Apps

வள்ளுவர் வள்ளலார் வட்டம்
தமிழ் செயலிகள்

அனைவருக்கும் வணக்கம்
இதுவரை நமது வெளியீட்டுள்ள அனைத்து தமிழ் தொடர்பான செயல்பாடுகளும், இணையதள பயன்பாட்டு வடிவிலே அமைந்துள்ளது. ஒவ்வொரு வெளியீடு வரும்போதும், அதனைச் செயலி APP வடிவில் வேண்டும் என்று பல நண்பர்கள் வேண்டுவார்கள். பொருளாதாரம் இல்லை ஆகையால் இயலாது என்று கடப்பது வழக்கம்.
நண்பர் சரவணன் பரமானந்தம் மூலம் அறிமுகமான தம்பி அர்ச்சித் அதனை உடைத்துள்ளார். மரபு எனும் தமிழ் மருத்துவ செயலியை உருவாக்கியவர் அர்ச்சித். அவர் தானாக முன்வந்து நமது செயல்பாடுகளைச் செயலி வடிவில் உருவாக்கலாம் என்று நம்பிக்கை கொடுத்து. செயலி ஒன்றை உருவாக்கியும் தந்துள்ளார்.
மேலும் பலவற்றை செயலியாக உருவாக்கலாம் என்று பரிந்துரை செய்து, முயற்சியும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் நன்றி கூறுவோம்.
அவரின் உதவியால் வெளிவரும் வள்ளுவர் வள்ளலார் வட்ட செயலிகள் ஐம்பது ரூபாய்க்கு குறைவான விலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதில் வரும் பொருளாதாரம், செயலி பராமரிப்பு செலவுகள் போக, மீதி அவருக்கே செல்லும்படி செய்வோம். B.Tech. Artificial Intelligence and Data Science இளங்கலை பொறியியல் முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கும் தம்பிக்குச் சிறு உதவியாக இருக்கும்.
எப்போதும் போல, உங்கள் அன்பும் ஆதரவும், எங்களுக்கு இருக்கும், என்று நம்புகிறோம்.
விரைவில் செயலி உலகிலும் சந்திப்போம்.
இப்படிக்கு
இங்கரசால் நார்வே
மற்றும் அர்ச்சித்

சங்கச்சொற்புதிர் (Sangachorpudir)

“சங்கச்சொற்புதிர்” என்பது சங்க இலக்கிய சொற்கள் அடங்கிய குறுக்கு புதிர் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு சங்க இலக்கியச் சொற்கள் அடங்கிய அகராதியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் கட்டங்களில் இருக்கும் சொற்களைக் கிடைக்கோடு, நெடுக்கோடு மற்றும் குறுக்குக்கோடு வழியாகக் கண்டறிய வேண்டும். இவ்விளையாட்டு, தொன்மையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளவும், தற்கால வாழ்க்கையில் பயன்படுத்தவும் உதவுகிறது. இது அறிவூட்டும், மகிழ்ச்சிகரமான மற்றும் பயனுள்ள ஒரு மொழி விளையாட்டாகும்!

Sangachorpudir is a unique Tamil crossword puzzle embedded with a Sangam Ilakkiyam dictionary. This game challenges players to arrange words horizontally, vertically, and diagonally, exclusively using words from Sangam literature. By integrating a Sangam Ilakkiyam dictionary, the game provides authentic references, helping players understand the meaning, context, and historical significance of ancient Tamil words. This not only enhances vocabulary but also encourages the revival of classical Tamil in modern usage, making learning both engaging and educational.


