுச் சாபம் நீங்கினவன். (பூவாளூர்ப்புராணம்). 28. பிருகுவால் அசுத்தம் புசிக்கச் சாபமேற்றுப், பிரமனால் அவ்வகை புசித்தும் தூய்மையுடனிருக்க வரம் பெற்றவன் (பார~சா). 29. விருத்திரனது பிரமகத்திக்கு அஞ்சி ஒளித்த இந்திரனுக்கு ஐராணி நகுடனால் விரும்பப்பட்டமை யறிவித்து இந்திரனால் வேள்வியில் தன்னுடன் அவிபெற வரம்பெற்றவன். (பூவாளூர்ப்புராணம்). 30. சீதை, அநுமனைத் தகிக்காதிருக்க வேண்ட அவ்வகை புரிந்தவன். (இரா). 31. மகருஷிகள், இவ்வக்நிச் சுவாலையினைச் சூர்ய சந்திராதித்தரிடத்துச் சோதியாகவும், மேகத்து மின்னலாசவும், பூமியில் தீயாகவும், கடலில் வடவையாகவும், ஆன்மாக்களிடத்தில், ஜடராக்தியாகவும், இருக்குமென்பர். இவ்வக்நி மண்டலவாசிகள் அநலர் முதலிய நாற்பத்தொன்பதின்மர். அவருள் தலைமை பெற்றான் அபிமானாக்னியெனப் படுவான். இவன் குமரர் பாவகன், சுசி, பவமாநன், இம்மூவரும் (49) குமரர்களைப் பெற்றனர். (வேதப் பொருள் விளக்கம்) 32. இவனுக்கு இரண்டு சகோதரர் இருந்தனர். அவர்கள், தேவர்களின் அவிசுமந்து மாய்ந்தனர் என்பது (பாடலவன புராணம்). 33. இவன் சகல பக்ஷகனானது சீதை கொடுத்த சாபம். (சிவமரா~புரா). 34. இவன், சுவாகாதேவியை மணந்து அவளுடன் கூடினன். சுவாகாதேவி, பன்னிரண்டு தேவவருஷம் கருத்தாங்கி, தஷ்ணாக்னி, கார்ஹபத்யம், ஆகவனிய முதலிய குமாரரைப் பெற்றாள். (பிரம்மகைவர்த்தம்) 35. பிரஜாபதியின் கோபத்திற் பிறந்தவன். தேவி தக்ஷப்ரஜாபதியின் குமரி. குமரன், ஸ்கந்தன். (பாரதம்~சாந்) 36. முதலில் பிரமன் முகத்திற் தோன்றியது. இது, ஒளபாஸனம், ஆவஸத்யம், ஸப்யம், பசனாக்னி என்று வகுக்கப்படுகிறது.த்விஜன், தன் வீட்டிலுள்ள எந்த மூலாக்னியில் ஹோமம் செய்கிறானோ அந்த ஆவஸத்யம் எனும் அக்னியைப் பசனாக்னி யென்பர். அவைகளுள் ஸப்யையடைந்த அக்னியை ஸப்யம் என்பர். கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி, ஆகவனீயம் தனித்தனி காண்க. ஆலஸத்யம் பிரஜாபதியாகிறது. சப்யம் சுப்ரமண்யன் (பார~அச்வ) 37. இஷ்வாகு வம்சத்துத் துரியோதனன் புத்திரியை மணந்தவன். (பாரதம்~அநு) 2. பதினான்காம் மன்வந்தரத்து இருடி. 3. வசுக்களில் ஒருவன். தருமனுக்கு வசுவிடம் உதித்தகுமரன். பாரி வசோர்த்தாரை, அல்லது கிர்த்திகை.

அக்நி

(5) இராகம், கோபம், காமம், சடம்,

அக்நிகர்பை

பூமிதேவி. (தீபனம்).

அக்நிகேசர்

கௌதமரிடம் சிவார்ச்சனா விசேடம் கேட்டுணர்ந்த முனிவர் (சிவரஹ)

அக்நிகேது

ஒரு இராவண சேநாபதி.

அக்நிகோத்ரபட்டர்

ஒரு வடநூற் புலவர்.

அக்நிகோத்ரஹவணி

நாள்தோறும் ஓமம் செய்பவன், காலை மாலை வேள்வித்தீக் காரியத்தில் ஓமம் செய்கிற பால் முதலிய ஹவிதிரவியங்களைச் சேகரித்து வைக்கும்படி திருத்தப்பட்ட மரபாத்திரம். ஓமம் செய்த பின்பு இப்பாத்திரத்தை நக்கித்தருப்பைச் சலத்தால் சுத்தி செய்வது வழக்கம். பராச~மா

அக்நிசருமன்

நருமதாநதிதீரத்து இருந்த விஷ்ணுசருமனுக்கு, அக்நிசருமன், சோமசருமன் என இருவர் குமரர் இருந்தனர். அவர்களுள் அக்நிசருமன், காசியடைந்து தவம்புரிந்து அஷ்டசித்தி பெற்று முத்தியடைந்தனன். சோமசருமன், அவனை மதியாது சித்திபெற்றுத் தெய்வநிந்தை கூறி நன்மையைத் தீமையாகவும் தீமையை நன்மையாகவும் மாற்றியுழன்று, மரித்து, மறுபிறப்பில் மிலேச்சனாகி இறந்து நரகவேதனை படுகையில் காசியின் நினைவுவர மீண்டும் வேதியனாய்ப் பிறந்து கங்கையாடி முத்தி பெற்றவன். (காசிரகசியம்)

அக்நிசுவத்தர்

தேவர்களுக்குப் பிதுரர்.

அக்நிசுவார்தர்

பிதுர்க்கணங்களைச் சேர்ந்தவர். சசியப்புத்திரர்கள். (ஹரிவம்சம்)

அக்நிசூலி

ஒரு இருடி, விருஷத்தருவனைக் காண்க.

அக்நிதாரை

கௌதமருடைய ஆச்ரமத்துக்கு அருகிலுள்ள ஒரு தீர்த்தம். (பாரதம்)

அக்நிதுருவன்

பிரியவிரதன் குமரன். தாய் சுகன்னி, மனைவி பூர்வசித்தி. இவன் சம்புத்தீவினையாண்டவன். இவனுக்கு ஒன்பது குமரர். அக்குமரராவார்; நாபி, கிம்புருஷன், அரி, இளாவிருதன், ரம்யன், இரண்யவந்தன், குரு, பத்ராச்சுவன், கேதுமாலி. இவர்களுக்குத் தன் இராச்சியத்தைப் பகுத்துக் கொடுத்தனன். இவர்களுள் நாபி யென்பவனுக்குப் பரத கண்டத்தையும், கிம்புருடனுக்கு ஏமகூடத்திற்குத் தெற்கிலுள்ள இடத்தினையும், அரி என்பவனுக்கு நீடதத்தையும், இளாவிருதனுக்கு இளாவிருதகண்டத்தையும், ரம்யனுக்கு இளாவிருதத்திற்கும் நீலாசலத்திற்கும் நடுவிடத்தையும், இரண்யவந்தனுக்குச் சுவேதகண்டத்தையும், குருவிற்குச் சிருங்கவந்தத்தால் சுற்றப்பட்ட இடத்தையும், பத்திராசுவனுக்கு மேருவிற்குக் கிழக்கில் இருக்கும் இடத்தையும், கேதுமாலிக்கு மேற்கிலிருக்கும் இடத்தையும் கொடுத்தனன். இவையே நவகண்டமாம்

அக்நிதேச்யன்

இவன் துரோணாசாரியனுக்கு வில்வாசிரியன். (பாரதம்)

அக்நிநாள்

நக்ஷத்திரம் காண்க.

அக்நிபர்வதம்

(VOLCANNES) இது, சிகரத்தில் ஒரு பெரிய, துவாரத்தையுடைய மலை. அநேக நூற்றாண்டுகளுக்கு முன் இவ்வுலகம் தீக்கோளமாக இருந்து பின் இவ்வாறு குளிர்ந்து பூமியாயிற்றென்பர். ஆதலால், இந்தப் பூமியினடியில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும்நெருப்பிருக்கிறது. அந்நெருப்பு, இந்தமலையிலிருக்கும் துவாரத்தின் வழியாகச் சிலகாலங்களில் புகை, அக்னிசுவாலை, கற்கள், உருகியபாறை இவற்றை மும்முரமாய் ஆகாயத்தில் அதிக உயரமாய்ச் செல்லும்படி கக்கும். கரியசேறு போலும் உருகிய கல்லின் குழம்பு, ஆறுபோல் பெருகும். பலநாட்கள் கொதிப்பு அடங்காது. படிப்படியாக ஆறும். இதற்குஎரிமலையெனவும் பெயர்.

அக்நிபிரபன்

பிருகுகுலத்தில் உதித்தவன். இவனை ஒரு நாய், சிறுத்தை முதலியவைகளுக்கஞ்சிச் சரணடைய இதை முதலில் சிறுத்தையாகவும் பின் புலியாகவும், யானையாகவும், சிங்கமாகவும், சரபமாகவும் செய்வித்தான். பின் அந்தநாய், மீண்டும் நம்மை ஒரு கால் இவன் நாயாக்குவான் என்று முனிவனைக் கொல்ல எண்ணிற்று. இதன் எண்ணத்தையறிந்த முனிவன், பழமைபோல் இதனை நாயாக்கினன். (பார~சாந்தி)

அக்நிபுராணம்

ஆக்னேயபுராணங் காண்க.

அக்நிமான்

பிராயச்சித்த அக்னி விசேஷம்.

அக்நிமித்ரன்

மகததேசத்து அரசனாகிய புஷ்பமித்ரன் குமரன். 2. சுங்கன் குமரன். இவன் குமரன் சுசியேஷ்டன்.

அக்நிவர்ணன்

இவன், இராமர் சந்ததியில் இருபத்தாறாவது அரசன். இவன் தந்தை சுதரிசநன்.

அக்நிவேசன்

இக்ஷவாகுவின் சகோதரனும், நரிஷ்யந்தன் வம்சத்தவனு மாகிய தேவதத்தன் குமரன் இவன் கானீனன், சாதுகர்ணன் எனப்பட்ட இருடியாயினன். இவன் வம்சத்தில் அக்நிவேச்ய பிராமணர் பிறந்தனர்.

அக்நிவைச்யாயனம்

அக்நிவேசன் குலம். இவன் குலத்தவர் வேதியராயினர்.

அக்நிஷோமர்

வைசுவ தேவபலி கொள்ளுந் தேவதைகள்.

அக்நிஷ்டோமம்

ஒரு யாகவிசேஷம். இது வசந்தகாலத்தில் ஐந்து நாட்களில் செய்து முடிப்பது.

அக்நிஹோத்ரம்

யாகங்களில், ஹோ என்பது விஷாதம் எனப் பொருள்படும், தரம், காப்பது, துக்கத்தைக் காப்பது என்பது. (பார~அச்)

அக்நீசயனம்

இது, சாந்தியக்ஞம். இதுதபன் என்னும் அக்நி புத்ரர் பதினெழுவரால் கவரப்பட்ட யாகபலசாந்தியின் பொருட்டுச் செய்யப்படுவது.

அக்நீதரன்

அக்நியைப் பிரகாசிக்கச் செய்பவன்.

அக்நீத்துயோதன்

கிருஷ்ணமூர்த்தியிடம் விவாகத்தின் பொருட்டு உருக்குமணி தேவியால் அனுப்பப்பட்ட தூதன்.

அக்நீவேச்யர்

அக்நிகோத்ர முனியைக் காண்க.

அக்நீஷ்டோமன்

சக்ஷர்மனுவின் குமரன்.

அக்ரஹணி

அக்னிவிசேஷம்.

அக்ரஹாயி

திருதராஷ்டான் புத்திரன்.

அக்வேர்சீசஸ்

பௌராணிகராகிய சூதருஷியின் மாணாக்கர்.

அக்ஷத்திரயம்

விசாலாக்ஷி, காமாஷி, மீனாக்க்ஷி.

அக்ஷத்ரிதியை

ஒரு விரதம். இது சித்திரைமீ சுக்கில பக்ஷத்திரிதியை முதல் வைகாசிய திருதியை வரையில் பார்வதி பிராட்டியை ஆவாகித்துப் பூசிப்பது.

அக்ஷன்

அக்ஷய குமாரனுக்கு ஒரு பெயர். இவனுக்கு அக்ஷயன் என்றும் பெயர். அக்ஷஹிருதயம் த்யூதசாஸ்திரம், ருதுபர்ணகளசம் வாதத்தில் பெற்றது. (பாரதம் வன~பர்.)

அக்ஷபாசர்

கௌதமர், பாதத்தில் கண்னுள்ளவர்.

அக்ஷபாதமதம்

இது பாதத்தில் கண்ணுடைய கௌதமமுனிவரால் கற்பிக்கப்பட்ட மதம். ஓம்மதசித்தாந்தம். ஆத்மா சரீரேந்திரியாதிகளுக்குப் பின்னன் எனவும், உடல்கள் தோறும் ஆன்மா வேறு வேறு, (எ~ம்.) ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு மற்றொரு சரீரத்திற்குப் பாய்வன், (எ~ம்.) பரமாதமா ஒருவனே, (எ~ம்.) தன்னைத்தான் அறிதலே சுகம், (எ~ம்.) கூறும். இம்மதத்தவருக்குப் பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம், சப்தம் எனும் நான்கும் பிரமாணங்கள். பிரமேயங்கள் (12) ஆத்மா, சரீரம், இந்திரியம், அர்த்தம், புத்தி, மனம், பிரவிருத்தி, தோஷம், பிரேத்யம், பாவம், பலதுக்கம், அபவர்க்கம் என்பனவாம். ஆக பதார்த்தங்கள் (12) ஆதலால் பதார்த்த தத்வஞானமே மோக்ஷத்திற்கு முக்கிய சாதனம் என்பர்.

அக்ஷமாலை

வசஷ்டரால் விவாகஞ் செய்து கொள்ளப்பட்ட தாழ்ந்த ஜாதிப் பெண் 2. வசிஷ்ட பத்னி. (அருந்ததி) பாசதம் (ஆதி~பர்.)

அக்ஷய திருதியை

இது வைமாசி மாத சுக்லபக்ஷத்தில் அநுஷ்டிக்கும் விரதம். இந்நாளில் பிதுர் தர்ப்பணாதிகள் முதலிய செய்து விரதமிருத்தல் வேண்டும். இது கிருதயுகாதி, சிவ, விஷ்ணு பூசை செய்தல் வேண்டும்.

அக்ஷய பாத்திரம்

சூரியனிடமிருந்து தர்மன் பெற்ற வற்றாத அன்னம் அளிக்கும் பாத்திரம்.

அக்ஷயகுமாரன்

(அஷன்) இராவணன் குமாரர்களிலொருவன். அதுமனாற் கொல்லப்பட்டவன்.

அக்ஷயதிரிதியா விரதம்

இதை வைசாகசுத்ததிரிதியையில் ஆரம்பிக்கவேண்டும். இதை ஆசரித்தவர்கள் ராஜசூரிய பலத்துடன் புண்ணியலோசத்தை அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

அக்ஷயதேவர்

ஒரு சிவனடியவர்.

அக்ஷயநவமி விரதம்

இது கார்த்திகை மாதம் சுக்கிலபக்ஷத்தில் நவமி திதியில் அநுஷ்டிப்பது. இது துவாபர யுகாதி இந்நாளில் கூச்மாண்டன் என்னும் அசுரன் விஷ்ணுமூர்த்தியால் கொல்லப் பட்டான். இத்தின முதல் (நாள் துளசிதளத்தைக் கைக்கொண்டு விரத மிருக்கின் கன்னியாதான பலத்தையடைவர். இத்தினத்தில் துளசியை விஷ்ணுவிற்கு விவாஹநடத்தில் பெரும்புண்ணிய மடைவர்.

அக்ஷயவடம்

காசிக்கருகில் கௌதமபுத்தர் நிஷ்டைகூடியிருந்த ஆலமரம்,

அக்ஷராரம்பம்

அக்ஷராரம்பம் பண்ணுமிடத்து உத்தராயணத்து மாசிமாதமொழிய (4) வயது சென்று (5) வயதிலே பூருவ பக்கத்துப் பகற்காலத்திலே பஞ்சாங்க சுத்தியுண்டாசத் திருவாதிரை, திருவோணம், இரேவதி, அனுஷம், புநர்பூசம், அத்தம், சித்திரை, சோதி, அசுவதி இங்நாட்களிலே ஸ்திரராசியுதயமாக 7, 8, இவ்விடங்கள் சுத்திபெற அக்ஷராரம்பம் பண்ணுவது. சிலர் (4)ம் இடஞ்சுத்தியாக வேண்டுமென்பர், அக்ஷராரம்பத்துக்குத் திருவாதிரை, திருவோணம், அநுஷம், புநர்பூசம், பூசம், அவிட்டம், அத்தம், சோதி, மிருகசீரிஷம், அசுவதி, சித்திரை, சதயம் இவை உத்தமம். இரேவதி, உரோகிணி, உத்திரத்திரயம் இவை மத்திமம். ஸ்திரராசி யுதயமும், பக்கங்களில் திரயோதசி, சத்தமி இவையொழிந்த சுபதிதிகளும் நன்றாம் (விதானமாலை.)

அக்ஷரேகைகள்

நிரஷரேகைக்கு வடக்கிலுந் தெற்கிலும் துருவங்கள் வரையிலும், ஒரு டிகிரி தூரத்திற்கு ஒன்று வீதம் பூமியுருண்டையைச் சுற்றி வரையப்பட்ட கோடுகள்.

அக்ஷோப்யமுநி

வித்யாரண்யருடன் வாதிட்டு வேதாந்ததேசிகர் எழுதியனுப்பிய நியாயத்தாற் களிப்படைந்தவன்.

அக்ஷ்ணன்

விஸ்வாமித்ர புத்ரன். (பாரதம் அநு~பர்.)

அங்கக்கிரியை

(கசு) சரிகை, புரிகை, சமகலி, திரிகை, ஊர்த்வகலிகை, பிருட்டகம், அர்த்தபிருட்டகம், சுவத்திகம், உல்லோவம், குர்த்தனம், வேட்டனம், உபவேட்டனம், தானபதப்பிராயவிருத்தம், உக்ஷேபணம், அவக்ஷேபணம், நிகுஞ்சனம் என்பன.

அங்கசன்

மன்மதனுக்கு ஒரு பெயர்.

அங்கணமாமுனி

இவர், தவத்திலிருந்த பொழுது தவச்சுவாலை தேவர் உலகை வருத்த தேவர் சிவமூர்த்தியை வேண்டினர். சிவமூர்த்தி, இவரிடம் எழுந்தருளி எழுதக என்று கூற, இவர் எழுந்திராதிருந்தமையால் அங்கிருந்த ஒரு பாறையை விரலினால் தட்டினர். அதிலிருந்து அக்கி உண்டாகி இவர் தவத்தைக் குலைக்க எதிரில் சிவமூர்த்தியைத் தரிசித்து அபராதக்ஷமை வேண்டிய முனிவர்.

அங்கதன்

வாலியின் புத்ரன், இந்திரனம்சம், அநுமான் சீதையின் இருக்கை கண்ட செய்தி கேட்டுவந்த களிப்பால் மதுவனத்தை உண்ணச்சென்று அவ்விடம் காவலோனாகிய ததிமுகன் எதிர்க்க அவனைக் கொன்றவன். இவன் அநுமனுடன் கூடிச்சீதையைத் தேடுகையில் துமிரன் என்னும் இராக்கதன், இவன் உறங்குங்காலை, மார்பில் அறைய அவ்வரக்கனை அவ்வகை அறைந்து கொன்றவன். கராந்தகன் எனும் பெயருள்ள இராவண புத்திரனைக் கொன்றவன். இராமரிடம் வாகுவலயம் பெற்றவன். சீதையைத் தேடச் சென்றகாலத்து ஒரு பெண்ணினால் பாதாளத்து இருந்து வெளிவரப் பெற்றவன். சீதையை விட்டு விடும்படி இராமமூர்த்தியால் இராவணனிடம் அனுப்பப்பட்டுச் செய்திகூற, அவன் இவனைக் கொல்ல நால்வரை ஏவ, அந்த நால்வரைக் கொன்று மீண்டவன். கும்பகர்ண யுத்தத்தில் அவனடியால் சோர்ந்தவன். அதிகாயன் யுத்தத்தில் இலக்குமணருக்கு வாகனமானவன். இந்திரஜித்தின் தலையை இராமரிடம் கொண்டு சென்றவன். தன் தந்தையைக் கொன்ற பழிதீர்க்கக் கிருஷ்ணாவதாரத்தில் வேடனாய்க் கண்ணனை எய்து பழிதீர்த்தான் என்பர். (இரா). 2. இலக்குமணருக்கு மூத்த குமரன். இராமர் சொற்படி காருபதம் அரசாண்டவன். 3. ஒரு நிமித்திகன். (சூளா) 4. ஒரு க்ஷத்திரியன் திருதராஷ்டிரன் புத்திரன்.

அங்கதபுரம்

இலக்குமணன் குமரனாகிய அங்கதன் ஆண்ட பட்டணம்; இமயமலைக்கு அருகிலுள்ளது.

அங்கதபூபதி

இராயசிங்கு அங்கதபூபதி யிருவருஞ் சகோதரர். இவர்கள் வடநாட்டிலிருந்தோர்; அங்கதபூபதியின் மனைவி பாகவத விசுவாசியாய் ஒருநாள் தனக்கு உபதேசித்த ஆசாரியர் வர அவருக்கு அமுதளிக்க எண்ணிப் போசனாதிகள் சமைத்திருக்கையில் அங்கதபூபதி, தன் மனைவியை நோக்கிக் கற்புடையாருகுக் கணவனிலும் தெய்வம் வேறுளதோ இருந்தாற் காட்டுகவென முகந்திரிந்து நோக்கினர். இவ்வாறு சினத்துடன் கூறிய மாற்றங்கேட்ட மனைவியார், விசனமடைந்து மூன்றுநாள் அன்ன முதலிய இலாது உபவாசமாய் நாராயண ஸ்மாணையுடனிருந்தனர். இவ்வகை இருக்கப், பெருமாள் அங்கதன் கனவிடைத்தோன்றி நீ உன் மனைவியைக் காட்டக் கேட்ட தெய்வம் நானேயெனக் கூறி மறைய, அங்கபூபதி விழித்து மனைவியிடஞ் சென்று உன்னை வீணே கோபித்தேனென வேண்டி அவளிஷ்டப்படி பெருமாளையும் பாகவதரையும் சேவித்திருக்கச்செய்தனர். இவ்வகையிருக்கையில் மனைவியாருக்குபதேசித்த ஆசாரியர்வர மனைவியார், அவரைக்கொண்டு கணவருக்கும் தீக்ஷை செய்வித்தனர். இவ்வாறு வருகையில் தமயனாகிய இராயசிங்கன், தம்பியை நோக்கி, நீ சேனையுடன் சென்று நம்மேல் வந்த பகைவனையும் அவன் படைகளையும் வென்று வருகவென, அவ்வாறிசைந்து பகைமேற் சென்று அவன் பொருள்களைக் கொள்கையில் பெரிய வயிரமணி ஒன்று கிடைத்தது. அதனை அங்கபூபதி சகந்நாதனுக்கெனப் பத்திரப்படுத்தி வைத்தனர். இதனைப் பலராலறிந்த இராயசிங்கு அதனைப் பலவாறு தன்கைப்படுத்தத் தம்பியைக் கேட்க, அவர் மறுத்தது கண்டு தம்பியைக் கொலைபுரியத் தங்கையிடம் விஷமளித்து இதை அங்கதனுக்கு அன்னத்திலிடுக வென்றனன். தங்கை, தமயன் கட்டளைக்கஞ்சி அன்னத்தில் விஷமிட்டனள். அங்கதன் அதனை நாராயணப்பிரீதி செய்து உண்ணத் தொடங்குகையில் ஜகந்நாதன் கைமேலாக, இது விஷங்கலந்த அன்னம் உண்ணேவெனக்கூறக் கேட்டும் இது தேவப்பிரீதி செய்த அன்னம் உண்ணாதொழியேன் எனவுண்டு ஊறிலாதிருந்தனர். இனி யீண்டிருக்கின் அடாதென மனைவியுடன் யோசித்துச் சகங்காதம் நோக்கிச் செல்லுகையில் தமயனறிந்து அவ்விருவரையும் மறித்து அவரிடம் இருக்கும் வைரத்தைக் கவர்ந்து வரும்படி அமைச்சனைச் சேனையுட னனுப்பினன். அமைச்சன் சென்று மறுக்க அங்கதபூபதி அருகிருந்த ஆற்றில் இது சகந்நாதனுக் கர்ப்பணமென அவன் காணும்படி எறிந்தனர். அமைச்சன், தன் சேனைகளை நோக்கி இதனை நீவிர் தேடிக்கொண்டு வருகவென, அவர்கள் அவ்வாறு செய்து இளைத்து அகப்படாது மீண்டனர். இதனைக்கண்ட அங்கதர், நீங்களேன் வருந்துகிறீர்கள் என்னுடன்வரின் அதனைச் சசுக்நாதன் மார்பிலிருக்கக் காட்டுகிறேனென்றனர். அமைச்சன் பின்றொடர அங்கதரும் சகந்நாதஞ் சென்று பெருமாளைச் சேவித்தனர். சேவிக்கையில் பெருமாள் மார்பிலிருந்த வயிரத்தைக்கண்டு இது ஏதென மந்திரி அர்ச்சகரை விசாரிக்க அருச்சகர், இவ்வயிரம் மூன்று நாட்களுக்கு முன் அங்கதர் இதனை எமக்குக் கொடுத்தனர். இதனைப் பதக்கத்திற் பதிப்பித்து எமக்குச் சாத்துகவெனச் சகந்நாதன் கட்டளையிட்ட வண்ணம் செய்தோமெனக் கேட்டு நடந்தவற்றை இராயசிங்கனுக்கு அறிவிக்க இராயசிங்கன், தம்பி ஜகந்நாதனுக்கு அன்பனான தறியாமல் இயற்றினேனென வருந்தித் தம்பிக்கு நீ ஜகந்நாதனருளை நாடினை; உனைக்காண எனக்கு ஆசை மிகுகின்றது. ஜகந்நாதன் ஆணைப்படி திரும்புக எனக் கடிதமெழுதினன். இக்கடிதங்கண்ட அங்கதபூபதி, அண்ணனுக்குச் சகந்நாதன் நல்லறிவுதந்தானெனச் சகந்நாதனிடம் விடைப்பெற்றுத் திரும்பித் தமயனையணுகத், தமயன் தம்பியைத் தழுவி இனி நீ உன் மனப்படியிருக்க வெனக்கேட்டு அன்புடன் நாராயண பஜனை செய்திருந்தவர். (பக்தமாலை).

அங்கதீயா

காருபதத்தில் புத்திரர் பொருட்டு இலக்குமணரால் நியமிக்கப்பட்ட பட்டணம்.

அங்கதேசம்

இது, உரோமபதன் அரசாட்சியில் மழையில்லாம லிருந்தது. பின்னால் ருசியசிங்க முனிவர் வரவால் மழைபெய்யப் பெற்றது. இந்த ராஜ்யத்தைத் துரியோதனனால் கர்ணன் பெற்று அரசாண்டான் ‘THE COUNTRY OF BHAGALPUR. (பாரதம்~ஆதிபர்வம்).

அங்கநாடு

விசயவான் என்னும் அரசனுடைய நாடு. இதன் தலைநகர் சண்பை, (பெருங்கதை.)

அங்கனை

வடக்கின்கணுள்ள பெண்யானை.

அங்கன்

1. யயாதியின் நான்காம் புத்திரனாகும் அணுகுலத்தரசனாகிய பலிக்கு மூத்தகுமரன். 2. உன்முகன் மூத்தகுமரன். இவன் பாரி சுநீதை, தாய்நட்வலை அல்லது பிரீதகேசி, குமரன்வேனன். 3. உசீநரன்குமரன். தீர்க்கதமர் இவன் தாயின் அங்கத்தைப் பரிசிக்கப்பிறந்ததனால் இப்பெயர் பெற்றனன். இவனாண்ட நாடு அங்கம். 4. விரோசகன் புத்ரன். ஓர்அரசன். 5. துர்யோதன பக்ஷத்தைச் சேர்ந்த மிலேச்ச அரசன். பீமனால் கொல்லப்பட்டான். இவன் புத்திரன் நகுலனால் கொல்லப்பட்டான். (பாரதம்~துரோணபர்வம்) 6. அநுவம்சத்தில் பிறந்த பலி என்னும் பெயருள்ள அரசனுக்குச் சுதேஷணை என்னும் தேவியினிடத்தில் தீர்க்கதமன் என்னும் ரிஷியினால் பிறந்தவன். இவனுடைய சகோதரர்கள் அங்கன், கலிங்கன். (பாரதம்~ஆதிபர்வம்) 7. பூருவம்சத்தில் பிறந்தவன். இவன் மகாயாகங் களைச் செய்து யாகதஷிணை அதிகம் கொடுத்துச் சுவர்க்கமடைந்தவன். (பார~துரோ)

அங்கமோகினி

திவோநானன் தேவி.

அங்கம்

(ச) யானை, தேர், பரி, காலாள். 2. (ய) மலை, ஆறு, காடு, ஊர், மாலை, பரி, கரி, முரசு, கொடி, செங்கோல். 3. (நி) திதி, வாரம் நக்ஷத்திரம், யோகம், சாணம். 4. ஒருதேசம், இது,மன்மதனது எரிந்த உடம்பிலிருந்த என்புகள், சிந்திய இடம். ஆதலாலிப்பெயர் பெற்றது. கங்கை, சரயு இந்த இரண்டு நதிகளும் கூடுமிடத்திலுள்ளது. இது, கர்ணபுரி, லோமபாதபுரி எனவும் பெயர் பெறும். இது, வங்காளத்தில் பகல்பூர், கர்ணன் பட்டணம். 5. துச்சயன்நாடு, இந்நாட்டின் இராசதானிகச்சய நகரம். (மணிமேகலை).

அங்கயுக்

1. வாயு ரூபமாய்த் தேகத்திலிருந்து உண்டாம் துடிப்பு முதலிய அசைவால் சுபாசுபங்களைத் தெரிவிக்குந் தேவதை. (மார்) 2. ஒரு தேவதை; இவள், இந்திரிய நிக்கிரகமில்லாப் புருடரை யடைந்து பலத்தைப் போக்குபவள். (மார்).

அங்கயோகம்

(அ) இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.

அங்கவுறுப்புக்களினிலக்கணம்

இது, மனித சரீர அகப்புற உறுப்புக்களையும் அவற்றின் தொழில்களையுங் கூறுவது. மனித தேகத்தில் பற்களுடன் சேர்ந்து (249) வெவ்வேறான எலும்புகள் உண்டு. இவ்வெலும்புக்கூடுகள், பலவித தொழில்களைச் செய்கின்றன. (1) அவை உடம்பைத்தாங்க ஆதாரமாகின்றன. (2) அவை உடம்பினுள்உள்ள உள் அங்கங்களைக் காக்கின்றன. (3) அவை நாம் இடம்விட்டு நகர வன்மை தருகின்றன. நீங்கள் மனித உடம்பைக் கவனித்துப்பாருங்கள், உடம்பில் எலும்புக்கூடு இல்லாவிடின் உள்ளிருக்கும் மெதுவான உறுப்புக்கள் நில்லா என்பதை அறிவீர்கள். தலையிலுள்ள முக்கியமான உறுப்பு மூளை. இது ஒரு பெட்டிக்குள் அடங்கியிருப்பது போலிருக்கிறது. இருதயம், இரத்தாசயம் முதலியவை ஒரு கூண்டுக்குள் அடைத்தவைபோலக் காணப்படுகின்றன. கால்களும் அவற்றை யடைந்த தசைகளும் இக்கனத்த உடலைத் தாங்கத் தூண்கள் போலிருக்கின்றன. எலும்புகள் இவை, தேகத்தின் மேல்பாகத்தில் எழும்பியிருத்தலாலிப் பெயர் பெற்றன. இவை ஒருவகைச் சுண்ணாம்பும், வச்சிரத்தை ஒத்த பசையும் சேர்ந்த பொருள்கள். குழந்தைகளுக்கு உள்ள எலும்பை எலும்பெனக் கூறுவதற்கில்லை. அவர்களின் எலும்பு, வளையுமே ஒழிய முறியாது. இதற்குக் குருத்தெலும்பென்று பெயர். தலை: மண்டைக்கூண்டு, இது முட்டைவடிவான எலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளது இது, மூளையைத் தன்னில் அடக்கிக் கொண்டிருக்கிறது. இது, எட்டு எலும்பின் பாகங்களைக் கொண்டது. அவை நெற்றியெலும்பு 1, சுவர் போன்ற எலும்புகள் 2. கன்னப் பொறிச் சம்பந்தமான எலும்புகள் 2. தலையின் பின்பக்க சம்பந்தமான எலும்பு 1 வட்டமான எலும்பு 1 சல்லடை எலும்பு 1 நெற்றிஎலும்பு தலைக்கு முதலாக முன்னிற்பது, சுவர் போன்ற எலும்புகள், இவை, பக்கச்சுவர் போன்று தலையின் மேல்பாகத்தையும் மண்டையின் பின்புறத்தையும் காப்பவை. கன்னப்பொறிச் சம்பந்தமான எலும்புகள் இவை, காதைச் சுற்றியிருக்கும் காதெலும்புகள், தலையின் பின்பக்க சம்பந்தமான எலும்பு, இது, மண்டையின் பின்புறத்தினடியிலுள்ளது: இது, அகலமும் தட்டையுமானது. இது முதுகெலும்பின் மேல்பாகத்தில் உள்ளது. முதுகெலும்பு இதிலுள்ள தொளையினின்று ஒருவித சாரத்தைப் பெறுகிறது. வட்டஎலும்பு: இது, சிரத்தின் நடுவில் ஆப்புப்போலவும் தளவரிசையிட்டது போலவும் சில சிறு எலும்புகளால் நெருங்கி முகத்தின் எலும்புகளுக்கும் கபாலசம்பந்தமான எலும்புகளுக்கும் நடுவிலுள்ளது. சல்லடை எலும்பு: இது, சல்லடைபோன்று சிறு தொளைகளுடனியைந்தது. இது, முகஎலும்பிற்கும் கபாலத்திற்கும் நடுவில் மூக்கின் தொடக்கத்தில் தங்கித் தன்னிடமுள்ள தொளைகளின் வழியாக வாசனையைக் கிரகிக்கிறது. முகம்: முகத்தில் (14) எலும்புகளிருக் கின்றன, அவை I மூக்கெலும்புகள் 2, II. கடற்காளான் போன்ற எலும்புகள் 2, III. கண்ணீர் சம்பந்தமான எலும்புகள் 2, IV. மூக்கைப் பிரிக்கும் தட்டையெலும்பு 1, V. தாடை எலும்புகள் 2, VI. மேற்கன்ன எலும்புகள் 2, VII. மேல்வாய் எலும்புகள் 2, VIII. கீழ் கன்ன எலும்பு 1

அங்காகமம்

ஜைநாகமத் தொன்று.

அங்காடிப்பூதம்

இந்திரன் விழாவை மறந்தாரை வருத்தும் பூதம். (மணிமேகலை)

அங்காயி

அங்காளம்மனை இவ்வாறு கூறுவர். பெரியாண்டாவனைக் காண்க.

அங்காரகன்

ஸ்ரீபார்வதி தேவியார் நீங்கவும், சிவபெருமான் யோகத்திருந்தனர். இவர் நெற்றிக்கண்ணில் வியர்வுண்டாய்ப் பூமியில் வீழ இவன் குழந்தைவடிவாய்த் தோன்றினன். இவனைப் பூமிதேவி வளர்த்தனள். இவன் தவஞ்செய்ய, யோகாக்கினி இவன் தேகத்திலுண்டாயிற்று. அதனால் அங்காரகனாய்க் கிரகபதம் பெற்றனன். 2. தக்ஷயாகத்தை அதஞ்செய்து திரிலோகத்தையும் நீறாக்கத்தொடங்கிய வீரபத்திரமூர்த்தியைத் தேவர்கள் வேண்ட அந்த உருவத்தைமாற்றிச் சௌமியராக வேறுருக்கொண்டு அங்காரகன் எனப்பட்டனர். (மச்சபுராணம்). 3 பிரமனுக்குப் பூராடத் துதித்தவன். 4 பாரத்துவாச முனிவர் ஸ்நானத்திற்குச் சென்று ஒரு பெண்ணைக்கண்டு மோகித்த மனதை மீட்கவும், தாளாது வீர்யம் கலிதமாய்க் குழந்தை யுருவாயிற்று. அதைப் பூமிதேவி வளர்த்துப் பாரத்துவாசரிடம் அனுப்பிச் சகலகலைகளையுங் கற்பித்தனள். இவன் தவத்தால் கிரகபத மடைந்தான். புதனுக்கு மேல் இரண்டுலக்ஷம் யோசனை உயரத்தில் இருப்பவன். இவன் தேரில் எட்டுக்குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இவனுக்குக் குசன், பெளமன், மங்கலன், ஆரல், குருதி, வக்கிரன் எனப் பலபெயர்கள் உண்டு. யௌவனமுடையவன். 5, ஏகாதச ருத்திரரில் ஒருவன், 6. ஜயத்ரதனுடன் பிறந்தவன் ஷத்ரியன்.

அங்காரகவிரதம்

அங்காரகனை அங்காரக வாரத்தில் பூசிப்பது.

அங்காரகை

இவள் கிருதாசியெனும் அரம்பை, அகத்தியருக்குச் செய்த தீமையால் அரக்கியாகிச் சுவேதமுனிவரை வருத்தி வருகையில் அவர் இவள்மீது ஏவியபாறை, இவளைப் பின்றொடர்தல் கண்டு பயந்து சேதுவில் விழுந்து தன்னுருப்பெற்றவள். (சேது~பு).

அங்காரதாரை

ஒரு அரக்கி. இவள் அதுமன் இலங்கைக்குச் சீதாபிராட்டியாரைத் தேடிச்சென்ற காலத்து வழிமறித்து அவனை வாயினுள் புகும்படி சொல்லினன். அவ்வசை அநுமன் புகுந்து குடல் கொண்டு வெளிவர இறந்தவள், (இரா).

அங்காரவருணன்

அருச்சுநனுடன் யுத்தஞ்செய்து அவனது அக்கியஸ்திரத்தால் தகிக்கப்பட்டுச் சித்திராதன் எனும் பெயருடன் எழுந்து அருச்சுநனை நட்புக்கொண்டு பாண்டவர்க்குத் தௌமியரைப் புரோகிதராக இருத்தியவன். இவன் பாரிகும்பீநசி. (பார).

அங்காரவேகன்

சுவலனபுரத்தரசன் (சூளா)

அங்காளம்மாள்

ஒரு தேவதை. காளன் என்னும் வீரபத்திரரின் தேவி. தக்ஷயாகம் அழிக்கச் சென்று கோரவுருக்கொண்ட மகாகாளி. இவளுக்கு எலும்பு மாலை; கபாலம், சடைமுடி முதலிய சின்னங்கள். இவளை ஆராதிப்போரும் அவ்வகைக் சங்காளம் பூண்டு ஆடுவர்.

அங்கிசு

ச. அதுகுமரன். இவன் குமரன் சரத்துவதன்.

அங்கிரசி

வாஸ்துவெனும் வசுவின் தேவி, குமரன் விசுவகர்மன்.

அங்கிரன்

ஒரு வேடன். இவன் மகாபாபி. மேலைச் சிதம்பரத்தில் நற்கதியடைந்தவன். (அவகாசிபுராணம்).

அங்கிரா

விஷ்ணுவின் மானச புத்திரர். 2. அங்கீரசைக் காண்சு. 3. பிரமரிஷி. பிரமாவின் மானச புத்திரன்.

அங்கிராழனி

அகத்தியரை, உருவத்தைப் போல் அறிவிலுங் குறுகியவனெனக் கூறித் தவஞ்செய்யச் சொன்னவன். (பழனி~பு).

அங்கிழகன்

சிவகணத்தவரில் ஒருவன்.

அங்கீசுமான்

அஞ்சுமான் எனவும் பெயர். சூரியகுலத்து அசமஞ்சன் புத்திரன். சகரதனுக்குப் பேரன். இவன் சகரனால் ஏவப்பட்ட குதிரையைக் கபிலரிடமிருந்து பெற்றுச் சகரனிடம் விடுத்து யாகத்தைப் பூர்த்தி செய்வித்தவன். இவன் கங்கை பூமிக்குவரத் தவஞ்செய்து பலனடையாமல் லோகாந்தரத்தை அடைந்தவன். இவன் குமரன் திலீபன். (பாகவதம்).

அங்கீரசன்

பிரமனுக்கு முகம் பிரதானாககம், தேஜோவந்தமாகும் பிரதானாங்கத்தால் பிறந்தபடியால் இப்பெயர் பெற்றனன். இரம் என்பது தேஜசைத் தெரிவிக்கும். இவனுக்கு அங்கீரன், அங்கிரா, அங்கீரசன் எனவும் பெயர். இவன் பிரமன் மானஸ புத்திரர்களுள் ஒருவன். இவனுக்கு உதத்தியன் அல்லது சம்வர்த்தனன் பிரகஸ்பதி என்று இருவர் குமாரும், யோகசித்தி என்று ஒரு குமரியும் உண்டு. அக்நி ஒருமுறை தேவாவியைச் சுமக்க வலியற்று வனத்திற் செல்ல அந்தக் காலத்தில் இவனைத் தேவர் அக்நிபதத்தில் இருத்தினர். பிறகு அக்நிவர இவன் அக்நியை முதலாக வைத்துத் தானிரண்டாவதாய்ப் புத்திரனாயினன். இவன் பாரி சிவை. இவளிடத்திலிவனுக்குப் பிரகச்சோதி, பிரகத்கீர்த்தி, பிருகன்முகன், பிருகன்மதி, பிருகத்பானன், பிருகஸ்பதி, பிருகற்பிரமன் எனும் குமாரும் அநுமதி, இராகை, சிவாலி, குகு, அர்ச்சிஷ்மதி, அவிஷ்மதி, மார்மதி எனும் பெண்களும் பிறந்தனர். இக்குமரர் எல்லாரும் அக்கினிகளாயினர். இவன் குமரியாகிய யோகசித்தி பிரபாவசுவெனும் வசுவை மணந்து விசுவகர்மனைப் பெற்றாள். பார்யைச் சிமிருதி. 2. (இக்ஷ்) உன்முகனுக்குப் பிரீதகேசியிடம் உதித்தகுமரன்.

அங்கீரன்

அங்கிரசுவிற்கு மிருதியிடமுதித்த குமரன்.

அங்கெங்கரா

ஏம கூடத்தருகிலிருக்கும் தீர்த்தம்.

அங்கௌவை

ஔவைக்கு விருந்திட்டு ஒளவையின் சொல்லால் சேரன் பொன் ஆடு சீதனந்தரப் பெற்றவள்.

அங்தராமன்

சரசுவதி யென்பவளின் குமரன். இவன் தேவி அமிசை.

அங்தலன்

இவன் திருவோமாம்புலியூரிலிருந்த வேடன், இவனைப் புலி காட்டிற் துரத்த அஞ்சி அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொள்ளப் புலியும் விடாது அடியிற்படுத்தது. இவனும் இராமுழுதும் தனக்குத் தூக்கம் வராதிருக்க மரத்திலிருந்த வில்வத்தைப் பறித்தெறிய, அவை அடியிலெழுந்தருளியிருந்த சிவமூர்த்தியின் மேல் விழுந்தன. அதனால் சிவமூர்த்தி காட்சிதந்து தம்மை இராமுழுதும் நோக்கியிருந்த புலிக்கும் வேடனுக்கும் முத்திதரப் பெற்றவன்.

அசகணர்

ஒரு வீரசைவர். வசவதேவர் காலத்திலிருந்தவர். (பச).

அசகன்

புரூரவ வமிசத்தவனாகும் சந்து என்பவனுக்குப் பேரன். 2. (சந்) பாலகன் குமரன்.

அசகான்

ஒரு இருடி. இவன் நாம் தவம் பூண்டால் நம்மைக் காப்பவர் யாரென்று காட்டிற் செல்கையில் இடம்விட்டுப் பெயரா ஒரு மலைப்பாம்பைக் கண்டு இதனைக் காப்பவன் நம்மைக் காப்பானென்று தவமேற்கொண்டவன். இவன் பரமதருமத்தினைப் பிரகலாதனுக்கு உபதேசித்தவன். இவன் காவிரி நதிக்கரையில் சக்யபர்வத தடத்திலிருந்தான். (தே~பா). 2. வீரபத்திரரால் கொலையுண்ட அசுரன். 3. ஒருஅசுரன். இவன் மலைப்பாம் புருக்கொண்டு பாலவிநாயகரை விழுங்க விநாயகர் இவனுடலைப் பிளந்து வெளிவந்தனர். (விநாயபுராணம்). 4. ஒரு பாம்பு, பீமசேனனைப் பிடித்துக்கொண்டது. தமயந்தியைப் பிடித்துக் கொண்டது. நந்தன் என்பவனைப் பிடித்துக்கொண்டது. யுதிஷ்டிரனிடம் சம்வாதம் செய்தது.

அசகாவிரதம்

முதலை தன் அருகில் வந்த பொருளைப் புசிக்கும்; அதுபோல் சந்யாசி தனக்கு நேரிட்டதை யுண்டு திருப்தியடைவன் என்பது. (பர~சாந்).

அசக்கிரீவன்

கத்துரு குமரன். இவனுக்கு அயக்கிரீவன் என்றும் பெயர்.

அசக்தி

தக்ஷனுக்குப் பாரி. பஞ்சசேனன் பெண். 2. பிரமன் குமரி. தக்ஷன்தேவி. இவளுக்கு 1000 குமரர்.

அசங்கன்

வாநரத்தலைவன். 2. பிளயோகன் சந்ததியான். இவன் தேவி சசுவதி. இவன் பெண்ணாக வுருமாற்றப்பட்டுப் பின் மேதையதிதி யென்பவளுடைய தோத்திரத்தால் ஆண் வடிவமாக மாற்றப்பட்டவன். மேதையதிதிக்கு அதிகமாகத் தானஞ்செய்தவன். 3, அக்ரூரன் தம்பி, 4 மிதிலை நாட்டுக்குன குமரன்.

அசதிக்கோவை

ஔவையாரால் அசதியென்னும் கோவைசியப்பிரபமீது பாடப்பட்ட பிரபந்தம்.

அசதீ

இவர் பிறப்பால் தொண்டைநாட்டு இடையர்; மகாகொடையாளி; இவர் பாதியிரவில் விருந்தாக வந்த ஔவைக்குப் பொன்னிலையில் அன்னமும் வேண்டியவும் கொடுத்துக் கோவைப்பிரபந்தம் தம்பெயராற் பெற்றவர். அது அசதிக்கோவை யெனப்படும்.

அசன

1. பாணாசுரன் தாய்; பலியின்தேவி. 2. அர்க்கன் என்னும் வகவின்தேவி; இவளிடத்து ஆசை முதலிய பிறந்தன,

அசனிகச்சீர்பாதன்

சிவகணத்தவரில் ஒருவன்.

அசனிதேவர்

ஒரு சிவயோகி, இவர் சிவத்தியானஞ் செய்து கொண்டிருக்குங் காலத்தில் ஆற்றுநீர் பெருக அதைக்கண்ட இவ்யோகியர் கோபங் கொண்டனர். அக்கோபத்தீயால் ஆறு வடிந்தது.

அசனிவேகம்

ஜீவகன் பட்டத்து யானை

அசன்

1. (சூ.) இரகு புத்திரன். இவன் குமரன் தசாதசக்கிரவர்த்தி. இவன் விதர்ப்பநாட்டரசனாகிய போசன் புத்திரியாகிய இந்துமதியின் சுயம்வரத்திற்குச் செல்லுங்கால் வழியில் பூர்வத்தில் ஒரு இருடி சாபத்தால் யானையுருவடைந்து உலாவிக்கொண்டிருந்த பிரியம்பதன் எனும் காந்தருவனாகிய யானையைக்கண்டு ஒரு அம்பெறிந்து கொல்லச் செல்லுகையில் யானையுருப் பெற்ற காந்தருவன், நான்மதங்கருஷி சாபத்தால் இவ்வுருவடைந்தே னென்று அவனுக்கு முன்தோன்றி அவனுக்கு அஸ்திர வித்தைகள் அநேகம் உபதேசிக்க அந்த அஸ்திர சகாயத்தால் சுயம்வரத்தில் எதிர்த்த அரசர்களை வென்று இந்துமதியை மணந்தவன். இவன், ஒருநாள் மனைவியுடன் இருந்தகாலத்தில் ஆகாயத்திலிருந்து மாலையொன்று மனைவிமீது விழுந்தது. அது காரணமாக மனைவி சுவர்க்கமடைந்தனள். அதனால் அரசன் வருந்தினன். அதை வசிட்டர் அறிந்து அரசனுக்கு இந்துமதி மானுடப்பெண் அல்லள். தேவர்கள், திரணபிந்து செய்த யாகத்தைத் தடுக்க அரினியென்பவளை யேவ அவள், அவ்வகைசென்று புரிகையில் இருடி கோபித்து நீ மானுடவுருக் கொள்கவெனச் சபித்தனர். அவளே இந்துமதியாகப் பிறந்து உன்னை மணந்தனள், அவள் சாபந் தீர்ந்ததால் மேனாடடைந்தனள் என, அசன்தேறிக் குமரனுக்குப் பட்டமளித்து மேனாடு அடைந்தனன். 2. பூதனுக்குச் சுரபியிடம் உதித்தவன்; ஏகாதசருத்திரருள் ஒருவன். 3. நிமிவம்சத்து ஊர்த்தசேதுவின் குமரன், 4. பிரமன் சபையிலுள்ள தேவர். அஜர் என்பர்.

அசமஞ்சசன்

(சூ) சுகேசினி என்பவளுக்குச் சகரனால் பிறந்த குமரன். இவன் குமரன் அஞ்சுமந்தன், இவன் மிகத்தீயவனாய் இருந்தபடியால் இராச்சியத்தை விட்டுத் தகப்பனால் துரத்தப்பட்டனன்.

அசமஞ்சன்

(சூ) சகான் குமாரன். தாய்கேசினி, இவன் முதற்பிறப்பில் யோகியாயிருர்து. அதினின்றும் தவறியதால் கேசினியிடம் பிறந்து பூர்வக்ஞானத்தால் இல்லறத்திருந்து நீங்க எண்ணித் தெருவில் விளையாடும் பிள்ளைகளைச் சரயுவில் எறியத் தந்தை கோபித்து இவனைக் காட்டிற் துரத்தக் கட்டளையிடக் களிப்புற்று முன் எறிந்த குமரர்களை எழுப்பித்தந்து காடடைந்து தவமேற் கொண்டவன். (பாகவதம்).

அசமஞ்சர்கள்

போஜபுத்திரர்கள்.

அசமவாயிகாரணம்

எது, சமவாயிகாரணத்தணுகி இருப்பதும், துணிந்த காரணத் தன்மையுடையதுமாயிருப்பது. (தரு)

அசமாதி

இக்ஷவாகு சந்ததியான்; இவன், தன் பூர்வாசாரியர்களை விட்டு வேறு ஆசாரியர்களைக் கொண்டதால் அவர்கள் இவனிடத்துக் கோபித்து அரசன்கெட மந்திரோச்சாரணஞ் செய்தனர். இவனது புதியகுருக்கண்மார் எதிராக வேறு மந்தரமேவி அவர்களில் ஒருவனை மரணமடைவித்தனர். இவனுடனியைந்த மற்ற வேதியர் அவனது பிழைப்பிற்காக முயன்றனர். (இருக்கு).

அசமீடன்

(சந்) பௌரவ வம்சத்தவனாகிய அத்தி குமரன். இவன் குமரர்கள் பிருகதிக்ஷன், நீலன், இருஷன். 2. இவன் ஒரு க்ஷத்திரியன். சந்திர வம்சத்தைச் சேர்ந்தவன் புமன்யூ புத்திரனாகிய சகோத்தரனுடைய புத்திரன். இவன்தாய், எட்சுவாக்கி. இவன் உடன் பிறந்தார் சுமீடன், புருமீடன். இவன் தேவியர் மூவர். துமினி, நீலி, கேசினி, முதலோர்; துமினி இவள் புத்திரன் ருக்ஷ்சன். நீலி, இவள் புத்திரர்கள், துஷ்யந்தன், பரமேஷ்டி, கேசினி, இவள் புத்திரன் ஜகுறு (பாரதம் ஆதிபர்வம்). 3. சந்திரவம்சத்து விகுஞ்சனன் புத்திரன். தாய்சுந்தரி. இவனுக்கு ஐந்து தேவியர். கைகேயி, நாகை, காந்தாரி, விமலை, ரூட்சை, ரூட்சையின் புத்திரன் சம்வர்னன். (பாரதம்~ஆதிபர்வம்)

அசமுகன்

சண்முகசேநாவீரன். 2. ஒருஅரக்கன், மது எனும் பூதகனத் தலைவன்மீது நாராயணாஸ்திரம் பிரயோகஞ்செய்து அதனால் மாண்டவன்.

அசமுகி

(அசு) மாயை எனும் அசுரப்பெண், நான்காஞ் சாமத்தில் ஆட்டினுருக் கொண்டு காசிபரைப் புணரப் பிறந்தவள். இவள், துர்வாசரை வலிதிற் புணர்ந்து வாதாபி வில்வவனைப் பெற்றனள். இந்திராணி தனித்திருக்கக் கண்டு அண்ணனுக்கு ஆவள் என்று இழுத்துச் செல்லுகையில் மகாகாளரால் கையறுப்புண்டு சூரனுக்குத் தனக்கு நேரிட்டதை உணர்த்திப் பிரமனால் கைவளரப் பெற்றவள், (ஸ்கா).

அசம்பவம்

இலக்கியத்தில் இலக்கணமிராது, இலக்கியமல்லாததின் கண் இலக்கணமிருத்தல். (தரு).

அசரன்

கத்ருகுமரன்.

அசரீரி

ஆகாய வாணியெனவுங் கூறுவர். (தருமதேவதை) கடைச்சங்கத்தில் திருக்குறள் அரங்கேறச்செய்த காலத்தில் திருக்குறளை உருத்திரசன்மருடனிருத்த ஆகாசவாணியால் சொல்வித்த முதற்றெய்வம், இவரை ஒரு புலவர் எனவும் கூறுவர். (திருவள்ளுவமாலை) “திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ, குருத்தகு நற்பலகை யொக்க விருக்க, வுருத்திர சன்மரென வுரைத்துவானி, லொருக்கவோ வென்றதோர் சொல்,” பல காலங்களில் அடியவர்க்கு ஆகாயவாணியாக உபசரிக்குந் தெய்வம்.

அசலகீர்த்தி

கனகமாலையின் சகோதரருள் ஒருவன் (சிந்).

அசலன்

1 சண்முகசேநாவீரன். 2. கயமுகனுடன் விநாயகர் யுத்தஞ்செய்யச் சென்றகாலத்து அவரைத் தாங்கிச் சென்ற பூதகணத் தலைவன். (விநாயகபுராணம்). 3. புத்திசேகன் பிதா. 4. பசுவயிற்றிற் பிறந்த முனிவன் (மணிமேகலை). 5. காந்தார தேசத்து அரசனாகிய சகுனிக்கு உடன்பிறந்தவன் ஏகரதன். அர்சுனனால் கொல்லப்பட்டவன். (பாரதம்~துரோணபர்வம்).

அசலழனி

யானையிடம் பிறந்த இருடி.

அசலா சப்தமி

மாசிமாத சுக்கில பக்ஷ சப்தமியில் அதுட்டிப்பது.

அசலிகை

ஒரு தீர்த்தம்.

அசாதகத்துருவன்

விதிந்திரன் குமரன். இவனது குமரன் துருபதன்.

அசாதசத்ரு

1. தருமராசன். 2. காசிதேசத்தாசன்; பாலாகி யென்னும் குருவிற்கு ஞானோபதேசஞ் செய்தவன். 3. இக்ஷ்வாகு வம்சத்தவனாகிய விதிசாரன்குமரன். மகததேசாதிபதி. இவனும் சாக்யமூனியும் ஒரு காலத்திருக்கலாம்.

அசாதாரணலக்ஷணம்

(உண்மைலக்ஷணம்) அது அந்நியஜாதியின் லக்ஷணங்களும், தன் ஜாதியின் லக்ஷணங்களுமகன்று நிற்பது. (சிவ~சித்).

அசாத்தியகாலக்ஷணம்

இது, ரோகிக்குத் தேக நடுக்கலுடன் நோவு, மேல்மூச்சு, மூர்ச்சை, இரைப்பு, கண்ணில் நோயுடன் குத்தல், முகம் குங்குமம்போல் சிவத்தல், ஈனத்தொனி, சிலேஷ்ம நாடிவகம், சுவாசம் சில்லிடல், மார்பு, உந்தி, மூக்கு, உள்ளங்கை, உள்ளங்கால் குளிர்தல், சிரம் அக்னிபோல் சுடுதல், நாடிகள் குடிலமாக நடத்தல், தேசங்குளிரல், மேல்மூச்சு, அடித்தொடை வீக்கம், இரவில் தேகஎரிவு, கண்டத்தில் சிலேஷ்மம், நாசி, கை, கால் குளிர்ச்சி முதலிய தீக்குறிகளிருத்தலாம். (ஜீவ).

அசாத்யவாதரோகங்கள்

எந்த வாதரோகத்தில் அதிநடுக்கல், வீக்கம், சகிக்கக்கூடாத நோவு, சருமத்தில் திமிர், தேகஞ்சுஷ்கித்துச் சுருங்கல் முதலிய இக்குணங்கள் கண்டால் ரோகம் அசாத்யம், அன்றியும், வாதரோகம், அபஸ்மாரகம், ரத்தவாந்திரோகம், க்ஷயம், குன்மம், மேகரோகம், இவைகளுக்கு உடனே சிகிச்சை செய்யாவிடில் பிரபலப்பட்டு அசாத்யமாம். (ஜீவ).

அசாமீடன்

சந்திரகுலத்தரசன். இவன் தந்தை அத்தி, குமரர் பிரகதிஷன், நீலன், ருக்ஷன், இவனால் பார்ஹதிஷ, பாஞ்சால, கௌரவ வம்சங்களுண் டாயின.

அசாமீளன்

கன்னியா குப்தபுரத்திலிருந்த ஒரு வேதியன்; இவன் மகாபாபி. இவன் இறக்கும்போது தன் குமாருள் ஒருவன் பெயராகிய நாராயணனாமத்தை அபுத்திபூர்வகமாய் அழைத்து யமபடரினின்று நீங்கிவிஷ்ணுபதமடைந்தவன். இவனுக்கு அசாமேளன் எனவும் பெயர்.

அசி

ஒரு நதி. காசிக்கருகிலுள்ளது.

அசிக்கினி

இது ஒரு நதி. (CHANDRABHAGA) THE RIVER CHENAB. 2. வீரிணியைக் காண்க.

அசிக்னி

இரண்டாவது தக்கன் மனைவி.

அசிதன்

1. தியதராட்டிரன் குமரன். 2. ஒரு ருஷி, தருமபுத்திரனுக்குத் தருமம் உபதேசித்தவர். 3. சூர்யகுலத் தரசரில் ஒருவன்; இவன் அரசாண்டு மரணமடையப் பிரிவாற்றாது உடன் செல்லத் துணிந்த கருவுற்ற மனைவியைச் சியவனருஷி, உன்வயிற்றில் நல்ல குமரன் உதித்து மரபு விளங்க இருத்தலால் நீ சாகாமவிருக்கவெனத் தடுத்தனர். அதனால் அவ்வரசன் மனைவி உயிர் பெற்றிருக்கையில் மாற்றவள், வயிற்றிலிருந்த கருவைக் கொல்ல விஷங்கலந்த அன்னமூட்ட இருடியின் வரபலத்தால் துன்பமில்லாமல் விஷத்துடன் சகரன் எனப் பெயர்பெற்ற புத்திரனைப் பெற்றவள். (அயோத்.ம்). 4. சைந்தீர்த்தங்கரரில் இரண்டாவதானவர்; இவர் சீதசத்ரு மகாராஜாவின் குமரர், தாய் விசயசேனை, இவர் காலத்தரசன் சகாச்சக்கிரவர்த்தி இவர் உயரம் 45 வில், 82 லக்ஷபூர்வம் ஆயுஷ்யம், சுவர்ண வர்ணம், கிருதயுகம், மாசிமீ சுக்ல பக்ஷம், தசமிதிதி, உரோகணி நக்ஷத்திரம் ஜநநம் (மாபுராணம்) 5. அங்கநாட்டரச புரோகிதன். சிவாலயத்து வாழையைச் சொந்தப் பிரயோசனத்தில் உபயோகித்து நாகமடைந்தவன்.

அசிதர்

கௌதம புத்தர் பிறந்த காலத்து அவர்அவயவங்களைக் கண்டு ஞானவானென்று துதித்த தவத்தவர், 2. இவர் இந்திர சாபத்தால் தர்மவழி தப்பி நடந்து சிவபூசையால் தர்மத்தையும் தீர்க்காயுளையும் பெற்றார். இவர்க்குத் தேவலர் எனவும் பெயர். (பார~அநுசா).

அசிதை

அப்சரஸ்திரிகளில் ஒருத்தி.

அசித்தன்

பப்பா நாட்டுச் சுபநன் குமரன், தீயொழுக்கமுள்ளவனாய் ஒரு பார்ப்பினியைக் களவில் புணருகையில் பூஜாகாலம் வர, அவள் முலையைச் சிவலிங்கமாகப் பூசித்து மறுபிறப்பில் மன்மதனாகப் பிறர்தவன்.

அசித்தபேதம்பன்னிரண்டு

அவை (க1) சொருபாசித்தன், (2) வியாத்திகரணாசித்தன், (3) விசேஷ்யாசித்தன், (4) விசேஷணாசித்தன், (5) பாகாசித்தன் (6) ஆசரயாசித்தன் (7) ஆச்ரய ஏகதேசாசித்தன் (8) வியாத்த விசேஷ்யாசித்தன், (9) வியாத்த விசேஷணாசித்தன், (10) சந்தேகாசித்தன், (11) சந்தித்த விசேஷியாசித்தன் (12) சந்தித்த விசேஷணாசித்தன். (சிவ. சித்)

அசிபத்திரவதம்

இருப்புவான் போலும் செடிகள் நிறைந்த காடு; இது பாபிகள் நரகத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது; 1000 யோசனைகளுள்ளது. அதி உஷ்ணமுள்ள சூர்யகிரணம் நிறைந்து உள்ளது. இந்த வனத்தில் பாபிகள் முட்செடிகளாலும் துஷ்டமிருகாதிகளாலும் துன்பப்படுவர். (கருடபுராணம்).

அசிர்க்காரோகம்

(பிரதரரோகம்) இது பெண்களின் ரோகத்தொன்று. இது அல்குலின் துவாரத்தைச் சுருக்கி மூடிக்கொண்டதனால் சேர்ந்திருக்கும் உதிரத்துடன் வாயு கூடி உதிரத்தைக் கெடுத்துத் துர்க்கந்த முண்டாக்கி அகாலத்தில் வேதனையுடன் வெளிப்படுவது. இது உபவாசத்தாலும், துக்கத்தாலும், மிகு புணர்ச்சியாலும், உஷ்ண வஸ்துக்களைப் புசித்தலாலும் உண்டாவது. இது, வாதம், பித்தம், சிலேஷ்ம, சந்நிபாத அசிர்க்கரமென நான்கு வகைப்படும் (ஜீவ).

அசீகீர்தன்

ஒரு வேதியன், சுநச்சேபன் தந்தை. இவனை இருடியெனவுங் கூறுவர். இவன் அரிச்சந்திரனுக்குச் சுநச்சேபனை யாகப் பசுவாக விற்றவன். இவன் முதலில் (1000) பசுக்களை வாங்கிக்கொண்டு விற்றும், மீண்டும் (100) பசுக்களைப் பெற்று யூபத்தில் கட்டியும், சாச்சேபனை யெவரும் பலியிடச் சம்மதியாதபோது பின்னும் நூறு பசுதரின் பலியிடுவேன் என்று (100) பசுக்களைப் பெற்றுக்கொண்டு கத்தியைக் கையிற் கொள்கையில் சுநச்சேபன் தேவர்களைத் தியானித்து யூபத்தம்பத்தினின்று விலகிச் வாமித்திரர் மடியிலிருக்க, அசீகிருதன் தன்குமரனைத் தரகக்கேட்க விச்வாமித்திரர் மறுத்தனர். பின் விச்வாமித்திரருக்குச் சுநச்சேபன் புத்திரன் ஆனான். (தேவி~பாக).

அசீமகிருஷ்ணன்

(சந்) அசுவமேதகன் குமரன்; இவன் குமரன் நிச்சக்கிரன்.

அசீரணரோகம்

இது கண்கள், தவடை அதைப்பு, உண்ணாதபோதும் உண்டதுபோல் ஏப்பம், வாய்நீரூறல், வயிற்றில் வேதனை முதலிய உண்டாக்கும், இது ஆமாரசீரணம், விதர்தாசீரணம், விஷ்டம்பாசீரணம், விளம்பிகாசீரணம், ரசசேஷாசீரணம், உற்சுசாசீரணம், சாமான்யாசீரணம், தூமாசீரணம், லீதூமாசீரணம், விஸ்பஷ்டம்பாசீரணம், ரஸசேஷாசீரணம் எனப் பலவிதப்படும். இவைகளைக் குடாரிச் சூரணம், கண்டாத்திரி சூரணம், அஸ்வகந்திச் சூரணம் முதலியவற்றால் வசமாக்கலாம். (ஜீவ).

அசுணம்

இது பேடையை விட்டு நீங்காத பறவை. இதனிறம் உருவம் முதலிய நன்றாக விளங்கவில்லை, இதன் ஓசையை தலைவனீக்கத்தில் தலைவி பொறாமைக்குத் தமிழ் நூலார் உவமை கூறுவர்.

அசுபதி

மத்திரதேசாதிபதி; தேவி மாளவி.

அசுரர்

சுரராகிய தேவர்க்கு விரோதிகள். பிரமன் சகனத்திலுதித்து அப்பிரமனைப் பெண்ணாக நினைத்து இச்சித்தமையால் அசுரராயினர். அமிர்தபான மொழிந்தவர்.

அசுராயணன்

விச்வாமித்திரபுத்திரன்.

அசுரேந்திரன்

1. (அசு) அசுரத்தலைவன். கஜமுகாசுரன் பிறப்பிற்குக் காரணமானவன். 2. (அசு) தாருகன் குமரன். சூரனுக்குத் தனக்குற்ற துன்பமுணர்த்திப் பிரமனால் அறுந்த கைவளரப் பெற்றவன். சூரபதுமனுக்குத் தன் தந்தையின் மரணமுணர்த்தி யுத்தத்திற்கு அனுப்பிடவன். (ஸ்காந்தபுராணம்).

அசுவஇருதயம்

நளன் ருதுபாணனுக்கு கூறிய அசுவசாஸ்திரம்.

அசுவசேனன்

1. தக்ஷன் குமரன், காண்டவ வனத்தில் அக்நியில் அகப்பட்டு இந்திரனால் காக்கப்பட்டவன். அருச்சுனனைக் கொல்லக் கர்ணனிடம் நாகாஸ்திரமாக இருந்து அருச்சுனன் முடியைக் கவர்ந்தவன். அருச்சுனனால் கொல்லப்பட்டவன்.

அசுவதரன்

ஒரு நாகராசன். இவனும் கம்பளனும் சரஸ்வதியிடம் கானவித்தை பெற்றுச் சிவமூர்த்தியைப் பாடிச் சித்தியடைந்தனர். இவர்களுள் அசுவதரன், குவலயாசுவன் மனைவி மதாலசையை அரக்கன் வஞ்சஞ் செய்து கொன்ற செய்திகேள்வியுற்றுச் சிவமூர்த்தியைப் பாடி அவர் தரிசநந்தர அவரிடம் குவலயாசுவன் அல்லது இரதத்துவசன் எனும் நண்பனது தேவி மதாலசை இறந்தகாலத்து எந்த வயதுடன் இறந்தனளோ அந்த வயதுடனும், அப்போதிருந்த நினைவுடனும் தன்னிடம் பிறக்க வரங்கேட்க, சிவமூர்த்தி, நாகராசனை நோக்கி, நீ பிதுர் சிரார்த்தஞ்செய்து நடுப்பிண்டத்தையுண், உனது நடுப்படத்தில் அவள் பிறப்பளென அவ்வாறு செய்து அப்பெண்ணினைப் பெற்றுத் தன் குமாரரால் அரசனை வருவித்து அரசனுக்குக் கொடுத்தவன். இவர்களிருவரும் கானவித்தை பெற்றுச் சிவபெருமானைப் பாடிச் சிவபெருமான் திருச்செவிக்குத் தோடுகளாயினர். (பாரதம்)

அசுவதீர்த்தம்

கன்னியாகுப்சத்துக்கு அருகிலுள்ள தீர்த்தம். THE CONFLUENCE OF THE GANGES AND THE KALINADI IN THE DISTRICT OF KANOUJ. 2. கங்கையிற் காலநதி கூடுமிடத்துள்ள தீர்த்தம், காதி, தன் மகளை மணக்கவந்த இரசிகனை ஆயிரம் அசுவங்கள் கேட்ப அச்சத்தியவதி. பொருட்டுக் குதிரைகள் தந்த இடம்.

அசுவத்தாமா

துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்பினை நாரதரால் அறிந்த ருத்திரன், அதனையறிய நிருவாண பிக்ஷைகேட்டு இவள் அழகினைக் கண்டு வீர்யத்தைத் தட்டில்விட அதனை அவள் துரோணர் குதிரையிடம் வைத்ததனால் குதிரையின் முதுகைக் கிழித்துக்கொண்டு அசுவத்தாமா பிறந்தான். இவனுக்கு மயிற்கொடி; இவன் பஞ்ச்சிரத்தாற் பாண்டவரைக் கொலைபுரிய நினைதது அதைவிட, விஷ்ணுமூர்த்தி சக்கரத்தால் பாண்டவரைக் காத்தனர், இளம் பஞ்சபாண்டவர்களைப் பாசறை யுத்தத்திற் கொன்று வியாசரால் சாபமடைந்து பிறகு பாண்டுபுத்திரரால் சிரோமணி கவரப்பட்டு அவமானமடைந்தவன். மகாவீரன், நாராயணாஸ்திர முதலியவற்றைப் பாண்டவர் மீது ஏவ அவை பயன்படாதது கருதிக் காடுநோக்கித் தவஞ்செய்யச் செல்லுகையில் வழியில் வியாசரைத் தரிசித்து உறுதிபெற்றவன். பாரதயுத்தத்தின் பதினெட்டாநாளிரவு பாசறை யுத்தத்திற்குச் செல்ல அங்குச் சிவாஞ்ஞையால் பூதமொன்று மறுக்க ஏக்கங்கொண்டு ஒரு தடாகம் அடைந்து தவம்புரிகையில் இவன் தவம் நடவாதிருக்கச் சிவபூதங்களிவனைத் தூக்கி அக்நிகுண்டத்தருகில் விட்டன. சிவபூசைக்கு இடையூறு வந்ததென அசுவத்தாமன் குண்டத்தில் வீழ்ந்து இறக்கத் துணிந்தனன். அப்போது சிவமூர்த்தியும் உமையும் தரிசனந்தந்து வேண்டிய தென்னவெனப், பாரதப்போரில் மிகுந்த வீரர்களைக் கொல்லவேண்டு மென்றனன். சிவபிரான் ஒருவாளைப் பிரசாதித்து இன்றிரவு யாரைச் சந்திக்கின்றனையோஅவர்கள் மாய்வர் என்று மறைந்தனர். அவ்வாறே பாசறை யுத்தத்தில் எதிர்த்தவரை மாய்த்துப் பாண்டவர் பத்தினிகள் பெற்ற கருக்குலையப் பாணம் விட்டுக் கிருஷ்ணனால் குட்ட வியாதியடைந்து (3000) வருஷம் கருவில்லாமலும் நல்ல ஆகாரயில்லாமலு மிருக்கச் சாபம் பெற்றவன். அப்பாணம் கருக்களைச் சேதித்து உத்தரையின் வயிற்றிலிருக்கும் கருவிடஞ் செல்ல அந்தக் கருப்பத்தில் கண்ணபிரான் ஒரு சிறு உருவமாயிருந்து உங்கரிப்பப் பாணமஞ்சி நீங்க அவமதிப்படைந்தவன். (பார) (பாக). 2. மாளவ தேசாதிபதியின் யானை. இந்த யானை இறந்ததாகத் தருமர் கூறக் கண்ணன் மாறுபாடு செய்தனர்.

அசுவநதி

குந்திதேவி கர்ணனைப் பெட்டககத்து வைத்து விட்டநதி.

அசுவநாமன்

சந்தனுவின் மந்திரி.

அசுவமேதம்

இது உத்தமமான குதிரையின் நெற்றியில் அரசனது வீரம் முதலியவைகளை வரைந்த பட்டத்தைக் கட்டிப் பூப்பிரதக்ஷணம் செய்வித்துப் பின் யாகஞ் செய்வித்தல். அசுவமேதம் என்று சொல்லப்படுகிற யாகக்கிரியையின் விஷயமாய் இருக்கிற அசுவம், விராட்டுக்கு அல்லது மூலகாரணமான சர்வ விளக்கமான வஸ்துவிற்கு உறுதியான அடையாளமாக இருக்கின்றது. தைத்திரிய யஜுர் வேதத்தின் கடைசிப் பிரகரணத்தில் அசுவ உடலினது பலவித பாகங்கள் காலத்தின் பிரிவுகளைக் காட்டப் பட்டவைகளாக இருக்கின்றன. காலைப்பொழுது, அதன் சிரசாகவும், சூரியன் அதன் கண்ணாகவும், வாயு அதன் மூச்சாகவும், சந்திரன் அதன் காதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அசுவமேதத்திலும், புருஷமேதத்திலும், மனிதர்களும், அசுவங்களும் பலி கொடுக்கப்படுவார் அல்லர். அசுவதமேத யாகச் சடங்கில் அநேக விதங்களாகச் சொல்லப்படும் அறுநூற்றொன்பது காட்டுமிருகங்கள், குடிமுறைக்கு அடுத்த மிருகங்கள், பக்ஷிகள், மச்சங்கள், புழுப்பூச்சிகள், இருபத்தொரு ஸ்தம்பங்களில் கட்டப்படுகின்றன. சாதுவான மிருகங்களைக் கற்றூண்கள் மத்தியில் கட்டிச் சில தோத்திரங்கள் ஓதப்பட்ட பின்பு பலியாகிய யாதொரு துன்பமும் இல்லாமல் அவிழ்த்துவிடப் படுகின்றன. புருஷ மேதத்திலும் பலவித குலங்களும் நடைகளும் தொழில்களுமுடைய நூற்றெண்பத்தைந்து மனிதரைப் பதினொரு ஸ்தம்பம்களில் கட்டி நாராயண பலியைக் குறித்து ஓதப்பட்ட கீதங்களுக்குப் பின்பு அவிழ்த்துவிடப் படுகிறது.

அசுவமேத்தத்தன்

சந்திர வம்சத்து அரசன், தாய் வைதேகி. ஜெனமேஜயன் பேரன்.

அசுவரோகிதம்

இந்திரப்பிரத்தத்திற்கு அருகிலுள்ள தீர்த்தம்.

அசுவாருடழர்த்தி

பாண்டியனிடங் குதிரை விற்கவந்த காலத்து வேதத்தைப் பரியாக ஏறிவந்த சிவமூர்த்தியின் பரிமேலழகியதிருவுரு. (சிவபரா).

அசெயசூான்

அலம்புதன் குமரன். 2. பாரத வீரருள் ஒருவன்.

அசை

எழுத்துக்களா லாக்கப்பட்டுச் சீர்க்கு உறுப்பாய் வருவது. அது, தொகை, வகை, விரியால். I நேரசை, II. நிரையசையென்னுந் தொகையானும், 1. நேரசை, 2. நிரையசை, 3. நேர்பசை, 4. நிரைபசையென்னும் வகையானும், 1. சிறப்புடை நேரசை, 2. சிறப்பி நேரசை, 3. சிறப்புடை நிரையசை, 4. சிறப்பில் நிரையசை, 5 சிறப்புடை நேர்பசை, 6. சிறப்பில் நேர்பசை, 7, சிறப்புடை நிரைபசை 8. சிறப்பில் நிரைபசை யென்னும் விரியானும் மூவகைப் பாகுபாட்டை அடையும். (யா~வி).

அசைகபாத்

பூதனுக்குச் சுரபியிடம் உதித்த குமரன். ஏகாதசருத்திரருள் ஒருவன்.

அசோக சங்கிராநீதி

உத்தராயன தக்ஷிணாயனம், விஷவத் புண்ய காலம், வியதிபாதம் இக்காலங்களில் பொன்னில் சூர்யபூஜை செய்து திலதான பூர்வகமாய்ப் பூசித்துக் கபிலை தானமுதல் எல்லா தானங்களுஞ் செய்து பிராம்மண போஜனஞ்செய்வித்து வேதியர்க்குப் பிரதிமையைத் தருதல். இத்தானஞ் செய்தார் ஆயுராரோக்ய சம்பத்துக் களைப் பெறுவர்.

அசோகசப்தமி விரதம்

மாசி மாதம் சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமி வரையில் (13) மாதம் சூரியனைப் பூசிக்க வேண்டும்.

அசோகன்

1, தசரதன் மந்திரிகளில் ஒருவன். 2. மகததேசாதிபதியாகிய ஒரு புத்த அரசன். மயூரிய வம்சத்தரசன். இவன் சந்திரகுப்தனுக்குப் பேரன், தந்தை பிந்துசாரன். புத்தமதத்தை யெங்கும் பரவச் செய்தவன். (B. C. 260) இல் ஆண்டவன். இவனும் இவன் குமரனும் புத்தசமயத்தைப் பலவாறு எங்கும் பரவச் செய்தனர். இவன் குமரன் மாவிந்தன், இலங்கையில் புத்தமதத்தைப் பரவச் செய்தவன். (B. C. 222) இல், இறந்தான். 3. பீமசேன தேர்ப்பாகன்.

அசோகவர்த்தனன்

வாரிதாரன் குமரன். இவன் குமரன் சுசேசு.

அசோகவர்த்தன்

மகத நாட்டரசன். சந்திரகுப்தன் பேரன்.

அசோகாதிராத்ர விரதம்

ஜப்பசி சுக்லத்ரயோதசியில் அநுஷ்டிப்பது.

அசோகாஷ்டமி விரதம்

சித்திரை மாதத்தில் புதனோடு புனர்பூச நக்ஷத்ரங்கூடிய அஷ்டமி திதியில் விடியற் காலையில் ஸ்நாநாதிகள் முடித்து விரத மிருந்தவர்கள் வாஜபேயபலம் அடைவர்.

அசோதரன்

ஒருமுனிவன், சீவகன் முற்பிறப்பில் பெற்ற பெயர். (சிந்). 2. ஒரு முனிவன். (சூளாமணி).

அசோதரம்

இரவிவன்மன் நகரம். (மணி).

அசோதை

நந்தகோபன் தேவி. கண்ணன் மண்ணை யுண்ணும்போது வாய்திறந்து காட்டப் பயமுறுத்தி அவன் வாயைக் காட்டியகாலத்துச் சகல அண்டங்களையும் வயிற்றிற் கண்டவள். (பாக).

அசோமுகிநாடகம்

அருணாசலக்கவிராயராற் செய்யப்பட்ட அசோமுகி கதை.

அச்சணந்தி

இவன் வெள்ளிமலைக் கருகிலுள்ள வாரணவாசிக்கரசன் ஜீவகனுக்காசிரியன் இவனுக்கு லோகமாபாலன் என்றுபெயர். இவன் யானைத்தீநோயால் வருந்தி ஸ்ரீவர்த்தமான சுவாமிகளிடத்து அருள் பெற்று நோய் தீர்ந்தவன்.

அச்சநாபம்

பரதகண்டத்தின் முதற் பெயர்.

அச்சன்

பாலகாட்டி லுள்ளவர்களின் பட்டம்.

அச்சரப்பாக்கத்தவர்

செட்டிகளில் ஒரு பகுதியர்.

அச்சார்

ஒரு தேவசாதியார்.

அச்சுதகளப்பாளர்

1, இவர் நடு நாட்டில் திருக்கடந்தை யென்றும், திருப்பெண்ணாகடம் என்றும் கூறப்படும் திருத்தூங்கானை மாடத்திவிருந்த வேளாளர். சந்தான குரவர்களில் முதல்வராகிய மெய்கண்டாருக்குத் தந்தையார். 2. இவர் தமிழ் நாட்டு மூவேந்தரையும் சிறையிலிட்டவர். இவர் ஒரு அரசராக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இவ்வச்சுதகளப்பாளர் சிதம்பரத்தி லிருந்தவராக மூவேந்தர் செய்யுட்களால் தெரிகிறது. (தமிழ்நாவலர்சரிதை.)

அச்சுதன்

1. எக்காலத்தும் அழிவில்லாதவன், விஷ்ணு, சிவன். 2. சண்மு சேநாவீரன்.

அச்சுதபிரேக்ஷர்

இவர், ஆனந்ததீர்த்தர் எனும் மத்வாசாரியருக்குச் சந்நியாசங் கொடுத்த ஆசாரியர். இவர் இதற்கு முன்பிறப்பில் அஸ்தினபுரத்தில் மதுகரவிருத்தி செய்திருந்து திரௌபதிதேவி தன்கரத்தாலிட்ட அன்னத்தால் நிருமலராய் இப்பிறவியில் துறவியானவர்.

அச்சுதராசன்

திருவள்ளுவர் காலத்தவன். அழகாநந்தரைப் பெற்று ஏலேலசிங்கர் புகழ்ந்தகாலத்து அக்குமந்தை மடிமேல் வரப்பெற்றவன். (திருவள்ளுவர் சரித்திரம்)

அச்சுதாலி

வாணியரில் ஒரு பகுதியர்.

அச்சுதேந்திரர்

இருஷபதீர்த்தங்கரின் எட்டாவதுபிறப்பு.

அச்சுவகண்டன்

இரத்தின பல்லவத்தரசன், மயூரகண்டன் மகன், பூலோக வித்தியாதர லோகங்கள் முழுதும் திறைபெற்று அதிபதியாயிருந்தவன். பிரதி வாசுதேவர்களி லொருவன் இவனுக்கு அச்சுவக்கிரீவன் எனவும் பெயர். (சூளாமணி).

அச்சுவசேனன்

1. ஒரு பாரத வீரன். 2. கர்ணன் குமரன்.

அச்சுவபுரம்

ஒரு வித்தியாதர நகரம். (சூளாமணி).

அச்சுவப்பெருமகன்

இவன் கேகய நாட்டின் அரசன். குற்றமற்ற புகழையுடையவன். முடியுடைமன்னன், மிக்கவீரன். தருசகன்பால் மிக்க அன்பினன். (பெருங்கதை).

அச்சுவரோக

இந்திரப் பிரத்தத்தின் வழியலிருக்குந் தீர்த்தம்.

அச்சுவேளாளர்

பட்டினவர்களுக்குள் ஒரு பகுதியர்.

அச்சோதம்

இது சோதையென்னும் நதிக் குற்பத்தி ஸ்தானம் 2. ஒரு பொய்கை. 3. காஸ்மீரத்திலுள்ள சித்த ஆச்ரமத்துக்கு அருகிலுள்ள நதி. (IN KASHMIR DEAR MARTTARDA)

அச்சோதை

இவள், ஒரு புண்ணிய நதிவடிவமான பெண் இவள் மரீசிமக்களாகிய பிதுர்க்களுக்குக் குமரி. இவள் தம்பிதுரரால் நிருமிச்சப்பட்ட அச்சோதமென்னும் நதிக்கரையில் (1000) தவஞ்செய்ய, பிதுர்க்கள் பிரத்தியக்ஷமாயினர். அவர்களுள் ஒருவனாகிய மாவசு வென்பவனை நாயகனாக எண்ண அதனால் அவள் விபசாரியாய்ச் சுவர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டுப் பூமியில் விழாது அந்தரத்து நின்று தவஞ் செய்தனள். அவள் வசமாகாத மாவசு, இச்செய்தி நடந்த தினத்தை அமாவாசை யாக்கினன். அவள் மீண்டும் அவர்களை வேண்ட தேவர் கர்மத்தைப் புசித்து, (28) வது, துவாபர யுகத்தில் ஒரு மீன் வயிற்றில் சத்தியவதியெனப் பிறந்து பராசனைக் கூடி வியாசனைப் பெற்றுப் பிறகு சந்தனுவின் தேவியாய் இரண்டு புத்திரரைப் பெற்று அப்பால் அச்சோதையெனும் புண்ணிய நதியாகவென அருளிப் போயினர். இத்தினத்தில் அப்பிதுர்க்களை நினைத்துக் கரமாதிகள் செய்யின் அவை பிதுர்ப்பிரீதியைத் தரும். (மச்சபுராணம்).

அச்மகன்

(சூ) கல்மாஷபாதன் குமரன். இவன் குமரன் மூலகன். இவன் தாய் இவனைப் பெறுங்காலத்தில் பிரசவ வேதனை யதிகமடைய வசிட்டர் அவள் வயிற்றைக் கல்லாற் கீறிச் சிசுவை வெளிப்படுத்தினர். கல்லாற் கீறப்பட்டு வந்தமையால் இவனுக்கு இப்பெயர் வந்தது, (அயோ~ம்).

அச்மரிரோகம்

இது மூத்திரரோகத்தின் வகை. இது மூத்திரத்தில் கற்களை உண்டு பண்ணுவது, இது நாபியில் நோவு, நீர், ஆட்டின் மூத்திர நாற்றமாய் வருத்தத்துடனிறங்கல், சுரம், அரோசகம் இவைகளை உண்டாக்கும். இது வாதபித்த சிலேஷ்ம் அஸ்மரிகள், சுக்லாஸ்மரி, சர்க்கராஸ்மரி எனப் பாகுபாடடையும். இதுவே கல்லடைப்பு ரோகம். இவைகளைச் சலமஞ்சரி, வெடியுப்புச் சுன்னம் முதலிய இவற்றால் வசமாக்கலாம்.

அச்மர்

ஒரு இருடி விதேக தேசாதிபதியாகிய ஜநகருக்கு ஞானோபதேசஞ் செய்தவர். (பரா~சாந்)

அச்யுதர்

சக்ரபாணியார் குமரர். இவர் குமரர் செந்தாமரைக் கண்ணர். இவர் நம்மாழ்வாருக்கு நான்காம் பாட்டர்.

அச்வ நிதேவர்கள்

விவச்சுவான் எனும் சூரியன், தன் பாரி சஞ்ஞை அல்லது துவஷ்டரை, தன்னை விட்டுப் பெட்டைக் குதிரை உருக்கொண்டு தவஞ் செய்வதையறிந்து ஆண்குதிரை உருக்கொண்டு தொடர அப்பெட்டைக் குதிரையாகிய சஞ்ஞாதேவியின் இரண்டு மூக்கின் தொளைகளிலிருந்து சூரியரேதஸால் பிறந்தவர்கள், தேவவைத்தியர், சியவநர் பாரிசுகன்னியைச் சோதித்துச் சியவநருக்கு யௌவனமளித்தவர்கள். சுகன்னியைக் காண்க. சையாதியஞ்ஞத்தில் இவர்களுக்குச் சியவநரால் சோமபானங் கொடுக்கப் பட்டது. இந்தச் சோமபானத்திற்கு இந்திரன் கோபித்து வச்சிரமெறிய இந்திரனுக்குக் கையில்வாத முண்டாயிற்று. இதனை இவர்கள் போக்கினதால் தேவர்களுடன் அவிபெற வரம் பெற்றனர். வேதமந்திரங்களில் இவர்களைப் பலவாறு கூறப்பட்டிருக்கிறது. (பாரதம்). 2. பாஸத்யன், தஸரன். இவ்விருவரும் சூர்யபுத்திரர். சம்ஞா தேவியின் மூக்கிலிருந்து பிறந்தவர் (பார~அநு).

அச்வசிரசு

அச்வநிதேவர்களால் உபாசிக்கப்பட்ட ஒரு மந்திரம்.

அச்வசிரன்

இவன் கபிலோபதேசத்தால் வனமடைந்து தவமியற்றி இஷ்டசித்தி பெற்ற அரசன். (வராஹ~புரா).

அச்வத்த பிரதக்ஷிண விரதம்

அமாவாசையில் சோமவாரம், சப்தமியுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தியுடன் கூடிய செவ்வாய்க் கிழமை, அஷ்டமியுடன் கூடிய புதன்கிழமை இத்தினங் களில் புண்ய தீர்த்த கூப நதிதீரங்களில் நித்ய கடன் முடித்துச் சங்கல்பஞ் செய்து கொண்டு திரிமூர்த்தி சொரூபமாயிருக்கும் அரசமரத்தைப் பூஜித்துக் கலசபூஜை செய்து அடி பிராமணராகவும், இலைகள் ருக்வே தமாகவும் பழங்கள் யஞ்ஞமாகவும், இளைகள் நாராயணனாகவும் எண்ணி நாராயணனையும் சிவபிரானையும் பூஜித்துப் “பின்மாத்திற்கு அபிஷேசாதிகள் நடத்திச் சோடச வுபசாரஞ்செய்து விருக்ஷராஜனை நமஸ்கரித்து (108) பிரதக்ஷிணஞ்செய்து பலத்தைக் கேட்டுத் துணை முதலியன கொடுத்துப் பிராம்மண போஜனஞ் செய்வித்து விரத மிருப்பது. இது வேதமய மாதலிஞனும், திரிமூர்த்திகளும் யஞ்ஞத்தின் பொருட்டு இவ்விருக்ஷ ரூபமான தாலும், இதனைப் பூஜிக்க வேண்டியது. புருஷராயினும், பெண்களாயினும், லக்ஷம் பிரதஷிணம் செய்யவேண்டும். இதனடியில் தம்பதிகளை லஷ்மி நாராயணராக மதித்துப் பூஜை செய்யச் சனிவாரம் உசிதம். இதனடி பிரமரூபம், மத்யம் விஷ்ணுரூபம், அக்சம் சிவரூபம் ஆதலால் அச்வத்த பூஜைசெய்க, இதனைச் செய்தோர் பலரோகங்கள் நீங்கிப் புத்ரபோக பாக்யங் களையடைவர். “பிரம்மவிஷ்ணு ருத்ர சாஷாத் அச்வத்தரூபி,” மூலம் ஸ்நாதனம் பிரம்ம கர்ப்போச்னிஸ் ஸமிதோரவி: சந்தாம்ஸி தஸ்ய பர்ணானி விருக்ஷோ சௌசவை வைஷ்ணவ: அச்வத்தசர்வ விருக்ஷாணம் அக்ரணீர் வைதிகவ” என்பதால் அரசைப் பூஜிக்க. இதைப் பூஜிக்க சதி ஸோமவாரங்கள் விசேஷம், இவ்வாறு பூஜித்துப் பிராம்மண போஜனஞ் செய்வித்துத் தக்ஷிணாதிகள் கொடுத்து விரதமிருந்து புண்யகதை கேட்க.

அச்வத்தநாராயணன்

இவன் தர்ப்பசயனத்தில் தவம்புரிந்து திருமாலருள் பெற்றவன்.

அச்வமகாராசன்

(சூ) அரசன், இவன் புத்திரனிலாது வருத்தமடைந்து பிருகு முனிவரையடைந்து புத்திரகாமேஷ்டி செய்வித்துக் கொள்கையில் நடுச்சாமத்தில் தாகம் கொண்டு யாக தீர்த்தத்தை யுண்டனன். அதனால் வயிற்றில் கருவுண்டாகி (100) வருஷம் கருச்சுமந்து மாதோதாவைப் பெற்றுச் சுவர்க்கமடைந்தவன்.

அச்வமேதன்

(சந்) சுதாநீகனுக்கு வைதேகயிடம் பிறந்தவன். சநமேசயன் பௌத்திரன். (பாரதம்).

அச்வலக்ஷணம்

குதிரைகள், சாமவேதத்தின் நாவினும், பிரமதேவர் ஓமஞ்செய்த போது அவர் கண்ணினும், அக்நியினும், அவர் கைவழியொழுகிய நீரினும், இந்திரன் முதலிய திக்குப்பாலகர் எண்மரிடத்தும், கடலிற்றோன்றிய அமுதினிடத்தும், இலக்ஷ்மி சாபத்தால், பிரமன் கோட்டானாக அக்கோட்டான் முட்டையிலும் பிறந்தன. இந்தக் குதிரைகள் பாடலம், கோடகம், இவளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், புரவி என எட்டு வகையாகக் கூறப்படும். அவற்றுள்: 1. பாடலம் என்பது, நெய்த்து மாந்தளிர் நிறமான நாவும், உயர்ந்து நீண்ட குளம்புகளும், சரியொத்த பற்களும், பாம்பின் படம்போல் விரிந்த கழுத்தும், மார்பும் கொண்டது. 2. கோடகம் என்பது, விசாலமான நெற்றியும், நீண்ட தலைமயிர் போல் ஒரு நிறமான புர்மயிரும், மூன்று கோணமாய் அழகிய கழுத்தையும் உடையது. 3. இவுளி என்பது, யுத்தத்தில் முகத்திற் கத்திகொண்டு வெட்டினும் எதிர்த்துச் சண்டை செய்ய வல்லதாய்க் குரங்கு, வேங்கை, யானை, நரி, சரபம், முயல்கள் போலும் வேகம் உடையதாம். 4. வன்னி என்பது, உன்னதமாய்ச்சங்கு, கற்கண்டுகளைப்போல் வெண்மையுடையதாய், நுரையுடையதாய்ப் பின்னமான ஒரு நிறமும், மைந்நிறமும் உள்ளதாம். 5. குதிரை என்பது, கழுத்தில் தெய்வமணியும் அஷ்டமங்கலமும் அழகிய பஞ்சகல்யாணமும் உடையதாம். 6. பரி என்பது, குங்குமம், கற்பூரம் அகில் முதலியவற்றின் மணம் வீசுவதாய்ச் சங்கு, மேகம், சரபம், சிங்கம் இவைகளைப் போல் அனுமானிப்பதாம். 7. கந்துகம் என்பது, நான்கு கால்களும் கடைந்து எடுத்து நாட்டினபோன்றதாய் கொள்ளிவட்டம் போல் வட்டம்இட்டுச் சுழல்வதாய் மேலேறின வீரன் காலுக்குள் அடங்கினதாம். 8. புரவி என்பது, மலைமேற்கோட்டையையும், கோட்டைமதில்களையும், அகழி, ஆறு முதலியவற்றையுந் தாண்டும் வலியுள்ளதாய் மேற்கூறிய இலக்கணங்கள் முழுதும் கொண்டதாம். இனிக் குதிரைகளின் பொதுநிறங்களாவன: வெள்ளி, முத்து, பால், சந்திரன், சங்கு, வெண்பனி இந்த நிறமுள்ளது வெள்ளைக்குதிரை. மாதுளம் பூ, செம்பஞ்சிக் குழம்பு இந்த நிறங்கொண்டது சிவப்புக்குதிரை, குயில், வண்டு, மேகம் இந்த நிறமுள்ளது கறுப்புக்குதிரை, கோரோசனை நிறம் உள்ளது பொன்னிறக்குதிரை. இந்த நான்கு நிறமும் கலந்து இருப்பது மிசிரக்குதிரை. முகம், மார்பு, உச்சி, வால் நான்குகால்கள் வெளுத்து இருப்பது அஷ்டமங்கலம். முகமும், நான்கு கால்களும் வெளுத்து இருப்பது பஞ்சகல்யாணியாம். எந்தநிறப் பேதங்கள் மிகுந்திருந்தாலும் வெண்மைகலந்திருப்பின் நன்றாம். கறுத்த குதிரைக்கு வயிறாயினும், மார்பாயினும் சிவந்திருந்தால் வெற்றியைத்தரும். வயிறும், மார்பும், வெண்மையாயிருக்கின் அதற்கு வாருணம் எனப்பெயர். அந்தக்குதிரை போரில் வெற்றியைத்தரும். பிடரி வெளுத்திருந்தால் உடையவனுக்குப் புத்திரலாபம் உண்டாம். மார்பு வெளுத்திருந்தால் சந்தோஷத்தைக் கொடுக்கும். மணிக்காலும், கண்டமும் வெளுத்திருந்தால் பொருள்சேரும். முகம் வெளுத்திருந்தால் வெற்றியைத் தரும். பின்பக்கத்தினிடம் வெளுத்திருந்தால் சுகங்கொடுக்கும். இடுப்பு வெளுத்திருந்தால் புத்திரப்பேறும், வலப்புறம் வெளுத்திருந்தால் தனதானியமும் பெருகும். முதுகு, வால், முகம் வெளுத்திருந்தால் ஜெயம் உண்டாம், உந்திமுதல் முன்புறமெல்லாம் சிவந்தும் பின்புறமெல்லாம் வெளுத்துமுள்ள குதிரை பகலில் வெற்றிதரும். முன்புறம் வெளுத்துப் பின்புறமெல்லாம் செந்நிறமுள்ள குதிரை இரவில் வெற்றிதரும். மூன்றுகால்கள் வெளுத்தும் ஒருகால் கறுத்தும் வெள்ளையான சுண்களும், பெருந்திண்டியும், நீல கண்டமும், பீஜமில்லாமையும், ஏற்றக்குறைவான பெரிய பீஜமும், அசைவு இல்லாமையும் தீது, முகம், வால், நான்குகால்களில் சுழிகள் இலாமையும் குற்றமாம். நரி, பூனை, காக்கை, பேய், நாய், பன்றி இவைகளின் ஓசை பெறாமல் கடல், மேகம், சங்கம், இடபம், பேரிகை இவைகளைப் போல ஓசையுடையனவாய்ப் புலி, கரடி, கழுதை, செந்நாய், பூனை, நரி, காகம், தீ, புகைகளின் நிறங்கள் பொருந்தாதனவாய், வாயுவேகத்துடன் இயைந்து, வெண்முத்து, சந்திரன், நீலரத்னம், தாமரையின் மகரந்தம், பொன், காயாம் பூ, செவ்வரத்தம் பூ, நல்ல பச்சைக்கிளி போலும் நிறம் உடையனவாய், நெற்றிபரந்து, உயர்ந்த மேல்உதட்டைப் பெற்றும் வெண்ணிறம் நிறைந்து தம்மில் வரிசையாய் ஒத்து விளங்குகின்ற பற்களையுடையனவாய், நன்மணம் வீசும்நாக்கு, மாந்தளிர் போல் சிவந்து இமையின்ம யிர்கள் திரண்டு, கண்கள் அமர்ந்த பார்வை யுடையனவாய்த் தேகத்தில் அதிகமாமிசம் இல்லாமல் உள்ளே வளைந்து முக்கோணமாயுள்ள முகத்தையுடையனவாய் வலிமை கொண்ட குளம்புகளுள்ளனவாய் நரம்புகள் புறந்தோன்றாத் தசை யுடையனவாய், முழங்கால் நெறித்தல் இல்லாமல் நெளிப்பாகிய முதுகு உடையனவாய்ப் பருத்த தொடைகள் திரண்டனவாய்க் கால்கள் நீண்டு சிவந்தன நன்று, பின்னும் இந்தக் குதிரைகள் மங்காளன், சாரங்கன், கங்காநீலன், மௌவழகன், கொங்காளன், சன்னசம்பான், குங்குமச்சோரன், கரியான், நீலன், சாரன், மள்ளான், உரஞ்சிவந்தான், நல்லான், பொல்லான், கருங்காற்சம்பான், எனப் பல நிறங்கொண்டிருக்கும். இக்குதிரைகள், காலை ஊன்றி வைக்கின் பந்து வைத்தது போலவும், நின்றால் மலைபோலவும், அனுமானிக்கின் யானை போலவும் சிங்கம் போலவும், வேகத்தில் வாயு போலவும், ஆட்டத்தில் நடிப்பவன் போலவும், நடக்கின் யானை போலவும், சிங்கம் போலவும், குலமகளிர் போலக் கவிழ்ந்தமுகமும், கருநெய்தல் போல் மணமும், கண்ணும், மேகநிறமும், மலராலும், மணத்தாலும், அலங்கரிக்கின் நீங்காத சந்தோஷமும் கொண்டன உத்தமக்குதிரைகளாம். உத்தமக்குதிரைக்கு உயரம் நூறு விரல்அளவு. மத்திமக் குதிரைக்களவு எண்பத்து நான்கு விரல், அதமக்குதிரைக்கு அளவு அறுபத்தொரு விரல். கொம்பைப் போலிருக்கும் நீண்ட காதும் முருக்கிய காதும் ஆகாவாம். இவற்றின் ஓட்டம், நாகபந்தம், விருத்தம், நெடுவீதி யெனப்படும். பின்னும் இவற்றின் சுழிகளின் இலக்கணங்களின் வகையாவன: தண்டையடியிலிருக்கிற அண்டவர்த்தம், உடலின் ஒரு புறத்திலிருக்கும் கௌவகம், காகவர்த்தம், முன்வளைச்சுழி, கேதாரிச்சுழி, காலிலிருக்கும் கேசாவர்த்தம், கச்சைநிலையிலிருக்கும் பட்டடையாகச் சொல்லப்பட்ட சுழியும் ஆகாவாம். கழுத்து அடியில் மார்க்கண்ட மிரட்டையிராமல் சிரசில் இரண்டு சுழியும், நாபியில் நான்கு சுழியும் மார்பில் இரண்டு சுழியும், நெற்றியில் ஒரு சுழியும், உதட்டில் ஒரு சுழியும் ஆகிய சுழிகள் பத்துங் குறையாது இருத்தல் நலந்தரும். கழுத்தில் வலஞ் சுழித்திருந்தால் அதைத் தெய்வமணியென்பர். முகம், தலை, மார்பு, நாசி இந்த நான்கிடங்களிலும் இரண்டு சுழிகளும், நடுநெற்றி, பின்பக்கம் இரண்டிடத்தும் ஒவ்வொரு சுழியும் பெற்ற குதிரை உத்தமம் உள்ளதாம். வெவ்வேறாக மார்பில் ஐந்து சுழிகள் இருந்தால் அதற்குச் சீரீவத்சம் எனப்பெயர். நெற்றியில் இரண்டு சுழியாவது மூன்று சுழியாவது இருக்கின் நன்று. அப்படி இல்லாவிடின் நெருக்கமாக நான்கு சுழிகள் வலஞ்சுழித்து இருக்கின் நன்மைதரும். இரண்டுசுழிகள் முன்னங்காலிலும், காலின் மூலத்தினும் இருந்தால் நலம் என்பர். கண்டத்தின் நடுவே இரட்டைச்சுழி பெற்ற குதிரை தலைவனுக்கு வறுமை, துன்பம், மரணம் இவற்றைத்தரும் என்பர். இரபட்டைச்சுழி கணைக்காலில் இருந்தால் அக்குதிரை யுடையானுக்குப் பயம், துன்பம், விலங்கு உண்டாம். மேலுதடு, முன்காலடி, கபோலம், முழங்கால் இந்நான்கிடங்களில் சுழிகளிருந்தால் தன்தலைவனைக் கொல்லும். இந்தச்சுழிகளையுடைய குதிரைகளை ஏறாமல் குதிரைக்கூடத்தில் கட்டிவைக்கினும் குற்றமாம். இந்தக் குதிரைகளுக்கு வயது முப்பத்திரண்டு, அவஸ்தை பத்து. அவஸ்தை ஒன்றுக்கு வருஷம் ஒன்று, மாதம் இரண்டு, நாள் பன்னிரண்டு என்பர். குதிரையின் மெல்லிய நடை சுவரிதகம். விரைவான நடை, ஆக்ரந்திகம். இருகாற்றூக்கி ஆடிவருநடை, வல்கிதம், சுற்றியோடல், இரேசிதம். முழுவோட்டம், புலிதம் எனப்படும். சக்கிரிதம்: வட்டமாகச் சுழன்றோடல். தௌரிதம்: கால்களை வளையாமல் விரைந்து அழகாச்செல்லல். ஆப்புலுதம்: நான்கு கால்களாலும் துள்ளிச் செல்லல். துரம்: விரைந்தோடல், மந்தம் மெலியநடை, குடிலம்: வளைந்துசெல்லல். பரிவருத்தனம் பின்னுக்குப் போதல், நடத்துவோனது குதிகால் தாக்கலால் விரைந்தோடல் தாரை. விஜயம்: தனங்களின் தடுப்பாகத்தில் இரட்டைச் சுழிகளுள்ளது புகழைத் தரும். பதுமம்: தோளினிருபக்கங்களிலும் சுழிகளையுடையது, செல்வந்தரும். பூபாலன்: மூக்கினடுவில் ஒன்று அல்லது (3) சுழிகளையுடையது. இது குதிரைகளில் சக்ரவர்த்தி. சிந்தாமணி: கழுத்திற் பெரிதாக ஒற்றைச் சுழியுள்ளது. அது பொருளையும் இன்பத்தையுந் தரும், சுற்கம்: நெற்றியிலும், கழுத்திலும் சுழிகளுள்ளது, செல்வத்தையும், புகழையும் தரும். கிருதாந்தம்: குறி, வால், திரிகம், (3) இடத்தும் சுழிகளையுடையது. இது அச்சத்தைத் தரும். சியாமகன்னம்: உடல் முழுதும் ஒரே நிறமும், செவியில் நீல நிறமுடைய குதிரை. சயமங்கலம்: வைடூர்ய நிறம் போன்ற கண்களையும் பலவகை நிறத்தினையு முடையது. தளபஞ்சி: நெற்றியில் வெண்மையும் உடல்முழுதும் வேறுநிறம் பெற்றது. இதன் விரிவை சுக்ரநீதியிற் காண்க. (திருவிளை). (சுக்~நீ).

அஜைகபாதன்

இவன் சிவகணன், இவனுக்கு நான்கு வாய், ஆயிரம்புஜம், கராளவதனம், சங்குகர்ணம், நூறு கால்களுமுடையவன். ஒரு காலத்துச் சிவபெருமானுக்கு வாகனமானவன்.

அஞ்சகன்

சகுனி புத்ரன்.

அஞ்சனகிரி

திருவேங்கட மலை. அஞ்சனை தவஞ் செய்ததால் வந்த பெயர்.

அஞ்சனகுமாரன்

விராடதேசாதிபதி. பாண்டவர் அச்வமேதம் செய்தகாலத்தில் அருச்சுநனுடன் சிநேகங் கொண்டவன்.

அஞ்சனபருவன்

பாரதயுத்தத்தில் அசுவத்தாமனாற் கொல்லப்பட்ட கடோற்கசன் குமரன்.

அஞ்சனம்

அட்டதிக்கு யானைகளில் ஒன்று, மேற்கிலுள்ளது. இதனது பெண்யானை தாமிரபரணி வருணனது.

அஞ்சனவதி

வடகிழக்கிலுள்ள திக்கு யானையாகிய சுப்பிர தீபத்தின் பிடி.

அஞ்சனவர்மன்

பாண்டவர் படைவீரன். கடோற்கசன் குமரன். (14) ஆம் போரில் அசுவத்தாமனால் இறந்தான்.

அஞ்சனுக்ஷி

தஞ்சாவூரில் இருந்த கல்வி மாதாகிய தாசி, கம்பர் இராமாயணத்திற்கு “அம்பரா அணி சடையானயன் முதல், உம்பரால் முனிவரால் யோகராலூர், இம்பராற் பிணிக்கருமி ராமவேழஞ்சேர், கம்பராம் புலவரைக் கருத்திருத்துவாம். ” எனும் துதி கூறியவள்.

அஞ்சனை

1. இவள் ஒரு காந்தருவ மாது. சாபத்தால் காமரூபிணி யென்னும் வாநரமாகக் குஞ்சரனெனும் வாநரத்திற்குப் பிறந்து கேசரியெனும் வாநரனை மணந்தவள். இவள் ஒருநாள் தன் உண்மை வடிவத்துடன் உலாவுகையில் வாயு கண்டு காமுற்று இவளைப் புணர்ந்தனன். அதனால் இவள் வயிற்றில் அநுமன் பிறந்தனன். (உத்~ரா). 2. இவள் புத்திரப்பேறு வேண்டித் திருவேங்கட மலையில் தவஞ்செய்தனள். இவ்வகையிருக்க வனப்பார்க்க வந்த ருத்ரமூர்த்தி சத்திகளிருவருக்கு, முன் ஆணும் பெண்ணுமாகிய குரங்குகள் இரண்டு நடித்துப் புணர அவற்றைக் கண்ட ருத்ரமூர்த்திக்குக் கலிதமான வீர்யத்தை வாயு ஏந்தித் தவஞ்செய்யும் அஞ்சனையின் கையில் இட்டனன். அதனைப் பழமென உட்கொண்டு அநுமனைப் பெற்றனள். (திருவேங்கடபுராணம்), 3. வடபாகத்திலிருக்கும் பெண் யானை. இதனாண் சாருவபூமம்.

அஞ்சமந்தன்

1. சூரியன். 2. அசமஞ்சசன் குமரன்; சூர்யவம்சம். இவன் குமரன் திலீபன்.

அஞ்சலன்

சாணக்கியன்.

அஞ்சி

இவன், அதியமானெடு மானஞ்சி யெனவும் பெயர் பெறுவன், அதியர் மாபினனாதலின் அதியமானெனக் கூறப்படுவான். இயற்பெயர் அஞ்சி யென்பது போலும் “ஆர்கலிநறவினதியர் கோமான், போரடு திருவிற் பொலந்தாரஞ்சி” (புறம்91.) இதனை (அகம்352) (அஞ்சி அத்தை மகனார்) என்ற வாக்கியத்தாலும் பிறவற்றாலும் அறிக. கொல்லிக் கூற்றத்து மலையினின்று இவன் பெருஞ்சேரலிரும் பொறையொடு போர்செய்தவனென்று பதிற்றுப்பத்து எட்டாம் பதிகத்தா லறிபப்படுதலால் இவனது தகடூர் கொல்லிக்கூற்றத்தின் கண்ணதெனக் கொள்க. இவன் சேரமானுக்கு உறவினனாதலால் பனை மாலையுடையவன். குதிரைமலைக்குத் தலைவன். இவன் முன்னோர்க்கு வரங்கொடுக்கும் பொருட்டுத் தகடூரின் கண்ணே வானவர் வந்து தங்கிய சோலையொன்றிருந்தது. வேற்றுநாட்டுச் சென்று அங்குள்ள கரும்பைக் கொண்டு வந்து இந்நாட்டிற் பரவச்செய்தவர் இந்த அஞ்சியின் முன்னோரே; (புறம்99) ஒரு காலத்து இவன், தன்பாற் பாடிச் சென்ற ஔவையார்க்கு யாதும் பரிசில்கொடானாகி நீட்டிப்ப அவர் வெகுண்டு மீள்வாராயினர் (புறம் 206) அதனையறிந்த அஞ்சி, பயந்து வந்து உடையும், நெல் முதலிய பிறவும் அளவு கடப்பக் கொடுத்து அவரால் புகழ்ந்து பாடப்பெற்றான். (புறம் 390) பிறிதொருபொழுது இவன் மாற்றரசனுக்கு அஞ்சித் தன்னினத்தோடு காட்டகத்து ஒளித்திருந்தனன் “சினமிகு முன்பின் வயமானஞ்சி யினங் கொண்டொளிக்கு மஞ்சுவருகவலை” (அகம்115) அஞ்சியொளித்ததினால் அஞ்சியெனப்பட்டான் எனவுங் கருதற்கிடனாகிறது. ஒரு போது இவனது கொடைத்தன்மையாற் பாண்மகளாகிய ஔவையார் புதியனவாகச் சில பாடல் பாடிப்பொருள்கூறக் கேட்டு மகிழ்ந்திருந்தனன். அதனையறிந்த இவனது அத்தை மகனாற் புகழ்ந்து பாடப் பெற்றனன் (அகம்352) வேறொருகாலத்து இவன் திருக்கோவலூரை வென்ற பொழுது பரணராற் புகழ்ந்து பாடப்பெற்றான் (அகம்342) அதனையெடுத்துக் காட்டிப் பாணராற் பாடப்பெற்ற நீயன்றோவென்று ஔவையார் சிறப்பித்துக் கூறியுள்ளார்; (புறம்கக) இவனொருகால் மலைமேற் சென்ற பொழுது அங்கு விடரிலுள்ள கருநெல்லியின் பழத்தைக் கண்டு அதனையுண்டார், சாவாது நெடுங்காலம் உயிரோடிருப் பரென்பதனை அறிந்ததனால் அப்பழத்தைப் பறித்து, வந்து ஔவையார்க்குக் கொடுத்து உண்பித்து அப்பால் அதன் சிறப்பைக் கூறி அவராற் பாடப்பெற்றான் (புறம்~91) பெருஞ்சித்திரனாரெனும் புலவர் பரிசிலுக்கு வந்திருக்கிறரென்று கேட்டவளவில் அவரை நேரிற் காணாமல் பரிசில்வர விடுத்தனன். அதனை அவர் ஏற்றுக் கொள்ளாராய் வெறுத்துப் பாடப் பெற்றான். (புறம் 209) ஔவையாரால் பலகால் புகழ்ந்து பாடப்பெற்றவன் (நற் 391) (குறு 91) (புறம் 87) நெடுநாட் பிள்ளைப்பேறின்றி அரிய தவத்தாற் பிறந்த தன்மகனைப் பார்க்க எண்ணி அப்பொழுது வேற்று நாட்டிலே தான் செய்யும் போரை நிறுத்தித் தான் கொண்ட போர்க்கோலத்தோடு வந்து நோக்கியகாலை ஔவையாராற் புகழ்ந்து பாடப் பெற்றான். (புறம் 100) இவன் கோவலூரை அழித்துக் கைக்கொண்டதனால் அதன் தலைவனாகிய மலையமான் திருமுடிக்காரி இவனை எதிர்க்க வலிவின்றித் தோற்றோடிப் போயினன். அங்கனஞ் சென்ற காரி, தான், மூவேந்தர்க்குந் துணைபோகக் கூடியவனாதலிற் (புறம் 122) பேராசனாகிய பெருஞ்சேரலிரும் பொறையை யடுத்து நிகழ்ந்தது கூறி அங்கு வைகுவானாயினான். அந்நாளிற் பெருஞ்சேரலிரும்பொறை கொல்லிமலையைத் தான் பெறவேண்டுமென்னுங் கருத்துடைய னாதலையறிந்த காரி, படையொடு சென்று கொல்லிமலையை அரசாண்டிருந்த வல்வில் லோரியைப் போரிலே கொன்று அம்மலையைச் சேரமானுக்குக் கொடுத்துவிட்டனன். (அசம் 208, 2209) அது தேன் முதலாய மிக்க வருவாயையுடையது “கொல்லி மலைத் தேன் சொரியுங் கொற்றவா” (கம்பர்) என்பதனாலறிக. பின்பு திருமுடிக்காரியின் முயற்சியாலே சேரமான் படையெடுத்துத் தகடூரை முற்றுகை செய்தான். அதனையறிந்த அஞ்சிதனக்கு நட்பாளராகிய பாண்டியனுக்குஞ் சோழனுக்குந் தூதுவிடுத்து அவர் வருவதற்குச் சிறிதுகாலம் தாழ்த்தமையாலும் தகடூர் மிக்க வீரராற் காச்சப்படுதலாலும் தன்னூர் பகைவராற் பிடித்தற் கரியதென்று எதிர்த்துப் போர்புரியாது தகடூரினுள்ளேயே இருந்துவிட்டான் (தொல். பொரு. 62, உரை). பாண்டியருஞ் சோழரும் படையொடு தனக்குத் துணையாக வந்தவுடன் அக்கொல்லிக் கூற்றத்திலியே பெரும் போர் நடந்தது (பதிற்றுப்பத்து, எட்டாம்பத்துப்பதிகம்) அப்போர் செய்தற்சூச் சேரமான் புறப்பட்டது முதல் போர்புரிந்து வென்று மீண்டுவருமளவும் நிகழ்ந்தவற்றைக் கூறு நூல் தகடூர் யாத்திரை யெனப்படும். அப்போர் நிகழுங் காலத்து ஒளவையார் பாடின பாடல்கள் பல. அப்போரில் அதியனெழினியென்பான் யானை யெறிந்த வேல் பாய்ந்திறந்தானென்று தெரிகின்றது. அஞ்சியின் மகன் பொகுட்டெழினியோ வென்றையப்படுதற் கிடமாகிறது. (அதியனெழினியருநிறத்தழுத்திய, பெருங்களிற்றெஃகம்போல, (அகம் 246) பின்னர் புண்பட்டுநின்று (புறம் 92) ஈற்றிற் பகைவரெறிந்த வேல் மார்பிலே பாய அதனாலிறந்தான்; (புறம் 235) இவனுக்குத் துணையாகி வந்த சோழனும் பாண்டியனும் தத்தங் குடையுங் கலனும் முரசும் களத்தே போட் டோடிவிட்டார்கள் (பதிற். எட்டாம் பத்து பதிகம்). அக்காலத்து ஔவையார் புலம்பியழுத பாடல் கேட்போ ரிரங்குந்தன்மையது (புறம் 235) பின்பு அவனைத் தகனஞ் செய்து விட்டு (புறம் 231) அவ்விடத்திலே கல் நாட்டிவிட்டார்கள். (புறம் 232) அஞ்சியைவென்ற பெருஞ்சேரலிரும் பொறை அவனது குதிரைமலையைக் கைப்பற்றித் தன்சேனாபதி பிட்டங் கொற்றனுக்கு முற்றூட்டாக அளித்தனன். இவனை நற்றிணையிற் பாடியவள் ஒளவை. இந்த அஞ்சி மரபு கி. பி, பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்னரும் இருந்ததாகத் தெரிகிறது; இது விடுகாதழகிய பெருமாள் சாதனமொன்றில் வரும். “வஞ்சியர் குலபதியெழினி வகுத்த வியக்கரியக்கியரோ, டெஞ்சிய வழிவு திருத்தியெண்குண விறைவனை மலைவைத்தான், அஞ்சி தன் வழிவருமவன் முதலிகலதிகன வதனநூல் விஞ்சையர் தகைமையர் காவலன் விடுகாதழகய பெருமாளே” என்னுஞ் செய்யுளாற் புலப்படுகின்றது.

அஞ்சியத்தைமகனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு).

அஞ்சிலஞ்சியார்

இவர் அஞ்சில் எனும் ஊரினராக இருக்கலாம். இவர் இயற்பெயர். அஞ்சியார். இவர் நற்றிணையில் மருதத்தைப் பாடியுள்ளார். (நற்றிணை).

அஞ்சிலாந்தையார்

இவர் அஞ்சில் எனும் ஊரிலிருந்தவராகக் காணப்படுகிறது. இவர் அவ்வூரிலிருந்த ஆதன் என்பானுக்குத் தந்தையாராக இருக்கலாம். ஆதன் தந்தை ஆந்தை இவர் நற்றிணையினும் குறுந்தொகையினும் ஒவ்வொரு செய்யுள்; பாடியவர். (நற்றிணை).

அஞ்சுமதி

சத்தியாதனனைக் காண்க.

அஞ்சுமான்

மருசியின் தந்தை. (சூளாமணி)

அஞ்சுலன்

இவன் சாணக்கிய குலத்தவன் இராஜநீதி நூலாசிரியன்.

அஞ்ஞ

பள்ளரில் ஒரு வகையர்.

அஞ்ஞாதம்

வாதியும் சபையிலுள்ளவர்களும், வாக்யார்த்தத்தை யறியாதிருத்தல். (சிவ~சித்)

அடமானன்

மேகசுவாதி குமரன். இவன் குமரன் அரிஷ்டகாமன்.

அடவிநன்னாடுஐம்பது

இடவகனுக்குச் சீவிதமாக உதயணனாற் கொடுக்கப்பட்டவை. (பெருங்கதை).

அடவியாசன்

தருசகனோடு போர் செய்தற்கு வந்து தோற்றுப்போன அரசர் எழுவர்களுள் ஒருவன். (பெருங்கதை).

அடி

தளைகள் ஒன்றும் பலவுமடுத்து வருவது அது, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐவகைப்படும். பின்னும் அதனை 1. இயலடி 2. உரியடி, 3. பொதுவடி என்னுந்தொகையானும்; 1. குறளடி, 2. சிந்தடி, 3 அளவடி, 4. நெடிலடி, 5. கழிநெடிலடி என்னும் வகையானும்; 1. இயற்குறளடி, 2. உரிக்குறளடி, 3. பொதுக்குறளடி, 4. இயற்சிந்தடி, 5. உரிச்சிந்தடி, 6. பொதுச்சிந்தடி, 7. இயலளவடி, 8. உரியளவடி, 9. பொதுவளவடி, 10. இயனெடிலடி, 11. உரிநெடிலடி, 12. பொதுநெடிலடி, 13. இயற்கழிநெடிலடி, 14. உரிக்கழிநெடிலடி 15. பொதுக்கழிநெடிலடி என்னும் விரியானும் பலப்படக் கூறுவர். (யா~வி).

அடிகளின்வகை

இருசீரான் வருவது குறளடி, முச்சீரான் வருவது சிந்தடி, நாற்சீரான் வருவது அளவடி, ஐஞ்சீரான் வருவது நெடிலடி, ஐஞ்சீரின் மிக்குவருவன கழிநெடிலடியாம்.

அடிகள்

இவர்கள் அடிமைகளாகத் திருவாங்கூரில் கூறப்படுவோர். இது உயர்ந்தவர்களுக்கும் பட்டமாகக் கூறப்படுகிறது.

அடிடவயிரவர்

காளியைக் காண்க. இவ்வயிரவராவார், சுதந்திரவயிரவன், சுவேச் சாவயிரவன், உலோகவயிரவன், காலவயிபவன், உக்ரவயிரவன், பிரச்சையா வயிரவன், நின்மாணவயிரவன், பூஷணவயிரவன். மற்றொருவகை, சங்காரகாலவயிரவன், அசிதாங்கவயிரவன், குரோதவயிரவன், சண்டவயிரவன், உன்மத்தவயிரவன், கபாலவயிரவன், விபீஷணவயிரவன், மார்த்தாண்டவயிரவன் எனவுங் கூறுவர்.

அடிதானவன்

அந்தகாசுரன் குமாரன். இவன் தன் னுண்மையுருவத்தால் யாரும் வெல்லாதிருக்க வரம்பெற்றவன். இவன் ஒருகால், பார்வதியார் உருக்கொண்டு சிவமூர்த்தியிடஞ் செல்லுகையில் கபடமறிந்த சிவமூர்த்தி இவனைக் கொன்றனர்.

அடிப்படவிருந்தல்

பகைவர் தாம் சினத்தை உமிழத்தன் ஆணையை ஏற்றுக்கொண்டு நாடுவழிப்பட நெடுங்காலம் இருந்த இருப்பிலே இருந்தது. (பு~வெ).

அடிமறிமண்டிலஆசிரியப்பா

எல்லா அடியுமள வொத்து எவ்வடியை முதனடு இறுதியாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது நிற்பது. (யாப்பு~இ).

அடிமறிமாற்றுப்பொருள்கோள்

செய்யுளிலுள்ள அடிகளைப் பொருளுக் கேற்குமிடத்து எடுத்துக் கூட்டினுமிசையும் பொருளுமாறாதது. (நன்).

அடியான்

வேலைக்காரன். இவன் தம்பிரான்களுக்கு வேலை செய்பவன்.

அடியார்க்குநல்லார்

சிலப்பதிகார உரையாசிரியர். இவரது நாடு முதலியவை நன்கு புலப்படவில்லை. இவர் நிரம்பையென்னும் ஊரிற் பிறந்தவர் என்பதை “ஆருந் தெரியவுரை விரித்தானடியார்க்கு நல்லான், காருந் தருவுமனையானி ரம்பையர் காவலனே” என்பதால் அறிக. இவர் பொப்பணகாங்கயன் காலத்திலிருந்தவர் என்பதை “காற்றைப்பிடித்து. பொப்பைய காங்கயன் கோனளித்த. கொல்வித்ததே” என்பதால் அறிக. 2. மதுரையில் உலவாக் கோட்டை பெற்ற அடியவர்.

அடியோடி

அடிமை. மலைநாட்டைச் சேர்ந்தவன்.

அடுட்டன்

மலைநாட்டு அம்பட்டன.

அடுப்பு

இது சமைத்தற்றொழிலுக்கும் வேறுகாரியங்களுக்கும் உபயோகப்படும் நெருப்பின் இருக்கை இது ஒற்றையடுப்பு, கிளையடுப்பு, இரட்டையடுப்பு, கரியடுப்பு, இரும்படுப்பு, காளவாயடுப்பு, நெல் அவிக்கும் அடுப்பு, வெள்ளாவி அடுப்பு எனப் பலவகைப்படும்.

அடைநெடுங்கல்லியார்

இவர் ஒரு தமிழ்ப்புலவர். புறநானூற்றில் மருதத்தைப் பாடியவர். இவர் ஊர் விளங்கவில்லை (புற~று).

அட்டகன்

விச்வாமித்திரன் குமாரர்களில் ஒருவன். (2) யயாதியின் தௌகித்ரன். யயாதியிடம் தருமங் கேட்டுச்சுவர்க்கமடைந்தவன். (மச்சபுராணம்)

அட்டகோணமகருஷி

1, கண்டுவருஷியின் புத்திரர். சுப்பிரபையை மணக்க மாமன் சொற்படி குபேரனைக்கண்டு அங்கனம் நிற்கையில், ஒரு பெண் இவரை மயக்க, மயங்காது பிரமசர்ய விரதம் பூண்டிருந்து மீண்டு தம் பதிக்கே வந்து வதான்ய முனிவன் பெண்ணை மணந்தவர். 2. இவர், தம் தாயுடன் பிறந்தார் கணவராகிய தானவரிடம், வேத முதலிய வுணர்ந்து தம் தந்தையை வெற்றி கொண்ட வந்திகரை வென்று தந்தைக்கு வெற்றி கூறிக் களித்தவர். 3. இவர், இருந்த இடத்தில் விஷ்ணு, பிரமன், உரோமமகருஷி முதலியோர் வந்து ஆயுட்காலங் கேட்டுச் சென்றனர். 4. இவர் யமுனைக்கரையில் தவம் புரிகையில், தீர்த்தமாடவந்த மந்தாதாவின் புதல்வியர் இவரழகைக்கண்டு மணந்து, இவர் நிற்கக் கோணலிருந்தமை கண்டு மறுக்க, அதனால் கோபித்து அப்பெண்களைக் கூனிகளாகச் சபித்தவர். 5. இவர், சத்தியவுலகு சென்று பிரமனைத் தொழ இவரது நிலை கண்டு சரஸ்வதி சிரித்தனள். முனிவர் கோபித்துப் பூமியில் பெண்ணாக வெனச் சபிக்க, அவ்வகையே காசியரசன் புத்திரியாகப் பிறந்தனள். அரசன், இவளை ஒரு வேதியனுக்குக் குமரியாகத் தந்தனன். அவ்வேதியனிடம் வளர்ந்து மற்றொருவனை மணந்து ஒரு குமரனைப் பெற்று அவனுக்குச் சாரஸ்வதன் எனப் பெயரிட்டு வேதமுதலிய ஓதுவித்து வந்தனள். இவ்வாறிருக்க க்ஷாமத்தால் வருந்திய இருடிகள், கங்காசலம் குடித்துச் சிறிது நாளிருப்போமென்று எண்ணிக் கங்கைக்கரைக்குச் சென்றனர். அவ்விடம் வேதமோதும் சாரஸ்வதன் படனத்தைக் கேட்டுத் தவறென, சாரஸ்வதன் நான் கூறுவது தவறன்றென்று பிரமனிடஞ் செல்லப், பிரமன், புல்லாரண்யம்வந்து அவ்விடமிருந்த அரசமரத்தைக் காட்டி நீங்கள் ஓதுவதில் தவறுளவானால் தவறொன்றிற்கு மரமசையும், தவறிலாதிருக்கின் மரமசையாதென்ன, இருடிகள் ஓதப் பலமுறை மரமசையக் கண்டனர். சாரஸ்வதனோத, மரமசையாதிருத்தல் கண்டு பாடத்தைத் திருத்தினர். அநேக பத்தரைக் காண்க. உரோமமுனியைக் காண்க. உரோமருஷ ஒருவர் இறந்தால் இவருக்கு ஒருகோணநிமிரும். இவரைக் ககோடருஷியின் குமரர் எனவும், தாய் உத்தாலகருஷியின் குமரியெனவுங் கூறுவர். இவர் தந்தை, ஒரு புத்தனுடன் வாதிட்டு நீரில் மூழ்குஞ் சமயத்தில் தந்தைக்கு உதவி செய்ததால் தந்தைகளிப்புற்று இவரைச் சாமங்க நதியில் மூழ்குவித்துக் கோணலை நிமிர்த்தினர்.

அட்டசித்தி

அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பனவாம். அவற்றுள் அணிமா: ஆன்மாவைப் போலணுவாதல். மகிமா: மகத்தாதல், கரிமா: தன்னுடல் கண்டிப்பின்றாய்க் கண்டிப்புள்ளவற்றை யுருவவல்லனாதல். இலகிமா: இலகுத்துவமாதல். பிராப்தி: வேண்டுவன அடைதல், பிராகாமியம்: நிறையுள்ளானாதல். ஈசத்துவம்: ஆட்சியுளனாதல். வசித்துவம்: தன்வசமாக்க வல்லவனாதல்,

அட்டதிக்கஜம்

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம், இவற்றின்பெண்யானைகள், முறையேஅப்பிரமை, கபிலை, பிங்களை, அனுபை, தாம்பிரபர்ணி, சுபதந்தி, அங்கனை, அஞ்சநாவதி.

அட்டதிக்குப்பாலகர்

இந்திரன், அக்நி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். இவர்களின்உருவம். இந்திரன் : ஐராவதமென்னும் யானைவாகன முடையவனாய்த் தங்கமயசரீசம் உற்றவனாய்க் கிரீடம் ஆயிரங் கண்கள் வச்ராயுத உடையனாபிருப்பன். அக்நி : ஏழு பிரிவினையுடைய சுவாலை, ஜபமாலை, கமண்டலம், சிவப்புவர்ணம், ஜ்வாலாமாலை, சத்தி, ஆயுதம், நாகாசனம் உடையனாயிருப்பன்யமன் : எருமைவாகனம், தண்டம், பயங்கரமான முகம், கபாலம், பாசம், கறுத்தநிறம் உடையனாயிருப்பன். நிருதி : ரத்தக்கண், பிணவாஹனம், நீலோத்பலநிறம், வாளேந்திய கை, ரத்தபானங்களையுடைய ராக்ஷஸ சேனை உடையனாயிருப்பன். வருணன் : நாகபாசத்தைத் தரித்தவனாயும், ரத்தப்பிரகாசம், சந்திரனையொத்த வெண்மை, மகராசனம் உடையனாயிருப்பன். வாயு : பெருத்தவுரு, பச்சைநிறம், அசையும் தவஜம், பிராணாதாரபூதம், மான்வாஹனம் உடையனாயிருப்பன். குபரன் : நரவாகனம், பெருமிதம் வளைந்தவுருவம், பொன்னிறம், கையிற் கதாயுதம் உடையனாயிருப்பன். ஈசானர் : ருஷபாரூடம், மூவிலைச் சூலம், சர்ப்பாபரணம், சரத்கால சந்திரவர்ணம், சந்திரமௌலி, முக்கண் உடையராயிருப்பர். (அ.பத்ததி)

அட்டமங்கலம்

1. கண்ணாடி, நிறைகுடம், கொடி, சாமரம், தோட்டி, முரசு, விளக்கு, இணைக்கயல். (புராணம்). 2. கண்ணாடி, பூர்ணகும்பம், ருஷபம், இரட்டை வெண்சாமரம், லக்ஷ்மியுரு, ஸ்வஸ்திகம், சங்கம், தீபம், இவற்றையுடையார், ஊர்வசி, மேனகை, ரம்பை, திலோத்தமை, சுமுகீ, சுந்தரி, காமினி, காமவர்த்தினி என்பவர்களாம். (ஆகமம்).

அட்டமணம்

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம். இவற்றின் விரிவை மணத்திற்காண்க.

அட்டமாநாகர்

அநந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன்.

அட்டமூர்த்தம்

பிருதிவி முதலிய ஐந்து பூதங்களிலும் சூரியன், சந்திரன், ஆன்மா முதலிய இடங்களிலும் அந்தர்யாமியாகிய சிவமூர்த்தம். இவற்றின் அதிதேவதையர்: பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்ரன், மகாதேவன், உருத்திரன். இவர்களின் தேவியார்: உஷை, சுகேசி, சிவா, சுவாகா, திசை, தீக்ஷை, ரோகணி, சுவர்ச்சலை. புத்திரர்: சுக்ரன், செவ்வாய், அநுமான், கந்தன், சுவர்க்கன், சந்தானன், புதன், சநேச்சுரன். பிரமனுக்கு இவ்வுருக் கொண்டு சிருட்டித்தொழில் அறிவிக்கவந்த மூர்த்தங்களெனவுங் கூறுவர்.

அட்டவக்கிரன்

ருஷி. ககோலன் புத்திரன் வித்தாலகனுடைய தௌகித்திரன் தாய். சுஜாதா.

அட்டவசுக்கள்

அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலியவர்கள். இவர்கள் பிரமன்புத்திரர்கள் எனவும், தக்ஷன் குமரிகளாகிய பதின்மரில் வசு என்பவளுக்குப் பிறந்தவர்கள் எனவுங் கூறுவர். இவர்கள் வசிட்ட ஒமதேனுவைத் திருடி அவரால் மனிதப்பிறவி பெறச் சபிக்கப்பட்டுச் சந்தனுவின் தேவியாகிய கங்கையிடம் ஜனித்தனர். இவர்களுள் மிகுந்த குற்றவாளியாகிய பிரபாசன், மற்றவசுக்களும் பிறந்து தாயால் கங்கையில் எறியப்பட்டதற்குப் பிறகு, தான் பிறந்து, அரசன் தன்பாரியைக் குழந்தையைக் கொல்லாதிருக்க வேண்ட வளர்ந்து பீஷ்மாச்சாரி யாயினன். (பாரதம்).

அட்டவர்க்கம்

இந்திர விக்காறெட்டாமம் புலிக்கொன், றொட்டுசனிசேய் முப்பத்தொன்பதாம் இட்டபுதற், கைம்பத்தினான்கு குருக்காறெட்டோ, டெட்டாமைம் பத்திரண்டு புதற்காம் இவ்வாறு அந்தந்தக் கிரகங்களுக்குச் சொன்ன பரலை அந்தக்தக் கிரகங்களிருக்கிற வீடு முதலாகக் கொண்டு லக்னத்தைத் தொட்டும்எண்ணிப் போடுவது.

அட்டவித்யேச்வார்

இவர்கள் மாயைக்கு மேல் சுத்தவித்தைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள். அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேதரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி; இவர்களின், உரு, அஷ்டதிக்குப் பாலகர் எண்மரின் நிறம், ஒருமுகம், அஞ்சலி அத்தம், முக்கண், சந்திரசடாமகுடம், சூலம், கண்ணாடியுடைமை.

அட்டாங்கஇருதயம்

வாகபடரால் வடமொழியில் செய்யப்பட்ட வைத்தியநூல், இது (120) அத்யாயங்களுடையது.

அட்டாலைமண்டபம்

திரு ஆலவாயிலில் இப்பெயருள்ள மண்டபமொன்று பண்டைக்காலத்திற் கீழை மதிலைச்சார இருந்ததென்று தெரிகிறது; இக்காலத்து மண்டயூர்த் தெப்பக்குளத்தின் வாயுமூலையில் (16) கால்களால் ஆகியதோர் மண்டபமாக இருக்கிறது. இதற்கு வடக்கேயுள்ளது யானைமலை. (திருவிளையாடல்).

அணி

இது, மாடத்திற்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும், ஆடமைத் தோள் நல்லார்க்கு அணியும் போல் செய்யுளை அலங்கரிப்பதான அணியிலக்கணமாம். இது சொல்லணி, பொருளணியென இரண்டாம்.

அணிகலன்கள்

மக்கள், பொன் வெள்ளி முதலியவற்றால் அணிந்து கொள்ளும் அணிகளாம். ஆண் அணிகளாவன: முடி, குண்டலம், வாகுவலயம், வீரகண்டை, அரைஞாண் முதலியன. பெண்களின் அணிகளாவன: கால்விரல் அணிகள், மகரவாய் மோதிரம், பீலி, கான் மோதிரம் முதலியன. காலணிகளாவன: பாதசாலம், சிலம்பு, பாடகம், சதங்கை, காற்சரி, பரியகம் முதலியன. தொடையில் அணி ஆபரணமாவது: குறங்குசெறி என்பது. அல்குலிடத்து அணிவது: விரிசிகை என்னும் அணி. தோளிடத்தணிவது: மாணிக்க வளை, முத்து வளை. கையணியாவது: சூடகமும், பொன் வளையும், நவமணி வளையும், சங்க வளையும், பவழ வளையுமாம். கைவிரல் அணியாவது: நெறி, பலரத்தினங்கள் இழைத்த மோதிரங்கள், கழுத்தணிகளாவன: வீரசங்கிலி, நேர்ஞ்சங்கிலி, பொன்னூல், சவடி, சரப்பளி. காதில் அணிவன: கடிப்பிணை, வாளி, குழை முதலிய. தற்காலத்தவர் காலத்திற்கு இயைந்தபடி பலவகைப் படச்செய்து அணிவர். தலைக்கு அணிகலன்களாவன: சீதேவியார் எனும்பணி, வலம்புரிச்சங்கும், பூரப்பாளையும், தென்பல்லி வடபல்லியும், புல்லகமும், சூளாமணி, பொன்னரிமாலை முதலியன, இடைக்கணி முதலிய இக்காலத்து அணிகள் ஒட்டியாணம் முதலியவாம். மூக்கிலும், காதிலும் இக்காலத்து அணியும் அணிகள் பலவுள அவற்றை அறிந்துதெரிக. பின்னும் ஆடவர் அணிவது: முடி, பதக்கம், தோளணி, குண்டலம், காதணி, குணுக்கு, தோடு, கங்கணம், கைவளை, சுட்டி, பட்டம், பாத கிண்கிணி, சதங்கை, சிலம்பு. காற்சரி, பாதசாலம், பாடகம், ஓசை செய்தளை, கழல், பெண்களணியாவன: காஞ்சி, மேகலை, கலாபம், பருமம், விரிசிகை, அரைப்பட்டிகை, அரைஞாண், செவிமலர்ப்பூ, ஆழி, பூணுநூல், நுதலணி, தெய்வவுத்தி, தலைக்கோலம், தலைப்பாளை, கிம்புரி, பெருஞ்சூட்டு, சரப்பணி, மதாணி முதலிய.