 

தமிழ்க்கருவிகள் (Tamil Tools)

தமிழ்க்கருவிகள் செயலி ஒரே சொடுக்கில் 120 தமிழ் இணையதள செயல்பாடுகளை அணுக உதவும். கல்வி, அகராதி, ஆய்வுக்கட்டுரை, இணையதளம், இலக்கியம், உரை ஒலி மாற்றி, ஒலி உரை மாற்றி, உரையாடி, எழுத்துப்பெயர்ப்பு, எழுத்துரு, கருவிகள், சொல்லாய்வு, அங்காடி, தட்டச்சு, மொழிபெயர்ப்பு, தொல்லியல், அகழ்வாய்வு, கல்வெட்டு போன்றவற்றவை பயண்படுத்த உதவுகிறது. இது google chrome-ல் இருக்கும் புக்மார்க் போன்றது. இதன் மூலம் உலகில் உள்ள பல மூளைகளில் உருவாக்கப்பட்ட சிறந்த தமிழ் செயல்பாடுகளை உடைய கருவிகளை இணைக்க முயற்சித்துள்ளோம். எல்லாராலும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது, சில நேரங்களில் சேமிக்க மறந்து விடுவோம், இவை அனைத்திற்கும் ஒற்றைத் தீர்வாக இந்த மென்பொருள் அமையும். இது கிட்டத்தட்ட மைக்ரோசாப்ட் ஆபீஸ் போல இருக்கும். பலர் உழைப்பின் ஒரு முகம்.

The Tamil Tools app provides instant access to 120 Tamil web applications with just a single click. It covers a wide range of categories, including education, dictionaries, research articles, websites, literature, text-to-speech, speech-to-text, text editors, transliteration, fonts, utilities, word analysis, marketplaces, typing tools, translation, archaeology, excavations, and inscriptions. This app functions similarly to bookmarks in Google Chrome, allowing users to conveniently access a collection of the best Tamil-based applications from around the world. Since it’s impossible to remember everything or save every useful tool at the right time, this app serves as a one-stop solution for quick access. In essence, Tamil Tools is designed like Microsoft Office—a comprehensive platform that brings together the hard work of many contributors, making various Tamil tools easily accessible in one place.


எதுசரி (Ethusari)

தமிழ் எழுத்து பிழையில், பொதுவாக வரும் பிழையைப் போக்கும் வண்ணம், தவறான சொற்களையும் அதற்கு இணையான சரியான சொற்களையும் தொகுத்து, எதுசரி எனும் விளையாட்டு செயலியை உருவாக்கி உள்ளோம். இவ்விளையாட்டில் இரண்டில் எது சரி என்று பயன்பாட்டாளர் கண்டுபிடிக்க வேண்டும். சரியை கொடுக்கினால் பூக்கள் கொட்டும், தவறை கொடுக்கினால் அதற்கான இலக்கண காரணத்தையும் கூறும், இதன் மூலம் அடுத்த தலைமுறையை, பிழையின்றி தமிழைப் பயன்படுத்த வைக்க முயற்சிக்கிறோம்.

We have developed a game app designed to correct common Tamil spelling mistakes. This app compiles commonly mistaken words along with their correct counterparts, allowing users to play a game where they must identify the correct option between two choices. When the correct answer is selected, flowers will appear as a reward, while an incorrect choice will trigger an explanation of the grammatical rule behind the mistake. Through this engaging approach, we aim to help the next generation use Tamil accurately and without errors.


 

சேர்ப்பி (Saerpi)

தமிழில் பல லட்சம் சொற்கள் இருந்தாலும், சில ஆயிரம் சொற்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. பயன்பாட்டுத் தமிழில், சொல் வளத்தைப் பெருக்க 4 எழுத்துச் சொற்களை வைத்து, இந்தச் சேர்ப்பி விளையாட்டுச் செயலியை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் 16 நான்கு எழுத்துச் சொற்கள், 32 இரண்டு எழுத்து சொற்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். இரண்டு சரியான சொற்களைச் சேர்த்தால் அது திரையிலிருந்து நீங்கி விடும், திரையில் உள்ள அனைத்து சொற்களையும், அதேபோல் கண்டுபிடித்துத் திரையைச் சுத்தம் செய்து விட்டால், வெற்றி.

Although Tamil has millions of words, only a few thousand are commonly used. To expand vocabulary in everyday Tamil, we have created this word-matching game app using four-letter Tamil words. In this game, 16 four-letter words are split into 32 two-letter word segments. The player’s goal is to match the correct two-letter segments to form valid Tamil words. When a correct match is made, the word disappears from the screen. The challenge is to clear the entire screen by correctly pairing all the words. Complete the challenge, and you win! This engaging game helps users strengthen their Tamil vocabulary while having fun!