அணியியலுடையார்

ஓர் தமிழாசிரியர்.

அணியியல்

ஒரு அணியிலக்கணம்.

அணிலன்

வசுக்களிலொருவன். பிரசாபதிக்குச் சுசனையிடம் பிறந்தவன், மனைவி சிவை, குமரர் புரோசநன், அவிக்யாதமதி.

அணிலாடுழன்றிலார்

‘பெண்பாலர்’ இவர் கணவன் பிரிவுகண்டு வருந்திய தலைவியினிலை அணிலாடு முன்றில் போல புல்லென்றிருந்ததெனக் குறுந்தொகையில் “காதலருழை. மக்கள் போகிய வணிலாடு முன்றில்” என்ற செய்யுள் பாடியதால் இப்பெயர் பெற்றனர். (குறுந்தொகை).

அணில்

இது சிறிய உருவமுள்ள பிராணி. இதன் தேகம் மயிரடர்ந்து மூன்று வரிகளைப் பெற்றிருக்கும். தலை உருண்டவடிவானது. சாம்பல் நிறமுள்ளது. வயிற்றின் ரோமம் வெண்மை. இதன் உடல் சற்று நீண்டிருக்கும். இது ஓடித்திரிகையில் வாலைத் தூக்கிக்கொள்ளும், காதுகள் மேனோக்கியும், கண்கள் உருண்டும் இருக்கும். இதன் பற்கள் முன்னீண்டிருக்கும். பற்களின் உதவியால் கடினமான கொட்டைகளையும் பிளந்து வித்தைத்தின்னும், அணிலின் முன்னங்கால் பின்னவற்றினும் சிறியவை. இது குதித்துக் குதித்து ஓடும். இது இரைகளைத் தின்கையில் பின்னங்காலிற் குந்திக்கொண்டும் வாலையுயர்த்திக் கொண்டு முன்காலில் இரையைப் பற்றித் தின்னும். இது சிறு கொடிகளின் மேற் செல்கையில் வாலினுதவியால் உடற்பாகத்தைச் சரிப்படுத்திக் கொள்கிறது. இச்சாதியில் வெள்ளணில் எனவும், பறக்கும் அணில் எனவும், பெருஞ் செவ்வணில், சிறுநரை அணில் எனப் பேதமுண்டு, பறக்குமணிலுக்கு இறகுகளில்லை ஆயினும், முன்பின் கால்களுக்கு ஒரு தடித்த தோல் உண்டு, அதன் உதவியால் (30) அடிகளுக்கு மேல் பாயும்.

அணிவகுப்பு

ஆனை 10, தேர் 3, குதிரை 100, காலாள் (1000) இவை கொண்டது பதாதி. இந்தப் பதாதி (82) கொண்டது ஒரு தண்டு, தண்டின் தொகை தேர் 146, யானை 8200, குதிரை 80200, காலாள் 8200, இவ்வகையான தண்டு (100) கொண்டது ஒரு அக்குரோணி. இன்னும் அக்குரோணிக்கு தேர் 24600, குதிரை 82000, ஆனை 8200, காலாள் 88 லக்ஷம் என்றும் கூறுவர். பின்னும் யானை (25) ஒரு அக்குரோணி எனவும், குதிரை (85) ஒரு மொத்தம் எனவும் கூறுவர். பின்னொரு வகை 1 யானை, 3 குதிரை, 1 ரதம், 5 காலாள் கொண்டது ஒரு பத்தி. இந்தப்பத்தி மூன்று கொண்டது சேனாமுகம். சேனாமுகம் மூன்று கொண்டது குமுதம். குமுதம் மூன்று கொண்டது கணம். கணம் மூன்று கொண்டது வாகினி. வாகினி மூன்று கொண்டது பிரளயம். பிரளயம் மூன்று கொண்டது சமுத்திரம். சமுத்திரம் மூன்று கொண்டது அநீகினி. அநீகினி பத்து கொண்டது அஷோகிணி எனப்படும். அக்குரோணிக்கு தேர் 2187O, யானை 21870 குதிரை 95610, காலாள் 109350 எனவுங் கூறுவர். பின்னும் இச்சேனையை நிறுத்தும் வகை தண்டம், போகம், மண்டலம், என மூவகை எனவும், தண்டம் சேனையைக் குறுக்காக நிறுத்துதல் எனவும், அவற்றின் பிரிவு (17) வகை எனவும், போகம் சதுர் அங்கங்களையும் ஒன்றின்பின் ஒன்று நிறுத்துகை எனவும், அவற்றின் பேதம் (5) எனவும், மண்டலம் வட்டமாக சர்ப்பசரீரம் போல் நிறுத்துகை எனவும், அவற்றின் பேதம் ஸர்வதோபத்ரம் முதலிய துர்ச்சயபேதங்கள் எனவும் கூறுப. இவற்றின் விரிவை அவ்விலக்கணம் சொன்ன நூல்களுள் பார்க்கக் காண்க, பின்னொருவிதம் சமுத்திரம் (3) கொண்டது சங்கம். சங்கம் (3) கொண்டது அநீகம். அநீகம் (3) கொண்டது அக்குரோணி எனவும், அந்த அக்குரோணி (8) கொண்டது ஏகம். ஏகம் (8) கொண்டது. கோடி, கோடி (8) கொண்டது மகாசங்கம், மகாசங்கம் (8) கொண்டது விந்தம். விந்தம் (8) கொண்டது குமுதம். குமுதம் (8) கொண்டது பதுமம். பதுமம் (8) கொண்டது நாடு, நாடு (8) கொண்டது சமுத்திரம். சமுத்திரம் (8) கொண்டது வெள்ளம். இவ்வகைப் பத்திகொண்ட சேனைகளை வியூகமாக வகுக்க வேண்டியது. அந்தவியூகம் பலவகைப்படும். அவற்றுள் சில வருமாறு தெண்டவியூகம், சகடவியூகம், வராகவியூகம், மச்சவியூகம், சூசிகாவியூகம், காரூடவியூகம். அவற்றுள்: தெண்டவியூகமாவது: முன்னே சேனைத்தலைவனும், நடுவில் அரசனும், பின் சேனாபதியும், இருபுறமும் யானை, குதிரைகளும் இதற்கப்புறம் காலாட்களும் இருப்பது. சகடவியூகமாவது: முன்னே கொஞ்சஞ் சேனையும், பின்னால் அதிகசேனையுமாக இருப்பது, வராகவியூகமாவது: முன்னும் பின்னும் சொற்ப சேனைகளும் இடையில் பெருஞ்சேனைகளைக் கொண்டிருப்பது. மச்சவியூகமாவது: சிற்றெறும்பின் ஒழுங்கு போல்வது. காருடவியூகமாவது: கருடனை ஒப்பது. சூசீகாவியூகமாவது: சூசியை யொப்பது. தெண்டவியூகத்தால் நாற்புறத்தும் சண்டை நேரிடுகையிலும், சகடவியூகத்தால் பின்னால் பயம் உண்டாகும் போதும், வராகவியூகம், காரூடவியூகம், இவற்றால் இரு பக்கத்திலும் பயமுண்டாகும் போதும், மச்ச வியூகத்தால் முன்னும் பின்னும் பயமுண்டாகும் போதும், சூசிகாவியூகத்தால் முன்னே பயமுண்டாகும் போதும் எதிர்க்க வேண்டும்.

அணு

1. யயாதி குமரனில் ஒருவன். 2. (10) குருவசன் குமரன். 3. கபோதலோமன் குமரன்.

அணுகன்

1. விப்பிரசன் குமரன். இவன் பாரிகீர்த்திமதி. இவன் சுகர் குமரியாகிய கிருத்தியிடத்தில் பிரமதத்தனைப் பெற்றான். 2. அநாயுவுக்கு ஒரு பெயர். 3. அணுசதாசிவர்கள். சதாசிவதத்வ புவனவாசிகள் காண்க.

அண்டகோசலக்ஷணம்

இவ்வண்டமானது, நூறு கோடி யோசனை யுயரமும், நூறு கோடி யோசனை பரப்பும் உள்ளதாம். இவ்வகை ஆயிரங்கோடி அண்டங்களுண்டு. இந்தத் தூலப்பிருதிவியில் ஒரு அண்டலக்ஷணமாவது, ஒரு அண்டத்தின்கனம் ஒருகோடி யோசனை, இது, மந்தமாய்ப் பொன்னிறமான வர்ணமுடையதாய்ச் சுற்றும் அற்புத யோசனைபடுவான தூலமுடையதாய் (100) கோடி யோசனை யுயரமும் மகம்மேருவிற்கு மகம்மேருகூடச் சுற்றும் (100) கோடி யோசனை பரப்புமாயிருக்கிறது. இப்பிரமாண்டத்தைப் பிரமதேவன் கொப்பரை யாகாரமாய் இரண்டு சிப்பிகள் செய்து தானதிற்புகுந்து நடுவாக விருந்து கொண்டு கரண்டகம் போலக் கீழ்மேல்சிப்பியை யமிழ்த்தி யதிற்புவனரஸனைகள் செய்கையினாலே இதற்கு பிரமாண்டமென்று பெயருண்டாயிற்று. இப்பிரமாண்டத்தைச் சுற்றி வாரி பூரிதமாயிருக்கும். இந்த வாரியில் திவ்யசிங்காதனத்திலிருந்து கொண்டு ஜலஸ்தம்பமாய் விளங்குவது ஆதாரசத்தி. இது சர்வசோபித சர்வாயுதத்துடன் ஹிரண்மயச்வ ரூபமாயிருக்கும். இச்சத்தி ஈச்வரத்யானமாயிருக்கும். இச்சத்தியின் சிரத்தில் இரண்மயகமலம் போல் (100). கோடி யோசனை அகலமாய்ச் சுவர்ண மயமான கூர்மம் இருக்கும். இந்தக் கூர்மத்தின் முதுகில் அஷ்டதிக்கிலும் அஷ்டகஜங்களிருக்கும். இவற்றின் நடுவே எட்டுத்திக்கிலும் எட்டு நாகங்களிருக்கும். இந்த நாகங்கள் (30,000) யோசனை அகலமான (10000) சிரசுகளுடன் பிடரியை வளைத்துப் படங்களால் (8) திக்குகளையும் தாங்கிக்கொண்டிருக்கும். மேற்சொன்ன கூர்மத்தின் நடுமுதுகில் மகாசேஷனிருக்கும். இச்சேஷன் படமீதில் கோடி யோசனை கனமுள்ள சர்வாதாரமான சுவர்ணமய பூமியிருக்கும். இக்கடாகபூமியின் புறத்தில் துவாரவாசற் காவலாளராய் (100) ருத்திரரிப்பர். இந்தக் கடாகத்தினுள்ளில் இந்திராதி தேவர்களுடன் பத்துத்திக்கினும் (10) ருத்திரர் இருப்பர். அவர்க்கு மத்தியில் நாயகராய்க் காலாக்னிருத்ரர், தம் காலாக்னிருக்ர புவனத்திலிருப்பர். இவர்கள் புவனம், ஐந்து கோடி யோசனை அகலமும் ஒரு கோடி யோசனை உயரமுமாயிருக்கும். இப்புவனத்தின் புகை (5) கோடி யோசனை. இப்புகையின் மேல் யமன் ஆக்ஞையால் (90) லக்ஷம் யோசனை வெளிக்குமேல் (33) பட்டணங்களுண்டு. அவற்றின் மேல் (28) இராஜ நரகங்களாய் ஒவ்வொன்றை ஒவ்வொரு கோடி நரகம் தற்சூழ (28) கோடி நரகங்களிருக்கும். இந்த நரகங்களின் மேல் (30000) யோசனை வெளியுண்டு, இதன்மேல் (9) லக்ஷம் யொசனை பூமியுண்டு, இதற்கு மேற்புறம் (4?) லக்ஷம் யோசனை சுவர்ண பூமியிருக்கும். மற்ற (4?) லக்ஷம் யோசனை கிழக்குத் திசையிற் பொன்மயமாயும் இருப்பு மயமாயும் பூமியிருக்கும். இந்த (9) லக்ஷத்திற்கும் முன் சொன்ன நரகங்களுக்கும் அதிபதியான யமனுக்கும் கூஷ்மாண்டர் தலைவராயிருப்பர். இவரிருக்கும் புவனம் கூஷ்மாண்ட புவனம் எனப்படும். இந்தக்கூஷ் மாண்டத்தின் மேல் பல்லாயிரம் உயரமாய் ஒவ்வொன்று (10,000) யோசனை உயரமும் (20,000) யோசனை அகலமுமாய் ஏழு பாதாளங்கள் (70,000) யோசனை கூடியதாயிருக்கும். அப்பாதாளங்களாவன: மகாதல, ரசாதல, தராதல, சுதல, நிதல, விதல, அதலம் என்பவை. இவை முறையே பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், இரும்பு, மணல், மண் ஆனவையாம். இவ்வேழிற்கும் பலன் முதலிய ஏழு அரசர்களிருப்பர். இவை ஒவ்வொன்றிலும் மூன்று பாகமாய்த் தயித்தியர், புஜங்கர், ராக்ஷதர் இருப்பர். இந்தப் பாதாளத்தில் (8) லக்ஷம் கன்னியர் இருப்பர். இவர்களுடைய தேககாந்தியால் அப்பாதளங்கள் சூரியவொளியிலாது பிரகாசித்துக் கொண்டிருக்கும். இப்பாதளங்களின் மேல் (2) கோடி (88) லக்ஷம் யோசனைகளுக்கு மேல் முன்சொன்ன ஏழு பாதாளங்களுக்குந் தலைவராய் ஆடகேசாபுவனத்தில் ஆடகேசுரர் இருப்பர். இதன்மேல் பூமி ஒரு கோடி யோசனை உயாம்; அதற்கு மேல் பூலோகம் இருக்கும். இனி பூலோகத்தின் அளவாவது: மத்யவுலகவர்ணனை: இந்தப் பூலோகம் எவ்வளவு அகவமென்னின் (100) கோடி யோசனையாயிருக்கும். மக்கட்கு நாபி நடுவானாற் போல இந்தப் பூமிக்கு நடுவே மகம் மேரு நிற்கும். அம்மகம் மேருவானது முற்கூறிய பாதாளத்திற்கு மேலாய் ஏழு சமுத்திரங்களாலும் சூழப்பட்ட பூமியினடுவே பொருந்திப் பூமிக்குக் கீழ்ப்பதினாயிரம் யோசனையளவு புதைந்து, பூமிக்குமேல் (84,000) யோசனை உயரமாயிருக்கும். அதன் அடிவிரிவு (19,000) யோசனை, அதன் நுனிவிரிவு (32,000) யோசனை, இது தாமரைக்காய் போல் அடிசிறுத்தும் தலை விரிந்துமிருக்கும். அதன் புடையில் ஒன்றுக்கொன்று விரிவு அதிகமாய் மூன்று மேகலைகள் பொருந்தும். மேருவினடியில் அந்தராளம் (35,000) யோசனை உயரம், அதற்குமேல் முதன் மேகலையினுயரம் (3,000) யோசனை. அதன் புடைவிரிவு (10,000) யோசனை. அதன் மேலிரண்டாம் அந்தராளம் (25 200) யோசனை யுயரம். அதன் மேலிரண்டாம் மேகலை (30000) யோசனை உயரம். அதன் புடைவிரிவு (34000). அதற்கு மேல் மூன்றாமந்தராளம் (25000) யோசனை உயரம். அதற்கு மேல் மூன்றா மேகலை உயரம் (300:) யோசனை. அதன் புடைவிரிவு (18000) யோசனை. ஆக மேகலை மூன்றுக்கும் அந்தராளம் மூன்றுக்கும் உயரம் 84000) யோசனை உயரம். இதில் ஆயிரம் கொடுமுடிகளுண்டு, ஒவ்வொன்றிலும் தேவகணங்கள் வசிப்பர். இம்மேருவின் மேற்கங்கணத்தில் இந்திரனுக்கு அமராவதியும், அக்நிக்குத் தேஜோவதியும், யமனுக்குச் சம்யமனியும், நிருதிக்கு ரஷோவதியும், வருணனுக்குச் சுத்தவதியும், வாயுவிற்குக் கந்தவதியும், குபேரனுக்கு மகோதயபுரியும், ஈசானனுக்கு கைலையும் இருக்கும். இப்பட்டணங்களைச் சூழ அநேக பட்டணங்களுமிருக்கும். நடுக்கங்கணத்தில் சிவபிரான் தேவருஷிகணங்களுடன் சூழக் கொலுவிருப்பர். கீழ்க்கங்கணத்தில் கந்தருவரிருப்பர். மேருவிற்கு அடிவாரத்தில் கீலகபர்வதங்களுண்டு. இதற்குக் கிழக்கில் மந்தரகிரி, தெற்கில் கந்தமாதனம், மேற்கில் விபுலகிரி, வடக்கில் சுபார்சுவ கிரியுமுண்டு, மேற்கூறிய நான்கு மலைகளுக்கும் இடையில் நான்கு விருக்ஷங்களுண்டு, அவை முறையே கதம்பம், சம்பு, வடம், அச்வத்தம்; சம்பு விருக்ஷத்தின் கனியிலுண்டாம் ரஸத்தினால் சம்புநதி பெருகியோடுகிறது. கிழக்கிலுள்ள மந்தரகிரியில் நந்திநதி பிறக்கும். கந்தமாதனத்தில் பத்திரைநதி பிறக்கும், விபுலகிரி மூலத்தில் சுரதிநதி பிறக்கும், சுபார்சவகிரியிற் சமனைநதியும் பிறக்கும். மேற்கூறிய கிரிகளுக்கிடையே சித்தாந்த சாருகுந்தம், திரிகூடம், வைடூர்யம், சங்ககூடம் முதலிய அநேக பர்வதங்களுண்டு. மேருவைச் சுற்றிலும் நவகண்டமிருக்கும்; அவை இளாவிருத முதலியன. (1) இளாவிருதகண்டமாவது, நீலநிஷாத மால்ய வந்த கந்தமாதன கிரிகளுக்கிடையில் (90000) யோசனை அகலமுள்ளதாய் அநேக குல பர்வதங்களும், நதிகளும் பெருகிப் பலபட்டணங்களு டனிருக்கும். இதில் தேவகாந்தருவர் வசிப்பர். (2) பத்ராவ் வருஷ கண்டமாவது, மேருவுக்குக் கிழக்காக (1000) யோசனைக் கப்பாலிருக்கிற மால்யவந்தமாகிற சீமாகிரி முதல் கிழக்குலவண சமுத்திரமட்டாய்ச் சந்திரகாந்த வர்ணமாயிருக்கும். இதில் அநேக பர்வதங்களும், மகாநதிகளும், பூஞ்சோலைகளும், தடாகாதிகளுமுண்டு. இதில் சந்திரசாந்தமயமான ஜனங்கள் (10000) ஜீவித்திருப்பர். (3) கேதுமால்ய வருஷகண்டமாவது, மேருவிற்கு மேற்கில் (50000) யோசனைக்கு அப்பாலிருக்கிற கந்தமாதன பருவதமுதல் மேற்கு லவண சமுத்திரமட்டாகப் பொன்னிறமுள்ள பூமியாய் (32000) யோசனை யுள்ளதாயிருக்கும். இதில் அநேக குலபர்வதங்களும், மகாநதிகளும், பலபுரங்களும், வாவிகளும், நந்தனவனங் களுமுண்டு. இதில் பொன்னிறமான ஜனங்கள் பலாப்பழ ரஸமுண்டு (10,000) ஜீவித்திருப்பர். (4) ரம்ய கவருஷகண்டமாவது, மேருவிற்கு வடக்கு (90000) யோசனைக்கு அப்பாலிருக்கிற நீலச்சுவேத கிரிகளிரண்டற்கு நடுவே கிழக்கு மேற்குச் சமுத்திர மட்டாகஇருக்கும். இதில் அநேக குலபர்வதங்களும், நதிகளும், நந்தனவனங்களும், மடுக்களும் உண்டு. இது நீலவர்ணமானபூமி. இதிலுள்ள சனங்கள் நீலாஞ்சனக் காந்தியுடன் கருப்பஞ்சாறுண்டு (12,000) ஜீவித்திருப்பர். (5) இரண்ய வருஷகண்டமாவது, சிவேத சிருங்கமாகிற சீமாகிரியிரண்டிற்கு நடுவே (90000) யோசனை விஸ்தாரமாய் வெண்ணிறமுள்ள பூமியாயிருக்கும். இதில் அநேக குலபர்வதங்களும், மகாநதிகளும் நந்தனவனங்களும், தடாகாதிகளும் உண்டு. இதிலுள்ளவர்கள் சந்திரகிரணம் போல லாகுள விருக்ஷபழம் புசித்து (12000) ஜீவித்திருப்பர். (6) குருவருஷகண்டமாவது, சிங்ருககிரி முதலாக லவண சமுத்திரமீறாக (90000) யோசனை விரிவுற்றதாய்க் கற்றாழைப் பூவர்ணமாயிருக்கும். இதில் அநேக குலபர்வதங்களும், நதிகளும், சோலைகளும், தடாகங்களும் உண்டு. ஜனங்கள் கொசும்பைப் பூவர்ணமாய் நாவற்பழம் புசித்து (32000) ஜீவித்திருப்ர் (7) அரிவருஷகண்டமாவது, மேருவின் பிரதேசத்தில் நிஷத ஏமகூடமென்சிற இரண்டு கிரிகளுக்குப் புறத்தில் (90000) யோசனை அகலத்தில் வெள்ளிமயமான பூமியாய்க் கிழக்கு, மேற்கு லவண சமுத்திர பரியந்தம் சத்தகுல பர்வதங்களையும், மகாநதிகளையும், நந்தனவனம் தடமுதலியவைகளைக் கொண்டு விளங்கும். இதிலுள்ளார் வெண்மயமாய்க் கரும்பு ரஸம் உண்டு (12000) ஜீவித்திருப்பர். (8) கிம்புருஷவருஷ கண்டமாவது, ஏமகூட ஏமசைலங்களுக்கு நடுவில் (90000) யோசனை விரிவாய்ப் பொன்மயமான பூமியாய்க் கிழக்கு மேற்கு லவண சமுத்திரமளவும் அநேக குலபர்வதங்களுடனும், மகாநதிகளுடனும் கூடியிருக்கும். இதில் பொன்வர்ணமான ஜனங்கள் (1000) ஜீவித்திருப்பர். (9) பரதவருஷகண்டமாவது. ஹேமசயிலத்திற்கு மேல் கிழக்கு மேற்குச் சயிலபரியந்தம் (9000) யோசனை நானாவர்ண பூமியாய் ஏறிட்ட வில்லைப்போலிருக்கும். இது வெகு கண்டங்களாயிருக்கும். இதை அநேக ராஜாக்கள் அரசாண்டிருந்தனர். அவர்களில் சகர சக்ரவர்த்தியின் குமரரால் தோண்டப்பட்ட பூமியில் கடல் வந்து பாய முழுகினவை போக கரைகளால் தீவுகள் உண்டாயின. அவை: இந்திரத்தீவு, குசத்தீவு, தாம்பிரத்தீவு, கபஸ்திமத்தீவு, சௌமியத்தீவு, கந்தத்தீவு, வாருணத்தீவு முதலியவாம். ஒவ்வொன்றும் (1000) யோசனை அகலமுள்ளது. இவற்றில் மிலேச்சாதியர் வசிப்பர். இதில் மிகுந்த ஆயிரம் யோசனை பூமி இமய பர்வத பர்யந்தமாய்க் கன்னிகாதீபமென்று பெயராய்ப் பிராமணதியர் வசிக்குமிடமாம். இதில் இமசேது மத்யப்ரதேசம் (700) யோசனை பரதகண்டமாம். அதில் மஹேந்திர, மலைய, சம்சிய, மந்த, விருக்ஷநந்த, விந்திய, பார்யாத்ர மென்கிற சத்த குலபர்வதங்களுண்டு, அவற்றிற் பிறக்கும் நதிகளாவன மகேந்திரகிரியில் திரிசரம், புஷிகுலம் (2); மாலயகிரியில் கிருதமாலினி, தாம்பிரபர்ணி (2); சம்சய கிரியில் கோதாவரி, பீமரதி, கிருஷ்ணவேணி (3); விருக்ஷநந்த பருவதத்தில் தாபி, பயோஷ்ணி (2); விந்தியகிரியில் நர்மதை, சுரசம் (2); பாரியாத்ர கிரியில் வேதி, சயது (2); ஹேமவந்த கிரியில் சதத்ரு, சந்திரபாகை (2) பின்னும் கங்கையே முதலாக அநேக புண்யநதிகளும் ஸ்ரீசைலமுதல் சேதுஈரான க்ஷேத்ரங்களும், அங்கம், வங்கம் முதலிய (59) தேசங்களும் இதில் இருக்கின்றன. இதிலுள்ளார் உழவாதிகிரியைகள் செய்து அற்ப வாழ்நாளுள்ளவராய்த் துக்கிகளாய்ச் சுவர்க்க நரகம் அனுபவித்து நானா ஜீவர்களாய்ப்பிறப்பர். இப்படிச் சொல்லப்பட்ட நவகண்டமும் கூட லக்ஷம் யோசனை அகலமாய் மனோரம்யமாயிருக்கும். இதற்குச் சம்புத்தீவு என்று பெயர். இந்தச்சம்புத்தீவை வளைந்துகொண்டு லவணசமுத்திரம் லக்ஷம்யோசனை விசாலமாயிருக்கும். இச்சமுத்திரம் அநேக சலசரங்கள் முத்து, பவள முதலிய மணிகளுக்குப் பிறப்பிடமாய் அதிகோஷமாயிருக்கும். இந்த லவணவாரியை வளைந்து கொண்டு சுப்ர வர்ணபூமியாய்ச் சாகத்தீபம் (2) லக்ஷம் யோசனையாயிருக்கும். இதில் (7) கண்டங்கள், (7) மலைகள், (7) நதிகள் உண்டு, இதிலுள்ள ஜனங்கள் (3) தாளப் பிரமாணமாய் (1200) ஆயுளுடையராயிருப்பர். இந்தச் சாகத்தீவை வளைங்திருக்கிற பாற்கடல் (2) லக்ஷம் யோசனை அகலமாயிருக்கும். இதில் விஷ்ணு சேஷசாயியாய்ப் பள்ளிகொண்டிருப்பர். இந்தப் பாற்கடலை வளைந்து கொண்டு நீலவர்ணபூமியாய்க் குசத்தீவு (4) லக்ஷம் யோசனை யகலமாயிருக்கும். இது ஏழு பங்காய் ஏழுகிரி, நதி முதலிய கொண்டிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் ஒரு தாளப்பிரமாணம் உயரமாய்க் கற்பகவிருக்ஷ பலஹாரத்தாலே (20,000) ஜீவித்திருப்பர். இந்தக் குசத்தீவைச் சூழ்ந்த தயிர்க்கடல் (4) லக்ஷம் யோசனை வளைந்து கொண்டிருக்கும். இதைச் சூழ (8) லக்ஷம் யோசனை விசாலமாய்க் கபில வர்ண பூமியாய்க் கிரவுஞ்சத்தீவிருக்கும். இந்தீவு ஏழுபாகமாய் ஏழுகிரிகள், நதிகள், சோலைகள் கொண்டிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (3) தாளப் பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ பலஹார முள்ளவர்களாய் (20,000) ஜீவித்திருப்பார். இந்தக் கிரவுஞ்சத்தீவை வளைய நெய்க்கடல் (8) லக்ஷம் யோசனை விரிவுள்ளதாயிருக்கும். இதைச் சூழச் செந்நிறமுள்ள பூமியாய் (49). லக்ஷம் யோசனை விசாலமாய்ச் சான்மலித் தீவிருக்கும். இது ஏழுபாகமாய் ஏழுகிரி, ஏழு நதிகள், சோலைகள் முதலிய கொண்டிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (3) தாளப் பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ பலஹாரத்தாலே (20,000) ஜீவித்திருப்பார். இந்தச் சான்மலித் தீவை வளைய இக்ஷரஸஸழத்ரம். (கருப்பஞ்சாற்றுக்கடல்), (16) லக்ஷம் யோசனை விசாலமாய் வளைந்திருக்கும். இந்தச் சமுத்திரத்தைச் சூழ இரத்த வர்ண பூமியான கோமேதகத்தீவு (32) லக்ஷம் யோசனையாய் வளைந்திருக்கும். இது ஏழுபாகமாய் ஏழுமலை, நதி முதலியவைகள் நிரம்பப்பெற்றிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (3) தாளப் பிரமாணமாய்க் கற்பகவிருக்ஷ பலஹாராதிகளாலே (20,000) ஜீவித்திருப்பர். இதைச் சூழச் சுராசமுத்ரம் (32) லக்ஷம் யோசனையாய் வளைந்திருக்கும். இந்தச் சுராசமுத்திரத்தைச் சூழத் தவள வார்ணபூமியான புஷ்கார்தீவு (64) லக்ஷம் யோசனையாயிருக்கும். இது இரண்டு பாகமாயிருக்கும். இதனிடையில் சோத்ரபர்வதமிருக்கும். இதில் குலபர்வதங்களும், மகாநதிகளும் இருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (3) தாளப் பிரமாணமாய் (20,000) ஜீவித்திருப்பர். இந்தப் புஷ்கரத்தீவை வளைந்து கொண்டு சுத்தோதக சமுத்ரம் (94) லக்ஷம் யோசனை விசாலமாயிருக்கும். இது சமஸ்தமேகங்களுக்கும் ஜலத்தைக் கொடுத்து லோகோபகார மாயிருக்கும். இச்சுத்த ஜலக்கடலை வளைந்து கொண்டு இரண்மயபூமி (10) கோடி யோசனை விரிந்திருக்கும். இதிற் சனங்களில்லை. இதை வளைந்து கொண்டு சரசந்ததிக்கு ஆஸ்பதமாய்ச் சூரியனது ரதசக்ரத்திற்கு ஸ்தலமாயிருக்கிற லோகாலோக சக்கிரமென்கிற சக்ரவாளகிரி இருக்கும். இதன் தென்பாகத்தில் சூரியப் பிரகாசமுண்டாய் உத்தரபாகத்தில் சூர்யப் பிரகாசமில்லாமல் இருளாய் இரண்மயபூமி வளைந்து கொண்டு (10,000) யோசனை விசாலமும் (50,000) யோசனை உயரமுமாயிருக்கும். இந்தச் சக்ரவாளத்தைச் சூழ ஒரு கோடியே யிருபத்தேழு லக்ஷம் விரிவாய்ப் பெரும் புறகிகடல் இருக்கும். இதை வளையப் பேரந்தகாரமாய் வெகுஇருள் (25) கோடியும் (16) லக்ஷத்து (40,000) யோசனை விரிவாயிருக்கும். இதில் நிசாசரர் வசிப்பர். இந்தக் கடலில் தக்ஷிணாவர்த்த சங்ககிரியுண்டு. இக்கடலினடுவுள் பர்வதாகாரமான ஆமையொன்று பிரகாசமாயிருக்கும். இதற்கப்பால் பிரமாண்ட கடாகாந்த பரியந்தமாயிருக்கிற வெளி, கோடி யோசனை விசாலமாயிருக்கும். இது மத்ய பூமிலக்ஷணம். ஊர்த்வலோக வர்ணனை மத்யபூமியகல நூறு கோடிக்கு மேரு நடுவாகையால் மேருவைச்சுற்றி (50) கோடியாம். மேருவைச் சுற்றி நான்கு திக்கிலும் (100) கோடி யோசனையகலம். இனி ஊர்த்வலோகமாவது பூமிமுதல் துருவண்டல மந்தமாக (15) லக்ஷம் யோசனை புலலோகம். இந்தப் புவலோகத்தில் வாயுவாதாரமாய்ச் சமஸ்த மேகங்களும் ஒன்றின் மேலொன்றாய் இருக்கும். முதலில் தத்துவாயுவிலுண்டான அசுண்டவாயு பூமியில் வியாபித்துச் சீவர்களுக்குத் தீபனாதிகளையும், இராக்ஷதர்பஷி முதலியோர்க்குக் கமனதாரமாயும் இருக்கும். இதிலுண்டான பிரசேதெ னென்கிற வாயு, அக்கினியை யெழுப்பிச் சுழல்காற்சாய் வடவையை நிலைத்திருக்கச் செய்யும். இதன்மேல் (100) யோசனை யளவாயிருக்சிற ரெசனி என்கிற வாயு மூகமென்கிற மேகத்தைச் சுத்தோதகக் கடலுக்காயினும், லவண சமுத்திரத்திற்காயினும், கொண்டுபோய் முழுகச் செய்து அதில் மொண்டநீரைப் பூமிக்குமேல் (150) யோசனை மட்டாக எழுப்பி மழையாகப் பெய்விக்கும். பின்னும் முன்சொன்ன (150) யோசனைக்கு மேலாக (100) யோசனை உயரத்தில் ரெசனியென்கிற வாயு சத்துவவகம் என்கிற மேகத்தால் மழை பொழிவித்துத் தவளை, மீன் முதலிய ஜலசரங்களைச் சாகச்செய்யும். இதன்மேல் (50) யோசனை யுயரத்தில் மோகமென்கிற வாயு, கௌஷமென்கிற மேகத்தால் அதிமழை வருஷித்து ஜனங்களுக்குத் துக்கத்தை யுண்டாக்கும். இதன் மேல் (50) யோசனை உயரத்தில் அமோகமென்கிற வாயு மாருகமென்கிற மேகத்தால், மழைபெய்வித்துப் பூமியிலிருக்கிற பிராணிகளுக்கு மரணத்தை யுண்டாக்கும். இதன்மேல் (50) யோசனை உயரத்தில் வச்ராங்கனென்கிற வாயு பலகாம்யமென்கிற மேகத்தால் மழை பொழிவித்து விருக்ஷங்களைத் தளிர்க்கப் பூக்கக் காய்க்கச் செய்யும். இதன்மேல் (50) யோசனை உயரத்தில் வைத்துதியமென்கிற வாயு அப்பெயருள்ள மேகத்தால் பூமியை அதிரச்செய்யும். இதற்கு (50) யோசனைகளுக்கு மேல் ரைவகமென்கிற வாயு விருஷ்டிவகமென்கிற மேகத்தால் மனுஷருக்குப் புஷ்டியை யுண்டாக்கும். இதற்கு மேல் (50) யோசனைக்கு அப்பால் சம்வர்த்தனென்கிற வாயு குரோதமென்கிற மேகத்தால் பூமியில் ரோகங்களை யுண்டாக்கும். இதன்மேல் மோகனென்கிற வாயு வாதாரலோகத்தில் ததை, விஷணகாளிக, வீமரூபிணி முதலான பிசாச சத்திகள் பூலோகத்தில் பிள்ளைகளை விகாயஞ்செய்து கொண்டிருப்பர். பின்னும் இதன்மேல் அமோகவாயு ஆதாரமான பட்டணத்தில் (30000) விநாயகர்கள் பூமியில் துர்மார்க்கர் செய்யும் பூசையேற்றிருப்பர். இதன்மேல் வச்சிரகம்பவாயு வாதாரமான லோகத்தில் பல வீர தேவதைகள் பூலோகத்தில் ஸ்மசானபூத வேதாளச் ரயிகளாய் வீரர் பொருட்டு நாட்டியிருக்கிற கற்சிலைகளிலிருந்து பூசை கொள்வர். இதன்மேல் வைத்துதி என்கிற வாயு வாதாரபட்டணத்தில் வீரசுவர்க்க மடைந்தவர்களிருப்பர். இதன்மேல் ரைவதனென்கிற வாயு வாதாரமான மேகாச்ரய பட்டணத்தில் சித்தரிருப்பர். இதன்மேல் சசம்வர்த்த வாயு ஆதாரமான மேகாச்ரய பட்டணத்தில் வித்யாதரரிருப்பர். இதன்மேல் விதுர்தக வாயு ஆதாரமான மேகாச்ரய பட்டணத்திலும் வித்யாதரரிருப்பர், இதற்கு மேல் (100) யோசனை தசவாயுவாதாரமான மேகாச்ரயமிருக்கும். இதில் காந்தருவராதிய ரிருப்பர். இதன்மேல் (10,000) யோசனையில் சத்தமாதாக்கள் யோகினிகளிருப்பர். இதன்மேல் கணதேவரிருப்பர். இதன்மேல் (10,000) யோசனையில் இந்திரனது ஐராவத முதலியவிருக்கும். இதன்மேல் (10,000) யோசனையில் கருடன் வசிப்பன். இதன்மேல் (10,000) யோசனையில் தேவகங்காசலம் (10) லக்ஷம் யோசனை விரிவாயிருந்து பாபக்ஷயம் பண்ணும். இதன்மேல் (10,000) யோசனையில் பிரமதகணங்களிருக்கும். இதன்மேல் (10,000) யோசனையில் தக்ஷப்பிரசாபதி யிருப்பர். இதன்மேல் (10,000) யோசனையில் ஒருவாயு, மேகங்களுக்கு விமானஸ்தானமாயிருக்கும், இதன்மேல் சூரியன் புவலோகமிருக்கும். இது பூமிக்கு லக்ஷம் யோசனைகளுக்கு மேலேயிருக்கும். இதிற் சூரியன், தனது தடிநி, வாலநி, துமு, மரீசி, ஜ்வாலினி, ருசி, சுஷூந்துணை, போக்தா, விஸ்வா, போதினி, தாரினி, க்ஷேமா முதலிய (12) கலைகளுடன் ஹேமகிரணம் (333), உஷ்ணகிரணம் (333), வருஷகிரணம் (333), பீஜப்ரமதாங்குரமான அமிர்தகிரணம் (1) இப்படி (1000) கிரணங்களோடும் (99) ஆயிரம் யோசனை உயரமும், (27000) அகலமும், மண்டலமுங் கூடி (136000) யோசனை விசாலமுள்ள இடம் பெற்றிருப்பன். இதன் மேலிரண்டு லக்ஷம் யோசனைக்கு அப்பால் சந்திரலோகமிருக்கும். இதில் தக்ஷர் முதலான ஏழு விச்வதேவதைகளுடனும் பிதுர்தேவதைகளுடனும் ஓஷ்தீச்வானான சந்திரனிருப்பன். இவனது ரதத்தைத் துருவன், சம்பகம் என்னும் கயிற்றைக் கொண்டு நடப்பிப்பன். பின் இதன்மேல் லக்ஷம் யோசனைக்கு அப்பால் நக்ஷத்ர மண்டலமிருக்கும். இதற்கு மேல் (2) லக்ஷம் யோசனைக்கு அப்பால் செவ்வாயிருப்பன். இதன் மேல் (2) லக்ஷம் யோசனைக்கு அப்பால் புதனிருப்பன். இதன்மேல் (2) லக்ஷம் யோசனைக்கு அப்பால் பிரகஸ்பதியிருப்பன். இதன்மேல் (2) லக்ஷம் யோசனைக்கு அப்பால் சுக்ரனிருப்பன். இதன்மேல் (2) லக்ஷம் யோசனைக்கு அப்பால் சனி இருப்பன். இந்தக் கிரகங்களால் சூரிய சந்திரர்க ளொழிந்தவைகளைத் துருவன், வராகவாயுக் கயிற்றைப் பற்றி நடப்பிப்பன். மேற்சொன்ன சநி மண்டலத்துள் இராகு, கேதுக்களிருப்பர். இவர்களின் மேலிருக்கிற துருவன், பரிவகவாயுவாகிற கயிற்றைக் கொண்டு நடப்பிப்பன். சநி உலகத்திற்கு மேல் (8105) லக்ஷம் யோசனையில் சப்தருஷி மண்டலமிருக்கும். இச் சப்த்தருஷி மண்டலத்திற்கு லக்ஷம் யோசனைக்கு மேல் சிஞ்சுமார்சகர மிருக்கும். இது முதலை வடிவுடையது. இதனது சிரசு முதலிய அவயவங்களில் சர்வ தேவதைகளும் வசிப்பர். இதற்கப்பால் (2) லக்ஷம் யோசனைக்கு மேல் தேவேந்திரன், தேவர்கள் சேவிக்கச் சுரலோகத்தில் வீற்றிருப்பன். இதற்கப்பால் (2) கோடி யோசனைக்கு மேல் மகாலோகமிருக்கும். இதில் மார்க்கண்டர் முதலிய ருஷிகளிருப்பர். இதற்கப்பால் (8) கோடி யோசனையில் ஜநலோகமிருக்கும். (இதுவே பிதுர்உலகம்). இதில் வசிட்டர் முதலியோர் பிதுர்க்களுடன் வசிப்பர். அப்பால் (12) கோடி யோசனையில் தபோ லோகமிருக்கும். இதில் சநகர் முதலிய மகருஷிகளிருப்பர். அப்பால் (19) கோடி யோசனையில் சத்திய லோகமிருக்கும். இதில் பிரமதேவர் எழுந்தருளியிருப்பர். அப்பால் நாலுகோடி யோசனையில் வைகுண்டமிருக்கும். இதில் விஷ்ணுமூர்த்தி லக்ஷ்மி தேவியுடன் எழுந்தருளியிருப்பர். அப்பால் கோடி யோசனையில் கந்தபுவாமிருக்கும். அப்பால் கோடி யோசனையில் கோவுலகமிருக்கும். இதிற் காமதேனு முதலிய சுரபிகள் வசிக்கும். இதற்குமேல் (3) கோடி யோசனையில் உருத்திர புவனமிருக்கும். இதுவே கைலாசம். அப்பால் கடாகாந்தமிருக்கும். இது பிரமாண்ட லக்ஷணம். இந்தப் பிரமாண்ட வலையாகா ரஉச்சியில் சிவலோகமிருக்கும். இவ்வகை அண்டகோச லக்ஷணம் சுருக்கிக்கூறிய தென்றறிக. (சிவதர்மோத்தரம், தத்வநிஜாநுபோகசாரம்).

அண்டகோளங்கள்

இவை ஆகாயத்தை, தமக்கிடமாக் கொண்டு அந்த வெளியில் முதலில் வியாபித்திருப்பன. வாயுபூதமும், அக்னிபூதமும், ஜலபூதமும், அந்த வெளியில் திரட்சியடைந்து கோளமாக விளங்குகின்றன. அவ்வாகாயத்திலியங்கும் அக்னிகோளம் சூரியன், அதனையடுத்த கோளங்கள் கிரகங்கள் எனப்படும். அந்தக் கிரகங்களைச் சிறுகிரகங்கள் சுற்றி வருகின்றன. அவற்றிற்கு உபக்ரகங்கள் என்று பெயர். இவ்வகை பல அண்டகோளங்கள் ஆகாயவெளியில் உலாவுகின்றன. இவையே அண்டகோளங்களாம். இவற்றில் எக்காலமும் இடம் விட்டுப் பெயராது பிரகாசிப்பவை அண்டாதிபதிகளாகிய சூரியர்களாம். மற்றவை கிரகங்களாம். இவ்வாறு கணக்கிட முடியாத பலகோடி அண்டங்கள் உண்டு என்பர்.

அண்டபிண்டம்

அண்டத்தில் உள்ளவை பிண்டத்தில் உண்டு, எவ்வகையெனின்: உள்ளங்கால் அதலம், கணைக்கால் விதலம், முழந்தாள் சுதலம், அதற்குமேல் நிதலம், ஊரு தலாதலம், குஹ்யம் ரசாதலம், இடை பாதாளம், நாபி பூலோகம், வயிறு புவர்லோகம், இருதயம் சுவர்க்கம், தோள்மகாலோகம், முகம் ஜனலோகம், நெற்றி தபோலோகம், சிரம் சத்தியலோகம், திரிகோணம் மேரு, கீழ்க்கோணம் மந்தரம், அக்கோணத்துக்கு வலபக்கம் கைலை, இடப்பக்கம் இமயம், மேற்பக்கம் நிஷதம், தென்பக்கம் கந்தமாதனம், இடக்கையின் உள்ளங்கைகளிலுள்ள ரேகைகள் வருணபருவதம், எலும்பு நாவலந்தீவு, மேதசு சாகத்தீவு, தசை குசத்தீவு, நரம்பு கிரௌஞ்சத்தீவு, தொக்குச் சான்மலித்தீவு, மயிர்த்திரள் பிலக்ஷத்தீவு, உகிர் புஷ்கரத்தீவு, மூத்திரம் உப்புக்கடல், நீர் பாற்கடல், கபம் சுராக்கடல், மச்சை நெய்க்கடல், வாய் நீர்கருப்பங்கடல், இரத்தம் தயிர்க்கடல், வாயில் உண்டாம் மதுரப்புனல் சுத்தோதகம், சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள, அவற்றில் நாதசக்கிரத்தில் சூரியனும், பிந்து சக்கிரத்தில் சந்திரனும், நேத்திரங்களில் அங்காரகனும், இருதயத்தில் புதனும், வாக்கில் குருவும், சுக்கிலத்தில் சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் ராகுவும், காலில் கேதுவும், இருக்கின்றனர் ஆதலால், அவ்வாறு கூறுவர். (கருடபுராணம்).

அண்டரோகம்

இது, பீசங்கள் தடித்து வீங்கும் ரோகம். இது, வாத, பித்த, சிலேஷ்ம அண்டங்கள், குடல் அண்டம், குமுறலண்டம், நீரண்டம், தசை அண்டரோகமெனப் பேதப்படும். இத்தசை அண்டரோகம் போன்ற ரோகம் பெண்களுக்கும் பெண்குறியில் உண்டாதலுண்டு. இவை கஷ்டசாத்தியங்கள். (ஜீவரக்ஷாமிர்தம்).

அண்டர்பாணன்

சண்முகசேநாவீரன்.

அண்டர்மகன்குறுவழதி

ஒரு புலவன். இவன் பொதுவனாகப் பெயரினால் தோன்றுகிறது. ஆயினும் வழுதியென்பதால் பாண்டியர் வம்சத்தவனாக இருத்தல்கூடும். (புற: 346 காஞ்சி). (குறுந்: 345 நெய்) (அகத்:228 குறிஞ்).

அண்டிரன்

ஆயைக் காண்க.

அண்ணன்

நயனாசாரியர் திருவடி சம்பந்தி. நயனாசாரியார் திருக்காஞ்சியில் இருக்கையில் ஒரு மாயசந்நியாசி வாதத்திற்கு வர, இவனைக் கண்டு எல்லாரும் அஞ்சிநிற்க அண்ணன் தாம் வாதித்து சயங்கொண்டு வந்தாராகையால் இவர்க்குப் பிரதிவாதி பயங்கரம் அண்ணன், என்று ஆசாரியரால் பட்டப்பெயர் இடப்பட்டது. (குருபரம்பரை)

அண்ணம்

(அண்மை) பதங்கள் தம்பொருளை விளக்க இடையீடின்றி விரையக் கூறுதல், (தரு).

அண்ணர்

திருவாய்மொழிப் பிள்ளைக்குத் தந்தை, பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி.

அதங்கோட்டாசிரியர்

அகத்தியர் மாணாக்கருள் ஒருவர். இடைச் சங்கத்தவர். தொல்காப்பியத்திற்குக் குற்றங் கூறத் தொடங்கி ஆசிரியர் கூறிய சமாதானத்தால் அடங்கினவர்.

அதச்சிரசு

லஞ்சம் வாங்குவோர் போம்நரகம்.

அதன்யசயனவிரதம்

சிராவண சுத்தத்விதியையில் விஷ்ணு மூர்த்தியை எண்ணிச் செய்யும் விரதம்.

அதமயன்

அத்திரியின் குமரன். இவன் ஆசாரியபுத்திரருக்கு (2000) பசுக்களைத் தானஞ் செய்தவன், ஆசாரியருக்கு (10,000) யானைகளையும், அவ்வளவு தாதிகளையுங் கொடுப்பதாக வாக்களித்தவன்.

அதரிடைச்செலவு

செருவினைப் பொறாதார் ஊரிலே நிற்கக் காலனையொப்பச் கோபித்துப் பகைவர் போன வழியிடத்தே சென்றது. (பு. வெ).

அதர்மன்

1. சேஷ்டாதேவிக்கு வருணனாலுண்டான குமரன். இவன் பாரிநிருதியின் பெண்ணாகிய இம்சை, குமாரர் பயன், மகாபயன் மிருத்யு. பெண்கள் சுரை, நிந்தனை. அதர்மன், மாருஷையை மணந்ததாகவும், அவளிடத்தில் தம்பன் எனும் குமரனும், மாயை யெனுங் குமரியும் பிறந்ததாகவும், அவ்விருவர்க்கும் லோபன் எனுங் குமரனும், நிக்ருதி யெனும் குமரியும் பிறந்தனர் எனவும், அவர்க்குக்கு ரோதன், ஹிம்சை என்பவர்கள் பிறந்தனர் எனவும், அவர்க்குக் கலியும், துருக்தியும் பிறந்தனர் எனவும், அவர்க்கு மிருத்யு, பீதியும் பிறந்தனர் எனவும், அம்மிருத்யுவுக்குப் பீதியிடம் நிரயன், யாதனையும் பிறந்தனர் என்றும் பாகவதம் கூறும். பின்னும் விஷ்ணு புராணத்தில் அதர்மனுக்கும் இம்சைக்கும் அந்ருதன் எனும் குமரனும், நிக்ருதி எனும் குமரியும் பிறந்ததாகவும், நிக்ருதியிடம் அந்ருதனுக்குப் பயன், நரகன் எனும் இருவர் குமரரும், மாயை, வேதனை யெனும் இருவர் குமரியரும் பிறந்தனர் எனவும், அவர்களுள் மாயையிடம் மிருத்யுவும், நரகனுக்கு வேதனையிடம் துக்கன் என்பவனும் பிறந்தனர் எனவும், கூறியிருக்கிறது. பின்னும் மிருத்யுவிற்கு வியாதி, ஜரை, சோகன், திருஷ்ணன், குரோதன், என்பவரும் பிறந்து உலகநாசத்தைச் செய்வர் என்று கூறப்பட்டிருக்கிறது. 2. இவன் வேதபுரியில் இருந்த திரியம்பக வேதியன் புதல்வன். ஒருநாள் காட்டுள் சென்று, ஆங்குத் தவமேற்கொண்டு புற்றால் மூடப்பெற்றிருந்த முனிவரது கண்ணைத் தொளை வழியிற்கண்டு தன்கையில் இருந்த கோலாற் குத்தி அவரால் தீயனாய்க் காட்டில் திரியச் சாபம் ஏற்றுத் தந்தையிடஞ் செல்லத் தந்தை, சில புத்திபோதிக்கக் கேளாது தந்தையைக் கொன்று பசியால் புலைச்சேரியில் ஊனருந்தித் தாகங் கொண்டு அங்கிருந்த கள்ளைக் குடித்து வெறி கொண்ட காமத்தால் புலைச்சியைக் கூடிச் சிலர் அடிக்கப் பயந்து ஓடிச் சாபாலமுனிவர் இருக்குமிடம் அணைய அவர் கமண்டல நீர் கருணையுடன் அவன் மீது இறைக்க நல்லறிவு சிறிது பெற்றுத் திருப்பெருந்துறையில் இறைவன் பெயர் கூறிப் பாபநீக்கம் அடைந்தவன். இவனை இலக்குமி என்னும் காம்பிலி நாட்டுப் பெண் கணவனைக் கொன்று கொள்ளிவாய்ப் பேயானவள் பிடிக்கவந்து அவளும் இச்சாபாலமுனிவரால் சாபம் நீக்கினள்,

அதர்வணருஷி

கர்த்தமப் பிரசாபதியின் குமரியான சாந்தியை மணந்தவர்.

அதர்வணவேதம்

இது, (50) சாகைகளையுடைய நான்காம் வேதம். இதற்குள்ள உபநிடதங்கள்; பிரச்சினம், முண்டகம், மாண்டூக்யம், அதர்வசிரசு, அதர்வசிகை, பிருகத்சாபாலம், நிருசிம்மதாபனி, நாரத பரிவிராசகம், சீதை, சரபம், திரிபாத் விபூதி மகாநாராயணம், இராம ரகசியம், இராமதாபனி, சாண்டில்யம், பரமஹம்ச பரிவிராசகம், அன்னபூரணை, சூரியன், ஆத்மம், பாசுபதம், பரப்பிரமம், திரிபுராதாபனி, தேவி, பாவனை, பஸ்மசாபாலம், கணபதி, மகாவாக்யம், கோபாலதபனம், கிருஷ்ணம், அயக்ரீவம், தத்தாத்திரேயம், காருடம் என முப்பத்தொன்று. இவற்றுள், அதர்வசிகோப நிடதம், கைவல்யோப நிடதம், சுவேதாச் வதரம், காலாக்னி ருத்ரம் என்னும் ஐந்தும் பஞ்சருத்ரம் என்னப்படும்.

அதர்வணாசாரி

ஒரு வடநாட்டுப் புலவர்.

அதர்வா

1. ஒரு இருடி. ததீசியின் தந்தை, 2 ஒரு இருடி, இவர் தேவி சாந்தி. குமரன் தத்யங்கன்,

அதலகேசன்

சண்முகசேகா வீரருள் ஒருவன்.

அதலன்

அக்நி. 2. குசன் வமசத்தவனான நிஷாதன் குமரன். 3 மாலியின் புத்திரன் அரக்கன். 4. வசுக்களில் ஒருவன். 5. கிருஷ்ணமூர்த்திக்குப் பத்திரையிடம் உதித்த குமரன். 6. அரக்கன், விபீஷணனுக்கு மந்திரி.

அதலம்

கீழுலகத்தொன்று.

அதலர்

நாகர். அதோலோக வாசிகள், அதவியார் தஞ்சாவூர், திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களில் உள்ள நெய்யக்காரர். (தர்ஸ்டன்).

அதலர்

அக்னிகள், இவர்கள் (49) வகையினர், இவர்கள் முதல்வன் அபிமானன். அவற்கு, பாவகன், பவமானன், சுசி, என மூவரும், அவருக்கு (45) குமரரும் உண்டு

அதலாசுரன்

1. ஒரு அசுரன் தேவரைத் துன்பப்படுத்திச் சிவமூர்த்தியின் நெற்றிக் கண்ணாலெரிந்தவன். (சிவபராக்ரமம்), 2. யமன் தன்சபையில் நடித்த திலோத்தமையைக் கண்டு வீரியத்தைவிட அதினின்றுந் தோன்றித் தேவரைவருத்தின அசுரன். இவனை விநாயகமூர்த்தி விழுங்கினர். (விநாயகபுராணம்).

அதலி

இராக்ஷத சேநாதிபதி சிங்கனால் இறந்தவன். 2. சூரபத்மனுக்குப் படைத்தலைவன்.

அதி உஷ்ணழள்ள பிரதேசம்

அமெரிகா கண்டத்துக் காலிபோர்னியா எனுமிடத்திற்குக் கீழ்பாகத்திலுள்ள டெத்வாலி யெனும் பாலைவனப் பள்ளம். இதில் உஷ்ணம் (134) டிகிரிக்கு அதிகப்படுகிறது. இதில் பெய்யும் மழை அந்தரத்திலேயே மாறிவிடுகிறதாம்.

அதிகண்டன்

சௌபாக்கிய நகரத்து வேதியன். இவன் இளமைப் பருவத்தில் தெருவிற் போம்போது ஒரு ருத்ராக்ஷம் கண்டெடுத்து ஒரு வேதியனுக்குக் கொடுத்து நற்பதம் பெற்றவன், (உபதேசகாண்டம்).

அதிகன்

1. இவன் ஔவைக்குத் தான்பெற்ற கருநெல்லிப் பழத்தைத் தந்தவன். இவனுக்கு அதிகமான் எனவும் பெயர். இவன் புகழ்ச் சோழநாயனார் காலத்திருந்த அதிகனோ அன்றோ என்று துணிந்து சொல்லக் கூடவில்லை. இப்பெயர் கொண்ட அரசன் ஒருவன் கேரள தேசத்தில் இருந்ததாகவும், அவனுக்கு இராஜராஜ னென்று ஒரு பெயர் உண்டென்றும், அவன் வம்சத்தில் எழினி என்னுமொருவன் இருந்தன னென்றும், அவன் வம்சத்தில் வந்த விடுகாதழகிய பெருமாள் என்பவன் தகடூரையாண்டான் என்றும், இந்த அதிகன், நெடுஞ்சடையனால் அயிரூரிற் செயிக்கப்பட்டான் என்றும் புறநானூற்றுரையிற் கூறப்பட்டிருக்கிறது. 2. புகழ்ச் சோழ நாயனார் சேனைகளால் வெல்லப்பட்ட மலை நாட்டரசன்.

அதிகமானெடு மானஞ்சி மகன் பொகுட்டேழினி

கொடையும், இன்பமும் உள்ளவன். இவன் பெயர் அதியமான் மகன் பொகுட்டெழினி யெனவும் வழங்கும். இவன் மீது “அலர்பூந்தும்பை ” “எருதேயிளைய” “மதியேர்வெண்குடை” என (3) செய்யுட்கள் ஒளவையார் பாடினர். (புற~நா).

அதிகமான்

சேரமானால் வளர்க்கப்பட்டவர். இவர் பாணபத்திரரைப் பரிபாலித்தவர். இவர், சோழதேசத்தில் ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்து அரசராய்ப் பாணபத்திரருக்குச் சிவமூர்த்தி அளித்த திருமுகப் பாசுரத்தால் பொருளளித்துப் பொன்வண்ணத் தந்தாதி முதலிய பாடி ஸ்ரீசுந்தர மூர்த்தி சுவாமிகளுடன் திருக்கைலைக்குச் சென்று திரு ஆதியுலா அரங்கேற்றினவர். இவர் ஒரு வகை வீரர்பாற்பட்ட அதியர் குடியினர். திருவள்ளுவருடன் பிறந்தவர். தகடூரில் வதிந்தனர். (திருவள்ளுவர்சரிதை)

அதிகாயன்

ஒரு அரக்கன். இராவணன் குமாரர்களுள் ஒருவன். பிரமனிடம் கவசம் பெற்றவன், யுத்தத்தில் இலக்குமணரால் பிரமாஸ்திரம் விட்டுக் கொல்லப்பட்டவன், இவன் முற்பிறப்பில் கைடவன் என்னும் அசுரன், சிவபெருமானிடம் பெற்ற வில்லுடையவன், பலசாலி, (இராமாயணம்)

அதிகாரிப்பிள்ளை

எழுபத்து நான்கு சிங்காசனாதி பதிகளில் ஒருவர் ஸ்ரீவைஷ்ணவர் (குருபரம்பரை).

அதிகோரன்

1, இராக்ஷச சேநாபதி, 2. சூரபதுமன் சேநாபதி. வீரமாயேந்திர வாயிற் காவவாளி. (கந்த.)

அதிசயவணி

கருதிய பொருளின் வனப்பையுவந்து கூறுகையில், உலகநடை கடவாது உயர்ந்தோர் வியப்பக் கூறுவது. இது, பொருள், குணம், தொழில், ஐயம், துணிவு, திரிபால் வேறுபடும். இதுவே உயர்வு நவிற்சி, இதனை (அதிசயோக்தி யலங்காரம்) என்பர். (தண்டியலங்காரம்).

அதிசாரன்

நிதந்துவின் குமாரன்.

அதிசாரரோகம்

இது மார்பு, குதம், வயிறு, முதலிய இடங்களில் நோய், உடம்பிளைப்பு, மலபந்தம், வயிறுப்பிசம், அஜீரணம், இவைகளைப் பழைய உருவமாகப் பெற்றது, பின்னும், கெட்டுலர்ந்த மாமிசம், வேகாப் பதார்த்தம், மந்த வஸ்துக்கள், அதிதிண்டி, மிகுநடை இவற்றால் வாயு அதிகரித்துத் தாதுக்களைக் கெடுத்து மலத்தைச் சலம் போலாக்கி அபானவழியால் தள்ளும். இது, வாத, பித்த, சிலேஷ்ம திரிதோஷ, பய, துக்க அதிசாரங்களென அறுவகையாகியும் மற்றும், சாம, நிராம, ரத்த, குதபிரம்ச, சுர அதிசார மெனப் பலவிதமாம். இது, தயிர்ச்சுண்டிச் சூரணம், சப்தகபாட மாத்ரை, முதலியவற்சால் வசமாம். (ஜீவரக்ஷாமிர்தம்).

அதிசுஷ்கரோகம்

தேகத்தில் சமாகனியால் செழித்த மாமிசம், அக்னிக் குறைவால் சீரணக் குறைபெற்றுத் தேகம் சுஷ்கிப்பதுமன்றி, நரம்புகள், கீல்கள், கழுத்து, வயிறு, தொடைகள் முதலிய உலர்ந்து சூம்பும், அப்போது ஆயாசம், துர்ப்பலம் உண்டாம். இதற்குக் கூஷ்மாண்டகிருதம் முதலிய நன்மைதரும். (ஜீவரக்ஷாமிர்தம்).

அதிசூரன்

1, எனாதி நாதநாயனாரை வஞ்சனையாற் கொலை புரிந்த மாபாவி. இவன் சரிதையை ஏனாதிநாத நாயனாரைக் காண்க. (பெரியபுராணம்). 2, சிங்கமுகாசூரன் குமரன். 3. சூரன் முதலிய பதினெண்மரில் முதல்வன். நீதிநெறிச் சோழன் காலத்தில் அரசர்களைக் கொலைபுரிந்து வருத்திக் கொண்டு வல்லான் என்று ஒரு வல்லவன் இருந்தனன். அவனை வெல்லச் சென்று பல வருத்தமுற்றுத் தன்னொடு அவனை வெல்லவந்தவர்களைப் பரிகொடுத்துத் தான் ஒருவனே அவனைச் சிறைசெய்து அவன் குதிரை ஆயுதம் முதலியவற்றைக் கவர்ந்து அரசனுக்குக்காட்டி எப்படி வல்லான் தலையை வெட்டினாயென்று அரசன் கேட்க, இப்படித்தானென்று தானும் வெட்டிக்கொண்டு இறந்தவன். இவன், சூரன் என்பவன் செய்த குமாரசுவாமி பூசையால் உயிர் பெற்றனன்.

அதிசேடன்

கத்ருவின் குமரன், நாகன், (1) மந்தரகிரியைப் பெயர்த்துத் தேவர்க்கு தவினவன். (2) அமுதகலசம்கருடன் கொண்டுவர அது மறைந்தது கண்டு அவ்விட மிருந்த தருப்பையை அமுதம் உண்ணும் விருப்பத்தால் நக்கி நாப்பிளவு பட்டவன். (3) பிரமன் கட்டளையால் பாதலத்திலுள்ள நாகர்க்குத் தலைமைபூண்டு பூமியைத்தாங்கவும், கருடனிடம் சிநேகமும் பெற்றவன். (4) பிருகு சாபத்தால் பலராமன், இலக்குமணன் முதலியவராகப் பூமியிற் பிறந்தவன். (5) ஒருகாலத்தில் வாயுதேவ னிடம் தன் பலம் அதிகம் என்று மாறு கொள்ளத் தேவர் யுத்தஞ்செய்தல் தகாது என்றனர். ஆதிசேடன் நாமிருவரும் மேருக்கருகிற் செல்வோமெனச் சென்று தேவர் சொற்படி சேடன், நான் மேருவின் சிகரத்தைக் கவித்துக்கொள்ளுகிறேன் நீ அச்சி கரத்தைப் பெயர்த்து விடுகெனச் சபதங் கொண்டனர். வாயு, தன் முழுவலியாலு முயன்றுங் கூடாதது கண்டு தேவர், சேடனைச்சிறிது தலை தூக்கவஞ்சிக்க வாயு அச்சமயத்தில் மலையின் சிகரத்தைக் கவர்ந்து கடலிலிட்டனன். அது இலங்கைத் தீவென்பர். (6) பாற்கடலில் விஷ்ணுமூர்த்திக்குப் படுக்கையாகவும், பரமபதத்தில் ஆசனமாகவும், நடந்தாற் குடையாகவும் உதவுவோன் (7) இவன், விஷ்ணுமூர்த்தியைத் தாங்கிக்கொண்டிருக்கையில் விஷ்ணுமூர்த்தியின் தேக வியர்வையைக் கண்டு காரணங்கேட்க விஷ்ணுமூர்த்தி சிவமூர்த்தி நடித்த நடனத்தில் மத்தளங் கொட்டியதால் வியர்வு தோன்றிற்று எனக்கூற அறிந்து அந்நடனங்காணச் சிதம்பரத்தலத்தில் பதஞ்சலியாய்த் தவஞ்செய்தவன். (கோயி புராணம், வடாரண்யபுராணம்). (8) சிவ மூர்த்தியின் முடியிலிருந்து நாம் சகல ராலும் பூசிக்கப்படுகிறோம் என்று இறுமாந்த காலத்துச் சிவமூர்த்தியா விழுத்து எறியப்பட்டுச் சிரம் (1000) பிளவுகளாயின. அவைகளைத் தவத்தாற்றலைகளாகப் பெற்றுச் சிவமூர்த்தியை அடைந்தவன். அதிக புத்தியுடையன். சகல கலைகளு மறிந்தவன். (9) பதஞ்சலியாகப் பிறந்து சிவபூசை செய்தவன். (10) இவன் சுவதி யென்னுந் தேவியைப் புணர்ந்து நாககன்னிகையைப் பெற்று அரித்துவசனுக்கு மணஞ்செய்வித்தான். (அவி~தல புராணம்)

அதிதர்

வைராசனுக்குச் சம்பூதியிடம் உதித்த குமரர், விஷ்ணுவினவதாரம்.

அதிதி

1. (சூ) ஸ்ரீராமபிரான் பேரன், குசன் குமரன். இவன் குமரன் நிஷதன். 2. காசிபர்பாரி. தக்ஷன் பெண், துவாதசாதித்தரையும், வாமாமூர்த்தியையும் பெற்றவள். இவள் காதணியை நாகாசுரன் கவர்ந்தனன். இவளது சரித்திரத்தைக் தாசிபரைக் காண்க, 3. தேவர்கள் அசுரர்களைக் கொல்லுவார்கள் என தேவர்களுக்கு அன்னத்தைப் பாகஞ் செய்தாள். புதன் பசியாயவளிடம் அதிதியானான். அவள் தேவர்களுக்கு முதலிலிட்டுப் பிறகு அளிப்பேனென, புதன் கோபித்து உன் கர்ப்பத்தில் பீடையுண்டாகவெனச் சபித்தனன். (பார்~சாந்).

அதிதூலரோகம்

தேக மாமிசம், போகத்தாலும் ரோகத்தாலும் வளருங் காரணத்தால் சரீரம் பருத்து ஸ்தனம், வயிறு, தொடை, அளவுக்கதிகமாகப் பருத்து கடினமாகும். இதனால் நடையிற் குலுங்கல், ஆயாசம், இரைப்பு, கபாதிக்கம், பொடியிருமல், பெருமூச்சு, முதலிய துர்க்குணங்களுண்டாம். இது, சுக்லசோணிதங்களைக் கெடுத்துக் கர்ப்பநாசத்தைத் தரும், இதனைக் கோமூத்ரம், அசுவகந்திச் சூரணம் முதலியவற்றால் வசஞ் செய்யலாம். (ஜீவரக்ஷாமிர்தம்).

அதித்தியசமை

அநித்யமான திருஷ்டாந்தத்தின் சாதர்மியத்தினால் சர்வபதார்த்தமும் அநித்தியமாம் என்று நிரூபித்தல். (தரு).

அதிநன்

சூ தேவாரணிகன் குமரன்.

அதிபதி

சண்முகசேநா வீரன்.

அதிபத்தநாயனார்

இவர், சோழநாட்டில் நாகப்பட்டினத்துக் கடற்கரை யடுத்தவூரில் அவதரித்த செம்படவர். இவர், தமக்கு, வலையிற்படும் முதல் மீனினை நாடோறும் சிவமூர்த்திக்கு என்று விட்டுவிடுவது. கடமையாக் கொண்டவர். இவ்வகை நடத்துகையில் சிவாஞ்ஞையால் சிலநாள் ஒரு மீனேபட்டது. இதனால் குடிமுழுதும் வறுமையுண்டாயிற்று. பிறகு பொன்மீன் ஒன்றுபட அதனையும் சிவாற்பணமென விடுத்து வருந்தாதிருந்தமைகண்டு சிவமூர்த்தி இடபாரூடராகத் தரிசனந்தந்து முத்தியளிக்கப் பெற்றவர். (பெரியபுராணம்).

அதிபலன்

1. சிவபூதகணத்தவரில் ஒருவன். 2. மகாபலன், தந்தை சைநன்.

அதிபலமாழனி

ஒரு இருடிபுங்கவர்.

அதிபலை

ஸ்ரீராமருக்கு விச்வாமித்திரர் உபதேசித்த மந்திரம்.

அதிபாகு

ஒரு அப்சரஸ்திரி, அரிஷ்டையின் புத்ரி.

அதிமதுரகவி

திருமலைராயன் சமஸ்தான வித்துவான். காளமேகரை யமகண்டம் பாடுவித்தவன். காளமேகரைக் காண்க.

அதியன் விண்ணத்தனர்

கடைச் சங்கமருவிய புலவர். (அகநானூறு).

அதியமான்

ஒரு அரசன், தகடூர் பொருதவன். போர்வல்லவனும் கொடையாளி யுமானவன். அரிசிற்கிழாராற் பாடப்பட்டவன். இவனை அதியமான் தகடூர்பொருது வீழ்ந்த எழினியென்பர் (புற. நா.)

அதியமான்நெடுமானஞ்சி

அஞ்சியைக் காண்க.

அதியாத்ரன்

சாக்ஷசமனுவிற்கு நட்வலையிடம் உதித்த குமரன்,

அதியுச்சம்

(சூரி)க்கு மேஷத்தில் (10) பங்கு வரையிலும், (சந்)க்கு ரிஷபத்தில் (3) பங்குவரையிலும், (செவ்)க்கு மகரத்தில் (28) பங்கு வரையிலும், (புத)க்கு கன்னியில் (15) பங்கு வரையிலும், (குரு)க்கு கற்கடகத்தில் (5) பங்கு வரையிலும், (சுக்)க்கு மீனத்தில் (27) பங்கு வரையிலும், (சனி)க்கு துலாத்தில் (20) பங்கு வரையிலும் அதியுச்சமாம்.

அதிரதன்

சத்திய கர்மன் குமரன், இவன் கங்கைக்கரையில் குந்தியால் எறியப்பட்ட கன்னனை யெடுத்து வளர்த்தவன். இவன் மனைவி பாதை. இவள் குமரர்சத்ருதபன்,துருமன்,விருகரதன்,சத்ருஞ்ஜயன்,விபாடன்,முதலியோர்(பாரதம்).

அதிரதர்முதலியவர்

அதிரதர்தம்மையும் தமது சேனையையுங் காத்துக்கொண்டு பலிதேர் வீரர்களோடு போர் செய்யும் வீரர். மகாரதர் தம்மையும் தாமேறியதேர், குதிரை, சாரதி, சேனைகளையுங் காத்துக்கொண்டு சிலதேர்வீரரோடு போர் செய்பவர். சமரதர் தம்மையும் தம்முடையதேர், சாரதி, குதிரைகளையுங் காத்துக்கொண்டு ஒருபோர் வீரனோடு போர் செய்பவர். அர்த்தரதர் தம்மை மட்டுங் காத்துக்கொண்டு ஒரு தேர்வீரனோடு போர் செய்பவர்.

அதிராஜம்

இராஜசூயயாகத்தின் பொருட்டு சகதேவனால் ஜயிக்கப்பட்ட தேசம், அரசன் தந்தவக்கரன். குவாலியரில் உள்ளது. DATIBA IN THE GWALIOR TERRITORY, WHERE DANTAVAKARA WAS KILLED.

அதிராஜேந்திரன்

வீரராஜேந்திரன் குமரன். முன்வேங்கைநாடு, வீரராஜேந்திரனால் விஜயாதித்தனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த நாட்டின் இளவாசன் குலோத்துங்கன், நாடிழந்து துன்புற்றிருந்தான். அதிராஜேந்திரன் பட்டம் பெறவே அவனைவென்று பட்டினத்தைத் தான்அடைய வேண்டுமெனக் குலோத்துங்கனெண்ணினான். இதனால் மேலைச் சாளுக்கியனாகிய விக்ரமாதித்யன் தம்பி சோமாசுரன் (11) உடன் சிநேகித்துச் சோழராஜ்யத்தின்மீது படைகொண்டு சென்று அதிராஜேந்திரனைக் கொன்று பரகேசரி இராஜேந்திர சோழனுக்குத் தௌகித்ரபர்த்யங் கொண்டு சோழராஜ்யாதிபதி யாயினான். குலோத்துங்கன் தாயாகிற அம்மங்காதேவி தனக்குப் பிள்ளைபிறந்ததும் தன் தகப்பன் பெயராகிய இராஜேந்திர சோழன் பெயரைப் பிள்ளைக்கிட்டாள். இப்பெயர் இந்தக் குலோத்துங்கனுக்கு (4) வருஷம் வழங்கியது.

அதிராவடிகள்

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை அருளிச்செய்த சிவனடியவர்.

அதிரை

1. ஒரு நக்ஷத்திரம். பிரமன் சரஸ்வதிதேவியைச் சிருட்டித்துத் தான் புணரச் செல்லுகையில் சரஸ்வதி மானுருக் கொண்டோடினள், பிரமனும் அவ்வுருக்கொண்டு தொடர்ந்தனன். தேவர் வேண்டுகோளாற் சிவமூர்த்தி வேடுருக் கொண்டு ஆண்மானை எய்ய, அதினின்றும் ஒரு சோதி தோன்றி ஆதிரை நாளாயிற்று. 2. சாதுவன் மனைவி, கணவனிறந்ததாற் றீப்புகத் தீச்சுடாமையால், கணவன் வரவை அசரீரி சொல்லக்கேட்டு கணவன் வரக் கண்டு கூடி வாழ்ந்தவள். மணிமேகலைக்கு முதற்பிச்சையிட்டவள். (மணி மேகலை).

அதிர்சீயநதி

இவள், சித்ரமுகன் பெண். இவள் வசிஷ்ட குமாரனாகிய சத்தியை மணந்தவள், இவளுக்குப் பராசரர் பிறந்தார். (பார~அநுசா).

அதிவிடன்

ஒரு வேதியச் சிறுவன். காமச்செருக்கால் ஒருத்தியைக் கூடி இரவில் தாகங்கேட்க அவள் கள்ளுண்டவெறியில் கள்ளை நீரென்று கொடுத்தனள். அதனை வாங்கியுண்டு கள்ளென்றறிந்து வேதியரிடம் நடந்தவை கூறிப் பிராயச்சித்தங் கேட்டனன். வேதியர் நெய்யை மழுப்போலுருக்கி வாயில்விடுவதே பிராயச்சித்தமென்று உருக்கிவிட இருக்கையில் தாய் தந்தையர் பரிதபித்த நிலையறிந்து சாண்டில்ய முனிவர் தோன்றிப்புண்ணிய தீர்த்தமாடச் செய்யப் பாபம் நீங்கிச் சுத்தமானவன்.

அதிவிந்து

திருமாலைப் பூசித்து அவரைக் காசியில் பஞ்சந்தத்தில் எழுந்தருளச் செய்தவன். இதனால் அங்கு எழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு விந்துமாதவன் என்றுபெயர். (காசிகாண்டம்)

அதிவியாப்தி

இலக்கியத்திலேயே யன்றி இலக்கியமல்லாததின் கண்ணும் இலக்கணமிருத்தல். (தர்)

அதிவீரன்

ஓர் அசுரன். யாளிமுகன் குமரன், இலங்கை, நீரில் அமிழ்வது கண்டு மானம்பாதிக்க வீரவாகு தேவருடன் யுத்தஞ் செய்து மாண்டவன். (கந்தபுராணம்).

அதிவீரராமபாண்டியர்

பாண்டிநாட்டு மன்னரில் ஒருவர். சிவபக்திமான், சுவாமி தேவனிடம் சிவதீக்ஷை பெற்றுக் காசிகாண்ட முதலியவியற்றியவர். இவர் சகோதர வரதுங்கபாண்டியர், தமிழிற் கொக்கோகஞ் செய்தவர். இவர் தமிழில் வல்லவராகி முதலில் நளன்கதை பாடத்தொடங்கிப் பாடிக்கொண்டு வருகையில் ஒருநாள், தாயுடன் உண்ணும், வழக்கத்தினராதலால் காலந் தாமதித்து உணவுகொளவந்தனர். தாய் காலதாமதத்திற்குக் காரணங்கேட்க, இவர் தாம் செய்யும் நைடதம் தாமதிக்கச் செய்ததெனத் தாய் அக்கதையில் அருவருப்புற்றுப் பசுநூல் பாடத் தொடங்கினை யென்று ”செஞ்சுடரின் மைந்தனையும் தென்னிலங்கை வேந்தனையும், பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதேவிஞ்சு, விரதமே பூண்டிந்த மேதினியையாண்ட, பரதனையும் ராமனையும் பார்” எனும் கவியைக் கூறித் தமயன் சொற்படி நடக்கக் கட்டளையிட்டனள். அவ்வகை தமயன் சொற்படி அதிசீக்கிரத்தில் நைஷதத்தை முடித்துக் காசிகாண்டம், திருக்கருவையந்தாதி முதலிய செய்து முடித்துப் புலவர்கள் செய்யுளில் குற்றங்கறின் அவர்களைக் குட்டியும் புலவர்க்குப் பரிசளித்தும் வந்தனர். இவர் புலவர்க்கு முன் தாம்செய்த நைடதகவிகளைக் காட்டி இதற்கும் இராமாயணத்திற்கும் யாது பேதமென்ன, அவர்கள் உமது செய்யுள் கரும்பு, அவரது வேம்பெனக் கூறக்கேட்டுப் புலவர்களின் கருத்தறிந்தவர். இவர் நைஷதத்தை அரங்கேற்றுகையில் “வாய்ந்தமின்னை மடந்தைய ராக்கி விண், போந்திடாமலன்றோ மலர்ப் புங்கவன், சாந்தணிந்த தமனியக்குன்றென, ஏந்துவெம் முலைப்பார மியற்றினான்” எனுஞ் செய்யுளைப் பிரசங்கிக்கையில் புலவர்கள் கேட்டு மின்னில் தமனியக்குன்று நிற்குமோ என ஆக்ஷேபிக்கையில், அரசன் விடைகூறமயங்கி நாளை கூறுவோமென்று வீட்டில்வந்து ஒருவாறு சிந்திக்கையில் மனைவிகண்டு களிப்புடனிருக்காதற்குக் காரணம் வினவிக் கூறகேட்டு அது முலைக்காம்பென்னும் முறுக்காணிகொண்டு முறுக்கியிருந்ததால் நிற்கிறதெனக் கூறக்கேட்டுக் களித்து மறுநாள் புலவர்க்குக் கூறிக் களித்தவர் எனவும் ஒரு கதை கூறுவர்.

அதிஷ்டானபுரம்

சேதிநகரத்தின் இராஜதானி.

அதீனன்

சகதேவன் புத்திரன்.

அதீர்க்கன்

திருதராஷ்டிரன் குமரன்.

அதுமதியம்

அநுமனால் கூறப்பட்ட பரத சாஸ்திரம்.

அதுமாதம்

இலிங்கபராமரிசம், (குறியினாலறிபப் படுவது, வன்னியின் வியாப்பியமான புகையையுடையது. இம்மலையென்னு மிடத்தில் குறியால் இம்மலை நெருப்புடைமை அறியப்படுதலால் இலிங்கபராமரிசம் அநுமானம். இந்த இம்மலை நெருப்புடையதென்பது அநுமிதி. இது கண்டபொருளை அநுமித்தறிதல். இது தன்னைவிட்டு நீங்காத வியாத்தி பொருந்தின எதுவைக்கொண்டு மறைந்த பொருளையறிவது, இது ஸ்வார்த்தாநுமானம், (தன்பொருட்டநுமானம்,) பரார்த்தாநமானம், (பிறர் பொருட்டநுமானம். எனவும் தர்மாதரீமியநுமாநம் (பூர்வக்காட்சியநுமாநம்) பூர்வத்தில் புஷ்பத்தையும் வாசனையையும் ஓரிடத்திற்கண்டு அப்புஷ்பத்தைக் காணாதிருக்கவும் புஷ்பமுண்டென அதுமித்தல். வசநலிங்காநுமாநம் (கருதலநுமானம்) ஒருவன் சொன்ன வாக்கியத் தினாலறிவின ளவறிவது ஆகமலிங்காநுமாநம் (உரையாலநுமானம்) சுகதுக்கங்களால் புண்ணிய பாவங்களினிலை யறிவது எனவும் வேறுபடும்.

அதுலகீரீத்திபாண்டியன்

அதுல விக்ரம பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் கீர்த்திபூஷண பாண்டியன்.

அதுலவிக்ரமபாண்டியன்

சமரகோலாகல பண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் அதுலகீர்த்தி.

அதுவர்தியை

பிராத புத்ரி. அப்சாசு.

அதுஷ்டாவிரணம்

சிகிச்சைகளால் வசமாவது, அது ரஸவாததுஷ்டவிரணம், ரஸபித்தாதுஷ்டவிரணம், ரஸசிலேஷ்மாதுஷ்டவிரணம், ரஸவாத பித்தாதுஷ்டவிரணம், ரஸவாதசிலேஷ்மா துஷ்டவிரணம், ரஸசிலேஷ்ம பித்தாதுஷ்டவிரணம், ரஸதிரிதோஷாதுஷ்டவிரணம் என்பனவாம். (ஜீவரக்ஷாமிர்தம்).

அதூர்த்தன்

குசனுக்கு மூன்றாம் புத்திரன். இவன் குமரன் ராஜருஷியான கயன்.

அதோக்ஷசன்

விஷ்ணுவிற்கொரு பெயர்.

அதோத்தரஜன்

சூரியவம்சத்து அரசன். கயனுக்குத் தந்தை.

அத்தாமலகன்

ஒரு வேதியன். இவன் குமரன் ஆக்கினவர்க்கன். இவன் பதினாறு வயதில் அவதூதாச் சிரமியாயினன்.

அத்தாமலகாசாரியார்

ஒரு சித்தர். யமுனை யாற்றங்கரையில் தவஞ் செய்து கொண்டிருக்கையில் இவரது தவநிலை அறியாத ஒருத்தி, தன் குழந்தையை இவரிடம் விட்டு நீராடச்செல்லக் குழந்தை தவழ்ந்து சென்று யமுனையில் வீழ்ந்து இறந்தது. இதனைக் கூக்குரலால் அறிந்த சித்தர் அக்குழந்தை உடலில் சென்று சங்கராசாரியரை அடுத்தனர்.

அத்தி

1. சராசந்தன் பெண். கஞ்சன்தேவி, 2. ஒரு சிவகணத்தவன். இவன் திருக்கைலையில் சிவமூர்த்தி ஏகாந்தத்திலிருக்கையில் வாயிற்காவலர் தடுக்கவும் உட்சென்று பார்வதியாரால் யானையாகச் சாபம் பெற்றுப் பார்வதியாரை வேண்ட அவர் இரக்கப்பட்டு நீ கஜராண்யத்தில் சிவபூஜை செய்து முன்பே அவ்விடம் பூஜைசெய்து கொண்டிருக்கும் காளனுடன் மாறு கொண்டு இறந்து முத்தியடைக என்ற சொற்படி பூஜை செய்து முத்தியடைந்தவன். (திருக்காளத்திபுராணம்). 3. சந்திரகுலத்து அசமீளன் தந்தை. 4, அஸ்தியைக் காண்க. 5. சந்திர வம்சத்து அரசன், சுகோத்திரன் புத்திரன். தாய் ஜயந்தி. புத்திரன் விகுஞ்சன். பாரியை யசோதரை, ஜயந்திக்குச் சுகுமாரி என்றும், விகுஞ்சனனுக்கு விகுண்டன் எனவும், யசோதைக்கு யசோதரை எனவும் வேறு பெயர்கள். இவன் அத்தினபுரியை நிர்மாணஞ் செய்தவன்.

அத்திகன்

1. சலற்காரன் குமரன், தாய் சலற்காரை. ஆதிசேடன் முதலிய மாதுலரைக் காக்கச் சனமேசயன் சர்ப்பயாகத்தை நிறுத்தினவன். இவன் தாய் தன்னைவிட்டுப் பிரியும் கணவனை எனக்கு என்னகதியென ருஷி அஸ்தியென்று கூறிச் சென்றபிறகு இவர் பிறந்ததால் இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது. 2. பூரு வம்சத்து அகோத்ரன் குமரன், இவனாண்ட காரணத்தால் இவன் பட்டணத்திற்கு அத்தினபுரமென்று பெயர். இவன் குமாரர் அசமீளன், தவிமீளன், புருமீளன். 3. வசுதேவனுக்கு உரோசனையிடம் உதித்த குமரன்.

அத்திகிரி

இது காஞ்சிமாநகரத்திலுள்ள மலை. பூர்வம் ஐராவதமென்னும் யானை விஷ்ணுமூர்த்தியைப் பூசித்துப் பேறுபெற்ற இடம். பிரமன் அசுவமேதயாகஞ் செய்ததலம். (காஞ்சிபுராணம்).

அத்தினபுரத்தாசர்

தருசகனோடு போர் செய்யவந்தவர்களுள் எலிச்செவி யரசனுடைய முன்னோர் (பெருங்கதை.)

அத்தினபுரம்

குரு குலத்தரசன் நகரம். அசமீளன் தந்தையாகும் அத்தியென்பவன் ஆண்டது. ஒருமுறை துரியோதனன் பெண்ணைக் கவர்ந்த கண்ணன் குமானாகிய சாம்பனைக் கௌரவர் சிறைசெய்யப் பலராமர், சமாதானஞ்செய்து கேளாமையால் கலப்பையால் இது கங்கையில் மூழ்கப் பிரயத்தனஞ் செய்தனர். அப்போது இந்நகர் கடல்கொண்டது. வங்காள ராஜ்யத்திலுள்ளது. (2) அஸ்தியென்னும் பெயருள்ள அரசனால், நிருமிக்கப்பட்ட பட்டணம். THE CAPITAL OF THE KURUS, NORTH EAST OF DELHI ENTIRELY DILUVIATED BY THE RIVER GANGES. IT WAS SITUATED (22) MILES NORTH EAST OF MIRAT AND THE SOUTH WEST OF BIJNOR, ON THE RIGHT BANK OF THE GANGES.

அத்திபதி

காந்தாரா நாட்டரசன். நீலபதி கணவன், இராகுவன் தந்தை, இவனது இராஜதானி இடவயம் என்ப. பிரம்தருமன் கட்டளையால் அவந்தியை இராசதானியாகக் கொண்டவன். (மணிமேகலை)

அத்திமேசம்

தேவர் பூஜித்த காசியிலுள்ள சிவபிரதிட்டை.

அத்திரஇதயம்

ஒரு வித்யை. இது பகைவரை நசிக்கும் பொருட்டுச் சிவமூர்த்தியால் சுவாயம்பு மநுவிற்கும் அம்மநு, வசிட்டருக்கும், வசிட்டர், சித்திராயுதனெனும் காந்தருவனுக்கும், அச்சித்திராயுதன் தன் தௌஹித்திரியாகிய மனோரமைக்கும், அவள் சுவாரோசிஷ மனுவிற்கும் உபதேசித்தது.

அத்திரி

1. அகரம் ஈச்வரனைத் தெரிவிக்குஞ் சப்தம், திரி என்பது திரிகுணாத்மகமாகும் பிரகிருதியைத் தெரிவிக்கும்; இவ்விரண்டினும் சமமான பக்தியை வைத்தவராதலால் இப்பெயர் பெற்றவர். பிரமன்நேத்திரத்தில் பிறந்தவர். திரிமூர்த்திகள் குமாரர்களாய் வரத்தவஞ் செய்தவர். இவர் தேவி அநசூயை, இவர் காமத்தால் அநசூயையை நோக்க வீரியம் வெளிப்பட்டது. அதை வாயு, திரட்டி ஆகாயத்திலிட அது சந்திரன் ஆயிற்று. இவர் உடம்பில் விஷ்ணு புகுந்து வேதியராகப் பிறந்து அநசூயையின் பாலுண்டு தத்தாத்திரேயர் ஆயினர். இவரை ஏகயன் கோபித்துக் கொல்லவரத் துருவாசரிவரிடம் (7) நாட்களிற் பிறந்து அவனை யெரித்தனர். இவர் ஆச்சிரமத்தில் ஸ்ரீராமமூர்த்தி தங்கி ஆரண்யஞ் சென்றனர். தேவாசுரயுத்தத்திற் பயந்த சூர்யசந்திரர்களுக்குப் பயத்தைப் போக்கி அசுரரை ஒரு சொல்லில் வென்றவர். அருந்ததிக்குத் தந்தை, இருக்கு வேதத்தின் ஐந்தாவது காண்டத்தின் அதிகாரியானவர். 2. சண்முகசேநாவீரன். 3. ஒரு பிராமணர், தயிரிய மகாராசனிடஞ் சென்று செல்வம் பெற்றுப் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தவத்திற்குச் சென்றவர். 4. ஒருதீர்த்தம். 5. அத்திரிகுல வேதியன். இவன் குமரன் ஆத்திரேயன். இவன் காமத்தால் காயத்திரி முதலிய விடுத்துத் திருக்குற்றால மலயமாருத பரிசத்தால் பாவநீங்கி முத்தியடைந்தவன். (குற்றால்புராணம்).

அத்திரிலோசனன்

துரியோதனன் தம்பி.

அத்திவல்லன்

கங்க வம்சத்தரசன்.

அத்துழாயம்மாள்

பெரிய நம்பிகளின் திருமகள். இந்தம்மாள் நீராடப் போகையில் மாமியாரைத் துணையழைக்க அவள் உங்கள் வீட்டிலிருந்து வெள்ளாட்டிகொண்டு வந்தையோவென வெறுக்க இதை இந்தம்மாள் உடையவரிடம் தெரிவிக்க, உடையவர் இவளுக்கு முதலியாண்டானை வேலையாளாக நியமித்து, மீண்டும் அழைத்துக் கொண்டனர். இந்தம்மாள் பெரியநம்பிகள், மாறநேர்நம்பிக்குச் சரம கைங்கர்யம் செய்ததற்காகப் பெரிய நம்பிகளைச் சிலர் கோவிலுள் வரவொட்டாது விலக்கஇவள் பெருமாள் திருத்தேர் தெருவில் வரத் தரிசித்துப் பெரியநம்பிகள் செய்தது திருவுளத்திற்கு வப்பு, அல்லது அன்று என்று தெரிவித்த பிறகே அப்புறம் போக வேண்டுமென்று வேண்டப், பெருமாள், உகப்பெனக்கந்தாடை அண்ணன் தோண்மீது பெரியநம்பியைத் திருத்தேர்த்தட்டிற்குக் கொண்டுவரக் கட்டளையிடக் களித்தவள். இவள், கூரத்தாழ்வான் சரமதசையடைந்த போது அவர் முடியைத் தம்மடிமீது வைத்துக் கொண்டவள். (குருபரம்பரை.)

அத்துவஞ்சாத்தன்

இவன் ஒல்லையூர்தந்த பூதபாண்டியனால் “மடங்கலிற்” எனும் பாடல்கூறப் பெற்றவன். (புறநானூறு)

அத்துவா

இது, ஷடத்வாவெனச் சைவர்களால் கூறப்படுவது. அவ்வத்து வாக்கள் கலாத்வா, புவனாத்வா, வர்ணாத்வா, மந்திராத்வா, பதாத்வா, தத்வாத்வா என்பன. இவற்றைச் சிவபிரானுக்குத் திருமேனியாக ஆகமங்கள் கூறும். சாந்தியாதீதகலை திருமுடி, சாந்திகலை திருமுகம், வித்தை மார்பு, பிரதிஷ்டை குய்யம், நிவர்த்தி முழந்தாளும் பாதமும் ஆகிய பஞ்சகலைகளும் அங்கங்களாம். புவனங்கள் ரோமம், வன்னங்கள் தோல், மந்திரங்கள் உதிரம், பதங்கள் நரம்பு, தத்வங்கள் எலும்பும் தசையும் சதாசிவர்க்குத் திருமேனியும், பிராணன் பரமசிவனாம்.

அத்தோதயமகோதயம்

ஆதிதித்தியனுஞ் சந்திரனும் மகரத்துத் திருவோணத்திலே நிற்க ஞாயிற்றுக்கிழமையில் வியதிபாதயோகமுங் கூடி லத்தோதயம், இவை சோமவாரங் கூடின் மகோதய மெனப்படும். (விதானமாலை).

அத்யந்தாபாவம்

முக்காலத்தினுமின்மை. இது வாயுவில் உருவமின்மை. பூதலம் கடமுடையதன்று என்றாற் போல்வது.

அத்யாத்மராமாயணம்

விச்வாமித்திரரால் செய்யப்பட்ட இராமகதை.

அத்ரி

மூன்றுதினம் அத்யயனம் செய்யாத ராதரிகிடையாது எனும் பொருளில்த்ரி; மூன்று முறை அத்யயனமில்லாத, ரா. ராதரி அ. இல்லை (அராத்ரி) எனும் பெயர் அத்ரி எனமருவியது.

அத்ரிகை

இவள் ஒரு அப்சரஸ்திரி. இவள் கங்கையில் ஸ்நானஞ் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரின் காலைப் பற்றி இழுக்க முனிவர், யோகதிருஷ்டியால் இவள் காந்தர்வஸ்திரீ என்றறிந்து மீன்போல் என்னையிழுத்துச் சந்தியாவநத்தைத் தடுத்தமையால் மீனாகக் கடவை எனச்சாபம் பெற்றவள். பின்னர், அப்பெண் முனிவரை வணங்கி அனுக்கிரகிக்கக் கேட்க அவர் நீ சிலகாலஞ்சென்று இரண்டு குழந்தைகளைப் பெறுவாய். அக்குழந்தைகளுக்குப் பிறகு சுவர்க்கம் அடைவாய் என்று நீங்கினர். இவள், மீனுருப்பெற்று உபரிசரவசுவின் வீரியத்தை விழுங்கி வலையன் வலையில் அகப்பட அவன், வயிற்றைச் சேதிக்க அதில் இரண்டுகுழந்தைகள் இருக்கக்கண்டு அரசனுக்கு அறிவிக்க அரசன், குமரனைத் தான் எடுத்துக்கொண்டு குமரியை வலையனுக்குக் கொடுத்தனன், அவ்வலையன், காளி அல்லது மச்சகந்தி எனப் பெயரிட்டு இவளை வளர்த்தனன். இவளே மச்சகந்தி. (பார~ஆதி.)

அத்வதி

பல்லாரிக்கு அருகிலுள்ள அதோனியெனும் பட்டணம்.

அத்வபதி

மத்திர தேசாதிபதி. இவன் பதினெட்டு வருஷம் சாவித்திரியை நோக்கித் தவஞ்செய்து சாவித்திரியெனும் பெண்ணைப் பெற்றனன். 2, கேகய நாட்டரசன். பெண், கைகேசி. குமரன் யுதாசித்.

அத்வைதமதம்

சுத்தப் பிரமமாகிய சர்வ சாக்ஷியினிடத்தில் அக்நியிற் சூடுபோல அபின்னமாகவிருக்கின்ற ஒருசத்தி உண்டு. அச்சத்தி அவ்வதீதப் பிரமத்தினிடத்தில் அடங்கியிருக்கும்போது அதற்குச் சுத்தப்பிரமம் என்று பெயர். மேற்கூறிய சத்தி, விச்ரம்பித்துச் சுத்தப்பிரமத்தை வியாபிக்கும்போது அப்பிரமம் பரைவியாபகத் துளிருந்தபடியால் அதற்குப் பிரமம் என்று பெயர். அப்பிரமசந்நிதானத்தில் லக்ஷணசூன்யமான சத்தியினிடத்தில் அவிகிருதகுணங்களாகிய சுத்தசத்வம், சுத்தரஜஸ், சுத்ததமஸ், எனும் மூன்று குணங்கள் தோன்றின. இந்தச் சுத்தசத்வத்திற்கு ஆனந்தரூப சத்தியெனவும், சுத்தரஜஸுக்குச் சித்ரூபசத்தி யெனயும், சுத்ததமஸுக்குச் சத்ரூபசத்தி யெனவும் பெயர். மேற்கூறிய பிரமம், ஆனந்தரூபசத்தியுடன் கூடிச் சுழுத்தியை யடைகையில் பரமானந்தன் எனவும், சித்ரூபசத்தியுடன் கூடிச் சுவப்பனத்தை யடைகையில் பரிபூரணன் எனவும், சத்ரூபசத்தியுடன் கூடிச் சாக்ரத்தை யடைகையில் பரன் எனவும் படும். முற்கூறிய சச்சிதானந்த பிரமத்தினிடத்தில் மூலப்பிரகிருதி உண்டாயிற்று. மூலப்பிரகிருதியின் சத்வகுணத்திற்கு மாயை எனப் பெயர். அம்மூலப்பிரகிருதியின் தமோகுணத்தில் ஆவரண விக்ஷேப சக்திகளுண்டாயின. அம்மூலப் பிரகிருதியின் ரஜோகுணத்தில் அவித்தை உண்டாயிற்று, ஆவரண சத்திசீவர்களை யுணமையறிய வொட்டாமல் மறைக்குஞ் சத்தி, விக்ஷேப சத்தியில் பிரபஞ்சம் தோன்றுவதற்கான ஆகாசம் தோன்றிற்று. அவ்வாகாசத்திடம் ஒன்றிலொன்றாய் மற்றப் பூதங்கள் தோன்றிப் பிரபஞ்சம் உண்டாயிற்று, அவித்யை, அபாரமார்த்திகம், சதசத்வி லகூணம், ஜடம், அஞ்ஞான ரூபமாயிருப்பது; பிரமம், சுத்த சைதன்னியம், மாயாவச் சின்ன சைதன்னியம், அந்தக்கரணாவச் சின்ன சைதன்னியம், விருத்தியவச் சின்னசை தன்னியம், விஷயாவச் சின்ன சைதன்னியம் என ஐவகைப்படும். இந்த வேறுபாடுகள் சுத்த சைதன்னியத்திற்கு உபாதி பேதங்களாலுண்டாகின்றன. சுத்தசைதன்னியம் என்பது சுத்தபிரமம். மாயாவச் சின்ன சைதன்னியம் என்பது பிரபஞ்ச சிருட்டிக்குக் காரணமாய்ச் சர்வாந்தர்யாமியாகிய ஈச்வரன். அந்தக் கரணவச் சின்ன சைதன்னியம் என்பது ஆன்மா, ஆகாசத்திலிருக்குஞ் சூரியன் கடத்திலிருக்குஞ் சலத்தில் பிரதிபலிப்பது போல் பிரமம் அந்தக் காணவச் சின்னர்களாகிய சீவர்களிடத்தில் பிரதிபலித்திருப்பது; எங்கனம் ஆகாச சூர்யனுக்கும் கடகுரியனுக்கும் பேதமில்லையோ அவ்வகை பிரமத்திற்கும் சீவர்களுக்கும் பேதம் இன்று. விருத்தியவச் சின்ன சைதன்யம் என்பது ஞானம். விஷயாவச் சின்ன சைதன்யம் என்பது கடபடாதிகள். அப்பிரமம், பிரபஞ்சத்திற்கு விவர்த்தோபாதான காரணம். விவர்த்தோபாதானம் என்பது, கிளிஞ்சல் வெள்ளியெனும் பிராந்தி போல்வது. இவ்வகைப் பிரபஞ்சத்திற்குப் பிரளயம் மூவகைப்படும். அப்பிரளயம் நித்யம், நைமித்யம், ஆத்யந்திகம். இவற்றுள், கடையிற்கூறிய ஆத்யந்திகப் பிரளயம் பிரமசாக்ஷாத்காரம் அதாவது அவித்யாரூப காரணத்துடன் பிரபஞ்சநிவர்த்தி பெற்றுப் பிரமத்துடன் ஏகமாகக் கலத்தல், இந்த ஐகபத்யம் சிரவண, மநந, நிதித்தியாஸத்துடன் கூடிய வேதாந்த ஞானத்தாலுண்டாம். அவற்றுள், சிரவணம், ஆசார்யனால் வேதாந்தபோதனையைக் கேட்டல், மநநம், கேட்டவற்றை ஐயந்தீரச் சிந்தித்தல், நிதித்தியாலம், அநாதிப்பழக்கத்தால் விஷயங்களில் பிரவர்த்திக்கும் மனதை நிறுத்தல். இந்த ஞானம் கர்மாநுஷ்டானங்களைச் செய்த பாபக்ஷயத்தால் உண்டாம். சிரவணாதிகளில் மோக்ஷ இச்சையுள்ளவர்களுக்கே அதிகாரிகள் என்று பெயர். அது, சாதன சதுஷ்டயத்தால் உண்டாம். அச்சாதன சதுஷ்டயங்களாவன: நித்யாநித்ய வஸ்துவிவேகம், இகமுத்ரார்த்த பலபோகவிராகம், சமாதிசட்க சம்பத்தி, முமுட்சுத்வம். இவற்றுள் நித்யாநித்ய வஸ்துவிவேகம் என்பது பிரமமே நித்யம் எனவும் சகத்து அநித்யமெனவும் பகுத்தறிவது. இகமுத்ரார்த்த பலபோக விராகமாவது இகபர வைராக்யங்களாற் சகல போகங்களையும் சுகதுக்க கன்மங்களையும் விட்டு நிராசையாயிருப்பது. சமாதி சட்கசம்பத்தியில், சமமாவது மனோநிக்ரகம் அதாவது மனதைச் சலியாமல் அடக்குதல். தமமாவது: பாகியேந்திரியரிக்ரகம். உபாதியாவது: மண், பெண், பொன் என்கிற ஈஷணதாயத் தியாகபூர்வகமான சர்வ கர்மசன்னியாசம். திதீக்ஷையாவது: சுகதுக்கங்கள் வரிற் பொறுத்திருத்தலாம். சமாதானமாவது: சடேந்திரியங்களையும் சிரவணத்திருத்தல். சிரத்தையாவது: குருவிடத்திலும் ஈசிவானிடத்திலும் சித்தத்தை ஏகாக்ரமாக வைப்பது. மேற்சொல்லிய உண்மை ஞானமடைய வலியில்லார் பிரம உபாசனை செய்தல் வேண்டும். அவ்வுபாசனை சகுணப்பிரம உபாசனையெனவும் நிர்க்குணப் பிரமவுபாசனை யெனவுமிருவிதப்படும். அவற்றுள் சகுணப்பிரம உபாசனையால் மனம் வயப்படுமாயின் நிர்க்குணப்பிரம உபாசனை செய்து உலகம் மருமரீசிகையிடத்தில் சலங்காலத்திரயத்திலும் இல்லாதவாறு போலவும் ரச்சுவினிடத்தில் சர்ப்பமில்லாதது போலவும் பொய்யெனக்கண்டு சகலசங்கற்பங்களும் நாசமாகப் பூரணமாயிருக்கும் அப்பிரமமே தானென்று பாவித்து அதில் வயமடைதல், இதுவே முத்தி. (தத்துவநிஜானுபோகசாரம்).

அத்வைதானந்தன்

ஒரு அத்வைத சந்நியாசி.

அநகன்

1. யதுவம்சத்தவனான வசுதேவன் தம்பி. 2. நிமிவம்சத்துக்குறிதன் குமரன்.

அநங்கத்ரயோதசி விரதம்

மார்கழி சுக்லபக்ஷத்ரயோதசியில் அநுட்டிப்பது.

அநங்கன்

1. மன்மதனைக் காண்க. 2. கர்த்தமப் பிரசாபதியின் குமரன். இவன் குமரன் நன்னிதி.

அநங்கமாலை

நாடகப்பரத்தையருள் ஒருத்தி.

அநங்கலேகை

சிவசந்மாவைக் காண்க.

அநங்கவிலாசினி

கனகமாலைக்குத் தோழி.

அநசுவான்

சந்திரவம்சத்து அரசன். புரு வம்சத்தில் பிறந்த குருபுத்திரனாகிய விதுரன் என்பவனுடைய புத்திரன். தாய் சம்பிரியை. இவளுக்கு மாகதி என்றும் பெயருண்டு. தேவி, அமிர்தை, புத்திரன்பருட்சித்து, (பாரதம்~ஆதிபர்வம்.)

அநசூயை

தக்ஷன் பெண், அத்திரிக்குத் தேவி, குமார் சந்திரன், முதலியவர். பஞ்சகன்னியரில் ஒருத்தி. கௌசிகன் தேவியிடஞ் சென்று பொழுதுவிடிய வேண்டிய நன்மைக்குத் திரிமூர்த்திகளைக் குமாரராகப் பெற்று அந்த மூர்த்திகளிடம் வரம்பெற்று அவர்களைத் துருவாசர், தத்தாத்திரேயர், சோமர் முதலிய புத்திரராகப் பெற்றவள். ஸ்ரீராமன் தண்டகவனத்துச் சீதாபிராட்டியுடன் சென்று அத்திரி ஆச்சிரமத்தில் தங்க இவள் பிராட்டிக்கு வழியில் நீக்கம்வராது மங்கல அணி அணிந்து வேண்டிய தருமங் கூறி அனுப்பினவள். கர்த்தமப் பிரசாபதியின் பெண் என்றுங் கூறுவர். அத்திரிமுனிவர் தவஞ் செய்கையில் தானும் கூடச் சிவபூஜையிலிருந்து கணவற்கு வேண்டிய உபசாரஞ் செய்துகொண்டு வந்தனள். இவ்வாறு ஐம்பத்துநான்கு வருடங்கள் முடியவும் மழையிலாது பிராணிகள் வருந்துகையில் முனிவர் எழுந்து மனைவியை நோக்கி “நீர் வேண்டும்” என அனசூயை கமண்டலங் கொண்டு நீர்க்குச் செல்லுகையில், பெண்ணுருக் கொண்டு கங்கை பிரத்தியக்ஷமாகி எங்குச் “செல்கின்றாய்” என “அனசூயை நீர் யார்?” எனக் கங்கை, தான் “கங்கை” யென “ஆயின் என் கணவர் ” தவம் முடியுமளவும் இங்கிருக்க” வெனக் கேட்க, கங்கை நீ செய்த தவத்தில் ஒரு மாதபலந் தருக” என வேண்ட அவ்வாறு கொடுத்துத் தன் கணவர்க்கு நடந்தவை கூறி ஒருவருஷ பலம் கங்கைக்குக் கொடுத்து எக்காலத்தும் தக்ஷிணத்தில் காமதவனத்தில் இருக்க வரமடைந்தவள்.

அநதாரியப்பமுதலியார்

இவர் வாயல் எனும் ஊரிலிருந்தகும் பமுதலியார் குமாரர், இவர் ஒரு வித்வானுக்குத் தம்மை விற்றுப் புகழ்பெற்றவர் இவரும் சிறந்த தமிழ்க்கவி, இவர் தமிழில் பாகவதபுராணம் பாடியவர் வேளாளர். “கம்பனென்றுங் கும்பனென்றுங் காளியொட்டக்கூத்த னென்றும், கும்பமுனியென்றும் பேர்கொளவரோ: அம்புவியில், வன்னா வலர் புடைசூழ் வார்க்குடந்தை யாரியப்பன், அந்நாளிலே யிருந்தக் கால்” இக்கவி இவர் மீது பாடப்பட்ட தென்கிறார்கள். இவர் தொண்டைநாட்டு வாயற்பதியினர். இவர் உறத்தூரிலிருந்த வேதியரிடத்துத் தமிழ் கற்கப் புகுந்து அவராற் சிங்கராயனுக்கு விற்கப்பட்டவர் எனவுங் கூறுவர். இவர் கன்றாப்பூரிலிருந்த தண்டாயுதெனென்பவன் மீது ‘திரம்பெறு கன்றாப்புடைய சிங்கப்பெருமா, னுரம்பெறுதண்டாயுதனுக் கோலை: பெரும்பகலே, யந்திவரு நீ நினைந்தாலல்லவென்றாலுங்காலம், பிந்திவரு முந்திவரும் பேச்சு” எனக்கவி பாடினவர். இவர் சுந்தரபாண்டியமெனப் பெயரிய திருவாலவா யுடையார் திருவிளையாடலைக் கச்சிவீரப்பன் எனும் மன்றை எனும் ஊர்க்குரிய மதுரை அர்சனுக்கு மந்திரியாகிய செவ்வந்தியின் துணைவனான திருவிருந்தான் எனும் உபகாரி வேண்ட இயற்றினர் என்பர்.

அநந்தகுணபாண்டியன்

குலோத்துங்க பாண்டியன் குமரன். இவன் அரசாளுகையில் சமணர் அமிகாரயாகஞ் செய்து அந்த யாகத்தில் பெரும்பாம்பை உண்டாக்கித் தமிழ்நாட்டு மதுரை மேலேவினர். அழவருதலறிந்த பாண்டியன் சிவாநுக் கிரகத்தாலதைக் கொல்லப், பாம்பு விஷத்தைக் கக்கிற்று. அந்த விஷச்சுவாலையாற் சுனங்களிறக்கப் பாண்டியன் சிவமூர்த்தியை வேண்டினன். சிவமூர்த்தி அமுத்தாரையால் விஷச்சுவாலையைப் போக்கினர். இவன் காலத்துச் சமணர் மதுரை மீது மீட்டும் பசுவை ஏவினர். அதைச் சிவமூர்த்தி நந்திமாதேவராற் கொல்வித்தனர்.

அநந்தசிவாசாரியர்

சித்தாந்த சாராவளி யெனும் பத்ததிக்கு உரை செய்த ஆதி சைவ சிவாசாரியர்.

அநந்தசூரிகள்

புண்டரீகாக்ஷ யஜ்வாவின் குமரர். தோதாரம்மன் புருஷர்; திருவேன்கடமுடையான் கட்டளைப்படி திருவேன்கடஞ் சென்றிருக்கையில் சுவப்பனத்தில் திருவேங்கடமுடையான் பிராமணப் பின்ளைபோல் வந்து திருமணி தர அதனை வாங்கி மனைவியிடந்தந்து அதனால் வேதாந்ததேசிகசைப் பெற்றவர். (குருபரம்பரை).

அநந்தசோமயாஜியார்

எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் குமரர் புண்டரீகாக்ஷயஜ்வர். (குருபரம்பரை).

அநந்தநேமி

உசசயனியாண்ட புத்த அரசன். இவனுக்குத் தந்தை பிரத்தியோதன்.

அநந்தனர்

பதினாலாவது ஜைந்தீர்த்தங்கரர். தந்தை சிம்மசேநமகாராஜா. தாய் செயசியாமை, ஆனி மாசம் கிருஷ்ணபக்ஷ துவாதசி திதி ரேவதிநக்ஷத்திரம் ஜனனம்; உன்னதம் (9) வில், சுவர்ணவர்ணம் (30) லக்ஷவருஷம் ஆயுஷ்யம். புத்ரன் அருந்தவிசயன் சயாச்சியர்முதல் கணதரர் (5) பெயர். இவர்காலத்து ராஜாக்கள் சுப்பிரபன், பலதேவன், புருஷோத்தம வாசுதேவன், மதுசூதனபிரதி வாசுதேவன்.

அநந்தன்

1. சிவன், விஷ்ணு, ஆதிசேஷன். 2. ஆதிசேடன், கத்ருகுமரன். வைசயந்திமாலை தரித்தவன். இவன் தனது ஆயிரஞ்சிரங் கொண்டு பூமியைத் தாங்குவான். இவன் ராமாவதாரத்தில் லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் பிறந்து விஷ்ணுவைப் பிரியாது அவருக்குத் திருப்பாற் கடலில் அணையாகவும், நிற்கும்போது குடையாகவும், பாதுகையாகவுமிருந்து கைங்கர்யஞ் செய்பவன். இவன் சிவமூர்த்தியின் நடனதரிசனங்காண விஷ்ணுவின் கட்டளையால் பூமியில் பதஞ்சலி முனிவனாகப் பிறந்து சிதம்பரத்தில் தவஞ் செய்து நடனதரிசனங்கண்டவன். (சிதம்பரமான்மியம்) 3. ஆதிசேடனைக் காண்க. 4. பராசருஷியின் புத்ரன். 5. ஒரு தமிழ்ப்புலவன். வில்லியெனும் புலவனுக்குத் தோற்று, என் பெயர், ஆதிசேடனுக்கும் உண்டெனக் காதறுப்புண்ணாது தப்பினவன்.

அநந்தப்பன்

நயனாராசாரியர் மாணக்கன்.

அநந்தருஷி

ஆதிசேஷர் அவதாரமாய்ப் புரிகாபுரியில் வித்துருமனென்பவனிடத்தில் நபும்சக உருவாய்ப் பிறந்தனர், இதனால் தந்தை குற்றமடைந்து சிவனை நோக்கித் தவமியற்றி நபும்சக நீங்கிப் பும்சத்துவமடைய வரம் பெற்றார். பின் ஆண் தன்மையடைந்த அநந்தருஷி எக்யராதன் பெண்ணகிய குணவதியை மணந்தார். இவர் மாதாபிதாக்கள் களிக்க விஷ்ணுமூர்த்தியால் உபதேசிக்கப்பட்டனர். இவர் மனைவியுடன் தவம்புரிந்து வருகையில் பன்னிரண்டாம் வருட துவாதசியில் சமுர்திரஸ் நாகஞ் செய்யப் போய் ஜலத்தில் மூழ்கியெழுந்திருக்கச் சக்தியற்றவராய் ஜலசரங்களால் உபத்திரவஞ் செய்யப்பட்டு ஜலத்திலிருக்கையில் விருத்தசர்மா என்கிற பிராமணன் இவரைத் தூக்கி உபசரித்து வீட்டுக்கழைத்துச் சென்று பிள்ளையைப்போல் வளர்த்தான். இவர் அவன் பெண்ணாகிய அசாருமதியை விவாகஞ் செய்துகொண்டு ஜயன், விஜயன், கமவன, விமலன், புதன் எனும் ஐந்து புதல்வர்களைப் பெற்றனர். பின் மூத்தகுமார்னாகிய புதனுக்குத் தர்மசாரனென்பவன் தன் பெண்ணைக் கல்யாணஞ் செய்வித்தான். இவ்வகை அநாதருஷி களித்திருக்கையில் மகோததி சமுத்திர ஸ்நானத்நிற்குப் போய்ப் பாகவதர் கானசிநேகிதர்களைக் கண்டு ஒன்றுந்தோன்றாம லிருக்கையில் ஒருபெண் இவரைக்கண்டு அழுதுகொண்டு இருந்தாள். அவளைக்கண்டு இவர் ”என்அழுகிறாய்?” என்றார். அப்போது, ஓர் அன்னப்பறவை வந்தது, அங்கேயிருந்த ருஷிகள் இவர் ஏன் திகைத்து நின்றாரென்று கேட்டார்கள். இக்கதை கிடைத்தவரையில் எழுதப்பட்டது. (சல்கிபுராணம்).

அநந்தர்

அசுத்தபுவனங்களைப் பிரேரித்து எழுந்தருளியிருக்கும் சிவாதிஷ்டான மூர்த்தம். இவர் அநாதருடைய மூர்த்திபேதம்.

அநந்தவிஜயம்

தருமன் சங்கு.

அநந்தவிரதம்

இது புரட்டாசிமாதம் பூர்வபக்ஷ சதுர்த்தசியில் நதிக்கரையில் விதிப்படி சுத்தஞ்செய்து கலசமமைத்து விஷ்ணுமூர்த்தியை அதில் ஆவாகனஞ் செய்து ஒரு கயிற்றில் (14) முடியிட்டு அக்கயிற்றைக் குங்குமத்தில் நனைத்துப் பலவித பலகாரங்களை நிவேதித்து இஷ்டசித்தியை வேண்டி வலக்கரத்திற் கட்டி விரதமிருப்பது. கிருஷ்ணமூர்த்தி பாண்டவர்க்கு உபதேசித்தவிரதம்.

அநந்தாதிகள்எண்மர்

அநந்தர், சூக்ஷமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி இவர்களே அஷ்டவித்யேசுவரர் எனப்படுவர். இவர்கள் வாமாதிசத்திகளோடு கூடியவர். அதிகாரமலம் உள்ளோர். சுத்தாத்வாவில் ஈச்வரதத்வவாசிகள்.

அநந்தாழ்வார்

இவர், திருவேங்கடமாமலையிலே ராமானுஜ புத்தேரிகட்டும் போது மணல் சுமவாநிற்க, பிள்ளைாகளிலே யொருவர்வந்து கூடையை வாங்கப் புக, அநந்தாழ்வானும் “நான் கூடையை விடிலிளைப்பற்று நீ கூடையைத்தொடில் இளைப்புதியென்ன,” பிள்ளையுமிளைப் பாகாதென்று கூடையை வாங்கப்புக, நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்கவேணுமோ நீயுமொரு கூடையை எடுத்துச் சுமக்கலாகாதோ வென்றருளிச்செய்தார். பின்னையுமொருநாள் அநந்தாழ்வார், கர்ப்பவதியான தேவிகள் மேலே மண்சுமத்தாநிற்கத் திருவேங்கடமுடையார் ஒரு பிள்ளையாய் வந்து எதிரே கூடையை வாங்கிக்கொண்டு போக, தேவிகள் கடுகி வருமதுகண்டு இதென்ன கடுகிவருகிறாய் என்ன, தேவிகளும் ஒரு பிள்ளை கூடையை எதிரே வாங்கிக்கொண்டு போகிறானென்ன அநந்தாழ்வானும் கைங்கர்ய விக்கினகாரீகூடையைத் தொடாதே என்று கொட்டெடுத்து ஓடியடிக்கப்புகத் திருவேங்கடச்செல்வன் கோவிலிலே புகுந்தானென்பார்கள். அந்தாழ்வான் திருநந்தவனத்திலே திருப்பள்ளித் தாமமெடா நிற்க ஸர்ப்பம் ஸந்தஷ்டமாக இவரும் நீராடிக் கைங்கர்யத்திலே புகுதத்திருமேனிக்குப் பரிவாயிருப்பார், விஷந்தீர்க்க வேண்டாவோவென்று கேட்க இவரும் வேண்டாவென்றார். திருவேங்கடமுடையான், சந்நிதியிலே அநந்தாழ்வானைப் பார்த்து விஷந்தீர்க்க வேண்டாவென்று என்ன நினைத்துச் சொன்னாய் என்ன? அநந்தாழ்வானும், ”கடித்த பாம்பு வலிதாகில் விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீவைகுண்டநாதனைச் சேவித்துக் கொண்டிருக்கிறேன்; கடியுண்டபாம்பு வலிதாகில் திருக்கோனேரியில் தீர்த்தமாடி, தேவரீரைச் சேவித்துக் கொண்டிருக்கிறேன் என்றிருந்தேனென்று விண்ணப்பஞ்செய்தார். ” அநந்தாழ்வான் போசலராஜ்யத்துக்கு எழுந்தருளும் போது தீர்த்தப்பிரசாதங்கள் கொண்டெழுந்தருள ஒரிடத்தில் நீராடி யமுதுசெய்யப் புக்கவாறே பட்டையடங்கலும் சிற்றெறும்பா யிருக்கக்கண்டு துணுக்கென்று (எம்பெருமான் பொன்மலை மேலே தேனுமாவேனே) என்கிறபடியே இப்படி சிதலாய்த் திரிவார்கள். ஆகையால் இப்படியே வைத்து வாருங்கள் என்று எழுந்தருளினார். பின்னையுமொருநாள் அநந்தாழ்வான் திருமாலைச் சேர்க்கும் பலகையிலேயிருந்து திருமாலைச் சேர்க்கும்போது திருவேங்கடமுடையா னருளப்பாடிட இவரும் பேசாதே எழுந்தருளியிருந்து திருமாலைச் சேர்த்துக்கொண்டு ஸந்நிதியிலே சென்றவளவிலே திருவேங்கடமுடையான், நானழைப்ப வராதிருப்ப தென்னென உம்மைக் கொண்டு கார்யமென்? ஆசார்யகைங்கர்யமான கருமுகைமொட்டு வெடியாநிற்கவென்று விண்ணப்பஞ் செய்தார். திருவேங்கடமுடையான் உம்மை இங்கிலும் போகச்சொன்னால் என்செய்வீரென்ன; ஆழ்வானும் இவ்விடம், தேவரீரை ஆச்ரயித்தவர்களதன்றோ தேவரீர் ஒரு கிழமை முற்படரீரித்தனை பரன்சென்று சேர் திருவேங்கடமன்றோ, நாங்கள் திருமலையை யாச்ரயித்தோமென்று விண்ணப்பஞ் செய்தருளினார். ” (குருபரம்பரை).

அநந்தை

சுவாயம்புமநுவின் தேவி. இவளது குமாரர், பிரியவிரதன், உத்தானபாதன் முதலியோர். (மச்சபுராணம்).

அநபாயச்சோழமகாராஜன்

1. இவன்சோழச்சக்கிரவர்த்திகளில் ஒருவன். இவன் அரசாண்டு வருகையில் இவனுக்குச் சேக்கிழார் அமைச்சுத்தொழில் பூண்டுஇருந்தனர். இவர், அரசன் சமணநூலாகிய சீவகசிந்தாமணியிடை அன்பு கொண்டிருத்தல் அறிந்து அதனை நீக்கல் வேண்டி அரசனே இச்சிந்தாமணி சமணப்புரட்டுநூல், இந்நூல் மறுமைப்பயனைத் தராது என்று கூறினர். கேட்ட அரசன் ஆயின்மெய்ந்நூல் என்என்ன? முனிவர் அரசனைநோக்கி மெய்ப்பொருளாகிய பரமபதி முதலெடுத்துத்தர “தில்லைவாழந்தணர்” எனத்தொடங்கிச் சுந்தரமூர்த்திசுவாமிகளால் சுருக்கி அருளிய திருத்தொண்டத்தொகைக்குத் திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் பொருள்கூறக் கேட்டறிந்த நம்பியாண்டார்நம்பி தமதுபெயரை முன்னிட்ட கலித்துறையத்தாதி இயற்றியருளினர். அதனை ஒருவாறு கூறுகிறேனென்று அரசன் மகிழக்கூறினர். கேட்ட அரசன், களிப்படைந்து அவ்வகையினை விரிநூலாக்குக எனவேண்ட, அவ்வாறே சேக்கிழார் இயற்ற அதற்குப் பெரியபுராணமெனப் பெயரிட்டு அரங்கேற்றக்கேட்டு அத்திருமுறையினை யானைமீதுவைத்துச் சர்வவிபவங்களுடன் வீதிவலம்வரக்கண்டு சிந்தாமணியை நீக்கினவன். (பெரியபுராணம்). 2. கம்பர் காலத்திலிருந்த குலோத்துங்கனுக்கும் அநபாயன் என்று ஒருபெயரிருந்ததென்று கூறியிருக்கிறது. அதனை “இன்றும் யான்மீள்வதறியேனி ரணியனை, யன்றி ருகூறாயடர்த் தருளிக்; கன்றுடனே ஆவின்பின் போன, வநகனன பாயன், மாவின்பின்போன மனம். ” என்றும் “ஆழிப்பெருமான பயனனபாயன்” எனவும் கூறிய குலோத்துங்கசோழனுலாவாலும், அறிக. இவன் சிவபக்திமான். திருத்தில்லையில் திருப்போம்பலம் பொன்மேய்ந்தான் என்ப. இவன் திருக்காமக்கோட்டத்திருப் பணியுஞ் செய்வித்தவன்.

அநபாயாதியோகம்

யோகமறியுமிடத்து யாவனொருவன் சென்மித்த காலத்துச் சந்திரனுக்கு (12) இடத்துச் சுபக்கிரகங்கள் நின்றால் அனபாயோக மென்றும், (2)ம் இடத்துச் சுபக்கிரகங்கள் நின்றால் சுனபாயோக மென்றும், இவையிரண்டு யோகமுண்டானால் துருதுராயோக மென்றும் பெயராம். இதிலனபாயோகத்துப் பிறந்தால் ஆயுராரோக்கிய மிகவுமுண்டாம். சனபாயோகத்துமிப் படியே. துருதுராயோகத்துப் பிறந்தால் ஆயுராரோக்கியமும், ஐசவரியமும், சந்தானவிர்த்தியு மிகவுமுண்டாம். சென்ம விலக்கனத்துக்கு (7)ம், இடத்துநின்ற பூரணசந்திரனுக்கு இரண்டு பாரி சங்களினுஞ் சுபக்கோணின்றால் அதியோகமென்று பெயராம். இதிற்பிறந்தால் மிகவும் பிரபுத்வமாம். (விதானமாலை).

அநமித்ரன்

(சந்) சிநி குமரன். இவன் குமரன் சத்திராசிதன், பிரசேநன்.

அநலை

மாலியவானுக்குச் சுந்தரிவயிற்றிற் பிறந்த புத்ரி, 2. சுரபி புத்திரியாகிய ரோஹணியின் புத்ரி. அவள் புத்திரி சுகி.

அநவஸ்தை

முடிவின்மையெனும் குற்றம்.

அநாகத்சிவன்

யோகிகளால் வியோம வியாபினிக்கப்பால் அறியப்படும் தேசோ. மூர்த்தி. (சதாசிவரூபம்)

அநாகுலன்

இடைச்சங்கத்தார் காலத்திருந்த தெய்வப் பாண்டியன். திலோத்தமையுடன் புணர்ந்து சாரகுமாரனைப் பெற்றவன்.

அநாசீரிதர்

பரசிவத்தில் ஆயிரத்தொரு கூறு வலியுள்ளவர். இவரைப் பிரியாதசத்தி. அநாசிரிதை இவர் பரயை அதிட்டிக்கையால் பரன் எனவும் கூறப்படுவர். தேவிபரையெனவும் படுவள். இவர் ஒருவரை ஆச்ரியாதபடியால் அநாசிரிதர் எனப்படுவர். இவரைக் கிழக்கில் அனாதா, அநாதையெனும் சத்தியுடன் கூடியம், தெற்கில் அநந்தர் அநந்தையெனும் சத்தியுடன் கூடியும், வடக்கில் வியோமரூபா, வியோமரூபியெனும் சத்தியுடன் கூடியும், மேற்கில் வியாபகர், வியாபினியெனும் சத்தியுடன் கூடியும் தோத்திரஞ் செய்து கொண்டிருப்பர். சமனையெனும் பரையும் உன்மனையெனும் பரமும் தம்மிற்கூடி ஆன்மாக்களைத் திருவுளத்தடைத்த அவதாரம் அநாசிருதர் என்பர். இவர், ஆன்மாவை அருளுக்கு மேற்படுத்திச் சிவாநுபூதியாகிய சிவாநந்தத்தைச் சடுதியில நுக்ரகிப்பர். பராசத்தியால் சிவசாதாக்யத்தில் பஞ்சகிருத்யம் நடத்துபவர். (சதா)

அநாண்யன்

1. (சூ) காகுத்தன் குமரன். 2. (சூ.) வசுதன் குமரன். இவன் குமரன் அர்யச்வன். இவனை இராவணன் வருத்துகையில் இவன் தோற்றதுகண்டு நகைத்ததால் இவன் இராவணனை நோக்கிப் போரில் இளைத்தல் வீரர்க்கியல்பு, என்னைக் கண்டு நகைத்ததால் என் வம்சத்தில் இனிப் பிறக்கும் இராமனாலிறக்கவெனச் சபித்தவன். இவனுக்கு அநாரணியன் என்றும் பெயருண்டு. (உத்தரராமாயணம்). 3. திரிசதசுவின் குமரன். 4. (சூ.) பாணன் குமரன்.

அநாதர்

கிரியாசத்தியால் அசுத்தபஞ்ச கிருத்யம் நடத்தும் சிவாம்சம்.

அநாதிநாதர்

ஒரு சித்தர்.

அநாதிருவீடன்

சந்திரவம்சத்து அரசன். புருவம்சத்துப் பிறந்த ரௌத்திராசுவன் குமரன்.

அநாதிருஷ்யன்

திருதராட்டிரன் குமாரருள் ஒருவன்.

அநாமித்ரன்

யதுவம்சத்துதித்த யுதாசித்தின் குமரன், இவன் குமாரர்கள் நிக்கன், சிநி, பிரசுநி.

அநாயு

தக்ஷப்பரசாபதியின் குமரன்.

அநாரண்யன்

அநரண்யனைக் காண்க.

அநாரீருதம்

அநாசிரிதெ ரெழுந்தருளியிருக்கும் ஒருபுவநம்.

அநாவிலன்

புவனகிரிக்கரசன். அருச்சுனன் திக்குவிஜயத்திற்குச் சென்றகாலையில் இவனிடத்தில் யுத்தஞ் செய்தனன்.

அநிட்டன்

நிரைமீட்சியில் அருச்சுநனால் கொல்லப்பட்டவன்.

அநிதன்

சண்முக சேநாவீரன்.

அநிருத்தன்

1. நாரயணனது வியூகாவதாரத்தில் ஒன்று. 2. (10) கிருஷ்ணன் பேரன். பாணாசுரன் குமரியாகிய உஷையைச் சித்திரரேகையாற் களவிற்புணர்ந்து வாணனால் சிறையிடப்பட்டுக் கிருஷ்ணனால் மீட்கப்பட்டவன். பிரத்யும்நன் குமரன். இவன் குமரன் வச்சிரசுவரூபன். 3. காமன் குமரன். 4. அட்டவசுக்களில் ஒருவன்.

அநிலன்

1. கருடபுத்திரன். 2. அட்டவசுக்களில் ஒருவன். இவன் தேவி சிவை. புத்திரன் மனோஜவன். 3. மாலியின் மகன்.

அநீகன்

1. யது வம்சத்தவனான வசுதேவனுக்குத் தம்பி. 2. யது வம்சத்தவனான அநகன் குமரன்.

அநீந்திதையார்

திருக்கைலையில் பார்வதிபிராட்டியார் சந்நதியில் திருத்தொண்டு செய்துகொண்டிருந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளிடத்து ஆசைப்பட்ட அபசாரத்தால் பூமியில் சங்கிலிநாய்ச்சியாராய் ஞாயிறு எனும் தலத்தில் ஞாயிறு கிழவர்க்குப் புத்திரியாய் அவதரித்துச் சுந்தரமூர்த்திகளைத் திருவொற்றியூரில் மணந்தவர். இவரது சரித்திரத்தைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காண்க. (பெரியபுராணம்).

அநீமிஷன்

கருடபுத்திரன்.

அநு

1, (ச) யயாதிச்குச் சன்மிஷ்டையிடம் பிறந்த குமரன். இவன் குமரன் சபாநரன். 2. புருவசன் குமரன். இவன் குமரர் புருவோத்ரன், அங்கிசு 3. விலோமா குமரன். இவன் குமரன் துந்துபி.

அநுகீதை

பாரதம் அசுவமேதயாகத்திற் கூறப்பட்ட வேதாந்தநூல்.

அநுகை

காசிபர் மனைவி. தக்ஷன் பெண். இவள் குமரர் சித்தர்.

அநுக்கிரகா

நவசத்திகளில் ஒருத்தி.

அநுக்கிராதன்

குரோதத்தால் நஷ்டமடைந்த அரசன்.

அநுக்கிலாதன்

திதிவம்சத்தவனான இரண்யகசிபின் குமரன். பிரகலாதன் தம்பி. பாரிசூசமி. குமரர் பாஷ்கிலன், மகிஷன்.

அநுசதிகன்

நூறு காலாட்களுக்குத் தலைவன். சதானீகனுக்குதவி செய்பவன்.

அநுசாமந்தன்

அரசனால் நூறு கிராமங்களுக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டவன். (சுக்கிரநீதி)

அநுசுகன்

திருதராட்டிரன் குமரன்.

அநுஜானை

இவள் ஒரு அப்சரஸ்திரி.

அநுதாபகன்

தநுவின் குமரன்.

அநுதிதகாலம்

இராக்காலத்தைப் பதினாறு பங்காக்குமிடத்துக் கிரகங்களும் நக்ஷத்திரங்களும் பிறவுங் காணப்படுகின்ற கடைப்பாகம். (பராசரமாதவியம்).

அநுபசங்காரி

அந்வய திருட்டாந்தமும் வியதிரேக திருட்டாந்தமும் இல்லாதது.

அநுபதேவன்

1. யதுவம்சத்தவனான தேவகன் குமரன். 2. அக்குரூரன் இரண்டாம் புத்ரன்.

அநுபமர்

அக்கிபிரபனைக் காண்க,

அநுபமை

நிருதிதிக்கு யானை.

அநுபம்

கார்த்தவீரியன் பட்டணம். மகாஷ்மதி. (MHOW IN MALWA).

அநுபலத்தி

இன்மையைத் தெரிவிக்கும் பிரமாணம்.

அநுபலப்திசமை

வாதி அநுபலப்தி வசநங்களால் சிலபதார்த்தங்களை அங்கீகரியாதிருக்கையில் பிரதிவாதி அநுபலப்திவசநங்களால் வாதி அங்கீகரித்துள்ள சில பதார்த்தங்களின் அபவாதத்தைச் சாதிப்பது. (தரு)

அநுபாயி

பீமனால் கொல்லப்பட்ட திருதராஷ்டிர புத்திரன்.

அநுபாவுகன்

(ச) ராதியின் குமரன், இவன் குமான் ரோதனன்.

அநுப்பர்

திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் வசிக்கும் கன்னட உழவர்சாதி. (தர்ஸ்டன்).

அநுமதி

1. ஆங்கிரஸ இருடிக்குச் சிரத்தையிடம் உதித்த குமரி. 2. தாதா எனும் ஆதித்தனுக்குத் தேவி. குமரன் பூர்ணமாசன். 3. வைசுவதேவ பலிகொள்ளும் தேவதை.

அநுமப்பிரதக்ஷிணம்

ஆடிய சுக்கிலபக்ஷ ஏகாதசி,த்வாதசி, பௌர்ணமி முதலிய தினங்களில் விரதமிருந்து கோப்பிராம்மண பூஜை செய்து அநுமமந்திரஞ் செபித்து அநுமப்பிரதிட்டை செய்து லக்ஷம் பிரதக்ஷணஞ் செய்யின் பூதபிசாச பயரோகங்களிலிருந்து நீங்குவர்.

அநுமானுபாசம்

அநித்யம் சத்தம், கண்ணாற் காணப்படுதலால் என்பது. இதனை அப்ரசித்தி விசேஷியம் எனபர்.