 

படமொழி (Padamoli)

படத்திலிருந்து தமிழ் சொற்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. விளையாட்டில், படத்தில் காணும் பொருளின் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்துச் சரியான பதிலை உள்ளீடு செய்ய வேண்டும். இதன் மூலம் பல்வேறு பெயர் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்ள முடியும். தமிழின் சொல்வளத்தைப் பயன்படுத்த, வாழ்க்கையில் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும். மொழிச் செல்வத்தை வளர்க்கவும், தமிழ் அறிவை விரிவுபடுத்தவும் “படமொழி” உறுதியாக உதவும்!

Padamoli – A game to find Tamil words from images.

In this game, players must identify the correct Tamil word that represents the object shown in the image and enter the right answer. Through this, they can learn various Tamil synonyms for different objects. By utilizing Tamil’s rich vocabulary, this game serves as a great opportunity to increase the usage of Tamil words in daily life. Padamoli plays a vital role in enhancing language skills, expanding Tamil knowledge, and preserving the richness of the Tamil language!


தட்டச்சம் (Thattacham)

இந்தச் செயலி தமிழ் தட்டச்சை விரைவாகவும் சரியாகவும் பழக உதவுகிறது. திரையில் தோன்றும் சொற்களை உங்கள் கருவியில் உள்ள தட்டச்சு விசைப்பலகைமூலம் எழுதிப் பழகலாம்.

✅ சரியாகத் தட்டச்சியெழுத்துக்கள் பச்சை நிறத்தில் காட்டப்படும்.
❌ தவறாகத் தட்டச்சியெழுத்துக்கள் சிகப்பு நிறத்தில் தெரியும்.

பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால், அனைத்தும் பச்சை நிறத்தில் வருமாறு தட்டச்சு செய்யலாம். மேலும், செயலியில் தோன்றும் நேரத்தை வைத்து வேகமாகத் தட்டச்சு செய்வதற்கும் பழகலாம். இதன் மூலம், டிஜிட்டல் சாதனங்களில் தமிழ் தட்டச்சு திறனை மேம்படுத்தி, மொழியை விரைவாக எழுதும் பழக்கத்தை உருவாக்கலாம்.

Thattacham – Tamil Typing Practice App

This app helps you practice Tamil typing quickly and accurately. Type the words that appear on the screen using your device’s keyboard.

✅ Correctly typed letters will appear in green.
❌ Incorrectly typed letters will appear in red.

With regular practice, you can improve your accuracy and ensure all letters appear in green. The app also displays a timer, helping you practice typing speed. This is a great way to enhance your Tamil typing skills on digital devices and develop fluency in the language.


பகுபதம் (Pagupatham)

பகுபதம் – தமிழ் சொல் பகுப்பு விளையாட்டு

ஒரு சொல்லைப் பகுத்தால், அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு சொற்களாகப் பிரிந்து புதிய பொருள் பெறலாம். பகுபதம் என்பது இவ்வாறு சொல்லைப் பிரித்து அதன் உட்பொருளைக் கண்டறிதல் ஆகும். இந்த விளையாட்டில்:  கொடுக்கப்பட்ட சொல்லிலிருந்து அதன் பகுப்பான சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அந்தப் பகுப்பான சொற்களை வைத்து மீண்டும் சொற்றொடரை உருவாக்க வேண்டும். இந்தச் செயலிமூலம் தமிழ் மொழியின் இலக்கண கட்டமைப்பைப் புரிந்து கொள்ளலாம். மேலும், ஒரு சொல்லின் மூலப் பொருளை அறிந்து, அதிலிருந்து உருவாகும் புதிய சொற்களின் அர்த்தங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

Pagupatham – Tamil Word Splitting Game

In Tamil, when a word is broken down, it can form multiple meaningful words. “Pagupatham” is the process of identifying and separating these words. In this game, you need to: Find the smaller words hidden within a given word. Use the split words to identify the original word. This app helps you understand the linguistic structure of Tamil words and enhances your vocabulary. By learning how words are formed, you can easily grasp the meanings of newly derived words based on their root words.