அநுமான்

புஞ்சிகஸ்தலையென்னும் அப்சரஸு, சாபத்தால் அஞ்சனையென்னும் வாநர ஸ்திரீயாகிக் கேசரியென்பவனை மணந்திருந்தனள். ஒருநாள் வாயு, இவளது நிஜவுருக்கண்டு கூட, அவனது அம்சத்தால் பிறந்தவர். இவர், பிறந்து வளர்கையில் சூரியனை இராகுபற்ற அவனைப் பழமெனக்கண்டு கவரப்போகையில், இராகு இந்திரனையடைய இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அடிக்க அநுமுரியப் பெற்றவர், இவரை இந்திரன் எறிந்ததனால் வாயுகோபித்துத் தம்பித்திருக்கப், பிரமன் முதலிய தேவர்கள் வந்து அநுமுரிந்ததால் அநுமன் எனப்பெயரிட்டுப் பிரமாத்திரத்தாலும் தேவாத்திரத்தாலும் சாவில்லா வரந்தந்தனர். இாமையில் சூரியன் இரதத்திற்கு முன்சென்று நவவியாகரணங் கற்றவர். வீமனுடன் நட்புக்கொண்டவர். அருச்சுனன் இரதத்திற் கொடியாயிருந்தவர். இவர் சுக்கிரீவனென்னும் வாநரனுக்கு நண்பனாகத் திரிந்துகொண்டு இருடிகள் ஆச்சிரமத்திற் சென்று அவர்களுக்கு மனவருத்தத்தைத் தருங்காரியத்தைச் செய்து கொண்டிருந்தனர். அதனால் இருடிகள் கோபித்து, உனக்கு உன்னைப் புகழுங்காலந்தவிர மற்றக்காலங்களில் இசாமன் உன்னைக் காணுமளவும் உன்பலம் உனக்குத் தோன்றுதிருக்கவெனச் சபித்தனர். இவ்வாறு தன்பலந்தோன்ராது திரிந்துகொண்டிருக்கையில் இராமன் வநவாசம் வந்தகாலத்து மரத்தின்மீதிருந்து இராமலக்குமணரைக் கண்டு தந்தைசொற்படி திருமாலவதாரமெனத் தேறிப் பிராமணவுருக் கொண்டுவந்து பணிந்தனர். இராமலக்குமணர் இவரைக் கண்டு புகழ அவர்களைத் தம்நண்பன் சுக்கிரீவனுக்கு நட்புச்செய்வித்து இராமபிரான் சொற்படி திருவாழிபெற்று ஜானகியைத் தேடச்சென்று ஒரு பாலைவனத்தின் அழலுக்குச் சகிக்காது சாம்பனுடன் ஒரு பிலத்திற் புகுந்து வழிதெரியாமல் திகைக்கையில் பின்தொடர்ந்த வாநரர்களைத் தம்வாலைப் பிடித்துக்கொள்ளக் கட்டளையிட்டுப் பிலத்தினுள் புகுந்து, சுவயம் பிரபையைக் கண்டு அவள் சாபத்தைப் போக்கி அவளைச் சுவர்க்கத்திற் கனுப்பினவர், அங்கிருந்து நீங்கிச் சம்பாதியைக் கண்டு வழியறிந்து மகேந்திரமேறித் தாவி வழியில் மறித்தமைநாகத்தைத் தலைகீழாகத்தள்ளி அநுக்கிரகித்து, சுரசையென்பவள் வாயுட் புகுந்து வெளிவந்து, வழிமறித்த அங்காரதாரை, சாயாக்கிரகியென்னும் அரக்கியரைக் கொன்று தாண்டி இலங்கையிலுள்ள பவளமலை சென்று சேர்ந்து இலங்கணியையறைந்து அவளாலுளவறிந்து இலங்கைமாநகரஞ் சென்று தேடுகையில் கும்பகர்ணன் உறங்கும் பெருமூச்சிற்பட்டுத் திரும்பி, அசோகவனஞ் சென்று சீதையைக் கண்டு பணிந்து திருவாழிதந்து தேற்றித் தன் குறுகிய உருவத்தை விட்டுப் பெரிய உருவத்தைக்காட்டிச் சில அடையாளங்களையும், சூடாமணியையும் சிரஞ்சீவித்வமும் அவளிடம் பெற்று அசோகவனத்தை அழிக்கையில் எதிர்த்தகிங்கரரை வதைத்துச் சம்புமாலி, பஞ்சசேநாபதிகள், அக்ஷகுமாரன் முதலியோரைக் கொன்று இந்திரசித்தாற் பிரமாத்திரத்தாற் கட்டுண்டு இராவணன் எதிரில் தன் வாலை ஆசனமாகக் கொண்டிருந்து, அவன் வாலில் தீயிடுவிக்க அத்தீயைக்கொண்டு இலங்கையை யெரித்து மீள்கையில் ஜானகியைக் கண்டு விடைபெற்று மைநாகமடைந்து நீங்கிக் கடலைக்கடந்து மகேந்திரஞ் சென்று வரவு பார்த்திருந்த அங்கதன் முதலானவருடன் சீதையைக்கண்ட செய்தி கூறிக் களித்து இராமமூர்த்தியைக் கண்டு சுபசெய்தியை அறிவித்துச் சீதைதந்த அடையாளங்களையும், சூடாமணியையும் கொடுத்தவர். ஸ்ரீராமமூர்த்தியுடன் இலங்கைக்கு யுத்தத்திற்கு வந்து துன்முகனைக் கொன்று இலக்குமணருக்கு அக்ஷயத்தூணி அறுந்தகாலத்து இராவணன் மத்தியில் இருந்து தன்னையொரு குத்துக்குத்தென்று இராவணனைக் கேட்டு அவன் குத்த அதனால் சற்றுச்சலித்துச் சகித்து அவனைத் தாம் குத்தி முன்திக்கு யானைகளால் அவன் தேகத்திற் புதையுண்ட தந்தங்கள் உதிர்ந்து இராவணன் சாயக்கண்டு களித்தவர். முதனாள் யுத்தத்தில் இராவணன் வேலினால் மூர்ச்சித்த இலக்குமணரைக் குட்டிபோல் தூக்கிச் சென்றவர். இராமமூர்த்திக்கு வாகனமாயிருந்தவர். கும்பகர்ணன் மீது மலைகளை யெறிந்து அவனது அஞ்சாநிலைகண்டு சலித்தவர் சுக்கிரீவன் மீது கும்பகர்ணன் எறிந்த வேலைத் துண்டுகளாக்கி அதிகாயன்யுத்தத்தில் தேவாந்தகனையும், திரிசிரனையுங் கொன்று பிறகு நிகும்பன், தூமாக்ஷன், வச்சிரதந்தன், அகம்பன் என்னும் துஷ்டர்களாகிய அசுரர் முதலியோரை வதைத்து இலக்குமணர் முதலியோர் மூர்ச்சையடைந்த காலத்துச் சாம்பவந்தரா லேவப்பட்டுச் சஞ்சீவிமலை சென்று சஞ்சீவி கொண்டுவந்து அவர்களைப் பிழைப்பித்தவர். இராவணன் வஞ்சகமாகக் கொலை செய்வித்த மாயாசீதையைக் கண்டு புலம்பி இராமருக்குச் செய்தி கூறியவர். இராவணன் மூலபலத்துடன் யுத்தத்திற்கு வந்து விபீஷணர் மீது ஏவியவேலை இலக்குமணர் தாங்கி மூர்ச்சையடைந்த போது, மீண்டும் சஞ்சீவி கொண்டுவந்து ‘மூர்ச்சை தெளிவித்தவர். இராமபிரான் கட்டளையால் சீதாபிராட்டியை மீட்க விபீஷணருடன் சென்று கொண்டு வந்து இராமமூர்த்தியிடங் காட்டியவர். குகனுக்கும் பரதனுக்கும் ஸ்ரீராமமூர்த்தியின் வரவறிவித்து முத்திரை மோதிரங் காட்டித் தீயில் விழாது தடுத்து மீண்டு இராமமூர்த்தியை யடைந்து சிரஞ்சீவி பெற்றவர். விபீஷணர், இவர் இலங்கையில் செய்த வீரத்தை இராமமூர்த்திக்குக் கூறியபோது இராமமூர்த்தி களித்துப் பிரமபதம் பெற வரமளிக்கப் பெற்றவர். பஞ்சபூதங்களால் அழியாதவர், பெண் புணர்ச்சி யற்றவர். இவருக்கு மாருதி, ஆஞ்சனேயன், கேசரிபுத்திரன், வாயுபுத்திரன் எனவும் பெயர். இராமமூர்த்திக்குச் சிவபூஜையின் பொருட்டுக் காசியினின்றும் சிவலிங்கங் கொணர்ந்து தாபித்தவர். ஒருமுறை இராமமூர்த்தியின் சிவபூஜைக்குக் கங்காதீர்த்தம் அநுமான் கொண்டு வந்தனன். அவ்வநுமான் வருவதற்குமுன் இராமர் சிவபூஜை முடித்தனர். அதனால் அநுமான் அத்தீர்த்தக்குடத்தை யெறிய அதில் ஒருநதி உண்டாகிப் பெண்ணைநதியில் கலந்தது. இவர் சஞ்சீவியின் பொருட்டு உத்தரதிசை செல்கையில் தான்யமாவியின் சாபம் போக்கினவர். அந்தக்காலத்துக் கபடமாகத் தவஞ் செய்து கொண்டிருந்த காலநேமியை வதைத்தவர். சஞ்சீவி கொண்டுவருகையில் எதிர்த்த மால்யவந்தனைக் கடவில் எறிந்தவர். மயில் ராவணனைக் கொன்றவர், கந்தமாதனனைச் சத்திய உலகஞ் சென்று அழைத்து வந்தவர், சதகண்ட ராவணனாலுதையுண்ட சுக்ரீவ விபீஷணர்களை வாற்பாலத்தால் வருவித்தவர், சதகண்டன் உதிரத்தில் பிறந்த சதகண்டர்களை வதைக்கக் குரங்கு, நரசிங்கம், கருடன், வராகம், குதிரை ஆகிய பஞ்சமுக ஆஞ்சநேயராக உருக்கொண்டு அரக்கனை வதைத்து இராமனிடம் ரத்னமாலை பெற்றவர். இராமபணி முடித்துக் கந்தமாதனமடைந்து கதலிவனத்தில் தவம்புரிந்தவர். கருடனது கர்வத்தை வாலையசைத்து அவனைத் வாரகையில் தள்ளிக் கர்வ மடக்கினவர். ரூக்மணியைச் சீதையாகவும் கண்ணனை இராமனாகவுங் கண்டு சத்தியபாமையின் கர்வ பங்கம் செய்தவர். நாரத வீணையில் கானம்பாடிக் கல்லை உருகச் செய்து அதில் தாளத்தையிட்டு இறுகச்செய்து மீண்டும் கல்லுருகப் பாடுக என அவர்கள் பாடாதது கண்டு கர்வமடக்கினவர். புஷ்பயாத்திரை சென்ற வீமனது கர்வத்தை வாலைத்தூக்கச் செய்து அடக்கினவர். (இராமாயணம்)

அநுமாபகம்

அநுமிதியை உண்டுபண்ணுவது. (தர்)

அநுமாலர்

தேவாங்க ஜாதிவகை.

அநுமிதி

அநுமானத்திற்குக் காணத்தைச் செய்வது. பகுத்தறிதலாலுண் டாகும் அறிவு. (தா).

அநுற்பத்திசமை

உற்பத்தியின் பாவத்தால் எதிர்த்துவருவது.

அநுலோமன்

உயர்குலத்தாணும் இழிகுலப் பெண்ணும் கூடிப்பிறந்தவன்.

அநுல்கை

இரண்யகசிபின் புத்திரன்.

அநுவர்

சமதக்கியின் குமரர். தாய்ரேணுகை.

அநுவாதம்

அந்நியப் பிரமாணத்தால் சித்தித்த அர்த்தத்தைக் கூறுவது, (தரு)

அநுவிந்தன்

அவந்திதேசத்து அரசன். தூர் ‘யோதன பக்ஷத்தைச் சேர்ந்தவன், அர்ச்சுனனால் கொல்லப்பட்டவன். 2, கேகய தேசத்து அரசன், துர்யோதன் பக்ஷத்தைச் சேர்ந்தவன். சாத்தகியால் கொல்லப்பட்டவன். 3. தூர்யோதன பக்ஷத்தைச் சேர்ந்தவன், பீமனால் கொல்லப்பட்டவன். 4. திருதராட்டிரன் குமரன்.

அநுஹன்

பரத்வாசரைக் காண்க.

அநுஹிராதன்

குரோதத்தால் நஷ்டமடைந்த அரசன்.

அநூரு

அருணன். தொடையிலான் என்பது பொருள்.

அநேகபத்தர்

ஓர் இருடி. தேவிசுசாது. இவர் பிள்ளைகளிடம் ஆசையால் பலபிள்ளைகளுக்கு வேதமுதலிய போதித்து வருகையில் ஒரு மாணாக்கன் உறங்கினன். அவனைக்கண்டு முனிவர் அதட்டினர். இதைக்கேட்ட இவரது தேவியின் கருப்பத்திருந்த கரு, இராப்பகல் நித்திரையிலாது ஓதினால் தூக்கம் வாராதோவென்ன முனிவர் கோபித்து என்னை மறுத்துக் கூறியபடியால் நீ பூமியில் விழும்போது எட்டுக்கோணலாக எனச் சபித்து மனைவியின் பிரசவத்துக்காக மருந்து சேகரிக்க மிதிலை சென்று அங்கிருந்த வந்திகர் செய்த வாதத்திற்கு விடைதர அறியாது கடலில் கடுந்தவமியற்றச் சென்றவர்.

அநேகேசுவாவாதிமதம்

இவன், தேர், வீடு மண்டப முதலிய, அநேகர் கூடிச்செய்வது போல உலகம் அநேக ஈசுரர்கள் காரியப்படுத்த உண்டாகி அக்கடவுளர் தமது தொழிலை நிறுத்த ஆன்மாக்கள்லயப்பட்டுச் சுக்கிலத்தில் அடங்குமென்பன், இதுவே முத்தியுமாமெனவுங் கூறுவன்.

அநேநஸ்

1. ஆயுவின் குமரன். இவன் குமரன் சுத்தன். இவன் நகுஷனுக்குச் சகோதான், 2. காகுத்தன் குமரன். இவனுக்கு அருரண்யன், சுயோதனன் என்றும் பெயர். 3. (சூ.) புரஞ்சயன் குமரன்.

அந்தகக்கவிவீரராகவ முதலியார்

இவர் செங்கல்பட்டு ஜில்லாப் பொன்விளைந்தகளத்தூரில் சைவவேளாளர் குலத்திற் வடுகநாதமுதலியார் குமாரராய் அந்தகராகப் பிறந்து இயற்கையில் கவிவல்லராய்க் கற்பினையுடைய மனைவியை மணந்து ஒருமுறை அயலூருக்குச் சென்று திரும்பி வருகையில் வீட்டு ஏவலாளிகள் தலைவிக்கு முதலியார் வரவை அறிவித்தனர். தலைவி விளையாட்டாக முதலியார் யானைக்கன்றும் வளநாடும் பொற்பந்தமும் பெற்று வருகின்றனரோ என்றனள். அதனைப் பிறராலறிந்த முதலியார் தேசயாத்திரை செய்ய வெண்ணிக்கட்டமுது பெற்றுக்கொண்டு ஓரிடத்திலிறங்கிக் கைகாலலம்பிவர வைத்துச் செல்லுகையில் அதை நாய் தூக்கிச் சென்றது. அதனால் பசிகொண்டு ‘சீராடையற்ற வயிரவன் வாகனஞ்சேர வந்து, பாராளும் நான்முகன் வாகனந் தன்னை முன்பற்றிக் கௌவி, நாராயணனுயர் வாகனமாயிற்று நம்மை முகம், பாரான்மை வாகனன் வந்தேவயிற்றினிற் பற்றினனே” எனப்பாடினர். பின், புலவர் சோணாடு சென்று ஆங்குச் சிலநாள் தங்கி ஈழநாடடைந்து அரசன் பரராஜ சேகரன் தரிசனம் அகப்படாமல் காத்திருக்கையில் இவரது வீணை வல்லதிறத்தையும் கவிவன்மையையும் பிறராலறிந்த பரராஜசிங்கனென்னும் அரசன் தேவி, கவியைச் சம்மானிக்காததற்குக் கோபத்துடனிருந்தனள். அரசன் அவ்வூடலுக்குக் காரணமறியாது மறுநாள் சிங்காரவனஞ் செல்ல அவ்விடத்தில் ஒருகிளி, மரப்பொந்தினின்றும் வெளியே வருவதும் உள்ளே புகுவதுமாயிருந்தது. அரசனுக்கு முன்னம் மனைவி யூடலுடன் இதுவும் ஒரு கவலையாயிற்று. அரசன் கொலுவிற்கு வந்ததும் கண்டசுத்தி பாடும் புலவரைத் தன் மனவெண்ணம் அறிவிக்கக் கூறினன்., கேட்டபுலவர், அந்தகக்கவியின் ஆற்றலை யெடுத்துக்கூறி அரசன் முன் விட்டனர். அரசன், இவரது வரவறிந்து இவரது வரகவியின் உயர்வறியத் திரையிட்டுக் கையில் வில்லும் அம்பும் ஏந்தியிருந்தனன். புலவர் கொலுவினுட் சென்று சிதம்பரம் என்று மாணாக்கன் கூறியதால் குறுக்கில் திரையென அறிந்து குறுக்கேதிரையோ வென்று தாம் உட்கார்ந்து அரசன் நிலையறிந்து ”வாழுமிலங்கைக் கோமானில்லை மானில்லை, ஏழுமராமரமோ வீங்கில்லை ஆழி, அலையடைத்த செங்கைய பிராமாவின்று, சிலை யெடுத்தவாறெமக்குச் செப்பு ” என்னுஞ் செய்யுளைப் பாடினர். அரசன் மகிழ்ந்து பின்பு புலவரைக் கண்டசுத்தி பாடக்கூறப், புலவர் ‘வடவைக் கனலைப் பிழிந்து கொண்டு மற்றுமொரு கால்வடித் தெடுத்து, வாடைத் துருத்தி வைத்தூதி மழுகக்காய்ச்சிக் குழம்பு செய்து, புடவிக்கயவர் தமைப்பாடிப் பரிசுபெரா மற்றிரும்பி வரும், புலவர் மனம்போற் சுடுநெருப்பைப் புழுகென்றி றைத்தாற் பொறுப்பாளோ, அடவிக்கதலிப் பசுங்குருத்தை நச்சுக் குழலென்றஞ்சியஞ்சி, அஞ்சொற்கிளிகள் பஞ்சரம் விட்ட கலாதுறையு மகளங்கா, திடமுக்கட வாரணமுகைத்ததே வேதேவ சிங்கமே, திக்குவிஜயஞ் செலுத்தி வரும் செங்கோனாடாத்து மெங்கோனே” என்றனர். இவர் பொற்பந்தம் பெற்றபோது பாடியது. “பொங்குமிடியன் பங்தம் போயதே யென்கவிதைக், கெங்கும் விருது பந்தமேற்றதே குங்குமந்தோய், வெற்பந்தமான புயவீர பரராசசிங்கம், பொற்பந்த மின்றளித்தபோது,” யானை பெற்றபோது பாடியது “இல்லென்னுஞ் சொல்லறியாத சீமையில் வாழுதானனைப் போய் யாழ்ப்பாணன் யான், பல்லை விரித்திரந்தக்கால் வெண்சோறும் பழந்தூசும் பாலியாமற், கொல்ல நினைந்தே தனது நால்வாயைப் பரிசென்று கொடுத்தான் பார்க்குள், தொல்லையென தொருவாய்க்கும் நால்வாய்க்கு மிரையெங்கே துரப்புவேனே” என்றனர். இவரை ஈழநாட்டுப் புலவர் கேட்ட வினாக்களுக்கு இவர் கூறிய விடைகள்: (1) உதிரமுண்ணும் பறவையாது? விடை: துக்கம். (2) பசும்பால் எனும் பண்புத் தொகைக்குப் பொருளென்னை? விடை: கார்காலத்து வெள்ளாட்டுப் பால். (3) “பங்கமில்மாது பசுமஞ்சணன் றிழந்தும், மங்கலமு நன்கலமுமற் றிழக்காள். ” பின்னிரண்டடிகள் எவை என்ன? புலவர் விடையாகத் தனிச்சொல், “சங்கையென்ன,” என்பதைக் கூட்டி மங்கலமென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலநன் மக்கட் பேறு” என்று கூறினர். இவர் ” இராமாயண மவதானித்துக் கூறியபோது அரசன் “இன்னங்கலை மகள் கைமீதிற் புத்தகமேந்தி யந்தப், பொன்னம் புயப்பள்ளி புக்கிருந்தாளென்ன புண்ணியமோ, கன்னன் களந்தைக் கவிவீரராகவன் கச்சியிலே, தன்னெஞ்சமே டெனக்கற்றானொரு முத்தமிழையுமே” என்ற செய்யுளைப் பாடிக் களிப்பித்தனன். இவர் அரசன் மீது வண்ணம் பாடியபோது அரசன் வியந்து “விரகன் முத்தமிழ்க் கவிவீரராகவன், வரகவி மாலையை மதிக்கும் போதெல்லாம், உரகனும் வாணனுமொப்பத் தோன்றினாற் சிரகரகம்பிதஞ் செய்யலாகுமே. ” என்றனன். இவர் செய்த ஆரூருலாவைக் கேட்டுப் பரராசசிங்கம் பாடியது, ”புவியேர் பெறுந்திருவாரூருலாவைப் புலவர்க்கெல்லாஞ், செவியே சுவைபெறுமாறு செய்தான் சிவஞானமது, பவியேயெனு நங்கவி வீரராகவன் பாடியநற், கவியே கவியவனல்லாத பேர்கவி கற்கவியே. ” எனப்பாடினன். இவர் தம்மூர்க்குத் திரும்பிவர மனைவியார் என்ன கொணர்ந்தீர் என இவர் கூறியது. ‘இம்பர்வா னெல்லை யிராமனையே பாடி யென்கொணர்ந்தாய் பானாநீ யென்றாள் பாணி, வம்பதாங் களபமென்றேன் பூசுமென்றாள், மாதங்கமென்றே னாம்வாழ்ந்தே மென்றாள், பம்புசீர் வேழமென்றேன் றின்னுமென்றாள் பகடென்றேன் உழுமென்றாள் பழனந்தன்னைக், கம்பமா வென்றே னற்களியா மென்றாள் கைம்மா வென்றேன் சும்மா கலங்கினாளே. ” இவர் மயிலை கிருஷ்ணப்பவாணனைப் பாடிய சீட்டுக்கவி, இனிதினிதெனச் சேரசோழபாண்டியர் மெச்சுமுச்சித மதுரவாக்கி, ஈழமண்டலமளவுந் திறைகொண்ட கவிவீரராகவன் விடுக்கு மோலை, வநிதையர் விகார மன்மதராஜரூபன் மயிலையாதிபதி சக்கிரவாளத்தியாகி நங்காளத்தி கிருஷ்ணப்பவாண னெதிர்கொண்டு காண்க, கனதமிழ்த் துறையறி மரக்கலங்காதல் கூர் கன்னிகா மாட நன்னூற், கட்டுபேர் கொட்டாரம் வாணி சிங்காதனங் கவிநாடகஞ் செய்சாலை, வினவு சிவகதையிற் சர்க்கரை யெனத் தக்க வினையேனுடம்பு நோயால் மெலியுமோ மெவியாத வகைபால் பெருத்ததொரு மேதி வரவிடல் வேண்டுமே” எனப்பாடிப் பெற்றனர். இவர் கயத்தாற்றாடன் மீது ஒரு உலாப்பாடிய போது ஆங்கிருந்த புலவர் ஒருவர் கூறியது “ஒட்டக் கூத்தன் கவியும் ஒங்கிய கம்பன் கவியும், பட்டப்பகல் விளக்காய்ப் பட்டதே; அட்டதிக்கும், வீசுங் கவிவீரராகவனாம் வேளாளன், பேசுங்கவி கேட்டபின்” என்றனர். இவர் அருந்தையாதிபதி சந்திரவாணன் மீது ஒரு கோவை பாடினரென்பது ”மின்னு மாளிகை யனந்தை யாதிபதி சந்திர வாண மகிபாலன் முன், வீரராகவன் விடுக்குமோலை தன்விருப்பினால் வலிய வேயழைத், துன்னு காவியமதிற் பெருத்ததொரு கோவையோது கென வோதினன், ஓதி மாதமொரு மூன்று மோதி யொரு நாலுமாத மளவாகவும், இன்னமுந் தனது செவியிலேறவிலை யென்னி வென்னவுல கெண்ணுமோ, விராசராசர் திறை கொள்ளுமென் கவிதையிங்கு வந்து குறையாகுமோ, தன்னையென் சொல்வாரென்னையென் சொல்வர்தான் தமிழ்க்கு மணமல்லவோ, தன்புகழ்க்குமிது நீதியோ கடிது தானின்னேவர வேணுமே” என்றனர். இவர் திம்மய்ய அப்பய்யன் வேண்டுகோளால் திருக்கழுக்குன்ற புராணம் பாடினர் என்பதை ” இந்நாளிருந்த பேர் புதியபாகம் பண்டிருந்த பேர் பழைய பாகம், இரு பாகமும் வல்லலக்கணக்கவி வீரராகவன் விடுக்குமோலை, அன்னாதிதானப் பிரவாகன் பிரசங்கத்தனந்த சேடாவதாரன், அகிலப் பிரகாசன் திம்மய்ய அப்பய்யன் மகிழ்ந்து காண்க, தன்னாளும் ஓலையும் வரக்கண்டு நாம் வேதசயிலபுராணத்தை யித்தனை நாளிருந்தோதினோம் அரங்கேற்றுவதுதான் வந்தலாமலில்லை, நன்னாவலோருடனிதைக் கேட்டெனைச் சோழநாட்டுக் கனுப்பவேண்டும், நவிலோலை தள்ளாமலே சுக்கிரவாரத்து நாளிங்கு வரவேண்டுமே” என்றனர். இவருடைய சீட்டுக்கவியை நிரஞ்சன கவிஞர் சிறப்பித்தது. ‘சீட்டுக்கவியென்று சொல்வார் சிலர் அந்தத், தீட்டுக்கவி காட்டுக்கெரித்த நிலவாதிப் போஞ் செங்கனகரத்நச், சூட்டுக் கிரீடமுடி வேந்தருற்பத்திச் சூறைகொள்ளும், நாட்டுக் கிலக்கியம் கவிவீரராகவனற் கவியே” என்றனர். இவர் சந்திரவாணன் மீது கோவைப் பிரபந்தம் பாடிப் பிரசங்கிக்கையில் மாலேநிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே, பாலேரி பாயத் தேன்மாரி பெய்ய நற்பாகு கற்கண்டாலே யெருவிட முப்பழச்சேற்றின முதவயன். மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே” என்ற செய்யுளில், அச்சபைக் கணிருந்த அம்மைச்சி யென்பாள் “கவிராயருக்குக் கண்கெட்டது மதியுங்கெட்டதோ, கரும்பு புஞ்சைப்பயிரன்றோ சேற்றில் முளைக்குமோ” வென்னப் புலவர் சற்று நிதானித்துத் தன் மாணாக்கனை நோக்கிக் கொம்பை வெட்டிக் காலை நடுவென்ன, அவர் அவ்வகை, ”சேற்றின்” என்பதைச் சாற்றின்” என மாற்றப் புலவர் களித்தனர். மறுநாள், பிரசங்கத்திற்கு அம்மைச்சிவரவு கேட்டபுலவர் ”கலைமகளுநாணி நின்று கைகட்டிப் போற்றச், சிலைமதவேள் முன்கணையே தாங்கக் குலமருவு, கொம்மைச் சிங்காரமுலைக் கோதில் திருப்பனங்காட்டம்மைச்சி வாராளதோ” என்றனர். இதனைக்கேட்ட அம்மைச்சி அன்று முதல் நட்பாயிருந்தனள். இவர் வைத்தியநாத நாவலரை “ஐம்பதின்மர் சங்கத்தாராகி விடாரோ, நாற்பத், தொன்பதின் மரென்றே யுரைப்பரோ இம்பந்புகழ், வன்மீகநாதனருள் வைத்தியநாதன் புடவி, தன்மீதந் நாட்சரித்தக்கால்” எனப் புகழ்ந்தனர். இவர் காஞ்சிபுரத்தில் வாசித்தபோது இவரைக் கந்தபுராணங் கச்சியப்பர் பாடியது. “பொங்குதமி ழயோத்தியில் வாழ்தசரதனென்போ னிடத்தும் பூதூர் வேந்தன், துங்கவடு கன்னிடத்தும் வீரராகவரிருவர் தோன்றினாரால், அங்கொருவனொருகலைமா னெய்திடப்போய் வசைபெற்றானவனிபாலன், இங்கொருவன் பலகலைமா னெய்திடப்போய்க் கவியினாலிசை பெற்றானே. ” இவர் ஸ்ரீவில்லிபுத்தூரிற் பாடிய கவி, “வேசையரே மல்குமூர் வீதியிலார் வந்தாலும், பேசிவலை வீசிப் பிடிக்குமூர் ஆசைமயல், பூட்டுமூர், கையிற் பொருள்பறித்தே யோடுகொடுத், தோட்டுமூர் சீவிலிபுத்தூர். ” அரியலூர் மழவராயன் படிகொடுத்ததற்குப் பாடியது. ‘சேயசெங்குன்றைவரு மொப்பிலாதிக்குச் செங்கமலத், தூயசெங்கண்ணனிணை யொப்பனோ தண்டுழாயணிந்த, மாயனளக்கும்படி மூன்றுகிட்ணைய மாமழவ, ராயனளக்கும்படி யொருநாளைக் கிலக்கமுண்டே. ” இவன் சகம் 1664ல் திரிசிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள அரியலூர்க்கதிபன், இவன்பெயர் கிருஷணை ஒப்பில்லாத மழவராயன் என்பது. இவர் குமாரஒப்பில்லாதான் சங்கீதத்தைக் கேட்டுப் பாடியது. ‘வாழொப்பிலாதவன் சேயொப்பிலாதமழவதிசை, ஆழக்கடல்விட்டு நீ பாடுங்காலத் தரிசெலுங்கால், நீழற்கவுத்துவ நீத்துச்செல்வானந்த நீண்மணிதான், காழொப்பினும் நின்னிசைகேட்குங்காற் கரைந்தேகுமன்றே. ” தீத்தான் சங்கீதத்தைக் கேட்டுப் பாடியது. “வாவியபொற்பரியாவூரில் வீரையன்மைந்தபஞ்ச, காவியந்தேர்கின்ற தீத்தாசங்கீதத்திற் காவலாதாம்? ஒவியசாலையெல்லாங் கொல்லியாமுள்ளுருகும் ரத்னம், மேவியகூடமெல்லாந் திரிகூடத்தின்மேற்படுமே. ” செழியதரையன் பரிசில் கொடுத்தனுப்பினபோது சில பொருள் வேண்டிப்பாடியது. இவர் சேலத்தரசரா யிருக்கலாம்போலும். “சாலப்பழுத்தமரம் பார்த்தெறிவர் தண்ணீர்சுரக்கும், ஞாலத்தகழ்வர் கறக்கின்ற வாவைநற் காறளைவர், நீலக்கடல்விட்டுப் பாலாழிமத்திட்டு நிற்பரென்னீர், சேலத்து வேந்தனகத்தாகந்தீர்த்த செழியனுக்கே. ” செழியதரையனுக்கு விடுத்த தீட்டுக்கவி. “எடாயிரங்கோடி யெழுதாது தன்மனத்தெழுதிப் படித்தவிரகன், ஏது சொலினுமதுவே யெனச்சொலுங் கவிவீரராகவன் விடுக்குமோலை, சேடாதிபன்சிரமசைக் குங்கலாகரன் திரிபாதகை குலசேகரன், தென்பாலை சேலஞ் செயித்ததாகந்தீர்த்த செழியனெதிர் கொண்டு காண்க, பாடாத கந்தருவ மெறியாதகந்துகம் பத்தி கோணாதகோணம், பறவாதகொக்கு அனற்பண்ணாத கோடை வெம்படையாய்த் தொடாதகுந்தம், சூடாத பாடலம் பூவாத மாத்தொடை தொடுத்துமுடியாத சடிலம், சொன்னசொற் சொல்லாத கிள்ளையொன்றெங்குந் துதிக்கவர விடவேண்டுமே. ” இடும்பாவனத்திற் பாடியகவி. “பசிமுருகநோவதல்லாற் பாழ்லீட்டிற் பாழ்த்த, கொசுகுகடியாலுங் குமைந்தோம் மிசையில், நெடும்பாவம்யாம் செய்தானீரென்ன செய்வீர் இடும்பாவனநாதரே. ” நாகதேவனைப் பாடியது. “வாயிலொன்று கல்லுமொன்று நெல்லதான வண்ணமும், வாடலாகவாறு மாதம் வைத்திருந்த கத்திரிக், காயிலுப்பிலாத கஞ்சியைக் கலந்த வண்ணமுங், காம்பொடிந்த தோரகப்பை கைப்பிடித்த வண்ணமும், மோயிலாத மீன்கள் வந்து மொலுமொலென்ற சட்டியும், மோருதர்க்கிடக்கொணர்ந்த. நாகதேவனிட்டவூணை நாம்மறப்பதில்லை காணுமே. சிரையன் தினகரனைப் பாடியது. “சிரையன் தினகரனைச் செந்தமிழ்க்கு நல்ல, துரையென்று நாங்கவிதை சொன்னோஞ் சுரையுண்ணும், வண்ணமே செய்தான் வரகவிக்கு வண்மையென்னும், எண்ணமே செய்தானிலை. ” நந்தியமாணிக்கத்தைப் பாடியது. “மாதாவைப் போற் பிறக்கத் தந்தையைப் போற் செனிக்க விந்தவையந்தன்னில், ஏதேனுமொன்றல்லால் நந்தியமாணிக்க மிவனேற்றம் பாரீர்., பாதாதிகேசமெல்லாந் தன்றாயைப் போற்படைத்தான்பது மத்தானே. ” சடையாண்டியைப் பாடியவசை, கொடையாண்ட மன்னரிற்கச்சி நல்லானைக் குறுகியன்னோன், தொடையாண்ட முல்லைப் புயவரைச்சாரலிற் றுன்னிமுப்பான், உடையாண்டிருந்து கவிமதமாக்களுடன் பொருத, சடையாண்டிகையிற் குசங்காணவா முத்தமிழ்ச்சிங்கமே, ஒரு தாதிநிமித்தமாகக் குடம்தைப் பயணந் தவிர்த்திருந்தபோது பாடியது. ”மனந்தான்றளர்ந்தார்க்கும் வாயுமுண்டோகச்சி, அனந்தாபுதனாளகல் வோஞ் சினந்து, வடித்தெடுத்தவேற் கண்மணியிரண்டு கொண்ட, கொடிதடுத்தாலாரேகுவார். இவர், விஜயராஜன் தம்பல்லக்கைப் பின்பற்றியபோது “திருமாலு மீசனும் பின்போயுந் தூதுசெலத் துணிந்தும், அருமாதுரியத் தமிழ்வளர்த்தாரவரோடு பங்காய், வருமாமறையவன் பேர்சாதித்தே மிகவண்டமிழ்க்குப் பெருமான் சிவிகைக்குப் பின்சென்சான் விஜயபிரமனுமே” என்றனர். காஞ்சிபுரத்திலிருந்த அம்மைச்சியினிடம் விரோதங் கொண்ட வைணவர்கள், பெருமாள் ரதத்தை அம்மைச்சிவீட்டின்மீது விட்டிடிக்கத் தொடங்குகையில் ஆங்கிருந்த இவர் அவர்களைச் சமாதானப்படுத்தியும் கேளாதபோது ரதத்திலிருந்த பெருமாளை நோக்கி பார்ப்பார் குரங்காய்ப் படையெடுத்து வந்தீரோ, தேப்பெருமாளே கச்சிசெல்வரே கோப்பாகக், கொம்மைச் சிங்காரலங்கைக் கோட்டையென்று வந்திரி, தம்மைச்சி வாழுமகம். ” என ரதம் ஒதுங்கிற்றென்பர். இவ்வாறு பலபிரபந்தங்கள் பாடி இல்லற நடாத்திச் சிவபதமடைந்தனர். இவர் தேகவியோகங்கேட்ட கயத்தாற்றரசன் பாடிய கையறம் ” இன்னமுதப் பாமாரி யிவ்வுலகத்திற் பொழிந்து, பொன்னுலகிற் போய்ப் புகுந்ததால் மன்னும், புவிவீரராகமன்னர் பொன்முடி மேற்சூட்டும், கவிவீரராகவமேகம். ” தோற்றாதொளிந்திருந்த தூலக்கவிகளெல்லா, மேற்முாரகையின் விளங்கியவே யேற்றாலும், கன்னாவதாரன் கவிவீரராகவனாம், பொன்னாருஞ் செங்கதிரோன் போய், “முன்னாட்டுத் தவமுனியுஞ் சேடனும் வான்மீகனு முன் முன்னில்லாமற், தென்னாட்டு மலையிடத்தும் பாரிடத்தும் புற்றிடத்தும் சென்று சேர்ந்தார், இந்நாட்டுப் புலவருனக் கெதிரிலையே கவிவீரராகவா நீ, பொன்னாட்டுப் புலவருடன் வாதுசெய்யப் போயினையோ புகலுவாயே. ” என இரங்கினர். இவர் செய்தநூல்கள் திருக்கழுக்குன்றபுராணம், திருக்கழுக்குன்றமாலை, சேயூர் முருகன்பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூருலா, சந்திரவாணன் கோவை, கயத்தாற்றாசனுலா, பலசீட்டுக் கவிகள், (தமிழ்நாவலர்சரிதை).

அந்தகன்

1. இயமனிடமிருக்குந் தேவதை. 2. திருதராட்டிரனுக்கு ஒரு பெயர். 3. யதுவம்சத்துச் சாத்வதன் குமரர்களில் ஒருவன். இவனுக்குப் பஜமானன், குகுரன், கம்பளபர்ஷன், சுசி முதலியோர் புத்திரர்.

அந்தகராசித்தோஷாபவாதம்

உதயராசிக்கு உபசயத்தானத்திலே சந்திரன் சுபாங்கிசகனாய் நிற்பினும், அன்றி இடபகர்க் கடத்திலே நிற்பினும், அன்றிச் சுபாங்சகனாய் நின்ற சந்திரன் (4)ம் இடமாதல் (10)ம் இடமாதல் நிற்பினுஞ் சொல்லப்பட்ட வந்தகராசித் தோஷமில்லை. (விதானமாலை).

அந்தகர்

யதுகுல சாதிபேதம், கம்சன் பகைவர், பிராமண சாபத்தால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிறந்தவர்.

அந்தகாசுரன்

1, இவனைத் தது என்னும், தானவன் குமரன் என்றும், இரண்யாஷன் குமரன் என்றும் கூறுவர். இவன் பிரமனை யெண்ணித் தவம்புரிந்து பலவரங்களைப் பெற்றுத் தேவரைவருத்தத் தேவர்கள் சிவமூர்த்தியை வேண்டினர். சிவமூர்த்தி வடுகக்கடவுளையேவ வெள்ளி அசுரகுருவாதலின் இடையிற்புகுந்து இறந்தவரை மிருத்துஞ்சய மந்திரத்தா லெழுப்பினர். இதைச் சிவமூர்த்தியறிந்து வெள்ளியை விழுங்க, வடுகநாதர் சூலத்தாற் குத்திச் சிவசந்நிதானத்தின் முன் கொண்டுபோன காலத்து அந்தகன் வேண்டச் சிவமூர்த்தி கருணைசெய்து பூதகணத்தலைமையளிக்கப் பெற்றவன். (காசிகாண்டம்). 2. இவன் ஒரு அசுரன். இவன் துங்காசுரன் அம்பாசுரனுடன் கூடி இருள்மலைமேகவுருக்கள் கொண்டு மழைவருஷித்து நிற்க, மகோற்கடப் பெயருள்ள விநாயகமூர்த்தி, ஓர் பறவையுருக்கொண்டு அவற்றை நீக்க, மீண்டும் அம்மூன்று அசுசரும் ஆலமரமாகவும், கண்ணியாகவும், வேடனாகவும் உருக்கள் கொண்டு பக்ஷியாகிய விநாயகரைத் துரத்த, விகாயகர், இம்மூவரையும் மூக்காலும், காலாலும் கௌவித் தவலோகவுயாஞ்சென்று இவர்கள் தாயாகிய பிரமரையிடம் பிரேதங்களாக வீழ்த்தினர். (விநாயகபுராணம்). 3. சிவபெருமான் கண்களைப் பிராட்டியார் விநோதமாக மூடியகாலத்து உண்டான அச்சத்தால் தேகத்தில் வியர்வை உண்டாயிற்று. அவ்வியர்வையானது இறைவன் நெற்றிக்கண்ணற் சூடுண்டு மூடியவிரலிலேயே ஒரு கருப்பமாயிற்று, அவ்வகைக்கருவில் அசுரவுருவமாக ஒருவன் கோரத்துடன் ஜனித்தான். இவன் பிறவிக்குருடனாகத் தோன்றினமையால் அந்தன் எனப் பெயருற்றான். இவன் இரணியாக்ஷனுக்குச் சிவபெருமானால் கொடுக்கப்பட்டுப் பிரமதேவரையெண்ணி ஒருவராலுஞ் செயிக்கப்படாத வன்மையும் கண்களும் பெற்று அரசுசெலுத்திப் பார்வதிதேவியைக் கண்டு மோகிதனாய்ச் சிவபெருமான் மீது யுத்தத்திற்கு வந்து அவரது சூலத்தாற் குத்தப்பட்டு அச்சூலத்தின்மேல் பலநாள் உலர்ந்திருந்து சிவபெருமானைத் துதித்ததால் கருணைபெற்றுச் சிவகணத்தவனாயினவன். (சிவமகாபுராணம்.) 4. இவனது நாசத்தின் பொருட்டுத் தேவர் சிவபிரானை வேண்ட, சிவபிரான் முகத்தில் ஒரு சுவாலை உண்டாயிற்று. அதில் அஷ்டமாத்ருகைளுண்டாய் அசுரனது உதிரத்திலுண்டான அநேக அந்தகாசாரை மாய்த்தனர் (வராகபுராணம்).

அந்தசில்

விந்தியமலையில் தோன்றிய நதி.

அந்தணன்

துரியோதனன் தம்பி.

அந்தன்

விப்பிரசித்தியெனுந் தானவனுக்குக் குமரன். 2. அதலலோகத்தவன், 3. துருக்கியன் குமரன். 4. திருதராட்டிரனுக்கு ஒரு பெயர்.

அந்தம்பட்டர்

தர்க்கசங்கிரகஞ்செய்த சமஸ்கிருதகவி.

அந்தராயம்

5. தானந்தராயம், லாபாந்தராயம், போகாந்தராயம். உபபோகாங்தராயம், வீர்யாந்தராயம். (சினபத்ததி).

அந்தராளன்

அனுலோமத்தாணிற்கும் பிரதிலோமப்பெண்ணிற்கும் பிறந்தவன்.

அந்தரி

விந்தமலையை இருப்பிடமாகக் கொண்ட துர்க்கை, இவளுக்கு விந்தாகடிகை ஏவலாளி. (மணிமேகலை)

அந்தரிக்ஷன்

ருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன்.

அந்தரிஷன்

முராசுரன் குமரன், கண்ணனாற் கொல்லப்பட்டவன். 2. (சூ) ருக்ஷகன் குமரன்.

அந்தர்தீபம்

துவாரகையிலுள்ள ஒரு தீவு. இதில் மகாதேவனுடைய திருவிழாவின் பொருட்டு யாதவர்கள் சென்றார்கள்.

அந்தர்த்தாகன்

விசித்திரசுவனைக் காண்க.

அந்தலிளங்கீரன்

கடைச் சங்கமருவிய புலவன். அகநானூறில், “நிறைந்தோர்” எனும் பாலையைப் பாடியவன். (அகநானூறு).

அந்தவிஜயன்

பிரசனோத்தரமாலை செய்த கவி.

அந்திசாரன்

(பூரு) மதிசாரனுக்கு ஒரு பெயர். 2. யது வம்சத்துச் சாதவகன் புத்ரன், இவன் புத்ரர் பசமாகன், சுசி, குங்குரன், கம்பளகிஷன். 3. தனுபுத்ரன்.

அந்திதேவன்

ஒரு அரசன், பசுக்கள் இவனிடம் வந்து யாகஞ்செய்யக் கேட்டுக்கொண்டபின் இவன்யாகஞ் செய்து கொண்டு வருகையில் ஒருபசு தன்கன்றைவிட்டுப் பிரிதலாற்றாது வருந்தயாகத்தை நிறுத்தினவன். இவன் நாள்ஒன்றுக்கு 25000 பிராமணர்களுக்குப் போஜனஞ் செய்வித்துச் சத்திரயாக முடித்து இராச்சியமாண்டு புண்ணிய வுலகடைந்தவன்.

அந்திபதி

காந்தாரநாட்டுள்ள பூர்வதேசத்தரசன். இவன் பிரமதருமன் கட்டளையால் அவந்தியை இராஜதானியாகக் கொண்டவன்.

அந்திமான்

இடையெழு வள்ளல்களிலொருவன். இவன் இதற்குமுன் ஜனனத்தில் பிராமணன். கிருத்திகை விரதத்தை அநுட்டித்து வள்ளலாயினன்,

அந்துவங்கீரன்

ஒரு வள்ளல். காவட்டனாராற் பாடல்பெற்றவன். “பானுப்பட” எனும் பெருங்காஞ்சி பாடியவன். (புறநா)

அந்துவஞ்சுள்ளை

மையூர்கிழான் மனைவி.

அந்நபூரணி

காசியில் எழுந்தருளியிருப்பவள். ஈச்வரி.

அந்நியதாகரீமஜசை யோகம்

யாண்டு ஒன்நன் தொழிலால் சையோக முண்டாகின்றதோ அது, (தரு)

அந்நியோந்யாபாவம்

இது ஒன்றினொன்றின்மை, இது குடம் ஆடையன்று என்பது. இது அபேத சம்பந்தத்தால் வரைந்து கொள்ளப்பட்ட அபாவம். ஏனைய சம்பந்தத்தால் வரைந்துகொள்ளப்பட்ட அபாவம் சம்சர்க்காபாவமாம். இந்தச்சம்சர்க்காபாவம், பிராகபாவம், பிரத்வம்சாபாவம், அத்யந்தாபாவம் என (3) வகை இவற்றைத் தனித்தனி காண்க. (தரு)

அந்நீ

ஒரு அரசன். திதியால்வெல்லப்பட்டவன்.

அந்வக்பாநு

சந்திரவம்சத்து அரசன் புரூவின் பேரனாகிய மநு என்பவன். மிசரகேசி என்னும் அப்சரசுக்குப் பிறந்தவன்.

அந்வயவியதிப்பகஅநுமானங்கள்

இவற்றிற்குப் பக்ஷதருமத்வம், சபஷேசத்வம், விபக்ஷதவாதவியாவிர்த்தி, அபாதிதவிஷயத்வம், அசத்பிரதிபக்ஷதவம் என்னும் ஐந்து அவயவங்கள் உண்டு. இவை பக்ஷத்திலுண்டாயிருக்கை, விபக்ஷத்திலில்லாதிருக்கை, கெடுக்கப்படாதவிஷயமாயிருக்கை, பிரத்தியடிமில்லாமலிருக்கை என்பனவாம். (சிவ~சித்).

அனங்கசயன விரதம்

இதை அஸ்தம், புனர்பூசம், பூசநக்ஷத்திரங் களில் ஏதேனும் ஒன்று வந்த ஆதிவாரத்தில் ஆரம்பித்து விதிப்பிரகாரம் (12) மாதம் செய்யவேண்டியது. பிரமனுக்குச் சிவன் சொன்னது.

அனந்த திரிதியா விரதம்

சிராவணசுத்ததிருதியை முதல் (12) திதிகள் இந்த விரதத்தை அனுசரித்துக் கௌரியை விதிப்பிரகாரம் பூஜித்துத் தானாதி களைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

அனந்தகுனபாண்டியன்

குலோத்துங்க பாண்டியன் குமரன. இவன் காலத்து நாக மெய்தது, மாயப்பசுவை வதைத்தது.

அனந்தசதுட்டயம்

அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அனந்த சுகம். (சீவக)

அனந்தசுகபாண்டியன்

அனந்தகுணபாண்டியனுகுப்பின் மதுரையாண்டவன்.

அனந்தபாரதி ஐயங்கார்

இவர் தஞ்சாவூரிலிருந்த வித்வான், உத்தரராமாயண கீர்த்தனை, பாகவத்தசமஸ்கந்தநாடகம், தேசிகப்பிரபந்தம், மருதூர்வெண்பா, யானை மேலழகர்நொண்டிச்சிந்து, முப்பாற்றிரட்டு செய்தவர்.

அனவர்த்தி

விருத்தாசலபுராணம் நாத சன்மா இடம் கேட்டவர்.

அனாசாரங்கள்

இவை, இல்லறம் துறவறத்திருப்போர் அநுட்டிக்கும் ஒழுக்கங்கள், ஆடையின்றி ஸ்நானஞ்செய்தலும், இரண்டன்றி ஓராடை மாத்திரம் உடுத்துக் கொண்டு உண்ணுதலும், ஒருவர் தாம் உடுத்த ஆடையைத் தோய்த்துத் தண்ணீரிவே பிழிதலும், ஓராடை உடுத்துக்கொண்டு சபையில் போதலும் கூடா. தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற அவயங்களில் பூசுதலாகாது. மற்றவர்கள் உடுத்த அழுக்கு வஸ்திரத்தைத் தீண்டுதல் கூடாது, பிறருடைய செருப்பைக் காலில் அணிந்து கொள்ளுதல்கூடாது. தண்ணீரிலே தம்முடைய நிழலைப் பார்த்தலும், சும்மா உட்கார்ந்து கொண்டு தரையைக் கீறுதலும், இரவில் ஒரு மரத்தின் அருகிலே போதலும், நீரைத் தொடாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதலும், எண்ணெய் தேய்த்துகொண்டபின் உடம்பின் மேல் நீரைத் தெளித்துக்கொள்ளாமல் புலையனைப் பார்த்தலும் ஆகா. ஐங்குரவர் சொல்லிய சொல்லைக் கடந்து ஒரு காரியத்தையும் செய்யலாகாது. முடிவு பெறாத குறைவிரதம் உடையவர்கள் அவ்விரதத்தை மறத்தல் கூடாது. பூரணையில் பல் தேய்த்தலுமாகாது. மரங்களை வெட் டுதலுமாகாது. ஒருவர் உட்கார்ந்திருக்கின்ற இடத்திற்கும், விளக்கிற்கும் நடுவிலே போதலாகாது, சுவரின் மேல் எச்சிலை உமிழ்தல் கூடாது. பிறர் உடுத்துக் கிழிந்த அழுக்கு வஸ்திரத்தைக் கீழே போட்டுக் கொள்வதும் மேலே போர்த்துக் கொள்வதும் ஆகாது. எப்படிப்பட்ட சமயத்திலும் தாம் உடுத்திருக்கின்ற வஸ்திரத்தின் காற்று மற்றவர்மேல் படும்படி செல்லுதல் கூடாது. பலர் நடுவில் தாம் உடுத்திருக்கின்ற வஸ்திரத்தை உதறுதல் கூடாது. காலொடு காலைத்தேய்த்தலாகாது மனைவி பூப்புநாள் மூன்றிலும் அவளை நோக்குதல் ஆகாது. நடுப்பகவிலும் நள்ளிரவிலும், மாலையிலும், திருவாதிரையிலும், திருவோணத்திலும், அமாவாசை, பௌர்ணமியிலும், அஷ்டமியிலும், பிறந்தநாளிலும், கலவி செய்தல் ஆகாது. அளக்கும் படியை மணை மேல் வைத்தலும், புது வஸ்திரத்தைத் தலைக்கடையில் பிரித்தலும், தலைக்கடையில் கட்டிலிட்டுப் படுத்தலும் கூடா. தம்மை யறியாதாரெதிரில் நிற்ற லொழிக. கல்லியாண பந்தலின் கீழ் துடைப்பம், செத்தை, பூவின் புறவிதழ், பழைய கரிப்பானை, கிழிந்த கட்டில் ஆகிய இவைகளைப் பரப்பலாகாது (ஆசாரக்கோவை)

அனாசிப்பு

இது ஜபான் தேசத்தில் வளர்கிற ஒருவித மரத்தின் பூவாக இருக்கிறது. இதில் ஒருவிதமான மணமுண்டு. இதன் உருசியும், வாசனையும் சோம்புக்குச் சரியாக இருக்கும். இதைச்சேர்த்து வாசனையெண்ணெய் செய்கிறார்கள். இதனை மருந்தாகவும், உணவாதிகளில் மணமுண்டாகவும் சேர்க்கிறார்கள்.

அனுகற்பவிபூதி

அனுகற்பவிபூதியாவது சித்திரைமாதத்தில் வனத்தில் பசுமந்தைகளில் சென்று உலர்ந்து கிடக்கும் கோமயங்களை ஓரிடத்திலே குவித்து உரலிலே போட்டு இடித்துத் தூளாக்கி வாமதேவ மந்திரத்தினால் கோஜலத்தை வார்த்துக் கலந்து அகோரமந்திரத்தினால் பிசைந்துருட்டித் தற்புருடமந்திரத்தினால் பதரை விரித்துவைத்துச் சிவாக்கினியில் தகனஞ் செய்து ஈசானமந்திரத்தினால் எடுத்துக் கொள்ளும் தன்மையுடையதாம். (சைவ சமயநெறி)

அனுபந்தம்

(4) அதிகாரி, விடயம், சம்பந்தம், பிரயோசனம்.

அனுமானவுறுப்பு

(5) பிரதிஞ்ஞை, எது, உதாரணம், உபநயம், நிகமனம். (தருக்கசங்)

அன்னக்குழிமண்டபம்

மதுரையில் மேலைச் சித்திர வீதியிலுள்ளது; இது பூதமுண்ட திருவிளையாடல் விழா நடைபெறுதற்கு இடமாக இருக்கின்றது. இதிற் பல தெய்வ வடிவங்கள் உள்ளன. இதிலிருந்த குண்டோதர வடிவம் இக்காலத்துத் திருக்கல்லியாண மண்டபத்தில் வைக்கப்பெற்றுள்ளது. (திருவிளையாடல்)

அன்னபூரணி

காசியிலமர்ந்த சிவசத்தி.

அன்னபேதி

ஒருவகை மருந்து. இது அன்னத்தைப் பேதித்தலால் இப்பெயர் பெற்றது. இதன் வகை மாம்சபேதி, சொர்ணபேதி, அஸ்திபேதி, சகஸ்திர பேதி என்பன.

அன்னப்பறவை

இது நீர்வாழ் பறவையினத்தில் வாத்தின் உருவத்தைச் சேர்ந் தது. இது வாத்தைப் பார்க்கிலும் பெரிதாய் அழகாய் வெண்ணிறத்ததாய் மூக்கும் கால்களும் சிவந்திருக்கும். கருநிற அன்னமும் உண்டு, அன்னத்தினிறகுகள், உடம்போடொட்டி அடர்ந்திருக்கின்றன, வாத்தின் உடம்பு போல அன்னத்தின் உடலும் படகை யொத்திருக்கிறது. கழுத்து நீண்டு வளைந்திருக்கும். இதன் தலையில் கருநிறத்த கொண்டை யொன்றுண்டு, இது ஆற்றோரங்களில் கூடுகட்டி வசிக்கும். பெண்ணன்னம் பசுமை கலந்த வெண்மையான பல முட்டைகளிடும். இவை கூட்டங்கூட்டமாக வசிக்கும். இவை நீரிலிருக்கும் கிழங்கு முதலியவைகளையும் புழுப் பூச்சிகளையுந்தின்று ஜீவிக்கும், இதனிறகுகளைத் தலையணைக்கு உபயோகிப்பர். வெண்ணிற முடையதும் செவந்த நிறமுள்ளதும் ராஜஹம்ஸம். அழுக்கடைந்த மூக்குடையது மல்லிகமெனும் ஜாதி. கறுத்த மூக்குள்ளவை தார்த்த ராஷடாங்கள் என்ப. இதனைப் பிரமதேவர் வாகனமென நூல்கள் கூறும். இச்சாதியில் ஒன்று நளனுக்குத் தமயந்தியிடம் தூது சென்றது.

அன்னப்பறவை

இது வாத்தின் இனத்தைச் சேர்ந்தது. அவ்வினத்தில் பெரிய உருவமுள்ளது. இதன் கழுத்து நீளம், இதன் மேல்வாய்ப் பக்கத்தில் சிறு பள்ளம் உண்டு. இதன் மூக்கும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறமானவை. இதன் அகன்ற தோலடிப்பாதங்கள் தண்ணீரில் வேகமாய் நீந்தவுதவி, இதன் வலுத்த இறக்கைகளால் நன்றாய்ப் பறக்கும். இதன் இறக்கைகளிரண்டும் விரியின் (8) அடிகள்கலமிருக்கும். அன்னப்பறவையின் தூவி யணைகளுக்கு தவி. இவை வருடத்திற் கொருமுறை (6, 8) முட்டைகளிட்டு குஞ்சு பொரிக்கும். இது அழகுள்ள பறவை.

அன்னம்

எந்தக் காரணத்தால் அன்னத்தின் வழியாகப் பிரம்ம விஞ்ஞானம் உண்டா கின்றதோ அந்தக் காரணத்தால் அன்னத்தை நிந்திக்கக்கூடாது. பிரதவி ஆகாசங்களிரண்டும் ஆபோஜ்யோதிகளிரண்டும், அன்னமும் பிராணமும்போல் ஒன்றிலொன்றிருத்தலால் அன்ன ஸ்வரூபமாகவும், ஒன்றுக்கொன்று ஆதாரமாதல் பற்றி அன்னாதமாகும் பிராணஸ்வரூபமாகவும் இருக்கின்றன. இவ்வாறு சரீரப்பிராணங்க ளிரண்டினையும் அன்னான்னாதங்களாகத் தெரிந்து கொள்பவன் அன்ன அன்னாதஸ் வரூபனாய்ப் புத்ராதி சந்தான நிறைவாலும் கவாச்வாதி பசு சம்பத்தாலும், பிரம்ம தேஜசாலும், உலகத்திற் புகழாலும் மிக்க உயர்ந்தவனாகிறான். அன்னத்தைப் பல வகையிலும் சம்பாதித்தல் வேண்டும். அச்சம்பாதித்த அன்னத்தை அன்னார்த்திகளுக்குக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு எந்த வயதுகளில் கொடுக்கிறானோ அந்த வயதுகளில் அது அவனுக்குதவுகிறது. இது பிரம்மதேவரின் ஸ்ருஷ்டி ஞானத்தை உண்டு பண்ணக்கூடிய எல்லா ஸாதனங்களுக்கும் பாவனங்களான எல்லா யஞ்ஞங்களுக்கும் சாதனமானது. இதன் பெருமை அன்னபூர்ணோபநிஷத்தும் தைத்திரீயோபநிஷத்தும் காண்க, 2. அன்னம் ஒன்றுக்கு நாழிகை (4) அது பூர்வான்னம், பரான்னம், மத்தியான் னம், அபரான்னம், சாயான்னம் ஆக. (5)

அன்னம் புசிக்கத்தகாத இடங்கள்

மதம் பிடித்தவன், கோபி, நோயாளி, சிசுஹத்தி செய்தவன் இவர்கள் பார்த்த அன்னத்தினையும், மயிர், புழு விழுந்த அன்னத்தினையும், மாதவிடாய் ஆனவளுக்கு இட்டுமிகுந்த அன்னத்தினையும், காக்கை, நாய் இவைகள் சீண்டிய அன்னத்தினையும், பசுவினால் மோக்கப்பட்ட அன்னம், தருமசத்திரத்தில் ஆதிதிக்காகச் சமைத்த அன்னம், சாமானிய ஜனங்கக் கூட்டிப்போடும் அன்னம், வேசியின் அன்னம், பெரியோர் களுக்கு இஷ்டமாகாத அன்னம், திருடன், பாடகன் இவர்களின் அன்னம், வட்டியினால் பிழைக்கிறவன், தீதன், கிருபணன், காவலில் வைக்கப்பட்டவன், இவர்களின் அன்னம், பஞ்சமகாபாதகன், பேடி, குடிசைக்காரி, டம்பாச்சாரி இவர்களின் அன்னம், முரிந்த பால்சேர்ந்த அன்னம், சூத்திரனுக்கு இட்டு மிகுந்த அன்னம், வைத்தியன், வேட்டைக்காரன் கொடுமை யுள்ளவன், எச்சிற்பொறுக்கி, அனுலோம் நாதியான், அரசன் இவர்களின் அன்னம், பிரசவித்தவளுக்குச் சமைத்த அன்னம், பந்தியில் ஒருவன் எழுந்தபின் போடப் படும் அன்னம், தீட்டுக்காரன் அன்னம், தேவாசாதனை செய்யாத அன்னம், கணவன் பிள்ளையின்றி ஸ்திரீயால் சமைக்கப் பட்ட அன்னம், சத்துருவின் அன்னம், பதிதன் அன்னம், தும்மினவன் எச்சிற்பட்ட அன்னம், கோளன், பொய்ச்சான் றுரைப்பான், எக்யபலனை விற்பான், நட்டுவன், தோணிக்காரன், செய்ந்நன்றி மறந்தவன், கருமான், செம்படவன், கூத்தாடி, நட்டான், பிரம்பு வேலை செய்பவன், கத்தி முதலிய ஆயுதம் விற்பவன், வேட்டைக்காக நாய் வளர்ப்பவன், கள்விற்பவன், வண்ணான், துணிக்குச் சாயம் போடுகிறவன், காதகன் இவர்களது அன்னம், கள்ள புருஷனை யுடையாளது அன்னம், இறந்த தீட்டுள்ளான், அன்னம், தன் மனதுக்குச் சகியாதவன் அன்னம், இவைகளைப் புசிக்சக்கூடாது. (மநு)

அன்னவாது

திதி புத்திரனாகிய அசுரன்.

அன்னாதம்

விச்சுவவுருவன் சிரத்திலொன்று. தித்திரி பதியுருக்கொண்டது.

அன்னி

இவன் சோழநாட்டுப் பாபவிநாசம் ரெயில்வே ஸ்டேஷனுக் கருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்த சிற்றரசன். இவன் இருந்தவூர் பிற்காலத்து இவன் பெயராலே அன்னிகுடி யென்று வழங்கி வருகிறது. இவன் மயூரத்தின் மேற்கிலுள்ள திருவழுத்தூரிலிருந்த அகம் (194) வேளிர் மரபினனாகிய திதியனுக்குரியதும் நந்திபுர விண்ணகர மென்னும் திருமால் கோயிற்கடுத்த குறுக்கையென்னு மூரிலுள்ளதும் அத்திதியனது காவன்மரமுமாகிய ஒரு புன்னை மரத்தை விரும்பி (அகம் 45) வைப்பூரிலுள்ள எவ்வியென்பவன் அடக் கவும், அடங்காமல் (அகம் 125) அந்தப் புன்னைமாம் நிரம்ப பூத்திருக்கும் பொழுது அதனை வெட்டிச் சாய்த்தனன. (அகம் 145) அது காரணமாகத் திதியனுக்கும், அன்னிக்கும் போர் மூண்டது. அப்போரும் புன்னையை வெட்டி வீழ்த்திய குறுக்கையிலேயே போர் செய்தற்குரிய ஓரிடத்தில் நடந்தது. அப்போரில் திதியன் வெற்றிகொண்டு அன்னியைப்பற்றி அவன் கண்ணைப் பிடிங்கிவிட்டான். (அகம் 199) அன்னியின் புதல்வனாகிய மிஹிலியென்பவன் கடுஞ்சினமடைந்து தனக்குப் படைத்துணை பெருகுமளவும் தான் பரி கலத்துண்ணாமலும் வெளிய உடைகளை உடுக்காமலும், சிலகாலமிருந்தான். (அகம் 292) பின்பு வெற்றி மிக்க குறும்பிய னென்பவனால் திதயனை மரபோடழியக் கொல்லுவித்து மிக்க மகிழ்ச்சி யுடையவனாகித் திருவழுந்தூரிற் பெரிய ஆரவாரத்தோடு சென்று வந்தானென்பதாம். குறுக்கை யென்பது கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்பால் இரண்டுமைல் தூரத்திலுள்ளது. வைப்பூர் நாகப்பட்டினந் தாலுக்காவிலுள்ள தோரூர். அன்னி யின் கதையைக்கூறும் நற்றிணை (180)ம் பாட்டைப் பாடினோர் பெயர் தெரிய வில்லை, (நற்றிணை)

அன்மொழித்தொகை

இது குறிப்பு மொழிகளிலொன்று. வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத் தொகையின் புறத்துப் பயனிலைக் கல்லாதமொழி தொக்கு நிற்பது. (நன்னூல்.)

அன்றகன்

தத்தாத்திரேயரிடம் தத்வ உபதேசம் பெற்றவன்.

அன்றில்

இதன் முதுகுப்பக்கம் சாம்பல்நிறம், தலை கறுப்பு, வயிறு வெண்மை, இதற்கு தலை சிறுத்து மூக்குப் பருத்து முன்னுக்கு வளைந் திருக்கிறது. இது செழித்த நீர்நிலையுள்ள இடங்களைத்தேடி வசிக்கும். இப்பறவை ஆண்பெண்கள் ஒன்றை விட்டு ஒன்று பிரியா.

அன்வய இலக்கணம்

(5) விசேடணம், விசேடியம், கருத்தா, கருமம், கிரியை.

அபகர்ஷை

வித்வேஷிணியின் குமரி, பொய்ச்சாக்ஷி சொல்லுவோரிடத்தும் தர்மார்த்தகாமங்களை நீக்குவோரிடத்தும் வசிப்பவள். (மார்).

அபகீருஷசமை

அவ்யாப்தமான திருஷ்டாந்த தருமத்தால் அவ்யாபகமான தருமத்தின் அபாவத்தை வருவித்தல், (தரு).

அபசதர்

பிராமணனுக்குத் தனக்குத்தாழ்ந்த மூன்று சாதியிலும், ஷத்திரியனுக்குத் தனக்குத் தாழ்ந்த இரண்டு சாதியிலும், வைசியனுக்குத் தனக்குத் தாழ்ந்த ஒரு சாதியிலும் பிறக்கிறவர்கள்.

அபசன்

கிருகத்தனாகிய வேதியன் தன்னிடம் வந்த அதிதிக்கு அன்னமிடாது தானே தின்பவன். (சிவ~சித்).

அபசித்தாந்தம்

ஒரு சித்தாந்தம் சொல்லத் தொடங்கி அதற்கு விருத்தமாயிருக்கிற சித்தாந்த வசனஞ்சொல்லுகை. (சிவ~சித்)

அபஞ்சிகன்

காசிநகரத்து வேதியன். சாலியென்பவளுக்குக் கணவன், இவன் வேதமோதுவிக்குந் தொழிலை உடையோன். (மணிமேகலை)

அபதானம்

சூத்திரபிடகத்தொன்று அபத்திய பதார்த்தங்கள் கொள்ளு, காடி, குமட்டிக்காய், கொம்புபாகல், முற்றின அவரை, காராமணிக் காய், சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மாங்காய், மாதுளங்காய், இளநீர், மாப்பண்டம், சேவல், பன்றி, கொக்கிறைச்சி, புளி, கடுகு, தேங்காய், எருமைநெய், ஷபால், கிழங்குவகை, முப்பழங்கள், வெங்காயம், பெருங்காயம், பலவகை மதுக்கள் முதலியவாம். (தேரையர்).

அபமார்வன்

இவன் சிவபிரானையெதிர்க்கத் துள்ளிவந்து உதைபட்டு முதுகு முரிந்து இறந்த அசுரன்

அபயக்குலச்சோழமகாராஜா

இவர் சோழ ராஜாக்களில் ஒருவர். சம்பந்தர் முதலிய சைவசமயாசாரியர்களால் அருளிச்செய்யப்பட்ட தேவாரங்கள் இருக்குமிடத்தை நம்பியாண்டார் நம்பிகளால் அறிந்து எடுக்கச்செல்கையில் தீக்ஷிதர்கள், வைத்தவர்கள் வந்தாலன்றி எடுக்கலாகாதென அவ்வகையே சமயாசாரியர்கள் மூவருக்கும் சிறப்புச் செய்வித்து உற்சவங் கொண்டருளச் செய்து அத்திருமுறைகள் இருக்குமிடத்தில் எழுந்தருளச் செய்வித்துத் திருமுறைகளைப் புற்றுமூடியிருக்கக்கண்டு விசனமுற்றுத் திருமுறைகளுக்குப் பரிமளதைல முதலிய அபிடேகஞ்செய்வித்துப் பூசித்து வெளியிட்டவர். இவருக்குத் திருமுறைகண்டசோழர் எனப்பெயர். இராஜராஜதேவரைக் காண்க.

அபயன்

1. திருதராட்டிரன் குமரருள் ஒருவன். 2. தருமன் குமரரில் ஒருவன், 3. இயமனுக்குத் தயையிடம் உதித்த குமரன்.

அபயர்

ஒருவகை இராக்கதர்.

அபரதந்தை

ரிஷபகூட பர்வதத்திற்குச் சமீபத்திலுள்ள நதி, சுக்கிரி நதி என்றும் பெயர். (A SMALL STREAM WHICH TLOWS THROUGH THE DISTRICTS OF GAYA AND PATNA AND FALLS INTO THE GANGES).

அபராசிகன்

திருதராட்டிரன் குமரர்களில் ஒருவன்.

அபராசிதன்

1. திருதராஷ்டர குமரன். 2. ஒரு பாம்பு. 3. ஓர் அரசன்.

அபராசிதமகாராஜன்

இவன் சக்ரபுரத்தரசன், இவன் தேவி வசுந்தரை, இவன் குமரன் சக்ராயுதன். இவன் தேவி சித்திரமாலை, இவன் குமரன் காபிஷ்டகல்பத்தில் தேவனாகிய கிரணவேகன் அல்லது வச்ராயுதன், இவன் தேவி இரத்தினமாலை (இவள் முன்தவத்தினால் தேவனாகிய ஸ்ரீதரை) இவன் குமரன் இரத்னாயுதன் இவர்களில் அபராஜிதனும் சக்ராயுதனும் சினதீக்ஷை பெற்று உலகுச்சிவடைந்தனர்.

அபராசிதை

அஷ்டசத்திகளில் ஒருத்தி

அபராசினன்

சந்திரவம்சத்து அரசன். புருவம்சத்தில் பிறந்த ஜயத்சேனன் புத்திரன். தாய் சுசிரவை. தேவி மரியாதை. புத்திரன் ஹரி.

அபராதீகன்

கத்ருகுமரன் நாகன்.

அபராந்தம்

ஒரு தேசம். KONKAN AND MALABAR.

அபரேகம்

இது பூமியிலுண்டாம் ஒருவகை கண்ணாடி போன்ற பொருள். இது இந்தியாவில், சென்னை ராஜதானியில் நெல்லூர் ஜில்லாவில் இருக்கிறது. இது தகடுபோல் உரிக்கக்கூடிய பளபளப்புள்ள பொருளாதலின் இதனால் விளக்குக் கூடுகளும் மற்றும் வேடிக்கைப் பொருள்களும் செய்கின்றனர். ஒளஷதங்களும் செய்யப்படுகின்றன.

அபர்ணை

மேனையின் புத்திரி, பித்ருக்களைக் காண்க. இவள் தளிர் முதலியனவும் புசிக்காமல் சிவமூர்த்தியை எண்ணித் தவமியற்றியதால் இப்பெயர் பெற்றவள். (மார்க்கண்டபுராணம்).

அபலை

இராமமூர்த்திக்குப் பசி இளைப்புமுதலிய துன்பம் வராதபடி விச்வாமித்திரரால் உபதேசிக்கப்பட்ட மந்திரம். (இரா~பால).

அபஸ்மாரரோகம்

நுரைநுரையாகக் கக்குதல், பற்கடித்தல், உதறல், கால்பின்னல், புத்தி தோன்றாமை, பிரமை, கிடந்த இடத்கில் கிடத்தல் இவற்றைத் தனக்கு உருவமாகக் கொண்டு வருவது. இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷ அபஸ்மாரரோகம் எனக் கூறுபடும். இது ஜெந்துக்களின் பிச்சுக்களாலாகிய ஆக்ராணம், கலிக்கம், மலக்குடாரிவமன விரேசனம், நன்னாரி க்ஷாயம் முதலியவற்றால் வசமாம். (ஜீவரக்ஷாமிர்தம்).

அபாக்கிரியை

இது, மதத்தவர் தங்கள் ஆகம புராணாதிகளில் சொன்னபடி நடத்துவது. சைவர் செய்யுஞ் சடங்குகளாவன. மிருதமடைந்த பின்னர் (1) சூர்ணோற்சவம், (2) சிவப்பிரசாதம், (3) சாவியாலங்காரம், (4) தேகாந்தியேஷ்டி. கரும ஆரம்பத்தில் (1) கணபதிபூஜை, (2) புண்யாஹ வாசனம், (3) பூதசுத்தி, (4) அந்தர்யாஹம், (5) ஆசார்யாலங்காரம், (6) பஞ்சகவ்வியம், (7) விக்ராமம், (8) புத்தளியந்தியேஷ்டி, (9) புத்தளியந்தியேஷ்டி சஞ்சயனம், (10) நக்னசிரார்த்தம், (11) பாஷாணஸ்தாபனம், (12) திவோதகம், (13) வாசோதகம், (14) பிண்டம், (15) நவச்ரார்த்தம், (16) எகோதரவிருத்தி, (17) பிரபூதபலி, (18) சிலோத்வாசனம், (19) விருஷோற்சர்ஜனம், (20) ஏகோதிஷ்டம். இவையொருநாள் செய்யவேண்டியது. இவைசெய்தமறுநாள் (1) ஷோடசம், (2) சபிண்டீகரணம், (3) பிண்டபிரதானம், (4) பிண்டசம்யோசனம், (5) சுவர்க்கபாதேயம், (6) புனர்பிண்டம், (7) சோதகும்பம், (8) அநுமாசியம், (9) ஆகந்தஹோமம், (10) கிரகயக்யம். வைஷ்ணவர்கள் ஸ்ரீசூர்ண பரிபாலனம். சுவாமிபிரசாதம், கர்மாரம்பத்தில் (1) அக்ரிஸந்தானம், (2) பிராயச்சித்தாதிகள், (3) சமஸ்காரம், (4) பாஷாணஸ்தாபனம், (5) சஞ்சயனம், (6) வாஸோதகாதி, (7) நக்னசிரார்த்தம், (8) எகோத்ரவிருத்தி, (9) நமசிரார்த்தம், (10) தசாஹம், (11) விருஷோற்சர்ச்சனம், ஆனந்த ஹோமம், சாந்தி ஹோமம், புனர்விருஷோற்சர்ச்சனம், (12) ஏகாஹம், (13) ஷோடசம், (14) சபிண்டீகரணம், (15) வைதரணிகோதானம், (16) தசதானம், (17) பரலோகபாதேயம், (18) பிண்டசம்யோஜனம், (19) புண்யாவாசனம், (20) சோதகும்பம், (21) இயல் அல்லது சேவாகாலம்.

அபாநன்

தசவாயுக்களுள் ஒன்று.

அபாநமித்ரன்

கதருவின் குமரன்.

அபாநாதகலைகள்

இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, ஊர்த்தவகாமினி.

அபாந்தாதமர்

விஷ்ணுவின் வாக்கிற்பிறந்த புத்ரர். இவர் சுவாயம்பு மன்வந்தரத்தில் வேதத்தைப் பிரித்தவர். கலியுகத்தில் வியாசராகப் பிறந்தவர். இவர்க்குப் பிராசீனகர்ப்பர் எனவும் பெயர். (பார~சார்)

அபாரோசன்

பீமனுடன் யுத்தஞ் செய்துதோற்றவன்.

அபார்த்தகம்

அந்வயத்தில் அர்த்தமாகாதிருக்கிற பதவாக்யங்களைச் சொல்லுகை. (சிவ~சித்)

அபாவஅணி

ஒன்றனது இன்மையைக் கூறுவது. அது என்றுமபாவம், இல்லதனபாவம், ஒன்றினொன்றபாவம், உள்ளதனபாவம், அழிவுபாட்டபாவம் என ஐந்து வகையாம். (தண்டி).

அபாவம்

இல்லையென்னும் ஞானத்திற்கு விஷயம். பிரதியோகியின் அபேஷையுடைய ஞானத்திற்கு விஷமாயிருப்பது, இது, சம்சர்க்காபாவம், அந்நியோன்யாபாவம் என இருவகைப்படும். (தரு).

அபாவிந்துகலைகள்

நிவர்த்தி, பிரதிஷ்டை வித்தை, சாந்தி, சாந்தியதீதை. (சதா).

அபிசாந்தி

ஒரு தீர்த்தம்.

அபிசாரம்

தக்ஷசிலைக்கு வடக்கில் உள்ள ஒரு தேசம். சித்திரசேனனுக்கு உரியது. இராசசூயயாகத்தின் பொருட்டு அர்ச்சுனனால் ஜெயிக்கப்பட்டது. (THE COUNTRY OF HAYARA).

அபிசாரர்

காச்மீரத்தருகில் வசிப்பவர்.

அபிசித்

1. சந்திரன் தேவிகளில் ஒருத்தி. 2. ஒரு நக்ஷத்திரம், சந்திரனுக்கு மேல் லக்ஷம் யோசனை உயரத்தில் இருப்பது நக்ஷத்திரம் காண்க. 3. கணன் தந்தை. 4. யதுவம்சத்து அரசன்.

அபிசித்துமுகூர்த்தம்

ஒரு முகூர்த்தமாவது (2) நாழிகையாகப் பகலளவில் ஆதித்தியன் மத்தியமான காலத்தி லெட்டா முகூர்த்தம். அதற்கு உத்தமமான வபிசித்து முகூர்த்தமென்று பெயராம். இம்முகூர்த்தம் நூறாயிரங் குற்றத்தைக் கெடுக்கும். (விதானமாலை)

அபிதர்மபீடகம்

பௌத்தரது மூன்றாவது ஆகமம். இது தர்மசங்கணி, விபங்கம், கதாவஸ்து, பிரகரணம், புத்கலப்பில் தாதுகதை, யமகம், பிரஸ்தான பிரகரணம் என ஏழு பிரிவுகளையுடையது.

அபிநந்தனன்

இந்திரபதம் பெற யாகஞ்செய்ய, இந்திரன் காலரூமி யென்பவனை வேண்டி யாகத்தை அழிப்பிக்க யாகமிழந்தவன், 2. ஒரு சாரணன். (சூளாமணி).

அபிநந்தனர்

1, சைநநாலாவது தீர்த்தங்கரர், இக்ஷவாகு வம்சம், சுயம்வரமகாராஜாவின் குமரர், தாய் சித்தார்த்தா தேவி. இவர் மாகமீசுக்லபக்ஷம் துவாதசி புனர்பூசநஷத்திரத்தில் சநநம். இவர் உன்னதம் (350) வில் சுவர்ண வர்ணம். (510) லக்ஷம் பூர்வம் ஆயுஷ்யம்.

அபிநவகுப்தாசாரியன்மதம்

இம்மதம், சங்கராசாரியருக்கு (229) வருஷங்களுக்குப்பின் காச்மீரத்தில் பிறந்த மகாமகேச்வராசாரியர் என்ற பிருதுப் பெயரடைந்த அபிநவகுப்தாசாரியரால் கற்பிக்கப்பட்டது, இது, ஒருவித சைவமதம். இவ்வுலகம், ஆண்டவனாகிய சிவனது ஆகாரம், பதார்த்தங்களும், ஆத்மாவும் சிவனின் வேறுபட்டவை. சிவனே சுவதந்திரன். மற்றத்தேவர்கள் அசவதந்திரர், மாயையென்று ஒரு பொருள் உண்டு, குரு உபதேசத்தினால், தான் ஈசனென்று அறியின் முத்தியடைவன் என்னும், இவர், பிரத்தியபிஞ்ஞாவிவ்ருதி விமர்சனியெனும் பெயரால் சைவசூத்ரபாஷ்யஞ் செய்திருக்கின்றனர்.

அபிநவதத்தன்

இவன் மந்திரசித்தியால் சங்கராசாரியருக்கு மூலநோய் ஏவியவன்.

அபினி

இது கசகசாச் செடியின் காயைக் கிள்ளுதல், பிளத்தல் முதலிய இடங்களிலிருந்து ஒழுகும் பால். காற்றுப்பட இறுகுவது. தின்றால் மயக்கம் உண்டு உறக்கமுண்டாம்.

அபிபூ

காசிராஜன் புத்திரன். பாண்டவர் பக்ஷத்தைச் சேர்ந்தவன். வசுதான புத்திரனால் கொல்லப்பட்டவன்.

அபிமதி

துரோணன் பாரி. இவளிடத்துச் சோகம், பயம் முதலிய உதித்தன.

அபிமன்யு

இவன் அருச்சுநனுக்குச் சர்திரன் அம்சத்தால் சுபத்திரையிடம் பிறந்தவன், பாரியை விராடராசன் பெண்ணாகிய உத்தரை. இவன் பாரதப் போரில் பதின்மூன்று நாள் பதுமயூகத்துள் புகுந்து பேதித்துத் துன்முகன், விடசேனன், லக்னகுமரன், முதலியோரை மாய்த்துச் சயந்தனால் கொல்லப்பட்டவன். இவனிறந்தகாலத்து இவன் மனையாள் வயிற்றில் பரீதித்துக் சுருவாயிருந்தான். இவனது மற்ற குமார் சுதசேநன், லீமசேநன், உக்கிரசேன். (பாரதம்).

அபிமான்

அநலன் முதற் குமரன்.

அபியோக பத்திரம்

ஒருவன் தனக்குச் செய்த தீங்கை விளக்கமாகத் தெரிவிப்பது. இதற்குப்பாஷாபத்திரம் எனவும் பெயர்.

அபிரன்

பிராமணனுக்கு அம்பஷ்ட கன்னிகை இடம் பிறந்தவன். (மநு)

அபிராமன்

காளமேகனை நாலுபாஷையிலும் கவிபாட ஏவினவன்.

அபிராமி

சத்தமாதர்களுள் ஒருத்தி.

அபிராமிபட்டர்

இவர் சோழநாட்டுத் திருக்கடவூரிலிருந்த பௌரோகிதர். இவர் வாமியின் பூசை மேற்கொண்டவர். அபிசாமியிடம் அந்தரங்க அன்புள்ளவராய்ச் புறத்தில் யார்க்கும் அதைத் தெரிவிக்காமல் பஞ்சமகாபாதகர் போல் நடித்துவருகையில் இவரிடம் வெறுப்புக்கொண்ட வேதியர் தஞ்சை சரபோஜி அரசனிடங் குறைகூறினர். அரசன் உணர்ந்து இவரை அழைத்துவரக் கட்டளையிடச் சேவகர் இவரை அரசனிடங் கொண்டுபோய் விட்டனர். அரசன் பட்டரை நோக்கி நீர், கையில் வைத்திருப்பது என்ன வெனப் பட்டர், அது பஞ்சாங்கம் என்றனர். ஆயின் நாளை என்ன திதி யெனப்பட்டர், அமாவாசையைப் பௌர்ணிமா என்றனர் உடனே அரசன் இது மதிகெட்டதினம் என்று பட்டரைநோக்கி நாளை முழுமதியைக் காட்டக்கூடுமோ என்ன, அதற்கு உடன்பட்டு அரசன் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னிகுண்டத்தைக் கீழே கொளுத்தி உறியிலிருந்து பாடி ஒவ்வொருகவிக்கு ஒவ்வொரு கயிறுகளை நறுக்கி “விழிக்கே யருளுண்டு” எனுங் கவியில் தேவி தரிசனந்தர தேவியை அபிராமி அந்தாதி பாடி உபாசனை செய்து அவள் தரிசநத்தில் தமது குறைகூறி இரந்து அம்மையாரிடம் குண்டலம் பெற்று அவள் கட்டளைப்படி ஒன்றை ஆகாயத்தில் விட்டெறிந்து மறுநாள் சாயங்காலம் அரசனும் மற்றவரும் அஞ்சும்படி ஆகாயத்தில் பூரணசந்திரனைக் காட்டியவர். இவர் பாடிய அபிராமி அந்தாதி சொன்னோக்கம் பொருணோக்கமும் பிராட்டியருளுந் தரத்தக்கது.

அபிஷியந்தன்

சந்திரவம்சத்து அரசன் குரு புத்திரன். தாய் வாகினி (பாரதம். ஆதி.)

அபிஷேகபாண்டியன்

வீரபாண்டியன் குமரன், இவன் இளமையாயிருக்கையில் இவன் தந்தைக்குப் போகஸ்திரீகளிடம் பிறந்தார் பொக்கிஷத்திருந்த முடி முதலியவற்றைக் களவிற் கைக் கொண்டனர். இவன் முடிசூடுங் காலத்தில் தக்கமுடியும் அதில் அணிய மாணிக்கமும் இல்லாமைகண்டு சிவமூர்த்தியை வேண்டச் சொக்கநாதசுவாமிகள் தாமே ரத்னவியாபாரியாக வந்து மாணிக்கம் விற்று முடிசெய்யச் செய்தனர். இவன் காலத்தில் வருணன் கோபித்து மதுரைமீது மேகங்களையும் கடலையும் ஏவி அழிப்பிக்க அரசன், சிவானுக்கிரகத்தால் அவ்விபத்தினின்று நீங்கினன். இவன் எல்லாம் வல்ல சித்தராய் வந்த சிவமூர்த்தியைக் கல்லானைக்குக் கரும்பருத்த ஏவிக் கல்லானையுண்ணக் கண்டு பணிந்து புத்திரப்பேறு வேண்டிப்பெற்று விக்கிரமபாண்டியனைப் பெற்று நற்கதி அடைந்தவன். (திருவிளையாடல்.)

அபிஷேகர்

பண்டாரத்தார் வகைகளில் ஒருவகை வேளாண் ஜாதியார், இவர்கள் சிவாகமப்படி சைவர் வீடுகளில் சில சடங்குகளைச் செய்வோர். (தர்ஸ்டன்).

அபீஷ்டதிரிதியை

இது மார்கழிமாத சுக்கிவபக்ஷ திரிதியையில் விதிப்படி கலசத்தில் சிவசத்தியைத் தாபித்துப் பூசிப்பது. இது அபீஷ்டத்தைத் தரவல்ல விரதம்.

அபுவர்ணன்

சாவித்திரியின் குமரன். தேவி சவுந்தரி.

அபூர்வன்

(ச) நிருபஞ்சயனுக்குக் குமரன். இவன் குமரன் நிமி.

அப்சரசுக்கள்

அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை, கிருதாசி, முதலியவர்கள். இவர்கள் பாற்கடலிற் பிறந்தவரெனவும் காசிபர்க்கு முனியென்னும் பாரியிடம் பிறந்தவரெனவும் புராணங்கள் கூறும்.

அப்சரர்

ஒரு தேவசாதியர்.

அப்பன்

1. குருகைக் காவலப்பனுக்கு ஒரு பெயர், 2. சிம்மாத்திரி பெருமாள்.

அப்பர்

திருநாவுக்கரசு சுவாமிகளைக் காண்க.

அப்பாஜி

இவன் வேலூராண்ட கிருஷ்ணதேவராயன் மந்திரி. இவன் நியோகிப் பிராமணன். இளமையில் தாய்தந்தையரை இழந்து கல்வியறிவிலாது ஆடுமாடுகளை மேய்த்தும் துணிகளைத் தைத்தும் பரிசாகனாகியும் யதேச்சையாகத் திரிந்தவன். இவன் ஒருநாள் காட்டுவழியில் தன்னையறியாது தூங்கிக்கொண்டிருக்கையில் நாகமொன்று வெயிற்படாது முகத்தைக்காத்திருந்தது. அந்தவேளையில் வழிப்போன பட்டு மூர்த்தியார் அதனைக்கண்டு இவனெழுந்தபின் அப்பா உனக்குச் சிலநாளில் இராஜ்யசம்பத்து உண்டாகும் அந்தக் காலத்தில் என்னை ஆதரிக்கின்றாயா என, அப்பாஜி எழுத்தறியாத எனக்கு இராச்சியமேது அப்படி உண்டாகுங்காலத்தில் செய்கிறேன் எனக் கூறினன். சிலநாள் தரித்து அப்பாஜி இராசாங்க உத்தியோகத்தைச் சேர்ந்து ஒரு சிறு அலுவல் பெற்று முறையாக உயர்ந்து அதிக புத்தி நுட்பமுடையவனாய் மந்திரிபதம் பெற்றுத் தனக்குச் செல்வம் வருமென்றவனைத் தேடி ஆதரித்தவன். இவனுக்குச் சாளுவ திம்மராசு அப்பாஜி எனவும் பெயர். இவனைப்பற்றிப் பல சிறுகதைகள் உண்டு.

அப்பாப்திசமை

அடைவின்மையால் எதிர்த்து வருவது.

அப்பாலுமடிசார்ந்தார்

தமிழ்நாடொழிந்த மற்றபாஷைகள் வழங்கும் நாடுகளிலிருந்து சிவத்தியானத்தால் முத்தியடைந்த அடியவர்களின்தொகை (பெரியபுராணம்)

அப்பாவையா

இவர் திருவதிகைவீரட்டான புராணம் பாடிய புலவர்.

அப்பிரசித்து

சண்முகசேநாவீரன்.

அப்பிரதி

மேருதேவியின்பெண். கிம்புருஷன் பாரி.

அப்பிரதிட்டம்

ஒருவித நரகம். இதில் பாபிகள் யந்திரங்களால் திருப்பப்பட்டு இரத்தமாம்சங்களைக் கக்கிக்கொண்டிருப்பர்.

அப்பிரதிபத்தி

வாதியானவன், தான் சொன்னதும், பிரதிவாதி சொன்னதும் அறியாதிருப்பது. (சிவ~சித்)

அப்பிரதியை

வாதி சொன்னதற்குத்தானும் அங்கீகரித்திருக்கையும், அதற்கு உத்தரம் சொல்லாதிருக்கையும். (சிவ~சித்.)

அப்பிரதிரதன்

(சந்) மதிசாரனுக்கு மூன்றாம் புத்திரன். கண்வனுக்குத் தந்தை.

அப்பிரமை

கிழக்குத்திக்கிலுள்ள பெண்யானை. இதனாண் ஐராவதம்.

அப்பிராத்தகாலம்

வாதம் பண்ணுமிடத்து வாதிபஞ்சா அவயவங்களை அடைவில் மாறிப் பிரயோகித்தல். (சிவ~சித்).

அப்பிராப்தி

சமன மனைவி.

அப்பு

இது அம்புத்தன்மை சாமான்யத்தோடு கூடியது. இரசனேர்திரியம், சரீரம், ஆறு, கடல், பனி, ஆவி, முதலிய உருவமுடையது. நித்தம், பரமாணுகுமம். (தரு)

அப்புறசால்மனி

ஓர் இருடி.

அப்புள்ளார்

கிடாம்பி. ஸ்ரீரங்கராஜருக்குக் குமரர். இவர் கல்வி கேள்விகளில் வல்லவராய் இருந்தது பற்றி அங்கிருந்தார் இவர்க்கு இப்பெயரிட்டனர். நடாதூரம்மாளை ஆச்ரயித்தவர். அம்மாளிடத்தில் காலக்ஷேபஞ் சேவித்திருக்கையில் புறமதத்தவர் வாதத்திற்கு வர அவர்களை வென்று வாதி ஹம்ஸாம்புதர் என விருது பெற்றவர். (குருபரம்பரை).

அப்பூதியடிகணாயனர்

இவர் சோழமண்டலத்தில் திங்களூரில் பிராமணகுலத்தில் திருவவதரித்தவர். இவர் திருநாவுக்கரசு சுவாமிகளைச் காணாதிருந்தும் அவரிடத்தில் மிகுந்த அன்புபூண்டு அவர் பெயரையே எல்லாருக்கும் வைத்தழைத்து அவர் பெயரால் தண்ணீர்ப்பந்தல் வைத்திருந்தனர். இவர் செய்திகளைத் திங்களூருக்கு வந்த திருநாவுக்கரசு சுவாமிகள் கேள்வியுற்று அவ்விடத்திலுள்ளாரை இடம்வினவி அவர் சமீபத்திற் சென்று நீர் உம்முடைய பெயரால் தண்ணீர்ப்பந்தல் முதலிய அறச்சாலைகள் வையாமல் வேரொருவர் பெயரால் வைத்தற்குக் காரணம், என்ன என, அப்பூதியடிகள் சமணசமயத்தினின்று நீங்கிக் கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடந்த அத்திருப்பெயரினும் மற்றப்பெயர் விசேடமோ நீர் சைவராயிருந்தும் அறியாது கேட்கிறீர் நீர்யார் என்றார்? அதற்குத் திருநாவுக்கரசுசுவாமிகள் நான் பரமசிவம், சூலைகொடுத்து ஆட்கொண்டவன் என்று கூறக்கேட்டு ஆனந்தக்கடலில் வீழ்ந்து எழுந்து அடிபணிந்து திருவமுது செய்ய வேண்டினர். அரசுகள் உடன்பட்டு இருக்கையில் அப்பூதியடிகள் திருநாவுக்கரசுகளுக்கு அன்னம் பரிமாறத் தமது குமாரரையழைத்து வீட்டின்புறத்தில் இருக்கும் வாழையில் ஒரு இலை கொண்டுவர ஏவினர். குமரர் வாழையிலையறுக்கையில் நாகமொன்று தீண்ட இலையை அறுத்துத் தந்தையாரிடம் கொடுத்து நடந்ததைக் கூறி மரணமூர்ச்சையடைந்தனர். அப்பூதியடிகள் சவத்தை மறைத்துத் திருநாவுக்கரசுகளுக்கு அமுது பரிமாற, அரசுகள் உண்ணுமுன் எல்லாருக்கும் விபூதி பிரசாதிக்க மனத்தில் எதோ கவலைகொண்டு உமது மூத்த குமரன் எங்கேயென, இருகுரவரும் அவன் இப்போது தேவரீர்க்கு உதவான்; தேவரீர் அமுதுகொள்க என, நாயனார் உண்மை கூறுகவெனக் கேட்டு அறிந்து சிவசந்நிதானத்துச் சென்று விஷம் நீங்க “ஒன்று கொலாம்”எனும் திருப்பதிகம்பாடி உயிர்ப்பித்து அமுதுண்டு சென்றனர். இதற்குப் பிறகு சிலகாலம் அப்பூதியடிகள் திருநாவுக்கரசுசுவாமிகள் திருவடியைத் தியானித்திருந்து பரமசிவன் திருவடியடைந்தனர். (பெரியபுராணம்.)

அப்பையதீக்ஷிதசுவாமிகள்

இவர், வடமொழியில் வல்ல மகாவித்வான். சிவபக்திமான். இவரிடங் காஞ்சியிலிருந்த தாதாசாரியார் என்பவர் உட்பகைகொண்டு இவரைக் கொல்ல வகைதேடிச் சிவன் விஷமுண்டது நீரும் உண்ணும் பார்ப்போமென விஷமுண்பிக்க அதனை வாங்கிச் சிவார்ப்பணஞ் செய்து உண்டு சலியாதிருந்தவர். அரசன் தீக்ஷிதருக்கும் தாதாசாரியாருக்கும் சால்வைகள் மரியாதை செய்விக்கத் தாதாசாரியர் அதனை வாங்கித் தாம் அலங்கரித்துக் கொண்டிருக்தனர். தீக்ஷிதர் அதனைச் சிவாக்னி வளர்த்தி அதிலிட்டனர். இச்சால்வையைத் தீயிலிட்ட செயலைக் கேள்வியுற்ற தாதாசாரியர் அரசனிடம் நீர் தீக்ஷிதருக்குக் கொடுத்த சால்வையை அவர் அவமதித்துத் தீயில்இட்டுக் கொளுத்தினர் என்று கூறி அரசனுக்குத் தீக்ஷிதர் விஷயத்தில் சற்று மனவெறுப்பு உண்டாக்கினர். அரசன், தீக்ஷிதரை நோக்கி நாம் கொடுத்த சால்வை எங்கே இருக்கிறதென, அதனை நாட்வைக்குமிடத்தில் வைத்தோமென்றன. ஆயின் அதனை நான் பார்க்க வேண்டுமெனத் தீக்ஷிதர் உடன்பட்டு அரசனைச் சிவமூர்த்தியின் சந்நிதானத்து அழைத்துச் சென்று சிவமூர்த்தி அணிந்திருக்கக் காட்டினர். அரசன் தீக்ஷிதர் விஷயத்தில் முன்னிலும் அதிக பக்தியுமச்சமு முடையவனா யிருந்தனன். தீக்ஷிதர் விஷயத்தில் அரசன் அன்பு கொண்டிருத்தலத் தாதாசாரியர் அறிந்து தீஷிதரை வாதத்திற்கு அழைக்க அரசனுக்குக் குறிப்பிக்க, அரசன் அதைத் தீக்ஷிதருக்குத் தெரிவித்தனன். தீஷிதர் மத்தியஸ்தர் வேண்டுமென, அரசன் வியாஸபட்டர், பராசபட்டர், எனும் இரண்டு மார்த்தவ கவிகளை வருவித்து மத்தியஸ்தராக்கினன். தாதாசாரியர், தீக்ஷிதருடன் எழுநாள் வாதித்துத் தோற்றனர். இந்த வாதங்களை அறிந்த இரண்டு மார்த்தவரும் சைவராயினர். இதற்குப் பிறகு தீஷிதர் இன்னும் பாராயினும் வாதத்திற்கு உளரோ என, வரநந்திபெனும் புத்தன் வாதிட்டுத் தோற்றனன். தோற்றதனால் வெட்கமடைந்த தாதாசாரியர் தீக்ஷிதரைக் கொல்ல வகைதேடித் தீக்ஷிதசுவாமிகள் ஒருநாள் ஆற்றிற்கு ஸ்நானத்திற்குப் போனசமயமறிந்து கொன்றுவிட்டு வரச் சிலரையேவ அவர்கள் அந்தப்படி செல்லுகையில் தீக்ஷிதரிடம் பலர் சூலபாணிகளாய் நிற்கக்கண்டு அஞ்சித் தாங்கள் வந்த செய்தி கூறினர். தீக்ஷிதர் அச்செய்திகேட்டு அந்த இடத்தில் சிவபிரானிடம் சிவனடியவர்க்குத் தீங்குசெய்பவரைப் பற்றி முறையிடத் தாதாசாரியர் இடி விழுந்திறந்தனர் என்பது தீக்ஷிதவைபவம்.

அப்ரகம்

ஒருவகை லோகக்கல். இதனைப் பூவிந்துநாத மென்பர். இது ஏமாப்ரகம் பொன்னப்பிரகம், இரசதாப்ரகம், தேனப்ரகம், கிருஷ்ணாப்ரகம், கந்தகாப்பிரகம் எனப் பலவகைப்படும்.

அமங்கலநாள்

நக்ஷத்திரம் காண்க.

அமணன்

ஒப்பிலாமணிப்புலவரைக் காண்க. இவன் ஒரு வள்ளல்.

அமணமலை

சைனர்களிருந்த மலை; இது மதுரைக்கு மேற்கேயுள்ளது; இதிற் சைனர்களிருந்த குகைகள் பல காணப்படுகின்றன. (திருவிளையாடல்.)

அமநஸ்கர்

ஆன்மாக்களின் மனதிற் கெட்டடாது சோதி சுவரூபமாக விளங்குஞ் சிவமூர்த்தி.

அமரகம்

காமகலை உணர்த்தும் வடால், சங்கராசாரியரால் இயற்றப்பட்டது.

அமரசிங்

இரசபுத்ர அரசனாகிய பிரதாசிங்கின் குமரன் இவன் சற்று மந்தநிலை கொண்டவன். அக்பருக்குப் பின் பட்டமடைந்த ஜிஹாங்கர் இவன் மீது படையெடுத்து வருவதறிந்தும் சும்மாவிருக்க இரசபுத்திரத் தலைவனாகிய ஸலம்பர ராஜபுத்ரத் தலைவன், பிரதாபசிங்கிடம் வாக்களித்தபடி அமரசிங்கை வலிய சிங்காசனத்திருந்து இழுத்து யுத்தத்தை நடத்தினான். இதில் முகம்மதியர்கள் இரண்டு முறை தோல்வியடைந்தனர். பின் ஜீஹாங்கிர் சகீரன் எனும் இராஜபுத்ரனைச் சித்தருக்கு ரானா ஆக்கினால் ராஜபுத்திரர் பிளவுபடுவரென்று அவனை அரசனாக்கினான். அவன் ரஜபுத்ரன் ஆகையால் தங்கள் முன்னோர் கோட்டையின் சீர்கெட்ட நிலைகண்டு பரிதபித்து அமாசிங்கிடம் கோட்டையை ஒப்புவித்து நீங்கினான் ஜிஹாங்கிர் இவனையழைத்து ஏன் இப்படிச் செய்தாய் என அவன் தன்வாளையுருவித் தற்கொலை செய்து கொண்டான். இவர்கள் மகம்மதியர்கள் வசமிருந்த ஒந்தலம் எனும் கோட்டையைப் பிடிக்கச் சண்டாவதரெனும் ராஜபுத்ரரும் சுக்தாவத ரென்போரும் போட்டிபோட்டுக் கொண்டனர். கடைசியில் சண்டாவதரே பிடித்தனர். இதனால் ரோஷமடைந்த சுக்தரவதரின் தலைவன், யானையைத் தன்மீது பாயச் செய்திறந்தான். அமாசிங்கின் பலம் குறையும் காலம் வந்தது. இராஜபுத்ரசேனா பலம் குறைவடைந்தது. துருக்கியரின் பலம் வளர்ந்துவரத் தலைப்பட்டது. இதனால் மனக்கலக்கமடைந்த அமரசிங் தன் குமரனை டெல்லி சக்ரவர்த்தியிடம் அனுப்பினான். பிறகுதான் தன் குமரனுக்குப் பட்டமளித்துத் துருக்கியனைப் பணியாது நவசோகி யென்னுமிடத்தில் தனித்திருந்து காலத்தைப் போக்கினான்.

அமரசிங்கமகாராஜா

இவன் தஞ்சாவூர் ராஜா என்பர். இவன் தன் பெண்கள் இருவரையும் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாயகருக்கு விளக்கெடுக்கச் செய்வித்தவன்.

அமரசிங்கள்

விக்கிரமார்க்கன் காலத்திருந்த சைநபண்டிதன். வடமொழி நிகண்டு தன்பெயரால் செய்தவன். (அமரம்).

அமரசுந்தரி

பூமி சந்திரன் எனும் அரசன் மனைவி. புண்ணியாசனை வளர்த்தவள் (மணிமே. மணி).

அமராபுரம்

ஒரு விதியாதரநகரம். (சூளா)

அமராவதி

இது தேவேந்திரன் முப்பத்துமுக்கோடி தேவர்கள் சூழ அரம்பை முதலிய தேவமாதர்கள் ஏவல்செய்யக் கற்பகத்தரு சந்தானம், பாரிசாதம், காமதேனு, நவநிதி, தன்வந்திரி, சசி, உச்சைச்சிரவம், ஐராவதம், தேவவிமான முதலிய செல்வங்களுடன் அரசாளுமிடம். பூவுலகத்திற் புண்ணியஞ் சொய்தோர் அடையும் உலகு.

அமர்

திரேதாயுகத்தில் விஷ்ணுவிற்கு ஒரு பெயர்.

அமர்கிதன்

சுக்கிராசாரியின் குமாரன்.

அமர்நீதநாயனார்

இவர் பழையாறைப் பதியில் வணிகர்குலத்தில் அவதரித்துச் சிவனடியவரிடத்திலன்பு பூண்டு அவர்கன் பொருட்டுத் திருநல்லூரில் மடங்கட்டுவித்து அடியவர்க்கு அமுது செய்விக்கையில் சிவமூர்த்தி இவரது அன்பை உலகத்தவர் அறிய ஒரு பிரமசாரி உருவமாக எழுந்தருளி “நாம் நித்தியகன்மம் முடித்து வருகிறோம், இந்தக் கோவணத்தைப் பத்திரப்படுத்தி வைக்க ” வெனக் கட்டளைதந்து சென்றனர். நாயனார் வீட்டிலதைப் பத்திரப்படுத்தி வைக்கச் சிவமூர்த்தி மாயையால் அதை மறைத்தனர். சிவமூர்த்தி சற்றுப் பொறுத்து ஸ்நானமுடித்து மழையில் நனைந்து அடியவரிடம் வந்து முன் தாம் கொடுத்துவிட்டுப் போன கோவணத்தைக் கேட்டுப் பெறாது வேறொன்று தருகிறேனென அடியவர் கூறக் கோபங்கொண்டவர் போல் அடியவரைப் பார்த்து “நான் முன் கொடுத்த கோவணத்திற்கொத்த கோவணம் என்னிடத்தில் மற்ரொன்று இருக்கிறது அதற்குத் தகுந்தது உன்னிடம் உள்ளதேல் நிறுத்துத் தருக” வெனக் கேட்டுத் தமது கோவணத்தை நிறையிட வைத்தனர். நாயனார் தம்மிடமிருந்த புதிய கோவணமொன்றை நிறையிடவைக்கச் சரிவராமை கண்டு தம்மிடம் இருந்த உடைகளையும் பொருள்களையும் மற்றவைகளையும் வைத்து இடையொவ்வாமை கண்டு கடைசியாகத் தாமும் மனைவி மைந்தருடன் துலையேறித் தேவர்பூமாரி பொழியத் துலையே விமானமாகச் சிவபரஞ்சென்றவர். (பெரியபுராணம்.)

அமாகன்

ஒரு அரசன். இவனது உயிர் நீங்கிய உடலில் சங்கராசாரியார் புகுந்து இவன் தேவியிடம் காமகலை பயின்று அம்ரகம் என ஒருநூல் இயற்றினர். இவனை மன்மதன் அம்சம் என்பர். இவனுக்கு நூறு மனைவியர்.

அமாத்தியன்

காலமிடங்களை நன்றாக அறிந்தவன். (சுக்கிரநீதி.)

அமாவசு

புரூரவன் குமரன்.

அமாவடம்

ஒரு பாம்பு.

அமாவாஸ்யை

அச்சோதையைக் காண்க.

அமிததேசன்

அருக்ககீர்த்தியின் மகன் (சூ)

அமிதத்துவசன்

காண்டிக்கியன் தந்தை.

அமிதோசன

திரைப்புறமென்கிற நகரத்து அரசன்.

அமித்திரன்

ஒரு முனிவன். இவன் பொருட்டு வருஷத்திற்கொருமுறை பழுக்கும் நெல்லிக்கனியை அருச்சுநன் திரௌபதி சொற்கேட்டு எய்து கொடுத்து மீண்டும் கண்ணனருளாலதைப் பொருந்தச் செய்தனன். (பாரதம்.).

அமிர்தகண்டன்

குடிமிக்குயவர்க்கு முதல்வன். (குலாலபுராணம்).

அமிர்தகவிராயர்

பொன்னங்காலிற பிறந்த சைவவேளாளர். கவிபாட வல்லவராய்த் தளவாய் இரகுநாத சேதுபதி என்னும் சிற்றரசன் சமஸ்தான வித்துவானாயிருந்து ஒருநாள் அச்சமஸ்தான வித்வான்களைச் சேதுபதி “நீவிர், ஒரு துறையாக எத்தனை கோவை பாடவல்லீர்” களென அவர்கள் ஒவ்வொருவரும் நான் அறுபது, எழுபது எனப் பலவாறு கூற இவர் “நான் நூறு பாடவல்லே” னெனச், சொன்னயத்தால் அரசனும் வித்வான்களும் நீர் நானூறு பாடவல்லீரோ” வென “அதுவென்ன பொருட்டா” வென நானூறு செய்யுட்களடங்கிய நாணிக்கண் புதைத்தல் துறையில் கோவை பாடியகவி. இரகுநாத சேதுபதி மீது அப்பெயர் கொண்ட கோவைபாடிப் பரிசு பெற்றவர். இவர்காலம் (200) வருஷமிருக்கலாம். 2. இவர் ஒருதுறைக்கோவை பாடிய அமிர்தகவிராயரின் வேறு இவர் இருக்கை தொண்டைமண்டலத்துப் பாலூர் போலும். கோகுலசதகம் பாடியவர்.

அமிர்தகிரணன்

சந்திரன்.

அமிர்தசாகாம்

பிரதாபசிங்கன் செய்த வைத்தியநூல்.

அமிர்தபிரபை

சயம்பிரபை என்பவளுக்குத் தோழி. (சூளாமணி.)

அமிர்தமதனம்

கிருதயுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் மந்திரத்தை மத்தாக நாட்டி வாசுகியைத் தாம்பாகப்பூட்டி இரு கூட்டத்தாரும் இரண்டு பக்கத்திலிருந்து பாற்கடலைக் கடைந்தனர். அந்தக் காலத்தில் மந்திரம் நிலையாதிருந்ததனால் விஷ்ணு ஒருகையால் அதனை அசையாமலழுத்தியும் கூர்மஉருக்கொண்எம்தாங்கினர். இதில் தேவாசுரர் சலிக்க விஷ்ணு இழுப்பவரில் தாமும் ஒருவராயிருந்து இழுத்தனர். இத்தொழிலாற் கடலிலிருந்து விஷமுண்டாயிற்று, அதைக்கண்டு தேவர் முதலியோர் அஞ்சியோடிச் சிவமூர்த்தியை வேண்ட அதனைச் சிவமூர்த்தியுண்டு நீலகண்டன் எனப் பெயசடைந்தனர். (அந்த விஷத்தை விஷ்ணு உண்டு மிகுந்ததைச் சிவனுக்குக் கொடுத்தனர் என்பர் வைணவர். அதனை உண்ணப் போகையில் விஷச்சுவாலை பொறுக்காது உடல்கறுத்துத் திரும்பினர் என்பர் சைவர்). பின்பு தேவாசுரர் கடைகையில் அக்கடலினின்றும் திருமகள், இந்திராணி, சந்திரன், உச்சைச்சிரவமெனுங் குதிரை, ஐராவதம், கௌத்துவமணி, ஐந்தருக்கள், காமதேனு, தன்வந்திரி, வாருணி, தேவமாதர், அமுதகலசம் பிறந்தன. பிறந்த வைகளில் திருமகள், கௌத்துவமணி, இவ்விரண்டினையும் விஷ்ணுமூர்த்தியும், காமதேனுவினை இருடிகளும், வாருணியை அசுரரும், மற்றவைகளைத் தேவ இந்திரனும் கிரகித்தனர். அமிர்தத்தின் பொருட்டுத் தேவாசுரர்யுத்தஞ் செய்யுங்காலத்தில் விஷ்ணு, மோகினியுருக் கொண்டு அதனைத் தேவருக்குப் பரிமாறுகையில் இராகுகேதுக்கள் தேவஉருவால் அதைக்கிரகிக்க அதனைச் சூரிய சந்திரர்களால் அறிந்த விஷ்ணுமூர்த்தி சக்கிரத்தால் அவர்களைச் சேதித்தனர். மேற்சொன்ன இந்திரனது செல்வங்கள் பலமுறை தூர்வாசர் முதலிய இருடிகள் சாபத்தால் கடலில் ஒளிக்கத் தேவர்கள் பலமுறை கடலைக் கடைந்தனர் என்று புராணங்கள் கூறும். அந்தக்காலங்களில் பலமுள்ளவர்களாகிய பலர் தேவர்களுக்கு உதவியாகக் கடைந்தனர் என்பர். ஒரு முறை வாலி, கார்த்தவீரியாருச்சுநன் முதலியவர் உதவி செய்தனராம். (பாகவதம்)

அமிர்தலிங்கசுவாமிகள்

இவர் திருவண்ணாமலை ஆதீனத்தவர். திருமயிலைப் புராணம் பாடியவர்.

அமிர்தஸாக

இது சீக்கியருடைய குருவாகிய இராமதாசரென்பவரால் (கி. பி 1581) இல் வெட்டப்பட்ட ஒரு குளம். இது (105) அடி சதுரமாய் எவ்வளவு ஜனங்கள் நீராடினும் கலங்காததாயிருக்கிறது. இது, பாஞ்சாலதேசத்து வைதிக நகரம். சீக்கியருக்கு முக்கியமானது. (மணி)

அமிழ்தபதி

ஒரு வித்யாதர நகரம். (சூளா)

அமீதாசுவன்

இஷ்வாகு வம்சத்தவன்.

அமீத்தி

1. திருதராட்டிரன் குமாருள் ஒருவன். 2. (சூ) சுதபஸ்து என்பவனுக்குக் குமரன்.

அமீர்தபிரபாள்

எட்டாவது மன்வந்தரத்துத் தேவர்.

அமுகனா

திருவரங்கத்த முதனாரைக் காண்க.

அமுதகடகன்

இராகுவின் குமரன்.

அமுதகடிகை

பரணி, மிருகசீரிடம், பூரம, இவற்றுக்கு முப்பதின்மேலும், பூசத்துக்குப் பதினொன்றின் மேலும் அச்சுவினிக் கிருபத்தொன்றின் மேலும் கார்த்திகைக்கு ஐம்பதின் மேலும், திருவாதிரை, ஆயிலியம், இவற்றுக்கு நாற்பதின் மேலும், பூராடம், பூரட்டாதி இவற்றுக்குப் பத்தின் மேலும், அத்தத்துக்கு ஏழின் மேலும், உத்திரட்டாதிக்குப் பதினெட்டின் மேலும், சோதிக்கு இருபத்திரண்டின் மேலும், இரேவதிக்குப் பன்னிரண்டின் மேலும் அடைவே (4) நாழிகை யமிர்தகடிகையாம் (விதானமாலை).

அமுதகடிகை

அனுடம், மூலம், உத்திராடம், அவிட்டம், புநர்பூசம், உரோகிணி, இவற்றுக்குப் பதினாலின் மேலும், சித்திரைக்குப் பதினாறின் மேலும் கேட்டைக்கு முப்பத்தொன்றின் மேலும், விசாகம், திருவோணம், மகம், சதயம், இவற்றுக் கிருபதின் மேலும், உத்திரத்துக்கு முப்பத்து மூன்றின் மேலும் அடைவே (4) நாழிகை யமிர்தகடிகையாம்.

அமுதகதிர்

சூர்யகிரணத்திலொன்று.

அமுதக்கொடி

முருகக்கடவுளை நாயகராகப் பெறச் சரவணப்பொய்கையில் தவமியற்றய சத்தி.

அமுதசாகரர்

தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை உறுப்பியல், செய்யுளியல், பொதுவியல் என மூன்று உறுப்படக்கிய பிண்டமாக்கிக் கட்டளைக் கலித்துறையால் காரிகையெனப் பெயரிட்டுச் செந்தமிழ்ப் புலவருக்கு உதவியவர். இவர் சைந சமயத்தவர் (இவரைக் குணசாகரர் ”பண்டையோ ருரைத்த தண்டமிழ்யாப்பிற் கொண்டிலா தகுறியினோரைக் குறிக்கொள்ளுதல் காரணமாகக் செய்யப்பட்ட நூலுடையார் என்பர்).

அமுதசுரபி

தென் மதுரையில் கலாநியமத்துள்ள சிந்தாதேவியால் ஆபுத்திரனுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வத்தன்மையுள்ள பாத்திரம். இது எடுக்கக் குறையாத அன்னமுடையது. இது, சிலநாள் ஆபுத்திரன் கையிலிருந்து பலவுயிர்களுக்குப் பசியொழித்து மணிப் பல்லவத்துற்ற கோமுகியெனும் பொய்கையில் அவனாலிடப்பட்டு மணிமேகலையிடம் வந்து பலஉயிர்களின் பசியையும் காயசண்டிகையின் தீராப்பசியையு மொழித்து அவரின் பஸ்மக வியாதியையும் போக்கியது (மணிமேகலை).

அமுதந்தி

ஒரு இருடி, மானுருக்கொண்டு மனைவியுடன் புணருகையில் பாண்டுவால் எய்யப்பட்டுப் பாண்டுராஜனுக்கு நீ இனி உன் மனைவியைச் சேர்கையில் இறக்கவெனச் சாபமளித்தவன். (பாரதம்)

அமுதபதி

இரவிவன்மன் தேவி. இவள் குமரியர் தாரை, வீரை, இலக்குமி (மணி).

அமுர்த்திசாதாகயம்

சாந்தியெனும் பெயரையுடைய ஆதிசக்தி, அரூபியாதலால் அமூர்த்தியெனும் பெயரடைந்து, வடிவறுதி ஆதலால் விகற்பமான கலைகளுக்கப்பாற் பட்டு, தூணாகாரமான லிங்கமாய், கோடிசூர்யப்ரகாசமான லிங்கத்தினடுவே காண்டற்கரிய வடிவைக் கற்பித்திருப்பது.

அமெரிந்தியர்

கொலம்பஸ் முதல் முதல் அமெரிகாவைக் கண்டு பிடித்தபோது அதனை இந்தியாவென எண்ணி அதிலுள்ளாரை இந்தியர் என்றான். பிறகு இந்தியருக்கும் அப் பெயருள்ளதால் அவர்களை வேற்றிய அமெரிந்தியர் என்றனன். (AMERINDE).

அமோகன்

1. சூரனுக்கு முதன் மந்திரி. 2. சணமுகசேநாவீரன்.

அமோகவருஷன்

தொண்டைமண்டலத்தில் அரசிருந்த சைந அரசன்

அமோகை

சிவசூர்யனிடம் அமருஞ் சிவசக்தி.

அம்சகன்

குனி புத்திரன்.

அம்சகீதை

பிரமன் அன்ன உருவமாய் இருடிகளுக்குக் கூறிய ஞானநூல்.

அம்சத்துவசன்

(சந்) ஒரு அரசன். இவனது குமரன் கவுசலன்.

அம்சன்

1. வசுதேவருக்கு ஸ்ரீதேவியிடம் உதித்த மூன்றாங் குமரன். 2. சராசந்தனுக்குச் சிநேகன். மகாபராகரமசாலி. பலராமனால் (17) ஆம் நாள் பாரதயுத்தத்தில் மூர்ச்சையடைந்தவன். 3. ஒரு காந்தருவராசன். 4. ஞானாப்பியாச நிஷ்டநரபனாகிய சந்நியாசி. 5. இடிசிகனைக் காண்க. 6. கஸ்யப் புத்ரன், தாய் அதிதி. (பார்) 7. அரிஷ்டையின் புத்திரனான கந்தர்வன். இவனே திருதராஷ்டிரனாகப் பிறந்தவன். (பாரதம்~ஆதிபர்வம்)

அம்சம்

மேருவின் வடக்கின்கணுள்ள ஒரு மலை

அம்சி

ஒரு அரசன், அம்சர் எனப்படும் யோகியரை வசப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தவனாதலால் இவனுக்கு இப்பெயர் வந்தது. 2. பகீரதன்புத்ரி, கௌசரிஷியின் பாரியை. (பாரதம்~அநு)

அம்சு

புருகோதரன் குமரன்.

அம்சுமான்

1. (சூர்) அசமஞ்சன் குமரன். இவன் குமரன் திலீபன். சகரன் பௌத்ரன் (பாரதம்~ஆதி பர்வம்). 2, (க்ஷத்) திரௌபதியின் ஸ்வயம்வரத்திற்கு வந்தவன். (பாரதம்). 3. க்ஷத்) பாண்டவபக்ஷத்தவன் போஜ வம்சத்தவன், துரோணாசார்யனால் கொல்லப்பட்டவன். (பாரதம் கர்ணபர்வம்).

அம்சுமாலி

ஒரு சூரியன். இவனுக்கு ஆறு முகம், பன்னிரண்டு கைகள், சிவப்பு வர்ணம், இரண்டு கைகளில் இரண்டு கமலங்கள், தோமரம், வாள், பட்டயம், கேடயம், பாசம், அங்குசம், சத்தி, வேதாளம், அப்யம், வரதம் இவற்றை வல இடக்கரஙகளில் கொண்டிருப்பன்.

அம்பட்டன்

வைசியப்பெண் பிராமணனைக் கூடிப் பிறந்த குமரன். பிராமணன் சூத்திரப் பெண்ணைக்கூடியும், அரசன் வைசியப்பெண்ணைக் கூடியும் பிறந்தவன் என்பர். இவனுக்குப் பரிகாரி யெனவும் பெயர். இவன் தொழில் கிராமத்தில் தலைசிறைத்தலும் வைத்யம் செய்தலுமாம்; பெண்கள் மருத்துவத் தொழில் செய்வர். இவ்வகுப்பினர் ஜகந்நாதத்தில் பெருமாளுக்கு நிவேதனம், பூஜை முதலிய செய்கிறார்கள். சேலம் ஜில்லாவில் கொங்குவேளாளர் கல்யாணத்தில் இவர்கள் கல்யாணப் பெண்ணுக்கு மங்கலநாண் தரிக்கின்றனர் என்பர். இவர்கள் எல்லாச் சுபாசுபகாரியங்களுக்கு உதவியானவர்கள். (தர்ஸடன்)

அம்பரன்

திதிபுத்திரனாகிய அசுரன்.

அம்பர்

1. சோணாட்டிலுள்ள ஓர் ஊர். 2. தஞ்சாவூர்க் கல்வெட்டுகளில் கூறப்பட்டிருக்கிற சிவஸ்தலம். 3. திவாகர மியற்றுவித்த ஒரு சிற்றரசன். 4. ஓர் மரப்பிசின். இது அஸ்ஸாம், சீனா, ஜபான், இந்தியாவில் தக்கன், திருவாங்கூர் முதலிய இடங்களில் அகப்படும் மருந்துச் சரக்கு.

அம்பர்கீழானருவதிதை

கலலாடரால் பாடப்பெற்ற வள்ளல், திவாகரரால் திவாகரத்துள் புகழப்பட்டவன். இவனுக்குஅருவந்தையெனவும் பெயர். (புற~நா.)

அம்பர்மாகாளம்

அம்பன், அம்பாசுரன் எனும் அசுரர் இருவர்களைக் காளி கொலைசெய்த, பாவம் நீங்கப் பூசித்த சிவஸ்தலம். (வீரசிங்காதனபுராணம்).

அம்பர்ஷன்

1. (சூ) நபாகன புத்திரன். இவன், விஷ்ணுவை எண்ணித் தவம்புரிய விஷ்ணு இந்திரனுருக்கொண்டு எதிர்வர அரசன் உம்மை நினைந்து தவம்புரியவில்லை உமது பதஞ்செல்க என, விஷ்ணுமூர்த்தி தம்முருக்காட்ட மகிழ்ந்து பலவரம் பெற்றவன். இவன் பெண் ஸ்ரீமதி. இவன் அரண்மனையில் ஸ்ரீசைலமுனிவனை விஷ்ணு அபகரித்தனர். இவன், இந்திரனுடன் ஒரு ஆசனத்திருந்தவன். இவன் சேநாபதி, சுவேதன். பருவதன், நாரதன் இவ்விருவரும்’ ஸ்ரீமதியை விரும்பி, இவனிடஞ் சென்று விஷ்ணுமாயை யாலவளை இழந்து கோபத்தால் அந்த சாரத்தையேவ அதை விஷ்ணு கொடுத்த சக்கிரத்தாற் காத்துக் கொண்டவன். இவன் ஒருகாலத்தில் யாகப்பசுவை இழந்ததனால் அப்பசுவிற்குப் பதில் நரப்பசுகொள்ள எண்ணி இருசிகன் குமரனாகிய சுநச்சேபனை விலைகொடுத்து வாங்கிச் செல்லுகையில் சுநச்சேபன் விச்வாமித்திரரிடம் நடந்ததுகற, விச்வாமித்திரர் அவனுக்கு மிருத்யுஞ் ஜய மந்திரம் உபதேசித்து அனுப்பினர். சுநச்சேபன் யாகத்தில் மந்திரத்தைச் செபிக்கத் தேவர் அரசனைக்கண்டு நாங்கள் அவிபெற்றோமெனக் கூறி இப்புதல்வனைக் காத்தனர். இவன் ஏகாதசிவிரதம் அனுஷ்டித்து முடிவில் அறுபது கோதானஞ்செய்து துவாதசியில் பாரணை செய்ய இருக்கையில் துருவாசர் அதிதியாகவந்து அன்னம் வேண்ட அரசன் களிப்புற்று வருகவென்றனன், முனிவர், காளிந்தி நதிசென்று தீர்த்தமாடுகையில் அரசன் துவாதசி கடத்தலை எண்ணிப் பயந்தவனாகிச் சலடானஞ் செய்தனன். தம் கருமம்முடித்துத் திரும்பிய முனிவர், அரசன் செய்கையறிந்து கோபித்துத்தம்மைஅவமதித்துச் சலபானஞ்செய்த அரசனைக் கொல்ல எண்ணித் தமது சடையிலொன்றைக் கோபத்துடன் பூமியிலெறிய அதினின்றும் ஒரு பூதமுண்டாகி அரசனை எதிர்க்க அரசன் அதை விஷ்ணுசக்கிரத்தாற் கொன்றனன். பிறகு சக்கிரம் முனிவரைத் துரத்த முனிவர், திரிமூர்த்திகளிடஞ் சென்றும் விடாமைகண்டு அரசனை அடைக்கலம் புகுந்து வேண்ட அரசன் சக்கிரத்தை வேண்டிக் கொல்லாது காத்தனன். முனிவர் பயநீங்கி அரசனைஆசீர்வதித்தனர். இவன் குமரர் விரூபன், கேதுமான். இவனது சரித்திரத்தைப் பருவதனைக் காண்க. (பாகவதம்). 2. இக்ஷ்வாகு வம்சத்து மாந்தாதாவின் குமரன். இவன் குமரன் யவனாச்வன். 3. ஓர் அரசன். இவன் குமரன், சிந்துத்வீபன்.

அம்பலக்காரர்

மறவர் கள்ளர்களில் தலைவர். இவர்கள் தெலுங்குநாட்டு முத்திரியரை யொத்தவர்கள். இவர்களுக்கு விதவாவிவாகம் உரித்து. இவர்களுக்குச் சேர்வைக்காரர் எனவும், மாளவராயர், முதாரசர், வன்னியர், எனவும் பட்டமுண்டு. இவர்கள் கண்ணப்பர் சந்ததியென்பர். ஒவ்வொரு அம்பலக்காரனுக்கும் ஒரு வேலைக்காரன் உண்டு, அவன் குடிப்பிள்ளை. (தர்ஸ்டன்).

அம்பலவாசிகள்

இவர்கள் மலபார் நாட்டில் கோயில் வேலை செய்பவர்கள். இவர்களில் புதுவரல், சாக்கியர், நம்பியாசான், பிடாரன், பிசிரோதி, வாரியன், நம்பி, தெய்யம்பாடி, புஷ்பகன், பூப்பள்ளி, அடிகள், நம்பிடி, பிளப்பள்ளி, நாட்டுப்பட்டம், தையாத்துணி, குருக்கள், எனப் பலவகுப்புண்டு. இவர்களிற் சிலர் கோவில்வேலை செய்யாமலும் இருக்கின்றனர். (தர்ஸ்டன்).

அம்பலவாணசிகவிராயர்

1. சதுரகிரி அறப்பளீசுரரை முன்னிட்டு அறப்பளீசுரசதகமெனும் நீதிநூல் பாடிய கவி. அருணாசலக்கவிராயர் குமரர். 2. இவர் மருதூரிலிருந்த கவிவல்லவர். ஆதித்தபுரிபுராணம் பாடியவர்.

அம்பலவாணதேசிகர்

பண்டாரசாத்திரத்தில் பதினொன்றாகிய அதிசயமாலை, உயதேசவெண்பா, உபாயநிட்டை வெண்பா, உயிரட்டவணை, சன்மார்க்க சித்தியார், சித்தாந்தசிகாமணி, சித்தாந்த பஃறோடை, சிவாச்சிரமத்தெளிவு, தசகாரியம், நமச்சி வாயமாலை, நிட்டைவிளக்கம் இயற்றியவர்.

அம்பலவாணபண்டிதர்

இவர் யாழ்ப்பாணத்து வித்வான்களில் ஒருவர். தமிழ்வல்லவர். இவர் கோப்பாய் அருளம்பல முதலியாருக்கு மைந்தர். சேனாதிராய முதலியாருக்கு மாணவகர். வேளாளர். சைவ சமயத்தவர். காலம் இற்றைக்கு (37) வருடங்களுக்கு முன் என்பர். இவர் நூல்கள் ஒன்றுஞ் செய்திலர்.

அம்பஷ்டதேசம்

உசீநரன் குமரன் நிருமித்ததேசம்.

அம்பா

1. காசியரசன் குமரி. 2. ஒரு சத்தி.

அம்பாலிகை

அம்பிகையைக் காண்க.

அம்பிகா

ஒரு மாயாதேவி.

அம்பிகாபதி

கம்பநாடர் குமரர். இவர் கம்பர் அருளிய இராமாயணத்திற்குச் “சம்பநாடன்னுமைசெவி” எனும் சிறப்புப்பாயிரங் கூறினர் என்பர். இவர் ஒரு நாள், நிலவில் அரசன் அரண்மனை வழியாகச் செல்லுகையில் உப்பரிகையீதிருந்த அரசன் புத்திரியைக்கண்டு ”பூவரச நிழலிலே புதுநிலாத்தனில்”எனுஞ் செய்யுளைப்பாட அரசகன்னிகை அரசனிடங் கூற அரசன் அம்பிகாபதியை அழைத்துக்கேட்க அம்பிகாபதி அரசனுக்கு அக்கவியை மாற்றிப்பாடித் தப்பினர். பின்பு அரசகுமரி, இவரது கவிவன்மையையும் வனப்பையுங்கண்டு மயல்பூண்டு வாயில்களால் வருவித்துக் களவிற்புணர்ந்து வருவதை மந்திரியறிந்து அரசனுக்குக் குறிப்பித்தனன். அரசன், புலவர்க்கு விருந்திட்டுக் களவுகாண எண்ணிப் பலபுலவர்களை வருவித்துத் தன் குமரியைப் பரிமாறச்செய்ய அம்பிகாபதி, அரசகுமரி அடிவருந்தி வருவதைச் சகியாதவராகி “இட்டடிநோவ எடுத்தடிகொப்புளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய” எனும் இரண்டடிகளைக் கூறியதை அருகிருந்த தந்தையாராகிய கம்பநாடர் கேட்டு மோசம் வந்ததென்று. மற்ற இரண்டடிகள் முடியுமுன் “கொட்டிக், கிழங்கோ கிழங்கென்று கூறுவாணாவில், வழங்கோதை வையம்பெறும்” என்று முடித்தனர். இதைக்கேட்ட அரசன் முதலியோர் சந்தேகித்து வினவியதற்குக் கம்பர் சரஸ்வதி தெருவில் கிழங்குவிற்றுச் சென்றனன் அகனைக்கேட்ட அம்பிகாபதி கூறினான் எனப் பிரத்தியக்ஷத்திற் காட்டி ஐயம் நீக்கினர். பின்பு அரசன் மந்திரிசொல்லால் அம்பிகாபதிக்குச் சந்தனம்பூசி இராஜகுமரியிடம் முத்துச்சுன்னம் பெற்றுவர ஏவ அவ்வகை சென்று அரசகுமரியால் தழுவப்பெற்றுச் சின்னங்களுடன் வந்ததைக் குறிப்பாலுணர்ந்து நீர், பேரின்பம்பட (100) செய்யுட்களைப் பாடின் என் குமரியை உமக்குத்தருவன் அன்றேல் கொலைபுரிவன் என, உடன்பட்டு (99) செய்யுட்கள் பாடிமுடித்து ஒரு செய்யுள் பாடத்தொடங்குகையில் அரசிளங்குமரி இதைக்கேட்டிருந்து விநாயகர் வணக்கமுட்பட (100) செய்யுட்கள் முடிந்தனவெனக் களித்துப் புலவரையெட்டிப் பார்க்கப் புலவர் அவளைப் பார்த்து சற்றேபருத்த தனமேகுலுங்கத் தரளவடந், துற்றேயசையக் குழையூசலாடத் துவர்கொள் செவ்வாய், நற்றேனொழுக நடனசிங்கார நடையழகின், பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே” எனும் செய்யுளைப் பாடி அரசனால் கொலையுண்டனர் என்ப. இராஜகுமரியும் துக்கமேலீட்டால் இறந்தனள் என்பர். இவர், தம் பெயராற் செய்த கோவை அம்பிகாபதிக்கோவை யெனப்படும். இவர் குமரர் தண்டியென்பர் ” அருளம்பிகாபதி பொன்னடித்தாமரை சூட்டியகப், பொருளம்பிகாபதிகம் புனைந்தேனிப் புனைந்த செஞ்சொல், தெருளம் புலவர் முன் செப்பியபோதுள தப்புரையார், மருளுங்குழவி மழலைக்கென்னோ பொருண்மற்றிங்கன்றே”இது, இவர்தம் கோவையினவையடக்கம் (அம்பிகாபதிக்கோவை). இப்பெயர் கொண்ட மற்றொருவர் ஒட்டக்கூத்தர்க்கு மாணாக்கராக இருந்திருக்கலாமென்பது ‘ஏகாவடம்’ என்ற செய்யுளால் தெரிகிறது.

அம்பிகை

1. பரமேச்வரி. 2. காசியரசன் பெண். இவள் அம்பாலிகையின் உடன் பிறந்தவள், இவ்விருவரையும் பீஷ்மாசாரியர் காசியரசனிடம் பெற்றுக்கொண்டு விசித்திரவீர்யனுக்கு மணஞ்செய்வித்தனர். இவ்விருவரும் விசித்ரவீர்யனுக்குப் பிறகு சத்தியவதியின் கட்டளையால் வியாசரைக்கூடித் திருதராட்டிர பாண்டுக்களைப் பெற்றவர்கள். (பாரதம்) 3. பவன் எனும் ஏகாதசருத்ரன் தேவி.

அம்பிகைபாகர்

இவர் யாழ்ப்பாணத்து இணுவில் பிறந்த சைவவேளாளர், தமிழ் வல்லவர். இணுவையந்தாதி இயற்றியவர்.

அம்புசமுனி

குலால குரு, தேவி உதபதி. இவர் சுவாயம்பு மனுவென்பர் குலாலர். (குலாலபுராணம்).

அம்புதாரை

ஆயுஷ்மனுவின் தேவி.

அம்பை

1. ஒரு நதி. உயிர்கள் மழையிலாது வருந்தியகாலத்தில் பார்வதிபிராட்டி நதியுருக்கொண்டு வந்தனள் என்பர். இருடிகள் மாமரவுருக்கொண்டு இதன்கரையில் தவஞ்செய்ததால் இதற்கு ஆம்பிரா நதியெனவும் பெயர். 2. பார்வதி 3. காசியரசன் பெண். இவள் சகோதரிகள் அம்பிகை, அம்பாலிகை, இவர்களின் பருவகாலத்தில் இவர்களின் தந்தை சுயம்வரம் நாட்ட பீஷ்மர், சாளுவன் முதலாயினாரைத் துரத்தி மூன்று கன்னியரையும் வலிவிற்கொண்டு தம் தம்பியாகிய விசித்ரவீர்யனுக்கு மணக்கப் போகையில் அறிவோர், முன்பே அம்பை அவள் தந்தையாற் சாளுவனுக்குக் கொடுக்கப்பட்டாளாகையால் அவள் ஒழிந்த இருவருமே மணக்கத்தக்கவர்கள் என்றனர், அதைக்கேட்ட வீஷ்மர், அவளைச் சாளுவனிடம் அனுப்பினர். சாளுவன், ஒருவன் வலிவிற்கொண்ட உன்னை நான் மணக்கேனென்று மறுத்தனன், என்னை இவ்வகை செய்த உன்னை உயிர்போக்குகிறேனென்று தவஞ்செய்து காளிவரத்தால் துருபத தேசாதிபதியாகிய இராஜசேநனிடம் சிகண்டியெனும் பெயருடன் பிறந்து பத்தாநாள் பாரதயுத்தத்தில் பீஷ்மரை மாய்த்தவள். (பாரதம்).

அம்பை, விருத்தை

இவ்விருவரும் சமற்காரன் என்னும் அரசன் குமரிகள். இவர்கள் மணப்பருவம் அடைந்து இரண்டரசர்களை மணந்தனர். அரசர் இருவரும் யவனதேசத்தாருடன் போரிட்டு மாண்டனர். அதனால் இவ்விருவரும் சத்தியை எண்ணித் தவம்புரிந்து அவள் பிரசன்னமாகப் பகைவரை வென்று சித்தி அடைந்தவர்கள். இரண்டு சத்திகள்.

அம்போதரங்க வொத்தாழிசைக்கலிப்பா

வண்ணக வொத்தாழிசைக்கலிப்பாவில் அராகம் ஒழிய வருவது.

அம்போதரங்கம்

இது, கலிப்பாவின் உறுப்புக்களில் ஒன்று. இது நாற்சீரடியாகிய ஈரடியாலிரண்டும், ஓரடியானான்கும், முச்சீரடியாலெட்டும், இருசீரடியால் பதினாறுமாக வருவது.

அம்போருதன்

விஸ்வாமித்திர புத்திரன்.

அம்மங்கிப்பெருமாள்

எழுபத்தினான்கு சிங்காசனாதிபதிகளில் ஒருவராகிய வைணவாசிரியர். (குருபரம்பரை).

அம்மங்கியம்மாள்

உடையவர் திருவடி சம்பந்தி.

அம்மங்கியாண்டான்

எழுபத்தினான்கு சிங்காசனாதிபதிகளில் ஒருவராகிய வைணவாசிரியர். உடையவர்க்குப் பாலமுது காய்ச்சும் கைங்கர்யம் மேற்கொண்டவர். (குருபரம்பரை).

அம்மணியாழ்வான்

பட்டர் திருவடிகளை ஆச்ரயித்தவர்.

அம்மள்ளனார்

மள்ளனார் எனப் பலபேர் உளராதலால் அவர்களினின்றும் வேறுபடுத்த இவர் அம்மளனாரெனப்பட்டார் போலும். இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். இவர் பாடலில் முருகவேளும், வள்ளியம்மையும் உவமிக்கப்பட்டுள்ளனர்; தலைமகன் தலைமகளை அழைத்தல் மிக்க இனிமையுடையது, இவர் பாடியது நற். (82) ஆம் செய்யுள்.

அம்மவ்வை

பெச்சமாதேவியைக் காண்க.

அம்முவனார்

மூவன் என்பது இவர் இயற்பெயர். அடைமொழிபுணர்த்தி அம்மூவநாரெனப்பட்டதென்று எண்ணலாம். ஆயினும் இவர் பாடலில் மேலைக்கடற்கரையின் கணுள்ள தொண்டி, மாந்தை முதலாய சேரநாட்டு ஊர்கள் சிறப்பித்துப் பாடியிருப்பது பற்றி இவர் சேரநாட்டு மேலைக்கடற் கரையிலிருந்தவரென்று கருதற் கிடமிருத்தலாலும், இக்காலத்தும் அந்நாட்டில்அம்மு, திம்மு, திப்பு என்னும் பெயர்கள் மக்களுக்கிடப்பட்டு வழங்கிவருதலாலும், இவரது இயற்பெயர் அம்மூ வென்றுமிருக்கலாம். இவர் பாடியவற்றுள் அகம் (35) ஆஞ் செய்யுளொன்றுமே பாலைத்திணையாகவும், ஏனையவெல்லாம் நெய்தற்றிணையாகவும் காணக்கிடத்தலின் இவர் நெய்தனிலவளத்தைச் சிறப்பித்துப் பாடுதலில் வல்லவராவர். நற்றிணையில் (79) ஆஞ் செய்யுளைப் பாலைத்திணையிற் பாடத்தொடங்கியவர், கிளவித்தலைவியை நெய்தனிலத்தினளாக வமைத்ததனால் இவரது ஆற்றல் பெரிதும் விளங்கும். நற்றிணையில் இவர் கூறிய உள்ளுறைகள் படிப்போர் மனத்தைக் கவாந்துகொள்ளுந் தன்மையவாயுள. தமிழ் நாட்டரசர்களுள் சேரன், பாண்டியன், என்னும் முடியுடைவேந்தர் இருவராலும், திருக்கோவலூரை யாண்ட காரியென்னும் வள்ளலாலும் ஆதரிக்கப் பெற்றவர். பாண்டிநாட்டுக் கொற்கை நகரும், நடுநாட்டின் கண்ணதாகிய திருக்கோவலூரும், பெண்ணையாறும், சோழநாட்டுக் கோயில் வெண்ணியும், இவராற்பாடப் பெற்றுள்ளன. தலைமகன் காமவேட்கையால் உப்பு விற்பாளைத் தடுத்துக் கூறல் வியக்கத்தக்கது; அகம் (390). தலைமகளைப் பெறவேண்டிய தலைமகன் ஆங்கு அடிமைத்தொழில் செய்தேனும் பெறுவேமோ வென்பதும் அத்தன்மையதாகும். அகம் (280) கீழைக்கடற்கரையைச் சிறப்பித்துப்பாடும் உலோச்சனாரும், மேலைக் கடற்கரையைச் சிறப்பித்கதுப்பாடும் இவருமாகிய இவ்விருவரும் தமிழ்நாட்டிற்கு இருபாலும் விளங்கும் இரண்டு வளரிளஞாயிறெனவும், இரண்டு கண்களெனவும், இரண்டு இரத்தினங்களெனவும் கூறத்தக்கவராவார். இவரியற்றியனவாக நற்றிணையில் பத்துப் பாடல்களும், குறுந்தொகையில் பதினொன்றும், ஐங்குறுநூற்றுல் நெய்தற்பாட்டு நூறும், அகநானூற்றில் ஆறுமாக (127) பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றிணை)

அம்மெய்ய னாகனார்

நாகன் என்பது இவர் இயற்பெயர்; நாகன் என்னும் பெயருடையார் பலராதலால் அவரின் இவர்வேறு என்பது தெரிய இவர் இயற்பெயருக்கு முதலில் “அம்மெய்யன்” என்னும் பெயர் புணர்த்தப்பட்டது. அம்மெய்யனென்பது தந்தையின் பெயர் போலும். இவர் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் காதலியை வருணித்திருப்பது வியக்கத்தக்கது. இவர் பாடியதுநற், (252)ம் செய்யுள். (நற்றிணை).

அம்மை

வனப்புகள் (10) இல், ஒன்று, சிலவாய மெல்லியவாய சொற்களால் தெள்ளிய பொருண்மேல் சிலவடிகளால் சொல்லப்படுவது. (யாப்பு~வி)

அம்மைச்சி

இவள் காஞ்சிபுரத்திவிருந்த ஒருதாசி, கவி வல்லவள். இவள் வீடு வரதராஜர் தேரோடும் வீதியிலிருந்ததென்றும் இவளிடம் பொறாமைகொண்ட வேதியர் இவளிருந்தவீட்டை இடிக்கவேண்டி ரதத்தை வீட்டின் மீது விட்டனரென்றும் கூறுவர். இவள், வீடிடிந்தபோது பாடியது. “பெருமாள் திருநாளைப் பேயாக்கவென்றே, வருமாண்டு தோறுமிந்த மாண்பர் ஒருநாளும், மாக்குதிரை யேறறியா மாசனங்களா மணக்கஞ், சாய்க்குதிரை யேறினார் தாம்”எனக்கூறினள். அக்காலத்தவ்விடமிருந்த அந்தகக் கவிவீரராகவ முதலியார் இவர்களது பொறாமைகண்டு ”பாப்புக் குரங்கைப் படையாகக் கூட்டி வந்தீர், தேப்பெருமாளே கச்சிச்செல்வரே, கோப்பமைந்த, கொம்மைச் சிகரலங்கைக் கோட்டையென்று கொண்டீரோ, அம்மைச்சி வாழ்வாளகம்,” என்றனர். (தமிழ் நாவலர் சரிதை).

அயகீரீவன்

1. விஷ்ணுவின் அவதாரம் மதுகைடபரைக் கொல்ல வெழுந்த அவசரம். இவர் சந்திரகாந்தியுடைய தேகம் உடையராய்த் தேவர்களெல்லாரும் தம் முருவிலமைத்து அயக்ரீவ உருவமாய்ப் பாதாளஞ் சென்று வேதசிஷையிலுண்டான உத்கீதஸ்வரத்தை உண்டு பண்ணினார். இந்தச் சுவரம் வந்தவழி அசுரர்வந்து திருமாலிடம் போரிடத் திருமால் அசுரரைக் கொன்றனர். (பாரதம்~சாந்தி) 2. இவன் ஓர் அரசன், இவன் தன் இராஜ்யத்தை அரசுசெய்து சுவர்க்கமடைந்தவன். இவனது சரிதம் வியாசரால் தருமருக்குச் சொல்லப்பட்டது. (பார~சாந்).

அயக்கண்டன்

அயக்கிரீவனுக்கு ஒரு பெயர். இவனுக்கு அச்வகண்டன் எனவம் பெயர்.

அயக்கிரீவன்

மதுகைடவர் வேதங்களைத் திருடிச்சென்ற காலத்துக் குதிரையின் கழுத்துள்ள திவ்யவுருக்கொண்டு சென்று அவர்களைக் கொலைபுரிந்து அவற்றைக் கொண்டுவந்து உதவிய விஷ்ணுவின் திருவுரு. 2. சண்முகசேனர வீரன். 3. நரகாசூரனுக்கு மந்திரி. நரகாசூரவதையில் கண்ணனால் கொலைசெய்யப்பட்டவன். (பாகவதம்). 4. பிரமன் சத்திரயாகத்துதித்த விஷ்ணுவினம்சம். (பாகவதம்). 5. திதிபுத்திரனாகிய அசுரன், விஷ்ணுமூர்த்தியாற் கொல்லப்பட்டவன். 6. பிரமன் உறங்குகையில் வேதங்களைத் திருடிச்சென்று விஷ்ணுவால் கொல்லப்பட்ட அசுரன். 7. நக்கீரரைப் புசிக்க எடுத்துச் சென்ற பூதம்.

அயக்ரீவர்

ஒருகாலத்தில் விஷ்ணு அசுசரோடு பதினாயிரம் வருடம் யுத்தஞ்செய்து சோர்வு அடைந்தவராகி ஒரிடத்திற் சென்று நாணினை முகவாய்க்கட்டையில் ஊன்றிக்கொண்டு நித்திரை செய்யத் தொடங்கினர். அந்தக்காலத்து இந்திரன் முதலானோர் ஓர் யாகத்தைச் செய்யவிரும்பி வைகுண்டத்தில் விஷ்ணுவைக் காணாமல் ஞானதிருஷ்டியால் இருக்குமிடம் உணர்ந்து அவ்விடம் பலநாள் காத்திருந்தும் விஷ்ணுவிற்கு உறக்கந்தெளியாத்தனால் விசனம் அடைந்து இந்திரன் தன்பரிவாரங்களை நோக்கி இவரது நித்திரை தெளியும் விதம் ஆலோசிக்க என அவர்களுள் உருத்திரர், செல்உருக்கொண்டு நாணினைப் போக்கின் விஷ்ணுவிற்கு நித்திரை தெளியும் என, பிரமன் இந்திரனைநோக்கி நீ செல்லுருக்கொண்டு அவ்வாறு செய்யின் யஞ்ஞத்தில் பக்கமாக எதுவிழுகிறதோ அதுஉன்னுடைய பாகமாக அறிதி எனக்கூற, இந்திரன் செல்லுருக்கொண்டு நாணினை அறுத்தான். அறுந்த அந்தச் சத்தத்தால் திசைகள் எல்லாம் நடுங்கின. உடனே விஷ்ணுவின் சிரம் அறுந்து விழுந்த இடம் தெரியாமற்போயிற்று. இதனால் இந்திரன் முதலானோர் துக்கிக்க அவர்களைப் பிரகஸ்பதி தேற்றத்தேறினர். பின் பிரமதேவர் தேவர்களை நோக்கித் தேவியைத் துதிக்கக்கூறத் தேவி அசரீரியாய்க் கூறுவாள், ஒருகாலத்தில் விஷ்ணு மிக்க சுந்தரமுள்ள திருமகளின் முகத்தைப்பார்த்து இகம்ந்து கூறினார். அதனால் கவலையுற்ற திருமகள் இது நம்மிற் பொறாமைகொண்ட ஒருத்தி செய்த கலகத்தால் விளைந்தது என எண்ணி, விஷ்ணுவின் தலை அற்று விழக்கடவது என்று சபித்தனள். ஆதலால் இப்போது விஷ்ணுவின் தலை லவணசமுத்திரத்தில் ஆழ்ந்து போயிற்று, இதன்காரணம் முன்னொருகாலத்தில் அயக்கிரீவன் என்னும் அசுரன், ஆயிரம் வருஷம் என்னை நோக்கித்தவஞ் செய்தனன். அவனுக்கு எதிரில் நான் பிரத்தியக்ஷமாகி உனக்கு என்னவரம் வேண்டும் என அவன் எவ்விதத்திலும் எனக்கு மரணம் நேரிடாதவிதம் அருளுகஎன, அவ்வாறே நான், உன்னை எவருங் கொல்லார். உன் வேண்டுகோளின்படி உன்னை ஒப்பவனால் உனக்கு முடிவு நேர்க என்று வரந்தந்தேன். அவ்வரம் பெற்ற அசுரன் தேவர் முனிவர்களைத் துன்பஞ்செய்துகொண்டிருந்தனன். அவனைக் கொல்லவேண்டி இது நேர்ந்தது. ஆதலால் அஞ்சற்க எனத் தேவர்களை நோக்கிப் பிரமன் ஒரு குதிரையின் சிரத்தை விஷ்ணுவின் தேகத்தில் பொருத்துவன். விஷ்ணு எழுந்து உங்கள் காரியத்தை முடிப்பர் எனக்கூறக் கேட்ட தேவர்கள் பிரமனை வேண்டப் பிரமன் ஒரு குதிரையின் தலையை அறுத்து விஷ்ணுவின் தலையிற் பொருத்த விஷ்ணுமூர்த்தி எழுந்தனர். அன்று முதல் அயக்கிரீவநாமம் விஷ்ணுவிற்கு உண்டாயிற்று. பின் அயக்கிரீவராகிய விஷ்ணுவால் அவ்வசுரன் கொலைசெய்யப்பட்டனன். (தேவிபாகவதம்).

அயசீரை

1. வைச்வாநரன் பெண் 2. சூரியனுடைய ரூபவிசேடம்.

அயதி

நகுஷபுத்திரன். யயாதியின் உடன் பிறந்தான்.

அயத்ரிமுனிவர்

துரியோதனனுக்கு நீதி கூறிப்பாகந்தரச்சொல்ல, மறுத்த துரியோதனனை, வீமனால் தொடைமுரியச் சபித்தவர்.

அயனம்

இது சூரிய கதியைத் தெரிவிப்பது, 1. உத்தராயனம், தக்ஷணாயனம், பூரணாயனம் எனப்படும். 2. சூரியன் ருதுதிரயத்தில் சரிக்கும் காலம். இது, தைம் முதல் ஆறு மாதம் உத்தராயனம். ஆடி முதல் ஆறு மாதம் தக்ஷிணாயனம். மேஷவீதி உத்தராயனம் ருஷபவீதி பூரணாயனம். மிதுனவீதி தக்ஷிணாயனம். உத்தராயணம் சூரியன் தென்கிழக்குத் திசையிலிருந்து வடகிழக்கிற்குச் செல்லல் தேவர்க்குரியது. தக்ஷி ணாயணம் சூரியன் வடகிழக்குத் திசையிலிருந்து தென்கிழக்குத் திசைக்குச் செல்லுங்காலம். அசுராதியர்க் குரிய காலம் இக்கதியால் ருதுக்கள் உண்டாம்.

அயனாதிசங்கிரமம்

இரண்டயனங்களுக்கு முன் (9) நாளும், பின் (2) நாளுங் கழிக்கப்படுவது. (2) விஷூவங்களுக்கு முன் ஒன்றரை நாளும், பின் ஒன்றரை நாளும் கழிக்கப்படுவது. அல்லாத மாசசங்கிரமங்களுக்கு முன் (30) நாழிகையும் கழிக்கப்படுவது. நாட்களுக் காதியந்தகளில் இவ் விரண்டு நாழிகைகள் கழிக்கப்படும், திதிகளுக்கு ஆதியந்தங்களின் மும்மூன்று நாழிகைகள் கழிக்கப்படும். சாவண வாண்டுக்கு (1) நாள் தவிரப்படும். நக்ஷத்திர வாண்டுக்கு (3) நாட்கள் தவிரப்படும். சௌர வாண்டுக்கு (4) நாட்கள் தவிரப்படும். குரு வாண்டுக்கு (4) நாட்கள் தவிரப்படும். சந்திர வாண்டுக்கு (4) நாட்கள் தவிரப்படும். (விதானமாலை).

அயன்

1. பிரமனுக்கு ஒரு பெயர். 2. துந்து என்பவனுக்குப் பிதா. சூரிய வம்சத்து அரசன்.

அயா

அநேக யாகங்கள் செய்த அரசன்.

அயாசித்தீக்ஷதர்

சங்கராசாரியருக்கு நெல்லிக்கனிதந்த அம்மணியின் வீட்டுக்காரர்.

அயிந்தவர்

இவர் காசிபர் குலத்துதித்த சிந்து என்போனது மறுபிறவியாய்ப் பிரமபட்டமடைந்து பிரமனுக்குப் பதில் உலக சிருட்டி செய்தவர்.

அயின்பினி

(சூ) தசரதன் குமரன்.

அயிரவேகம்

ஓர் தீர்த்தம்.

அயிராமகாதேவி

சாந்தி தீர்த்தங்கரருக்குத் தாய். சைநமதம். (மா புராணம்).

அயிரூர், புகழியூர்

நெடுஞ்செழியன், அதியனுடன் போரிட்டு வென்ற இடம், காவிரி வடகரையிலுள்ளது.

அயிரை

ஓர் நதி. (சிலப்பதிகாரம்).

அயிர்

இது ஒரு மணப்பொருள். இது குடகுதிசையினின்றும் கீழ்த்திசையினின்றும் இறக்குவது. அவற்றுட் குடதிசை அயிர்யவன தேசத்தது, குணதிசை அயிர்காரகில் இதினுறுப்பு கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, ஆரம், அகில் என ஐந்தாம்.

அயிலன்

புரூரவனுக்கு ஒரு பெயர்.

அயுகன்

(சந்) வசுவிற்குப் புத்திரகாமேஷ்டி யாகத்தில் பிறந்தவன்.

அயுதசித்

(சந்.) பஜமானன் குமரன். சகத்திரசித்துடன் பிறந்தவன்.

அயுதாயு

(சூ) சிந்துத்தீபன் குமரன். இவன் குமரன் இருதுபர்ணன். இவனுக்கு அயுதாயுசு எனவும் பெயர்.

அயுத்தன்

சண்முகசேநாவீரன்.

அயை

கோசலநாட்டரசன் பெண், மகேந்திரன் தேவி.

அயோகவன்

சூத்திரனுக்கு வைசியஸ்திரீ, கூத்திரியஸ்திரீ, பிராமணஸ்திரீ இவர்களிடத்தில் பிறந்தவன். இவனுக்கு க்ஷத்தா என்றும் பெயர். இவனை மனிதருக்குள் தாழ்ந்த சண்டாளன் என்பர். இவனுக்குத் தச்சுவேவை என்பர். (மநு)

அயோத்தி

இது, எழு முத்தித்தலங்களுள் ஒன்று, இது, பகைவரால் யுத்தத்தில் ஜெயிக்கப்படாதது. இது பூர்வம், பரமபதத்தில் இருந்து சுவாயம்பு மநுவால் பெறப்பட்டுப் பூமியில் கொண்டுவரப்பட் டது. இப்பட்டணம், பெண்ணுருக்கொண்டு குசலவதியை ஆண்ட குசனிடத்திற் சென்று தன்னையாளும்படி வேண்டிற்று, இது சூர்யவம்சத்து அரசர்களுக்கு இராஜதானி. இதில் சகஸ்திரதாரை, சுவர்கத்து வாரம், இராமதந்ததாவனகுண்டம், அனுமகுண்டம், கஜேந்திரகுண்டம், சீதாகூபம், ஞானகூபம், சுக்ரீவகுண்டம், அக்னிகுண் டம், வசிட்டதிலோ தகிசங்கமம், கணேசதீர்த்தம், தசர தகுண்டம், கோசலைகுண்டம், சுமித்திராகுண்டம், யோகினிகுண் டம், ஊர்வசிகுண்டம், மகப்பிரம், தூர்ப்பரசரசு, பிரகஸ்பதி தீர்த்தம், ருக்மணி குண்டம், ஹீரோதகம், தனஷய தீர்த்தம், ரண விமோசன தீர்த்தம், பாபவிமோசன தீர்த்தம், வைதரணிகோஷராக்கம் எனும் சூர்ய குண்டம், சதிகுண்டம், காந்தருவகுண்டம், குசுமாயுதகுண்டம், மந்திரேசுரதீர்த்தம், இந்திரதீர்த்தம், துர்க்காகுண்டம், நாரா யணகுண்டம், வான்மீகதீர்த்தம், புண்ணிய அரிதீர்த்தம், கிருதாசி தீர்த்தம், சரயுகர்க்கரசங்கம், சம்பு தீர்த்தம், அகஸ்தியசரசு, ஸ்ரீகுண்டம், குடிலநதி கலக்கும் வரசிரோதசு தீர்த்தம், குப்ஜா தீர்த்தம், மகஸ் தானம், இராமரேகை முதலிய பல தீர்த்தங்களும், விக்னேச்வரப்பிரதிட்டை, நாகேச்வரப்பிரதிட்டை, துர்க்கேச்வரப் பிரதிட்டை, மந்திரேச்வரப்பிரதிட்டை, க்ஷரேசுவரப்பிரதிட்டை, பைரவப்பிரதிட்டை, சொப்பனேச்வரிபிரதிட்டை, சீதளாதேவி, வந்திதேவிகளின்பிரதிட்டை, சுடகிபிரதிட்டை, சந்திர அரி, தரும அரி, இராகவப்பிரதிட்டை, விஷ்ணு அரிப்பிரதிட்டை, சக்ர அரி, குபுத அரி, லக்ஷ்மி முதலிய பிரதிட்டைகளும் அயோத்தியாபீடம், இரத்தமண்டபம், கனகமண்டபம், ஜனன ஸ்தானம், கண்டகம் என்கிற யமஸ்தலம், பொக்கிஷசாலை, வேதிகை, சீதை உத்தி யானவனம், சித்தபீடம் முதலியவைகளும் இருக்கின்றன. இது சரயு நதிக்கண் (48) மைல் நீளமும் (12) மைல் அகலமும் கொண்ட தேசம். இதனைச் சாகேதமெனவுங் கூறுவர். சரயூ நதி தீரத்திலுள்ள கோசல தேத்து இராஜதானி. OUDH, THE BIRTH PLACE OF RAMA. 2. இக்குவாகு குலத்தரசர் நகரம் (சூளா).

அயோத்தியரசன்

தருசகனோடு போர் செய்தற்கு வந்து தோல்வியுற்றுச் சென்ற அரசர்களுள் ஒருவன். (பெருங்கதை.)

அயோமுகன்

திதிபுத்திரனாகிய அசுரன்.

அயோமுகி

தண்டகவனத்தில் இருந்த அரக்கி, இராம லக்குமணர் சீதையைப் பிரிந்து வனத்திலிருக்கையில் இராமமூர்த்திக்காகச் சலத்திற்கு வந்த இலக்குமணரைக் கண்டு மோகித்து அவரால் மூக்குங் காதும் அறுப்புண்டவள். (இராமாயணம்.)

அரக்கு

இது ஒருவகை மரத்தின் பிசின். இது, இந்தியா, இலங்கை முதலிய இடங்களில் உண்டாகிறது. இந்தப் பிசினைச் சலத்தில் ஊறப்போட்டால் இதில் ஊதாவர்ணமுள்ள பொருள் ஜலத்தில் கரையும். அதை வடிகட்டி இறுகச்செய்து சாயக்காரர் பட்டு முதலியவற்றிற்குச் சாயம் போடுகிறார்கள். ஜலத்தில் நிறம் கரைந்தபின் தங்கியது பிசின், இது தவிட்டி னிறங்கொண்டிருக்கும் இதுவே அரக்கு. இதில் கொம்பரக்கு, அவலரக்கு, செவ்வரக்கு முதலிய உண்டு.

அரங்கதாசன்

திருவேங்கடத்தில் புஷ்பகைங்கர்யஞ் செய்ததால் மறுஜென்மத்தில் தொண்டைமானாகப் பிறந்தவன். (திரு வேங்கடபுராணம்.)

அரங்கத்துவாரம்

ஓர் தீர்த்தம்.

அரங்கம்

திருவரங்கம் பெரியகோயில் எனும் காவிரி சூழ்ந்த தீவு. விஷ்ணுத்தலம். திருவரங்கம் காண்க. (சிலப்பதிகாரம்.)

அரசகேசரி

1. தனதத்தன் பெருமையுணர்ந்து சிவபூஜை கடைப்பிடித்து நாகையில் சிவாலயம் புதுக்கியவன். 2. இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர். இவர் பரராசகேசரி மகாராஜாவின் மருகர். பாண்டிநாட்டு ஆழ்வார் திருநகரியிலிருந்த அஷ்டாவதானி இராமாநுச கவிராயரிடம் கல்வி பயின்றவர். இவர் காலம் சற்றேறக் குறைய முந்நூறு வருடங்களுக்கு முன் என்பர். இவர் வடநூல் இரகு வம்சகா வியத்தைத் தமிழில் செய்யுட்களாக இயற்றியவர்.

அரசசேவையில் செய்யத்தகாதன

அரசர் வாயிலில் செல்லத் தடையுண்டானால் கோபித்தலும், அரசருடன் அதிக சொந்தம் பாராட்டுவதும், அரசர் தமக்கு வெகுமானம் சம்மானஞ் செய்யுமிடத்து அவை தமக்கு அமையாவென்று இகழ்தலும், அரசனுக்கு ஒப்பத்தம்மை அலங்கரித்துக் கொளலும், அரசவையை யூடறுத்துச் சென்று வேறொருவனைச் சேர்ந்திருப்பதும், தம்முறுதியையும், அரசனால் பிறர்க்கு உதவியாகிய கட்டுரைகளையும் அரசனிடங் கூறலும் ஆகாது (ஆசாரக்கோவை).

அரசச்சின்னம்

(21) முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடிமதிள், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம் முதலிய.

அரசன்

கிருஷ்ணமூர்த்திக்கு மித்திர விந்தையிடம் உதித்த குமரன் 2. பிரமன், இந்திரன், வாயு, இயமன், சூரியன், அக்னி, வருணன், சந்திரன், குபேரன், ஆகிய இவர்களுடைய கூறுகளாகப் பிரமனால் படைக்கப்பட்டான். இவனுக்கு எட்டுத்தொழில்கள், தீயரை ஒறுத்தல், ஈதல், காத்தல், வேட்டல், அறநெறி பிறழாது பொருளீட்டல், திறைகோடல், பகைவரைத் தொலைத்தல், மேன்மேல் நிலங்கொளல். (சுக்கிரநீதி.)

அரசபந்து

ஒரு அரசன், பூர்வ ஜன்மத்தில் பிரம்மசாரியாகிப் பிறகு புலையனாகிய ஒருவனால் வேதியர் பொருளின் தன்மை இவ்வகையெனத் தெரிந்து கொண்டவன்.

அரசப்பிரகிருதிகள்

(10) புரோகிதன், பிரதிநிதி, பிரதானன், சசிவன், மந்திரி, நீதியதிபன், பண்டிதன், சுமந்திரன், அமாத்தியன், தூதன், இவர்களுடைய இலக்கணங்களைத் தனித்தனி காண்க. (சுக்~நீ)

அரசமுல்லை

பொரும்பகையை வருத்தும் சிவந்த சோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரிய புவியைக்காக்கும் அரசன்றன்மையைச் சொல்லியது (பு. வெ)

அரசயானை இலக்கணம்

நான்கு காலும், துதிக்கையும், கோசமும், வாலும் ஆகிய ஏழு உறுப்பும் நிலத்திற் றோய்வதும், பாலையும் சங்கையும் ஒத்த வெண்ணிறம் வாய்ந்த கால்நகம் உடையதுமாய்க் காலினாலும், துதிக்கையினாலும், சரீரத்தாலும், வாலினாலும், கொம்பினாலும், கொல்லவல்ல தாய் எழுமுழம் உயர்ந்து ஒன்பது முழம் நீண்டு பதின்மூன்று முழம் சுற்றுடைத்தாய்ச் சிறிய கண்களையும் சிவந்த புள்ளிகளையும் உடைய தாய் முன்பு முற்கூறியவாறு உயர்ந்து பின்பு தாழ்ந்தது அரசயானை யென்று கூறுவர். பத்ரம், மந்திரம், மிருகம் இவை யானையின் ஜாதிவிசேஷம். (இராமாயணம்)

அரசரதுதொழில்

ஓதல், பொருதல், நாடு புரத்தல், ஈதல், வேட்டல், படைபயிறல் (பிங்கலம்)

அரசரேழுவகைநிலை

அறம், பொருள், இன்பம், இம்மை, மறுமை, புகழ், மதிப்பு. (பிங்கலம்.)

அரசரைப்பற்றிய வருவாய்வகை

சாமந்தன் குடிகளை வருத்தாமல் வருடத்தில் கருடமென்னும் அளவுள்ள பொன் வருவாய் பெற்றவன். கருடம் (90) மாட அளவினது மாடம், (10) குன்றி எடை, நிருபன் மேற்கறிய காசு மூன்றிலக்கமளவு வருஷத்தில் வருவாயுள்ளவன், மண்டலிகன் ஷை காசு பத்திலக்ஷம் வரையில் ஆண்டுதோறும் வருவாயுள்ளவன். கோடி முதல் பத்துக்கோடி வருவாயுள்ளான் சம் ராட் (10) கோடிமுதல் (50) கோடி வரை வருவரயுள்ளவன் விராட்டு (7) தீவுகளைத் தன்வசப்படுத்தி ஆள்வோன் சக்ரவர்த்தி சார்வபௌமன், அக்காசு (10) முதல் (20) வரை ஆண்டில் வருவாயுள்ளவன் அரசன் (20) முதல் (50) வரை ஆண்டு தோறும் வருவாயுள்ளான் போரசன் (5) கோடி வரை வருவாயுள்ளவன் சுபாட்டு. (சுக்கிரநீதி).

அரசர்

(3) சேரன், சோழன், பாண்டியன்.

அரசர்க்குக் குழு

மந்திரியர், புரோகிதர், சேனாபதியர், தூதர், சாரணர். (திவா).

அரசர்க்குத் துணைவர்

(8) மந்திரியர், கருமாதிகாரர், சுற்றம், கடைகாப்பாளர், நகரமாக்கள், படைத்தலைவர், இவுளிமறவர், யானைவீரர்.

அரசர்க்குறுதிச் சுற்றம்

(5) நட்பாளார், அந்தணாளர், மடைத் தொழிலாளர், மருத்துவக் கலைஞர், நிமித்திகப் புலவர். (பிங்கலம்).

அரசர்சூளாமணிச் சோழன்

சநநாத சோழனுக்குப் புத்ரன், இவன் திரிசிராமலை தரிசித்து நீங்குகையில் கோழி யொன்று இவன் சேனைகளின் மீதும் இவன் மீதும் குதித்துத் தடுத்தது. அரசன் இவ்விடம் ஏதோமகிமை இருக்கிறதென்று அறிந்து அவ்விடம் அப்பெயரால் ஒரு பட் டினங்கட்டினான். ஆதலால் அப்பட்டினத்திற்குக் கோழியென்று பெயர், அரசனுக்குக் கோழிவேந்தன் என்று பெயர். இந்தமரபில் சூர ஆதித்த சோழன் பிறந்தான். (செவ்வந்திபுராணம்).

அரசர்தானை

வேல், வாள், வில், தேர், பரி, யானை. (பிங்கலம்).

அரசர்மீளி

(சந்) நிகும்பன் குமரன்.

அரசவாகை

நுகத்திற் பகலாணிபோன்ற நடுநிலைச் சொல்லினை யுடைய மாறுபாட்டாற் சிறந்த மன்னனது தன்மையைச் சொல்லியது. (புறப்பொருள் வெண்பாமாலை).

அரசவுழிஞை

காவற்செய்தி மிக்கு நடக்கும் பூமி காவலன்றன் கீர்த்தியைச் சொல்லியது. (புறப்பொருள் வெண்பாமாலை).

அரசவையில் தவிர்வன

அரசனெதிரில் இராஜசபையில் மற்றொருவனுடன் இருந்து கொண்டு ஒரு காரியத்தை ஆராய்தலும், அரசனுக்கு அருகில் நிற்றலும், அரசன் வேறொருவனிடம் பேசுகையில் செவிகொடுத்துக் கேட்டலும் ஆகா. (ஆசாரக்கோவை).

அரசியல்

(9) படை, குடி, கூழ, அமைச்சு, நட்பு, அரண், (பின்னும்) அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம் என்பன. இவற்றில் அற நிலையறமாவது நான்கு வருணத்தவரும், தத்தம் வருணத்திற் பிறழாதுகாத்தல், மறநிலையறமாவது நிரைமீட்டலும், பகை வெல்லுதலுமாகிய செஞ்சோற்றுக்கடன் கழியாதாரைத் தண்டித்துக் குறைவுறச் செய்தல், அறநிலைப் பொருளியலாவது, நெறிவழிநின்று தத்தநிலையினால் முயன்று பெறுபொருளாம். மறநிலைப் பொருளிய லாவது, பகைஞர் பொருளும், திறைப் பொருளும், குற்றம் செய்தோரையொறுக்கும் பொருளும், சூதில் வெல்பொருளுமாம். அறநிலையின்பமாவது, குலமும் ஒழுக்கமும், குணமும், பருவமும், ஒத்த கன்னிகையை மணஞ்செய்து கொண்டு இல்லறத்தொழுகல், மறநிலை இன்பமாவது, ஏறு தழுவலும், வில்லாலிலக்க மெய்தலும், பொருள் கொடுத்துக் கோடலும், வலிந்து கோடலும் ஆகிய நெறியால் மணத் தலாம். (சுக்கிரநீதி.)

அரசு நம்பி

மணக்கால் நம்பியின் திருவடிகளை ஆச்ரயித்த ஆசாரியர். (குருபரம்பரை).

அரசு, ஒரு விருக்ஷம்

விஷ்ணுமூர்த்தியின் வலக்கண்ணில் உதித்தது. இதனை அவர் எல்லா விருக்ஷங்களுக்குத் தலைமையாம் அபிஷேகம் புரிந்து அரசு எனப் பெயரிட்டனர். இதனைப் புராணங்கள் கூறியபடி வாரந்தோறும் பூஜிப்போர் வேண்டுஞ் சித்திகளைப் பெறுவர். இது திரி மூர்த்தி ஸ்வரூபம். இதைத் தினந்தோறும் பிரதக்ஷணம் செய்பவன் மூவரையும் பிரதகணம் செய்தவனாகிறான். புண்யவுலகங்களை அடைந்தவனாகிறான். இவ்விருவுத்திற்கு ஒரு கெடுதியும் செய்யக்கூடாது, (திருமுட்டபுராணம்).

அரசை

சுக்கிரன்பெண் கண்டகனாற் கற்பழிக்கப்பெற்றுத் தந்தையால் நிருபிக்கப்பட்ட சோலையிலிருந்தவள்.

அரட்டன்

கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த துன்பத்தை மாடலன் சொல்லக் கேட்டு இறந்த மனைக்கிழத்தியும் கண்ணகியின் தாயும் தனக்குப் புத்திரியராக வந்து பிறக்கப்பெற்ற சேரநாட்டானாகிய ஒரு செட்டி. (சிலப்பதிகாரம்.)

அரணி

இருசிக சிங்கர்க்குத் தந்தை.

அரணை

ஒரு பிராணி இதன், முகம் சற்றுக் குறுகி உடல் நீண்டு கால்கள் குட்டையாகத் தடித்தவாலுடன் மினு மினுத்த உடல்பெற்றது. இது உருவத்தில் பெருத்த பல்லி போன்றது. இதன் நாக்குப் பிளவுபட், டிருக்கும். இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது. இதன் கடி கெடுதி செய்யும். அரணை கடித்தால் மரணம் என்ப.

அரண்

(4) மலை, காடு, மதில், கடல், 2. பகைவராற்றுன்பம் நேர்ந்தவிடத்து அது தனக்கும் அரசனுக்கும் காத்தலாகவுள்ளது. அந்த அரண் (9) வகைப்படும். (1) களர் நிலவரன் பிறர் உட்புக இயலாதவாறு பள்ளம், முள்கல் இவற்றால் அமைக்கப்படுவது. (2) அகழியரன் கோட்டையைச் சுற்றிலும் நான்கு புறத்திலும் மிக்க ஆழமாகத்தோண்டி நீர் நிறைத்திருப்பது. (3) மதிலரண் செங்கற்களாலும், மலைக்கற்களாலும் மண்ணாலும் எடுக்கப்பட்ட கனத்த சுவர்களால் சூழப்பட்டது (4) காட்டரண் பெரிய முள்மரக்கூட்டங்களைச் சூழ அமைத்திருப்பது. (5) நீலவரன் நீரும், நிழலுமின்றி நாற்புறத்துமுள்ள பெருவெளி. (6) நீரான் நாற்புறத்து மிக்க நீர்ப்பரப்பையுடையது (7) மலையரண் மனித சஞ்சாரமில்லாத இடத்தில் நல்ல நீரைப் பின்புறத்தில் கொண்டு மலை களால் சூழப்பட்டிருப்பது. (8) படையரண் தேர்ந்த போர்வீரரால் சூழப்பட்டுப் பகைவரால் வேறு படுக்கப்படாதது. (9) துணையரண் துணையாகிய சுற்றத்தவரால் காக்கப்படுவது, (சுக்கிரநீதி.)

அரதத்தாசாரிய சுவாமிகள்

இவர், சோழ நாட்டில் காவிரிக்கு வடகரைக்கண் உள்ள கஞ்சபுரத்திலுள்ள வைணவ அக்ராரத்தில் வாசுதேவாசாரியர் அல்லது மதுசூதனாசாரியர் என்பவருக்குப் புத்திரராகப் பிறந்து சுதர்சனாசாரியர் என நாமமிடப்பெற்று வளர்ந்து தந்தை வைணவராயிருக்கவும் தாம் சிவபக்தி மேலீட்டால் குழந்தைப் பருவத்திலேயே விபூதி, ருத்ராக்ஷ முதலிய சிவசின்னங்களில் அன்பு பூண்டிருந்தனர். இதைக்கண்ட தந்தை, தம் மதத்திற்கு மாறாக ஒழுகு தலை யெண்ணிக் குமரரை வெறுக்கத் தொடங்கிப் பிள்ளாய் நீ நீறிடு வோரின் ஒழுக்கமேற்கொண்டாய், நீ இனி நமக்குரிய திருமண் முதலிய சாத்தா தொழுகின் உனக்கு அன்னமிடோமெனச் சினந்தனர். அதனைச் செவிகொளாத குமரரைத் தந்தையார் பலவகை வளாரினாலடித்து உருக்கியுங், கேளாதது கண்டு, தாம், அவன் இல்லம்வரின் அவற்கு என் உத்தரம் இன்றி அன்னமளிக்காதையென மனைவிக்குக் கட்டளையிட்டனர். இதனையறிந்த சுவாமிகள், அவ்வூர்க்கண் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அக்நீசுரர் திருவாலயத்துச் சென்று சிவபிரானைப் பணிந்து முறையிடச் சிவபிரான் தரிசனந் தந்து சிவமந்திர முபதேசித்து அரதத்தாசாரியர் எனப்பெயருமிட்டு அஞ்சாதை யென அநுக்ரகித்து அனுப்பினர். பின் அரதத்தர், வீட்டிற்கு வந்து அன்னையைப் பசிக்கிறது அன்னமிடுக எனக்கேட்க, அவள் தந்தை கூறிய துரைத்தனள். இங்ஙன கெழுகையில் தந்தை வெளிவந்து நீ சிவால பஞ்செல்லாது விபூதிபூசாது ஒழிவையேல் அன்னமிடுவன் என்று சிவ தூஷணஞ் செய்தனர். கேட்ட அரதத்தர், சினந்து விஷ்ணு விற்கும் சிவத்திற்கு முள்ள தாரதம்மியங்களைப் பிரசங்கிப்பாராயினர். இவ்வகை வாதத்தின் கண் அவ்வூர்க்கண் உள்ள சைவ வைணவர் பலருங் கூடினர். வாதம் ஒருவாறும் முடிவுறாமை யறிந்தோர், இங்கனம் வாதித்தலிற் பயனில்லை. ஒருநாள் குறித்து அதனைப் பல நாடுகளிலும் அறிவித்துப் பலரும் வந்து கூடியபின் வாதத்தில் மத்தியஸ்தர்களை நியமித்து வாதஞ் செய்யின் நலமென்று, ஒருநாள் நிச்சயித்து அந்நாளில் அவர்கள் கேட்டுக்கொண்டபடி அவ்வூரின்கணுள்ள திருமால் ஆலயத்து மண்டபத்தில் பலருங்காணப் பழுக்கக் காய்ந்த இருப்புமுக்காலி மீதிருந்து வாதஞ் செய்யத் தொடங்கிச் சுருதிபுராணக் கருத்துக்களடங்கிய காயத்ரீ வல்லபத்வாத் என்பதாதியான, அதாவது “உயர் காயத்ரிக்குரிய பொருளாகலிற்” எனுங் கருத்துக்களடங்கிய சுலோகங்களைப் பிர சங்கித்தும், சதுர்வேத தாற்பர்ய சங்கிரத்தாலும் வாதிட்டும் வென்றனர். இதனால் வந்த வைஷ்ணவர்கள் பயந்து அடங்கிச் சைவராயினர். அன்று முதல் வாதிடத்தொடங்கிய தந்தையாரும் சைவராகிக் குமாரரிடம் பஞ்சாக்ஷர உபதேசம் பெற்றுச் சைவராயினர். பின்னர் ஆசாரிய சுவாமிகள் இல்லறத்திருக்கையில் தந்தையார் குமாரருக்கு மணஞ்செய்யவெண்ணி வாதூலகோத்திரத்தில் ஒரு மணமகளைப் பேசி மணமியற்றினர். இவரது அற்புதச் செயல்களைக் கேட்ட சிவலிங்கபூபதி எனும் அரசன் ஆசாரிய சுவாமிகளிடம் வந்து அடிமைப்பட்டுத் தொண்டு பூண்டு சுவாமிகளுக்கு வேண்டிய தந்து உபசரித்து வந்தனன். சுவாமிகள் நாடோறும் நித்ய கன்மாநுட்டானாதிகள் முடித்து அக்நீசுவரர், திருக்கோடிகா, திருவாலங்காடு, திருஆவடுதுறை முதலிய தலங்களைத் தரிசித்து வருவர். இங்கனம் வருநாட்களுள் ஒருநாள் அக்நீசுரர் ஆலயத்திற்குக் காலந்தவறிச் செல்லுகையில் இராத்திரி திருக்கோயிற்றிருத் தொண்டிற்கு வராத உருத்திர கணிகையரிற் சிலரைக் கோவிலதிகாரிகள் மண்டபத்தின் மீதேற்றி வருத்த, சுவாமிகளைக் கண்ட கணிகையர் தமது வருத்தங்கூறச் சுவாமிகள் காரணம் வினவித் தம்மை இவ்வாறு தண்டிப்பா ரில்லையோவென மிகவும் பரிதபிக்கையில் கோவிலதிகாரிகள். இவரது பரிவிற்கு அஞ்சிக் கணிகையரை இறக்கி விட்டனர். இவர் ஒருநாள் சிவபூசைசெய்யுங் காலத்தில் நாயொன்று நீர்வேட்கையால் எதிர்வந்து நீர்விரும்பச் சுவாமிகள் அபிஷே கசலத்தை நீட்டினர், நாயுண்டு மறைந்தது. அருகுநின்றோர் நாயுண்ட சேஷம் அபிஷேகிக்கத் தகுமோவென்னச் சுவாமிகளும் நாயுருக்கொண்டு சிவ மூர்த்திவரின் நான் என் செய்வேன் என்றனர். இவரிருந்த அக்ராகாரத்து வேதியர்களுள் ஒருவன் அபுத்தி பூர்வகமாக வைக்கோற்சுமையைப் பசுவின் கன்றின் மீதிட அது இறந்ததைக் கண்ட வேதியர் இவனைக்கோஅத்தி செய்தவனென்று தமது கோஷ்டியினின்று நீக்க, அவன் சுவாமிகளில்லம் புகுதுகையில் வாயிற்படி தலையிவிடிக்கச் சிவசிவ என்ற னன். இதனைச் செவியுற்ற சுவாமிகள் வெளியில் வந்து சிவனடியவர் என்று உபசரிக்கப் பிராமணன் நடந்தவைகூறச் சுவாமிகள் நீ செய்த பாபம் முதலிற்கூறிய சிவசப்தத்தால் ஒழிந்தது. இரண்டாமுறை கூறிய சிவசப்தத்தால் முத்தியுமுண்டாயிற்றெனக் கூறி அனுப்பினர். இதனைக் கேட்ட வேதியர் பரிகசிக்கக்கண்டு, அப்பாவஞ் செய்த வேதியனை நோக்கி நீ அக்கிராத்தவர்களுடன் சென்று அக்நீசுரர் ஆலயத்திற் கெதிரிலுள்ள நந்திதேவருக்கு அறுகம்புல்லை இட்டு நான் செய்த பாபம் ஒழிந்ததாயின் இப்புல்லை நீ அருந்துக எனக் கூறுக என அவனும் அவ்வாறு அருந்த நந்திதேவர் உண்ணக்கண்டு வேதியர்கள் சுவாமிகள் கட்டளைக்கஞ்சி விலகினர். ஒருநாள் அதிக வறுமை கொண்ட வேதியர் ஒருவர் தமது வறுமை எவ்வாறு நீங்குமென ஆராய்கையில் ஒரு சிவயோகியர்க்கு அன்னமிடின் ஒழியுமென்று தேர்ந்து, சுவாமிகளைப் பிக்ஷைக்கு அழைத்துச் சென்று அன்னமிட்டனர். சுவாமிகள் உண்டு பசி தீர்ந்து விபூதி பிரசாதிக்கையில் அரசனது சேவகர் அன்னமிட்ட வேதியரை அரசன் அழைப்பதாக அழைத்துச்சென்றனர். அரசன் வேதியரை எதிர் கொண்டு பணிந்து வேண்டிய பொருள்களை உதவி, வேதியரின் வறுமை நீக்கினன். மற்றொருநாள் அரசன் சுவாமிகளுக்கு நானூறு தானியப்பொதிகளை அனுப்பினன். அவர்கள் கொண்டு வருகை யில் வெள்ளத்தில் இருநூறு பொதிகள் அடித்துச் சென்றன. இதுநிற்க ஒருநாள் சுவாமிகளின் தாயார் சிவநிவேதனத்தின் பொருட்டு ஒரு வேதியரிடம் பதக்குத் தானியம் கடன் வாங்கி உலர்த்துகையில் அதை ஒரு காளைவந்து தின்றது. அதனை அரதத்தர் கண்டு மீண்டும் இருந்த நெற்களை உண்பிக்கத் தாயார் அதனை வெருட்டி ஓட்டினள். அரதத்தர் அதனை ஒட்டின காரணத்தால் உனக்கு வரும் பலத்தில் பாதி ஒழியும் என்றனர். இது நடவாநிற்கையில் அரசன் ஏவலாளர் வந்து மூட் டைகளிழந்த செய்தி கூறினர். சுவாமிகளின் மனைவியார் ஒருநாள் அரிசி களையும்போது நாயொன்று வந்து அரிசியில் வாயிட அந்தம்மாள் அங்கிருந்த அரிவாளைக் கொண்டெறிய அது மாய்ந்தது. கண்ட சுவாமிகள், பரிதபித்து அது மனைவி கதவினை அடைக்காத தோஷ மென எண்ணி அதற்குப் பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசித்து முத்தியளித்தனர். தமது கிருகத்தில் தாயாரும் மனைவியாரும் பசுங்காளையை அடித்ததற்கும், நாயினைக் கொன்றதற்கும் பிராயச்சித்தம் விரும்பி ஒரு சுலோகம் எழுதி வைத்து விட்டுத் தீர்த்தமாடப்போக அதனைச் சிவபெருமான் சுவாமிகளைப்போல் வந்து சிவ நாம உச்சாரணமே பிராயச்சித்தமென எழுதிவைக்கக் கண்டு சிவபிரான் கருணைக்குப் பணிந்தனர். இவர் ஒருநாள் காவிரி ஸ்நானத்திற்குச் சென்று ஆங்குத் தம் மனைவி காவிரியில் ஸ்நானமாடுதல் பாபங்களைப் போக்குமெனக் கூற அதனைக் கூடாது, காவிரியிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் நாம் பரிசிக்கவும் அருகரல் லோம் என மறுக்கும் புலையனது பாதரக்ஷைகளைச் சிரசில் வைத்துக்கொண்டு நடனஞ்செய்து, உலகத்திற் பலர் பல வகையாகத் தெய்வங்களைக் கொள்ளுகின்றனர். நாம் சிவனடியவரின் பாதரக்ஷை களை அவலம்பிக்கிறோம் என்றனர். இவர் ஒருநாள் மடைப்பள்ளியுள் நாயொன்று அன்னத்தையுண்ண அது சிவநிவேதனம், சிவமூர்த்தி அவ்வாறு வந்துண்டதாகக் கூறிப் பலருடனும் அவ்வன்னம் புசித்தனர். ஒருநாள் ஸ்நானத்திற்குக் காவிரிக்குச் செல்கையில் எதிரில் பசிகொண்டு புலையனாக வந்து அன்னம் வேண்டிய சிவ மூர்த்திக்குக் கஞ்சிவார்த்துச் சிவாக்ய சோழ மகாராஜனால் சிவமூர்த்தியென்று தெரிந்துகொண்டவர். சிவாக்ய சோழமகாராஜனுக்கு நாடோறுஞ் சுவப்பனத்தில் தரிசனந்தரும் சிவபெருமான் கஞ்சி குடித்த மறுதினம் அரசன் சிவபிரானுக்கு மகாபி ஷேகஞ் செய்து பலவித சித்ரான்னங்கள் நிவேதிக்கவும் அன்றைக்குச் சுவப்பனந் தராமையால் விசனமுற்றிருக்கச் சிவமூர்த்தி கனாவிடைத்தோன்றி நேற்று அரதத்தன் வார்த்த கஞ்சிக்கு இணையல்ல உன் அன்னமென்ன, விழித்துக்கொண்டு, சோழன் அரதத்தரைப்போய்ப் பணிந்து அடிமைபூண்டனன். இவர் தம்மைச் சரணடைந்து சோழன் மோக்ஷம் வேண்டச் சவாமிகள் அரையாமத்தில் அக்நீச்சுரத்திற் கருகிலுள்ள ஏழு சிவாலயங்களையுஞ் சேவித்துவருவையேல் முத்தியுண்டாகும் எனக்கூறக்கேட்டுத் தான் குதிரையுடன் குடையாள் பின்றொடரச் சென்று ஏழு சிவாலயங்களையுந் தரிசித்து நிற்கக் குதி ரையும் குதிரை ஆளும் சிவலோகஞ்செல்ல அரசன் தனித்திருந்து இரங்கச் சுவாமிகள் நீயும் பாதசாரியாக அவ்வாறு செல்வாய் எனக் கூறக்கேட்டு அவ்வகை செய்து உடலோடு சிவபுரஞ் சென்றனன். ஒரு விலைமாது தன்னிடம் யாரோ ஒரு வேதியன் தமது குமாரனென்று வந்து ஒன்றுங் கொடாது சென்றனன் என அவளுக்கு விலைபெற்ற ஆபரணந்தந்து எடுத்துச்செல் என அவள் செல்லுகையில் சுவாமிகளின் குமார் அவ்வாறு செய்யாரெனப் பலர்கூறக் கேட்டு அவள் அவ்வணிகளை மீண்டுந் தரப்போகச் சுவாமிகள் மறுத்துத் திருப்பணிசெய்யக் கட்டளை தந்தனர். அக்நீசுரர் இரதோற்சவத்திற்குச் செல்ல ஆபரணம் வேண்டிய தமது கும்ரியர்களுக்குப் பசுவின் காலடிகளின் சுவடுகளில் ஆபரணங்காட்டி அவைகளை அணியக்கூறிக் களிப்பித்தவர். ஒருநாள் திருவாவடுதுறை ஆலய தரிசனஞ் செய்து நீங்குகையில் பொழுதுபோய் மழையுண்டாகச் சிவபெருமான் கோபால வுருக்கொண்டு நானும் கஞ்சனூர் வருவோன் என்று துணைசென்று சுவாமிகள் இட்ட அன்னத்தை வாங்கிக்கொண்டுவந்து பலிபீடத்தருகிற் இறைத்துவிட்டு அசரீரியாக நடந்தவை கூறினர். பஞ்சாக்ஷர உபதேசத்தைப் பரிபாகம் வருதற்குமுன் உரைக் கலாகாதென்று சீடன் வருதற்குமுன் தேகநீங்குதலெண்ணி அங்கிருந்த மணலில் அதனை எழுதக்கண்ட, கழைக்கூத்தி அம்மந்திரத்தைக் காதோலையில் எழுதி அணிந்துகொண்டதை அறிந்த மாணாக்கர் கழைக்கூத்திக்குப் பலநாள் ஏவல் செய்து அவளுண்ட சேஷமுதலிய வுண்டு அவள் தரப்பெற்ற மந்திரம் பெற்றுப் பிராயச்சித்தத்தின் பொருட்டுச் சுவாமிகளைச் சரண்புகச் சுவாமிகள் பூசநக்ஷத்திரத்தில் காவிரி ஸ்நானஞ்செய்து சிவ தரிசனஞ் செய்யின் ஒழியுமெனக் கேட்டு அவ்வாறு செய்தும், அக்கிராரத்து வேதியர் சம்மதிக் காமையால் தாம் சென்று திருவிடை மருதூர் ஆலயத்துள் அனைவருங் காண அசரீரியாகச் சிவமூர்த்தி பாபநீங்கிற்று எனக் கூறக் கேட்பித்தவர். முடவராகிய தமது சகோதரியாரின் குமரர் காசியில் மணிகர்ணிகாகட்ட ஸ்நானம் விரும்ப, அவரைத் தம்மூரிலுள்ள அக்நிதீர்த்தத்தில் மூழ்குவித்துக் காசியில் மணிகர்ணிகையில் தோன்றச்செய்து அங்குச் சொக்கட்டானாடிக் கொண்டிருந்த தம்பதிகள் சுவாமிகள் க்ஷேமத்தை விசாரிக்க, கூறி அவர்கள் சொற்படி மணிகர்ணிகையில் மூழ்கி அக்நி தீர்த்தத்திலெழுந்து நடந்த செய்தி கூறக்கேட்டுக் களித்தவர். சிவப் பிரியரெனும் வேதியருக்கு முற்பிறப்பில் அடிமைகளாக இருந்த நந்தன், வீரன் என்பவர்கள் இப்பிறப்பில் அவருக்குச் சுமதி, தருமபாலன் எனப் பிறந்து கரும ஒழிவில் விஷபேதியாலும் பாம்பின் கடியாலு மிறக்கக்கண்ட தந்தை விசனமுறக் கேட்டு அவர்களை உயிர்பெறக் கூறி அவர்களது செய்தி தெரிவித்துச் சிவபதம் தந்தனர். ஒருநாள் அரசன் வீட்டிற் களவு செய்த கள்வன் ஒருவன், சேவகர் தொடர்தல் கண்டு அடைக்கலம்புக அவனுக்கு விபூதி தந்து உணவளிக்கச் சேவகர் உள் புகுந்து கள்வன் எங்கென இங்கு நமது புதல்வன் உணவு கொள்கிறான் எனக் காத்தவர். இவர் தாம் முத்திக்குச் செல்லுகையில் தம்முடனிருந்த பதினான்கு வீட்டினர்க்கும் தமது வைச்சுவதேவ பலியுண்ணும் நாய்க்கும் முத்தியளித்தனர். இவர் கிரகத்தாச்சிரமத்தால் முத்தியடைந்தவர். இவர்க்கு எட்டு குமரர்கள். இரண்டு குமரியர் என்பர். இவர்செய்த நூல்கள்: சதுர்வேதசாரம், தத்வநிரூபணம், அரி அர தாரதம்யம், ஸ்ரீகண்டபாஷ்ய சமர்த்தனம், உஜ்வலம், ஞானரத்நாகரம், சிவா திக்யசிகாமணி, பக்தாதிக்யசிகாமணி, சைவாகமபூஷணம், விபூதிருத்ராக்ஷபஞ்சகம் முதலிய.

அரதனகுத்தன்

காவிரிப்பூம்பட்டினத்து வர்த்தகன்.

அரதனமாலையணி

அஃதாவது, சொல்லத் தொடங்கிய பொருள்களை முன்பின் முறை வழுவாதுவரச் சொல்லுதலாம். இதனை வடநூலார் ரத்னாவளி யலங்காரமென்பர்.

அரதன்

(சந்) புரீசன் குமரன். இவன் குமரன் அரம்மியாசுவன்.

அரதீர்த்தங்கார்

பதினெட்டாவது சைந தீர்த்தங்கரர், குருசாங்கல தேசம், அத்தினபுரம், குருவம்சம், இவர், தந்தை சுதரிசன மகாராஜா. தாய் பிரபாவதி. உன்னதம் (30) வில், சுவர்ண வர்ணம். 84000 ஆயுஷ்யம், மார்கழி பூர்வபக்ஷம் நவமி திதி ரேவதி நக்ஷத்ரம் ஜநநம். புத்ரன் அரவிந்தன். இவர் காலத்து (40) கும்பாதி கணதரர், நந்திஷேண பலதே வர், புண்டரீக வாசுதேவர், சுபெளமன் சக்கிரவர்த்தி.

அரனபாதம்

ஓர் மலை. இதில் சினன் ஆலயம் இருக்கிறது.

அரன்

1. சர்வசங்கார காலத்தில் அனைத்தையுமொழித்துத் தனித்து நிற்கும் சிவன் திருநாமங்களில் ஒன்று. 2. மாலியின் குமரன். விபீஷணனுக்கு மந்திரி. 3. ஏகாதச ருத்ரரில் ஒருவன். 4. கலிங்கலை தேசத்தரசன்.

அரபத்தநாவலன்

திருப்பெருந்துறையில் வேளாளர் குலத்துதித்துத் தமிழிற் பரத சாத்திரஞ் செய்தவன்.

அரபத்தர்

ஓர் இருடி. இவர் ஒரு கற்பத்தில் வேதத்திற்குப் பொருள் தெரியாதிருந்த இருடிகளை மதுரையில் சிவவிரதம் அநுட்டிக்கச் செய்ய அவர்களுக்குச் சிவமூர்த்தி ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்து வேதத்திற்கு பொருள் அருளிச்செய்தனர்.

அரப்பாயம்

நாடக விகற்பத்தொன்று, அருளில்லாதோர் தலைமக்களாய்ப் பெண்ணுடைத்தாய் வாரம் போலியாவது. இதனை அர்ப்பீடமெனினு மொக்கும். (வீரசோ)

அரம்பன்

விவும் சதியின் குமரன்.

அரம்பை

தெய்வதாசிகளில் ஒருத்தி. ஒரு முறை பரத்துவாசரை மயக்கியவள், விசுவாமித்திரரின் தவமழிக்கச்சென்று அவர் சாபத்தாற் கல்லாகிக் காவிரியில் ஸ்நானஞ் செய்து சுத்தையானவள். நளகூபரள் தேவி. (காவிரி புராணம்).

அரம்பையர் உலகம்

இவ்வுலகத்திற் பாற்கடலிற் பிறந்த அலம்புசை, மனோகரை, உருப்பசி, உமாவதி, கிருது, திலோத்தமை, சந்திரகலை, சுநகை, மேனகை, கலாவதி, காந்திமதி, கலாநிதி, மோகினி, அரம்பை, சந்திரவிலேகை முதலிய 90,000 தெய்வப் பெண்கள் இருப்பர். இவர்கள் இளமை நீங்காது வேண்டிய உருவெடுப்பர். இவர் உலகத்தை, விரதந்தவறிய பெண்களும், கணவருடன் இருமனப்பட்டுப் புணர்ந்த வர்களும் அடைவர்.

அரம்மியாசுவன்

(சந்) அரதன் குமரன். இவன் குமரன் முத்கலன். இவன் தன் பிள்ளைகள் ஐவரும் ஐந்து காரியஞ்யப் பாஞ்சாலர் எனப்பட்டனர்.

அரருட்கிழங்கு

(ARROW ROOT) இது, அமெரிகா கண்டத்துக் கிழங்கு வகையைச் சேர்ந்தது. இதில் மாச்செய்து உணவாதிகளுக்கு உபயோகிக்கின்றனர். இது வியாதியாளருக்கும், குழந்தைகளுக்கும், பலவீனப் பட்டவர்களுக்கும், பத்தியச் சாப்பாடாக உபயோகப்படுகின்றது.

அரளை

சிற்பியின் மகள். சூரியன் தேவி.

அரவான்

அருச்சுனனுக்கு நாககன்னிகையாகிய உலூபியிடம் உதித்த குமரன். பாரதயுத்தத்திற்கு முதற்பலியாக உதிரந் தந்தவன். எதிர் உரோமம் உள்ளவன். துரியோதனன் பாரதயுத்தத்தில் தனக்கு முதற்பலியாக இருக்கவேண்ட உடன்பட்டவன், பிறகு பாண்டவர்க்கும் உடன்பட்டுக் களப்பலியாக உதிரந்தந்தவன் (பாரதம்)

அரவிந்தப்பாவை

வங்கிபுரத்தாய்ச்சியின் குமரி. நாதமுனிகளுக்குத் தேவியார். ஈசுவரமுனிகளுக்குத் தாய்.

அராகம்

இது கலிப்பாவின் உறுப்புக்களில் ஒன்று. இது அளவடிமுதல் எல்லா அடிகளாலும். நான்கடி முதல் எட்டடி அளவாக வருவது.

அராலி

விஸ்வாமித்திர புத்திரன்.

அரி

1. விஷ்ணுவின் திருநாமம். சுவாயம்புமநுவைக் காண்க 2. ருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். 3. தாரகாக்ஷன் புத்திரன். 4. பாண்டவ பக்ஷத்தவனான சேதி தேசத்தவன். கர்ணனால் கொல்லப்பட்டவன். 5. அகம்பன் என்னும் பெயருள்ள ராஜ புத்திரன். 6. கருடபுத்திரன்.

அரி அஸ்வன்

அயோத்தி நகரத்து அரசன். சூரிய வம்சத்து யயாதி புத்திரியாகிய மாதவியிடத்தில் பிறந்தவன். இவனுக்கு வசுமனன் என்னும் பெயர். 2. காசிதேசத்து அரசன். புத்திரன் சுதேவன், பேரன் திவோதாசன் (பா~அநு)

அரி ஆனந்த வைஷ்ணவர்

இவர் இராமாநந்தர் சீடர். இவர் மாணாக்கரில் ஒருவர் மாப்பிச்சைகொண்டு பலர்க்கும் உணவருத்தி வருவர். இவ்வகை இருக்கையில் இராமாநந்தரை இச்சீடர் காண இராமாநந்தர் நாளை நீ இறப்பை என்றனர். அதைக் கேட்ட மாணவகர், தம் ஆசிரியர்பால் கூற ஆசிரியர் சீடரைச் சகுணோபாசனை செய்யச் சொல்லித் தாம் யோகத்திலிருந்தனர். சீடர் சங்கு முதலிய பஞ்சாயுதங் கொண்டோனாய்த் திருமாலைத் தியானிக்கத் திருமால் திருவாழியால் காலன் அவரைக் கண்டு அஞ்சி நீங்கினன். காலனீங்கிய துணர்ந்த சீடர் ஆசிரியர் யோகநீங்கியபின் நடந்தவை உணர்த்திப் பஜனை செய்திருந்தனர். (பக்தமாலை).

அரிகண்டன்

(சூ) கீதமாநகர இசாஜகுமரன்.

அரிகண்டம்

கழுத்திற் பூட்டிக்கொண்டு நினைத்தது முடியுமளவும் கழற்றாதிருக்கும் ஓர் இருப்புவட்டம். இது அரியும் முட்களை யுடையது.

அரிகன்

சந்திர வம்சத்து அரசன். அபராசீன புத்திரன். தாய். மரியாதை. மனைவி ஆங்கி. குமரன். மகாபவுமன். 2. நாலாம்மன் வந்தரத்துத் தேவன்.

அரிகரன்

ஒரு பாதி சிவனும் ஒரு பாதி விஷ்ணுவுமாக நின்ற சங்கரநாராயணன் திருவுரு. இதனைக் கேசவார்த்த மென்பர்.

அரிகரபுத்திரன்

மாசாத்தர், ஐயனார் என்று பெயர் கொண்டவர். விஷ்ணு மோகினியுருக்கொண்ட காலத்துச் சிவவீரியத்தால் உதித்த குமரர். இவர் சூரபன்மனால் இடையூறடைந்த இந்திரன் தேவியாகிய இந்திராணி, தன்னைக் காக்கும்படி இவரை வேண்ட மகாகாளரால் காவல் செய்வித்தவர். இவர்க்கு ஆயுதம் செண்டு வாகனம் யானை தேவிமார் பூரணை, புட்கலை. இவரை ஒரு சோழன் செண்டு வேண்டிப் பெற்று மேருவின்மீதெறிந்து தனம்பெற்றுப் புலிக்குறி வைத்தான் என்பர். சிலப்பதிகார நூலாசிரியர்.

அரிகாசன்

தமிழில் இருசமய விளக்கஞ் செய்த புலவன்.

அரிகிராமம்

விதர்ப்பதேசத்திலுள்ள ஒரு பட்டணம்.

அரிகுரவன்

நாயர் ஜாதிகளில் ஒருவகை.

அரிகேசன்

வசுதேவர் தம்பியாகிய சியாமகன் குமரன். 2. பூர்ணபத்திரன் எனும் யக்ஷன் கும்ரன். இவன் சிவசிந்தனையுட னிருத்தலைக் கண்ட தந்தை வெறுப்புற்று இவனை அகற்ற இவன் காசி ஷேத்திரமடைந்து தவஞ்செய்து சிவபெருமான் பிரசன்னராகத் துதித்துக் காசி ஷேத்திரபாலகனாகத் தண்டமொன்று பெற்றுத் தண்டபாணியாய்ச் சிவாஞ்ஞையால் உத்பிரமன், சம்பிரமன் எனும் இரண்டு ஏவலாளருடன் கங்கா ஸ்நானஞ் செய்வோர், தன்னை வணங்கும் பதம் பெற்றவன். (சிவமகாபுராணம்).

அரிகேது

ஒரு வித்யாதரன் மாயாசிங்கமாகத் திவட்டனிடம் அரிமஞ்சுவால் அனுப்பப் பட்டவன். (சூளாமணி)

அரிசகன்

(சந்) உருசுகன்குமான் மனைவி தக்ஷகன் குமரியாகிய சுவாலாதேவி. 2. உருமண்ணுவாவின் புதல்வன்.

அரிசி

பிரமன் மானச புத்திரரில் ஒருவன், உடலில் உதித்தவன். புத்திரன் காசிபன்.

அரிசில்

சோணாட்டிலிலுள்ள நதிகளில் ஒன்றன பெயர்.

அரிசில்கிழார்

கடைச்சங்கத்துப் புலவர்களில் ஒருவர். இவர், தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை யென்னும் அரசனைப் பாடி ஒன்பது நூறாயிரம் பொற்காசு பரிசில் பெற்றதன்றி அவன் கொடுத்த அரசாட்சிக்குரிய சிங்காதனத்தை அவனுக்கே மீட்டும் இரந்து கொடுத்து அவன் பால் அமைச்சுரிமைபூண்டு விளங்கினார். “கிழார்” என்பது வேளாளாக்கே உரிய சிறப்புப்பெயராக இருந்ததென்று தெரிதலின் இவரை வேளாண் மரபினரென்று சொல்லவேண்டும். அரசிலென்பது ஈண்டு ஒரு நதியின் பெயரோ, ஒரூரின் பெயரோ, யாதும் விளங்கவில்லை. சோழ நாட்டிலுள்ள நதிகளுள் அரிசிலென்று ஒதி நதியும், மைசூரைச் சார்ந்த ஊர்களுள் அரிசிற்கரையென்று ஒரூரும் உள்ளன. வையாவிக் கோப்பெரும் பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த் தல் வேண்டி அவனைப் பாடினர். அதிகமான் தகடூரெறிந்து வீழ்ந்த எழினியென்பவனுடைய பிரிவாற்றாது வருந்திப் புலம்பினர். தகடூர் யாத்திரையென்னு நூலில் அவ்வச்சமயங்களில் இவர் செய்தனவாகச் சில பாடல்களுண்டென்று தெரிகிறது. மேற்கூறிய சேரவரசனும், உக்கிரப்பெரு வழுதியாரும், பேகனென்னும் வள்ளலும், அதிகமானும் இவர்காலத்துத் தலைவர்கள். திருவள்ளுவமாலையில் “பரந்தபொருள்” என்னும் (13)ம் செய்யுள் இவர் செய்ததாகத் தெரிதலின், இலவசூர் முதலிய புலவர்களும், திருவள்ளுவரும், ஒளவையார்ரும், உக்கிரப் பெருவழுதியாரைப் பாடிய ஐயூர் மூலங்கிழாரும், வையாவிக்கோப் பேகனைப்பாடிய பரணர், பெருங்குன்றூர் கிழார் முதலியோரும், தகடூர்யாத்திரையில் வந்துள்ள பொன்முடியாரும், இவர்காலத்துப் புலவர்களென்று எண்ணுதற்திட முண்டு. இவர் செய்தனவாக இப்பொழுது (20) செய்யுட்கள் கிடைக்கின்றன.

அரிசேநன்

ஒரு வித்யாதரன். அச்வகண்டனுக்குத் தோழன். (சூளாமணி).

அரிச்சத்திரம்

குருமக்கள் சேனையின் இருக்கை.

அரிச்சந்திரன்

(சூ) திரிசங்குவின் புத்திரன். இவன் வருணனை நோக்கி எனக்குப் புத்திரசந்ததி நேருமேல் அக்குமரனைப் புருஷப் பசுவாகக்கொண்டு உன்னைத் திருப்தி செய்விக்கிறேன் எனக்கூறி அவ்வடை உதித்த குமரனை யாகப் பசுவாக்காதிருந்தனன். தந்தையின் செய்கையுணர்ந்த குமரன் தன்னிலை உணர்ந்து பயந்து காட்டில் வசித்தனன். பின்பு வருணன் அரிச்சந்திரனுக்கு மகோதர நோயுண்டாக்கினன். தந்தை மகோதரத்தால் பீடிக்கப்படுகிறானென வினவுற்று நகரநோக்கி வருகையில் இந்திரனால் வனத்தில் ஆறுவருஷம் தடைபட்டு அந்த ஆறாம் வருஷக் கடைசியில் அசிகிரதன் என்பவனிடத்தில் சுனச்சேபனை விலையாகக்கொண்டு தந்தைக்கு அளித்தனன். அரசன் சுநச்சேபனை யாகப் பசுவாக்கி வருணனைத் திருப்தி செய்வித்தனன். குமரன் தந்தையை வருணகோ பத்தாலுண்டாகிய மகோதரத்தினின்றும் நீக்கினன். இவன் சம்ராட். இவன்தேவி சந்திரமதி. மந்திரி. சத்தியகீர்த்தி. ஒரு முறை தெய்வசபையில் இந்திரன், தேவர் முதலியவரை நோக்கிப் பூமியில் சத்தியம் தவறாதவன் யார் எனக்கேட்சையில் வசிட்டர் எழுந்து என் சீடன், அரிச்சந்திரன் சத்தியந்தலறாதவன் என்றனர். இதைக் கேட்ட விச்வாமித்திரர் எழுந்து அப்படியாயின் அவனைப் பொய் சொல்விக்கிறேன் என்று சபதஞ் செய்து கொண்டு பூமியில் அயோத்திபையடைந்து அரிச்சந்திரனைக் கண்டு யாகம் செய்யவேண்டி மிகுந்த திரவியங்கேட்டு அவன் கொடுக்கப் பெற்று அவனிடமே அதனை வைத்துச்சென்றனர். சிலநாள் கழித்து விச்வாமித்திரர் அரிச்சந்திரனிடம் வந்து அவன் பூமியைத் தானமா கப்பெற்றுத் தாம் முன்பு வைத்துப் போன பொருளினுக்கும் வட்டி கேட்க அரசன் காசிநகர் சென்று மனைவியையும் குமரனையும் வேதியனுக்கு விற்றுத் தான் புலையனுக்கு அடிமைப்பட்டு விச்வாமித்திரருக்கு பொருளை அளித்தனன். விச்வாமித்திரர் அரசனை இவ்வளவு துன்பப்படுத்தியும் பொய் பிறவாமை கண்டு அரிச்சந்திரன் குமரன் தர்ப்பை கொய்யுங்காலையில் பாம்பு கடித்திறக்கச் செய்தனர். இதனைக் கூடச்சென்ற பிள்ளைகளால் அறிந்த தாய் தன் குமரனைத் தேடிச்சென்று மயானத்திட்டுத் தன் புருஷனைக்கண்டு, அவன் சொற்படி வேதியரிடம் ஈமக்கடன் பெற்றுவரத் திரும்புகையில் மாயையால் விச்வாமித்திரர் காசியரசன் புத்திரனைக் கொலை செய்வித்து வழியில் எறியச்செய்தனர். அந்தக்காசியரசன் புத்திரனைத் தன் புத்திரனென்று உணர்ந்து பார்க்கையில் அரசன் காவலர் கடுகிப் பிள்ளையைக் கொன்றாளெனப் பிடித்துச் சென்றனர். அரசன் இவளிடத்துக் குற்றக்குறி காணாதிருந்தும் மந்திரியர் சொல்லால் கொலை செய்விக்கக் கட்டளையிட்டனன். காவலர் சந்திரமதியைக் கொலைசெய்யும்படி அரிச்சந்திரனிடங் கொடுக்க அரிச்சந்திரன் வெட்டச் செல்லுகையில் தேவர் முதலியோர்சூழத் திரிமூர்த்திகள் தரிசனந்தந்து குமரனை எழுப்பி அரிச்சந்திரனுக்கு வேண்டிய வரமளித்து விச்வாமித்திரன் சபதப்படி அவனது தபத்தையும் வாங்கித் தந்தனர். அரிச்சந்திரனை வருத்தியதால் வசிட்டர் விச்வாமித்திரனைக் கோபித்துக் கொக்காகவெனச் சபிக்க விச்வாமித்திரர் வசிட்டரைக் கூகையாகெனச் சபித்தனர். இவ்விருவரும் உலகம் நடுங்கச் சண்டை செய்யப் பிரமதேவர் தோன்றிச் சமாதானஞ் செய்வித்தனர். அரிச்சந்திரனைக் கொடுமை செய்ததைச் சகிக்காத விச்வதேவர் விச்வாமித்திரரிடங் கோபிக்க அவரை விச்வாமித்திரர் கோபித்து நீங்கள் மணமும் புத்திரரும் இல்லாமல் மனிதராக என அவ்வகையே விச்வதேவர் திரௌ பதியின் வயிற்றில் இளம் பஞ்சபாண்டவராக உதித்திறந்தனர். இவன், புத்திரப்பேறு வேண்டிச் சிவபூசை செய்து சத்தியை வணங்காததனால் புத்திரன் அரவாவிறக்கச் சாபம் பெற்றுப் பின் அநுக்கிரகம் பெற்றான். (அரிச்சந்திரபுராணம்).

அரிச்சந்திரபுராணம்

நல்லூர், வீரகவிராயரால் தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்டது. இது (1215) செய்யுட்கள் அடங்கியது.

அரிச்சிதர்

ஓர் இருடி. இவரை ஆயமங்கையர் பூஜித்துப் புத்திரப்பேற்றை யடைந்தனர். இதனை இப்பெண்களின் கணவர்கள் தவறாகவெண்ணி அரசனிடம் முறையிட அரசன் ஆய்ச்சியர் கற்புடையார் என்பதை ஆயர்க்கு அப்பெண்களினால் அறிவித்தனன்.

அரிடிகம்

சிற்ப நூல்களில் ஒன்று,

அரிட்டகாமன்

அடமானன் குமரன். இவன் குமரன் ஆலயன்.

அரிட்டநேமி

1. ஓர் பிரசாபதி சகரனுக்கு அநேக தர்மங்களை உபதேசித்தவன். 2. நிமிவம்சத்துப் புருசித்தின் குமரன். 3. காசிபன், 4. விநதையின் புத்திரன் 5. யமன் சபையில் உள்ளஷத்திரியன். 6. சகதேவன் விராடநகரத்தில் வைத்துக்கொண்ட பேர். 7. ஒரு வேதியன் சகரனுடன் மோக்ஷத்தின் பொருட்டுச் சம்வாதம் செய்தவன்.

அரிட்டன்

1. கிருஷ்ணாவதாரத்தில் கம்சனால் ஏவப்பட்டுக் கண்ணனைக் கொலைபுரிய இடபமாக வந்து கோபாலரை வருத்திக் கண்ணனால் கொம்பிழந்து மாய்ந்த அசுரன். 2. தனுவின் குமரனாகிய ஒரு தானவன். 3. மித்திரனுக்கு இரேவதியிடம் உதித்த குமரன்.

அரிட்டை

1. காசிபர் தேவி, தக்ஷன் குமரி இவளிடம் காந்தருவர் பிறந்தனர். 2. மகாசுவேதையின் பாட்டி.

அரிணாங்கன்

சந்திரன்.

அரிணி

1. காசிபர் புத்திரி, குரங்குகளைப் பெற்றவள். 2. அரிமேதசின் பாரி. 3. ஒரு தானவன். 4. பிரமன் புத்திரர், நைட்டிகப் பிரமசரியம் அநுட்டித்த இருடி. ஊர்தவரேதஸ், இவர் பிறந்தகாலத்து அருணனைப்போல் விளங்கியதால் இப்பெயர் பெற்றனர். 5. இரண்யகசிபின் புத்தரி, அக்னியின் தேவி.

அரிதன்

1. யுவனாசுவன் குமரன். இவனரசனாயினுந் தவத்தால் இருடியாயினன். இவன் முதலாக அரிதகோதரர் எனும் வேதியர் பிறந்தனர். 2. (சூ) ரோகிதாசவன் குமரன்.

அரிதர்

1, பன்னிரண்டாவது மன்வந்தரத்துத் தேவர். 2. ஒர் இருடி

அரிதாசமதம்

வடமதுரைக்கருகிலுள்ள கோல எனுங்கிராமத்தில் சநந்தனன் எனும் வேதியன் ஒருவன் கிருஷ்ணமூர்த்தியைக் கிராமத்தில் பிரதிஷ்டித்தான். இவனுக்கு விக்ரமசகம் (4141) இல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இவனுக்கு ஹரிதாசன் என்று பெயர். இவன் கல்வி வல்லவனாகத் தவமேற் கொண்டிருக்கையில் இவனிடத்தில் தயாளுதாஸ் என்பவன் தான்பெற்ற பொன் செய்யுங் கல்லையிழந்தமை கூறக்கேட்டு இவன் யமுனையிலுள்ள ஒருகல்லை எடுத்துப் பார்க்க என அவ்வாறே தயாளுதாஸ் எடுத்துப் பார்க்க அது பொன்னாயிருக்கவும் தான் இழந்த பொற்கட்டி போலவுங்கண்டு வியப்புற்றுச் சீடன் ஆயினன். இவ்வகை பல வியப்புக்கள் காட்ட பலரும் இவனிடம் மோகப்பட்டுச் சீடராயினர். இவர்கள் விஷ்ணு பக்தர். இவர்கள் தத்வ விசாரஞ்செய்து சர்வ தர்மபரித் யாகஞ்செய்து சுத்த சந்யாசம் அடைதல் உண்மை யென்பர்.

அரிதாசர்

ஒரு பாகவதர். இவர் திருமலையில் முதலாழ்வார்கள் மூவர்களின் அருள் பெற்று அக்ஷயபாத்திரமும் திருவாழியும் பெற்றுத் திருமலையில் ஜிர்ணேத்தாகாரணஞ் செய்தவர்.

அரிதாரம்

இது, ஒருவகை மஞ்சணிறமுள்ள சரக்கு. இது வைப்புச் சரக்கிலொன்று, இது பொன்னரிதாரம், தாளகம், கட்டியரிதாரம், கரட்டரிதாரம், தகட்டரி தாரம், மடலரிதாரம், வைப்பரிதாரம் எனப்பேதப்படும்.

அரிதி

கத்ரு குமரன்.

அரித்திரகன்

கத்ரு குமரன்.

அரித்துவசன்

தமிழ்நாட்டரசன். இவன் ஆதிசேடனுக்குச் சுவதியிடம் பிறந்த நாக கன்னிகைகையை மணந்தவன்.

அரித்துவாரம்

ஒரு மகா தலம். இது தக்ஷப் பிரசாபதி யாகஞ்செய்த இடம். மதுவைச் சம்மாரஞ் செய்த விஷ்ணுமூர்த்தியை மது, இனி இது, புண்ணியத் தலமாக என வேண்டினமையால் அவ்வகை விஷ்ணுமூர்த்தி, எழுந்தருளிப் புண்ணியத் தலமாக்கிய தலம். மாயாவைக் காண்க. (காசி காண்டம்)

அரிந்தமன்

விஷ்ணுமூர்த்தி.

அரினி

தெய்வப்பெண், தேவர் ஏவலால் திரணபிந்துவின் தவத்தை அழிக்கச் சென்று அவரால் மானிடவுருப்பெற்றுப் போஜன் புத்திரியாக இந்துமதியெனப் பெயரடைந்து அஜனை மணந்து நாரதர் விழச்செய்த பூமாலை காரணமாக முன்னுருக்கொண்டு தேவருலகடைந்தவள். இவள் குமரன் தசரதன்.

அரிபாளதாசர்

இவர் அதிக செல்வமுள்ளவராய் அரிபக்தி மேற்கொண்டு பாகவதர்க்கு அன்னம் அளித்துத் தமது செல்வங்க ளெல்லாம் போகச் சாதுக்களுக்குத் தரச் செல்வமிலராய்க் கள்ளவேடம் பூண்டு காட்டின் வழிச் செல்வோரை வழிபறித்து வந்து பாகவதரை உபசரித்து வருகையில் ஒருநாள் பொருளிலாமல் வருந்திக் காட்டின் வழி வில்லும் அம்புமாக நிற்கையில் கால தாமதமாதல் நோக்கிப் பாகவதர் வருந்துவரேயெனக் கவலுகையில் பெருமாளும் தேவியாரும் வணிகவுருக் கொண்டு வழிவரக்கண்டு களிப்புடன் எதிர்சென்று மறித்துப் பொருள்பெற்று உபசரித்தனர். இதைக்கண்ட தேவியார் பெருமாளை நோக்கி உம் பக்தனது பெருமை இவ்வாறெனப் பரிகசிக்க, பெருமாளவனது தன்மைகாட்டக் கிழவுருக் கொண்டு அவர் வீடடைந்து சீதாராம என உட்கார்ந்தனர். தாசர் எதிரடைந்துபசரித்து அன்னமிட்டு வேண்டிய தென் எனக், கிழவர் நாங்கள் வணிகர் இவ்வழி வருகையில் எங்களைக் கள்ளன் ஒருவன் வழிபறித்தனன்; அதனால் நொந்தடைந் தோமென்று முன்னைய வணிகவுருக் கொள்ளத் தாசர் இவர் பெருமாளென வேண்டிக்கொண்டு இவ்வகைப் பெருமாளுக்குத் தீமை செய்தேனென வருந்துகையில் பெருமாள் தரிசனந்தந்து இனித் திருட வேண்டாம் உனக்கு எல்லாச் சித்திகளும் உண்டாம் என அருள் செய்து மறைய அன்று தொட்டுப் பாகவத சேவையும் உபசாரமும் செய்திருந்தவர். (பக்தமாலை.)

அரிபுரம்

ஒரு வித்யாதரநகரம். (சூளாமணி)

அரிமஞ்சு

அச்சுவக்கிரீவனுக்கு மந்திரி. (சூளா)

அரிமர்த்தன பாண்டியன்

குலேசபாண்டியன் குமரன். இவன் காலத்து மாணிக்கவாசகர் சரித்திரம் நடந்தது. திருவாதவூரைக் காண்க. (திருவிளையாடல்)

அரிமித்திரன்

ஓர் விஷ்ணு பாகவதன். புவனேசனால் செல்வ முதலிய இழந்து விஷ்ணுபதம் பெற்றவன்.

அரிமேதசு

விஷ்ணு வினம்சாவதாரமாகிய ஸ்ரீஅரியைப் பெற்ற ஓர் இருடி புங்கவர், பாரி, அரிணி.

அரிமேதன்

துவஜவதி என்பவளின் தந்தை.

அரியசுவனன்

(சந்) திருதன குமரன். இவன் குமரன் சகதேவன்.

அரியசுவன்

1 பிருதுச் சக்கரவர்த்திக்கு அர்ச்சசியிடத்தில் உதித்த குமரன். 2. (சூ) அநரண்யன் குமரன். 3. திடாசுவன் குமரன். (சூ) 4. நிமிவம்சத்துத் திருஷ்டகேதின் குமரன்.

அரியசுவாசர்

இவர்கள் பதினாயிரவர். தக்ஷனுக்கு அசக்னி யிடத்துதித்த குமரர்கள், இவர்கள் நாரதரால் உபதேசிக்கப் பட்டு ஞானம் அடைந்தனர். இவர்களுக்கு அரியசுவர் எனவும் பெயர்.

அரியமன்

1. அத்திரி ரிஷியின் குமரன்.

அரியமா

1. காச்யபருக்கு அதிதியிடம் உதித்த குமரன். துவாதசாதித்தரில் ஒருவன். 2. ரம்மியக வருஷமாள் பவன்.

அரியமாரையர்

ஒரு சிவனடியவர், இவரிடத்து ஒருவன் பிச்சைக்கு வர இவர் அவனுக்கு அன்னம் இட்டனர். அப்போது சிறிது அன்னம் பூமியிற் சிந்தியது. அன்னத்திற்கு வந்தவன் அத்தருணம் சிவனல்லார் பெயர் கூறினன். இவர் கோபித் துப் பிச்சைக்கு வந்தவனைச் சட்டுவத்தால் தலையில் இடித்து வீழ்த்தினர். இதனை அரசன் அறிந்து அரியமாரையரை வருவிக்க வேவுகாரரை அனுப்ப இவர் சிவ சந்நிதானத்திற் புகுந்து ”நான் அரசன் முன்போகவோ” என்று சிவசாருப்பியம் பெற்றவர். (பசவபுராணம்.)

அரியார்

பட்டினவ சாதிப்பகுப்பு. (தர்)

அரிளி

ஒருவகை ஸ்தானிகர்.

அரிவருஷன்

அக்நியித்ரனுக்குப் பூர்வசித்தியிடம் உதித்த குமரன். தேவி. உக்ரத மஷ்ட்ரை.

அரிவாட்டாய நாயனார்

இவர் சோழநாட்டுக் கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தாயனார் என அவதரித்துச் சிவபக்தியிற் சிறந்து தமது மனைவியாருடன் இல்லறம் நடத்தி வரும் நாட்களில் நாடோறும் பரமசிவத்திற்குச் செந்நெல்லரிசியும், செங்கீரையும், மாம்பிஞ்சும் படைத்து வருவதே நியமமாகப் பூண்டு படைத்து வருவர். இவ்வகை நடத்தி வரும் நாட்களில் வறுமை வந்தது. அந்தக் காலத்தும் கூலிக்கு வேலை செய்து வந்த செந்நெல்லரிசியைச் சிவமூர்த்திக்கென்று வைத்துத் தாம் கார் அரிசி யன்னம் புசித்து வந்தனர். இவரது அன்பின் நிலையை அறிவிக்கும்படி சிவமூர்த்தி அவ்வூர் முழுதும் செந்நெல்லே விளைவித்தனர். அடியவர் அக்கூலி கொண்ட செந்நெல்முழுதும் சுவாமிக்கு வைத்துவிட்டுத் தாம் தம் மனைவியார் சமைத்து வைத்த கீரை முதலியவற்றையே ஆகாரமாகக் கொண்டு வந்தனர். இவ்வகை புரிந்தும் கீரை முதலியவை கெட்டகாலத்து நீர் முதலியவை உண்டு பசி தீர்ந்து விரதம் விடாது நடத்தி வந்தனர். ஒருநாள் தாம் செந்நெல்லரிசியும், செங்கீரையும், மாவடுவந்தாங்கி முன்செல்ல, மனைவியார், பஞ்சகவ்யந் தாங்கிப் பின் செல்லச் சிவாலயத்திற்குப் போகையில் தாயனர் அன்னமில்லா இளைப்பாலும் அரிசி முதலிய தாங்கிச் செல்லுதலாலும் காலிடறி வீழ்கையில் பின் சென்ற தேவியார் தாங்கவும் தரியாது அரிசி மாவடு முதலிய திரவியங்களைக் கமரிற் சிந்தினர். தாயனார் இனி ஆலயத்திற்குச் செல்வதிற் பயனில்லையென்று தம்மிடமிருந்த அரிவாளெடுத்து ஊட் டியை அரியச் சிவமூர்த்தி கமரிடமிருந்து தமது திருக்கரத்தை நீட்டித் தாயனார் கரத்தைப் பிடித்துக்கொண்டு மாவடுவைக் கடிக்கும் “விடே லென்னும் ஓசையைக் காட்டினர்”. தாயனார் அவ்வோசை கேட்டு மனமகிழ்ந்து பணியச் சிவமூர்த்தி நமது சிவலோகத்தில் வாழ்ந்திர வென்று திருவுருக் கரந்தனர். இவர் அரிவாளால் ஊட்டியரிந்த காரணத்தால் அரிவாட்டானார் எனப் பெயரடைந்தனர். (பெரிய புராணம்,)

அரிவியாசர்

இவர் பரமபாகவதர். வட மதுரையில் வாழ்ந்தவர். இவர் ஜகந்நாதமடைய வேண்டி யாத்திரை செய்கையில் ஒரு சோலையிடையடைய அவ்விடம் ஒரு காளிகோயிலிருக்க, அக்கோயிலுக்கு ஆட்டினை ஒருவன் பலியிடக் கண்டு அப்பொழில் விட்டு நீங்கி வேறோரிடஞ் செல்கையில் அக்கோயிலிலிருந்த காளி, இவரையடைந்து என்னிடம் விருந்துண்டு செல்க எனத் தாசர் இன்று முதல் உயிர்க் கொலை விரும்பாதிருக்கினுடன் படுவேனென அவ்வாறு காளி சம்மதித்துக் கூற, விருந்துண்டவர். அரசன் கனவில் காளி தோன்றி தனக்கு இனி உயிர்க்கொலை செயின் உன்னை வருத்துவேனென அரசன் பயந்து ஊரில் கொலை செய்யாதிருக்கப் பறையறைவித்தனன், பின் அரசன் தாசரையடைந்து அருள் பெற்றனன். தாசர் ஜகந்நாதமடைந்து பெருமாளைச் சேவித்திருந்தனர். (பக்தமாலை).

அரிஷ்டன்

யமன் சபையில் உள்ள க்ஷத்திரியன். 2. தார்ட்ச்யாபரன் என்னும் பெயர் உள்ள ரிஷி. 3. ரிஷப உருவம் பெற்ற அசுரன். கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன்.

அரீதன்

1. விச்வாமித்திரன் குமரன். இக்கோத்திரத்திற் பிறந்த குமரர் அரீதகோத்ர பிராமணராயினர். 2. மலைநாட்டுத் திருமூழிக்களத்தில் திருமாலருள் பெற்ற ஓர் இருடி.

அருகதாசன்

ஒரு சைந கவி. சுத்திமுக்தாவLI செய்தவன்.

அருகன்

1. ஒரு அரசன், பாஷண்ட மதத்தாபகன். 2, சிநனுக்கு ஒரு பெயர்.

அருகமதம்

இம்மதம் பாட்னா நகரத்தில் உதிட்டிரசகம் (1445)ம் வருஷத்தில் பிறந்த ஆருகதன் என்பவனால் ஸ்தாபிக்கப்பட் டது. இவன் ஜயினமதத்தைக் கண்டித்தவன். இவன் அருகன், சர்வஞ்ஞனெனவுந் திரிலோகத்தாராலும் கொண்டாடப்பட்ட வனென்றும் எக்காலத்தும் சத்தியத்தைப் போதிப்பவனென்றுங் கூறுவன், இம்மதத்தில் பதார்த்தங்கள் (7) விதம். அவை யாவன: ஜீவம், அஜீவம், ஆஸ்ரமம், சம்வரம், நிர்ச்சரம், பந்தம், மோக்ஷம் என்பன, (1) ஜீவ மென்றால் போக்தாவான ஆத்மா. (2) அஜீவமென்றால் போக்ய பதார்த்தங்கள். (3) ஆஸ்ரமமென்றால் சத் தாதி விஷயங்களைப்பற்றிச் சுரோத்திரேந் திரியங்கள் செல்லுதல். (4) சம்வாமென்றால் இந்திரிய வியாபாரங்களைத் தொலைக் கத் தகுந்த இயமநியமாதிகள். (5) நிர்ஜா மென்றால் பாப பரிகாரமான தப்த சிலா ரோகணாதி காயசுத்திகள். (6) பந்தமென்றால் கர்மம். (7) மோக்ஷமென்றால் கர்ம பாபநாசமான சத்வலோகாகாசத்தைப் பிர வேசித்து எக்காலமும் ஊர்த்வகமனத்தையடைதல், அருகமத சித்தாந்தம், (1) ஸம்யக் தரிசனம் எனின் அருகனால் கூறப்பட்ட தத்வார்த்தங்களில் நம்பிக்கை வைத்தல். (2) ஸம்யக்ஞானம் எனின் ஜீவாதிபதார்த்தங்களில் ஆசையின்றி இருத்தல். (3) ஸம் யக்சாரித்திரம் எனின் பாதகங்களை உண்டாக்கும் கர்மங்களை விடுகை. இவை அநுட்டித்தல் முத்தி. இம்மத சந்நியாசிகள் பிக்ஷையேற்று உண்பவர்களாய்க் கையில் குண்டிகை யுள்ளவர்களாய்ச் செந்நிற வஸ்திரமணிந்தும் சிலர் வெள்ளுடை தரித்துமிருப்பர் எனின் சிலர் சுவேதாம்பரரென்றும் சிலர் திகம்பரர் என்றுங் கூறப்படுவர் இவ்விரண்டு சந்நியாசிகளும் தலைமயிரைத் தாங்களே பிடுங்கிக்கொள்வர், க்ஷெளரம் செய்துகொள்ளார். (தத்வநிஜானு.)

அருக்ககீர்த்தி

சடியாசன் மகன். திவட்டன் மைத்துனன். (சூளாமணி),

அருக்கசந்திரன்

இவன் உஞ்சைமா நகரவாசி. குண்டலகேசிக்கு அருக மதசித்தாந்தம் உபதேசித்தவன்.

அருக்கனிலை

சனிக்கிழமை இரா (30) நாழிகையும், ஞாயிற்றுக்கிழமை பகல் (30) நாழிகையும் தெற்கிலும், ஞாயிறு இரா (30)ம், திங்கள் (90)ம் தென் மேற்கிலும், செவ்வாய் பகல் (30)ம், இரா (10)ம், மேற்கிலும் மற்ற (20)ம் புதன்கிழமை பகல் (30))ம், வடமேற்கிலும், புதன் இரா (30)ம், வியாழம். பகல் (30)ம், இரா (10)ம் வடக்கிலும் மற்ற (20)ம் வெள்ளி (90)ம், வடகிழக்கிலும் அருக்கனிருக்கும். அக்னி மூலை பாழ்.

அருக்கன்

1. சூர்யனுக்கு ஒரு பெயர். 2. ஒரு பூதன் சண்முக சேநாபதி.

அருக்கபரணி

ஒரு காந்தர்வ ஸ்திரி.

அருசி

பிருது சக்கிரவர்த்தியின் தேவி.

அருசிமாலை

மருசியின் தாய். (சூளாமணி).

அருச்சராதிமார்க்கம்

பாவனையால் பூசிப் போரடையும் ஆதித்யாதி மண்டல மார்க்கம்.

அருச்சுநகன்

கௌதமியைக் காண்க.

அருச்சுநன்

1. இவன் பூர்வம் நரன் எனும் ஒரு இருடி, பூபார நிவர்த்தியின் பொருட் டுப் பாண்டுவின் தேவியாகிய குந்திதேவியிடம் இந்திர மந்திரத்தால் பங்குனியுத்திரத்தில் பிறந்து தந்தையாகிய பாண்டு இறக்கப் பெரிய தந்தையாகிய திருதராட்டிரனிடம் வளர்ந்து துரோணரிடம் வில் வித்தை முதலில் கற்று வல்லவனாய்த் தன் சகோதரருடன் இருந்தனன். ஒரு நாள் துரோணர் ஸ்நானத்திற்குச் சென்றபோது முதலைபற்றத் துரியோதனாதியர் அவரை மீட்க வலியற்றது கண்டு அம்முதலையைக் கொன்று அவரை மீட்டவன், துரோணர் கட்டளைப்படி பாஞ்சாலனைத் தேரில் கட் டிச்சென்றவன். இந்த அருச்சுநன் முதலிய ஐவரும் உயிருடனிருக்கின் தனக்குப் புகழும், இராச்சியமும் நிலைக்காவென்ற கருத்துள்ள துரியோதனன், சூதால் அரக்குமாளிகை கட்டுவித்துத் தந்தையால் பாண்டவர்களை வருவித்து அதிற் பாண்டவர் இருக்கையில் அதைக் கொளுத்துவித்தனன். பாண்டு புத்திரர் அதினின்று நீங்கி நிலவறை வழியாகத் தப்பிப் பிராமணவேடம் பூண்டு வேத்திரகீய நகரடைந்து வாழ்கையில் அருச்சுநன் திருபதன் கட்டிய மச்சயந்திரத்தை அறுத்துத் திரௌபதியைக் கொணர்ந்து தாய் சொற்படி நால்வருடன் மணந்து திருதராட்டிரன் சொல்லால் அத்தினபுரஞ் சேர்ந்து இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டு வந்து அத்தினபுரத்தில் மண்டயங் கட்டினதைப் பார்க்கச்சென்று அங்குச் சூதாடி நாடு முதலிய இழந்து தமயனார் சொற்படி அடங்கியிருந்து தாயத்தார் தமது மனைவியின் துகிலையுரியப் பொறுத்துக் கடைசியில் கர்ணனைக் கொல்லச் சபதஞ் செய்து நீங்கி ஆரண்யஞ்சென்று இந்திரன் வருவிக்கச் சென்று அங்கு உருப்பசி மோகிக்க உடன் படாது பேடியுருவாக அவளாற் சாபம் பெற்று, அவ்வுரு சமயத்தில் வரும்படி வரம்பெற்றுக்கொண்டு நீங்கி அக்நி வேண் டக் காண்டவ வநத்தை அக்நிக்களித்து அந்த அக்கியிடத்தில் காண்டீபமென்னும் வில்லையும் அக்ஷயத்தூணீரத்தையும், இரத்தத்தையும் பெற்று வீமனால் அதமக்கொடியடைந்து திரௌபதை கேட்க மித்திரனென்னும் இருடிக்காகக் கனிந்த நெல்லிக்கனியைக் கொய்துதந்து பிராமணன் பொருட்டுத் திருடர்களைக் கொல்ல முயலுகையில் திரௌபதியும் தருமனும் இருக் கக்கண்டு தீர்த்தயாத்திரை சென்று நாரீதீர்த்தத்தில் முதலைகளாயிருந்த பெண் களின் சாபத்தைத் தீர்த்தவன். உலூபியென்னும் நாகக்கன்னிகையை மணந்து அரவானைப் பெற்று மணலூர் புரத்தின் அரசனாகிய சித்திரவாகனன் பெண் ணாகிய சித்திராங்கதையை மணந்து பப்புருவாகனைப் பெற்று, முதலையாக இருந்த காந்தருவன் சாபத்தைப் போக்கி, சுபத்திரை பொருட்டுத் தவசிவேடங்கொண்டு துவாரகை சென்று அவளை மணந்து அபிமன்யுவைப் பெற்று, பாசுபதத்தின் பொருட்டுச் சென்று தவஞ்செய்கையில் துரியோதனனால் ஏவப்பட்ட பன்றியுருக்கொண்ட மூததானவனென்னும் அரக்கனைக் கொல்லச் செல்லுகையில் வேடராக வந்தெதிர்த்த சிவமூர்த்தியைப் பழித்து அவரால் துன்பமடைந்து வருந்தியபோது அவர் காட்டிய உண்மையுருவைக் கண்டு தரிசித்து மோக்ஷம் வேண்ட, நீ என்னை வேடனென நிந்தித்தபடியால் மறுபிறப்பில் திண்ணன் எனும் வேடுருக்கொண்டு பூசித்து முத்தியடைக என்னும் வரமும், பாசுபதமும் பெற்று மீண்டு, அஞ்ஞாத வாசத்தில் விராடபுரத்தில் பேடியுருவம் கொண்டு, மறைந்திருந்து, நிரைமீட்சி சண்டையால் வெளிப்பட்டுப் பாரதப்போரில் ஐந்தாநாள், ஏழாநாள், பத்தாநாட்களில் பீஷ்மருடன் சண்டைசெய்து, பத்தாநாள் இறுதியில் அவரைப் போரில் விழச் செய்து, பதின்மூன்றா நாளில் தன் குமரனாகிய அபிமன்யு இறக்கச் சூரியன் அஸ்தமிக்குமுன் என் குமரனைக் கொன்றவளைக் சொல்லுவேனெனச் சபதஞ்செய்து சயத்திரதனைக் கொன்று, அவன் தலையைத் தவஞ்செய்யும் அவன் தந்தை கையில் விழச் செய்து பதினான்காநாள் பூரிச்சிரவன் கையை அறுத்துப் பதினேழா நாள் கர்ணனைக் கொன்று பதினெட்டா நாளிறுதியில் அக்நி கொடுத்தவரத்தின்படி தேர்எரியக் கண்டு வியப்படைந்து சகோதாருடன் அரசாட்சி புரிந்து யாதவ வம்ச அழிவைத் தார்சனாற் கேள்வியுற்று விசனமடைந்து துவாரகை சென்று வசுதேவரைத் தேற்றி யாதவர்களின் பாரிகள் முதலியவரை அழைத்துக்கொண்டு இந்திரப்பிரத்தஞ்சென்று வச்சிர தந்தனைக் காவலாக்கி மீண்டு, கண்ணன் உடலைத் தகனமாக்குவித்துக் கண்ணன் தேவியர்களை அழைத்துக்கொண்டு வருகையில் வேடரிடத்தில் அவர்களைப் பறிகொடுத்து வெல்ல வலியில்லாமல் இதம் பேசித் தப்பித்துக்கொண்டு இந்திரப்பிரச்த்தஞ் சென்று வச்சிரனுக்குப் பட்டங்கட்டி வியாரைக் கண்டு நடந்தவைகளை கூறினன். வியாசர் அருச்சுகனை நோக்கி நீங்கள் தவமேற் கொள்ளுங்களென அதைத் தமய னுடன் கூறி ஐவரும் கலியுகத்தின் தொடக்கத்தில் தவமேற்கொண்டு செல்லு கையில் அருச்சுநன் காண்டீபத்துடன் செல்வது கண்ட அக்நி, எதிர் தோன்றிக் காண்டீபத்தைக் கேட்கக் கொடுத்துச் சண்டையில் ஒருநாளில் செயிக்கிறேனென்று மூன்று நாள் கழித்ததனால் நகுலனுக்குப் பின்னிறந்தவன். மகாவீரன், அதிசௌந்தர்யன், இவனுக்கு வெண்ணிறமாயிருத்தலால் அருச்சுநன் எனவும், பங்குனி உத்திரத்தில் பிறந்ததால் பற்குநன் எனவும், பிரதையெனும் குந்தி புத்திரனாகையால் பார்த்தன் எனவும், இந்திரனால் தரிக்கப்பட்ட கிரீட முடையவனாதலால் கிரீடி யெனவும், வெள்ளைக்குதிரைகள் கட்டிய தேருடையானாதலால் சுவேதவாகனன் எனவும், பகைவர் வெறுக்கப் போர் செய்வோனாகையால் வீபற்சு எனவும், யுத்தத்தில் வெற்றியுள்ளோனாகையால் விஜயன் எனவும், அஞ்ஞானத்தை நீக்கவல்ல வனாகையால் கிருட்டினன் எனவும், இடம் வலம் என்கிற இரண்டு கைகளாலும் எய்ய வல்லவனாகையால் சவ்வியசாசி எனவும், உத்தரகுருவரையுஞ் சென்று பகைவரிடம் தனம் பெற்றவனாதலால் தனஞ்சயன் எனவும் (10) பெயர்களுண்டு. இவன் சங்கத்திற்குத் தேவதத்தமென்று பெயர். இவன் முதற்பிறப்பில் நரனாகவும், இரண்டாவது இலஷ்மணனாகவும், மூன்றாவது அருச்சுநனாகவும் பிறந்து விஷ்ணுமூர்த்தியை நீங்காதிருந்தவன். தித்திரி, கல்மாஷம், மண்டூகம் இவை, அருச்சுநன் காந்தருவரிடமிருந்து திக்கு விஜயத்தில் காணிக்கையாகக் கொண்ட குதிரைகள். (பாரதம்~சபா பருவம்.) 2. (சூ) ரைவதன் எனும் மநுப்புத்திரன். 3. சமீகருக்குச் சுதானியிடம் உதித்த குமரன். 4. ஒரு வேடன், பிராமண ஸ்திரீயின் புத்திரன் பாம்பு கடித்து இறக்கக் கண்டு அப்பாம்பைப் பிடித்து மிருத்யு முதலியவரைக் கண்டவன். அப்பிள்ளையின் தாய் வேண்ட்ப் பாம்பைக் கொல்லாது விடுத்தவன். 5. கார்த்தி வீர்யார்ச்சுநனுக்கு ஒரு பெயர்,

அருச்சுனி

1. வாணாசுரன் புத்ரி. இவளுக்கு அருச்சுனை யெனவும் பெயர் 2. ஒரு நதி.

அருச்சுனை

பாகுதை யென்பவளின் பெயர்.

அருஜன்

இராவணனுக்கு உதவி பரியவந்த இராக்ஷசன். விபீஷணனால் கொல்லப்பட் டவன்.

அருஞ்சயன்

1. விசையைக்குப் பாட்டன். 2. இந்திர சஞ்சய ராஜகுமாரன். (சூளா).

அருட்சத்தி

பாமசிவனைப் பிரியாதிருக்குஞ் சக்தி.

அருட்டநகர்

உச்சயினிக்கும் சயந்தி நகருக்கும் இடையேயுள்ள பட்டணம். (பெருங் கதை).

அருணகிரிநாதர்

பட்டினத்து அடிகள் திரு அருணைக்கு எழுந்தருளிய காலத்துக் கருமவசத்தால் கோயில் தாசியைக் கண்டு மோகித்தனர். அத்தாசி தன் தாயிடங்கூறத் தாய் பெண்ணை அழைத்து வருமுன் சுவாமிகள் வீரியத்தை அரசிலையில் வைத்து அவளது வரவறிந்து உன்னை நினைத்தவன் தொன்னையில் இருக்கிறான் என்றனர். தாசி அவ்வீரியத்தை அருந்தி அதனால் கருக்கொண்டு இவரைப் பெற்றனள் என்பர். அருணகிரியார் வளருமிடத்து இளமையில் தாயிறக்கத் தமக்கைவளர்க்க வளர்ந்து இருந்த செல்வ முதலியவைகளைக் காமங் காரணமாகச் செலவழித்துத் தமக்கை கர்ணகடூரமாகக் கூறிய வார்த்தை கேட்டுப் பெண்களில் வெறுப்படைந்து திருவண்ணமலையார் திருச்சந்நிதானத்தில் வல்லாளராசனால் கட்டப்பட்டிருக்கும் கோபுரத்தின் மீதிருந்து உயிர் போக்கிக்கொள்ளக் குதித்து உயிர் நீங்காமல் அவ்விடம் துறவியாகவந்த குமாரக்கடவுளால் சடாக்ஷரம் உபதேசிக்கப் பெற்றுத் துறவடைந்து குமாரக்கடவுள் எழுந்தருளியிருக்கும் ஆல யங்கள் தோறுஞ் சென்று திருப்புகழ்பாடிக் கோபுரத்தில் எழுந்தருளி யிருக்கையில் வில்லிபுத்தூரர் என்னும் கவி அருணைக்கு வந்து அரசன் அனுமதி பெற்று அருணகிரியாரிடம் வாதிடத் தொடங்குகையில் அருணகிரிநாதர் வில்லிபுத்தூராருக்கு மரியாதை முதலிய செய்யவும் வில்லிபுத் தூரார் செய்யாதிருந்ததனால் அருணகிரிநாதர் விகடபரிமளம் விளம்பக் கவி கோபித்ததை அரசனறிந்து வில்லியை அடக்கி நடுவாக நின்று அருணகிரியாரை ஒரு அந்தாதி பாடச்செய்து அதற்கு வில்லியை உரைகூறச் செய்து, தோற்றவர் வென்றவர் மனப்படி நடக்கக் கட்டளை யிட்டனன். அக்கட்டளைப்படி அருணகிரிநாதர் கந்தரந்தாதி பாட அதற்கு வில்லி உரை கூறிக்கொண்டு வந்து ” திதத்தத் தத்தித் தத்திதி தாதை தாத துத்தித் தத்திதா,” என்னுஞ் செய்யுட்கு உரைசுடற அறியாது மயங்கித் தோற்க வில்லிபுத்தூரார் காதைக் காட்டினர். அருணகிரி நாதர் அது உமக்கு நாம் கொடுத்ததாக எனவிட்டுக் கோபுரத்தில் எழுந்தருளியிருந்தனர். இதுநிற்கச் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகனாகிய சமணன், பிரபுட தேவமகாராசனை ஏவி. அருணகிரியாரைக் கந்தமூர்த்தியை வருவிக்கவெனக் கூறித் தான் தேவியை உபாசித்து அவரது வரவைத் தடுக்கச் செய்தனன். அவ்விதஞ் செய்தும் கந்தமூர்த்தி அருணகிரியார்க்கும் அரசனுக்கும் தரிசனந்தந்தனர். கந்த மூர்த்தியின் பேரொளியால் அரசனுக்குக் கண்ணொளி மழுங்கிற்று. இதனால் அரசன் விசனமடையச் சம்பந்தாண்டான் அரசனை நோக்கி அருணகிரியாரைக் கொண்டு தெய்வலோகத்துப் பாரிசாதமலர்கொண்டு வரத் தூண்டினன். அவ்வகை அரசன் வேண்டுகோளால் அருணகிரியார் தமது தேகத்தை மலையிலடக்கஞ் செய்து கிளியுருக்கொண்டு பறந்து தேவலோகஞ் சென்று இந்திரனால் உபசரிக்கப்பட்டு இருந்தனர். அருணகிரியார் தேகமிரும்ததை அறிந்த சம்பந்தாண்டான் அருணகிரி பொய்கூறி உயிர் நீங்கினரென்று அர சனுக்குத் தெரிவித்தனன்; அரசன் அருண கிரிநாதர் தேகத்தைத் தகிக்கும்படி ஏவினன். கிளியுருக்கொண்டு நீங்கிய அருணகிரியார் மலர் கொண்டு மீண்டு அரசன் கொலுவிற்குவர அரசன் விசனமடைந்து புஷ்பத்தால் கண் பெற்றனன். இவைகளைக்கண்ட சம்பந்தாண்டான் பொறாமை கொண்டு காளியை உபாசிக்கக் காளி தரிசனந் தரவும் வணங்காததினால் அவளாற் கொலை யுண்டனன். இவர் இக்கிளியுருவுடன் முருகக்கடவுள் கட்டளையால் அவரது வலது தோளில் வீற்றிருந்தனர். இவர் செய்த நூல்கள், திருப்புகழ், திருவகுப்பு, கந்தரந்தாதி. (கர்ணபரம்பரை).

அருணந்தி சிவாசாரியர்

இவர், திருத்துறையூரில் ஆதிசைவர் குலம் செய்த தவப்பேற்றால் திருவவதரித்துக் காமிகாதி ஆகமங்கள் முதலியவற்றில் வல்லவராகச் சகலாகம பண்டிதர் எனத் திருநாமம் அடைந்து தம்மையடைந்த அடியவர்களுக்குச் சிவ தீக்ஷை செய்து வரும் நாட்களில் ஒரு நாள் மெய்கண்டதேவர் தம்மையடைந்த மாணாக்கர்க்கு அருளுபதேசஞ் செய்து வரு தலைக் கேட்டுத் தம்மிடம் அவர் வராமையால் தாமே அவரைக் காண்பான் எண்ணிச் செருக்குடன் வருதலைக்கண்ட மெய்கண்ட தேவர், அக்காலம் தமது மாணக்கர்க்குப் பாச பதார்த்தமாகிய ஆணவ இலக்கணத்தை விளக்குவோர், அதற்குக் காட் டாகத் தம்பாலடைந்த சகலாகமபண்டிதரைக் காட்டினர். அதனைக் கேட்ட பண்டிதர் ஒன்று முரையாடாது தேசிகரது ஞானநோக்கத்தால் அதிதீவிர பக்குவமடைந்து பணிந்து நின்றனர். மெய்கண்ட தேவரும் அவரது பக்குவத்தால் அவருக்கு ஞான தீக்கை செய்து தாமருளிச்செய்த சிவஞானபோதத்தை உபதேசித்தனர். சகலாகம பண்டிதரோ அவற்றை நன் குணர்ந்து அச்சிவஞான போதத்தின் வழி நூலாக ” பார்விரித்த நூலெல்லாம் பார்த்தற்குச் சித்தியிலே யோர் விருத்தப் பாதிபோதும். ” “சிவனுக்குமேற் றெய்வ மில்லை சிவஞான சித்திக்குமேற் சாத்திர மில்லை” எனக்கூறும் சிவஞானசித்தியார் எனும் சைவசித்தாந்த சாத்திரத்தை யருளிச்செய்து தேசிகர் சந்நிதானத்தில் எழுந்தருளச் செய்தனர். அதனை மெய்கண்டார் கடைக்கணித்தருளி அருணந்தியெனும் திருநாமமும் இட்டனர். பின் அரு ணந்திசிவாசாரியர் தேசிகர்மீது இருபா இருபது எனும் ஒரு சாத்திரமுஞ் செய்து தேசிகர் திருவடி நீங்காதிருந்து திருக்கடந்தை மறைஞானசம்பந்தருக்கும் மற் றவருக்கும் உபதேசித்துச் சிவபெருமான் திருவடியடைந்தனர்.

அருணன்

காசிபருக்கும், விநதைக்கும் பிறந்தவன். இவன் தாய், தன் மாற்றாளாகிய கத்துருக்கு முதவில் குமரர்கள் பிறந்தனர் என்று பொறாமையால் தான் அவயங்காத்திருந்த முட்டையைப் பருவம் அடையா தமுன் உடைக்க அதிலிருந்து காவில்லாதவனாக இவன் பிறந்து என்னைக் காலில்லாதவனாகச் செய்தபடியால், நீ மாற்றவளுக்கு அடிமையாகிப் பின்பு என் சகோதரன் கருடனால் நீங்குக என்று சபித்தவன். இவன் பார்யை ஸ்யேனி. குமரர் சம்பாதி, சடாயு, தம்பி கருடன். இவன் சூரியனுக்குச் சாரதியாயினன். 2. இவன், இந்திரன் கொலுவின் விநோதங்களைக் காணப் பெண்ணுருக் கொண்டு செல்ல இவனை இந்திரன் கண்டு புணர்ந்தனன். அதனால் வாலி பிறந்தனன். பின்பு சூரியன் இவனது தாமதமறிந்து நடந்ததை வினவி அப்பெண்ணுருக்கொளச்செய்து புணரச் சுக்கிரீவன் பிறந்தனன். இவன் புத்திரன் உத்தாலகன் என்பர். (திருவொத்தூர்புராணம்). 3. முராசுரன் குமரன் கண்ணனுடன் பொருது மாண்டவன். 4. இவன் ஒரு அசுரன் சிவசத்தியாகிய பிரமராம்பிகையால் கொல்லப்பட்டவன். (பிரமராம்பிகையைக் காண்க.)

அருணபுரத்தாழ்வான்

எழுபத்து நான்கு சிங்காசனாதிபதிகளில் ஒருவர். வைஷ்ண வாசாரியர். (குருபரம்பரை).

அருணபுரத்து நம்பி

எழுபத்து நான்கு சிங்காசனாதிபதிகளில் ஒருவர். வைஷ்ணவா சாரியர். (குருபரம்பரை).

அருணமச்சிவாயதேவர்

உமாபதி சிவாசாரியர் மாணாக்கர். சித்தாந்த சைவாசாரியர்களில் ஒருவர்.

அருணர்

கிருஷ்ணன் குமரர்.

அருணாசலக்கவிராயர்

சோழ மண்டலத்திலே தில்லையாடியிலே, கார்காத்தவேளாண் மரபிலே, நல்ல தம்பிபிள்ளையும், கற்பிலே சிறந்த அவாது மனைவி வள்ளியம்மையும், புரிந்த அரிய தவப்பேற்றினாலே, அருணாசலக்கவிராய ரென்பவர், பிறந்து உரிய பருவத்தே கல்விபயின்று வருங்காலத்தில் இவரது (12) வது வயதில், தாய் தந்தையர்கள் தேக வியோக மடைந்தமையால் கல்விப்பயிற்சிக்கு இடையூராயினும் ஊழ்வலி துணைக்காரணமாய்ச் சமீபமாயுள்ள, திருக்கைலாய பரம்பரை நிகமாகம சித்தாந்த சைவாசாரிய பீடமாக விளங்கும் தருமபுர வாதீனத்தைச் சார்ந்து அப்போதைய பண்டார சந்நிதிகளால், அபிமானிக்கப்பெற்று அவ்வாதீனத்துப் பிரபலவித்துவானாகிய அம்பலவாணக்கவிராயரிடத்தே (25) வது வயதுவரையில் உபயபாஷாப் பிரணீதங்களாகிய, பொது நூல்களையும், சைவசமய நூல்களையும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து வருங்காலத்து அவ்வா தீனத்துப் பண்டாரச் சந்நிதிகள் இவரது புத்தி நுட்பத்தையும், கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்து விளங்கும் பரிபக்குவத்தையும் உணர்ந்து தீக்ஷை செய்து, திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகாணமீறாகவுள்ள சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கையும் உரையுடனே விதிப்படி உபதேசிக்க உணர்ந்து அவற்றின் மெய்ப்பொருளாவார் சிவபெருமானே என்றும் தெள்ளிதிற்றுணிந்து தெளிந்தனர். பின்பு திருவள்ளுவநாயனார் அருளிச்செய்த திருக்குறளில், அறத்துப் பாலில் முதற்கண் இல்லறமும் பின்னர் துறவறமும் கூறியிருத்தலால், தாமுமவ்வாறே இல்லறத்தை அடைய வேண்டு மென்னும் விருப்பைப் பண்டாரச் சந்நிதிகளுக்கு விண்ணப்பஞ்செய்து அநுமதி பெற்றுத் தமது ஜனன பூமியாகிய தில்லையாடியை அடைந்து (30) வது வயதில் அபிஷேகக் கட்டளைக் கருப்பூரில் குலமுறைக்கேற்ற ஒரு கன்னிகையை விதிப்படி விவாகஞ் செய்துகொண்டு தில்லையாடியிலிருந்து இல்லறத்தை நடத்துதற்குத் துணைக்காரணமாகிய பொருளைப் பிறவுயிர்களுக்குக் கேடுபயவாத நன்னெறியிலீட்டி, நித்திய கருமத்துக்கும், பொருளீட்டுதலுக்கும், உரியகாலமல்லாக் காலமெல்லாம் அவமாக்காது புண்ணிய நூலாராய்ச்சி செய்யவுங் கருதிக் காசுக்கடைத் தொழிலைக்கொண்டு இல்வாழ்வாராயினர். வாழுநாளில் தமது வியாபரநிமித்தம் புதுவைக்குச் செல்கையில் சீகாழிக்கோயில் கட்டளை விசாரணை கர்த்தரும் முன்னர்த் தம்மோடு பயின் றவருமாகிய சிதம்பரநாத முனிவரை ஷயூர் தெற்குவீதிக் கட் டளை மடத்திற் கண்டிருவரு நெடுநாட் பிரிந்த பிரிவு நீங்கப் பரஸ்பரம் தழுவி யத்யந்த விநயத்தோடு சம்பாஷிக்குங்கால் முனிவர் சீகாழிக்குப் பள்ளுப் பாடுவதற்குப் பீடிகை இட்டதையும், அதை முடிக்கப் பிரமேசர் கைங்கரியத்தால் தனக்கவ காசம் இன்மையையுங் கூறி இவர் கையிற் கொடுக்க அன்று இரவிலேயே, இவர் சொற்சுவை, பொருட்சுவை, அமையப் பள்ளைப் பாடிமுடித்து அவசியம் தாம் புதுவைக்கேகும் பயணச்செய்தியை முனிவரிடங்கூறாது அவரது அணுக்கத் தொண்டினர்பாற் கூறிக் காழிப்பள்ளைக் கொடுத்து விட்டுப் புதுவைக்கேகிச் சிலகாலம் அங்கு வசித்தார். சிதம்பரநாதமுனிவர் வைகறை யிற் றமது தொண்டால் காழிப்பள்ளின் முடிவையும் கவிராயர் பயணச் செய்தி யையும், கண்டும், கேட்டும், களித்தும், சலித்தும் அவரை எவ்வாற்றானும் இவ் விடம் இருத்த வேண்டு மென்னுங் கருத்தால் அவருக்கென்றே ஒரு கிருகம் வடக்கு வீதியிற் கட்டுவித்து அவரது குடும்பத்தைக் கவிராயர் வருவிப்பதுபோற் சீகாழிக்குத் தாம் வருவித்து, புதுவைக்குச் சென்ற கவிராயர் இங்ஙனம் விரைவில் வருவாரென அவர்களுக்குத் திடவாக்களித்துத் தம்மாற் கட்டுவித்த புதுக்கிருகத்திற் சுபதினத்திற் பிரவேசம் பண்ணுவித்தனர். கவிராயர் புதுவை நீங்கிச் சீகாழிக்குச் சிதம்பரநா தமுனிவரிடம் வந்தபோது கவிராயரும், முனிவரும் உலாப்போவது போற் சென்று இவர் குடும்பத்தார் வசிக்கின்ற புதுக்கிருகத்திற் புகுந்தார்கள், கவிராயர், தமது மனைவி முதலாயினோர் அங்கு இருக்கக் கண்டு வியப்புற்று அவர்களால் நடந்த எல்லாவரலாற்றையும் அறிந்து குருலிங்க சங்கம க்ஷேத்திரமாயும், திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவவதாரத் தலமாயும் விளங்கும், சீகாழித்தலத்தில் வசிக்க ஆகூழிருந்தமையையு முணர்ந் தம் முனிவர் வேண்டுகோளுக்கு இசைந்து அவ்விடத்திலேயே வசித்திருந்தார். ஆதலால் இவர் அன்று தொட்டுச் சீகாழி அருணாசலக்கவிராயரெனப் பேர் பெற்றனர். இவரிடத்தே கம்பராமாயணங் கற்று வல்வராகிய சட்டநாதபுரம் கோதண்டராமையர், வெங்கிடராமையர் என்னும் சங்கீத வித்வான்கள் வந்து இராமாயணத்தைக் கீர்த்தனைகளாகப் பாடித் தருகவென அவ்வாறே அவர்கள் வேண்டுகோளின்படி கீர்த்தனா ரூபமாக இராமாயணத்தையும் அதனுடன் அசோமுகி நாடகம், அநுமார் பிள்ளைத் தமிழ், காழியந்தாதி, காழிக் கலம்பகம், காழிக்கோவை, தியேகேசர் வண்ணம், சம்பந்த சுவாமிகள் பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்களையும் இயற்றினார்; பின்னர் சிதம்பர நாதமுனிவர் வேண்டுகோளின்படி வடமொழியிலுள்ள சீகாழித்தலபுராணத்தைத் தென்மொழியில் (31) அத்தியாயமாக இயற்றிச் சிவபெருமான் சந்நிதியில் எழுந்தருளப் பண்ணி விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து இருந்துகொண்டு அங்கு வந்திருந்த உபயபாஷா பண்டித சைவசித்தாந்த சாஸ்திரிகள் முதலாயினோரும், சிதம்பாநாதமுனிவரும் கேட்டு மகிழப் பிரசங்கித்து அரங்கேற்றினார். இவர் சாலிவாகன சகாப்தம் (1634) லில் பிறந்து (1701)ல் சீகாழியில் சிவபெருமானுடைய திருவடியை, அடைந்தார்.

அருணாசலமுதலியார்

இவர் திருமயிலையிலிருந்த தமிழ் வித்வான். இவர் செய்த நூல்கள்: கொடியிடைமாலை, சிதம்பரம் சிவகாமியம்மைப் பதிகம், திருமுல்லைவாயில் மாசிலாமணியீசர் பதிகம்.

அருணாசுவன்

இக்ஷ்வாகு வம்சத்தவனான பர்ஹிணாசுவன் இரண்டாம் புத்திரன்.

அருணாதித்தன்

அருணன் தவஞ்செய்ய அவன் முன் சூரியன் தோன்றித் தனக்குப் பாகனாக என வேண்டியதால் இப் பெயர் பெற்றனன். (காசிகாண்டம்).

அருணி

பிரமன் மானசபுத்ரருள் ஒருவன்.

அருணை

1. பஞ்சபூதத் தலங்களிலொன்று. இது தேயுத்தலம். இதில் சிவாலயம் ஒன்று இருக்கிறது. இது திருவண்ணாமலையென்று வழங்கும். வடஆற்காடு ஜில்லா, 2. வசிட்டரைக் காண்க.

அருண்மொழித்தேவர்

சேக்கிழார் குடியிற்பிறந்த பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு ஒரு பெயர். (பெரியபுராணம்).

அருத்தாபத்தி

பொருள், இது, கங்கையில் இடைச்சேரி யென்றால் கங்கைக்குள் என்றுணராமல் அதன் கரையிலென்றுணரலாம்.

அருத்தாபத்திசமை

அருத்தாபத்தியை முன்னிட்டுச் சாத்தியா பாவத்தைக் காட்டல்.

அருந்த சதுர்த்தசி விரதம்

இது புரட்டாசியன் சுக்லபக்ஷம் சதுர்த்தசியில் அநுஷ்டிப்பது. இது முதலில் யமுனை பூசைசெய்து பிறகு ஒரு நூலில் பதினான்கு முடியிட்டு முடியொன்றுக்குக் கிரந்தி பூஜை செய்து பின் அநந்த பூசை விஷ்ணு அஷ்டோத்தரத்தால் பூசித்து நோன்புக் கயிற்றைத் தக்ஷிண கரத்தில் கட்டிக் கொண்டு விரதமிருந்து பாரணை செய்து பிராம்மண போஜன முதலியன செய்து இஷ்டசித்தி பெறுவது.

அருந்ததி

1. கருத்தம முனிவர் குமரி. வசிட்டர் தேவி. மகா பதிவிரதை. இவள், தன் நாயகனிடம் சந்தேகித்ததால் கருநிறமியைந்த செந்நிறமுள்ளவளாய் யாவருங் காண நக்ஷத்திர பதம்பெறச் சாபமடைந்தனள், இவள் குமரர் சத்திமுனிவர் முதலிய நூற்றுவர். பஞ்சகன்னியரில் ஒருத்தி. உலகத்தவர் மணஞ்செய்து கொள்கையில் கற்பிற்கு இலக்ஷியமாகத் தங்கள் மனைவியர்க்கு இவளைக் காட்டுதல் மரபு. துருவமண்டலத்தருகு சப்தருஷி மண்டலம், இந்த ஏழு நக்ஷத்திரங்களுக் கிடையில் வசிட்டர் இருப்பர். அவர்க்கருகில் அருந்ததி இருப்பள். சிவமூர்த்தி பூர்வம் பாலவேடந் தரித்தெழுந்தருளிய காலத்து நிலைகலங்காத பதிவிரதை, திசம்பரராகத் தாருகவனமடைந்த காலத்தும் நிலைகலங்காதவள். இவளை மணவினை காலத்துக் கணவன் தன்னிடம் அன்புடனிருக்கவும், தனவானாகவும், அன்ய ஸ்திரீ சங்கமம் வேண்டாதிருக்கவும் விரும்பித் தம்பதிகள் தரிசித்துப் பிரார்த்திப்பது வழக்கம். இவளிடம் சூரியன், இந்திரன், அக்நி மூவரும் ஸ்திரீகளின் மனோபாவமறிய வேதியருருக்கொண்டு சென்றனர். இவர்களைத் தேவரென்று அறிந்து கொண்ட அருந்ததி, அர்க்கிய பாத்தியத்திற்கு நீர்கொண்டு வரச் செல்ல இம்மூவரும் அவளைத் தடுத்து நாங்களே இக்கும்பத்தை நீரால் நிறைக்கிறோமென்று முதலில், இந்திரன் ஜன்மத்தால் பிராமணனிடத்தில் பயமிலாதும், தவம், பிரமசரியம், அக்நி ஹோத்ராதிகளால் என் பதவியை ஒருவன் அடைவது சத்தியமாயின் இக்குடம் காற் பங்கு நீரால் நிறைக எனவும், அக்கி, யாகத்தைக் காட்டிலும் அதிதியைப் பூசித் தன்னமளிப்பதில் யான் திருப்தியடைவது சத்தியமாயின் மற்ற காற்பங்கும் நீர் நிறைக எனவும், சூரியன், நாடோறும் மந்தேஹர்கள் செய்யும் தீமையை வேதியர் செய்யும் அர்க்கிய பிரதானமாகிய பிரம்மாஸ்திரம் நீக்குவ துண்மையாயின் மிகுதி காற்பங்கு நிறைக எனவும், அருந்ததி, இரகசிய ஸ்தானமும் இதர புருஷ சம்பாஷணையுங் கிடைக்காவெல்லை ஸ்திரீகள் பதிவிரதைகள் ஆதலின் ஸ்திரீகளைச் சாக்ரதையாகக் காக்க என முழுதும் நிரம்பியது. இவள் சுவாகாவால் அநுக்ரகம் பெற்றவள். (சிவமகாபுராணம்.) 2. ஒரு பர்வதம். 3. (அநுருந்ததி) இதில் (நு) கெட்டது. நாயகனின் விருப்பத்தை அநுசரிப்பவள், (பார~அநுசா.) 4. பதரபாசனம் காண்க.

அருந்தமன்

குபேரனைக் காண்க.

அருபப்பிரமர்

உலகம் முப்பத்தொன்றனுள் இருபத்தெட்டாவதாகிய ஆகாசா நந்தியாயதனலோக முதலிய நான்குலங்களிலும் முறையே தங்கும் நான்குவகைப் பிரமகணங்கள். இவர்களைத் தியானமைந்தனுள் ஐந்தாவதிற்றேறியவர் என்பர். (மணிமேகலை)

அருபை

ஒரு தெய்வம். பிஜஹாரிணியின் குமரி. வீர்யகலித முண்டு செய்பவள், (மார்.)

அருமன்

இவன் ஒரு பிரபு. சிறுகுடி யென்னுமூரிலே பரம்பரைச் செல்வமுடைய மரபிலே தோன்றியவன். எக்காலத்தும் வருவார்க்கு வரையாது சோற்றுணவு கொடுப்பவன். இவன் வீட்டில் நாள்தோறும் தெய்வத்துக்கு நிவேதித்துப் போடும் பலியுணவை உண்ணவேண்டிக் காக்கைகள் கூடியிருப்பதை “கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப்பேடை’ என்னுஞ் செய்யுளில் நக்கீரர் வெகு சிறப்பாக எழுதுகிறார் (367) இவனுடைய சிறுகுடியென்னுமூர் மிகப் பழமையுடையதாகக் கொண்டு மூதூரென்னும் பெயராலே கூறுவர்; கள்ளில் ஆத்திரேயனார் “ஆதியருமன் மூதூரன்ன” என்றார் குறு, (293) இவனை நற்றிணையிற் பாடியவர் நக்கீரர். (நற்றிணை)

அருமருந்துதேசிகர்

இவர் பாண்டி நாடடுத் திருச்செந்தூரிலிருந்த சைவர். பல இலக்கியங்களிலிருந்த சொற்களைத் திரட்டி ஒரு சொற் பல பொருளுடையவாக அரும்பொருள் விளக்கமெனும் நிகண்டியற்றியவர். அஃது (700) விருத்த முடையது. தில்லை மன்றில் அரங்கேற்றியது.

அரும்புகட்டிகள்

வேளாளரில் ஒருவகையார். இவர்கள் சிவாலயத்தில் பூமாலை தொடுக்கும் தொழில் மேற்கொண்டவர்கள். இராமநாதபுரம் ஜில்லாவில் உள்ளவர்கள். இவர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் தொண்டை நாட்டிலிருந்து சென்றவர்கள். (தர்ஸ்டன்.)

அரும்பைத்தொள்ளாயிரம்

ஒட்டக்கூத்தராற் பாடப்பட்ட ஒரு பிரபந்தம்.

அருளாளதாசர்

இவர்க்கு மதுரகவி வரதராஜ ஐயங்கார் எனவும் பெயர். இவர் நெல்லி நகர்வாசி, கவிபாடுவதில் வல்லவர். இவர் தமிழில் ஒரு பாகவதபுராணம் பாடியிருக்கின்றனர்.

அருளாளன்

ஒரு மறையவன் திருச்சோற்றுத் துறையில் சிவமூர்த்தியால் அளவுபடாத சோறு பெற்றவன்.

அருளாளப் பெருமாளெம் பெருமானார்

யஞ்ஞமூர்த்தியைக் காண்க.

அருளாளப்பெருமாள்

ஞானசாரம் பிரமேய சாரமென்னும் நூலியற்றிய வைஷ்ணவர். இவர் உடையவருடைய நியமனப்படி பேரருளாளரைத் திருவாராதனஞ் செய்திருக்க நியமனம் பெற்றவர். (14TH CENTURY)

அருளையர்

தாயுமான சுவாமிகள் என்பவரிடம் உபதேசம் பெற்றவர். தாயுமான சுவாமிகளின் சிறியதாயின் குமாரர்.

அருளொடு நீங்கல்

முழங்கும் கடலுலகத்துத் துயரத்தைப் பார்த்துப் பற்றை யொழிந்தது. (புறப்பொருள் வெண்பாமாலை.)

அருள்மாரி

திருமங்கையாழ்வார் திருமதில் கட்டுகையில் தொண்டாடிப்பொடிகள் திருமாலை கட்டும் மண்டபத்தை விட்டுக் கட்டியபடியால் இவருக்குப் பெருமாள் இட்டபெயர்.

அருள்வித்தர்

ஒரு வேதியர், சிவபூசைக்கு மாலை கொண்டு பூக்குடலையுடன் ஆற்றில் இறங்க வெள்ளம் அடித்துச் சென்றது. அப்படிச் செல்லவும் பூக்குடலையை விடாமல் இருந்து சிவத்தியானத்தால் கரையேறிச் சிவமூர்த்தி ஆசாரியராக உபதேசிக்கப்பெற்றுச் சித்தியடைந்தவர்.

அருவந்தை

அம்பர் கிழானருவந்தையைக் காண்க.

அருவர்

கஞ்சம் தாலூக்காவில் கரையோரத்திலுள்ள உழவர்கள். (தர்ஸ்டன்).

அருவா வடதலை

செங்கற்பட்டு ஜில்லா.

அருவாநாடு

தென்னாற்காடு. பெண்ணையாற்றிற்குத் தென்பாகம் (கூடலூர், மஞ்சகுப்பம்).

அருவாவசு

(1) பராவசுவைக் காண்க. 2. ரைப்பியரிஷியின் இரண்டாவது புத்திரன், இவன் சகோதரன் பராவசு.

அருஷணர்

சூதருஷியின் புத்திரர். இவர்க்கு உரோம அருஷணர் எனவும் பெயர்.

அருஷன்

தருமன் எனும் மனுவின் புத்திரன், மனைவி நந்தி.

அரைஞாண்கட்டுதல், சிற்றாடையுடுத்தல்

பிள்ளை பிறந்த ஒரு வயதாகிய பிறந்த மாதம் பிறந்த நக்ஷத்திரத்திலே பிள்ளையைச் சுத்த ஜலத்திலே முழுக்காட்டிப் பிராமணருக்கு ஆராதனை செய்து சுபக்கோளுதயமாகப் பொன்னரைஞாண் தரித்துச் சிற்றாடையுடுத்துஞ் சடங்கு.

அரையம்

இது பெரியதொரு நகரம். சிற்றரையம், போரையமென்னும் இரண்டு பிரிவினையுடையது. (புறநானூறு)

அரோசகரோகம்

இது நாவையும் மனதையும் அநுசரித்த திரிதோஷங்களால் பிறப்பது, இது, வாத, பித்த, சிலேஷ்ம, சந்தி பாத, துக்கமென ஐந்து வகைப்படும். இது, நாவை உருசி தெரியவொட்டாது வேறுபடுத்தும். இதனை வேம்பின் லேகியம், நவாஸத்துவையல், வில்வாதிலேக்யம், தீபாக்னிசூரணம், முதலியவற்றால் வசமாக்கலாம் (ஜீவரக்ஷாமிர்தம்.)

அரோராபோரியாலிஸ்

துருவவொளி, இது, துருவத்தையடுத்துத் தோன்றும் ஒளி, இது இராக்காலத்தும் ஒளியாகவே இருப்பது. இவ்வொளி, சில காலங்களில் ஒரே நிலையாகவும், சில சமயங்களில் புழுக்கள்போல் நெளிந்து அசைந்து கொண்டுமிருக்கிறது. சில வேளைகளில் தனித்தனி துணிக்கைகளாகக் காணப்படுகிறது. இது, பலவித நிறமாக மின்னற்காட்சி போல் காணப்படுகிறது. (11) வருஷங்களுக் கொருமுறை இக்காட்சிகள் மாறுகின்றன என்கின்றனர். அக்காலங்களில் சூரிய கோளத்திற் காணப்படும் புள்ளிகளும் மாறுகின்றனவாம். ஆதலால் இப் பூமண்டல துருவ முனைக்கும் சூரியனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக எண்ணப்படுகிறது. இது வன்றி அத்துருவ முனையின் வடகோடியில் வட்டவடிவான மின்னற்சோதி எக்காலத்தும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதாம். அவ்வட்டத்தின் நடுவிடம் திணிந்த இருளாகத் தோற்றுகிற தென்கிறார்கள். இந்த இடங்களிலும் சிலர் வாழ்ந்து கொண் டிருக்கின்றனராம். அவ்வொளி அவர்களின் போக்குவரவிற்கு உபகாரமானதா யிருக்கிறதென்பர்.

அர்க்கதந்தர்

சோமகரைக் காண்க.

அர்க்கன்

வசுக்களிலொருவன் தருமனுக்கு வசுவிடம் உதித்த குமரன். பாரி அசனை.

அர்சர்

திரேதாயுகத்தில் விஷ்ணுவிற்கொரு பெயர்.

அர்ச்சகன்

ஒச்சன், கிராம தேவதை பூஜகன்.

அர்ச்சசு

வேனன் தோளைக் கடைந்ததினால் உண்டான பெண்ணுரு. இவள் இலக்ஷமி அம்சம்; பிருதுவை மணந்தனள்.

அர்ச்சிகம்

ஓர் மலை.

அர்ச்சிசு

தக்ஷன் குமரி. கிரிசாசுவன தேவி. குமரன் தூம்ரகேசன்.

அர்த்த பிரகரணன்

புதன் குமரன்.

அர்த்தசித்தி

சாத்தியருக்குப் பிறந்த குமரன்.

அர்த்ததர்சி

பதினேழாவது புத்தன்.

அர்த்தநாரீசன்

பார்வதிபிராட்டி கௌதமர் ஆச்சிரமத்தில் தவஞ்செய்து சிவமூர்த்தியின் திருவுருவில் பாதியுருப் பெற்றனள். அன்று முதல் அர்த்தநாரிபாகன் ஆயினன். பிருங்கியைக் காண்க.

அர்த்தன்

யமனுக்குப் புத்தியிடம் உதித்த குமரன்.

அர்த்தமூலம்

நக்ஷத்திரம் காண்க.

அர்த்தவசு

இரப்பியன் புத்திரன்,

அர்த்தவீரன்

அர்த்தாசுரனைக் காண்க.

அர்த்தஹாரி

தேவதை. சுயம்ஹாரியின் குமரி. அநாசாரர்களைச் சேர்ந்து தீமை செய்பவள், (மார்)

அர்த்தாசுரன்

இந்த அசுரன் அர்த்தவீரனுடன் கூடித் தேவரை வருத்தினன். தேவர் தமது குறைகளை இருடிகளிடம் முறையிட்டனர். இருடிகள் அசுரரைக் கொல்ல யாகஞ்செய்தனர். அவ்விடம் இந்த அசுரர் இருடிகளை விழுங்கவர இருடிகள் பயந்து சிவமூர்த்தியை அடைக்கலமாக அடைந்தனர். சிவமூர்த்தி கௌரியை நோக்கச் சத்தி அவ்வசுரரிடம் போர்செய்கையில் அவர்கள் உதிரம் விழுந்த இடந்தோறும் அசுரர் வெளிப்பட்டு யுத்தத்திற்கு வரப் பிராட்டி கோபித்ததில் அக்கோபத்தில் காளி தோன்றி அவ்வசுரர்களின் உதிரம் பூமியில்விழாது உறுஞ்சி உயிர் போக்கினன்.

அர்த்தாந்தரம்

பிரதிவாதி சொன்ன தூஷணத்திற்குத்தான் அதற்கேற்ற வசனஞ் சொல்லாமல் அதற்குபயோகமில்லாத வார்த்தையை அவ்விடத்திற் சொல்வது. (சிவ~சித்).

அர்த்தோதயமகோதயவிரதம்

இது தை, மாசி மாதங்களில் அமா வாஸ்யை, வியதிபாதம், திருவோண நக்ஷத்திரம் கூடிய ஞாயிற்றுக் கிழமை கூடிய நாள். இதில் விரதம் விசேஷம். இதில் திரிமூர்த்திகளின் பிரதிமைகளைப் பொன் வெள்ளிகளில் செய்வித்து ஊஞ்சலில் படுக்க வைத்து ஹோமாதிகள் செய்து தஷிணை போஜனாதிகளுடன் வேதியர்க் குப் பிரதிமைகளைத் தானஞ் செய்வது. மேற்கூறிய நக்ஷத்திர